November 17, 2006
ரயில் சிநேகம் - 1
நேரம் செல்ல செல்ல பிரீத்திக்கு டென்ஷன் அதிகம் ஆனது. 'வேலையை முடித்துவிட்டு, சீக்கிரமாக ஹாஸ்ட்டல் ரூமுக்குப் போய் உடைமாற்றிக் கொண்டு, 8.30 மணி ' ப்ளு மவுண்டைன்' யை பிடிக்கனும், அம்மாவுக்கு இப்போ உடல் நிலை எப்படி இருக்கிறதோ?' என சிந்த்தித்துக் கொண்டே தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த்தாள். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை உடனே புறப்பட்டு வா என்று அப்பா நேற்று போனில் சொன்னதிலிருந்து பிரீத்திக்கு அம்மா ஞாபகமாகவே இருந்தது.
"ஹலோ பிரீத்தி இன்னுமா நீ கம்பியூட்டர்கிட்ட சண்டை போட்டு முடிக்கல? இப்போவே மணி 5.30 ஆச்சு பிரீத்தி, இப்போ நாம ரூமுக்கு போனாத்தான் நீ நைட் ட்ரெயின் பிடிக்க முடியும்" என்று பிரீத்தியின் தோழி ஷாலினி துரிதப்படுத்தினாள்.
"இருடி ஷாலு, 10 நிமிஷத்துல முடிச்சிடுவேன், புறப்பட்டுடலாம்" என்று கூறிக் கொண்டே தன் வேலைகளை முடித்தாள் பிரீத்தி.
" சென்னைக்கு நீ வந்து 3 மாதம் தானே ஆகுது, அதான் உனக்கு இங்குள்ள ட்ராஃபிக் பத்தி தெரில, உங்க கோயம்புத்தூர்ல ஆர்.ஸ் புரத்திலிருந்து 10 நிமிஷத்துல ரெயில்வே ஸ்டேஷன் போற மாதிரி இங்க எல்லாம் போக முடியாதுமா கண்ணு, so சீக்கிரம் புறப்படு" என்று அவசரப் படுத்தினாள் ஷாலினி.
ஒருவாறாக வேலைகளை முடித்துவிட்டு , இருவரும் ஆட்டோவில் ரூமிற்க்கு போய், பிரீத்தியின் கைப்பைகளை எடுத்துக் கொண்டு வெயிட்டிங் லிருந்த ஆட்டோவில் ரெயில்வே ஸ்டெஷன் போய் சேர்ந்தார்கள். சப்பாத்தி பார்சல் ஒன்று வாங்கிக்கொண்டு ப்ளு மவுண்டைன் ட்ரெயின் ல் தன் கோச் எண் சரிபார்த்து ஏறிக்கொண்டாள் பிரீத்தி.
அவள் சிறு வயதிலிருந்தே விரும்பும் ஜன்னல் ஒரத்து இருக்கையே கிடைத்தது.' ஹப்பாட'என்ற பெருமூச்சுடன் பின் தலையை இருக்கையில் சாய்த்துக் கண் மூடிக்கொண்டாள். தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்றிருந்த ஷாலினி, ஜன்னல் கம்பி வழியாக பிரீத்தியை அழைத்தாள்," ஏய் என்னடி ஆச்சு, டல்லா ஆகிட்ட??"என்று கேட்டாள், " ஒன்றும் இல்லை ஷாலு, அம்மா எப்படி இருகிறாங்களோ ன்னு ஒரே ஞாபகமா இருக்குது, அதான்........."
" ஐயோ பிரீத்தி , இன்னும் 8 மணி நேரத்துல அம்மா வை பார்க்க போற, பின்ன என்ன?? அம்மா வுக்கு இப்போ உடம்பு நல்லா ஆகிருக்கும், நீ கவலைபடதே பிரீத்தி, பத்திரமா போய்யிட்டு வா, நான் கிளம்புறேன், சரியா" என்று விடைக் கொடுத்தாள்.
ஷாலினியின் வார்த்தைகள் பிரீத்திக்கு ஆறுதலாக இருந்தது, பிரீத்தியின் இருக்கைகு அருகில் அவளை தவிர மற்ற ஐந்து இடங்களில் , அப்பா அம்மா இரு குழந்தைகள் என ஒரு குடும்பம் இருந்தது, ஐந்தாவது இடத்தை பதிவு செய்தவர் இன்னும் வரவில்லை போலும் என நினைத்துக்கொண்டாள் பிரீத்தி.
ரயில் மெதுவாக நகர அரம்பித்தது, களைத்து போன தன் முகத்தை தண்ணீரினால் கழுவி refresh செய்துக்கொள்ளலாம் எனச் சென்றாள் பிரீத்தி, கதவருகே
சென்றபோது.....யரோ ஒருவர் வாயிலின் கம்பியினைப் பிடித்துக்கொண்டு ரயிலில் ஏற ரயிலுடன் ஓடி வருவதைக் கண்டாள், " அச்சோ பாவம், வண்டி வேற வேகமாக போக அரம்பிக்க போகுதே " என்று நினைத்துக்கொண்டே , அந்த கரத்தை பிடித்து உள்ளே இழுத்து , அவர் உள்ளே ஏறி வர உதவினாள்.
மூச்சு வாங்க " ரொம்ப தாங்க்ஸ்ங்க "என்றான் அவன். ஒரு 25 அல்லது 27 வயது இருக்கும் அவனுக்கு, பார்க்க அசப்பில் நடிகர் மாதவனை ஞாபகபப்படுத்தினான் . வேர்த்துக் கொட்டியது அவனுக்கு, மறுபடியும் " ரொம்ப நன்றிங்க" என்று அவன் சொன்னபோதுதான் சுயநினைவிற்க்கு வந்தாள் பிரீத்தி.
" பரவாயில்லீங்க, ட்ரெயினுக்கு சரியான நேரத்திற்க்கு வந்திருக்க கூடாதா??" என்று கூறினாள். " ஆமாங்க கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கனும், எப்படியோ லேட் ஆச்சுங்க" என்று அவன் பதிலளித்தான்.
அவன் வாசலருகில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, பிரீத்தி தன் இருக்கைக்குத் திரும்பி சென்றாள். சிறிது நேரத்தில் அவள் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் ' அவன்'. " what a pleasant surprise ! நீங்க என் பக்கத்து seat ஆ" என்று தன் ஆச்சரியத்தை எந்த தயக்கமுமின்றி வெளிப்படுத்தினான். " By the way , I am Prem, your sweet name please?" என்று தன் பெயர் அறிமுகம் செய்தான். பார்த்து ஐந்து நிமிடங்களே ஆகிருந்தாலும் ஏதொ ஒரு பந்தம் தன்னக்கு அவனோடு இருப்பது போல் உண்ர்ந்ததால் " I am preethy" என்று எதையும் யோசிக்காமல் அறிமுகம் செய்துக்கொண்டாள் பிரீத்தி. தான் கோவைக்கு சொந்தகாரரின் திருமணத்திற்க்குச் செல்வதாக கூறினான் அவன்.
இவர்கள் பெயர் அறிமுகம் செய்வதை கண்ட சக பயணிகளான அந்த குடும்பமும், தங்களையும் இவர்களுக்கு அறிமுகப் படுத்திக்கொண்டனர். அந்தக் குடும்பத்திலிருந்த மூத்த மகனுக்கு 10 வயது , பெயர் ஷிவா , அவன் தங்கைக்கு 8 வயது, பெயர் நந்தினி. மிகவும் மரியாதையுடனும் , அறிவுடனும் பேசிப் பழகினர் அக்குழந்தைகள். அவர்கள் பெற்றோரும் மிகுந்த அன்னியோனியமாகவும் , நல்ல புரிதல் உள்ள தம்பதிகளாகவும் காணப்பட்டனர்.
ஒரே நேரத்தில் " பிள்ளைகளை நல்ல பண்புகளுடன் வளர்த்திருகிறீர்கள் " என்று பரேமும் பிரீத்தியும் கூறினர், இருவரும் ஒரே வார்த்தைகளை ஒரே சமயத்தில் கூறியதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அந்த குடும்பத் தலைவி பெருமிதம் கொண்டார். ஒரு அர்த்தமுள்ள புன்னகையுடன் பரேமும் பிரீத்தியும் நோக்கிக்கொண்டனர்.
சிறிது நேரத்தில் இரவு உணவு சாப்பிட ஆரம்பித்தது அக்குடும்பம். பிரீத்தியையும் பிரேமையும் தங்களுடன் உணவு அருந்துமாறு வற்புருத்தினாள் அக்குடும்பத் தலைவி. " கேட்டதிற்க்கு நன்றிங்க, எனக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க " என்று மறுத்தான் பிரேம். " நான் சப்பாத்தி பார்செல் வைத்திருகிறேன், அதனால் எனக்கும் வேண்டாங்க" என்று மறுத்தாள் பிரீத்தியும்.
தன் சப்பாத்தி பார்சலை எடுத்த போது தான் கவனித்தாள் பிரீத்தி, " ஐயோ............
( சிநேகம் தொடரும்....)
ரயில் சிநேகம் -2
ரயில் சிநேகம் -3
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
ஆஹா... கதை அருமையா போகுதுங்க...
ட்ரெயினில் ஆரம்பிக்கிறதா காதல்??? நடக்கட்டும் நடக்கட்டும்!!!
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்
நன்றி வெட்டி,
'ட்ரெயின்'=train , எப்படி தமிழ் ல ட்ரெயின் எழுதுறதுன்னு தெரியாமல் தான் train ன்னு ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன், இப்போ கத்துகிட்டேன் உங்க commment லிருந்து.
அடுத்த பகுதி விரைவில் ......
ஆகா திவ்யா,
காதல் கதையா கலக்குங்க. நல்ல இருக்கு துவக்கம்.
நன்றி சந்தோஷ்
ரயில் சினேகம் தொடராது என்பார்கள், இது எப்படி போகுதுன்னு பார்க்கலாம். விறுவிறுப்பா கொண்டு போங்க அடுத்த பதிவு எப்போன்னு நாங்க ஏங்கனும்.
அழகாக நகர ஆரம்பித்துள்ளது திவ்யா கதை ரயில் :)) நல்ல நடை. தொடருங்கள் மேலும் :))
அம்மா சென்டிமெண்டுடன்
அசத்தலான
ஆரம்பம்!
புகைவண்டி
கிளம்பியதும்
புதுபிரச்சனை
ஏறிக்கொண்டது!
மன்னிக்கவும்
ஏற்றிவிடப்பட்டது!
காலியாக
இருந்த இடத்தை
பிடித்துக்கொண்டான்
பிரேம்!
காலியாக இருந்தது
இருக்கை மட்டுமல்ல
அவளின்
இதயமும் கூடத்தான்!
இப்பொழுதுதான்
புகையத் தொடங்கியுள்ளது
புகைவண்டியில்!
நெருப்பில்லாமலா
புகையும்!
நெருங்கியதால்
பற்றிக்கொண்ட
நெருப்பைப் பற்றி
தெரிந்துகொள்ள
திவ்யாவைத்தான்
தேடவேண்டும்!
\"பிரியமுடன் பிரேம் said...
அம்மா சென்டிமெண்டுடன்
அசத்தலான
ஆரம்பம்!
புகைவண்டி
கிளம்பியதும்
புதுபிரச்சனை
ஏறிக்கொண்டது!
மன்னிக்கவும்
ஏற்றிவிடப்பட்டது!
காலியாக
இருந்த இடத்தை
பிடித்துக்கொண்டான்
பிரேம்!
காலியாக இருந்தது
இருக்கை மட்டுமல்ல
அவளின்
இதயமும் கூடத்தான்!
இப்பொழுதுதான்
புகையத் தொடங்கியுள்ளது
புகைவண்டியில்!
நெருப்பில்லாமலா
புகையும்!
நெருங்கியதால்
பற்றிக்கொண்ட
நெருப்பைப் பற்றி
தெரிந்துகொள்ள
திவ்யாவைத்தான்
தேடவேண்டும்!"/
பிரேம், உங்கள் கவிதை அருமையிலும் அருமை, அடுத்த பாகமும் படித்துவிட்டு எப்படி போகிறது கதை என்று தங்கள் கருத்தை தெரிவியுங்கள்
ஆரம்பிச்சாச்சா....
கலக்குங்க...நான் தமிழ்மணத்தில் வகைப்படுத்திட்டேன்..(சிறுகதைகள்)...
தமிழ்மணத்தில் வருகுது பாருங்க...
இருங்க இரண்டாம் பாகமும் படிச்சுட்டு பதில் சொல்றேன்..!!
//தன் சப்பாத்தி பார்சலை எடுத்த போது தான் கவனித்தாள் பிரீத்தி, " ஐயோ............//
என்ன எடுத்துட்டு வந்த சப்பாத்தியை காணோமா? :)) எங்க அடுத்த பதிவை காணோம்?
\"குறும்பன் said...
ரயில் சினேகம் தொடராது என்பார்கள், இது எப்படி போகுதுன்னு பார்க்கலாம். விறுவிறுப்பா கொண்டு போங்க அடுத்த பதிவு எப்போன்னு நாங்க ஏங்கனும்"/
நன்றி குறும்பன், அடுத்த பதிவும் போட்டாச்சு, படிச்சுட்டு சொலுங்க!
\"சந்தோஷ் said...
//தன் சப்பாத்தி பார்சலை எடுத்த போது தான் கவனித்தாள் பிரீத்தி, " ஐயோ............//
என்ன எடுத்துட்டு வந்த சப்பாத்தியை காணோமா? :)) எங்க அடுத்த பதிவை காணோம்? "/
சந்தோஷ் விட்டா நீங்களே என் கதையை எழுதி முடிச்சுடுவீங்க போலிருக்கு, அடுத்த பாகம் இருகிறதே, படிச்சுட்டு சொல்லுங்க
நல்லா இயல்பா எழுதி இருக்கீங்க...புளு மவுண்டன், கோவை னு பேர கேட்ட உடனே எனக்கும் ஊர் ஞாபகம் வந்துடுச்சு :-)
நல்ல ஆரம்பம். நல்லா இருக்கு.
http://internetbazaar.blospot.com
!!!amazing...even the names are similar...i too have a shalini in my story!!!the similarities are scary :D
\"
Syam said...
நல்லா இயல்பா எழுதி இருக்கீங்க...புளு மவுண்டன், கோவை னு பேர கேட்ட உடனே எனக்கும் ஊர் ஞாபகம் வந்துடுச்சு :-) \"
ஏனுங்க சாமி உங்களூக்கும் கோயமுத்தூருங்களா??
\"Anonymous said...
நல்ல ஆரம்பம். நல்லா இருக்கு.
http://internetbazaar.blospot.com \"
நன்றி அனானி.
\"gils said...
!!!amazing...even the names are similar...i too have a shalini in my story!!!the similarities are scary :D
\"
என் கற்பனையை நீங்கள் களவாடினீர்களா, இல்லை உங்கள் கதை என் கற்பனையிலும் வந்ததா??? ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது.
திவ்யா
இன்று தான் நான் தங்கள் வலைபதிவை படித்தேன், நன்றாக இருந்தது.
ட்ரெயின் = இரயில்(அ) புகை வண்டி என்று நீங்கள் பயன்படுத்தலாம்.
இப்போ கத்துகிட்டேன் என்று நீங்கள்
எழுதியிருந்ததை கண்டேன்.
இடையுருக்கு மன்னிக்கவும்.
எதையோ தேடி வந்தேன்....
எதேச்சையாக உங்கள் தொகுப்பை கண்டேன் ...
அருமை !!! ...
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் படைப்புகள் ...
வாழ்த்துக்கள் !!!...
தொடர்ந்து எழுதலாமே ...
அன்புடன்
என்றும்
இனிய தோழன் விஷ்ணு,...
\\சூர்யா said...
திவ்யா
இன்று தான் நான் தங்கள் வலைபதிவை படித்தேன், நன்றாக இருந்தது.
ட்ரெயின் = இரயில்(அ) புகை வண்டி என்று நீங்கள் பயன்படுத்தலாம்.
இப்போ கத்துகிட்டேன் என்று நீங்கள்
எழுதியிருந்ததை கண்டேன்.
இடையுருக்கு மன்னிக்கவும்.\\
சூர்யா! உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!
என் எழுத்துக்களில் இனி அதிக கவனம் செலுத்துகிறேன், மீண்டும் நன்றி சூர்யா!!
\\Vishnu...A Good Friend for all.. said...
எதையோ தேடி வந்தேன்....
எதேச்சையாக உங்கள் தொகுப்பை கண்டேன் ...
அருமை !!! ...
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் படைப்புகள் ...
வாழ்த்துக்கள் !!!...
தொடர்ந்து எழுதலாமே ...
அன்புடன்
என்றும்
இனிய தோழன் விஷ்ணு,...\\
விஷ்னு, உங்கள் வருகைக்கு மிக்க நன்றி, தாங்கள் அளிக்கும் உற்சாகம் எனக்கு புத்துணர்வை தருகிறது!!
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்
Post a Comment