June 11, 2008

கண் பேசும் வார்த்தை புரிவதில்லை....

[படித்ததில் பிடித்த கதை......சில மாற்றங்களுடன் என் எழுத்தில் பதிவாக]

சென்னையிலிருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸில் தன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள் கீதா.

கைப்பையைத் திறந்து புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு படிக்க வசதியாக அமர்ந்துக்கொண்டாள்.
அந்த 8 மணிநேர ரயில் போக்குவரத்திற்கு இப்போது அவளுக்குத் துணையாகியிருக்கிறது இந்த புத்தகம்.

எதிரில் ஜன்னலோரம் இருந்தவர் மீது சரிவாய்

ஒரு பார்வை..... பார்த்தாள் கீதா.

அட......பாரேன் அவரும் இவ்வளவு நேரமா என்னையே தான் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்..

ம்கூம்....'இந்த ஆம்பிளைகளே இப்படிதான்'என்று மனதில் திட்டி முதுகை மட்டும்பக்கவாட்டில் திருப்பி மீண்டும் கண்களை புத்தகத்தின் எழுத்துகளில் பதித்தாள்...

ஆனால்....மனதோ எதிரே இருந்தவர் மீது திசைதிரும்பியது.

ம்......இப்போது நைஸா பார்ப்போம்...அவர் எங்கே பார்க்கிறார் என்று என கீதாவின் மனது பேசிக்கொண்டது.

அடச்சீ.......இன்னும் என்ன இப்படி விழுங்குற மாதிரி...ஒரு பார்வை பார்க்கிறாரே,இந்த கூட்டத்தில இடம் மாறிக்கூட இருக்கமுடியாதே.....என தவித்தாள் கீதா.

மறுமுறை கீதா பார்த்தபோது,மெதுவாய் ஒரு புன்முறுவல்...எதிரே இருந்த அவனிடமிருந்து!

அந்த சிரிப்பில் குறும்பு கொப்பளித்ததை கீதா கவனிக்க தவறவில்லை.

கீதா மாதிரி அழகு பெண்ணை யார் தான் பார்க்காமல் போவார்கள்!!
பார்த்ததும் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொள்ளும் அப்படி ஒரு அழகு.. கீதா!!

இதில் இவன் இப்படி பார்ப்பதில் தப்பேயில்லை.

அவளை கண்களால் ஜாடை காட்டி "என்ன" என்றான்..

கண் ஜாடையில் அவன் அப்படி கேட்டதும், கோபத்தின் உச்சத்திற்கே போனாள் கீதா,அவளும் கண்களில் நெருப்பை கொட்டி எரித்துப்பார்த்தாள்.

இப்போது அவன் உதட்டில் மீண்டும் ஒரு வசீகரமான கேலி புன்னகை.

பெரிய 'புன்னகை மன்னனு' நினைப்புதான்' என மனதிற்குள் திட்டிதீர்த்தாள் கீதா.

அப்போது ரயில் ஏதோ ஒரு நிறுத்ததில் நிற்க..அவசரமாய் கீதாவின் அருகில் இருந்தவர் இறங்கினார்.. ...

அடடா '

அந்தக்குயிலின் பக்கத்தில் இடம் ஒன்று காலி..
என் மனமும் அதையே நாடி...

என அவன் மனம் பாடியது!!

"பக்கத்தில் வரட்டுமா" என்று...மீண்டும் கண்களில் கெஞ்சும் பார்வை வீசினான்.

ஐயோ! அடபாவி பார்வையாலே இப்படி கேட்கிறானே.........என்று....தன் கையிலிருந்த புத்தகத்தினால் தன் தலையில் அடித்துக்கொண்டாள்....கீதா!

அதன் பின் சில மணி நேரம் புத்தகத்திலேயே மூழ்கி போனாள் கீதா, அவனை கண்டுக்கொள்ளவுமில்லை.

மீண்டும் தீடிரென அவன் நினைவு வரவே,மெதுவாக எட்டிப்பார்ததாள்...ஆள் அசதியான தூக்கத்தில் இருந்தான்.

அப்பாடா.....நானும் நிம்மதியா தூங்கலாம், என நினைத்தவளாய் ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிப்போனாள் கீதா..

தீடிரென் மக்களின் பேச்சுத் சத்தங்கள் காதை ஊடுறுவ..மெல்லக் கண்களை திறந்து பார்த்தாள்...

எங்கே இவர்...எதிரேயிலிருந்வரைக் காணவில்லையே...? எங்கே போயிருப்பார்....????

ம்.....ம்..ரெயில் நிறுத்தத்தில் நிற்பதால் ஏதும் வாங்கபோயிருப்பார் போலும்.. என நினைத்துக்கொண்டாள் கீதா.

மனது அடிக்கடி ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்க்கச் சொன்னது. அவளும் பார்த்தாள்.

ம்..........வரவேயில்லை அவன்....விசல் சத்தத்துடன் ரெயில் புறப்பட்டது.

அவளின் மனதோ வேகமாக அடித்துக்கொண்டது. ஓடிச்சென்று வாசலின் பக்கத்தில் கைபிடியை பிடித்தபடி கீதா..

காற்றில் அவள் கூந்தல் கலைய ,
மனமோ தவிக்க....
அவரைத்தேடி கண்கள் வலை வீச....

எங்கும் தென்படவில்லை அவன்....

அழுதாள்..கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி அழுதாள் .....!!

கீதாவின் பின்னால் ஒருவர்....."கண் தேடுதே .....செல்லமே உன்னைக் கண்தேடுதே" என்று பாடியபடி கட்டிப்பிடித்தார்.

"என்னங்க..நீங்க....இப்படி பண்ணிட்டீங்க......நீங்க மட்டும் இப்ப வரல்லைன்னா......நான் குதிச்சிருப்பேன்."
விசும்பலுடன் அவன் தோளில் சாய்ந்தாள் கீதா.

அடடா என் மனைவி கோபத்திலும் குழந்தை மாதிரித்தான்......என கீதாவின் உச்சி முகர்ந்தவன்,

"எவ்வளவு சமாதனப்படுத்தியும் கேட்காம, வீட்டில் போட்ட சண்டையால இவ்வளவு நேரம் மூஞ்சு தூக்கி வைச்சிட்டிருந்தா எப்படிடா செல்லம், கண்ணால எவ்வளவு கெஞ்சல் கோரிக்கை வைச்சேன், நீ தான் முறுக்கிக்கிட்டே இருந்த, அதான்.......என் செல்ல பொண்டாட்டிக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்"

"ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கிற ஆளை பாரு.....எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா, ஸாரிங்க......ரொம்ப கோபப்பட்டுடேன்,உங்க கிட்ட பேசாம மூஞ்சி தூக்கி வைச்சுக்கிட்டு.....கஷ்டபடுத்திட்டேன் உங்களை,........... ப்ளீஸ் மன்னிச்சிடுங்க" என கொஞ்சலுடன் கீதா சிணுங்க.

"எதுக்குமா மன்னிப்பெல்லாம் கேட்கிற,நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், நம் அன்பு ஆழமாவதும் இந்த மாதிரி குட்டி குட்டிச் சணடைகளில் தானடி என் செல்லமே" என்ற அவனது கரம் அவளை வளைத்துக்கொண்டது அவன் பிடிக்குள்!!.

கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !

குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது
அழுகையையே மறந்துவிட ஆசை !

உள்ளங்கையில் உன் பெயரை எழுதி
முத்தமிட ஆசை !

உன் அன்பில் நான் நனைந்து
உலராமல் இருக்க ஆசை !

உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை !

எனைப்பார்க்கும் போது உன் கண்கள்
இமைக்காமல் இருக்க ஆசை !

கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை !

என் கோபம் தணிய கொஞ்சும் உன்
கெஞ்சல்கள் மிஞ்சிட ஆசை!

நம் ஆசைகளை நிறைவேற்றுவது
யார் கடமை !

ஆசைகளை பூட்டிவைத்திருக்கும் என் மனம்
உன்னிடம் என்பது தானே உண்மை !!

122 comments:

said...

அன்பின் ஆழத்தை உணர்த்தும் மிக மிக அழகான கதை திவ்யா....:)))

said...

கதையை கொண்டுசென்ற விதம் ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப... பிடிச்சிருக்கு திவ்யா....

said...

//இப்போது அவன் உதட்டில் மீண்டும் ஒரு வசீகரமான கேலி புன்னகை.

பெரிய 'புன்னகை மன்னனு' நினைப்புதான்' என மனதிற்குள் திட்டிதீர்தாள் கீதா.//

என்னாங்க இது சிரிச்சா இப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவீங்களா...?
;)))))

said...

//இவ்வளவு நேரம் மூஞ்சு தூக்கி வைச்சிட்டிருந்தா எப்படிடா செல்லம், கண்ணால எவ்வளவு கெஞ்சல் கோரிக்கை வைச்சேன், நீ தான் முறுக்கிக்கிட்டே இருந்த, அதான்.......என் செல்ல பொண்டாட்டிக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்"//

அழகான ஷாக் இல்லையா..??
மிகவும் ரசித்தேன்....:)))))

said...

//எதுக்குமா மன்னிப்பெல்லாம் கேட்கிற,நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், நம் அன்பு ஆழமாவதும் இந்த மாதிரி குட்டி குட்டிச் சணடைகளில் தானடி என் செல்லமே" //

அன்பு ஆழமாவது இதைப் போன்ற செல்லச் சண்டைகளால் தான் இல்லையா..?
ஊடல் முடிந்தபின் பீறிடும் அன்பு அதனினும் அழகு அல்லவா....?? :)))))

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் திவ்யா..... :)))

said...

//கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !//

காதல் கொப்பளிக்கிறது அழகான வரிகளில்.....

;))))))

said...

//கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை !

என் கோபம் தணிய கொஞ்சும் உன்
கெஞ்சல்கள் மிஞ்சிட ஆசை!//

அட கோபமாய் இருக்கும் நாட்களை குறிச்சு வச்சுக்கனுமா..? அது எதுக்கு...???? ;)))))
திரும்ப ஊடல் கொள்வதற்கா..?

;)))))

கொஞ்சம் கெஞ்சல்....
கொள்ளைகொள்கின்றன வரிகள்...
:))))

said...

மீண்டும் ஒரு அழகான கவிதையான கதை திவ்யவிடமிருந்து.....

அழகு அழகு
கதை அழகு...
அதனினும் அழகு
இறுதிக் கவிதை.....

வாழ்த்துக்கள்.. :))))

said...

ஹ்ம்ம் இன்னுமொரு romantic கதை.
புகுந்து விளையாடறீங்க!!

அன்புடன்,
விஜய்

said...

ஆஹா... பிரமாதம்... கதை எழுதுவதுல உங்கள அடிச்சுக்க யாரும் இல்லை போங்க... கவிதையும் சூப்பர்... :)

said...

//கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை //

அழகான வரிகள்

said...

ARUMAI kathaikku PORUTTHAMANA PADANGAL .

said...

gummu ishtory...unga postukelam oray comment thaan :) chancela :))

said...

கதைல திவ்யா-touchkku comments இதோ

//கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போதுகொஞ்சம் உயிர் விட ஆசை !//
:)))))

//குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது
அழுகையையே மறந்துவிட ஆசை !//

பேஷ் :)

//உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை !//

அடடே இப்படி ஒரு அன்பா!!

//உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை !//

cinematic :)

//எனைப்பார்க்கும் போது உன் கண்கள்இமைக்காமல் இருக்க ஆசை !//

அருமை :)

//நம் ஆசைகளை நிறைவேற்றுவது யார் கடமை !
ஆசைகளை பூட்டிவைத்திருக்கும் என் மனம் உன்னிடம் என்பது தானே உண்மை !!//

மிக மிக அருமை :)

said...

அழகான கதை,
ஆழமான கவிதை...!

வாழ்த்துகள்... :)

said...

கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை

:))

said...

marupadiyum alzhagana arumaiyana kadhal kathai..u rocks...

said...

Kathai Superrruuu..

Kavithai athai vida superuuu...

said...

Wondering which one I shud admire......the 'story' or the 'poem'???

Both are admirable in their own way, great work Divya:))

said...

the conversation between that couple is so realistic & cute:-)))

said...

கவிதை அருமை திவ்யா..
// உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை //
எல்லா காதலர்களுக்கும் இதுதான் முதல் ஆசை !!
நல்லா இருக்கு திவ்யா !!
அன்புடன்
கார்த்திகேயன்

said...

ஒரு அழகான ரொமான்டிக் சஸ்பென்ஸ் கதை + கவிதை

//உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை !//

அழ‌கான‌ வ‌ரிக‌ள்

Anonymous said...

எப்படி திவ்யா உங்களுக்கு இப்படி பொருத்தமான படங்கள் கிடைக்கிறது, ஒவ்வொரு முறையும்??

வியப்புடன்[!!]
ரவி சந்தர்.

Anonymous said...

கதை அழகென்றால்...
கவிதை அழகோ அழகு!!!

ரவி சந்தர்.

said...

ம்ம்ம்ம்ம்...நல்லாவே இல்ல...கொஞ்சம் கூட நல்லாவே இல்ல! பின்ன என்னங்க, உங்களை போன்ற திறமைசாலிகள் இன்னும் ஏன் திரைப்படத்துறைக்கு வரவில்லை! என்ன கதை....என்ன கவிதை! அசத்திபுட்டீங்க போங்க!

அப்பன்ன இதுபோன்ற விஷயங்கள் இனிமேல் ரயிலில் நடந்தால் நாம கண்டும் காணாமலும் இருப்பதுதான் நல்லது என்ன சரியா...ஏன்னா அவர்கள் கணவன் மனைவியாக இருக்கலாம் இல்லையா! நல்லாயிருக்கு! நன்றி! இனிமேல் அடிக்கடி வருவேன் என்று பொய்யெல்லாம் சொல்ல விரும்பவில்லை! வருவேன்..வர்டா...

said...

cute கதை. அருமையான பதிவு.

said...

ஜூப்பரு!!

said...

//கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி அழுதாள் //

//உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை //

Nice lines....

I was expecting a different ending... This is nice!!!

said...

nice story!

said...

ஆண்டிரியாவைப் போலவே கதையும் அழகாகவே இருக்கிறது

said...

கதை நச்னு இருக்கு...

said...

:) Nice

said...

//நவீன் ப்ரகாஷ் said...
//எதுக்குமா மன்னிப்பெல்லாம் கேட்கிற,நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், நம் அன்பு ஆழமாவதும் இந்த மாதிரி குட்டி குட்டிச் சணடைகளில் தானடி என் செல்லமே" //

அன்பு ஆழமாவது இதைப் போன்ற செல்லச் சண்டைகளால் தான் இல்லையா..?
ஊடல் முடிந்தபின் பீறிடும் அன்பு அதனினும் அழகு அல்லவா....?? :)))))
//

Naveen neenga sonna kantippa correct'a thaan irukkum!!!

said...

narration nalla iruku Divya :)

said...

அழகான கதை ;)

said...

//படித்ததில் பிடித்த கதை......சில மாற்றங்களுடன் என் எழுத்தில் பதிவாக//

குருவே, பொங்கலுக்கே வெடி வெடிப்பீங்க, தீபாவளி வந்தா சும்மாவா விடுவீங்க!! original கதையோடு உங்க எழுத்தும் சேர்ந்து தூள் கிளப்பிட்டு.

இப்பதான்ங்க, தியானம் எல்லாம் செய்ய ஆரம்பிச்சுருக்கேன். தியானம் பண்ணி மனச 'அலைபாய'விடாம, ஒரு நிலைப்படுத்தி வைக்கலாம்னு இருந்தேன்ன்ன்ன்...இந்த கதைய படிச்சபிறகு எல்லாம் போச்சு! மறுபடியும் அலைபாய வச்சுட்டீங்களே மனச!! :))

//கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போதுகொஞ்சம் உயிர் விட ஆசை !//

உங்க கவிதை வரியால என்னையும் 'close' பண்ணிட்டீங்க! ஹிஹி..

//உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை//

வாவ்!!! அட்ராசக்கை! சூப்பரா இருக்கு.

கதை ரொம்ப சூப்பர்ர்ர்! எனக்கு பிடித்த மாதிரி ஒரு கதை *winks* haha..

நேத்து வச்ச மீன் குழம்ப இன்னிக்கு சூடுப்படுத்தி சாப்பிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்! continue rocking babe!

said...

கதை அருமை. அதைவிட அருமையாக இறுதிக் கவிதை. அதிலும்
\\உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை !
\\

இந்த வரிகள் சூப்பரோ சூப்பர்.

படங்களும் பொருத்தமாக உள்ளன.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள் திவ்யா

said...

நவீன் ப்ரகாஷ் said...
அன்பின் ஆழத்தை உணர்த்தும் மிக மிக அழகான கதை திவ்யா....:)))\\

அன்பின் ஆழத்தை கதை உணர்த்தியதா? நன்று!!

வருகைக்கு நன்றி!!

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
கதையை கொண்டுசென்ற விதம் ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப... பிடிச்சிருக்கு திவ்யா....\\

கவிஞருக்கு கதையின் நடை பிடித்திருந்ததை அறிந்து மகிழ்ச்சி:))

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//இப்போது அவன் உதட்டில் மீண்டும் ஒரு வசீகரமான கேலி புன்னகை.

பெரிய 'புன்னகை மன்னனு' நினைப்புதான்' என மனதிற்குள் திட்டிதீர்தாள் கீதா.//

என்னாங்க இது சிரிச்சா இப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவீங்களா...?
;)))))\\

கிண்டல் அடிச்சவங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வி கவிஞரே!!

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//இவ்வளவு நேரம் மூஞ்சு தூக்கி வைச்சிட்டிருந்தா எப்படிடா செல்லம், கண்ணால எவ்வளவு கெஞ்சல் கோரிக்கை வைச்சேன், நீ தான் முறுக்கிக்கிட்டே இருந்த, அதான்.......என் செல்ல பொண்டாட்டிக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்"//

அழகான ஷாக் இல்லையா..??
மிகவும் ரசித்தேன்....:)))))\\

கொடுக்கிற அதிர்ச்சி வைத்தயமும் உங்கள் பார்வைக்கு அழகாக தெரிகிறதா??
அது சரி:))))

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//எதுக்குமா மன்னிப்பெல்லாம் கேட்கிற,நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், நம் அன்பு ஆழமாவதும் இந்த மாதிரி குட்டி குட்டிச் சணடைகளில் தானடி என் செல்லமே" //

அன்பு ஆழமாவது இதைப் போன்ற செல்லச் சண்டைகளால் தான் இல்லையா..?
ஊடல் முடிந்தபின் பீறிடும் அன்பு அதனினும் அழகு அல்லவா....?? :)))))

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் திவ்யா..... :)))\\

நன்றி:)

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !//

காதல் கொப்பளிக்கிறது அழகான வரிகளில்.....

;))))))\\

கவிஞரின் பாராட்டிற்கு மிக்க நன்றி!!

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை !

என் கோபம் தணிய கொஞ்சும் உன்
கெஞ்சல்கள் மிஞ்சிட ஆசை!//

அட கோபமாய் இருக்கும் நாட்களை குறிச்சு வச்சுக்கனுமா..? அது எதுக்கு...???? ;)))))
திரும்ப ஊடல் கொள்வதற்கா..?

;)))))

கொஞ்சம் கெஞ்சல்....
கொள்ளைகொள்கின்றன வரிகள்...
:))))\\

குறித்து வைத்துக்கொள்வது மீண்டும் ஊடல் கொள்ள அல்ல.....இனிமேல் ஊடலே கொள்ள கூடாது என முடிவெடுக்க:))

அப்படி முடிவெடுத்துட்டா மட்டும்.......ஊடல் வராமலா போகிறது? என்று குறுக்கு கேள்வி எல்லாம் கேட்க கூடாதுங்க :))

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
மீண்டும் ஒரு அழகான கவிதையான கதை திவ்யவிடமிருந்து.....

அழகு அழகு
கதை அழகு...
அதனினும் அழகு
இறுதிக் கவிதை.....

வாழ்த்துக்கள்.. :))))\\

பின்னூட்டங்களில் உங்கள் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தமைக்கு நன்றி நவீன் :)

said...

\\விஜய் said...
ஹ்ம்ம் இன்னுமொரு romantic கதை.
புகுந்து விளையாடறீங்க!!

அன்புடன்,
விஜய்\\

வாங்க விஜய்,

தொடர்ந்து என் வலைதளத்திற்கு வருகைதந்து, உற்சாகமளிக்கும் பின்னூட்டங்கள் தருவதற்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

said...

\\ஆகாய நதி said...
ஆஹா... பிரமாதம்... கதை எழுதுவதுல உங்கள அடிச்சுக்க யாரும் இல்லை போங்க... கவிதையும் சூப்பர்... :)\

வாங்க ஆகாய நதி!

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

said...

\Dhans said...
//கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை //

அழகான வரிகள்\

வாங்க Dhans,

உங்கள் ரசிப்பை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி!!

said...

\ Prabakar Samiyappan said...
ARUMAI kathaikku PORUTTHAMANA PADANGAL .\\

வாங்க ப்ரபாஹர்,

படங்களையும் குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி!

said...

\\gils said...
gummu ishtory...unga postukelam oray comment thaan :) chancela :))\\

'சான்ஸே இல்ல' ன்னு ஒரே வார்த்தைல உச்சி குளிர வைச்சுட்டீங்களே கில்ஸ், நன்றி!!

said...

திவ்யா மிக அருமையான பதிவு!!!!

கதை நடை மிகவும் அருமை!!!

நான் கதையை பாராட்டுவதா இல்லை கவிதையை பாராட்டுவதா....

கவி வரிகள் அருமை!!!!

வாழ்த்துகள் திவ்யா!!!!

(தாமதமான வருகைக்கு "Sorry" மேடம்!!!!)

said...

////எப்படி திவ்யா உங்களுக்கு இப்படி பொருத்தமான படங்கள் கிடைக்கிறது, ஒவ்வொரு முறையும்??////

மிகச்சரியா சொல்லி இருக்கார் ரவி. படங்களை தேர்ந்தெடுப்பதில் தான் பதிவேழுதுவதை விட அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். எனக்கு அப்படித்தான். உங்களுக்கு?

said...

very nice...

Dinesh

said...

///"எதுக்குமா மன்னிப்பெல்லாம் கேட்கிற,நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், நம் அன்பு ஆழமாவதும் இந்த மாதிரி குட்டி குட்டிச் சணடைகளில் தானடி என் செல்லமே///

ம்ம்ம்....

said...

//Your comment has been saved and will be visible after blog owner approval. //

???????????????????????!

said...

///படித்ததில் பிடித்த கதை......சில மாற்றங்களுடன் என் எழுத்தில் பதிவாக///

இதுக்கு என்ன அர்த்தம்...:)

said...

///கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !///

ம்...

said...

///குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது
அழுகையையே மறந்துவிட ஆசை///

ம்ம்...

said...

///உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை///

ம்ம்ம்...

said...

கணவன் மனைவிக்கிடையில் சின்னச் சின்ன சண்டைகள் இருக்கத்தான் வேண்டும் ஆனால் அதை விட வேகம் யார் சமாதானம் சொல்வதென்பதிலும் இருக்க வேண்டும்...

என்ன சரிதானே...

Anonymous said...

REALLY SUPER DIVYA...கதையும் சரி கவிதையும் சரி

said...

கவிதைகளில் திரைப்படப்பாடல்களின் சாயல். இருந்தாலும் சிந்தித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

said...

கவிதைகளில் திரைப்படப் பாடல்களின் சாயல். இருந்தாலும் சிந்தித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

said...

\Blogger Ramya Ramani said...

கதைல திவ்யா-touchkku comments இதோ

//கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போதுகொஞ்சம் உயிர் விட ஆசை !//
:)))))

//குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது
அழுகையையே மறந்துவிட ஆசை !//

பேஷ் :)

//உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை !//

அடடே இப்படி ஒரு அன்பா!!

//உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை !//

cinematic :)

//எனைப்பார்க்கும் போது உன் கண்கள்இமைக்காமல் இருக்க ஆசை !//

அருமை :)

//நம் ஆசைகளை நிறைவேற்றுவது யார் கடமை !
ஆசைகளை பூட்டிவைத்திருக்கும் என் மனம் உன்னிடம் என்பது தானே உண்மை !!//

மிக மிக அருமை :)\\

பகுதி பகுதியா பிரிச்சு பாராட்டியிருக்கிறீங்க...நன்றி ..ரொம்ப நன்றி ரம்யா!!

said...

\\நிமல்/NiMaL said...

அழகான கதை,
ஆழமான கவிதை...!

வாழ்த்துகள்... :)\\\

அழகான உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நிமல்:))

said...

\\ஸ்ரீ said...

கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை

:))\\

வருகைக்கு நன்றி நண்பனே!!

said...

\\SweetJuliet said...

marupadiyum alzhagana arumaiyana kadhal kathai..u rocks...\\

உங்கள் தொடர் வருகைக்கு நன்றி ஜூலியட்:)

said...

\\Sen22 said...

Kathai Superrruuu..

Kavithai athai vida superuuu...\\

செந்தில்,
உங்கள் வருகை சூப்பர்..
உங்கள் பாராட்டு சூப்பரோ சூப்பர்!!

said...

\\shwetha Robert said...

Wondering which one I shud admire......the 'story' or the 'poem'???

Both are admirable in their own way, great work Divya:))\\

வாங்க ஸ்வேதா,

உங்கள் ரசிப்பினை பாராட்டாக வெளிப்படுத்தியமைக்கு நன்றி!!

said...

\\ Shwetha Robert said...

the conversation between that couple is so realistic & cute:-)))\\

உரையாடல்களை ரசித்தமைக்கு நன்றி ஸ்வேதா!!

said...

\\Blogger கார்த்திகேயன். கருணாநிதி said...

கவிதை அருமை திவ்யா..
// உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை //
எல்லா காதலர்களுக்கும் இதுதான் முதல் ஆசை !!
நல்லா இருக்கு திவ்யா !!
அன்புடன்
கார்த்திகேயன்\\

வாங்க கார்த்திக்,

வருகைக்கும் ,மனமார்ந்த பாராட்டிற்கும் நன்றி!!

said...

\\Blogger தாரணி பிரியா said...

ஒரு அழகான ரொமான்டிக் சஸ்பென்ஸ் கதை + கவிதை

//உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை !//

அழ‌கான‌ வ‌ரிக‌ள்\\

வாங்க தாரணி பிரியா,

உங்கள் வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றி!!

said...

\\ Anonymous said...

எப்படி திவ்யா உங்களுக்கு இப்படி பொருத்தமான படங்கள் கிடைக்கிறது, ஒவ்வொரு முறையும்??

வியப்புடன்[!!]
ரவி சந்தர்.\\

பொருத்தமான படங்கள் அமைவது எனக்கே மிகவும் ஆச்சரியமான ஒன்று ரவி!!

உங்கள் வருகைக்கு நன்றி!!

said...

\\Anonymous said...

கதை அழகென்றால்...
கவிதை அழகோ அழகு!!!

ரவி சந்தர்.\\

உங்கள் அழகான பின்னூட்டதிற்கு நன்றி ரவி சந்தர்!

மீண்டும் வருக!!

said...

\\பிரேம்குமார் said...

ம்ம்ம்ம்ம்...நல்லாவே இல்ல...கொஞ்சம் கூட நல்லாவே இல்ல! பின்ன என்னங்க, உங்களை போன்ற திறமைசாலிகள் இன்னும் ஏன் திரைப்படத்துறைக்கு வரவில்லை! என்ன கதை....என்ன கவிதை! அசத்திபுட்டீங்க போங்க!

அப்பன்ன இதுபோன்ற விஷயங்கள் இனிமேல் ரயிலில் நடந்தால் நாம கண்டும் காணாமலும் இருப்பதுதான் நல்லது என்ன சரியா...ஏன்னா அவர்கள் கணவன் மனைவியாக இருக்கலாம் இல்லையா! நல்லாயிருக்கு! நன்றி! இனிமேல் அடிக்கடி வருவேன் என்று பொய்யெல்லாம் சொல்ல விரும்பவில்லை! வருவேன்..வர்டா...\\

வாங்க பிரேம் குமார்,

உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி......நன்றி.....நன்றி!!

சந்தர்ப்பம் கிடைக்கையில் என் வலைதளத்திற்கு நிச்சயம் வாருங்கள் பிரேம்!!

said...

Great Divya..

I just came across ur blog yesterday. Read first story and then never went back. I think now i have almost read most of your posts from Nov 2006.

My Favorite Kavithai..
1) Appa
2) Annan
3) Amma.

So great...I have no words to explain..

Some of the posts are more creative than Anandha Vikatan, kumudam..

Neenga yen antha mathiri books leum try panna koodathu?

Hats off divya..

said...

\\ rapp said...
cute கதை. அருமையான பதிவு.\\

முதன் முறையாக என் வலைதளம் வந்திருக்கிறீங்க, மிக்க நன்றி!!

said...

\ மங்களூர் சிவா said...
ஜூப்பரு!!\\\

நன்றி மங்களூர் சிவா!!!

said...

\\ ஜி said...
//கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி அழுதாள் //

//உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை //

Nice lines....

I was expecting a different ending... This is nice!!!\\

வாங்க ஜி!!

உங்கள் ரசிப்பினை பின்னூட்டமிட்டதற்கு நன்றி!!

said...

\\ கப்பி பய said...
nice story!\\

நன்றி கப்பி !!

said...

\\ வினையூக்கி said...
ஆண்டிரியாவைப் போலவே கதையும் அழகாகவே இருக்கிறது\\

ஆண்டிரியாவை மட்டுமில்லாமல் கதையையும் ரசித்தமைக்கு நன்றி வினையூக்கி!!

said...

\\அதிஷா said...
கதை நச்னு இருக்கு...\\

வாங்க அதிஷா,

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!!

said...

\ Dreamzz said...
:) Nice\\

நன்றி ட்ரீம்ஸ்:))

said...

\sathish said...
//நவீன் ப்ரகாஷ் said...
//எதுக்குமா மன்னிப்பெல்லாம் கேட்கிற,நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், நம் அன்பு ஆழமாவதும் இந்த மாதிரி குட்டி குட்டிச் சணடைகளில் தானடி என் செல்லமே" //

அன்பு ஆழமாவது இதைப் போன்ற செல்லச் சண்டைகளால் தான் இல்லையா..?
ஊடல் முடிந்தபின் பீறிடும் அன்பு அதனினும் அழகு அல்லவா....?? :)))))
//

Naveen neenga sonna kantippa correct'a thaan irukkum!!!\\

:)

said...

\ sathish said...
narration nalla iruku Divya :)\\

ரொம்ப நன்றி சதீஷ்!

said...

\\ கோபிநாத் said...
அழகான கதை ;)\\

உங்கள் அழகான தருகைக்கு நன்றி கோபிநாத்!!

said...

\\ Thamizhmaangani said...
//படித்ததில் பிடித்த கதை......சில மாற்றங்களுடன் என் எழுத்தில் பதிவாக//

குருவே, பொங்கலுக்கே வெடி வெடிப்பீங்க, தீபாவளி வந்தா சும்மாவா விடுவீங்க!! original கதையோடு உங்க எழுத்தும் சேர்ந்து தூள் கிளப்பிட்டு.\\

நன்றி நன்றி காயு:))

\\இப்பதான்ங்க, தியானம் எல்லாம் செய்ய ஆரம்பிச்சுருக்கேன். தியானம் பண்ணி மனச 'அலைபாய'விடாம, ஒரு நிலைப்படுத்தி வைக்கலாம்னு இருந்தேன்ன்ன்ன்...இந்த கதைய படிச்சபிறகு எல்லாம் போச்சு! மறுபடியும் அலைபாய வச்சுட்டீங்களே மனச!! :))\\

அட பொண்ணு இதுக்குதான் யோகா க்ளாஸ் எல்லாம் போக ஆரம்பிச்சாளா?? அச்சச்சோ....மனசை அலைபாய வைச்சுட்டுதே கதை:(((

//கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போதுகொஞ்சம் உயிர் விட ஆசை !//

உங்க கவிதை வரியால என்னையும் 'close' பண்ணிட்டீங்க! ஹிஹி..\\

எந்திரி காயத்ரி, எந்திரி:)))

//உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை//

வாவ்!!! அட்ராசக்கை! சூப்பரா இருக்கு.\\

ரசிப்பை விரிவாக பகிர்ந்ததுக்கு ரொம்ப ரொம்பபபபப.....தாங்க்ஸ் காயு:)

\\கதை ரொம்ப சூப்பர்ர்ர்! எனக்கு பிடித்த மாதிரி ஒரு கதை *winks* haha..

நேத்து வச்ச மீன் குழம்ப இன்னிக்கு சூடுப்படுத்தி சாப்பிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்! continue rocking babe!\\

நேத்து வைச்ச மீன் குழம்பு சாப்பிட்ட ஃபீல் ஆ......ஆஹா...ஆஹா.....இப்படி எக்ஸாபிள் எல்லாம் சொல்ல உங்க கிட்ட தான் கத்துக்கனும்:))

said...

\\ புகழன் said...
கதை அருமை. அதைவிட அருமையாக இறுதிக் கவிதை. அதிலும்
\\உள்ளங்கையில் உன் பெயரை எழுதி முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்துஉலராமல் இருக்க ஆசை !
\\

இந்த வரிகள் சூப்பரோ சூப்பர்.

படங்களும் பொருத்தமாக உள்ளன.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள் திவ்யா\\

வாங்க புகழன் ,
உங்கள் தொடர் வருகைக்கும், ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி!!!

said...

\\ எழில்பாரதி said...
திவ்யா மிக அருமையான பதிவு!!!!

கதை நடை மிகவும் அருமை!!!

நான் கதையை பாராட்டுவதா இல்லை கவிதையை பாராட்டுவதா....

கவி வரிகள் அருமை!!!!

வாழ்த்துகள் திவ்யா!!!!

(தாமதமான வருகைக்கு "Sorry" மேடம்!!!!)\\

இனிமே தாமதமா வந்தா.....லாஸ்ட் பெஞ்ச் மேல நிக்க வைச்சுடுவேன் :))

வாழ்த்துக்களுக்கு நன்றி எழில் பாரதி!!

said...

\\ மோகன் கந்தசாமி said...
////எப்படி திவ்யா உங்களுக்கு இப்படி பொருத்தமான படங்கள் கிடைக்கிறது, ஒவ்வொரு முறையும்??////

மிகச்சரியா சொல்லி இருக்கார் ரவி. படங்களை தேர்ந்தெடுப்பதில் தான் பதிவேழுதுவதை விட அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். எனக்கு அப்படித்தான். உங்களுக்கு?\\

பதிவெழுத தான் மோகன் எனக்கு நேரம் எடுக்கும்.....தமிழ் டைப்பிங் கொஞ்சம் தகராறு எனக்கு,

படங்கள் தேர்ந்தெடுக்க இதுவரை அதிக நேரம் எடுத்ததில்லை......எப்படியோ பொருத்தமான படங்கள் அமைந்துவிடுகிறது எளிதில்:))

வருகைக்கு நன்றி மோகன்!!

said...

\\ தினேஷ் said...
very nice...

Dinesh\\

வாங்க தினேஷ்,

உங்கள் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி!!

said...

\\ தமிழன்... said...
///"எதுக்குமா மன்னிப்பெல்லாம் கேட்கிற,நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், நம் அன்பு ஆழமாவதும் இந்த மாதிரி குட்டி குட்டிச் சணடைகளில் தானடி என் செல்லமே///

ம்ம்ம்....\\

உங்கள் ரசிப்பை.....'ம்ம்ம்' என வெளிப்படுத்திய பின்னூட்டங்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி தமிழன்!!

said...

\
தமிழன்... said...
//Your comment has been saved and will be visible after blog owner approval. //

???????????????????????!\

Comment moderation was enabled during weekend Tamilan!!

said...

\\ தமிழன்... said...
///படித்ததில் பிடித்த கதை......சில மாற்றங்களுடன் என் எழுத்தில் பதிவாக///

இதுக்கு என்ன அர்த்தம்...:)\\

கதையின் கரு, படித்ததில் பிடித்திருந்த ஒரு கதையின் அடிப்படையில் அமைந்தது என அர்த்தம்;))

said...

\\தமிழன்... said...
கணவன் மனைவிக்கிடையில் சின்னச் சின்ன சண்டைகள் இருக்கத்தான் வேண்டும் ஆனால் அதை விட வேகம் யார் சமாதானம் சொல்வதென்பதிலும் இருக்க வேண்டும்...

என்ன சரிதானே...
\\

மிக மிக சரி:)))

said...

\ இனியவள் புனிதா said...
REALLY SUPER DIVYA...கதையும் சரி கவிதையும் சரி\\

வாங்க புனிதா,

உங்கள் மனமார்ந்த பாராட்டு என்னை உற்சாகப்படுத்தியது!!

said...

\ இரா.ஜெயபிரகாஷ் said...
கவிதைகளில் திரைப்படப்பாடல்களின் சாயல். இருந்தாலும் சிந்தித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.\

வாங்க ஜெயபிரகாஷ்,

உங்கள் தொடர் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

said...

\\ஒரு வழிப்போக்கன் said...
Great Divya..

I just came across ur blog yesterday. Read first story and then never went back. I think now i have almost read most of your posts from Nov 2006.

My Favorite Kavithai..
1) Appa
2) Annan
3) Amma.

So great...I have no words to explain..

Some of the posts are more creative than Anandha Vikatan, kumudam..

Neenga yen antha mathiri books leum try panna koodathu?

Hats off divya..\\

வாங்க வழிபோக்கன்,

என் பதிவுகளை பொறுமையுடன் படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

பத்திரிக்கைகளில் எழுதும் அளவிற்கு நான் இன்னும் எழுதிவிடவில்லை.

எனினும் பிற்காலத்தில் நாவல் எழுத வேண்டும் என்ற ஆவல் அடி மனதில் புதைந்துள்ளது.....பார்க்கலாம், சந்தர்ப்பம் வாய்க்குமா என்று!!

மீண்டும்...உங்கள் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி வழிபோக்கன்!!

Anonymous said...

Divya,
I am a long time regular reader to your writing,sorry I have not yet commented in any of your posts.

so curious to know this...
Do the heroine charachter in your stories are fully imaginary or your real-time nature is imparted into it??

If you feel like answering, then do reply me...else its ok.

Will continue to read your awesome writing, so keep writing more Divya.

Anita Prabhakar.

Anonymous said...

One more thing Divya,
you rock in dialogue expressions & apt picture selection.
Keep up your great work!!

Anita Prabhakar

said...

ஆஹா குருவே, 100 அடிச்சுட்டீங்க! great great!

//எனினும் பிற்காலத்தில் நாவல் எழுத வேண்டும் என்ற ஆவல் அடி மனதில் புதைந்துள்ளது.....பார்க்கலாம், சந்தர்ப்பம் வாய்க்குமா என்று!!//

கண்டிப்பா எழுதுங்க திவ்ஸ்!

//so curious to know this...
Do the heroine charachter in your stories are fully imaginary or your real-time nature is imparted into it??///

அனிதா,இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு உங்களுக்கு பெரிய treatஏ வைக்கனும்! திவ்ஸ், மாட்டிக்கிட்டீங்களா? மழுப்பாம, உங்க பதில சொல்லுங்க! பொய் சொன்னா எனக்கு பிடிக்காது!! ஹிஹி..

said...

அன்பு சகோதரி,

உங்களுடைய பதிவுகளை நான் படித்து இருக்கிறேன். நிறைய பதிவுகள் மிகவும் நன்றாக இருந்தன. நான் உங்களுடைய விசிறி என்பதில் எனக்குப் பெருமை.

மற்ற கதை மற்றும் கவிதைகளைப் படிக்கும் போது இருந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏனோ இந்தக் கதையை படிக்கும் போது வர வில்லை.
சிறிது ஏமாற்றம் தான்.

உரையாடல் மற்றும் கவிதைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் பிற கதை மற்றும் கவிதைகளின் சாயலைத் தவிர்த்திருக்கலாம்.

நீங்கள் என்னுடைய பின்னூட்டத்தை பாசிடிவ்-ஆக எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுதுங்கள். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
விமல்

said...

Great!You shd come in to TN-cinema!

Shan Nalliah/Norway
sarvadesatamilercenter.blogspot.com

said...

பொறுமையாக படிக்கவில்லை, அருமையாக இருந்ததால் படித்தேன்.
உங்கள் பதிலுக்கு நன்றி !!.

உங்கள் எழுத்துகளில் (கதை, கவிதை, அறிவுரைகள்)
1) புரிதல்
2) விட்டு கொடுத்து வெற்றி பெறுதல்
3) நிதானம்
4) வாழ்க்கை பற்றிய தெளிவு

இவைகளை பார்க்கிறேன்.இவை எல்லாம் செயலிலும் இருக்கும் என நினைக்கிறன்.

Novel - Small suggestion
எனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ

மாதங்களில் பயணிக்கும் இந்த கதை ஐ அப்படியே கொஞ்சம் zoom செய்து நாட்கள், சில நிமிடங்கள் வேகத்தில் செலுத்தினால் நல்லா நாவல் வரும் என கருதுகிறேன். (என்னால்

முடிந்த tips)

பிடித்த சில வரிகள் !!

இந்த பூவுக்கும் வாசம் உண்டு......

"see ஜனனி, ஒருத்தரை லவ் பண்றோம்னா.....அவரை மட்டும் நேசிக்கிறது ஆழமான காதல் இல்லை, அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பம்,

அதையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்"

உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!பொறுமையுடன் புரிய வைப்போம், நம் காதல் நமக்கு துணை நிற்கும்,

அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!

தொடருங்கள் உங்கள் சேவையை !!! Waiting for Next Post....Athunaiyum padithagi vittathu..

இப்படிக்கு
செல்வா (எ) குமார்

டிஸ்க் : இவை அனைத்தும் ஓர்குட் இல் டைப் செய்து இங்கு பேஸ்ட் செய்ய பட்டு உள்ளது. எழுது பிழைக்கு orkut e porupu.

said...

\\Anita Prabhakar said...
Divya,
I am a long time regular reader to your writing,sorry I have not yet commented in any of your posts.

so curious to know this...
Do the heroine charachter in your stories are fully imaginary or your real-time nature is imparted into it??

If you feel like answering, then do reply me...else its ok.

Will continue to read your awesome writing, so keep writing more Divya.

Anita Prabhakar.\\

வாங்க அனிதா,

என் வலைதளத்தின் பதிவினை விரும்பி படிக்கும் உங்கள் ரசிப்பிற்கு நன்றி, நன்றி!!

கற்பனை கதாபாத்திரங்கள்தான் என் கதையின் வரும் கதாநாயகிகளும், ஆனால்.....என் சுபாவமும் பேச்சும் அவ்வப்போது அப்பெண்ணின் இயல்பில் வெளிப்படுத்தியிருக்கிறேன்:)))

இத்தனை ஆர்வத்துடன் கதாநாயகிகளின் கதாபாத்திரத்தின் மேல் என் இயல்குணம் இருக்கிறதா என விளக்கம் கேட்ட உங்கள் ஈடுபாட்டிற்கு நன்றி அனிதா.

தொடர்ந்து என் பதிவுகளை தவறாமல் படிங்க, உங்கள் விமர்சனமும் ஊக்கமும் தான் எனக்கு தேவை!!

said...

\ Anita Prabhakar said...
One more thing Divya,
you rock in dialogue expressions & apt picture selection.
Keep up your great work!!

Anita Prabhakar\\

மிக்க நன்றி அனிதா!!!!

said...

\\ Thamizhmaangani said...
ஆஹா குருவே, 100 அடிச்சுட்டீங்க! great great!\\

எல்லாம் உங்களை மாதிரி நண்பர்களின் புண்ணியத்துல அடிச்ச சதம் தானுங்கோ:))

//எனினும் பிற்காலத்தில் நாவல் எழுத வேண்டும் என்ற ஆவல் அடி மனதில் புதைந்துள்ளது.....பார்க்கலாம், சந்தர்ப்பம் வாய்க்குமா என்று!!//

கண்டிப்பா எழுதுங்க திவ்ஸ்!\\

ரொம்ப தாங்க்ஸ் காயு:)))

//so curious to know this...
Do the heroine charachter in your stories are fully imaginary or your real-time nature is imparted into it??///

அனிதா,இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு உங்களுக்கு பெரிய treatஏ வைக்கனும்! திவ்ஸ், மாட்டிக்கிட்டீங்களா? மழுப்பாம, உங்க பதில சொல்லுங்க! பொய் சொன்னா எனக்கு பிடிக்காது!! ஹிஹி..\\

வாம்மா மின்னல்.....என்னை வம்பிழுக்க கரெக்ட்டா உங்களுக்கு மூக்குல வேர்த்திடுமே!!!

மழுப்பாம அனிதா வுக்கு பதில் சொல்லிட்டேங்க அம்மனி:))

said...

\\ ந.மு.விமல்ராஜ் said...
அன்பு சகோதரி,

உங்களுடைய பதிவுகளை நான் படித்து இருக்கிறேன். நிறைய பதிவுகள் மிகவும் நன்றாக இருந்தன. நான் உங்களுடைய விசிறி என்பதில் எனக்குப் பெருமை.

மற்ற கதை மற்றும் கவிதைகளைப் படிக்கும் போது இருந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏனோ இந்தக் கதையை படிக்கும் போது வர வில்லை.
சிறிது ஏமாற்றம் தான்.

உரையாடல் மற்றும் கவிதைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் பிற கதை மற்றும் கவிதைகளின் சாயலைத் தவிர்த்திருக்கலாம்.

நீங்கள் என்னுடைய பின்னூட்டத்தை பாசிடிவ்-ஆக எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுதுங்கள். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
விமல்\\

வாங்க விமல்,

உங்கள் மனம்திறந்த விமர்சனத்திற்கு என் நன்றிகள்:))

நீங்கள் என் எழுத்தின் விசிறி என்பதில் எனக்குதான் பெருமை விமல்!!!

அக்கறையுடன் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குறைகளையும் என் நினைவில் கொண்டு,
வரும் பதிவுகளில் கவனம் செலுத்துகிறேன்.

இத்தகைய வெளிப்படையான சுட்டிக்காட்டுதலை என்றும் நான் நெகட்டிவாக எடுத்துக்கொண்டதில்லை,

என் எழுத்தினை மேம்படுத்த, எனக்கு இத்தகைய வழிகாட்டுதல் நிச்சயம் அவசியம்:))

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி விமல்!!!

said...

\\ Shan Nalliah / GANDHIYIST said...
Great!You shd come in to TN-cinema!

Shan Nalliah/Norway
sarvadesatamilercenter.blogspot.com\\

வாங்க ஷான் நல்லையா:)

வணக்கம்.

உங்கள் பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி!!

\\You shd come in to TN-cinema!\\

அந்த அளவிற்கெல்லாம் நான் இன்னும் ஏதும் பெரிதாக சாதித்துவிடவில்லை சார்.
நன்றி:)))

said...

\\ஒரு வழிப்போக்கன் said...
பொறுமையாக படிக்கவில்லை, அருமையாக இருந்ததால் படித்தேன்.
உங்கள் பதிலுக்கு நன்றி !!.\\

கஷ்டபடாமல் இஷ்டபட்டு என் பதிவுகளை படிச்சிருக்கிறீங்க......நன்றி, நன்றி!!!

\\உங்கள் எழுத்துகளில் (கதை, கவிதை, அறிவுரைகள்)
1) புரிதல்
2) விட்டு கொடுத்து வெற்றி பெறுதல்
3) நிதானம்
4) வாழ்க்கை பற்றிய தெளிவு

இவைகளை பார்க்கிறேன்.இவை எல்லாம் செயலிலும் இருக்கும் என நினைக்கிறன்.\\

ஓரளவிற்கு இருப்பது உண்மைதான்:))

\\Novel - Small suggestion
எனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ

மாதங்களில் பயணிக்கும் இந்த கதை ஐ அப்படியே கொஞ்சம் zoom செய்து நாட்கள், சில நிமிடங்கள் வேகத்தில் செலுத்தினால் நல்லா நாவல் வரும் என கருதுகிறேன். (என்னால்

முடிந்த tips)\\

நல்லா ஐடியா எல்லாம் கொடுக்கிறீங்களே!!! ரொம்ப தாங்க்ஸ்!!!!

\\\பிடித்த சில வரிகள் !!

இந்த பூவுக்கும் வாசம் உண்டு......

"see ஜனனி, ஒருத்தரை லவ் பண்றோம்னா.....அவரை மட்டும் நேசிக்கிறது ஆழமான காதல் இல்லை, அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பம்,

அதையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்"

உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!பொறுமையுடன் புரிய வைப்போம், நம் காதல் நமக்கு துணை நிற்கும்,

அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!\\

உங்கள் ரசிப்பினை பின்னூட்டத்தில் பகிர்ந்து என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறீங்க, நன்றி குமார்:)))

\\தொடருங்கள் உங்கள் சேவையை !!! Waiting for Next Post....Athunaiyum padithagi vittathu..

இப்படிக்கு
செல்வா (எ) குமார் \\

சேவை எல்லாம் பெரிய வார்த்தைங்க :))
விரைவில் அடுத்த பதிவு பதிக்கிறேன், அவசியம் படிங்க :)

\\டிஸ்க் : இவை அனைத்தும் ஓர்குட் இல் டைப் செய்து இங்கு பேஸ்ட் செய்ய பட்டு உள்ளது. எழுது பிழைக்கு orkut e porupu.\\

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3/

Kumar, you can download tamil unicode sw in this link , and you can type directly in tamil.
[Alt1\Alt2 to toggle between English & Tamil font]

Thanks a lot for taking time to type in tamil th'gh Orkut and pasting it in my comment page:))

said...

கதையை விட கதைக்கேற்றாற் போல இருந்த படங்களும் கதைக்குக் கீழே இருந்த கவிதை வரிகளும் தான் மிக அருமை.

said...

அடடா ஒரு வாரம் இந்த பக்கம் வரல அதுக்குள்ள ரெண்டு சூப்பர் போஸ்ட் போட்டாச்சு.... கதை அட்டகாசம்...

said...

//கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !

குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது

அழுகையையே மறந்துவிட ஆசை !

உள்ளங்கையில் உன் பெயரை எழுதி
முத்தமிட ஆசை !

உன் அன்பில் நான் நனைந்து
உலராமல் இருக்க ஆசை !

//

அருமையான கவிதை வரிகள். காதல் கவிதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை.

\\aanazagan said...
கதையை விட கதைக்கேற்றாற் போல இருந்த படங்களும் கதைக்குக் கீழே இருந்த கவிதை வரிகளும் தான் மிக அருமை.\\

வாங்க ஆணழகன்,

கவிதையையும், படங்களையும் மிகவும் ரசித்திருகிறீர்கள், நன்றி!!

said...

\\Syam said...
அடடா ஒரு வாரம் இந்த பக்கம் வரல அதுக்குள்ள ரெண்டு சூப்பர் போஸ்ட் போட்டாச்சு.... கதை அட்டகாசம்...\\

வாங்க ஷ்யாம்,

வருகைகும் மனமுவந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

said...

wow super durga....

nice narration... its not a story at all... yetho nijamave kannu munnadi nadakkura oru feeling....

antha naal ngabagam...
vanthathe kanmani....

said...

\\ Mukilarasi said...

wow super durga....

nice narration... its not a story at all... yetho nijamave kannu munnadi nadakkura oru feeling....

antha naal ngabagam...
vanthathe kanmani....\\

வாங்க முகிலரசி,

உங்கள் இனிமையான மலரும் நினைவுகளை இந்த கதை நினைவுப்படுத்தியதா?? மகிழ்ச்சி!!

பகிர்விற்கு நன்றி முகிலரசி!!

BTW என் பெயர் துர்கா இல்லீங்கோ.....!!!

said...

எப்போ அடுத்த‌ ப‌குதி? ரொம்ப‌ நாளா காத்துட்டு இருக்கேன். :)

said...

@கயல்விழி

\அருமையான கவிதை வரிகள். காதல் கவிதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை.\\

உங்கள் ரசிப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி கயல்விழி!!

said...

அன்புள்ள திவ்யா அவர்களுக்கு,

என் பேர் அருண் கோவை மாநகரத்தில் இருந்து....
இப்போ தான் முதல் முறையாக உங்கள் கதைகளை படித்தேன்...... ரசித்தேன்.
நான் பெரிய கதாசிரியர் அல்ல, ஆனாலும் ஒரு ரசிகனா என் கருத்துகளை சொல்லணும் ல

//உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை ! //

இந்த இடத்தில் பொருள் தப்பா இருக்குனு நான் நெனைக்கறேன்.
தப்பு நா மன்னித்துவிடுங்கள்.

உன்னோடு இருக்கும் ஒரு யுகம்
ஒரு நாளாய் மாற ஆசை !

இப்டி வந்தா நல்லா இருக்கும்னு நான் நெனைக்கறேன்.
ஒரு அருமையான கதைக்கு இந்த திருஷ்டி தேவை னு விட்டுடீங்களோ ?