January 30, 2008

படிதாண்டும் பத்தினி....

சமீபத்தில் என் உறவுக்கார தம்பதியருக்கு நடுவே நடந்த பிரிவு [ டைவர்ஸ்] என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரிவு ஏற்பட காரணமாயிருந்தது அந்த மனைவிக்கு தன் சக அலுவலக நண்பருடனான நட்புறவு.

நான் பள்ளிப்பருவத்திலிருந்த போது அந்த தம்பதியருக்கு திருமணமான புதிது, எங்கள் வீட்டிற்கு 'விருந்திற்கு' வந்திருந்தபோது அவர்களிடம் காணப்பட்ட காதல் கலந்த தாம்பத்திய வாழ்க்கையில் எங்கு, எப்படி விரிசல் ஏற்பட்டது?
திருமணமாகி 8 வருடங்களான பின்பு, 2 ஆழகான குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணிற்கு ஏன் இந்த திருமணத்திற்கு வெளியிலான தகாத நட்பும், உறவும்?

ஆண்களும் இத்தகைய உறவுகளுக்கு ஆளாவது விதிவிலக்கல்ல என்றாலும், பண்பாடு பிறளாத பத்தினி பெண்கள் படிதாண்டும் அவலம் ஏனோ? என்று சிந்திக்க வைத்தது.

என் குடும்ப நண்பரான மனோத்தத்துவ மருத்துவரிடம் இது குறித்து நான் கேட்டபோது, அவர் என்னிடம் பகிர்ந்துக்கொண்ட கருத்துக்களை இங்கே பதிவிடுகிறென்.

கேள்வி: மனைவியான ஒரு பெண் ஏன் இத்தகைய தவறான நட்பு வலையில் சிக்குகிறாள்? அதற்கான காரணங்கள் என்ன?

மருத்துவர்:பெண்ணின் மனதில் ஏற்படும் தனிமை மற்றும் வெறுமை உணர்வு ஒரு முக்கிய காரணம்.
காதலித்த தருணங்களில், திருமணமான புதிதில் தன்னிடம் அதிக அக்கரை காட்டிய தன் வாழ்க்கை துணை, வருடங்கள் ஓட ஓட, தன்னிடம் செலவழிக்கும் நேரம் குறைந்துவிட்டது என்பதை ஒரு மனைவி திருமணம் ஆகி 8 அல்லது 10 வருடங்கள் கழித்து, அதாவது குழந்தைகளை பெற்று வளர்த்து முழுநேர பள்ளிக்கு அனுப்பிய போதுதான் உணர்கிறாள்.
அதுவரை தன் குழந்தைகள், தன் குடும்பம் என்று இருந்தவளுக்கு இந்த தனிமையுணர்வு அப்போதுதான் தலைத்தூக்குகிறது.

கேள்வி:தனிமையுணர்வு பெரும்பாலும் அனைவரும் ஒரு காலக்கட்டத்தில் கடந்து வரும் ஒன்று, அவ்வுணர்வு மட்டுமே காரணமாக இருக்க முடியுமா?

மருத்துவர்: பெரும்பான்மையான பெண்கள் இந்த தனிமை உணர்வுகளின் தாக்கத்துக்குள்ளாகும் போது முப்பதிலிருந்து நாற்பது வயதுக்குள்ளிருப்பார்கள்,
எப்படி 15 வயதில் ஒரு பெண்ணிற்க்கு ஒத்த வயது பையனின் பார்வை கிரங்கடித்ததோ...
எப்படி 20 வயதில் காதலும், தொடுதலும் அவளுக்கு கிளர்ச்சியை கொடுத்ததோ..
அப்படி இந்த 30 -40 வயதிலும் ஒரு ஆண் துணையின் கரிசனமான வார்த்தையும், அரவணைப்பும் ஒரு இன்பத்தை கொடுக்கிறது.
ஆனால் அந்த அரவனைப்பு அவளுக்கு தன் கணாவனிடிமிருந்து கிடைக்காத பட்சத்தில் அவளுடன் அன்போடு பேசும் மற்றொரு ஆணிடம் வசியப்படுத்துகிறது.

கேள்வி:கணவனின் கவனக் குறைவும், அக்கரையின்மையும் இதற்கு காரணமா?

மருத்துவர்: ஆம் அதுவும் ஒரு முக்கிய காரணம். தன் மனைவி தன் அன்பிற்காக ஏங்குகிறாள் என்று உணராமல் போவதற்கு காரணம்.......தாயான பின் பெரும்பான்மையான பெண்கள் தன் கணவனிடம் அதிக நேரத்தை செலவழிப்பதில்லை. கணவனுக்கும் வருடங்கள் செல்ல செல்ல , இனி இதுதான் குடும்ப வாழ்க்கை போலிருக்கிறது என்று, தன் தொழில், அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்து விடுகிறான்.
பத்து வருடம் தன் கணவனுக்கு, தன் குழந்தைகளுக்கும் சமைப்பதும், உழைப்பதும் மட்டுமே கடமை என்று இருந்த மனைவிக்கு, காலம் தாழ்த்தி கணவன் மேல வரும் காதலை வெளிக்காட்ட தெரிவதில்லை.
சில விஷயங்கள் ஆண்களுக்கு வெளிப்படையாக சொன்னால் மட்டுமே புரியும், அச்சில விஷயங்களை பெண்கள் வெளிப்படுத்த தவறுவதுதான் அடிப்படை காரணம்.

கேள்வி: படுக்கை அறை விரிசல் இதற்கு முக்கிய காரணமென்று சொல்கிறீர்களா?

மருத்துவர்: அதுவும் ஒரு காரணம், ஆனால் அது மட்டுமே காரணமில்லை. சக ஆண்களிடம் பேசி பழகும் இக்காலக்கட்டத்தில், ஒரு பெண் ' அந்த ' உறவுக்காக என்ற எண்ணத்தோடு பழகுவதில்லை. இயல்பான நட்பே நாளடைவில் அரவனைப்பாக, ஆறுதலாக, இதமாக மாறும்போது தான், ஒரு பெண் எல்லை மீறுகிறாள், தன் உணர்வுகளுக்கு அடிபணிகிறாள். ஆண் நட்பில் அவளது முதல் நோக்கம் இதுவல்ல.

கேள்வி: தாம்பத்திய வாழ்வில் நாளடைவில் ஏற்படும் தொய்வினை போக்க ஏதேனும் அறிவுரைகள் தர இயலுமா??

மருத்துவர்: மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையின் ரகசியமே மனம்விட்டு பேசுவதும், அதிக நேரம் தனித்து செலவழிப்பதும் தான்.

'மோகம் முப்பது நாள், காதல் அறுபது நாள்' என்பது "மோகம் முப்பது வருஷம் , காதல் அறுபது வருஷம்' என இருக்க இதோ சில டிப்ஸ்..

1. 'தேன் நிலவில்' எப்படி ஒரு தனிமை தம்பதியர்க்கு புரிதலையும், இன்பத்தையும் அளித்ததோ, அதே மாதிரியான ஒரு தனிமையை திருமணமாகி பல வருடங்கள் சென்றபின்பும் ஏற்படுத்திக் கொள்வது கணவன் மனைவிக்கு ஒரு புது உற்ச்சாகத்தையும், அந்நியோனத்தையும் அளிக்கும்.
[குழந்தைகளை உங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் விட்டு விட்டு, ஒரு இரண்டு நாள் சுற்றுலா{ இரண்டாம் தேன்நிலவு} போகலாம்]

2.மேற்சொன்ன டிப்ஸ் சாத்தியமில்லையெனில், கணவன் - மனைவி இருவரும் ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு, உங்கள் வீட்டிலேயே குழந்தைகள் ஸ்கூல் சென்றபின் தனித்து நேரம் செலவழிக்கலாம்.[ மதியம் லஞ்சுக்கு இருவர் மட்டும் ஜோடியாக செல்லலாம்]

3.முப்பது வயதில் உங்கள் மனைவிக்கு தன் அழகும், இளமையும் மறைந்துப்போனதோ என்ற உணர்வு மேலோங்கி இருக்கும், அதனால் அடிக்கடி அவர்களை வர்னிக்கவும், பாராட்டவும், உற்ச்சாகப்படுத்தவும் தவற வேண்டாம்.
["எப்படிடா செல்லம், நான் உன்னை பொண்ணுபார்க்க வந்தபோ/ காதலிச்சப்போ இருந்ததைவிட இன்னும் அழகா, நசுன்னு இருக்கிற? உன்னைப்பார்த்தா இரண்டு குழந்தைகளுக்கு அம்மா மாதிரியா இருக்கு, காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரிதான்டா இருக்கிற" - இப்படி அள்ளி விடுங்க ]

---------------------*------------------------------*---------------

[மேற்சொன்ன டிப்ஸில் ப்ராகட்டில் இருப்பது என் கருத்துக்கள்,
இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை.]

67 comments:

நவீன் ப்ரகாஷ் said...

மிக வித்தியாசமான கனமான கருத்துக்கள் திவ்யா :))))

நவீன் ப்ரகாஷ் said...

//மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையின் ரகசியமே மனம்விட்டு பேசுவதும், அதிக நேரம் தனித்து செலவழிப்பதும் தான்.//

மிகச்சரியான கருத்து... இது கணவன் மனைவிக்கு மட்டும் அல்ல ... அனைவருக்குமே பொருந்தும் அல்லவா..? :)))

Dreamzz said...

//எப்படிடா செல்லம், நான் உன்னை பொண்ணுபார்க்க வந்தபோ/ காதலிச்சப்போ இருந்ததைவிட இன்னும் அழகா, நசுன்னு இருக்கிற? //
நல்லா தான்மா டிப்ஸ் கொடுக்கறீங்க...

Dreamzz said...

படி தாண்டினா எப்படி பத்தினி??
oxymoron thaana ithu?

Dreamzz said...

//மிக வித்தியாசமான கனமான கருத்துக்கள் திவ்யா :))))//
ரிப்பீட்டு!

Nimal said...

நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.

//இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை.//
விளங்கிக்கொள்ள எனக்கும் இல்லை... :)))

ஜி said...

:)))

நிவிஷா..... said...

//விளங்கிக்கொள்ள எனக்கும் இல்லை... :)))//
enakkum thaanga

natpodu
nivisha

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

கசப்பான ஆனால் யோசிக்க வேண்டிய ஒன்று திவ்யா!

தெளிவும் பக்குவமும் புரிதலும் எந்த உறவிலும் மிக முக்கியம். ஆனால் உணர்ச்சிகள் அளவு கடந்து போகும் போது இதையெல்லம் சிந்திக்க மனம் தவறுகிறது! தேடலில் இருக்கும் அவசியத்தையும் உண்மையையும் கண்டுகொண்டால் குழப்பங்கள் குறையும் இல்லையா!

பாச மலர் / Paasa Malar said...

குழந்தைகளை எப்படித்தான் மறக்கிறர்களோ திவ்யா இவர்கள்?

இப்படிக் காதலனை நம்பிப் போய் ஏமாந்த பெண்ணை அவள் அப்பா அம்மாவே அடித்து விரட்ட, மீண்டும் ஏற்றுக் கொண்ட கணவனைப் பார்த்திருக்கிறேன்.

தினேஷ் said...

திவ்யா,

சமுகத்தின் மிது உள்ள அக்கறையின் ப(கிர்)திவு.

ஒரு திருமணமான ஆண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்ப்படும் விரிசலுக்கு காரணம், தனிமை மற்றும் வெறுமை உணர்வு எந்த காரணம் இருந்தாலும், அவர்களின் காரணத்தால் பிறந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை கூட கணக்கில் கொள்ளாமல் இருப்பது தான் மிகமிக வேதனையான விஷயம். பெற்றோர்கள் செய்யும் தவறால் அந்த குழந்தைகள்; தன் சமுகத்தையும் மற்றும் தன் பெற்றோர்களையும் உணரும் போது கண்டிப்பாக பெற்றோர்கள் மிதோ அல்லது சமுகத்தின் மிதோ கண்டிப்பாக ஒரு நல்ல சிந்தனை இருக்காது. அது அவர்களின் எதிர்காலத்தையும் எதிர்கால சிந்தனையும் மிகவும் பாதிக்கும். தாங்கள் செய்யம் தவறால் அவர்களுக்கு ஏற்ப்படும் பாதிப்பைவிட பல மடங்கு அவர்களின் குழந்தைகளுக்கும் அவர்களை சார்ந்தவர்களும் தான் பாதிப்பு அதிகம்...

நாம் அனைவரும் திட்டங்கள் வகுத்து கஷ்டப்பட்டு நேரம் பாராமல் தனக்காவும் தங்களின் குடும்பத்திற்காகவும் பொருள் ஈட்டுகிறோம். ஆனால் ஈட்டிய பொருளையும் நேரத்தையும் தனக்காகவும் குடும்பத்திற்காகவும் செலவிட எந்த திட்டமும் வகுக்க தெரிவதில்லை. இது தான் இன்றைய சூழலில் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்று கருதுகிறேன்...

திவ்யா சிந்தனையை சிர்ப்படுத்தும் பதி(கிர்)வு...

தினேஷ்

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
மிக வித்தியாசமான கனமான கருத்துக்கள் திவ்யா :))))\\

நன்றி நவீன் ப்ரகாஷ்.

Divya said...

\ நவீன் ப்ரகாஷ் said...
//மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையின் ரகசியமே மனம்விட்டு பேசுவதும், அதிக நேரம் தனித்து செலவழிப்பதும் தான்.//

மிகச்சரியான கருத்து... இது கணவன் மனைவிக்கு மட்டும் அல்ல ... அனைவருக்குமே பொருந்தும் அல்லவா..? :)))\

மனம்விட்டு பேசுவது எந்த உறவுக்கும் பொருந்தும் நவீன்.

Divya said...

\ Dreamzz said...
//எப்படிடா செல்லம், நான் உன்னை பொண்ணுபார்க்க வந்தபோ/ காதலிச்சப்போ இருந்ததைவிட இன்னும் அழகா, நசுன்னு இருக்கிற? //
நல்லா தான்மா டிப்ஸ் கொடுக்கறீங்க...\\

நன்றி ..நன்றி...நன்றி!!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.

//இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை.//
விளங்கிக்கொள்ள எனக்கும் இல்லை... :)))\\

வருகைக்கு நன்றி நிமல்.

Divya said...

\\ ஜி said...
:)))
\\

attendence noted down jee!

Divya said...

\\ நிவிஷா..... said...
//விளங்கிக்கொள்ள எனக்கும் இல்லை... :)))//
enakkum thaanga

natpodu
nivisha\

வாங்க nivisha,
விளங்கிக் கொள்ள வேண்டிய வயதில் விளங்கிக்கொள்ளுங்கள்.

Divya said...

\\ sathish said...
கசப்பான ஆனால் யோசிக்க வேண்டிய ஒன்று திவ்யா!

தெளிவும் பக்குவமும் புரிதலும் எந்த உறவிலும் மிக முக்கியம். ஆனால் உணர்ச்சிகள் அளவு கடந்து போகும் போது இதையெல்லம் சிந்திக்க மனம் தவறுகிறது! தேடலில் இருக்கும் அவசியத்தையும் உண்மையையும் கண்டுகொண்டால் குழப்பங்கள் குறையும் இல்லையா!\\

மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சதீஷ்,கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி!

Divya said...

\\ பாச மலர் said...
குழந்தைகளை எப்படித்தான் மறக்கிறர்களோ திவ்யா இவர்கள்?

இப்படிக் காதலனை நம்பிப் போய் ஏமாந்த பெண்ணை அவள் அப்பா அம்மாவே அடித்து விரட்ட, மீண்டும் ஏற்றுக் கொண்ட கணவனைப் பார்த்திருக்கிறேன்.\\

நீங்கள் கூறுவது போல், குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டாவது இவ்வாறு தடம் மாறாமல் இருப்பது அவசியம்.

கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி பாச மலர்.

Divya said...

\\திவ்யா,

சமுகத்தின் மிது உள்ள அக்கறையின் ப(கிர்)திவு.

ஒரு திருமணமான ஆண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்ப்படும் விரிசலுக்கு காரணம், தனிமை மற்றும் வெறுமை உணர்வு எந்த காரணம் இருந்தாலும், அவர்களின் காரணத்தால் பிறந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை கூட கணக்கில் கொள்ளாமல் இருப்பது தான் மிகமிக வேதனையான விஷயம். பெற்றோர்கள் செய்யும் தவறால் அந்த குழந்தைகள்; தன் சமுகத்தையும் மற்றும் தன் பெற்றோர்களையும் உணரும் போது கண்டிப்பாக பெற்றோர்கள் மிதோ அல்லது சமுகத்தின் மிதோ கண்டிப்பாக ஒரு நல்ல சிந்தனை இருக்காது. அது அவர்களின் எதிர்காலத்தையும் எதிர்கால சிந்தனையும் மிகவும் பாதிக்கும். தாங்கள் செய்யம் தவறால் அவர்களுக்கு ஏற்ப்படும் பாதிப்பைவிட பல மடங்கு அவர்களின் குழந்தைகளுக்கும் அவர்களை சார்ந்தவர்களும் தான் பாதிப்பு அதிகம்...

நாம் அனைவரும் திட்டங்கள் வகுத்து கஷ்டப்பட்டு நேரம் பாராமல் தனக்காவும் தங்களின் குடும்பத்திற்காகவும் பொருள் ஈட்டுகிறோம். ஆனால் ஈட்டிய பொருளையும் நேரத்தையும் தனக்காகவும் குடும்பத்திற்காகவும் செலவிட எந்த திட்டமும் வகுக்க தெரிவதில்லை. இது தான் இன்றைய சூழலில் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்று கருதுகிறேன்...

திவ்யா சிந்தனையை சிர்ப்படுத்தும் பதி(கிர்)வு...
\\\
தினேஷ்\\

உங்கள் விரிவான கருத்து பரிமாறுதலுக்கு நன்றி தினேஷ்.

தேவையான அளவு நேரம் செலவழிக்காதது ஒரு முக்கிய காரணம்.

Arunkumar said...

title paathuttu innoru kadhai-nu nenachen..

paatha nalla karuthu
sollirkinga...

useful post..

இராம்/Raam said...

நல்லா எழுதியிருக்கீங்க...

BTW.,ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..... :)

My days(Gops) said...

மிக வித்தியாசமான கனமான கருத்துக்கள் திவ்யா :))))//
ரிப்பீட்டு!

இன்னொரு ரிப்பீட்டு.... :)

Unknown said...

பெண்கள் பெரிதாக என்ன எதிர்பார்க்கிறார்கள். அவ்வப்போது அன்பாக இரண்டொரு வார்த்தைகள். கொடுப்பதுதானே சிறப்பு.
நல்ல பதிவு.

மங்களூர் சிவா said...

ப்ச்
:(

SathyaPriyan said...

நல்ல பதிவு திவ்யா. தேவையானதும் கூட.

The bottomline is don't start a new relationship while you are in a relationship.

Sanjai Gandhi said...

//மேற்சொன்ன டிப்ஸில் ப்ராகட்டில் இருப்பது என் கருத்துக்கள்,
இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை//

அட்வைஸ் எல்லாம் பெரிய பொண்ணு ரேஞ்சுக்கு அள்ளி விட்டுட்டு வயசும் அனுபவமும் கம்மினு ட்டிஸ்கியா? :P
ஹ்ம்ம்.. நல்லா இருங்க :)

Unknown said...

நல்ல பதிவு திவ்யா, வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

அரை பிளேடு said...

மனித மனம் சிக்கலான ஒன்று. இன்றைய பொருளாதார சுயசார்புகள் வாழ்க்கையை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கின்றன. ஒரே கூண்டுக்குள் காலமெல்லாம் அடைபட்டிருக்க யாரும் விரும்புவதில்லை. அதற்காக வேறு கூண்டுக்குள் சென்று அடைபடும் சோகம் நடக்கத்தான் செய்கிறது. இரண்டாவது திருமணங்கள் நீண்ட நாள் நீடிப்பதில்லை என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கையை ஒரு கூண்டாக வைத்திருக்காமல் அன்பும் அரவணைப்பும் நிறைந்த ஒன்றாக வைத்திருப்பதே தேவையானது.

G.Ragavan said...

தாம்பத்யம் புனிதத்தை விட்டு அன்யோன்யத்துக்கு வரனும். அப்பத்தான் நல்லது. அன்யோன்யம்தான் புனிதம்னு சண்டைக்கு வந்தா நான் வரலை ஆட்டைக்கு. எந்த உறவுலயும் தொடர்பு இருந்துக்கிட்டேயிருக்கனும். அது உடலை விட மனதால இருக்க வேண்டியது மிகமிக அவசியம். அது குறையுறப்போதான் பிரச்சனைகள் வர்ரது.

// பண்பாடு பிறளாத பத்தினி பெண்கள் படிதாண்டும் அவலம் ஏனோ? என்று சிந்திக்க வைத்தது. //

அப்ப ஆண்களுக்குப் பண்பாடு இல்லையா? இருந்தாலும் பிறளாலாமா? :)

Divya said...

\\ G.Ragavan said...
தாம்பத்யம் புனிதத்தை விட்டு அன்யோன்யத்துக்கு வரனும். அப்பத்தான் நல்லது. அன்யோன்யம்தான் புனிதம்னு சண்டைக்கு வந்தா நான் வரலை ஆட்டைக்கு. எந்த உறவுலயும் தொடர்பு இருந்துக்கிட்டேயிருக்கனும். அது உடலை விட மனதால இருக்க வேண்டியது மிகமிக அவசியம். அது குறையுறப்போதான் பிரச்சனைகள் வர்ரது.

// பண்பாடு பிறளாத பத்தினி பெண்கள் படிதாண்டும் அவலம் ஏனோ? என்று சிந்திக்க வைத்தது. //

அப்ப ஆண்களுக்குப் பண்பாடு இல்லையா? இருந்தாலும் பிறளாலாமா? :)\\

ஹாய் ராகவன்,

பண்பாடு, கற்பு, ஒழுக்கம்....இருபாலருக்கும் உண்டு, யார் இதில் தவறினாலும், தவறு தவறுதான்!

பெண்கள் தடமாறி போவதை நியாயப்படுத்தவும் இல்ல இப்பகுதியில், அதன் காரணம் என்ன......எந்த இடத்தில் இந்த செயலுக்கான அவசியம் ஏற்பட்டது அப்பெண்ணுக்கு என்பதை மட்டுமே உணர்ந்துக் கொள்ள இப்பகுதியை எழுதினேன்.

நீங்கள் கூறியிருப்பது போல்,தாம்பத்தியம் என்பது அந்நியோன்மை
மேலோங்கி நிற்பதே!

அதனைத்தான் மனம்விட்டு பேச தனிமை நேரங்கள் அவசியம் என்பதை மருத்துவரும் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டதிற்கு நன்றி ராகவன்.

Divya said...

\\ Arunkumar said...
title paathuttu innoru kadhai-nu nenachen..

paatha nalla karuthu
sollirkinga...

useful post..\\

கதையின்னு நினைச்சு படிக்க வந்தீங்களா அருண்....

அடுத்து ஒரு கதைதான் போஸ்ட பண்றேன், அவசியம் படிங்க அருண்.

Divya said...

\ இராம்/Raam said...
நல்லா எழுதியிருக்கீங்க...

BTW.,ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..... :)\\

ஹாய் இராம்,

ரொம்ப நாள் கழித்து என் வலைதளம் வந்திருக்கிறீங்க.....நன்றி.

வாழ்த்துக்களுக்கும் நன்றி இராம்!

Divya said...

\\ My days(Gops) said...
மிக வித்தியாசமான கனமான கருத்துக்கள் திவ்யா :))))//
ரிப்பீட்டு!

இன்னொரு ரிப்பீட்டு.... :)\

நன்றி.......நன்றி....நன்றி கோப்ஸ்!!

Divya said...

\ சுல்தான் said...
பெண்கள் பெரிதாக என்ன எதிர்பார்க்கிறார்கள். அவ்வப்போது அன்பாக இரண்டொரு வார்த்தைகள். கொடுப்பதுதானே சிறப்பு.
நல்ல பதிவு.\\

கணிவான பார்வை,
அன்பான பேச்சு,
ஆறுதலான அரவணைப்பு....
இது கிடைத்தாலே போதும் பெண்களுக்கு.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சுல்தான்.

Divya said...

\\ மங்களூர் சிவா said...
ப்ச்
:(
\\

ஹாய் சிவா,
வருகைக்கு நன்றி!

Divya said...

\ SathyaPriyan said...
நல்ல பதிவு திவ்யா. தேவையானதும் கூட.

The bottomline is don't start a new relationship while you are in a relationship.\\

ஹாய் சத்யா,
உங்கள் வருகைக்கும் , பிண்னூட்டத்திற்கும் நன்றி.

Divya said...

\\ SanJai said...
//மேற்சொன்ன டிப்ஸில் ப்ராகட்டில் இருப்பது என் கருத்துக்கள்,
இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை//

அட்வைஸ் எல்லாம் பெரிய பொண்ணு ரேஞ்சுக்கு அள்ளி விட்டுட்டு வயசும் அனுபவமும் கம்மினு ட்டிஸ்கியா? :P
ஹ்ம்ம்.. நல்லா இருங்க :)\\

ட்டிஸ்கியை இப்படி கிண்டல் பண்றீங்களே சன்ஜை....ஹ்ம்ம் நன்றி!

Divya said...

\\ அன்புடன் புகாரி said...
நல்ல பதிவு திவ்யா, வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி\

வாங்க புகாரி, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

Divya said...

\\ அரை பிளேடு said...
மனித மனம் சிக்கலான ஒன்று. இன்றைய பொருளாதார சுயசார்புகள் வாழ்க்கையை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கின்றன. ஒரே கூண்டுக்குள் காலமெல்லாம் அடைபட்டிருக்க யாரும் விரும்புவதில்லை. அதற்காக வேறு கூண்டுக்குள் சென்று அடைபடும் சோகம் நடக்கத்தான் செய்கிறது. இரண்டாவது திருமணங்கள் நீண்ட நாள் நீடிப்பதில்லை என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கையை ஒரு கூண்டாக வைத்திருக்காமல் அன்பும் அரவணைப்பும் நிறைந்த ஒன்றாக வைத்திருப்பதே தேவையானது.\

வாங்க அரைபிளேடு,

உங்கள் விரிவான, தெளிவான கருத்து பரிமாற்றத்திற்கு ரொம்ப நன்றி!

கோபிநாத் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)

நல்ல பதிவு திவ்யா ;)

ஜீனியர் விகிடன் இப்பதான் இதே போல ஒரு விஷயத்தை படிச்சேன்.

50 மேலும் 500 ஆகா வாழ்த்துக்கள் ;)

C.N.Raj said...

Divya,

Nalla karuththukkaludan sinthikka ventiya, sinthiththapadi seyalpada ventiya , nalla Pathivu.

Raj.

Thamizhan said...

வாழ்வினையர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான வார்த்தை
"ஆமாம்""YES".

பல தவறானப் புரிதல்கள் சொல்லக் கூடாததைச் சொல்லக்கூடாத நேரங்களில் முக்கியமாகச் சொல்லக் கூடாதவர்கள் முன்னிலையில் சொல்லி விடுவதுதான்.
முதலில் ஆம்,சரி என்று சொல்லிவிட்டுப் பின்னர் அது பற்றிப் பேசி முடிவை மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவருக் கொருவர் பாராட்டு வார்த்தைகளையும்,அன்பு வார்த்தைகளையும் கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வளங்கவேண்டும்.

மனிதரின் வாழ்வில் முக்கியமாக இருக்கக் கூடாதது மன்ப்புளுக்கம்(resentment).
வாழ்வு ரோசா மெத்தை.முற்களை எடுத்தெரிவது மிகவும் அவசியம்.

Unknown said...

பொருளாதார நிர்ப்பந்தங்கள்தான் பெரும்பாலும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வேகமான இந்தச் சூழலில், பணம் தேடி அலைகிறோம். பணம் சேரும் நேரத்தில் உறவுகள் இருப்பதில்லை!

பணமே பிரதானம் என்றாகிவரும் எந்திர உலகில், இது போன்ற முறிவுகள் பெருகி வருவது கவலைக்குரிய விஷயம்.

உங்கள் கவலையைப் பகிர்ந்து கொள்கிறேன்..

Divya said...

\\ கோபிநாத் said...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)

நல்ல பதிவு திவ்யா ;)

ஜீனியர் விகிடன் இப்பதான் இதே போல ஒரு விஷயத்தை படிச்சேன்.

50 மேலும் 500 ஆகா வாழ்த்துக்கள் ;)\

ஹாய் கோபி,
வாழ்த்துக்களூக்கு நன்றி,
50 பதிவுகள் எழுதியதே பெரிய விஷயம்.......500 எல்லாம் ரொம்ப ஜாஸ்திங்கோவ்!!

Divya said...

\\ Raj said...
Divya,

Nalla karuththukkaludan sinthikka ventiya, sinthiththapadi seyalpada ventiya , nalla Pathivu.

Raj.\

பதிவினை படித்துணர்ந்தமைக்கு நன்றி ராஜ்!

Divya said...

\ Thamizhan said...
வாழ்வினையர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான வார்த்தை
"ஆமாம்""YES".

பல தவறானப் புரிதல்கள் சொல்லக் கூடாததைச் சொல்லக்கூடாத நேரங்களில் முக்கியமாகச் சொல்லக் கூடாதவர்கள் முன்னிலையில் சொல்லி விடுவதுதான்.
முதலில் ஆம்,சரி என்று சொல்லிவிட்டுப் பின்னர் அது பற்றிப் பேசி முடிவை மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவருக் கொருவர் பாராட்டு வார்த்தைகளையும்,அன்பு வார்த்தைகளையும் கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வளங்கவேண்டும்.

மனிதரின் வாழ்வில் முக்கியமாக இருக்கக் கூடாதது மன்ப்புளுக்கம்(resentment).
வாழ்வு ரோசா மெத்தை.முற்களை எடுத்தெரிவது மிகவும் அவசியம்.\

வாங்க தமிழன்,
உங்கள் வருகைக்கு நன்றி,

உங்கள் கருத்துக்களை விரிவாக பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொணடதிற்கு மிக்க நன்றி !!

Divya said...

\ தஞ்சாவூரான் said...
பொருளாதார நிர்ப்பந்தங்கள்தான் பெரும்பாலும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வேகமான இந்தச் சூழலில், பணம் தேடி அலைகிறோம். பணம் சேரும் நேரத்தில் உறவுகள் இருப்பதில்லை!

பணமே பிரதானம் என்றாகிவரும் எந்திர உலகில், இது போன்ற முறிவுகள் பெருகி வருவது கவலைக்குரிய விஷயம்.

உங்கள் கவலையைப் பகிர்ந்து கொள்கிறேன்..
\

உங்கள் பகிர்வுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி தஞ்சாவூரான்!

Chandravathanaa said...

நல்ல பதிவு

Sanjai Gandhi said...

//ட்டிஸ்கியை இப்படி கிண்டல் பண்றீங்களே சன்ஜை....ஹ்ம்ம் நன்றி!//

இது ட்டிஸ்கி இல்ல.. டிஸ்கி.. எங்க சொல்லுங்க பாப்போம்.. டிஸ்ஸ்ஸ்ஸ்கி.

அதேபோல அது சன்ஜை இல்ல.. சஞ்சய்.. எங்க சொல்லுங்க பாப்போம்.. சஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சய்.. :P

( கோச்சிகாதிங்க மேடம்.. சும்மா டமாசுக்கு :P )

Divya said...

\\ SanJai said...
//ட்டிஸ்கியை இப்படி கிண்டல் பண்றீங்களே சன்ஜை....ஹ்ம்ம் நன்றி!//

இது ட்டிஸ்கி இல்ல.. டிஸ்கி.. எங்க சொல்லுங்க பாப்போம்.. டிஸ்ஸ்ஸ்ஸ்கி.

அதேபோல அது சன்ஜை இல்ல.. சஞ்சய்.. எங்க சொல்லுங்க பாப்போம்.. சஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சய்.. :P

( கோச்சிகாதிங்க மேடம்.. சும்மா டமாசுக்கு :P )\\

ஹாய் சஞ்சய்!
[ இப்போ கரெக்ட்டா சொல்லிட்டேனா உங்க பெயரை?]

உங்களை போய் கோச்சுப்பேனா சார்??

நல்லாத்தான் தமாசு பண்றீங்க.......எங்க சொல்லுங்க பார்ப்போம்......தமாசு,
டமாசு இல்ல தமாசு...ஒகேவா??

Divya said...

\\ Chandravathanaa said...
நல்ல பதிவு\

ஹாய் சந்திரா மேடம்,
வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி!!

Sanjai Gandhi said...

//ஹாய் சஞ்சய்!
[ இப்போ கரெக்ட்டா சொல்லிட்டேனா உங்க பெயரை?]//

ஹாய் கோபினு எங்க ஊர்கார நண்பர் ஒருத்தர் இருக்கார். அவர் கோச்சிக்க போறார். :)

//உங்களை போய் கோச்சுப்பேனா சார்??//

தேங்ஸ்..தேங்ஸ்.. ( இதுல என்ன சதி இருக்கோ தெரியலையே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(( )

//நல்லாத்தான் தமாசு பண்றீங்க.......எங்க சொல்லுங்க பார்ப்போம்......தமாசு,
டமாசு இல்ல தமாசு...ஒகேவா??//
ஏன்..ஏன் இத கொல வெறி? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

FunScribbler said...

//இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை//

இப்பவே இப்படி கலக்குறீங்க... வயதும் அனுபவமும் இருந்தால்... எப்படி அசத்துவீங்க..

gils said...

unga postellam semma weighta iruku...deep thinking plus interestingly written...relationships pathi ethachum PHd course iruntha ungala lecturera potrulam :D :D ithana naala luv post potruntheenga..ipo hubby wife posta..nalla improvement..enjoy maadi..inum neria writunga intha mathiri

gils said...

//படி தாண்டினா எப்படி பத்தினி??//
paathi veetla pathi/padi rendum irukarathilla..lift thaan :D appo pathini kedaayatha..
//இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை.]//

ur aanar..i the one dbt have...ithana naala ivlo mushy mushy romantic post potruntheengalay..apo athellam entha kanakula varuthungovv :)

\\ gils said...
//படி தாண்டினா எப்படி பத்தினி??//
paathi veetla pathi/padi rendum irukarathilla..lift thaan :D appo pathini kedaayatha..
//இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை.]//

ur aanar..i the one dbt have...ithana naala ivlo mushy mushy romantic post potruntheengalay..apo athellam entha kanakula varuthungovv :)\\

'mushy mushy' romantic post???......hello sirey athu vera........ithu vera.....anniyayathuku confuse pana koodathunga!!

Divya said...

\\ gils said...
unga postellam semma weighta iruku...deep thinking plus interestingly written...relationships pathi ethachum PHd course iruntha ungala lecturera potrulam :D :D ithana naala luv post potruntheenga..ipo hubby wife posta..nalla improvement..enjoy maadi..inum neria writunga intha mathiri
\\

lecturer post ellam koduthu kavurava paduthuteenga Gills...romba dankies!!

BTW thanks for visiting this post......after such a long time after I posted it!!

Divya said...

\\ Thamizhmaagani said...
//இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை//

இப்பவே இப்படி கலக்குறீங்க... வயதும் அனுபவமும் இருந்தால்... எப்படி அசத்துவீங்க..
\\

வாங்க தமிழ்,

ரொம்ப நெகிழ்ந்து போய்ட்டேங்க உங்க புகழ்ச்சியில்.....நன்றி தமிழ்!!

கானகம் said...

\ பாச மலர் said...
குழந்தைகளை எப்படித்தான் மறக்கிறர்களோ திவ்யா இவர்கள்?

இப்படிக் காதலனை நம்பிப் போய் ஏமாந்த பெண்ணை அவள் அப்பா அம்மாவே அடித்து விரட்ட, மீண்டும் ஏற்றுக் கொண்ட கணவனைப் பார்த்திருக்கிறேன்.\\

அவ்வை ஷன்முகியில் ஒரு வசனம் வரும்.. புருஷன் பொஞ்சாதி டைவர்ஸ் பண்ணலாம்.. ஆனா அம்மா அப்பா பண்ணக்கூடாது.. ஒரு நகைச்சுவைப் படத்திலும் ஒரு ஆழ்ந்த கருத்து.. திருமணமான அனைவருக்குமான நல்ல புத்திமதி மற்றும் எச்சரிக்கை மணி....

இளந்தமிழ் said...

மிகவும் அவசியமான பதிவு. நன்றி

FunScribbler said...

நல்ல கருத்துகளுடன் ஒரு சூப்பர் பதிவு!:)

Healthcare Raja Nellai said...

இது உங்களது சொந்த கட்டுரை என்றால் உங்கள் அனுமதி உடன் இதனை என்னுடைய ஹெல்த்கேர் மருத்துவ இதழில் வெளியிடலாமா?

Anonymous said...

இந்த மாதிரி படிதாண்டும் பிரச்னைக்கு முக்கியமான காரணம் "சுய நலம்"..
இன்று தனக்காக வாழும் வாழ்க்கைதான் பெரும்பாலும் பார்க்கிறோம்.. கல்யாணத்தில் கூட, எனக்கு அவன்/அவள் என்ன செய்வான், என்று தான் பார்க்கப்படுகிறது..
எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்க்கையில், கடமை தானாகவே தொலைக்கப்படுகிறது.. அதுதான் நிதர்சனம்..

அதோடு வாழ்க்கை முறை மாற்றமும் இரண்டாவது முக்கியமான காரணம்.. கிராமத்திய வாழ்க்கையில், ஒரு குடும்பத்தில், கணவன் மனையின் பங்கு பாதிதான் இருக்கும்.. மிச்சம், உறவுக்காரர்களின் பங்கு.. அதனால, கணவன் முன்ன பின்ன இருந்தாலும், உறவுகளின் சப்போர்ட்ல வாழ்க்கைய ஓட்டிடறாங்க.. அதனாலதான், 10 வருஷம் கணவன் வெளி நாட்டில வேலை பார்த்துட்டு வந்தாலும், அவனுக்கு குடும்பம் அப்படியே இங்க இருக்கு..

ஆனா நகர மயமாக்கப்பட்ட வாழ்க்கையில, பக்கத்து வீட்லகூட யாருன்னு தெரியாம இருக்கு..

மனோதத்துவ ரீதியில பார்த்தா, ஒவ்வொரு மனுஷனுக்கும் வாழ்க்கையில உறவுகள் தேவைபடுகிறார்கள்.. ஆனா அந்த உறவுகள், இன்று கணவன் மட்டுமே என்று ஆகிவிட்டதால சலிப்பு ஏற்படுகிறது..

அப்புறம், ஆன்மிகம் சரியான இடத்தில் நம் வாழ்க்கையில இல்லாததும் இன்னொரு காரணம்..

Anonymous said...

vry gud

அப்பாதுரை said...

பண்பாடு பத்தினி இதெல்லாம் கதைக்குதவாத சமாசாரம். Everyone deserves to be happy. அந்த மகிழ்ச்சி பொறுப்புள்ள வகையில் கிடைக்குமானால் அதை பண்பாடு என்று வேலியிட்டு தடுக்கக்கூடாது என்பது என் கருத்து.