January 15, 2008

ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!

'ஒன்றே ஒன்று' - பதிவுகளில் பிடித்தது 'தொடர் ஓட்டத்தில்'இணைத்த வினையூகிக்கு என் நன்றி!

2007 ல் நான் எழுதிய பதிவுகளில், நான் மிகவும் ரசித்து எழுதிய பதிவு 'தாய்மை'.

இப்பதிவினை பற்றி ஒரு சில கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்....




குழந்தை 'தத்தெடுப்பு' பற்றி என் ஆழ்மனதிலுள்ள எண்ணம்!

அநாதை குழந்தைகளை பார்க்கும் போது மனதில் ஏற்படும் கணம்!

அம்மா அருகில் இருந்தபோது அம்மாவின் அருமை தெரியாமல் அல்லல் மறந்து இருந்துவிட்டு,அந்நிய மண்ணில் தினம் அம்மாவை நினைந்து என் கண்கள் பனிக்கும்போது ஏற்படும் ரணம்!

தாயின் அன்புக்காக ஏங்கும் ஒரு பெண் குழந்தையின் மனநிலையை உணரவைத்தது!

இவ்வுணர்வுகளின் சங்கமம் கொடுத்த கருவில் உருவானது தான் இந்த கதை. என் கற்பனையில், என் எண்ணங்களுக்கு உருகொடுத்து உருவாக்கும் போது, கவிதை எழுதும் எண்ணம் இல்லவே இல்லை.......என்னையுமறியாமல் கதையின் முடிவில் நான் எழுதிய அக்கவிதை, நான் இதுவரை எழுதிய எழுத்துக்களில் மிகவும் பிடித்த ஒன்று.


அதனால் 'தாய்மை' எனது பதிவுகளில் சிறந்த ஒரு பதிவாக கருதுகிறேன்.

நான் 'தொடர் ஓட்டத்திற்கு' அழைக்க விரும்பும் பதிவர்கள்..

1.கவிஞர் நவீன் ப்ரகாஷ்.
2.ஜொள்ளு பாண்டி.
3.நாகை சிவா.
4.சதீஷ்.
5.சச்சின் கோப்ஸ்.

19 comments:

ILA (a) இளா said...

என் கருத்தும் அதுவே

Dreamzz said...

//என் கருத்தும் அதுவே
//repeatu!

Baby Pavan said...

நன்றி வாழ்த்துக்கள் அம்மா...

Divya said...

\\ ILA(a)இளா said...
என் கருத்தும் அதுவே\\

உங்கள் கருத்தும் இதுவே என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி இளா!

Divya said...

\\Dreamzz said...
//என் கருத்தும் அதுவே
//repeatu!\\

நன்றி Dreaamzz.

Divya said...

\\ Baby Pavan said...
நன்றி வாழ்த்துக்கள் அம்மா...\\

Baby Pavan, அம்மா என்றழைத்து நெகிழவைத்துவிட்டாய்!

கோபிநாத் said...

\\ILA(a)இளா said...
என் கருத்தும் அதுவே\\

வழிமொழிகிறேன். :)

ஜொள்ளுப்பாண்டி said...

திவ்யா
எனக்கும்....
ஆமா அம்மணி இப்படி இழுத்து விட்டுட்டு போனா என்னா அர்த்தங்கறேன்...;))))

வினையூக்கி said...

நன்றி. :):)

தாங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களும் அருமை

மங்களூர் சிவா said...

//
என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!
//
அவ்வ்வ்வ்வ்வ்

படிக்கிறதுக்கு நல்லா இருக்கு.

மங்களூர் சிவா said...

//
Divya said...
\\ Baby Pavan said...
நன்றி வாழ்த்துக்கள் அம்மா...\\

Baby Pavan, அம்மா என்றழைத்து நெகிழவைத்துவிட்டாய்!

//
அப்டியா

நன்றி வாழ்த்துக்கள் அம்மா...
நானும் ஒரு தபா சொல்லிக்கிறேன்

Divya said...

\\ கோபிநாத் said...
\\ILA(a)இளா said...
என் கருத்தும் அதுவே\\

வழிமொழிகிறேன். :)\

வழிமொழிதலுக்கு நன்றி கோபி!

Divya said...

\ ஜொள்ளுப்பாண்டி said...
திவ்யா
எனக்கும்....
ஆமா அம்மணி இப்படி இழுத்து விட்டுட்டு போனா என்னா அர்த்தங்கறேன்...;))))\\

வாங்க பாண்டிண்ணா!
உங்களுக்கும் இந்த பதிவு பிடிச்சுதா? நன்றி!

இப்படி tag பண்ணினா....பிடிச்ச 'ஜொள்ளு' எதுன்னு பதிவு எழுதனும்னு அர்த்தமுங்கண்ணா!

Divya said...

\\ வினையூக்கி said...
நன்றி. :):)

தாங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களும் அருமை\

நன்றி வினையூக்கி!

Divya said...

\\ மங்களூர் சிவா said...
//
என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!
//
அவ்வ்வ்வ்வ்வ்

படிக்கிறதுக்கு நல்லா இருக்கு.\\

நன்றி சிவா!

Divya said...

\\ மங்களூர் சிவா said...
//
Divya said...
\\ Baby Pavan said...
நன்றி வாழ்த்துக்கள் அம்மா...\\

Baby Pavan, அம்மா என்றழைத்து நெகிழவைத்துவிட்டாய்!

//
அப்டியா

நன்றி வாழ்த்துக்கள் அம்மா...
நானும் ஒரு தபா சொல்லிக்கிறேன்\\

ஹா!ஹா!

வாழ்த்துக்களுக்கு நன்றி!

Anonymous said...

//
என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!
//

Super divya :)

Divya said...

\\ Gayathri said...
//
என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!
//

Super divya :)\

Thanks a lot Gayathri!

தினேஷ் said...

நல்ல மனித நேய சிந்தனை…

தினேஷ்