March 24, 2009

'அவரிடம்'........சில கேள்விகள்!!!




'பெண் பார்க்க வர்ராங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க'ன்னு சொன்னதுமே, பெண் வீட்டிலுள்ளவர்களுக்கு ஒரு பரபரப்பும்,
பப்ளிக் எக்ஸாம் எழுத போவது போன்ற படபடப்பு பெண்ணிற்கும் ஏற்படுவது இயல்பு.

"அதென்ன பெண் பார்க்க வந்தா, பொண்ணு பட்டு புடவை தான் கட்டிக்கனுமா?? தினமும் பட்டு புடவையிலா குடும்பம் நடத்த போறேன்.....எதுக்கு கல்யாண பெண் மாதிரி அலங்கரிச்சுக்க சொல்றாங்க??"

"உனக்கு சமைக்க தெரியுமான்னு?? பொண்ணுகிட்ட கேட்டா ஒரு அர்த்தம் இருக்கு.........பொண்ணு பையனுக்கு சமைக்குமா? இல்ல பையன் தான் பொண்ணுக்கும் சேர்த்து சமைக்கனுமான்னு தெரிஞ்சுக்கலாம், அதை விட்டுட்டு.....பாட்டு பாடுன்னு கேட்கிறதெல்லாம், சுத்த பேத்தல், .......
'சூப்பர் ஸிங்கர்'க்கு ஆடிஷனா நடத்தறாங்க???"

இப்படி தங்கள் ஆதகங்களை பெண்கள் வெளிப்படுத்த ஆரம்பித்த பிறகு, இயல்பான உடையில், சகஜமான சூழ்நிலையில் பெண்பார்க்கும் சம்பவங்கள் இன்று நடைபெற்றாலும், இந்த டென்ஷன் மட்டும் பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் குறைந்த பாடில்லை.

பெண் பார்க்கும் வைபவத்தில், "பையனுக்கு பொண்ணுகிட்ட பத்து நிமிஷம் தனியா பேசனுமாம்" என்று மாப்பிள்ளை வீட்டு கூட்டத்தில் இருந்து ஒருவர் குரல் கொடுப்பார், உடனே பெண்ணையும், பையனையும் தனியாக பேச அனுமதிப்பார்கள்.
பையன் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு......பெண்ணிடம் தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்பார், பொண்ணும்....
"ஆங்"..."ஆமா"...."இல்லை" என்று ஒரிரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு,
"உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பேசனுமா.....கேட்கனுமா?"அப்படின்னு மாப்பிள்ளை பையன் பேச சந்தர்ப்பம் கொடுத்தா கூட, பேசாம 'பெப்பே பெப்பே' என்று முழிப்பாள்.

எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ......சேலை நுனியை திருகிக்கிட்டு, தலை குனிஞ்சுட்டு, 'ஆமா'...'இல்லை' ன்னு மண்டைய மண்டைய ஆட்டி ஃபில்ம் காட்டுறது????

பெண்ணும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,பையனிடம் பேசி, சில பல கேள்விகள் கேட்டு பையனை பற்றி தெரிந்துக்கொள்ளலாமே!!!

* பையன் பெண்ணிடம் தனியா பேச விருப்பப்படுறான்னு சொன்னா, அவனுக்கு பெண்ணின் தோற்றம்[appearance]பிடிச்சு போய்டுச்சு, அடுத்து அனுகுமுறை[approach] எப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் தனியா பேசனும்னு சொல்லுவார்.

ஸோ.....உங்களுக்கு[பெண்ணிற்கு] அவரோட தோற்றம் மனசுக்கு பிடிச்சிருந்தா, அவருடைய பெர்ஸனாலிட்டி/approach எல்லாம் எப்படின்ன்னு தெரிஞ்சுக்க பேசிப் பாருங்க.

* 'எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது?'
'பேசினா தப்பா நினைப்பாறோ??'
அப்படின்னு எல்லாம் தடுமாறாம......இயல்பா இருங்க.
அதான் உங்க appearance test ல பாஸ் ஆகிட்டீங்களே.......ஸோ நோ மோர் டென்ஷன்!!

ஆனா......என்ன பேசுறதுன்னு முன் யோசனை இல்லாம.......

"உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும்"னு அசட்டுத்தனமான கேள்வி எல்லாம் கேட்காம.........கிடைச்ச 5 நிமிஷத்துல உருப்படியா பேசனும்.

* முதல் முதலா கேட்கிற கேள்வி...........அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.........அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.

தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக அவர் கூறினால், வாழ்க்கையை திட்டமிட்டு , ஒரு குறிக்கோளோடு முன்னேறி செல்பவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.

[ 'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க']

*அடுத்து அவருக்கு, பிடித்தமான பொழுதுபோக்கு[hobby] என்னன்னு கேட்கலாம்.......அந்த ஹாபி விளையாட்டு சம்மந்தமானதாக இருந்தால், உடம்பை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் அக்கறை உள்ளவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.
அப்படியே 'ஜிம்' க்கு போற பழக்கம் இருக்கான்னும் கேட்டுக்கங்க.

*நீங்க வேலைக்கு சென்று கொண்டிருப்பவராக இருந்தால், திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதில் அவரது விருப்பம் என்ன என்பதை பேசி தெரிந்துக் கொள்வது நலம்.

வேலை பார்க்கும் இடம் காரணமாக இருவரும் வெவ்வேறு ஊரில் பணிபுரிந்தால், இடம் மாறுதல் சாத்தியமா?அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

*அடுத்த முக்கியமான விஷயம், அவரது பழக்க வழக்கங்கள்.

உங்களுக்கு சிகரெட், மது பழக்கங்கள் சுத்தமாக பிடிக்காது என்றால், அவருக்கு அந்த பழக்கம் இருக்கிறதா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

"கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விட ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்..........கல்யாணத்துக்கு அப்புறமா முழுசா விட்டுறுவேன்" அப்படின்னு டயலாக் விட்டா.......உஷார்!!!

பழக்கத்தை கைவிடனும்னு நினைச்சா..........கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்லையே!
ஸோ.....எந்த காரணத்தை கொண்டும் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காதீங்க.

[ஸ்மோக்கிங் & occational drinking .......ஆணின் மேனரிஸமாக நீங்க கருதினா, இந்த கேள்வி உங்களுக்கு முக்கியமானதாக இருக்காது]

* உங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், லட்சியங்கள் இருந்தால், அதனை அவரிடம் தெளிவாக வெளிப்படுத்துங்கள்.
உதாரணமாக.... பாட்டு, டான்ஸ்.........போன்ற கலைகளில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமானால், திருமணத்திற்கு பின்பு உங்கள் கலை ஆர்வத்தை எந்த நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவு படுத்துவது நல்லது.

* இதுவரை கேட்ட கேள்விகளும், உரையாடலும்.......உங்களுக்கு அவரிடம் ஒருவித மனம் ஒத்துபோன இயல்பான சூழ்நிலையை[comfort zone] ஏற்படுத்தியிருக்குமானால்,
அவரது கடந்த கால காதல் விவகாரம், அல்லது உங்கள் வாழ்க்கையில் அவ்விதம் ஏதும் இருந்தால் அவரிடம் மனம் விட்டு பேசலாம்.

தனியாக பேச கிடைத்த 10 நிமிஷ சந்தர்ப்பத்தில், ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலாவிட்டாலும்,
"இவருடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒத்து போகுமா??" போன்ற சில கேள்விகளுக்கு பதிலும், முடிவெடுக்க மனதில் ஒரு தெளிவும் நிச்சயம் வரும்.

கண்டதும் காதல் வரும்போது....
கலந்து பேசி புரிதல் வருவது சாத்தியம்தானே!!


'அவளிடம்'......சில கேள்விகள்!!!



34 comments:

said...

டிப்ஸ் திவ்யா வந்து விட்டார் அனைவரும் அமைதியாக அமரவும்...!! :))))

said...

//எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ......சேலை நுனியை திருகிக்கிட்டு, தலை குனிஞ்சுட்டு, 'ஆமா'...'இல்லை' ன்னு மண்டைய மண்டைய ஆட்டி ஃபில்ம் காட்டுறது????//

இது ஒரு அருமையான கேள்வி... :))) கல்யாணத்துக்கு முன்ன தானே சேலை நுனியை திருக முடியும்..? கல்யாணதுக்கப்புற அப்பாவி புருசன் காதை இல்ல புடிச்சு திருகுவாக..? அதை யோசிக்கலையா திவ்யா..? ;)))))

said...

// 'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க//

அது சரி... அல்லாரும் பாயிண்ட் நோட் பண்ணுங்கப்பூ.... பொய்தான் சொல்லனும்னு சொல்லுறீய.... சரிதான்...எங்கயும் உண்மைக்கு மதிப்பே இல்லை போல...:)))

said...

//அந்த ஹாபி விளையாட்டு சம்மந்தமானதாக இருந்தால், உடம்பை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் அக்கறை உள்ளவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.
அப்படியே 'ஜிம்' க்கு போற பழக்கம் இருக்கான்னும் கேட்டுக்கங்க.//

பயலோட ஹாபி விளையாடுறவுகளை பாக்குறதுன்னு சொன்னா என்ன ரிசல்ட்டுனு சொல்ல மறந்துட்டீயளே அம்மணி... ;)))))))))

said...

//"கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விட ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்..........கல்யாணத்
துக்கு அப்புறமா முழுசா விட்டுறுவேன்" அப்படின்னு டயலாக் விட்டா.......உஷார்!!!//

ஹஹஹஹ... என்னாது இது திவ்யா.. பசங்க எந்த பழக்கமும் இல்லாம இருந்தா ஓட்ட வேண்டியது...
சரி போனா போகுதுன்னு ரெண்டு 'பெக்' உள்ள தள்ள கஷ்ட்டப்பட்டு கத்துகிட்டா இப்படி சொல்லி பசங்க
நெஞ்சுல ராவா சரக்கை ஊத்த வேண்டியது.. இந்த பொண்ணுகளை புரிஞ்சுக்கவே முடியலையே.!!! ;))))))

said...

வழக்கம் போல டிப்ஸ் எல்லாம் சிப்ஸ் மாதிரி CRISP பா இருக்கு திவ்யா.. கலக்குமா நீ.... !! :))))

said...

//"உனக்கு சமைக்க தெரியுமான்னு?? பொண்ணுகிட்ட கேட்டா ஒரு அர்த்தம் இருக்கு.........பொண்ணு பையனுக்கு சமைக்குமா? இல்ல பையன் தான் பொண்ணுக்கும் சேர்த்து சமைக்கனுமான்னு தெரிஞ்சுக்கலாம், //

ஓ...இதுல இப்படி ஒரு அர்த்தம் வேற இருக்கா...?

said...

//கண்டதும் காதல் வரும்போது....
கலந்து பேசி புரிதல் வருவது சாத்தியம்தானே!!//

ம்...சாத்தியம் தான்...டிப்ஸ்ஸெல்லாம் சிப்ஸ் மாதிரி அள்ளி விட்றீங்க திவ்யா...அனைவரும் படித்துப் பயன் பெறவேண்டிய அருமையான பதிவு திவ்யா...

said...

சே! பட்டா முழுக்க ஜொள்ளுபாண்டியே எடுத்துட்டார். :-)
நான் பெண் பார்க்கும் போது(நான் பேசனும் என்று) பேசியது.
என்னை பிடிச்சிருக்கா?
என் வேலையை பற்றி உன் அண்ணன் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்,காலை 8 மணிக்கு போனால் மாலை/இரவு எப்போது வருவேன் என்று தெரியாது அல்லது வருவேனா என்பதும் சொல்ல முடியாது அதனால் நன்றாக யோசித்துக்கொள்.குடும்ப கட்டாயத்துக்கு என்னை கல்யாணம் செய்துகொள்ளாதே என்றேன்.பிடிக்கவில்லை என்றால் இப்போதே சொல்லிவிடு பரவாயில்லை என்றேன்.
பதிலை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.
என்னிடம் எங்கள் வருங்கால திட்டம் அது இது என்று கேட்டிருந்தால் ”எனக்கு இந்த பெண் வேண்டாம்” என்று சொன்னாலும் சொல்லியிருப்பேன். :-))
என்ன தான் பேசினாலும் அவ்வப்போது யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்கை சந்தோஷமாக இருக்கும்.

said...

//எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ......சேலை நுனியை திருகிக்கிட்டு, தலை குனிஞ்சுட்டு, 'ஆமா'...'இல்லை' ன்னு மண்டைய மண்டைய ஆட்டி ஃபில்ம் காட்டுறது????
///
நல்லா சொன்னீங்க!!

//அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.........அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.
//
ஆஹா! விவரமா தான்மா இருக்கீங்க!

said...

\\'சூப்பர் ஸிங்கர்'க்கு ஆடிஷனா நடத்தறாங்க???"
\\

ஹா ஹா ஹா

said...

\\[ 'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க']\\

ஹையோ! நான் இந்த டைப்தானே

போச்சா!

said...

ஆனாலும் டிப்ஸ் ரொம்ப விவரம்தேன்

எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்

நாங்களும் ஜொள்ரம்

said...

(காதல் வயப்படாத) பசங்களுக்கு வீட்டில் பார்க்கும் பெண்ணிடம் எப்படி என்னவெல்லாம் பேசலாம், என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நீங்க முந்திக் கொண்டு விட்டிர்கள். பரவாயில்லை, உங்கள் இடுகையை முன்னிட்டு இந்த வாரம் அந்தப் பதிவை அரங்கேற்றி விட வேண்டியது தான்.

said...

//அப்படின்னு எல்லாம் தடுமாறாம......இயல்பா இருங்க//

ச்சே...ரயில் தடம் வேண்டுமென்றால் தடமாறலாம், 'மயில்'கள் தடங்கள் தடுமாறா! ஹிஹி...:)

//தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக//

ஆஹா... இது HR வேலைக்கு ஆள் எடுக்குற பொண்ணுன்னு நினைச்சுட்டா மாப்பிள்ள...ஹிஹிஹி...:)

said...

//ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே//

இப்ப உள்ள பொண்ணுங்களுக்கு இப்படிப்பட்ட பையன் தான் ரொம்ம்ப பிடிக்குது தெரியுமா?:)

said...

பத்து நிமிடங்களில் முடிவு பண்ணுவதா? ம்ம்ம்ம்.... அதாவது ஒரு சீரியல் விளம்பரம் ஓடும் நேரம் 10 நிமிடங்கள். அதுக்குள்ள முடிவு எடுக்க சாத்தியமுண்டு என்கிறீர்கள்...ம்ம்ம்....பார்ப்போம் பார்ப்போம்:)

said...

நல்ல டிப்ஸ் திவ்யா.. :)
நிச்சயம் எல்லாரும் இந்த அணுகுமுறையை கையாண்ட நல்லா இருக்கும்...

said...

\\"அதென்ன பெண் பார்க்க வந்தா, பொண்ணு பட்டு புடவை தான் கட்டிக்கனுமா??\\
எல்லாவற்றிற்கும் இடம் பொருள் ஏவல் என்று இருக்கு. முதல் தடவை வீட்டுப் பெரியவர்கள் முன்னால் புடவையில் தோன்றினால் தான் நல்லா இருக்கும். பட்டுப் புடவை, நெற்றிச்சுட்டி எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றில்லை. அதெல்லாம் சினிமாவிலும் சீரியலிலும் தான் நடக்கும். :-)

\\இந்த டென்ஷன் மட்டும் பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் குறைந்த பாடில்லை.\\
இதை வன்மையாக எதிர்க்கிறேன். இப்பல்லாம் நிலமை தலைகீழ். பசங்க தான் நகத்தைக் கடித்துக் கொண்டு டென்ஷனாக இருக்கிறார்கள்.

\\"ஆங்"..."ஆமா"...."இல்லை" என்று ஒரிரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு,
"உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பேசனுமா.....கேட்கனுமா?"அப்படின்னு மாப்பிள்ளை பையன் பேச சந்தர்ப்பம் கொடுத்தா கூட, பேசாம 'பெப்பே பெப்பே' என்று முழிப்பாள்.\\
This is the silence before the storm :-)

\\* 'எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது?'\\
பெண் பார்க்கும் போது இப்படி நினைக்கும் பெண்கள் தான் “இவள் பேச்சை எப்படி நிறுத்துவது” என்று கல்யாணமான பிறகு கணவர்கள் எண்ணும்படி நடப்பார்கள் :-)

\\* முதல் முதலா கேட்கிற கேள்வி...........அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.........அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.\\
சுத்தம். என்ன வேலைக்கா ஆள் எடுக்கறாங்க. திவ்யாவின் இந்த அறிவுரையை மற்றும் ஏற்காதீர்கள் பெண்களே. இப்படியொரு கேள்வியைக் கேட்டீங்க, உங்களை பெண் பார்க்க வந்திருப்பவன், “அடியாத்தீ, இதென்ன வம்பாப் போச்சு. வாழ்க்கையில் குறிக்கோளாம்லா. அது இன்னாதுன்னு வானத்த பார்த்து யோசிக்க ஆரம்பிச்சிருவாய்ங்க. அப்புறம் நீங்கள்லாம் ஔவையாராத் திரிய வேண்டியது தான்.

\\ஸோ.....எந்த காரணத்தை கொண்டும் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காதீங்க.\\
Marriage is a compromise of what you are willing to give and forced to take. (அட பொன்மொழி மாதிரி இருக்கே)
One has to keep giving to take very little. But the very little you get is actually invaluable.

\\உங்களுக்கு சிகரெட், மது பழக்கங்கள் சுத்தமாக பிடிக்காது என்றால், அவருக்கு அந்த பழக்கம் இருக்கிறதா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.\\
சில பொண்ணுங்க “நானும் உங்களுக்கு கம்பனி கொடுக்க உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை உண்டா”ன்னு கேக்குறாய்ங்களாம் :-(

\\"இவருடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒத்து போகுமா??" போன்ற சில கேள்விகளுக்கு பதிலும், முடிவெடுக்க மனதில் ஒரு தெளிவும் நிச்சயம் வரும்.\\
காயத்ரியிடம் கேட்டால், குழப்பம் தான் வரும் என்பாள்.

said...

ஹி ஹி நல்ல பதிவுதான் புதுசா கல்யாணம்கட்டபோறவங்களுக்கு

நமக்கெல்லாம்.. இது சான்ஸ் இல்லீங்கோ

ஹெ ஹெ திருமணம் நிச்சயம் ஆன பிறகுதான் பேசவே அதுவும் யாருக்கும் தெரியாமல் ஆரம்பிக்கனும்....

சோ நமக்கு இது ஒத்துவராது...

said...

ஹும்ம்ம்ம்ம்ம்

அவளிடம் சில கேள்விகள் பதிவும் வருமா?

;))

said...

//முதல் முதலா கேட்கிற கேள்வி...........அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.........அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.

தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக அவர் கூறினால், வாழ்க்கையை திட்டமிட்டு , ஒரு குறிக்கோளோடு முன்னேறி செல்பவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.

[ 'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க']//

கன்பார்ம் அவ தான் வாழ்க்கை துணைவி னு தெரியாம அப்படி எல்லாம் நம்ம கனவுகளை பகிர்ந்துக்க முடியாது. அதுவும் முதல் கேள்வியே அது தான் என்றால் ரொம்பவே கஷ்டம்!

இது என்னுடைய கருத்து!

Opinion Differs :)

//மாப்பிள்ளை வீட்டு கூட்டத்தில் இருந்து ஒருவர் குரல் கொடுப்பார், //

இன்னமுமா கூட்டமா போயிக்கிட்டு இருக்காங்க, அடக் கொடுமையே!

said...

//கண்டதும் காதல் வரும்போது....
கலந்து பேசி புரிதல் வருவது சாத்தியம்தானே!!//

ம்ம்.. இந்த வரி தான் கலக்கலோ கலக்கல்..

said...

இப்போ எல்லாம் பெண்கள்தான் நிறைய கேள்விகள் கேக்குறாங்க திவ்யா.....பையன்கள்...ஷ்ஷ்.....silent!!!!
anbudan aruNaa

said...

vanthutaaaangayyyyaaa vanthutaaanga :)))) tips madam...ithaye pasaga point if viewla konjam postunga

said...

என்னவோ சொல்றீங்க!!! பெரிய பாட்டி தான்:))
ஆனா, ஒன்னு மட்டும் உண்மை...பத்து நிமிஷம் பேசி ஒன்னும் தெரிஞ்சிக்க முடியாது...

said...

ஆகா மீண்டும் டிப்ஸா!! கலக்குறிங்க திவ்யா ;)

பழக்க வழக்கங்கள் டிப்ஸை தவிர மீதி எல்லாம் சரியாகுமான்னு சந்தேகம் தான்.

\\\'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க']\\

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க.

முதல் முதலில் பார்க்கும் போது சொல்வதை வச்சி எல்லாம் வாழ்க்கையை ஓட்ட முடியாதுங்க.

கொஞ்ச கஷ்டமான டாபிக்கை காமெடி பண்ணிட்ட மாதிரி இருக்கு.

said...

என்ன சொல்றதுன்னு தெரியலை. :(((

said...

அட நீங்க தான் டிப்ஸ் திவ்யாவா......சரி உங்கள பொண்ணு பார்க்க வர போறாங்களா!!!!!!!!! ;)

said...

:))

Ok... plana drop pannida vendiyathuthaan :((

said...

Thalaivar விஜய் yoda ovvoru question and commentskku naan oru repeat pottukuren :))

said...

naan chinna paiyanunga....
ithu ellam periya people matter..

athanal
ippothaikku

:-))

said...

:))

said...

Eppadi ellam question varum nu oru model mock vechuteenga... soooper...

Awesome explanation and way to figure out a person...

gud one...

keep going....