January 07, 2008

அவள் வருவாளா??? - பகுதி 1





கோயம்பத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரி வளாகம், கணினி துறை கட்டிடத்தின் படிகளில், அத்துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சிலர், வகுப்புகள் முடிந்ததும் சாய்ங்கால வேலையில் குழுமியிருந்தனர்.

"ஹே மச்சி, இந்த வருஷ இன்டர் காலேஜ் கல்ச்சுரல் காம்பிடேஷன் அடுத்த மாசம் 22 ஆம் தேதிடா" - விக்ரம்

"ஆமாம்டா, நோட்டீஸ் போர்ட்ல பார்த்தேன்டா. இந்த இயரும் நம்ம டிபார்ட்மெண்ட்தான் ஷீல்ட் வின் பண்ணனும்டா" - கோபால்.

"நம்ம ராஜா இருக்கிறான்டா கலக்குறதுக்கு! டான்ஸ், பாட்டு போட்டி, ஸ்கிட்[குறு நாடகம்] எல்லாத்திலேயும் புகுந்து திறமை காட்டி வின்பண்ணிடுவான்டா, ஸோ, நோ வொரீஸ்! போன வருஷம் போட்ட மாதிரி ஒரு டான்ஸ் போட்டு தூள் பண்ணிடலாம்டா மச்சிஸ்" - பிரதீப்.

"ராஜாவை பத்தி நாம பேசுறப்போ அவனே கரெக்ட்டா வந்துட்டான் பாருடா, எப்புவும் போல கூட ரெண்டு ஃபிகரு கூட கடலை வருத்துட்டே வர்ரான்டா மாப்பிள்ளை" - விகரம்.

ராஜா தன்னுடன் வந்த உடன் படிக்கும் பெண்களுக்கு விடை கொடுத்துவிட்டு, தன் நண்பர்களை நோக்கி வந்தான்.

"ஹாய்டா மச்சிஸ், என்னடா பேசிட்டு இருக்கிறீங்க" - ராஜா.

"வாடா மச்சான், நம்ம காலேஜ் 'இன்டர் காலேஜ் கல்சுரல் காம்பிடேஷன்' பத்திதான்டா பேசிட்டு இருந்தோம். போன வருஷம் மாதிரி இந்த இயரும் நீயும் பூஜாவும் ஜோடி சேர்ந்து, நாம ஒரு குரூப் டான்ஸ் போட்றலாம்டா ராஜா" - விக்ரம்.

"ஓ! ஷூயுர், நோ ப்ராப்ளம்! பூஜாகிட்ட இது பத்தி கேட்டீங்களா?" - ராஜா.

"நம்ம பஞ்சாபிக் குதிரை பூஜா மாட்டேன்னா சொல்லிட போறா! ஆனாலும் உனக்கு மச்சம்டா மாப்பிள்ளை, நம்ம காலேஜ் சூப்பரு ஃபிகர் பூஜாதான், அவ கூட இந்த இயரும் சேர்ந்து ஆட போறேடா" - கோபால்.

"அதுல மட்டுமாடா ராஜா மச்சக்காரன், நாம ஒருத்தியாவது லுக்கு விடமாட்டாளான்னு ஹோப்ஸ் காலேஜ் ரோட்ல ஜொள்ளுவிட்டுகிட்டு தான் திரிய முடியுது, ஆனா ராஜா கூட எப்பவும் இரண்டு மூனு பொண்ணுங்க கடலை போட்டுக்கிட்டே தான் அவன் வலம் வர்ரான், அதெப்படி மாப்பிள்ளை உனக்கு மட்டும் சிட்டுகள் சிக்குது" - பிரதீப்.

"ஏன்டா இப்படி பொருமுறீங்க, பொண்ணுங்கிட்ட 'ஜொள்ளு லுக்கு' விடாம ஃப்ரெண்டிலியா பேசிப்பாருங்கடா, நல்லா பேசுவாங்க, அதுதான் என் டெக்னிக்" - ராஜா.

அந்நேரம் அவர்கள் வகுப்பில் படிக்கும் பூஜா, மற்றும் ஹரினி, சங்கிதா அங்கு வந்துவிட...

"வாம்மா எங்க செல்ல பஞ்சாபிக் குதிரை, உன்னைத்தான் தேடிட்டு இருந்தோம்" - கோபால்.

"ஹாய் guys! செல்லம் சொல்லாதெ சொல்லுச்சு, செல்லம் சொன்னா அடிக்கும் நான். என்னை எதுக்கு தேடுச்சு நீங்க" - பூஜா.

"அம்மா தாயே, உன்னை செல்லம்னு சொல்லல போதுமா. ஆனா அந்த நமீதா மாதிரி 'கொஞ்சும் தமிழ்' பேசி எங்களை கொல்லாதே தாயே" - கோபால்.

"ஹே பூஜா, as last year, this year too we are gona have 'inter college cultural competition', are you willing to participate as my pair in the dance event" - ராஜா.

"Oh No!! Sorry Raja.....will be going to Mumbai next month, to attend my sister's wedding, so I wont be able to praticipate, sorry guys!!" -பூஜா.

"ஹே! என்ன பூஜா இப்படி டிமிக்கு கொடுக்கிற" - அனைவரும் அதிர்ச்சி ரியாக்க்ஷன் கொடுக்கும் நேரத்தில் பூஜாவின் செல் ஃபோன் அழைக்க, அவள் 'எக்ஸ்கூஸ்மீ' என் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.





"ஏன் பூஜா கூட மட்டும் தான் ராஜா டான்ஸ் ஆடுவானா? வேற யாரு கூடவும் ஆடமாட்டானா?" - கவிதா.

"ஆஹா.......கவி! உனக்கு உள் மனசுல ராஜா கூட சேர்ந்து ஆடனும்னு ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே ஆசை......நீயும் ராஜாவும் ஸ்கூல் டேய்ஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே, அப்போ நிறைவேறாத ஆசை இப்போ பூஜா நழுவியதால் நிறைவேறுதா??" - பிரதீப்.

"அட சீ, வாய் மூடு! நான் அவன் கூட சேர்ந்து ஆடுறதுக்காக சொல்லல, நம்ம டிபார்ட்மெண்ட தான ரெப்ரஸண்ட் பண்றோம், ஏன் நம்ம ஜூனியர் பொண்ணுங்க யாராச்சும் ஆடக்கூடாது??" - சொல்லிக்கொண்டே ஒரக்கண்ணால் ராஜாவை பார்த்தாள் கவிதா.

அவள் யாரை சொல்லவருகிறாள் என புரிந்தவனாக கோபப்பார்வை பார்த்தான் ராஜா.

"ஓ! தாரளாமா நம்ம ஜூனியர் பொண்ணு ஆடலாமே" - கோபால்.

"நம்ம ஸ்கண்ட் இயர் வனிதா மேல ஆல்ரெடி ராஜாக்கு ஒரு கண்ணு, ஸோ அவளை இவனோட கோர்த்து விட்டுரலாம்டா, என்ன சொல்றே ராஜா?" - பிரதீப்.

" ஏன் ஸ்கண்ட் இயர்ஸ் மட்டும் தான் நமக்கு ஜூனியர்ஸா?, ஃபர்ஸ்ட் இயர்ஸ் இருக்கிறாங்களே!!" - கவிதா.

கவி இப்படி சொன்னதும், ராஜாவின் முகம் கோபத்தில் அதிகம் சிவந்தது!

"ஹே கவி, ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுங்க பத்தி ஒரு விபரமும் தெரியாதே, அவங்க காலேஜ்க்கு வந்தே ஒரு மாதம் தான் ஆகுது, எந்த பொண்னு நல்லா ஆடும்னு தெரிலியே, உனக்கு யாராச்சும் தெரியுமா கவி?" - விக்ரம்

" ஆமாம் விக்கி, என்னோட ஸ்கூல் ஜூனியர், நம்ம ராஜாவோட கசின் ராஹினி நம்ம டிபார்ட்மென்ட் ஃப்ர்ஸ்ட் இயர்ல ஜாயின் பண்ணியிருக்கா, சூப்பர் குட் டான்ஸர் அவ , ஸ்கூல்ல அவளோட டான்ஸ் ரொம்ப பாப்புலர்! பரதம், வெஸ்டர்ன், குச்சுபிடி எல்லாம் அவளுக்கு அத்துபிடி!! உங்க பஞ்சாபிக்குதிரை எல்லாம் பிச்சை வாங்கனும் அவ டான்ஸுக்கு" - கவி.

ராஜா எதையும் கவனிக்காததுபோல், கவிதாவை ஒரு முறை முறைத்துவிட்டு,அவ்விடம் விட்டு நகர ஆரம்பித்தான்.

" கவி, ராஜாவோட கசின் நம்ம காலேஜ்ல படிக்கிறாளா?? சொல்லவே இல்லடா ராஜா...........ஆமா கவி, கசின்ன்னா என்ன முறை அவ இவனுக்கு?" - கோபால்.

"கோபாலு........ராஹினி நம்ம ராஜாவோட மாமா பொண்ணு, அப்போ என்ன முறைன்னு நீயே புரிஞ்சுக்கோ" - கவி.

"அப்படி போடு.........அட்ரா சக்கை! மாப்பிள்ளை உன் முறைப்பொண்ணு இங்கன நம்ம டிபார்ட்மெண்டல்யே படிக்கிறா, சொல்லாம்லயே மறைச்சுட்டியே ராசா, நியாயமாடா இது?" - அனைவரும் ராஜாவை கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.

" கவி எதுக்கு இப்படி மாட்டிவிட்டு வேடிக்கை பாக்குற, அவ கூட எல்லாம் என்னால ஆட முடியாது, அந்த ராங்கி பிடிச்சவ ஒத்துக்கவும் மாட்டா, ஸ்கூல்லோட முடிஞ்ச வம்பை இங்கயும் தொடர வைச்சுடாதே, இந்த பேச்சை இத்தோட மறந்திடு, அவளை பத்தி பேசி என் கோபத்தை கிளப்பாதே" -
கோபத்தில் சீறி விட்டு , தன் பைக்கை நோக்கிப் போகும் தங்கள் நண்பன் ராஜாவை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்...

[ராஜா ஏன் ராஹினியின் மேல் வெறுப்பில் இருக்கிறான்?,
அவர்களுக்குள் என்ன பிரச்சனை?........
இருவரும் சேர்ந்து ஆடுவார்களா கல்லூரி நடனப் போட்டியில்?............


வரும் பகுதிகளில்!!!]

பகுதி -2

45 comments:

Anonymous said...

நல்லா இருக்கு. :):)
அடுத்த பகுதிகளை சீக்கிரம் போடுங்க.. அது எப்படிங்க கதைக்கேற்ற படங்களை சரியா தேடித்துப் பிடித்து போடுறீங்க.. பாராட்டுகள்

வினையூக்கி

said...

ஆரம்பமே விறுவிறுப்பாக இருக்கிறது,
வாழ்த்துக்கள்!

said...

//நாம ஒருத்தியாவது லுக்கு விடமாட்டாளான்னு ஹோப்ஸ் காலேஜ் ரோட்ல ஜொள்ளுவிட்டுகிட்டு தான் திரிய முடியுது,//

இது காலேஜ் கலாட்டா ரேஞ்சில போது!

said...

//அம்மா தாயே, உன்னை செல்லம்னு சொல்லல போதுமா. ஆனா அந்த நமீதா மாதிரி 'கொஞ்சும் தமிழ்' பேசி எங்களை கொல்லாதே தாயே" - கோபால்.//

பூஜானு பேரு வைச்சு, நமீதோவோட கம்பேர் பன்னிட்டீங்களே ...
அவ்வ்வ்வ்வ்!

said...

கதை நல்லா இருக்கு! சீக்கிரம் நெக்ஷ்ட் பார்ட் ப்ளீஸ்!

said...

\\வினையூக்கி said...
நல்லா இருக்கு. :):)
அடுத்த பகுதிகளை சீக்கிரம் போடுங்க.. அது எப்படிங்க கதைக்கேற்ற படங்களை சரியா தேடித்துப் பிடித்து போடுறீங்க.. பாராட்டுகள்

வினையூக்கி\\

நன்றி வினையூக்கி.

அடுத்த பகுதிகள் விரைவில்.

படங்களின் தேர்வையும் பாராட்டியமைக்கு மிக்க நன்றி!!

said...

\\ நாடோடி இலக்கியன் said...
ஆரம்பமே விறுவிறுப்பாக இருக்கிறது,
வாழ்த்துக்கள்!\

நாடோடி,
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

said...

\\ Dreamzz said...
//நாம ஒருத்தியாவது லுக்கு விடமாட்டாளான்னு ஹோப்ஸ் காலேஜ் ரோட்ல ஜொள்ளுவிட்டுகிட்டு தான் திரிய முடியுது,//

இது காலேஜ் கலாட்டா ரேஞ்சில போது!\\

அப்படியா dreamzz?

said...

\\ Dreamzz said...
கதை நல்லா இருக்கு! சீக்கிரம் நெக்ஷ்ட் பார்ட் ப்ளீஸ்!\

Dreamzz, நன்றி,
அடுத்த பகுதி விரைவில்.

said...

ஹம்ம்ம்ம்... ராஜா-ராஹினி... ரா.. ரா... எக்கச்சக்கமா பாடல்கள் இருக்குதே... ஆனா எல்லாம் பேய் பாட்டும், அட்வைஸ் பாட்டும்தான்.. பாக்கலாம் டூயட் பாட்டு ஏதாவது வருதான்னு :)))

said...

ஹ்ம்ம்
//நன்றி,
அடுத்த பகுதி விரைவில்.////
நன்றி! :-)

said...

ஆகா..காலேஜு..கல்ச்சுரல்ஸ்...ஆர்ப்பாட்டமா ஆரம்பிச்சிருக்கீங்க...அப்படியே டாப் கியர்ல தொடருங்க :))

//மாணாவர்கள் //

இந்த மாதிரி ஜுபெல்லிங்கு மிஷ்டேக்கு மட்டும் அங்கங்க இருக்கு..சரி பண்ணிடுங்க :))

said...

\\ ஜி said...
ஹம்ம்ம்ம்... ராஜா-ராஹினி... ரா.. ரா... எக்கச்சக்கமா பாடல்கள் இருக்குதே... ஆனா எல்லாம் பேய் பாட்டும், அட்வைஸ் பாட்டும்தான்.. பாக்கலாம் டூயட் பாட்டு ஏதாவது வருதான்னு :)))\

டூயட் பாட்டு வருமா? இல்லியா?ன்னு பொருத்திருந்து பாருங்க ஜி!

said...

\\ CVR said...
ஹ்ம்ம்
//நன்றி,
அடுத்த பகுதி விரைவில்.////
நன்றி! :-)\\

ஹ்ம்ம், வருகைக்கு நன்றி சிவிஆர்!

said...

\\ கப்பி பய said...
ஆகா..காலேஜு..கல்ச்சுரல்ஸ்...ஆர்ப்பாட்டமா ஆரம்பிச்சிருக்கீங்க...அப்படியே டாப் கியர்ல தொடருங்க :))

//மாணாவர்கள் //

இந்த மாதிரி ஜுபெல்லிங்கு மிஷ்டேக்கு மட்டும் அங்கங்க இருக்கு..சரி பண்ணிடுங்க :))\\

கப்பி, எழுத்துப் பிழை சுட்டிக்காட்டியதிற்கு நன்றி!

என் வலைப்பதிவு பக்கம் வந்ததிற்கு இன்னொரு நன்றி!

said...

கதை நடையும் படங்களும் நன்று திவ்யா...

said...

divya,

hopes college road laam eluthinaathaala,
enakku krishnammal college/psg college area la suththuna gnabakam, ellam vanthuruchu.
krishnammal colleg ethirththappula irukkura peelamedu quarters la friend veedu irunthuchu. frid--sunday anga thaan eppavum stay.

aahaa......kannukku pasumaiyaa kulirchiyaa eppadi patta area athu...

sari..puuja bombay pona thirumba varra varaikkum wait pannuvoomee..athukkulla mama ponnu kooda uudal kaathal nu methuvaa kondu varap parkkureenga..
appadiye konjam poojavoda north india girl friends pathiyum eluthalaam... hot kothumai chappathiyoda alu gobi masala sappitta mathiyiri irukkum.

Raj.

said...

எங்கே கேட்கிறிர்கள், படிக்கிறிர்கள் இந்த பேச்சு நடையை... பேச்சு நடையிலான தமிழ் படிப்பதற்கும் கதைக்கும் பொறுந்துக்கிறது...

தினேஷ்

said...

அப்புறம் புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு :)

said...

என்னாங்க அம்மணி திவ்யா :)))
சும்மா கலகலக்குது காலேஜ் கதை... டயலாக்கு எல்லாம் எப்படி இப்படி...

ஆனாலும் எங்க தானைய தலைவி நமீதாவோட தீந்தமிழை இப்படி ஓட்டி இருக்கக்கூடாது... ;))))))

மொத்ததிலே கலகலகுதுங்க்கோ.... சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க...:)))

said...

adada adada... kathai is good... ore oru kuttiyoondu kurai... tamil cinema maathiriye neengalum antha ottu motha college layum Raja nu oruthanukku than ella talents um irukku nu solreengalae :) over ah illae ithu :p

yea..kathaiketha pics podarathu is a good idea....... i wil try to follow this idea :D

said...

\\ பாச மலர் said...
கதை நடையும் படங்களும் நன்று திவ்யா...
\\

பாசமலர்,உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி.

said...

\\ Raj said...
divya,

hopes college road laam eluthinaathaala,
enakku krishnammal college/psg college area la suththuna gnabakam, ellam vanthuruchu.
krishnammal colleg ethirththappula irukkura peelamedu quarters la friend veedu irunthuchu. frid--sunday anga thaan eppavum stay.

aahaa......kannukku pasumaiyaa kulirchiyaa eppadi patta area athu...

sari..puuja bombay pona thirumba varra varaikkum wait pannuvoomee..athukkulla mama ponnu kooda uudal kaathal nu methuvaa kondu varap parkkureenga..
appadiye konjam poojavoda north india girl friends pathiyum eluthalaam... hot kothumai chappathiyoda alu gobi masala sappitta mathiyiri irukkum.\\

ஹாய் ராஜ், உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

'ஆலு கோபி'யை விட நம்ம ஊரு 'காரச்சட்னி'தான் பெஸ்ட்!

said...

\\ தினேஷ் said...
எங்கே கேட்கிறிர்கள், படிக்கிறிர்கள் இந்த பேச்சு நடையை... பேச்சு நடையிலான தமிழ் படிப்பதற்கும் கதைக்கும் பொறுந்துக்கிறது...

தினேஷ்\

நன்றி தினேஷ்,
பேச்சு நடையெல்லாம், நண்பர்கள் மூலம் அறிந்ததே!

said...

\\ Dreamzz said...
அப்புறம் புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு :)\\

டெம்ப்ளேடையும் கவனித்து பின்னூட்டமிட்டதிற்கு நன்றி Dreamzz!

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
என்னாங்க அம்மணி திவ்யா :)))
சும்மா கலகலக்குது காலேஜ் கதை... டயலாக்கு எல்லாம் எப்படி இப்படி...

ஆனாலும் எங்க தானைய தலைவி நமீதாவோட தீந்தமிழை இப்படி ஓட்டி இருக்கக்கூடாது... ;))))))

மொத்ததிலே கலகலகுதுங்க்கோ.... சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க...:)))\\

பாண்டிண்ணே வாங்க, வாங்க!

டயலாக் எல்லாம் உங்க அளவுக்கு இல்லீனாலும், ஏதோ எனக்கு தோனினதுங்கண்ணா!

அடுத்த பகுதி சீக்கிரம் போடுறேன்,

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிங்கண்ணா!

said...

\\ rsubras said...
adada adada... kathai is good... ore oru kuttiyoondu kurai... tamil cinema maathiriye neengalum antha ottu motha college layum Raja nu oruthanukku than ella talents um irukku nu solreengalae :) over ah illae ithu :p

yea..kathaiketha pics podarathu is a good idea....... i wil try to follow this idea :D\

ஹாய் Suburamaniyan,
எல்லா திறமையும் ஒருவனுக்கே, கதையின் ஹீரோ வுக்கே கொடுப்பது பற்றி உங்கள் கருத்துக்கு நன்றி, நினைவில் கொள்கிறேன்.

பதிவில் உள்ள படங்களையும் பாராட்டியதற்கு நன்றி!

said...

ஆகா..காலேஜு கதையா!! சூப்பரு..;))

\\[ராஜா ஏன் ராஹினியின் மேல் வெறுப்பில் இருக்கிறான்?,
அவர்களுக்குள் என்ன பிரச்சனை?........
இருவரும் சேர்ந்து ஆடுவார்களா கல்லூரி நடனப் போட்டியில்?............

வரும் பகுதிகளில்!!!]\\\

ம்ம்ம்...வெயிட்டிங் ;)

said...

புதுசா இன்ன்னொரூ கதை.. அதூவும் காலேஜ் லூட்டிஸ்.. கலக்குங்க திவ்யா. :-)

said...

\\ கோபிநாத் said...
ஆகா..காலேஜு கதையா!! சூப்பரு..;))

\\[ராஜா ஏன் ராஹினியின் மேல் வெறுப்பில் இருக்கிறான்?,
அவர்களுக்குள் என்ன பிரச்சனை?........
இருவரும் சேர்ந்து ஆடுவார்களா கல்லூரி நடனப் போட்டியில்?............

வரும் பகுதிகளில்!!!]\\\

ம்ம்ம்...வெயிட்டிங் ;)\\

வாங்க கோபி,
காலேஜ் கதைகள் ரொம்ப பிடிக்குமோ??

வெயிட் பண்ணுங்க அடுத்த பகுதி சீக்கிரம் போடுறேன்!

said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
புதுசா இன்ன்னொரூ கதை.. அதூவும் காலேஜ் லூட்டிஸ்.. கலக்குங்க திவ்யா. :-)\\

உங்கள் பின்னூட்டம் உற்ச்சாகமளித்தது, நன்றி மை ஃபிரண்ட்!!!

said...

விறுவிறுப்பு மற்றும் கலக்கலோடு ஆரம்பமே அருமை!! கலக்குங்கள்!!!

said...

அழகான ஆரம்பம் டுஸ்டும் சூப்பர் அடுத்த பதிவை சீக்கிரம் போடவும். பேச்சு வழக்குகள் டிப்பிக்கல் காலேஜ் ஸ்டைல். அருமை

said...

இனிய ஆரம்பம்...
எப்போதும் போல் கலக்கலாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

அடுத்த பகுதிக்கு waiting...!

said...

:) வருடத்தின் முதல் தொடர்! நல்ல தொடக்கம் திவ்யா...
ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்...

said...

\\ இசக்கிமுத்து said...
விறுவிறுப்பு மற்றும் கலக்கலோடு ஆரம்பமே அருமை!! கலக்குங்கள்!!!\\

வாங்க இசக்கிமுத்து,
வருகைக்கும், உற்ச்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

said...

\\ ஸ்ரீ said...
அழகான ஆரம்பம் டுஸ்டும் சூப்பர் அடுத்த பதிவை சீக்கிரம் போடவும். பேச்சு வழக்குகள் டிப்பிக்கல் காலேஜ் ஸ்டைல். அருமை\\

வாங்க Shree,
ரொம்ப நாள் கழித்து என் வலைபதிவிற்கு வந்திருக்கிறீங்க, நன்றி!

அடுத்த பகுதியையும் அவசியம் படித்து கருத்துக்களை சொல்லுங்க!

said...

\\ நிமல்/NiMaL said...
இனிய ஆரம்பம்...
எப்போதும் போல் கலக்கலாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

அடுத்த பகுதிக்கு waiting...!\\

நிமல், உங்கள் தொடர்ச்சியான பின்னூட்ட ஊக்கம் தரும் உற்ச்சாகம் விவரிக்க வார்த்தைகள் போதாது!
மிக்க நன்றி நிமல்.

said...

\\ sathish said...
:) வருடத்தின் முதல் தொடர்! நல்ல தொடக்கம் திவ்யா...
ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்...\\

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி சதீஷ்.

said...

பஞ்சாபி குதிரை பேரு பூஜாவா - அவ்வ்வ்

இருக்கட்டும் இருக்கட்டும்!!

said...

//
ஜொள்ளுப்பாண்டி said...

ஆனாலும் எங்க தானைய தலைவி நமீதாவோட தீந்தமிழை இப்படி ஓட்டி இருக்கக்கூடாது... ;))))))
//
ஆமா இதை நான் கண்ணா பிண்ணாவென கண்டிக்கிறேன்!!

said...

புது டெம்ப்ளேட் சூப்பர்

said...

//
செல்லம் சொல்லாதெ சொல்லுச்சு, செல்லம் சொன்னா அடிக்கும் நான். என்னை எதுக்கு தேடுச்சு நீங்க
//
தமிழ்ல ஜூனூன் பாத்தா மாதிரியே இருந்திச்சி இந்த டயலாக்!!

said...

///"ஏன்டா இப்படி பொருமுறீங்க, பொண்ணுங்கிட்ட 'ஜொள்ளு லுக்கு' விடாம ஃப்ரெண்டிலியா பேசிப்பாருங்கடா, நல்லா பேசுவாங்க, அதுதான் என் டெக்னிக்" - ராஜா.///

இதை ஒரு 10 வருடம் முன்பே சொல்லி இருக்க கூடாதா?:(((( அவ்வ் அவ்வ் அவ்வ் போச்சே போச்சே எல்லா பிகரும் போச்சே!!!

said...

xclnt stor telling...why dnt u publish on magazines. kalakare chandru