January 19, 2009

கவிதை ' கண்ணாமூச்சி'...!!


இரகசியமாய்...
உன் கவிகுகையினுள்
வேவுபார்க்க நுழைந்தேன்...!
நான் இதுவரை
ரசித்த வரிகள்
முதன்முறையாக
வெட்க்கப்பட வைத்து
எனைப் பார்த்து சிரித்தது!!!






உன்
கவிகருவில் நானா?
கவி உருவில் நானா??
தெரியவில்லை....
ஆனால் எங்கேனும்
ஒரு வார்த்தையிலாவது
நான் இருப்பதை
உன் எழுத்து
உணர்த்த தவறவில்லை!!







புரிந்தது..
என் வெட்கத்தையும்
படம் பிடிக்கும்
புகைப்பட கருவி
உன் கவிதைகள் என!!!







இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்??







நீ
எழுதும் கவிதையில்
நான் இருப்பதைவிட
உன் 'கவிதை'யாக
இருப்பதையே விரும்புகிறேனென்று
எப்படி தெரிந்துக் கொண்டாய்..??
உன் கவிதையாக எனை
மெது மெதுவாக
செதுக்க ஆரம்பித்துவிட்டாயே!!







உனக்கும்
உன் கவிதைக்கும்
அப்படி என்னதான் கோபம்?
பல நாட்கள்
என்னுடன் பேசாமல்
விரதம் இருந்து
சாதித்து விட்டீர்களே இருவரும்!!!







யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!






கவி எழுத தூண்டிய
உன் கண்கள்
தீண்டியபின் தான்
ஓவ்வொரு கவிதையையும்
பரிமாறுகின்றேன்
அனைவருக்கும்...






நீ
முதன் முதலில் படிப்பதில்
தலைக்கனம்
என் கவிதைகளுக்கு மட்டுமல்ல...
எனக்கும்தான்!!






என்ன மாயம் புரிந்தாய்...
உன் விழி தூண்டலில்
வரிகள் எழுதினால்
உன் விழி தடவிய‌தும்
வரிகளெல்லாம்
கவிதையாகி விடுகிறதே!!!






என் கவிதையை
நீ ரசிக்க
உன் கவிதை கண்டு
நான் வெட்கப்பட
நம் இருவருக்குமான
'கவிதைகளை'
நாம் வாசிக்க ஆரம்பித்ததும்
ஆர்பரித்தது கவிதைகள் மட்டுமா??







சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!

103 comments:

said...

திவ்யா...
அழகு... அழகு... அழகு...
இதைத்தவிர சொல்ல ஒன்றுமே இல்லை.. !! :)))

said...

//உன்
கவிகருவில் நானா?
கவி உருவில் நானா??
தெரியவில்லை.... //

இப்படி அழகழகா வார்த்தை ஜாலங்கள்
பண்ணினா..நானெல்லாம்
எங்கே போறது திவ்யா...? :)))

said...

//நீ
எழுதும் கவிதையில்
நான் இருப்பதைவிட
உன் 'கவிதை'யாக
இருப்பதையே விரும்புகிறேனென்று
எப்படி தெரிந்துக் கொண்டாய்..??
உன் கவிதையாக எனை
மெது மெதுவாக
செதுக்க ஆரம்பித்துவிட்டாயே!!//

கவிதையாக இருக்கனுமா..? :))
அப்படீன்னா எப்படிங்க மேடம் ..? ;)))
விளக்கம் ப்ளீஸ்...

மிகவும் ரசித்தேன் கவிதையை.. :)))

said...

//கவி எழுத தூண்டிய
உன் கண்கள்
தீண்டியபின் தான்
ஓவ்வொரு கவிதையும்
பரிமாறுகின்றேன்
அனைவருக்கும்...//

:))) அட கவிதையைக் கூட
பரிமாற முடியுமா திவ்யா..?
நல்லாருக்கு... :))))

said...

//சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!//

:)) மிகவும் அருமை திவ்யா... !!
மூச்சுத் திணறல் காதலுக்கு
மட்டும் அல்ல...
வாசிப்பவர்களுக்கும் தான்... :))

said...

வரிகளின் ஜதிகளில்
காதலும் வெட்கங்களும்
போட்டி போட்டுக்கொண்டு
நடனமாடுகின்றன திவ்யா...
வாழ்த்துக்கள்.. !!!!!

:))

said...

kavithai pattriya kavithaigal...migavum arumai

said...

திவ்யா...கவிதைகலெல்லாம் அழகோ அழகு :))

said...

இந்த படங்களெல்லாம் எங்கிருந்துதான் பிடிக்கிறீங்க!

கவிதை எழுதின பிறகு அதுக்கேத்த மாதிரி போஸ் கொடுக்க வெச்சி எடுக்குறீங்களா?

படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிக் கவிதை!

said...

திவ்யா...

கவிதை அழகு, அசத்தல், அருமை, கலக்கல்...

said...

கலக்கல்... :)

said...

அடுத்த மாசம் எழுத கொஞ்சம் ஸ்டாக் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

அடுத்த மாசம் எழுதினா இன்னும் சிறப்பா இருக்கும்!

கலக்குங்க!

Anonymous said...

//நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது//

இருங்க ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டாரேன்!

said...

ரொம்ப நன்றி மாஸ்டர்...:)

said...

கொஞ்சம் இருங்க இன்னொரு வாட்டி படிச்சுட்டு வந்துடறேன்..!

Anonymous said...

//நீ
எழுதும் கவிதையில்
நான் இருப்பதைவிட
உன் 'கவிதை'யாக
இருப்பதையே விரும்புகிறேனென்று
எப்படி தெரிந்துக் கொண்டாய்..??//
:)

said...

படங்கள் எங்க எடுக்கறிங்க படம் தேடிப்பிடிக்கிறது பெரிய விசயம்தான்
உண்மைல...!

said...

அழகழகாய் வரிகளும் படங்களும் !

said...

//இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்??//

பின்னீட்டீங்க..

said...

எல்லாமே

அழகு
அருமை
அசத்தல்
கலக்கல்
அட்டகாசம்
சூப்பர்ப்
கிரேட்

:)

said...

படங்களும் மிக அழகு..

said...

ஆல்-ரவுண்டரா கலக்கறீங்க திவ்யா..

said...

கவிதையும், படங்களும் அருமை

said...

யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!

////////

அழகு... அழகு... அழகு...

said...

காதலின் இய்ல்பை காட்டுக்கிறது உங்கள் கவிதை.

எல்லாம் ஒரே கலக்கல் தான்

said...

எந்த வரியைப் பாராட்டுவதெனத்
திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன்

ஒரு வரியைப் பாராட்டினால் இன்னொரு வரி கோபித்துக்கொள்ளுமென்று!!!!

கதையில் சில படங்கள்
பிறகு கதைக்கென படங்கள்,
படத்துக்குக்கேற்றார் போல் கதைகள்,
இந்தப் படங்களும் கவிதை பேச
இலவச இணைப்பாக கவிதை வேறு

இதன் பெயர் தான் பரிணாம வளர்ச்சியா?

said...

அருமையான கவிதைகள் திவ்யா!!!!!!!


எல்லா கவிதைகளும் அருமை!!!

said...

//இரகசியமாய்...
உன் கவிகுகையினுள்
வேவுபார்க்க நுழைந்தேன்...!
நான் இதுவரை
ரசித்த வரிகள்
முதன்முறையாக
வெட்க்கப்பட வைத்து
எனைப் பார்த்து சிரித்தது!!!//

ஆரம்பமே அசத்தல்

//உன்
கவிகருவில் நானா?
கவி உருவில் நானா??
தெரியவில்லை....
ஆனால் எங்கேனும்
ஒரு வார்த்தையிலாவது
நான் இருப்பதை
உன் எழுத்து
உணர்த்த தவறவில்லை!!//

ஹை அந்த கவிதையையும் அப்படியே இங்க போடறது.. படிப்பம்ல.. ;))

//புரிந்தது..
என் வெட்கத்தையும்
படம் பிடிக்கும்
புகைப்பட கருவி
உன் கவிதைகள் என!!!//

அச்சச்சோ எனக்கு வெட்கமா இருக்கு
;))

//இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்??//

குட் கொஸ்டின்... பட் ஆன்செர் சொன்னாரா?? ;))

//நீ
எழுதும் கவிதையில்
நான் இருப்பதைவிட
உன் 'கவிதை'யாக
இருப்பதையே விரும்புகிறேனென்று
எப்படி தெரிந்துக் கொண்டாய்..??
உன் கவிதையாக எனை
மெது மெதுவாக
செதுக்க ஆரம்பித்துவிட்டாயே!!//

வெகு அழகு :))

//உனக்கும்
உன் கவிதைக்கும்
அப்படி என்னதான் கோபம்?
பல நாட்கள்
என்னுடன் பேசாமல்
விரதம் இருந்து
சாதித்து விட்டீர்களே இருவரும்!!!//

:)))))

//யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!//

நீங்களுமா?? உங்களுக்காவது பாராட்டு கிடைச்சதா?? ;))

//கவி எழுத தூண்டிய
உன் கண்கள்
தீண்டியபின் தான்
ஓவ்வொரு கவிதையும்
பரிமாறுகின்றேன்
அனைவருக்கும்...//

நானும் இப்படி தான்... சமைக்க சொன்னவர சாப்ட வெச்சிட்டு.. அவருக்கு ஒன்னும் ஆகலைன்னு தெரிஞ்சாதான் சாப்டுவேன்.. ;)))))

//நீ
முதன் முதலில் படிப்பதில்
தலைக்கனம்
என் கவிதைகளுக்கு மட்டுமல்ல...
எனக்கும்தான்!!//

நமக்கு தலைகனம்.. பட் அவருக்கு பாவம் சொல்ல முடியாத நிலைமை.. ;)))

//என்ன மாயம் புரிந்தாய்...
உன் விழி தூண்டலில்
வரிகள் எழுதினால்
உன் விழி தடவிய‌தும்
வரிகளெல்லாம்
கவிதையாகி விடுகிறதே!!!//

இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா சொல்லிட்டேன்.. ;))))))

//என் கவிதையை
நீ ரசிக்க
உன் கவிதை கண்டு
நான் வெட்கப்பட
நம் இருவருக்குமான
'கவிதைகளை'
நாம் வாசிக்க ஆரம்பித்ததும்
ஆர்பரித்தது கவிதைகள் மட்டுமா??//

:)))))))

//சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!//

ஹைய்ய்ய்ய்ய் இது ரொம்ப ரொம்ப அழகு.. :))

அக்கா மொத்தத்தில் அனைத்தும் அழகு... ரொம்ப பயங்கரமா ரசிச்சதின் விளைவு இது.. பொறுத்தருளுக.. தவறிருப்பின் மன்னித்தருளுக.. :)))

said...

//இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்?? //

அருமையான கவிதை !!

said...

//இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்??//

அழகு...

//யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!//

ரொம்ப அழகு...

//சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!//

ரொம்ப ரொம்ப அழகு...

எல்லா கவிதைகளும் அருமை திவ்யா...

said...

என்ன சொல்றதுன்னு தெரியல
அதனால
இந்த வரியா ரிப்பிட்டு போட்டுக்கறேன்

நவீன் ப்ரகாஷ் said...
"மூச்சுத் திணறல் காதலுக்கு
மட்டும் அல்ல...
வாசிப்பவர்களுக்கும் தான்"

said...

avvvvvvvvvvvvv...epdinga ithelam...nalaruku...ungalukunu oru style form paniteenga

said...

ஆஹா...சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்!!! அழகாய் ஒரு கவிதை தொகுப்பு. எல்லா வித எழுத்துவடிவங்களிலும் கலக்குறீங்க! அசத்துறீங்க போங்க திவ்ஸ்:)

said...

//எங்கேனும்
ஒரு வார்த்தையிலாவது
நான் இருப்பதை
உன் எழுத்து
உணர்த்த தவறவில்லை!!//

அதுதானேங்க வேணும்....
அன்புடன் அருணா

said...

//என்ன மாயம் புரிந்தாய்...
உன் விழி தூண்டலில்
வரிகள் எழுதினால்
உன் விழி தடவிய‌தும்
வரிகளெல்லாம்
கவிதையாகி விடுகிறதே!!!//

காதல் பூசிய வரிகள்..அட்டகாசம் திவ்யா..

said...

கவி எழுத தூண்டிய
உன் கண்கள்
தீண்டியபின் தான்
ஓவ்வொரு கவிதையும்
பரிமாறுகின்றேன்
அனைவருக்கும்...

Read it again, I feel it's "Kavithaiyaiyum" Thanks!

said...

///
யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!
////
இந்த கவிதையை படித்ததும் வெட்டி சாரோட பிளாக்ல படிச்ச ஒரு கதை ஞாபகம் வந்தது.. அதன் சுட்டி கிழே... போய் படிச்சி பாத்துகோங்க திவ்யா
http://www.vettipayal.com/2007/01/blog-post_116850065910832501.html

said...

அருமை அருமை ..மிக மிக அருமை திவ்யா .. ...

படங்களும் கவிதைகளும் ..மனதை கொள்ளை கொண்டது ..


அன்புடன்
விஷ்ணு

said...

WOW! No words thivya! Just extra-ordinary! Romba alaka eluthi irukku. But ithu nijama? ;)
செம அருமை திவ்யா....Superb.

said...

கவிதையும்.. அதற்கு ஏற்ற படங்களும் அருமை திவ்யா..

இப்புடி குட்டி குட்டி கவிதைகள், அதிலும் அழகான கவிதைகள்னா மட்டும் தான் படிக்கப் பிடிக்கும்..

said...

chanceless!
excellent!
superb!
beautiful! :)

said...

அழகோ அழகு கவிதையனைத்தும்.

ரொம்ப லேட் (எப்படின்னு தெரியல).

said...

\\யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!\\

அழகான காதல்.

said...

Divyavins paasaraiyil irunthu azagaana kaathal kavithaigal...

good good!!

//யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!
//

Ithula No Ul-kuthu?? ;))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா...
அழகு... அழகு... அழகு...
இதைத்தவிர சொல்ல ஒன்றுமே இல்லை.. !! :)))\\


நன்றி...நன்றி....நன்றி.....

இதைத்தவிர என்னிடமும் சொல்ல ஒன்றுமே இல்லை....!!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//உன்
கவிகருவில் நானா?
கவி உருவில் நானா??
தெரியவில்லை.... //

இப்படி அழகழகா வார்த்தை ஜாலங்கள்
பண்ணினா..நானெல்லாம்
எங்கே போறது திவ்யா...? :)))\\\


என்ன கவிஞர் சார்.....நீங்களே இப்படி சொன்ன எப்படி:))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//நீ
எழுதும் கவிதையில்
நான் இருப்பதைவிட
உன் 'கவிதை'யாக
இருப்பதையே விரும்புகிறேனென்று
எப்படி தெரிந்துக் கொண்டாய்..??
உன் கவிதையாக எனை
மெது மெதுவாக
செதுக்க ஆரம்பித்துவிட்டாயே!!//

கவிதையாக இருக்கனுமா..? :))
அப்படீன்னா எப்படிங்க மேடம் ..? ;)))
விளக்கம் ப்ளீஸ்...\\
\\\ மிகவும் ரசித்தேன் கவிதையை.. :)))\\



உங்கள் ரசிப்பிற்கு நன்றி நவீன் ப்ரகாஷ்:))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//கவி எழுத தூண்டிய
உன் கண்கள்
தீண்டியபின் தான்
ஓவ்வொரு கவிதையும்
பரிமாறுகின்றேன்
அனைவருக்கும்...//

:))) அட கவிதையைக் கூட
பரிமாற முடியுமா திவ்யா..?
நல்லாருக்கு... :))))\\


மனதில் அரங்கேறிய கவிதையை மற்றவர் பார்வைக்கி பகிர்வதுதான்.....கவிதை பரிமாறுதல்:))

விளக்கம் போதுமா?

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!//

:)) மிகவும் அருமை திவ்யா... !!
மூச்சுத் திணறல் காதலுக்கு
மட்டும் அல்ல...
வாசிப்பவர்களுக்கும் தான்... :))\\


பாராட்டிற்கு நன்றி :))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

வரிகளின் ஜதிகளில்
காதலும் வெட்கங்களும்
போட்டி போட்டுக்கொண்டு
நடனமாடுகின்றன திவ்யா...
வாழ்த்துக்கள்.. !!!!!

:))\\


வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி நவீன் ப்ரகாஷ்:)

said...

\\Blogger Muthusamy said...

kavithai pattriya kavithaigal...migavum arumai\\


உங்கள் வருகைக்கும் பின்னூட்ட பாராட்டுதலுக்கு நன்றி முத்துசாமி;))

said...

\\Blogger Divyapriya said...

திவ்யா...கவிதைகலெல்லாம் அழகோ அழகு :))\\


மிக்க நன்றி திவ்யப்ரியா;))

said...

\\Blogger Namakkal Shibi said...

இந்த படங்களெல்லாம் எங்கிருந்துதான் பிடிக்கிறீங்க!

கவிதை எழுதின பிறகு அதுக்கேத்த மாதிரி போஸ் கொடுக்க வெச்சி எடுக்குறீங்களா?

படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிக் கவிதை!\\


மனம்திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சிபி:))

said...

\\Blogger நிமல்-NiMaL said...

திவ்யா...

கவிதை அழகு, அசத்தல், அருமை, கலக்கல்...\\


நிமல்......

பாராட்டிற்கு ரொம்ப தாங்க்ஸ்:))

said...

\\Blogger இராம்/Raam said...

கலக்கல்... :)\\

நன்றி இராம்:))

said...

\\Blogger Namakkal Shibi said...

அடுத்த மாசம் எழுத கொஞ்சம் ஸ்டாக் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

அடுத்த மாசம் எழுதினா இன்னும் சிறப்பா இருக்கும்!

கலக்குங்க!\\


உங்கள் கருத்திற்கு நன்றி சிபி:))

said...

\\Anonymous மூலிகை வைத்தியர் முனுசாமி said...

//நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது//

இருங்க ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டாரேன்!\


:))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நன்றி மாஸ்டர்...:)\\


intha nanri....butterfly award ku thaney??

you are welcome Tamilan:))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

கொஞ்சம் இருங்க இன்னொரு வாட்டி படிச்சுட்டு வந்துடறேன்..!\\


:))

said...

\\Blogger கவின் said...

//நீ
எழுதும் கவிதையில்
நான் இருப்பதைவிட
உன் 'கவிதை'யாக
இருப்பதையே விரும்புகிறேனென்று
எப்படி தெரிந்துக் கொண்டாய்..??//
:)\\


வருகைக்கு நன்றி கவின்:)))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

படங்கள் எங்க எடுக்கறிங்க படம் தேடிப்பிடிக்கிறது பெரிய விசயம்தான்
உண்மைல...!\\

ரொம்ப பெரிய விஷயம் தமிழன்:))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

அழகழகாய் வரிகளும் படங்களும் !\\


நன்றி தமிழன்!!!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

//இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்??//

பின்னீட்டீங்க..\\


நன்றி சரவணன்:))

said...

\\Blogger Saravana Kumar MSK said...

எல்லாமே

அழகு
அருமை
அசத்தல்
கலக்கல்
அட்டகாசம்
சூப்பர்ப்
கிரேட்

:)\\


உற்சாகமளிக்கும் பாராட்டிற்கு மிக்க நன்றி சரவணன்:))

said...

\\Blogger Saravana Kumar MSK said...

படங்களும் மிக அழகு..\\

அப்படியா??
நன்றி!!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

ஆல்-ரவுண்டரா கலக்கறீங்க திவ்யா..\\


ஆஹா......ஆல்-ரவுண்டரா??


கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!!

said...

\\Blogger நசரேயன் said...

கவிதையும், படங்களும் அருமை\\


பாராட்டிற்கு நன்றி நசரேயன்!!

said...

\\Blogger பிரபு said...

யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!

////////

அழகு... அழகு... அழகு...\\



நன்றி.....நன்றி....நன்றி.....!

said...

\\Blogger MayVee said...

காதலின் இய்ல்பை காட்டுக்கிறது உங்கள் கவிதை.

எல்லாம் ஒரே கலக்கல் தான்\\


ரொம்ப தாங்க்ஸ் :))

said...

\\Blogger விஜய் said...

எந்த வரியைப் பாராட்டுவதெனத்
திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன்\\\


ஐயோ பார்த்து விஜய்.....பார்த்து பார்த்து;))


\\ ஒரு வரியைப் பாராட்டினால் இன்னொரு வரி கோபித்துக்கொள்ளுமென்று!!!!\\

அடடா கோபிச்சுக்குமா வரிகள்:)))




\\ கதையில் சில படங்கள்
பிறகு கதைக்கென படங்கள்,
படத்துக்குக்கேற்றார் போல் கதைகள்,
இந்தப் படங்களும் கவிதை பேச
இலவச இணைப்பாக கவிதை வேறு

இதன் பெயர் தான் பரிணாம வளர்ச்சியா?\\

பரிணாம வளர்ச்சி....எல்லாம் இல்ல விஜய், கவிதை முயற்சி அவ்வளவே;)))

உங்கள் பின்னூட்ட ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி விஜய்!

said...

\\Blogger எழில்பாரதி said...

அருமையான கவிதைகள் திவ்யா!!!!!!!


எல்லா கவிதைகளும் அருமை!!!\\


பாராட்டிற்கு நன்றி எழில்!!

said...

@ஸ்ரீமதி

உங்கள் விரிவான பின்னூட்ட விமர்சனம்.......மெய்சிலிர்க்க வைத்தது ஸ்ரீமதி!

நேரம் எடுத்து....இவ்வளவு விரிவாக உங்கள் ரசிப்பினை பின்னூட்டத்தில் பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி!

said...

\\Blogger ந.மு.விமல்ராஜ் said...

//இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்?? //

அருமையான கவிதை !!\\


மிக்க நன்றி விமல்ராஜ்!!

said...

\\Blogger புதியவன் said...

//இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்??//

அழகு...

//யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!//

ரொம்ப அழகு...

//சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!//

ரொம்ப ரொம்ப அழகு...

எல்லா கவிதைகளும் அருமை திவ்யா...\\


கவிஞரின் பாராட்டிற்கு மிக்க நன்றி!!

said...

\\Blogger gils said...

avvvvvvvvvvvvv...epdinga ithelam...nalaruku...ungalukunu oru style form paniteenga\\


நன்றி கில்ஸ்!

said...

\\Blogger Thamizhmaangani said...

ஆஹா...சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்!!! அழகாய் ஒரு கவிதை தொகுப்பு. எல்லா வித எழுத்துவடிவங்களிலும் கலக்குறீங்க! அசத்துறீங்க போங்க திவ்ஸ்:)\\

உற்சாகமளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தமிழ்மாங்கனி!!

said...

\\Blogger அன்புடன் அருணா said...

//எங்கேனும்
ஒரு வார்த்தையிலாவது
நான் இருப்பதை
உன் எழுத்து
உணர்த்த தவறவில்லை!!//

அதுதானேங்க வேணும்....
அன்புடன் அருணா\\


ரொம்ப நன்றி அருணா:))

said...

\\Blogger பாச மலர் said...

//என்ன மாயம் புரிந்தாய்...
உன் விழி தூண்டலில்
வரிகள் எழுதினால்
உன் விழி தடவிய‌தும்
வரிகளெல்லாம்
கவிதையாகி விடுகிறதே!!!//

காதல் பூசிய வரிகள்..அட்டகாசம் திவ்யா..\\


ரொம்ப நன்றிங்க பாசமலர்!!

said...

\\Blogger Muthusamy said...

கவி எழுத தூண்டிய
உன் கண்கள்
தீண்டியபின் தான்
ஓவ்வொரு கவிதையும்
பரிமாறுகின்றேன்
அனைவருக்கும்...

Read it again, I feel it's "Kavithaiyaiyum" Thanks!\\


பிழையினை சுட்டிக்காட்டியதிற்கு மிக்க நன்றி, சரி செய்து விட்டேன்:)))

said...

\\Blogger வாழவந்தான் said...

///
யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!
////
இந்த கவிதையை படித்ததும் வெட்டி சாரோட பிளாக்ல படிச்ச ஒரு கதை ஞாபகம் வந்தது.. அதன் சுட்டி கிழே... போய் படிச்சி பாத்துகோங்க திவ்யா
http://www.vettipayal.com/2007/01/blog-post_116850065910832501.html\\


வருகைக்கும் ,link கிற்கும் நன்றி வாழவந்தான்:))

said...

\\Blogger Vishnu... said...

அருமை அருமை ..மிக மிக அருமை திவ்யா .. ...

படங்களும் கவிதைகளும் ..மனதை கொள்ளை கொண்டது ..


அன்புடன்
விஷ்ணு\\


பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி விஷ்ணு:))))

said...

\\Blogger Mathu said...

WOW! No words thivya! Just extra-ordinary! Romba alaka eluthi irukku. But ithu nijama? ;)
செம அருமை திவ்யா....Superb.\\


ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் மது!!!

said...

\\Blogger Raghav said...

கவிதையும்.. அதற்கு ஏற்ற படங்களும் அருமை திவ்யா..

இப்புடி குட்டி குட்டி கவிதைகள், அதிலும் அழகான கவிதைகள்னா மட்டும் தான் படிக்கப் பிடிக்கும்..\\


ஒஹோ.....குட்டி குட்டி கவிதைன்னா ராகவ்க்கு பிடிக்குமா:))

பாராட்டிற்கு நன்றி ராகவ்!

said...

\\Blogger ஷாலினி said...

chanceless!
excellent!
superb!
beautiful! :)\\


நன்றி,
நன்னி,
தாங்க்ஸ்,
தாங்கியூ!!..:))

said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

அழகோ அழகு கவிதையனைத்தும்.

ரொம்ப லேட் (எப்படின்னு தெரியல).\\

ரொம்ப லேட் அட்டெண்டன்ஸ்......
எப்படி ஜமால் மிஸ் பண்ணினீங்க??

வலைச்சரம் ஆசிரியர் ஆனதும்....பிஸி ஆகிட்டீங்களோ??

said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

\\யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!\\

அழகான காதல்.\\


நன்றி ஜமால்:))

said...

\\Blogger ஜி said...

Divyavins paasaraiyil irunthu azagaana kaathal kavithaigal...

good good!!

//யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!
//

Ithula No Ul-kuthu?? ;))\\



வாங்க கதாசிரியரே.........நீண்ட நாட்களுக்கு பின் என் வலைதளம் பக்கமெல்லாம் வந்திருக்கிறீங்க, ரொம்ப நன்றி!!

said...

அழகான் படங்களுடன் சேர்ந்து உங்கள் கவிதை வரிகளும் கவிதை சொல்கிறது
வாழ்த்துக்கள் திவ்யா..

நீண்ட நாட்கள் உங்கள் வலைப்பதிவிற்கு வராதது கண்டு வருந்துகிறேன்.

said...

kalkunga Divya :)

said...

\\Blogger அபுஅஃப்ஸர் said...

அழகான் படங்களுடன் சேர்ந்து உங்கள் கவிதை வரிகளும் கவிதை சொல்கிறது
வாழ்த்துக்கள் திவ்யா..

நீண்ட நாட்கள் உங்கள் வலைப்பதிவிற்கு வராதது கண்டு வருந்துகிறேன்.\\


வாங்க அபுஅஃப்ஸர்,

உங்கள் முதல் வருகைக்கும், ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி:))

தொடர்ந்து என் வலைதளம் வாருங்கள் அபுஅஃப்ஸர்!

said...

\\Blogger sathish said...

kalkunga Divya :)\\


கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!!

said...

நீ
முதன் முதலில் படிப்பதில்
தலைக்கனம்
என் கவிதைகளுக்கு மட்டுமல்ல...
எனக்கும்தான்!!


அட மிக சாதரண வார்த்தைகளில் சடுகுடு ஆடுகின்றன கவிதைகள் அனைத்தும்..
முழுவதும் படித்து விட்டு வருகிறேன்..
எனது கவிதைகளையும் படியுங்க இங்கே..

http://kadhalmazhai.blogspot.com
http://www.navishsenthilkumar.blogspot.com

said...

அழகான வரிகள் திவ்யா..தொடர்ந்து எழுதுங்கள் தோழி !

said...

\\Blogger Navish Senthilkumar said...

நீ
முதன் முதலில் படிப்பதில்
தலைக்கனம்
என் கவிதைகளுக்கு மட்டுமல்ல...
எனக்கும்தான்!!

அட மிக சாதரண வார்த்தைகளில் சடுகுடு ஆடுகின்றன கவிதைகள் அனைத்தும்..
முழுவதும் படித்து விட்டு வருகிறேன்..
எனது கவிதைகளையும் படியுங்க இங்கே..

http://kadhalmazhai.blogspot.com
http://www.navishsenthilkumar.blogspot.com\\


Hi Navish,

Thanks for visitng my blog and passing on ur comments.

Will definetly visit ur page.......soon:))

said...

\\Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...

அழகான வரிகள் திவ்யா..தொடர்ந்து எழுதுங்கள் தோழி !\\

Thanks a lot Rishan.

said...

awesome........
vera enna solla.
pinnitinga madam.
vovoru kavidaikum oru vaira mothiram parisalikalaam........
nidanaalaiku piraku nalla kavidai vasika kidaithathu...

said...

நன்றி திவ்யா..

http://rishanshareef.blogspot.com/2009/02/blog-post.html

இங்கு பார்க்கவும் :)

said...

*\\சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!
\\*

திவ்யா,
உங்களிடம் நல்ல இரசனை இருக்கின்றது.
மனசுக்குள் மத்தாப்பூ கவிதையில்
கண்ணாமூச்சி விளையாடுகின்றது.

வாழ்த்துக்கள்!

Anonymous said...

congrulation
மனமார்ந்த வாழ்த்துக்கள்
if you are willing we are ready to publish your kavithai in our tamil webpage http://tamilparks.50webs.com

Anonymous said...

un ovoru kirukkalkalum
en ithayathin kalvetukkal enapathu
nan sollithan theriya venduma enna!!!!

said...

திவ்யா உங்களுடைய இந்தப் பதிவு ‘கவிதை 'கண்ணாமூச்சி'...!!’ யூத்ஃபுல் விகடனில் வந்திருக்கு...வாழ்த்துக்கள் திவ்யா...

http://youthful.vikatan.com/youth/divyapoem090309.asp

said...

தமிழை படித்தால் மட்டும் போதாது ரசிக்கவும் செய்யனும்னா உங்க வலைப்பூ வந்து தங்கிடலாம் போல ..அருமை தோழி தங்களை கவிதை...

said...

//சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....

I have no words.. Marvelous.. Delighted with each lines.. :)