March 11, 2008

தொடரும் நட்பு......

பள்ளி, கல்லூரி கால நட்புகள், படிப்பிற்கு பின் சில வருடங்களில் மங்கி , மறைந்து/ மறந்து போய்விடுகிறது. தற்போது ஆர்குட், ஆன் லைன் சாட், இ-மெயில் லில் அவ்வப்போது 'ஹாய்' ஆவது சொல்லிக்கொள்ள முடிகிறது.

இத்தகைய தொடர்பு கூட இல்லாமல், சில வருடங்கள் தொடர்பு அற்று போன நட்பினை ஏதேச்சையாக சந்திக்க நேரிடும் போது, ஆண்கள் தன் சக ஆண் நண்பனிடம் முன்பு நட்பு நெருக்கதிலிருந்த காலத்தில் பழகியது போல் ஒரளவுக்காவது பேசி பழகிக்கொள்ள முடியும். ஆனால், பெண் நட்பினை அவ்வாறு சந்திக்கும் தருணங்களில் பெரும்பாலும் அப்பெண்கள் திருமணமாகி, கணவன் - குழந்தை என குடும்ப பெண்ணாகியிருப்பர், அப்போதும் அவரிடம் அதே நட்போடு பேச முடியுமா? சந்திப்பில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்னென்ன பேசலாம், எவற்றை பேசாமல் தவிர்ப்பது நல்லது என்பதை பற்றி என் கருத்துக்கள்...

*.எவ்வளவுதான் கலகலப்பாக பேசிப்பழகும் பெண்ணாக இருந்தாலும், திருமணத்திற்கு பின் பெண்கள் தங்களுக்கென்று ஒரு வரைமுறையை நட்பு வட்டாரத்தில் வைத்திருப்பர். அது அவரது குடும்ப சூழ்நிலை, மற்றும் அவளது கணவரின் இயல்பை பொறுத்து அமையும். இந்த புது கோட்பாட்டுடன் இருக்கும் உங்கள் தோழியின் நிலையை உணராமல், முன்பு பேசிப்பழகிய அதே குறும்பு கேலிகளுடன் பேச முனைவது நல்லதல்ல.
அதிலும் முக்கியமாக அவரது கணவரின் தன்மை தெரியாமல் அவருக்கு முன்பாகவே கல்லூரி கலாட்டாக்களை பேசி உங்கள் தோழியை வம்பில் மாட்டி விடாதிருங்கள்.

*.உங்கள் தோழிக்கு குழந்தைகள் இருப்பின், அவர்களைப் பற்றிய வாலுதனம்,குறும்புகள் போன்ற விசாரிப்புகளில் உரையாடலை வளர்க்கலாம்.

*.அவரது கணவரையும் உரையாடலில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தன் கணவனிடம் தன் நண்பன் அதிகம் பேசவேண்டும் என பெரும்பாலான பெண்கள் விரும்புவர்.

*.தோழியின் கணவர் உங்களிடம் எத்தனைதான் சகஜமாக பேசினாலும், உங்கள் நட்பு காலத்து கல்லூரி லூட்டிகள், வகுப்பில் ஒவ்வொருத்தருக்கும் வைத்த 'புனை' பெயர்கள், வகுப்பில் சக மாணவர்களின் காதல் கதைகள் பற்றி விபரம் அள்ளித் தெளிக்காதீர்கள்.

*.கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு ," இவளை கட்டிகிட்டு, வசமா இவ கிட்ட மாட்டிக்கிட்டீங்க" என்று தோழியின் கணவரிடம் போட்டு கொடுக்காதீர்கள்.

*.அதே சமயம், உங்கள் தோழியின் அருமை பெருமைகளையும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்து தள்ளி அவரது கணவருக்கு புகைச்சல் உண்டு பண்ணிடாதீங்க.

*.நட்பில் தொடர்பு விட்டுப்போன இடைப்பட்டக் காலத்தில் எப்படி எல்லாம் 'மிஸ்' பண்ணினீங்க உங்கள் தோழியை என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

*.நீண்ட நாட்கள் கழித்து சந்தித்தபின் அவளின் தொலைபேசி எண் கிடைத்தாலும் கூட, அவளே கூப்பிட்டால் ஒழிய நீங்களாக ஃபோன் செய்யாமல் இருப்பது சால சிறந்தது.

*.மின்னஞ்சல் தொடர்பை தொடர்ந்தாலும், ஃபார்மலாக அனுப்புவதே நலம். ஏனெனில் மனைவிகளின் பாஸ்வார்டுகள் அவர்களின் கணவன்மார்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்புண்டு.ஸோ, இ-மெயிலில் பாசமழை பொழிந்து குடும்பத்தில் குழப்பம் செய்ய வேண்டாமே!!

*. உங்கள் தோழியின் மணவாழ்வில் விரிசல் இருப்பின், அதை உங்களிடம் தனிமையில் அவர் தெரிவித்தால், ஆலோசனை கூறுங்கள், எந்த உதவி செய்வதாயினும் அவரது கணவரின் கவனத்திற்கு கொண்டு வருவது சிறந்தது.
அவரது கணவன் மேல் தவறு இருப்பினும் , அதை மிகைப்படுத்தி பேசாமல், பொதுவான குடும்ப நண்பர்கள் மூலம் பிரச்சனையை தீர்க்க முயலுங்கள்.
உங்கள் பங்களிப்பை தனித்து செய்வது பாராட்டுக்குரியது அல்ல.

\பதிவிற்கு ஆலோசனையும், ஊக்கமுமளித்து உதவிய நண்பர் 'வினையூக்கி' செல்வாவிற்கு மனமார்ந்த நன்றி!/

56 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா திவ்யா
திரும்பவும் அட்வைஸ் மழை பொழிய தொடங்கியாச்சா..??? :)))))

ஜொள்ளுப்பாண்டி said...

//கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு ," இவளை கட்டிகிட்டு, வசமா இவ கிட்ட மாட்டிக்கிட்டீங்க" என்று தோழியின் கணவரிடம் போட்டு கொடுக்காதீர்கள்.//

ஹிஹிஹிஹி பலபேரு இந்த தப்பை பண்ணுறாங்ககங்கோ.... ஆனா சொல்லற விதத்தில் சொன்னா ஒண்ணும் தப்பா தோணாதுங்கோ....:))))

ஜொள்ளுப்பாண்டி said...

//அதை மிகைப்படுத்தி பேசாமல், பொதுவான குடும்ப நண்பர்கள் மூலம் பிரச்சனையை தீர்க்க முயலுங்கள்.
உங்கள் பங்களிப்பை தனித்து செய்வது பாராட்டுக்குரியது அல்ல.//

இது தான் திவ்யா டச் ! ஏம்மா திவ்யா பேசாமா ஒரு couselling center ஆரம்பிச்சுடலாமே...??
'கே கொள்ளே ' ன்னு கும்பல் வரும்ல..?? என்ன சொல்லுறீய..??

நல்ல அட்வைஸுங்கம்மணி... கலக்குங்க... :))))

Dreamzz said...

nalla pathivu :)

gils said...

pinreenga divs...neenga thara tipsellam tops :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

Every Relationship comes with an expiry date!

மனிதர்களை மட்டுமல்ல புரிந்துகொள்ளவேண்டியது உறவுகளையும் தான் இல்லையா திவ்யா :))

ஜி said...

:))))

Prabakar said...

vara vara divya u become Scholar in Psychology ,

Really good advice

வினையூக்கி said...

:)

பாச மலர் / Paasa Malar said...

வாழ்க்கையின் பல கோணங்களையும் நன்றாகச் சிந்தித்துப் பல டிப்ஸும் கொடுக்குறீங்க திவ்யா...இந்தச் சின்ன வயசுல இது ரொம்பப் பெரிய விஷயம்..வாழ்த்துகள்..

கருப்பன் (A) Sundar said...

இவை அனைத்தும் நான் ஏற்கனவே கடைபிடிக்கும் விஷையங்கள் தான்! நாங்கள்லாம் Man of principle-லாக்கும் :-)

என் நன்பன் ஒருவன் தான் வசிக்கும் நாட்டிலேயே தனது கல்லூரி தோழியும் வசிப்பது அறிந்து, தொலை பேசியில் பேசினான். அவளது கணவர் நேரடியாக அந்த தோழியிடம் "பசங்கள்லாம் ஃபோன் பண்ணா, பண்ண வேண்டாம்னு சொல்லிரு" என்று கூறிவிட்டாராம். என் நன்பன் ரெம்ப embarrassed-ஆக ஃபீல் பண்ணினான். எனக்கென்னவே அவர் மனதுக்குள் வைத்துக்கொண்டு புகையாமல், நேரடியாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தியது நல்ல விஷயமாகத்தான் தோன்றியது!!

கருப்பன் (A) Sundar said...

//
*.மின்னஞ்சல் தொடர்பை தொடர்ந்தாலும், ஃபார்மலாக அனுப்புவதே நலம். ஏனெனில் மனைவிகளின் பாஸ்வார்டுகள் அவர்களின் கணவன்மார்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்புண்டு.ஸோ, இ-மெயிலில் பாசமழை பொழிந்து குடும்பத்தில் குழப்பம் செய்ய வேண்டாமே!!
//
ஏற்கனவே பொழிந்த பாச மழை எஸ்டீடியில் (எஸ்டீடினா வரலாறு தான மாப்புள!!) இருக்குமே. அதனால் பெண்களே கல்யாணத்துக்கு முன் ஒரு இ-மெயில் ஐடி உருவாக்கிக்கொள்ளுங்கள் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்!!

குசும்பன் said...

புத்தகங்களில் வரும் ஆலோசனை பகுதிக்கு உங்களை பதில் சொல்ல அழைக்களாம் போல இருகிறதே!!!

ஆமாம் எப்படி இப்படி பொருப்பா எல்லாம் எழுத முடியுது:))

கோபிநாத் said...

ஆகா...ஒருகதை அப்புறம் ஒரு அட்வைஸ்ன்னு பதிவுகள் போட்டு கலக்குறிங்க..;))

\\*.மின்னஞ்சல் தொடர்பை தொடர்ந்தாலும், ஃபார்மலாக அனுப்புவதே நலம். ஏனெனில் மனைவிகளின் பாஸ்வார்டுகள் அவர்களின் கணவன்மார்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்புண்டு.ஸோ, இ-மெயிலில் பாசமழை பொழிந்து குடும்பத்தில் குழப்பம் செய்ய வேண்டாமே!!\\

ஆகா...ரொம்ப யோசிச்சிருக்கிங்க போல..நீங்க சொல்லும் கருத்து மிக சரி ;)

Anonymous said...

Very very useful post divya...

kavitha

எழில்பாரதி said...

மிகவும் அருமையான பதிவு திவ்யா!!!!

எப்போதும் போல் சூப்பர்!!!!

Nimal said...

:)))

சூப்பர்...!!!

கப்பி | Kappi said...

:)))

//
ஆமாம் எப்படி இப்படி பொருப்பா எல்லாம் எழுத முடியுது:))//

அதானே..எப்படி இப்படி? :))

Arunkumar said...

//
ஆகா...ஒருகதை அப்புறம் ஒரு அட்வைஸ்ன்னு பதிவுகள் போட்டு கலக்குறிங்க..;))
//

repeatu gopi-ke repeatu :))))

Arunkumar said...

//
அவரது கணவரையும் உரையாடலில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தன் கணவனிடம் தன் நண்பன் அதிகம் பேசவேண்டும் என பெரும்பாலான பெண்கள் விரும்புவர்.
//
super.. very true.. ennoda sila friendsum andha maathiri thaan..

Arunkumar said...

//
கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு ," இவளை கட்டிகிட்டு, வசமா இவ கிட்ட மாட்டிக்கிட்டீங்க" என்று தோழியின் கணவரிடம் போட்டு கொடுக்காதீர்கள்.
//

kanavan maargale solraanga "ivala kattikittu.. mudiyala" nu :P

adhaanale namma onnum solla venaam :)

//
உங்கள் பங்களிப்பை தனித்து செய்வது பாராட்டுக்குரியது அல்ல.
//
nalla advice divya... kalakkureenga ponga

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
ஆஹா திவ்யா
திரும்பவும் அட்வைஸ் மழை பொழிய தொடங்கியாச்சா..??? :)))))\\

பாண்டியண்ணே...வாங்க , வாங்க!

உங்களுக்கு அட்வைஸ் கொடுக்கிற அளவுக்கு முன்னேறல்லின்னாலும்....ஏதொ எனக்கு தெரிந்ததை பதிவுல சொன்னேனுங்கண்ணா!!

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு ," இவளை கட்டிகிட்டு, வசமா இவ கிட்ட மாட்டிக்கிட்டீங்க" என்று தோழியின் கணவரிடம் போட்டு கொடுக்காதீர்கள்.//

ஹிஹிஹிஹி பலபேரு இந்த தப்பை பண்ணுறாங்ககங்கோ.... ஆனா சொல்லற விதத்தில் சொன்னா ஒண்ணும் தப்பா தோணாதுங்கோ....:))))\\

சொல்லற விதம் தெரியாமத்தானே சொதப்பிடுறாங்க, அதுக்கு சொல்லாமலே இருக்கிறது நல்லது இல்லிங்களாண்ணா??

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//அதை மிகைப்படுத்தி பேசாமல், பொதுவான குடும்ப நண்பர்கள் மூலம் பிரச்சனையை தீர்க்க முயலுங்கள்.
உங்கள் பங்களிப்பை தனித்து செய்வது பாராட்டுக்குரியது அல்ல.//

இது தான் திவ்யா டச் ! ஏம்மா திவ்யா பேசாமா ஒரு couselling center ஆரம்பிச்சுடலாமே...??
'கே கொள்ளே ' ன்னு கும்பல் வரும்ல..?? என்ன சொல்லுறீய..??

நல்ல அட்வைஸுங்கம்மணி... கலக்குங்க... :))))\\

பொட்டி தட்டுற வேலை போர் அடிச்சா கண்டிப்பா கவுன்ஸிலிங் செண்டர் ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!

Divya said...

\
Dreamzz said...
nalla pathivu :)\\

வாங்க ட்ரீம்ஸ்,
நன்றி வருகைக்கும் ,பாராட்டிற்கும்!

Divya said...

\\ gils said...
pinreenga divs...neenga thara tipsellam tops :)\\

ஹாய் கில்ஸ்,

ரொம்ப நன்றி.....நன்றி!!

Divya said...

\\ sathish said...
Every Relationship comes with an expiry date!

மனிதர்களை மட்டுமல்ல புரிந்துகொள்ளவேண்டியது உறவுகளையும் தான் இல்லையா திவ்யா :))\

அடடா......expiry date வேற இருக்கா, இது நல்ல பாயிண்டா இருக்குதே!!

ஆமாம் சதீஷ்........உறவுகளும் காலபோக்கில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தார்போல் மாறும்....அதனை புரிந்துக்கொண்டால் பிரச்சனை இல்லை.

Divya said...

\\ ஜி said...
:))))
\\

:(((

Divya said...

\\ Prabakar Samiyappan said...
vara vara divya u become Scholar in Psychology ,

Really good advice\\

உங்கள் தொடர் வருகைக்கும், தருகைக்கும் ரொம்ப நன்றி ப்ரபாஹர்!

Divya said...

\\ வினையூக்கி said...
:)
\\

நன்றி வினையூக்கி!

Divya said...

\\ பாச மலர் said...
வாழ்க்கையின் பல கோணங்களையும் நன்றாகச் சிந்தித்துப் பல டிப்ஸும் கொடுக்குறீங்க திவ்யா...இந்தச் சின்ன வயசுல இது ரொம்பப் பெரிய விஷயம்..வாழ்த்துகள்..\\

ஆஹா பாசமலர்......சின்ன வயசுன்னு சொல்லி என்னை சிலிர்க்க வைச்சுட்டீங்க!!

நன்றி உங்கள் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும்!

Divya said...

\\ கருப்பன்/Karuppan said...
இவை அனைத்தும் நான் ஏற்கனவே கடைபிடிக்கும் விஷையங்கள் தான்! நாங்கள்லாம் Man of principle-லாக்கும் :-)

என் நன்பன் ஒருவன் தான் வசிக்கும் நாட்டிலேயே தனது கல்லூரி தோழியும் வசிப்பது அறிந்து, தொலை பேசியில் பேசினான். அவளது கணவர் நேரடியாக அந்த தோழியிடம் "பசங்கள்லாம் ஃபோன் பண்ணா, பண்ண வேண்டாம்னு சொல்லிரு" என்று கூறிவிட்டாராம். என் நன்பன் ரெம்ப embarrassed-ஆக ஃபீல் பண்ணினான். எனக்கென்னவே அவர் மனதுக்குள் வைத்துக்கொண்டு புகையாமல், நேரடியாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தியது நல்ல விஷயமாகத்தான் தோன்றியது!!\\

வாங்க கருப்பன்,

வெளிப்படையாக தெரிவித்து விடுவது நல்லது!

விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

Divya said...

\\ குசும்பன் said...
புத்தகங்களில் வரும் ஆலோசனை பகுதிக்கு உங்களை பதில் சொல்ல அழைக்களாம் போல இருகிறதே!!!

ஆமாம் எப்படி இப்படி பொருப்பா எல்லாம் எழுத முடியுது:))\\

ஆஹா...குசும்பன், ஆலோசனை சொல்ற அளவுக்கெல்லாம் இன்னும் வளரலீங்க,

உங்கள் பாராட்டிற்கு நன்றி!

Divya said...

\\ கோபிநாத் said...
ஆகா...ஒருகதை அப்புறம் ஒரு அட்வைஸ்ன்னு பதிவுகள் போட்டு கலக்குறிங்க..;))\\

Methodology யை கரெக்ட்டா நோட் பண்றிங்க, உங்க அறிவே அறிவு!!

\\*.மின்னஞ்சல் தொடர்பை தொடர்ந்தாலும், ஃபார்மலாக அனுப்புவதே நலம். ஏனெனில் மனைவிகளின் பாஸ்வார்டுகள் அவர்களின் கணவன்மார்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்புண்டு.ஸோ, இ-மெயிலில் பாசமழை பொழிந்து குடும்பத்தில் குழப்பம் செய்ய வேண்டாமே!!\\

ஆகா...ரொம்ப யோசிச்சிருக்கிங்க போல..நீங்க சொல்லும் கருத்து மிக சரி ;)\

நன்றி கோபிநாத்!

Divya said...

\\ Anonymous said...
Very very useful post divya...

kavitha\\

Hi Kavitha,
Thanks for ur visit & comments !!

Divya said...

\\ எழில்பாரதி said...
மிகவும் அருமையான பதிவு திவ்யா!!!!

எப்போதும் போல் சூப்பர்!!!!\\

வாங்க எழில்பாரதி,

உற்சாகமளிக்கும் பின்னூட்டதிற்கு நன்றி!!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
:)))

சூப்பர்...!!!\\

நன்றி நிமல்...!!

Divya said...

\\ கப்பி பய said...
:)))

//
ஆமாம் எப்படி இப்படி பொருப்பா எல்லாம் எழுத முடியுது:))//

அதானே..எப்படி இப்படி? :))\\

அதெல்லாம் பரம இரகசியம் கப்பி :))

Divya said...

\\ Arunkumar said...
//
ஆகா...ஒருகதை அப்புறம் ஒரு அட்வைஸ்ன்னு பதிவுகள் போட்டு கலக்குறிங்க..;))
//

repeatu gopi-ke repeatu :))))\\

நல்லாத்தான் நோட் பண்றீங்க....

Divya said...

\\ Arunkumar said...
//
அவரது கணவரையும் உரையாடலில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தன் கணவனிடம் தன் நண்பன் அதிகம் பேசவேண்டும் என பெரும்பாலான பெண்கள் விரும்புவர்.
//
super.. very true.. ennoda sila friendsum andha maathiri thaan..\\

அனுபவசாலி நீங்க சொன்னா நிச்சயம் கரெக்ட்டா தான் இருக்கும்!!

Divya said...

\\ Arunkumar said...
//
கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு ," இவளை கட்டிகிட்டு, வசமா இவ கிட்ட மாட்டிக்கிட்டீங்க" என்று தோழியின் கணவரிடம் போட்டு கொடுக்காதீர்கள்.
//

kanavan maargale solraanga "ivala kattikittu.. mudiyala" nu :P

adhaanale namma onnum solla venaam :)

//
உங்கள் பங்களிப்பை தனித்து செய்வது பாராட்டுக்குரியது அல்ல.
//
nalla advice divya... kalakkureenga ponga\\

நன்றி அருண்குமார் !!

தினேஷ் said...

சால சிறந்த சிந்தனை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

Divya said...

\\ தினேஷ் said...
சால சிறந்த சிந்தனை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தினேஷ்!!

Aruna said...

Yet another useful post dhivya!

//sathish said...
Every Relationship comes with an expiry date!//

Is that so Sathish?
anbudan aruna

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//Yet another useful post dhivya!

//sathish said...
Every Relationship comes with an expiry date!//

Is that so Sathish?
anbudan aruna//

அப்டிதாங்க அருணா சொல்லிக்கிறாங்க!

இது நான் சொன்னது இல்லீங்கோ எங்கயோ இருந்து சுட்டது :)))

எஸ்.ஆர்.மைந்தன். said...

good

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வகுப்பில் ஒவ்வொருத்தருக்கும் வைத்த 'புனை' பெயர்கள்,.....
பற்றி விபரம் அள்ளித் தெளிக்காதீர்கள்//

அப்படியே பழைய ஆர்க்குட் ஸ்கிராப்பை எல்லாம் என்ன பண்ணனும்னு சொன்னீங்கனாப் புண்ணியாமாப் போவும் திவ்யா! :-)))

//சொல்லற விதம் தெரியாமத்தானே சொதப்பிடுறாங்க, அதுக்கு சொல்லாமலே இருக்கிறது நல்லது இல்லிங்களாண்ணா??//

நச்-சோ நச்! :-))
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல்-அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து!

இதே குறளை "சொல்"-லை நீக்கி விட்டு, மக்கள்ஸ் "ஜொள்"-ளைப் பயன்படுத்துவது தனிக் கதை! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Every Relationship comes with an expiry date!//

Every Relationship comes with Effectiveness too!
The effectiveness of medicine stays even just before expiry! :-)

Nothing Stays!
Everything Transforms!!
திவ்யா டிப்ஸ் கொடுத்தா நாங்க தத்ஸ் கொடுப்போம்-ல?

Divya said...

\\ இரா.ஜெயபிரகாஷ் said...
good\\

Thanks Jeyaprakash!!

Divya said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வகுப்பில் ஒவ்வொருத்தருக்கும் வைத்த 'புனை' பெயர்கள்,.....
பற்றி விபரம் அள்ளித் தெளிக்காதீர்கள்//

அப்படியே பழைய ஆர்க்குட் ஸ்கிராப்பை எல்லாம் என்ன பண்ணனும்னு சொன்னீங்கனாப் புண்ணியாமாப் போவும் திவ்யா! :-)))\\

Orkut is a public forum.....எதற்கு அதில் 'ஜொள்ளூ' விடுவானேன்...பின் அதை எப்படி டெலிட் பண்ணுவது என்று முழிப்பானேன்!!!

//சொல்லற விதம் தெரியாமத்தானே சொதப்பிடுறாங்க, அதுக்கு சொல்லாமலே இருக்கிறது நல்லது இல்லிங்களாண்ணா??//

நச்-சோ நச்! :-))
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல்-அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து!

இதே குறளை "சொல்"-லை நீக்கி விட்டு, மக்கள்ஸ் "ஜொள்"-ளைப் பயன்படுத்துவது தனிக் கதை! :-)\\

தனிக்கதையா???......நீங்க சொன்ன சரிதானுங்க ரவி!!

Divya said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//Every Relationship comes with an expiry date!//

Every Relationship comes with Effectiveness too!
The effectiveness of medicine stays even just before expiry! :-)

Nothing Stays!
Everything Transforms!!
திவ்யா டிப்ஸ் கொடுத்தா நாங்க தத்ஸ் கொடுப்போம்-ல?
\

தத்ஸ் நல்லாயிருக்குதுங்க ரவி!!

KARTHIK said...

நல்லாருக்கு
தொடர்கதை,அறிவுரைனு விதவிதமா கலகரிங்க
எப்படித்தான் இத்தன பதிவு எழுதுறீங்களோ போங்க.
தொடர்ந்து எழுதுங்க.

நிவிஷா..... said...

excellent divyakka,
chumma athiruthu kuripugal ellam:)

natpodu
Nivisha

High Power Rocketry said...

: )

Subramanian Ramachandran said...

aaha mothathula friend ah irunthalum, avalukku kalyanam aachu na..kandukkama irunga nu solla vareenga :), ithai straight ah ve solla vendiyathu thaane :)

Anonymous said...

இவ்ளோ டிப்ஸ் பசங்க பாலௌ பண்றதுக்கு பொண்ணுங்க 2 டிப்ஸ் பாலௌ பண்ணலாமே
1 . உங்க மேல முழு நம்பிக்கை ஏற்படுத்துங்க
2 . 1000 நண்பர்கள் இருந்தாலும் கணவர் தனினு' ம் அவருக்கு தான் முதல் உரிமைன்னு'ம் புரியவைங்க

அப்புறம் அவரே உங்க நண்பரை கவனிட்சுப்பார்