February 26, 2008

நிலவே என்னிடம் நெருங்காதே....!

காதலை சொல்வதை விட ,நம்மிடம் வெளிப்படுத்தப்பட்ட காதலை ஏற்க முடியாத நிலையை, காதலை வெளிபடுத்திய நபரிடம் அவரது மனம் புண்படாமல் எடுத்துரைப்புது மிகவும் கஷ்டம்

பெரும்பாலும் பெண்கள் தங்களிடம் காதலை வெளிபடுத்தும் ஆணிடம் தனக்கு காதல் இல்லையெனில், நேரடியாக தங்கள் எண்ணத்தை, முடிவை தெரிவித்து விடுவார்கள். பயமும், வெறுப்பும் கலந்த அந்த உணர்வை ஆணிடம் சற்று கடுமையாக கூட வெளிப்படுத்த பெண்கள் தயங்குவதில்லை.

தனக்கு வந்த லவ் லெட்டரை ஸ்கூல் பிரின்சிபலிடம் கொடுத்து பையனை மாட்டி விட்டு அவமான படுத்துவது, ஆபிஸ்ல மேலதிகாரி கிட்ட போய் தன்னிடம் propose செய்த பையன போட்டு கொடுக்கிறது. இப்படி பல immatured செயல்கள் எல்லாம் பெண்கள் கோபத்தில் செய்வது, பயத்தினால் அந்த காதலை உதறி தள்ளும் வழி தெரியாமல் செய்வதாகும்.

ஆண்கள் அனைவரும் காதலுக்காக ஏங்குவது போலவும், கையில் ரோஜாபூவுடன் ஜொள்ளு விட்டுகொண்டு திரிவதாகவும், "காதலில் உருகி மருகி" கவிதைகள் எழுதுவது போல் தோன்றினாலும், தற்காலத்தில், பெண்களிடம் நட்புடன் பழகும் ஆண்கள் எத்தனையோ பேர் தங்களிடம் ஒரு பெண் வெளிப்படுத்தும் காதலை எப்படி மறுப்பது, தன் மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை என்பதை அப்பெண்ணின் மனம் வருந்தாமல், நட்பு உடையாமல் எப்படி உணர்த்துவது என தெரியாமல் தவிப்பது நிஜம்.

காதலை வெளிபடுத்த தயங்கும் பெண்ணே தன் மனதின் ஆசையை வெளிபடுத்தி, அதனை ஒரு ஆண் ஏற்காமல் மறுப்பதைவிட, அவள் அந்த எண்ணத்துடன் இருக்கிறாள் என முன்னமே சரியாக யூகித்தால், அந்த ஆணுக்கும் அந்த பெண்ணின் மீது துளி கூட காதல் இல்லை எனும் பட்சத்தில் பெண்ணின் மனதில் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் வளர்க்கும் வண்ணம் நட்பை கொண்டு செல்லாமல் நாசூக்காக நட்பிற்கும் பெண்ணின் மனதிற்கும் சேதமில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.

பெண்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது, எனினும், பெண் ஆனவள் தன்னிடம் நன்கு பேசி பழகிய, தெரிந்த ஆணிடம் மட்டுமே தன் காதலை வெளிபடுத்துவாள், அதுவும் அவன் வேறு எந்த பெண்ணிடமும் காதல் வயபடவில்லை எனும் பட்சத்தில் மட்டுமே.

அதனால்,
* உங்கள் தோழி உங்கள் மேல் காதல் கொண்டு இருக்கிறாள் என நீங்கள் உணர்ந்தால் மெல்ல மெல்ல நட்பை குறைத்து கொள்ளுங்கள்.
தனிமை நேரங்களை தவிர்ப்பது நல்லது!

*நீங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து கொண்டுஇருந்தால், இந்த தோழியிடம் இலை மறை காயாகவாவது அதனை உணர்த்துங்கள். அதன் பின் நிச்சயம் உங்கள் மீது கற்பனை வளர்த்து கொள்ள மாட்டாள் அந்த பெண்

* சமீபத்தில் முறிந்துபோன காதலில் இருந்து வெளிவந்து இருக்கும் தோழியிடம் அதிக அக்கறையும், கரிசனமும் எடுத்து கொள்ளும் போது, எச்சரிக்கை தேவை.
ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று "over" பாச மழை பொழிந்தால், அந்த அரவணைப்பும், அன்பும் வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அப்பெண் நினைப்பதில் ஆச்சர்யமில்லை.

*வெளிப்படையாக பேசிப் பழகும் பெண், தன் காதலையும் வெளிப்படையாக பெரும்பாலும் வெளிப்படுத்துவாள், ஆனால் அமைதியான பெண்கள் தங்கள் காதலை தான் விரும்பும் ஆண் தன் செய்கைகளினால் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்பாள், உணர்ந்து கொள்ளவில்லையெனில், பொதுவான நண்பர்கள் மூலம் தன் விருப்பத்தை அவனுக்கு வெளிப்படுத்தலாம்,
அங்கனம் ஒரு பெண் தன் காதலை ஒரு பொது நபர் மூலமாகவோ, தன் தோழியின் மூலமாகவோ உங்களிடம் தெரிவித்தால், நீங்கள் அந்த காதலை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், நேரிடையாக அப்பெண்ணிடம் புரிந்துக்கொள்ளும் விதத்தில் உங்கள் கருத்தை, முடிவை தெரிவிப்பது நல்லது.
உங்கள் மறுப்பை பொது நபர் மூலம் தெரிவிப்பது, அப்பெண்ணின் உணர்வுகளை பாதிக்கும், சங்கோஜப்படுத்தும்.

* உங்களிடம் ஒரு பெண் தன் காதலை வெளிப்படுத்தி , நீங்கள் அதனை நிராகரித்த பின், அந்த பெண்ணைப்பற்றியோ, அவள் வெளிப்படுத்திய காதலை பற்றியோ, உங்கள் முடிவினைப் பற்றியோ, மற்ற நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்ல, அது ஆபத்தானதும் கூட!

*எந்த வித அறிகுறிகளும் நீங்கள் உணர்ந்து கொள்ளும் முன்பே, உங்களிடம் ஒரு பெண் தன் காதலை வெளிபடுத்தினால், தெளிவாக தயக்கமில்லாமல் உங்கள் கருத்துகளையும் மறுப்பையும் கூறி விடுங்கள்.

பெண் வடிக்கும் கண்ணீரும், தோய்ந்து போன முக வாட்டமும் உங்களை கலங்கடிக்கும். ஆனால் அப்பெண் தன் மனதை வெளிகாட்டிய பின்பும் உங்கள் எண்ணத்தை ,முடிவை தெரிவிக்காவிட்டால், பின்னால் சிக்கலாகி போகும்.

70 comments:

said...

திவ்யா ரொம்ப நல்ல பதிவு......

வாழ்த்துகள்!!!!

said...

திவ்யா...,

உங்களின் டிப்ஸ்களில் இது இன்னொரு முத்து...!!!

பயனுள்ள, அதேவேளை சிக்கலான விடையங்களையும் சாமான்யமாக சொல்வதுதான் திவ்யா ஸ்டைல்...!

வாழ்த்துக்களுடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

said...

நல்ல பதிவு!
//"காதலில் உருகி மருகி" கவிதைகள் எழுதுவது போல் தோன்றினாலும்,//
இதுல கவிதை எழுதும் பசங்களை பத்தி உள்குத்து ஏதும் இருக்கோ?

said...

//அப்பெண்ணின் மனம் வருந்தாமல், நட்பு உடையாமல் எப்படி உணர்த்துவது என தெரியாமல் தவிப்பது நிஜம்//

//உங்கள் தோழி உங்கள் மேல் காதல் கொண்டு இருக்கிறாள் என நீங்கள் உணர்ந்தால் மெல்ல மெல்ல நட்பை குறைத்து கொள்ளுங்கள்.//

முரண்பாடாக உள்ளது மாஸ்டர்... என்ன சொல்ல வறீங்க?

said...

//உங்கள் தோழி உங்கள் மேல் காதல் கொண்டு இருக்கிறாள் என நீங்கள் உணர்ந்தால் மெல்ல மெல்ல நட்பை குறைத்து கொள்ளுங்கள்.//

'அருகாமையை' என்று சொல்ல வந்தீர்களா!

நட்பை குறைத்துகொள்ள முயல்வது இன்னும் மனதளவில் பாதிக்கும்!

said...

//சமீபத்தில் முறிந்துபோன காதலில் இருந்து வெளிவந்து இருக்கும் தோழியிடம் அதிக அக்கறையும், கரிசனமும் எடுத்து கொள்ளும் போது, எச்சரிக்கை தேவை.
ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று "over" பாச மழை பொழிந்தால், அந்த அரவணைப்பும், அன்பும் வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அப்பெண் நினைப்பதில் ஆச்சர்யமில்லை. //

முறிந்து போன காதல் பெரும்பாலும் அனுபவங்களை தருகின்றன அதை முழுவதும் உணர்ந்த (matured) பேண் ஆறுதலை எதிர்பார்க்க மாட்டாள்.

said...

//பெண் ஆனவள் தன்னிடம் நன்கு பேசி பழகிய, தெரிந்த ஆணிடம் மட்டுமே தன் காதலை வெளிபடுத்துவாள்
//

ஆனா உங்க கதாநாயகிகள் இந்த group'அ சேந்தமாதிரி தெரியலயே திவ்யா:))

said...

Divya,

Great Tips for all Youngsters.
Nice article written in good style.

Ennoda Veettu Ammani intha pathivaa paarthittu ungalukku
"Divya PHD in Youngsters Psychology and well-being" Appadinnu pattam kodukka recommend pannanga.

C.N.Raj.

said...

:) :)
நிறைய பெண்கள் மேலிடத்திலோ, பிரின்சி, HOD யிடமோ போட்டுக்கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் சொல்லாமலேயே விடப்பட்டக் காதல்கள் நிறையவே இருக்கும்.

சுவாரசியமான பார்வை.

said...

அம்மணி என்ன
இந்த தடவை பசங்கமேல கரிசனத்தோட ஒரு கட்டுரை..:)))))

டாக்டர் திவ்யா வாழ்க !!! (இந்தப் பட்டம் University of Jollaby ல இருந்து கொடுத்து இருக்கோம் சரியா..? ஜொள்ளுபேட்டைக்கு வந்து வாங்கிக்கோங்க .. )

said...

Nice post, very interesting and useful. Keep going..

said...

Nice post divyakka:)

Natpodu,
Nivisha.

said...

!!echueseme ello lady...epdinga ipdi oru topica pduciheenga...as i said before..sila topiclaam ponnungalala matum thaan ezhutha (nalla) mudiyumngarathu en opinion..this is one such topic..romba nalla yosichi writirukeenga..great points..epovum gals solra mathiri podama konjam pasanga sidelayum yosichi poatathuku spl paratukal

said...

எம்மம்மா ஆச்சு பசங்களை தாக்காம ஒரு பதிவு? ம்ம்ம்ம் நல்லது :)

said...

:)))))

Points Noted...

said...

நல்ல பதிவு!!!

வாழ்க திவ்யா ;)

said...

வித விதமா டிப்ஸ் கொடுக்கும் திவ்யாகிட்டருந்து இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..நல்லாத் தெளிவா யோசிக்கிறீங்க..

said...

Divya..

Good Research. Very interesting .. Keep posting

said...

//ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று "over" பாச மழை பொழிந்தால், அந்த அரவணைப்பும், அன்பும் வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அப்பெண் நினைப்பதில் ஆச்சர்யமில்லை. //

//உங்கள் மறுப்பை பொது நபர் மூலம் தெரிவிப்பது, அப்பெண்ணின் உணர்வுகளை பாதிக்கும், சங்கோஜப்படுத்தும்.//

புரிதலை ஏற்ப்படுத்தக்கூடிய நல்ல பதிவு..

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

said...

dei note pannungada note pannungada :)

said...

\\ எழில் said...
திவ்யா ரொம்ப நல்ல பதிவு......

வாழ்த்துகள்!!!!\\

வாங்க எழில்,
வாழ்த்துக்களுக்கு நன்றி!!

said...

\\ நிமல்/NiMaL said...
திவ்யா...,

உங்களின் டிப்ஸ்களில் இது இன்னொரு முத்து...!!!

பயனுள்ள, அதேவேளை சிக்கலான விடையங்களையும் சாமான்யமாக சொல்வதுதான் திவ்யா ஸ்டைல்...!

வாழ்த்துக்களுடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\\

திவ்யா ஸ்டைல்ன்னு சொல்லி மெய்சிலிர்ர்க்க வைச்சுட்டீங்க நிமல், நன்றி, நன்றி!!!

said...

\\ Dreamzz said...
நல்ல பதிவு!
//"காதலில் உருகி மருகி" கவிதைகள் எழுதுவது போல் தோன்றினாலும்,//
இதுல கவிதை எழுதும் பசங்களை பத்தி உள்குத்து ஏதும் இருக்கோ?\\

பாராட்டிற்கு நன்றி Dreamzz,

[உள்குத்து எல்லாம் பழக்கமில்லீங்க, டைரக்ட் வெளிக்குத்து தான்!!]

said...

\\ Dreamzz said...
//அப்பெண்ணின் மனம் வருந்தாமல், நட்பு உடையாமல் எப்படி உணர்த்துவது என தெரியாமல் தவிப்பது நிஜம்//

//உங்கள் தோழி உங்கள் மேல் காதல் கொண்டு இருக்கிறாள் என நீங்கள் உணர்ந்தால் மெல்ல மெல்ல நட்பை குறைத்து கொள்ளுங்கள்.//

முரண்பாடாக உள்ளது மாஸ்டர்... என்ன சொல்ல வறீங்க?\\

நட்பின் ஆளத்தை மெதுவாக குறைத்துக்கொண்டால், பாதகங்களை தவிர்க்கலாம்.

said...

\\ sathish said...
//உங்கள் தோழி உங்கள் மேல் காதல் கொண்டு இருக்கிறாள் என நீங்கள் உணர்ந்தால் மெல்ல மெல்ல நட்பை குறைத்து கொள்ளுங்கள்.//

'அருகாமையை' என்று சொல்ல வந்தீர்களா!

நட்பை குறைத்துகொள்ள முயல்வது இன்னும் மனதளவில் பாதிக்கும்!\

நட்பின் அருகாமையை என்பதை தான் சொல்ல வந்தேன் அங்கே! நன்றி சதீஷ்!!

நெடுநாளான நட்பை முழுவதுமாக திடீரென முறிப்பது , இன்னும் அதிகம் பாதிக்கும்!

said...

\\ sathish said...
//சமீபத்தில் முறிந்துபோன காதலில் இருந்து வெளிவந்து இருக்கும் தோழியிடம் அதிக அக்கறையும், கரிசனமும் எடுத்து கொள்ளும் போது, எச்சரிக்கை தேவை.
ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று "over" பாச மழை பொழிந்தால், அந்த அரவணைப்பும், அன்பும் வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அப்பெண் நினைப்பதில் ஆச்சர்யமில்லை. //

முறிந்து போன காதல் பெரும்பாலும் அனுபவங்களை தருகின்றன அதை முழுவதும் உணர்ந்த (matured) பேண் ஆறுதலை எதிர்பார்க்க மாட்டாள்.\

Second love is always possible Sathish.......that too for a broken heart its very ez to fall sometimes!!

said...

\\ sathish said...
//பெண் ஆனவள் தன்னிடம் நன்கு பேசி பழகிய, தெரிந்த ஆணிடம் மட்டுமே தன் காதலை வெளிபடுத்துவாள்
//

ஆனா உங்க கதாநாயகிகள் இந்த group'அ சேந்தமாதிரி தெரியலயே திவ்யா:))\\

alo Sathish,
கதையில் வரும் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனை பாத்திரங்கள் மட்டுமே......அதையெல்லாம் இங்கே வம்பிழுக்கபிடாது!

said...

\\ C.N.Raj said...
Divya,

Great Tips for all Youngsters.
Nice article written in good style.

Ennoda Veettu Ammani intha pathivaa paarthittu ungalukku
"Divya PHD in Youngsters Psychology and well-being" Appadinnu pattam kodukka recommend pannanga.

C.N.Raj\

அஹா.....ராஜ் எனக்கு PHD கொடுத்த உங்க வீட்டம்மணிக்கு ஒரு பெரிய தாங்க்ஸ் சொல்லிடுங்க!

said...

\\ வினையூக்கி said...
:) :)
நிறைய பெண்கள் மேலிடத்திலோ, பிரின்சி, HOD யிடமோ போட்டுக்கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் சொல்லாமலேயே விடப்பட்டக் காதல்கள் நிறையவே இருக்கும்.

சுவாரசியமான பார்வை.\

ஆமாம் வினை,
பயத்தில் சொல்லாமலே விடப்பட்ட காதல் கல்லூரி, பள்ளி காலங்களில் அதிகம்!!

பின்னூட்டத்திர்க்கு நன்றி!

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
அம்மணி என்ன
இந்த தடவை பசங்கமேல கரிசனத்தோட ஒரு கட்டுரை..:)))))

டாக்டர் திவ்யா வாழ்க !!! (இந்தப் பட்டம் University of Jollaby ல இருந்து கொடுத்து இருக்கோம் சரியா..? ஜொள்ளுபேட்டைக்கு வந்து வாங்கிக்கோங்க .. )\

வாங்க பாண்டியண்ணே,
நீங்களூம் பட்டமெல்லாம் கொடுத்து அசத்திப்புட்டீக....நன்றிங்கண்ணா!

பட்டமளிப்பு விழாவுக்கு என்னோட கட்-அவுட்டெல்ல்லாம் வைச்சு பிரமாண்டமா ஏற்பாடு பண்ணிட்டு தகவல் அனுப்புங்கண்ணா...நிச்சயம் வந்து பட்டம் வாங்கிக்கிறேன்!!

said...

\ Sunny said...
Nice post, very interesting and useful. Keep going..\

ரொம்ப ரொம்ப நன்றி Sunny!!

said...

\\ நிவிஷா..... said...
Nice post divyakka:)

Natpodu,
Nivisha.\\

வாம்மா தங்கச்சி, நன்றி!!

said...

\\ gils said...
!!echueseme ello lady...epdinga ipdi oru topica pduciheenga...as i said before..sila topiclaam ponnungalala matum thaan ezhutha (nalla) mudiyumngarathu en opinion..this is one such topic..romba nalla yosichi writirukeenga..great points..epovum gals solra mathiri podama konjam pasanga sidelayum yosichi poatathuku spl paratukal\\

நன்றி நன்றி......கில்ஸ்!

விரிவான பின்னூட்டத்திற்கு ரொம்ப தாங்க்ஸ், ஆண்கள் பார்வையிலிருந்து பதிவு எழுதினாதான் வரவேற்பெல்லாம் பலமா இருக்கு!!

said...

\ ஸ்ரீ said...
எம்மம்மா ஆச்சு பசங்களை தாக்காம ஒரு பதிவு? ம்ம்ம்ம் நல்லது :)\

என்னங்க இது வம்பா போச்சு......நான் என்னங்க எப்பவும் பசங்களை தாக்கிதான் பதிவு போடுறேனா??
இப்படி சொல்லிப்புட்டீங்களே கவிஞரே!!

said...

\\ ஜி said...
:)))))

Points Noted...\\

பாயிண்ட்ஸ் நோட் பண்ணியாச்சா ஜி! தாங்கஸ்!

said...

\ கோபிநாத் said...
நல்ல பதிவு!!!

வாழ்க திவ்யா ;)\

நன்றி கோபி!!

said...

\ பாச மலர் said...
வித விதமா டிப்ஸ் கொடுக்கும் திவ்யாகிட்டருந்து இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..நல்லாத் தெளிவா யோசிக்கிறீங்க..\

வாங்க பாசமலர்!
ரொம்ப ரொம்ப நன்றிங்க!

said...

\\ Prabakar Samiyappan said...
Divya..

Good Research. Very interesting .. Keep posting\

தாங்க்ஸ் பிரபாகர்!

said...

\\ தினேஷ் said...
//ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று "over" பாச மழை பொழிந்தால், அந்த அரவணைப்பும், அன்பும் வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அப்பெண் நினைப்பதில் ஆச்சர்யமில்லை. //

//உங்கள் மறுப்பை பொது நபர் மூலம் தெரிவிப்பது, அப்பெண்ணின் உணர்வுகளை பாதிக்கும், சங்கோஜப்படுத்தும்.//

புரிதலை ஏற்ப்படுத்தக்கூடிய நல்ல பதிவு..

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\

புரிதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தினேஷ்!

said...

\ Arunkumar said...
dei note pannungada note pannungada :)\

ஹா ஹா!,அருண் நீங்க நோட் பண்ணினீங்களா ஃபர்ஸ்ட்??

said...

//காதலை சொல்வதை விட ,நம்மிடம் வெளிப்படுத்தப்பட்ட காதலை ஏற்க முடியாத நிலையை, காதலை வெளிபடுத்திய நபரிடம் அவரது மனம் புண்படாமல் எடுத்துரைப்புது மிகவும் கஷ்டம்//

வடிக்கட்டிய... (அட என்ன பாக்கறிங்க?.. உண்மைன்னு சொல்ல வந்தேன்..)

said...

// Dreamzz said...

நல்ல பதிவு!
//"காதலில் உருகி மருகி" கவிதைகள் எழுதுவது போல் தோன்றினாலும்,//
இதுல கவிதை எழுதும் பசங்களை பத்தி உள்குத்து ஏதும் இருக்கோ?//

ரீப்பீட்டேய்ய்ய்ய்...

said...

ரொம்ப அருமையான மனோதத்துவ ஆய்வு.. கலக்கலா அமைஞ்சிருக்குங்க திவ்யா மாஸ்டர்..:)
வாழ்த்துக்கள்.:)

said...

திவ்யா,

சிக்கலான விஷயத்தையும் தெளிவாக விளக்குகிறது உஙகள் பதிவு.

said...

divya..neenga seriousaa oru book ezudhalaam...enna rangela ellam yosichu ezudhi irukkeenga...great post...

kaadhal la aaraichi seyya neenga infact oru school onnu aaramicheenganna inimae kaadhalargaL theLivaa irukka udhavum...

kalakkunga neenga

tamil cinemaakku oru kadhir naa blog ulagakku oru divyaavo? :-)

said...

//ஆமாம் வினை,
பயத்தில் சொல்லாமலே விடப்பட்ட காதல் கல்லூரி, பள்ளி காலங்களில் அதிகம்!!//

Unmaithan!

:(

said...

\\ ரசிகன் said...
//காதலை சொல்வதை விட ,நம்மிடம் வெளிப்படுத்தப்பட்ட காதலை ஏற்க முடியாத நிலையை, காதலை வெளிபடுத்திய நபரிடம் அவரது மனம் புண்படாமல் எடுத்துரைப்புது மிகவும் கஷ்டம்//

வடிக்கட்டிய... (அட என்ன பாக்கறிங்க?.. உண்மைன்னு சொல்ல வந்தேன்..)\\

ரசிகன் அண்ணாச்சி.....வாங்க வாங்க,
உங்க சேஷ்டைக்கு அளவே இல்லாம போச்சு!

said...

\ ரசிகன் said...
ரொம்ப அருமையான மனோதத்துவ ஆய்வு.. கலக்கலா அமைஞ்சிருக்குங்க திவ்யா மாஸ்டர்..:)
வாழ்த்துக்கள்.:)\\

வாழ்த்துக்களுக்கு நன்றி 'மிஸ்டர்' ரசிகன்!!

said...

\\ Praveena Jacob said...
திவ்யா,

சிக்கலான விஷயத்தையும் தெளிவாக விளக்குகிறது உஙகள் பதிவு.\\

வாங்க ப்ரவீனா,

வருகைக்கும், அழகான தருகைக்கும் நன்றி!

said...

\\ Kittu said...
divya..neenga seriousaa oru book ezudhalaam...enna rangela ellam yosichu ezudhi irukkeenga...great post...\\\

கிட்டு மாமா, புக் எழுதுற அளவுக்கு எனக்கு திறமை இருக்கான்னு தெரிலீங்க!! பாராட்டிற்கு ரொம்ப தாங்க்ஸ்!

\kaadhal la aaraichi seyya neenga infact oru school onnu aaramicheenganna inimae kaadhalargaL theLivaa irukka udhavum...

kalakkunga neenga\\

அஹா கிட்டு மாமா.....புக் எழுதுன்றீங்க, 'காதல் பள்ளி' நடத்துன்றீங்க.......என்ன மாமா இதெல்லாம்??
காதலர்கள் தெளிவாயிருக்க கோச்சிங் க்ளாஸ் எடுக்கலாம்னு இருக்க்கிறேன் உங்க பின்னூட்டம் பார்த்த பிறகு!

\tamil cinemaakku oru kadhir naa blog ulagakku oru divyaavo? :-)\\

இது ரொம்ப ஒவர் புகழ்ச்சி கிட்டு மாமா, இருந்தாலும் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்!!!

said...

\ நாமக்கல் சிபி said...
//ஆமாம் வினை,
பயத்தில் சொல்லாமலே விடப்பட்ட காதல் கல்லூரி, பள்ளி காலங்களில் அதிகம்!!//

Unmaithan!

:(\\

உண்மைன்னு ஒத்துக்கிறதை பார்த்தா , அங்கன ஏதோ ஃபளாஷ் பேக் இருக்கும் போலிருக்குதே!!!

said...

//
பெண்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது, எனினும், பெண் ஆனவள் தன்னிடம் நன்கு பேசி பழகிய, தெரிந்த ஆணிடம் மட்டுமே தன் காதலை வெளிபடுத்துவாள், அதுவும் அவன் வேறு எந்த பெண்ணிடமும் காதல் வயபடவில்லை எனும் பட்சத்தில் மட்டுமே.
//
எனக்குத்தெரிந்து ஆண்களும் இதைப்போலத்தான்... ஆம்பளைங்க பாக்குற பொண்ணுக்கெல்லாம் "I Love You" சொல்லுறது நம்மூர் சினிமாவுல மட்டும் தான் திவ்யா ;-)

பதிவு ரெம்ப அட்டகாசமா இருக்கு. ஊருக்கு ஒரு திவ்யா வேணும்னு பிரம்மா கிட்ட கேக்கலாம்!

said...

Ypu presented the right happenings. Guys always hesitate to tell anything to the girl who proposed him and gals are just viceversa. But smetimes it depends on maturity too. Those who are amtured enuf will take it litr and tell immeditely. hmm gud post.. keep going

said...

//Divya said...
Second love is always possible Sathish.......that too for a broken heart its very ez to fall sometimes!!
//
I am not saying second love is not possible Divya!! But the happenings will give enough experience to a girl(maturity) that she should not repeat the same mistake again :)

இங்கே நான் தவறு என்று கூறுவது, புரியாமல் உணர்ச்சிவேகத்தில் காதலில் விழுவதை!!

said...

\\ கருப்பன்/Karuppan said...
//
பெண்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது, எனினும், பெண் ஆனவள் தன்னிடம் நன்கு பேசி பழகிய, தெரிந்த ஆணிடம் மட்டுமே தன் காதலை வெளிபடுத்துவாள், அதுவும் அவன் வேறு எந்த பெண்ணிடமும் காதல் வயபடவில்லை எனும் பட்சத்தில் மட்டுமே.
//
எனக்குத்தெரிந்து ஆண்களும் இதைப்போலத்தான்... ஆம்பளைங்க பாக்குற பொண்ணுக்கெல்லாம் "I Love You" சொல்லுறது நம்மூர் சினிமாவுல மட்டும் தான் திவ்யா ;-)

பதிவு ரெம்ப அட்டகாசமா இருக்கு. ஊருக்கு ஒரு திவ்யா வேணும்னு பிரம்மா கிட்ட கேக்கலாம்!\\

வாங்க மிஸ்டர்.கருப்பன்,

பிரம்மாவிடம் கோரிக்கை வைத்து, எனக்கு உவகை சேர்த்து விட்டீர்கள்!! மிக்க நன்றி.

said...

\\ Prabhu Aryan said...
Ypu presented the right happenings. Guys always hesitate to tell anything to the girl who proposed him and gals are just viceversa. But smetimes it depends on maturity too. Those who are amtured enuf will take it litr and tell immeditely. hmm gud post.. keep going\\

வருகைக்கு நன்றி பிரவு!!

said...

\\ sathish said...
//Divya said...
Second love is always possible Sathish.......that too for a broken heart its very ez to fall sometimes!!
//
I am not saying second love is not possible Divya!! But the happenings will give enough experience to a girl(maturity) that she should not repeat the same mistake again :)

இங்கே நான் தவறு என்று கூறுவது, புரியாமல் உணர்ச்சிவேகத்தில் காதலில் விழுவதை!!\\

ஹாய் சதீஷ்,

'புரியாமல்' உணர்ச்சியின் வேகத்தில், இரண்டாம் முறை மட்டுமல்ல......முதல் காதலிலும் அங்ஙனம் விழ வாய்ப்பிருக்கு !

அப்படி பார்த்தால், காதலில் விழுவதே ' உணர்ச்சிகளின்' அடிப்படையில்தான் என்றாகிவிடாதா??

said...

Pearl among your posts Divya, good one:))

said...

\\ Shwetha Robert said...
Pearl among your posts Divya, good one:))\\

Thanks a lot Swetha:)

said...

இந்த பதிவ நினைச்சா சிரிப்பு வருது.:-))

இந்த பதிவை சொஞ்ச நாளுக்க முன்னரே போட்டிருக்கலாம்.

எண்டாலும் ஓகே

said...

\\.P.Tharsan said...
இந்த பதிவ நினைச்சா சிரிப்பு வருது.:-))

இந்த பதிவை சொஞ்ச நாளுக்க முன்னரே போட்டிருக்கலாம்.

எண்டாலும் ஓகே\\

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி u.P.Tharsan !!!!

said...

A good post,difficult task for guys....... you have handled it wisely:)

said...

முத்தான பதிவு திவ்யா,

சிக்கலான ஒரு விஷயத்தை இத்தனை சாதுரியமாக கையாண்டிருக்கிறீங்க, பாராட்டுக்கள் திவ்யா:)

Anonymous said...

Really very nice one........

//சமீபத்தில் முறிந்துபோன காதலில் இருந்து வெளிவந்து இருக்கும் தோழியிடம் அதிக அக்கறையும், கரிசனமும் எடுத்து கொள்ளும் போது, எச்சரிக்கை தேவை.
ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று "over" பாச மழை பொழிந்தால், அந்த அரவணைப்பும், அன்பும் வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அப்பெண் நினைப்பதில் ஆச்சர்யமில்லை. //

Itha mathiri Aruthal solla poi, Mattikitta...... That boy will face lots and lots of Problems...

You wrote this with out filtering any thought from mind... even though you are a Girl

Great ......:-)

A good post,difficult task for guys....... you have handled it wisely:)\\

நன்றி ஷ்வேதா:)

said...

\\ Naveen Kumar said...
முத்தான பதிவு திவ்யா,

சிக்கலான ஒரு விஷயத்தை இத்தனை சாதுரியமாக கையாண்டிருக்கிறீங்க, பாராட்டுக்கள் திவ்யா:)\\

பாராட்டிற்கு மிக்க நன்றி நவீன் குமார்:))

said...

\\ Anonymous said...
Really very nice one........

//சமீபத்தில் முறிந்துபோன காதலில் இருந்து வெளிவந்து இருக்கும் தோழியிடம் அதிக அக்கறையும், கரிசனமும் எடுத்து கொள்ளும் போது, எச்சரிக்கை தேவை.
ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று "over" பாச மழை பொழிந்தால், அந்த அரவணைப்பும், அன்பும் வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அப்பெண் நினைப்பதில் ஆச்சர்யமில்லை. //

Itha mathiri Aruthal solla poi, Mattikitta...... That boy will face lots and lots of Problems...

You wrote this with out filtering any thought from mind... even though you are a Girl

Great ......:-)\\

வாங்க அனானி,

உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கும் கருத்திற்கும் நன்றி!!

said...

சமீபத்தில் முறிந்துபோன காதலில் இருந்து வெளிவந்து இருக்கும் தோழியிடம் அதிக அக்கறையும், கரிசனமும் எடுத்து கொள்ளும் போது, எச்சரிக்கை தேவை.
ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று "over" பாச மழை பொழிந்தால், அந்த அரவணைப்பும், அன்பும் வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என அப்பெண் நினைப்பதில் ஆச்சர்யமில்லை. ////

Its 100% true !!!!!! :-)

said...

nice post... keep posting