November 30, 2006

கல்லூரி கலாட்டா - 1


கல்லூரியில் முதலாம் ஆண்டு, முதல் நாள், முதல் வகுப்பிற்கு செல்ல போகிறொம் என்று பயம் கலந்த கலக்கத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தனர் ரம்யா, பவானி, ஷீத்தல் மூவரும்.

மூவரும் பள்ளியிலிருந்தே ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். மூவருக்கும் ஒரே கல்லூரியில், ஒரே பாடப்பிரிவில் இடம் கிடைத்தது அவர்கள் அதிர்ஷடமே.

இவர்களை பற்றின இன்னுமொரு முக்கியமான விஷயம், எப்போதும் பார்க்க அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொள்ளும் இவர்கள் மூவரும் , உண்மையில் திமிரு பிடித்த லூட்டி அடிக்கும் வாலு பெண்கள்.

'முப்பெருந்தேவிகள்' , 'பவர் பஃப் கேர்ள்ஸ்'[கார்ட்டூன் கேரக்டர்ஸ்], ' மூன்று முடிச்சு' இப்படி நிறைய பட்ட பெயர்கள் உண்டு இவர்களுக்கு பள்ளியில். எங்கு சென்றாலும் மூவரும் ஒன்றாகவே செல்வார்கள்.

மூவரில் ஒருவர் கூட 'காதல் வலையில்' இதுவரை சிக்காததிற்க்கு காரணம்........

1.' எங்கு சென்றாலும் பின்னாடியே ஃபாளோ பண்றது, திரும்பிப் பார்த்தால் பல்லை இளிக்கிறது' இப்படி பன்ற பையன்களை ' உருப்படியா படிக்கவோ, வேலை பார்க்கவோ வேண்டிய வயதில் இப்படி பின்னாடியே பாடிகார்ட்டாட்டம் வருகிற இவனை நம்பினால் வாழ்க்கை உருப்படாது' என்று உதாசீனப்படுத்தி விடுவார்கள்.

2. ரோட்டோரத்தில் உள்ள டீ கடையில் தம் அடித்துக் கொண்டே போகிற வருகிற பெண்களை 'ஜொள்ளு' ஒழுக பார்க்கிற ''ரோட் சைட் ரோமியோ'வைப் பார்த்தால் பரிதாபப்படுவார்கள்.

3.பார்த்த முதல் நாளே, கையில் ரோஜாவும் ஒரு வாழ்த்து அட்டையுமாக வருபவனைப் பார்த்தால் , கண்டதும் காதல் கொண்ட' காதல் மன்னன்' என்று கிண்டல் அடிப்பார்கள்.

கல்லூரியில் முதல் நாள் வகுப்புகள் அனைத்தும், பெயர் மற்றும் ஊர் அறிமுகம் என இனிதே நடந்துக் கொண்டிருந்தது. மதியம் 3 மணி அளவில் வகுப்பு நடந்துக் கொண்டிருக்கும் போது, " எக்ஸ்க்கூஸ்மீ சார் " என்றான் வாயிலில் நின்றுக் கொண்டிருந்த ஒரு ஒல்லிபிச்சான் சீனியர்.

"வீ லைக் டூ மேக் அன் அனோன்ஸ்மண்ட் சார் " என்றான்.
"ஓ.கே , கோ அஃகேட்" என்றார் லெக்ச்சரர்.

இப்போது ஒல்லிப் பிச்சானைத் தொடர்ந்து மூன்று சீனியர்கள் வகுப்புக்குள் நுழைந்தனர்.

' ஓ இந்த ஒல்லிப்பிச்சான் , சும்மா எடுபிடி தானா ' என்று நினைத்துக் கொண்டனர் முப்பெருந்தேவிகள்.

" டியர் ஃபிரண்ட்ஸ், வீ லைக் டூ ஹோஸ்ட் ' வெல்கம் பார்ட்டி' டூ யூ ஆல் ஆன் பிகாஃப் ஆஃப் அவர் டிபார்ட்மண்ட், சோ கைண்ட்லி கேதர் அட் தி செமினார் ஹால் டுமாரோ அட் 10 எ.எம்" என்று அறிவித்தான் அம்மூவரில் ஒருவன்.

அனுமதி அளித்த ஆசிரியருக்கு ஒரு நன்றியும் தெரிவித்துவிட்டு அவர்கள் இடத்தை காலி பண்ண, வகுப்பறையில் ஒரே சல சலப்பு.

'இது அஃபிஷியல் ராகிங்காம்' எனவும்

'பெயர் அறிமுகம் செய்யனுமாம் ஒவ்வொருவரும் தனியாக முன் சென்று, பின் சீனியர்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமாம்'
என்ன வேண்டுமானலும் கேட்பார்களாம்' என ஆளுக்கொரு கருத்தாக கூறிக் கொண்டார்கள் வகுப்பு மாணவர்கள்.

முப்பெருந்தேவிகள் ஒரு முடிவிற்கு வந்தார்கள்,
'வழக்கம் போல் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொள்வது,
கேள்விக்கு பதில் சொன்னால் மீண்டும் நோண்டி நோண்டி கேள்வி கேட்டு பெண்டெடுத்து விடுவார்கள், எனவே எந்த கேள்வி கேட்டாலும் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல்' பேக்கு மாதிரி' முழிப்பது'

இந்த முடிவுடன் மறுநாள் 10 மணிக்கு செமினார் ஹாலிற்கு சென்றார்கள்.................

[கலாட்டா தொடரும்........]

கலாட்டா-2

கலாட்டா -3

கலாட்டா -4

கலாட்டா -5

கலாட்டா -6

November 29, 2006

அம்மம்மா பிள்ளைக்கனி, அங்கம்தான் தங்கக்கனி!!!


என்னை அக்கா வென்றழைக்க
எனக்கொரு தங்கை வரப்போகிறாள்
ஏக்கத்துடன் கண்கள் வீட்டின் வாயிலேயே நோக்கின
ஏந்தி வருவாள் அன்னை குழந்தையுடன் - என்று.

பட்டு பாவாடை உடுத்தி
பிஞ்சுக் கரங்களால் என் கரம் கோர்த்து
பாதங்கள் தரையில் தத்தி தத்தி
பவனி வருவாள் என்னுடன் - என்று

கனவுகள் பல கண்டு காத்திருந்த எனக்கு
கண்விழிக்கும் முன்னே உன்னை
கடவுள் 'எனக்கு நீ வேண்டும்' என
களவாடி சென்றுவிட்டான் -என்று

அன்னை கூறி நான் தெரிந்துக்கொண்ட போது
அதை அறிந்து புரிந்துக் கொள்ள ஏனோ
அனுமதிக்காத என் மனம்
அழகு தேவதையாக என் நினைவில் பதித்தது - உன்னை

உதிக்கும்முன்னே உதிர்ந்து போனாலும் -என்
உள்ளம் உருவம் கொடுத்து
உயிர் கொடுத்து என்னுள்ளில்
உலாவவிட்டது -உன்னை

November 28, 2006

நமக்குள்ளே இருக்கட்டும் வைச்சுக்கோ......சொல்லிவிடாதே!!!

ப்ளாக்கில் தினமும் ஒரு பதிவு போடலமா? இல்லை வாரத்திற்கு ஒரு பதிவு போட்டால் போதுமா? மாததிற்கு ஒரு முறை பதிவு போட்டால் மக்கள் நம் ப்ளாக்கை மறந்தே போய் விடுவார்களா? இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் விறகு வெட்டி ஆன்லைனில் வந்தார். அவரிட்மே ஆலோசனை கேட்கலாம் என்று சாட் செய்ய ஆரம்பித்தேன்.........

நான்: என்ன விறகு எப்படி இருக்கிறே? உன் ப்ளாக்கில் ஒருவழியா 100 பதிவு போட்டுடே போலிருக்கு.

விறகு வெட்டி: ஆமாம், 3 மாதம் தான் ஆகிறது நான் ப்ளாக் ஆரம்பித்து , அதற்குள் 100 பதிவு போட்டுடேன் பார்த்தியா.

நான்: அட, அட உன்னை மிஞ்ச ஆள் உண்டா விறகு. தினம் ஒரு பதிவுன்ற விதத்துல பதிவு போடுவியா??

விறகு வெட்டி: இல்லை, இரண்டு நாள் சேர்ந்தாற்போல் 5 அல்லது 6 பதிவு போட்டிடுவேன், அப்புறம் 3 நாள் பின்னூட்டத்திற்க்கு பதில் போடவே சரியா இருக்கும்.

நான்: 3 நாள் பதில் போடுற அளவுக்கு பின்னூட்டம் வருமா??

விறகு வெட்டி: முதல்ல மக்களை என் பதிவு படிக்க வைக்கனும், அப்புறம் பின்னூட்டம் போட வைக்கனும், இதற்க்கு 2 நாள் ஆகும், அப்புறம் பதில் பின்னூட்டம் போட ஒரு நாள்.

நான்: பின்னூட்டம் போட வைப்பியா எப்படி???

விறகு வெட்டி: சும்மா எல்லா ப்ளாக்கிற்க்கும் போய், பதிவு படிக்கிறேனோ இல்லையோ பின்னூட்டம் போட்டிட்டு வந்துடுவேன். அப்போதான் , பாவம் பையன் நம்ம பதிவிற்க்கு பின்னூட்டம் எல்லாம் போட்டிருக்கான், நாமும் போய் இவன் பதிவு பார்க்கலாம்னு வருவங்க என் ப்ளாக்கிற்கு.

நான்: உன் ப்ளாக்கிற்கு வராங்க சரி, பின்னூட்டம் போடுங்கன்னு எப்படி கேட்பே?

" அம்மா , தாயே, சாமி, பின்னூட்டம் போட்டுட்டு போங்க"
" காப்பி , டீ வேனா குடிச்சுட்டு தெம்பா வந்து ஒரு பின்னூட்டம் போடுங்க"
" மதுரையிலிருந்து வந்திருகிறீங்க,...................லண்டனிலிருந்து என் ப்ளாக் எட்டி பார்க்கிறீங்க , கொஞ்சம் பின்னூட்டமும் போட்டுட்டு போயிடுங்கன்னு
"
கேட்பியா???

விறகு வெட்டி: இதென்ன சின்னபுள்ளை தனமா இருக்கு. அப்படி எல்லாம் வெளிப்படையா கேட்க மாட்டேன்.

கலயாண வீட்டிற்க்கு போய் நாம மொய் எழுதினா, பதிலுக்கு நம் வீட்டு விஷேசத்திற்கு அவங்க மொய் எழுதுவாங்க இல்ல அது மாதிரி தான். நீ எவ்வளவு ப்ளாக்கிற்கு போய் பின்னூட்டம் போடுறியோ அவ்வளவு பின்னூட்டம் உனக்கு கிடைக்கும்.

நான்: நீ கில்லாடி தான் விறகு. அஹா! என்ன என்ன வித்தை எல்லாம் கத்து வைச்சிருக்க பின்னூட்டம் வாங்க, சபாஷ் விறகு!!

November 27, 2006

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே!!!

"என்னங்க நம்ம கல்யாண ஆல்பத்தில இந்தப் ஃபோட்டோவைப் பாருங்க, என் கையில் மெகந்தி எவ்வளவு அழகா இருக்கு" என்று ஆவலுடன் குளியலறையிலிருந்து வெளி வந்த தன் கணவனிடம் காண்பித்தாள் ஆர்த்தி.
"ஆங்! நல்லா இருக்கு ஃபோட்டோ" என்றான் ஃபோட்டோவை பார்க்காமலே, " டிஃபன் ரெடியா ஆர்த்தி? நான் சீக்கிரம் ஷோரூம் போகனும், லேட் ஆச்சு" என்று தன் தலை முடியை சீறாக்கிக் கொண்டிருந்தான் ஆனந்த்.

ஏமாற்றத்துடன், தொய்ந்துப் போன மனதுடன் சமையல் அறைக்குச் சென்று , குக்கரிலிருந்து இட்லிகளை எடுத்து வைத்த ஆர்த்தியின் விழிகளின் ஓரத்தில் நீர் எட்டிப் பார்த்தது, ' திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் எப்படி மாறிவிட்டான் ஆனந்த். மூன்று வருடம் உருக உருக காதலித்து கைபிடித்த கணவன் இன்று ஒரு நிமிடம் தான் காட்டும் ஃபோட்டோவை பார்த்து ரசிக்காமல் போனால், எந்தப் பெண்ணுக்குத் தான் கஷ்டமாக இருக்காது என பொறுமினாள் ஆர்த்தி.

காதலித்த நாட்களில், கல்லூரிக்குச் செல்ல 8 மணி பேரூந்திற்க்கு வரும் ஆர்த்திக்காக 7.30 மணிக்கே வந்து காத்திருப்பான் ஆனந்த், அதன் பின் தான் தன்னுடைய டூ வீலர் ஷோரூமிற்க்குச் செல்வான். ஒவ்வொரு வெள்ளிகிழமையும் ஆர்த்திக்கு கல்லூரி முடிந்ததும் இருவருமாக கோவிலுக்குச் சென்று விட்டு, ரெஸ்டாரண்ட் போவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் மணிக்கணக்காக பேசிக் கொண்டேயிருப்பான் ஆனந்த்."ஏன் வார இறுதி வருகிறது, உன்னைப் பார்க்க முடியாமல், சனி ஞாயிறு மேலேயே எனக்கு வெறுப்பு வந்துவிட்டது" எனக் கூறும் ஆனந்தா இப்படி மாறிவிட்டான்?

திருமணமாகி, தனிக் குடித்தனம் வந்த ஒரு வாரம் ஆனந்திடம் எந்த மாறுதலும் காணவில்லை ஆர்த்தி. மாலையில் ஆனந்த்" மல்லிகை............என் மன்னன் மயங்கும்" முனுமுனுத்தபடி, கையில் மல்லிகை சிரிக்கத் திரும்புவான். ஆனால் இப்போ.......ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் னு சொல்றதெல்லாம் உண்மை தானோ???" என்று மனதில் ஆயிரம் எண்ணங்கள் வந்து மோதிக்கொண்டிருக்க ," ஆர்த்தி டிஃபன் ரெடியா??" என்ற கணவனின் குரல் கேட்டு தன் நிலைக்கு வந்தாள்.

மேஜையில் டிஃபன் எடுத்து வைக்கும் போது ஆர்த்தி எதுவுமே பேசாமல் மவுனம் காத்தாள், கோபத்தில் சிவந்திருக்கும் தன் ஆசை மனைவியின் அழகிய முகத்தை ஒரக்கண்ணால் ரசித்தபடியே' இன்று சாயந்திரம் எப்படியும் சீக்கிரம் வீட்டுக்கு வந்து ஆர்த்தியை எங்கேயாவது வெளியில் கூட்டிடுப் போகனும்' என்று நினைத்துக் கொண்டான் ஆனந்த். சாப்பிட்டு முடிக்கும் முன்னே அவன் செல்ஃபோன் சினுங்கியது.

"ஹலோ" என்றான் ஆனந்த், எதிர் முனையில் பேசுவது அவன் நண்பன் கணேஷ் தான் என்று தெரிந்தது , ஆனால் சிக்னல் சரியில்லாததால் , தட்டில் கை கழுவி விட்டு, ஃபோனுடன் பால்கனிக்குச் சென்றான்.

பாதி சாப்பாட்டில் ஆனந்த் எழுந்து போய்விட, ' டிஃபன் ரெடியான்னு கத்த தெரியுது, ஆனா ஒரு இட்லி கூட முழுசா சாபிடல' என்று தனக்குள் முனு முனுத்தபடி மேஜையை ஒழுங்கு செய்ய ஆரம்பித்த ஆர்த்தியின் காதில் பால்கனியில் நண்பனோடு ஃபோனில் உரையாடும் தன் கணவனின் குரல் கேட்டது..........

" டேய் கணேஷ் என்னால இன்னிக்கு ஈவினுங்கல வர முடியாதுடா, நினைச்ச நேரம் உங்க கூட வரதுக்கு இப்போ நான் தனி ஆள் இல்லடா, என்னை நம்பி ஒருத்தி இருக்கிறா, அவளுக்காக நான் சம்பாதிக்கனும், அவளை சந்தோஷமா வைச்சுக்கனும். அதுக்காக தான் டூ வீலர் டீலர்ஷீப் மட்டும் எடுத்திருந்த நான், இப்போ கார் டீலர்ஷீப்பும் எடுத்து என் ஷோரூமை விரிவு படுத்தி இருக்கிறேன். இன்னும் நிறைய உழைக்கனும், ஜெயிக்கனும், தொழிலில் உயரனும், இப்படி நிறைய ஆசை இருக்குடா,

ஃபிரண்ட்ஸோட ஊர் சுத்த , அரட்டை அடிக்க ஒரு காலம், படிக்க ஒரு காலம், உழைக்க ஒரு காலம் இப்படி வாழ்க்கையில் காலங்களும் பொறுப்புகளும் மாறும் போது, நாம தான் அதை புரிஞ்சுக்கனும்டா.
கண்டிப்பா வார இறுதில உன்னை வந்து பார்க்கிறேன், அப்போ வைச்சுக்கலாம் நம்ம கச்சேரியை , ஓகே வா??"
என்று ஆனந்த் தன் நிலையை நண்பனுக்கு விளக்கிக் கொண்டிருக்க ஆர்த்திக்கு ஒரு பெரிய உண்மை விளங்கியது.

"காதிலிக்க ஒரு காலம் உண்டு
காதலிக்க மட்டுமே ஒரு காலம் உண்டு
கெஞ்சி கெஞ்சி கிரங்கடிக்கும் காதலனிடம்
கொஞ்சி கொஞ்சிப் பேச ஒரு காலம் உண்டு

காதலுடன் கடமைகளையும் செய்து முன்னேற
காலம் கட்டளையிடும் போது
கருத்துடன் அதை கடைப்பிடித்து
கண்ணியத்துடன் உயர்வதே
காதலுக்கு அழகு!!!!!"

November 24, 2006

கவிதையே தெரியுமா?

ப்ளாக்கில் கடிதம் எழுதியாச்சு, தொடர் கதையும் எழுதியாச்சு, இன்னும் ஒரு கவிதை எழுதனுமே, எப்படி எழுதுறது அப்படின்னு நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது, என் நண்பர் விறகு வெட்டி ஆன்லைனில் வந்தார். அவரிடம் சாட் செய்தபோது ப்ளாக்கில் கவிதை எழுதுறது எப்படி என நான் கேட்க , அவர் எனக்கு அளித்த பதில்...............கீழ்கானும் எங்கள் உரையாடலை வாசித்தால் புரியும்.

நான்: விறகு , எனக்கு ப்ளாக்கில் கவிதை எழுதனும்னு ஆசை, ஆனா என்ன எழுதுவதுன்னு , எப்படி எழுதுவதுன்னு தான் தெரில, நீ தான் ப்ளாக்கில் தில்லாலங்கடி ஆச்சே கொஞ்சம் ஐடியா கொடேன்

விறகு வெட்டி: கவிதை தானே, அது ரொம்ப சிம்பிள், நான் சொல்லி தரேன் கேளு.

நான் : சரி சொல்லு விறகு.

விறகு வெட்டி: முதல்ல கதை எழுதுகிற மாதிரி ஒரு பாரா வில் 10 அல்லது 15 வரிகள் எழுதிக்கோ, , அதை அப்படியே நாலு நாலு வரியா மடக்கி மடக்கி எழுதினா அது தான் கவிதை.

நான்: அது சரி, கதைக்கு ஒரு கரு இருக்கிற மாதிரி கவிதைக்கு என்ன கரு வைக்கலாம் சொல்லு. அப்போதான் என்னால பாராவை முதல்ல எழுத முடியும்.

விறகு வெட்டி: கவிதைக்கும் கரு வழக்கம் போல காதல் தான். ஒரு காதலன் காதலியை பார்த்து சொல்ற மாதிரி, இல்லைனா ஒரு காதலி காதலனைப் பார்த்து சொல்ற மாதிரி எழுது. சும்மா பின்னூட்டம் பிச்சிட்டு வந்து நிறைய விழுகும் பாரு உன் கவிதை பதிவிற்க்கு.

நான்: ஒரு உதாரணம் சொல்லு விறகு, நான் அப்படியே பாயிண்ட் பிடிச்சுக்கிறேன்........

விறகு வெட்டி: சரி சொல்றேன் கேட்டுக்கோ.......ஒரு காதலன் காதலி பார்த்து சொல்றான் ஓ.கே

நான் உன்னை அப்படி பார்த்தப்போ
நீ ஏன் என்னை இப்படி பார்த்த


நான் உன்னைப் பார்த்து சிரிச்சா
நீ ஏன் முகம் சுழிச்ச


நீ நடந்து வரப்போ
ஏன் மெதுவா வர
நீ ஓடி வரப்போ
ஏன் வேகமா வர.........


இப்படியே திருப்பி திருப்பி எழுது, மொத்தம் 16 வரின்னு வைச்சுக்கோ , நாலு நாலு வரியா போட்டா உனக்கு 4 பாரா கிடைக்கும் , ஒவ்வொரு பாராவுக்க்கும் நடுவுல ஒரு படம் போடு, அப்போதான் பதிவு பெருசா தெரியும், ஆனால் கவிதை வரிகள் சின்னதா இருந்தா மக்கள் கட கட ன்னு வாசிச்சுட்டு டக்கு டக்குனு பின்னூட்டம் போட்டிருவாங்க.

நான்: அந்த படம் போட நான் என்ன பண்றது விறகு??

விறகு வெட்டி: நம்ம கூகிள் எதற்க்கு இருக்கு, அதுல தேடிப் பாரு, உன் கவிதைல வருகிற வரிகளுக்கு பொறுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை , சின்ன குழந்தைகள் படம் நாலு போட்டு விடு, தத்தக்க பித்தக்க ன்னு நீ கவிதை எழுதியிருந்தாலும் மக்கள் கண்டுக்காமல் பின்னூட்டம் போட்டிடுவாங்க.

நான்: என்ன விறகு எப்பவும் பின்னூட்டத்திலேயே குறியா இருக்கிற??

விறகு வெட்டி: பின்ன பின்னூட்டம்னா சும்மாவா? என் பதிவுகள் எல்லாம் பார்த்தேயில்ல, சும்மா 40 பது, 50 பதுன்னு எகிறுது இல்ல பின்னூட்டம்.

நான்: சரி விறகு, நான் போய் கவிதை எழுதுகிற வழிய பார்க்கிறேன், கவிதை பதிவு போட்டதும் மறக்காமல் வந்து பின்னூட்டம் போட்டிடு விறகு.

விறகு வெட்டி: அதெல்லாம் கரக்கட்டா போட்டிடுவேன், உன் கிட்ட ஒன்னு கேட்கனுமே.......

நான் : என்ன விறகு , எனக்கு வருகிற பின்னூட்டதில பாதி உனக்கு கமிஷன் தருனுமா???.

விறகு வெட்டி: இல்லை, அதெல்லாம் வேண்டாம். ஏன் எப்பவும் நீ என்னோட முதல் பேரை மட்டும் சொல்லி கூப்பிடுற, கடைசி பேரை சொல்லவே மாடேன்ற??

நான்: ஓ ! அதுவா, உன்னோட கடைசி பேருல நிறைய பேரு இருக்காங்க, எதுக்கு வீண் குழப்பம்னு தான் , மத்தபடி வேர ஒன்னும் இல்ல விறகு.

November 22, 2006

ரயில் சிநேகம் - 3




பாகம்- 1
பாகம்-2

"பிரீத்தி" அம்மாவின் குரல் கேட்டு தன் கைப்பைகளுடன் ரயில் நிலையத்திற்க்கு புறப்பட்ட பிரீத்தி நின்றாள், " பிரீத்திமா" அம்மாவின் குரல் இப்போது கண்ணீருடன் உடைந்து வெளி வந்தது, அந்த குரல் பிரீத்தியின் கோபத்தையும் வைராக்கியத்தையும் உடைத்தாலும், அதனை வெளிக்காட்டாமல் திரும்பி அம்மாவை நோக்கினாள் பிரீத்தி.

"பிரீத்திமா, என்னை மன்னிச்சிடு, உன்கிட்ட பொய் சொல்லி வரவழைத்தது என்னோட தப்புதான்மா, உன் ஆசை படி ஒரு வருடம் கழித்தே கல்யாணத்தை வைச்சுக்கலாம். இப்போ அப்பாவோட மரியாதைக்காக வருகிற மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு நமஸ்காரம் மட்டும் பண்ணிடுமா......" என்று கூறி மகளை சமாதனப்படுத்தி வீட்டிற்க்குள் அழைத்துச் சென்றாள் பிரீத்தியின் அம்மா.

"டேய் பிரேம், நாங்க உன் கிட்ட பெண் பார்க்க போற விஷயத்தை கடைசி நேரத்தில சொல்றது தப்புதாண்டா, அதுக்காக இப்படி கோபபட்டு உடனே கிழம்பினா என்ன அர்த்தம். இன்றைக்கு பெண் பார்க்க வருகிறோம்னு அப்பா அந்த பெண் வீட்டிற்க்கு வாக்கு கொடுத்துடாங்க பிரேம், அப்பாவின் மரியாதைக்க்காக சும்மா வந்து பெண்ணை பார்த்துட்டு வந்திடலாம்டா, உன் இஷ்டம்போல ஒரு வருடம் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம்........" என்று ஒருவாறாக பிடிவாதமான தன் மகனை சமாதானப் படுத்தினார் பிரேமின் அம்மா.

அம்மாவின் வற்புறுத்தலினால் பெண் பார்க்க புறப்பட்டான் பிரேம். அவர்கள் சென்ற கார் பாதி வழியிலேயே டயர் பஞ்சர் ஆனது. டிரைவர் டயர் மாற்றிக் கொண்டிருக்கும் போது " அம்மா, பாரும்மா சகுனமே சரியில்லை, டயர் பஞ்சர் ஆகிடுச்சு, [ அம்மாவின் பலவீனம் தெரிந்திருந்தது பிரேமுக்கிற்க்கு] பேசாம பொண்ணு வீட்டிற்க்கு ஃபோன் பண்ணி சொல்லிடலாம்மா நாம வரலீன்னு, இப்படியே திரும்பிப் போய்டலாம்மா" என்று பலவாறு தன் அம்மாவின் மனதை மாற்ற முயன்றான் பிரேம், எதுவும் செயல் படவில்லை. ஒருவழியாக பெண் வீட்டை சென்றடைந்தார்கள்.



பிரீத்திக்கு அவள் அத்தை மகள் ப்ரியா அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள், பிரீத்தியோ எந்தவித ஈடுபாடும் இல்லாமல் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள். வீட்டிற்க்கு வெளியில் கார் நிற்க்கும் சத்தம் கேட்டு ப்ரியா வீட்டின் வாசலுக்கு விரைந்தாள்.

சிறிது நேரத்தில் பிரீத்தியின் அறைக்குள் ஓட்டமாக ஓடி வந்தாள் ப்ரியா " பிரீத்தி மாப்பிள்ளை வந்தாச்சு, பிரீத்தி மாப்பிள்ளை சூப்பரா இருக்காரு, அவர் பார்க்க மா..........." அவள் முடிக்கும் முன் இடைமறித்தாள் பிரீத்தி " போதும் ப்ரியா, ரொம்ப கத்தாதே, போய் உன் வேலையை பாரு" என்று எறிந்து விழுந்தாள் ப்ரீத்தி,
உற்ச்சாகத்துடன் வந்த ப்ரியாவின் முகம் வாடியது" நானும் பார்த்துட்டே இருக்கிறென் நீ இன்றைக்கு சரியே இல்லை, என்னாச்சு உனக்கு, நீ ரொம்ப மாறிட்டே பிரீத்தி" என்று கூறி அறையை விட்டு வெளியேறினாள் ப்ரியா.



பெண் வீட்டிற்க்கு முன் கார் நின்ற பின்பு கூட பிரேமிற்க்கு திரும்பி போய் விடலாமா என்று தோன்றியது, கார் இருக்கையின் பின் தலை சாய்த்து ஒரு நிமிடம் கண் மூடினான், பளிச்சிட்டது ' அந்த முகம்' அவன் மணக்கண்ணில்.
"பிரேம்" என்று அம்மாவின் குரல் கேட்டு தன் நிலைக்கு வந்தான் பிரேம், காரிலிருந்து அனைவரும் இறங்க, " வாங்க, வாங்க " என்று பலத்த உபசரிப்பு பெண் வீட்டாரிடமிருந்து.

யாருக்கும் சரியாக பதில் வணக்கம் கூறவில்லை பிரேம். இறுக்கமான முகத்துடன் பெண் வீட்டிற்க்குள் நுழைந்து அவனிடம் சுட்டிக் காட்டபட்ட இருக்கையில் அமர்ந்தான்.
"நிமிர்ந்து உட்காருடா" என்று அவன் அம்மா காதில் கிசு கிசுக்க தலை நிமிர்ந்தான் பிரேம். அவனுக்கு எதிரில் இருந்த சுவற்றில் பளிச்சிட்டது ' அவள் பிம்பம்'.


ப்ரியா அறையிலிருந்து சென்றுவிட, 'ஏன் எனக்கு இவ்வளவு கோபம் , எறிச்சல் எல்லாம் வருது', "கடவுளே' என்று கண்களை மூடினாள் பிரீத்தி , 'அந்த முகம்' பளிச்சிட்டது பிரீத்தியின் மணக்கண்ணில், " மின்னலே படத்துல வருகிற ரீமா சென் மாதிரி ஆகிட்டேனே" என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் அம்மா அறையினுள் வந்தாள்.
"பிரீத்தி , மாப்பிள்ளைக்கு உன்னிடம் தனியாக பேச வேண்டுமாம், அப்புறமா நீ ஹாலுக்கு வந்து எல்லாருக்கும் நமஸ்காரம் சொன்னா போதும், இப்போ இங்க வருவாரு, பேசிடு..." என்று இவள் பதிலுக்கு கூட காத்திராமல் அறையிலிருந்து வெளியேறினாள் அவள் அம்மா.

' என்ன ஆளு இந்த மாப்பிள்ளை பையன், அதான் கொஞ்ச நேரத்துல பொண்ணை காண்பிக்க போறாங்களே, அப்போ பார்த்துக்கலாம்னு பொறுமையா இருக்கத் தெரில, அவசரக் குடுக்கை ஆட்டம் பார்க்கிறதிற்க்கு முன்னமே தனியா பேசனுமாம், சரியான அலைஞ்சானா இருப்பான் போலிருக்கு' என்று மனதிற்க்குள் பிரீத்தி வசைபாடிக் கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியே வெளியில் நோக்கிக் கொண்டிருந்தாள்.

" எக்ஸ்கூஸ்மீ, ஒரு எக்ஸ்ட்ரா சப்பாத்தி பார்சல் கிடைக்குமா???" ...........

அதே குரல்!!!!!

அடிவயிற்றில் பட்டாம் பூச்சுகள் பறக்க
இதயத் துடிப்பு அதிவேகமாக அடிக்க
கைகால்கள் நடுங்க
உதடுகள் துடிக்க
கண்கள் பட படக்க..........
திரும்பினாள் பிரீத்தி,

அங்கே 'அவன்' வாயிலின் நிலைப்படியில் சாய்ந்துக் கொண்டு இரு கரங்களையும் கட்டிக் கொண்டு நின்றான்.
காண்பது கனவா நினைவா என்று என்று பிரித்தி திகைக்க, மறுபடியும்" சப்பாத்தி பார்சல் கிடைக்குமா??" என்று கண்களைச் சிமிட்டினான்.

காதல் வாகனத்தில்
திருமண பந்தத்தில்
இனிதே தொடர்ந்தது அவர்கள் பயணம்...........

November 18, 2006

ரயில் சிநேகம் - 2



பாகம்-1
"ஐயோ" என்று கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட்டாள் பிரீத்தி. என்னாச்சுதோ என்று அனைவரும் இவளை பார்க்க " என் ஃபரண்ட் ஷாலினுக்கும் சேர்த்து வாஙகிய சப்பாத்தி பார்சல் என் பையிலேயே இருந்துவிட்டது, அவள் ரூமிற்க்கு போனபோது எடுத்து போக மறந்து விட்டாள்" என்ற பிரீத்தி , " பிரேம் என்கிட்ட இப்போ இரண்டு சப்பாத்தி பார்செல் இருக்கிறது, நீங்க ஒன்று வாங்கிகோங்க" என்றாள்.

" வாங்கிக்கனுமா?.............அப்படின்னா எவ்வளவு விலைங்க உங்க எக்ஸ்ட்ரா சப்பாத்தி பார்சல், ?ஹாஃப் ரேட்னா ஓகே" என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் பிரேம்.
" அச்சோ! அப்படி இல்லீங்க, என்கிட்ட தான் இப்போ இரண்டு பார்சல் இருக்கிறதே, நீங்க ஒன்று சாப்பிடலாமேன்னு சொன்னேன்" என்று விளக்கினாள் பிரீத்தி.
"இப்படி விளக்கமா ' சாப்பிடுங்கன்னு' நீங்க சொல்லியிருக்க்கனும், ' வாங்கிக்கங்கன்னு' நீங்க சொன்னதும் சாப்பாடு பொட்டலம் வியாபாரம் பண்றிங்களோன்னு நான் பயந்துடேங்க" என்று கூறி சிரித்தான் பிரேம்.

அவனது கிண்டலும் கேலியுமான பேச்சு பிரீத்திக்கு பிகவும் பிடித்திருந்தது. பின் இருவருமாக உணவருந்தும் போதும் கிரிக்கட், சினிமா, உலக நடப்பு என்று நிறைய பேசினான், அத்தனையும் பிரீத்தியை கவர்ந்தன.
தன் அம்மாவின் உடல் நிலைக் குறித்து கவலையுடன் கணமாக இருந்த பிரீத்தியின் இதயம் இலகுவானது, ஒருவிதமான பரவசத்துடன் உறங்கிபோனாள் பிரீத்தி.

யாரோ தன் கையைப் பிடித்து " எழும்புங்க பிரீத்தி, கோயம்புத்தூர் வந்தாச்சு" என்று கூறுவது கேட்டு கண் விழித்தாள் பிரீத்தி. அவளுடன் பயணம் செய்துக் கொண்டிருட்ந்த அந்தக் குடும்பத் தலைவி அவளருகே நின்றிருந்தாள். அவசரம் அவசரமாக எழுந்த பிரீத்தியின் கண்கள் ' அவனை' தேடின. எங்கு போனான் அவன், அவனையும் காணோம் அவன் கைப் பைகளையும் காணோமே என்று பதறிப் போன பிரீத்தி, அக்குடும்ப தலைவியிடம் " ஏங்க , நம்ம கூட பிரயாணம் பண்ணினாரே அந்த பிரேம் எங்கேங்க??" என்று கேட்டாள்.

" அவர் வடகோவை ரயில் நிலையத்திலேயே இறங்கிட்டாருங்க, உங்க கிட்ட சொல்லச் சொன்னருங்க, நீங்க ரொம்ப அயர்ந்து தூங்கிட்டு இருந்தீங்களா அதான் எழுப்பி தொந்தரவு செய்ய வேண்டாமேன்னு எங்க கிட்ட சொல்ல சொல்லிட்டு போய்ட்டாருங்க" என்றார் அந்த பெண்.

பிரீத்திக்கு ஏனோ அழுகை அழுகையாக வந்தது. 'அவன்' சொல்லிக்கொள்ளாமல் சென்றது அவளுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது..

ஊர் கதை, உலக கதை எல்லாம் பேசினான், அவனுக்கு எந்த ஊர், எங்கு வேலைப் பார்க்கிறான், அவன் மொபைல் நம்பர் என்ன, எந்த விபரமும் அவன் சொல்லவில்லை, தானும் கேட்ட்காமல் விட்டு விட்டோமே என்று தன்னையும் அவனையும் மனதிற்க்குள் திட்டிக் கொண்டே ஆட்டோவில் தன் வீட்டிற்க்குச் சென்றாள் பிரீத்தி.

'ரயில் சினேகம் ரயில் வரைதான்' போலும் என்று தன்னை தானே சமாதனப் படுத்திக் கொண்டு, அம்மாவை காணும் ஆவலில் வீட்டிற்க்குள் நுழைந்தாள் பிரீத்தி. வாசலருகில் புன்முறுவலுடன் வரவேற்றார் அவள் தாத்தா." வாம்மா பிரீத்தி, பிரயாணம் எல்லம் சவுகரியாமா இருந்துச்சாமா? ரொம்ப களைப்பா தெரியறேயேம்மா" என்று தாத்தா கேட்க, " தாத்தா அம்மா எங்கே, அம்மா வுக்கு உடம்புக்கு என்ன, இப்போ அம்மா உடம்பு எப்படி இருகிறது, டாக்டர் என்ன சொல்கிறார் " என்று வரிசையாக தன் கேள்விகளைத் தொடுத்தாள் பிரீத்தி.

" பொறும்மா, முதல்ல உள்ளே வா, நிதானமா எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன் " என்றார் தாத்தா. தாத்தாவின் முகத்தில் தன் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததுக் குறித்து எந்த வருத்தமும் தெரியவில்லையே, எப்போதும் விட ரொம்ப உற்ச்சாகமாக தெரிகிறாரே என்று குழப்பத்துடன் வீட்டின் முன் அறைக்குச் சென்றாள்.

சனிக்கிழமையானால் காலை 10 மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கும் தன் தம்பி பிரவீன் அன்று அத்தனை சீக்கிரமாக எழுந்து வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருப்பதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே போனாள் பிரீத்தி.
" பிரவீன் , என்னடா இத்தனை சீக்கிரம் எழுந்துட்ட, இது என் தம்பி பிரவீன் தானா, என் கண்ணால நம்பவே முடியலையே" என்றாள் பிரீத்தி.

" பிரீத்தி, 'கண்ணை நம்பாதீங்க' என்று நடிகர் மாதவன் சன் டீவி யில் வருகிற டிஷ் வாஷிங் லிக்குயிட் விளம்பரத்துல சொல்வாரு பாத்திருகிறியா?? அதே மாதிறி உன் கண்ணை நம்பாதே" என்றான் பிரவீன். ' மாதவன் ' என்ற பெயரை கேட்டதும் பிரீத்தியின் மனதில் ' அந்த முகம்' பளிச்சிட்டது. தன் மனதைக் கட்டுபடுத்திக் கொண்டு " அம்மா எங்கேடா பிரவீன் ?" என்று கேட்டாள் பிரீத்தி,

அதே சமயம் மாடிப் படிகளில் பிரீத்தியின் அம்மா வீட்டின் முன் அறைக்கு இறங்கி வந்துக் கொண்டிருந்தார் . ஃபிரஷாக தலை குளித்து, உயர் ரக புடவை உடுத்தி தன் அம்மா ஒரு அழகு தேவதை போல் மாடி படிகளில் வருவதைக் கண்டதும் அதிர்ச்சியில் உரைந்துப் போனாள் பிரீத்தி.
" அம்மா, உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று அப்பா ஃபோனில்............" என்று அவள் கூறி முடிக்கும் முன் பிரீத்தியின் அப்பா வும் அங்கு வந்தார்,

" அதெல்லாம் சும்மா டூப்பூ, உன்னை வீட்டிற்க்கு வரவழைக்கத் தான் அப்பா அப்படி சொன்னாங்க ஃபோனில்" என்றான் பிரவீன். ஒன்றும் புரியாமல் விழித்த பிரீத்தியிடம் அவள் அப்பா" பிரீத்திமா, நானே ஸ்டேஷனுக்கு வரனும்னு இருந்தேன் , வெளியில கொஞ்சம் வேலை வந்துடுச்சு, பிரீத்தி இன்றைக்கு உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வராங்கடா , உண்மையைச் சொல்லி வீட்டுக்கு வர சொன்னா நீ ஆயிரம் காரணம் சொல்லி வராமல் இருந்துடுவன்னு தான் அம்மா என்னை அப்படி ஃபோனில் சொல்லச் சொன்னாடா" என்றார்.

பிரீத்திக்கு தலை சுற்றியது, கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன, " ஏம்பா பொய் சொல்லி என்னை வரவழைச்சீங்க? நான் தான் ஒரு வருஷம் கழிச்சு மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னேன் இல்ல, அப்புறம் ஏம்பா இப்படி பண்ணினீங்க. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், அம்மா வுக்கு உடம்பு சரியில்லைன்னு நான் எவ்வளவு பதறிப் போயிட்டேன் தெரியுமா?? எல்லாரும் சேர்ந்து பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டீங்க இல்ல, நான் போறேன் சென்னைக்கு, மதியம் இன்டர் ஸிட்டி ரயிலிலேயே நான் கிளம்புறேன், அந்த மாப்பிள்ளை வீட்டிற்க்கு சொல்லிடுங்க என் பொண்ணு சென்னையிலிருந்து வரலைன்னு, நான் இப்போவே கிளம்புகிறேன்" என்று கோபத்தில் வெடிக்கும் பிரீத்தியை எப்படி சமாதனப் படுத்துவது என அனைவரும் யோசிக்க பிரீத்தி ரயில் நிலையத்திற்க்கு புறப்பட்டாள்.



வடகோவை ரயில் நிலையத்தில் பிரேமின் மாமா மகன் சுந்தர் பிரேமை அழைத்துச் செல்ல வந்திருந்தான், " வாடா மாப்பிள்ளை, ட்ரெயின் கரெக்ட் டைம்முக்கு வந்துடுச்சு போலிருக்கு, பிரயாணம் எல்லாம் எப்படிடா வசதியா இருந்துச்சா? சென்னையில் நல்ல மழையாமே? இங்கே கல்யாண வீட்டிற்க்கு வந்திருகிறவர்களுக்கு எல்லாம் ஹோட்டலில் ரூம் போட்டிருகாங்க , எல்லாரும் அங்க தான் இருக்கிறாங்க, போகலாம் வா" என்று பேசிக் கொண்டே நடக்க , பிரேமோ நகர்ந்துச் சென்றுக் கொண்டிருந்த ஃபளு மவுண்டைன் ரயிலை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தான்.

' போகுதே போகுதே என் பைங்கிளி ரயிலிலே' என் அவன் மணம் பாடியது.

ஹோட்டல் ரூமிற்க்கு வந்து குளித்து முடித்து, காலை உணவு அருந்த அவன் தயாரகிக் கொண்டிருந்த போது, அவன் அப்பாவும் அம்மாவும் தயங்கி தயங்கி அவன் அறக்குள் வந்தனர்." பிரேம் " என்று அழைத்தாள் அவன் தாய் ," என்னம்மா, சொல்லுங்க" என்றான் பிரேம். அவன் தாய் தன் கணவனை நோக்க அவர் தொடர்ந்தார், " பிரேம் உனக்கு பெண் பார்க்க போகிறோம் இன்றைக்கு, பெண்ணுக்கு கோயம்புத்தூர், அதான் கல்யாணத்திற்க்கு வந்த இடத்திலேயே பெண் பார்க்க வருவதாக ஏற்பாடு செய்து விட்டோம், புறப்பட்டு தயாராக இரு, 10 மணிக்கு நாம் குடும்பமாக பெண் வீட்டிற்க்கு செல்கிறோம் " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் .

பிரேமிற்க்கு கோபமும் ஆத்திரமும் பொத்துக் கொண்டு வந்தது, " இதற்க்கு தான் தூரத்து உறவு காரங்க கல்யாணத்திற்க்கும் கண்டிப்பா வரனும்னு கட்டாயப் படுத்தினீங்களா?? நான் தான் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் ஒரு வருடம் போகட்டும் என்று சொல்லியிருந்தேனே, அப்புறம் என்ன அவசரம் உங்களுக்கு, யார் கிட்ட கேட்டு இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணினீங்க? என்னை ஏமாத்தி வரவழைச்சுட்டு இங்கே இவ்வளவு ஏற்ப்பாடு பண்ணியிருகிறீங்க இல்ல, நான் போறேன் சென்னைக்கு, அந்த பொண்ணு வீட்டுல சொல்லிடுங்க என் பையன் சென்னையிலிருந்து வரல ன்னு, மதியம் இண்டர் ஸிட்டி ரயிலுக்கே நான் கிளம்புகிறேன் " என்று கோபத்தில் பிரேம் வெடிக்க அவனை எப்படி சமாதானப் படுத்துவது என அவன் பெற்றோர் யொசிக்க ரயில் நிலையத்திற்க்கு புறப்பட்டான் பிரேம்...........



[சினேகம் தொடரும்..]

November 17, 2006

ரயில் சிநேகம் - 1


நேரம் செல்ல செல்ல பிரீத்திக்கு டென்ஷன் அதிகம் ஆனது. 'வேலையை முடித்துவிட்டு, சீக்கிரமாக ஹாஸ்ட்டல் ரூமுக்குப் போய் உடைமாற்றிக் கொண்டு, 8.30 மணி ' ப்ளு மவுண்டைன்' யை பிடிக்கனும், அம்மாவுக்கு இப்போ உடல் நிலை எப்படி இருக்கிறதோ?' என சிந்த்தித்துக் கொண்டே தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த்தாள். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை உடனே புறப்பட்டு வா என்று அப்பா நேற்று போனில் சொன்னதிலிருந்து பிரீத்திக்கு அம்மா ஞாபகமாகவே இருந்தது.

"ஹலோ பிரீத்தி இன்னுமா நீ கம்பியூட்டர்கிட்ட சண்டை போட்டு முடிக்கல? இப்போவே மணி 5.30 ஆச்சு பிரீத்தி, இப்போ நாம ரூமுக்கு போனாத்தான் நீ நைட் ட்ரெயின் பிடிக்க முடியும்" என்று பிரீத்தியின் தோழி ஷாலினி துரிதப்படுத்தினாள்.

"இருடி ஷாலு, 10 நிமிஷத்துல முடிச்சிடுவேன், புறப்பட்டுடலாம்" என்று கூறிக் கொண்டே தன் வேலைகளை முடித்தாள் பிரீத்தி.

" சென்னைக்கு நீ வந்து 3 மாதம் தானே ஆகுது, அதான் உனக்கு இங்குள்ள ட்ராஃபிக் பத்தி தெரில, உங்க கோயம்புத்தூர்ல ஆர்.ஸ் புரத்திலிருந்து 10 நிமிஷத்துல ரெயில்வே ஸ்டேஷன் போற மாதிரி இங்க எல்லாம் போக முடியாதுமா கண்ணு, so சீக்கிரம் புறப்படு" என்று அவசரப் படுத்தினாள் ஷாலினி.

ஒருவாறாக வேலைகளை முடித்துவிட்டு , இருவரும் ஆட்டோவில் ரூமிற்க்கு போய், பிரீத்தியின் கைப்பைகளை எடுத்துக் கொண்டு வெயிட்டிங் லிருந்த ஆட்டோவில் ரெயில்வே ஸ்டெஷன் போய் சேர்ந்தார்கள். சப்பாத்தி பார்சல் ஒன்று வாங்கிக்கொண்டு ப்ளு மவுண்டைன் ட்ரெயின் ல் தன் கோச் எண் சரிபார்த்து ஏறிக்கொண்டாள் பிரீத்தி.

அவள் சிறு வயதிலிருந்தே விரும்பும் ஜன்னல் ஒரத்து இருக்கையே கிடைத்தது.' ஹப்பாட'என்ற பெருமூச்சுடன் பின் தலையை இருக்கையில் சாய்த்துக் கண் மூடிக்கொண்டாள். தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்றிருந்த ஷாலினி, ஜன்னல் கம்பி வழியாக பிரீத்தியை அழைத்தாள்," ஏய் என்னடி ஆச்சு, டல்லா ஆகிட்ட??"என்று கேட்டாள், " ஒன்றும் இல்லை ஷாலு, அம்மா எப்படி இருகிறாங்களோ ன்னு ஒரே ஞாபகமா இருக்குது, அதான்........."
" ஐயோ பிரீத்தி , இன்னும் 8 மணி நேரத்துல அம்மா வை பார்க்க போற, பின்ன என்ன?? அம்மா வுக்கு இப்போ உடம்பு நல்லா ஆகிருக்கும், நீ கவலைபடதே பிரீத்தி, பத்திரமா போய்யிட்டு வா, நான் கிளம்புறேன், சரியா" என்று விடைக் கொடுத்தாள்.

ஷாலினியின் வார்த்தைகள் பிரீத்திக்கு ஆறுதலாக இருந்தது, பிரீத்தியின் இருக்கைகு அருகில் அவளை தவிர மற்ற ஐந்து இடங்களில் , அப்பா அம்மா இரு குழந்தைகள் என ஒரு குடும்பம் இருந்தது, ஐந்தாவது இடத்தை பதிவு செய்தவர் இன்னும் வரவில்லை போலும் என நினைத்துக்கொண்டாள் பிரீத்தி.

ரயில் மெதுவாக நகர அரம்பித்தது, களைத்து போன தன் முகத்தை தண்ணீரினால் கழுவி refresh செய்துக்கொள்ளலாம் எனச் சென்றாள் பிரீத்தி, கதவருகே
சென்றபோது.....யரோ ஒருவர் வாயிலின் கம்பியினைப் பிடித்துக்கொண்டு ரயிலில் ஏற ரயிலுடன் ஓடி வருவதைக் கண்டாள், " அச்சோ பாவம், வண்டி வேற வேகமாக போக அரம்பிக்க போகுதே " என்று நினைத்துக்கொண்டே , அந்த கரத்தை பிடித்து உள்ளே இழுத்து , அவர் உள்ளே ஏறி வர உதவினாள்.

மூச்சு வாங்க " ரொம்ப தாங்க்ஸ்ங்க "என்றான் அவன். ஒரு 25 அல்லது 27 வயது இருக்கும் அவனுக்கு, பார்க்க அசப்பில் நடிகர் மாதவனை ஞாபகபப்படுத்தினான் . வேர்த்துக் கொட்டியது அவனுக்கு, மறுபடியும் " ரொம்ப நன்றிங்க" என்று அவன் சொன்னபோதுதான் சுயநினைவிற்க்கு வந்தாள் பிரீத்தி.
" பரவாயில்லீங்க, ட்ரெயினுக்கு சரியான நேரத்திற்க்கு வந்திருக்க கூடாதா??" என்று கூறினாள். " ஆமாங்க கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கனும், எப்படியோ லேட் ஆச்சுங்க" என்று அவன் பதிலளித்தான்.

அவன் வாசலருகில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, பிரீத்தி தன் இருக்கைக்குத் திரும்பி சென்றாள். சிறிது நேரத்தில் அவள் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் ' அவன்'. " what a pleasant surprise ! நீங்க என் பக்கத்து seat ஆ" என்று தன் ஆச்சரியத்தை எந்த தயக்கமுமின்றி வெளிப்படுத்தினான். " By the way , I am Prem, your sweet name please?" என்று தன் பெயர் அறிமுகம் செய்தான். பார்த்து ஐந்து நிமிடங்களே ஆகிருந்தாலும் ஏதொ ஒரு பந்தம் தன்னக்கு அவனோடு இருப்பது போல் உண்ர்ந்ததால் " I am preethy" என்று எதையும் யோசிக்காமல் அறிமுகம் செய்துக்கொண்டாள் பிரீத்தி. தான் கோவைக்கு சொந்தகாரரின் திருமணத்திற்க்குச் செல்வதாக கூறினான் அவன்.

இவர்கள் பெயர் அறிமுகம் செய்வதை கண்ட சக பயணிகளான அந்த குடும்பமும், தங்களையும் இவர்களுக்கு அறிமுகப் படுத்திக்கொண்டனர். அந்தக் குடும்பத்திலிருந்த மூத்த மகனுக்கு 10 வயது , பெயர் ஷிவா , அவன் தங்கைக்கு 8 வயது, பெயர் நந்தினி. மிகவும் மரியாதையுடனும் , அறிவுடனும் பேசிப் பழகினர் அக்குழந்தைகள். அவர்கள் பெற்றோரும் மிகுந்த அன்னியோனியமாகவும் , நல்ல புரிதல் உள்ள தம்பதிகளாகவும் காணப்பட்டனர்.
ஒரே நேரத்தில் " பிள்ளைகளை நல்ல பண்புகளுடன் வளர்த்திருகிறீர்கள் " என்று பரேமும் பிரீத்தியும் கூறினர், இருவரும் ஒரே வார்த்தைகளை ஒரே சமயத்தில் கூறியதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அந்த குடும்பத் தலைவி பெருமிதம் கொண்டார். ஒரு அர்த்தமுள்ள புன்னகையுடன் பரேமும் பிரீத்தியும் நோக்கிக்கொண்டனர்.

சிறிது நேரத்தில் இரவு உணவு சாப்பிட ஆரம்பித்தது அக்குடும்பம். பிரீத்தியையும் பிரேமையும் தங்களுடன் உணவு அருந்துமாறு வற்புருத்தினாள் அக்குடும்பத் தலைவி. " கேட்டதிற்க்கு நன்றிங்க, எனக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க " என்று மறுத்தான் பிரேம். " நான் சப்பாத்தி பார்செல் வைத்திருகிறேன், அதனால் எனக்கும் வேண்டாங்க" என்று மறுத்தாள் பிரீத்தியும்.

தன் சப்பாத்தி பார்சலை எடுத்த போது தான் கவனித்தாள் பிரீத்தி, " ஐயோ............

( சிநேகம் தொடரும்....)

ரயில் சிநேகம் -2
ரயில் சிநேகம் -3

November 14, 2006

புதிய விதிமுறைகள்

Employee Rules and Regulations of 2007 Dress Code

It is advised that you come to work dressed according to your salary. If we see you wearing Prada shoes and carrying a Gucci bag, we assume you are doing well financially and therefore do not need a raise. If you dress poorly, you need to learn to manage your money better, so that you may buy nicer clothes, and therefore do not need a raise. If you dress just right, you are right where you need to be and therefore do not need a raise.

Sick Days We will no longer accept a doctor's statement as proof of sickness. If you are able to go to the doctor, you are able to come to work.

Personal DaysEach employee will receive 104 personal days a year. They are called Saturday and Sunday.

Toilet Use Entirely too much time is being spent in the toilet. There is now a strict three-minute time limit in the stalls. At the end of the three minutes, an alarm will sound, the toilet paper roll will retract, the stall door will open and a picture will be taken. After your second offence, your picture will be posted on the company bulletin board under the "Chronic Offenders category". Anyone caught smiling in the picture will be sectioned under the company's mental health policy! You are allowed to use the rest room only thrice a day and you have to swipe in and out from the toilet doors also.

Lunch Break Skinny people get 30 minutes for lunch as they need to eat more, so that they can look healthy. Normal size people get 15 minutes for lunch to get a balanced meal tomaintain their average figure. Fat people get 5 minutes for lunch, because that's all the time needed to drink a slim fast.

Thank you for your loyalty to our company.

We are here to provide a positive employment experience. Therefore, all questions, comments,concerns, complaints, frustrations, irritations, aggravations,insinuations, allegations, accusations, contemplations, consternation and input should be directed elsewhere.

The Management.

November 13, 2006

கலைப் பாடங்களில் பட்டப்படிப்பு படிக்கலாமே!

சில குடும்பங்களில் +2 முடித்த உடனே பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கமாக உள்ளது. இவர்கள் தன் பெண் பிள்ளைகளை சுலபமான கலைப் பாடங்களை எடுத்து படிக்க வைக்கலாம்.

கஷ்டப்பட்டு காலையிலும் மாலையிலும் உடல் நலம் பாதிக்கும் அளவிற்க்கு ஓடி ஓடி வந்து Practicals செய்து, Record Note தயார் செய்து , படித்துவிட்டு, இதனால் எந்த பயனும் அடையாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீததிற்க்கு மேல் உள்ளனர்.

விஞ்ஞானப் பிரிவில் எதை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தாலும், அந்தப் புத்தகத்தில் படித்தவை ஒன்று கூட வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்க்கு எந்த சந்தர்ப்பத்திலும் உதவியது கிடையாது. எந்தப் பாடத்தை எடுத்துப் படித்தாலும், பட்டம் பெற்று விட்டோம் என்ற ஒரு திருப்திதான் கிடைக்கப் போகிறது.

அதனால் வேளைக்குச் செல்லாமல் , திருமணம் முடித்து குடும்ப பொறுப்புகளை மட்டுமெ செய்ய விரும்பும் பெண்கள், கலைப் பாடங்களை எடுத்து பட்டப் படிப்பு படிக்கலாமே !!!

உணவு உண்ட பின்......



7 dont's after a meal

* Don't smoke- Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher).
* Don't eat fruits immediately - Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.
* Don't drink tea - Because tea leaves contain a high content of acid. This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.

* Don't loosen your belt - Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted & blocked.

* Don't bathe - Bathing will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach will therefore decrease. This will weaken the digestive system in our stomach.

* Don't walk about - People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.

* Don't sleep immediately - The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine.

November 09, 2006

நண்பரின் முதல் விமான அனுபவம்



என் கல்லூரி நண்பர் ஒருவருக்கு ஜெர்மனியில் உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனிக்கு விமானத்தில் புறப்பட்டார் நண்பர். அவருக்கு அது தான் முதல் விமான பிரயாண அனுபவம், அதனால் மனதில் படப்படப்புடனும், ஒரு விதமான சந்தோஷத்துடனும் புறப்பட தயார் ஆனார். விமானத்திற்க்குள் ஏறும்போது விமான பணிப்பெண் விமானத்தின் வாயிலருகே நின்று பயணிகளை வரவேற்று , அவர்கள் பயணச்சீட்டை சரி பார்த்து, இருக்கை எண் இருக்கும் திசையினை சுட்டிக் காட்டி உள்ளே பயணிகளை அனுப்பிக் கொண்டிருந்தார். நம் நண்பரும் பணிப்பெண் காட்டிய திசையில் சென்று தன் இருக்கை எண்ணைக் கண்டுப்பிடித்தவர்........அதிர்ச்சியானார்.
பதைபதைப்புடன் அருகில் இருந்த பணிப்பெண்ணிடம் " மேடம், என் இருக்கை எண் 46B , ஆனால் யாரோ எனக்கு முன்னால் வந்து பெட்ஷீட் போட்டு இடம் போட்டிருக்காங்க, நான் என்ன செய்வது??" என்று கூறினார். [ நம் ஊர் பேருந்தில் ஜன்னல் வழியாக துண்டு மற்றும் கைக்குட்டை போட்டு இடம் பிடித்து பழக்கப்பட்டவர் நம் நண்பர்! அதனால் , நமக்கு முன் எவன் வந்து இடம் பிடிச்சான்னு டென்ஷன் ஆகிட்டார்]

பணிப்பெண்ணுக்கு நம் நண்பர் என்ன சொல்கிறார் என்பது புரியாமல், மற்றொரு பணிப்பெண்ணை உதவிக்கு அழைக்க, அந்த பணிப்பெண் நிலமையை புரிந்துக் கொண்டு " சார், உங்கள் இருக்கையில் இருக்கும் ஷீட்டும், சிறு தலையணையும் உங்கள் உபயொகத்திற்காக நாங்கள் உங்களுக்கு கொடுப்பது, நீங்கள் தாராளமாக உங்கள் இருக்கையில் அமரலாம், ஷீட்டையும் , தலையணையையும் உபயொகித்துக் கொள்ளுங்கள், தங்கள் பயணம் இனிதே அமையட்டும்" என்று கூறிச்சென்றாரம்.

இந்நிகழ்ச்சியை நண்பர் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட பின் விமானத்தைப் பார்த்தாலே அந்த நண்பரின் ஞாபகமும், கூடவே என்னையும் அறியாமல் சிரிப்பும் வரும்.

பெண்களின் கவனத்திற்க்கு

We always hear "the rules" From the female side. Now here are the rules from the male side ~!
These are our rules!!!
Please note¡Ä these are all numbered "1¡í ON PURPOSE !
1. Men ARE NOT mind readers.

1. Learn to work the toilet seat. You're a big girl. If it's up, put it down. We need it up, you need it down. You don't hear us complaining about you leaving it down.

1. Sunday sports. It's like the full moon or the changing of the tides. Let it be.

1. Shopping is NOT a sport. And no, we are never going to think of it that way.

1. Crying is blackmail.

1. Ask for what you want. Let us be clear on this one:Subtle hints do not work!Strong hints do not work!Even obvious hints do not work!Just say it!

1. Yes and No are perfectly Acceptable answers to almost every question.

1. Come to us with a problem only If you want help solving it. That's what we do. Sympathy is what your girlfriends are for.

1. A headache that lasts for 17 months is a problem. See a doctor.

1. Anything we said 6 months ago is inadmissible in an argument. In fact, all comments become null and void after 7 Days.

1. If you won't dress like the Victoria's Secret girls, don't Expect us to act like soap opera guys.

1. If you think you're fat, you probably are. Don't ask us.

1. If something we said can be interpreted two ways and one of the ways makes you sad or angry, we meant the other one.

1. You can either ask us to do something Or tell us how you want it done. Not both. If you already know best how to do it, just do it yourself.

1. Whenever possible, Please say whatever you have to say during commercials.

1. Christopher Columbus did NOT need directions and neither do we.

1. ALL men see in only 16 colors, like Windows default settings. Peach, for example, is a fruit, not A color. Pumpkin is also a fruit. We have no idea what mauve is.

1. If it itches, it will be scratched. We do that.

1. If we ask what is wrong and you say "nothing," We will act like nothing's wrong. We know you are lying, but it is just not worth the hassle.

November 08, 2006

விஷ செடி !!!



பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் இடத்தை வென்றதால் கிடைத்த பரிசுக் கோப்பையையும், சான்றிதழையும் என் பெற்றொரிடம் காண்பித்து என் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ள ஆவலுடன் "அம்மா, அப்பா!" என்று அழைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.

என்னை விட இரண்டு வயது பெரியவளான என் அக்கா விற்க்கு வீட்டு பாடம் எழுத உதவி செய்துக்கொண்டிருந்தார் என் அம்மா.
"அம்மா, அம்மா, இங்க பாரும்மா, நான் தான் இந்த முறையும் பேச்சுப் போட்டியில் முதல் இடம்" என்று என் கையிலிருந்த பரிசுக் கோப்பையை காண்பித்தேன். எந்த வித முக மாறுதலும் , உணர்ச்சியும் இன்றி என் அம்மா"ஓ! அப்படியா, சரி பள்ளி உடையை மாற்றிவிட்டு சாப்பிடு" என்று கூறிவிட்டு " உஷா, கணக்கு வீட்டு பாடம் முடித்ததும், அறிவியல் வீட்டு பாடம் எழுத அரம்பிமா" என்று என் அக்காவிற்க்கு அன்பு கட்டளை இட்டு விட்டு சமையல் அறை நோக்கிச் சென்றாள்.

' என்ன அம்மா இவள், எத்தனை ஆசையுடன் என் சந்தோஷத்தையும் வெற்றியையும் பகிர்ந்துக் கொள்ள வந்தேன், இப்படி பாரா முகமாக சென்று விட்டாளே' என்று பொறுமிக்கொண்டே , முன் அறையில் இருந்த என் அப்பா விடம் சென்றேன். வீட்டு பாடம் எழுதிக் கொண்டிருந்த என் அக்கா வும் என்னை பின் தொடர்ந்தாள், காலையில் படிக்க முடியாமல் விட்டு போன தினகரன் நாளிதழின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்த அப்பா விடம், " அப்பா , அப்பா, இந்த முறையும் பேச்சுப் போட்டியில் நான் தான் முதல் இடம் பா" என்று என் பரிசினை அவர் முன் நீட்டினேன். நாளிதழிலிருந்து தன் பார்வையை விலக்காமல்," ஓ!, அப்படியா, வெரி குட், வெரி குட்" என்று மட்டும் கூறிவிட்டு பக்கங்களை புரட்ட அரம்பித்தார்.

எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது, ' என்ன பெரிய புடலங்காய் கல்லூரி பேராசிரியர் இவர், போட்டியில் வெற்றி பெற்ற மகளை மனதார பாரட்ட தெரியாமல் இவரெல்லாம் என்ன பாடம் நடத்துவாரோ கல்லூரியில், எதோ வெரி குட் என்றாவது அப்பா சொனாரே, அது கூட இந்த அம்மா சொல்லவில்லை' என்று என் மனதில் வசைபாடிக் கொண்டே என் அறைக்குச் சென்றேன்.

என் அலமாறியை அலங்அரித்துக் கொண்டிருந்த என் பரிசு கோப்பைகள் எல்லாம் என்னைப் பார்த்து சிநேகத்துடன் புன்னைகித்தன, ' நீ கவலைப் படாதே ரம்யா, எங்களை மாதிரி இன்னும் நிறைய பரிசுக் கோப்பைகளை நீ வெல்ல வேண்டும், எல்லாப் போட்டிகளிலும் பங்கு பெற் உன்னைச் சிறப்பாக தயார் படுத்திக்கொள், உன்னை யாரும் கண்டுகலையே என்று நினைக்காதே, நாங்கள் இருக்கிறோம் உன்னை ஊக்குவிக்க' என்று என்னிடம் சொல்வது போல் உணர்ந்தேன்.

இன்று நடந்த சம்பவம் ஒன்றும் என் வாழ்வில் புதிதல்ல. நான் பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி, படிப்பு , ஓவியம் என்று எல்லா துறையிலும் பரிசுகளை குவிப்பதும் என் வீட்டில் என்னை யாரும் கண்டுக்கொள்ளாததும் வழக்கமானது, அது நாளடைவில் எனக்கு பழக்கமும் ஆனது.

ஆனால், ஏன் இந்த பாராபட்ச்சம், அக்காவிடம் காட்டும் அக்கறையும் கரிசனமும் ஏன் எனக்குக் காட்டவில்லை அம்மா, ஏன் என்னை அலட்சியப்படுத்துகிறாள்........இப்படி பல கேள்விகள் எனக்குள் தினமும் வரத்தான் செய்தன. இரவு படுக்கையில் ஒவ்வொரு நாளும் இந்த கேள்விகள் வருவதும் , என் விழிகளில் என்னை அறியாமல் நீர் வருவதும் பின் அப்படியே நான் உறங்கிப் போவதும் வாடிக்கை ஆகிப் போனது.

நாட்கள் செல்ல செல்ல , எனக்குள் இருந்த இந்த ஆதங்கங்கள் ஒரு விஷ செடியாக வளர்ந்தது, அது என்னை என் அம்மாவிடம் என்னை நானே தனிமை படுத்திக்கொள்ளச் செய்தது.

ஆனால் , இந்த தனிமை என்னை சோர்ந்து போக பண்ணாதபடி என் கவணம் முழுவதும் என் படிப்பிலும், என் தாலந்துகளை வளர்ப்பதிலும், என் திறமைகளை வெளிப்படுத்துவதிலும் செலுத்த அரம்பித்தேன்.

வருடங்கள் ஓடின, என் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தேன். எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே தன் கல்லூரி படிப்பை முடித்திருந்த என் அக்கா உஷா மேற்படிப்பிற்க்குச் செல்லாமல் வீட்டில் அம்மா வுக்கு உதவியாக இருந்தாள். முன்னை விட இப்போதெல்லாம் அம்மாவின் கவனிப்பு அவளுக்கு அதிகம் கிடைத்தது..........

'என்னுள் இருந்த விஷ செடி மரமாக வளர்ந்திருந்தது இப்போது.'

மேற்படிப்பிற்க்காக விண்ணப்பங்கள் வாங்கி வந்தேன். இதே ஊரில் மேற்படிப்பு படித்தால் இந்த கவனிப்பாரற்ற வீட்டிலேயே இருக்க வேண்டும், அதனால் வெளியூருக்குச் சென்று படிக்கலாம், அப்போதாவது எனக்குள் இருக்கும் விஷ மரம் காய் , கணிகளை தராமல் இருக்கும் என்று முடிவு செய்து, வெளியூர் கல்லூரிகளுக்கு மட்டும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தேன். அப்பாவிடம் அனுமதியும் வாங்கி விட்டு, தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப என் ஸ்கூட்டியில் செல்ல எத்தனித்த போது, என் அம்மா " ரம்யா" என்று வாசலில்லிருந்து அழைத்தாள், " என்ன?" என்பது போல் அவளை திரும்பிப் பார்த்தேன்.

" அக்காவை இன்று பெண் பார்க்க வருகிறார்கள், அதனால் வெளியில் சென்றுவிட்டு சீக்கிரம் வந்துவிடு" என்று கூறிவிட்டு என் பதிலுக்கு கூடக் காத்திராமல் உள்ளே சென்றுவிட்டாள்.

' ஓ! உன் தவப் புதல்வியை திருமணம் செய்து அனுப்ப போகிறாயா? அவளை அனுப்பி விட்டு எப்படி தனியாக இருக்கப் போகிறாய், நானும் வெளியூர் சென்றுப் படிக்கப் போகிறேன், நான் இல்லாதது உனக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என்றாலும், நீ தனியாக இருக்கப் போகிறாய்' ஏதோ எனக்கு பெரிய வெற்றியும் , என் அம்மா வுக்கு பெரியா தண்டனை கிடைத்து விட்டது போலவும் ஓர் அல்ப்ப சந்தோஷம் எனக்குள்.


பெண் பார்க்கும் படலமும் நன்றாகவே நடந்த்தது. மாபிள்ளை பக்கத்து ஊரில் சொந்தமாக கம்பெனி ந்டத்துகிறார், நல்ல வசதியான இடம், பார்க்கவும் மாபிள்ளை அழகாகவே இருந்தார். அக்கா வுக்கு ரொம்ப பிடித்து விட்டது, அனைவருக்கும் தான்.
மாப்பிள்ளை வீட்டிலும் தங்கள் விருப்பதையும் சம்மதத்தையும் அப்போதே கூறிவிட்டார்கள். அனைவரும் திருமண காரியங்களை பேச ஆரம்பிக்க, நானும் என் அறைக்குச் சென்று என் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் என் அம்மா வும் ,அப்பாவும் என் அறைக்குள் வந்தனர், இருவரும் என் அறைக்குள் இப்படி ஒன்றாக வருவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்.
" ரம்யா, மாப்பிள்ளையின் தம்பி க்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறதாம், வெளி நாட்டில் வேலை செய்கிறார், விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கிறார், அண்ணனுக்கு பெண் பார்க்க வந்த இடத்தில் உன்னை அவருக்கு பிடித்துப் போனதால், ஒரே முகூர்த்ததில் இரண்டு திருமணத்தையும் நடத்த அவர்கள் பெற்றோர் விரும்புகின்றனர், எங்களுக்கும் சம்மதமே, உன் விருப்பதை சொல்" என்றார் என் அப்பா.
ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியில் ஒரு கணம் உரைந்து போனேன். "எனக்கு முடிவு எடுக்க கொஞ்ச நேரம் வேண்டும் " என்று மட்டும் கூறினேன். அப்பா, அம்மா அறையை விட்டு போனதும் தனிமையில் யோசிக்க அரம்பித்தேன்.

' பையன் பார்த்தா நல்ல பையனாகத்தான் தெரிகிறான், மேற் படிப்பிற்க்கு வெளியூர் சென்று ஹாஸ்டலில் வெந்ததும் வேகாததும் சாப்பிட்டு , பின் படிப்பு முடித்து ஒருவனை திருமணம் முடிப்பதை விட, இவனை கட்டிகிட்டு வெளி நாட்டுக்கு போய் விடலாம், நமக்கு இந்த வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும் அது தானே முக்கியம், என்றோ ஒரு நாள் திருமணம் என்று ஒன்று நடக்கத் தானே போகுது, அது இப்போவே நடந்துட்டு போகட்டும்'.............என் அப்பவிடம் சென்று" அப்பா எனக்கு சம்மதம்" என்றேன், என் அம்மாவின் முகத்தில் ஒரு பிரகாசமான ஒரு புன்னகை.

அப்போது என்னுள் இருந்த விஷ மரம் சொலிற்று ' பாரு, பாரு , உன் அக்காவிற்க்கு பக்கத்து ஊரில் நினைத்தால் பார்க்க கூடிய தொலைவில் மாப்பிள்ளை, உனக்கு மட்டும் கடல் கடந்து வாழ்க்கை, நீ தூரமான இடத்துக்குப் போவது உன் அம்மா வுக்கு எத்தனை சந்தோஷம் பார்த்தியா, என்ன அம்மா இவள்'.

இரண்டு திருமணங்களும் சிறப்பாக நடந்தது. முதலில் என் அக்காவும், அவள் கணவரும் அவள்/ என் மாமியார் வீட்டிற்க்கு காரில் சென்றனர். அம்மா "ஓ" வென்று அழ, என் அக்கா என் அம்மா வை கட்டி பிடித்துக்கொண்டு கதற......ஒருவாறாக இருவரையும் சமாதனப் படுத்தி அக்காவை வழி அனுப்பி வைத்தனர் உறவினர்கள்.

ஒரு மணி நெரம் கழித்து தான் நானும் என் கணவரும் என் புகுந்த வீட்டிற்க்கு புறப்பட வேண்டும் , ஒரே நேரத்தில் இரு தம்பதியரும் புகுந்த வீட்டிற்க்கு புறப்பட கூடாதாம், இது திருமணத்திற்க்கு வந்திருந்த சில பெருசுகளின் அறிவுரை.

அதன் படி ஒரு மணி நேரம் கழித்து நானும் என்னவரும் புறப்படும் நேரமும் வந்தது. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விடை கொடுத்து விட்டு காரினுள் ஏறும் போது தான் கவனித்தேன் என் அம்மா அந்த இடத்திலேயே இல்லை என்பதை. ' எப்படி பட்ட அம்மாவாக இருந்திருந்தாள் தன் மகள் புகுந்த வீட்டிற்க்கு போகும் போது வழியனுப்ப கூட வராமல் இருப்பாள்' என்று என்னுள் இருந்த விஷ மரம் என்னை உலுக்கியது.

" ஒரு நிமிடம் காத்திருங்கள், இதோ வந்து விடுகிறேன்" என்று என் கணவரிடம் கூறிவிட்டு காரிலிருந்து இறங்கி, வீட்டினுள் சென்றேன். என்னுள் இத்தனை நாட்கள் புதைந்திருந்த ஆதங்கம் முழுவதையும் கொட்டி தீர்த்து விட வேண்டும் என் அம்மாவிடம் என்று ஆதிரத்துடனும், ஆவேசுத்துடனும் " அம்மா, அம்மா " என்று உரக்க கத்தினேன். எஙகிருந்தும் பதில் வரவிலலை,. திருமணத்திற்க்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் என்னையும் என் கணவரையும் வழியனுப்ப வீட்டிற்க்கு வெளியில் இருந்த்ததால் வீடே வெறிச்சென்றிருந்ததது.

சமையல் அறையில் அம்மா நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு சென்றேன். அடுப்பில் எதையொ கிண்டிக் கொண்டிருந்தாள் என் அம்மா " அம்மா" என்று அழைத்தேன், அவள் திரும்பவே இல்லை.

எனக்குள் இருந்த விஷ செடி இப்போது காய் கணிகள் அனைத்தையும் ஒரு விநாடியில் தந்தது.

" நீயெல்லாம் ஒரு அம்மாவா, நீதான் என்னை பெத்தியா? இல்லை தெருவில் கிடந்து எடுத்து வளர்த்தியா?[ நான் அழகிலும், ஜாடையிலும் என் அம்மாவை அப்படியே உரித்து வைதிருந்தும், அது எனக்கு தெரிந்திருந்தும் அப்படி ஒரு வார்த்தை என் வாயிலிருந்து வந்தது] உன் பெரிய பொண்ணு கொஞ்ச நேரத்திற்க்கு முன் புறப்பட்டு போனப்போ கதறி கதறி அழுது ஆர்பாட்டம் பண்ணின, என்னை வாசல் வரை வந்து வழியனுப்ப உனக்கு மனசு வரவில்லை இல்ல?? இத்தனை வருஷம் தான் என்னை கண்டுக்காமல் அலட்சியம் பண்ணின, இப்போதான் உன்னை விட்டு கண் காணாத இடத்திற்க்கு போகிறேனே, அப்போ கூட என்னை பார்க்க உனக்கு இஷ்டம் இல்லாமல் போச்சா????, நான் போறேன், இனி உன் முகத்தில் முழிக்க போவதில்லை, இப்போ உனக்கு சந்தோஷமா?" என்று கூறிவிட்டு அறையை விட்டி வெளியேற முற்பட்ட போது,
" ரம்யா குட்டி" என்று உடைந்து போன என் அம்மாவின் குரல், அந்த குரல் என் அடி வயிற்றில் ஏதோ செய்ய, திகைப்புடன் திரும்பினேன்.....

அங்கே அழுது அழுது சிவந்துபோன என் அம்மாவின் முகம், கண்கள் வீங்கி போய் உதடுகள் துடிக்க " ரம்யா குட்டி என்னை மன்னிச்சிரும்மா, நீ என்னை விட்டு போகிறதை பார்க்க என்னால முடிலடா, என்ன செல்லம் ஆச்சரியாமா இருக்குதா அம்மா பேசுறது, "
" ரம்யா குட்டி , உன் அக்கா உஷா பிறவியிலேயே கொஞ்சம் மந்த புத்தி உள்ளவள், அவளுக்கு விபரம் பத்தாது, ஆனால் நீ எதிர்மாறாக மிகுந்த அறிவுடனும், விவேகத்துடனும் வளர்ந்தாய், உன்னை உன் அக்காவின் எதிரில் பாராட்டினால் ஏற்கனவே அறிவுத்திறன் இல்லாதவள் தாழ்மையுணர்ச்சியால் இன்னும் புத்தி மங்கி விடுவாளோ என்ற பயத்தினால் தான், ஒவ்வொருமுறை நீ வெற்றி கண்டபோதும் மனதார வெளியரங்கமாக பாராட்ட முடியவில்லை.
இரவு நீ உறங்கிய பின் உன் அறைக்கு வந்து, உன் வெற்றிக் கோப்பைகளையும் , சான்றிதழ்களையும் பார்த்து பூரித்து , உறங்கும் உன்னை உச்சி முகர்ந்து , ஆனந்த கண்ணீர் வடித்தது உனக்கு தெரியாது செல்லம்.

ரம்யா, நீ ஒரு ' அசோக மரம்' மாதிரிமா, தண்ணீர் ஊற்றாமலேயே தனக்கு தேவையான தண்ணீரை பூமியுனுள் தேடி எடுத்துக் கொண்டு தானாகவே வளரும் அசோக மரம் போல நீ எப்படியும் பிழைத்துக்கொள்வாய், வாழ்வில் உயர்ந்து விடுவாய் என்ற நம்பிகையில் தான் உன் அக்காவை ஊக்குவிப்பதிலும் , கவனிப்பதிலும் அதிக கவனம் செலுத்தினேன். எப்படியோ கல்லூரி படிப்பு வரை அவளை படிக்க வைத்து, இரண்டு வருடம் வீட்டு வேலைகளையும் சொல்லிக் கொடுத்து இன்று புகுந்த வீட்டிற்க்கு அனுப்பி விட்டேன்.
அக்காவுக்கு பக்கத்து ஊரில் மண வாழ்க்கை , நமக்கு மட்டும் வெளி நாட்டில் வாழ்க்கை என நீ யோசிக்கலாம். உன் படிப்பிற்க்கும் , திறமைக்கும் ஏற்ற உயர் கல்வியும், வேலையும், வசதியான வாழ்க்கையும் உனக்கு வெளி நாட்டில் கிடைக்கும், எங்கள் அருகாமையில்லாமலேயே உன்னால் எதையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிககையில் தான் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு உன்னை கட்டிக்கொடுக்க சம்மதித்தேன்.

எல்லாவற்றையும் நம்பிகையுடன் செய்த எனக்கு, இன்று உனக்கு விடை கொடுக்க மனதில் தைரியமும், தெம்பும் இல்லையடி கண்ணம்மா,
எப்போவேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என் மூத்த மகளை என்றபோது " சென்று வா மகளே" என்று கூறிய எனக்கு, எங்கோ கடல் கடந்து பறந்து செல்கிற என் செல்லக் கிளிக்கு விடைக்கொடுக்க என் மனசு வலிக்குதுடா, இதயம் வெடிப்பது போல் இருக்குதுமா"நா தழு தழுக்க என் தாய் பேசிக்கொண்டிருக்க,

எனக்குள் வேரூன்றி இருந்த விஷ மரம் வேறோடு மறைந்து போக, உடைந்த இதயத்துடன் , கண்ணீர் பொங்க என் தெய்வத்தின் காலில் நான் விழுந்தேன்...................





November 06, 2006

அன்புள்ள அப்பா.......



பாசமுள்ள அப்பா வுக்கு
உங்கள் செல்ல மகள் எழுதும் அன்பின் மடல்.

அப்பா, குழந்தை பருவத்தில் உங்களுடன் நான் அனுபவித்த தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.

Cycle ல் முன் bar ல் சின்ன seat மாட்டி என்னை கடைத்தெருவுக்கு அழைத்து சென்றதை மறக்க முடியுமா???

அம்மா வுக்கு தெரியாமல் எனக்கு நீங்கள் வாங்கி கொடுத்த குச்சி ஐஸ் இன்று நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது.
[ அன்று இரவு இருமலினால் நான் அவதிபட , நீங்கள் அம்மா விடம் டோஸ் வாங்கினது தனி கதை- ஆனால் இருமிக்கொண்டே இருந்த என்னை இரவு முழுவதும் உங்கள் தோளிலேயே சுமந்தீர்களே அப்பா!!!!]

நாளொரு மெனியும் பொழுதொரு வண்ணமுமாக உங்கள் செல்ல மகள் வளர்ந்து அன்றொரு நாள் ' பெரிய மனுஷி' ஆனாள்..........
அம்மா எனக்கு மஞசள் + சந்த்தனம் இட்டு, என் தலை நிறைய பூ வைத்து, தன் நகை எல்லாம் எனக்கு பூட்டி, முதன் முறையாக பட்டு பாவாடைக்கு தாவணி அணிவித்து என்னை உட்கார வைத்திருந்த போ.......என்னை பார்த்த பூரித்த உங்கள் முகத்தில், விழி ஒரம் நீர் வழிந்ததையும் நான் கவனித்தேன் அப்பா!!!

' நீ இனிமேல் பெரிய மனுஷி' என்று என்னை தனிமை படுத்தாமல் குழந்தை பருவத்தில் என்னுடன் பழகிய அதே தோழமையோடு நீங்கள் என்னுடன் பழகியபோது நான் எத்தனை பாதுகப்பாக உணர்ந்தேன் தெரியுமா????

Teen Age ல் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய hair style மாற்றிக் கொள்ள நினைப்பதும், தன் முக அழகுக்கும் way of dressing க்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பதும் எதற்க்காக?.............தன் வயது பையன்களின் கவனம் + site + comments + compliments தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.
ஆனால் , நீங்கள் நான் புது விதமாக hair style செய்தபோது, " டேய் செல்லம் இந்த hair style உனக்கு Super ஆக suit ஆகுதுடா " என்றும்.........." உனக்கு Modern Dress தான் டா பிரமாதமா இருக்கு, இன்னும் இரண்டு set dress இதே மாதிரி வாங்கிக்கோடா" என்றும் comment அடித்ததினால் எனக்கு பசங்க மேல intrest யே போகல பா!!!

ஒர் ஆண் தோழனின் இடத்தை உங்கள் அன்பும் அரவனைப்பும் நிரப்பினதால் எனக்கு 'ஆண் தொழன்' மேல் ஈடுபாடு இல்லாமல் போனதோ??

அப்பா, என்றும் உங்கள் இடத்தை என் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது, எனினும் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
என்றும் அன்புடன்
உங்கள் செல்லம்.

எதற்காக!!!!


எதற்க்கு கொடுக்க வேண்டும் கூலி........

நீ கட்டும் தாலி யை சுமக்க வேண்டும்.
உன்னை சுமந்ததால் பின்
உன் குழந்தை யை சுமக்க வேண்டும்

இத்தனை சுமைகளை நான் சுமக்க
உனக்கு கொடுக்க வேண்டும் கூலி-வரதட்சனை

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!


என் Blog read பண்ணிக்கொண்டிருக்கிற உங்களுக்கு வண்க்கம். [Blog title ல மூன்று தடவை வணக்கம் சொல்லிருக்கிறேன்னு யோசிக்கதீங்க, Sun Tv Comedy time Archana style ல வண்க்கம் சொல்லிப்பார்தேன், அதான் மூன்று தடவை உங்களுக்கு வணக்கம்]

தமிழ் typing இப்போதான் கத்துக்க அரம்பிச்சிருக்கிறேன், அதனால் என் typing ல் பிழை இருந்தால் மண்ணிக்கவும்.

'ஆசை ஆசை இப்பொழுது
தொடர்ந்து blog எழுத ஆசை இப்பொழுது............'

இப்படி மனசுக்குள்ளே பாடினாலும்,
நான் அசத்தலா daily blog எழுத VETTI யாகவும் இல்லை,
என் மனசு எப்போவும் blog எழுதுற SANTHOSH த்திலும் இருப்பதில்லை,
இங்கு என்னை பார்த்து JOLLU விடவும் அதை பற்றி நான் எழுதவும் வாய்பில்லை,......

இருப்பினும் தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன் உங்கள் ஆதரவு + உற்ச்சாகத்துடன்.