November 09, 2006

நண்பரின் முதல் விமான அனுபவம்



என் கல்லூரி நண்பர் ஒருவருக்கு ஜெர்மனியில் உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனிக்கு விமானத்தில் புறப்பட்டார் நண்பர். அவருக்கு அது தான் முதல் விமான பிரயாண அனுபவம், அதனால் மனதில் படப்படப்புடனும், ஒரு விதமான சந்தோஷத்துடனும் புறப்பட தயார் ஆனார். விமானத்திற்க்குள் ஏறும்போது விமான பணிப்பெண் விமானத்தின் வாயிலருகே நின்று பயணிகளை வரவேற்று , அவர்கள் பயணச்சீட்டை சரி பார்த்து, இருக்கை எண் இருக்கும் திசையினை சுட்டிக் காட்டி உள்ளே பயணிகளை அனுப்பிக் கொண்டிருந்தார். நம் நண்பரும் பணிப்பெண் காட்டிய திசையில் சென்று தன் இருக்கை எண்ணைக் கண்டுப்பிடித்தவர்........அதிர்ச்சியானார்.
பதைபதைப்புடன் அருகில் இருந்த பணிப்பெண்ணிடம் " மேடம், என் இருக்கை எண் 46B , ஆனால் யாரோ எனக்கு முன்னால் வந்து பெட்ஷீட் போட்டு இடம் போட்டிருக்காங்க, நான் என்ன செய்வது??" என்று கூறினார். [ நம் ஊர் பேருந்தில் ஜன்னல் வழியாக துண்டு மற்றும் கைக்குட்டை போட்டு இடம் பிடித்து பழக்கப்பட்டவர் நம் நண்பர்! அதனால் , நமக்கு முன் எவன் வந்து இடம் பிடிச்சான்னு டென்ஷன் ஆகிட்டார்]

பணிப்பெண்ணுக்கு நம் நண்பர் என்ன சொல்கிறார் என்பது புரியாமல், மற்றொரு பணிப்பெண்ணை உதவிக்கு அழைக்க, அந்த பணிப்பெண் நிலமையை புரிந்துக் கொண்டு " சார், உங்கள் இருக்கையில் இருக்கும் ஷீட்டும், சிறு தலையணையும் உங்கள் உபயொகத்திற்காக நாங்கள் உங்களுக்கு கொடுப்பது, நீங்கள் தாராளமாக உங்கள் இருக்கையில் அமரலாம், ஷீட்டையும் , தலையணையையும் உபயொகித்துக் கொள்ளுங்கள், தங்கள் பயணம் இனிதே அமையட்டும்" என்று கூறிச்சென்றாரம்.

இந்நிகழ்ச்சியை நண்பர் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட பின் விமானத்தைப் பார்த்தாலே அந்த நண்பரின் ஞாபகமும், கூடவே என்னையும் அறியாமல் சிரிப்பும் வரும்.

17 comments:

கைப்புள்ள said...

//சார், உங்கள் இருக்கையில் இருக்கும் ஷீட்டும், சிறு தலையணையும் உங்கள் உபயொகத்திற்காக நாங்கள் உங்களுக்கு கொடுப்பது, நீங்கள் தாராளமாக உங்கள் இருக்கையில் அமரலாம், ஷீட்டையும் , தலையணையையும் உபயொகித்துக் கொள்ளுங்கள், தங்கள் பயணம் இனிதே அமையட்டும்" என்று கூறிச்சென்றாரம்.//

வேடிக்கையான அனுபவம் தான்.
:))

Divya said...

\"வேடிக்கையான அனுபவம் தான்.
:)) "/

Thanks for your visit and comments kaipulla.

நாமக்கல் சிபி said...

திவ்யா, இது உங்க நண்பன் பண்ணதா இல்லை நீங்க பண்ணதா? சொல்லுங்க யாரும் தப்பா எடுத்துக்கமாட்டோம் ;)

Divya said...

\"திவ்யா, இது உங்க நண்பன் பண்ணதா இல்லை நீங்க பண்ணதா? சொல்லுங்க யாரும் தப்பா எடுத்துக்கமாட்டோம்"/

வெட்டி உங்களுக்கு ஒரு 'கோழி நண்பர் ' இருக்கிற மாதிரி எனக்கு ஒரு 'வான்கோழி' நண்பர் இருக்கக் கூடாதா?????

நாமக்கல் சிபி said...

//
வெட்டி உங்களுக்கு ஒரு 'கோழி நண்பர் ' இருக்கிற மாதிரி எனக்கு ஒரு 'வான்கோழி' நண்பர் இருக்கக் கூடாதா?????//

சரி.. நம்பிட்டோம் :-)

(கோழி மேட்டர் எல்லாம் கதைங்க... எதுவும் உண்மையில்லை :-))

நாகை சிவா said...

//(கோழி மேட்டர் எல்லாம் கதைங்க... எதுவும் உண்மையில்லை :-)) //

யோவ் என்னய்யா சொல்லுற


அட பாவி.........

நாகை சிவா said...

/வேடிக்கையான அனுபவம் தான்.
:)) //

பன்னி(funny) பீப்புள், பன்னி இன்சிடண்ட்......

:-)))))))))

வடுவூர் குமார் said...

சில பேர் அந்த பெட்சீட்டு அவுங்களுக்கு என்று நினைத்து வீட்டுக்கு எடுத்துப்போன சம்பவங்களும் காதில் விழுந்ததுண்டு.

ஜொள்ளுப்பாண்டி said...

அட திவ்யா அப்புறம் எப்படி சமாளிச்சீங்க சொல்லுங்க. பறக்குற வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்தானே ;)))))

Anonymous said...

hahaa...nala damayanthi thaan nyabagam varuthu

Unknown said...

அந்த நண்பர் உங்க முதல் விமான பயணம் பத்தி எதாவது பதிவு போட்டிருக்காரா? :))

Boston Bala said...

unreal... nevertheless funny : ))

Divya said...

\" தேவ் | Dev said...
அந்த நண்பர் உங்க முதல் விமான பயணம் பத்தி எதாவது பதிவு போட்டிருக்காரா? :)) \"

தேவ், அந்த நண்பருக்கு நீங்களே ஐடியா கொடுத்துடுவீங்க போலிருக்குதே.

லதா said...

// \" தேவ் | Dev said...
அந்த நண்பர் உங்க முதல் விமான பயணம் பத்தி எதாவது பதிவு போட்டிருக்காரா? :)) \"

தேவ், அந்த நண்பருக்கு நீங்களே ஐடியா கொடுத்துடுவீங்க போலிருக்குதே. //

நீங்களே போடுகிறீர்களா இல்லை நான் போட்டுக்கொடுத்திடவா ? :-)))

Divya said...

\"லதா said...
// \" தேவ் | Dev said...
அந்த நண்பர் உங்க முதல் விமான பயணம் பத்தி எதாவது பதிவு போட்டிருக்காரா? :)) \"

தேவ், அந்த நண்பருக்கு நீங்களே ஐடியா கொடுத்துடுவீங்க போலிருக்குதே. //

நீங்களே போடுகிறீர்களா இல்லை நான் போட்டுக்கொடுத்திடவா ? :-))) \"

லதா என்மேல் ஏன் இந்த கொலை வெறி????

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

என்னுடைய முதல் விமானப்பயனத்தில் நான் செய்த கோமளித்தனத்தை இது நினைவுபடுத்துகிறது :) விமனத்தின் Rest Room உள்ளே நுழைந்தபோது வலது பக்கத்தில் வித்யாசமாய் ஏதோ ஒன்று இருப்பதை பார்த்தேன். அது என்ன என்று அறியும் ஆவலில் நான் அதை தொட, வெளியில் இருந்து பணியாளர் ஒருவர் வேகமாய் கதவை திறந்து 'Any Problem' என்றார் பதற்றத்தோடு! நான் பேக்கு போல் முழித்தேன். பிறகு தான் தெரிந்தது அது 'Emergency' பொத்தானாம்!

தருமி said...

ஒரு விளம்பரம்: இங்கே வாங்க!