November 06, 2006

அன்புள்ள அப்பா.......

பாசமுள்ள அப்பா வுக்கு
உங்கள் செல்ல மகள் எழுதும் அன்பின் மடல்.

அப்பா, குழந்தை பருவத்தில் உங்களுடன் நான் அனுபவித்த தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.

Cycle ல் முன் bar ல் சின்ன seat மாட்டி என்னை கடைத்தெருவுக்கு அழைத்து சென்றதை மறக்க முடியுமா???

அம்மா வுக்கு தெரியாமல் எனக்கு நீங்கள் வாங்கி கொடுத்த குச்சி ஐஸ் இன்று நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது.
[ அன்று இரவு இருமலினால் நான் அவதிபட , நீங்கள் அம்மா விடம் டோஸ் வாங்கினது தனி கதை- ஆனால் இருமிக்கொண்டே இருந்த என்னை இரவு முழுவதும் உங்கள் தோளிலேயே சுமந்தீர்களே அப்பா!!!!]

நாளொரு மெனியும் பொழுதொரு வண்ணமுமாக உங்கள் செல்ல மகள் வளர்ந்து அன்றொரு நாள் ' பெரிய மனுஷி' ஆனாள்..........
அம்மா எனக்கு மஞசள் + சந்த்தனம் இட்டு, என் தலை நிறைய பூ வைத்து, தன் நகை எல்லாம் எனக்கு பூட்டி, முதன் முறையாக பட்டு பாவாடைக்கு தாவணி அணிவித்து என்னை உட்கார வைத்திருந்த போ.......என்னை பார்த்த பூரித்த உங்கள் முகத்தில், விழி ஒரம் நீர் வழிந்ததையும் நான் கவனித்தேன் அப்பா!!!

' நீ இனிமேல் பெரிய மனுஷி' என்று என்னை தனிமை படுத்தாமல் குழந்தை பருவத்தில் என்னுடன் பழகிய அதே தோழமையோடு நீங்கள் என்னுடன் பழகியபோது நான் எத்தனை பாதுகப்பாக உணர்ந்தேன் தெரியுமா????

Teen Age ல் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய hair style மாற்றிக் கொள்ள நினைப்பதும், தன் முக அழகுக்கும் way of dressing க்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பதும் எதற்க்காக?.............தன் வயது பையன்களின் கவனம் + site + comments + compliments தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.
ஆனால் , நீங்கள் நான் புது விதமாக hair style செய்தபோது, " டேய் செல்லம் இந்த hair style உனக்கு Super ஆக suit ஆகுதுடா " என்றும்.........." உனக்கு Modern Dress தான் டா பிரமாதமா இருக்கு, இன்னும் இரண்டு set dress இதே மாதிரி வாங்கிக்கோடா" என்றும் comment அடித்ததினால் எனக்கு பசங்க மேல intrest யே போகல பா!!!

ஒர் ஆண் தோழனின் இடத்தை உங்கள் அன்பும் அரவனைப்பும் நிரப்பினதால் எனக்கு 'ஆண் தொழன்' மேல் ஈடுபாடு இல்லாமல் போனதோ??

அப்பா, என்றும் உங்கள் இடத்தை என் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது, எனினும் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
என்றும் அன்புடன்
உங்கள் செல்லம்.

54 comments:

Unknown said...

தந்தை மகளுக்கான பாசப்பிணைப்பினை மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

Divya said...

தங்கள் வருகைக்கு நன்றி தேவ், உங்கள் ஊக்கமே எனது ஆக்கம்!!!

நாமக்கல் சிபி said...

//Cycle ல் முன் bar ல் சின்ன seat மாட்டி என்னை கடைத்தெருவுக்கு அழைத்து சென்றதை மறக்க முடியுமா???//
இது எனக்கும் மறக்காத ஒன்று...

ரொம்ப ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க...

நிறைய எழுதுங்க...

Divya said...

Thanks for visiting my Blog Vetti , also your encouragement is much appreciated!

லொடுக்கு said...

இந்த மாதிரி மேட்டரை அப்பாகிட்ட சொல்ல கூட ப்ளாக் பயன்படுமா!! அட்ரா அட்ரா!!

கவிதா | Kavitha said...

Divya,

You are writing very nice, and all kind of thought u r mixing together. It is a very good start. I read all your posting except your stories (which I dont have much time to read it full), keep it up, Wish you all the very best.
Hope you will give all varieties like this to us :)

Divya said...

மேட்டரை சொல்ல இன்னும் நிறைய வழிகள் இருக்கிறது லொடுக்கு

Divya said...

\" கவிதா said...
Divya,

You are writing very nice, and all kind of thought u r mixing together. It is a very good start. I read all your posting except your stories (which I dont have much time to read it full), keep it up, Wish you all the very best.
Hope you will give all varieties like this to us :) "/

Hi Kavitha thanks for visiting my blog , your comments uplifts my spirit, thanks for your encouragement, please do visit my blog again!

பங்காளி... said...

அம்மாக்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தமான இடம் அப்பாக்களுக்கு தரப்படுவதில்லை என்பதே என் எண்ணம்.....

என் அப்பா எங்களை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்...தாங்கிக்கொண்டிருக்கிறார்...
நான் அவரை விட சிறந்த அப்பாவாகவே இருப்பதாக நிணைக்கிறேன்....

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்கிற தகவல் சற்றுமுன் தெரிவிக்கப்பட்ட்டது...விடிந்ததும் முதல் ஃப்ளைட்டில் மதுரைக்கு ஓட டிக்கெட் பதிவு செய்துகொண்டிருக்கும் போது உங்கள் பதிவு.....பார்த்தேன்

என் அப்பாவுக்காக பெருமைபடுகிறேன்...ம்ம்ம்ம்ம்

ஊருக்கு போய் வந்ததும் விவரமாக பதிகிறேன்...

Divya said...

@பங்காளி

உங்கள் அப்பாவிற்க்கு உடல் நலம் பெற இறைவணை வேண்டுகிறேன், பத்திரமாக மதுரைக்குச் சென்று விட்டு, சந்தோஷமாக திரும்பி வாருங்கள்.

Syam said...

ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க..இத படிச்சதும் எனக்கும் எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சு...நான் இப்போ அவர பத்தி எழுதினாலும் படிக்க அவரு இல்ல :-(

Divya said...

\"Syam said...
ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க..இத படிச்சதும் எனக்கும் எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சு...நான் இப்போ அவர பத்தி எழுதினாலும் படிக்க அவரு இல்ல :-( /"

உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி ஷ்யாம்,

உங்கள் அப்பாவின் மறைவு எந்த அளவிற்க்கு உங்களை பாதித்திருக்கும் என நினைக்கையில் மனம் கணமாகிறது.

அன்பு said...

கொடுத்தவைத்த அப்பா, மகள். இந்த பந்தம் என்றும் தொடருட்டும்.

உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்!

கைப்புள்ள said...

//அப்பா, என்றும் உங்கள் இடத்தை என் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது, எனினும் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
என்றும் அன்புடன்
உங்கள் செல்லம்.//

அருமையா எழுதிருக்கீங்க திவ்யா. நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

ஆங்காங்கே தென்படும் எழுத்துப்பிழைகளை நீக்கி விட்டீர்களானால் இன்னும் நன்றாக இருக்கும்.

Divya said...

\"
அன்பு said...
கொடுத்தவைத்த அப்பா, மகள். இந்த பந்தம் என்றும் தொடருட்டும்.

உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்! "/

அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி,

Divya said...

\" கைப்புள்ள said...
/
அருமையா எழுதிருக்கீங்க திவ்யா. நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

ஆங்காங்கே தென்படும் எழுத்துப்பிழைகளை நீக்கி விட்டீர்களானால் இன்னும் நன்றாக இருக்கும். "/

எழுத்துப் பிழைகளை திருத்திக் கொள்கிறேன் கைப்புள்ள, உங்கள் வருகைக்கு நன்றி, என் வலைபதிவிற்க்கு அடிக்கடி விஜயம் செய்து உங்கள் கருத்துக்களை கூறவும்

We The People said...

நன்றாக உள்ளது பதிவும் விசயமும். இப்படி எழுதும் நீங்களா நான் பேச நினைப்பதெல்லாம்... சுந்தர் பதிவில் பாரதியின் கவிதையை சுந்தர் எழுதியதாய் நினைத்தது??

பெண் குழந்தைகள் எப்போது அப்பாவிடம் பாசாமாய் இருப்பார்கள் என்பதை சாட்சியாக்கியது உங்கள் பதிவு.

Divya said...

\" We The People said...
நன்றாக உள்ளது பதிவும் விசயமும். இப்படி எழுதும் நீங்களா நான் பேச நினைப்பதெல்லாம்... சுந்தர் பதிவில் பாரதியின் கவிதையை சுந்தர் எழுதியதாய் நினைத்தது??

பெண் குழந்தைகள் எப்போது அப்பாவிடம் பாசாமாய் இருப்பார்கள் என்பதை சாட்சியாக்கியது உங்கள் பதிவு\"

வருகைக்கு நன்றி 'we the people' , என் பிழையினை சுட்டிக் காட்டிய உங்கள் பண்பினை பாராட்டுகிறேன்.

Anonymous said...

திவ்யா..ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.

இத படிச்சா கஷ்டமாயிருக்கும்னு தான் இவ்வளவு நாள் படிக்கல! இன்னிக்கு பரவாயில்லைனு படிச்சுட்டேன். ரொம்ப ஃபீல் பண்ண வச்சுட்டீங்க!

-விநய்

Anonymous said...

அப்புறம் அனானி கமென்ட்ஸ் போட அனுமதித்துக்கு நன்றி!

-விநய்

மு.கார்த்திகேயன் said...

அருமையான பதிவு திவ்யா..பெண்களோட பார்வையில் அப்பா..நிச்சயம் இது இதுவரை நான் படிக்காத ஒரு கண்ணோட்டம் திவ்யா... வாழ்த்துக்கள்

மங்கை said...

அருமையா இருக்கு திவ்யா.. அப்பாவின் நினைவுகள் பற்றி நானும் ஒரு பதிவு எழுதீட்டு இருக்கிகேன்..

நீங்கள் எழுதி இருக்கிற அனுபவங்கள் எனக்கும் உண்டு.. ஏன் பல பெண்களுக்கு இருக்கும்

பாராட்டுக்கள்..

Divya said...

\"Anonymous said...
திவ்யா..ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.

இத படிச்சா கஷ்டமாயிருக்கும்னு தான் இவ்வளவு நாள் படிக்கல! இன்னிக்கு பரவாயில்லைனு படிச்சுட்டேன். ரொம்ப ஃபீல் பண்ண வச்சுட்டீங்க!

-விநய் \"

நன்றி விநய்,
ஃபீல் பண்ணி படித்ததிற்க்கு மிக்க நன்றி.

Divya said...

\"Anonymous said...
அப்புறம் அனானி கமென்ட்ஸ் போட அனுமதித்துக்கு நன்றி!

-விநய் \"

You are welcome!

Divya said...

\" மு.கார்த்திகேயன் said...
அருமையான பதிவு திவ்யா..பெண்களோட பார்வையில் அப்பா..நிச்சயம் இது இதுவரை நான் படிக்காத ஒரு கண்ணோட்டம் திவ்யா... வாழ்த்துக்கள்\"

நன்றி கார்த்திக்.

Divya said...

\"மங்கை said...
அருமையா இருக்கு திவ்யா.. அப்பாவின் நினைவுகள் பற்றி நானும் ஒரு பதிவு எழுதீட்டு இருக்கிகேன்..

நீங்கள் எழுதி இருக்கிற அனுபவங்கள் எனக்கும் உண்டு.. ஏன் பல பெண்களுக்கு இருக்கும்

பாராட்டுக்கள்.. \"

நீங்களும் அப்பா செல்லமா மங்கை?

வருகைக்கு நன்றி மங்கை.

Anonymous said...

திவ்யா. ஒரே கல்க்கல் தான் போங்க..

Divya said...

\"அகில் பூங்குன்றன் said...
திவ்யா. ஒரே கல்க்கல் தான் போங்க\"

நன்றி, நன்றி , மிக்க நன்றி அகில்!

துளசி கோபால் said...

அப்பாவோட அன்பு சரியாக் கிடைக்காமத்தான் நான் வளர்ந்திருக்கேன்(-:
எப்பவும் வேற ஊர்களில்தான். ஒரு நாலைஞ்சு முறைதான் சேர்ந்தாப்போல
ரெண்டு மூணூ நாட்கள் அப்பாவோட இருந்துருக்கேன்.

இப்ப அவர் இல்லை. ஆனா, கண்டிப்பா ஒரு சமயம் இல்லாட்டி ஒருசமயம்
அவரைச் சந்திப்பேன்( மேலேதான்)அப்ப அவர்கிட்டே(யும்) சில கேள்விகள் கேக்கணும்.

உங்க பதிவு நல்லா இருக்கு திவ்யா.

Divya said...

\"துளசி கோபால் said...
அப்பாவோட அன்பு சரியாக் கிடைக்காமத்தான் நான் வளர்ந்திருக்கேன்(-:
எப்பவும் வேற ஊர்களில்தான். ஒரு நாலைஞ்சு முறைதான் சேர்ந்தாப்போல
ரெண்டு மூணூ நாட்கள் அப்பாவோட இருந்துருக்கேன்.

இப்ப அவர் இல்லை. ஆனா, கண்டிப்பா ஒரு சமயம் இல்லாட்டி ஒருசமயம்
அவரைச் சந்திப்பேன்( மேலேதான்)அப்ப அவர்கிட்டே(யும்) சில கேள்விகள் கேக்கணும்.

உங்க பதிவு நல்லா இருக்கு திவ்யா. \"

உங்கள் மனதிலுள்ள பாரத்தின் வலியினை உங்கள் பின்னூட்டம் மூலம் அறிந்தேன், கஷ்டமாக இருந்தது.

பதிவினை பாராட்டியதற்க்கு மனமார்ந்த நன்றி.

Adiya said...

அருமையான ஒரு பதிஉ
யதார்தமான இனிபான உன்மை
உங்கள் ஆசை கைகுட என் வாழ்துக்கள்

Divya said...

\"Adiya said...
அருமையான ஒரு பதிஉ
யதார்தமான இனிபான உன்மை
உங்கள் ஆசை கைகுட என் வாழ்துக்கள்\"

Adiya, உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!

உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்!

Anonymous said...

திவ்யா... நன்றி.. எங்களின் புதிய மகாராணியிடம் நான் எப்படி பிற்பாடு நடந்துகொள்ளவேண்டும் என்று கோடுகாட்டியதற்கு மிக்க நன்றி.

Hope my daughter will write like this one day..!!

கனவுகளுடன் காத்திருக்கும் ஒரு புதிய அப்பா..

Divya said...

\"Anonymous said...
திவ்யா... நன்றி.. எங்களின் புதிய மகாராணியிடம் நான் எப்படி பிற்பாடு நடந்துகொள்ளவேண்டும் என்று கோடுகாட்டியதற்கு மிக்க நன்றி.

Hope my daughter will write like this one day..!!

கனவுகளுடன் காத்திருக்கும் ஒரு புதிய அப்பா..\"

அனானி, உங்கள் வருகைக்கு நன்றி, உங்கள் செல்ல மகளூடன் உங்கள் தந்தையுணர்வை அனுபவிக்க என் வாழ்த்துக்கள்.Enjoy your fatherhood!

நாமக்கல் சிபி said...

பல விதத்திலும் கலக்குறீங்க!

அப்பாவுக்கு மரியாதை இந்தப் பதிவு!

Divya said...

\" நாமக்கல் சிபி said...
பல விதத்திலும் கலக்குறீங்க!

அப்பாவுக்கு மரியாதை இந்தப் பதிவு! \"

சிபி, உங்கள் பாராட்டிற்கு நன்றி.

[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.]

நாமக்கல் சிபி said...

ஏதோ ஒரு ஜுவல்லரியின் விளம்பரம்.

மகளின் திருமண விழாவில் மணப்பந்தல் செல்லும் முன் மகளின் கைகளில் வளையலை அணிவித்தவாறே
நெகிழும் அப்பாவும் கண்ணீருடன் மகளும்....

"அன்புள்ள மகளே.. என்னை விட்டுச் செல்லும் நாள்..." என்ற பாடலுடன்.

எனக்கு அதுதான் நினைவிற்கு வருகிறது..

நாமக்கல் சிபி said...

//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.]
//

புரிகிறது திவ்யா! உங்கள் அப்பா கொடுத்து வைத்தவர். நீங்களும்தான். நல்லா அப்பா அமைந்தமைக்கு!

நாமக்கல் சிபி said...

//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.] //

மிகவும் டச்சிங்கான பதிவு!

Divya said...

\" நாமக்கல் சிபி said...
ஏதோ ஒரு ஜுவல்லரியின் விளம்பரம்.

மகளின் திருமண விழாவில் மணப்பந்தல் செல்லும் முன் மகளின் கைகளில் வளையலை அணிவித்தவாறே
நெகிழும் அப்பாவும் கண்ணீருடன் மகளும்....

"அன்புள்ள மகளே.. என்னை விட்டுச் செல்லும் நாள்..." என்ற பாடலுடன்.

எனக்கு அதுதான் நினைவிற்கு வருகிறது.. \:

சிபி, நானும் அந்த விளம்பரம் டி.வியில் பார்த்திருக்கிறேன், நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி.
எல்லா அப்பா, மகளும் அந்த தருணத்தை தொடதான் வேண்டும், இல்லியா??

Divya said...

\" நாமக்கல் சிபி said...
//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.]
//

புரிகிறது திவ்யா! உங்கள் அப்பா கொடுத்து வைத்தவர். நீங்களும்தான். நல்லா அப்பா அமைந்தமைக்கு\"

சிபி, எனக்கு நல்ல அப்பா அமைந்தது கடவுளின் கிருபை.

Divya said...

\" நாமக்கல் சிபி said...
//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.] //

மிகவும் டச்சிங்கான பதிவு! \"

நன்றி சிபி!

நாமக்கல் சிபி said...

//எல்லா அப்பா, மகளும் அந்த தருணத்தை தொடதான் வேண்டும், இல்லியா?? //

உண்மைதான் திவ்யா!

சமீபத்தில் எனது சகலையின் மகள் திருமணத்திற்கு சென்றபோது எனது சகலையின் கண்களிலும் இதே தவிப்பைத்தான் பார்த்தேன்.

(சமீபத்தில் என்பது நான்கைந்து மாதங்களுக்கு முன்பு)

Divya said...

\" நாமக்கல் சிபி said...
//எல்லா அப்பா, மகளும் அந்த தருணத்தை தொடதான் வேண்டும், இல்லியா?? //

உண்மைதான் திவ்யா!

சமீபத்தில் எனது சகலையின் மகள் திருமணத்திற்கு சென்றபோது எனது சகலையின் கண்களிலும் இதே தவிப்பைத்தான் பார்த்தேன்.

(சமீபத்தில் என்பது நான்கைந்து மாதங்களுக்கு முன்பு)\"

ஒரு தகப்பனின் கடமையும், கனவும் அத்தருணத்தில்தான் நிறைவேறவும் செய்கிறது.

எந்த அப்பாவிற்கும்...

விழியில் வழிய
துடிக்கும் நீர்துளியையும்..

தவிக்கும் மனதினையும்
பிரிவின் வேதனையும்..

அத்தருணத்தில் கட்டு படுத்துவது இயலாத காரியம்.

Anonymous said...

/*உனக்கு Modern Dress தான் டா பிரமாதமா இருக்கு, இன்னும் இரண்டு set dress இதே மாதிரி வாங்கிக்கோடா" என்றும் comment அடித்ததினால் எனக்கு பசங்க மேல intrest யே போகல பா*/

aaha!!
ok ok!!!
nambittean!! :P

Divya said...

\"CVR said...
/*உனக்கு Modern Dress தான் டா பிரமாதமா இருக்கு, இன்னும் இரண்டு set dress இதே மாதிரி வாங்கிக்கோடா" என்றும் comment அடித்ததினால் எனக்கு பசங்க மேல intrest யே போகல பா*/

aaha!!
ok ok!!!
nambittean!! :P\"

நம்பிட்டீங்களா CVR, குட் இப்படிதான் இருக்கனும்......திவ்யா சொல்வதை நம்பனும்!!!

வருகைக்கு நன்றி CVR!!

சிறில் அலெக்ஸ் said...

இப்டியெல்லாம் பண்ணிட்டு கல்யாணத்துக்கப்புறம் கணவனையும் அப்பாமாதிரியே இருக்கச் சொல்றது.

என்னங்க இது... (a)நியாயம்.

:)

Anonymous said...

அன்புள்ள மகளே.. என்னை விட்டுச் செல்லும் நாள்..." என்ற பாடலுடன்.

இந்த விளம்பரம் பார்க்கும் போது எல்லாம் என் மகளையும் இப்படித்தானே அனுப்ப வேண்டும் ஒரு நாள் என நினைத்து நெஞ்சு கனமாகி விடும். என் மகள் பிற.ந்த அன்று அவள் முகத்தை முதல் முதலா பார்த்த போது , இறைவா என்னை நம்பி இந்த உலகத்துக்கு வந்து இருக்கிற இவளுக்கு எல்லா அருளையும் கொடு என ப்ரார்த்தித்தேன். எனது அனைத்து உழைப்பும் அவளை மேம்படுத்தவே இருக்க வேண்டும் என்று, அவளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து, அவளுக்கு சகோதர சகோதரி பாசம் என அறிய வாய்ப்பு அளிக்காமல் விட்டேன்.ம்ம்..

நல்ல பதிவு வித்யா . பாராட்டுக்கள்.

Anonymous said...

// என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. //

அவ்வாறே அமைய வாழ்த்துக்கள்

Divya said...

\" சிறில் அலெக்ஸ் said...
இப்டியெல்லாம் பண்ணிட்டு கல்யாணத்துக்கப்புறம் கணவனையும் அப்பாமாதிரியே இருக்கச் சொல்றது.

என்னங்க இது... (a)நியாயம்.\"

சிறில் அலெக்ஸ்,
ஒரு பெண் தன் அப்பாவின் அன்பையும் , அரவனைப்பையும் தன் கணவனிடத்தில் எதிர்பார்ப்பது நியாயமானதே, அது இயற்கையும் கூட.......

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிறில் அலெக்ஸ்!!!

Divya said...

\"padippavan said...
அன்புள்ள மகளே.. என்னை விட்டுச் செல்லும் நாள்..." என்ற பாடலுடன்.

இந்த விளம்பரம் பார்க்கும் போது எல்லாம் என் மகளையும் இப்படித்தானே அனுப்ப வேண்டும் ஒரு நாள் என நினைத்து நெஞ்சு கனமாகி விடும். என் மகள் பிற.ந்த அன்று அவள் முகத்தை முதல் முதலா பார்த்த போது , இறைவா என்னை நம்பி இந்த உலகத்துக்கு வந்து இருக்கிற இவளுக்கு எல்லா அருளையும் கொடு என ப்ரார்த்தித்தேன். எனது அனைத்து உழைப்பும் அவளை மேம்படுத்தவே இருக்க வேண்டும் என்று, அவளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து, அவளுக்கு சகோதர சகோதரி பாசம் என அறிய வாய்ப்பு அளிக்காமல் விட்டேன்.ம்ம்..

நல்ல பதிவு வித்யா . பாராட்டுக்கள். \"

படிப்பவன், உங்கள் செல்ல மகள் மீது நீங்கள் பொழியும் பாசமழையை உங்கள் எழுத்தில் காண முடிகிறது!!

[எனக்கு வித்யா என்று புது பெயர் சூட்டியிருக்கிறீர்கள்.........???}

Divya said...

\"சுப்பு said...
// என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. //

அவ்வாறே அமைய வாழ்த்துக்கள் \"

சுப்பு, தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!!

C.N.Raj said...

Divya,

Fantastic....
That was a real nice Poetic presentation....

Appa Makal anbai alakaana kavithaiyai koduththirukkeengka...

Raj.

Prabhu Chinnappan said...

Yep... i accept ur point buddy. when you have someone (paticularly ur Mom or Dad) who shows special love and affection, you never fall into infactuation or attraction on the ther gender. i felt the same with my Mom. Check tis post on my blog related to this -- http://salamindia.blogspot.com/2007/05/its-all-bcoz-of-you-mummy.html