சில குடும்பங்களில் +2 முடித்த உடனே பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கமாக உள்ளது. இவர்கள் தன் பெண் பிள்ளைகளை சுலபமான கலைப் பாடங்களை எடுத்து படிக்க வைக்கலாம்.
கஷ்டப்பட்டு காலையிலும் மாலையிலும் உடல் நலம் பாதிக்கும் அளவிற்க்கு ஓடி ஓடி வந்து Practicals செய்து, Record Note தயார் செய்து , படித்துவிட்டு, இதனால் எந்த பயனும் அடையாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீததிற்க்கு மேல் உள்ளனர்.
விஞ்ஞானப் பிரிவில் எதை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தாலும், அந்தப் புத்தகத்தில் படித்தவை ஒன்று கூட வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்க்கு எந்த சந்தர்ப்பத்திலும் உதவியது கிடையாது. எந்தப் பாடத்தை எடுத்துப் படித்தாலும், பட்டம் பெற்று விட்டோம் என்ற ஒரு திருப்திதான் கிடைக்கப் போகிறது.
அதனால் வேளைக்குச் செல்லாமல் , திருமணம் முடித்து குடும்ப பொறுப்புகளை மட்டுமெ செய்ய விரும்பும் பெண்கள், கலைப் பாடங்களை எடுத்து பட்டப் படிப்பு படிக்கலாமே !!!
November 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நல்ல யோசனைதான்...
நன்றி வெட்டி
இதைத்தானே நாங்களும் சொல்றோம். அப்படி சொன்னா பொண்ணியக்கவாதிகள் அவங்க ஆயுதத்தை எடுத்துகிட்டு கிளம்பிடுறாங்களே என்ன செய்ய :))
சொல்றவிதமா சொன்னா, யாரும் ஆயுதம் தூக்கிட்டு வரமாடாங்க சந்தோஷ்.
கலைப் படிப்போ, கணிணி படிப்போ..
முடிவை அந்த பெண்தான் எடுக்க வேண்டும்.
படிச்சிட்டு வீட்டுலதான இருக்கப் போற.. அதனால இதை படின்னு யாரும் சொல்ல முடியாது.. அது படிப்பை தேர்ந்தெடுக்கும் உரிமையை அப்பெண்ணிடம் இருந்து பறித்ததாகவே இருக்கும்.
நல்ல முடிவை எடுக்க அப்பெண்ணுக்கு இப்படி வழிகாட்டலாம் அல்லவா??
//கஷ்டப்பட்டு காலையிலும் மாலையிலும் உடல் நலம் பாதிக்கும் அளவிற்க்கு ஓடி ஓடி வந்து Practicals செய்து, Record Note தயார் செய்து , படித்துவிட்டு, இதனால் எந்த பயனும் அடையாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீததிற்க்கு மேல் உள்ளனர்//
உண்மைதான்! +2 விலேயே மதிப்பெண்கள் அதிகம் பெற வேண்டும் என்ற வெறியோடு படித்து ஆண்களைக் காட்டிலும் அதிக சதவிகிதத்தில் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் கல்லூரி படிப்பு முடியும் முன்னரே திருமண ஏற்பாடுகள் செய்து படிப்புக்கு மூட்டை கட்ட வைக்கின்றனர் பெற்றோர். இந்நிலை மாற வேண்டும்.
நன்கு படிக்கும் பெண்களின் படிப்பு இப்படி நிறைய இடங்களில் வீணாகிறது.
:(
//இதைத்தானே நாங்களும் சொல்றோம். அப்படி சொன்னா பொண்ணியக்கவாதிகள் அவங்க ஆயுதத்தை எடுத்துகிட்டு கிளம்பிடுறாங்களே என்ன செய்ய //
சந்தோஷ்! நீங்கள் டார்கெட் வைக்கப் படுகிறீர்கள்!
:))
// கஷ்டப்பட்டு காலையிலும் மாலையிலும் உடல் நலம் பாதிக்கும் அளவிற்க்கு ஓடி ஓடி வந்து Practicals செய்து, Record Note தயார் செய்து , படித்துவிட்டு, இதனால் எந்த பயனும் அடையாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீததிற்க்கு மேல் உள்ளனர். //
அவர்களுடைய மக்கட்செல்வங்கள் அவற்றைப் படிக்கும்போது சந்தேகம் வந்தால் அதைத் தீர்ப்பதற்குக்கூட அந்தப் படிப்பை உபயோகித்துக்கொள்ளலாமே.
//அவர்களுடைய மக்கட்செல்வங்கள் அவற்றைப் படிக்கும்போது சந்தேகம் வந்தால் அதைத் தீர்ப்பதற்குக்கூட அந்தப் படிப்பை உபயோகித்துக்கொள்ளலாமே.//
அனானி மக்கட்செல்வங்களுக்கு உதவ கலைப்பாடங்கள் போதுமே? இவர்களைப் போன்றவர்களால் ஒரு கல்லூரி சீட் இல்லை வீணாகிறது.
//அனானி மக்கட்செல்வங்களுக்கு உதவ கலைப்பாடங்கள் போதுமே? இவர்களைப் போன்றவர்களால் ஒரு கல்லூரி சீட் இல்லை வீணாகிறது.
//
டார்கெட் கன்ஃபார்ம்டு!
இது ஒரு நல்ல தலைப்பு. ;-)
Post a Comment