November 24, 2006

கவிதையே தெரியுமா?

ப்ளாக்கில் கடிதம் எழுதியாச்சு, தொடர் கதையும் எழுதியாச்சு, இன்னும் ஒரு கவிதை எழுதனுமே, எப்படி எழுதுறது அப்படின்னு நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது, என் நண்பர் விறகு வெட்டி ஆன்லைனில் வந்தார். அவரிடம் சாட் செய்தபோது ப்ளாக்கில் கவிதை எழுதுறது எப்படி என நான் கேட்க , அவர் எனக்கு அளித்த பதில்...............கீழ்கானும் எங்கள் உரையாடலை வாசித்தால் புரியும்.

நான்: விறகு , எனக்கு ப்ளாக்கில் கவிதை எழுதனும்னு ஆசை, ஆனா என்ன எழுதுவதுன்னு , எப்படி எழுதுவதுன்னு தான் தெரில, நீ தான் ப்ளாக்கில் தில்லாலங்கடி ஆச்சே கொஞ்சம் ஐடியா கொடேன்

விறகு வெட்டி: கவிதை தானே, அது ரொம்ப சிம்பிள், நான் சொல்லி தரேன் கேளு.

நான் : சரி சொல்லு விறகு.

விறகு வெட்டி: முதல்ல கதை எழுதுகிற மாதிரி ஒரு பாரா வில் 10 அல்லது 15 வரிகள் எழுதிக்கோ, , அதை அப்படியே நாலு நாலு வரியா மடக்கி மடக்கி எழுதினா அது தான் கவிதை.

நான்: அது சரி, கதைக்கு ஒரு கரு இருக்கிற மாதிரி கவிதைக்கு என்ன கரு வைக்கலாம் சொல்லு. அப்போதான் என்னால பாராவை முதல்ல எழுத முடியும்.

விறகு வெட்டி: கவிதைக்கும் கரு வழக்கம் போல காதல் தான். ஒரு காதலன் காதலியை பார்த்து சொல்ற மாதிரி, இல்லைனா ஒரு காதலி காதலனைப் பார்த்து சொல்ற மாதிரி எழுது. சும்மா பின்னூட்டம் பிச்சிட்டு வந்து நிறைய விழுகும் பாரு உன் கவிதை பதிவிற்க்கு.

நான்: ஒரு உதாரணம் சொல்லு விறகு, நான் அப்படியே பாயிண்ட் பிடிச்சுக்கிறேன்........

விறகு வெட்டி: சரி சொல்றேன் கேட்டுக்கோ.......ஒரு காதலன் காதலி பார்த்து சொல்றான் ஓ.கே

நான் உன்னை அப்படி பார்த்தப்போ
நீ ஏன் என்னை இப்படி பார்த்த


நான் உன்னைப் பார்த்து சிரிச்சா
நீ ஏன் முகம் சுழிச்ச


நீ நடந்து வரப்போ
ஏன் மெதுவா வர
நீ ஓடி வரப்போ
ஏன் வேகமா வர.........


இப்படியே திருப்பி திருப்பி எழுது, மொத்தம் 16 வரின்னு வைச்சுக்கோ , நாலு நாலு வரியா போட்டா உனக்கு 4 பாரா கிடைக்கும் , ஒவ்வொரு பாராவுக்க்கும் நடுவுல ஒரு படம் போடு, அப்போதான் பதிவு பெருசா தெரியும், ஆனால் கவிதை வரிகள் சின்னதா இருந்தா மக்கள் கட கட ன்னு வாசிச்சுட்டு டக்கு டக்குனு பின்னூட்டம் போட்டிருவாங்க.

நான்: அந்த படம் போட நான் என்ன பண்றது விறகு??

விறகு வெட்டி: நம்ம கூகிள் எதற்க்கு இருக்கு, அதுல தேடிப் பாரு, உன் கவிதைல வருகிற வரிகளுக்கு பொறுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை , சின்ன குழந்தைகள் படம் நாலு போட்டு விடு, தத்தக்க பித்தக்க ன்னு நீ கவிதை எழுதியிருந்தாலும் மக்கள் கண்டுக்காமல் பின்னூட்டம் போட்டிடுவாங்க.

நான்: என்ன விறகு எப்பவும் பின்னூட்டத்திலேயே குறியா இருக்கிற??

விறகு வெட்டி: பின்ன பின்னூட்டம்னா சும்மாவா? என் பதிவுகள் எல்லாம் பார்த்தேயில்ல, சும்மா 40 பது, 50 பதுன்னு எகிறுது இல்ல பின்னூட்டம்.

நான்: சரி விறகு, நான் போய் கவிதை எழுதுகிற வழிய பார்க்கிறேன், கவிதை பதிவு போட்டதும் மறக்காமல் வந்து பின்னூட்டம் போட்டிடு விறகு.

விறகு வெட்டி: அதெல்லாம் கரக்கட்டா போட்டிடுவேன், உன் கிட்ட ஒன்னு கேட்கனுமே.......

நான் : என்ன விறகு , எனக்கு வருகிற பின்னூட்டதில பாதி உனக்கு கமிஷன் தருனுமா???.

விறகு வெட்டி: இல்லை, அதெல்லாம் வேண்டாம். ஏன் எப்பவும் நீ என்னோட முதல் பேரை மட்டும் சொல்லி கூப்பிடுற, கடைசி பேரை சொல்லவே மாடேன்ற??

நான்: ஓ ! அதுவா, உன்னோட கடைசி பேருல நிறைய பேரு இருக்காங்க, எதுக்கு வீண் குழப்பம்னு தான் , மத்தபடி வேர ஒன்னும் இல்ல விறகு.

42 comments:

said...

மக்களே இந்த விறகு நான் இல்லை...

நான் கவிதையும் போட்டு மக்கள கொடுமை பண்ணதில்லை... என் பதிவுல திரை விமர்சனத்த தவிர வேற எதுக்கும் படமும் போட்டதில்லை...

என்னப்பா நடக்குது இங்க?

கலாய்த்தல் திணைக்கு சிபிக்கிட்ட தானப்பா பேர கொடுத்தேன்... அங்க கொடுத்ததுக்கு இங்க எஃபக்ட்டா?

நல்லா கெளப்பறாங்கயா பீதிய!!!

said...

அப்பறம் கவிதைனு ஒன்னு ஏற்கனவே இந்த ப்ளாக்ல இருக்கே???

அத எழுதனது யாரு?

said...

\" வெட்டிப்பயல் said...
அப்பறம் கவிதைனு ஒன்னு ஏற்கனவே இந்த ப்ளாக்ல இருக்கே???

அத எழுதனது யாரு? "/

வெட்டி டென்ஷன் ஆகாதீங்க, இன்னும் ஒரு கவிதை எழுதனும்னு தானே போட்டிருகிறேன், அப்படின்னா என்ன அர்த்தம் முதல் கவிதை எழுதினது நான்னு அர்த்தம்.

said...

//நான் உன்னை அப்படி பார்த்தப்போ
நீ ஏன் என்னை இப்படி பார்த்த

நான் உன்னைப் பார்த்து சிரிச்சா
நீ ஏன் முகம் சுழிச்ச

நீ நடந்து வரப்போ
ஏன் மெதுவா வர
நீ ஓடி வரப்போ
ஏன் வேகமா வர.........//

திவ்யா,

கவிஜ சூப்பரு!

said...

//வெட்டி டென்ஷன் ஆகாதீங்க, இன்னும் ஒரு கவிதை எழுதனும்னு தானே போட்டிருகிறேன், அப்படின்னா என்ன அர்த்தம் முதல் கவிதை எழுதினது நான்னு அர்த்தம். //

டென்ஷன் எல்லாம் இல்லைங்க...
நானே அதை சும்மா கவிதைனு விளையாட்டுக்கு சொன்னேன்... நீங்களும் பெருந்தன்மையா ஆமாம்னு சொல்லிட்டீங்க :-)

அப்பறம் உங்க நண்பர் விறகு உங்களுக்கு சொல்லி தர தேவையில்லை...

நீங்க எழுதன கவிதைய அவருக்கு அனுப்புங்க... அவரா புரிஞ்சிக்குவாரு... நீங்க அவருக்கு தலைனு :-)

said...

//முதல்ல கதை எழுதுகிற மாதிரி ஒரு பாரா வில் 10 அல்லது 15 வரிகள் எழுதிக்கோ, , அதை அப்படியே நாலு நாலு வரியா மடக்கி மடக்கி எழுதினா அது தான் கவிதை.//

ஹி ஹி ஹி சரியாத்தான் சொல்லீருக்கார் :))))

said...

ஆகா சூப்பருங்க கவிதா. நிஜமாவே சில ப்ளாக் கவிதைகள படிச்சுட்டு நானும் இப்டிதான் முயற்சி பண்ணி கவிதங்கற பேர்ல உரைநடையா எழுதி வெட்டி ஒட்டி போட்டுட்டேன். :)

said...

திஸ் ஸ் எ க்ரேட் இன்சல்ட் ஆப் தி கான்ஸ்டிபேஷன் பார் தி கான்ஸ்டியூஷன் ஆப் தி இன்டியா...

வெட்டினா சும்மாவா...

said...

//திவ்யா,

கவிஜ சூப்பரு//

ராயலு ஸ்மைலி போடுங்க இல்லைனா நீங்க சீரியஸா சொல்றீங்கனு நினைச்சிடுவாங்க :-)

said...

அப்ப நானும் கவித எழுதலாம் போல இருக்கே....

சுப்பரா இருக்கு .... இருந்தாலும் விறகு வெட்டி மேல ஒரு சந்தேகம்தான் ...

said...

//நான் உன்னை அப்படி பார்த்தப்போ
நீ ஏன் என்னை இப்படி பார்த்த//

என்னா இது சந்தேகம்?? அப்படி பார்த்தா இப்படி தானே பாக்க முடியும் ?? ;))

//நான் உன்னைப் பார்த்து சிரிச்சா
நீ ஏன் முகம் சுழிச்ச//

உங்க சிரிப்பை பார்த்த அதிர்ச்சிங்க அம்மணி ;)) பார்த்து சிரிங்க இனிமே சரியா ??

//நீ நடந்து வரப்போ
ஏன் மெதுவா வர
நீ ஓடி வரப்போ
ஏன் வேகமா வர.........//

அட என்னா ஒரு சிந்தனை !! அதாக்க திவ்யாக்காவுக்கு ஒரு வரலாற்று சந்தேகம் வந்துருக்கு போல இருக்கே !!!! ;))))

ஆமா என்னா இது கவுஜயா?? கொஞ்சம் சொல்லுங்கோ :))

said...

ஹி...ஹி...கவிதை நல்லாருக்குங்க. வெறகு நல்லாத் தான் டிரெய்னிங் குடுக்காரு.
:)
இப்படியே தாங்க நானும் சின்னக் குழந்தையாருக்கறச்சே கேட்டேன். ஆனா என்னை வாழ விட்டார்களா இந்த கயவர்கள்? போகாத ஊருக்கல்லவா வழியைக் காட்டினார்கள்? உங்களுக்கு ஒரு வெட்டி...சே...வெறகு கெடச்ச மாதிரி எனக்கு ஒரு வேடன் கெடக்காம போயிட்டாருங்களே...ஆனாலும் விடுவமா...அப்படி இப்படி ஒரு கவிதை பதிவை இங்கன போட்டுப் புட்டோம்ல?

http://kaipullai.blogspot.com/2006/06/blog-post_17.html

said...

என்னமா ஐடியே குடுத்து இருக்கார் விறகு...அவரோட ஐடி குடுங்களேன்...ஆனாலும் ரொம்ப நேரம் எனக்கு இது நம்ம வெட்டி தானோனு டவுட் இருந்தது...ஆனா அவரே இல்லனு சொல்லிட்டாரே...ஏனா அவருக்கு செய்யுள் தான் தெரியும் :-)

said...

//உன்னோட கடைசி பேருல நிறைய பேரு இருக்காங்க//

அத்த்த்த்த்த்த்து.... :-)

Anonymous said...

அஹா...அஹா...
கவிதை... கவிதை!
இடையிடையே மானே, தேனே!
மயிலே குயியே ன்னு போட்டுக்கனும்!
எங்க எழுதுங்க!
உன்னை என்னிபார்க்கையில்
கவிதை மறக்குது
அதை எழுத நினைக்கையில்
பேப்பர் பறக்குது!
மேலே உள்ளவைகள் எல்லாம்
நான் உங்களுக்கு கொடுக்கும் டிப்ஸ்!
இவைகளை நன்னு பயன்படுத்தி
எங்களை நன்கு பயமுறுத்துபடி
கேட்டுக்கொள்கிறேன்...
வெட்டியை விட இந்த
கெட்டியின் கவி எப்படி?

Anonymous said...

என்ன இது, எல்லோரும் கவிதை எழுத வந்துட்டா அதெல்லாம் யாரு படிப்பா?? விறகு (வெட்டி) நல்லாத்தான் ஐடியா குடுக்கிறாரு உங்களுக்கு.

said...

இது ஏதோ wood-cutter ikkum angelikku நடைந்த Axe Story மாதிரி இல்ல இருக்கு

appadi eppadi innum இயல், இசை, நாடகம் oru sanga illakim range ikku blog run pannu ringa.

Anonymous said...

முதலில் எனது வலைக்கு வந்தமைக்கு நன்றி!

வைரமுத்துவையும் சிந்திக்க வைக்கும் விறகின் சிந்தனை.:-)

said...

\"அருட்பெருங்கோ said...
//முதல்ல கதை எழுதுகிற மாதிரி ஒரு பாரா வில் 10 அல்லது 15 வரிகள் எழுதிக்கோ, , அதை அப்படியே நாலு நாலு வரியா மடக்கி மடக்கி எழுதினா அது தான் கவிதை.//

ஹி ஹி ஹி சரியாத்தான் சொல்லீருக்கார் :)))) /"

விறகு எப்பவுமே சரியாத்தான் சொல்லுவாரு, உங்கள் வருகைக்கு நன்றி

said...

\" அனுசுயா said...
ஆகா சூப்பருங்க கவிதா. நிஜமாவே சில ப்ளாக் கவிதைகள படிச்சுட்டு நானும் இப்டிதான் முயற்சி பண்ணி கவிதங்கற பேர்ல உரைநடையா எழுதி வெட்டி ஒட்டி போட்டுட்டேன். :) "/

விறகு விட ஒரு அதி புத்திசாலியை உங்களில் காண்கிறேன் அனுசுயா!! வருகைக்கு நன்றி,

said...

\" Srikanth said...
திஸ் ஸ் எ க்ரேட் இன்சல்ட் ஆப் தி கான்ஸ்டிபேஷன் பார் தி கான்ஸ்டியூஷன் ஆப் தி இன்டியா...

வெட்டினா சும்மாவா... "/

விறகுக்காக குரல் கொடுக்க ஒரு ஜீவனா??? அடேங்கப்பா

said...

செந்தழல் ரவி said...
:) "/

வருகைக்கு நன்றி ரவி

said...

\" வெட்டிப்பயல் said...
//திவ்யா,

கவிஜ சூப்பரு//

ராயலு ஸ்மைலி போடுங்க இல்லைனா நீங்க சீரியஸா சொல்றீங்கனு நினைச்சிடுவாங்க :-) "/

விறகோட கவிதை சூப்பர்ன்னு சொன்னா உங்களுக்கு ஏன்ங்க மூக்கு வேர்க்குது??

said...

\" சுந்தர் said...
அப்ப நானும் கவித எழுதலாம் போல இருக்கே....

சுப்பரா இருக்கு .... இருந்தாலும் விறகு வெட்டி மேல ஒரு சந்தேகம்தான் ... "/

சுந்தர் நீங்களும் பேஷா கவிதை எழுதலாமே, ஆனால் கவிதை எழுதும் போது விறகின் கவிதை tips நினைவில் கொள்க!

said...

//
விறகோட கவிதை சூப்பர்ன்னு சொன்னா உங்களுக்கு ஏன்ங்க மூக்கு வேர்க்குது??//

மூக்கும் வேர்க்கல நாக்கும் வேர்க்கலங்க...

பிற்கால சந்ததியினர் எங்க ராயல நக்கல் பண்ணிட கூடாதேனுதான்...

அதுவும் அவர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் காரராச்சே ;)

said...

//ஓ ! அதுவா, உன்னோட கடைசி பேருல நிறைய பேரு இருக்காங்க, எதுக்கு வீண் குழப்பம்னு தான் , மத்தபடி வேர ஒன்னும் இல்ல விறகு.//

//மக்களே இந்த விறகு நான் இல்லை.../ நம்பிட்டோமுல்ல எப்படி வெட்டி உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது?

//மூக்கும் வேர்க்கல நாக்கும் வேர்க்கலங்க...//
இது வேறயா?

//பிற்கால சந்ததியினர் எங்க ராயல நக்கல் பண்ணிட கூடாதேனுதான்...
//

ராயாலு உஷாரு வெட்டிக்கு உன் மேல ரொம்ப பாசமா இருக்காரு :))

said...

\" ஜொள்ளுப்பாண்டி said...
//நான் உன்னை அப்படி பார்த்தப்போ
நீ ஏன் என்னை இப்படி பார்த்த//

என்னா இது சந்தேகம்?? அப்படி பார்த்தா இப்படி தானே பாக்க முடியும் ?? ;))

//நான் உன்னைப் பார்த்து சிரிச்சா
நீ ஏன் முகம் சுழிச்ச//

உங்க சிரிப்பை பார்த்த அதிர்ச்சிங்க அம்மணி ;)) பார்த்து சிரிங்க இனிமே சரியா ??

//நீ நடந்து வரப்போ
ஏன் மெதுவா வர
நீ ஓடி வரப்போ
ஏன் வேகமா வர.........//

அட என்னா ஒரு சிந்தனை !! அதாக்க திவ்யாக்காவுக்கு ஒரு வரலாற்று சந்தேகம் வந்துருக்கு போல இருக்கே !!!! ;))))

ஆமா என்னா இது கவுஜயா?? கொஞ்சம் சொல்லுங்கோ :)) "/

உங்க கவுஜைக்கு முன் இதெல்லாம் சும்மா ஜுஜுபீங்கோ!!! விறகின் கவிதை உதாரணத்தின் சாயல் எங்கோ பார்த்த மாதிரி இருக்குதா ஜொள்ளு

said...

// நடந்து வரப்போ
ஏன் மெதுவா வர
நீ ஓடி வரப்போ
ஏன் வேகமா வர.........//

அட அடா,... கவிதை சூப்ப்ர் போங்க :)

கண்டிப்பா நம்ம வெட்டி தான்னு நினைச்சேன் :)
இவளோ நல்ல ஐடியா குடுத்துர்க்காரே...

matha pathivellam paditchittu commentaren :)

said...

\" கைப்புள்ள said...
ஹி...ஹி...கவிதை நல்லாருக்குங்க. வெறகு நல்லாத் தான் டிரெய்னிங் குடுக்காரு.
:)
இப்படியே தாங்க நானும் சின்னக் குழந்தையாருக்கறச்சே கேட்டேன். ஆனா என்னை வாழ விட்டார்களா இந்த கயவர்கள்? போகாத ஊருக்கல்லவா வழியைக் காட்டினார்கள்? உங்களுக்கு ஒரு வெட்டி...சே...வெறகு கெடச்ச மாதிரி எனக்கு ஒரு வேடன் கெடக்காம போயிட்டாருங்களே...ஆனாலும் விடுவமா...அப்படி இப்படி ஒரு கவிதை பதிவை இங்கன போட்டுப் புட்டோம்ல?

http://kaipullai.blogspot.com/2006/06/blog-post_17.html "/

கைப்புள்ள உங்க கவிதை படிச்சேன், அபாரம்!அசத்தல் !! அருமை!!!

said...

\"Syam said...
என்னமா ஐடியே குடுத்து இருக்கார் விறகு...அவரோட ஐடி குடுங்களேன்...ஆனாலும் ரொம்ப நேரம் எனக்கு இது நம்ம வெட்டி தானோனு டவுட் இருந்தது...ஆனா அவரே இல்லனு சொல்லிட்டாரே...ஏனா அவருக்கு செய்யுள் தான் தெரியும் :-) "/

Syam , கண்டிப்பா விறகோட ஐடி தரேன், உங்களுக்கும் கவிதை எழுத ஆசை வந்திடுச்சா???

said...

//கைப்புள்ள உங்க கவிதை படிச்சேன், அபாரம்!அசத்தல் !! அருமை!!!//

ஐயோ அது பாரதியார் கவிதைங்க. நெட்டுலேருந்து சுட்டுப் போட்டது
:))

இதுக்கே இப்படின்னா...சொந்தமா எழுதுனா...கொண்டாங்க அந்த மகான் வெறகோட ஐடியை...அவரு கிட்ட போயி பாலபாடம் படிச்சிக்கிறேன்.

said...

\"Arunkumar said...
// நடந்து வரப்போ
ஏன் மெதுவா வர
நீ ஓடி வரப்போ
ஏன் வேகமா வர.........//

அட அடா,... கவிதை சூப்ப்ர் போங்க :)

கண்டிப்பா நம்ம வெட்டி தான்னு நினைச்சேன் :)
இவளோ நல்ல ஐடியா குடுத்துர்க்காரே...

matha pathivellam paditchittu commentaren :) /"

வருகைக்கு நன்றி அருண், மீண்டும் வருக!

Anonymous said...

Ada kavithai eshutha ippadi oru idea irukka , thanks ;)

said...

\" கைப்புள்ள said...
//கைப்புள்ள உங்க கவிதை படிச்சேன், அபாரம்!அசத்தல் !! அருமை!!!//

ஐயோ அது பாரதியார் கவிதைங்க. நெட்டுலேருந்து சுட்டுப் போட்டது\"

:))

நெட்டிலிருந்து சுட்டு போட்டதா?? இதுவும் நல்ல ஐடியாவா இருக்குதே!

said...

\"C.M.HANIFF said...
Ada kavithai eshutha ippadi oru idea irukka , thanks ;)\"

You are most welcome Haniff.

said...

ஏ.பி நாகராஜன் திருவிளையாடல்ல விறகைப் பத்தி ஒரு வசனம் எழுதினாரம்மா - மறக்கமுடியாத வசனம்:
"ஒரு விறகை எரிச்சா உன் கல்யாணத்தை முடிசிப்பிடலாம்!"
"இன்னொரு விறகை எரிச்சா ?"
"உன் கதையையே முடிச்சிப்பிடலாம்"
---------------------------------

உங்க விறகு நண்பர் யாரம்மா?
எல்லாத்துக்கும் பதில் வைத்திருக்கிறாரே!

அடுத்ததாக - "அத்தனை பேரையும் அசத்தும்படியாக அல்லது பின்னூட்டம்போடும்படியாகப் பதிவுபோடுவது எப்படி?" என்று கேட்டு எழுதுங்கள்
SP.VR.Subbiah

said...

\" SP.VR.SUBBIAH said...
ஏ.பி நாகராஜன் திருவிளையாடல்ல விறகைப் பத்தி ஒரு வசனம் எழுதினாரம்மா - மறக்கமுடியாத வசனம்:
"ஒரு விறகை எரிச்சா உன் கல்யாணத்தை முடிசிப்பிடலாம்!"
"இன்னொரு விறகை எரிச்சா ?"
"உன் கதையையே முடிச்சிப்பிடலாம்"
---------------------------------

உங்க விறகு நண்பர் யாரம்மா?
எல்லாத்துக்கும் பதில் வைத்திருக்கிறாரே!

அடுத்ததாக - "அத்தனை பேரையும் அசத்தும்படியாக அல்லது பின்னூட்டம்போடும்படியாகப் பதிவுபோடுவது எப்படி?" என்று கேட்டு எழுதுங்கள்
SP.VR.Subbiah \"

வருகைக்கு நன்றி, அசத்தல் பதிவு எழுதுவது எப்படின்னு என் நண்பர் கிட்ட கேட்டு , அதை பதிவிடுகிறேன்.

said...


ன்
று


இக்கவிதை மூலம் தெரிய வரும் செய்திகள்...

1. நன்று என்று சொல்லக்கூடியவர், அதுவும் எழுத்துக்களை ஒன்றின் கீழ் ஒன்றாக போடுபவர் நிச்சயம் கவிஞராக இருப்பார்...

2. இந்த கவிதையை அவர் இங்கு இட்டு இருப்பதால் அனேகமாக அவர் இந்த இடுகையை சிலாகித்திருக்கிறார்...

3. இந்த மூன்று எழுத்து கவிதை மூலம் அவர் இந்த இடுகையை மட்டும் அல்லாது இந்த பக்கங்கள் யாவையும் சிலாகித்திருப்பதாக தெரிகிறது..

4. நன்று என்ற கவிதையில் இருக்கும் கனத்தை கவனிக்கவும்... இதன் உட்பொருள் மிக நுட்பமானது... இதன் மூலம் கவிஞர் தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போவது புலப்படும்

5. இக்கவிதை முன், பின் நவீனத்துவங்களை தாண்டி கருத்தியல் தளத்தில் இயங்குவது தெற்றென விளங்கும்...

6. இக்கவிதையை இங்கு இணையத்தில் இட்டதன் மூலம் கவிஞர் கணிப்பொறி இயக்கும் திறம் பெற்றுள்ளது தெற்றென விளங்கும்...

7. இங்கு அவர் சாத்வீகன் என்ற பெயரில் பின்னூட்டியுள்ளமையால் இவருக்கு கட்டாயம் ஒரு வலைத்தளம் இருக்கக் கூடும். நிச்சயம் அங்கு கவிதை என்ற பெயரில் ஏதேனும் கிறுக்கப் பட்டிருக்கலாம்...


அட... அட ஒரு சிறு கவிதை இத்துணை விடயங்களை தன்னுள் இணைத்துள்ளது எனில் இந்த நவீன கவிதையின் ஆழமும் அதன் வீச்சும் எத்தனை தொலைவு இருக்க கூடும்...

said...

சாத்வீகன்,

உங்கள்
திறனாய்வு
கண்டு
நான்
மெய்சிலிர்த்தேன்!

உள்ளம்
பூரித்தேன்!
ஆஹா!
அருமை!
அற்புதம்!


ன்
று!


ன்
று


ந்



வி
தை!

said...


ன்
றி

சிபி


ன்
றி

திவ்யா

said...

நன்றி சாத்வீகன்,

\". இங்கு அவர் சாத்வீகன் என்ற பெயரில் பின்னூட்டியுள்ளமையால் இவருக்கு கட்டாயம் ஒரு வலைத்தளம் இருக்கக் கூடும். நிச்சயம் அங்கு கவிதை என்ற பெயரில் ஏதேனும் கிறுக்கப் பட்டிருக்கலாம்...\"

[விளம்பர கட்டணம் வசூலிக்கபடும் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.]

said...

ஆஹா..அற்புதம்!அபாராம்!! :)
இப்படி டிப்ஸ் கொடுக்கிற விறகு இருக்கும் வரை நீங்க தைரியமா கவிதையா எழுதி தள்ளலாம்,துள்ளலாம்..

இன்று என்னை சிரிக்க வைத்த பதிவு!