November 22, 2006
ரயில் சிநேகம் - 3
பாகம்- 1
பாகம்-2
"பிரீத்தி" அம்மாவின் குரல் கேட்டு தன் கைப்பைகளுடன் ரயில் நிலையத்திற்க்கு புறப்பட்ட பிரீத்தி நின்றாள், " பிரீத்திமா" அம்மாவின் குரல் இப்போது கண்ணீருடன் உடைந்து வெளி வந்தது, அந்த குரல் பிரீத்தியின் கோபத்தையும் வைராக்கியத்தையும் உடைத்தாலும், அதனை வெளிக்காட்டாமல் திரும்பி அம்மாவை நோக்கினாள் பிரீத்தி.
"பிரீத்திமா, என்னை மன்னிச்சிடு, உன்கிட்ட பொய் சொல்லி வரவழைத்தது என்னோட தப்புதான்மா, உன் ஆசை படி ஒரு வருடம் கழித்தே கல்யாணத்தை வைச்சுக்கலாம். இப்போ அப்பாவோட மரியாதைக்காக வருகிற மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு நமஸ்காரம் மட்டும் பண்ணிடுமா......" என்று கூறி மகளை சமாதனப்படுத்தி வீட்டிற்க்குள் அழைத்துச் சென்றாள் பிரீத்தியின் அம்மா.
"டேய் பிரேம், நாங்க உன் கிட்ட பெண் பார்க்க போற விஷயத்தை கடைசி நேரத்தில சொல்றது தப்புதாண்டா, அதுக்காக இப்படி கோபபட்டு உடனே கிழம்பினா என்ன அர்த்தம். இன்றைக்கு பெண் பார்க்க வருகிறோம்னு அப்பா அந்த பெண் வீட்டிற்க்கு வாக்கு கொடுத்துடாங்க பிரேம், அப்பாவின் மரியாதைக்க்காக சும்மா வந்து பெண்ணை பார்த்துட்டு வந்திடலாம்டா, உன் இஷ்டம்போல ஒரு வருடம் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம்........" என்று ஒருவாறாக பிடிவாதமான தன் மகனை சமாதானப் படுத்தினார் பிரேமின் அம்மா.
அம்மாவின் வற்புறுத்தலினால் பெண் பார்க்க புறப்பட்டான் பிரேம். அவர்கள் சென்ற கார் பாதி வழியிலேயே டயர் பஞ்சர் ஆனது. டிரைவர் டயர் மாற்றிக் கொண்டிருக்கும் போது " அம்மா, பாரும்மா சகுனமே சரியில்லை, டயர் பஞ்சர் ஆகிடுச்சு, [ அம்மாவின் பலவீனம் தெரிந்திருந்தது பிரேமுக்கிற்க்கு] பேசாம பொண்ணு வீட்டிற்க்கு ஃபோன் பண்ணி சொல்லிடலாம்மா நாம வரலீன்னு, இப்படியே திரும்பிப் போய்டலாம்மா" என்று பலவாறு தன் அம்மாவின் மனதை மாற்ற முயன்றான் பிரேம், எதுவும் செயல் படவில்லை. ஒருவழியாக பெண் வீட்டை சென்றடைந்தார்கள்.
பிரீத்திக்கு அவள் அத்தை மகள் ப்ரியா அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள், பிரீத்தியோ எந்தவித ஈடுபாடும் இல்லாமல் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள். வீட்டிற்க்கு வெளியில் கார் நிற்க்கும் சத்தம் கேட்டு ப்ரியா வீட்டின் வாசலுக்கு விரைந்தாள்.
சிறிது நேரத்தில் பிரீத்தியின் அறைக்குள் ஓட்டமாக ஓடி வந்தாள் ப்ரியா " பிரீத்தி மாப்பிள்ளை வந்தாச்சு, பிரீத்தி மாப்பிள்ளை சூப்பரா இருக்காரு, அவர் பார்க்க மா..........." அவள் முடிக்கும் முன் இடைமறித்தாள் பிரீத்தி " போதும் ப்ரியா, ரொம்ப கத்தாதே, போய் உன் வேலையை பாரு" என்று எறிந்து விழுந்தாள் ப்ரீத்தி,
உற்ச்சாகத்துடன் வந்த ப்ரியாவின் முகம் வாடியது" நானும் பார்த்துட்டே இருக்கிறென் நீ இன்றைக்கு சரியே இல்லை, என்னாச்சு உனக்கு, நீ ரொம்ப மாறிட்டே பிரீத்தி" என்று கூறி அறையை விட்டு வெளியேறினாள் ப்ரியா.
பெண் வீட்டிற்க்கு முன் கார் நின்ற பின்பு கூட பிரேமிற்க்கு திரும்பி போய் விடலாமா என்று தோன்றியது, கார் இருக்கையின் பின் தலை சாய்த்து ஒரு நிமிடம் கண் மூடினான், பளிச்சிட்டது ' அந்த முகம்' அவன் மணக்கண்ணில்.
"பிரேம்" என்று அம்மாவின் குரல் கேட்டு தன் நிலைக்கு வந்தான் பிரேம், காரிலிருந்து அனைவரும் இறங்க, " வாங்க, வாங்க " என்று பலத்த உபசரிப்பு பெண் வீட்டாரிடமிருந்து.
யாருக்கும் சரியாக பதில் வணக்கம் கூறவில்லை பிரேம். இறுக்கமான முகத்துடன் பெண் வீட்டிற்க்குள் நுழைந்து அவனிடம் சுட்டிக் காட்டபட்ட இருக்கையில் அமர்ந்தான்.
"நிமிர்ந்து உட்காருடா" என்று அவன் அம்மா காதில் கிசு கிசுக்க தலை நிமிர்ந்தான் பிரேம். அவனுக்கு எதிரில் இருந்த சுவற்றில் பளிச்சிட்டது ' அவள் பிம்பம்'.
ப்ரியா அறையிலிருந்து சென்றுவிட, 'ஏன் எனக்கு இவ்வளவு கோபம் , எறிச்சல் எல்லாம் வருது', "கடவுளே' என்று கண்களை மூடினாள் பிரீத்தி , 'அந்த முகம்' பளிச்சிட்டது பிரீத்தியின் மணக்கண்ணில், " மின்னலே படத்துல வருகிற ரீமா சென் மாதிரி ஆகிட்டேனே" என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் அம்மா அறையினுள் வந்தாள்.
"பிரீத்தி , மாப்பிள்ளைக்கு உன்னிடம் தனியாக பேச வேண்டுமாம், அப்புறமா நீ ஹாலுக்கு வந்து எல்லாருக்கும் நமஸ்காரம் சொன்னா போதும், இப்போ இங்க வருவாரு, பேசிடு..." என்று இவள் பதிலுக்கு கூட காத்திராமல் அறையிலிருந்து வெளியேறினாள் அவள் அம்மா.
' என்ன ஆளு இந்த மாப்பிள்ளை பையன், அதான் கொஞ்ச நேரத்துல பொண்ணை காண்பிக்க போறாங்களே, அப்போ பார்த்துக்கலாம்னு பொறுமையா இருக்கத் தெரில, அவசரக் குடுக்கை ஆட்டம் பார்க்கிறதிற்க்கு முன்னமே தனியா பேசனுமாம், சரியான அலைஞ்சானா இருப்பான் போலிருக்கு' என்று மனதிற்க்குள் பிரீத்தி வசைபாடிக் கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியே வெளியில் நோக்கிக் கொண்டிருந்தாள்.
" எக்ஸ்கூஸ்மீ, ஒரு எக்ஸ்ட்ரா சப்பாத்தி பார்சல் கிடைக்குமா???" ...........
அதே குரல்!!!!!
அடிவயிற்றில் பட்டாம் பூச்சுகள் பறக்க
இதயத் துடிப்பு அதிவேகமாக அடிக்க
கைகால்கள் நடுங்க
உதடுகள் துடிக்க
கண்கள் பட படக்க..........
திரும்பினாள் பிரீத்தி,
அங்கே 'அவன்' வாயிலின் நிலைப்படியில் சாய்ந்துக் கொண்டு இரு கரங்களையும் கட்டிக் கொண்டு நின்றான்.
காண்பது கனவா நினைவா என்று என்று பிரித்தி திகைக்க, மறுபடியும்" சப்பாத்தி பார்சல் கிடைக்குமா??" என்று கண்களைச் சிமிட்டினான்.
காதல் வாகனத்தில்
திருமண பந்தத்தில்
இனிதே தொடர்ந்தது அவர்கள் பயணம்...........
Subscribe to:
Post Comments (Atom)
62 comments:
ஒரு வழியாக கதையை முடித்துவிட்டேன், விட்டா தொலைக்காட்ச்சி தொடர் போல இழுவையாக இருக்குமோன்னு நிறைய பேருக்கு சந்தேகம் வந்தது நியாயமே!
தங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப் படுகின்றன!
ம்... அப்பாடா!... ரயில் சிநேகம் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக முடிந்தது மகிழ்ச்சி.
கதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.
\"சத்தியா said...
ம்... அப்பாடா!... ரயில் சிநேகம் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக முடிந்தது மகிழ்ச்சி.
கதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். /"
நன்றி சத்தியா.
கலக்கிட்டீங்க திவ்யா!!!
நல்லா இளமை துள்ளலா இருக்குதுங்க...
தொடர்ந்து இந்த மாதிரி நிறைய எழுதுவும்!!!
\"வெட்டிப்பயல் said...
கலக்கிட்டீங்க திவ்யா!!!
நல்லா இளமை துள்ளலா இருக்குதுங்க...
தொடர்ந்து இந்த மாதிரி நிறைய எழுதுவும்!!! "/
நன்றி வெட்டி, 'your comments are my rewards'
அட்ரா சக்கை
அட்ரா சக்கை!
வாவ்...வாவ்....
கல...கல...கலக்கீட்டீங்கப்பா..
கதை அட்டர் பழசுதான்
ஆனா,
சொன்னவிதம்
சூப்பரோ சூப்பர்!
எதிர்பார்த்த முடிவென்றாலும்
விருவிருப்பாகச் சென்றது!
இயக்குனராக
இருக்கிறது எல்லா தகுதியும்
சென்னை பக்கம்
சென்றுவிட்டு வாருங்களேன்!
கதையின் இறுதியில்
ஆனந்த கண்ணீர்கூட
அடியேனுக்கு வந்தது!
ஆயிரம் வாழ்த்துக்கள்!
திவ்யா
நல்ல கதை காதலுடன் !!! ஒரு திரைக்கதைக்கு தேவையான அனைத்துகளுடனும் !! நல்ல முயற்சி !! பாராட்டுகள் திவ்யா !! :))
எப்படியோ ரெண்டு பேரயும் சேத்து வெச்சு சுபம் போட்டுட்டீங்க...எழுதிய விதமும் ரொம்ப நல்லா இருந்தது...அடிக்கடி இந்த மாதிரி எழுதுங்க :-)
எல்லோரும் சொன்னது போல, நல்ல முயற்சி. தொடர்ந்து முயலவும்...
\" பிரியமுடன் பிரேம் said...
அட்ரா சக்கை
அட்ரா சக்கை!
வாவ்...வாவ்....
கல...கல...கலக்கீட்டீங்கப்பா..
கதை அட்டர் பழசுதான்
ஆனா,
சொன்னவிதம்
சூப்பரோ சூப்பர்!
எதிர்பார்த்த முடிவென்றாலும்
விருவிருப்பாகச் சென்றது!
இயக்குனராக
இருக்கிறது எல்லா தகுதியும்
சென்னை பக்கம்
சென்றுவிட்டு வாருங்களேன்!
கதையின் இறுதியில்
ஆனந்த கண்ணீர்கூட
அடியேனுக்கு வந்தது!
ஆயிரம் வாழ்த்துக்கள்! "/
நன்றி பிரேம், உங்கள் ஊக்கம் எனது வெற்றி பதக்கம்!!
[ நீங்க திரை படம் தயாரிக்கிறதா இருந்தா சொல்லுங்க, கதை, திரை கதை எல்லாம் இலவசமா எழுதி தரேன்]
\" Naveen Prakash said...
திவ்யா
நல்ல கதை காதலுடன் !!! ஒரு திரைக்கதைக்கு தேவையான அனைத்துகளுடனும் !! நல்ல முயற்சி !! பாராட்டுகள் திவ்யா !! :)) "/
நன்றி நவீன் !
\"Syam said...
எப்படியோ ரெண்டு பேரயும் சேத்து வெச்சு சுபம் போட்டுட்டீங்க...எழுதிய விதமும் ரொம்ப நல்லா இருந்தது...அடிக்கடி இந்த மாதிரி எழுதுங்க :-)
"/
நன்றி ஷ்யாம், சிறுகதை தான் இனிமேல் எழுதலாம்னு இருக்கிறேன், தொடர் கதை ரொம்ப நீளமா மெகா சீரியல் மாதிரி ஆகிடுது
!!! Ohh my god....enna oru coincidence... car tyre puncture..abasagunam dialogue...veetai vitu odi varathu....hahah...haiyo..chancela ponga....ivlo similarana storya...!!!soooperapu
\" Srikanth said...
எல்லோரும் சொன்னது போல, நல்ல முயற்சி. தொடர்ந்து முயலவும்... /"
நன்றி ஷிரீகாந்த், தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன்
\"gils said...
!!! Ohh my god....enna oru coincidence... car tyre puncture..abasagunam dialogue...veetai vitu odi varathu....hahah...haiyo..chancela ponga....ivlo similarana storya...!!!soooperapu "/
naanum unga blog la story paarthein, nambavey mudileenga, evlo coincedence , even in names.......achariyaama than irukirathu
இந்த புதிய பதிவர் வரும்போதே அழகாக பின்னூட்ட கயமை செய்ய கற்றுக்கொண்டார்..
ஆயிரம் பின்னூடம் வாங்கி அபூர்வ சிந்தாமணியாக வாழ்த்துக்கள் !!!
கதை நன்று, வாழ்த்துக்கள் !
ஒ...ஒகோ...அப்படியா, ரொம்ப நன்றி, நல்ல ஐடியாதான்!
இருக்கட்டும், கதை, திரைகதை எல்லாம் இலவசமா எழுதிகொடுத்துட்டு கூடவே ஒரு முழ துண்டோ அல்லது கயிரோ தருவீங்கதானே! எது உதவுதோ இல்லையோ கடைசியில் அதுவாது உதவுமில்ல....ஹ..ஹ...ஹா...ஹாஆ
திவ்யா கதை நல்லா இருந்துச்சுங்க, முதல்ல புடிங்க பாராட்டுக்களை.
கதை முடிவு நான ஊகித்த "பல" முடிவுகளில் ஒன்று தான் என்றாலும் கொண்டு சென்ற கோணம் வேறுபட்டது. எனக்கென்னமோ சீக்கிரம் கதை முடிந்த மாதிரி ஒரு உணர்வு, இன்னும் 3 அல்லது 4 பாகம் போகும்னு நினைச்சிருந்தேன்.
ரயில் "மெதுவா" கிளம்பி "வேகமெடுத்து" "சட்டுன்னு நின்னுடுச்சு". ரயில் இன்னும் கொஞ்ச தூரம் போயிருக்கலாம்.
திவ்யா,
சீக்கிரமா முடிச்சிட்டிங்க.. நல்லா விறுவிறுப்பா துவங்கியது முடிவு கொஞ்சம் சாதாரணமா முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் வெச்சி இருக்கலாம் அப்படின்னு தோணுது :))(i might be wrong since im a lover of thrillers :)) ). ஆனா எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு. குறும்பன் சொன்னது போல started fast but suddenly ended. முதல் முயற்சி அப்படின்னு நம்புவது கடினம் தான், அந்த அளவிற்கு வந்து இருக்கு கதை.
\"
போலீஸ்காரன் said...
இந்த புதிய பதிவர் வரும்போதே அழகாக பின்னூட்ட கயமை செய்ய கற்றுக்கொண்டார்..
ஆயிரம் பின்னூடம் வாங்கி அபூர்வ சிந்தாமணியாக வாழ்த்துக்கள் !!!"/
நன்றி போலீஸ்காரன், பின்னூட்ட கயமை னா என்னங்க?????
\" செந்தழல் ரவி said...
கதை நன்று, வாழ்த்துக்கள் ! "/
ரவி உங்கள் வாழ்த்துக்கு நன்றி
\" குறும்பன் said...
திவ்யா கதை நல்லா இருந்துச்சுங்க, முதல்ல புடிங்க பாராட்டுக்களை.
கதை முடிவு நான ஊகித்த "பல" முடிவுகளில் ஒன்று தான் என்றாலும் கொண்டு சென்ற கோணம் வேறுபட்டது. எனக்கென்னமோ சீக்கிரம் கதை முடிந்த மாதிரி ஒரு உணர்வு, இன்னும் 3 அல்லது 4 பாகம் போகும்னு நினைச்சிருந்தேன்.
ரயில் "மெதுவா" கிளம்பி "வேகமெடுத்து" "சட்டுன்னு நின்னுடுச்சு". ரயில் இன்னும் கொஞ்ச தூரம் போயிருக்கலாம். "/
நன்றி குறும்பன், இன்னும் கொஞ்ச தூரம் ரயில் போயிருக்கலாம் தான், ரொம்ப போர் அடிச்சிடோமோன்னு தான் சுபம் போட்டுட்டேன். உங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி
\"சந்தோஷ் said...
திவ்யா,
சீக்கிரமா முடிச்சிட்டிங்க.. நல்லா விறுவிறுப்பா துவங்கியது முடிவு கொஞ்சம் சாதாரணமா முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் வெச்சி இருக்கலாம் அப்படின்னு தோணுது :))(i might be wrong since im a lover of thrillers :)) ). ஆனா எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு. குறும்பன் சொன்னது போல started fast but suddenly ended. முதல் முயற்சி அப்படின்னு நம்புவது கடினம் தான், அந்த அளவிற்கு வந்து இருக்கு கதை.
"/
நன்றி சந்தோஷ், இன்னும் கொஞ்சம் thrilling ஆ கொண்டு போயிருக்கலாம் தான், அடுத்த கதை முயற்ச்சியில் அப்படி எழுதிப்பார்க்கிறேண்,
நம்புங்க சந்தோஷ், கதை எழுதுவது இதுவே முதல் முறை எனக்கு.
மூன்றும் பாக கதைய சுபம் மா முடிச்சுக்கு நன்றி. அது என்ன மொ தெரில இங்க இந்த காதலனும்/ழீஉம் கடைசில்லா கலயன்ம் பண்ணுனா தான் ஒரு இன்பம். எல்லாம் ஒரு சின்ன சின்ன ஆசை தான்
very good story. Congrajulations on a good job. Now my question.
Please clarify..i really need to know. I was under the assumption that a female's perspective of love is differant from a man's perspective. Let me explain. I just read a story in vettipayal. His story is what most of the boys dream. I can safely say that. You see,u like and u love. If the girl doesn't love, another month another girl another love. That was his story about...in his story the love initating process was very easy. There was no reason why two people love each other. No strong reasons. Don't take me wrong. I loved that story and its tough to write a story (I can't write 2 words that make sense and i would never criticize people who can do that) ...but things doesn't happen that way in real world. So when I saw ur story, I thought it will be more indepth and in accordance with real world since you are a women(...i assumed u r a women from ur name and avatar...if thats wrong....i will send u flight ticket...u can come directly and hit me in my head). Like, why ur heroin likes ur hero. I thought ladies always needed more character and attitude along with looks. But it was like a regular guys dream which to put simply is more infactuation than love(There are always exceptions...in my case Iam just talking about the majority). So is my assumption that the thinking process of a girl and a man regarding love is differant was wrong.
I had a lot of friends who loved or atleast beleived they were in love. And as usual as the only non loving sensible person in group, I was always the unfortunate looser who has to listen to their drunken ramblings(in my friends term ' feelings machi feelings'). Thats why I wanna no about the womens perspective of love. But from ur story I don't see much diference between male and female. just thougt I would get a little perspective. Didn't mean to hurt any one. By the way I am realizing this mail is getting too long...see ya
(PS : No Tamil Font installed in machine)
oru recommendation vandhadhunala indha kadhaiya padichen....
super....nalla velai anandha vigadan madhiri illama "sandhosamana" ending kudutheenga....
@ Wyvern
Hi Wyvern, thanks for your visit to my blog and posting ur comments .
Let me answer your question now, first of all let me make it clear to you, its just an imaginary story, a story is a story........I didnt put myself or a generalised girl's view on love in to the heroine's charachter in this story. Anyway, let me explain something to you, in the story both that boy and girl were forced into a stage to take a huge decision in selecting their partners by their parents when both their mind were struggling to balance their thoughts going on then . Both of their mind didnt sparkle at the first sight " hey this is the boy/gal for you , just go for it and get him/her at any cost", if that had hapnd their approach and conversation must have been really different during their journey, they moved just like a co passenger, didnt even get/give any other personal details, so there were no such intentions when they were travelling, once they start missing each other and the other persons face flashes in their mind they were just wondering if thats an attraction or love, at the same time they were ending up in a proposal through their parents, they were rude and turning back to their parents just because they were not in a clear mind to take a decision then, But coincedently they hapnd to meet again and share their life thereafter........so I think this is not just a love at first sight, sometimes.....its hard to forget some people we come across, thats what hapnd to them too.
One more thing, both the charachters didnt say that they will not marry any of their parent's choice, just they needed some time to get out of the wavery mind they had at that time.
\"Random Thoughts said...
(PS : No Tamil Font installed in machine)
oru recommendation vandhadhunala indha kadhaiya padichen....
super....nalla velai anandha vigadan madhiri illama "sandhosamana" ending kudutheenga.... /"
Thanks for visiting my blog Random thoughts,
Ungala en blog ku recommend paninavangalukku en manamarntha nandrikalai marakkamal solidunga.
கதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்!
Wyvern said...
//in his story the love initating process was very easy. There was no reason why two people love each other. No strong reasons. Don't take me wrong.//
Hi Wyvern,
I hope you haven't read my other stories (like Golti, Pirivu, Thooral... I'm not blowing my trumpet)
I hope you are saying it from my last story (Nellikaai). The persons in love so far (Karthik and Raji) are not much important to that story and who knows, they might have some affairs from college. I'm not bothered about their luv. You can understand that from the forth coming parts...
Can you tell me whether Arun and Deepa are in luv as of now? U can't bcos even I don't know. This is the fact.
You can never say any reason for luv :-) (As far as I know through my friends)
I dont want to comment anything on Divya's story since I have given enough Comments :-)
One more thing.. Nanba, namma kathai vimarsanatha namma blogla vechikelame... vera blogla sonna naan eppadi vilakam koadukarathu :-))
Divya,
உங்க வலைப்பூல நம்ம கதைக்கு விளம்பரம் கொடுக்கற மாதிரி ஆனதுக்கு கொஞ்சம் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க ;)
எங்களுக்கும் ஏதாச்சும் கேரக்டர் குடுத்து
(சைட் ரோலாவது) ஒரு கதை எழுதுங்களேன்!
\"நாமக்கல் சிபி @15516963 said...
கதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்!"/
சிபி உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, தொடர்ந்து எழுத நீங்கள் தந்த ஊக்கம் எனது உற்ச்சாகம்.
@ வெட்டி
\"
Divya,
உங்க வலைப்பூல நம்ம கதைக்கு விளம்பரம் கொடுக்கற மாதிரி ஆனதுக்கு கொஞ்சம் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க ;) /"
பரவாயில்லை வெட்டி, உங்கள் விளக்கம் தெளிவாக இருக்கிறது, Wyvern விளக்கத்தை படிப்பார்ன்னு நம்புகிறேன்.
[விளம்பர கட்டனம் தனியா வசூலிக்கலாமான்னு யோசிச்சுட்டு இருக்கிறேன்.]
\" ஆவி அண்ணாச்சி said...
எங்களுக்கும் ஏதாச்சும் கேரக்டர் குடுத்து
(சைட் ரோலாவது) ஒரு கதை எழுதுங்களேன்! "/
எழுதிட்டா போச்சி அண்ணாச்சி, வருகைக்கு நன்றி ஆவி!!
//எழுதிட்டா போச்சி அண்ணாச்சி, வருகைக்கு நன்றி ஆவி!!
//
கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆவியுலக எழுத்தாளர் பிரதிநிதி திவ்யா அவர்கள் வாழ்க!
I dun think that this story needs this much comments or credit. Its a good effort and try. But there are many other good things which are not being noticed or credited.
PEOPLE, there is a story/experience called AGATHI in the same thamizmanam. Please give the credit to the writer.
\" ஆவி அண்ணாச்சி said...
//எழுதிட்டா போச்சி அண்ணாச்சி, வருகைக்கு நன்றி ஆவி!!
//
கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆவியுலக எழுத்தாளர் பிரதிநிதி திவ்யா அவர்கள் வாழ்க! /"
அண்ணாச்சி 'ஆவியுலக எழுத்தாளர் பிரதிநிதி திவ்யா ' இப்படி பட்டம் எல்லாம் கொடுத்து பயமுறுத்துறீங்களே
எங்க ஊரு எழுத்தாளினி திவ்யா வாழ்க!
- ஆவியுலக ரசிகர் தலைமை மன்றம்,
மகளிரணி,
ஆவியுலகம்.
அட! நமக்கு வேண்டப்பட்ட எழுத்தாளரா?
திவ்யா வாழ்க! வாழ்க!
எங்க ஊரில் ஒரு பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
ஏதேனும் ஒரு தேதி கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் பெருமைப் படுவோம்!
sorry vetti...didn't mean to comment on ur story here. Came out the wrong way...I will put an apology in ur blog too...so u can see that in case u miss it here.
divya, thanks for the explanation. konjam ponnuga psychology therigukalamuu oru arva kolarula than keten...
on what Anonymous said....even though his comment was totally tasteless, the story he mentioned is really poignant. That agathi kathai really touched me...try it
\"
ஆவி அம்மணி said...
எங்க ஊரு எழுத்தாளினி திவ்யா வாழ்க!
- ஆவியுலக ரசிகர் தலைமை மன்றம்,
மகளிரணி,
ஆவியுலகம். \"
என்னங்க இப்படி சொல்லிப்போட்டீங்க, கோயம்புத்தூர் கார அம்மனி ப்ளாக் எழுதினா ஆவி உலகத்திற்க்கு கூட்டிட்டு போய்டனும்னு ஏதும் சட்டம் கிட்டம் இருக்குதுங்களா???
\"அட! நமக்கு வேண்டப்பட்ட எழுத்தாளரா?
திவ்யா வாழ்க! வாழ்க!\"
குட்டி சாத்தானுக்கு வேண்டபட்டவளா நான்????? அடங்கொப்புரானே இதென்ன வம்பா போச்சு!
\"மோகினிகள் கழகம் said...
எங்க ஊரில் ஒரு பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
ஏதேனும் ஒரு தேதி கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் பெருமைப் படுவோம்! \"
மோகினி, உங்க ஊரு எதுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா, தேதி கொடுக்க வசதியா இருக்கும்.
\"Wyvern said...
sorry vetti...didn't mean to comment on ur story here. Came out the wrong way...I will put an apology in ur blog too...so u can see that in case u miss it here.
divya, thanks for the explanation. konjam ponnuga psychology therigukalamuu oru arva kolarula than keten...
on what Anonymous said....even though his comment was totally tasteless, the story he mentioned is really poignant. That agathi kathai really touched me...try it \"
Hi Wyvern, thanks for dropping by again, did read that agathi story, really a touching one.
//Wyvern said...
sorry vetti...didn't mean to comment on ur story here. Came out the wrong way...I will put an apology in ur blog too...so u can see that in case u miss it here.//
நண்பா,
எதுக்கு அப்பாலஜியெல்லாம்... நீ நம்ம கதைய காரிக்கூட துப்பலாம். ஆனா அது நம்ம இடத்துல வெச்சிக்கலாமேனுதான் சொன்னேன் :-)
நல்ல காதல்? கதை திவ்யா. கதை கொஞ்சமில்ல ரொம்பவே பழசுனாலும், அழகா சொல்லிருக்கீங்க! நிறைய கதை எழுதுங்க! வாழ்த்துக்கள்!!
-விநய்
யப்பா!!! எவ்லோ replies!!
madam tamil blog scenela sema famous pola irukku!! :)
kadhaila oru nach irukkanum madam!!
you have to keep the reader guessing all the time!!
your narration and language is really cool! but frankly speaking you got to make even more discreet! :)
Sorry if i had offended you in any way!
will read the other stories and will let you know the comments! :)
\"Anonymous said...
நல்ல காதல்? கதை திவ்யா. கதை கொஞ்சமில்ல ரொம்பவே பழசுனாலும், அழகா சொல்லிருக்கீங்க! நிறைய கதை எழுதுங்க! வாழ்த்துக்கள்!!
-விநய் \"
விநய், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!!
\"CVR said...
யப்பா!!! எவ்லோ replies!!
madam tamil blog scenela sema famous pola irukku!! :)
kadhaila oru nach irukkanum madam!!
you have to keep the reader guessing all the time!!
your narration and language is really cool! but frankly speaking you got to make even more discreet! :)
Sorry if i had offended you in any way!
will read the other stories and will let you know the comments! :)\\"
ஹாய் CVR ! கதை முழுதும் படிச்சீங்களா?? ரொம்ப பொறுமைதான் உங்களுக்கு, நன்றி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !
[ I'm not offended at all CVR, your views are most welcome, will try to be more discreet, thanks for your comments ]
திவ்யா,
இந்த தொடரையும் இன்னிக்குத் தான் படிச்சி முடிச்சேன். நல்லா எழுதிருக்கீங்க. எதார்த்தமான நடை. எதிர்பார்த்த முடிவு தான்னாலும் ரெண்டு பேரும் ஒன்னு சேரணுமே அப்படின்னு என்னை எதிர்பாக்க வச்சது உங்க நடை. வாழ்த்துகள்.
இதுவும் நல்லாருக்கு. :)
"rayil senegam"..nandra-ga than irukerathu...ethil muthal rendu pathivugalai munbe padithu irunthean...eppadiyeoo moonram pathivu padika vittu pooochu...eppo etharchaiyea parthaa pooothu nenaivukku vanthathu...ethirparthaa mudivaga irunthalum..nalla mudivu...valthukal..
Hi, my first visit here. I really enjoyed ur 'Tips' posts and this story. I was thinking that u would make them meet again on the train. Very nice story. Will read ur posts more and comment later.
Same climax......Unga Language aadai maraichidu dhu ..DHool ma ....Roma enjoy panni kadahai padichen .......Keep it up :-)
திவ்யா - கதை நன்றாக சென்றது. எளிய நடை. தெளிவான நீரோட்டம். ஆனால் மூன்றாம் பாகத்தின் ஓட்டம் இரண்டாம் பாகத்திலேயே ஊகிக்கப் படுகிறது - அதனால் விறு விறுப்பு குறைகிறது.
Divya,
Unkal Rail snekam kathai nanraaka
irunthathu.
blue mountain niraiyya kathalarkalukku
uthavi irukkirathu .......
athe pol madras il irunthu chithambaram annamalai university sellum shencottah passenger is also famous for lots of love stories..ippa antha train irukkannu theriyala...
oru periya doubtngka divya...
unga kathaiyla chappathikku thottukka kurumava illa potato poriyalaa?
tamilla type panna theriyaama thalai vedichurum polirukku...
konjam uthavi pannungalen...
Raj....
Hi,
Although this story was written long time back,now only me got the opportunity to read...
good story with expected end only...
Good job done Divya...
Mahesh
Nice one..but expected more twists as i felt there was no suspense in the story (hope u wont mind the open comments), since i hv come across such stories a lot.
அடுத்த அடுத்த நிகழ்வுகளை கணிக்க முடிந்தாலும், எழுத்தும் கதையும் எதையும் யோசிக்க விடாமல், கதையோட்டத்தில் இழுத்து சென்று ரசிக்க வைக்கிறது.
சந்தோசமான முடிவுகளுக்கு என்றுமே ஒரு வரவேற்பு நம்மிடம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
ஒரே நாளில் உங்க கதைகள் நிறையா படிச்சதாலோ என்னவோ இந்த கதையின் முடிவு முதல் பகுதியோட ஆரம்பத்துலையே யூகிக்க முடிந்தது. இருந்தாலும் ரஜினி படம் மாதிரி ஒரே ஸ்டோரி லைனை உங்க எழுத்து நடை இன்டரஸ்டிங்கா ஆக்கிடுது.
Post a Comment