February 11, 2008

அப்பாவின் நினைவில்...



படைக்கும் கடவுளின் முகமாக- என்னைப்
படைத்த உந்தன் அன்புமுகம் கண்டேன்

மென்மையாய் பேசுபவனே
பணிவினைக் கற்பித்தவனே

அன்பு ஒன்றை வாடகையாய்க் கொடுத்து
என் நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று

நேரம் தவறாமை
கடுஞ்சொல் கூறாமை
இறைவனை இகழாமை
நன்றி மறவாமை
பகைமையைத் தொடராமை..
சேயான எனக்கு அனைத்தையும் கற்பித்தாய்!

உதவி புரிவதற்கு நீ என்றும் சிந்தித்தவனில்லை
உனக்கு உபத்திரம் செய்ததை நினைப்பதுமில்லை

பள்ளிக்கு பின்பே பல்கலை கழகம் செல்வார்கள்
பல்கலை கழகமே உன்னிடம் பயின்றபின் தான் நான் பள்ளிக்குச் சென்றேன்!

ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?
விரைந்து உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டானே???

என்னை உலகிற்களித்தவனே
இன்று உன் பிரிவால் - நான்
சிந்தும் கண்ணீருடன்
உன்னிடம் வரம் ஒன்று யாசிக்கிறேன்

என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்
பிற்காலத்திலும் என்னை நீதான் காத்திட வேண்டும்!!

26 comments:

Unknown said...

Superb ...:)

கோபிநாத் said...

திவ்யா...

நன்றாக எழுதியிருக்கிங்க...அருமை ;)

\\என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்
பிற்காலத்திலும் என்னை நீதான் காத்திட வேண்டும்!!\\

இந்த வரிகள் என்னாமோ செய்யுது...

கோபிநாத் said...

திவ்யா...

நன்றாக எழுதியிருக்கிங்க...அருமை ;)

\\என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்
பிற்காலத்திலும் என்னை நீதான் காத்திட வேண்டும்!!\\

இந்த வரிகள் என்னாமோ செய்யுது...

C.N.Raj said...

Divya,

Classic article...
Bringing my Dad memories who did
everything for me, and who left
when i had just started doing
things for him.

Tiny tears in my eyes...Got stable and wiped off..
I am in office now...

Raj.

Anonymous said...

நெகிழச் செய்த கவிதை.

Aruna said...

அப்பாவைப் பற்றித்தான் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாமே...அதுவும் இழந்த பின்னால் அப்பா என்னும் முன் கண்ணீர் வரும் மாயம் என்னவென்று இன்று வரை புரியவில்லை??
அன்புடன் அருணா

பாச மலர் / Paasa Malar said...

அருமயான கவிதை திவ்யா..மறைந்த அப்பாவின் நினைவு மீண்டும் வந்து சுட்டுப் போகிறது.

வல்லிசிம்ஹன் said...

அருமையான அழகான அபாக்கள் சீக்கிரம் நம்மை விட்டுப் போவது புதிர்தான்.
உங்க சோகத்தில் நானும் பங்கெடுத்துக்கறேன்.

Anonymous said...

பாசாங்கில்லாத நேர்மையான வரிகள்...

Senthil said...

அருமை..!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

என் தோழனின் தந்தை மறைந்த அந்த இரவு என்னுள் மீண்டும் வந்துபோனது... 'நான் அவருக்கென்று இன்னும் ஒன்றுமே செய்யவில்லை அதற்குள்' என்று கலங்கிய அவனை தேற்ற வார்த்தைகளில்லை என்னிடம். சில இழப்புகள் ஈடில்லாதது அதனோடு வாழக்கற்றுகொள்வதுதான் அதற்கு நாம் தரும் மரியாதை அது மறைந்தும் அவர் கற்றுதரும் இன்னுமொறு பாடம் அல்லவா திவ்யா...

மன்னிக்கவும் திவ்யா, மௌனங்களுடன் சதீஷ்

Dreamzz said...

கவிதை.. ஆழமாகவும், அழகாகவும் எழுதி இருக்கீங்க..

மனதில் இருப்பாங்க.. எப்போதும்.. வேற என்ன சொல்ல..

இராம்/Raam said...

அழகான கவிதை....

Adiya said...

quite tranquil and having huge depth into it. romba nall eruku.

நவீன் ப்ரகாஷ் said...

//ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?
விரைந்து உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டானே???//

வரிகளில் உணர்ந்தேன் வலியை...

Nimal said...

உணர்வுகளின் ஆழம், வரிகளிலும் மனதின் வலியை சொல்கிறது... கவிதைக்கு அர்த்தத்தையும் தருகிறது...!

ஜி said...

:(((

romba neram yositchu... enna ezuthurathunnu theriyala...

நிவிஷா..... said...

ungal sogathai naangalum pagirnthukirom akka. kavidhai nalla irundhuchu

நட்போடு
நிவிஷா

தினேஷ் said...

திவ்யா,

வாழ்க்கை மனிதனின் புதிய கண்ணிரை, பழைய நினைவுகளுக்கும், சோகங்களுக்கு செலவிட வைபப்து தவிர்க்க முடியாதது தடுக்கவும் முடியாதது. துன்பங்களும், காயங்களும் காலங்களோடு கடக்கவும், இனி வரும் காலங்கள் காட்டும் வழி நம்பிக்கையுடனும், வளர்ச்சியுடனும், மிகிழ்ச்சியுடனும் இருக்கம். நம்பிக்கையுடன் இருங்கள்...

தினேஷ்

Arunkumar said...

//
என் மணி வயிற்றில் நீ வந்து பிறந்திட வேண்டும்
பிற்காலத்திலும் என்னை நீதான் காத்திட வேண்டும்!!
//

kandippa varam tharuvaaru..

vera enna solradhunnu theriyala !!!

C.N.Raj said...

Divya,

It is a great Loss indeed.
I had felt this myself.
Be Bold, and Confident.

Keep in mind that, your family is there for you.
Your friends are there for you.
We are born to be happy in this world,BE HAPPY and your Dad will guide you always as you wished.

Raj.

Gawaskar said...

came to see your blog though saharablog..
nice one..

i wrote something similar poem on time of my fathers death.

தந்தை
கண்ணாடியின் ஓரம் நின்று
என் முகத்தை
பார்த்து கொண்டேன்,
தந்தையின் சாயல்
என்னில் ஒட்டி
கொண்டி இருந்தது ...

உந்தன் நினைவுகளை
தவிர்க்கிறேன் தந்தாய்,
அதன் ஆழமான வலிகளில்
இருந்து விலகி நிற்கிறேன்...

இருந்தும் கதவிடிக்கில்
வரும் ஒளியாய்,
உன் நினைவுகள் வந்து
எனை தீண்டும்...

விருட்சமாய் வளர்ந்துவிட்டேன்,
கல்லறையின் மண்ணாய்
மறைந்து நிற்கிறாயோ
என் தந்தாய் ....

உன் வலிகள் எல்லாம்
மரணத்தோடு போனதால்
மரணத்திற்கு நேசமாய்
நன்றி கூறினேன் ...

உயிர் துளியின்
ஈரங்களை என் தாயிடமும்,
என் தாயையும்
என்னிடமும் விட்டுவிட்டாய்..

வருந்தாதே தந்தாய்,
என் மகனாய் நீ வருவாய்,
உன் தந்தையாய்
நான் இருப்பேன்.

கானகம் said...

Your Poem is really Good. In Malayalam there is a cinema song which honour fathers.. Achchan....like song sung by Chithra.. To understand that song you need not to know malayalam... :)If I get the link I will share..

U.P.Tharsan said...

wow...கடைசி வரியில் நல்ல சிந்தனை.சூப்பர்

சிங்கம் said...

excellant...
tears may appears while reading this poem...

ajp said...

Thanks