January 23, 2008

மனம் திறந்து பேசுகிறேன்...!!!




உன்னிடம் சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லாமல் மறைத்திருந்தேன்...
உன்னிடம் சொல்ல இதுவரை
ஏனோ ஒரு தயக்கம்
இன்று ...
தகர்த்தெரிந்தேன் தடைகளை!!



அரவணைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக...
என பல முகங்களில் உன்னை உணர்ந்திருக்கிறேன்!

நீ வாழ்க்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையையே கற்றுக்கொள்கிறேன்;




நீ காட்டும் பரிவில் பலமுறை
என் பிடிவாதங்கள் பிடிதளர்வது உனக்குத் தெரியுமா?

கோபத்தில் சிதறடிக்கும் கனல் வார்த்தைகளையும்
பொருட்படுத்தாமல் புன்னகையுடன் என் தவறினை புரியவைப்பாய்!


சாதனையாக நான் கருதும் அற்ப காரியங்களுக்கு கூட
புகழ் மாலை சூடி உற்சாகமளிப்பாய்!


உன் சோகத்தை
உனக்குள் புதைத்து
இருள் விரட்டும் ஒளியாய்
என் சோகத்தை விரட்டி
என் மகிழ்ச்சியில்
நீ இன்பம் கொள்கின்றாய்!


உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..


அதனால் கல்வியில் கூட
உன் பாடப்பிரிவே எனதுமானது!


கிடைப்பதற்கரிய பொக்கிஷம்
உன் அன்பெனக்கு
ஆயுள்வரை காத்திடுவேன்
என் உயிர் கொண்டு!


நீ உதித்த கருவறையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?


ஐ லவ் யூ அண்ணா!!


[ என் அன்பு அண்ணனுக்கு இக்கவிதை சமர்பணம்]

72 comments:

கோபிநாத் said...

ஏய்ய்ய்ய..நான் தான் பஸ்ட்டு

கோபிநாத் said...

அருமை..அருமை அண்ணன் கவிதை அருமையிலும் அருமை ;)

\\நீ உதித்த கருவரையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?\\

தவம் செய்யதால் தானே வரம் கிடைக்கும்! ;)

அதனால் தவம் தான்னு நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அண்ணனுக்கும் :)

கோபிநாத் said...

படங்கள் எல்லாம் சூப்பர் ;))

Divya said...

\\ கோபிநாத் said...
ஏய்ய்ய்ய..நான் தான் பஸ்ட்டு
\\

வாங்க கோபி,
முதல் கமெண்ட் போட்டதிற்கு நன்றி!!

Divya said...

\\ கோபிநாத் said...
அருமை..அருமை அண்ணன் கவிதை அருமையிலும் அருமை ;)

\\நீ உதித்த கருவரையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?\\

தவம் செய்யதால் தானே வரம் கிடைக்கும்! ;)

அதனால் தவம் தான்னு நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அண்ணனுக்கும் :)\

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கோபிநாத்!

Divya said...

\\ கோபிநாத் said...
படங்கள் எல்லாம் சூப்பர் ;))\

படங்களையும் குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறீங்க...ரொம்ப தாங்க்ஸ் கோபி!!

Unknown said...

கொடுத்த வைத்த அண்ணன் ...

இன்று போல் என்றும் நீங்கள் பாசம் கொண்டு வாழ்கவே

MyFriend said...

//
கோபிநாத் said...
ஏய்ய்ய்ய..நான் தான் பஸ்ட்டு
//

எனக்காக இடம் பிடிச்சு வச்சட்தூஉகு நன்றிண்ணா. :-))

MyFriend said...

//நீ உதித்த கருவரையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?
//

ஜூப்பரோ ஜூப்பர்.. :-)

குசும்பன் said...

அருமையாக இருக்கு கவிதையும் படங்களும் அருமை!

தினேஷ் said...

உங்கள் அன்பு அண்ணனுக்கு மட்டும் அல்ல, அனைத்து அன்பு அண்ணன்களுக்கும் சமர்பிக்ககூடிய அன்பு கவிதை…

தினேஷ்

Dreamzz said...

வாவ்! கதையாசிரியர்னு நினைச்சேன்... கவிதையிலும் கலக்கறீங்க.. கவிதாயினி பட்டமும் கோடுக்கனும் போல?

Dreamzz said...

//உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..//
அழகான வரிகள்...

கவிதை நல்லா எழுதீருக்கீங்க..
இது மாதிரி அப்பப்ப கவிதைகளையும் எழுதும் படி கேட்டுக் கொள்கின்றோம்..

Dreamzz said...

//என் அன்பு அண்ணனுக்கு இக்கவிதை சமர்பணம்]//
இது சூப்பரு ::)

Dreamzz said...

//வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அண்ணனுக்கும் :)/

ரிப்பீட்டு..

அப்புறம் கவிதைக்கு செலக்ட் பன்ன படங்களும் அருமை..

cheena (சீனா) said...

எளிய சொற்கள். அழகுப் படங்கள். அருமையான கருத்துகள். கவிதை சிறந்த ஒன்று.

மழலைச் செல்வங்களுக்கு நல் வாழ்த்துகள்.

கருவரை = கருவறை

எது சரி ?

தயா said...

அண்ணனுக்காய் எழுதிய கவிதைகள் அழகு அழகு

Arunkumar said...

super super
kavidhai arumai
photos super-o-super

Arunkumar said...

//
நீ வாழ்க்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையையே கற்றுக்கொள்கிறேன்;
//
romba rasichen...

சினேகிதி said...

\\அரவனைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக...
என பல முகங்களில் உன்னை உணர்ந்திருக்கிறேன்!

நீ வாழ்க்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையையே கற்றுக்கொள்கிறேன்;


\\

kavithai veraya :-)) ithu enkau pidichiruku!

appuram nanum mathumithavuku waiting.

CVR said...

அழகான கவிதை!!
வாழ்த்துக்கள்!! :-)

நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா... அழகான கவிதைகள் மிகப்பொருத்தமான படங்களுடன்...

மிகவும் ரசித்தேன் :))

நவீன் ப்ரகாஷ் said...

//நீ காட்டும் பரிவில் பலமுறை
என் பிடிவாதங்கள் பிடிதளர்வது உனக்குத் தெரியுமா?//

:)))

ஜே கே | J K said...

எல்லாமே சூப்பருங்கோ!......

Divya said...

\\ தேவ் | Dev said...
கொடுத்த வைத்த அண்ணன் ...

இன்று போல் என்றும் நீங்கள் பாசம் கொண்டு வாழ்கவே\\

என் ' அண்ணா கவிதை'க்கு , தேவ் அண்ணாவிடமிருந்து வாழ்த்து...வாவ்!!

நன்றி அண்ணா!!

Divya said...

\ .:: மை ஃபிரண்ட் ::. said...
//நீ உதித்த கருவரையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?
//

ஜூப்பரோ ஜூப்பர்.. :-)

நன்றி...நன்றி..நன்றி !!மை ஃபிரண்ட்!!

Divya said...

\\ குசும்பன் said...
அருமையாக இருக்கு கவிதையும் படங்களும் அருமை!\

ஹாய் குசும்பன்,
கவிதையுடன் படங்களையும் ரசித்ததிற்கு நன்றி!

Divya said...

\ தினேஷ் said...
உங்கள் அன்பு அண்ணனுக்கு மட்டும் அல்ல, அனைத்து அன்பு அண்ணன்களுக்கும் சமர்பிக்ககூடிய அன்பு கவிதை…

தினேஷ்\\

அனைத்து அண்ணன்களுக்கும் சமர்பணம்ன்னு போட்டுடலாம்!

நன்றி தினேஷ்!!

Divya said...

\\ Dreamzz said...
வாவ்! கதையாசிரியர்னு நினைச்சேன்... கவிதையிலும் கலக்கறீங்க.. கவிதாயினி பட்டமும் கோடுக்கனும் போல?\\

பட்டமெல்லாம் வேணாங்க ,நீங்க கொடுக்கிற ஊக்கமே போதும்!

நன்றி Dreamzz!

Divya said...

\\ Dreamzz said...
//உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..//
அழகான வரிகள்...

கவிதை நல்லா எழுதீருக்கீங்க..
இது மாதிரி அப்பப்ப கவிதைகளையும் எழுதும் படி கேட்டுக் கொள்கின்றோம்..\\

பாராட்டிற்கு நன்றி dreamzz!

கவிதை எழுத முயற்சிக்கிறேன்.

Divya said...

\\ Dreamzz said...
//வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அண்ணனுக்கும் :)/

ரிப்பீட்டு..

அப்புறம் கவிதைக்கு செலக்ட் பன்ன படங்களும் அருமை..\\

படங்களையும் பாராட்டியதற்கு நன்றி!

Divya said...

\\ cheena (சீனா) said...
எளிய சொற்கள். அழகுப் படங்கள். அருமையான கருத்துகள். கவிதை சிறந்த ஒன்று.

மழலைச் செல்வங்களுக்கு நல் வாழ்த்துகள்.

கருவரை = கருவறை

எது சரி ?\\

உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சீனா சார்.

எழுத்துப் பிழையினை சுட்டி காட்டியதற்கு நன்றி!

Divya said...

\\ தயா said...
அண்ணனுக்காய் எழுதிய கவிதைகள் அழகு அழகு\\\

வாங்க தயா,

உங்கள் வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றி!

Divya said...

\\ Arunkumar said...
super super
kavidhai arumai
photos super-o-super\\

நன்றி....நன்றி அருண்!!

Divya said...

\\ Arunkumar said...
//
நீ வாழ்க்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையையே கற்றுக்கொள்கிறேன்;
//
romba rasichen...\\

நான் ரசித்து எழுதிய வரிகளில் இதுவும் ஒன்று, உங்கள் ரசிப்பிற்கு நன்றி அருண்!!

Divya said...

\\ சினேகிதி said...
\\அரவனைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக...
என பல முகங்களில் உன்னை உணர்ந்திருக்கிறேன்!

நீ வாழ்க்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையையே கற்றுக்கொள்கிறேன்;


\\

kavithai veraya :-)) ithu enkau pidichiruku!

appuram nanum mathumithavuku waiting.\\

வாங்க சினேகிதி!

கவிதை ரசிப்பிற்கு நன்றி!

'மதுமிதா' அடுத்த பகுதி விரைவில்...

Divya said...

\\ CVR said...
அழகான கவிதை!!
வாழ்த்துக்கள்!! :-)\\\

வாழ்த்துக்களுக்கு நன்றி சிவிஆர்!!

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா... அழகான கவிதைகள் மிகப்பொருத்தமான படங்களுடன்...

மிகவும் ரசித்தேன் :))\

கவிஞர் நவீன்,
உங்களிடமிருந்த கிடைத்த பாராட்டை பெருமையாக கருதுகிறேன்,மிக்க நன்றி!!

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//நீ காட்டும் பரிவில் பலமுறை
என் பிடிவாதங்கள் பிடிதளர்வது உனக்குத் தெரியுமா?//

:)))\

ரசிப்பிற்கு நன்றி நவீன்!!

Divya said...

\\ J K said...
எல்லாமே சூப்பருங்கோ!......\

ரொம்ப நன்றிங்கோ J K !!

ஜி said...

//நீ காட்டும் பரிவில் பலமுறை
என் பிடிவாதங்கள் பிடிதளர்வது உனக்குத் தெரியுமா?//

padiththa udan patri konda varigal... :)))

vaazththukkal... iruvarukkum :)))

Nimal said...

அருமையான கவிதை, அழகான பொருத்தமான படங்கள்...

திவ்யா, கவிதையிலும் கலக்கிறீங்க...
தொடர்ந்து கதைகளோடு கவிதைகளும் எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்...!

Nimal said...

உங்களின் கவிதை எனக்கு என் தங்கையை நினைவூட்டியது...

//நீ உதித்த கருவறையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?//

அருமையான வரிகள்...

Divya said...

\\ ஜி said...
//நீ காட்டும் பரிவில் பலமுறை
என் பிடிவாதங்கள் பிடிதளர்வது உனக்குத் தெரியுமா?//

padiththa udan patri konda varigal... :)))

vaazththukkal... iruvarukkum :)))\

வாங்க ஜி,

படித்தவுடன் பிடித்த வரிகளை சுட்டிக்காட்டியதற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
அருமையான கவிதை, அழகான பொருத்தமான படங்கள்...

திவ்யா, கவிதையிலும் கலக்கிறீங்க...
தொடர்ந்து கதைகளோடு கவிதைகளும் எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்...!\\

ஹாய் நிமல்,
உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களை பின்னூட்டத்தில் தெரியபடுத்தியதிற்கு நன்றி.

கவிதைகளூம் எழுத நிச்சயம் முயற்சிக்கிறேன் நிமல்!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
உங்களின் கவிதை எனக்கு என் தங்கையை நினைவூட்டியது...

//நீ உதித்த கருவறையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?//

அருமையான வரிகள்...\

உங்கள் தங்கையை நினைவுபடுத்தியதா கவிதை!! சந்தோஷம்!!

நீங்கள் ரசித்த வரிகளை குறிப்பிட்டதிற்கு நன்றி நிமல்!!

U.P.Tharsan said...

wow... நெஞ்சை தெடும் வரிகள்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..//

கவிதைகள் யோசிக்கப்பட்டு எழுதப்படுவதில்லை!

ஆசைகள் வார்த்தைகளாகின்றன,
புன்னகைகள் வரிகளாகின்றன,
உணர்வுகள் கவிதைகளாகின்றன!

அப்படிதானே கவிஞரே :))

//நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?
//

அட!

வாழ்த்துக்கள் திவ்யா!!

Anonymous said...

//
உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..
//



என்ன ஒரு அற்புதமான வரிகள்........


என் எண்ணத்தின் பிரதிபளிப்புகள்
உங்கள் வார்த்தைகளாய்...


மிகச்சிறப்பு......மிகச்சிறப்பு......

Unknown said...

பாசமலர்களுக்கு வாழ்த்துகள்!!! :)

எழில்பாரதி said...

அருமையான கவிதைகள்....

இராம்/Raam said...

கவிதை நல்லாயிருந்தது திவ்யா... :)

கருப்பன் (A) Sundar said...

ஹூம்... எனக்கும் தான் ஒரு தங்கச்சியிருக்காளே...

மங்களூர் சிவா said...

அருமை.

படங்கள் சூப்பர்.

டெம்ப்ளேட் கலக்கல்.

(குசும்பா நன்றி)

Divya said...

\\ U.P.Tharsan said...
wow... நெஞ்சை தெடும் வரிகள்\\

நெஞ்சை தொட்டதா வரிகள்....நன்றி தர்ஸன்!

Divya said...

\ sathish said...
//உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..//

கவிதைகள் யோசிக்கப்பட்டு எழுதப்படுவதில்லை!

ஆசைகள் வார்த்தைகளாகின்றன,
புன்னகைகள் வரிகளாகின்றன,
உணர்வுகள் கவிதைகளாகின்றன!

அப்படிதானே கவிஞரே :))

//நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?
//

அட!

வாழ்த்துக்கள் திவ்யா!!\

ஹலோ சதீஷ்,
உங்களை மாதிரி ஒரு கவிஞர் என்னை 'கவிஞரே'ன்னு கூப்பிட்டதை பெருமையாக கருதுகிறேன், நன்றி!!

Divya said...

\\ சேரன் said...
//
உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..
//



என்ன ஒரு அற்புதமான வரிகள்........


என் எண்ணத்தின் பிரதிபளிப்புகள்
உங்கள் வார்த்தைகளாய்...


மிகச்சிறப்பு......மிகச்சிறப்பு......\

உங்கள் எண்ணங்களை கவிதையின் வரிகள் பிரதிபலித்ததை எண்ணி மகிழ்கிறேன்!
வருகைக்கு நன்றி சேரன்!

Divya said...

\\ அருட்பெருங்கோ said...
பாசமலர்களுக்கு வாழ்த்துகள்!!! :)\

வாழ்த்துக்களுக்கு நன்றி காதல் கவிஞரே!

Divya said...

\\ எழில் said...
அருமையான கவிதைகள்....

நன்றி எழில்!!

Divya said...

\\ இராம்/Raam said...
கவிதை நல்லாயிருந்தது திவ்யா... :)\

மிக்க நன்றி இராம்!

Divya said...

\\ கருப்பன்/Karuppan said...
ஹூம்... எனக்கும் தான் ஒரு தங்கச்சியிருக்காளே...\\

உங்களை உங்கள் தங்கை மெச்சிக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் இல்லியோ??......just kidding!

வருகைக்கு நன்றி கருப்பன்!

Divya said...

\\ மங்களூர் சிவா said...
அருமை.

படங்கள் சூப்பர்.

டெம்ப்ளேட் கலக்கல்.

(குசும்பா நன்றி)\\

பாராட்டுக்களூக்கு நன்றி சிவா,
குசும்பருக்கு தனியாக நன்றி தெரிவிப்பதின் அவசியம் என்னவோ??

எவனோ ஒருவன் said...

அருமை
மனசை தொட்டுடீங்க போங்க

அருள் said...

திவ்யா,
கவிதையை படித்துவிட்டு......அப்படியே சிறிது நேரம் தங்கைகளின் நினைவுகளில் ஆழ்ந்துவிட்டேன்....கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை....அதிலும்
\\நீ உதித்த கருவரையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?\\
என்கிற வரிகள் வியக்க வைத்தன...கவிதைக்கு நீங்கள் தேர்வு செய்த படங்கள் உங்கள் அழகான மற்றும் அருமையான ரசனையை காட்டுகின்றன....ஆக மொத்தத்தில் அண்ணன்களை உருக வைத்த கவிதை.....உங்கள் எழுத்துலகம் மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்!!

Divya said...

\எவனோ ஒருவன் said...
அருமை
மனசை தொட்டுடீங்க போங்க\\

வாங்க எவனோ ஒருவன்,

உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி!

Divya said...

\\ Arul said...
திவ்யா,
கவிதையை படித்துவிட்டு......அப்படியே சிறிது நேரம் தங்கைகளின் நினைவுகளில் ஆழ்ந்துவிட்டேன்....கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை....அதிலும்
\\நீ உதித்த கருவரையில்
நானும் ஜனித்தது..
நான் செய்த தவமா?
அதில்
கடவுள் தந்த வரமா?\\
என்கிற வரிகள் வியக்க வைத்தன...கவிதைக்கு நீங்கள் தேர்வு செய்த படங்கள் உங்கள் அழகான மற்றும் அருமையான ரசனையை காட்டுகின்றன....ஆக மொத்தத்தில் அண்ணன்களை உருக வைத்த கவிதை.....உங்கள் எழுத்துலகம் மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்!!\\

வாங்க அருள்,
உங்கள் வருகைக்கும்,
விரிவான மனம்திறந்த பாராட்டிற்கும் நன்றிகள் பல!!

முகுந்தன் said...

நெஞ்சை தொட்டு விட்டது உங்கள் வரிகள்.

Divya said...

\\ முகுந்தன் said...
நெஞ்சை தொட்டு விட்டது உங்கள் வரிகள்.
\\

நன்றி முகுந்தன் உங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கும்:))

priyamudanprabu said...

சூப்பரப்பு

Divya said...

\Blogger பிரபு said...

சூப்பரப்பு\\


Thanks a lot Prabhu!!

அபர்ணா said...

கவிதை பிரமாதம்
எனக்கும் இப்படி ஒரு அண்ணா இல்லையே என்று கவலையா இருக்கு.
:(
நீங்களும் அண்ணாவும் என்றும் இணைபிரியாது இருக்க பிரார்த்திக்கிறேன்.

Anbudanmaster said...

அருமையான கவிதைமா அண்ணன பத்தி எழுதிருக்க!
இதயம் கனிந்த வாழ்த்துக்கள் தங்கையே!