January 03, 2008

எனக்கொரு வரம்கொடு....

[படித்ததில் பிடித்தது, சில மாற்றங்களுடன் இவ்வருட முதல் பதிவாக இங்கே...]

"விஜய்... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகணுமா...?"

"ஆமா சந்தியா...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி"
"ஹும்,சரி விஜய், ஆனா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்" கண்களில் எட்டிப்பார்த்த கண்ணிரை மறைக்க முயன்றேன்.
"சந்தியா...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான் போய்தான் ஆகணும்."

விஜய்...என்னோடு வேலை செய்யும் அன்பு நண்பன்.
அறிவு, அழகு, திறமை, தைரியம் அனைத்திற்க்கும் சொந்தக்காரன். எல்லாம் இருந்தும் தன்னடக்கத்தின் தளபதி இவன்..

என்னை போன்ற ஒருவளுக்கு கிடைத்த அபூர்வ தோழன், உண்மைதான்.
விஜயைப் பற்றி எதைச் சொல்வது, என் கதைகளின் எழுத்துக்களை அதிகம் நேசிப்பதை சொல்வதா..?
இல்லை என் மன வருத்தத்திற்கு நம்பிக்கை வார்த்தைகளை மருந்தாய் கொடுத்ததை சொல்வதா..?

என்னோடு வேலை செய்யும் நண்பர்களின் கேலியான பார்வைக்கும், பேச்சுக்கும் கொதித்தெழுந்து சாட்டையடி கொடுத்ததை சொல்வதா..?
இல்லை...வண்டியில் செல்லும்போது விபத்து ஒன்றில் அடிபட்டு கிடக்கும்போது, ஓடோடி வந்து இரத்தம் கொடுக்க ஆளாய் பறந்ததைச் சொல்வதா..?

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் இதயத்தில் படமாய் ஓடியது. ஆனால் இன்று தன் தந்தையின் சுமை இறக்க வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை.
நினைவுகள் என்னுள் ஓடிக்கொண்டிருக்க இடமறித்தார் விஜய்.


"சந்தியா...என்னோட சித்தப்பா வெளிநாட்டில் இருக்கிறார். எல்லாம் அவருடைய ஏற்பாடுதான். அப்புறம் ஒரு விசயம்..."

விஜயை கூர்ந்து கவனித்தேன் ..

"சந்தியா...நீ மனச தளர விடக்கூடாது. எப்பவும் தைரியமா இருக்கணும். ஆபிசுல யார் என்ன சொன்னாலும் அதைப் பத்தி கவலைப் படாதே. நிறைய எழுது. நீ பெரிய ஆளா வரணும். என்னோட ஆசை அதுதான். திரும்பவும் நாம் சீக்கிரம் சந்திக்கலாம்"

விஜய் சொல்லச் சொல்ல கண்ணீர் பெருக்கெடுக்க எனக்கு காட்சிகள் மங்கலாய் போக...

"ப்ளிஸ்! அழாதே..." எப்படி சமாதனம் சொல்வது என்று தெரியாது தடுமாறினார் விஜய் கண்ணீரோடு.

நிறைய...நிறைய பேச வேண்டுமென துடித்தேன். ஆனால், ஏதோ ஒரு பாரம் என்னுள் அழுத்தியது. பிரியாவிடை கொடுக்க மனமில்லாமல் விடை கொடுத்துவிட்டு வந்தேன்.

என் அறைக்குள் வந்ததும் ஒரு தாளை எடுத்து எழுதத் துவங்கினேன்.

"இனி
உன் காலடிச் சுவடுகளைக் கூட
நான் காண இயலாது."

இதயத்தில் அழுத்திய எல்லாவற்றையும் எழுதிக் கொண்டே போனேன். முற்றுப் புள்ளி வைத்துத்தானே ஆக வேண்டும். இறுதியாய்...

"அன்புத் தோழனே...
இனியொரு பிறப்பு உண்டெனில்
நீ உருவெடுக்கும் கருவறையில்
எனக்கோர் இடம் கொடு.
ஊனமில்லாமல் பிறக்க..."

இரண்டரை வயதில் தாக்கிய போலியோவால் நடக்க முடியாமல் சுருங்கிய கால்களோடு, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் துளிகள் எனது எழுத்துக்களை அவசரமாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

31 comments:

Dreamzz said...

//இதயத்தில் அழுத்திய எல்லாவற்றையும் எழுதிக் கொண்டே போனேன். முற்றுப் புள்ளி வைத்துத்தானே ஆக வேண்டும். இறுதியாய்...//

Wow! nice.. நல்ல நடை!

Dreamzz said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் திவ்யா மாஸ்டர்!

Dreamzz said...

ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ.. பாட்டு தான் நியாபகம் வருது! மன ஊனத்துடன் பலர். உடல் ஊனத்துடன் சிலர். ஹ்ம்ம்ம்ம்!

MyFriend said...

அட.. ட்ரீம்ஸ் முந்திட்டாரு. :-)

திவ்யா.. கதை நல்லா இருக்கு. பட் இன்னும் கொஞ்சம் நீட்டா எழுதியிருக்கலாமே? :-)

Divya said...

\\ Dreamzz said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் திவ்யா மாஸ்டர்!\\

உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் Dreamzz

Divya said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
அட.. ட்ரீம்ஸ் முந்திட்டாரு. :-)

திவ்யா.. கதை நல்லா இருக்கு. பட் இன்னும் கொஞ்சம் நீட்டா எழுதியிருக்கலாமே? :-)\\

My friend,வாங்க வாங்க!

நீட்டா எழுதிடுவோம் அடுத்த முறை, ஒகே வா??

Nimal said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் திவ்யா...!

//"அன்புத் தோழனே...
இனியொரு பிறப்பு உண்டெனில்
நீ உருவெடுக்கும் கருவறையில்
எனக்கோர் இடம் கொடு.
ஊனமில்லாமல் பிறக்க..."//

இதுதான் திவ்யா நடை... அதனால் தான் உங்கள் கதை பிடிக்கிறது...
சிறியதானாலும் சிறப்பாய் இருக்கிறது...

வினையூக்கி said...

:) :)

நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா
வழக்கம் போல தெளிவான நடையில் நெகிழ்வான ஒரு கதை...

நெகிழ்ந்தேன்...

வெட்டிப்பயல் said...

அருமை...

இதை நச் போட்டிக்கு அனுப்பியிருக்கலாமோ?

கோபிநாத் said...

அருமையான கதை திவ்யா...எதிர்பார்க்காத முடிவு !

நன்றாக எழுதியிருக்கிங்க...;))

வாழ்த்துக்கள் ;)

Arunkumar said...

another nice one.. congrats.. keep rocking.. HNY

ரசிகன் said...

காதல் கதையோன்னு நினைச்சேன்.ஆறுதலாய் இருந்த ஒரு மனதை இழக்கப்போகும் ஏக்கம்...
என்னவோ செய்யுது திவ்யா மாஸ்டர்..

அருமையா இருக்கு...

Divya said...

\\ நிமல்/NiMaL said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் திவ்யா...!

//"அன்புத் தோழனே...
இனியொரு பிறப்பு உண்டெனில்
நீ உருவெடுக்கும் கருவறையில்
எனக்கோர் இடம் கொடு.
ஊனமில்லாமல் பிறக்க..."//

இதுதான் திவ்யா நடை... அதனால் தான் உங்கள் கதை பிடிக்கிறது...
சிறியதானாலும் சிறப்பாய் இருக்கிறது...\\

நிமல், உங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நிமல், தொடர்ந்து என் பதிவிற்கு வருகையும் தருகையும் அளித்து ஊக்குவிக்கும் உங்களுக்கு என் நன்றிகள் பல!!

Divya said...

\\வினையூக்கி said...
:) :)
\\

நன்றி வினையூக்கி!

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா
வழக்கம் போல தெளிவான நடையில் நெகிழ்வான ஒரு கதை...

நெகிழ்ந்தேன்...\\

மிக்க நன்றி நவீன் ப்ரகாஷ்!

Divya said...

\\ வெட்டிப்பயல் said...
அருமை...

இதை நச் போட்டிக்கு அனுப்பியிருக்கலாமோ?\\

வெட்டி, போட்டிக்கு இந்த பதிவை அனுப்பியிருக்கலாமோ? என நீங்க கேட்பதே எனக்கு வெற்றி பெற்ற மகிழ்ச்சியை அளித்தது!
நன்றி!!!

Divya said...

\\ கோபிநாத் said...
அருமையான கதை திவ்யா...எதிர்பார்க்காத முடிவு !

நன்றாக எழுதியிருக்கிங்க...;))

வாழ்த்துக்கள் ;)\\

கோபி, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல!

Divya said...

\\ Arunkumar said...
another nice one.. congrats.. keep rocking.. HNY\\

அருண், உங்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Divya said...

\\ ரசிகன் said...
காதல் கதையோன்னு நினைச்சேன்.ஆறுதலாய் இருந்த ஒரு மனதை இழக்கப்போகும் ஏக்கம்...
என்னவோ செய்யுது திவ்யா மாஸ்டர்..

அருமையா இருக்கு...\\

ரசிகன்,
காதல் கதைன்னு நினைச்சுட்டே படிச்சீங்களா??

ஊனமுற்ற ஒரு பெண்ணுக்கு கிடைத்த அரிய, உயரிய நட்பின் கதை தான் இது!

கதையோடு ஒன்றிபோய் நெகிழ்ந்து விட்டீர்கள் போலிருக்கிறது!

நன்றி ரசிகன்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
"இனி
உன் காலடிச் சுவடுகளைக் கூட
நான் காண இயலாது."
//
அழுத்தம்.

நவீன் கூறியதை வழிமொழிகிறேன்..

Subramanian Ramachandran said...

very good one...antha kavithai was really very touching....

kudos to whoever wrote that :)

btw thanks for ur visit.....keep visiting... :)

Divya said...

\\ sathish said...
//
"இனி
உன் காலடிச் சுவடுகளைக் கூட
நான் காண இயலாது."
//
அழுத்தம்.

நவீன் கூறியதை வழிமொழிகிறேன்..\\

நன்றி சதீஷ்!

Divya said...

\\ rsubras said...
very good one...antha kavithai was really very touching....

kudos to whoever wrote that :)

btw thanks for ur visit.....keep visiting... :)\

உங்கள் முதல் வருகைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

பாச மலர் / Paasa Malar said...

நெகிழ வைத்த் கதை திவ்யா...புத்தாண்டு வாழ்த்துகள்

My days(Gops) said...

//இனியொரு பிறப்பு உண்டெனில்
நீ உருவெடுக்கும் கருவறையில்
எனக்கோர் இடம் கொடு.
ஊனமில்லாமல் பிறக்க//

அருமை!!!!!!

நன்றாக எழுதியிருக்கிங்க...

ஜி said...

:)))

வழக்கம்போல்....

விஜய்-சந்தியா... ம்ம்ம்ம்... வெரி குட்...

தினேஷ் said...

இந்த சிறிய கதை முலம் உண்மையான மனித நேயத்தையும், உண்மையான அன்பையும், உண்மையான நட்பையும் உணர முடிகிறது.

நல்ல உணர்வுகளை உணர்த்தும் கதை…

வாழ்த்துக்கள்!

தினேஷ்

பிரியமுடன்... said...

இன்றைக்காவது புத்தாண்டு வாழ்த்தை
சொல்லிவிட வேண்டும் இல்லையேல்
அடுத்த வருடம் பிறந்துவிடும்! அதற்குள் சொல்லிவிடுகிறேன்...என்
இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்!
இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் சிறப்பான ஆண்டாக அமைய அடியேனின் பிரார்தனை ஆண்டவனிடம் உண்டு உங்களுக்காக!

வாழ்க பல்லாண்டு!

மே. இசக்கிமுத்து said...

அங்குமிங்கும் கவலையில்லாமல் அலைந்துகொண்டிருந்த எனது மனதை கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டீர்கள்!!!

Anonymous said...

ettiparthen.kattipottuviteerhal. vazthukal.