June 03, 2008

நாத்தனாருக்கு ....நமஸ்காரம்!!

தாரணி: என்னமா கண்ணு.......கல்யாணப் பொண்ணு, டல் அடிக்கிற, என்னா மேட்டரு??

ராஹினி: என்னமோ தெரில......பயமா இருக்கு கல்யாண வாழ்க்கையை நினைச்சா.

தாரணி:இந்த கவலை உன்னைக் கட்டிக்கப்போறவருக்கு வரவேண்டியது...........உனக்கு ஏன்??

ராஹினி: ஒய் என்ன கொழுப்பா, நானே நொந்து போய் இருக்கிறேன், சும்மா நீ வேற வெறுப்பேத்தாதே.

தாரணி: என்ன பயம்..........எதுக்கு பயம்.......யார் மேல பயம்......ஒவ்வொன்னா சொல்லு:)))

ராஹினி:எனக்கு..........அவரோட..........அக்கா, தங்கச்சிங்க எல்லாம் நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு.

தாரணி:அட.......மாமியார் பயம் எல்லாம் போய் இப்போ நாத்தனார் பயமா?

ராஹினி: அதான் மாமியார்க்கு எப்படி மஸ்கா போடனும்னு 'பதிவு' எல்லாம் படிச்சு மனப்பாடம் பண்ணிக்கிட்டோம்ல..........நாத்தனார் மேட்டருக்கு தான் என்ன பண்றதுன்னு தெரில...

தாரணி: டோண்ட் வொரி ....நான் சொல்லித்தரேன் கேட்டுக்கோ. உன் நாத்தனார் உன் கணவரோட அக்காவா?? தங்கையா ன்றது பொறுத்து தான் நீ எப்படி சமாளிக்கனும்னு சொல்லித்தர முடியும்.

ராஹினி: நீ எல்லா ரக நாத்தனாருக்கும் சொல்லுமா தாயே.........நான் நோட் பண்ணிக்கிறேன்.

தாரணி: ஒகே ஃபைன், முதல் ரகம்.........வீட்டுக்காரரோட அக்கா...............அதுவும் வயது அதிக வித்தியாசம் உள்ள பெரிய அக்கா, இவங்க ஒரு இரண்டாவது மாமியார்னே சொல்லலாம். இவங்களுக்கு தன் தம்பி தனக்கும் ஒரு குழந்தை மாதிரி அப்படின்ற நினைப்புலயே இருப்பாங்க.
தன் தம்பிக்கு கல்யாணம் ஆனாலும் தன் உரிமை + ஆதிக்கத்தை அவ்வளவு ஈஸியா விட்டுத் தரமாட்டாங்க, உன் மாமியார் குடும்பத்துலயும் அவங்களுக்குன்னு ஒரு தனி மரியாதை வேற இருக்கும்.
ஸோ மெது மெதுவா தான் அவங்களோட பாசப்பிடியிலிருந்து உன் வீட்டுக்காரரை உன் பக்கம் திருப்ப முடியும்.

ராஹினி: என்னடி இப்படி பயமுறுத்துற.........

தாரணி: அட அதெல்லாம் சமாளிச்சிடலாம் இவங்களை, கவலைப்படாதே,
தன் தம்பிக்கு எப்போ பொண்ணு பார்க்கனும், எந்த ஊர்ல பொண்ணு பார்க்கனும், எப்படி பட்ட பொண்ணு பார்க்கனும் அப்படின்ற எல்லா விஷயமும் இவங்க எடுத்த முடிவாதான் பெரும்பாலும் இருக்கும்.
ஸோ இவங்களை ரொம்ப ரொம்ப பதமா பக்குவமா டீல் பண்ணனும்.
அப்போ அப்போ இவங்ககிட்ட ஆலோசனை, அறிவுரை எல்லாம் கேட்டு ஆக்ட் விடு, அவங்களுக்கு நீ கொடுக்கிற முக்கியத்துவம் தான் அவங்களை உன்கிட்ட மோதாம இருக்க வைக்கும், புரிஞ்சதோ???

ராஹினி: ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு............சரி அடுத்த வகை நாத்தனார் பத்தி சொல்லு.

தாரணி: ஒகே அடுத்த ரகம்.......கணவரைவிட ஒரு இரண்டு அல்லது மூன்று வயது பெரிய அக்காவா இருந்தா..........இவங்க உன் திருமணத்திற்கு கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும் தன் தம்பிகூட ' அடி பிடி' சண்டை போட்டு ரொம்ப க்ளோஸ் ஆன சகோதரி + சினேகிதியா இருந்திருப்பாங்க.
இவங்க கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு மருமகளா போயிருந்தாலும் தன் பிறந்த வீட்ல இன்னும் ரொம்ப அதிகாரம் பண்ணிட்டு திரிவாங்க, ஸோ..........கொஞ்சம் ஆரம்பத்திலேயே நீ ஒழுங்கா கவனிச்சுக்கிட்டா ஈஸியா சமாளிச்சுடலாம்.
இவங்க கிட்ட ஃப்ரண்ட்லியாவும் எளிதில் நெருங்க முடியாது, டக்னு கட் பண்ணியும் விட முடியாது, நைஸ் நைஸாதான் இவங்ககிட்ட பிரச்சனைவராம பார்த்துகனும்.

ராஹினி: அப்போ........இந்த கொஞ்ச வயசு வித்தியாசித்தில இருக்கிற நாத்தனார் தான் ரொம்ப டேஞ்சரா???

தாரணி: இரு இரு.........இதைவிட டேஞ்சர் பார்ட்டி இருக்கு, இது உன் வீட்டுக்காரரோட தங்கை.......இதுலயும் இரண்டை வகை தங்கச்சி ரகம் இருக்கு,
1.கல்யாணம் ஆன தங்கை
2.கல்யாணமாகத வீட்டில் இருக்கும் கல்லூரி/பள்ளி யில் படிக்கும் தங்கை.
இந்த கேடகரி நாத்தனார் ஓரளவுக்கு உன் வயதை ஒத்த பெண்ணா இருப்பாங்க. நிறைய ஈகோ மோதல் வரும்.
அண்ணனின் செல்லம் , பாசம் எல்லாம் மொத்தமா கிடைச்சிட்டிருந்த இந்த தங்கச்சிக்கு அவ்வளவு ஈஸில எல்லாத்தையும் விட்டுதர முடியாது.
அதுவும் கல்யாண ஆகின தங்கைனா கொஞ்சம் ஒகே, எப்பவாச்சும் தான் நீ அவங்களை மீட் பண்ணுவே, ஆனா உன் மாமியார் வீட்டுலயே இருக்கிற தங்கச்சி நாத்தனார்ஸ் தான் கொஞ்சம் கஷ்டம் சமாளிக்க.

ராஹினி: ஹேய்.........எப்படி சமாளிக்கிறதுன்னும் சொல்லிடு ப்ளீஸ்:))

தாரணி: தன் அம்மாகிட்ட.........அதான் உன் மாமியார்கிட்ட போட்டு கொடுத்து மாட்டி விடுறதெல்லாம் இந்த ரக நாத்தனார்ஸ் தான் , நேர்ல மோதினா குழாய் அடி சண்டை ரேஞ்சுக்கு இருக்கும்னு இப்படி அட்டாக் பண்ணுவாங்க.
இந்த அட்டாக் உன் வீட்டுக்காரர் வரைக்கும் கூட வரும், ஸோ இந்த ' பாச மலர்' அட்டாச்மெண்ட் ல நீ ரொம்ப உஷாரா இருக்கனும்.
தங்கச்சி நாத்தனார்கிட்ட நேசக்கரம், நட்பு கரம் நீட்டுறதுதான் நல்லது.
நீ உன் மருமகள் கெத்தைவிட்டு ரொம்ப இறங்கி வர முடியலினாலும், ஒரளவுக்கு ஒரு புரிதல் அந்த தங்கச்சி பொண்ணுகிட்ட வைச்சுக்கிறது சிறந்தது.
அவங்க ரசனை, பழக்க வழக்கம் எல்லாம் கணவர் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு அந்த நாத்தனார் ரூட்லயே போய் கைக்குள்ள போட்டு வைச்சுக்கனும்.

'என் அண்ணி எனக்கு ஒரு தோழி' அப்படின்னு அந்த தங்கச்சி நாத்தனாரை மார்தட்ட வைக்கனும்.

ராஹினி: ஹே............ஒரு நிமிஷம் இரு............இதே டயலாக்கை நீ மார்தட்டி நான் கேட்டிருக்கிறேனே.........அப்போ உன் அண்ணி உன்கிட்ட பயன்படுத்தின டெக்னிக்கைதான் என்கிட்ட க்ளாஸ் எடுக்கிறியா நீ???

தாரணி: அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதோ..........ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிட்டதோ, நாலு நல்ல விஷ்யம் சொல்லிக்கொடுத்தா, அப்படியான்னு கேட்டுக்கனும், அதைவிட்டுட்டு......இப்படி எல்லாம் பப்ளிக்கா கேட்கபிடாது, சொல்லிட்டேன்!!!!

161 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

அஹா வாம்மா திவ்யா
நாத்தனாருக்கு நமஸ்காரமா
இப்போ..?? ஒரு ‘சைஸ்சா’
நாத்தனாரைக் கவுக்கறது எப்படினு
சொல்லி இருக்கியே.. எப்படி
இப்படி எல்லாம்..?!!!!

;)))))

ஜொள்ளுப்பாண்டி said...

//மெது மெதுவா தான் அவங்களோட பாசப்பிடியிலிருந்து உன் வீட்டுக்காரரை உன் பக்கம் திருப்ப முடியும்.//

ஆஹா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க...
ஏம்மா ஏதோ உங்க ஊட்டுக்காரரு போலீஸ்பிடியில்
இருக்குற ரேஞ்சுக்கு ‘பிட்’டைப் போடுறீயளே ஞாயமா..?? ;))))

ஜொள்ளுப்பாண்டி said...

//ஸோ
இவங்களை ரொம்ப ரொம்ப பதமா பக்குவமா டீல் பண்ணனும்.//

அடங்கொக்க மக்கா... ஏதோ நாத்தனாரை அல்வா கிண்டற ரேஞ்சுக்கு
பக்குவமா பதமா டீல் பண்ணனும்கறீயளே அம்மணி .. இதுதான்
உள்நாட்டு சதியா..?? ;))))

ஜொள்ளுப்பாண்டி said...

//தன் அம்மாகிட்ட.........அதான் உன் மாமியார்கிட்ட போட்டு கொடுத்து மாட்டி விடுறதெல்லாம் இந்த ரக நாத்தனார்ஸ் தான் , நேர்ல மோதினா குழாய் அடி சண்டை ரேஞ்சுக்கு இருக்கும்னு இப்படி அட்டாக் பண்ணுவாங்க.//

ஏன் இப்படி நாத்தனாருகளைப் பத்தி பீதியக் கெளப்புறே திவ்யா..?
குழாயடி சண்டை அளவுக்கா இருக்காவ அவுக..?? பாசக்கார
நாத்தனார் உலகத்திலேயே இல்லையா என்ன..?? ;)))))

ஜொள்ளுப்பாண்டி said...

//இந்த
அட்டாக் உன் வீட்டுக்காரர் வரைக்கும் கூட வரும், ஸோ இந்த ' பாச மலர்' அட்டாச்மெண்ட் ல நீ ரொம்ப உஷாரா இருக்கனும்.//

அட அட அட என்னமா ரூட்டு போட்டு பக்காவா ப்ளான் போட்டு
தந்து இருக்கே திவ்யா.. !!! நாத்தனார் இருக்குற வீட்டுக்கு மருமவளா போற பொண்ணு
ஒரு ரேஞ்சாத்தான் மாமியார் வீட்டை நெருங்கணும் போல இருக்கே..!!!!

;)))))

ஜொள்ளுப்பாண்டி said...

மொத்ததிலே நாத்தனார் உள்ள வீட்டுக்குப் போற பொண்ணுக
எல்லாம் நாத்தனாருக்கு ‘மஸ்க்’ போடுவது எப்படின்னு
செயல்முறை விளக்கம் எல்லாம் கொடுத்து
வழக்கம் போல கலக்கிப்புட்டே போ...

:)))))))))

[ சொந்த நொந்த அனுபவம் இருக்கா அம்மணி...?? ]

தமிழன்-கறுப்பி... said...

பொறுங்கோ வாறன்...:)

தமிழன்-கறுப்பி... said...

பாண்டியண்ணே பதிவே இப்பத்தான் போட்டாங்க அதுக்குள்ள 6 கமன்ட்டா :)

சின்னப் பையன் said...

:-)))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//தமிழன்... said...
பாண்டியண்ணே பதிவே இப்பத்தான் போட்டாங்க அதுக்குள்ள 6 கமன்ட்டா :) //

ஹலோ தமிழ்...
நாங்க எல்லாம் ஜெட் வேகத்திலே கபடி ஆடுறவுக... தெரியும்லா..?? இதெல்லாம் ஜுஜுபியாக்கும்... ;)))))))

ஆயில்யன் said...

சின்ன சின்ன புரிதல்கள் மட்டுமே போதும் எல்லாம் சுகமே!

ஆனாலும் அவங்க அவங்க மட்டத்திலிருந்து அல்லது லெவலிலிருந்து கீழே இறங்க, அல்லது விட்டுக்கொடுக்க மறுப்பதால்தான் பிரச்சனைகளாம்! இதெல்லாம் பக்கது ரூம்காரருக்கிட்ட பேட்டி எடுத்து போட்டிருக்கேன் கமெண்டா!

ஆயில்யன் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

ஆமாம் இதுல வர்ற நாத்தனார் மாமியார் மருமகள்கள் அப்படின்னா யாரு அவுங்க எங்க இருக்காங்க????????

யாருமே சரியா சொல்லமாட்டிக்கிறாங்கப்பா??????
:))))))))))))))))))

எழில்பாரதி said...

திவ்யா சூப்பர் பதிவு.....

நிஜமா நாத்தனார் சப்போர்ட் இருந்தா போதும் கவலையே வேண்டாம்!!!

Vijay said...

Divya,
Sathiyama sollunga, neenga innum student thaana? paarthaa appadiyE theriyaliyE :)
"naathanaarkaLai eppadi madakka vENdum" enRu google seythaal ungaL valaippathivukku link kodukkumpadi seyyaNum. vaazhthukkaL :)

anbudan,
Vijay

இராம்/Raam said...

திவ்யா,

ஆஹா.... உங்களுக்குள்ளே இம்புட்டு திறமையா .... :)

//ஒரு இரண்டு அல்லது மூன்று வயது பெரிய அக்காவா இருந்தா..........இவங்க உன் திருமணத்திற்கு கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும் தன் தம்பிகூட ' அடி பிடி' சண்டை போட்டு ரொம்ப க்ளோஸ் ஆன சகோதரி + சினேகிதியா இருந்திருப்பாங்க.
இவங்க கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு மருமகளா போயிருந்தாலும் தன் பிறந்த வீட்ல இன்னும் ரொம்ப அதிகாரம் பண்ணிட்டு திரிவாங்க, //

கரெக்ட்.... அக்கப்போரு தாங்கல....... :((((

Thamiz Priyan said...

நல்ல நல்ல ஐடியாக்களா இருக்கே...
ஆனா ஈகோ தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்.. :)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

ஆமாம் இதுல வர்ற நாத்தனார் மாமியார் மருமகள்கள் அப்படின்னா யாரு அவுங்க எங்க இருக்காங்க????????

யாருமே சரியா சொல்லமாட்டிக்கிறாங்கப்பா??????
:)))))))))))))))))) ////
அண்ணே! கொஞ்ச நாள் பொறுங்க... கல்யாணமாகட்டும் எல்லாம் புரியும்,,,, அப்ப தெரியும் பிரம்மச்சாரிகளின் சந்தோசம்.. :))))

தமிழன்-கறுப்பி... said...

தாரணி ராஹிணி பெயர் அவ்வளவா பிடிக்கலை எனக்கு... கல்யாணப்பொண்ணு பெயரை திவ்யான்னு வச்சிருக்கலாம்...:)

தமிழன்-கறுப்பி... said...

வேலைல இருக்கிறதால கொஞ்சம பிஸியாயிட்டேன் அதுக்குள்ள எல்லாம் வந்து போயிட்டாங்களா...

தமிழன்-கறுப்பி... said...

அட இதுல இவ்ளோ உளவியல் இருக்கா எப்பிடி திவ்யா இப்படி எல்லாம் முடியுது...

தமிழன்-கறுப்பி... said...

அக்காக்ளை பத்தி சொன்னது சரிதான் ஆனா அவுங்க ரொம்ப அக்கறையாத்தான் இருப்பாங்க அந்த எபெக்டுதான் அது...
தம்பியை கவுக்கிறது எப்பிடின்னும் அவுங்கதானே சொல்லித்தருவாங்க.. இல்லையா...

தமிழன்-கறுப்பி... said...

நாத்தனாருங்க பற்றி இப்படியெல்லாம் அறிக்கை விடலாமா...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

///அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதோ..........
ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிட்டதோ, நாலு நல்ல விஷ்யம் சொல்லிக்கொடுத்தா, அப்படியான்னு கேட்டுக்கனும், அதைவிட்டுட்டு......இப்படி எல்லாம் பப்ளிக்கா கேட்கபிடாது, சொல்லிட்டேன்!!!!///

சரி மாஸ்டர்...

ஜி said...

:)))

Magalir mattum postukku almost ellaa commentum pasanga kitta irunthu..

hmmm... ithula irunthe theriyuthu pasanga evlavu preparedaa irukaangannu :))))

Ramya Ramani said...

இதோ வந்துட்டேன் ஜி!
//'என் அண்ணி எனக்கு ஒரு தோழி' அப்படின்னு அந்த தங்கச்சி நாத்தனாரை மார்தட்ட வைக்கனும்.//

திவ்யா அக்கா எவ்வளோ விவரமா போஸ்ட் போடரீங்க! இப்படி எல்லாம் பிரண்டு பிடிச்சு, அவங்க அண்ணனோட அருமை பெருமை எல்லாம் தெரிஞ்சுகலாம் இல்லியா! நல்ல உத்தி!

Ramya Ramani said...

இந்த நட்பு அவங்க அண்ணன் இமெஜ் டாமேஜ் பன்னவும் நக்கல் அடிக்கவும் Use ஆகும் ;)

நிஜமா நல்லவன் said...

:)

Anonymous said...

Kalakkal Pathivu :))

Anbu

M.Rishan Shareef said...

ஆஹா..சொந்த அனுபவமா திவ்யா? :)

ரசிகன் said...

//..நான் சொல்லித்தரேன் கேட்டுக்கோ. உன் நாத்தனார் உன் கணவரோட அக்காவா?? தங்கையா ன்றது பொறுத்து தான் நீ எப்படி சமாளிக்கனும்னு சொல்லித்தர முடியும்.//

ஆஹா.. இதுல இம்புட்டு மேட்டர் இருக்கா?:))))

ரசிகன் said...

இதுலருந்தே தெரியுதே பெண்களுக்கு பெண்கள்தான் தொந்தரவுன்னு:P

மாஸ்டரே மறைமுகமா ஒத்துக்கிட்டாங்களே:))))
(சந்தடி சாக்குல பிரட்சனைய கிளப்பி விட்டாச்சு:))

ரசிகன் said...

எங்க வீட்டுல நானும் தம்பியும்தாங்கறதால அவசியம் வராதுன்னாலும் வேற யாருக்காவது உதவட்டுமேன்னு குறிப்பு எடுத்துக்கறேன்:)

ரசிகன் said...

திவ்யா மாஸ்டர்... அப்படியே மாமியார் வீட்டு/அக்கம் பக்கத்து வீட்டு பெருமை பேசும் மனைவியை சமாளிப்பது எப்படின்னும் சொல்லி தாங்களேன்.நண்பன் கேக்கிறான்:))

கப்பி | Kappi said...

அட்ரா சக்கை!! :)))

கோபிநாத் said...

;))

Dreamzz said...

enakennamo ippadi plan ellam podaama, iyalba irundhave nalla padiya irukkalamnu thonuthu

Dreamzz said...

nice post :)

CVR said...

///Blogger Dreamzz said...

enakennamo ippadi plan ellam podaama, iyalba irundhave nalla padiya irukkalamnu thonuthu////
ரிப்பீட்டேய்....
இதயம் சம்பந்தப்பட்ட விஷயத்துல அதிகமா மூளையை பயன்படுத்தக்கூடாது என்பது என் பாலிசி.உறவுகளை புத்தி சாதுர்யத்துடன் கையாள வேண்டியது அவசியம் என்றாலும் இப்படி பட்டியலிட்டு ஸ்ட்ராடிஜி எல்லாம் வகுப்பது சற்றே அதிகப்படி என்று தோன்றுகிறது!! :-)

//இதைவிட டேஞ்சர் பார்ட்டி இருக்கு, இது உன் வீட்டுக்காரரோட தங்கை..///
அது சரி!!
அதாவது உங்களை மாதிரி பார்டிகள்...சரிதானே?? :P

///அப்போ உன் அண்ணி உன்கிட்ட பயன்படுத்தின டெக்னிக்கைதான் என்கிட்ட க்ளாஸ் எடுக்கிறியா நீ???////
பதிவை படிக்க ஆரம்பிச்ச போதே நெனைச்சேன்!! :-D
வாழ்த்துக்கள்!! :-)

SP.VR. SUBBIAH said...

ஒரு கவிஞன் சொன்னான்:
நா'த்தீயால் சுடுபவள் நாத்தினார்:-))))

(நாக்கினால் தீயாய்ச் சுடுபவள் நாத்தினார்):-)))))

மே. இசக்கிமுத்து said...

எப்படி உங்களால் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்க முடியுது!! தொடருங்கள்!!

Syam said...

//அட்ரா சக்கை!! :)))//

ripeettttuuuu..... :-)

Syam said...

ivalo kastam yen...naathanaar romba problem panna...aal vechu sulukku eduthida vendiyathu thaana :-)

sweetjuliet said...
This comment has been removed by the author.
SweetJuliet said...

marupadiyum divya...u rocks...

///Blogger Dreamzz said...

enakennamo ippadi plan ellam podaama, iyalba irundhave nalla padiya irukkalamnu thonuthu////

It s true...

Mathavangalai manasai purinchutu avangalai hurt pannamal erunthale ellarukudeyum sandaipodamal peacefula erukkalam...

Sen22 said...

நிறைய சொந்த அனுபவம் இருக்கும் போல.....

Senthil,
Bangalore

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்ல ஐடியா.. இப்படி செய்து ப்ரண்டு பிடிச்சு கிட்டு அப்படியே பழய வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சு வச்சிக்கிட்டா..பின்னால எப்பவாச்சும் ஆமா உங்களப்பத்தி தெரியாதா அதான் உங்க தங்கச்சி சொன்னாளேன்னு சொல்லிக்க்லாம்.. :)

priyamanaval said...

திவ்யா... ஆஹா புது போஸ்ட் போட்டுருக்கீங்களேனு பாக்க வந்தா அதுக்குள்ள 45 பின்னுடங்கள் .. அருமை... என்னை பொருத்தவரை நாத்தனார் என்பவர் ஒரு பெண்ணின் மன வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிப்வர்... ஆம் ஒரு பெண் தண் புகுந்த வீட்டிருக்கு புதிதாக போகும் போது அவள் வயதை ஒத்தொ அல்லது அவள் மன நிலயை புரிந்து கொள்ளும்
வயதில் இருப்பவள் அவள் நாத்தனார் ஆவாள். இங்கனம் நாத்தனார் அவர்களை எப்படி நம் வ்சப்படுத்துவது என்பதை மிக அழகாக
விவரித்து உள்ளீர்கள். மேலும் நாத்தனார்களை ரகம் பிரித்து அதற்கேற்ப குறிப்பு சொல்லி இருப்பது மிக அருமை.
உங்கள் படைப்புகள் மேலும் திறம் பெற என் வாழ்த்துக்கள்.

gils said...

!!! wow..divs...pinreengalay :)

FunScribbler said...

பின்னி பெடல் எடுக்குறீங்க! உங்க in-law குடும்பத்தினர் ரொம்ம்ம்ம்ப கொடுத்துவைத்தவர்கள்!!

My days(Gops) said...

//'என் அண்ணி எனக்கு ஒரு தோழி' அப்படின்னு அந்த தங்கச்சி நாத்தனாரை மார்தட்ட வைக்கனும்.//

idha padichiten :)

50 pottutu meeedhi kummi later nga :)

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லாயிருக்குங்க :))

Anonymous said...

For any family related issues immediate solution available at

divyapedia.com. Soon the question and answers session will start. ( No consultation fees.)

Anonymous said...

அண்ணன்கிட்ட மாட்டி விடுற அண்ணிகளும் இருக்கவே செய்றாங்களே.. :)

Sanjai Gandhi said...

எச்சுச் மீ ஊர்ஸ்... இப்போலாம் கதை எழுதறத விட இந்த மாதிரி சந்தோஷமான குடும்பத்துக்கு தேவையான டிப்ஸ் குடுக்கிறதுல பெரிய கில்லாடி ஆய்ட்ட... நீ ஊருக்கு வந்ததும் இதுக்கு ஒரு கம்பனி ஆரம்பிச்சிடலாம்... நீ பெரிய கன்சல்டண்ட் ஆய்டுவ...:P நிஜமா சூப்பர்.. அப்டியே கோயம்புத்தூர் பொண்ணுங்கள கவர்வது எபப்டினு ஒரு பதிவு போடு ப்ளீஸ்.. இங்க வந்து போன மாசத்தோட 1 வருஷம் முடிஞ்சிடிச்சி.. ஒரு கேர்ள்ஃப்ரண்ட் கூட இங்க இல்ல. :((

//என் அண்ணி எனக்கு ஒரு தோழி//
அடுத்த தொடருக்கு தலைப்பு ரெடி... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்... :)

முகுந்தன் said...

உங்களிடம் எந்த மாதிரி நாதனர் வந்து மாட்ட போறாளோ பாவம்:-)

Nimal said...

//அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதோ..........ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிட்டதோ, நாலு நல்ல விஷ்யம் சொல்லிக்கொடுத்தா, அப்படியான்னு கேட்டுக்கனும்//

கேட்டுக்கிட்டாச்சு... :)

சூப்பர்!, ஆனா ஒன்னுமே புரியலே... ;)

Vijay said...

உங்களுடைய பழைய பதிப்பு "மனைவியைக்கவர்வது எப்படி" படித்தேன். ரொம்ப ஸ்வாரஸ்யமாகவே இருந்தது. கணவரைக்கவர்வது எப்படின்னு ஒரு பிளாக் எல்லாம் நீங்க எழுதலியா? அதனால நான் கணவனைக் கவர்வது எப்படின்னு ஒரு பிளாக் எழுதியிருக்கேன். படித்துப்பாருங்கள்

அன்புடன்,
விஜய்

மங்களூர் சிவா said...

/
ரசிகன் said...

இதுலருந்தே தெரியுதே பெண்களுக்கு பெண்கள்தான் தொந்தரவுன்னு:P
/

ரிப்ப்பீட்டேேஏஏஏஏய்

மங்களூர் சிவா said...

இப்பல்லாம் சொந்த அண்ணனும் தம்பியும், அப்பாவும் மகனுமே வருசத்துக்கு ஒரு தடவையோ, ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவையோ சந்திச்சிகிட்டாலே பெரிய விசயம் அப்பிடி போய்கிட்டிருக்கு உலகம்!!!!

Linq said...

Hey Divya,

This is Alpesh from Linq.in. I loved your blog and I thought I would let you know that your blog has got the following awards.

1.Best blog of all time in languages category.
2.Best blog of week in Languages category on 02/17/08

Check it out here Award

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.
We offer syndication opportunities and many tools for bloggers to use in there
web sites such as the widget below:

Blogger Tools

Alpesh
alpesh@linq.in
www.linq.in

voorvambu said...

கோயம்புத்தூர் அம்மணி...நமஸ்காரம்^,

நல்லாயிருக்கிறியளா??

டிப்ஸெல்லாம் நல்லாத்தேன் இருக்குங்கம்மணி, நல்லாயிருங்க:))))

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
அஹா வாம்மா திவ்யா
நாத்தனாருக்கு நமஸ்காரமா
இப்போ..?? ஒரு ‘சைஸ்சா’
நாத்தனாரைக் கவுக்கறது எப்படினு
சொல்லி இருக்கியே.. எப்படி
இப்படி எல்லாம்..?!!!!

;)))))\\

வாங்க பாண்டி:))

எப்படி இப்படி எல்லாம்? ன்னு கேட்டா என்ன சொல்றது நான்.......அதெல்லம் அப்படிதான் பாண்டி!!!

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//மெது மெதுவா தான் அவங்களோட பாசப்பிடியிலிருந்து உன் வீட்டுக்காரரை உன் பக்கம் திருப்ப முடியும்.//

ஆஹா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க...
ஏம்மா ஏதோ உங்க ஊட்டுக்காரரு போலீஸ்பிடியில்
இருக்குற ரேஞ்சுக்கு ‘பிட்’டைப் போடுறீயளே ஞாயமா..?? ;))))\\

போலீஸ் பிடியை விட கெட்டியான 'பாச'பிடி இது பாண்டி, சும்மா கண்டுக்காம விட்றமுடியுமா??

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//ஸோ
இவங்களை ரொம்ப ரொம்ப பதமா பக்குவமா டீல் பண்ணனும்.//

அடங்கொக்க மக்கா... ஏதோ நாத்தனாரை அல்வா கிண்டற ரேஞ்சுக்கு
பக்குவமா பதமா டீல் பண்ணனும்கறீயளே அம்மணி .. இதுதான்
உள்நாட்டு சதியா..?? ;))))\\\

என்ன பாண்டி இப்படி சொல்லிபுட்டீக,'சதி' எல்லாம் பெரிய வார்த்தை பாண்டி:))

Divya said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
//தன் அம்மாகிட்ட.........அதான் உன் மாமியார்கிட்ட போட்டு கொடுத்து மாட்டி விடுறதெல்லாம் இந்த ரக நாத்தனார்ஸ் தான் , நேர்ல மோதினா குழாய் அடி சண்டை ரேஞ்சுக்கு இருக்கும்னு இப்படி அட்டாக் பண்ணுவாங்க.//

ஏன் இப்படி நாத்தனாருகளைப் பத்தி பீதியக் கெளப்புறே திவ்யா..?
குழாயடி சண்டை அளவுக்கா இருக்காவ அவுக..?? பாசக்கார
நாத்தனார் உலகத்திலேயே இல்லையா என்ன..?? ;)))))\\

சிநேகிதியாகவும், உடன்பிறவா சகோதிரியாகவும் நடந்துக்கிற நாத்தனாரும் இருக்கத்தான் செய்றாங்க பாண்டி:)))

Divya said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
//இந்த
அட்டாக் உன் வீட்டுக்காரர் வரைக்கும் கூட வரும், ஸோ இந்த ' பாச மலர்' அட்டாச்மெண்ட் ல நீ ரொம்ப உஷாரா இருக்கனும்.//

அட அட அட என்னமா ரூட்டு போட்டு பக்காவா ப்ளான் போட்டு
தந்து இருக்கே திவ்யா.. !!! நாத்தனார் இருக்குற வீட்டுக்கு மருமவளா போற பொண்ணு
ஒரு ரேஞ்சாத்தான் மாமியார் வீட்டை நெருங்கணும் போல இருக்கே..!!!!

;)))))\\

பாசத்துடன் பக்குவமும் நிறைந்த மருமகளாக மாமியார் வீட்டை நெருங்குவது நல்லது தானே பாண்டி??

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
மொத்ததிலே நாத்தனார் உள்ள வீட்டுக்குப் போற பொண்ணுக
எல்லாம் நாத்தனாருக்கு ‘மஸ்க்’ போடுவது எப்படின்னு
செயல்முறை விளக்கம் எல்லாம் கொடுத்து
வழக்கம் போல கலக்கிப்புட்டே போ...

:)))))))))

[ சொந்த நொந்த அனுபவம் இருக்கா அம்மணி...?? ]\\

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி ஜொள்ளுபாண்டி.

[நொந்த அனுபவம் இல்லீங்க.....ஆனா சொந்த அனுபவம் இருக்குதுங்க பாண்டி,
'என் அண்ணி எனக்கொரு நல்ல தோழி'!!!]

Divya said...

\\தமிழன்... said...
பொறுங்கோ வாறன்...:)\\

ஒன்னும் அவசரமில்லீங்க.....பொறுமையா பதிவு படிச்சுட்டு வாங்க தமிழன்!!

Divya said...

\\ ச்சின்னப் பையன் said...
:-)))))))))
\\

வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்:-)))

Divya said...

\\ஆயில்யன் said...
சின்ன சின்ன புரிதல்கள் மட்டுமே போதும் எல்லாம் சுகமே!

ஆனாலும் அவங்க அவங்க மட்டத்திலிருந்து அல்லது லெவலிலிருந்து கீழே இறங்க, அல்லது விட்டுக்கொடுக்க மறுப்பதால்தான் பிரச்சனைகளாம்! இதெல்லாம் பக்கது ரூம்காரருக்கிட்ட பேட்டி எடுத்து போட்டிருக்கேன் கமெண்டா!\\

வாங்க ஆயில்யன்,

பின்னூட்டத்தில் கருத்து எழுத உங்களுக்கு தகவல் கொடுத்த உங்கள் பக்கத்து அறை நண்பருக்கு நன்றி!

Divya said...

\\ஆயில்யன் said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

ஆமாம் இதுல வர்ற நாத்தனார் மாமியார் மருமகள்கள் அப்படின்னா யாரு அவுங்க எங்க இருக்காங்க????????

யாருமே சரியா சொல்லமாட்டிக்கிறாங்கப்பா??????
:))))))))))))))))))\\

உங்களுக்கு திருமணம் ஆனதும்.....இந்த உறவுகள் எல்லாம் உங்களை தேடி வரும் ஆயில்யன்!!

Divya said...

\\எழில்பாரதி said...
திவ்யா சூப்பர் பதிவு.....

நிஜமா நாத்தனார் சப்போர்ட் இருந்தா போதும் கவலையே வேண்டாம்!!!\\

பாராட்டிற்கு நன்றி எழில்பாரதி!!!

Divya said...

\\விஜய் said...
Divya,
Sathiyama sollunga, neenga innum student thaana? paarthaa appadiyE theriyaliyE :)
"naathanaarkaLai eppadi madakka vENdum" enRu google seythaal ungaL valaippathivukku link kodukkumpadi seyyaNum. vaazhthukkaL :)

anbudan,
Vijay\\

வாங்க விஜய்,

\Sathiyama sollunga, neenga innum student thaana?\

என்ன திடீர் சந்தேகம் விஜய்??

\paarthaa appadiyE theriyaliyE :)\

அப்போ பார்த்தா எப்படிங்க தெரியுது??

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி விஜய்.

Divya said...

\\இராம்/Raam said...
திவ்யா,

ஆஹா.... உங்களுக்குள்ளே இம்புட்டு திறமையா .... :)\\

வாங்க இராம்,

ரொம்ப நாட்களுக்கு அப்புறம் என் வலைதளம் வந்திருக்கிறீங்க, நன்றி!

//ஒரு இரண்டு அல்லது மூன்று வயது பெரிய அக்காவா இருந்தா..........இவங்க உன் திருமணத்திற்கு கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும் தன் தம்பிகூட ' அடி பிடி' சண்டை போட்டு ரொம்ப க்ளோஸ் ஆன சகோதரி + சினேகிதியா இருந்திருப்பாங்க.
இவங்க கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு மருமகளா போயிருந்தாலும் தன் பிறந்த வீட்ல இன்னும் ரொம்ப அதிகாரம் பண்ணிட்டு திரிவாங்க, //

கரெக்ட்.... அக்கப்போரு தாங்கல....... :((((\\

அக்கப்போரு அனுபவம் ஜாஸ்தியோ இராம்க்கு???

Divya said...

\\ தமிழ் பிரியன் said...
நல்ல நல்ல ஐடியாக்களா இருக்கே...
ஆனா ஈகோ தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்.. :)\\

வாங்க தமிழ் பிரியன்,

எந்த உறவிலும் இந்த 'ஈகோ' தாங்க பிரச்சனைகளுக்கும் பெரும்பாலும் காரணம்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழ் பிரியன்.

Divya said...

\\தமிழன்... said...
தாரணி ராஹிணி பெயர் அவ்வளவா பிடிக்கலை எனக்கு... கல்யாணப்பொண்ணு பெயரை திவ்யான்னு வச்சிருக்கலாம்...:)\\

:))

Divya said...

\\தமிழன்... said...
வேலைல இருக்கிறதால கொஞ்சம பிஸியாயிட்டேன் அதுக்குள்ள எல்லாம் வந்து போயிட்டாங்களா...\\

ஆமாங்கோ :))

Divya said...

\\தமிழன்... said...
அட இதுல இவ்ளோ உளவியல் இருக்கா எப்பிடி திவ்யா இப்படி எல்லாம் முடியுது...
\\

உளவியல் இல்லாத உறவேது!!

Divya said...

\\தமிழன்... said...
அக்காக்ளை பத்தி சொன்னது சரிதான் ஆனா அவுங்க ரொம்ப அக்கறையாத்தான் இருப்பாங்க அந்த எபெக்டுதான் அது...
தம்பியை கவுக்கிறது எப்பிடின்னும் அவுங்கதானே சொல்லித்தருவாங்க.. இல்லையா...\\

தம்பியை கவுக்கிறதுக்கு ஐடியா கொடுத்தா சரிதான்.......அதை விட்டுட்டு தம்பியை கைக்குள்ள போட்டுக்கிட்டு ஆட்டம் காண்பிச்சா , என்ன பண்றது??

Divya said...

\\தமிழன்... said...
நாத்தனாருங்க பற்றி இப்படியெல்லாம் அறிக்கை விடலாமா...\\

ஏன் தப்பா??

Divya said...

\\தமிழன்... said...
திவ்யா சொன்னது...

///அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதோ..........
ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிட்டதோ, நாலு நல்ல விஷ்யம் சொல்லிக்கொடுத்தா, அப்படியான்னு கேட்டுக்கனும், அதைவிட்டுட்டு......இப்படி எல்லாம் பப்ளிக்கா கேட்கபிடாது, சொல்லிட்டேன்!!!!///

சரி மாஸ்டர்...\\

அது:))

Shwetha Robert said...

Very nicely written :)

Another master piece in your
'tips corner', great job Divya:-)

Shwetha Robert said...

Linq said...

1.Best blog of all time in languages category.
2.Best blog of week in Languages category on 02/17/08

----------------

Congrats Divya!!!

கருணாகார்த்திகேயன் said...

திவ்யா.. ரொம்பா நல்ல பதிவு.. பெண்களுக்கு ..

அப்பே எங்கள போல பசங்களுக்கு மாமியார்,
மருமகள் , மாமனாரை ஹண்டில் பண்னுவது எப்படினு
பதிவு போட்டா நல்ல இருக்கும் ...

மொத்தத்தில் அருமை .....

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

Anonymous said...

Nice post Divya:)

Points noted down for my sister & also for my better half.

Praveen,
Bangalore.

ராமலக்ஷ்மி said...

என் தம்பி மனைவிக்கு நாங்கள் மூன்று நாத்தனார்கள்.புகுந்த வீட்டில் மூவருக்கும் நோ நாத்தனார்ஸ். இது எப்படி இருக்கு? ( ப்ளான் பண்ணிக் கட்டிக் கொடுக்கலை திவ்யா, அப்படி அமைந்து விட்டது.)
//ஜொள்ளுபாண்டி said:ஏன் இப்படி நாத்தனாருகளைப் பத்தி பீதியக் கெளப்புறே திவ்யா..?
குழாயடி சண்டை அளவுக்கா இருக்காவ அவுக..?? பாசக்கார
நாத்தனார் உலகத்திலேயே இல்லையா என்ன..?? ;)))))//

அதானே நல்லா சொல்லுங்க பாண்டி!

Divya said...

\\ஜி said...
:)))

Magalir mattum postukku almost ellaa commentum pasanga kitta irunthu..

hmmm... ithula irunthe theriyuthu pasanga evlavu preparedaa irukaangannu :))))\\

வாங்க ஜி:))

பசங்க பிரிபேர்ட் ஆ மட்டுமில்லீங்க....கொஞ்சம் தெளிவாவும் இருக்காங்க:))அது நல்லது தானே!!

வருகைக்கு நன்றி ஜி!

Divya said...

\\Ramya Ramani said...
இதோ வந்துட்டேன் ஜி!

வாங்க,வாங்க ரம்யா!!

//'என் அண்ணி எனக்கு ஒரு தோழி' அப்படின்னு அந்த தங்கச்சி நாத்தனாரை மார்தட்ட வைக்கனும்.//

திவ்யா அக்கா எவ்வளோ விவரமா போஸ்ட் போடரீங்க! இப்படி எல்லாம் பிரண்டு பிடிச்சு, அவங்க அண்ணனோட அருமை பெருமை எல்லாம் தெரிஞ்சுகலாம் இல்லியா! நல்ல உத்தி!\\

ஆமாம் ரம்யா .....இது ஒரு நல்ல உத்தி ன்னு எனக்கும் என் அண்ணாவுக்கும் ரொம்ப லேட்டாதான் தெரிந்தது:))

வருகைக்கும் தருகைக்கும் நன்றி ரம்யா!!

Divya said...

\\Ramya Ramani said...
இந்த நட்பு அவங்க அண்ணன் இமெஜ் டாமேஜ் பன்னவும் நக்கல் அடிக்கவும் Use ஆகும் ;)\\

இமேஜ் எல்லாம் டாமேஜ் பண்ணிட்டா.......அப்புறம் யாரு 'பேண்டேஜ்' போடுறது????

அதையும் யோசிக்கனுமே!!

Divya said...

\ நிஜமா நல்லவன் said...
:)

\\

நன்றி நல்லவன்.........நிஜம்ம்ம்மா நல்லவன்:))

Divya said...

\\Anonymous said...
Kalakkal Pathivu :))

Anbu\\

வாங்க அன்பு,

பின்னூட்ட பாராட்டிற்கு நன்றி!!

Divya said...

\\ எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆஹா..சொந்த அனுபவமா திவ்யா? :)\\

ஹாய் ரிஷான்,

'என் அண்ணி எனக்கு ஒரு தோழி'

உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா??

Divya said...

\ரசிகன் said...
//..நான் சொல்லித்தரேன் கேட்டுக்கோ. உன் நாத்தனார் உன் கணவரோட அக்காவா?? தங்கையா ன்றது பொறுத்து தான் நீ எப்படி சமாளிக்கனும்னு சொல்லித்தர முடியும்.//

ஆஹா.. இதுல இம்புட்டு மேட்டர் இருக்கா?:))))\\

ஆமாங்கோ ரசிகன்:)))

Divya said...

\\ரசிகன் said...
இதுலருந்தே தெரியுதே பெண்களுக்கு பெண்கள்தான் தொந்தரவுன்னு:P

மாஸ்டரே மறைமுகமா ஒத்துக்கிட்டாங்களே:))))
(சந்தடி சாக்குல பிரட்சனைய கிளப்பி விட்டாச்சு:))\\

என்னா ஒரு நல்ல எண்ணம் ரசிகன் உங்களுக்கு:)))

Divya said...

\\ரசிகன் said...
எங்க வீட்டுல நானும் தம்பியும்தாங்கறதால அவசியம் வராதுன்னாலும் வேற யாருக்காவது உதவட்டுமேன்னு குறிப்பு எடுத்துக்கறேன்:)\\

மற்றவர்களுக்காக குறிப்பெடுக்கும் உங்க நல்ல மனசு யாருக்குங்க வரும் ரசிகன்:))

Divya said...

\\ரசிகன் said...
திவ்யா மாஸ்டர்... அப்படியே மாமியார் வீட்டு/அக்கம் பக்கத்து வீட்டு பெருமை பேசும் மனைவியை சமாளிப்பது எப்படின்னும் சொல்லி தாங்களேன்.நண்பன் கேக்கிறான்:))\\

நிஜம்மா நண்பனுக்காக தான் கேட்கிறீங்களா??.......சும்மா கூச்சப்படாம சொல்லுங்க ரசிகன்:))

Divya said...

\\கப்பி பய said...
அட்ரா சக்கை!! :)))\\

நன்றி கப்பி:)))

Divya said...

\\கோபிநாத் said...
;))
\\

வருகைக்கு நன்றி கோபிநாத்!!

Divya said...

\\Dreamzz said...
enakennamo ippadi plan ellam podaama, iyalba irundhave nalla padiya irukkalamnu thonuthu\\

உங்கள் கருத்திற்கு நன்றி தினேஷ்.

Divya said...

\\Dreamzz said...
nice post :)\\

நன்றி:)

Divya said...

\\CVR said...
///Blogger Dreamzz said...

enakennamo ippadi plan ellam podaama, iyalba irundhave nalla padiya irukkalamnu thonuthu////
ரிப்பீட்டேய்....
இதயம் சம்பந்தப்பட்ட விஷயத்துல அதிகமா மூளையை பயன்படுத்தக்கூடாது என்பது என் பாலிசி.உறவுகளை புத்தி சாதுர்யத்துடன் கையாள வேண்டியது அவசியம் என்றாலும் இப்படி பட்டியலிட்டு ஸ்ட்ராடிஜி எல்லாம் வகுப்பது சற்றே அதிகப்படி என்று தோன்றுகிறது!! :-)\\

வாங்க சிவிஆர்!
கருத்திற்கு நன்றி !!

//இதைவிட டேஞ்சர் பார்ட்டி இருக்கு, இது உன் வீட்டுக்காரரோட தங்கை..///
அது சரி!!
அதாவது உங்களை மாதிரி பார்டிகள்...சரிதானே?? :P\\

அட.....இப்படியெல்லாம் பப்ளிக்கா கேட்கபிடாது:))

///அப்போ உன் அண்ணி உன்கிட்ட பயன்படுத்தின டெக்னிக்கைதான் என்கிட்ட க்ளாஸ் எடுக்கிறியா நீ???////
பதிவை படிக்க ஆரம்பிச்ச போதே நெனைச்சேன்!! :-D
வாழ்த்துக்கள்!! :-)\\

பதிவு படிக்கு ஆரம்பிச்சப்போவே நினைச்சீங்களா??........நல்லாத்தேன் நினைக்கிறீக அன்னாச்சி:))

வாழ்த்துக்களுக்கு நன்றி சிவிஆர்!!

Divya said...

\\SP.VR. SUBBIAH said...
ஒரு கவிஞன் சொன்னான்:
நா'த்தீயால் சுடுபவள் நாத்தினார்:-))))

(நாக்கினால் தீயாய்ச் சுடுபவள் நாத்தினார்):-)))))\\

வாங்க சார்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!!

Divya said...

\\ இசக்கிமுத்து said...
எப்படி உங்களால் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்க முடியுது!! தொடருங்கள்!!\\

சாம்பார்.......ரசம்.....பாயாசம் இப்படி கலக்கி கலக்கி பழக்கமுங்க:)))

சும்மா தமாசு, கண்டுக்காதீங்க இசக்கிமுத்து!

உங்கள் தொடர் வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றி!!

Divya said...

\\Syam said...
//அட்ரா சக்கை!! :)))//

ripeettttuuuu..... :-)\\

நாட்டாமை, உங்க ரிப்பிடுக்கு ஒரு சல்யூட்டு:)))

Divya said...

\\Syam said...
ivalo kastam yen...naathanaar romba problem panna...aal vechu sulukku eduthida vendiyathu thaana :-)\\

உங்களுக்கு அக்கா, தங்கை யாரும் இல்லியோ???

உங்க தங்கமணி க்கு இந்த சுளுக்கெடுக்க்கிற வேலை இல்லைன்னு தைரியமா ஐடியா கொடுக்கிறீக நாட்டாமை:))))

Divya said...

\\SweetJuliet said...
marupadiyum divya...u rocks...

///Blogger Dreamzz said...

enakennamo ippadi plan ellam podaama, iyalba irundhave nalla padiya irukkalamnu thonuthu////

It s true...

Mathavangalai manasai purinchutu avangalai hurt pannamal erunthale ellarukudeyum sandaipodamal peacefula erukkalam...\\

வாங்க ஸ்வீட்ஜூலியட்,

உங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி!!

Divya said...

\\Sen22 said...
நிறைய சொந்த அனுபவம் இருக்கும் போல.....

Senthil,
Bangalore\\

வாங்க செந்தில்,

நல்லாத்தான் யூகிக்க ஆரம்பிச்சுட்டீங்க செந்தில் நீங்க:)))

வருகைக்கு நன்றி!!

Divya said...

\\கயல்விழி முத்துலெட்சுமி said...
ரொம்ப நல்ல ஐடியா.. இப்படி செய்து ப்ரண்டு பிடிச்சு கிட்டு அப்படியே பழய வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சு வச்சிக்கிட்டா..பின்னால எப்பவாச்சும் ஆமா உங்களப்பத்தி தெரியாதா அதான் உங்க தங்கச்சி சொன்னாளேன்னு சொல்லிக்க்லாம்.. :)\\

இதெல்லாம் கொஞ்ச வருஷத்துக்கு முன் தெரியாம போச்சுங்க கயல்விழி முத்துலெட்சுமி:))

அதுக்குள்ள என் அண்ணி உஷாரிகிட்டாங்க,எல்லாத்தையும் போட்டு வாங்கிட்டாங்க அப்பாவி 'நாத்தனாரிடம்'(:

உங்க பின்னூட்டதிலுள்ள ஐடியா ரொம்ப நல்லாயிருக்குதுங்க, நன்றி!!

Divya said...

\\Priya Murthi said...
திவ்யா... ஆஹா புது போஸ்ட் போட்டுருக்கீங்களேனு பாக்க வந்தா அதுக்குள்ள 45 பின்னுடங்கள் .. அருமை... என்னை பொருத்தவரை நாத்தனார் என்பவர் ஒரு பெண்ணின் மன வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிப்வர்... ஆம் ஒரு பெண் தண் புகுந்த வீட்டிருக்கு புதிதாக போகும் போது அவள் வயதை ஒத்தொ அல்லது அவள் மன நிலயை புரிந்து கொள்ளும்
வயதில் இருப்பவள் அவள் நாத்தனார் ஆவாள். இங்கனம் நாத்தனார் அவர்களை எப்படி நம் வ்சப்படுத்துவது என்பதை மிக அழகாக
விவரித்து உள்ளீர்கள். மேலும் நாத்தனார்களை ரகம் பிரித்து அதற்கேற்ப குறிப்பு சொல்லி இருப்பது மிக அருமை.
உங்கள் படைப்புகள் மேலும் திறம் பெற என் வாழ்த்துக்கள்.\\

வாங்க ப்ரியா,

நீங்க சொன்ன மாதிரி, நாத்தனாருடன் ஒரு நட்பலை இருந்தால் பிரச்சனையே இல்லை.

உங்கள் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ப்ரியா!!

Divya said...

\\gils said...
!!! wow..divs...pinreengalay :)\\

கூடையா.......ஜடையா???
:)))

நன்றி கில்ஸ்!!!

Divya said...

\\Thamizhmaangani said...
பின்னி பெடல் எடுக்குறீங்க! உங்க in-law குடும்பத்தினர் ரொம்ம்ம்ம்ப கொடுத்துவைத்தவர்கள்!!\\

கொடுத்துவைச்சவங்களா.......அப்படியா???
நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும் தமிழ்மாங்கனி:))

பாராட்டிற்கு நன்றி!!!!

Divya said...

\\ My days(Gops) said...
//'என் அண்ணி எனக்கு ஒரு தோழி' அப்படின்னு அந்த தங்கச்சி நாத்தனாரை மார்தட்ட வைக்கனும்.//

idha padichiten :)

50 pottutu meeedhi kummi later nga :)\\

ரொம்ப நல்லவருங்க நீங்க......பெரிய எழுத்தில் பதிவில் தெரிந்த இரண்டு லைன் copy paste பண்ணிட்டு,
பதிவு படிக்கலின்ற அந்த உண்மையையும் ஓத்துக்கிறீங்பாருங்க.....நீங்க ரொம்ப நல்லவருங்க கோப்ஸ்:)))

Divya said...

\\மதுரையம்பதி said...
நல்லாயிருக்குங்க :))\\

ரொம்ப நன்றிங்க மதுரையம்பதி:))

மோகன் கந்தசாமி said...

113 - கமேன்ட்டா?!

புகழன் said...

கொஞ்சம் லேட்டாயிடுச்சு

அப்பப்பா எல்லா விஷயத்திற்கும் பதிவு போடுறீங்களே!
ரியலி கிரேட்

புகழன் said...

ரசிகன் said...
//இதுலருந்தே தெரியுதே பெண்களுக்கு பெண்கள்தான் தொந்தரவுன்னு:P

மாஸ்டரே மறைமுகமா ஒத்துக்கிட்டாங்களே:))))
(சந்தடி சாக்குல பிரட்சனைய கிளப்பி விட்டாச்சு:))

//

ரிப்பீட்டு...........

Prabakar said...

After a month long vacation yesterday i return back to UAE. Nice Article . How come u get time to do research like this... really good advice to gals.

keep writing like this ..

தாரணி பிரியா said...

பெரியவங்களா இருக்கற நாத்தானாரை மரியாதையா நீங்கதான் அக்கா எல்லாத்துக்கும் சரியான ஆளுன்னு சொல்லிட்டா போதும். மாமியார் பிரச்சனையிலிருந்து வீட்டுக்காரர் பிரச்சனை வரைக்கும் எது வந்தாலும் நமக்கு ஆதரவா பேசுவாங்க. சின்ன நாத்தானாரை நம்ம ப்ரெண்ட்ஸை டீல் பண்ற மாதிரி செஞ்சா போதும். இது சொந்த அனுபவம்

எஸ்.ஆர்.மைந்தன். said...

நல்ல பதிவு

Nanathini said...

Nice to Read; experiencea?

பாச மலர் / Paasa Malar said...

அட்டகாசம் திவ்யா

Divya said...

\\padippavan said...
For any family related issues immediate solution available at

divyapedia.com. Soon the question and answers session will start. ( No consultation fees.)\\

ஹலோ படிப்பவன்....விளம்பரம் கொடுக்கிறப்போ 'No consultation fees' ன்னு நீங்களே போட்டுக்கிட்டா எப்படி??என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்க வேணாமா?

OC ல எல்லாம் consultation பண்றதில்லீங்கோ:))

Anyways thanks for your Ad, so nice of you Padippavan;))

Divya said...

\ இனியவள் புனிதா said...
அண்ணன்கிட்ட மாட்டி விடுற அண்ணிகளும் இருக்கவே செய்றாங்களே.. :)\\

அட அப்படியா??

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புனிதா:))

Divya said...

\\ SanJai said...
எச்சுச் மீ ஊர்ஸ்... இப்போலாம் கதை எழுதறத விட இந்த மாதிரி சந்தோஷமான குடும்பத்துக்கு தேவையான டிப்ஸ் குடுக்கிறதுல பெரிய கில்லாடி ஆய்ட்ட... நீ ஊருக்கு வந்ததும் இதுக்கு ஒரு கம்பனி ஆரம்பிச்சிடலாம்... நீ பெரிய கன்சல்டண்ட் ஆய்டுவ...:P நிஜமா சூப்பர்.. அப்டியே கோயம்புத்தூர் பொண்ணுங்கள கவர்வது எபப்டினு ஒரு பதிவு போடு ப்ளீஸ்.. இங்க வந்து போன மாசத்தோட 1 வருஷம் முடிஞ்சிடிச்சி.. ஒரு கேர்ள்ஃப்ரண்ட் கூட இங்க இல்ல. :((

//என் அண்ணி எனக்கு ஒரு தோழி//
அடுத்த தொடருக்கு தலைப்பு ரெடி... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்... :)\\

நன்றி!!நன்றி !!! ஊர்ஸ்!!

உங்களுக்கெல்லாம் டிப்ஸ் கொடுக்கிற அளவுக்கு நமக்கு திறமை பத்தாதுங்க :))

அட......அடுத்த போஸ்ட் க்கு தலைப்பு எடுத்து கொடுத்தீட்டீங்களே.....ரொம்ப தாங்க்ஸ் உர்ஸ்!!

Divya said...

\\முகுந்தன் said...
உங்களிடம் எந்த மாதிரி நாதனர் வந்து மாட்ட போறாளோ பாவம்:-)\\

வாங்க முகுந்தன்,

ஏங்க அவங்களுக்காக நீங்க ரொம்ப ஃபீல் பண்றீங்க?

'உன்னை கட்டிக்க என் தம்பி ரொம்ப கொடுத்து வைச்சவன்' னு மார்தட்ட வைச்சுடுவோம்ல:))

வருகைக்கு நன்றி முகுந்தன்!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
//அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதோ..........ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிட்டதோ, நாலு நல்ல விஷ்யம் சொல்லிக்கொடுத்தா, அப்படியான்னு கேட்டுக்கனும்//

கேட்டுக்கிட்டாச்சு... :)

சூப்பர்!, ஆனா ஒன்னுமே புரியலே... ;)\\

வாங்க நிமல்,

உங்களுக்கு புரியலீனா ஃபிரீயா விடுங்க, உங்க வருங்கால மனைவிக்கு புரிஞ்சா போதும்!!

Divya said...

\\விஜய் said...
உங்களுடைய பழைய பதிப்பு "மனைவியைக்கவர்வது எப்படி" படித்தேன். ரொம்ப ஸ்வாரஸ்யமாகவே இருந்தது. கணவரைக்கவர்வது எப்படின்னு ஒரு பிளாக் எல்லாம் நீங்க எழுதலியா? அதனால நான் கணவனைக் கவர்வது எப்படின்னு ஒரு பிளாக் எழுதியிருக்கேன். படித்துப்பாருங்கள்

அன்புடன்,
விஜய்\\

வாங்க விஜய்,

என் பதிவு படிச்சு நீங்க எழுதின பதிவை படித்தேன், நல்லா எழுதியிருக்கிறிங்க விஜய்.

கணவரைக்கவர்வது எப்படின்னும் டிப்ஸ் கொடுத்திருக்கிறேன்.....நீங்கள் கவனிக்கவில்லைன்னு நினைக்கிறேன்!

Divya said...

\\ மங்களூர் சிவா said...
/
ரசிகன் said...

இதுலருந்தே தெரியுதே பெண்களுக்கு பெண்கள்தான் தொந்தரவுன்னு:P
/

ரிப்ப்பீட்டேேஏஏஏஏய்\\

:)))

Divya said...

\\ மங்களூர் சிவா said...
இப்பல்லாம் சொந்த அண்ணனும் தம்பியும், அப்பாவும் மகனுமே வருசத்துக்கு ஒரு தடவையோ, ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவையோ சந்திச்சிகிட்டாலே பெரிய விசயம் அப்பிடி போய்கிட்டிருக்கு உலகம்!!!!\

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மங்களுர் சிவா.

Divya said...

\\Linq said...
Hey Divya,

This is Alpesh from Linq.in. I loved your blog and I thought I would let you know that your blog has got the following awards.

1.Best blog of all time in languages category.
2.Best blog of week in Languages category on 02/17/08

Check it out here Award

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.
We offer syndication opportunities and many tools for bloggers to use in there
web sites such as the widget below:

Blogger Tools

Alpesh
alpesh@linq.in
www.linq.in\\

Hi Alpesh,
Thanks a lot for the recognition & award,I'm honoured!!

Divya said...

\\voorvambu said...
கோயம்புத்தூர் அம்மணி...நமஸ்காரம்^,

நல்லாயிருக்கிறியளா??

டிப்ஸெல்லாம் நல்லாத்தேன் இருக்குங்கம்மணி, நல்லாயிருங்க:))))\\

வாங்க ஊர்வம்பு,

முதல் வருகைக்கு நன்றி!

Divya said...

\\ Shwetha Robert said...
Very nicely written :)

Another master piece in your
'tips corner', great job Divya:-)\\

வாங்க ஸ்வேதா,

உங்கள் தொடர் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!!

Divya said...

\\ Shwetha Robert said...
Linq said...

1.Best blog of all time in languages category.
2.Best blog of week in Languages category on 02/17/08

----------------

Congrats Divya!!!\\

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்வேதா!!

Divya said...

\\கார்த்திகேயன் . கருணாநிதி said...
திவ்யா.. ரொம்பா நல்ல பதிவு.. பெண்களுக்கு ..

அப்பே எங்கள போல பசங்களுக்கு மாமியார்,
மருமகள் , மாமனாரை ஹண்டில் பண்னுவது எப்படினு
பதிவு போட்டா நல்ல இருக்கும் ...

மொத்தத்தில் அருமை .....

அன்புடன்
கருணாகார்த்திகேயன்\\

வாங்க கார்த்திக்,

பாராட்டிற்கு நன்றி!!

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கோணத்திலும் ஒரு பதிவு விரைவில் பதிவிட உள்ளேன், அவசியம் படியுங்கள் கார்த்திக்.

Divya said...

\\Praveen said...
Nice post Divya:)

Points noted down for my sister & also for my better half.

Praveen,
Bangalore.\\

வாங்க ப்ரவீன்,

குறிப்பெடுத்துக்கொண்டீர்களா...நல்லது!!

வருகைக்கு நன்றி ப்ரவீன்!!

Divya said...

\\ ராமலக்ஷ்மி said...
என் தம்பி மனைவிக்கு நாங்கள் மூன்று நாத்தனார்கள்.புகுந்த வீட்டில் மூவருக்கும் நோ நாத்தனார்ஸ். இது எப்படி இருக்கு? ( ப்ளான் பண்ணிக் கட்டிக் கொடுக்கலை திவ்யா, அப்படி அமைந்து விட்டது.)
//ஜொள்ளுபாண்டி said:ஏன் இப்படி நாத்தனாருகளைப் பத்தி பீதியக் கெளப்புறே திவ்யா..?
குழாயடி சண்டை அளவுக்கா இருக்காவ அவுக..?? பாசக்கார
நாத்தனார் உலகத்திலேயே இல்லையா என்ன..?? ;)))))//

அதானே நல்லா சொல்லுங்க பாண்டி!\\

வாங்க ராமலஷ்மி,

உங்கள் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி!!

பாண்டிக்கு செம சப்போர்ட்டா??

மீண்டும் வருக!!

Divya said...

\\ மோகன் கந்தசாமி said...
113 - கமேன்ட்டா?!\\

உங்கள் முதல் வருகைக்கு நன்றி மோஹன்!!

Divya said...

\\புகழன் said...
கொஞ்சம் லேட்டாயிடுச்சு

அப்பப்பா எல்லா விஷயத்திற்கும் பதிவு போடுறீங்களே!
ரியலி கிரேட்\\

லேட்டா வந்தாலும் ப்ரவாயில்லை புகழன்!!

மனம்திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி புகழன்!

Divya said...

\\புகழன் said...
ரசிகன் said...
//இதுலருந்தே தெரியுதே பெண்களுக்கு பெண்கள்தான் தொந்தரவுன்னு:P

மாஸ்டரே மறைமுகமா ஒத்துக்கிட்டாங்களே:))))
(சந்தடி சாக்குல பிரட்சனைய கிளப்பி விட்டாச்சு:))

//

ரிப்பீட்டு...........\\

இப்படி ரிப்பீட்டு போட மட்டும் கரெக்ட்டா ஆஜர் ஆகிடுறீங்களே?

Divya said...

\\ Prabakar Samiyappan said...
After a month long vacation yesterday i return back to UAE. Nice Article . How come u get time to do research like this... really good advice to gals.

keep writing like this ..\\

ஒரு மாத விடுமுறைக்கு பின்பும் என் வலைதளம் பக்கம் வந்தமைக்கு நன்றி ப்ரபாஹர்.

நிச்சயம் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்!

Divya said...

\\தாரணி பிரியா said...
பெரியவங்களா இருக்கற நாத்தானாரை மரியாதையா நீங்கதான் அக்கா எல்லாத்துக்கும் சரியான ஆளுன்னு சொல்லிட்டா போதும். மாமியார் பிரச்சனையிலிருந்து வீட்டுக்காரர் பிரச்சனை வரைக்கும் எது வந்தாலும் நமக்கு ஆதரவா பேசுவாங்க. சின்ன நாத்தானாரை நம்ம ப்ரெண்ட்ஸை டீல் பண்ற மாதிரி செஞ்சா போதும். இது சொந்த அனுபவம்\\

வாங்க தாரணி பிரியா,

நீங்கள் சொன்ன கருத்துக்கள் மிக மிக சரி!!!
உங்கள் அனுபவம் கற்றுத்தந்ததை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொண்டதிற்கு மிக்க நன்றி!!

Divya said...

\\ இரா.ஜெயபிரகாஷ் said...
நல்ல பதிவு\

வாங்க ஜெயபிரகாஷ்,

மிக்க நன்றி!!!

Divya said...

\\Senthur said...
Nice to Read; \\

பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி செந்தூர்!!

\\experiencea?\\

'என் அண்ணி எனக்கு ஒரு தோழி'

Divya said...

\\பாச மலர் said...
அட்டகாசம் திவ்யா\

வாங்க பாசமலர்,

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

லொள்ளு பொண்ணு வள்ளி said...

வணக்கம் திவ்யா கண்ணு ...

நான் சொல்லித்தரேன் கேட்டுக்கோ சொல்லி ..இப்படி நாத்தனார் பற்றி நல்லா தெளிவா சொல்லிடிங்க ..எங்களை போன்ற பயந்த பெண்களுக்கு
நல்ல வழி காட்டி ......(ஹி..ஹி..ஹி..)

இது உங்கள் அனுபவமா படிப்பா ,இல்லை கேட்டு தெரிந்த படிப்பா ..?
அருமையான பதிவு ...உங்கள்

அடுத்த பதிவு எப்போ ..என்ன தலைப்பு ..???
சீக்கிரமா போடுங்கள் ..வந்துடுறேன் ....

அன்புடன்-

ரொம்ப பயந்த பொண்ணு வள்ளி .........

Divya said...

\\லொள்ளு பொண்ணு வள்ளி said...
வணக்கம் திவ்யா கண்ணு ...

நான் சொல்லித்தரேன் கேட்டுக்கோ சொல்லி ..இப்படி நாத்தனார் பற்றி நல்லா தெளிவா சொல்லிடிங்க ..எங்களை போன்ற பயந்த பெண்களுக்கு
நல்ல வழி காட்டி ......(ஹி..ஹி..ஹி..)

இது உங்கள் அனுபவமா படிப்பா ,இல்லை கேட்டு தெரிந்த படிப்பா ..?
அருமையான பதிவு ...உங்கள்

அடுத்த பதிவு எப்போ ..என்ன தலைப்பு ..???
சீக்கிரமா போடுங்கள் ..வந்துடுறேன் ....

அன்புடன்-

ரொம்ப பயந்த பொண்ணு வள்ளி .........\\

வாங்க வள்ளி,

வருகைக்கு நன்றி!!

நீங்க பயந்த பொண்ணா???........நம்பிட்டேன் :))))

துளசி கோபால் said...

நாத்தனார் மகிமை ரொம்ப லேட்டாதான் கண்ணுலே பட்டுச்சு.

நான் எப்பவுமே கொஞ்சம்(?) லேட் தான் திவ்யா.

என் நாத்தனாரையே கல்யாணம் ஆகி முப்பத்திரெண்டு வருசம் கழிச்சுத்தான் பார்த்தேன்.

பதிவு சூப்பர்:-)

Divya said...

\\துளசி கோபால் said...
நாத்தனார் மகிமை ரொம்ப லேட்டாதான் கண்ணுலே பட்டுச்சு.

நான் எப்பவுமே கொஞ்சம்(?) லேட் தான் திவ்யா.

என் நாத்தனாரையே கல்யாணம் ஆகி முப்பத்திரெண்டு வருசம் கழிச்சுத்தான் பார்த்தேன்.

பதிவு சூப்பர்:-)\\

வாங்க துளசிம்மா,

ரொம்ப நாளைக்கப்புறம் என் வலைதளம் வந்திருக்கிறீங்க, மிக்க மகிழ்ச்சி!

அட.....என்னாங்க 32 வருஷம் ஆச்சா நீங்க உங்க நாத்தனாரை மீட் பண்ண, அச்சரியமா இருக்குதே!

பாராட்டிற்கும் , பகிர்விற்கும் மிக்க நன்றிமா!!

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா...said..

\தமிழன்... said...
நாத்தனாருங்க பற்றி இப்படியெல்லாம் அறிக்கை விடலாமா...\\

ஏன் தப்பா??///

அப்ப திவ்யாங்கிற நாத்தனாரைப்பற்றி வருங்காலத்துல ஒரு அறிக்கை கட்டாயம் வெளியாகும் ஆனா எப்படிங்கிறதுதான் கேள்வி...

தமிழன்-கறுப்பி... said...

நீங்க எந்த வகை நாத்தனாருங்கோ அதையும் நீங்களே சொல்லிட்டா பிரச்சனையில்லையே...

Anonymous said...

திவ்யா,

பதிவு
அசத்தல்,
அட்டகாசம்,
அருமை......இப்படி சொல்லிட்டே போலாம்,
அவ்வளவு நல்லா எழுதியிருக்கிறீங்க!

Anonymous said...

\\அதுவும் வயது அதிக வித்தியாசம் உள்ள பெரிய அக்கா, இவங்க ஒரு இரண்டாவது மாமியார்னே சொல்லலாம்.\\

கரெக்ட் திவ்யா,
என் அம்மா என்னோட பாட்டி[அப்பாவின் அம்மா] கிட்ட கூடஅவ்வளவு கஷ்டபடல, என் அத்தை[அப்பாவின் அக்கா] கிட்ட தான் ரொம்ப ரொம்ப கஷ்டபட்டாங்க.

மிக சரியா பிரிச்சிருக்கிறீங்க நாத்தனார்களை.

Vijay said...

திவ்யா,
உங்களுடைய மற்ற சில பதிப்புகளையும் படித்தேன்.
நீங்க எழுதறதையெல்லாம் பார்த்துட்டு, "ஏண்டா விஜய் இப்படியெல்லாம் எழுதறவங்க இருக்கும் போது நீயெல்லாம் எதுக்குடா எனக்கும் எழுதத்தெரியும்னு எழுதற"ன்னு மனசாட்சி குத்தி குதறிடுத்து.

உங்களுடைய "காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக்காணும் வரை" பதிப்பில் நாயகியான பூர்ணிம National Engineering College'ல் படிப்பதாகப் போட்டிருக்கீங்க. ஹ்ம்ம் நான் படிக்கும் போதெல்லாம் இப்படி ஒரு ஃபிகர் அங்கே இருந்ததே இல்லை :(
இனிமேலும் எழுதணுமா என்று யோசிக்கும்,
விஜய்

Divya said...

\\தமிழன்... said...
திவ்யா...said..

\தமிழன்... said...
நாத்தனாருங்க பற்றி இப்படியெல்லாம் அறிக்கை விடலாமா...\\

ஏன் தப்பா??///

அப்ப திவ்யாங்கிற நாத்தனாரைப்பற்றி வருங்காலத்துல ஒரு அறிக்கை கட்டாயம் வெளியாகும் ஆனா எப்படிங்கிறதுதான் கேள்வி...\\

அறிக்கை வெளியாகுமா??ஹா ஹா!

அப்படி அறிக்கை வந்தா சூப்பரு அறிக்கையாதான் இருக்கும் , தமிழன்!!

Divya said...

\\தமிழன்... said...
நீங்க எந்த வகை நாத்தனாருங்கோ அதையும் நீங்களே சொல்லிட்டா பிரச்சனையில்லையே...\\

எந்த வகைன்னு கவலைப்பட வேண்டியது .....நீங்க இல்லீங்கோ,
நாத்தனாருங்கோ!!

Divya said...

\கீதா said...
திவ்யா,

பதிவு
அசத்தல்,
அட்டகாசம்,
அருமை......இப்படி சொல்லிட்டே போலாம்,
அவ்வளவு நல்லா எழுதியிருக்கிறீங்க!\\

வாங்க கீதா,

ரொம்ப புகழ்ந்து தள்ளிட்டீங்க, நன்றிங்க!!

Divya said...

\\கீதா said...
\\அதுவும் வயது அதிக வித்தியாசம் உள்ள பெரிய அக்கா, இவங்க ஒரு இரண்டாவது மாமியார்னே சொல்லலாம்.\\

கரெக்ட் திவ்யா,
என் அம்மா என்னோட பாட்டி[அப்பாவின் அம்மா] கிட்ட கூடஅவ்வளவு கஷ்டபடல, என் அத்தை[அப்பாவின் அக்கா] கிட்ட தான் ரொம்ப ரொம்ப கஷ்டபட்டாங்க.

மிக சரியா பிரிச்சிருக்கிறீங்க நாத்தனார்களை.\

கீதா,
உங்கள் அம்மாவின் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி!!

Divya said...

\\கீதா said...
\\அதுவும் வயது அதிக வித்தியாசம் உள்ள பெரிய அக்கா, இவங்க ஒரு இரண்டாவது மாமியார்னே சொல்லலாம்.\\

கரெக்ட் திவ்யா,
என் அம்மா என்னோட பாட்டி[அப்பாவின் அம்மா] கிட்ட கூடஅவ்வளவு கஷ்டபடல, என் அத்தை[அப்பாவின் அக்கா] கிட்ட தான் ரொம்ப ரொம்ப கஷ்டபட்டாங்க.

மிக சரியா பிரிச்சிருக்கிறீங்க நாத்தனார்களை.

8:46 PM

விஜய் said...
திவ்யா,
உங்களுடைய மற்ற சில பதிப்புகளையும் படித்தேன்.
நீங்க எழுதறதையெல்லாம் பார்த்துட்டு, "ஏண்டா விஜய் இப்படியெல்லாம் எழுதறவங்க இருக்கும் போது நீயெல்லாம் எதுக்குடா எனக்கும் எழுதத்தெரியும்னு எழுதற"ன்னு மனசாட்சி குத்தி குதறிடுத்து.

உங்களுடைய "காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக்காணும் வரை" பதிப்பில் நாயகியான பூர்ணிம National Engineering College'ல் படிப்பதாகப் போட்டிருக்கீங்க. ஹ்ம்ம் நான் படிக்கும் போதெல்லாம் இப்படி ஒரு ஃபிகர் அங்கே இருந்ததே இல்லை :(
இனிமேலும் எழுதணுமா என்று யோசிக்கும்,
விஜய்\\

வாங்க விஜய்,

என் முந்தைய பதிவுகளை எல்லாம் இப்போதான் படிக்கிறீங்களா.....நேரம் எடுத்து பொறுமையுடன் படிப்பதற்கு நன்றி!!

நீங்க கோவில்பட்டி காலேஜ்ல தான் படிச்சீங்களா??
அச்சோ பாவமுங்க நீங்க.....நீங்க படிச்சப்போ பூர்ணிமா அங்கே படிக்காம போய்ட்டாளே((:

இனிமேலும் தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும் என விரும்பும்
உங்கள் சிநேகிதி
திவ்யா.

Vijay said...

நானெல்லாம் அந்தக் காலத்து NEC. படிச்சு முடிச்சு 10 வருஷம் ஆகப்போகுது.
என் பதிவையும் கஷ்டப்பட்டு படிப்பதற்கு நன்றி.

அன்புடன்,
விஜய்

kavidhai Piriyan said...

use ful post for bride !!!!