May 22, 2008

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

பாசமிகு தந்தை இறைவனடி சேர்ந்திட
இழப்பின் தாக்கம் நெஞ்சை உலுக்கிட
திடீர் மறைவை ஏற்று தாங்கிட
மனம் தடுமாறும் போது...

அப்பாவின் நினைவுகள் நெஞ்சில் மோதிட
மனதில் இருள் சூழ்ந்திட
கண்ணீர் துடைக்க கரமொன்றை மனம் வேண்டிட
உள்ளம் ஏங்குகையில்....

தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய் நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???

நம் தலைகோதி தன் மடியில் துயில் கொள்ள செய்யும் அம்மா .........இன்று தலை சாய நாம் தோள் கொடுக்க வேண்டியது, அப்பா விட்டுச்சென்ற கடமைகளில் ஒன்று!

அக்கடமையை செய்வது அத்துணை சுலபமல்ல.....

அப்பா பதித்து சென்ற நினைவுகள் தரும் பாரம் நெஞ்சில் அழுத்த,
மறைந்த அப்பாவை நினைத்து அழுவதா??
மங்களகரமான புன்னகையுடன் இத்தனை வருடங்கள் கண்டிருந்த அம்மாவின் இன்றைய நிலைகண்டு கதறுவதா????

துக்கம் தொண்டையை அடைக்க, குடும்பத்தை தாங்கி நடத்த தடுமாறும் அத்தருணத்தில், அம்மாவிற்கு எவ்வகையில் ஆறுதல் அளிக்க முயற்சிக்கலாம் என என் அனுபவ ஆலோசனைகள், இங்கு பதிவாக............

* துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பல நேரங்களில் நாம் மெளனமாக இருந்து அவர்களை மனம் திறந்து பேச விடுவது சிறந்தது.
அப்பாவின் நினைவுகளை கண்ணீரோடு அம்மா பகிர்ந்துக் கொள்ளும்போது பொறுமையுடன் உங்கள் கண்ணீரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கவனியுங்கள்.
மனம் விட்டு பேச பேச தான் மனதின் பாரம் குறையும்.

*அம்மா புலம்பி அழுகையில் நீங்கள் உங்கள் 'கண்ணீர் அணை' உடைபட்டு கதறிவிட்டால் , அம்மா நொறுங்கிப் போவார்கள். உங்கள் கண்ணீர் அவர்களை பலவீனப்படுத்தும்.

* அதிகமான அனுதாப வார்த்தைகள் மேலும் துயர் கொள்ளச் செய்யும்.
அதனால் அவ்விதம் பேசி பேசி ஆறாத காயங்களை ரணப்படுத்தும் உறவினர்கள், அயலகாத்தாரிடமிருந்து பத்திரமாக அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்.

[பட்சாதாப வார்த்தைகள் கூறிக்கொண்டே இருப்பது துக்கத்தையும் சுய இரக்கத்தையும் அதிகப்படுத்தும் எனத் தெரியாமல் பேசுபவர்களும் உண்டு...........வேண்டுமென்றே கிண்டி கிளறி காயப்படுத்துவோரும் உண்டு]

* அவர்களின் ஒத்த வயதில் உறவு பெண்கள் யாராவது சில நாட்கள் அம்மாவுடன் இருப்பது சாத்தியமானால் நன்று. ஆனால் அப்பெண்களும் ஒப்பாரி வைக்கும் கூட்டமாக இருந்திட கூடாது.

*அம்மாவிற்கு பிடித்த உணவகம், கோயில், உறவினர்/நண்பர்கள் இல்லம்........இப்படி எங்காவது அழைத்துச் செல்லுங்கள்,
இடமாறுதல் மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

*முன்பு போல் உடுத்திக்கொண்டு வெளியில் சென்றால் சமூகம் என்ன நினைக்கும் என்ற பயமும்.............சுயபட்சாதாபமும் அதிகம் இருக்கும் அவர்கள் மனதில், நீங்கள் தான் தன்னம்பிக்கை வார்த்தைகள் கூறி சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

* நாட்டு நடப்பு, சீதோஷன மாற்றங்கள், பக்கத்துவீட்டு குழந்தையின் குறும்பு.........இப்படி ஏதாவது ஒன்றை பற்றி பேசி, அம்மாவின் சிந்தனைகளை திசைதிருப்பி, இயல் நிலைக்கு வர உதவுங்கள்.

*அம்மாவிற்கு அதிக ஈடுபாடு உள்ள விஷயம் என்னவென்று அறிந்து, அதில் அவரை ஈடுபடுத்திக்கொள்ள வைக்கலாம்.

*நம் துக்கத்தை மறைத்து , அன்னைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தைரியமான முகத்திரை மிக மிக அவசியம்.
குடும்பத்தை தொடர்ந்து தாங்கி நடத்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதே அம்மாவிற்கு புது தெம்பை கொடுக்கும்.

*அப்பா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப நம்மால் முடியாது...........உடைந்த அன்னையின் உள்ளம் உருகுலையாமல் நிச்சயம் பார்த்துக் கொள்ள முடியும்.

துக்கத்தின் அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும் ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின் குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு மட்டுமே புரியும்!!

காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை துடைக்கும்..........

அன்னை அந்நிலையை விரைவில் அடைவதற்கு நம் ஆறுதல் தோள் அவசியம் தேவை!!

132 comments:

நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா...

நெஞ்சைத் தொட்ட பதிவு...

நவீன் ப்ரகாஷ் said...

//அப்பா பதித்து சென்ற நினைவுகள் தரும் பாரம் நெஞ்சில் அழுத்த,
மறைந்த அப்பாவை நினைத்து அழுவதா??
மங்களகரமான புன்னகையுடன் இத்தனை வருடங்கள் கண்டிருந்த அம்மாவின் இன்றைய நிலைகண்டு கதறுவதா???? //

மிகவும் வேதையான தருணங்கள் அவை அல்லவா..? எப்படி எதிர்கொள்வது ...?? குழம்பிக்கிடக்கும் வேளையில் மிக அருமையான பதிவு....

சாம் தாத்தா said...

//காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை துடைக்கும்..........//

ஆமாம் திவ்யாக் கண்ணு.

நிசமாவே கண்லருந்து ரெண்டு சொட்டு கீழே வழிஞ்சது.

கூடவே மனசும் ரொம்ப வலிக்குது.

வரேண்டா திவ்யாக் கண்ணு.

நவீன் ப்ரகாஷ் said...

//அதிகமான அனுதாப வார்த்தைகள் மேலும் துயர் கொள்ளச் செய்யும்.
அதனால் அவ்விதம் பேசி பேசி ஆறாத காயங்களை ரணப்படுத்தும் உறவினர்கள், அயலகாத்தாரிடமிருந்து பத்திரமாக அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்.//

மிகச்சரி.... துயர் துடைக்க வந்தவர்கள் துயரின் ரணத்தை மேலும் அதிகமாக்கியும் செல்கிறார்கள்....

நவீன் ப்ரகாஷ் said...

//அப்பா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப நம்மால் முடியாது...........உடைந்த அன்னையின் உள்ளம் உருகுலையாமல் நிச்சயம் பார்த்துக் கொள்ள முடியும். //

சத்தியமான வார்த்தைகள் திவ்யா...

SathyaPriyan said...

//
முன்பு போல் உடுத்திக்கொண்டு வெளியில் சென்றால் சமூகம் என்ன நினைக்கும் என்ற பயமும்.............சுயபட்சாதாபமும் அதிகம் இருக்கும் அவர்கள் மனதில், நீங்கள் தான் தன்னம்பிக்கை வார்த்தைகள் கூறி சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும்
//
Divya இது தான் நமது சமூகத்தில் பல நேரம் பெண்களுக்கும் சில நேரம் ஆண்களுக்கும் இருக்கும் பெரிய சங்கடம்.

"அவள் ஒரு தொடர்கதை" படத்தில் ஒரு காட்சி. வசனங்கள் சரியாக நினைவில் இல்லை.

தனது விதவை தங்கைக்கு மணமுடிக்க முயற்சி செய்வாள் நாயகி.

அன்னை அதற்கு "சமூகம் என்ன சொல்லும்?" என்று கேள்வி கேட்பாள்.

"அப்படியா சமூகம் நம்மை பற்றி தவறாக பேசுமா?" என்பாள் நாயகி.

"ஆம்." என்பாள் அன்னை.

"அப்படியென்றால் சமூகம் ஒன்றும் சொல்லவில்லை என்றால் உனது மகளை என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதிப்பாயா?" என்று எதிர் கேள்வி கேட்பாள் நாயகி.

என்ன வேண்டுமானாலும் என்ற சொல்லில் அழுத்தம் அதிகம் இருக்கும்.

பல நேரங்களில் நமது மனத்திற்கு ஒப்பாத செயல்களை சமூகத்தை காரணம் காட்டி விலக்கி விடுகிறோம் என்று நினைக்கிறேன்.

தெரியவில்லை. எனது எண்ணம் தவறாகவும் இருக்கலாம்.

நவீன் ப்ரகாஷ் said...

//குழந்தை பருவத்தில் நம்
அழுகையின் குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு மட்டுமே புரியும்!!//

:(((

மிக ஆழமான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி திவ்யா.....

M.Rishan Shareef said...

நல்ல பதிவு திவ்யா..
ஆழமாக யோசித்திருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் சினேகிதி :)

தமிழன்-கறுப்பி... said...

என்னப்பா இது பதிவு எப்பபோட்டிங்க அதுக்குள்ள கமன்ட்டும் போட்டுட்டாங்க...

தமிழன்-கறுப்பி... said...

உணர்வுகளால் அணுக வேண்டிய விடயத்தை விளக்கம் போட்டிருக்கிறீர்கள் பெரிய ஆள்தான் திவ்யா...

தமிழன்-கறுப்பி... said...

உண்மைதான் திவ்யா நீங்கள் சொல்வது நாமும் சோர்ந்து விட்டால் நம்மை பார்த்து பார்த்து பேணிய பெற்றவார்களை யார் தேற்றுவது இந்த மாதிரி தருணங்களில் நாம்தான் தெளிவாக இருக்கவேண்டும் அன்னைக்கு என்ன தேவை என்பதை அவர் சொல்லாமலே கவனிக்க வேண்டியது நமது கடமை...

நல்ல பதிவு திவ்யா வாழ்த்துக்கள்...

கப்பி | Kappi said...

நல்ல பதிவு! வாழ்க!!

Ramya Ramani said...

//நம் துக்கத்தை மறைத்து , அன்னைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தைரியமான முகத்திரை மிக மிக அவசியம்.
குடும்பத்தை தொடர்ந்து தாங்கி நடத்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதே அம்மாவிற்கு புது தெம்பை கொடுக்கும்.//

திவ்யா நீங்கள் மேலே சொல்லியது போல தன்னம்பிக்கை வேண்டும். அப்பாவுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ஆனால் அவர் விட்டு சென்ற பாதை நமக்கு தெளிவாக வழி காட்டும் என்ற நம்பிக்கையோடு செல்ல வேண்டும். இது போன்ற வார்த்தைகளை மற்றவர்களுக்கு கூருவது சுலபம், ஆனால் அது போன்ற சூழ்நிலையில் நாம் இருக்கும் போது React பன்னுவது கடினம். உங்கள் யோசனைகளுக்கு நன்றி!இறைவன் உங்களோடு எப்போழுதும் துனை இருக்க மனமாற வேண்டுகிறென்!

Dreamzz said...

//தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய் நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???
//

ninaika mudiyatha thunbam varumpothu.. eppovume romba kashtam thaanga divya. verenna sollanu theriyala.

ஜி said...

இது மாதிரி நேரத்துல மன வலிமை மிக மிக அவசியம்ங்றத தெளிவா சொல்லிருக்கீங்க.

நல்லதொரு பதிவு!!

FunScribbler said...

வணக்கம் திவ்ஸ், எப்போதுமே உங்களிடமிருந்து ஜாலியான பதிவுகளை படித்த எனக்கு இப்படி ஒரு பதிவை படித்தவுடன் மனசு ரொம்ப ஒரு மாதிரியா போச்சு.

நல்ல யோசனைகளை சொல்லியிருக்கீங்க. ஆனா, நீங்க சொன்ன மாதிரி, அது பிள்ளைகள் கையில் தான் உள்ளது. சில நேரங்களில் பிள்ளைகள் சிறு வயதாக இருக்கலாம். அப்போது மன வலிமை அந்த பெண்ணுக்கு இன்னும் கூடுதலாக தேவைப்படும்.

இந்த பதிவை படித்தவுடன் என் காலேஜ் தோழியின் அப்பாவின் மறைவு ஞாபகத்துக்கு வந்துவிட்டது. ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாள். இன்னிக்கு நினைச்சாகூட கண்கள் கலங்குது...

கருப்பன் (A) Sundar said...

:'-(

ஒரே அழுகாச்சி அழுகாச்சியா வருதுங்க திவ்யா...

ஸ்ரீ said...

அருமையான பதிவு. நிஜம் பல நேரங்களில் கலங்க வைத்து தான் விடுகின்றது. :(

எழில்பாரதி said...

மிக அருமையான பதிவு திவ்யா!!!!

கோபிநாத் said...

நல்ல பதிவு திவ்யா!

gils said...

silapathigaramla pandia mannan mandaya poatathukaprum..avar wife oru dialogue solitu udanay sethurvanga..."Kanavanai izhanthorku kaatuvathu il"..intha oru linea collegle enga tamizh sir one hour explain pannar...appa thavarita...naan irukennu solitu avar idathai nirapa aal undu..ammakum avvaray...pillaigalukum athu porunthum..aana kanavanai izhanthorku apdi koora iyalathu...!!! kita thatta avar sonna linelaye soliten..oori poidichi avar sonnathu. guess its apt for this post also. Relationshipla ungaluku PhD confirm divs :)

ரசிகன் said...
This comment has been removed by the author.
ரசிகன் said...
This comment has been removed by the author.
SweetJuliet said...

divya very very touching post..
u rocks in dis post...

லொள்ளு பொண்ணு வள்ளி said...

இனிய வணக்கம் திவ்யா ...

அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு மட்டுமே புரியும்!!

*நம் துக்கத்தை மறைத்து , அன்னைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தைரியமான முகத்திரை மிக மிக அவசியம்.
குடும்பத்தை தொடர்ந்து தாங்கி நடத்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதே அம்மாவிற்கு புது தெம்பை கொடுக்கும்....

காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை துடைக்கும்..........//

இந்த சின்ன வயசுல எவ்வளவு தத்துவமா இந்த
பதிவு ...உங்களை நினைச்சா ரொம்ப ...ரொம்ப ..பெருமையா
இருக்கு ..உங்களை பாராட்ட வார்த்தைய தேடிட்டு இருக்கேன் ...
அதுக்குள்ளே இன்னும் ஒரு நல்ல பதிவை போடுங்க ..
வந்துடுறேன் ..

அன்புடன் ..
லொள்ளு பொண்ணு வள்ளி ...

புகழன் said...

அருமையான தேவையான பதிவு திவ்யா
//
காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை துடைக்கும்..........
//
உண்மையான வரிகள்.
மரணமும் பிரிவும் இயற்கை; தவிர்க்க முடியாதது என்பதை வாழும் காலத்திலேயே தன் துணைவிக்கும் குடும்பத்திற்கும் உணர வைத்து விட்டு சென்றவர்கள் என் உறவினர்களில் பலர் உண்டு.
அதுவே இன்னும் சாலச் சிறந்த மருந்தாய் அமையும்.

Sanjai Gandhi said...

உன் நண்பன் என்பதில் சந்தோஷமடைகிறேன்... அருமையான பதிவு... மன முதிர்ச்சியான கருத்துக்கள்... உன் அன்னை செய்த புண்ணியம் நீ... வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

புகழன் said...

பிறந்த நாள்னு சொல்றதே இல்லையா?
இருந்தாலும் பரவாயில்லை எங்கள் வாழ்த்துகள் கவியரசியே!

Anonymous said...

nice post divya.
Birthday wishes :)

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யா...

தமிழன்-கறுப்பி... said...

எத்தனையாவது பிறந்தநாள் மேடம்? ஓ... இது கேட்கக்கூடாத கேள்வியோ....:)

தமிழ் said...

/துக்கத்தின் அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும் ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின் குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு மட்டுமே புரியும்!!/

உண்மை தான்
\

நிஜமா நல்லவன் said...

:((

Anonymous said...

துயர்கொள்ளும் நெஞ்சங்களுக்கு உபயகோமான ஆலோசனைகள்,

அனுபவம் கற்றுக்கொடுத்ததை பகிர்ந்துக்கொள்ளும் உங்கள் நல்லெண்ணத்தை பாராட்டுகிறேன்.

Anonymous said...

பின்னூட்டங்களின் மூலம்....பிறந்தநாள் என அறிந்தேன்,

உள்ளம் கணிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Anonymous said...

Belated birthday wishes Divya:-)

Praveen,
Bangalore.

Anonymous said...

Useful post with a good thought:-)

appreciate your matured approach in soothing your mom,
May there be peace, take care Divya.

Praveen,
Bangalore.

Sen22 said...

நான் கொஞ்சம் லேட்டா
வந்துட்டேன்..
அருமையான பதிவுங்க திவ்யா...

பிறந்த நாள் வாழ்த்துகள் திவ்யா...

Senthil,
Bangalore

கருணாகார்த்திகேயன் said...

வார்த்தைகள் இல்லை , மனது முழுவதும் வலிகள் !

அன்புடன்
கார்த்திகேயன்

MyFriend said...

அழுத்தமான ஆழமான பதிவு திவ்யா.

MyFriend said...

டிப்ஸ் 1,2,3,4,7,8,9,10 & 11..

சரியானது. இதை நான் என் தோழியின் அம்மாவின் மூலமாக பார்த்திருக்கேன். கரேக்ட்டா வர்க் அவுட் ஆனது.

5-ஆவது ரொம்ப கஷ்டம். எவ்வளவோ வற்புருத்தியும், பாசமாக கூப்பிட்டும் என் சின்னம்மாவை வெளியே கூட்டிட்டே போகமுடியவில்லை. ரொம்ப உடைந்து போயிருந்தாங்க. :-(

6- நம் இந்தியர்களில் கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தும் சரி பண்ணிடலாம். முயற்சி பண்ணா முடியும். :-)

தினேஷ் said...

பின்னூட்டங்களின் முலம் பிறந்தநாள் என அறிகிறேன்...

எல்லா நலங்களும் பெற என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...திவ்யா

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

priyamanaval said...

வாழ்த்துகள் திவ்யா. மிக அருமையான பதிவு.நெஞ்சை உருக்கும் வார்த்தைகள். உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை மிக அழகாக பதிவு செய்து உள்ளிர்கள். இந்த பதிவாய்ப் படிக்கும் பொழுது உங்கள் மனதை படிக்கும் உணர்வு ஏற்படுகிறது

உங்கள் மனம் சொல்லுவதை எங்கள் மனம் படிக்கும் வண்ணம் இயற்றி உள்ளிர்கள்.வாழ்துக்கள் திவ்யா.
உங்கள் படைப்புகள் மேலும் மேலும் திறம் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

Anonymous said...

கண்ணீர் துளிகளின் கனத்தை உணர வைக்கிறது உங்கள் பதிவு

Anonymous said...

Ennappa ellam sogamayittenge. Cheerup please.

Divya said...

\\நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா...

நெஞ்சைத் தொட்ட பதிவு...\\

பதிவு உங்கள் மனம் தொட்டதை அறிந்து மகிழ்ச்சி:))

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//அப்பா பதித்து சென்ற நினைவுகள் தரும் பாரம் நெஞ்சில் அழுத்த,
மறைந்த அப்பாவை நினைத்து அழுவதா??
மங்களகரமான புன்னகையுடன் இத்தனை வருடங்கள் கண்டிருந்த அம்மாவின் இன்றைய நிலைகண்டு கதறுவதா???? //

மிகவும் வேதையான தருணங்கள் அவை அல்லவா..? எப்படி எதிர்கொள்வது ...?? குழம்பிக்கிடக்கும் வேளையில் மிக அருமையான பதிவு....\\

உங்கள் குழப்பம் தீர தக்க தருணத்தில் பதிவிட முடிந்ததில் ஒரு திருப்தி:)))

Divya said...

\\சாம் தாத்தா said...
//காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை துடைக்கும்..........//

ஆமாம் திவ்யாக் கண்ணு.

நிசமாவே கண்லருந்து ரெண்டு சொட்டு கீழே வழிஞ்சது.

கூடவே மனசும் ரொம்ப வலிக்குது.

வரேண்டா திவ்யாக் கண்ணு.\\

பகிர்விற்கு நன்றி தாத்தா:)))

Divya said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//அதிகமான அனுதாப வார்த்தைகள் மேலும் துயர் கொள்ளச் செய்யும்.
அதனால் அவ்விதம் பேசி பேசி ஆறாத காயங்களை ரணப்படுத்தும் உறவினர்கள், அயலகாத்தாரிடமிருந்து பத்திரமாக அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்.//

மிகச்சரி.... துயர் துடைக்க வந்தவர்கள் துயரின் ரணத்தை மேலும் அதிகமாக்கியும் செல்கிறார்கள்....\\

ஆமாம் நவீன்:))

Divya said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//அப்பா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப நம்மால் முடியாது...........உடைந்த அன்னையின் உள்ளம் உருகுலையாமல் நிச்சயம் பார்த்துக் கொள்ள முடியும். //

சத்தியமான வார்த்தைகள் திவ்யா...\\

ஆமோதிப்பிற்கு நன்றி நவீன்.

Divya said...

\\\SathyaPriyan said...
//
முன்பு போல் உடுத்திக்கொண்டு வெளியில் சென்றால் சமூகம் என்ன நினைக்கும் என்ற பயமும்.............சுயபட்சாதாபமும் அதிகம் இருக்கும் அவர்கள் மனதில், நீங்கள் தான் தன்னம்பிக்கை வார்த்தைகள் கூறி சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும்
//
Divya இது தான் நமது சமூகத்தில் பல நேரம் பெண்களுக்கும் சில நேரம் ஆண்களுக்கும் இருக்கும் பெரிய சங்கடம்.

"அவள் ஒரு தொடர்கதை" படத்தில் ஒரு காட்சி. வசனங்கள் சரியாக நினைவில் இல்லை.

தனது விதவை தங்கைக்கு மணமுடிக்க முயற்சி செய்வாள் நாயகி.

அன்னை அதற்கு "சமூகம் என்ன சொல்லும்?" என்று கேள்வி கேட்பாள்.

"அப்படியா சமூகம் நம்மை பற்றி தவறாக பேசுமா?" என்பாள் நாயகி.

"ஆம்." என்பாள் அன்னை.

"அப்படியென்றால் சமூகம் ஒன்றும் சொல்லவில்லை என்றால் உனது மகளை என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதிப்பாயா?" என்று எதிர் கேள்வி கேட்பாள் நாயகி.

என்ன வேண்டுமானாலும் என்ற சொல்லில் அழுத்தம் அதிகம் இருக்கும்.

பல நேரங்களில் நமது மனத்திற்கு ஒப்பாத செயல்களை சமூகத்தை காரணம் காட்டி விலக்கி விடுகிறோம் என்று நினைக்கிறேன்.

தெரியவில்லை. எனது எண்ணம் தவறாகவும் இருக்கலாம்.\\

வாங்க சத்யா,

உங்கள் கருத்துக்களை விரிவாக பகிர்ந்திருக்கிறீர்கள், நன்றி சத்யா.

சமுதாயத்திற்காக பயப்படும் நிலை கைம்பெண்கள் ரொம்பவே அதிகம்.அவர்களது மனநிலையை புரிந்துக்கொள்ளாமல்.......வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவர்கள் தான் அதிகம்.

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//குழந்தை பருவத்தில் நம்
அழுகையின் குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு மட்டுமே புரியும்!!//

:(((

மிக ஆழமான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி திவ்யா.....\\

நன்றி எல்லாம் எதுக்குங்க நவீன்,
உங்கள் நிலையில் இருக்கும் நண்பர்களுக்கு ஆறுதலாக பதிவு இருக்குமாயின் , அதுவே எனக்கு போதும்.

Divya said...

\\எம்.ரிஷான் ஷெரீப் said...
நல்ல பதிவு திவ்யா..
ஆழமாக யோசித்திருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் சினேகிதி :)\\

நன்றி சினேகிதனே:)))

Divya said...

\\தமிழன்... said...
என்னப்பா இது பதிவு எப்பபோட்டிங்க அதுக்குள்ள கமன்ட்டும் போட்டுட்டாங்க...\\

பதிவு போட்டதும் கரெக்ட்டா ஆஜர் ஆகிட்டீங்க தமிழன்......நன்றி!!

Divya said...

\\தமிழன்... said...
உணர்வுகளால் அணுக வேண்டிய விடயத்தை விளக்கம் போட்டிருக்கிறீர்கள் பெரிய ஆள்தான் திவ்யா...\

பெரிய ஆளு எல்லாம் இல்லீங்க.....அனுபவம் கற்றுத்தந்ததை பதிவிட்டேன் , அவ்வளவே!!

Divya said...

\\தமிழன்... said...
உண்மைதான் திவ்யா நீங்கள் சொல்வது நாமும் சோர்ந்து விட்டால் நம்மை பார்த்து பார்த்து பேணிய பெற்றவார்களை யார் தேற்றுவது இந்த மாதிரி தருணங்களில் நாம்தான் தெளிவாக இருக்கவேண்டும் அன்னைக்கு என்ன தேவை என்பதை அவர் சொல்லாமலே கவனிக்க வேண்டியது நமது கடமை...

நல்ல பதிவு திவ்யா வாழ்த்துக்கள்...\\

வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழன்:)))

Divya said...

\\கப்பி பய said...
நல்ல பதிவு! வாழ்க!!\

நன்றி கப்பி:))

Divya said...

\\Ramya Ramani said...
//நம் துக்கத்தை மறைத்து , அன்னைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தைரியமான முகத்திரை மிக மிக அவசியம்.
குடும்பத்தை தொடர்ந்து தாங்கி நடத்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதே அம்மாவிற்கு புது தெம்பை கொடுக்கும்.//

திவ்யா நீங்கள் மேலே சொல்லியது போல தன்னம்பிக்கை வேண்டும். அப்பாவுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ஆனால் அவர் விட்டு சென்ற பாதை நமக்கு தெளிவாக வழி காட்டும் என்ற நம்பிக்கையோடு செல்ல வேண்டும். இது போன்ற வார்த்தைகளை மற்றவர்களுக்கு கூருவது சுலபம், ஆனால் அது போன்ற சூழ்நிலையில் நாம் இருக்கும் போது React பன்னுவது கடினம். உங்கள் யோசனைகளுக்கு நன்றி!இறைவன் உங்களோடு எப்போழுதும் துனை இருக்க மனமாற வேண்டுகிறென்!\\

வாங்க ரம்யா,

உங்கள் விரிவான கருத்து பகிர்விற்கும் ஆறுதல் வார்த்தைகளுக்கும் நன்றி:))

Divya said...

\\Dreamzz said...
//தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய் நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???
//

ninaika mudiyatha thunbam varumpothu.. eppovume romba kashtam thaanga divya. verenna sollanu theriyala.\\

பகிர்விற்கு நன்றி.

Divya said...

\\ஜி said...
இது மாதிரி நேரத்துல மன வலிமை மிக மிக அவசியம்ங்றத தெளிவா சொல்லிருக்கீங்க.

நல்லதொரு பதிவு!!\\

ஆமாம் ஜி,
மன தைரியம் மிக முக்கியம்.

Divya said...

\\Thamizhmaangani said...
வணக்கம் திவ்ஸ், எப்போதுமே உங்களிடமிருந்து ஜாலியான பதிவுகளை படித்த எனக்கு இப்படி ஒரு பதிவை படித்தவுடன் மனசு ரொம்ப ஒரு மாதிரியா போச்சு.

நல்ல யோசனைகளை சொல்லியிருக்கீங்க. ஆனா, நீங்க சொன்ன மாதிரி, அது பிள்ளைகள் கையில் தான் உள்ளது. சில நேரங்களில் பிள்ளைகள் சிறு வயதாக இருக்கலாம். அப்போது மன வலிமை அந்த பெண்ணுக்கு இன்னும் கூடுதலாக தேவைப்படும்.

இந்த பதிவை படித்தவுடன் என் காலேஜ் தோழியின் அப்பாவின் மறைவு ஞாபகத்துக்கு வந்துவிட்டது. ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாள். இன்னிக்கு நினைச்சாகூட கண்கள் கலங்குது...\\

கலங்கின கண்களுடன் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள் தமிழ்......நன்றி:)))

Divya said...

\\ கருப்பன்/Karuppan said...
:'-(

ஒரே அழுகாச்சி அழுகாச்சியா வருதுங்க திவ்யா...\\

:((((

Divya said...

\ said...
அருமையான பதிவு. நிஜம் பல நேரங்களில் கலங்க வைத்து தான் விடுகின்றது. :(\\

ஆமாம் ஸ்ரீ,
அதுவும் எதிர்பாரா சமயத்தில் நேரும் துயர்.....மிகவும் கலங்க வைத்து விடுகிறது.

Divya said...

\\எழில்பாரதி said...
மிக அருமையான பதிவு திவ்யா!!!!\\

நன்றி எழில் பாரதி!

Divya said...

\\கோபிநாத் said...
நல்ல பதிவு திவ்யா!\\

நன்றி கோபி!!!

Divya said...

\\gils said...
silapathigaramla pandia mannan mandaya poatathukaprum..avar wife oru dialogue solitu udanay sethurvanga..."Kanavanai izhanthorku kaatuvathu il"..intha oru linea collegle enga tamizh sir one hour explain pannar...appa thavarita...naan irukennu solitu avar idathai nirapa aal undu..ammakum avvaray...pillaigalukum athu porunthum..aana kanavanai izhanthorku apdi koora iyalathu...!!! kita thatta avar sonna linelaye soliten..oori poidichi avar sonnathu. guess its apt for this post also. Relationshipla ungaluku PhD confirm divs :)\\

வாங்க கில்ஸ்,

பிஹெச்டி பட்டமெல்லாம் வேணாமுங்க, பகிரிந்துக்கொண்ட கருத்துக்கள் நண்பர்களுக்கு உதவியாக இருந்தால் எனக்கு சந்தோஷமே!!

Divya said...

\\ SweetJuliet said...
divya very very touching post..
u rocks in dis post...\

வாங்க ஸ்வீட் ஜூலியட்,

உங்கள் பாராட்டிற்கு நன்றி!!

Divya said...

\\லொள்ளு பொண்ணு வள்ளி said...
இனிய வணக்கம் திவ்யா ...

அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு மட்டுமே புரியும்!!

*நம் துக்கத்தை மறைத்து , அன்னைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தைரியமான முகத்திரை மிக மிக அவசியம்.
குடும்பத்தை தொடர்ந்து தாங்கி நடத்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதே அம்மாவிற்கு புது தெம்பை கொடுக்கும்....

காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை துடைக்கும்..........//

இந்த சின்ன வயசுல எவ்வளவு தத்துவமா இந்த
பதிவு ...உங்களை நினைச்சா ரொம்ப ...ரொம்ப ..பெருமையா
இருக்கு ..உங்களை பாராட்ட வார்த்தைய தேடிட்டு இருக்கேன் ...
அதுக்குள்ளே இன்னும் ஒரு நல்ல பதிவை போடுங்க ..
வந்துடுறேன் ..

அன்புடன் ..
லொள்ளு பொண்ணு வள்ளி ...\\

வாங்க வள்ளி,

வணக்கம்,

விரிவான உங்கள் கருத்து பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி!!

Divya said...

\\புகழன் said...
அருமையான தேவையான பதிவு திவ்யா
//
காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை துடைக்கும்..........
//
உண்மையான வரிகள்.
மரணமும் பிரிவும் இயற்கை; தவிர்க்க முடியாதது என்பதை வாழும் காலத்திலேயே தன் துணைவிக்கும் குடும்பத்திற்கும் உணர வைத்து விட்டு சென்றவர்கள் என் உறவினர்களில் பலர் உண்டு.
அதுவே இன்னும் சாலச் சிறந்த மருந்தாய் அமையும்.\\

ஆமாம் புகழன்,
மனைவிக்கு தனித்து உலகை சந்திக்கும் தெம்பையும் தைரியத்தையும் தர பல கணவர்கள் செய்வதில்லை,

வெளி உலகமே தெரியாமல், தன் குடும்பம் தன் அடுப்படி என இருந்திடும் பெண்கள் இத்தகைய நிலையை அடையும் போது படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

Divya said...

\\Gayathri said...
nice post divya.
Birthday wishes :)\\

Hi Gayathri,

thanks for ur visit to me page after a very long time,

also thanks a bunch for ur wishes:)))

Divya said...

\\\தமிழன்... said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யா...\\

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி தமிழன்!!

Divya said...

\தமிழன்... said...
எத்தனையாவது பிறந்தநாள் மேடம்? ஓ... இது கேட்கக்கூடாத கேள்வியோ....:)\

கேட்க கூடாத கேள்வி இல்ல.......பதில் சொல்ல கூடாத கேள்வி:)))

Divya said...

\\ திகழ்மிளிர் said...
/துக்கத்தின் அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும் ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின் குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு மட்டுமே புரியும்!!/

உண்மை தான்\\

வாங்க திகழ்மிளிர்,

நன்றி:)))

Divya said...

\\ நிஜமா நல்லவன் said...
:((
\

:-(

தமிழன்-கறுப்பி... said...

Divya said...

///\தமிழன்... said...
எத்தனையாவது பிறந்தநாள் மேடம்? ஓ... இது கேட்கக்கூடாத கேள்வியோ....:)\

கேட்க கூடாத கேள்வி இல்ல.......பதில் சொல்ல கூடாத கேள்வி:)))///

இந்த விசயத்தில திவ்யாவும் ஒரே முடிவாத்தன் இருக்காங்கபோல...:)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

காலதாமதமாய் வந்ததற்கு முதலில் மன்னிக்கவும்! பதிவை முன்னரே படித்துவிட்டேன் பின்னூட்டமிடதான் தாமதமாகிவிட்டது!

உணர்வுபூர்வமான பதிவு திவ்யா! நெகிழ வைத்தது, யோசிக்கவும் வைத்தது!

Syam said...

when did you post this...though it was a great loss for you...athayum thaangitu aduthavangalukku andha maathiri time la enna pannanumnu arumaya solli irukeenga divya...

Syam said...

etha quote panrathunnu therialla...coz total post deserves a quote...

Syam said...

Belated B'day wishes Divya...next year advanced ah sollidaren :-)

SweetJuliet said...
This comment has been removed by the author.
பரிசல்காரன் said...

அழுத்தமான அர்த்தங்கள் உள்ள பதிவு! வாழ்த்துக்கள் திவ்யா!

ராமலக்ஷ்மி said...

தமிழ்மாங்கனி said: //சில நேரங்களில் பிள்ளைகள் சிறு வயதாக இருக்கலாம். அப்போது மன வலிமை அந்த பெண்ணுக்கு இன்னும் கூடுதலாக தேவைப்படும்.//

அறியா வயதில் தந்தையை இழந்த எம்மை அப்படியொரு மன உறுதியுடன் வளர்த்து ஆளாக்கினார் எம் அன்னை.

படிப்பவர் மனதைப் பாரமாக்கி, நல்ல பாடங்களும் சொல்லும் பதிவு.

Anonymous said...

I am very sorry. First I thought that it is only just a post. But from the feedbacks I understood that Divya has lost her father recently. If it is so, my deep regrets to Divya. I still wish that it should be just a post and what I realised lately should go wrong.

\\கீதா said...
துயர்கொள்ளும் நெஞ்சங்களுக்கு உபயகோமான ஆலோசனைகள்,

அனுபவம் கற்றுக்கொடுத்ததை பகிர்ந்துக்கொள்ளும் உங்கள் நல்லெண்ணத்தை பாராட்டுகிறேன்.\\

வாங்க கீதா,

உங்கள் பாராட்டிற்கு நன்றிங்க:))

Divya said...

\\கீதா said...
பின்னூட்டங்களின் மூலம்....பிறந்தநாள் என அறிந்தேன்,

உள்ளம் கணிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!\\

உங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி கீதா!!

Divya said...

\\Anonymous said...
Belated birthday wishes Divya:-)

Praveen,
Bangalore.\

நன்றி ப்ரவீன்:))

Divya said...

\Anonymous said...
Useful post with a good thought:-)

appreciate your matured approach in soothing your mom,
May there be peace, take care Divya.

Praveen,
Bangalore.\

ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி ப்ரவீன்

Divya said...

\\Sen22 said...
நான் கொஞ்சம் லேட்டா
வந்துட்டேன்..
அருமையான பதிவுங்க திவ்யா...

பிறந்த நாள் வாழ்த்துகள் திவ்யா...

Senthil,
Bangalore\\

வாங்க செந்தில்,

லேட் அட்டெண்ட்ஸ்கெல்லாம் பனிஷ்மென்ட் ஏதும் இல்லீங்க:)))

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி செந்தில்!

Divya said...

\\ கார்த்திகேயன் . கருணாநிதி said...
வார்த்தைகள் இல்லை , மனது முழுவதும் வலிகள் !

அன்புடன்
கார்த்திகேயன்\\

வாங்க கார்த்திக்,

உணர்வு பகிர்விற்கு நன்றி!

Divya said...

\\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
அழுத்தமான ஆழமான பதிவு திவ்யா.\\

வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் பின்னூட்டம் பெற்றதில் நானும் என் வலைதளமும் பெருமை கொள்கிறோம் :))

நன்றி மை ஃபிரண்ட்!!

Divya said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
டிப்ஸ் 1,2,3,4,7,8,9,10 & 11..

சரியானது. இதை நான் என் தோழியின் அம்மாவின் மூலமாக பார்த்திருக்கேன். கரேக்ட்டா வர்க் அவுட் ஆனது.

5-ஆவது ரொம்ப கஷ்டம். எவ்வளவோ வற்புருத்தியும், பாசமாக கூப்பிட்டும் என் சின்னம்மாவை வெளியே கூட்டிட்டே போகமுடியவில்லை. ரொம்ப உடைந்து போயிருந்தாங்க. :-(

6- நம் இந்தியர்களில் கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தும் சரி பண்ணிடலாம். முயற்சி பண்ணா முடியும். :-)\\

உங்கள் கருத்துக்களை விரிவாக பகிர்ந்துக்கொண்டமைக்கு ரொம்ப நன்றி !!

Divya said...

\\தினேஷ் said...
பின்னூட்டங்களின் முலம் பிறந்தநாள் என அறிகிறேன்...

எல்லா நலங்களும் பெற என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...திவ்யா

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\

பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி தினேஷ்!!

Divya said...

\\Priya Murthi said...
வாழ்த்துகள் திவ்யா. மிக அருமையான பதிவு.நெஞ்சை உருக்கும் வார்த்தைகள். உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை மிக அழகாக பதிவு செய்து உள்ளிர்கள். இந்த பதிவாய்ப் படிக்கும் பொழுது உங்கள் மனதை படிக்கும் உணர்வு ஏற்படுகிறது

உங்கள் மனம் சொல்லுவதை எங்கள் மனம் படிக்கும் வண்ணம் இயற்றி உள்ளிர்கள்.வாழ்துக்கள் திவ்யா.
உங்கள் படைப்புகள் மேலும் மேலும் திறம் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்\\

வாங்க ப்ரியா,

முதல் முறையாக பின்னூட்டம் எழுதியுள்ளீர்கள் நன்றி!

உங்கள் விமர்சனம் மனதில் ஒர் உற்சாகத்தை தந்தது நன்றி ப்ரியா!!

பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு மற்றுமொரு நன்றி!

Divya said...

\\சேவியர் said...
கண்ணீர் துளிகளின் கனத்தை உணர வைக்கிறது உங்கள் பதிவு\\

உணர்வுகளை பின்னூட்டத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி சேவியர்:))

Divya said...

\\padippavan said...
Ennappa ellam sogamayittenge. Cheerup please.\\

வாங்க படிப்பவன்,

எப்படி இருக்கிறீங்க, ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் ஆளே காணோம்?

Divya said...

\\தமிழன்... said...
Divya said...

///\தமிழன்... said...
எத்தனையாவது பிறந்தநாள் மேடம்? ஓ... இது கேட்கக்கூடாத கேள்வியோ....:)\

கேட்க கூடாத கேள்வி இல்ல.......பதில் சொல்ல கூடாத கேள்வி:)))///

இந்த விசயத்தில திவ்யாவும் ஒரே முடிவாத்தன் இருக்காங்கபோல...:)\\

மாற்றமில்லா முடிவு அது:))

[கண்டிப்பா பதில் வேணும்னா........ஏன் கேட்கிறீங்கன்னு காரணம் சொல்லுங்க......நான் பதில் சொல்லலாமா வேணாமான்னு......யோசிக்கிறேன்]

Divya said...

\\ sathish said...
காலதாமதமாய் வந்ததற்கு முதலில் மன்னிக்கவும்! பதிவை முன்னரே படித்துவிட்டேன் பின்னூட்டமிடதான் தாமதமாகிவிட்டது!

உணர்வுபூர்வமான பதிவு திவ்யா! நெகிழ வைத்தது, யோசிக்கவும் வைத்தது!\\

தாமதமாக பின்னூட்டமிட்டாலும் ஏதும் பிரச்சனை இல்லீங்க, நீங்க பதிவுகளை படிக்கிறீங்கன்னு தெரிந்ததே மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி!!

Divya said...

\\Syam said...
when did you post this...though it was a great loss for you...athayum thaangitu aduthavangalukku andha maathiri time la enna pannanumnu arumaya solli irukeenga divya...\\

போஸ்ட் போட்டு நாள் ஆச்சுங்க நாட்டாமை, நீங்க உங்க பிஸி[??] வொர்க்ல கவனிக்காம விட்டுட்டீங்க:)))

Divya said...

\\Syam said...
etha quote panrathunnu therialla...coz total post deserves a quote...\\

நன்றி ஷ்யாம்:))

Divya said...

\\Syam said...
Belated B'day wishes Divya...next year advanced ah sollidaren :-)\\

வாழ்த்துக்களுக்கு நன்றி ஷ்யாம்:))

[ஏன் அடுத்த வருஷத்துக்குள்ள மெமரி ப்ளஸ் சாப்பிட ஆரம்பிச்சுடுவீங்களோ??]

Divya said...

\\ பரிசல்காரன் said...
அழுத்தமான அர்த்தங்கள் உள்ள பதிவு! வாழ்த்துக்கள் திவ்யா!\\

வாங்க பரிசல்காரன்,

உங்கள் வருகைக்கும் பின்னூட்ட பகிர்விற்கும் மிக்க நன்றி!!

Divya said...

\\ ராமலக்ஷ்மி said...
தமிழ்மாங்கனி said: //சில நேரங்களில் பிள்ளைகள் சிறு வயதாக இருக்கலாம். அப்போது மன வலிமை அந்த பெண்ணுக்கு இன்னும் கூடுதலாக தேவைப்படும்.//

அறியா வயதில் தந்தையை இழந்த எம்மை அப்படியொரு மன உறுதியுடன் வளர்த்து ஆளாக்கினார் எம் அன்னை.

படிப்பவர் மனதைப் பாரமாக்கி, நல்ல பாடங்களும் சொல்லும் பதிவு.\\

வாங்க ராமலக்ஷ்மி,

உங்கள் முதல் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் நன்றி!!

Divya said...

\\padippavan said...
I am very sorry. First I thought that it is only just a post. But from the feedbacks I understood that Divya has lost her father recently. If it is so, my deep regrets to Divya. I still wish that it should be just a post and what I realised lately should go wrong.\\

Its ok Padippavan.......we cant erase some happenings in life, my loss is also the same:))

Thanks for feeling so much, its soothing.

Syam said...

//ஏன் அடுத்த வருஷத்துக்குள்ள மெமரி ப்ளஸ் சாப்பிட ஆரம்பிச்சுடுவீங்களோ??//

athellaam brain ullavangalukku thaan velai seiyum :-)

Aruna said...

//நம் தலைகோதி தன் மடியில் துயில் கொள்ள செய்யும் அம்மா .........இன்று தலை சாய நாம் தோள் கொடுக்க வேண்டியது, அப்பா விட்டுச்சென்ற கடமைகளில் ஒன்று!//
எத்தனை பேர் இதைப் பற்றி சிந்திப்பார்கள்.....?மிக நல்ல மனதைத் தொட்ட பதிவு
அன்புடன் அருணா

SweetJuliet said...
This comment has been removed by the author.
SweetJuliet said...

To u Divya
http://kiravani.wordpress.com/2008/05/29/31/

Divya said...

\\Syam said...
//ஏன் அடுத்த வருஷத்துக்குள்ள மெமரி ப்ளஸ் சாப்பிட ஆரம்பிச்சுடுவீங்களோ??//

athellaam brain ullavangalukku thaan velai seiyum :-)\\

இப்படி உண்மையை ஒத்துக்க உலகத்திலயே ஒருத்தரால மட்டும் தான் முடியும்.......அவரு தான் எங்க நாட்டாமை :))

Divya said...

\\Aruna said...
//நம் தலைகோதி தன் மடியில் துயில் கொள்ள செய்யும் அம்மா .........இன்று தலை சாய நாம் தோள் கொடுக்க வேண்டியது, அப்பா விட்டுச்சென்ற கடமைகளில் ஒன்று!//
எத்தனை பேர் இதைப் பற்றி சிந்திப்பார்கள்.....?மிக நல்ல மனதைத் தொட்ட பதிவு
அன்புடன் அருணா\\

வாங்க அருணா,

நலமா??

உங்கள் பகிர்விற்கு நன்றி அருணா.

Divya said...

\SweetJuliet said...
To u Divya
http://kiravani.wordpress.com/2008/05/29/31\\

உங்கள் வாழ்த்துக்களை உங்கள் தளத்தில் கண்டேன்.....உள்ளம் மகிழ்ந்தேன் ஜுலியட்;))

என் பதிவுகளை விரும்பி படிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!!

Shwetha Robert said...

Hi Divya,

Your write up is extremly good in this post,
will definetly be a soothing & helpful one for those who have lost their dad.

Have been reading your posts lately,many more are still out there in your blog to digg in,wud do it in the coming days.

Keep up your writing Divya.

எஸ்.ஆர்.மைந்தன். said...

ஆழ்ந்த கருத்துக்களை தாங்கியுள்ள பதிவு. இது வெறும் வார்த்தைகளாக தெரியவில்லை. உங்கள் வாழ்க்கை என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு வார்த்தைகளில் ஆழம்.

\\ Shwetha Robert said...
Hi Divya,

Your write up is extremly good in this post,
will definetly be a soothing & helpful one for those who have lost their dad.

Have been reading your posts lately,many more are still out there in your blog to digg in,wud do it in the coming days.

Keep up your writing Divya.\\

வாங்க ஸ்வேதா,

உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!!

Divya said...

\\ இரா.ஜெயபிரகாஷ் said...
ஆழ்ந்த கருத்துக்களை தாங்கியுள்ள பதிவு. இது வெறும் வார்த்தைகளாக தெரியவில்லை. உங்கள் வாழ்க்கை என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு வார்த்தைகளில் ஆழம்.\

வாங்க ஜெயபிரகாஷ்,

நலமா?

நீண்ட நாட்களுக்கு பின் என் வலைதளம் வந்திருக்கிறீர்கள், நன்றி.

ஆம், வாழ்க்கையின் அனுபவத்தில் அறிந்துக்கொண்டதை தான் இப்பதிவில் பகிர்ந்திருக்கிறேன் ஜெயபிரகாஷ்!

தமிழன்-கறுப்பி... said...

Divya...said...

///[கண்டிப்பா பதில் வேணும்னா........ஏன் கேட்கிறீங்கன்னு காரணம் சொல்லுங்க......நான் பதில் சொல்லலாமா வேணாமான்னு......யோசிக்கிறேன்]//

அடச்சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லிங்க...உங்க எழுத்த வச்சு உங்களுக்கு ஒரு உருவம் கொடுத்திருக்கேன் அது சரியா வருதான்னு பாக்கத்தான் கேட்டேன் மற்றப்படி எப்படியும் நீங்க என்னை விட 10 வயதாவது கூட இருப்பிங்க...

தமிழன்-கறுப்பி... said...

எப்போ அடுத்த பதிவு...

Divya said...

\\தமிழன்... said...
Divya...said...

///[கண்டிப்பா பதில் வேணும்னா........ஏன் கேட்கிறீங்கன்னு காரணம் சொல்லுங்க......நான் பதில் சொல்லலாமா வேணாமான்னு......யோசிக்கிறேன்]//

அடச்சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லிங்க...உங்க எழுத்த வச்சு உங்களுக்கு ஒரு உருவம் கொடுத்திருக்கேன் அது சரியா வருதான்னு பாக்கத்தான் கேட்டேன் மற்றப்படி எப்படியும் நீங்க என்னை விட 10 வயதாவது கூட இருப்பிங்க...\\

13 வயது சிறுவனா நீங்க??
இந்த சின்ன வயசுல எவ்வளவு அழகா கவிதை எல்லாம் எழுதிறீங்க தமிழன்.....யூ ஆர் சிம்பிளி கிரேட்!!!

Divya said...

\\தமிழன்... said...
எப்போ அடுத்த பதிவு...\

அடுத்த பதிவு நாளை :)))

தமிழன்-கறுப்பி... said...

மொத்தமா ஒரு கலக்கலான வாரம் தல...
ரொம்ப நல்லா இருந்தது... இடையில வந்து பின்னூட்ம் போட முடியலை ஆனா எல்லா பதிவும் படிச்சிருக்கேன் நல்ல அலுப்படிக்காத நடையில தந்திருக்கிங்க பதிவுகளை...

தொடாத்ந்தும் எழுதுங்க...

வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

குறை நினைக்காதிங்க திவ்யா இடம்மாறி எழுதிட்டேன்...

Divya said...

\\தமிழன்... said...
குறை நினைக்காதிங்க திவ்யா இடம்மாறி எழுதிட்டேன்...\\

thats ok Tamilan:))

[கடந்த வார நட்சத்திர பதிவருக்கான பின்னூட்டமென்று நினைக்கிறேன்,சரியா??]

Vijay said...

divya avarkaLE,
sirikka sirikka blogukaL pala padiththu, ippadi nenjai nerudum pathippu padiththathum manam kanaththu pOy vittathu.
en appa iRanthu en amma azhuthu koNdiruntha naatkaLai ninaiththup paarkkaiyilE, yaarukkum ippadi sOkam varakkUdaathu enru eNNath thOnRukiRathu. aanaal en amma naan thuvaNdu pOi vidakkoodaathu enReNNi kuzanthaikaL munnaal azhaamal irunthu naan kallUrikkuchchenRa pin azhuthu pulambiyirukkiRaaL. ithai ezhuthum pOthE kaNNil neer ettippaarkkiRathu.

anbudan,
Vijay

Divya said...

\\விஜய் said...

Vijay\\

வாங்க விஜய்,
முதன் முறையாக என் வலைதளம் வந்திருக்கிறீங்க , நன்றி!

உங்கள் தந்தையின் இழப்பினால் ஏற்பட்ட மனவேதனையை பகிர்ந்துக்கொண்டபின் மனம் இலகுவாயிருக்கும் என நம்புகிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

Divya...said...

///\தமிழன்... said...
Divya...said...

///[கண்டிப்பா பதில் வேணும்னா........ஏன் கேட்கிறீங்கன்னு காரணம் சொல்லுங்க......நான் பதில் சொல்லலாமா வேணாமான்னு......யோசிக்கிறேன்]//

அடச்சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லிங்க...உங்க எழுத்த வச்சு உங்களுக்கு ஒரு உருவம் கொடுத்திருக்கேன் அது சரியா வருதான்னு பாக்கத்தான் கேட்டேன் மற்றப்படி எப்படியும் நீங்க என்னை விட 10 வயதாவது கூட இருப்பிங்க...\\

13 வயது சிறுவனா நீங்க??
இந்த சின்ன வயசுல எவ்வளவு அழகா கவிதை எல்லாம் எழுதிறீங்க தமிழன்.....யூ ஆர் சிம்பிளி கிரேட்!!!
///

அவ்வ்வ்...
நான் நினைச்சதை விட நாலு வயது குறைவுதான் உங்களுக்கு ஆனா என்னோட வயதுதான் உங்களால கண்டு பிடிக்க முடியல...

தமிழன்-கறுப்பி... said...

Divya...said....

///\\தமிழன்... said...
குறை நினைக்காதிங்க திவ்யா இடம்மாறி எழுதிட்டேன்...\\

thats ok Tamilan:))

[கடந்த வார நட்சத்திர பதிவருக்கான பின்னூட்டமென்று நினைக்கிறேன்,சரியா??]///

என்ன! மூளைங்க உங்களுக்கு:))

ஆமா... கப்பிபயலுக்கான "கமன்ட்"அது...

Prabakar said...

I DON’T KNOW WHAT TO WRITE DIVYA , VARTHTHAIIL IRUNTHA VALI ENNAI APPADI SEITHATHO ENDRU ENAKU THERIYAVILLAI , MOVUNAM THAN PALA KELVIKALAKUM VALIKALUKUM NALLA PATHIL ,

Prabakar said...

VALIKALAI VARATHTHAY ELUTHUVATHU ENPATHU PERIYA VISAIYAM ITS SHOWS YOUR MATURITY DIVYA KEEP IT UP,

Divya said...

\\ Prabakar Samiyappan said...
I DON’T KNOW WHAT TO WRITE DIVYA , VARTHTHAIIL IRUNTHA VALI ENNAI APPADI SEITHATHO ENDRU ENAKU THERIYAVILLAI , MOVUNAM THAN PALA KELVIKALAKUM VALIKALUKUM NALLA PATHIL ,\\

Hi Prabhakar,

Thanks for sharing your feel after reading the post:)

Divya said...

\\ Prabakar Samiyappan said...
VALIKALAI VARATHTHAY ELUTHUVATHU ENPATHU PERIYA VISAIYAM ITS SHOWS YOUR MATURITY DIVYA KEEP IT UP,\\

Thanks for words Prabhakar:)