November 28, 2006

நமக்குள்ளே இருக்கட்டும் வைச்சுக்கோ......சொல்லிவிடாதே!!!

ப்ளாக்கில் தினமும் ஒரு பதிவு போடலமா? இல்லை வாரத்திற்கு ஒரு பதிவு போட்டால் போதுமா? மாததிற்கு ஒரு முறை பதிவு போட்டால் மக்கள் நம் ப்ளாக்கை மறந்தே போய் விடுவார்களா? இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் விறகு வெட்டி ஆன்லைனில் வந்தார். அவரிட்மே ஆலோசனை கேட்கலாம் என்று சாட் செய்ய ஆரம்பித்தேன்.........

நான்: என்ன விறகு எப்படி இருக்கிறே? உன் ப்ளாக்கில் ஒருவழியா 100 பதிவு போட்டுடே போலிருக்கு.

விறகு வெட்டி: ஆமாம், 3 மாதம் தான் ஆகிறது நான் ப்ளாக் ஆரம்பித்து , அதற்குள் 100 பதிவு போட்டுடேன் பார்த்தியா.

நான்: அட, அட உன்னை மிஞ்ச ஆள் உண்டா விறகு. தினம் ஒரு பதிவுன்ற விதத்துல பதிவு போடுவியா??

விறகு வெட்டி: இல்லை, இரண்டு நாள் சேர்ந்தாற்போல் 5 அல்லது 6 பதிவு போட்டிடுவேன், அப்புறம் 3 நாள் பின்னூட்டத்திற்க்கு பதில் போடவே சரியா இருக்கும்.

நான்: 3 நாள் பதில் போடுற அளவுக்கு பின்னூட்டம் வருமா??

விறகு வெட்டி: முதல்ல மக்களை என் பதிவு படிக்க வைக்கனும், அப்புறம் பின்னூட்டம் போட வைக்கனும், இதற்க்கு 2 நாள் ஆகும், அப்புறம் பதில் பின்னூட்டம் போட ஒரு நாள்.

நான்: பின்னூட்டம் போட வைப்பியா எப்படி???

விறகு வெட்டி: சும்மா எல்லா ப்ளாக்கிற்க்கும் போய், பதிவு படிக்கிறேனோ இல்லையோ பின்னூட்டம் போட்டிட்டு வந்துடுவேன். அப்போதான் , பாவம் பையன் நம்ம பதிவிற்க்கு பின்னூட்டம் எல்லாம் போட்டிருக்கான், நாமும் போய் இவன் பதிவு பார்க்கலாம்னு வருவங்க என் ப்ளாக்கிற்கு.

நான்: உன் ப்ளாக்கிற்கு வராங்க சரி, பின்னூட்டம் போடுங்கன்னு எப்படி கேட்பே?

" அம்மா , தாயே, சாமி, பின்னூட்டம் போட்டுட்டு போங்க"
" காப்பி , டீ வேனா குடிச்சுட்டு தெம்பா வந்து ஒரு பின்னூட்டம் போடுங்க"
" மதுரையிலிருந்து வந்திருகிறீங்க,...................லண்டனிலிருந்து என் ப்ளாக் எட்டி பார்க்கிறீங்க , கொஞ்சம் பின்னூட்டமும் போட்டுட்டு போயிடுங்கன்னு
"
கேட்பியா???

விறகு வெட்டி: இதென்ன சின்னபுள்ளை தனமா இருக்கு. அப்படி எல்லாம் வெளிப்படையா கேட்க மாட்டேன்.

கலயாண வீட்டிற்க்கு போய் நாம மொய் எழுதினா, பதிலுக்கு நம் வீட்டு விஷேசத்திற்கு அவங்க மொய் எழுதுவாங்க இல்ல அது மாதிரி தான். நீ எவ்வளவு ப்ளாக்கிற்கு போய் பின்னூட்டம் போடுறியோ அவ்வளவு பின்னூட்டம் உனக்கு கிடைக்கும்.

நான்: நீ கில்லாடி தான் விறகு. அஹா! என்ன என்ன வித்தை எல்லாம் கத்து வைச்சிருக்க பின்னூட்டம் வாங்க, சபாஷ் விறகு!!

118 comments:

அரை பிளேடு said...

இந்தாங்க ஒரு பின்னூட்டம்...

அப்படியே நம்ம பேஜுக்கு வந்து ஒரு பின்னூடம் போட்டுக்கோங்கோன்னு வேண்டி கேட்டுக்கறன்...

தாங்ஸ்

அன்போட சொல்றது யாருன்னா
அரைபிளேடு

SP.VR. SUBBIAH said...

பின்னூட்டக் கவலை வேண்டாம்!
உங்கள் வலைப்பூவில் Free Web site Counter போட்டு வைத்துக்கொள்ளுங்கள்
அதன் எண்ணிக்கை ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை பேர் உள்ளே வந்து செல்கிறார்கள் என்று காட்டும் .எண்ணிக்கை நூறைத்தாண்டினால் போதும்
சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.

Divya said...

\" அரை பிளேடு said...
இந்தாங்க ஒரு பின்னூட்டம்...

அப்படியே நம்ம பேஜுக்கு வந்து ஒரு பின்னூடம் போட்டுக்கோங்கோன்னு வேண்டி கேட்டுக்கறன்...

தாங்ஸ்

அன்போட சொல்றது யாருன்னா
அரைபிளேடு '/

அரைபிளேடு உங்கள் வருகைக்கு நன்றி, கண்டிப்பாக உங்கள் வலைபூவிற்க்கு வருகிறேன்.

நாமக்கல் சிபி said...

:))

Divya said...

\" SP.VR.SUBBIAH said...
பின்னூட்டக் கவலை வேண்டாம்!
உங்கள் வலைப்பூவில் Free Web site Counter போட்டு வைத்துக்கொள்ளுங்கள்
அதன் எண்ணிக்கை ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை பேர் உள்ளே வந்து செல்கிறார்கள் என்று காட்டும் .எண்ணிக்கை நூறைத்தாண்டினால் போதும்
சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்'?

நன்றி சுப்பையா, உங்கள் free counter ஐடியாவை விறகிடம் கண்டிப்பாக கூறுகிறேன்.

கோவி.கண்ணன் [GK] said...

//" Not to Publish" அப்படின்னு சொல்லிட்டு "//

:)

யாரு அந்த பிநா விநா (பின்னூட்ட விரும்பி)?

திவ்யா,
ஹலோ, நீங்க பார்டெண்டர் கூட இருப்பிங்களே அந்த திவ்யாவா ?
:)

Santhosh said...

:)) nalla than vetti kita potu vanguringa :))..

Divya said...

\"சந்தோஷ் said...
:)) nalla than vetti kita potu vanguringa :))..'?

clever fellow Santhosh, tuknu purinjiduchey!

Divya said...

\" நாமக்கல் சிபி @15516963 said...
:))

/"

:)) apdina enna cibi???

Divya said...

\"
கோவி.கண்ணன் [GK] said...
//" Not to Publish" அப்படின்னு சொல்லிட்டு "//

:)

யாரு அந்த பிநா விநா (பின்னூட்ட விரும்பி)?

திவ்யா,
ஹலோ, நீங்க பார்டெண்டர் கூட இருப்பிங்களே அந்த திவ்யாவா ?
:) /"

வருகைக்கு நன்றி கண்ணன், நீங்கள் கூறும் திவ்யா யாரென்று தெரியவில்லை.

நாமக்கல் சிபி said...

//சந்தோஷ் said...

:)) nalla than vetti kita potu vanguringa :))..//

எலேய்,
சந்தோஷ் ஏன் இந்த கொலை வெறி!!!

அதுதான் வெறகுனு சொல்லிட்டாங்க இல்லை...

//
clever fellow Santhosh, tuknu purinjiduchey!//
இதுக்கு என்னங்க அர்த்தம்...

மக்கள்ஸ் நம்மல தப்பா நினைச்சிட போறாங்க...

லொடுக்கு said...

இந்தாங்க ஒன்னு.

* Conditions Apply.

பாரதி தம்பி said...

ஹலோ..என்னங்க இது..?பின்னூட்டம் கேட்டு டெண்டர் விட்டுடுவாங்க போலருக்கு..எப்படியோ என் பங்குக்கு உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்.அதேமாதிரி---------ஹி...ஹி...ஹி...

G Gowtham said...

எக்கச்சக்கமான பதிவுகள் போடவும்
எக்க்க்க்கச்சக்கமான பின்னூட்டங்கள் வாங்கிக் குவிக்கவும் வாழ்த்துகிறேன்!
:-)

Divya said...

\"வெட்டிப்பயல் said...
//சந்தோஷ் said...

:)) nalla than vetti kita potu vanguringa :))..//

எலேய்,
சந்தோஷ் ஏன் இந்த கொலை வெறி!!!

அதுதான் வெறகுனு சொல்லிட்டாங்க இல்லை...

//
clever fellow Santhosh, tuknu purinjiduchey!//
இதுக்கு என்னங்க அர்த்தம்...

மக்கள்ஸ் நம்மல தப்பா நினைச்சிட போறாங்க..."/

வெட்டிபயல் டென்ஷன் ஆக வேணாம், சந்தோஷ் சொன்னது விறகு வெட்டியோட கடைசி பெயரை, உங்கள் பெயரின் சுருக்கத்தை அல்ல!!

Divya said...

\" லொடுக்கு said...
இந்தாங்க ஒன்னு.

* Conditions Apply/"

lodukku conditions agreed!!!

கோபிநாத் said...

"என்ன வித்தை எல்லாம் கத்து வைச்சிருக்க பின்னூட்டம் வாங் சபாஷ் விறகு!!"

யாரு விறகு வெட்டயா? ......பார்த்த அப்படி தொரியல... :)))
என் பங்குக்கு உங்களுக்கு இது இராண்டவது பின்னூட்டம்.

ஜொள்ளுப்பாண்டி said...

ஹிஹிஹிஹிஹி நல்லா தாக்கி எடுங்க !! சரி சரி நீங்க எப்படி அதைய சொலுங்க முதல்ல ;)))

சுந்தர் / Sundar said...

அம்மணி சுப்பர்ருங்கோ...

Anonymous said...

ahaa...technique a sollitangala!
athu sari thaan :)

aama, athu yaarunga unga puthisalli viragu vetti friend? ungaloda "anniyan" a? LOL

Syam said...

புரிஞ்சு போச்சு புரிஞ்ச்சு போச்சு...ஏதோ நாலு பிளாக்ல கமெண்ட் போட்டு வாங்கி பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன் அதுக்கும் ஆப்பா :-)

கடல்கணேசன் said...

திவ்யா,

உங்கள் எல்லா பதிவுகளையும் வாசித்தேன்.. நீங்கள் ஒரே ஆளா என்ற சந்தேகம் வருமளவுக்கு அற்புதமான திறமை உங்களிடத்தில் உள்ளது..

கடிதம், தொடர்கதை, கவிதை, நகைச்சுவை என்று எதையுமே விட்டு வைக்கவில்லை நீங்கள்..

இன்னும் ஒருமாதத்துக்குள் உங்களுடன் உரையாடும் அந்த 'வெட்டி'யின் பதிவு எண்ணிக்கையை முந்தி விடுவீர்கள்.. வாழ்த்துக்கள்.. நல்ல கற்பனை வளம்.

நீங்கள் எழுதும் பதிவுகளை தினமும் வாசிக்கா விட்டாலும், நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக வந்து வாசிப்பேன்..(நான் இங்கே வந்து பின்னூட்டமிட்டதால் நீங்கள் என் பக்கத்திற்கு வரவேண்டியதில்லை.. அதுதான் 'தாரிணி'யைப் பார்க்க வந்தீர்களே.)

நாமக்கல் சிபி said...

//:))
//

வாய் விட்டு சிரித்தேன் என்று அர்த்தம்.

(நல்ல டெக்னிக், கேள்வி கேட்டு இன்னொரு பின்னூட்டம் வாங்குவது)

நாமக்கல் சிபி said...

//Syam said...

புரிஞ்சு போச்சு புரிஞ்ச்சு போச்சு...ஏதோ நாலு பிளாக்ல கமெண்ட் போட்டு வாங்கி பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன் அதுக்கும் ஆப்பா :-) //

ஓ!!!எங்களுக்கும் இப்ப புரியுது :-))

Anonymous said...

ஆஹா.. என்னங்க நீங்களும் வெட்டியும் பேசி வெச்சிக்கிட்டு பதிவின் எண்ணிக்கையை அதிகரிக்க எண்ணமா?

மு.கார்த்திகேயன் said...

நல்ல பதிவு திவ்யா.. உண்மையில் நமது பதிவுகளை மற்றவர்கள் படிக்க வைப்பதென்பதே ஒரு வித்தை தான்.. கிட்டதட்ட 100 பதிவுகள் வரை இந்த வித்தை தெரியாமல் தான் நானும் இருந்தேன் திவ்யா.. இப்போ ஏதோ உங்களை போன்ற நண்பர்கள் புண்ணியத்தில் ஒரு முப்பது பின்னூட்டம் கிடைக்கிறது ஒரு பதிவிற்கு

Priya said...

திவ்யா, உங்க posts எல்லாம் அருமை. கதையெல்லாம் சும்மா கலக்கலா இருக்கு.
Thanks for commenting on my posts.

நாட்டாமைய இப்டி வாரி இருக்கிங்களே!

Anonymous said...

ரொம்ப நன்றிங்க. நானும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து வைது இருக்கேன். ஒருத்தரும் வரவே மாட்டேன் என்று இருக்கிறார்கள். பார்ப்போம்...

Anonymous said...

divyamaana poshtungo

ammanikku oru hi

Anonymous said...

oru vaaratukku oru post podave sangu ududu...idula enga daily post podradu?
Avalavu talent irundirunda naanga hollywood la script write aagi iruppom illa :-)
btw...unga pona post la irunda kadhai nalla irundudu

Divya said...

\"Gopinath said...
"என்ன வித்தை எல்லாம் கத்து வைச்சிருக்க பின்னூட்டம் வாங் சபாஷ் விறகு!!"

யாரு விறகு வெட்டயா? ......பார்த்த அப்படி தொரியல... :)))
என் பங்குக்கு உங்களுக்கு இது இராண்டவது பின்னூட்டம். \"

வருகைக்கு நன்றி கோபி, இரண்டு பின்னூட்டம் போட்டதால் ,இரண்டு நன்றிகள்!

Divya said...

\"ஆழியூரான் said...
ஹலோ..என்னங்க இது..?பின்னூட்டம் கேட்டு டெண்டர் விட்டுடுவாங்க போலருக்கு..எப்படியோ என் பங்குக்கு உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்.
அதேமாதிரி---------ஹி...ஹி...ஹி...\"

ஆழியூரான், பின்னூட்டதிற்க்கு நன்றி, [ .அதேமாதிரி---------ஹி...ஹி...ஹி...\.....புரியுது புரியுது]

Divya said...

\" G Gowtham said...
எக்கச்சக்கமான பதிவுகள் போடவும்
எக்க்க்க்கச்சக்கமான பின்னூட்டங்கள் வாங்கிக் குவிக்கவும் வாழ்த்துகிறேன்!
:-)
\"

எக்கச்சக்கமான உங்கள் வாழ்த்திற்க்கு எக்கச்சக்கமான நன்றிகள் Gowtham!

Divya said...

\"
ஜொள்ளுப்பாண்டி said...
ஹிஹிஹிஹிஹி நல்லா தாக்கி எடுங்க !! சரி சரி நீங்க எப்படி அதைய சொலுங்க முதல்ல ;))) \"

வருகைக்கு நன்றி பாண்டி,

\"சரி சரி நீங்க எப்படி அதைய சொலுங்க முதல்ல ;))) \'

என்ன கேட்க வரீங்கன்னு புரியவில்லை பாண்டி

Divya said...

\"
சுந்தர் said...
அம்மணி சுப்பர்ருங்கோ...\"

ரொம்ப நன்றிங்கோ சுந்தர்!

Divya said...

\"Dreamzz said...
ahaa...technique a sollitangala!
athu sari thaan :)

aama, athu yaarunga unga puthisalli viragu vetti friend? ungaloda "anniyan" a? LOL \"

எப்படீங்க விறகு என்னோட 'அந்நியன்' னு கரக்ட்டா கண்டு பிடிச்சீங்க???

Divya said...

\"Syam said...
புரிஞ்சு போச்சு புரிஞ்ச்சு போச்சு...ஏதோ நாலு பிளாக்ல கமெண்ட் போட்டு வாங்கி பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன் அதுக்கும் ஆப்பா :-)
\"

நாட்டாமைக்கு புரியாம போகுமா??

" அம்மா , தாயே, சாமி, பின்னூட்டம் போட்டுட்டு போங்க"
" காப்பி , டீ வேனா குடிச்சுட்டு தெம்பா வந்து ஒரு பின்னூட்டம் போடுங்க"
" மதுரையிலிருந்து வந்திருகிறீங்க,...................லண்டனிலிருந்து என் ப்ளாக் எட்டி பார்க்கிறீங்க , கொஞ்சம் பின்னூட்டமும் போட்டுட்டு போயிடுங்கன்னு"'

நட்டாமை'இதுவும் புரிஞ்சுச்சா??

Divya said...

\" கடல்கணேசன் said...
திவ்யா,

உங்கள் எல்லா பதிவுகளையும் வாசித்தேன்.. நீங்கள் ஒரே ஆளா என்ற சந்தேகம் வருமளவுக்கு அற்புதமான திறமை உங்களிடத்தில் உள்ளது..

கடிதம், தொடர்கதை, கவிதை, நகைச்சுவை என்று எதையுமே விட்டு வைக்கவில்லை நீங்கள்..

இன்னும் ஒருமாதத்துக்குள் உங்களுடன் உரையாடும் அந்த 'வெட்டி'யின் பதிவு எண்ணிக்கையை முந்தி விடுவீர்கள்.. வாழ்த்துக்கள்.. நல்ல கற்பனை வளம்.

நீங்கள் எழுதும் பதிவுகளை தினமும் வாசிக்கா விட்டாலும், நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக வந்து வாசிப்பேன்..(நான் இங்கே வந்து பின்னூட்டமிட்டதால் நீங்கள் என் பக்கத்திற்கு வரவேண்டியதில்லை.. அதுதான் 'தாரிணி'யைப் பார்க்க வந்தீர்களே.) \"

வருகைக்கு நன்றி கணேசன், நீங்கள் எனக்கு பின்னூட்டம் இடாமலே நான் தாரினி யை காண வந்தேன், [ பாருங்க என்ன ஒரு நல்ல மனசு திவ்யா வுக்கு]

\"நீங்கள் ஒரே ஆளா என்ற சந்தேகம் வருமளவுக்கு அற்புதமான திறமை உங்களிடத்தில் உள்ளது..\"

நம்புங்க கணேசன், நான் ஒரே ஆளுதான், 'split personality ' ன்னு தப்பா நினைச்சிடாதீங்க

Divya said...

\" நாமக்கல் சிபி @15516963 said...
//:))
//

வாய் விட்டு சிரித்தேன் என்று அர்த்தம்.

(நல்ல டெக்னிக், கேள்வி கேட்டு இன்னொரு பின்னூட்டம் வாங்குவது)\"

சிபி, இந்த டெக்னிக் எனக்கு விறகு சொல்லி கொடுக்கவில்லை,
நான் யோசித்த புது டெக்னிக்கை உபயோகப்படுத்திப் பார்த்தேன்! நல்லாதான் வேலை செய்யுது, இல்லீங்க சிபி?

Divya said...

\"சுப்பு said...
ஆஹா.. என்னங்க நீங்களும் வெட்டியும் பேசி வெச்சிக்கிட்டு பதிவின் எண்ணிக்கையை அதிகரிக்க எண்ணமா? \"

வருகைக்கு நன்றி சுப்பு,
நீங்க வெட்டி என்று குறிப்பிடுவது விறகு வெட்டியையா?? அல்லது......

Divya said...

\"
மு.கார்த்திகேயன் said...
நல்ல பதிவு திவ்யா.. உண்மையில் நமது பதிவுகளை மற்றவர்கள் படிக்க வைப்பதென்பதே ஒரு வித்தை தான்.. கிட்டதட்ட 100 பதிவுகள் வரை இந்த வித்தை தெரியாமல் தான் நானும் இருந்தேன் திவ்யா.. இப்போ ஏதோ உங்களை போன்ற நண்பர்கள் புண்ணியத்தில் ஒரு முப்பது பின்னூட்டம் கிடைக்கிறது ஒரு பதிவிற்கு \"

வருகைக்கு நன்றி கார்த்திக்,
இப்போ வித்தை தெரிஞ்சிடுச்சா காத்திக்?? எனக்கு ஒரு விறகு நண்பர் இருப்பது போல் உங்களுக்கு ஒரு 'சருகு' நண்பர் இல்லாமலா இருப்பார்???

Divya said...

\" Priya said...
திவ்யா, உங்க posts எல்லாம் அருமை. கதையெல்லாம் சும்மா கலக்கலா இருக்கு.
Thanks for commenting on my posts.

நாட்டாமைய இப்டி வாரி இருக்கிங்களே! \"

ஹாய் ப்ரியா, வருகைக்கு நன்றி, நாட்டாமை நல்ல மனசு பண்ணி மன்னிசிடுவாருன்னு நம்பி வாரிட்டேங்க!

Divya said...

\"அகில் பூங்குன்றன் said...
ரொம்ப நன்றிங்க. நானும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து வைது இருக்கேன். ஒருத்தரும் வரவே மாட்டேன் என்று இருக்கிறார்கள். பார்ப்போம்...
\"

அகில், கவலை படாதீங்க, விறகு எனக்கு சொல்லிக் கொடுத்த டெக்னிக் எல்லாம் உபயோகப்படுத்தி பாருங்க!
உங்களுக்கு எக்கச்சக்கமான பின்னூட்டங்கள் வர வாழ்த்துகிறேன்

Divya said...

\" Kittu said...
divyamaana poshtungo

ammanikku oru hi \"

ஹாய் கிட்டு , வருகைக்கு நன்றி,

Syam said...

//நாட்டாமை நல்ல மனசு பண்ணி மன்னிசிடுவாருன்னு நம்பி வாரிட்டேங்க!//

பொது வாழ்க்கைல இது எல்லாம் ரொம்ப சாதாரனம் :-)

Divya said...

\"Harish said...
oru vaaratukku oru post podave sangu ududu...idula enga daily post podradu?
Avalavu talent irundirunda naanga hollywood la script write aagi iruppom illa :-)
btw...unga pona post la irunda kadhai nalla irundudu \"

வருகைக்கு நன்றி ஹாரிஷ்,

\btw...unga pona post la irunda kadhai nalla irundudu \"

பாராட்டுக்கு நன்றி,!!

நாமக்கல் சிபி said...

ஏனுங்க அந்த கடிகாரம் தலைப்பை மறைக்குதே...

வேற இடத்துல மாத்தி வைங்க...

நாமக்கல் சிபி said...

சரிங்க இதுக்கு பதில் சொல்லி ஐம்பதாக்கிடுங்க...

Divya said...

\"Syam said...
//நாட்டாமை நல்ல மனசு பண்ணி மன்னிசிடுவாருன்னு நம்பி வாரிட்டேங்க!//

பொது வாழ்க்கைல இது எல்லாம் ரொம்ப சாதாரனம் :-) \"

நாட்டமைய நிறைய பேரு வாரிவிட்டிருக்காங்கன்னு தெரியுது!

Divya said...

\" வெட்டிப்பயல் said...
சரிங்க இதுக்கு பதில் சொல்லி ஐம்பதாக்கிடுங்க\"

என் பதிவின் பின்னூட்டத்தை ஐம்பதாக்கிய வெட்டிக்கு ஒரு பெரிய "ஓ" !

இலவசக்கொத்தனார் said...

அதிகமா பின்னூட்டம் வாங்க சொல்லிக் கொடுத்த திவ்யா அவர்களுக்கு என் நன்றிகள்.

Srikanth said...

பின்னூட்டம் போடுங்க அம்மா / அய்யா னு சொந்த செலவுல கேட்டு Syam அவருக்கு அவரே பின்னூட்டம் ??? வச்சிகிட்டது போல
எதாவது நீங்களும் முயற்சி செய்யாதீங்க...

போதாது என்ற மனமே புண் செய்யும் மருந்து.

:)

துளசி கோபால் said...

திவ்யா,

நானும் வந்துருக்கேன்.
கொஞ்சம் நம்மளையும் 'கவனிங்க':-))))

Divya said...

\" Srikanth said...
பின்னூட்டம் போடுங்க அம்மா / அய்யா னு சொந்த செலவுல கேட்டு Syam அவருக்கு அவரே பின்னூட்டம் ??? வச்சிகிட்டது போல
எதாவது நீங்களும் முயற்சி செய்யாதீங்க...

போதாது என்ற மனமே புண் செய்யும் மருந்து.

:) \"

போதும் என்ற மனமே புண் செய்யும் மருந்து-> இப்படிதான் நான் கேள்விபட்டிருக்கிறேன், உங்கள் வரிகள் புதுமையா இருக்குதே ஷிரிகாந்த்.

Divya said...

\"துளசி கோபால் said...
திவ்யா,

நானும் வந்துருக்கேன்.
கொஞ்சம் நம்மளையும் 'கவனிங்க':-))))
\"

துளசி , வருகைக்கு நன்றி, 'கவனிச்சுட்டா' போச்சு!

Machi said...

தாயே மொய் வச்சிட்டேங்க, கணக்குல எழுதிக்கோங்க அப்புறம் நம்மகிட்ட இருந்து மொய் வரலைன்னு குத்தம் சொல்லக்கூடாது . :)

Divya said...

\" குறும்பன் said...
தாயே மொய் வச்சிட்டேங்க, கணக்குல எழுதிக்கோங்க அப்புறம் நம்மகிட்ட இருந்து மொய் வரலைன்னு குத்தம் சொல்லக்கூடாது . :)\"

குறும்பன் உங்கள குத்தம் சொல்வேனுங்களா,
கணக்குல எழுதிகிட்டேனுங்க!

இலவசக்கொத்தனார் said...

//போதும் என்ற மனமே புண் செய்யும் மருந்து-> இப்படிதான் நான் கேள்விபட்டிருக்கிறேன், உங்கள் வரிகள் புதுமையா இருக்குதே ஷிரிகாந்த்.//

அம்மா, தாயே! அது பொன் செய்யும் மருந்து. உங்களுக்கு தங்கம் அலர்ஜியா? :0

Divya said...

\"இலவசக்கொத்தனார் said...
//போதும் என்ற மனமே புண் செய்யும் மருந்து-> இப்படிதான் நான் கேள்விபட்டிருக்கிறேன், உங்கள் வரிகள் புதுமையா இருக்குதே ஷிரிகாந்த்.//

அம்மா, தாயே! அது பொன் செய்யும் மருந்து. உங்களுக்கு தங்கம் அலர்ஜியா? :0 \"

ஐயா சாமி, எனக்கு தங்கம் அலர்ஜி இல்லீங்கோ, தவறை சுட்டி காட்டியதற்க்கு நன்றி[ பின்னூட்டம் வாங்கிற டெக்னிக் புரிய மாடெங்குதே சிலருக்கு]

நாமக்கல் சிபி said...

//பின்னூட்டம் வாங்கிற டெக்னிக் புரிய மாடெங்குதே சிலருக்கு"

ஏனுங்க திவ்யா,
"600+" பின்னூட்டம் வாங்கி எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருக்கும் கொத்ஸுக்கே சொல்லி கொடுக்கிறீரே... நீங்க பெரிய ஆள்தான்

குமரன் (Kumaran) said...

You made my daughter's day with your profile picture. :-)

Divya said...

\" வெட்டிப்பயல் said...
//பின்னூட்டம் வாங்கிற டெக்னிக் புரிய மாடெங்குதே சிலருக்கு"

ஏனுங்க திவ்யா,
"600+" பின்னூட்டம் வாங்கி எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருக்கும் கொத்ஸுக்கே சொல்லி கொடுக்கிறீரே... நீங்க பெரிய ஆள்தான் \"

வெட்டி , நான் பெரிய ஆள் எல்லாம் இல்லீங்க, கத்துக் குட்டி தான்.

Divya said...

\" குமரன் (Kumaran) said...
You made my daughter's day with your profile picture. :-)\"

Thanks for ur visit to my Blog Kumaran!!

Arunkumar said...

ada adaa... viragu vettiya minjiduvinga seekirama...

cycle gap-la enga thalaya mattum illa, enga sangathu makkal ellarayum ottirkinga. idha naan vanmayaa kandikkiren !!!

பிரதீப் said...

இந்த வெளையாட்டு நல்லாருக்குதே...
நம்மளையும் கொஞ்சம் ஆட்டைக்குச் சேத்துக்கிருங்க.

Divya said...

\"Arunkumar said...
ada adaa... viragu vettiya minjiduvinga seekirama...

cycle gap-la enga thalaya mattum illa, enga sangathu makkal ellarayum ottirkinga. idha naan vanmayaa kandikkiren !!!\"

viraga minjirunthu romba kashtam Arun.
unga kandippellam partha bayama irukuthunga,

Thanks for ur comments Arun

Divya said...

\" பிரதீப் said...
இந்த வெளையாட்டு நல்லாருக்குதே...
நம்மளையும் கொஞ்சம் ஆட்டைக்குச் சேத்துக்கிருங்க\"

பிரதீப் உங்களையும் ஆட்டத்துக்கு சேர்த்தாச்சு, வருகைக்கு நன்றி பிரதீப்

Anonymous said...

hehehehehe politics in blogs too??

நாமக்கல் சிபி said...

//நல்லாதான் வேலை செய்யுது, இல்லீங்க சிபி?
//

ஆமா! மறுபடியும் கேள்வியா?

:))

Adiya said...

like vavasangam i guess we can start பின்னூட்டம்sangam :)

En பின்னூட்டம் ungalluku undu ..

Anonymous said...

haha super
pinnoottam vaangara technique pala paer kitta irukku...

amma en blogukku vaangamma
pinoottam podungamma :)

Divya said...

\" Adiya said...
like vavasangam i guess we can start பின்னூட்டம்sangam :)

En பின்னூட்டம் ungalluku undu .. \"

அதியா, 'பின்னூட்டம் சங்கம்' ஐடியா நல்லாத்தான் இருக்கிறது!!

உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி

Divya said...

\" Kittu said...
haha super
pinnoottam vaangara technique pala paer kitta irukku...

amma en blogukku vaangamma
pinoottam podungamma :) \"

கிட்டு, இந்த டெக்னிக்ல பின்னூட்டம் கேட்பதிற்க்கு 'ஒருத்தர் ' ஏற்கனவே காபி ரைட் வைத்திருக்கிறார்,

எதற்க்கும் அவர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு , 'அம்மா, தாயே, சாமி' டெக்னிக் பயன்படுத்துங்கள்

நாமக்கல் சிபி said...

பின்னூட்டச் சங்கத்தினருக்கு வாழ்த்துக்கள்!

:))

Divya said...

\"நாமக்கல் சிபி @15516963 said...
பின்னூட்டச் சங்கத்தினருக்கு வாழ்த்துக்கள்!\"

பின்னூட்டச் சங்கத்திற்க்கு வாழ்த்துக்கள் கூறி, என் பதிவின் பின்னூட்டத்தை 75 ஆக்கிய நாமக்கல் சிபிக்கு ஒரு பெரிய'ஓ'போடுங்க!!!!

Divya said...

\"//நல்லாதான் வேலை செய்யுது, இல்லீங்க சிபி?
//

ஆமா! மறுபடியும் கேள்வியா?

:)) \"

ஐயோ இதுக்கு மேல கேள்வியே இல்லீங்க சிபி

நாமக்கல் சிபி said...

//ஐயோ இதுக்கு மேல கேள்வியே இல்லீங்க சிபி //

அது!

(இப்படி கேள்வியே இல்லையேன்னு சொல்லி என்னை "அது" ன்னு சொல்ல வைக்க இதுவும் ஒரு டெக்னிக்தான், அடுத்த லெவல்)

Divya said...

\" நாமக்கல் சிபி said...
//ஐயோ இதுக்கு மேல கேள்வியே இல்லீங்க சிபி //

அது!

(இப்படி கேள்வியே இல்லையேன்னு சொல்லி என்னை "அது" ன்னு சொல்ல வைக்க இதுவும் ஒரு டெக்னிக்தான், அடுத்த லெவல்)\"

அட, அட , அட என்ன ஒரு புத்திசாலி நீங்க சிபி, என்னோட எல்லா டெக்னிக்கும் உங்க கிட்ட மட்டும் தான் வொர்க்கவுட் ஆகுது, உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை!!!

நாமக்கல் சிபி said...

அப்படியே நம்ம பதிவுல வந்து டெம்ப்ளேட் எப்படி இருக்குனு பாருங்க!

பிதற்றல்கள்

மனமும் நினைவும்

நாமக்கல் சிபி said...

//அட, அட , அட என்ன ஒரு புத்திசாலி நீங்க சிபி//

ஏதும் காமெடி கீமெடி இல்லையே?

//என்னோட எல்லா டெக்னிக்கும் உங்க கிட்ட மட்டும் தான் வொர்க்கவுட் ஆகுது,//

ஸ்ஸ்ஸப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

//உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை!!! //

வார்த்தைகள்தான் வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை!

All County Currencies/DD/Cheque Are Accepted.
:))

Divya said...

\" நாமக்கல் சிபி said...
அப்படியே நம்ம பதிவுல வந்து டெம்ப்ளேட் எப்படி இருக்குனு பாருங்க!

பிதற்றல்கள்

மனமும் நினைவும் \"


சிபி, டென்ப்ளேட் மாற்றம் பார்த்தேன், அருமை, பின்னூட்டம் இட்டிருக்கிறேன் உங்கள் பதிவில்.

[விளம்பர கட்டணம் வசூலிக்கப் படும்]

Divya said...

\"//அட, அட , அட என்ன ஒரு புத்திசாலி நீங்க சிபி//

ஏதும் காமெடி கீமெடி இல்லையே?

//என்னோட எல்லா டெக்னிக்கும் உங்க கிட்ட மட்டும் தான் வொர்க்கவுட் ஆகுது,//

ஸ்ஸ்ஸப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

//உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை!!! //

வார்த்தைகள்தான் வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை!

All County Currencies/DD/Cheque Are Accepted.
:))
\"

கிரெடிட் கார்ட் accept பண்ணுவீங்களா சிபி??

நாமக்கல் சிபி said...

நல்லா அடிச்சி ஆடுங்க திவ்யா...

தள எப்படியும் இந்த பதிவுக்கு நூறு டார்கட் வெச்சாச்சினு தெரியுது...

பின்னூட்டம் வாங்கற டெக்னிக் போடற பதிவுக்கு நூறு கூட இல்லைனா எப்படி? ;)

Divya said...

\" வெட்டிப்பயல் said...
நல்லா அடிச்சி ஆடுங்க திவ்யா...

தள எப்படியும் இந்த பதிவுக்கு நூறு டார்கட் வெச்சாச்சினு தெரியுது...

பின்னூட்டம் வாங்கற டெக்னிக் போடற பதிவுக்கு நூறு கூட இல்லைனா எப்படி? ;)
\"

அதானே நூறு கூட இல்லைனா எப்படி??

நாமக்கல் சிபி said...

//கிரெடிட் கார்ட் accept பண்ணுவீங்களா சிபி?? //

கண்டீப்பா!

நாமக்கல் சிபி said...

//[விளம்பர கட்டணம் வசூலிக்கப் படும்]
//

:))

அப்போ சரியாப் போச்சு!

நாமக்கல் சிபி said...

//தள எப்படியும் இந்த பதிவுக்கு நூறு டார்கட் வெச்சாச்சினு தெரியுது//

பாலாஜி, க.க.க.போ!

:))

Anonymous said...

மறுபடியும் தமிழ்மணத்துலே ஆரம்பிச்சாச்சா?

இங்கயும் பின்னூட்டக் கயமைத் தனம் நடக்குதே! போலீஸ்காரரைக் கூப்பிட வேண்டியதுதான்!

Anonymous said...

ஒரு 25 பேரு போதுமா?
வெட்டிப்பயல் எல்லாம் வேற வந்திருக்கார். சரி 50 ஆவே அனுப்புறேன்.

Anonymous said...

இந்நேரத்துல இங்கே இவ்ளோ டிராஃபிக்கா?

Anonymous said...

திவ்யா அக்கா,
பின்னூட்டங்களில் சதமடிக்க வாழ்த்துக்கள்!

Anonymous said...

நானும் ஆட்டைல கலந்துக்கலாமா?

Syam said...

//அதானே நூறு கூட இல்லைனா எப்படி?? //

அந்த கிரெடிட் கார்டு நம்பர மட்டும் அனுப்பி வைங்க...நூறு என்ன 1000 மே போட்டுறலாம் :-)

கைப்புள்ள said...

//விறகு வெட்டி: சும்மா எல்லா ப்ளாக்கிற்க்கும் போய், பதிவு படிக்கிறேனோ இல்லையோ பின்னூட்டம் போட்டிட்டு வந்துடுவேன். அப்போதான் , பாவம் பையன் நம்ம பதிவிற்க்கு பின்னூட்டம் எல்லாம் போட்டிருக்கான், நாமும் போய் இவன் பதிவு பார்க்கலாம்னு வருவங்க என் ப்ளாக்கிற்கு.//

"மீ பாவம்யா"ன்னு இதைப் படிச்சிட்டு வெறகு கதறலையா? வெறகு இமேஜ் டோட்டல் டேமேஜ்னு எனக்கே தெரியுது?
:)

நாமக்கல் சிபி said...

//Syam said...

//அதானே நூறு கூட இல்லைனா எப்படி?? //

அந்த கிரெடிட் கார்டு நம்பர மட்டும் அனுப்பி வைங்க...நூறு என்ன 1000 மே போட்டுறலாம் :-) //

ரிப்பீட்டே!!!

நாமக்கல் சிபி said...

// ஆட்கள் சப்ளை செய்பவர் said...

ஒரு 25 பேரு போதுமா?
வெட்டிப்பயல் எல்லாம் வேற வந்திருக்கார். சரி 50 ஆவே அனுப்புறேன். //

இதுக்கு என்ன அர்த்தம்???

நாமக்கல் சிபி said...

என்னங்க நூறு கிட்டக வந்தாச்சா?

நாமக்கல் சிபி said...

முதல் 100க்கு

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

இப்ப சந்தோஷமா???

Divya said...

\" வெட்டிப்பயல் said...
என்னங்க நூறு கிட்டக வந்தாச்சா? \"

இலவசமாக என் பின்னூட்டத்தை நூறாக்கிய வெட்டிக்கு ஜே !!!

Syam said...

101..மொய் :-)

Syam said...

//இலவசமாக என் பின்னூட்டத்தை நூறாக்கிய வெட்டிக்கு ஜே !!! //

இலவசமா...அது எல்லாம் அக்கவுண்ட்ல போட்டாச்சு... :-)

Divya said...

\"Syam said...
101..மொய் :-) \"

நாட்டம உங்க 101 ரூபாய் மொய்ல நூறு ரூபாய் செல்லாத நோட்டாமா, புது நோட்டா அனுபுங்க நாட்டாம.

Divya said...

\"Syam said...
//இலவசமாக என் பின்னூட்டத்தை நூறாக்கிய வெட்டிக்கு ஜே !!! //

இலவசமா...அது எல்லாம் அக்கவுண்ட்ல போட்டாச்சு... :-)\"

அடப்பாவமே, அக்கவுண்ட்டே ஓபன் பண்ணியாச்சா??

Anonymous said...

ஆமா எனக்கு ஒரு சந்தேகம், பின்னூட்டம் அதிகமானால் என்ன பயன்?

(நான் இங்கு புத்யவனுங்கோ)

Syam said...

//நாட்டம உங்க 101 ரூபாய் மொய்ல நூறு ரூபாய் செல்லாத நோட்டாமா//

அது அனுப்பினதுக்கு அப்புறம் தான் பார்த்தேன்..உடனே ஒரு 1000 ரூபாய் நோட்டு அனுப்பி வெச்சுட்டேன்...101 ரூபாய் எடுத்திட்டு மீதிய சீக்கிரம் அனுப்பிடுங்க :-)

நாமக்கல் சிபி said...

//அடப்பாவமே, அக்கவுண்ட்டே ஓபன் பண்ணியாச்சா??//
அதெல்லாம் எப்பவோ பண்ணியாச்சு...
சீக்கிரம் அனுப்புங்க...
இல்லைனா டபுள், ட்ரிபுல் ஆகும்...

Divya said...

\"சுப்பு said...
ஆமா எனக்கு ஒரு சந்தேகம், பின்னூட்டம் அதிகமானால் என்ன பயன்?

(நான் இங்கு புத்யவனுங்கோ) \"

சுப்பு, உங்கள் சந்தேகதிற்க்கு பதில் விறகு கிட்ட கேட்டு, அதை ஒரு தனி பதிவா கண்டிப்பா போட்டுடரேங்கோ!!

Divya said...

\"Syam said...
//நாட்டம உங்க 101 ரூபாய் மொய்ல நூறு ரூபாய் செல்லாத நோட்டாமா//

அது அனுப்பினதுக்கு அப்புறம் தான் பார்த்தேன்..உடனே ஒரு 1000 ரூபாய் நோட்டு அனுப்பி வெச்சுட்டேன்...101 ரூபாய் எடுத்திட்டு மீதிய சீக்கிரம் அனுப்பிடுங்க :-) \"

நாட்டாம, நீங்க அனுப்பின 1000 ரூபாய் வந்துச்சுங்க, ஆனா பாருங்க அது கள்ள நோட்டுங்களாமா, சில்லறை மாத்த போன இடத்துல சொல்றாங்க.

Divya said...

\" வெட்டிப்பயல் said...
//அடப்பாவமே, அக்கவுண்ட்டே ஓபன் பண்ணியாச்சா??//
அதெல்லாம் எப்பவோ பண்ணியாச்சு...
சீக்கிரம் அனுப்புங்க...
இல்லைனா டபுள், ட்ரிபுல் ஆகும்... \"

என்ன வெட்டி, கந்து வட்டி ரேஞ்சுக்கு இருக்குது உங்க அக்கவுண்ட் ??

Divya said...

\"பின்னூட்ட கயமைக் கண்காணிப்புக் குழு said...
மறுபடியும் தமிழ்மணத்துலே ஆரம்பிச்சாச்சா?

இங்கயும் பின்னூட்டக் கயமைத் தனம் நடக்குதே! போலீஸ்காரரைக் கூப்பிட வேண்டியதுதான்! \"

கயமைத்தனம் யாருங்க இங்க பண்றாங்க, ஒரு அனானி பின்னூட்டம் கூட இல்ல பாருங்கொ!

Divya said...

\"குட்டிச் சாத்தான்ஸ் கிளப் said...
இந்நேரத்துல இங்கே இவ்ளோ டிராஃபிக்கா?
\"

எல்லாம் உங்க தோஸ்த்துகளோட டிராஃபிக்குதான்ங்க,
எப்படியோ என்னோட பின்னூட்டம் கலைகட்டுது,

Divya said...

\"மோகினிகள் கழகம் said...
திவ்யா அக்கா,
பின்னூட்டங்களில் சதமடிக்க வாழ்த்துக்கள்! \'

மோகினி உங்கள் வாழ்த்துபடி சதமடிச்சீட்டேங்க! நன்றி.

Divya said...

\"கொள்ளிவாய்ப் பிசாசு said...
நானும் ஆட்டைல கலந்துக்கலாமா? \"

கண்டிப்பா ஆட்டைல நீங்க சேர்ந்துக்களாம், கட்டணம் எதும் இல்லீங்க கொள்ளிவாய் பிசாசு,

அப்படியே போய் , ரத்தக்காட்டேரியையும் கூட்டிட்டு வாங்க.

குமரன் (Kumaran) said...

உங்க கிட்ட விறகு வெட்டியோ வேறு எந்த வெட்டியோ மருத்துவர் இராமநாதனும் இலவசக் கொத்தனாரும் சேர்ந்து பின்னூட்ட டாக்டரேடுக்காக செய்த தீஸிஸ் பத்தி சொன்னாங்களான்னு தெரியலையே. சொல்லலைன்னா நான் சொல்றேன். இந்தப் பதிவுக்குப் போய் பாருங்க.

http://koodal1.blogspot.com/2006/02/140.html

Divya said...

\" குமரன் (Kumaran) said...
உங்க கிட்ட விறகு வெட்டியோ வேறு எந்த வெட்டியோ மருத்துவர் இராமநாதனும் இலவசக் கொத்தனாரும் சேர்ந்து பின்னூட்ட டாக்டரேடுக்காக செய்த தீஸிஸ் பத்தி சொன்னாங்களான்னு தெரியலையே. சொல்லலைன்னா நான் சொல்றேன். இந்தப் பதிவுக்குப் போய் பாருங்க.

http://koodal1.blogspot.com/2006/02/140.html \"

குமரன், நீங்க கொடுத்திருக்கிற link போய் பார்த்தேன், என்னோட நண்பர் விறகு மாதிரி புத்திசாலீங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்,
நன்றி குமரன்.

நாமக்கல் சிபி said...

//குமரன், நீங்க கொடுத்திருக்கிற link போய் பார்த்தேன், என்னோட நண்பர் விறகு மாதிரி புத்திசாலீங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்,
நன்றி குமரன்.//

உங்க நண்பர் மாதிரி புத்திசாலிங்களே அந்த பதிவ பார்த்து தான் விவரமாயிருப்பாங்க. எதுக்கும் கேட்டு பாருங்க ;)