November 18, 2006

ரயில் சிநேகம் - 2



பாகம்-1
"ஐயோ" என்று கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட்டாள் பிரீத்தி. என்னாச்சுதோ என்று அனைவரும் இவளை பார்க்க " என் ஃபரண்ட் ஷாலினுக்கும் சேர்த்து வாஙகிய சப்பாத்தி பார்சல் என் பையிலேயே இருந்துவிட்டது, அவள் ரூமிற்க்கு போனபோது எடுத்து போக மறந்து விட்டாள்" என்ற பிரீத்தி , " பிரேம் என்கிட்ட இப்போ இரண்டு சப்பாத்தி பார்செல் இருக்கிறது, நீங்க ஒன்று வாங்கிகோங்க" என்றாள்.

" வாங்கிக்கனுமா?.............அப்படின்னா எவ்வளவு விலைங்க உங்க எக்ஸ்ட்ரா சப்பாத்தி பார்சல், ?ஹாஃப் ரேட்னா ஓகே" என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் பிரேம்.
" அச்சோ! அப்படி இல்லீங்க, என்கிட்ட தான் இப்போ இரண்டு பார்சல் இருக்கிறதே, நீங்க ஒன்று சாப்பிடலாமேன்னு சொன்னேன்" என்று விளக்கினாள் பிரீத்தி.
"இப்படி விளக்கமா ' சாப்பிடுங்கன்னு' நீங்க சொல்லியிருக்க்கனும், ' வாங்கிக்கங்கன்னு' நீங்க சொன்னதும் சாப்பாடு பொட்டலம் வியாபாரம் பண்றிங்களோன்னு நான் பயந்துடேங்க" என்று கூறி சிரித்தான் பிரேம்.

அவனது கிண்டலும் கேலியுமான பேச்சு பிரீத்திக்கு பிகவும் பிடித்திருந்தது. பின் இருவருமாக உணவருந்தும் போதும் கிரிக்கட், சினிமா, உலக நடப்பு என்று நிறைய பேசினான், அத்தனையும் பிரீத்தியை கவர்ந்தன.
தன் அம்மாவின் உடல் நிலைக் குறித்து கவலையுடன் கணமாக இருந்த பிரீத்தியின் இதயம் இலகுவானது, ஒருவிதமான பரவசத்துடன் உறங்கிபோனாள் பிரீத்தி.

யாரோ தன் கையைப் பிடித்து " எழும்புங்க பிரீத்தி, கோயம்புத்தூர் வந்தாச்சு" என்று கூறுவது கேட்டு கண் விழித்தாள் பிரீத்தி. அவளுடன் பயணம் செய்துக் கொண்டிருட்ந்த அந்தக் குடும்பத் தலைவி அவளருகே நின்றிருந்தாள். அவசரம் அவசரமாக எழுந்த பிரீத்தியின் கண்கள் ' அவனை' தேடின. எங்கு போனான் அவன், அவனையும் காணோம் அவன் கைப் பைகளையும் காணோமே என்று பதறிப் போன பிரீத்தி, அக்குடும்ப தலைவியிடம் " ஏங்க , நம்ம கூட பிரயாணம் பண்ணினாரே அந்த பிரேம் எங்கேங்க??" என்று கேட்டாள்.

" அவர் வடகோவை ரயில் நிலையத்திலேயே இறங்கிட்டாருங்க, உங்க கிட்ட சொல்லச் சொன்னருங்க, நீங்க ரொம்ப அயர்ந்து தூங்கிட்டு இருந்தீங்களா அதான் எழுப்பி தொந்தரவு செய்ய வேண்டாமேன்னு எங்க கிட்ட சொல்ல சொல்லிட்டு போய்ட்டாருங்க" என்றார் அந்த பெண்.

பிரீத்திக்கு ஏனோ அழுகை அழுகையாக வந்தது. 'அவன்' சொல்லிக்கொள்ளாமல் சென்றது அவளுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது..

ஊர் கதை, உலக கதை எல்லாம் பேசினான், அவனுக்கு எந்த ஊர், எங்கு வேலைப் பார்க்கிறான், அவன் மொபைல் நம்பர் என்ன, எந்த விபரமும் அவன் சொல்லவில்லை, தானும் கேட்ட்காமல் விட்டு விட்டோமே என்று தன்னையும் அவனையும் மனதிற்க்குள் திட்டிக் கொண்டே ஆட்டோவில் தன் வீட்டிற்க்குச் சென்றாள் பிரீத்தி.

'ரயில் சினேகம் ரயில் வரைதான்' போலும் என்று தன்னை தானே சமாதனப் படுத்திக் கொண்டு, அம்மாவை காணும் ஆவலில் வீட்டிற்க்குள் நுழைந்தாள் பிரீத்தி. வாசலருகில் புன்முறுவலுடன் வரவேற்றார் அவள் தாத்தா." வாம்மா பிரீத்தி, பிரயாணம் எல்லம் சவுகரியாமா இருந்துச்சாமா? ரொம்ப களைப்பா தெரியறேயேம்மா" என்று தாத்தா கேட்க, " தாத்தா அம்மா எங்கே, அம்மா வுக்கு உடம்புக்கு என்ன, இப்போ அம்மா உடம்பு எப்படி இருகிறது, டாக்டர் என்ன சொல்கிறார் " என்று வரிசையாக தன் கேள்விகளைத் தொடுத்தாள் பிரீத்தி.

" பொறும்மா, முதல்ல உள்ளே வா, நிதானமா எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன் " என்றார் தாத்தா. தாத்தாவின் முகத்தில் தன் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததுக் குறித்து எந்த வருத்தமும் தெரியவில்லையே, எப்போதும் விட ரொம்ப உற்ச்சாகமாக தெரிகிறாரே என்று குழப்பத்துடன் வீட்டின் முன் அறைக்குச் சென்றாள்.

சனிக்கிழமையானால் காலை 10 மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கும் தன் தம்பி பிரவீன் அன்று அத்தனை சீக்கிரமாக எழுந்து வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருப்பதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே போனாள் பிரீத்தி.
" பிரவீன் , என்னடா இத்தனை சீக்கிரம் எழுந்துட்ட, இது என் தம்பி பிரவீன் தானா, என் கண்ணால நம்பவே முடியலையே" என்றாள் பிரீத்தி.

" பிரீத்தி, 'கண்ணை நம்பாதீங்க' என்று நடிகர் மாதவன் சன் டீவி யில் வருகிற டிஷ் வாஷிங் லிக்குயிட் விளம்பரத்துல சொல்வாரு பாத்திருகிறியா?? அதே மாதிறி உன் கண்ணை நம்பாதே" என்றான் பிரவீன். ' மாதவன் ' என்ற பெயரை கேட்டதும் பிரீத்தியின் மனதில் ' அந்த முகம்' பளிச்சிட்டது. தன் மனதைக் கட்டுபடுத்திக் கொண்டு " அம்மா எங்கேடா பிரவீன் ?" என்று கேட்டாள் பிரீத்தி,

அதே சமயம் மாடிப் படிகளில் பிரீத்தியின் அம்மா வீட்டின் முன் அறைக்கு இறங்கி வந்துக் கொண்டிருந்தார் . ஃபிரஷாக தலை குளித்து, உயர் ரக புடவை உடுத்தி தன் அம்மா ஒரு அழகு தேவதை போல் மாடி படிகளில் வருவதைக் கண்டதும் அதிர்ச்சியில் உரைந்துப் போனாள் பிரீத்தி.
" அம்மா, உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று அப்பா ஃபோனில்............" என்று அவள் கூறி முடிக்கும் முன் பிரீத்தியின் அப்பா வும் அங்கு வந்தார்,

" அதெல்லாம் சும்மா டூப்பூ, உன்னை வீட்டிற்க்கு வரவழைக்கத் தான் அப்பா அப்படி சொன்னாங்க ஃபோனில்" என்றான் பிரவீன். ஒன்றும் புரியாமல் விழித்த பிரீத்தியிடம் அவள் அப்பா" பிரீத்திமா, நானே ஸ்டேஷனுக்கு வரனும்னு இருந்தேன் , வெளியில கொஞ்சம் வேலை வந்துடுச்சு, பிரீத்தி இன்றைக்கு உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வராங்கடா , உண்மையைச் சொல்லி வீட்டுக்கு வர சொன்னா நீ ஆயிரம் காரணம் சொல்லி வராமல் இருந்துடுவன்னு தான் அம்மா என்னை அப்படி ஃபோனில் சொல்லச் சொன்னாடா" என்றார்.

பிரீத்திக்கு தலை சுற்றியது, கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன, " ஏம்பா பொய் சொல்லி என்னை வரவழைச்சீங்க? நான் தான் ஒரு வருஷம் கழிச்சு மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னேன் இல்ல, அப்புறம் ஏம்பா இப்படி பண்ணினீங்க. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், அம்மா வுக்கு உடம்பு சரியில்லைன்னு நான் எவ்வளவு பதறிப் போயிட்டேன் தெரியுமா?? எல்லாரும் சேர்ந்து பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டீங்க இல்ல, நான் போறேன் சென்னைக்கு, மதியம் இன்டர் ஸிட்டி ரயிலிலேயே நான் கிளம்புறேன், அந்த மாப்பிள்ளை வீட்டிற்க்கு சொல்லிடுங்க என் பொண்ணு சென்னையிலிருந்து வரலைன்னு, நான் இப்போவே கிளம்புகிறேன்" என்று கோபத்தில் வெடிக்கும் பிரீத்தியை எப்படி சமாதனப் படுத்துவது என அனைவரும் யோசிக்க பிரீத்தி ரயில் நிலையத்திற்க்கு புறப்பட்டாள்.



வடகோவை ரயில் நிலையத்தில் பிரேமின் மாமா மகன் சுந்தர் பிரேமை அழைத்துச் செல்ல வந்திருந்தான், " வாடா மாப்பிள்ளை, ட்ரெயின் கரெக்ட் டைம்முக்கு வந்துடுச்சு போலிருக்கு, பிரயாணம் எல்லாம் எப்படிடா வசதியா இருந்துச்சா? சென்னையில் நல்ல மழையாமே? இங்கே கல்யாண வீட்டிற்க்கு வந்திருகிறவர்களுக்கு எல்லாம் ஹோட்டலில் ரூம் போட்டிருகாங்க , எல்லாரும் அங்க தான் இருக்கிறாங்க, போகலாம் வா" என்று பேசிக் கொண்டே நடக்க , பிரேமோ நகர்ந்துச் சென்றுக் கொண்டிருந்த ஃபளு மவுண்டைன் ரயிலை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தான்.

' போகுதே போகுதே என் பைங்கிளி ரயிலிலே' என் அவன் மணம் பாடியது.

ஹோட்டல் ரூமிற்க்கு வந்து குளித்து முடித்து, காலை உணவு அருந்த அவன் தயாரகிக் கொண்டிருந்த போது, அவன் அப்பாவும் அம்மாவும் தயங்கி தயங்கி அவன் அறக்குள் வந்தனர்." பிரேம் " என்று அழைத்தாள் அவன் தாய் ," என்னம்மா, சொல்லுங்க" என்றான் பிரேம். அவன் தாய் தன் கணவனை நோக்க அவர் தொடர்ந்தார், " பிரேம் உனக்கு பெண் பார்க்க போகிறோம் இன்றைக்கு, பெண்ணுக்கு கோயம்புத்தூர், அதான் கல்யாணத்திற்க்கு வந்த இடத்திலேயே பெண் பார்க்க வருவதாக ஏற்பாடு செய்து விட்டோம், புறப்பட்டு தயாராக இரு, 10 மணிக்கு நாம் குடும்பமாக பெண் வீட்டிற்க்கு செல்கிறோம் " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் .

பிரேமிற்க்கு கோபமும் ஆத்திரமும் பொத்துக் கொண்டு வந்தது, " இதற்க்கு தான் தூரத்து உறவு காரங்க கல்யாணத்திற்க்கும் கண்டிப்பா வரனும்னு கட்டாயப் படுத்தினீங்களா?? நான் தான் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் ஒரு வருடம் போகட்டும் என்று சொல்லியிருந்தேனே, அப்புறம் என்ன அவசரம் உங்களுக்கு, யார் கிட்ட கேட்டு இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணினீங்க? என்னை ஏமாத்தி வரவழைச்சுட்டு இங்கே இவ்வளவு ஏற்ப்பாடு பண்ணியிருகிறீங்க இல்ல, நான் போறேன் சென்னைக்கு, அந்த பொண்ணு வீட்டுல சொல்லிடுங்க என் பையன் சென்னையிலிருந்து வரல ன்னு, மதியம் இண்டர் ஸிட்டி ரயிலுக்கே நான் கிளம்புகிறேன் " என்று கோபத்தில் பிரேம் வெடிக்க அவனை எப்படி சமாதானப் படுத்துவது என அவன் பெற்றோர் யொசிக்க ரயில் நிலையத்திற்க்கு புறப்பட்டான் பிரேம்...........



[சினேகம் தொடரும்..]

24 comments:

Anonymous said...

கரம் பிடித்து
காப்பாற்றியவனை
கரம் பிடிக்க
காத்திருக்கிறாலோ!
கதையை அவுட்
செய்துவிட்டேனா?
மன்னிக்கவும்!
அது என்ன
மாதவன் மாதிரி
வருபவர்களையே
மங்கைகளுக்கு பிடிக்கிறது
மீசை இல்லாதுமேல்
ஆசையைப் பாருங்கப்பா!

ரவி said...

இரண்டு ரயில்வே ட்ராக்கும் ஒரே திசையில் பயணிக்குதா ? நடக்கட்டும் நடக்கட்டும்..

அடுத்த பாகம் எப்போ ?

Srikanth said...

ரயில் சிநேகம் இன்டர்சிட்டி யில் தொடருமா..

:)

நல்ல எழுத்துநடை, தொடர்ந்து எழுதவும்.

நாமக்கல் சிபி said...

கலக்கலா போகுதுங்க கதை...
கடைசியா சினிமா மாதிரி ரயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸா ;)

அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங் :-)

Divya said...

\" பிரியமுடன் பிரேம் said...
கரம் பிடித்து
காப்பாற்றியவனை
கரம் பிடிக்க
காத்திருக்கிறாலோ!
கதையை அவுட்
செய்துவிட்டேனா?
மன்னிக்கவும்!
அது என்ன
மாதவன் மாதிரி
வருபவர்களையே
மங்கைகளுக்கு பிடிக்கிறது
மீசை இல்லாதுமேல்
ஆசையைப் பாருங்கப்பா!"/

மீண்டும் உங்கள் கவிதை வரிகளால் என் பின்னூட்டத்தை அலங்கரித்தமைக்க்கு நன்றி[ நடிகர் மாதவனை பெண் ரசிகைகளுக்குப் பிடிக்கும் என்பதால், மீசை இல்லாத ஆண்களை மட்டும் தான் பெண்களுக்கு பிடிக்கும் என்பதில்லை, ' மீசை' தான் ஒரு ஆணுக்கு அழகு என்பது என் தனிப்பட்ட கருத்து]

Divya said...

\"செந்தழல் ரவி said...
இரண்டு ரயில்வே ட்ராக்கும் ஒரே திசையில் பயணிக்குதா ? நடக்கட்டும் நடக்கட்டும்..

அடுத்த பாகம் எப்போ ? "/

வருகைக்கு மிக்க நன்றி ரவி, அடுத்த பாகம் விரைவில்......

Divya said...

\" Srikanth said...
ரயில் சிநேகம் இன்டர்சிட்டி யில் தொடருமா..

:)

நல்ல எழுத்துநடை, தொடர்ந்து எழுதவும். "/

நன்றி Srikanth , உங்கள் ஊக்கம் எனது உற்சாகம் !

Divya said...

\" வெட்டிப்பயல் said...
கலக்கலா போகுதுங்க கதை...
கடைசியா சினிமா மாதிரி ரயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸா ;)

அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங் :-) '/

க்ளைமாக்ஸ் ரயில்வே ஸ்டேஷன்லன்னு முடிவே பண்ணிடீங்களா வெட்டி?

அடுத்த பாகம் விரைவில்.....

Santhosh said...

கதை நல்லா போயிட்டு இருக்கு திவ்யா, முடிவு என்னான்னு ஒரு மாதிரி யோசிச்சி வச்சி இருக்கேன் பாக்கலாம் நீங்க என்ன சொல்றீங்கன்னு.:))

Divya said...

\"சந்தோஷ் said...
கதை நல்லா போயிட்டு இருக்கு திவ்யா, முடிவு என்னான்னு ஒரு மாதிரி யோசிச்சி வச்சி இருக்கேன் பாக்கலாம் நீங்க என்ன சொல்றீங்கன்னு.:)) "/

கதையின் முடிவு உங்கள் ஊகம் போல் அமையலாம், பொறுத்திருந்து பாருங்கள்

Machi said...

ம் கதை ஒரு தினுசா தான் போகுது. எங்க போயி முட்டுதுன்னு பார்ப்போம். நீங்க எத்தனை பாகம் போகுன்னு சொன்னீங்கன்னா கதை எப்படி போகும்ன்னு முடிவு பண்ணலாம்.

முதல் பாகத்தில் மெதுவா ரயில் ஓட ஆரம்பிச்சு 2-வது பாகத்தில் விறுவிறுப்பு கூடிடுச்சு பாராட்டுக்கள்.

ஜொள்ளுப்பாண்டி said...

நல்லாதான் போகுது ரயிலு !! அட ரெண்டுபேரும் வீட்டவிட்டே கெளம்பிடாங்களே ?? ம்ம்ம் புதுசா இருக்கு !!:)))

Syam said...

புரியுது புரியுது...என்ன மேட்டர்னு எததனை தமிழ் சினிமா பாத்து இருக்கோம்...இருந்தாலும் இப்படி சஸ்பெண்ஸ்ல விட்டுடீங்களே...சீக்கிரம் நெக்ஷ்ட் பார்ட் பிளீஸ் :-)

Divya said...

\" குறும்பன் said...
ம் கதை ஒரு தினுசா தான் போகுது. எங்க போயி முட்டுதுன்னு பார்ப்போம். நீங்க எத்தனை பாகம் போகுன்னு சொன்னீங்கன்னா கதை எப்படி போகும்ன்னு முடிவு பண்ணலாம்.

முதல் பாகத்தில் மெதுவா ரயில் ஓட ஆரம்பிச்சு 2-வது பாகத்தில் விறுவிறுப்பு கூடிடுச்சு பாராட்டுக்கள்."/


குறும்பன், அடுத்த பாகத்தில கதை முடிஞ்சிடும், உங்கள் யூகம் சரியா இருக்குதான்னு அடுத்த பாகம் போட்டதும் படிச்சுட்டு சொல்லுங்க

Divya said...

\" ஜொள்ளுப்பாண்டி said...
நல்லாதான் போகுது ரயிலு !! அட ரெண்டுபேரும் வீட்டவிட்டே கெளம்பிடாங்களே ?? ம்ம்ம் புதுசா இருக்கு !!:)))"/

ஜொள்ளு வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி

Divya said...

\"Syam said...
புரியுது புரியுது...என்ன மேட்டர்னு எததனை தமிழ் சினிமா பாத்து இருக்கோம்...இருந்தாலும் இப்படி சஸ்பெண்ஸ்ல விட்டுடீங்களே...சீக்கிரம் நெக்ஷ்ட் பார்ட் பிளீஸ் :-) "/

அடுத்த பாகம் விரைவில் ஷ்யாம்........

Divya said...

என்னோட கதையின் இளுவை தாங்காமல், அடுத்த பகுதி படிக்காம விட்டிடாதீங்க, short and sweet ஆ அடுத்த பகுதி போட்டுடறேன்.

Syam said...

இந்த லின்க் டைம் கிடைக்கும் போது பாருங்க...நீங்க எழுதின கதை மாதிரியே அவரும் எழுதி இருக்கார்...what a coincidence

http://supershanki.blogspot.com/

Divya said...

\"Syam said...
இந்த லின்க் டைம் கிடைக்கும் போது பாருங்க...நீங்க எழுதின கதை மாதிரியே அவரும் எழுதி இருக்கார்...what a coincidence

http://supershanki.blogspot.com/"/

நன்றி ஷ்யாம், கண்டிப்பா அந்த ப்ளாக் பார்க்கிறேன்

நாமக்கல் சிபி said...

//http://supershanki.blogspot.com///

நாட்டாமை,
எந்த கதைனு கொஞ்சம் கரெக்டான லிங்க் தாங்களேன்.. தேடறதுக்கு கொஞ்சம் சோம்பேறித்தனமா இருக்கு :-)

Syam said...

பாலாஜி, இன்னைக்குதான் போஸ்ட் பண்ணிருகாரு...
A short story made long...
இது தான் கதையோட தலைப்பு ஆனா படிச்சு முடிக்கறதுக்குள்ள கண்ண கட்டிடுச்சுனா நான் பொருப்பு இல்ல :-)

Anonymous said...

!!! wow...except for the meeting incident..everything else tallies...chanceleenga...superapu...

Divya said...

\"gils said...
!!! wow...except for the meeting incident..everything else tallies...chanceleenga...superapu.\"

gils, இனிமேல் கதை எழுதினா முதல்லயே சொல்லிடுங்க, மறுபடியும் இப்படி clash ஆகாமல் தடுக்கலாம்.

kavidhai Piriyan said...

This is the first time am readign ur Blog..Very nice n surprise Story ....Okay ..am going to read to the part3..catch u later:-)