November 29, 2006

அம்மம்மா பிள்ளைக்கனி, அங்கம்தான் தங்கக்கனி!!!


என்னை அக்கா வென்றழைக்க
எனக்கொரு தங்கை வரப்போகிறாள்
ஏக்கத்துடன் கண்கள் வீட்டின் வாயிலேயே நோக்கின
ஏந்தி வருவாள் அன்னை குழந்தையுடன் - என்று.

பட்டு பாவாடை உடுத்தி
பிஞ்சுக் கரங்களால் என் கரம் கோர்த்து
பாதங்கள் தரையில் தத்தி தத்தி
பவனி வருவாள் என்னுடன் - என்று

கனவுகள் பல கண்டு காத்திருந்த எனக்கு
கண்விழிக்கும் முன்னே உன்னை
கடவுள் 'எனக்கு நீ வேண்டும்' என
களவாடி சென்றுவிட்டான் -என்று

அன்னை கூறி நான் தெரிந்துக்கொண்ட போது
அதை அறிந்து புரிந்துக் கொள்ள ஏனோ
அனுமதிக்காத என் மனம்
அழகு தேவதையாக என் நினைவில் பதித்தது - உன்னை

உதிக்கும்முன்னே உதிர்ந்து போனாலும் -என்
உள்ளம் உருவம் கொடுத்து
உயிர் கொடுத்து என்னுள்ளில்
உலாவவிட்டது -உன்னை

43 comments:

Anonymous said...

உள்ளம் உருகும்
உமது வரிகளால்
உருகிப்போனேன் ஒருகனம்!

என்ன நடந்தது
எனக்கப் புரியவில்லை!
ஏதோ நடந்ததுள்ளது
என்பது புரிகிறது!
பிள்ளைக்கனியை
பிறக்கும்முன்பே
பிடுங்கிக்கொண்டானா?!
காணல் நீராய் போய்விட்ட
கனவை நினைத்தது போதும்
காலம் இருக்கு
கடவுள் இருக்கிறான்
கட்டாயம் கனியும் காலம்!
இருவரும் இன்னும்
இளமையாக இருக்கும் பட்சத்தில்!

said...

\" பிரியமுடன் பிரேம் said...
உள்ளம் உருகும்
உமது வரிகளால்
உருகிப்போனேன் ஒருகனம்!

என்ன நடந்தது
எனக்கப் புரியவில்லை!
ஏதோ நடந்ததுள்ளது
என்பது புரிகிறது!
பிள்ளைக்கனியை
பிறக்கும்முன்பே
பிடுங்கிக்கொண்டானா?!
காணல் நீராய் போய்விட்ட
கனவை நினைத்தது போதும்
காலம் இருக்கு
கடவுள் இருக்கிறான்
கட்டாயம் கனியும் காலம்!
இருவரும் இன்னும்
இளமையாக இருக்கும் பட்சத்தில்!\"

பிரேம் என் கவிதை ஒரு கற்பனையே, நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டு விட்டீர்களோ என நினைக்கிறன்.

said...

:(

ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
கற்பனைதான் என்றாலும்!

said...

\" நாமக்கல் சிபி @15516963 said...
:(

ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
கற்பனைதான் என்றாலும்! \"

என் கற்பனையை கவிதையாக வடிக்கவே மனதிற்க்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது சிபி.

said...

கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் பொருள் மட்டும்தான் விளங்கவில்லை.

said...

"உதிக்கும்முன்னே உதிர்ந்து போனாலும்..."

இழப்பை உணர்த்தும் வரிகள்
கற்பனை கவிதை என்றாலும் ஒரு வலியை உணர முடிகிறது.

Anonymous said...

katpanaiyaagawe irukka vendum :(

Anonymous said...

Really very touching ;)

said...

//கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் பொருள் மட்டும்தான் விளங்கவில்லை.//
இதுக்கு பேரு தானுங்கண்ணா புதுக்கவிதை :))

said...

அழுகாச்சி அழுகாச்சியா வருது...

Anonymous said...

ஷியாம்,
கண்ணைத் துடைச்சிக்குங்க!

நீங்க அழறதைப் பார்த்து எனக்கும் அழுகாச்சியா வருது!

said...

@ஆவி அம்மணி,
ஆவி அக்கா திடீர் திடீர்னு வரீங்க..திடீர்னு காணாம போய்டறீங்க...அது சரி ஆவினா அப்படி தான இருக்கனும்...

said...

mm. so sad :( anna கனி sweet dhaan

said...

\" Hariharan said...
கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் பொருள் மட்டும்தான் விளங்கவில்லை.\"

ஹரிஹரன், என் கவிதையின் பொருள் விளங்காமலே கவிதை நன்றாக இருக்கிறது என பாராட்டியுள்ளீர்கள், நன்றி.

இனிமேல் , செய்யுள் விளக்கம் மாதிரி என் கவிதைக்கும் பொருள் விளக்கம் தனியாக போட்டு விடுறேன்.

said...

\"Gopinath said...
"உதிக்கும்முன்னே உதிர்ந்து போனாலும்..."

இழப்பை உணர்த்தும் வரிகள்
கற்பனை கவிதை என்றாலும் ஒரு வலியை உணர முடிகிறது. \"

கோபிநாத், என் கவிதை வரிகளின் உணர்வை உணர்ந்து பாராட்டியதிற்க்கு மிக்க நன்றி

said...

\" தூயா said...
katpanaiyaagawe irukka vendum :( \"

தூயா, 100% கற்பனைதாங்க, வருகைக்கு நன்றி.

said...

\"
C.M.HANIFF said...
Really very touching ;)\"

நன்றி ஹனிஃப்.

said...

\"
சந்தோஷ் said...
//கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் பொருள் மட்டும்தான் விளங்கவில்லை.//
இதுக்கு பேரு தானுங்கண்ணா புதுக்கவிதை :)) \"

என் கற்பனை கவிதைக்கு 'புதுக்கவிதை' என்று பொருளுரைத்த உங்களுக்கு நன்றி

said...

\"
Syam said...
அழுகாச்சி அழுகாச்சியா வருது... \"

அழப்பிடாது நாட்டாம, இது கற்பனை கவிதை தான்,
[ கற்பனையாகவே மட்டும் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை]

said...

\" ஆவி அம்மணி said...
ஷியாம்,
கண்ணைத் துடைச்சிக்குங்க!

நீங்க அழறதைப் பார்த்து எனக்கும் அழுகாச்சியா வருது\"


ஆவி அம்மனி முதல் முறையா வந்திருக்கிறிங்க , வருகைக்கு நன்றி அம்மனி.
[ ஆவி அழுமா????]

said...

கொஞ்சும் எண்ணத்தோடு வந்தவனுக்குத்
தஞ்சம் சோகம் எனக் கொடுத்து விட்டீர்களே!! :-(

said...

\" Adiya said...
mm. so sad :( anna கனி sweet dhaan

\"

பின்னூட்டதிற்க்கு நன்றி அதியா!

said...

\"
G.Ragavan said...
கொஞ்சும் எண்ணத்தோடு வந்தவனுக்குத்
தஞ்சம் சோகம் எனக் கொடுத்து விட்டீர்களே!! :-( \"

ராகவன், அழகான் வரிகளால் பின்னூட்டத்தை அழங்கரிதமைக்கு நன்றி

said...

//ஆவி அழுமா????] //

இட்லியே வேக வைக்கும் அழுமானு கேக்கறீங்க :-)

said...

\"Syam said...
//ஆவி அழுமா????] //

இட்லியே வேக வைக்கும் அழுமானு கேக்கறீங்க :-)
\"

அட அட......நாட்டாமைனா நாட்டம தான்!!

Anonymous said...

திவ்யா,
மிக நன்றாக உள்ளது கவிதை.

Anonymous said...

//உதிக்கும்முன்னே உதிர்ந்து போனாலும் -என்
உள்ளம் உருவம் கொடுத்து
உயிர் கொடுத்து என்னுள்ளில்
உலாவவிட்டது -உன்னை/

ennanga..kavidhai eludha munnalaidea ellam ketutu irundeenga..ippa ennadana oru pro madhir pichu udharareenga...

karuvil kalaindha kulandhi eppovum kodumai thaan... mmmm enna panrathu :(

romba senti akiteenga!

said...

\"அகில் பூங்குன்றன் said...
திவ்யா,
மிக நன்றாக உள்ளது கவிதை.
\"

மிக்க நன்றி அகில்.

said...

\"//உதிக்கும்முன்னே உதிர்ந்து போனாலும் -என்
உள்ளம் உருவம் கொடுத்து
உயிர் கொடுத்து என்னுள்ளில்
உலாவவிட்டது -உன்னை/

ennanga..kavidhai eludha munnalaidea ellam ketutu irundeenga..ippa ennadana oru pro madhir pichu udharareenga...

karuvil kalaindha kulandhi eppovum kodumai thaan... mmmm enna panrathu :(

romba senti akiteenga! \"

பின்னூட்டத்திற்க்கு நன்றி Dreamz,

senti+humuor+love+affection.....etc etc ellam kalanthathu thaney vazhkai

said...

எவருக்கும் நிஜமாகக் கூடாது.
அருமையான கவிதை.

said...

அருமையான கவிதை, பாராட்டுகள் திவ்யா.

said...

\"Arunkumar said...
எவருக்கும் நிஜமாகக் கூடாது.
அருமையான கவிதை\"

என் கற்பனை எவருக்கும் நிஜமாகக் கூடாது என்பதே எனது பிரார்த்தனையும்.

said...

\"ஜீவாத்மா said...
அருமையான கவிதை, பாராட்டுகள் திவ்யா. \"

உங்கள் பாரட்டுகளுக்கு நன்றி ஜீவாத்மா.

Anonymous said...

pattaasu kelapureenga Divya.

Kavithai ezhutha theriyaathu enRuraithu, muthal kavithaiyileye pala uLLangalai uRaiya vaitha Divya avarhal, inRu muthal "Kavithayini Kannamma" enRazaikkappaduvaar.

said...

\"Zia said...
pattaasu kelapureenga Divya.

Kavithai ezhutha theriyaathu enRuraithu, muthal kavithaiyileye pala uLLangalai uRaiya vaitha Divya avarhal, inRu muthal "Kavithayini Kannamma" enRazaikkappaduvaar.\"

zia, 'கவிதையின் கண்ணம்மா' ன்னு பட்டம் எல்லம் கொடுத்து என்னை உச்சி குளிர வைச்சுட்டீங்க,
நன்றி

said...

திவ்வியா,
கவிதையின் கரு உண்மையோ கற்பனையோ நானறியேன். இருப்பினும் மனதைத் தொட்ட கவிதை. வாழ்த்துக்கள்.

நன்றி.

said...

\"வெற்றி said...
திவ்வியா,
கவிதையின் கரு உண்மையோ கற்பனையோ நானறியேன். இருப்பினும் மனதைத் தொட்ட கவிதை. வாழ்த்துக்கள்\"


வெற்றி, கவிதையின் கரு கற்பனையே. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

தவறாக
புரிந்துகொள்ளவில்லை!
உங்கள் கவிதைக்கு
உயிர் கொடுத்திருக்கிறேன்
உணரமுடிகிறதா?
காணல் நீரைக்
காட்டுவதைவிட
அதில்
குளிப்பதுபோல
நடிப்பது இன்னும்
நன்றாக இருக்குமில்லையா?
நன்றி!

said...

\" பிரியமுடன் பிரேம் said...
தவறாக
புரிந்துகொள்ளவில்லை!
உங்கள் கவிதைக்கு
உயிர் கொடுத்திருக்கிறேன்
உணரமுடிகிறதா?
காணல் நீரைக்
காட்டுவதைவிட
அதில்
குளிப்பதுபோல
நடிப்பது இன்னும்
நன்றாக இருக்குமில்லையா?
நன்றி!\"

உங்கள் விளக்கத்தை இப்போது உணரமுடிகிறது பிரேம், நன்றி.

said...

hmmm...touching touching

said...

\\
Blogger mudaliar said...

very nice\\



Thanks Mudaliar!!

said...

\Blogger kavidhai Piriyan said...

hmmm...touching touching\\


Thanks Pravin!!

said...

touchy post:(