April 25, 2008

எனக்கென ஏற்கெனவே...பிறந்தவள் இவளோ??? - பகுதி 3



பகுதி -1

பகுதி - 2

மீரா எங்கே .....என தவிப்புடன் தேடினேன்!

கட்டிலுக்கு அருகில் மயங்கி விழுந்திருந்ததை கவனித்து பதற்றமானேன்!

மீண்டும் பத்து நாள் ஆஸ்பத்திரி வாசம்....இந்த முறை டாக்டர் ஸ்ட்ரிக்ட்டாக மீரா complete rest எடுக்கவேண்டுமென சொல்லிவிட்டார்.

மீராவிற்கு சிறிது உடல்நிலை சரி ஆனதும், ரகு கொடுத்த ஆலோசனையைப் பற்றி நானே அவளிடம் சென்று பேசினேன். என் கண்களை சந்திக்கும் துணிவில்லாமல் தலை கவிழ்ந்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தாள் மீரா.

அவளது காதலனின் விபரங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். ஃபோன் நம்பர், மற்றும் அவனது அப்பா கோயம்பத்தூரில் ஒரு பிரபல Textile Showroom யின் அதிபர் என்ற விபரம் தவிர, மற்ற விபரங்கள் எதுவும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.
கோயம்பத்தூர் சென்று அவனை தேடி விபரம் அறிந்து வருவதாக மீராவிடம் கூறினேன்.
நன்றியுடன் கண்கலங்கினாள் மீரா!!

அலுவலக விஷயமாக பெங்களூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கோவைக்குச் சென்றேன். என் கல்லூரி கால நண்பனின் உதவியுடன் மீராவின் காதலன் ஸ்ரீதரை தேடிவிடலாம் என திட்டம்.


இவள் கூறிய விபரங்கள உண்மையாகயிருக்குமாயின், பணக்கார பையன்.................பந்தாவுக்காக MBA படித்துவிட்டு,
பொழுது போக்கிற்காக பெண்களிடம் பழகுபவனாக இருக்க வாய்ப்பிருக்கிறது!!
Anyway, அவன் யார் என விசாரிக்கலாம் என்று நானும் என் கோயமுத்தூர் நண்பனும் முயன்றோம்.
ஸ்ரீதருடன் சென்னையில் பழக்கம் , அவனது நண்பர்கள் நாங்கள் என கூறியதால் அவனை பற்றி தகவல் சேகரிக்க எளிதாக இருந்தது.

கிடைத்த தகவல் மிகுந்த அதிர்ச்சியானது!!!

3 மாதங்களுக்கு முன் ஊட்டியிலிருந்து கோவை திரும்பும் வழியில் கார் விபத்தில் தலையில் பலத்த அடிகளுடன் இன்றுவரை சுயநினைவில்லாமல் கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அறிந்து அங்குச் சென்றோம்.

கண்ணீர் வடிந்த கண்களுடன் ஸ்ரீதரின் தாயார், அருகில் அவருக்கு ஆறுதல் கூறியபடி ஒரு பெண்.
வசதி படைத்த குடும்பம் என்பதால், டாக்டர்கள் நம்பிக்கை தரும் பதில் ஏதும் கொடுக்காத போதிலும், சுயநினைவு திரும்பும், உயிர் பிழைத்துவிடுவான் தன் ஒரே மகன் என்று நம்பிக்கையுடன் முழுக்குடும்பமும் காத்திருப்பது தெரிந்தது!!

ஒரே வாரிசான
உங்கள் மகன்
தன் வாரிசை அங்கு
விதைத்துவிட்டு இங்கு
சலனமின்றி துயில்கிறான்!!
- ஸ்ரீதரின் தாயிடம் இதை கூறுவது எப்படி??


நீ
தாயானதை உணராமல்,
திருமதி ஆனதையும் அறியாமல்
தன் நினைவின்றி
எமனோடு நித்தம் போராடுகிறான்
உன் காதலன்!!
-மீராவிடம் கூறுவதெப்படி???

குழப்பமான மனதுடன், கணத்த இதயத்துடன் வீட்டிற்கு திரும்பினேன்.

என் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் மீரா, ஸ்ரீதரை பற்றின விபரம் தானாக என்னிடம் கேட்க துணிவில்லாமல், நானாக கூறவேண்டும் என என்னையே நோக்கினாள் மீரா.
தவிக்கும் அவள் கண்களின் தவிப்பு என்னை ஏதோ செய்தது, மனதை பிசைந்தது!!

மீராவிடம் கரகரத்த குரலில் அனைத்தையும் மெதுவாக கூறிமுடித்தேன்.

எனக்கும் மீராவிற்கும் திருமணமாகி 2 வாரமும் மீராவை கண்ணீருடன் தான் பார்த்திருக்கிறேன், ஆனால் அவள் இப்போது கதறிய கதறல் என் இதயத்தை உடைத்தது!!

மீண்டும் அவளது உடல் நிலை பாதிக்க படுமோ என்ற கவலை வேறு, அவளை எப்படி தேற்றுவது என்ற வழியும் அறியாமல் திணறினேன்.


தன் கண்ணீருக்கு நடுவினில் மீரா என்னிடம், விவாகரத்திற்கு தான் சம்மதிப்பதாகவும், ஸ்ரீதரின் குடும்ப வாரிசை பெற்றுக்கொடுக்கும் வரை தான் தங்கிக் கொள்ள ஒரு இடத்தையும், வேலையையும் பார்த்து தருமாறு கெஞ்சினாள்.

என் நண்பன் ரகுதான் இப்போதும் ஆலோசனை தந்தான்.அவனது யோசனைப்படி....

என் வேலையை புனேவிற்கு மாற்றிக்கொண்டு, புனேவிற்கு மீராவுடன் தனிக்குடித்தனம் சென்றேன்.

டைவர்ஸ் ஆகும் வரை என்னுடன் இருக்கலாம், குழந்தையையும் நல்ல முறையில் பெற்று ஸ்ரீதரின் குடும்பத்துக்கு கொடுத்து விடலாம் என்ற முடிவுடன் மீராவும் என்னுடன் புனேவிற்கு வந்தாள்.

புனேவில் நானும் மீராவும் ஒரே வீட்டில் வசிக்கும் நண்பர்கள் என்ற அளவில் கூட இல்லாமல், தனித்தே இருந்தோம்.

அதிர்ச்சி, கவலை, குழப்பம் என மீரா எப்போதும் எதையோ பறி கொடுத்தது போலவே இருந்தாள்.

பக்கத்து அப்பார்ட்மென்ட் சுமதியுடன் நட்பு ஏற்பட்டது மீராவிற்கு.
சுமதி கலகலப்பாக பேசிப்பழகும் தமிழ் பெண்.
கணவன் ஆஃபீஸிற்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றபின மீராவுடன் அரட்டை அடிக்க வருவாள் சுமதி.

சுமதியின் நட்பு மீராவை சகஜ நிலைக்கு சீக்கிரமாகவே வரவைத்தது.
புது இடம், புது நட்பு, மீராவின் தாய்மை தந்த பொலிவு....மீராவிடம் ஒரு புத்துணர்ச்சியை அளித்தது.

புனேவிற்கு வரும்முன் என் அம்மாவிடம் எனக்கு என்ன என்ன பிடிக்கும் என கேட்டு தெரிந்துக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது.....என் டேஸ்டிற்கு ஏற்றபடி நன்றாக சமைத்தாள்,

இந்த கவனிப்பும், உபசரனையும்.....
அவளுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும்
நான் பாதுகாப்பாக இருப்பதாலா???
ஒரு வருடத்தில் முறியப்போகும் உறவிற்கு
இப்போதே சேர்த்து வைத்து நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறாளா????

ஏதோ ஒன்று....மீரா சந்தோஷமாக இருந்தாள்!!


எங்களுக்குள்ளான உரையாடல்கள்....

"காஃபி ...."

"டின்னர் டேபிள்ல இருக்கு..."

"பாத்ரூம்ல water heater work பண்ணல..."

"gorcery & vegetables வாங்கனும்..."

இவ்வளவுதான்!!!

ஆனால் மீராவின் அன்றாட வாழ்க்கை முறை எனக்கு மனதில் பதிய ஆரம்பித்தது.

காலையில் எழுந்ததும் பக்தி பாடல்களை முனங்கியபடி ஃபில்டர் காஃபி போடுவது........சினிமா பாடல்கள் முனுமுனுத்தபடி காலை டிபன் செய்வது.......நான் ஹாலில் இல்லை எனத்தெரிந்தால் சற்று சத்தமாகவே பாட்டு பாடுவது.......பால்கனியில் இருக்கும் ரோஜா செடியுடன் பேசுவது........ஜன்னல் கம்பிகள் வழியே கரம் நீட்டி மழைதுளிகளை தன் முகத்தில் தெரித்து சிலிர்த்துக்கொள்வது.......இப்படி அவளது நடவடிக்கைகள் எனக்குள் சேமிக்க ஆரம்பித்தன!!

அவள் இப்போது 6 மாதம் கர்ப்பம், எனினும் அவ்வளவாக அவளது வயிறு அதனை வெளிக்காட்டவில்லை.

இந்த நேரத்தில், கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளை பார்த்தே ஆகவேண்டும் என என் அப்பாவும் அம்மாவும் புனேவிற்கு வந்தனர்.
இன்முகத்துடன் அவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்தாள் மீரா.

இங்கு வந்த இடத்தில் என் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, மீரா முழு அக்கரையுடன் கவனித்துக்கொண்டாள்.

என் பெற்றோர் மட்டுமில்லாமல் நானும் பெரிதும் நெகிழ்ந்து போனேன்......மீராவின் அன்பான கவனிப்பால்!!

உடலநிலை சரியானதும் என் பெற்றோர் சென்னைக்கு புறப்பட்டார்கள். போகும் முன் அம்மா என்னிடம் தனியாக........

"டேய் விஷ்வா! உனக்கும் மீராவுக்கு என்னடா பிரச்சனை?? அவகிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டன்ர, பாவம்டா மீரா! புள்ளத்தாச்சி பொண்ணு, நல்லா பார்த்துக்கோடா, அவ தெரியாம என்ன தப்பு பண்ணிருந்தாலும் பக்குவமா எடுத்துச் சொல்லு, இப்படி பட்டும் படாமலும் இருந்தா என்னடா அர்த்தம்??? இந்த நேரத்துல அவ மனசு சந்தோஷமா இருக்கனும்டா விஷ்வா....பத்திரமா பார்த்துக்கோ மீராவை"

உண்மையை அறியாமல் அம்மா பேசினாலும்......அதில் இருந்த அர்த்தம் மனதில் பதிந்தது!!

அம்மா , அப்பா ஊருக்கு சென்றபின, எனக்கும் மீராவுக்கும் நடுவில் பேச்சுவார்த்தைகள் சற்றே அதிகமானது, பொதுவான .....சினிமா, அரசியல், சீதோஷன நிலை பற்றியாவது பேசிக்கொண்டோம்.
மாதங்களும் உருண்டோடின....


ஒரு நாள் சாயங்காலம் நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததும், அவள் எனக்கு காஃபி கொடுக்கும் போது, தவறுதலாக என் கையில் வடிந்துவிட,
"அச்சோ" என்று பதறியபடி என் கைகளை அவள் பிடித்து காஃபியை துடைத்துவிட,

"சீ.....கை எடு" என டக்கென்று கத்திவிட்டேன்.

என் முகத்தின் கடுகடுப்பும், வார்த்தையில் தெரிந்த வெறுப்பும் அவளை வேதனைபடுத்தியிருக்க கூடும், அழுதபடி தன் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டவள் இரவு முழுவதும் வெளியில் வரவேயில்லை.

நானும் கண்டுக்கொள்ளாமல் டேபிளில் இருந்த டின்னரை சாப்பிட்டுவிட்டு உறங்கிப்போனேன்.

காலையில் எப்போதும் கேட்கும் அவள் பாடல் சத்தம் சமயலறையில் இல்லை, அவள் அறையின் கதவு பூட்டியே இருந்தது......இன்னும் அழுது கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது என நினைத்து டிஸ்டர்ப் செய்யாமல் அலுவலகம் சென்று விட்டேன்.

அன்று வேலை நேரத்தில் மீட்டிங் இருந்ததால் அதில் மூழ்கி போனேன்.

வழக்கத்தைவிட அன்று சற்று தாமதமாக வீட்டிற்கு வந்தேன், அப்போதுதான் மீரா அழுது கொண்டிருந்தது ஞாபகம் வந்தது, 'ஸாரி' கேட்க வேண்டும் மீராவிடம் என்ற முடிவுடன் வீட்டிற்குள் என்னிடம் இருந்த சாவியை வைத்து திறந்து உள் நுழைந்தேன்.

Light போடாமல்.....வீடு கும் இருட்டாக இருந்தது.

மீரா எங்கே?? என தேடினேன்......அவள் அறையில் அவள் இல்லை.....வழக்கம் போல் என்கேயும் மயங்கி விழுந்து கிடக்கிறாளோ என எல்லா இடமும் தேடினேன், எங்கும் மீரா இல்லை....ஒரு வித பயம் எடுத்தது மனதில்.

பக்கத்துவீட்டு சுமதியிடம் கேட்கலாம் என அவர்கள் வீட்டிற்கு சென்றேன், அவர்கள் வீட்டு கதவு மூடப்பட்டு பூட்டு தொங்கியது.

அப்போதுதான், மீட்டிங்கிலிருந்ததால் ஃபோனை silent mode ல் வைத்திருந்தது நினைவிற்கு வர, என் மொபைல் எடுத்துப் பார்த்தேன், 5 missed call....... எல்லாமே மீராவின் மொபைலில் இருந்து......

மீராவின் நம்பருக்கு டயல் செய்தேன்.......சுமதிதான் ஃபோன் எடுத்தாள், மீராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும், உடனே வரும்படியாகவும் கூறினாள்.

சே, மொபைல் சைல்ட்ன் மோட் ல வைச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு நொந்த படி, ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டேன்.

இவ்வளவு பதற்றதுடன் நான் என் காரை இதுவரை ஓட்டினதில்லை.

ஏன் இந்த பரபரப்பு.......ஏன் எனக்கு இப்படி டென்ஷன் ஆகிறது....விடையளிக்க முடியாத கேள்விகளுடன் ஆஸ்பத்திரியை அடைந்தேன்.

பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் சிசேரியன் செய்ய வேண்டும் என் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்.
தவிப்புடன் ஆபரேஷன் தியேட்டர் வெளியில் காத்திருந்தேன். நல்லபடியாக ஆண்குழந்தை பிறந்தது மீராவிற்கு.

மீராவும் குழந்தையும் தனி அறைக்கு கொண்டுவரப்பட்டதும், என்னிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றார் நர்ஸ்.

பிறந்து சில மணிதுளிகளே ஆன குழந்தை என் கையில், ஸ்பரிசத்தில் மனது குளிர்ந்தது.


கையில் குழந்தையை ஏந்தியபடி, பாதி மயங்கிய நிலையிலிருந்த மீராவை நோக்கினேன்.....

கண்களில் நீர் ததும்ப என்னை நன்றியோடு பார்த்து பேச முயன்றாள்....தன் இரு கரங்களையும் கூப்பி

"ந.....ன்....றி....."

என்று கூறி முடிப்பதற்குள் மூச்சு திணற ஆரம்பித்தது மீராவிற்கு,

'டா.....க்...டர்.........ந...ர்....ஸ்......டா...க்...டர்......."

என அலறினேன் உதவிக்காக,

மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????

[தொடரும்..]

பகுதி - 4

April 15, 2008

எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ??? - பகுதி 2



பகுதி-1

நான் சற்றும் எதிர்பார்கவே இல்லை....மீரா என் காலடியில் மயங்கி....சுருண்டு விழுந்து , மூர்ச்சையற்று போனாள்.

"மீ....ரா.........மீரா......."

அவளை எழுப்ப முயன்று தோற்றேன்!!

ரூமிற்கு வெளியில் ஓடி சென்று என் அம்மா , அக்காவை மட்டும் அழைத்து வந்தேன், மூர்ச்சையான மீரா கண்விழிக்காததால், அருகில் இருந்த நர்ஸிங் ஹோமிற்கு என் காரில் அழைத்துச் சென்றோம், நான் டென்ஷனுடன் பட்டு வேஷ்டியில் பரபரத்ததால் என் அக்காவின் கணவர் கார் ஓட்டினார்.

ஆஸ்பத்திரியில் அவளை பரிசோதித்த டாக்டர் என்னை மட்டும் உள்ளே அழைத்தார்.

"மீரா உங்க வொஃப் ஆ"

"யெஸ் டாக்டர்"

"புதுசா கல்யாணம் ஆனவங்களா நீங்க?"

"யெஸ் டாக்டர், வி காட் மேரிட் டூ டேய்ஸ் பேக்"

"உங்க பட்டு வேஷ்டி&மீராவின் மணப்பெண் கெட் அப் பார்த்துதான் , புதுசா கல்யாணம் ஆனவங்களான்னு கேட்டேன்,.....Mr.Vishwanath, is your marriage a love marriage or an arranged one"

"வீட்டுல பார்த்து முடிச்சதுதான் டாக்டர்"

"ஹும்"

"ஏன் டாக்டர்"

"திருமணத்திற்கு முன்னமே உங்களுக்குள்ள நெருக்கமான பழக்கம் உண்டா?"

"நீங்க........என்ன சொல்ல வரீங்கன்னு புரியல டாக்டர்"

"I mean , were you both so intimate before marriage?"

"no Doctor"

"ஹும்"

"என்ன...........என்ன ஆச்சு டாக்டர் மீராவுக்கு"

"Mr Vishwanath, your wife Meera is pregnant!"

"டா.....க்.........ட........ர்"

தலையில் இடி இறங்கினா இப்படிதான் இருக்குமா??

என்னை சுற்றி இருந்த அனைத்தும் வேகமாக சுற்றுவதுபோல் ஓர் உணர்வு!!

என் முக இறுக்கத்தை கவனித்த டாக்டர் மேலும் பேசினார்.

"I can see that you are very much schocked, at present Meera needs complete rest for 2 more days, ரொம்ப வீக்கா இருக்காங்க.... ஸோ.....இந்த விஷயத்தை உங்களுக்குள்ள வைச்சுக்குங்க, அப்புறமா ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட சொல்லி மேற்கொண்டு ப்ரோசீட் பண்ணுங்க.....take this as a friendly advise Mr.Vishwanath"


டாக்டர் சொன்னது பாதி புரிந்தது, மீதி ஒன்றும் புரியாத மாதிரி ஒரு வெறுமை!!

மெதுவாக டாக்டரின் அறையைவிட்டு வெளியில் வந்தேன். என் முகத்தினை ஆவலுடன் பார்க்கும் என் குடும்பம்....முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உள்வாங்கிக் கொள்ள செய்தது!!

"என்னடா சொன்னாங்க டாக்டர், மீராவுக்கு ஒன்னுமில்லையே???" - என் அக்கா.

"என் மருமகளுக்கு ஒன்னும் இருக்காது, எல்லாம் ஊரு கண்ணுதான், பொறாமை புடிச்ச ஜனம்....கல்யாணதுக்கு வந்த ஒவ்வொருத்தியும் என் மருமகளோட அழகை பார்த்து பார்த்து மூக்கு மேல கை வைச்சாளுங்க, முதல்ல மீராவுக்கு சுத்தி போடனும்" - என் அம்மா.

தொடர்ந்து என் அம்மா மீராவுக்கு உடம்பு சரியானதும் நிறைவேற்றும் வேண்டுதல் எல்லாம் சாமிக்கு பொருத்தனை பண்ண ஆரம்பித்தார்.

"சென்னைக்கு ஊருக்கும் அலைச்சல்......பொண்ணு டயர்டா ஆகிட்டா போலிருக்கு, you dont worry மாப்பிள்ளை" என் அக்காவின் கணவர் ஆறுதலாக என் தோள் பிடித்தார்.

களைப்பினால் ஏற்பட்ட மயக்கமெனவே குடும்பம் நம்பியது.

திருமணத்திற்கு பின் 1 வாரம் ஆஃபீசிற்கு லீவ் போட்டிருந்தேன், லீவ் கேன்ஸல் செய்துவிட்டு மறுநாளே ஆஃபீஸிற்கு சென்றேன்.

என் மனநிலை தெரியாமல் , புது மாப்பிள்ளை என்ற எண்ணத்தில் சக நண்பர்கள் செய்யும் கிண்டல், உசுப்பேத்தும் பேச்சுக்கள்.....எல்லாம் இன்னும் என்னை ரணப்படுத்தியது.

உடல் சரியில்லாத மீராவிற்கு வீட்டில் ராஜ உபசரனை நடந்துக்கொண்டிருந்தது.
என் அம்மாவின் ரூமிலேயே கீழே மீரா இருந்தாள்.
என் குடும்பமே அவளை இப்படி ராஜாத்தி மாதிரி கவனித்துகொள்வது என் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி, உணமையை உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது.

இரண்டு நாள் கழித்து என் அறைக்கு மீரா வந்தாள்.
அவள் முகத்தைகூட பார்க்க விருப்பமில்லாமல் வேறு பக்கம் பார்த்தேன்.

விசும்பலுடன் பேச ஆரம்பித்தாள்..

"என்னை மன்னிச்சிடுங்க....நானும் என் கூட MBA படிச்ச ஸ்ரீதரும் நல்ல ஃப்ரண்ட்ஸ், காலேஜ் விட்டு பிரியறப்போதான் எங்க நட்பு காதல்னு உணர்ந்தோம், எங்க காதல் மத்த ஃப்ரண்ட்ஸ்க்கு கூட தெரியாது. எங்க....ஃபேர்வல் டே செலிப்ரேஷன் அப்போ....எமோஷனல் departure, ....எங்க நெருக்கத்தை அதிகப்படுத்தியது........அவரோட வீடல் பேசி கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு கோயம்புத்தூர் போனாரு, போன பிறகு ஃபோன்ல பேசினார்...1 வாரம் கழித்து அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை, நான் கர்ப்பமா இருக்கிற விஷயத்தை அவருகிட்ட சொல்ல ஃபோன் பண்ணினா, not reachable ன்னு வருது,எனக்கும் அவருக்கும் பொதுவான ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி அவரைபத்தி விசாரிச்சப்போ அவரை பத்தி எந்த தகவலும் கிடைக்கல, ஒருத்தர் மட்டும் கோயம்பத்தூருக்கு போயாவது விசாரிச்சுப்பார்த்து சொல்றேன்னு சொன்னார், அந்த நேரத்துல தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எங்க வீட்ல வற்புறித்தினாங்க, அவரை பத்தின தகவல் தெரிஞ்சதும் வீட்ல சொல்லிடலாம்னு இருந்தேன், நீங்க பெண்பார்க்க வந்த அன்னிக்கே கல்யாணம் நிச்சயம் ஆகும்னு நான் எதிர்பார்க்கல, கிராமதுக்கு போய்ட்டதால எனக்கு தகவல் சொல்றேன்னு சொன்ன ஃப்ரண்டையும் சந்திக்க முடியல, உங்ககிட்டவும் நேர்ல விவரம் சொல்ல முடியல, என்னை அளிச்சிக்க இருமுறை முயற்சி பண்ணியும் சாவும் என்னை விரும்பல.....மன்னிச்சிடுங்கன்னு கூட கேட்க திராணி இல்லாம நிற்கிறேன்.."

அழுகையுடன் அவள் வார்த்தைகள் தெரித்து விழுந்தன.

அவள் நிலமை எனக்குப்புரிந்தாலும், அந்த மிரண்ட விழிகளில் என்ன செய்வது என்று அறியா குழப்பத்தை நான் உணர்ந்தாலும், எனக்குள் ஏற்பட்டிருக்கும் ஏமாற்றம், அதிர்ச்சி, அருவருப்பு....

எரிமலையாக எனக்குள் வெடித்து , நெருப்பு கணல்களாக வார்த்தை வெளிவந்தன....

"நீ எல்லாம் படிச்ச பொண்ணுதானே...யாரு, எவன்னு கூட தெரியாம இப்படி லவ்ன்ற பேருல பழகுவியா, என்ன பெருசா MBA படிச்சு கிழிச்ச, .....ஃபோன் நம்பர் தவிர எந்த டிடேய்ல்ஸ் தெரியாம , எந்த நம்பிக்கையில இப்படி அத்து மீறுறீங்க, பண்றதெல்லாம் பண்ண தெரியுது இல்ல.....அப்புறம் இப்படி அழுதா என்ன அர்த்தம். தான் கெட்டுப்போறதுமில்லாம இப்படி தாலி கட்டிகிட்டு எங்களையும் சேர்த்து கழுத்தருங்க......நேர்ல தான் மீட் பண்ண முடியல, என்கிட்ட ஃபோன்ல சொல்லியிருக்கலாம் இல்ல, இப்ப சப்பக்கட்டு கட்டி பேசிட்டா எல்லாம் சரி ஆகிடுமா????.......என் தலையில இடி இரக்கிட்டு இப்போ மடி பிச்சை கேட்குறியா"


என் வார்த்தைகளின் அணலின் அவமானத்துடன் தலை கவிழ்ந்து அழுதாள் மீரா.

அழுது சிவந்த அந்த முகத்தில் ஏதோ ஒரு மினுமினுப்பு இன்னும் ஜொலித்தது...
கல்யாணக் களை கொடுத்த மெருகு என நான் இரண்டு நாட்களுக்கு முன் நம்பியது...
தாய்மை அவளுக்கு கொடுத்த தேஜஸ் என இப்போது புரிந்தது!!

என் கோபமும் குழம்பிய மனமும் அமரட்டும் என அவள் துடித்து அழுதுகொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், வேகமாக அறையின் கதவை ' படார்' என சாத்திவிட்டு வெளியேறினேன்!!

எங்கு செல்கிறேன் என்ற உணர்வே இல்லாமல், பைக்கில் பறந்துக்கொண்டிருந்தேன், ரகுவின் அறைக்கு செல்லலாமா....அவனிடம் உண்மையை கூறி, மனசு விட்டு பேசினால் , கொஞ்சம் தெம்பாக இருக்கும், ஏதும் உருப்படியான ஐடியா கொடுப்பான் என அவனுக்கு ஃபோன் செய்திவிட்டு அவன் அறைக்குச் சென்றேன். நல்ல வேளை அவன் அறையில் அவன் தனியாக இருந்தான். நடந்த எல்லா விஷயங்களையும் விரிவாக கூறினேன்.
சிறிது மெளனத்திற்கு பின் என்னிடம் தன் யோசனைகளை கூறினான் ரகு. எனக்கும் அவன் கூறியது சரியெனப்படவே என் வீட்டிற்கு திரும்பினேன்.

மீரா என் ரூமிலிருந்து கீழே வரவேயில்லை என நான் வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மா சொன்னார்கள்.

இன்னும் அழுதுக்கிட்டு இருக்கிறாப்போலிருக்கு மீரா...என நினைத்துக்கொண்டேன்.

என் அறையின் கதவை திறந்தேன், லைட் போடாமல் இருட்டாக இருந்தது ரூம்....

லைட் switch On பண்ணினேன், .....மீரா எங்கும் தென்படவில்லை...
எங்கே போயிருப்பா மீரா...

பாத்ரூம் கதவு கூட திறந்துதான் இருக்கிறது...அங்கயும் இல்ல......அப்போ மீரா......

மீரா......எங்கே??????


[தொடரும்]

பகுதி -3

பகுதி - 4

April 10, 2008

எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ!!! - பகுதி 1

வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு போட்டிவிட்டு, சனி ஞாயிறுடன் சேர்ந்தார்போல் 3 நாட்கள் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள தன் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தான் ரகு.

இன்னிக்கு திங்கள் கிழமை, ஊரிலிருந்து சென்னை திரும்பியிருப்பான், office க்கு வந்ததும் நேரா என் கூபிற்கு தான் வருவான், வெள்ளிக்கிழமை நான் பெண் பார்க்க போன விஷயம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்காம அவன் தலை வெடிச்சிரும். ஃபோன்ல அவன்கிட்ட தகவல் சொல்லலாம்னு பார்த்தா, அவன் ஊருல சிக்னலே இல்லை, .........நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கையில் அவன் அம்மா எனக்கு செய்து கொடுத்தனுப்பிய முறுக்கு, அதிரசத்துடன் வேகமாக என்னை நோக்கி வந்தான் ரகு.

"டேய் மாப்பி, என்னடா ஆச்சு"

"எது.....என்னாச்சு"

"அதான்டா , பொண்ணு பார்க்க போனியே வெள்ளிக்கிழமை , அதான்டா"

"அட....அம்மா முறுக்கு கொடுத்தனுப்பிச்சாங்களா இந்த தடவையும், கொடு டேஸ்ட் பார்க்கலாம்"

"ஏய் பேச்சு மாத்தாதேடா, மேட்டரு சொல்லுடா...பொண்ணு பிடிச்சிருச்சா"

"பார்த்தேன், பார்த்தேன்....பார்த்தேன்!
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
கட கடவென தாம்பூல தட்டு
மாத்தினேன் மாத்தினேன் மாத்தினேன்!"

"ஏய், கல்யாணமே நிச்சயம் பண்ணிட்டாங்களாடா???..........கங்க்ராட்ஸ் மாப்பி, என்னடா பொண்ணு பார்க்கதானே போனீங்க.......பார்த்துட்டு பிடிச்சிருந்தாலும் , வீட்ல போய் கலந்து பேசிட்டு 2 நாள்ல தகவல் சொல்றோம்னு கொஞ்சம் கெத்து மெயிண்டேன் பண்ணிருக்கலாம்ல"

"அட நீ வேற.....இப்படி 'அழகு, அறிவு,அடக்கம், அம்சம்' நிறைஞ்ச பொண்ணுங்க single & available ஆ இருக்கிறதே அபூர்வமாய் போச்சு,இதுல நாம 2 நாள் டைம் எடுத்துக்கிட்டோம்னு வை, .....அப்புறம் gap ல வேற மாப்ள வீட்டுக்காரன் முந்திக்குவாண்டா"

"அடப்பாவி, என்னடா பந்திக்கு முந்திக்கனும்ன்ற ரேஞ்சுல பேசுற, எனிவே hearty congrats விஷவா"

"Thanks ரகு"

"பொண்ணுகிட்ட பேசினியா.....நல்லா பேசினீங்களா??"


"பத்து நிமிஷம் தான்டா தனியா பேச சான்ஸ் கிடைச்சது, நான் கேட்டதுக்கெல்லாம் அமைதியா , அழகா பதில் சொன்னாடா, ரொம்ப வெட்கம் போல......தலை நிமிரவே நடுங்குரா, So cute she is !!!"

"டேய் அடங்கு....பொண்ணு பார்க்க போறப்போ இப்படிதான் சீன் போடுவாளுங்க......கல்யாணதுக்கு அப்புறம் தான் இருக்கு உனக்கு கச்சேரி, எப்போடா கொஞ்ச நேரம் பேசாம இருப்பான்னு ஆகிப்போகிற அளவுக்கு பேசிட்டே இருப்பாளுங்க"

"You cant generalise all the female to be so, there are some exceptions too"

"உடனே உன் இங்கிலீஷ் புலமையை அவித்துவிட்டா எனக்கு ஒன்னும் புரியாம மண்டையை ஆட்டுவேன்னு எடுத்துவிடாதே"

"சரி ....சரி.....இப்ப உனக்கு என்னதாண்டா பிரச்சனை?"

"பத்து நிமிஷம் பேசுனதுல எப்படிடா ஒரு பொண்ண பத்தி புரிஞ்சுக்க முடியும், atleast engagement & marriage க்கு இடைப்பட்ட days ல ஆச்சும் கொஞ்சம் பேசி புரிஞ்சுக்கலாம் இல்ல, நீ ஃபோன் பேசினியா??"

"எனக்கும் ஃபோன் பேச ரொம்ப ஆசைதாண்டா....அன்னிக்கு நிச்சயம் பண்ணினப்போவே, என் அக்காவை நச்சரிச்சு அவ நம்பரை வாங்கி தர சொன்னேன், என் நம்பரையும் கொடுக்க சொன்னேன்.....ஆனா....உடனே ஃபோன் பண்ணினா, பொண்ணு பார்க்க போன அன்னிக்கே பிடிச்சிருக்குன்னு கவுந்துட்டான், இப்போ உடனே ஃபோன் பண்ணி வழியுறான்னு அவ நினைச்சுட்டா??.....அதான் ஃபோன் பண்ணாம இருக்கிறேன்"

"அட சீ......இதுல என்னடா ஈகோ வேண்டி கிடக்கு உனக்கு, உடனே ஃபோன போடுடா"

"இன்னும் 1 மாசம்தான்டா கல்யாணத்துக்கு இருக்கு, அதுக்கப்புறம் வாழ்க்கை ஃபுல்லா அவகிட்ட பேசிட்டுதானே இருக்கபோறேன்"

"டேய் என்னடா சொல்ற....அடுத்த மாசமே கல்யாணமா???.......என்னடா இவ்வளவு அவசரம்"

"அவளோட ஒரே அக்கா அமெரிக்காவில செட்டில் ஆகிட்டாங்கடா, அவங்களுக்கு அடுத்த மாசம் மட்டும்தான் 2 வாரம் லீவு எடுக்க முடியுமாம், இதை விட்டா இன்னும் 1 வருஷம் ஆகுமாம் அவங்க இந்தியா வர்ரதுக்கு, moreover அவளோட பாட்டி வேற கொஞ்சம் உடம்புக்கு முடியாம இருக்காங்களாம், இவளோட கல்யாணத்தை பார்க்க ஆசைபடுறாங்களாம், அதான் கல்யாணத்தை சீக்கிரம் வைக்கனும்னு சொன்னாங்க....நாங்களும் ஒத்துக்கிட்டோம்"

"எனக்கென்னவோ எல்லாமே ரொம்ப ஸ்பீடா நடக்கிற மாதிரி தோனுதுடா விஷ்வா, சரி 1 மாதம் இருந்தா என்னடா....நீ ஃபோன் பண்ணு"

"நீ சொல்லி .....கேட்காம..இருப்..."

கரெக்கட்டா என் ஃபோன் ஒலித்தது.

யாருடைய நம்பர் அது என என்னால் டக்கென யூகிக்க முடியவில்லை,


"ஹலோ.."

"hello can I talk to Mr Vishwanath"

"speaking"

"நான்....நான்...மீரா"

"O....yea......hai...i"

"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"

"ஓ, அப்படியா....சொல்லு மீரா"

"நேர்ல மீட் பண்ண முடியுமா?"

"ஓ சூயுர்.....எப்போ?"

"நாளிக்கு ஈவ்னிங் 6 மணிக்கு Galaxy Ice Cream பார்லர், எக்மோர்"

"sure மீரா......then... நீ எப்படி இருக்கிற"

"ஆங்......நான்....நாளைக்கு பேசுறேன்.....பார்க்கலாம் பை"

"ஒகே பை"

ஃபோன்ல பேசவே இவ்வளவு தயங்குரா, நேர்ல எப்படி பேசுவாளோ??

மறுநாள் மாலை 6 மணி எப்போது வருமென time countdown பண்ணிக்கொண்டிருந்தேன், என்னவெல்லாம் பேசலாம் என மனதுக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

மறுநாள் அவள் சொன்ன அந்த ஐஸ்க்ரீம் பார்லருக்கு என் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது, ஒன் வேயில் தவராக வந்த ஒரு கபோதி என் பைக்கில் மோத, நானும் என் பைக்கும் ரோட்டியில் புரண்டோம், முன் முட்டியில் பேண்ட் கிழிந்து இரத்தம் கொட்டியது, செல்ஃபோன் விழுந்த இடம் தெரியவில்ல்லை, அவ்வழி வந்தவரின் உதவியுடன் பக்கத்தில் இருந்த நர்ஸிங் ஹோமில் பேண்டேஜ் போட்டுவிட்டு, வண்டியை அருகில் உள்ள வொர்க் ஷாப்பில் விட்டு விட்டு, அங்கிருந்த டெலிஃபோன் பூத்திலிருந்து அவளுக்கு ஃபோன் பண்ணினேன்.

இவ்வளவு நேரம் வெயிட் செய்ததாகவும், எனது செல் ஃபோனுக்கு ஃபோன் செய்தும் கால் ரீச் ஆகாததால், வீட்டில் தேடுவார்கள் என வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும் கூறினாள்.

எனக்கு கோபமும், ஏமாற்றமும் முந்திக்கொண்டு வந்து, என் முட்டு வலியுடன் சேர்ந்து கடும் வார்த்தைகளாக வெளிவந்தன. நறுக்கென்று பேசி ஃபோன் கட் செய்துவிட்டு ஆட்டோவில் வீடு போய் சேர்ந்தேன்.

ஏமாற்றமும் , வேகமும் தனிந்தபின் தான் என் தவறு உணர்ந்தது,
'பாவம் பொண்ணு எவ்வளவு நேரம் தான் ஐஸ்க்ரீம் பார்லரில் தனியா வெயிட் பண்ணுவா, எனக்கு என்ன நடந்ததுன்னு அவளுக்கு எப்படி தெரியும், சே......அவசரப்பட்டு ரொம்ப கோபப்பட்டுடேனோ??'

ஆனாலும் சாரி கேட்டு அவளுக்கு ஃபோன் பண்ண என் மனம் இரங்கவில்லை.

அடுத்த இரண்டு நாட்களில் ரகுவின் வற்புறுத்தலால் என் ஈகோவை விட்டு விட்டு அவளுக்கு ஃபோன் பண்ண எத்தனித்த போது, அவளிடமிருந்து கால், என் புது செல் நம்பர் அவளுக்கு எப்படி தெரியும்.......வியப்புடன் அவளது கால் அட்டெண்ட் செய்தேன்.

என் அக்காவிடிமிருந்து புது நம்பர் வாங்கியதாகவும், கட்டாயம் சனிக்கிழமை மதியம் அவள் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தே ஆக வேண்டும் என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

அவள் மீது கோபப்பட்டுவிட்டேன் தவிர, உள்ளுக்குள் அதை நினைத்து வருந்துவதோடு மட்டும் இல்லாமல், அவள் நினைவாகவே இரண்டு நாள் பித்தம் பிடித்திருந்ததை அவளிடம் வெளிக்காட்டிக்கொள்ளாமல், அவளது கெஞ்சும் குரலை ரசித்தேன்!

பொண்ணுக்கு தான் நம்மை மீட் பண்ண எவ்வளவு ஆசை......பிடிச்சிருக்கு....ரொம்ப பிடிச்சிருக்கு!!

சனிக்கிழமை அவளது பாட்டியின் உடல் நிலை சீரியஸாகிவிட, அவளது குடும்பம் சொந்த கிராமத்திற்கு சென்றது.
அன்றும் நாங்கள் சந்திக்க இயலவில்லை. அந்த கிராமத்தில் செல்ஃபோன் சிக்னலும் கிடைக்கவில்லை, அவளிடம் ஃபோனிலும் பேச முடியாமல் போனது.
அலுவலக விஷயமாக என்னை புனாவுக்கு செல்ல மனேஜர் சொல்லிவிட, நானும் புனாவிற்கு சென்றேன், இரண்டு நாட்கள் கழித்து , மீராவிடமிருந்து ஃபோன், கண்டிப்பா பார்க்கனும் ப்ளீஸ் என கெஞ்சல்,' எனக்கு மட்டும் உன்னை மீட் பண்ண ஆசையில்லியா செல்லம்' ன்னு வார்த்தை வாய் வரை வந்தாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல், நான் புனாவில் இருப்பதை கூறினேன், அவளது குரலில் தெரிந்த ஏமாற்றம்......எனக்கு பிடித்திருந்தது!!

நான் சென்னைக்கு திரும்பி வந்தபோது தான் அறிந்தேன், அவளது குடும்பம் மீண்டும் கிராமத்துக்கு சென்றுவிட்டதாகவும் , பாட்டியின் உடல் நிலை கருதி எங்களது திருமணமும் அக்கிராமத்தில் எனவும் அக்கா சொல்லக் கேட்டேன்!!

நான் சென்னைக்கு திரும்பிய ஒரு வாரத்தில் எங்களது திருமணம் அவளது சொந்த கிராமத்தில் சிறப்பாக நடந்தது.
மணப்பெண் கோலத்தில் , தங்க விக்கிரகமாக மின்னினாள் என் மீரா!!!


பாட்டி சீரியஸாக இருந்ததால்,சாந்தி முகூர்த்தம் சென்னையில் எங்கள் வீட்டில் என ஏற்பாடு செய்திருந்தனர். திருமணம் முடிந்து எங்கள் வீட்டிற்கு வந்து சேரும் 2 நாட்களும் என்னிடம் அதிகம் பேசவில்லை மீரா. உறவுக்காரர்களில் கூட்டம் வேறு, ஸோ தனிமையில் பேசவும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.

சென்னையில் எங்கள் வீட்டில் முதல் இரவு.....
ஆயிரம் கனவுகளுடன்,
லெட்சம் எதிர்பார்புகளுடன்,
கோடி குறும்பு எண்ணங்களுடன்...
அறைக்குள் சென்றேன்.

ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு வெளியில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.

அருகில் சென்று அவள் தோள்களில் கரம் வைத்து ,

"மீரா.." என்றேன்

சடாரென் என் கைகளை விலக்கி தள்ளி சென்றாள்.

ஆஹா, பொண்ணுக்கு நம்ம மேல ரொம்ப கோபமோ?? அன்னிக்கு ஃபோன்ல கோபத்தில் காய்ச்சியதற்கு இன்னிக்கு ரியாக்க்ஷனா??.....
இந்த பொண்ணுங்களே இப்படிதான் எதையும் ஈஸியா மறக்க மாட்டாங்க, ....இந்த பதிலடியும் சந்தர்ப்பம் தெரியாம கொடுப்பாங்க.

என் செல்லத்தை எப்படி கூல் பண்றது....என யோசனையுடன்,

"மீரா..."

மீண்டும் அவளருகில் சென்று கரம் பற்ற முயற்சிக்கையில்,

" ப்ளீஸ்.....டோன்ட் டச் மீ"

அலறிய மீராவின் சிவந்த கண்களில் நீர் ததும்பி நின்றது.

இத்தனை கோபமா என்மேல்....இது கோபமா , வெறுப்பா.....குழப்பத்துடன்...

"மீரா......what is this...I am sorry......"

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.........மீரா இப்படி.....டக்கென்று.....

[தொடரும்....]

பகுதி - 2
பகுதி -3
பகுதி - 4

April 03, 2008

இந்த பூவுக்கும் வாசம் உண்டு......

"லூசா டி நீ, கிஷோரோட அம்மா உன்னை இப்படி திட்டிட்டு போறாங்க, ஒரு வார்த்தை கூட பேசாம, அவங்க போனதுக்கு அப்புறம் அழுதுட்டு உக்காந்திருக்க"

"அவங்க பேசினதுல என்ன தப்பு இருக்கு ஜனனி"

"என்னடி இப்டி பேசுற...அவங்க பையனும் தான உன்னை லவ் பண்றான், கண்டிக்கிறதுனா அவுங்க பையனை கண்டிக்க வேண்டியதுதான , உன்னை இப்படி தர குறைவா பேசுறதுக்கு இவங்க யாருடி??"

"அவங்க இடத்துல இருக்கற எந்த அம்மாவுக்கு இதே கோபம் தான் வரும் ஜனனி, அவங்க கிஷோரோட அம்மா......அவங்க கிட்ட எப்படி நான்...."

"அட சே.....கிஷோர தானடி லவ் பண்றே, அதுக்காக அவன் அம்மா இப்படி காட்டு கத்து கத்துவாங்க, நீ கேட்டுட்டு கம்முன்னு இருப்பியா??? என்ன இப்போவே மாமியார்கிட்ட சீன் போடுறியாக்கும்.....இதெல்லாம் என்னடி பொழப்பு, மானம் ரோஷம் எல்லாம் இல்லாம என்ன பொல்லாத காதல் பண்றீங்களோ, கன்றாவி"

"ஜனனி, கிஷோர் அம்மா கிட்ட நல்ல பேரு வாங்கனும்னு நான் அவங்க திட்டும் போது அமைதியா இருக்கல, அவங்க நிலமையையும் யோசிச்சு பாரு, வீட்டுல அவங்களே பார்த்து கட்டி வைக்கிற தன் மருமகள்கிட்ட தன் பையன் அன்பா நடந்துக்கிட்டாவே அம்மாக்களுக்கு பொஸஸிவ்நஸ் வந்து ப்ரச்சனை வரும், இதுல லவ னா கேக்கவே வேணாம்,....நம்ம சொஸைட்டில எஸ்பெஷலி அம்மாக்களுக்கு காதல் னா, அதுல இருக்கிற காமம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும், பையன் லவ் பண்றான்னு தெரிஞ்ச உடனே....அவனா ஒரு பொண்ணு கிட்ட போய்' ஐ லவ் யூ" சொல்லிருப்பான்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க, அந்த பொண்ணு தான் என்ன மாயமோ செய்து மயக்கிட்டான்னு முடிவு பண்ணிடுவாங்க, அது அம்மாக்கள் சைக்காலஜி"

"என்ன கருமாந்திர ஸைக்காலஜியோ இருந்துட்டு போட்டும், அதுக்காக இவ்ளோ கேவலமா திட்டனுமா??"

"ஜனனி, தன் பையன் கிட்ட திட்டி தீர்க முடியாத தன்னோட இயலாமையை இப்படி தீத்துக்கிறாங்க, இது ஒரு outlet அவங்களுக்கு அவ்ளோதான்"

"எனக்கு புரில புவனா, எங்க கிட்ட எல்லாம் ஒரு சின்ன விஷயத்துக்கு கூட சண்டைக்கு வந்து கோப படுவ நீ.....எப்படிடி அந்த அம்மா கத்தினப்போ இப்படி quiet ஆ இருந்தே, how is it possible ??"

"see ஜனனி, ஒருத்தரை லவ் பண்றோம்னா.....அவரை மட்டும் நேசிக்கிறது ஆழமான காதல் இல்லை, அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பம், அதையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்"

"என்னமோடி பெரிய தத்துவம் எல்லாம் பேசுற, எனக்கு எதும் புரியல..."

"ஹே ஜனனி, ஒரு small request ......ப்ளீஸ் கிஷோர் கிட்ட அவங்க அம்மா என்னை திட்டின விஷயத்தை உளறிடாதே"

"ஏன்டி"

"சொல்ல வேணாம்னா .....சொல்ல வேணாம், ப்ளீஸ் ஜனனி"

"சரி சரி, சொன்னா மட்டும் உன் கிஷோர் என்ன பெருசா சொல்லிட போறான்....'புவனா என் அம்மா சார்புல நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன், மனசுல ஏதும் வைச்சுக்காதே' அப்படின்னு டயலாக் பேசுவான்,உன்னை செல்லமா கூப்பிடுவானே 'பொம்மு'ன்னு அப்படி கொஞ்சுவான். இந்த காலத்து பசங்கல பத்தி தெரியாதா, உருகி உருகி காதலிப்பானுங்க.... இப்படி அம்மா issue வந்தா, தன் அம்மா பின்னாடி ஒளிஞ்சுப்பானுங்க"


"அதுல என்னடி தப்பிருக்கு, அது தான் கரெக்ட்....2 வருஷம் பழகின எனக்காக, பத்து மாசம் சுமந்து, தன் உதிரத்தை பாலாக்கின அம்மாவை உதறி தள்ளுறதோ, கோபப்படுறதோ தான் தப்பு"

"இப்போ எது தப்பு கரெக்ட்டுன்னு நான் உன்கிட்ட argue பண்ண வரல, இங்க பாரு புவனா........எனக்கு உன்னை சின்ன வயசுல இருந்தே தெரியும்டி, உன் அப்பா அம்மா உன்னை அதிர்ந்து ஒரு வார்த்தைகூட கோபமா பேசி நான் பாத்ததில்ல, அவ்ளோ செல்லமா வளருரேன்னு எனக்கு தெரியும், உன்ன போய்............அந்த அம்மா எப்படி சொல்லிடாங்க, என்னால தாங்கிக்க முடியல, நீ எப்படி இதெல்லாம் பொறுத்துக்கிற...இதெல்லாம் தாங்கிக்க தான் வேணுமா??....அப்படி ஒரு காதல் தேவையாடி உனக்கு??"

"ஜனனி, காதல்னா நீ என்னான்னு நினைச்ச??.....சும்மா ஜாலியா பைக்ல ஊரு சுத்துறதும், கொஞ்சிக்கிறதும்னா??......அதை ஒரு மிருகமும் பண்ணும், ........அது மட்டும் இல்லடி காதல், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு கொடுக்கிற குணம்....இப்படி கசப்பான வார்த்தைகளையும் நாம நேசிக்கிறவங்களுக்காக உள் வாங்கிக்கிறது எல்லாமே பார்ட் ஆஃப் லவ், நம்மளோட இயல்பு, முன் கோபம், பிடிவாதம் எல்லாம் காதலுக்காக தளர்த்திக்கிறதுல ஒரு சுகம் இருக்குடி"

"அடிப்பாவி நல்லாத்தான இருந்த..........இப்படி கிழவியாட்டும் எப்போதிலிருந்து பேச கத்துக்கிட்ட......ஏய் புவனா......உன் ஆளு பைக்கில செம ஸ்பீடா வரான் பாரு"



கிஷோரிடம் ஒரு படபடப்பு, கண்களில் ஒரு ஆத்திரம் , .............பைக்கிலிருந்து இறங்காமலே புவனாவிடம்,

"வண்டியில ஏறு பொம்மு"

"எங்...எங்கே"

"வண்டில ஏறுன்னு சொன்னேன்...."

"அதான்.........எங்கே போறோம்னு கேட்கிறேன்"

"நேரா திருத்தனிக்கு போறோம், தாலி கட்டி மாலை மாத்திக்கிறோம்"

"எதுக்கு இந்த அவசர திருட்டுக் கல்யாணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா???"

பைக்கிலிருந்து இறங்கி, புவனாவிற்கருகில் வந்தான் கிஷோர்,


"பொம்மு, ......உன்கிட்ட என் அம்மா வந்து கத்தினது எல்லாம் எனக்கு தெரியும், அவங்களுக்கு பதிலடி தான் நம்ம கல்யாணம், இவங்க சம்மததுக்காக எல்லாம் நாம கெஞ்சிட்டு இருந்தா இப்படி தான் மிஞ்சு வாங்க, சரி...பேசிட்டு இருக்க டைம் இல்ல, அங்கே நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கோவிலுக்கு வர சொல்லிட்டேன், நீ வண்டில ஏறு"

"ஒரு நிமிஷம் கிஷ், ....என்னை ஒரு 2 வருஷமா உனக்கு தெரியுமா????........ஆனா உங்க அம்மாவை.......25 வருஷம்.சட்டுன்னு அந்த 25 வருஷ பந்தத்தை பொசுக்கிடாதே உன் கோபத்தால"

"பொம்மு..........நான் சொல்றதை......"

"கொஞ்சம் என்னை பேச விடு கிஷ், இன்னிக்கு உன் அம்மா மேல இருக்கிற கோபத்துக்கு காரணம் நம்ம காதல்.......இந்த முட்டாள்தனமான கோபமும், விவேகம் இல்லாத முடிவும் காதலுக்கு அழகில்ல கிஷ். நீ நம்மளையும், நம் காதலையும் மட்டும் பார்கிறே... parents ஓட angle ல இருந்து அவங்களோட ஆதங்கத்தையும் ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு"

"உன்னை யாரு அப்படி பேசினாலும் என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது பொம்மு........அது என் அம்மாவா இருந்தாலும் ......."


"இப்போ என்ன ஆச்சுன்னு குதிக்கிற கிஷ்.........அவங்க வருங்கால மருமகளை கண்டிச்ச்சுட்டாங்க அவ்ளோதானே, என்னோட அம்மா இடத்துல வைச்சு நான் அதை யோசிச்சு புரிஞ்சுக்கிட்டா..........ஒரு அம்மாவின் கண்டிப்பா எடுத்துக்கலாம் இல்லியா???, அதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு, பிறந்ததுல இருந்து உனக்கு எல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச அம்மா க்கு நீ செலக்ட் பண்ணின பொண்ணு......உன் life full ஆ உன் கூட இருக்க போற பொண்ணு எப்படி பட்டவளா இருப்பாளோன்னு ஒரு அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்யும், அதோட expression தான் இது"

"இப்போ நீ வர முடியுமா , முடியாதா பொம்மு"

"See கிஷ், .....இப்போ நாம பண்ற இந்த திருட்டு கல்யாணம், நம்ம மேல உள்ள மதிப்பையும், நம்பிக்கையும் சுக்கு நூறா உடைச்சிடும். கடைசில கெட்ட பேரு யாருக்கு தெரியுமா..........இவளை திட்டினதும் என் மகனை நல்லா ஏத்தி விட்டு, திருட்டு தாலி கட்டிகிட்டு என் நினைப்புல மண்ணு அள்ளி போடுட்டா , அப்படின்னு என் மேல தான் பழி விழும்......ஆனா அதுக்காக நான் கவலை படல.........but உன் மனைவியா உன் அம்மாவோட முழு சம்மதத்தோட தான் உன்னை கட்டிப்பேன் ,நம்ம parents யோட முழு சம்மததும் கிடைக்க்கும்னு நான் நம்புறேன்.....
உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!
பொறுமையுடன் புரிய வைப்போம், நம் காதல் நமக்கு துணை நிற்கும்,
நாளைக்கு பார்க்கலாம் கிஷ், வரேன் , பை"



அவளது trademark புன்னகையுடன், கிஷோரின் முன் தலைமுடியை கோதிவிட்டு விட்டு, தன் ஸ்கூட்டியில் சென்றாள் புவனா.

ஜனனியும், கிஷோரும் அவள் சென்ற பாதையை வியப்புடன் பார்த்து நின்றனர்....!!!

[காதலுக்கு எதிர்ப்பும் அவமதிப்பும் காதலனுக்குு காதலியின் தந்தை, சகோதரர்களிடமிருந்து வருவது, அதனை காதலன் சமாளித்து காதலில் வெற்றி பெறுவது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டுமில்லாமல் , நடைமுறைவாழ்விலும் காண்கிறோம்,
காதலில் எதிர்ப்பும் அவமதிப்பும் காதலிக்கு காதலனின் உறவுகளிடமிருந்து வரும் போது, அதனை அவள் எப்படி மேற்கொள்வாள் என சிந்தித்த போது , தோன்றிய கருத்துக்கள் இங்கே பதிவாக........]