April 10, 2008

எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ!!! - பகுதி 1

வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு போட்டிவிட்டு, சனி ஞாயிறுடன் சேர்ந்தார்போல் 3 நாட்கள் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள தன் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தான் ரகு.

இன்னிக்கு திங்கள் கிழமை, ஊரிலிருந்து சென்னை திரும்பியிருப்பான், office க்கு வந்ததும் நேரா என் கூபிற்கு தான் வருவான், வெள்ளிக்கிழமை நான் பெண் பார்க்க போன விஷயம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்காம அவன் தலை வெடிச்சிரும். ஃபோன்ல அவன்கிட்ட தகவல் சொல்லலாம்னு பார்த்தா, அவன் ஊருல சிக்னலே இல்லை, .........நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கையில் அவன் அம்மா எனக்கு செய்து கொடுத்தனுப்பிய முறுக்கு, அதிரசத்துடன் வேகமாக என்னை நோக்கி வந்தான் ரகு.

"டேய் மாப்பி, என்னடா ஆச்சு"

"எது.....என்னாச்சு"

"அதான்டா , பொண்ணு பார்க்க போனியே வெள்ளிக்கிழமை , அதான்டா"

"அட....அம்மா முறுக்கு கொடுத்தனுப்பிச்சாங்களா இந்த தடவையும், கொடு டேஸ்ட் பார்க்கலாம்"

"ஏய் பேச்சு மாத்தாதேடா, மேட்டரு சொல்லுடா...பொண்ணு பிடிச்சிருச்சா"

"பார்த்தேன், பார்த்தேன்....பார்த்தேன்!
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
கட கடவென தாம்பூல தட்டு
மாத்தினேன் மாத்தினேன் மாத்தினேன்!"

"ஏய், கல்யாணமே நிச்சயம் பண்ணிட்டாங்களாடா???..........கங்க்ராட்ஸ் மாப்பி, என்னடா பொண்ணு பார்க்கதானே போனீங்க.......பார்த்துட்டு பிடிச்சிருந்தாலும் , வீட்ல போய் கலந்து பேசிட்டு 2 நாள்ல தகவல் சொல்றோம்னு கொஞ்சம் கெத்து மெயிண்டேன் பண்ணிருக்கலாம்ல"

"அட நீ வேற.....இப்படி 'அழகு, அறிவு,அடக்கம், அம்சம்' நிறைஞ்ச பொண்ணுங்க single & available ஆ இருக்கிறதே அபூர்வமாய் போச்சு,இதுல நாம 2 நாள் டைம் எடுத்துக்கிட்டோம்னு வை, .....அப்புறம் gap ல வேற மாப்ள வீட்டுக்காரன் முந்திக்குவாண்டா"

"அடப்பாவி, என்னடா பந்திக்கு முந்திக்கனும்ன்ற ரேஞ்சுல பேசுற, எனிவே hearty congrats விஷவா"

"Thanks ரகு"

"பொண்ணுகிட்ட பேசினியா.....நல்லா பேசினீங்களா??"

"பத்து நிமிஷம் தான்டா தனியா பேச சான்ஸ் கிடைச்சது, நான் கேட்டதுக்கெல்லாம் அமைதியா , அழகா பதில் சொன்னாடா, ரொம்ப வெட்கம் போல......தலை நிமிரவே நடுங்குரா, So cute she is !!!"

"டேய் அடங்கு....பொண்ணு பார்க்க போறப்போ இப்படிதான் சீன் போடுவாளுங்க......கல்யாணதுக்கு அப்புறம் தான் இருக்கு உனக்கு கச்சேரி, எப்போடா கொஞ்ச நேரம் பேசாம இருப்பான்னு ஆகிப்போகிற அளவுக்கு பேசிட்டே இருப்பாளுங்க"

"You cant generalise all the female to be so, there are some exceptions too"

"உடனே உன் இங்கிலீஷ் புலமையை அவித்துவிட்டா எனக்கு ஒன்னும் புரியாம மண்டையை ஆட்டுவேன்னு எடுத்துவிடாதே"

"சரி ....சரி.....இப்ப உனக்கு என்னதாண்டா பிரச்சனை?"

"பத்து நிமிஷம் பேசுனதுல எப்படிடா ஒரு பொண்ண பத்தி புரிஞ்சுக்க முடியும், atleast engagement & marriage க்கு இடைப்பட்ட days ல ஆச்சும் கொஞ்சம் பேசி புரிஞ்சுக்கலாம் இல்ல, நீ ஃபோன் பேசினியா??"

"எனக்கும் ஃபோன் பேச ரொம்ப ஆசைதாண்டா....அன்னிக்கு நிச்சயம் பண்ணினப்போவே, என் அக்காவை நச்சரிச்சு அவ நம்பரை வாங்கி தர சொன்னேன், என் நம்பரையும் கொடுக்க சொன்னேன்.....ஆனா....உடனே ஃபோன் பண்ணினா, பொண்ணு பார்க்க போன அன்னிக்கே பிடிச்சிருக்குன்னு கவுந்துட்டான், இப்போ உடனே ஃபோன் பண்ணி வழியுறான்னு அவ நினைச்சுட்டா??.....அதான் ஃபோன் பண்ணாம இருக்கிறேன்"

"அட சீ......இதுல என்னடா ஈகோ வேண்டி கிடக்கு உனக்கு, உடனே ஃபோன போடுடா"

"இன்னும் 1 மாசம்தான்டா கல்யாணத்துக்கு இருக்கு, அதுக்கப்புறம் வாழ்க்கை ஃபுல்லா அவகிட்ட பேசிட்டுதானே இருக்கபோறேன்"

"டேய் என்னடா சொல்ற....அடுத்த மாசமே கல்யாணமா???.......என்னடா இவ்வளவு அவசரம்"

"அவளோட ஒரே அக்கா அமெரிக்காவில செட்டில் ஆகிட்டாங்கடா, அவங்களுக்கு அடுத்த மாசம் மட்டும்தான் 2 வாரம் லீவு எடுக்க முடியுமாம், இதை விட்டா இன்னும் 1 வருஷம் ஆகுமாம் அவங்க இந்தியா வர்ரதுக்கு, moreover அவளோட பாட்டி வேற கொஞ்சம் உடம்புக்கு முடியாம இருக்காங்களாம், இவளோட கல்யாணத்தை பார்க்க ஆசைபடுறாங்களாம், அதான் கல்யாணத்தை சீக்கிரம் வைக்கனும்னு சொன்னாங்க....நாங்களும் ஒத்துக்கிட்டோம்"

"எனக்கென்னவோ எல்லாமே ரொம்ப ஸ்பீடா நடக்கிற மாதிரி தோனுதுடா விஷ்வா, சரி 1 மாதம் இருந்தா என்னடா....நீ ஃபோன் பண்ணு"

"நீ சொல்லி .....கேட்காம..இருப்..."

கரெக்கட்டா என் ஃபோன் ஒலித்தது.

யாருடைய நம்பர் அது என என்னால் டக்கென யூகிக்க முடியவில்லை,

"ஹலோ.."

"hello can I talk to Mr Vishwanath"

"speaking"

"நான்....நான்...மீரா"

"O....yea......hai...i"

"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"

"ஓ, அப்படியா....சொல்லு மீரா"

"நேர்ல மீட் பண்ண முடியுமா?"

"ஓ சூயுர்.....எப்போ?"

"நாளிக்கு ஈவ்னிங் 6 மணிக்கு Galaxy Ice Cream பார்லர், எக்மோர்"

"sure மீரா......then... நீ எப்படி இருக்கிற"

"ஆங்......நான்....நாளைக்கு பேசுறேன்.....பார்க்கலாம் பை"

"ஒகே பை"

ஃபோன்ல பேசவே இவ்வளவு தயங்குரா, நேர்ல எப்படி பேசுவாளோ??

மறுநாள் மாலை 6 மணி எப்போது வருமென time countdown பண்ணிக்கொண்டிருந்தேன், என்னவெல்லாம் பேசலாம் என மனதுக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

மறுநாள் அவள் சொன்ன அந்த ஐஸ்க்ரீம் பார்லருக்கு என் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது, ஒன் வேயில் தவராக வந்த ஒரு கபோதி என் பைக்கில் மோத, நானும் என் பைக்கும் ரோட்டியில் புரண்டோம், முன் முட்டியில் பேண்ட் கிழிந்து இரத்தம் கொட்டியது, செல்ஃபோன் விழுந்த இடம் தெரியவில்ல்லை, அவ்வழி வந்தவரின் உதவியுடன் பக்கத்தில் இருந்த நர்ஸிங் ஹோமில் பேண்டேஜ் போட்டுவிட்டு, வண்டியை அருகில் உள்ள வொர்க் ஷாப்பில் விட்டு விட்டு, அங்கிருந்த டெலிஃபோன் பூத்திலிருந்து அவளுக்கு ஃபோன் பண்ணினேன்.

இவ்வளவு நேரம் வெயிட் செய்ததாகவும், எனது செல் ஃபோனுக்கு ஃபோன் செய்தும் கால் ரீச் ஆகாததால், வீட்டில் தேடுவார்கள் என வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும் கூறினாள்.

எனக்கு கோபமும், ஏமாற்றமும் முந்திக்கொண்டு வந்து, என் முட்டு வலியுடன் சேர்ந்து கடும் வார்த்தைகளாக வெளிவந்தன. நறுக்கென்று பேசி ஃபோன் கட் செய்துவிட்டு ஆட்டோவில் வீடு போய் சேர்ந்தேன்.

ஏமாற்றமும் , வேகமும் தனிந்தபின் தான் என் தவறு உணர்ந்தது,
'பாவம் பொண்ணு எவ்வளவு நேரம் தான் ஐஸ்க்ரீம் பார்லரில் தனியா வெயிட் பண்ணுவா, எனக்கு என்ன நடந்ததுன்னு அவளுக்கு எப்படி தெரியும், சே......அவசரப்பட்டு ரொம்ப கோபப்பட்டுடேனோ??'

ஆனாலும் சாரி கேட்டு அவளுக்கு ஃபோன் பண்ண என் மனம் இரங்கவில்லை.

அடுத்த இரண்டு நாட்களில் ரகுவின் வற்புறுத்தலால் என் ஈகோவை விட்டு விட்டு அவளுக்கு ஃபோன் பண்ண எத்தனித்த போது, அவளிடமிருந்து கால், என் புது செல் நம்பர் அவளுக்கு எப்படி தெரியும்.......வியப்புடன் அவளது கால் அட்டெண்ட் செய்தேன்.

என் அக்காவிடிமிருந்து புது நம்பர் வாங்கியதாகவும், கட்டாயம் சனிக்கிழமை மதியம் அவள் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தே ஆக வேண்டும் என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

அவள் மீது கோபப்பட்டுவிட்டேன் தவிர, உள்ளுக்குள் அதை நினைத்து வருந்துவதோடு மட்டும் இல்லாமல், அவள் நினைவாகவே இரண்டு நாள் பித்தம் பிடித்திருந்ததை அவளிடம் வெளிக்காட்டிக்கொள்ளாமல், அவளது கெஞ்சும் குரலை ரசித்தேன்!

பொண்ணுக்கு தான் நம்மை மீட் பண்ண எவ்வளவு ஆசை......பிடிச்சிருக்கு....ரொம்ப பிடிச்சிருக்கு!!

சனிக்கிழமை அவளது பாட்டியின் உடல் நிலை சீரியஸாகிவிட, அவளது குடும்பம் சொந்த கிராமத்திற்கு சென்றது.
அன்றும் நாங்கள் சந்திக்க இயலவில்லை. அந்த கிராமத்தில் செல்ஃபோன் சிக்னலும் கிடைக்கவில்லை, அவளிடம் ஃபோனிலும் பேச முடியாமல் போனது.
அலுவலக விஷயமாக என்னை புனாவுக்கு செல்ல மனேஜர் சொல்லிவிட, நானும் புனாவிற்கு சென்றேன், இரண்டு நாட்கள் கழித்து , மீராவிடமிருந்து ஃபோன், கண்டிப்பா பார்க்கனும் ப்ளீஸ் என கெஞ்சல்,' எனக்கு மட்டும் உன்னை மீட் பண்ண ஆசையில்லியா செல்லம்' ன்னு வார்த்தை வாய் வரை வந்தாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல், நான் புனாவில் இருப்பதை கூறினேன், அவளது குரலில் தெரிந்த ஏமாற்றம்......எனக்கு பிடித்திருந்தது!!

நான் சென்னைக்கு திரும்பி வந்தபோது தான் அறிந்தேன், அவளது குடும்பம் மீண்டும் கிராமத்துக்கு சென்றுவிட்டதாகவும் , பாட்டியின் உடல் நிலை கருதி எங்களது திருமணமும் அக்கிராமத்தில் எனவும் அக்கா சொல்லக் கேட்டேன்!!

நான் சென்னைக்கு திரும்பிய ஒரு வாரத்தில் எங்களது திருமணம் அவளது சொந்த கிராமத்தில் சிறப்பாக நடந்தது.
மணப்பெண் கோலத்தில் , தங்க விக்கிரகமாக மின்னினாள் என் மீரா!!!

பாட்டி சீரியஸாக இருந்ததால்,சாந்தி முகூர்த்தம் சென்னையில் எங்கள் வீட்டில் என ஏற்பாடு செய்திருந்தனர். திருமணம் முடிந்து எங்கள் வீட்டிற்கு வந்து சேரும் 2 நாட்களும் என்னிடம் அதிகம் பேசவில்லை மீரா. உறவுக்காரர்களில் கூட்டம் வேறு, ஸோ தனிமையில் பேசவும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.

சென்னையில் எங்கள் வீட்டில் முதல் இரவு.....
ஆயிரம் கனவுகளுடன்,
லெட்சம் எதிர்பார்புகளுடன்,
கோடி குறும்பு எண்ணங்களுடன்...
அறைக்குள் சென்றேன்.

ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு வெளியில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.

அருகில் சென்று அவள் தோள்களில் கரம் வைத்து ,

"மீரா.." என்றேன்

சடாரென் என் கைகளை விலக்கி தள்ளி சென்றாள்.

ஆஹா, பொண்ணுக்கு நம்ம மேல ரொம்ப கோபமோ?? அன்னிக்கு ஃபோன்ல கோபத்தில் காய்ச்சியதற்கு இன்னிக்கு ரியாக்க்ஷனா??.....
இந்த பொண்ணுங்களே இப்படிதான் எதையும் ஈஸியா மறக்க மாட்டாங்க, ....இந்த பதிலடியும் சந்தர்ப்பம் தெரியாம கொடுப்பாங்க.

என் செல்லத்தை எப்படி கூல் பண்றது....என யோசனையுடன்,

"மீரா..."

மீண்டும் அவளருகில் சென்று கரம் பற்ற முயற்சிக்கையில்,

" ப்ளீஸ்.....டோன்ட் டச் மீ"

அலறிய மீராவின் சிவந்த கண்களில் நீர் ததும்பி நின்றது.

இத்தனை கோபமா என்மேல்....இது கோபமா , வெறுப்பா.....குழப்பத்துடன்...

"மீரா......what is this...I am sorry......"

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.........மீரா இப்படி.....டக்கென்று.....

[தொடரும்....]

பகுதி - 2
பகுதி -3
பகுதி - 4

112 comments:

said...

மீண்டும் ஒரு அழகான கதையோடு திவ்யா..
வாங்க... வாங்க...

:)))

said...

கதையை ஆரம்பித்த விதம் அருமை... அப்படியே நெருக்கமாக கோர்த்த மல்லி போல அழகாக கோர்த்த உரையாடல்கள் .... எங்கிருந்து கற்றீர்கள்..?? ம்ம்ம்ம்...?? :))) மிகவும் ரசித்தேன்....

said...

//எப்போடா கொஞ்ச நேரம் பேசாம இருப்பான்னு ஆகிப்போகிற அளவுக்கு பேசிட்டே இருப்பாளுங்க" //

:))))))))) அப்படியா திவ்யா..?? பொண்ணுங்க பேசிட்டேவா இருப்பாங்க..?? அப்படியா...?? ஆச்சரியமா இருக்கே...!!!!
;))))

//"You cant generalise all the female to be so, there are some exceptions too" //

:)))) ம்ம்ம்ம்ம்.... is it so Divyaa..?? ;))

said...

நேர்த்தியான கதை.... திரைக்கதை போல அருமையாக எழுதி இருக்கிறீர்கள் திவ்யா...
அடுத்த பகுதியை சீக்கிரம் எழுதுங்கள்..
சரியா...?? :)))

said...

:))))

Intha Divya eppavume ippadithaan.. entha nerathula Thodarum podanumne theriyaathu :((((

amaam... Thodarume podalaiye... kathai mudinjirichaa enna??

said...

கதை தொடக்கம் நன்று திவ்யா :) நிதானித்து செல்லுங்கள்!

said...

//நவீன் ப்ரகாஷ் said...
//எப்போடா கொஞ்ச நேரம் பேசாம இருப்பான்னு ஆகிப்போகிற அளவுக்கு பேசிட்டே இருப்பாளுங்க" //

:))))))))) அப்படியா திவ்யா..?? பொண்ணுங்க பேசிட்டேவா இருப்பாங்க..?? அப்படியா...?? ஆச்சரியமா இருக்கே...!!!!
;))))
//

என்ன நவீன் உங்களின் சந்தேகத்திற்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதேனும் உள்ளதா :)))

said...

//இந்த பொண்ணுங்களே இப்படிதான் எதையும் ஈஸியா மறக்க மாட்டாங்க //

ஒஹ் அப்டீங்களா??? :))

said...

உங்கள் கதை அணைத்துமே அருமை திவ்யா! இந்த கதையிலும் டயலாக்ஸ் சூப்பர். நகர்த்திய விதமும் அருமை. போர் அடிக்காமல் அழகாக படிப்பவரின் கவனத்தை ஈர்க்கறீங்க! சீக்கிரம் அடுத்த பதிவும் போடுங்க!

said...

தொடரின் ஆரம்பமே நல்லாயிருக்குது:))

டயலாக் எல்லாம் பிண்ணி பெடல் எடுக்கிறீங்க?
ரெண்டு பசங்க பேசிக்கிட்டா இப்படிதான் 'மாப்பி'ன்னு சொல்லி பேசிப்பாங்களா??
அப்படின்னா, அது எப்படி உங்களுக்கு இவ்வளவு கரெக்ட்டா தெரியுது?? நல்லா ஒட்டு கேட்பீங்களோ:)))

சினிமா பார்க்கிற மாதிரி இருக்கு படங்களோட உங்க தொடர் படிக்க, சூப்பர் திவ்யா அக்கா:))))

நட்போடு
நிவிஷா.

said...

cinema parthutu irukum pothu pathila current cut agina effect, ipdi episode mudicha enna artham Divya akka???
seekiram aduththa part podunga:)))

natpodu,
Nivisha.

said...

ம்ம்ம்ம்....

அப்புறம்??

சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!
கதை third person narration-il ஆரம்பித்து பிறகு ரகுவின் நண்பனின் கண்ணோட்டத்தில் நடை மாறுகிறது!!
அதற்குப்பின் ரகுவின் first person narration-ற்கு தாவுகிறது!!

ஏன் இந்த குழப்பம்??
இல்ல நாந்தான் சரியா படிக்கலையா?? ;)

said...

//ரொம்ப வெட்கம் போல......தலை நிமிரவே நடுங்குரா//

போட்டிருந்த தங்கசங்கிலியும் நெத்திசுட்டியும் கனமா இருந்திருக்கும்.. அதான் தலைய நிமித்த முடியல!!! :))

//பொண்ணு பார்க்க போன அன்னிக்கே பிடிச்சிருக்குன்னு கவுந்துட்டான், இப்போ உடனே ஃபோன் பண்ணி வழியுறான்னு அவ நினைச்சுட்டா??.....அதான் ஃபோன் பண்ணாம இருக்கிறேன்//

ச்சே... இந்த பசங்களே இப்படிதான்! நம்ம வீலிங்ஸோட ரொம்ப விளையாடுவாங்க..

// அவளது கெஞ்சும் குரலை ரசித்தேன்!//

நானும் இவ்வரியை படித்து ரசித்தேன்.

//பிடிச்சிருக்கு....ரொம்ப பிடிச்சிருக்கு!!//

எனக்கும் இந்த கதை ரொம்ப பிடிச்சுருக்கு.

//அவளது குரலில் தெரிந்த ஏமாற்றம்......எனக்கு பிடித்திருந்தது!!//

ஐயோ ஐயோ...அவ்வ்வ்வ்!!

எப்போதும் போலவே கதை சூப்பரா போகுது!! அடுத்த பகுதிய போடுங்க குருவே!

said...

அருமையான ஆரம்பம்...
Waiting for 2nd part....

Senthil,
Bangalore

said...

கதாசிரியரே...வாங்க...வாங்க இந்த தொடரில் புதிய ஜோடி சேரன்-சினோக வா!! ;)))

கதை செம ஸ்பீடாக போகுது...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

said...

\\ CVR said...
ம்ம்ம்ம்....

அப்புறம்??

சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!
கதை third person narration-il ஆரம்பித்து பிறகு ரகுவின் நண்பனின் கண்ணோட்டத்தில் நடை மாறுகிறது!!
அதற்குப்பின் ரகுவின் first person narration-ற்கு தாவுகிறது!!

ஏன் இந்த குழப்பம்??
இல்ல நாந்தான் சரியா படிக்கலையா?? ;)\\

ஆமா..திவ்யா...கொஞ்சம் நடையில குழப்பம் வருது..!

said...

\\நிவிஷா..... said...
தொடரின் ஆரம்பமே நல்லாயிருக்குது:))

டயலாக் எல்லாம் பிண்ணி பெடல் எடுக்கிறீங்க?
ரெண்டு பசங்க பேசிக்கிட்டா இப்படிதான் 'மாப்பி'ன்னு சொல்லி பேசிப்பாங்களா??
அப்படின்னா, அது எப்படி உங்களுக்கு இவ்வளவு கரெக்ட்டா தெரியுது?? நல்லா ஒட்டு கேட்பீங்களோ:)))
\\

என்ன நிவிஷா குருஜியை பார்த்து இப்படி கேட்டுட்டிங்க..!!!!

அறியாதது, தெரிந்தது தெரியாதது என்று அனைத்தும் குருஜிக்கு தெரியும் ;))

said...

அருமையா இருக்கு கதை

அடுத்த பகுதி எப்போ????

said...

அடுத்த தொடருக்கு வாழ்த்துகள்..திவ்யா

said...
This comment has been removed by the author.
said...

இது வரை காணாத நல்ல ஒரு வேகம் கதையில் தெரிகிறது. அருமை. மீண்டும் ஒரு மெளன ராகமா? ;) அந்த கதை போலவே இதுவும் மக்கள் மனதில் பதிவும் வண்ணம் அமைய வாழ்த்துக்கள்.

said...

Dialogs are very nice ..

//இப்போ உடனே ஃபோன் பண்ணி வழியுறான்னு அவ நினைச்சுட்டா??.....அதான் ஃபோன் பண்ணாம இருக்கிறேன்"//

kadalai podururathu mudivu painNittaa , athula vetkam yenna ,, manam yenna ,, kalaku maplai

//அட சீ......இதுல என்னடா ஈகோ வேண்டி கிடக்கு உனக்கு, உடனே ஃபோன போடுடா"//

iippadi oru nanban yeppavum kuda irukunam

miindum thotarum .. idhu than ovaru....

miga arumai

said...

//"பத்து நிமிஷம் பேசுனதுல எப்படிடா ஒரு பொண்ண பத்தி புரிஞ்சுக்க முடியும், //

எங்க திவ்யா டிஸ்ப் கார்னர ஒரு முறை படிக்க சொல்லுங்க,., எல்லாம் முடியும்ல்ல..:)))

said...

திவ்யா.. இந்த முறை கதையில் இனிமையோட, சஸ்பென்ஸுன் கூடியிருக்கு.

என்ன விஷயம் சொல்லறதுக்காக ,பேச விரும்பினாள்? (வேற யாரையாவது விரும்பியிருந்தாளா? இல்லை வேற ஏதோ பிரட்சனையா? இப்போ ஏன் இவனை டோன் டச் மின்னு சொன்னா? அது இதுன்னு அடுத்த பாகத்தையும் இப்பவே படிக்கனும்ன்னு ஆர்வம் வருது.

லாட் ஆஃப் இம்புருமெண்ட்ஸ்... கலக்குங்க திவ்யா.. வாழ்த்துக்கள்.

said...

எங்க திவ்யா டிஸ்ப் கார்னர ஒரு முறை படிக்க சொல்லுங்க,., எல்லாம் முடியும்ல்ல..:)))

- அதே! அது என்னமோ நெம்ப சரி!

said...

ஊர்ஸ்க்கு ரொமாண்டிக் கதைகள் சூப்பரா வருது.. :)
கலக்கறிங்க...

said...

\\
நவீன் ப்ரகாஷ் said...
மீண்டும் ஒரு அழகான கதையோடு திவ்யா..
வாங்க... வாங்க...

:)))\\

கவிஞரே வாங்க வாங்க!

உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
கதையை ஆரம்பித்த விதம் அருமை... அப்படியே நெருக்கமாக கோர்த்த மல்லி போல அழகாக கோர்த்த உரையாடல்கள் .... எங்கிருந்து கற்றீர்கள்..?? ம்ம்ம்ம்...?? :))) மிகவும் ரசித்தேன்....\\

நெருக்கமாக கோர்த்த மல்லியா?? ஆஹா...பின்னூட்டமே கவித்துவமா இருக்குதுங்க நவீன், நன்றி!!

உரையாடல்கள் எங்கயும் போய் டியூஷன் எடுத்துக் கத்துக்கலீங்க, அங்கே இங்கே கேட்கிறது தான்......அப்படியே ஒரு flow வில் வருது!!

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//எப்போடா கொஞ்ச நேரம் பேசாம இருப்பான்னு ஆகிப்போகிற அளவுக்கு பேசிட்டே இருப்பாளுங்க" //

:))))))))) அப்படியா திவ்யா..?? பொண்ணுங்க பேசிட்டேவா இருப்பாங்க..?? அப்படியா...?? ஆச்சரியமா இருக்கே...!!!! \\

பொண்ணுங்க கலகலன்னு பேசிட்டே இருக்கிறதும் ஒரு அழகுதாங்க நவீன், அதுக்குன்னு எல்லா பொண்ணுங்களும் வாயாடின்னு தப்பா நினைச்சுடாதீங்க!

கணவனிடம், மனம் விட்டு மனைவி பேசிக்கொண்டேயிருந்தால்....நல்லாத்தானே இருக்கும்!!

//"You cant generalise all the female to be so, there are some exceptions too" //

:)))) ம்ம்ம்ம்ம்.... is it so Divyaa..?? ;))\\

Yes Naveen!!!
From the few females you have come across with , you cant generalise the feminine charachters, it differs from girl to girl, may be the percentage of some charachters are same for most of them, that doesnt mean to generalise, isnt it???

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
நேர்த்தியான கதை.... திரைக்கதை போல அருமையாக எழுதி இருக்கிறீர்கள் திவ்யா...
அடுத்த பகுதியை சீக்கிரம் எழுதுங்கள்..
சரியா...?? :)))\\

சரிங்க கவிஞரே, அடுத்த பகுதி சீக்கிரம் போட முயற்சிக்கிறேன்!!

பாராட்டிற்கு மிக்க நன்றி!!

said...

\\ ஜி said...
:))))

Intha Divya eppavume ippadithaan.. entha nerathula Thodarum podanumne theriyaathu :((((

amaam... Thodarume podalaiye... kathai mudinjirichaa enna??\\

ஜி, நீங்க சொன்ன பிறகு தான் 'தொடரும்' போடாமல் விட்டுப்போனது பார்த்தேன், நன்றி ஜி!!!
[பதிவு முழுவதும் படிக்காம.....நேரா கடைசி பாராவுக்கு போய்ட்டீங்களோ???? கரெக்ட்டா தொடரும் போடலின்னு சொல்லிட்டீங்க!!]

சும்மா ஒரு விறுவிறுப்புக்காக தொடரை அப்படி முடித்தேன் ஜி, விரைவில் அடுத்த பகுதி போடுகிறேன்!

வருகைக்கு நன்றி ஜி!!

said...

\\ sathish said...
கதை தொடக்கம் நன்று திவ்யா :) நிதானித்து செல்லுங்கள்!\\

பாராட்டிற்கும் , கருத்திற்கும் நன்றி சதீஷ்!!

said...

\\ sathish said...
//இந்த பொண்ணுங்களே இப்படிதான் எதையும் ஈஸியா மறக்க மாட்டாங்க //

ஒஹ் அப்டீங்களா??? :))\

பெண்களின் அதீத நினைவாற்றல்...இறைவனின் படைப்பு!!

ஸோ எதையும் ஈஸியா மறக்கமாட்டாங்க, கவனம் சதீஷ்!

said...

\\ சத்யா said...
உங்கள் கதை அணைத்துமே அருமை திவ்யா! இந்த கதையிலும் டயலாக்ஸ் சூப்பர். நகர்த்திய விதமும் அருமை. போர் அடிக்காமல் அழகாக படிப்பவரின் கவனத்தை ஈர்க்கறீங்க! சீக்கிரம் அடுத்த பதிவும் போடுங்க!\\

உங்கள் முதல்முறை பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி சத்யா!!

அடுத்த பகுதி விரைவில்.....

said...

\\ நிவிஷா..... said...
தொடரின் ஆரம்பமே நல்லாயிருக்குது:))

டயலாக் எல்லாம் பிண்ணி பெடல் எடுக்கிறீங்க?
ரெண்டு பசங்க பேசிக்கிட்டா இப்படிதான் 'மாப்பி'ன்னு சொல்லி பேசிப்பாங்களா??
அப்படின்னா, அது எப்படி உங்களுக்கு இவ்வளவு கரெக்ட்டா தெரியுது?? நல்லா ஒட்டு கேட்பீங்களோ:)))

சினிமா பார்க்கிற மாதிரி இருக்கு படங்களோட உங்க தொடர் படிக்க, சூப்பர் திவ்யா அக்கா:))))

நட்போடு
நிவிஷா.\\

வாங்க நிவிஷா!
உங்கள் விரிவான பின்னுட்டத்திற்கு நன்றி!!

ஒட்டு கேக்கனும்னு கேட்கிறதில்லீங்க...அப்படியே அரசல் புரசலா காதுல விழுகிறதை வைச்சு டயலாக்ஸ் டெவலப் பண்ணிக்க வேண்டியது தான்!!!

படங்களுடன் சேர்த்து பதிவையும் ரசித்ததிற்கு நன்றி நிவிஷா!!

said...

\ நிவிஷா..... said...
cinema parthutu irukum pothu pathila current cut agina effect, ipdi episode mudicha enna artham Divya akka???
seekiram aduththa part podunga:)))

natpodu,
Nivisha.\\

நோ டென்ஷன்ஸ் நிவிஷா...அடுத்த பகுதி விரைவில்!!!

said...

\\ CVR said...
ம்ம்ம்ம்....

அப்புறம்??

சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!
கதை third person narration-il ஆரம்பித்து பிறகு ரகுவின் நண்பனின் கண்ணோட்டத்தில் நடை மாறுகிறது!!
அதற்குப்பின் ரகுவின் first person narration-ற்கு தாவுகிறது!!

ஏன் இந்த குழப்பம்??
இல்ல நாந்தான் சரியா படிக்கலையா?? ;)\\

விஷ்வாவின் narration ல தான் கதை எழுத நினைத்தேன் சிவிஆர்,
தெரியாமல் தடம் மாறியிருக்க வாய்பிருக்கு, சரி பார்க்கிறேன்,
சுட்டிக்காட்டியதுக்கு தாங்க்ஸ்!!!

said...

ஆரம்பம் நன்றாக இருக்கிறது...

இன்னுமொரு சிறப்பான தொடருக்கு வாழ்த்துக்கள்!

said...

கதை கதை... காதல் கதை...

(நல்ல ஆரம்பம்...)

said...

"You cant generalise all the female to be so, there are some exceptions too"

ம்ம்ம்...பெண்மை....

(நவீன் அண்ணன் கேட்டுட்டாரு...)

said...

///"உடனே உன் இங்கிலீஷ் புலமையை அவித்துவிட்டா எனக்கு ஒன்னும் புரியாம மண்டையை ஆட்டுவேன்னு எடுத்துவிடாதே"///

எழுதுவது திவ்யா:))))

said...

///ஆனா....உடனே ஃபோன் பண்ணினா, பொண்ணு பார்க்க போன அன்னிக்கே பிடிச்சிருக்குன்னு கவுந்துட்டான், இப்போ உடனே ஃபோன் பண்ணி வழியுறான்னு அவ நினைச்சுட்டா??.....அதான் ஃபோன் பண்ணாம இருக்கிறேன்///

கெத்து...

said...

:)))) ம்ம்ம்ம்ம்.... is it so Divyaa..?? ;))\\

///Yes Naveen!!!
From the few females you have come across with , you cant generalise the feminine charachters, it differs from girl to girl, may be the percentage of some charachters are same for most of them, that doesnt mean to generalise, isnt it???///

பெண்மை...

said...

அருமையான தொடக்கம்,
அடுத்து என்ன? என எதிர்பார்க்க வைக்கும் திருப்பம்....
அழகான தொடர் மறுபடியும் !!

பாராட்டுக்கள் திவ்யா:-)

said...

//Divya said...
\\ sathish said...
//இந்த பொண்ணுங்களே இப்படிதான் எதையும் ஈஸியா மறக்க மாட்டாங்க //

ஒஹ் அப்டீங்களா??? :))\

பெண்களின் அதீத நினைவாற்றல்...இறைவனின் படைப்பு!!

ஸோ எதையும் ஈஸியா மறக்கமாட்டாங்க, கவனம் சதீஷ்!
//

இதுல உள்குத்து எதும் இல்லீங்களே!! :)))
அறிவுரைக்கு நன்றி திவ்யா! கவனமா இருக்கேன் :)

said...

அன்னைக்ககே சொல்லனும்னு இருந்தேன் வர வர உங்க எழுத்தோட தரம் கூடிக்கிட்டே இருக்கு

அதிலும் உரையாடல்கள் அமைக்கிற முறை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் திவ்யா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

*****

said...

\\ Thamizhmaangani said...
//ரொம்ப வெட்கம் போல......தலை நிமிரவே நடுங்குரா//

போட்டிருந்த தங்கசங்கிலியும் நெத்திசுட்டியும் கனமா இருந்திருக்கும்.. அதான் தலைய நிமித்த முடியல!!! :))\\

வாம்மா சிஷ்யை!
வெட்கம்ன்னு நம்பிட்டு இருக்கிறவங்களுக்கு போட்டு கொடுத்துடுவீங்க போலிருக்கு.....ஏன் தலைநிமிர முடியலின்னு!!!

//பொண்ணு பார்க்க போன அன்னிக்கே பிடிச்சிருக்குன்னு கவுந்துட்டான், இப்போ உடனே ஃபோன் பண்ணி வழியுறான்னு அவ நினைச்சுட்டா??.....அதான் ஃபோன் பண்ணாம இருக்கிறேன்//

ச்சே... இந்த பசங்களே இப்படிதான்! நம்ம வீலிங்ஸோட ரொம்ப விளையாடுவாங்க..\\

// அவளது கெஞ்சும் குரலை ரசித்தேன்!//

நானும் இவ்வரியை படித்து ரசித்தேன்.\\

ரசிப்பிற்கு நன்றி தமிழ்!!

//பிடிச்சிருக்கு....ரொம்ப பிடிச்சிருக்கு!!//

எனக்கும் இந்த கதை ரொம்ப பிடிச்சுருக்கு.\\

உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு சந்தோஷம் தான் தமிழ்!!!

//அவளது குரலில் தெரிந்த ஏமாற்றம்......எனக்கு பிடித்திருந்தது!!//

ஐயோ ஐயோ...அவ்வ்வ்வ்!!

எப்போதும் போலவே கதை சூப்பரா போகுது!! அடுத்த பகுதிய போடுங்க குருவே!\\

அடுத்த பகுதி சீக்கிரம் போட்டிருவோம் !!!

said...

\\ Sen22 said...
அருமையான ஆரம்பம்...
Waiting for 2nd part....

Senthil,
Bangalore\

வாங்க செந்தில்!

வருகைகும் பாராட்டிற்கும் நன்றி செந்தில்!

அடுத்த பகுதி விரைவில்.....

அவசியம் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க செந்தில்!

said...

\\ கோபிநாத் said...
கதாசிரியரே...வாங்க...வாங்க இந்த தொடரில் புதிய ஜோடி சேரன்-சினோக வா!! ;)))

கதை செம ஸ்பீடாக போகுது...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)\\

கொஞ்சம் ஸ்பீடு கொடுத்துப் பார்கலாம்னு முயற்சி பண்ணினேன்....கரெக்ட்டா நோட் பண்ணிட்டீங்க கோபி!

வெயிட் பண்ணிட்டேயிருங்க கோபி....சீக்கிரம் அடுத்த பகுதி போட்டிருவோம்!

said...

\\ கோபிநாத் said...
\\ CVR said...
ம்ம்ம்ம்....

அப்புறம்??

சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!
கதை third person narration-il ஆரம்பித்து பிறகு ரகுவின் நண்பனின் கண்ணோட்டத்தில் நடை மாறுகிறது!!
அதற்குப்பின் ரகுவின் first person narration-ற்கு தாவுகிறது!!

ஏன் இந்த குழப்பம்??
இல்ல நாந்தான் சரியா படிக்கலையா?? ;)\\

ஆமா..திவ்யா...கொஞ்சம் நடையில குழப்பம் வருது..!\\

நடையில் உள்ள குழப்பத்தை சரி செய்ய முயல்கிறேன் கோபி!! நன்றி!!!

said...

\\ கோபிநாத் said...
\\நிவிஷா..... said...
தொடரின் ஆரம்பமே நல்லாயிருக்குது:))

டயலாக் எல்லாம் பிண்ணி பெடல் எடுக்கிறீங்க?
ரெண்டு பசங்க பேசிக்கிட்டா இப்படிதான் 'மாப்பி'ன்னு சொல்லி பேசிப்பாங்களா??
அப்படின்னா, அது எப்படி உங்களுக்கு இவ்வளவு கரெக்ட்டா தெரியுது?? நல்லா ஒட்டு கேட்பீங்களோ:)))
\\

என்ன நிவிஷா குருஜியை பார்த்து இப்படி கேட்டுட்டிங்க..!!!!

அறியாதது, தெரிந்தது தெரியாதது என்று அனைத்தும் குருஜிக்கு தெரியும் ;))\\

என்னாது......குருஜி யா??

வேணாம் கோபி, என்னை வைச்சு இப்படி எல்லாமா காமெடி பண்றது!!

said...

\\ எழில்பாரதி said...
அருமையா இருக்கு கதை

அடுத்த பகுதி எப்போ????\\

வாங்க எழில்,

பாராட்டிற்கு நன்றி எழில்பாரதி!

அடுத்த பகுதி இன்னும் இரு தினங்களில்.....

said...

\ பாச மலர் said...
அடுத்த தொடருக்கு வாழ்த்துகள்..திவ்யா\\

வாங்க பாசமலர்.....

உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு உறசாகம் தந்தது, மிக்க நன்றி!!

said...

\\ ஸ்ரீ said...
இது வரை காணாத நல்ல ஒரு வேகம் கதையில் தெரிகிறது. அருமை. மீண்டும் ஒரு மெளன ராகமா? ;) அந்த கதை போலவே இதுவும் மக்கள் மனதில் பதிவும் வண்ணம் அமைய வாழ்த்துக்கள்.\\

கதையின் வேகத்தை குறிப்பிட்டிருப்பதிற்கு நன்றி ஸ்ரீ!!

said...

\\ Prabakar Samiyappan said...
Dialogs are very nice .. \\

நன்றி ப்ரபாஹர்!!!

//இப்போ உடனே ஃபோன் பண்ணி வழியுறான்னு அவ நினைச்சுட்டா??.....அதான் ஃபோன் பண்ணாம இருக்கிறேன்"//

kadalai podururathu mudivu painNittaa , athula vetkam yenna ,, manam yenna ,, kalaku maplai \\

கல்யாணம் நிச்சயம் ஆன பின் பேசுவதற்கு பெயரும் கடலையா???

//அட சீ......இதுல என்னடா ஈகோ வேண்டி கிடக்கு உனக்கு, உடனே ஃபோன போடுடா"//

iippadi oru nanban yeppavum kuda irukunam\\\

இப்படி நண்பன் இல்லினா, அப்படி ஈகோ உள்ள ஆளுங்க எல்லாம் திருந்த மாட்டாங்களே!!

\\miindum thotarum .. idhu than ovaru....

miga arumai\\

தொடர் கதைக்கு தொடரும்னு போட்டுதானே ஆகனும் ப்ரபாஹர்!!

வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ப்ரபாஹர்!!

said...

\\ ரசிகன் said...
//"பத்து நிமிஷம் பேசுனதுல எப்படிடா ஒரு பொண்ண பத்தி புரிஞ்சுக்க முடியும், //

எங்க திவ்யா டிஸ்ப் கார்னர ஒரு முறை படிக்க சொல்லுங்க,., எல்லாம் முடியும்ல்ல..:)))\

டிப்ஸ் எல்லாம் படிச்சு 'தயாரா' இருக்கிறாப்ல இருக்கு ரசிகன்!!!!

முடியும் ரசிகன்.....உங்களால நிச்சயம் முடியும், dont worry !!

said...

\\ ரசிகன் said...
திவ்யா.. இந்த முறை கதையில் இனிமையோட, சஸ்பென்ஸுன் கூடியிருக்கு.

என்ன விஷயம் சொல்லறதுக்காக ,பேச விரும்பினாள்? (வேற யாரையாவது விரும்பியிருந்தாளா? இல்லை வேற ஏதோ பிரட்சனையா? இப்போ ஏன் இவனை டோன் டச் மின்னு சொன்னா? அது இதுன்னு அடுத்த பாகத்தையும் இப்பவே படிக்கனும்ன்னு ஆர்வம் வருது.

லாட் ஆஃப் இம்புருமெண்ட்ஸ்... கலக்குங்க திவ்யா.. வாழ்த்துக்கள்.\\

ரசிகன்,
உங்களை மாதிரி நண்பர்களின் ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் தான் காரணம் நீங்கள் கருதும் 'இம்புரூவ்மெண்ட்ஸ்'க்கு!!

வாழ்த்துக்களுக்கு நன்றி ரசிகன்!!

said...

\ சத்யா said...
எங்க திவ்யா டிஸ்ப் கார்னர ஒரு முறை படிக்க சொல்லுங்க,., எல்லாம் முடியும்ல்ல..:)))

- அதே! அது என்னமோ நெம்ப சரி!\\

:)))

said...

\\ SanJai said...
ஊர்ஸ்க்கு ரொமாண்டிக் கதைகள் சூப்பரா வருது.. :)
கலக்கறிங்க...\\

ஏன் சஞ்சய்....
ஊர்ஸ்க்கு ரொமெண்டிக் கதைகள் எழுத தெரியாதுன்னு நினைச்சிட்டிருந்தீங்களா??

பாராட்டிற்கு நன்றி ஊர்ஸ்!!

said...

\\ நிமல்/NiMaL said...
ஆரம்பம் நன்றாக இருக்கிறது...

இன்னுமொரு சிறப்பான தொடருக்கு வாழ்த்துக்கள்!\\

வாங்க நிமல்,

உங்கள் தொடர் உற்சாகத்திற்கு மிக்க நன்றி நிமல்!!

said...

\\ தமிழன்... said...
கதை கதை... காதல் கதை...

(நல்ல ஆரம்பம்...)\\

வாங்க தமிழன்!

பாராட்டிற்கு நன்றி!!

[நீங்க பதிவை படிச்சீங்களா??

கதையில் காதல் எங்கே வருது??

திவ்யா காதல் கதை தான் எழுதியிருப்பான்னு நம்பிக்கையில் பின்னூட்டம் போட்டுட்டீங்களோ??

said...

\ தமிழன்... said...
///"உடனே உன் இங்கிலீஷ் புலமையை அவித்துவிட்டா எனக்கு ஒன்னும் புரியாம மண்டையை ஆட்டுவேன்னு எடுத்துவிடாதே"///

எழுதுவது திவ்யா:))))\\

புரியுது தமிழன்:))

said...

\\ தமிழன்... said...
"You cant generalise all the female to be so, there are some exceptions too"

ம்ம்ம்...பெண்மை....

(நவீன் அண்ணன் கேட்டுட்டாரு...)\\

ம்ம்ம்.... நவீன் உங்க அண்ணாவா???

said...

\\ தமிழன்... said...
:)))) ம்ம்ம்ம்ம்.... is it so Divyaa..?? ;))\\

///Yes Naveen!!!
From the few females you have come across with , you cant generalise the feminine charachters, it differs from girl to girl, may be the percentage of some charachters are same for most of them, that doesnt mean to generalise, isnt it???///

பெண்மை...\\

:)))

said...

\ Praveena Jennifer Jacob said...
அருமையான தொடக்கம்,
அடுத்து என்ன? என எதிர்பார்க்க வைக்கும் திருப்பம்....
அழகான தொடர் மறுபடியும் !!

பாராட்டுக்கள் திவ்யா:-)\\

வாங்க ப்ரவீனா,

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!!

said...

\\ sathish said...
//Divya said...
\\ sathish said...
//இந்த பொண்ணுங்களே இப்படிதான் எதையும் ஈஸியா மறக்க மாட்டாங்க //

ஒஹ் அப்டீங்களா??? :))\

பெண்களின் அதீத நினைவாற்றல்...இறைவனின் படைப்பு!!

ஸோ எதையும் ஈஸியா மறக்கமாட்டாங்க, கவனம் சதீஷ்!
//

இதுல உள்குத்து எதும் இல்லீங்களே!! :)))
அறிவுரைக்கு நன்றி திவ்யா! கவனமா இருக்கேன் :)\\

உள்குத்து வைச்சு பேசுற பழக்கமெல்லாம் எனக்கு இல்லீங்க....எல்லாம் டைரக்ட் 'வெளி' குத்து தான்!!

said...

\\ தமிழன்... said...
அன்னைக்ககே சொல்லனும்னு இருந்தேன் வர வர உங்க எழுத்தோட தரம் கூடிக்கிட்டே இருக்கு

அதிலும் உரையாடல்கள் அமைக்கிற முறை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் திவ்யா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.\\

உங்கள் மன்மார்ந்த பாராட்டிற்கும் , ஊக்கத்திற்கும் நன்றி தமிழன்!

உங்க வாழ்த்து பழிக்கட்டும்!!

said...

///\\ தமிழன்... said...
கதை கதை... காதல் கதை...

(நல்ல ஆரம்பம்...)\\

வாங்க தமிழன்!

பாராட்டிற்கு நன்றி!!

[நீங்க பதிவை படிச்சீங்களா??

கதையில் காதல் எங்கே வருது??

திவ்யா காதல் கதை தான் எழுதியிருப்பான்னு நம்பிக்கையில் பின்னூட்டம் போட்டுட்டீங்களோ??///

அப்பயெல்லாம் கேட்கப்படாது:)))))
எப்படியும் அங்கதான வந்து முடியும்...தலைப்பு பாத்தா அப்படித்தான தெரியுது...????

said...

திவ்யா...said...

///உள்குத்து வைச்சு பேசுற பழக்கமெல்லாம் எனக்கு இல்லீங்க....எல்லாம் டைரக்ட் 'வெளி' குத்து தான்!!///

பதிவுலகில் வன்முறை!!!!

(பாத்துதான் பின்னூட்டம் போடணும்...)

said...

வெல்டன் திவ்யா
வசனங்கள் நன்றாக உள்ளது.
நீங்க திரைக்கதை வசனம் எழுதப் போகலாம். கண்டிப்பாக வாய்ப்பு உண்டு.
ட்ரை பண்ணுங்களேன். தமிழ் திரையுலகம் இதுபோன்ற எழுத்தாளர்களை எதிர்பர்த்துத் தவம் கிடக்கிறது.
(நான் ஐஸ் வைக்கலமா தாயீ, உண்மையை சொன்னேன்)

said...

விரைவில் அடுத்த பகுதியைப் பதிக்கவும்

said...

ஆஹா கிளம்பிட்டாய்ங்கய்யா... கிளம்பிட்டாய்ங்க... இன்னி 3 பாகம் எழுதாம விடமாட்டாய்ங்களே... நம்மளும் 3 பாகத்தையும் படிக்காம விடமாட்டோமே!!

சஸ்பென்ஸாதான் முடிச்சிருக்கீங்க...! :-)

said...

ரொம்ப ஆர்வமா படிச்சிகிட்டு இருக்கிறப்போ தொடரும் போட்டுட்டீங்களே? வேற வழி காத்திருக்க வேண்டியது தான்:)

said...

//இப்படி 'அழகு, அறிவு,அடக்கம், அம்சம்' நிறைஞ்ச பொண்ணுங்க single & available ஆ இருக்கிறதே அபூர்வமாய் போச்சு//

rotfl.. சரியா சொன்னீங்க....

said...

//உடனே உன் இங்கிலீஷ் புலமையை அவித்துவிட்டா எனக்கு ஒன்னும் புரியாம மண்டையை ஆட்டுவேன்னு //

ஹா ஹா ஹா....

//உடனே ஃபோன் பண்ணினா, பொண்ணு பார்க்க போன அன்னிக்கே பிடிச்சிருக்குன்னு கவுந்துட்டான், இப்போ உடனே ஃபோன் பண்ணி வழியுறான்னு அவ நினைச்சுட்டா??..//

என்னமோ சிங்கிள் avaliable னு வீர வசனம் பேசிட்டு இப்படி ஜகா வாங்குறாரே மாப்பி சார்.....

said...

//ஆங்......நான்....நாளைக்கு பேசுறேன்.....பார்க்கலாம் பை"//

அப்போ ஆப்பு காத்துக்கிட்டு இருக்குனு நினைக்கிறேன்.. :)

//ஃபோன்ல பேசவே இவ்வளவு தயங்குரா, நேர்ல எப்படி பேசுவாளோ//
கண்டிப்பா வாய்'ல தான் பேசுவா... டோன் ஓர்ரு பிரதர்..

said...

// நறுக்கென்று பேசி ஃபோன் கட் செய்துவிட்டு ஆட்டோவில் வீடு போய் சேர்ந்தேன்.//

டேய் நீ விழுந்ததுக்கு அவ என்னடா பண்ணுவா..

//ஃபோன் பண்ண எத்தனித்த போது, அவளிடமிருந்து கால்//
அது எப்படி கரெக்டா இவரு கால் பண்ணனும்'னு நினைக்கும் போது அவங்க கால் பண்ணுவாங்க?

டேய் ரகு சைக்கிள் கேப் நோ கெட வெட்டிங்க் சொல்லிப்புட்டேன்..

said...

//பொண்ணுக்கு தான் நம்மை மீட் பண்ண எவ்வளவு ஆசை......பிடிச்சிருக்கு....ரொம்ப பிடிச்சிருக்கு!!
//

மாப்பு வைக்க போறா ஆப்பு.. ரெம்ப எதிர்ப்பார்க்காத.....

said...

//ப்ளீஸ்.....டோன்ட் டச் மீ"//

ஓ இங்கிலிஷ்.....

//நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.........மீரா இப்படி.....டக்கென்று//

ஒவரா எதிர்ப்பார்த்தா இப்படி தான்... ஹி ஹிஹிஹிஹி.....

நெக்ஷ்ட் எபி எப்போ புட்டிங்?

said...

80 ரவுண்டா

said...

80 ரவுண்டா

said...

\\ தமிழன்... said...
///\\ தமிழன்... said...
கதை கதை... காதல் கதை...

(நல்ல ஆரம்பம்...)\\

வாங்க தமிழன்!

பாராட்டிற்கு நன்றி!!

[நீங்க பதிவை படிச்சீங்களா??

கதையில் காதல் எங்கே வருது??

திவ்யா காதல் கதை தான் எழுதியிருப்பான்னு நம்பிக்கையில் பின்னூட்டம் போட்டுட்டீங்களோ??///

அப்பயெல்லாம் கேட்கப்படாது:)))))
எப்படியும் அங்கதான வந்து முடியும்...தலைப்பு பாத்தா அப்படித்தான தெரியுது...????\\

அப்போ தலைப்பு மட்டும் பார்த்துட்டு நேரா பின்னூட்டம் போட வந்துட்டீங்களா தமிழன்????

just kidding:))

said...

\\ தமிழன்... said...
திவ்யா...said...

///உள்குத்து வைச்சு பேசுற பழக்கமெல்லாம் எனக்கு இல்லீங்க....எல்லாம் டைரக்ட் 'வெளி' குத்து தான்!!///

பதிவுலகில் வன்முறை!!!!

(பாத்துதான் பின்னூட்டம் போடணும்...)\

தமிழன்!!
இதுக்கே வன்முறைன்னு சொல்லி பயந்துட்டா எப்படி???

said...

\\ மனதோடு மனதாய் said...
வெல்டன் திவ்யா
வசனங்கள் நன்றாக உள்ளது.
நீங்க திரைக்கதை வசனம் எழுதப் போகலாம். கண்டிப்பாக வாய்ப்பு உண்டு.
ட்ரை பண்ணுங்களேன். தமிழ் திரையுலகம் இதுபோன்ற எழுத்தாளர்களை எதிர்பர்த்துத் தவம் கிடக்கிறது.
(நான் ஐஸ் வைக்கலமா தாயீ, உண்மையை சொன்னேன்)\\

வாங்க புகழ் அழகன்!

முதன் முறையாக என் வலைதளம் வந்திருக்கிறீங்க, நன்றி!!

திரைபடத்துக்கு கதைவசனம் எழுதுற அளவுக்கெல்லாம் நான் இன்னும் வரலீங்க......

நீங்க சினிமா எடுக்கிறதா இருந்தா சொல்லுங்க....கண்டிப்பா வசனம் எழுதித்தர முயற்சிக்கிறேன்!!!

said...

\\ மனதோடு மனதாய் said...
விரைவில் அடுத்த பகுதியைப் பதிக்கவும்\\

விரைவில் பதிக்கிறேன்.....

said...

\\ கருப்பன்/Karuppan said...
ஆஹா கிளம்பிட்டாய்ங்கய்யா... கிளம்பிட்டாய்ங்க... இன்னி 3 பாகம் எழுதாம விடமாட்டாய்ங்களே... நம்மளும் 3 பாகத்தையும் படிக்காம விடமாட்டோமே!!

சஸ்பென்ஸாதான் முடிச்சிருக்கீங்க...! :-)\\

வாங்க கருப்பன்,

நீங்க சொன்னதுக்காகவே கண்டிப்பா இன்னும் 3 பகுதிக்கு கதையை கொண்டு போய்ட வேண்டியதுதான்!!
நீங்களும் படிக்காம விட்டுடாதீங்க கருப்பன்!!

said...

\\ நிஜமா நல்லவன் said...
ரொம்ப ஆர்வமா படிச்சிகிட்டு இருக்கிறப்போ தொடரும் போட்டுட்டீங்களே? வேற வழி காத்திருக்க வேண்டியது தான்:)\\

வாங்க நல்லவன்........நிஜம்மா நல்லவன்!

விரைவில் அடுத்த பகுதி பதிக்கிறேன்,

வருகைக்கு நன்றி!!

said...

\\ My days(Gops) said...
//இப்படி 'அழகு, அறிவு,அடக்கம், அம்சம்' நிறைஞ்ச பொண்ணுங்க single & available ஆ இருக்கிறதே அபூர்வமாய் போச்சு//

rotfl.. சரியா சொன்னீங்க....\\

நீங்க ஒத்துக்கிட்டா சரிதான் கோப்ஸ்!!

said...

\\ My days(Gops) said...
//உடனே உன் இங்கிலீஷ் புலமையை அவித்துவிட்டா எனக்கு ஒன்னும் புரியாம மண்டையை ஆட்டுவேன்னு //

ஹா ஹா ஹா....

//உடனே ஃபோன் பண்ணினா, பொண்ணு பார்க்க போன அன்னிக்கே பிடிச்சிருக்குன்னு கவுந்துட்டான், இப்போ உடனே ஃபோன் பண்ணி வழியுறான்னு அவ நினைச்சுட்டா??..//

என்னமோ சிங்கிள் avaliable னு வீர வசனம் பேசிட்டு இப்படி ஜகா வாங்குறாரே மாப்பி சார்.....\\

மாப்பியின் 'ஈகோ' இப்படி 'ஜகா' வாங்க சொல்லுது!!

said...

\\ My days(Gops) said...
//ஆங்......நான்....நாளைக்கு பேசுறேன்.....பார்க்கலாம் பை"//

அப்போ ஆப்பு காத்துக்கிட்டு இருக்குனு நினைக்கிறேன்.. :)

//ஃபோன்ல பேசவே இவ்வளவு தயங்குரா, நேர்ல எப்படி பேசுவாளோ//
கண்டிப்பா வாய்'ல தான் பேசுவா... டோன் ஓர்ரு பிரதர்..\\

பின்னூட்டதிலும் மொக்கை பதில்.....உங்களை அடிசுக்க ஆளில்ல கோப்ஸ்!!

said...

\\ My days(Gops) said...
// நறுக்கென்று பேசி ஃபோன் கட் செய்துவிட்டு ஆட்டோவில் வீடு போய் சேர்ந்தேன்.//

டேய் நீ விழுந்ததுக்கு அவ என்னடா பண்ணுவா..

//ஃபோன் பண்ண எத்தனித்த போது, அவளிடமிருந்து கால்//
அது எப்படி கரெக்டா இவரு கால் பண்ணனும்'னு நினைக்கும் போது அவங்க கால் பண்ணுவாங்க?

டேய் ரகு சைக்கிள் கேப் நோ கெட வெட்டிங்க் சொல்லிப்புட்டேன்..\\

கரெக்ட் டைம்ல ஃபோன் கால் வர்ரதெல்லாம் 'டெலிபதி' கோப்ஸ்!!

said...

\\ My days(Gops) said...
//பொண்ணுக்கு தான் நம்மை மீட் பண்ண எவ்வளவு ஆசை......பிடிச்சிருக்கு....ரொம்ப பிடிச்சிருக்கு!!
//

மாப்பு வைக்க போறா ஆப்பு.. ரெம்ப எதிர்ப்பார்க்காத.....
\

மாப்பு பாவம்....ஏன் அவரை இப்படி பயமுறுத்துறீங்க!!

said...

\\ My days(Gops) said...
//ப்ளீஸ்.....டோன்ட் டச் மீ"//

ஓ இங்கிலிஷ்.....

//நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.........மீரா இப்படி.....டக்கென்று//

ஒவரா எதிர்ப்பார்த்தா இப்படி தான்... ஹி ஹிஹிஹிஹி.....

நெக்ஷ்ட் எபி எப்போ புட்டிங்?\

நெக்ச்ட் எபி புட்டிங் ஷார்ட்லி.....!!

said...

\ My days(Gops) said...
80 ரவுண்டா
\\

நன்றி கோப்ஸ்!!

said...

\\ My days(Gops) said...
80 ரவுண்டா\

எத்தனை தடவை...80 போடுவீங்க???

said...

//எத்தனை தடவை...80 போடுவீங்க???
//

he he he he konjam server problem la double time published he he he

egooosme ah plz.

said...

ivlo dhooram vandhaachi

said...

oru century pottutu

said...

pona thaaan nanna irukum :D

said...

100 potaaachi

said...

101 moi vachachi.....

said...

///Divya said...
வாங்க நல்லவன்........நிஜம்மா நல்லவன்!///

சொல்லுற விதத்திலேயே சந்தேகம் தொக்கி நிற்கிறமாதிரி இருக்கு. பேர் ராசி அப்படி!!!!!

said...

//கரெக்ட் டைம்ல ஃபோன் கால் வர்ரதெல்லாம் 'டெலிபதி' கோப்ஸ்!!
//

ஓ இதுதான் 'டெலி' 'பதி'யா?? எனக்கு தெரியாதே!!!

said...

//Divya said...
\\ தமிழன்... said...
திவ்யா...said...

///உள்குத்து வைச்சு பேசுற பழக்கமெல்லாம் எனக்கு இல்லீங்க....எல்லாம் டைரக்ட் 'வெளி' குத்து தான்!!///

பதிவுலகில் வன்முறை!!!!

(பாத்துதான் பின்னூட்டம் போடணும்...)\

தமிழன்!!
இதுக்கே வன்முறைன்னு சொல்லி பயந்துட்டா எப்படி???
//

தமிழன், பதிவுலகில் வன்முறைய எதிர்த்து உடனடியா ஒரு கழகத்த ஆரம்பிக்கனும்! இல்லனா நமக்கு எல்லாம் பாதுகாப்பு இல்ல!!

said...

கதைப்படிக்க படிக்க மனத்தைக் கடடிப்போட்டுவிடுகிறது.

said...

\\ My days(Gops) said...
100 potaaachi\\

Century ku oru spl thanks Gops!!

said...

\\ sathish said...
//கரெக்ட் டைம்ல ஃபோன் கால் வர்ரதெல்லாம் 'டெலிபதி' கோப்ஸ்!!
//

ஓ இதுதான் 'டெலி' 'பதி'யா?? எனக்கு தெரியாதே!!!\\

இப்போ தெரிந்துக்கொண்டீர்களா சதீஷ்!!

said...

\\ திகழ்மிளிர் said...
கதைப்படிக்க படிக்க மனத்தைக் கடடிப்போட்டுவிடுகிறது.\\

வாங்க திகழ்மிளிர்,

உங்கள் மனதை கதை கட்டிப்போட்டதா???? மிக்க மகிழ்ச்சி!!

நன்றி திகழ்மிளிர்!!!

said...

எப்படி இப்படி வார்த்தைகளை அழகாக கோர்த்து கதை எழதுகிறிர்கள்...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

said...

ஆகா ஆகா கதை தொடங்கியாச்சா! சூப்பர். நல்ல எடத்துல நிப்பாட்டீருங்க. திவ்யா கதை ஏழுதுனா கேக்கனுமா என்ன?

said...

\\ தினேஷ் said...
எப்படி இப்படி வார்த்தைகளை அழகாக கோர்த்து கதை எழதுகிறிர்கள்...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\

வாங்க தினேஷ்,

உங்கள் அழகான பின்னூட்ட உற்சாகத்திற்கு நன்றி!!

said...

\\ G.Ragavan said...
ஆகா ஆகா கதை தொடங்கியாச்சா! சூப்பர். நல்ல எடத்துல நிப்பாட்டீருங்க. திவ்யா கதை ஏழுதுனா கேக்கனுமா என்ன?\\

சிறந்த கதாசிரியர்...உங்களது வரவு பேருவகை அளிக்கிறது ராகவன்!!

மனமார்ந்த நன்றி!!