November 01, 2009

இதழால் 'கவி' எழுது...........!!


யார் யாரோ
என் கவிதையை
பாராட்டிய போதெல்லாம்
சும்மாதான் இருந்தது மனசு
நீ பாராட்டாய் தந்த
முதல் முத்தம் பெறும் வரை!







பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது!







உனக்காக
ஏதாவது எழுத
ஆரம்பித்தால் மட்டுமே
கவிதை வரைகிறது பேனா...
காதல் 'மை' நிரம்பினால் தானே
கவிதை பிறப்பிக்கும்
என் பேனாவும்!!








உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!







உன்னை எதுவும் கேட்காமலே
உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னையே விரும்புகிறாய்
என்பதை சற்றேனும்
உணராமல்!!!








உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???







உனக்காக எழுதிய
கவிதை எனத்தெரிந்தும்
"எனக்கா??' என
கேட்டு புன்னைக்கும்
உன் சிரிப்பிற்கு முன்
என் கோபம் செயலிழந்து
போகின்றதடா போக்கிரி!








முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!