December 21, 2006

விரும்பி படிக்கும் வலைதளங்கள்....

பெண்களின் கைவண்ணம்..


G3[காயத்ரி]

அருணா

ஷாலினி

தமிழ்மாங்கனி[காயத்ரி]

எழில் பாரதி

ஸ்வேதா

ரம்யா

திவ்யப்ரியா

பாசமலர்

துர்கா

இம்சை அரசி

கவிதாயினி காயத்ரி

நிவிஷா


கவிஞர்களின் சாம்ராஜ்ஜியம்!!!

நவீன் ப்ரகாஷ்

ஸ்ரீ

தமிழன்

ரிஷான்

சதீஷ்

ஜே.ஜே.ரீகன்

பிரேம் குமார்

சுரேஷ்

சேவியர்

கோகுலன்

ரவிஷ்னா

புனிதா

சஹாரா

ப்ரவீனா

லெக்ஷ்மி சாஹம்ப்ரி


கதாசிரியர்களின் களஞ்சியம்!!!

வெட்டிபயல்

ஜி

ரிஷான்

தேவ்

ஜி.ராகவன்

வினையூக்கி

பானுவாசன்[kay yes]கதம்பம்[கதை,கவிதை,கட்டுரை,கலாய்த்தல்...கலவையான கலக்கல்ஸ்]


ஜொள்ளு பாண்டி

சச்சின் கோப்ஸ்

நாட்டாமை ஷ்யாம்

கப்பி பய

ராம்

சிவிஆர்

தினேஷ்

அருண் குமார்

கோபிநாத்

நாமக்கல் 'சிபி'

கே.ஆர்.எஸ்

விஜய்

ஆயில்யன்

குசும்பன்

ரசிகன்

சஞ்சய்

நிஜம்மா நல்லவன்

புகழன்

கருணா கார்த்திக்கேயன்

கார்த்திக்

முகுந்தன்

அரைபிளேடு


ரசிக்கும் தங்கிலீஷ்/இங்கிலீஷ் பக்கங்கள்..

உஷா

வித்யா சங்கர்[கில்ஸ்]

மாஸ்க்

செந்தில்

சிவிஆர்

கவிதா


சிந்தனையாளர்களின் செதுக்கல்கள்:

சந்தோஷ்

ஜோசஃப் பால்ராஜ்

எஸ்.பாலபாரதி

சத்யப்ரியன்

December 18, 2006

மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!
'பெண்களை கவர்வது எப்படி' என்ற பதிவிட எனக்கு தெரிந்த பெண்களிடம் கருத்துக்கள் சேகரிக்க இலகுவாகயிருந்தது [ சொந்த கருத்துக்களையும் ஆங்காங்கே கலந்துவிடவும் வசதியாக இருந்தது!!] ஆனால் ' மனைவியை கவர்வது எப்படி' என்ற பதிவிட மணமான பெண்களிடம் கருத்துக்கள் கேட்டு விஷயத்தை வாங்க கொஞ்சம் சிரமமாகயிருந்தது. நான் துலாவி துலாவி கேள்வி கேட்டால் ' என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.


அதனால் நைசாக பேசி, நாசூக்காக நான் கேட்டு தெரிந்துக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில், மனைவியை கவர சில டிப்ஸ்................

டிப்ஸ் -1:
ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:


தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.


மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும் மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:
பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.
[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:
மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:
பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:
உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது ,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான் என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின் பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும் நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல் போகுமா???

உங்கள் மணவாழ்வு இனிக்க என் வாழ்த்துக்கள்!!!!

December 14, 2006

பெண்களை கவர்வது எப்படி???

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பதிவிடுகிறேன், இது என் தனிபட்ட கருத்துக்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க!!!

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றாக பார்க்கலாம்....

நிறம்:ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
அதனால் ' fair lovely' , 'emami men's fairness cream' எல்லாம் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஆண்களுக்கு இல்லை.
[இன்றைய நடிகர்களில், ஷ்ரிகாந்தை விட விஷாலுக்கு தான் பெண் விசிறிகள் அதிகம்!]

முக தோற்றம்:ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து.

மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை., காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக மெயின்டேன் பண்ண தெரிவதில்லை என்பதுதான்.
சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.
மேலும் சிலருடைய முக தோற்றதிற்கு மட்டுமே ' french beard' [குறுந்தாடி] பொருத்தமாக இருக்கும். ஃபேஷன் , ஸ்டையில் என்பதற்காக பொருத்தமில்லாமல் ' french beard' வைத்தால் கேலிக்குறியதாகி விடும்.

உடை அலங்காரம்:


பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸை' [ dress sence] ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள்.பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல் , தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது , போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இனறைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் - டி ஷர்ட்.
இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் அதிக மார்க் ஸ்கோர் பண்ணிவிடலாம்.

சிகை அலங்காரம்:லேட்டஸ்ட் ஸ்டைல் படி ஆண்கள் தங்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டாலும் , பெரும்பான்மையான பெண்களுக்கு ஆண்கள் தங்கள் கழுத்துக்கு கீழ் முடி வளர்த்துக் கொள்வது பிடிப்பதில்லை.
அதற்காக உச்சி[ வகிடு] எடுத்து , படிய தலை வாரிக்கொள்ள வேண்டும் என அர்த்தமில்லை. பரட்டை தலையாக, ஒழுங்காக தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது பெண்களை முகம் சுளிக்க வைக்கும்.

உடல் தோற்றம்;

ஆண்களின் உயரத்தை பொருத்தவரையில் சராசரியான உயரமே [5'8"]போதுமானது. சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.


மிகவும் மெலிந்த , ஒல்லியான தோற்றம் பெண்களை கவர்வதிலலை, அதற்காக தொந்தி, தொப்பை வைத்துக் கொள்ளகூடாது. உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும்.
ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு காரணம் இதுவே.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை[ perosnal details] நோண்டி நோண்டி கேட்க கூடாது.
அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் - அவள் முகத்தை மட்டும்!


முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். [ மீனுக்கு நீச்சல் கற்று தரனுமா என்ன??]

மேற்கூறியவை அனைத்தும் எனக்குத் தெரிந்த பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!

December 12, 2006

கல்லூரி கலாட்டா - 6
கலாட்டா -1
கலாட்டா -2
கலாட்டா -3
கலாட்டா -4
கலாட்டா -5ரமேஷ் தன்னருகில் விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த போது, அவன் அம்மா அழுதுக் கொண்டிருப்பதை கண்டான்.

ரமேஷின் அம்மாவும், அப்பாவும் அவன் மாமாவோடு வந்திருந்தனர். அதே சமயம் டாக்டருடன் ரம்யாவும் அவள் அப்பாவும் ரமேஷின் ரூமிற்குள் வந்தனர்.

' இந்த பொண்ணுதான் நம்ம ரமேஷோட காலையில ஆஸ்பத்திரிக்கு போனா' என தன் தங்கையின் காதில் கிசு கிசுத்தார் ரமேஷின் மாமா.

தன் அப்பாவிற்கு பின் மறைவாக நின்று கொண்டு கண்விழித்திருந்த ரமேஷை பார்த்தாள் ரம்யா.
அந்த பார்வையில் பரிதாபமோ, பட்சாதாபமோ, இரக்கமோ, கோபமோ, வருத்தமோ ....எந்த ஊணர்வையும் உணர முடியவில்லை ரமேஷிற்கு. எப்படிதான் இப்படி 'ஒண்ணும் தெரியாத குழந்தை' மாதிரி முகத்தை வைச்சிக்கிறாளோ என ஆச்சரியபட்டான் ரமேஷ்.

" இவ பெயர் ரம்யா, இவ தான் உங்க பையன சரியான நேரத்துல இங்க வந்து அட்மிட் பண்ணினா, இவர் அவளோட அப்பா, என்னோட க்ளோஸ் ஃபிரண்ட்" என்று ரம்யாவையும், அவள் அப்பாவையும் ரமேஷ் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் டாக்டர்.

நன்றியுணர்வும் ஒரு வித பாசமும் கலந்த கண்களுடன் ரமேஷின் அம்மா ரம்யாவின் இரு கரங்களையும் பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினாள்.

" என்னமா இது கண்கலங்கி கிட்டு, இந்த உதவி கூட செய்யலீனா எப்படிமா? , நீங்க இப்பதான் ஊரிலிருந்து வந்தீங்களா? ஏதும் சாப்பிடீங்களா, நான் வேணா வாங்கிட்டு வரட்டுமா?" என்று ரமேஷின் அம்மாவிடம் அக்கறையுடன் கேட்டாள் ரம்யா.

'ஐயோ! ஐயோ! என்னமா நடிக்கிறா பாரு, அம்மா அவ ராட்சஸி ,நல்லா நடிக்கிறா மா, நம்பாதீங்க' என்று கத்த வேண்டும் போலிருந்தது ரமேஷிற்கு.

ரம்யாவின் அழகும், பணிவும் ரமேஷின் அம்மாவை வெகுவாக கவர்ந்தன.

' பையன் புடிச்சாலும் நல்ல புள்ளையாதான் புடிச்சிருக்கான்' என மனதிற்குள் பூரித்துக் கொண்டாள்.
' ஆனா , இரண்டு பேரும் எதுக்கு ஆஸ்பத்திரிக்கு காலையில போனங்கன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் கண்டிச்சு வைக்கனும், இந்த காலத்து புள்ளைகளுக்கு எல்லாத்துக்கும் அவசரம், முதல்ல இவன் உடம்பு சரியாகட்டும் ' என மனதில் ஒரு திட்டமே தீட்டினாள் ரமேஷின் அம்மா.

இரண்டு நாட்களில் ரமேஷின் உடம்பு நன்கு் தேறியது. காலேஜில் க்ளாஸ் முடிந்து ரமேஷின் ஃப்ரண்ட்ஸ் நேராக ரமேஷை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

" என்னடா மச்சி, ஃபர்ஸ்ட் இயர்ஸ்க்கு க்ளாஸ் ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆகுது, அதுக்குள்ள சூப்பர் ஃபிகருக்கு ப்ராக்கட் போட்டுட்ட, 3 வருஷமா வண்டி வண்டி யா கடலை வறுத்த, ஆனா இப்பதான் ஆளு மாட்டுச்சாக்கும்" என கிண்டல் அடித்தனர் அவன் நண்பர்கள்.

" சே, அதெல்லாம் ஒண்ணுமில்லடா......" என்று ரமேஷ் சமாளிக்க முயல,
" என்ன எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா? அன்னைக்கு கம்பியூட்டர் லேபிற்கு தனியா கூப்பிட்டு பேசியிருக்க, இங்க ஆஸ்பத்திரியில என்னனா அவ விழுந்து விழுந்து உன்ன கவனிச்சுக்கிறா, எங்களுக்கு எல்லாம் புரியுது மாமு" என்று கலாய்த்தார்கள். பின நண்பர்கள் அனைவரும் ஹாஸ்டலுக்கு சென்றுவிட்டனர்.

' அடபாவமே! உண்மையில என்ன நடந்ததுன்னு இவனுங்களுக்கு எப்படி சொல்லி புரியவைக்கிறது, அவ மேல எனக்கு அப்படி எந்த ஈர்ப்பும் ஈடுபாடும் இல்லன்னு சொன்னா புரிஞ்சுக்கவா போறாங்க' என்று மனதிற்குள் ரமேஷ் நினைத்போது, இன்னும் ஒரு நினைப்பும் வந்தது அவனுக்கு.........

' பசங்க சொல்றமாதிரி அவ என்னையும் அம்மாவையும் கவனிச்சிக்கிறது உண்மைதான், அப்படின்னா........ஒருவேளை அவ மனசுல...........என்........மேல.......ஏதும் அப்படி ....ஒரு எண்ணம்............' என்று அவன்
நினைத்து முடிப்பத்ற்குள் சிறிது திறந்திருந்த அவன் ரூமின் கதவு வழியாக வெளியில் பேச்சு குரல் கேட்டது.

முப்பெருந்தேவிகளின் குரல் தான் [ஒட்டு] கேட்டு ரமேஷிற்கு பரிட்சயமாகிவிட்டதே, அதனால் வெளியில் பேசி கொண்டிருப்பது அவர்கள் மூவரும் தான் என தெரிந்து கொண்டான், கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் அவர்கள் உரையாடலை....................

ஷீத்தல்: ஏய் ரம்ஸ் இன்னிக்கோட மூனு நாள் ஆச்சு, டெய்லி காலையில காலேஜ் போறதுக்கு முன்னாடி ஆஸ்பத்திரிக்கு வந்து ரமேஷ பார்க்கிற, உன் அப்பா கிட்ட சொல்லி டாக்டர நல்லா கவனிச்சுக்க சொல்ற, அவன் மாமா வீட்டுல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்கன்னு ராத்திரி ஆனா அவன் அம்மாவுக்கு டிஃபன் பாக்ஸ்ல வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துட்டு வர........என்ன இதெல்லாம்??

பவானி: ஆமா ரம்ஸ் , நானும் கேட்கனும்னு தான் இருந்தேன், ஆர் யு இன் லவ் ???

ரம்யா: ஐயோ , ஐயோ!! உங்க கற்பனை சிறகை அப்படியே தட்டி பறக்க விட்டுடிங்களா,
ரோட்டுல அடிபட்டு கிடந்த ஒருத்தருக்கு உதவி செய்றது, ஆஸ்பத்திரில சேர்க்கிறது இதெல்லாம் மனிதாபிமானம் . அடிபட்டு கிடந்தது அறுபது வயசு ஆளாயிருந்தாலும் இதே ஹெல்ப் தான் பண்ணியிருப்பேன், அதுவும் ரமேஷிற்கு இப்படி ஆனதிற்கு நானும் ஒரு காரணம்,
ரமேஷ் ஹாஸ்டல் ஸ்டுடண்ட்ற முறையில என் வீட்டிலிருந்து அம்மா சாப்பாடு கொடுத்தனுப்புறாங்க.
இதுக்கெல்லாம் பெயர் உங்க அகராதில ' காதல்' னா நான் ஒண்ணும் பண்ண முடியாது.

ஒருத்தர் மேல இரக்கபடுறதினாலயோ, உதவி செய்றதினாலயோ, நன்றியுணர்வு ஏற்படுவதினாலயோ காதல் வரும்னு நான் நினைக்கல.

ஷீத்தல: ஹேய் ரம்ஸ் உனக்கு அவன் மேல லவ்ஸ் இல்ல ஓ.கே, ஒருவேளை அவனுக்கு ' பாவம் பொண்ணு' அடிச்சுட்டோமே , நம்மள ஆஸ்பத்திரியில கொண்டுவந்து வேற சேர்த்திருக்கா, அப்படி ........இப்படின்ன்னு ....ஃபீலிங்ஸ் வந்து , உன் மேல லவ்ஸ் வந்திருக்குமோ???

ரம்யா: சே, சே.........அவன பார்த்தா அப்படி தெரியல.

பவானி: எதை வைச்சு இவ்வளவு உறுதியா சொல்ற??

ரம்யா: அவன் கண்ணுல இன்னும் என் மேல கோபம் இருக்கு, மோர் ஓவர்...........மோதல்னா அப்புறம் காதல்னு
சினிமாத்தனமா அவன் மூளை வேலை செய்யும்னு எனக்கு தோனல.

பவானி: அவன் மூளை வேலையே செய்யாதா, இல்ல அவன் மூளை சினிமாத்தனமா வேலை செய்யாதுன்னு சொல்றியா??

ரம்யா: இது ரொம்ப ஓவர் பவானி..........விட்டா அவனுக்கு மூளைன்னு ஒன்னு இருக்கான்னு கேட்ப போலிருக்கு?

ஷீத்தல்: ஹே, போதும் நம்ம அரட்டை, அப்புறமா பேசலாம், ரமேஷிற்கு ஏற்கனவே பாம்பு காது, இப்போ நாம பேசினது
எல்லாம் கேட்டுட்டு இருந்தாலும் இருந்திருப்பான்.

பவானி: பாவம் ரம்யா, அப்புறம் இதுக்கு வேற இன்னொரு அரை வாங்க போறா ............

இப்படி இவர்கள் பேசி கோண்டிருக்க , ரமேஷின் மாமாவும், அம்மாவும் வந்து விட, மூன்று தேவிகளும் தங்கள் அப்பாவி முகக்களைக்கு வந்தனர்.

அவர்கள் மூவரும் பேசியது அனைத்தையும் கேட்ட ரமேஷ்............

' அதானே பார்த்தேன் ராட்சஸி அவ்வளவு லேசுல மாறுவாளா??? இன்னும் என்ன எல்லாம் டிராமா போட போறாளோ? '
ஆனாலும், என்னமோ ' அழகிய ராட்சஸியின்' வாயாடி தனமும், குறும்பும் நல்லாதான் இருக்கு!

என நினைத்துக் கோண்டான் ரமேஷ்.

கல்லூரியில் மோதல்னா அது காதல்லதான் முடியும்ன்ற சராசரி எண்ணம் ரம்யாவிற்கு இல்லாதது அவனுக்கு பிடித்திருந்தது.


கண்ணும் கண்ணும் நோக்கினால்- காதல் பிறக்கலாம்

உடல் ஸ்பரிசத்தினால்- மோகம் பிறக்கலாம்

வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????

[முற்றும்]

December 10, 2006

கல்லூரி கலாட்டா - 5கலாட்டா -1
கலாட்டா -2
கலாட்டா -3
கலாட்டா -4

தான் மாடிப்படிகளில் மோதியது , தன் ' தாய் மாமா' மீது என்று கண்டதும், ரமேஷின் முகம் வெளிறிபோனது.

"டேய் ரமேசு, இந்நேரத்துக்கு ஆஸ்பத்திரி வந்திருக்க? உடம்பு கிடம்பு சரியில்லையாப்பா? உடம்புக்கு என்ன?? " என்று அக்கறையுடன் விசாரித்தார் மாமா.

என்ன பதில் சொல்வது என ரமேஷ் யோசித்து கொண்டிருக்கும்போது ,

"அங்க என்ன பண்ணிட்டிருக்கிறீங்க, சீக்கிரம் மேல வாங்க, டாக்டர் கிட்ட போகனும் இல்ல" என்று மேல் படிகளிலிருந்து ரம்யா குரல் கொடுத்தாள்.

' ஒரு பொண்ணு கூட டாக்டர் கிட்ட போறானா??????' என்று திகைத்துப் போன மாமாவின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் பல விதத்தில் அலை மோதிட.......வாய் பிளந்து அவர் நின்ற சமயத்தில் " மாமா ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன்" என்று கூறி விட்டு அவசரமாக மாடி படிகளில் ஏறினான் ரமேஷ்.

சிறு காயத்திற்கு மருந்து போட எவ்வளவு நேரம் ஆக போகிறது, சீக்கிரம் டாக்டரிடம் காண்பித்துவிட்டு, மாடி படிகளில் இரண்டு இரண்டு படிகளாக தாவி தாவி இறங்கி , மாமா வை தேடினான் ரமேஷ்.

' எங்க போய்டார் மாமா அதுக்குள்ள' என ரமேஷ் மாமா வை தேடி கொண்டிருக்க,

" மெக்கானிக் ஷாப் வந்து உங்க பைக் சாவி வாங்கிகோங்க" என் கூறினாள் ரம்யா.

அதே சமயம் ரமேஷின் செல் ஃபோன் சிணுங்க, " சரி நீ போ, நான் வந்து வாங்கிக்கிறேன்" என பதலளித்துவிட்டு தன் ஃபோனை ஆன் செய்தான்.

" அடபாவி, இப்படி தலையில கல்ல தூக்கி போட்டுடியே, ஏண்டா படிக்கிற வயசுல உன் புத்தி இப்படி போகுது " என்று ரமேஷின் அம்மா ஃபோனில் அர்ச்சனை செய்தாள் மறுமுனையில்.

" என்னமா சொல்றீங்க , நான் என்ன பண்ணினேன் " என்று ஒன்றும் புரியாமல் ரமேஷ் கேட்க,

"ஒரு பொண்ணை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போற அளவுக்கு தப்பு பண்ணிட்டு என்னன்னா கேட்குற, நீ பொண்ணுங்க கிட்ட சகஜமா பேசுறப்ப எல்லாம் என் பையன் தப்பு பண்ணமாட்டன் , எல்லார்கிட்டவும் ஃபிரண்டிலியா இருக்கிறான்னு நினைச்சேன்டா, இப்படி என் நினைப்புல மண்ண அள்ளி போடுட்டியே" என ரமேஷின் அம்மா கத்தி தீர்தாள் மகனிடம்.

மாமா நல்ல வத்தி வைச்சுட்டார் அதுக்குள்ள என புரிந்தது ரமேஷிற்கு.

" அம்மா, அப்படியெல்லாம் ஒன்னுமேயில்லமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க" என ரமேஷ் தன் தாயிடம் கெஞ்சி கொண்டிருக்க.......

" ஹலோ! என்ன உங்க பைக் சாவி வேண்டாமா?" என மிக சத்தமாக கேட்டுக் கொண்டே தன் ஸ்கூட்டியை அவனருகில் நிறுத்தினாள் ரம்யா.

ஃபோனை தன் கைகளால் மூடாமலே " ஏன் இப்படி கத்துற , கொஞ்சம் வெயிட் பண்ணு" என இவன் ரம்யாவிடம் சொல்ல,
ஃபோனின் மறுமுனையிலிருந்த ரமேஷின் அம்மாவிற்கு ரம்யாவின் குரல் நன்றாக கேட்டது.

ரமேஷ் அம்மாவின் ப்ரஷர் எகிற ஆரம்பித்தது,
" அடபாவி , உங்க மாமா சொன்னது எல்லாம் நிசம்தான் போலிருக்கு, நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும், உடனே சென்னைக்கு புறப்பட்டு வா" என்று கூறிவிட்டு ஃபோனை துன்டித்தாள்.

" அம்மா, அம்மா..........." என அலறினான் ஃபோனில் ரமேஷ்.

இவன் டென்ஷன் தெரியாமல் ரம்யா " சாவி கொடுக்க எவ்வளவு நேரம் வெயிட் பண்றது, தூக்கி போடுறேன் சாவிய பிடிச்சுக்கோங்க " என கூறி சற்று தூரம் தன் ஸ்கூட்டியில் சென்று விட்டு அங்கிருந்து பைக் சாவியை தூக்கி வீசினாள்.

சாவியை பிடிக்க வேகமாக வந்த ரமேஷ் பின்னால் வந்த காரை கவனிக்கவில்லை, கார் அவன் மீது மோத,
" அம்மா" என்ற அலறலுடன் சுயநினைவை இழந்தான் ரமேஷ்.கண்விழித்த போது ஆஸ்பத்திரி படுக்கையிலிருப்பதை உணர்ந்தான். அருகில் நண்பர்கள் எப்போது இவன் கண் திறப்பான் என ஏக்கத்துடன் இருந்தனர்.

ரமேஷ் கண் முழிச்சுட்டான்டா என்று ஃப்ரன்ட்ஸ் கூட்டம் உற்சாகமானது.
" டேய் இப்போ எப்படிடா இருக்கிற, ரமேஷ் நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம்டா,
நம்ம டிபார்ட்மெண்ட் ஃபர்ஸ்ட் இயர் ரம்யா தான் உன்ன இந்த ஆஸ்பத்திரில வந்து சேர்த்திருக்கா. அவளோட அப்பா சிபாரிசால உனக்கு ஸ்பெஷல் ரூம் கொடுத்திருக்காங்கடா"

" உன் அம்மாவிற்கு தகவல் சொல்லிட்டோம், ராத்திரி ட்ரெயினுக்கு வந்திடுவாங்க, இப்போ நீ ரெஸ்ட் எடு" என ஆளுக்கொரு தகவல் தந்தனர்.

" ராட்சஸி பண்றதும் பண்ணிட்டு , ஆஸ்பத்திரில வேற கொண்டு வந்து சேர்த்திருக்காளா' என நினைத்துக் கொண்டான் ரமேஷ். சற்று நேரத்தில் அயர்ந்து உறங்கி போனான்.

மிக அருகில்.........விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த ரமேஷ்..........தன் கரங்களை முகத்தில் பதித்து கொண்டு அழுவது யார்?????? ,என பார்த்த போது.........

கல்லூரி கலாட்டா - 6

December 07, 2006

கல்லூரி கலாட்டா - 4
கலாட்டா -1
கலாட்டா -2
கலாட்டா -3

ரமேஷ் தன் கன்னத்தில் அரைவான் என்று சற்றும் எதிர்பாராத ரம்யா, ஒரு நிமிடம் நிலைகொலைந்தாள்.

" என்ன அரஞ்சிட்ட இல்ல, என்ன பண்றேன் பாரு, நான் சும்மா விட மாட்டேன், என்னை எங்க வீட்டுல அப்பா அம்மா கூட அடிச்சதில்ல , நீ அடிச்சுட்ட இல்ல, எப்படி பதில் அடி கொடுக்கறேன் பாரு" என மூச்சு விடாமல் தொடர்ந்து கத்தினாள்.

" ஹேய் ரம்யா, நான் உன்னை அரையனும்னு எல்லாம் நினைக்கவேயில்ல, ஜஸ்ட் வார்ன் பண்ணி அனுப்பனும்னு தான் வர சொன்னேன், நீ அதிகமா பேசிட்ட, அதான்............டக்குனு...அடிச்சுட்டேன், ...ஐ அம் ......ஸோ....." என்று அவன் முடிப்பதற்குள்,

" நீ ' டி' போட்டு பேசினப்போவே நான் உன்ன அரைஞ்சிருக்கனும், சீனியர்னு கொஞ்சம் மரியாதை கொடுத்தா, நீ கை நீட்டுறியா? எப்படி உன்ன கவனிக்கனும்னு எனக்கும் தெரியும்" என்று கூறிவிட்டு லேபிலிருந்து வேகமாக வெளியேறினாள் ரம்யா.

' சே, பொண்ணுங்ககிட்ட என்னிக்கும் நான் இப்படி நடந்துக்கிட்டதில்லயே, எவ்வளவு ஃப்ரன்டிலியா இருப்பேன், இன்னிக்கு இப்படி அரஞ்சுட்டேனே' என ஃபீல் பண்ணினான் ரமேஷ்.

' இந்த ராட்சஸி வேற ராகிங், ரிப்போர்ட் னு ஏதேதோ சொன்னாளே, என்ன டிராமா போடபோறாளோ, கடவுளே!' என கொஞ்சம் பயமும் தொத்திக்கொண்டது ரமேஷிற்கு.

முதல் வருடத்திலிருந்தே கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்ந்தால் தான் நாலு வருஷம் கல்லூரி படிப்பு முடிக்கும் போது, ஒரு இரண்டு மூனு கம்பியூட்டர் லாங்குவேஜ் தெரியும் என சக மாணவர்களின் அறியுரையின் படி மூன்று தேவிகளும் ' Aptech' ல் கோர்ஸ் சேர்ந்திருந்தார்கள்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு க்ளாஸ் இருந்தது Aptech ல்,
பவானி மட்டும் தன் வீட்டிலிருந்து நேராக க்ளாஸ்க்கு சென்று விட்டாள்,
ரம்யாவும் ஷீத்தலும் ரம்யாவின் ஸ்கூட்டியில் வீட்டிலிருந்துப் புறப்பட்டனர்.

" ஆல்ரெடி ரொம்ப லேட் ஆச்சு ரம்ஸ், பவானி வெயிட் பண்ணிட்டு இருப்பா, சீக்கிரம் போ" என்று பின்னிருக்கையில் அமர்ந்தபடி ஷீத்தல் அவசரப்படுத்தினாள்.

Aptech சென்டர் இருந்த தெருவின் திருப்பத்தில் வேகமாக ஸ்கூட்டி திரும்ப, எதிரில் வந்த பைக்குடன் மோதி, ஸ்கூட்டி மட்டும் சரிந்து, கீழே விழுந்தனர் இருவரும்.
உடனே பக்கத்திலிருந்த பேக்கரியில் இருந்த அனைவரும் வந்து வண்டியை நேரே நிறுத்த, ரம்யாவும் ஷீத்தலும் எழுந்து பார்த்தால், ' பைக்கில் இருந்தது' ரமேஷ்.

கையில் ஏற்பட்ட சீராய்ப்பில் இருந்து வழிந்த ரத்தத்தின் சிவப்பு நிறத்தை விட ரம்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

" கண்ணு தெரில, இப்படியா ராங் சைட்ல பைக் ஓடிட்டு வர்ரது, உங்களுக்கெல்லாம் யாரு லைசன்ஸ் கொடுத்தா, " என்று கத்த ஆரம்பித்தாள் ரம்யா.

தவறு தன்னுடையது தான் என ரம்யாவிற்கு நன்கு தெரியும், எனினும் அருகில் இருந்த கூட்டத்திடம் " பாருங்க சார், எப்படி வந்து என் வண்டிய இந்த ஆளு இடிச்சுட்டாரு" என சப்போர்டுக்கு ஆள் சேர்த்தாள். ஒரு பொண்ணு கேட்டு சப்போர்டுக்கு வராமல் இருப்பாங்களா?

பொண்ணு சீன் கிரியேட் பண்ணி பழி வாங்குது என சுதாரித்துக் கொண்டான் ரமேஷ்.

" ஹலோ,யாரு ராங் சைட்ல வந்தா? பொண்ணு மாதிரியா வண்டி ஓட்டிடு வந்த நீ, என்னமோ ராக்கெட் ஓட்ர மாதிரி வேகமா வந்து என் பைக்ல இடிச்சுட்டு , இப்போ நீ கத்தினா உன் மேல தப்பிலலைன்னு ஆகிடுமா???" என்று ரமேஷும் பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, " பாருங்க சார், இடிக்கிறதும் இடிச்சுட்டு இப்படி பேசுறாரு இந்த ஆளு" என்று தன் சப்போர்ட் கும்பளை ரம்யா நோக்க,

அவர்களும் " வண்டிக்கு அடிபட்டிருக்கு சார், பாவம் பொண்ணுங்க வேற கீழே விழுந்துட்டாங்க, நீங்க இப்படி பேசுறது நல்லா இல்ல" என்று ஆளுக்கு ஒரு பக்கம் பொண்ணுங்களுக்கு வரிந்துக் கட்டி கொண்டு பரிந்து பேச அரம்பித்தனர்.

" இப்போ என்ன , வண்டி சரி பண்ண பணம் நான் தரனும் அவ்வளவு தான, இந்தா நூறு ரூபாய்" என்று தன் பாக்கெட்டிலிருந்து 100 ரூபாய் எடுத்து ரம்யாவின் முகத்திற்கு நேராக நீட்டினான் பைக்கிலிருந்தபடியே.

" யாருக்கு வேணும் உங்க பிச்ச காசு, நீங்களே என் வண்டிய மெக்கானிக் ஷாப் கொண்டு போய் சரி பண்ணி தரனும், அப்படியே எங்க ரெண்டு பேரையும் பக்கத்து நர்ஸிங் ஹோம் கூட்டிட்டு போய் டிரீட்மன்ட் பண்ணனும்" என்று அடுக்கி கொண்டே போனாள் ரம்யா.

" அதுக்கெல்லாம் வேற ஆள பாரு, 100 ரூபாய் பிடி, இல்லைனா ஆள விடு" என்று கூறி தன் பைக்கில் போக எத்தனித்தான் ரமேஷ்.

டக்கென்று அவன் பைக்கின் முன்னிருந்த சாவியை எடுத்துவிட்டாள் ரம்யா. இதை சற்றும் எதிர்பாராத ரமேஷ் , திகைப்புடன் பார்க்க.....

" ஒழுங்கு மரியாதையா என் வண்டிய சரி பண்ணி கொடுங்க, அப்பதான் உங்க பைக் சாவி தருவேன்" என்ரு ரம்யா மிரட்ட, அவளது சப்போர்ட் கூட்டமும் பலமாக ஆமோதித்தது.

கடுப்பாகி போன ரமேஷ்" சரி, உன் வண்டியை தள்ளிட்டு வா, பக்கத்து மெக்கானிக் ஷாப் போகலாம்" என்று தன் பைக்கை தள்ளி கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

மெக்கானிக் ஷாப் சென்றதும், " உன் வண்டிய சரி பண்ண எவ்வளவு பணம் ஆகும்னு கேட்டு மெக்கானிக்கிட்ட கொடுத்துட்டேன், வண்டி சரியானதும் நீ எடுத்துக்க, இப்ப என் பைக் சாவி கொடு" என்று கேட்டான் ரமேஷ்.

" எங்க கைல பட்ட காயத்துக்கு டிரீட்மண்ட் யாரு கொடுப்பா, பேசாம நர்ஸிங் ஹோம் கூட்டிட்டு போங்க" என்றாள் தோரனையுடன்.

'ராட்சஸி, நேத்து விட்ட அரை இவளுக்கு பத்தாது , என்ன மிரட்டு மிரட்டுறா கொஞ்சம் அசந்தா' என்று மனதில் குமறி கொண்டே அவர்கள் பின் நடந்தான் தன் பைக்கையும் மெக்கானிக் ஷாப்பில் விட்டு விட்டு.

மெக்கானிக் ஷாபிலிருந்து இரண்டு பில்டிங் கடந்து ஒரு மாடியில் கிளினிக் இருந்தது. மாடி படிகளில் ரம்யாவும் ஷீத்தலும் முதலில் ஏற, மெதுவாக குனிந்த படி ரமேஷ் பின் தொடர்ந்து ஏறினான்.

மாடிபடி திருப்பத்தில் எதிரில் இறங்கி வந்தவர் மேல் ரமேஷ் இடித்துவிட, " ஸாரி" என்று கூறி தலை நிமிர்ந்த போது தான் அந்த நபர் யார் என கண்டு அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான் ரமேஷ்..............

[தொடரும்]


கல்லூரி கலாட்டா - 5

கல்லூரி கலாட்டா - 6

December 06, 2006

கல்லூரி கலாட்டா - 3கலாட்டா -1
கலாட்டா -2

மதிய உணவு இடைவேளையின் போது, இரண்டாம் ஆண்டு உமா, மூன்று ரோஜாக்களையும் தேடி வந்தாள்.

"ரம்யா, அடுத்த வாரம் ' தாங்கியூ பார்டி' ய ஃபர்ஸ்ட் இயர்ஸ் ஹோஸ்ட் பண்றது பத்தி உன்கிட்ட பேசனுமாம், அதனால ஃபைனல் இயர் ரமேஷ் உன்ன இன்னிக்கு ஈவினிங் நாலு மணிக்கு கம்பியூட்டர் லேபுக்கு வர சொன்னாங்க" என்று அதிகார தோனியில் சொல்லிவிட்டு சென்றாள்.

"என்னடி இது வம்பாயிருக்கு, இவங்களா ஒரு 'வெல்கம் பார்ட்டி ' கொடுப்பாங்களாம், அப்புறம் நாம இவனுங்களுக்கு ' தாங்கியூ பார்ட்டி' தரணுமாம், யாரு கேட்டா இவனுங்ககிட்ட எங்களையெல்லாம் 'வெல்கம்' பண்ணுங்கன்னு, வேற வேலையே இல்லையா" என்று எரிச்சல் அடைந்தாள் ரம்யா.

" அது வேற ஒன்னுமில்ல ரம்ஸ், நேத்து வெல்கம் பார்ட்டில நீ அப்பிரானியாட்டம் பவ்யிமா ஆ
க்ட்விட்டியா , அது நடிப்புனு தெரியாமல் பாவம் பையன் உன்னை 'தாங்கியூ' பார்ட்டி ஆர்கனைஸ் பண்ண சொல்லப்போறான் போலிருக்கு, என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிடு நீ செய்வ , நல்ல புள்ளைன்னு தப்பு கணக்கு போட்டுடானோ??" என்று கலாய்த்தாள் ஷீத்தல்.

" சரி, ' கோகுலத்து கண்ணனை' சாயந்திரம் மூனு பேருமா சேர்ந்து போய் பார்த்திடுவோம் , நாம எங்க, என்னைக்கு தனியா போயிருக்கிறோம் " என்றாள் பவானி.

சாயந்திரம் 4 மணிக்கு மூவரும் மெதுவாக கம்பியூட்டர் லேபிற்குச் சென்றார்கள். அங்கு நாலு ஐந்து பேர் ஆளுக்கு ஒரு கம்பியூட்டரில் மானிடரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரிசையில் ஒரு ஓரத்து கம்பியூட்டரில் ரமேஷ் இருப்பதை கண்டு மூவரும் அங்கு சென்றனர்.

மூவரும் அருகில் வந்ததும் நிமிர்ந்துப் பார்த்த ரமேஷ்" உங்க மூனு பேரோட பெயரும் ரம்யாவா?? நான் ரம்யாவை மட்டும் தானே வர சொன்னேன், அதென்ன தொடுக்கு புடிச்சுக்கிட்டு கூட நீங்க ரெண்டு பேரும்?" என்று கடு கடுப்புடன் கூற, ஷீத்தலும் , பவானியும் ரம்யாவிற்க்கு கண்ணசைத்து விட்டு ரோஷத்துடன் வெளியேறினார்கள்.

அவர்கள் இருவரும் சென்று வெகு நேரம் ஆகியும் ரமேஷ் கம்பியூட்டரில் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

'வரச்சொல்லிட்டு, இவன் பாட்டுக்கு கம்பியூட்டர்ல ஏதோ டைப் பண்ணிட்டே இருக்கிறான்' என்று எரிச்சலடைந்த ரம்யா, தொண்டையை செறுமினாள் , தான் காத்திருப்பதை அவனுக்கு உணர்த்த.

நிமிர்ந்து என்ன என்பது போல் பார்த்தான் ரமேஷ்,
" நான்...........வந்து..........ரொம்ப.......நேரமா......"என்று அவள் கூறி முடிக்கும் முன்
" கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினா ஒன்னும் தப்பில்ல, வெயிட் பண்ணு' என்று கூறி விட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

ஆத்திரமும் கோபமும் முட்டி கொண்டு வந்தது ரம்யாவிற்கு, அதனை வெளிகாட்டாமல் முகபாவத்தை வழக்கம் போல் மெயின்டேன் பண்ணினாள்.

' கோகுலத்து கண்ணனுக்கு என்னாச்சு இன்னிக்கு , நேத்து கல கலன்னு பேசிட்டு கடலை போட்டுட்டு இருந்தான் செமினார் ஹால்ல, இன்னைக்கு ஏன் இஞ்சி தின்ன குரங்காட்டம் மூஞ்சி வைச்சிருக்கான், ஒரு வேளை ராதைகள் சுற்றி சூள குழுமியிருந்தா தான் நார்மலா இருப்பானோ??' என யோசித்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

கம்பியூட்டர் லேபிலிருந்து அனைவரும் சென்று விட்டனர் என்று உர்ஜிதம் செய்தபின், மெதுவாக தன் இருக்கையிலிருந்து எழுந்தான் ரமேஷ்.

" அடுத்த வாரம் , ஃபர்ஸ்ட் இயர்ஸ் சீனியர்களுக்கு ' தாங்கியூ பார்ட்டி' கொடுக்கனும், இது நம்ம டிபார்ட்மெண்ட் வழக்கம், ஸோ அதை நீ தான் ஆர்கனைஸ் பண்ண போற" என்றான் ரம்யாவிடம்.

" என்..........னது.............நா...............னா..............,அது.......வந்து........" என்று ரம்யா இழுக்க,

" ஏய், நிறுத்து, அதென்ன வடக்கத்து நடிகை தமிழ்ல பேட்டி கொடுக்கிறாப்ல, தமிழ்ல இந்த இழு இழுக்கிற, தமிழும் சரியா தெரியாதா உனக்கு??" என்றான் ரமேஷ்.

" இல்ல, தமிழ் ..எனக்கு......நல்லா .....தெரியும்" என திக்கி தினறி கூறி முடித்தாள் .

" அப்போ , இங்கிலீஷ் கத்துக்க தான் ' ரெபிடெக்ஸ்' வேணுமாக்கும்" என்றான் டக்கென்று.

" என்னது.............." திகைத்துப் போனாள் ரம்யா.
ரமேஷின் முகதிலிருந்த அசட்டு சிரிப்பு அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது , அவள் பேசியது அனைத்தையும் இவன் தெரிந்துக் கொண்டுவிட்டான் என்று.

இனிமேலும் இவன் கிட்ட அப்பிரானி வேஷம் போட்டா வேலைக்கு ஆகாது என்று முடிவு பண்ணி, முகத்தில் உண்மையான கோபத்துடன் ரமேஷை முறைத்தாள்.

" என்ன முறைக்கிற, எவ்வளவு கொழுப்பிருந்தா என்னையே லூசுன்னு சொல்லுவ நீ" என்று கத்தினான் ரமேஷ்.

" சே, இன்டீசன்ட் ஃபெல்லோ, இப்படி ஒட்டுக் கேட்டுட்டு, அதை பற்றி கேட்க தான் தனியா கூப்பிடீங்களா, அசிங்கமாயில்ல" என்று ரம்யா குரலை உயர்த்தினாள்.

" ஏய், என்ன குரல் கொடுக்கிற, அடிச்சேனா பல்லு கில்லு எல்லாம் பேர்ந்திடும், ஜாக்கிரதை" என்று பதிலுக்கு அவனும் கத்தினான்.

"ஹலோ, உங்க ஆஃபிஷியல் ராகிங் கூட நேத்தே முடிஞ்சுப் போச்சு, இப்போ ரொம்ப கத்தினீங்க, ராகிங் பண்ணினீங்கன்னு ரிபோர்ட் பண்ணிடுவேன், என்ன தண்டனை கிடைக்கும் ராகிங் பண்ணினான்னு தெரியும் இல்ல" என்று எரிமலையாக வெடித்தாள் ரம்யா.

" இந்த பூச்சாண்டி வேலைக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்டி" என்று அவனும் பதிலுக்கு கத்தினான்.

" என்னது ' டி' போட்டு பேசுறீங்க, கண்டிப்பா உங்களை நான் ரிப்போர்ட் பண்ணத்தான் போறேன், சும்மா ராகிங்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன், கம்பியூட்டர் லேபிற்க்கு தனியா வர சொல்லி, என் கை பிடிச்சு இழுத்தான், கால் பிடிச்சு இழுத்தான்னு ரிப்போர்ட் பண்ணுவேன் பாரு" என்று தெளிவான முடிவோடு கூறினாள்.

" அடச்சீ, வெட்கமா இல்ல உனக்கு இப்படி சொல்ல, நீ இப்படி ரிப்போர்ட் பண்ணினா உனக்குத் தான்டி அசிங்கம்" என்றான் ரமேஷ்,

" அதைபத்தி எல்லாம் எனக்கு கவலையில்ல , நீ பொறுக்கின்னு ஊருக்கு தெரிஞ்சிடும், அது போதும்" என்றாள் ரம்யா முகத்தை திருப்பி கொண்டு.

' பொறுக்கி' என்ற வார்த்தையை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் ரமேஷ்.
" என்ன என்னன்னு சொன்ன..........." என்று ரமேஷ் ஆக்ரோஷமாக கேட்க

அவனை நேருக்கு நேராக பார்த்து
" பொறுக்கி" என சத்தமாக கூறினாள் ரம்யா.

பளார் என ஒரு அரைவிட்டான் ரமேஷ், " அம்மா" என்று அலறிய ரம்யா................

[தொடரும்]

கல்லூரி கலாட்டா - 4

கல்லூரி கலாட்டா - 5

கல்லூரி கலாட்டா - 6

December 04, 2006

கல்லூரி கலாட்டா - 2


கலாட்டா-1

செமினார் ஹாலில் அனைவரும் குழுமியிருக்க, இறைவணக்கம் , பேராசிரியரின் உரை, சீனியர் மாணவர்களின் குறு நாடகம், தனிப் பாடல்கள் என நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. முதல் வருட மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொள்ள ஒவ்வொருவராக அட்டைவணைப்படி மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

ஷீத்தலின் முதற் பெயர் பபிதா என்பதால், அவளது பெயரும் , பவானியின் பெயரும் அட்டவணையில் முதல் வரிசையில் இருந்தது. முதல் 20 மாணவர்களின் அறிமுகம் வரை ஆசிரியர்கள் ஹாலில் இருந்தனர், அதனால் அவ்வளவாக கிண்டலும் கேலியும் செய்யாமல் சீனியர்கள் கேள்விகளைத் தொடுத்தனர்.

ரம்யாவின் முறை வந்த போது, கேள்விகனைகள் உச்ச நிலையில் இருந்தது. கொள்கையை கைவிடாமல் அப்பாவி முகத்துடன் தன் பெயர் அறிமுகம் செய்தாள் ரம்யா. பின் அவளிடம் கேள்விகள் கேட்க்கப்பட்டது.
பதில் கூறாமல் பேந்த பேந்த அவள் முழிப்பதை கண்ட ஒரு சீனியர்,

" டூ யூ நோ இங்கிலீஷ்?" என்று கேட்டான்,

'ஆமாம்' என்று தலையசைக்கிறாளா, ' இல்லை' என்று தலையசைக்கிறாளா என்று அவர்களுக்கு புரியாத வகையில் ரம்யா தலையசைக்க,
ஒரு மாணவன் " டேய், இங்கிலீஷ் தெரியாது போலிருக்குடா, தமிழ்ல கேளூங்க" என்றான்.

" நான் கேட்கிறேன் தமிழ்ல கேள்வி" என்று பின்வரிசையில் கடலை போட்டுக்கொண்டிருந்த ரமேஷ் முன் வரிசையில் வந்து அமர்ந்து , கேள்விகளைக் கேட்க அரம்பித்தான்.

மலங்க மலங்க முழிப்பதில் நான் யாருக்கும் சலித்தவள் அல்ல என நிரூபித்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

கடுப்பாகி போன 'கேள்விகள் குழு' போதும்டா சாமி இவக்கிட்ட கேள்வி கேட்டது என்று முடிவு செய்தது.

" அம்மா தாயே! உனக்கு நடக்கவாவது தெரியுமா?? அப்படியே மெதுவா நடந்து போய் ஒரு ஓரமா உட்காருமா" என்று கேலி செய்தனர்.'என்னையே கிண்டல் பண்றீங்களா, டுபாக்கூர் பசங்களா' என்று மனதில் திட்டிக்கொண்டே தன் இடத்தில் போய் அமர்ந்தாள் ரம்யா.

ஒருவழியாக ' வெல்கம் பார்ட்டி ' முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்றனர்.

சாயங்காலம் வகுப்புகள் முடிந்து அனைவரும் சென்றுவிட , முப்பெருந்தேவிகள் மூவரும் தங்கள் வகுப்பறைக்கு அருகில் இருக்கும் மாடிபடிகளில் வந்து அமர்ந்தனர். மேல்தளத்தில் இருக்கும் சீனியர் வகுப்புகள் அனைத்தும் சீக்கிரமே முடிவடைந்து விட்டதால் கட்டிடத்தில் யாருமே இல்லை. அதனால் தேவிகள் மூவரும் காலையில் நடந்த வெல்கம் பார்ட்டியை பற்றி உரையாட ஆரம்பித்தனர்...............

ஷீத்தல்: நல்ல வேளை பவானி, நம்ம ரெண்டு பேரோட டர்ன் வரப்போ ஹால்ல டிபார்ட்மெண்ட் ஸ்டாஃப்ஸ் இருந்ததால நிறைய கேள்விகள் கேட்கல, தப்பிச்சோம்.

பவானி: கேட்டா மட்டும் என்ன, பதில் சொல்லிடவா போறோம். ஏன் நம்ம ரம்யாகிட்டவும் தான் நிறைய கேள்விகள் கேட்டாங்க, அசரலேயே நம்ம பொண்ணு, சும்மா அசையாம ஆடாம அப்படியே நின்னுட்டு எஸ்கேப் ஆகிட்டால.

ரம்யா: ஹேய் பவானி, சும்ம பதில் சொல்லாம இருந்திருக்க கூடாதுடி, பதில் சொல்லிருக்கனும் நான்.

ஷீத்தல்: என்ன ரம்யா சொல்ற???

ரம்யா: நான் பதில் சொல்லிருந்தா எப்படி சொல்லிருப்பேன்னு இப்போ பார்க்கலாமா, பவானி நீ அந்த கேள்வி எல்லாம் என்கிட்ட கேளு, நான் எப்படி பதில் சொலிருப்பேன்ன்னு சொல்லிக்காட்டுறேன், ஓ.கே வா??

பவானி: தட்ஸ் இண்டெரஸ்டிங், சரி நான் கேட்கிறேன்..........
ஃப்ர்ஸ்ட் கேள்வி
' டெல் அ யுனிக் வே டூ ப்ரோபோஸ்'

ரம்யா: பல வழில ,............. பல தடவை, .........பல பேர்கிட்ட நீ ப்ரோபோஸ் பண்ணியும் உனக்கு எந்த பொண்ணும் 'யெஸ்' சொல்லவேயில்ல, அப்புறம் என்ன யுனிக் வே இப்போ உனக்கு நான் சொல்லனும், தெரிஞ்சுக்கிட்டு இன்னும் பொண்ணுங்க கிட்ட ப்ரோபோஸ் பண்ண போறியாக்கும். பொண்ணுங்க பாவம் பொழச்சு போட்டும்னு விட்ரு உன் யுனிக் ஐடியா தேடுற வேலையெல்லாம்.

ஷீத்தல்: அப்படி போடும்மா கண்ணு!

பவானி:ஷ்ஷு, குறுக்கே பேசாதே ஷீத்து. ஓ.கே இரண்டாவது கேள்வி.

ஷீத்தல்: ஹேய் பவானி ஒரு நிமிஷம், அந்த கடலை மாஸ்டர் ரமேஷ் கேட்ட தமிழ் கேள்வியெல்லாம் கேளு இப்போ.

பவானி:ஓ.கே. டன். கேட்கறேன்....

'உனக்கு தமிழ் மட்டும் தான் தெரியுமா? இங்கிலீஷ் புரியாதா?'

ரம்யா: இப்ப எனக்கு இங்கிலீஷ் தெரியலன்னு சொன்னா, ' முப்பது நாளில் நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்' ன்னு ரெபிடெக்ஸ் புக் வாங்கி எனக்கு சொல்லித் தரப்போறியா??

பவானி:ஓ! நீ பதில் கேள்வி கேட்டு மடக்கிறீயா கடலை பார்ட்டிய. சரி அடுத்த கேள்வி

'புத்திசாலிக்கும் அதிபுத்திசாலிக்கும் என்ன வித்தியாசம், ஒரு எக்ஸாம்பிளோட சொல்லு.'

ரம்யா: ஏனுங்க சாமி, எனக்கு இதுக்கு வித்தியாசம் தெரியலீங்க, ஆனா லூசுக்கும் அரலூசுக்கும் வித்தியாசம் தெரியும்முங்க. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா, அது ரெண்டும் கலந்த கலவைதான்ங்க நீங்க, பேசும்போது நீங்க லூசு, பேசாம இருக்கும் போது அரலூசுங்க, அம்புட்டுத்தான்.

பவானி: ஆஹா இது சூப்பர் ரம்ஸ். சரி அடுத்த கேள்வி.......

'அரேஞ்சுடு மரேஜ் , லவ் மரேஜ் எது சிறந்தது?'

ரம்யா: என்ன பட்டிமன்றம் நடத்துறியா? இல்ல கல்யாண புரோக்கரா நீ? இப்படி கேள்வி கேட்க்குற, வேற உருப்படியா எதுன்னா கேளுபா.

ஷீத்தல்: என்ன ரம்யா, எல்லா கேள்விக்கும் நீ பதில் கேள்வி ' கடலை டிபார்ட்மண்ட் H.O.D ரமேஷ்' கிட்ட கேட்டு மடக்குற ,இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்................

அந்த கட்டிடமே அதிரும் படி சிரித்தனர் மூவரும்.

ரொம்ப கும்மாளம் அடிக்கிறோம் யாராவது பார்த்துட்டா முகத்திரை கிழிஞ்சிடும் என முடிவு பண்ணி மெதுவாக இடத்தை காலி பண்ணினார்கள்.

க்ளாஸ் முடிந்து அனைவரும் சென்றபின் தன் க்ளாஸ் ரூமில் அமர்ந்து ரெகார்ட் நோட் எழுதி முடித்துவிட்டு படிகளில் இறங்கப் போன ரமேஷின் காதில் கீழ் படிகளில் யாரோ சத்தமாகா பேசிக்கொண்டிருப்பது கேட்டு எட்டிப்பார்த்தான், உம்னா மூஞ்சி முதல் ஆண்டு மாணவிகள் மூன்று பேரும் சத்தமாக அரட்டை அடிப்பது கண்டு, என்னதான் பேசுதுங்க இந்த மூனும்னு கேட்கலாம் என்று மாடிபடி திருப்பதிலேயே உட்கார்ந்து மேற் கண்ட உரையாடல் முழுவதும் கேட்டுவிட்டான் ரமேஷ்.

' அடிப்பாவிகளா, காலையில இந்தப் பூனையும் பால் குடிக்கும்மான்னு மூஞ்சி வைச்சிருந்தாளுங்க , இப்போ அடிக்கிற லூட்டியப்பார்த்தா பால் என்ன பீரே குடிபாளுங்க போலிருக்குதே. அதிலேயும் அந்த நெட்டச்சி ரம்யாவுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னையே லூசுன்னு சொல்லுவா? ஏதொ பாக்கறதுக்கு 'மழை' ஷ்ரேயா மாதிரி டக்கரா தூக்கலா இருக்காளேன்னு நாலு கேள்வி கேட்டேன் வெல்கம் பார்டில, ஆனா அவ தில்லாலங்கிடியா இருப்பா போலிருக்குது.இவளை சும்மா விடக்கூடாது, கவனிக்கிற விதத்தில கவனிச்சிட வேண்டியது தான் என்று கங்கனம் கட்ட கொண்டான் ரமேஷ்...............[கலாட்டா தொடரும்...]

கல்லூரி கலாட்டா - 3கல்லூரி கலாட்டா - 4

கல்லூரி கலாட்டா - 5

கல்லூரி கலாட்டா - 6