November 27, 2006

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே!!!

"என்னங்க நம்ம கல்யாண ஆல்பத்தில இந்தப் ஃபோட்டோவைப் பாருங்க, என் கையில் மெகந்தி எவ்வளவு அழகா இருக்கு" என்று ஆவலுடன் குளியலறையிலிருந்து வெளி வந்த தன் கணவனிடம் காண்பித்தாள் ஆர்த்தி.
"ஆங்! நல்லா இருக்கு ஃபோட்டோ" என்றான் ஃபோட்டோவை பார்க்காமலே, " டிஃபன் ரெடியா ஆர்த்தி? நான் சீக்கிரம் ஷோரூம் போகனும், லேட் ஆச்சு" என்று தன் தலை முடியை சீறாக்கிக் கொண்டிருந்தான் ஆனந்த்.

ஏமாற்றத்துடன், தொய்ந்துப் போன மனதுடன் சமையல் அறைக்குச் சென்று , குக்கரிலிருந்து இட்லிகளை எடுத்து வைத்த ஆர்த்தியின் விழிகளின் ஓரத்தில் நீர் எட்டிப் பார்த்தது, ' திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் எப்படி மாறிவிட்டான் ஆனந்த். மூன்று வருடம் உருக உருக காதலித்து கைபிடித்த கணவன் இன்று ஒரு நிமிடம் தான் காட்டும் ஃபோட்டோவை பார்த்து ரசிக்காமல் போனால், எந்தப் பெண்ணுக்குத் தான் கஷ்டமாக இருக்காது என பொறுமினாள் ஆர்த்தி.

காதலித்த நாட்களில், கல்லூரிக்குச் செல்ல 8 மணி பேரூந்திற்க்கு வரும் ஆர்த்திக்காக 7.30 மணிக்கே வந்து காத்திருப்பான் ஆனந்த், அதன் பின் தான் தன்னுடைய டூ வீலர் ஷோரூமிற்க்குச் செல்வான். ஒவ்வொரு வெள்ளிகிழமையும் ஆர்த்திக்கு கல்லூரி முடிந்ததும் இருவருமாக கோவிலுக்குச் சென்று விட்டு, ரெஸ்டாரண்ட் போவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் மணிக்கணக்காக பேசிக் கொண்டேயிருப்பான் ஆனந்த்."ஏன் வார இறுதி வருகிறது, உன்னைப் பார்க்க முடியாமல், சனி ஞாயிறு மேலேயே எனக்கு வெறுப்பு வந்துவிட்டது" எனக் கூறும் ஆனந்தா இப்படி மாறிவிட்டான்?

திருமணமாகி, தனிக் குடித்தனம் வந்த ஒரு வாரம் ஆனந்திடம் எந்த மாறுதலும் காணவில்லை ஆர்த்தி. மாலையில் ஆனந்த்" மல்லிகை............என் மன்னன் மயங்கும்" முனுமுனுத்தபடி, கையில் மல்லிகை சிரிக்கத் திரும்புவான். ஆனால் இப்போ.......ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் னு சொல்றதெல்லாம் உண்மை தானோ???" என்று மனதில் ஆயிரம் எண்ணங்கள் வந்து மோதிக்கொண்டிருக்க ," ஆர்த்தி டிஃபன் ரெடியா??" என்ற கணவனின் குரல் கேட்டு தன் நிலைக்கு வந்தாள்.

மேஜையில் டிஃபன் எடுத்து வைக்கும் போது ஆர்த்தி எதுவுமே பேசாமல் மவுனம் காத்தாள், கோபத்தில் சிவந்திருக்கும் தன் ஆசை மனைவியின் அழகிய முகத்தை ஒரக்கண்ணால் ரசித்தபடியே' இன்று சாயந்திரம் எப்படியும் சீக்கிரம் வீட்டுக்கு வந்து ஆர்த்தியை எங்கேயாவது வெளியில் கூட்டிடுப் போகனும்' என்று நினைத்துக் கொண்டான் ஆனந்த். சாப்பிட்டு முடிக்கும் முன்னே அவன் செல்ஃபோன் சினுங்கியது.

"ஹலோ" என்றான் ஆனந்த், எதிர் முனையில் பேசுவது அவன் நண்பன் கணேஷ் தான் என்று தெரிந்தது , ஆனால் சிக்னல் சரியில்லாததால் , தட்டில் கை கழுவி விட்டு, ஃபோனுடன் பால்கனிக்குச் சென்றான்.

பாதி சாப்பாட்டில் ஆனந்த் எழுந்து போய்விட, ' டிஃபன் ரெடியான்னு கத்த தெரியுது, ஆனா ஒரு இட்லி கூட முழுசா சாபிடல' என்று தனக்குள் முனு முனுத்தபடி மேஜையை ஒழுங்கு செய்ய ஆரம்பித்த ஆர்த்தியின் காதில் பால்கனியில் நண்பனோடு ஃபோனில் உரையாடும் தன் கணவனின் குரல் கேட்டது..........

" டேய் கணேஷ் என்னால இன்னிக்கு ஈவினுங்கல வர முடியாதுடா, நினைச்ச நேரம் உங்க கூட வரதுக்கு இப்போ நான் தனி ஆள் இல்லடா, என்னை நம்பி ஒருத்தி இருக்கிறா, அவளுக்காக நான் சம்பாதிக்கனும், அவளை சந்தோஷமா வைச்சுக்கனும். அதுக்காக தான் டூ வீலர் டீலர்ஷீப் மட்டும் எடுத்திருந்த நான், இப்போ கார் டீலர்ஷீப்பும் எடுத்து என் ஷோரூமை விரிவு படுத்தி இருக்கிறேன். இன்னும் நிறைய உழைக்கனும், ஜெயிக்கனும், தொழிலில் உயரனும், இப்படி நிறைய ஆசை இருக்குடா,

ஃபிரண்ட்ஸோட ஊர் சுத்த , அரட்டை அடிக்க ஒரு காலம், படிக்க ஒரு காலம், உழைக்க ஒரு காலம் இப்படி வாழ்க்கையில் காலங்களும் பொறுப்புகளும் மாறும் போது, நாம தான் அதை புரிஞ்சுக்கனும்டா.
கண்டிப்பா வார இறுதில உன்னை வந்து பார்க்கிறேன், அப்போ வைச்சுக்கலாம் நம்ம கச்சேரியை , ஓகே வா??"
என்று ஆனந்த் தன் நிலையை நண்பனுக்கு விளக்கிக் கொண்டிருக்க ஆர்த்திக்கு ஒரு பெரிய உண்மை விளங்கியது.

"காதிலிக்க ஒரு காலம் உண்டு
காதலிக்க மட்டுமே ஒரு காலம் உண்டு
கெஞ்சி கெஞ்சி கிரங்கடிக்கும் காதலனிடம்
கொஞ்சி கொஞ்சிப் பேச ஒரு காலம் உண்டு

காதலுடன் கடமைகளையும் செய்து முன்னேற
காலம் கட்டளையிடும் போது
கருத்துடன் அதை கடைப்பிடித்து
கண்ணியத்துடன் உயர்வதே
காதலுக்கு அழகு!!!!!"

52 comments:

said...

first time here...
superaa eludureenga...
this one is really cute and good.
kavithai top.

ivalo naalu epdi miss pannen :(

said...

அட்டகாசமா எழுதியிருக்கீங்க...

இந்த மாதிரி போட்டோல மருதாணி பாக்கலைனா கூடவா கோபம் வரும்...

இதெல்லாம் கொஞ்சம் டூ மச்ங்க...

இருந்தாலும் கடைசியா புரிஞ்சிக்கிட்டீங்க (ஓ!!! புரிஞ்சிக்கிட்டாங்க).. அதுதான் சூப்பர்...

said...

அருமை , தொடரட்டும் உங்கள் கதைகள்..

Anonymous said...

காதலுக்கு மரியாதை
கண்டிருக்கிறேன்
காண்கின்றேன் இங்கே
காதலுக்கு அழகு!
கண்டிப்பாக பாராட்ட
காத்திருக்கிறேன்!

ஆண்களுக்கு உண்டு
ஆயிரம் வேலை
ஆயினும் அவன்
ஆருயிர் அவள்தான்!
அதை புரிந்துகொள்ளா
அவளின்
அர்த்தமற்ற
அவசரத்திற்கு
ஆப்பு வைத்தான்
அவன் உரையாடலால்!
கல்யாணத்திற்கு முன்
கல்யாணத்திற்கு பின்,
வித்தியாசம் இருக்க
வாய்ப்பு நிறைய இருக்கு!
காரணம்!
முதல் தேடுவோம்
முதல் கிடைத்துவிட்டால்
வட்டியைதான் காணமுடியும்!
கஷ்டப்பட்டு
2 மணிநேரம் கஷ்டப்பட்டு
பிரியாணி செய்கிறார்கள்
செய்த பிறகு
2 மணி நேரமா உட்கார்ந்து
உண்ணமுடியும்!
காட்டாறாக இருந்தவனுக்கு
அணைபோட்ட பிறகு
அளவோடுதான்
வெளியேறும் வெள்ளம்!
ஆனால் அடிமனதில்
அத்தனை வெள்ளமும்
அப்படியே இருக்கும்
எங்கும் போய்விடாது!

said...

\"Arunkumar said...
first time here...
superaa eludureenga...
this one is really cute and good.
kavithai top.

ivalo naalu epdi miss pannen :( "/

welcome to my blog Arun, thanks for your comments, keep visiting again!!!

said...

\" வெட்டிப்பயல் said...
அட்டகாசமா எழுதியிருக்கீங்க...

இந்த மாதிரி போட்டோல மருதாணி பாக்கலைனா கூடவா கோபம் வரும்...

இதெல்லாம் கொஞ்சம் டூ மச்ங்க...

இருந்தாலும் கடைசியா புரிஞ்சிக்கிட்டீங்க (ஓ!!! புரிஞ்சிக்கிட்டாங்க).. அதுதான் சூப்பர்... "/

நன்றி வெட்டி, [ மருதாணி சிவக்கிறதும், அதை வர்ணிக்கிறதும் ஒரு தனி அழகுங்க வெட்டி]

said...

அருமையா எழுதியிருக்கீங்க...
ஆரம்பத்துலா...... ஏன்டா இவங்களும் ஆரம்பிச்சிட்டங்கன்னு
நினைத்தேன் ....ஆனா கடைசியிலா கலக்கிட்டிங்க...

கவிதையும் அருமை....

Anonymous said...

nammakkum mudhal murai..nalla eludhareenga :)

nalla karuthu... :)
continue pannunga!

said...

\" சுந்தர் said...
அருமை , தொடரட்டும் உங்கள் கதைகள்..
"/

நன்றி சுந்தர்

said...

சூப்பரா எழுதி இருக்கீங்க...எது எதுக்கு எல்லாம் கோவம் வருது பாருங்க...நானும் ஆன்ந்த் மாதிரி ஒரு அப்பாவி :-)

said...

Simply superb!!! Nalla concept and andha kavithai topu!! Kavidhai ezhudha unga veragoda tipsa use pannalannu theriyudhu ;)

said...

கதை நல்லா இருக்கு திவ்யா. ஆனா மருதாணி மேட்டர் அதுவும் போட்டோவில் கொஞம் ஒவர் மாதிரி தோணுது.

said...

//Kavidhai ezhudha unga veragoda tipsa use pannalannu theriyudhu//

@G3, அந்த டிப்ஸ் நீங்க யூஸ் பண்ணுவீங்க...ஆனா அத படிச்சு அனுபவிக்கறது நாங்க தான்...வேண்டாம் பிளீஸ் :-)

said...

பார்த்துங்கா குமுதம் , விகடன் ஒரு பக்க கதை ஒஉதோர் எல்லாம் இப்போ ப்ளோக் பக்கம் வந்து Copy அடிக்குரனுங்கா. கொஞ்சம் Oninda வா eருக்கு..
அது தான் "Owners pride neighbours envy"

said...

@ பிரியமுடன் பிரேம்,
உங்க பின்னூட்டத்தை தனியா ஒரு பதிவா போட்டுடலாம் போலிருக்கு, ரொம்ப நன்றிங்க.

said...

நல்லா கதை உடுரீங்க.

said...

கருத்து கண்ணம்மா !!என்னா ஒரு கதை என்னா ஒரு தத்துவம் . கதை நல்லாதேன் இருக்கு.

ஆனா கடமைக்காக காதலை கொஞ்சம் கூட குறைச்சுக்க கூடாதுங்கறது என்னோட தாழ்மையான கருதுங்க அம்மணி :)) அது ஒரு ட்ராக் இது இன்னொரு ட்ராக். சும்மா multi tasking பண்ணனும் ;)))))

said...

நல்லா சொல்லி இருக்கீங்க!

ஜொள்ளுப் பாண்டி!
அவன் கடமைக்காக காதலைக் குறைத்துக் கொள்ளவில்லை!

காதலித்துக் கைப்பிடித்த மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் காப்பாற்ற தனது தொழிலை விரிவுபடுத்தி கடுமையாக உழைக்கிறான். இதில் அவன் காதக் குறையவில்லை!
இன்னும் உயர்கிறது.

அந்த மனிதனின் வெற்றிக்க்குப் பின் அவன் காதல் நிற்கும்! அதுதான் நிஜம்! அதற்காக மனைவியுடன் செல்வழைக்கும் நேரம் கொஞ்சம் குறைகிறது. அவ்வளவே!

ஆனாலும் மனதளவில் இருவரும் ஒன்றாக, உயிரளவில் இருவரும் ஒன்றாக இருப்பதாகத்தான் கதை சொல்கிறது!

said...

ஒரு கதை சொல்றோம்னா அதை சொல்லுபவருக்கு தோணியை எதிர்த்திசையிலும் ஓட்டிச்செல்லும் திறமை இருக்கணும்னு சொல்வாங்க!

அந்த வகையில பாத்தோம்னா உங்களுக்கு நல்லா கதைசொல்ல வருது!

வளருங்கள் திவ்யா!

வாழ்த்துக்கள்

said...

\" லொடுக்கு said...
நல்லா கதை உடுரீங்க. \"

நன்றி லொடுக்கு

said...

\" ஜொள்ளுப்பாண்டி said...
கருத்து கண்ணம்மா !!என்னா ஒரு கதை என்னா ஒரு தத்துவம் . கதை நல்லாதேன் இருக்கு.

ஆனா கடமைக்காக காதலை கொஞ்சம் கூட குறைச்சுக்க கூடாதுங்கறது என்னோட தாழ்மையான கருதுங்க அம்மணி :)) அது ஒரு ட்ராக் இது இன்னொரு ட்ராக். சும்மா multi tasking பண்ணனும் ;))))) \"

வாழ்க்கையில் Priorities மாறும் போது, கடமை காதல் இரண்டையும் Balance பண்ணனுமே தவிர, ஒரே சமயத்தில் multi tasking எல்லாம் பண்ணகூடாது பாண்டி,

said...

\ நாமக்கல் சிபி @15516963 said...
நல்லா சொல்லி இருக்கீங்க!

ஜொள்ளுப் பாண்டி!
அவன் கடமைக்காக காதலைக் குறைத்துக் கொள்ளவில்லை!

காதலித்துக் கைப்பிடித்த மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் காப்பாற்ற தனது தொழிலை விரிவுபடுத்தி கடுமையாக உழைக்கிறான். இதில் அவன் காதக் குறையவில்லை!
இன்னும் உயர்கிறது.

அந்த மனிதனின் வெற்றிக்க்குப் பின் அவன் காதல் நிற்கும்! அதுதான் நிஜம்! அதற்காக மனைவியுடன் செல்வழைக்கும் நேரம் கொஞ்சம் குறைகிறது. அவ்வளவே!

ஆனாலும் மனதளவில் இருவரும் ஒன்றாக, உயிரளவில் இருவரும் ஒன்றாக இருப்பதாகத்தான் கதை சொல்கிறது! \"

நன்றி சிபி,
\"அந்த மனிதனின் வெற்றிக்க்குப் பின் அவன் காதல் நிற்கும்!\"

எவ்வளவு பெரிய உண்மையை அழகா சொல்லிடீங்க சிபி, நன்றி


"

said...

\" தம்பி said...
ஒரு கதை சொல்றோம்னா அதை சொல்லுபவருக்கு தோணியை எதிர்த்திசையிலும் ஓட்டிச்செல்லும் திறமை இருக்கணும்னு சொல்வாங்க!

அந்த வகையில பாத்தோம்னா உங்களுக்கு நல்லா கதைசொல்ல வருது!

வளருங்கள் திவ்யா!

வாழ்த்துக்கள் \"

நன்றி தம்பி,
உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்ச்சாகத்தை தந்தது

Anonymous said...

Nalla kathainga, nalla eshuti irukeenga, continue ;)

said...

\"C.M.HANIFF said...
Nalla kathainga, nalla eshuti irukeenga, continue ;) \"

உங்கள் ஊக்கத்திற்க்கு நன்றி ஹனிஃப்

said...

arumai...nalla ezhuthi irukinga..

said...

\"Seenu said...
arumai...nalla ezhuthi irukinga../"

நன்றி சீனு

Anonymous said...

நன்றாக எழுதியிருக்கிங்க..:)

Anonymous said...

இதுவும் சூப்பருங்க. முடிவுகள யூகிக்க முடியாத சின்னக் கதைகளுக்கு எப்பவுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. இந்த மாதிரி குட்டிக் கதைகள் படிச்சு ரொம்ப நாளாகுது. நிறைய எழுதுங்க, வாழ்த்துக்கள்!

-விநய்

said...

\" தூயா said...
நன்றாக எழுதியிருக்கிங்க..:) \"

நன்றி தூயா!

said...

\"Anonymous said...
இதுவும் சூப்பருங்க. முடிவுகள யூகிக்க முடியாத சின்னக் கதைகளுக்கு எப்பவுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. இந்த மாதிரி குட்டிக் கதைகள் படிச்சு ரொம்ப நாளாகுது. நிறைய எழுதுங்க, வாழ்த்துக்கள்!

-விநய் \"

நன்றி விநய்.

குட்டி கதைகள் எழுதனும்னு தான் எனக்கும் ஆசை விநய்,
ஆனா பாருங்க சீரியல் டைப்ல தொடர் எழுதிடுறேன்.
இருந்தாலும் எனக்கு பொறுமை ஜாஸ்தி இல்லீங்க விநய்??

Anonymous said...

//
குட்டி கதைகள் எழுதனும்னு தான் எனக்கும் ஆசை விநய்,
ஆனா பாருங்க சீரியல் டைப்ல தொடர் எழுதிடுறேன்.
இருந்தாலும் எனக்கு பொறுமை ஜாஸ்தி இல்லீங்க விநய்??
//

:)
உண்மை தாங்க..தமிழ்ல எழுதறதுக்கு எவ்வளவு பொறுமை வேணும்!

இருந்தாலும், வலைப்பதிவுல எழுதறவங்க தான், சீரியல் மாதிரி இழுக்காம சஸ்பன்ஸோட முடிச்சு அடுத்தப் பகுதிக்கு வெயிட் பண்ண வச்சுறீங்களே!!

-விநய்

said...

\":)
உண்மை தாங்க..தமிழ்ல எழுதறதுக்கு எவ்வளவு பொறுமை வேணும்!

இருந்தாலும், வலைப்பதிவுல எழுதறவங்க தான், சீரியல் மாதிரி இழுக்காம சஸ்பன்ஸோட முடிச்சு அடுத்தப் பகுதிக்கு வெயிட் பண்ண வச்சுறீங்களே!!

-விநய் \"

விநய், சஸ்பன்ஸ் இல்லீனா தொடரின் அடுத்த பகுதிய படிக்கனும்னு மக்களுக்கு தோனாதே,
எல்லாம் ஒரு டெக்னிக் தான் விநய்.

Anonymous said...

//
எல்லாம் ஒரு டெக்னிக் தான் விநய்.
//

ஹிம்...சரி, அடுத்தப் பகுதிக்காக வெயிட்டிங்!!

-விநய்

said...

\"Anonymous said...
//
எல்லாம் ஒரு டெக்னிக் தான் விநய்.
//

ஹிம்...சரி, அடுத்தப் பகுதிக்காக வெயிட்டிங்!!

-விநய் \"

அடுத்த பகுதி விரைவில் விநய்!

said...

கதை முடிவு எதிர்பார்த்த மாதிரியே அமைந்துவிட்டதே திவ்யா? ஏன்?

said...

\" குமரன் (Kumaran) said...
கதை முடிவு எதிர்பார்த்த மாதிரியே அமைந்துவிட்டதே திவ்யா? ஏன்? \"

யாரும் எதிர் பார்காத ஒரு முடிவை கதையில் சொல்ற அளவுக்கு என்னோட கற்பனை திறன் இன்னும் வளரவில்லை குமரன்..........வித்தியாசமான முடிவுகளுடன் கதைகள் படைக்க முயற்சிக்கிறேன்!

Anonymous said...

Ultimate
- Killivalavan K

said...

\"killivalavan K said...
Ultimate
- Killivalavan K \"

தங்கள் வருகைக்கு நன்றி killivalavan.

Anonymous said...

உங்க வலைபதிவை சில நாட்களாகவே படிச்சிட்டு வரேன். எல்லா பதிவும் அறுமையா இருக்கு.
நேரம் கிடைத்தால் இந்த கதையை படிச்சி பாருங்க!! :)

http://simplycvr.blogspot.com/2005/06/perceptions.html

said...

\"CVR said...
உங்க வலைபதிவை சில நாட்களாகவே படிச்சிட்டு வரேன். எல்லா பதிவும் அறுமையா இருக்கு.
நேரம் கிடைத்தால் இந்த கதையை படிச்சி பாருங்க!! :)

http://simplycvr.blogspot.com/2005/06/perceptions.html \"

CVR தங்கள் வருகைக்கு நன்றி,

உங்கள் பதிவினை படித்தேன், மிகவும் அருமையாக எழுதியிருந்தீர்கள் , தங்கள் பதிவை பற்றிய அறிமுகம் கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி!

said...

Hi Divya,
good narrative.
பெண்ணின் இயல்பான ஆதங்கம்.

''இந்த மாதிரி போட்டோல மருதாணி பாக்கலைனா கூடவா கோபம் வரும்...''
ஐய்யொ ஆமாம்பா.

அதுவும் கணவன் ஒரு நாளைக்கு நாலு தடைவையாவது புதுப் பெண்டாட்டியைக் கண்டுக்கணும்.
இது கூட செய்யலைன்னா எப்படி.:-)

said...

\" வல்லிசிம்ஹன் said...
Hi Divya,
good narrative.
பெண்ணின் இயல்பான ஆதங்கம்.

''இந்த மாதிரி போட்டோல மருதாணி பாக்கலைனா கூடவா கோபம் வரும்...''
ஐய்யொ ஆமாம்பா.

அதுவும் கணவன் ஒரு நாளைக்கு நாலு தடைவையாவது புதுப் பெண்டாட்டியைக் கண்டுக்கணும்.
இது கூட செய்யலைன்னா எப்படி.:-) \"

வல்லிசிம்ஹன் தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

அதானே சரியா சொன்னீங்க , புது பொண்டாட்டியை கண்டுக்காம இருந்தா கோபம் வராதா??

Anonymous said...

rocking and practical Story Divya.. amma enna ore Love Storya eluthi thalluringa.. Experience.. Just kidding

//காதிலிக்க ஒரு காலம் உண்டு
காதலிக்க மட்டுமே ஒரு காலம் உண்டு
கெஞ்சி கெஞ்சி கிரங்கடிக்கும் காதலனிடம்
கொஞ்சி கொஞ்சிப் பேச ஒரு காலம் உண்டு

காதலுடன் கடமைகளையும் செய்து முன்னேற
காலம் கட்டளையிடும் போது
கருத்துடன் அதை கடைப்பிடித்து
கண்ணியத்துடன் உயர்வதே
காதலுக்கு அழகு!!!!!"//

Ithu ellarukum puruchuthuna.. Divorceku valiye illa . Shankar

said...

நல்லா எழுதி இருக்கீங்க. குட் கீப் இட் அப்!!!

said...

நன்றாக உள்ளது தங்களின் வலைத்தளம்

said...

அருமை ,சூப்பர்

சூர்யா
துபாய்

said...

It'z really nice story.

regards,

GAZALI...

it-gazali.blogspot.com

Anonymous said...

tala kalakeeteenga

said...

/காதலுடன் கடமைகளையும் செய்து முன்னேற
காலம் கட்டளையிடும் போது
கருத்துடன் அதை கடைப்பிடித்து
கண்ணியத்துடன் உயர்வதே
காதலுக்கு அழகு!!!!!"/

200% unmai .......:-)Great lines..

said...

//காதிலிக்க ஒரு காலம் உண்டு
காதலிக்க மட்டுமே ஒரு காலம் உண்டு
கெஞ்சி கெஞ்சி கிரங்கடிக்கும் காதலனிடம்
கொஞ்சி கொஞ்சிப் பேச ஒரு காலம் உண்டு//
- இரசித்தேன்

ஆனாலும் போட்டோ பார்க்ககூட காலத்தில் நேரம் இருக்காதா!! :)

said...

"காதிலிக்க ஒரு காலம் உண்டு
காதலிக்க மட்டுமே ஒரு காலம் உண்டு
கெஞ்சி கெஞ்சி கிரங்கடிக்கும் காதலனிடம்
கொஞ்சி கொஞ்சிப் பேச ஒரு காலம் உண்டு

காதலுடன் கடமைகளையும் செய்து முன்னேற
காலம் கட்டளையிடும் போது
கருத்துடன் அதை கடைப்பிடித்து
கண்ணியத்துடன் உயர்வதே
காதலுக்கு அழகு!!!!!"

nice ending divya.......story was toooo gud.....i like ur writing vry much :)))

kp postin more