February 03, 2008

என் அப்பாவின் அன்பைத் தேடி....

புவனாவின் அப்பா இறந்து இரண்டு வருஷமாகிறது. மனதில் அப்பா இன்னும் பசுமையாக நினைவிருந்தார்.


சைக்கிளில் கடைவீதிக்கு அழைத்துச்செல்லும் அப்பா...
குச்சி ஐஸ் வாங்கித்தரும் அப்பா...
அம்மா கண்டிக்கையில் கருணையுடன் அரவனைக்கும் அப்பா...
நடைபழகுவது முதல் மிதிவண்டிவரை கற்றுத்தந்த அப்பா..
முதல் நாள் பள்ளிக்குச்செல்ல அழுதபோது உடன் அழுத அப்பா...
இரவில் கதை கூறி உறங்கவைக்கும் அப்பா..


அப்பா திடீரென்று ஒருநாள் ஜீரத்தில் படுத்தார். இரண்டே நாளில் அது மூளைக்காய்ச்சலாக விஸ்வரூபம் எடுக்க நாலாவது நாளே அப்பாவின் கதை முடிந்தது.

அப்போது புவனாவிற்கு வயது 8. தன்னை அணைத்துக்கொண்டு கதறிய பாட்டியிடம் கேட்ட கேள்வி இப்போதும் புவனாவிற்கு நினைவிருக்கிறது.
' ஏன் பாட்டி, மனுசா ரொம்ப வயசானால் செத்துப் போய் சுவாமிக்கிட்ட போவா என்று தானே சொன்னேள், இப்போ நீங்க , தாத்தா எல்லாரும் இருக்கேள்.எஙகப்பா சின்னவர்தானே, ஏன் இப்பவே சாமிக்கிட்டப் போகனும்?' என்று கேட்க , பாட்டி இன்னும் அழுதாள்.

அப்பா போனபின் அடுத்த இரண்டு வருடங்கள் ஏதோ ஓடின.
அம்மா அகிலா வெறுமையை மறக்க......மறைக்க.. அடுப்படி வேலையிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டாள்.
புவனா பாதிநாள் இரண்டு தெரு தள்ளியிருந்த பாட்டி-தாத்தா வீட்டிலேயே கழித்தாள்.



அப்பா அதிகம் பேசுபவர் அல்ல.
அம்மாதான் இருவருக்கும் சேர்த்து வாய் மூடாமல் பேசுவாள்.இப்போது அம்மாவின் அமைதியான சோகமுகம் புவனாவை மிகவும் வருத்தியது. அம்மாவுக்கு தன்னை பிடிக்காமல் போய்விட்டதாக கற்பனை செய்துக் கொண்டாள்.

இந்த சமயத்தில்தான் தாத்தாவும் பாட்டியும், அம்மாவை மறுமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்த ஆரம்பித்தனர்.
அம்மாவுக்கு 18 வயதிலேயே திருமணம் ஆகியிருந்தால், அவள் 29 வயதில் ஒரு இளம் விதவையாக நிற்பது, அப்பாவின் பெற்றோருக்கே மனம் கேட்காமல், அவளுக்கு மணம் முடிக்க தீவிரமாக முயன்றனர்.

அப்பாவின் பால்ய நண்பர் நடராஜன், துபாயில் வேலைசெய்துக்கொண்டிருந்தவர். 3 தஙகைகளின் திருமணம், வயதான பெற்றொரின் மருத்துவச் செலவுகள் என பொறுப்புகள் இவர் மேல் இருந்ததால், 35 வயதாகியும் பிரம்மச்சாரியம் காக்க வேண்டிய கட்டாயம்.
இன்று கடமைகள் அனைத்தையும் முடித்தவராய் இந்தியாவிற்கே திரும்பியவர், அப்பாவின் மறைவுக்காக துக்கம் விசாரிக்க வந்திருந்தார்.
தாத்தா பாட்டி அவரிடம் ,அம்மாவின் மறுமணம் பற்றி பேச்செடுக்க, அவரும் முழுமனதுடன், தன் நண்பனின் இளம் விதவை மனைவிக்கு வாழ்வு தர முன் வந்தார்.
அம்மா லேசில் ஒப்புக்கொள்ளவில்லை. தாத்தாவும் பாட்டியும் ஏகப்பட்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பிறகு அவரைச் சம்மதிக்க வைத்தார்கள்.

'புவனாம்மா, நடராஜ் அங்கிள் தான் இனிமே உனக்கு அப்பா. சமர்த்தாக படுத்தாமல் சொன்னதை கேட்டு நடக்கணும்' பாட்டி பேசி முடிக்கும்முன் புவனா மூர்க்கத்தனமாக கத்தினாள்.
"இது ஒண்ணும் எங்க அப்பா இல்லை.எங்கப்பா எப்பவோ செத்துப்போய்ட்டார், நான் பதிலுக்கு வேறே அப்பா கேட்டேனா உங்களை!"

இதை கேட்ட நடராஜின் முகத்தில் ஏகப்பட்ட கலவரம்.அம்மா சங்கடத்துடன் கைபிசைந்தாள்.

நடராஜை அப்பாவாக ஏற்கவோ, அப்பா என்று அழைக்கவோ அவள் ஒப்புக்கொள்ளவில்லை.
'அங்கிள்' என்று தான் அழைப்பேன் என்று பிடிவாதமாக இருந்துவிட்டாள்.

நடராஜனும் புவனாவின் மனதில் இடம்பிடிக்க எவ்வளவோ முயன்றார். தீபாவளிக்கு புவனாவுக்கு நடராஜ் அழகானதொரு பட்டுப்பாவடை வாங்கி வந்திருந்தார்.
'உனக்கு அழகாக இருக்கும் என அங்கிள் தான் செலக்ட் பண்ணினார்' என்று அம்மா கூற........தீபாவளியன்று புவனா அதை உடுத்திக்கொள்ளவேயில்லை.

நடராஜனின் முகம் வாடிபோனது. அவருக்கும் புது உடை உடுத்திக்கொள்ள மனதில்லாமல் போக, முதல் தீபாவளி மனஸ்தாபத்திலேயே கழிந்தது.

நடராஜனின் மனது புவனாவுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவளது ஆழ்மனதில் எங்கோ புதைந்திருந்த தாபம் அவளை ஆட்டிப் படைத்தது.
நடுவில் போய்விட்ட அப்பாவிடம் கோபம்...
மறுபடி மணந்த அம்மாவின் மீது கோபம்..
அப்பாவின் இடத்தை பிடுங்கிக் கொண்டதாக நினைத்து நடராஜ் அங்கிள் மீது கோபம்..

தன்னுடன் இருக்க முடியாத தாத்தா பாடியிடம் கோபம்..
ஏன் தன்னிடமே கோபம்...


அவள் மனதில் தேங்கிக் கிடந்த அன்பை வெளிப்படுத்த முடியாமல் தடுத்தது.

இந்தச் சூழ்நிலையில் தான்...அகிலா....கர்ப்பமாகி விட, நடராஜ் ரொம்பவே கவலைப்பட்டார். தன்னையே அப்பாவாக ஏற்காத பெண் வரப்போகும் குழந்தையை வெறுக்ககூடமென்று மிகவும் பயந்தார்.

கவலை பட்டிருக்க தேவையே இருக்கவில்லை. வீட்டில் பிறந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பார்த்த கணமே புவனாவின் முகத்தில் சந்தோஷம் நிறைய, தன்னைவிட பதினோரு வயது சிறியவனான தம்பி வாசுவை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள்.

பள்ளி நேரம் போக மிகுந்த நேரமெல்லாம் குழந்தையுடனே கழித்தாள்.இரண்டு வருஷத்தில் குமாரும் பிறக்க வீட்டில் நிலவிய இறுக்கமான சூழ்நிலை ஒரளவு தளர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போதும் நடராஜை புவனா முழுமையாக ஏற்கவில்லை என்றாலும், வாசு குமாரின் தந்தையாக அவரது மதிப்பு கூடித்தான் போயிற்று. நேருக்கு நேர் நடராஜ் அங்கிளுடன் மோதுவதை குறைத்துக்கொண்டாள் புவனா.

வாசுவும், குமாரும் புவனாவிடம் மிகவும் ஒட்டிக்கொண்டார்கள்.அவளைப் போலவே அவர்களும் நடராஜை ' அங்கிள் ' என்றே அழைத்தனர். தன்னை ஏற்றுக்கொள்ளாத மகள், தன் மகன்களை ஏற்றுக்கொண்டதே போதுமென கருதி....பெருந்தன்மையாக வாசுவும், குமாரும் தன்னை 'அங்கிள்' என அழைப்பதை மாற்ற மனைவி வற்புறுத்தியும் அவர் முனையவில்லை.

வருடங்கள் ஓட, புவனா யுவதி ஆனாள்.படிப்பு முடிந்ததும் நடராஜ் வரன் வேட்டையில் இறங்கினார். சீக்கிரத்திலேயே அவளுக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணமாக, புக்ககம் கிளம்பும் போது சிறுவர்களான குமாரும்,வாசுவும் அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டு விட மறுத்தார்கள்.புவனா பிழியப் பிழிய அழுதுக்கொண்டுதான் வண்டியில் ஏறினாள்.

ஹைதரபாத்தில் பிறந்தகமும், செகந்தரபாத்தில் புக்கமும் அமைந்தது புவனாவிற்கு செளகைரியமாக போயிற்று. நினைத்தால் தம்பிகளை பார்க்க முடிந்தது,

வருடங்கள் பறக்க புவனாவின் குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் வயதையடைந்தார்கள். இரண்டு வருஷத்திற்கு முன் பாட்டி தாத்தாவின் மரணத்தை தொடர்ந்து அம்மாவும் சுமங்கலியாக போய் சேர்ந்துவிட்டாள்.
அம்மா மறைந்தபின் 'அங்கிள்' நடராஜ் மிகவும் ஆடிப்போனார்.
'அங்கிள்' என்றே தனனை அழைக்கும் தன் மகன்களிடம் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்தார்.
அம்மா சென்ற பின் அவரது உடல் நிலையும் சோர்வடைய ஆரம்பித்தது.

இன்று 'மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்' என்று தம்பிகளிடமிருந்து தகவல் வரவே புவனா, விரைந்து ஆஸ்பத்திரி செல்கிறாள்.

இப்போது 'அங்கிள்' நடராஜனின் அந்திம நேரம். கண்ணில் நீர் வழிய பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த புவனாவின் மனதில் இப்போது தன் குழந்தை பருவம் முதல் 'அங்கிள்' காட்டிய அன்பும் பரிவும் மிகுந்து நின்றது.



அப்பாவின் இடத்தை முழுமையாக நிரப்ப நடராஜ் எடுத்துக்கொண்ட அக்கறை, சிரமம், பிரயத்தனம் எல்லாம் அவளுக்கு புரிந்தது.
மகளின் அன்புக்காக ஏங்கிய நடராஜின் உணர்வுகளை மிகவும் காலந்தாழ்த்தி புவனா புரிந்துக் கொண்டாள்.

மரணப்படுக்கையில் இருக்கும் நடராஜ் திடீரென்று கண்விழித்துப் பார்த்தார். தன் கையைப் பிடித்தவாறு கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்த மகளை பார்த்து புன்னகைக்க முயற்ச்சித்தார்.

"அப்பா..........அப்பா" புவனா முதன் முறையாக நடராஜை அப்பா வென்றழைத்தாள்.

அடுத்த கணம் அந்தச் சிறு புன்னகையுடனே அவரது கடைசி மூச்சு பிரிந்தது.

நடராஜின் கைகளை பிடித்தவாறு ' அப்பா......அப்பா....' என்று அரற்றும் அக்காவை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் வாசுவும் குமாரும்.

45 comments:

said...

நல்லா இருக்கு திவ்யா.

said...

மிகவும் நன்றாக இருக்கிறது. வித்தியாசமாக கருவை அழகாக கதையாக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்...!

இந்த வார்ப்புருவும் அழகாக இருக்கிறது...!

said...

அருமையான கதை. பத்து வயது பெண் அம்மாவின் புருசன் என கத்தும் போது தான் கதையில் எதார்த்தம் இல்லை. மற்றபடி கதையில் சிறு சரிவு கூட இல்லை. வாழ்த்துக்கள்.

said...

மறு மணத்தின் ஒரு பரிமாணம்...நல்லா இருக்கு திவ்யா..

said...

//நடுவில் போய்விட்ட அப்பாவிடம் கோபம்...
மறுபடி மணந்த அம்மாவின் மீது கோபம்..
அப்பாவின் இடத்தை பிடுங்கிக் கொண்டதாக நினைத்து நடராஜ் அங்கிள் மீது கோபம்.//
oru kulandhaiyin unarvugalai nalla solli irukeenga

said...

kadhaiyum, different themela nalla irukunga :)

said...

as usual.. kalakkitteenga.. :))

said...

Beautiful story!!
ரொம்ப ரசித்து படித்தேன்.

////பத்து வயது பெண் அம்மாவின் புருசன் என கத்தும் போது தான் கதையில் எதார்த்தம் இல்லை. மற்றபடி கதையில் சிறு சரிவு கூட இல்லை.///

ரிப்பீட்டேய்!!
கலக்கறீங்க மேடம்!!
வாழ்த்துக்கள்!! B-)

said...

கதையோடு படங்களும் அருமை.

said...

\\
வினையூக்கி said...
நல்லா இருக்கு திவ்யா.\\

நன்றி வினையூக்கி!

said...

\\ நிமல்/NiMaL said...
மிகவும் நன்றாக இருக்கிறது. வித்தியாசமாக கருவை அழகாக கதையாக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்...!

இந்த வார்ப்புருவும் அழகாக இருக்கிறது...!\\

ஹாய் நிமல்,
வார்புருவை குறிப்பிட்டது சந்தோஷமளித்தது!
நன்றி நிமல்!!

said...

\\ ஸ்ரீ said...
அருமையான கதை. பத்து வயது பெண் அம்மாவின் புருசன் என கத்தும் போது தான் கதையில் எதார்த்தம் இல்லை. மற்றபடி கதையில் சிறு சரிவு கூட இல்லை. வாழ்த்துக்கள்.\

வாழ்த்துக்களுக்கு நன்றி Sri![உங்கள் பெயரை தமிழில் தட்டச்சடிக்க தெரியவில்லை....ஸாரி]

said...

\ பாச மலர் said...
மறு மணத்தின் ஒரு பரிமாணம்...நல்லா இருக்கு திவ்யா..\\

ரொம்ப ரொம்ப நன்றி பாசமலர்!!

said...

\\ Dreamzz said...
//நடுவில் போய்விட்ட அப்பாவிடம் கோபம்...
மறுபடி மணந்த அம்மாவின் மீது கோபம்..
அப்பாவின் இடத்தை பிடுங்கிக் கொண்டதாக நினைத்து நடராஜ் அங்கிள் மீது கோபம்.//
oru kulandhaiyin unarvugalai nalla solli irukeenga
\

நன்றி Dreamzz!

said...

\\ ஜி said...
as usual.. kalakkitteenga.. :))\\

'as usual'nu oru vaarthai potu romba negila vaichuteenga ji!
thanks!!!

said...

\\ CVR said...
Beautiful story!!
ரொம்ப ரசித்து படித்தேன்.

////பத்து வயது பெண் அம்மாவின் புருசன் என கத்தும் போது தான் கதையில் எதார்த்தம் இல்லை. மற்றபடி கதையில் சிறு சரிவு கூட இல்லை.///

ரிப்பீட்டேய்!!
கலக்கறீங்க மேடம்!!
வாழ்த்துக்கள்!! B-)\\

நன்றி சிவிஆர் சார்!!

said...

\ சிறில் அலெக்ஸ் said...
கதையோடு படங்களும் அருமை.\\

வாங்க சிறில் அலெக்ஸ்,
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

said...

நல்லதொரு கதை - எப்பொழுதுமே அந்திமக் காலத்தில் தான் மற்றவர்களுக்குப் புரியும். புவனாவின் தவறில்லை. கடைசியில் புரிந்து கொண்டதே போதும்ம்ம்ம்ம்

said...

Nalla kadhai...

natpodu
nivisha

said...

@cheena
//எப்பொழுதுமே அந்திமக் காலத்தில் தான் மற்றவர்களுக்குப் புரியும். புவனாவின் தவறில்லை. கடைசியில் புரிந்து கொண்டதே போதும்ம்ம்ம்ம்//
neenga solrapadi partha, bhuvanakku, avaloda andhima kaalathula thaan purinju irukanum.

moreover, irukum pothe puriyaathathu.. pona pinna purinja enna puriyalana enna?

natpodu
nivisha.

said...

Good one. Enjoyed reading.

said...

Nice one. Enjoyed reading.

said...

இயல்பான கதை திவ்யா!
முதலில் படிக்கப் படிக்க...என்னடா இது கேளடி கண்மணி இஷ்டைலில் முடிக்கப் போறீங்களோ-ன்னு நெனச்சேன்! ஆனா நடுவிலேயே வேறு மாதிரி கொண்டு போயிட்டீங்க!

//பெருந்தன்மையாக வாசுவும், குமாரும் தன்னை 'அங்கிள்' என அழைப்பதை மாற்ற மனைவி வற்புறுத்தியும் அவர் முனையவில்லை//

முன்னாடியே அவரு மனசு என்ன என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள் வாசகர்களுக்கு!

//'அங்கிள்' என்றே தனனை அழைக்கும் தன் மகன்களிடம் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்தார்//

:-((((((

கதையின் இறுதியில் "அப்பா" என்று புவனா அழைக்கும் கட்டம், இன்னும் கொஞ்சம் நல்லாச் சொல்லி இருக்கலாமோ என்பது என் தனிப்பட்ட கருத்து திவ்யா! கொஞ்சம் சினிமாட்டிக்காக இருப்பது போல் இருந்திச்சி!
புவனா-நடராஜ் இருவரின் கண்கள் சில நேரம் பரிபாஷை பேசிய பின், புவனாவின் சில செய்கைகளுக்குப் பின், மெல்ல மெல்ல அந்த "அப்பா" என்னும் ஓசையைக் கொண்டு வந்திருக்கலாமோ?

said...

Divya,

Unarvupurvaramaana nalla padaippu.
"Love and affection" is the priceless thing in this materialistic world ; everyone in this world need that, should have that and they can get that if it is given and taken fully.
I would have been more happy if that child had understood the father's love and affection after a short while from second marriage.

Remarkable Expression of Stories.
Great!!!

Raj.

said...

கதை சூப்பர் திவ்யா மாஸ்டர்.. கடைசில கொஞசம் நாடக பாணியாகிடுச்சு.. கொஞ்சம் கவிதைத்துவம் சேத்து விளக்கியிருக்கலாமோ?.. :)
நல்லாயிருக்கு...

said...

\\ cheena (சீனா) said...
நல்லதொரு கதை - எப்பொழுதுமே அந்திமக் காலத்தில் தான் மற்றவர்களுக்குப் புரியும். புவனாவின் தவறில்லை. கடைசியில் புரிந்து கொண்டதே போதும்ம்ம்ம்ம்\\

காலதாமதமாக புரிந்துக் கொள்ளுதல் பயனற்று போய்விட கூடும் இல்லியா சீனா சார்??

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சீனா சார்!

said...

\\ நிவிஷா..... said...
Nalla kadhai...

natpodu
nivisha\\

நன்றி நிவிஷா!

said...

\\ SathyaPriyan said...
Good one. Enjoyed reading.\\

Thanks Sathya!!

said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இயல்பான கதை திவ்யா!
முதலில் படிக்கப் படிக்க...என்னடா இது கேளடி கண்மணி இஷ்டைலில் முடிக்கப் போறீங்களோ-ன்னு நெனச்சேன்! ஆனா நடுவிலேயே வேறு மாதிரி கொண்டு போயிட்டீங்க!

//பெருந்தன்மையாக வாசுவும், குமாரும் தன்னை 'அங்கிள்' என அழைப்பதை மாற்ற மனைவி வற்புறுத்தியும் அவர் முனையவில்லை//

முன்னாடியே அவரு மனசு என்ன என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள் வாசகர்களுக்கு!

//'அங்கிள்' என்றே தனனை அழைக்கும் தன் மகன்களிடம் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்தார்//

:-((((((

கதையின் இறுதியில் "அப்பா" என்று புவனா அழைக்கும் கட்டம், இன்னும் கொஞ்சம் நல்லாச் சொல்லி இருக்கலாமோ என்பது என் தனிப்பட்ட கருத்து திவ்யா! கொஞ்சம் சினிமாட்டிக்காக இருப்பது போல் இருந்திச்சி!
புவனா-நடராஜ் இருவரின் கண்கள் சில நேரம் பரிபாஷை பேசிய பின், புவனாவின் சில செய்கைகளுக்குப் பின், மெல்ல மெல்ல அந்த "அப்பா" என்னும் ஓசையைக் கொண்டு வந்திருக்கலாமோ?\\

ஹாய் ரவி,
உங்கள் விரிவான விமர்சினத்திற்கு ரொம்ப நன்றி!

கதையின் நீளம் அதிகமாக இருந்தது, இதைவிட நீளமாக எழுத வேண்டாம் என்றுதான் முடிவில் 'பார்வை பரிமாற்றங்கள்' ' உரையாடல்கள்' எல்லாம் எழுதவில்லை.

அதனை குறிப்பிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டதிற்கு நன்றி ரவி!

said...

\\ Raj said...
Divya,

Unarvupurvaramaana nalla padaippu.
"Love and affection" is the priceless thing in this materialistic world ; everyone in this world need that, should have that and they can get that if it is given and taken fully.
I would have been more happy if that child had understood the father's love and affection after a short while from second marriage.

Remarkable Expression of Stories.
Great!!!

Raj.
\\

ஹாய் ராஜ்,
உங்கள் எதிர்பார்ப்பு, புவனா அவள் அப்பாவை காலம்தாழ்த்தி புரிந்துக்கொண்டதிற்கு பதில் , இன்னும் முன்னதாகவே புரிந்துக்கொண்டிருக்கலாம் என்பதா???
சில சமயங்களில் காலதாமதமாகதான் சில புரிதல்கள் வருகிறது ராஜ்.

உங்கள் கருத்திற்கும், எதிர்பார்பினை வெளிப்படுத்தியதற்கும் நன்றி ராஜ்!

said...

\\ ரசிகன் said...
கதை சூப்பர் திவ்யா மாஸ்டர்.. கடைசில கொஞசம் நாடக பாணியாகிடுச்சு.. கொஞ்சம் கவிதைத்துவம் சேத்து விளக்கியிருக்கலாமோ?.. :)
நல்லாயிருக்கு...\\

கவிதை சேர்த்து எழுதியிருக்கலாம் தான், கருத்தினை மனதில் கொள்கிறேன் ரசிகன்!

said...

வழக்கம் போல அருமையான கதை..நன்றாக சொல்லியிருக்கிங்க ;))

ஆனால் ரொம்ப வேகமாக போன மாதிரி இருக்கு. அதுவும் கடைசியில டக்குன்னு முடிஞ்சது போல இருக்கு.

\\வருடங்கள் பறக்க மாலதியின் குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் வயதையடைந்தார்கள்.\\

அப்புறம் எனக்கு டவுட்டு இது யாரு மாலதி?

said...

\\ கோபிநாத் said...
வழக்கம் போல அருமையான கதை..நன்றாக சொல்லியிருக்கிங்க ;))

ஆனால் ரொம்ப வேகமாக போன மாதிரி இருக்கு. அதுவும் கடைசியில டக்குன்னு முடிஞ்சது போல இருக்கு.

\\வருடங்கள் பறக்க மாலதியின் குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் வயதையடைந்தார்கள்.\\

அப்புறம் எனக்கு டவுட்டு இது யாரு மாலதி?\\\
ஹாய் கோபி,

'புவனா' கதாப்பாத்திரத்திற்கு முதலில் 'மாலதி' என்ற பெயரை நினைத்திருந்தேன், பின் புவனா என்றே வைத்துவிட்டேன்,
ஸோ....எழுதும் போது தவறுதலாக மாலதி என்ற பெயரை எழுதிவிட்டேன்,
கரெக்ட்டா கண்டுபிடிச்சீட்டீங்க, ரொம்ப தாங்க்ஸ் கோபி!!

said...

உணர்ச்சிக்குவியலா இருக்கு திவ்யா !!! :))

வித்தியாசமான கரு.... ரசித்தேன் ..

said...

மிகுந்த சிரத்தையோடு செதுக்கப்பட்ட கதை. முதல் மரியாதை திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி என்னை மிகவும் பாதித்த ஒன்று. அதற்கு நெருங்கிவரும் தன்மையுடைய உங்கள் சிறுகதை மிகவும் பாராட்டத்தக்கது.

இதே கதையை ஓர் அரைமணி நேர காட்சிப்படமாக்கினால், புவனாவின் உணர்வுகளும், நடராஜனின் உணர்வுகளும் இன்னும் ஆழமாக பதியப்பட வாய்ப்புள்ளது.

மிகச்சிறந்த பதிவு.

said...

Very nice story..

said...

திவ்யா ,டி.வி காரங்க பார்த்தா ஒரு மெகா சீரியலே ரெடி பண்ணிருவாங்க... அவ்வ்ளோ பெரிய மேட்டரை இவ்வ்ளோ சின்ன கதையா முடிச்சுட்டீங்களே?நல்ல கதை.
அன்புடன் அருணா

said...

வணக்கம் திவ்யா :))

தொடர் ஏக்கங்கள்! தந்தைக்கும் மகளுக்குமான உணர்வு போராட்டத்தை ஒறு சிறுகதையாய் அழகாக கூறியிருக்கிறீகள்!! அழகு :)

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
உணர்ச்சிக்குவியலா இருக்கு திவ்யா !!! :))

வித்தியாசமான கரு.... ரசித்தேன் ..\\

உங்கள் ரசிப்பிற்கு நன்றி நவீன்!

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
உணர்ச்சிக்குவியலா இருக்கு திவ்யா !!! :))

வித்தியாசமான கரு.... ரசித்தேன் ..\\

உங்கள் ரசிப்பிற்கு நன்றி நவீன்!!

said...

\\ நித்யகுமாரன் said...
மிகுந்த சிரத்தையோடு செதுக்கப்பட்ட கதை. முதல் மரியாதை திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி என்னை மிகவும் பாதித்த ஒன்று. அதற்கு நெருங்கிவரும் தன்மையுடைய உங்கள் சிறுகதை மிகவும் பாராட்டத்தக்கது.

இதே கதையை ஓர் அரைமணி நேர காட்சிப்படமாக்கினால், புவனாவின் உணர்வுகளும், நடராஜனின் உணர்வுகளும் இன்னும் ஆழமாக பதியப்பட வாய்ப்புள்ளது.

மிகச்சிறந்த பதிவு.\\


வாங்க நித்யகுமாரன்,
உங்கள் விரிவான , ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்க்கு நன்றி!

said...

\\Prabakar Samiyappan said...
Very nice story..\\


வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி பிரபாகர்!

said...

சாதாரண கதை என்றாலும், திரைக்கதையின் விறுவிறுப்பு சூப்பர்! கலக்குங்கப்பா!

said...

nice story, rasithu padichen.

said...

Hei...awesome narration...lovely story...gr888 wrk yaar... u made to feel even practical guys like me too :-)