February 29, 2008

மாமாவின் மனசுல...[பகுதி -1]

"இங்க பாருங்க மாமா, இனிமே 'சொந்தம் விட்டு போக கூடாது, பந்தம் பிரிஞ்சுடக்கூடாதுன்னு' டயலாக் பேசிட்டு உங்க பையனுக்கு என்னை பொண்ணு கேட்டு வர்ர வேலை வைச்சுக்காதீங்க, சொல்லிட்டேன்"

"என்னமா ராஜி கண்ணு, இப்படி பேசுறே, பாட்டி சாகுற வரைக்கும் உனக்கும் என் பையன் ரவிக்கும் கல்யாணம் முடிக்கனும்னு ஆசைப்பட்டுடே இருந்தாங்களேம்மா"

"பாட்டி அந்தக்காலத்து ஆளு, அப்படித்தான் சொந்தத்துல கல்யாணம் பண்ணனும்னு ஆசை படுவாங்க, scientific ஆ இப்படி சொந்தத்துல கட்டிக்கிறதெல்லாம் நல்லதில்ல, பொறக்குற குழந்தைக்கு குறைகள் இருக்க வாய்ப்பு நிறைய இருக்காம், தெரிஞ்சுக்கோங்க மாமா"

"என்னடி இது, மாமான்னு ஒரு மரியாதை கூட இல்லாம எதிர்த்து எதிர்த்து பேசுறே. என் அண்ணன் பையன் ரவிக்கு என்னடி குறைச்சல், அவனை கட்டிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறே"

"ஆமாம்மா, உன் அண்ணன் பையனுக்கு எதுவுமே குறைச்சல் கிடையாது, எல்லாமே ஜாஸ்தி..........திமிரு ஜாஸ்தி, கோபம் ஜாஸ்தி, தலைக்கணம் ஜாஸ்தி, உயரம் ஜாஸ்தி"

"பாருங்கண்ண உங்க முன்னாடியே ரவியை எப்படி பேசுறான்னு, எல்லாம் இவ அப்பா கொடுக்கிற செல்லம்"

"விடும்மா மரகதம், சின்ன புள்ள வெகுளியா பேசுது. எல்லாம் கல்யாணம் ஆகி எங்கவீட்டுக்கு வந்துட்டா சரியாகிடும்"

"என்ன மாமா, விளையாடுறீங்களா? நான் இங்கே கல்யாணம் வேணாம்னு கத்திட்டு இருக்கிறேன், நீங்க என்னடான்னா உங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்தா சரியாகிடும்ன்றீங்க. கேட்டுக்கோங்க மாமா, நான் மட்டும் உங்க பையனை கட்டிக்கிட்டேன்னு வைங்க, உங்களுக்கு சோறு போடாமா மூலையில உக்கார வைச்சு கஞ்சிதான் ஊத்துவேன்"


"அடிப்பாவி, எங்கண்ணனுக்கு கஞ்சிதான் ஊத்துவேன்னு என் முன்னாலேயே சொல்றே, உனக்கு வர வர வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சுடி"

"குழந்தையை திட்டாதேமா மரகதம், மாமான்ற உரிமையோட பேசுறா, நிச்சயத்துக்கு நல்ல நாள் பார்க்கனும், மாப்பிள்ளைக்கிட்ட கேட்டு சொல்லு மரகதம்"

" மாமா உங்களுக்கு எத்தனை தடவ சொன்னாலும் புரியாதா? நான் இவ்வளவு சொல்லியும் நிச்சயத்துக்கு நாள் குறின்னு உங்க தங்கச்சிக்கு மந்திரம் ஓதுறீங்க! ' என் பையன் கம்பியூட்டர் இஞ்சினியர்'ன்னு பெருசா பீத்திப்பாங்களே அத்தை, அவங்களையே கம்பியூட்டர் இஞ்சினியர் பொண்ணா, கொஞ்சம் உயரமான பொண்ணா பார்க்க சொல்லுங்க உங்க பையனுக்கு, நான் எல்லாம் வெரும் பிகாம் தான், குட்டச்சி குட்டச்சின்னு என்னை கிண்டல் அடிப்பான் உங்க பையன், ஸோ அவனுக்கு 'நெட்டச்சி'யா ஒரு பொண்ணை பாருங்க, என்னை ஆள விடுங்க மாமா"

பட படவென ராஜி பொரிந்துத் தள்ளிக்கொண்டிருக்க, ராஜியின் அப்பா வீட்டிற்குள் வந்தார்.

அனைவரும் எதுவுமே நடவாதது போல் கப்சிப்பென்று அமைதலானார்கள்.

சிறிது நேரம் பேசியிருந்து விட்டு மாமா ஆலந்துரையில் உள்ள தன் வீட்டிற்கு புறப்பட்டார். புறப்படும் முன் சமயலறையில் தன் தஙகையிடம் ராஜி-ரவி திருமண ஏற்பாடு பற்றி பேசிவிட்டு சென்றார்.

மாமா கணேசன் ஆடிட்டராக இருந்தவர், தன் அப்பா அம்மாவின் மறைவுக்கு பின் , 4 வருஷத்திற்கு முன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கோவையை அடுத்த ஆலந்துரையில் பண்ணை வீட்டிலேயே செட்டிலாகி, விவசாய நிலன்களை கவனித்துக் கொள்கிறார்.



தன் ஒரே தங்கை மரகதத்தின் மூத்த மகள் ராஜியை தன் மகன் ரவிக்கு மணமுடிக்க வேண்டுமென மனம் நிறைய ஆசை கணேசனுக்கு.

'இந்த ராஜி பொண்ணு இப்படி அடம் பிடிக்கிறாளே, எப்படி சம்மதிக்க வைக்க போறா என் தங்கச்சி, மாப்பிள்ளை என்ன பதில் சொல்லுவாரோ? என சிந்தனையுடன் தன் வீட்டிற்குள் நுழைந்தவர், வாசலில் இருந்த Nike Shoe வை பார்த்ததும் தன் மகன் ரவி Bangalore லிருந்து வந்திருக்கிறான் என்பதை அறிந்துக்கொண்டார்.

'இவன் அடுத்த சனி-ஞாயிறு தானே ஊருக்கு வரேன்னு சொன்னான், இந்த வாரமே வந்திருக்கான், என்னவா இருக்கும்?' யோசனையுடன் உள் நுழைய இருந்தவரின் காதில் , உள்ளே அவர் மனைவி கல்யாணியும், மகனும் உரத்த சத்தமாய் பேசுவது காதில் விழுந்தது.

"ஏன்மா அப்பாவுக்கு வேற வேளையே இல்லியா, பொண்ணு கொடு , பொண்ணு கொடுன்னு எதுக்கு அந்த வீட்டுக்கு போய் நிக்கிறாரு"

"அதானடா, நான் சொன்ன எங்கே கேட்கிறார், சீக்கிரம் கல்யாணத்தை நிச்சயம் பண்ணனும், அவ ஃபைனல் எக்ஸாம் முடிஞ்சதும்னு ஒத்தக் காலுல நிக்கிறாரு, அதான் ஃபோனை போட்டு இந்த வாரமே உன்னை இங்க வரவைச்சேன்"

"அவ படிச்சு முடிச்சா என்ன , முடிக்காட்டி எனகென்ன, அந்த வாயாடியை எவன் கட்டிப்பான். என் தலையில கட்டிவிட பாக்குறார் அப்பா"

"அப்பா வந்ததும், கட் அண்ட் ரைட்டா சொல்லிடு ரவி. அவ வேற ஆளு பார்க்க வெள்ளையும் சொள்ளையுமா அழகா இருக்கிறாளேன்னு உன் மனசுலயும் முறைப்பொண்ணு அவ மேல ஒரு ஆசை இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்டா. அந்த திமிரு பிடிச்சவளை மட்டும் நீ கட்டிக்கிடா என்னை அண்ட விடமாட்டா, வந்துப்பார்னு வரிஞ்சுக்கட்டிகிட்டு நிப்பா"


"ஆமாம்மா, நம்ம ருக்மணி கல்யாணத்துக்கு அவகுடும்பம் ஊருக்கு வந்திருந்தபோ, அவளும் அவ தங்கச்சியும் சேர்ந்து என்னா அலிச்சாட்டியம் பண்ணினாங்க தெரியுமா. நம்ம வரதனை உண்டு இல்லைன்னு பண்ணிடாளுங்க , ராட்சஸிங்க!"

"ஆமாம்டா, இவரு தங்கச்சி பெத்த இரண்டு பொண்ணும் அடங்காபிடறிங்கடா, அதுலயும் இந்த இரண்டாவதுகாரி அட்டகாசம் தாங்கலின்னு அவ அப்பா ஹாஸ்டல சேர்த்துட்டாராம்டா"

"இவளுங்களை எல்லாம் ஹாஸ்டல்ல சேர்க்க கூடாதும்மா, ஜெயில்ல போடனும், அப்பாவுக்கு தான் அவரோட தங்கச்சி பொண்ணுங்க மேல எப்பவுமே ஒரு தனி பாசம், திருந்தவே மாட்டாருமா"


"கரெக்ட்டுடா அவரு மனசு ஃபுல்லா இப்ப உனக்கும் ராஜிக்கும் கல்யாணம் பண்றதை பத்திதான் அடிச்சுக்குதுடா"

"பாட்டி திதிக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு வந்திருந்தபோ, ராட்சஸி சூடா காப்பிய ஈளிச்சுக்கிட்டு என் கைல கொடுத்து போட்டு, நல்ல செமத்தியா ஒரு அரை வாங்கி கட்டிகிட்டா. அது இன்னமும் அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். ரோஷக்காரி, கோபத்துல சொன்ன மாதிரியே அதுக்கப்புறம் அத்தை நம்ம வீட்டுக்கு வந்தாலும் இவ வரமாட்டா பார்த்தியாம்மா"

"அப்படியே ரோஷத்தோட இருந்துட்டு போட்டும்டா"

"ஆமாம்மா"

தாயும் மகனும் பேசிக்கொண்டிருக்க கணேசன் ஹாலுக்குள் நுழைந்தார்.

"என்னப்பா ரவி எப்ப வந்த?"

"இப்ப.......இப்பதான்பா"

"அடுத்த சனி-ஞாயிறு தான் வருவேன்னு சொன்ன"

"ஆ.......ஆமாம்.....அம்மாவை பார்க்கனும் போல இருந்தது, அதான்........"

"சரிப்பா, சாப்பிட்டியா?"

"இல்ல.......இனிமேதான்"

"சரி, கல்யாணி இனிப்பா ஏதும் கொண்டுவாம்மா, நல்ல செய்தி சொல்லனும்"

"என்ன.........என்னங்க செய்தி"

"என் தங்கச்சி மக ராஜிக்கும் நம்ம ரவிக்கும் நிச்சயத்துக்கு நாள் குறிச்சேட்டேம்மா"

"ராஜி....அவ...ஒத்துக்கிட்டாளா"

"கல்யாணம்னு சொன்னதும் வெகுளி பொண்ணுக்கு அவ்ளோ வெட்கம், மாமா மாமான்னு என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டா இப்போவே"

அம்மாவும் மகனும் அதிர்ச்சியில் விழித்தனர்.

"அப்பா......."

"என்னப்பா ரவி"

"அப்பா.....எனக்கு இந்த கல்யாணத்துல இஷடம் இல்ல"

"என்னப்பா சொல்ற.....ஏன்?"

"இஷ்டம் இல்ல.......வேண்டாம், அவ்ளவுதான்"

"அதான் ஏன்னு கேட்குறேன்பா ரவி"

"நான்......நான் Banglore ல ஒரு பொண்ணை விரும்புறேன்பா"

'அடப்பாவி ராஜியை கட்டிக்க மாட்டேன்னு அப்பாகிட்ட சொல்லுன்னு வீட்டுக்கு வரவழைச்சா, 'யரையோ' காதலிக்கிறேன்னு குண்டு தூக்கி போடுறியே' என ரவியின் அம்மா குழப்பத்துடன் மகனை நோக்கினாள்.

"ரவி......என்ன.......சொல்ற....."

நெஞ்சை பிடித்துக்கொண்டு கணேஷன் சோஃபாவில் சாய்ந்து, தன் நிலை மறந்தார்.
மூர்ச்சையடைந்து விழுந்த அப்பாவை கைத்தாங்களாக பிடித்து,

"அப்பா........அப்பா.......என்னாச்சுப்பா.....கண்ணைத்திறங்கபா" என ரவி கதற,

என்னங்க...........என்னங்க" என்று கல்யாணி அரற்ற.......

[தொடரும்]

மாமாவின் மனசுல - பகுதி 2

மாமாவின் மனசுல - பகுதி 3

மாமாவின் மனசுல - பகுதி 4


75 comments:

said...

அம்மணி திவ்யா :))
என்ன சொல்ல ...?? அப்படியே 70ம்ம் ல ஒரு படம் ஓடுது ... ஆரம்பமே டாப் கியர்ல போகுது...??

லொடலொட ஹீரோயின் தான் ஹைலைட்டே... :))) அசத்துங்கம்மணி..:))))

said...

//குட்டச்சி குட்டச்சின்னு என்னை கிண்டல் அடிப்பான் உங்க பையன், ஸோ அவனுக்கு 'நெட்டச்சி'யா ஒரு பொண்ணை பாருங்க, என்னை ஆள விடுங்க மாமா"//

அட அட அட என்ன அழகா பேரு வச்சு ஆசையா கூப்ட்டு இருக்கான்..;))))இப்படி சொல்லிட்டாளே..:))))

//ராட்சஸி சூடா காப்பிய ஈளிச்சுக்கிட்டு என் கைல கொடுத்து போட்டு, நல்ல செமத்தியா ஒரு அரை வாங்கி கட்டிகிட்டா. அது இன்னமும் அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். ரோஷக்காரி, //

அட என்னாதிது காபிய சூடா குடிச்சாதானே நல்ல இருக்கும்..????? ;))) ஆறிப்போனா கசக்குமே..;)))) உங்க ராட்சஷ ரோஷகாரி மேல தப்பு இருக்கற மாதிரியே தெரிலீங்களே..;))))))

இப்படியெல்லாம் டயலாக்கை மானாவாரியா அள்ளித்தெளிக்க எங்கேம்மா 'ட்ரெய்ன்னிங்' எடுக்கறீங்க..?? ;)))))

said...

ஆஹா... அசத்தலான ஆரம்பம்...

//"எல்லாம் கல்யாணம் ஆகி எங்கவீட்டுக்கு வந்துட்டா சரியாகிடும்"//
இதென்ன... இததான் எல்லாரும் சொல்றாங்க... அதெப்பிடி என்றதுதான் விளங்கேல்ல...

//"நான்......நான் Banglore ல ஒரு பொண்ணை விரும்புறேன்பா"//
ஒரு திருப்பத்தோட முடிச்சிருக்கிறீங்க...

அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

said...

திவ்யா...
மொடரேஷன் இல்லயா... ??
:)

said...

பொண்ணு,பையன் ரெண்டு பேருமே பிடிக்கலை பிடிக்கலைன்னு சீன் போடுறாங்களே???
பையன் என்னமோ காதலிக்கறேன்னு டூப் விடறா மாதிரி இருக்கு!!!
பையனோட அப்பா கூட மாரடைப்பு வந்தது போல டூப் விடறாருன்னு நெனைக்கறேன்!! ;)

அடுத்த பகுதியில பாக்கலாம்!
என்ன ஆகுதுன்னு....
:-)

said...

கலக்கல்... மறூபடியும்,ஒரு காதல் கதை,திவ்யா மாஸ்டரின் கைவந்த ரசனையான வார்த்தை பிரயோகங்கள்.. சூப்பர்....

said...

//ஜொள்ளுப்பாண்டி said...

அம்மணி திவ்யா :))
என்ன சொல்ல ...?? அப்படியே 70ம்ம் ல ஒரு படம் ஓடுது ... ஆரம்பமே டாப் கியர்ல போகுது...??

லொடலொட ஹீரோயின் தான் ஹைலைட்டே... :))) அசத்துங்கம்மணி..:))))//

ரிப்பீட்டேய்....

said...

மோதல் வேறெங்க போய் முடியும் :))

குடும்பத்துல இருந்து ஒரு காதல் கதை ஆரம்பிசிருக்குற மாதிரி தெரியுது!!

வழக்கம்போல வேகமான நாயகிதான்!

வசனங்கள் நல்லா இருக்குன்னு நான் திரும்ப திரும்ப சொல்லமாட்டேன் :))

said...

மோதல் வேறெங்க போய் முடியும் :))

குடும்பத்துல இருந்து ஒரு காதல் கதை ஆரம்பிசிருக்குற மாதிரி தெரியுது!!

வழக்கம்போல வேகமான நாயகிதான்!

வசனங்கள் நல்லா இருக்குன்னு நான் திரும்ப திரும்ப சொல்லமாட்டேன் :))

said...

அட்ராசக்கை திரும்பவும் ஒரு காதல் கதையா? ம்ம்ம்ம். அது சரி எப்பவும் கம்பெனி பேர் போட்டு விளக்குறீங்களே? Nike shoes, Park avenue after shave அப்படின்னு. ஸ்பான்சர் பண்றாங்களோ விளம்பரத்துக்கு? :D

Anonymous said...

வேலை தேடும் சங்கம் தலைவர்! said...

// வேலை வைச்சுக்காதீங்க, சொல்லிட்டேன்"//

வேலை இல்லாத பிரச்சனையை ஒழிப்போம்னு இங்கன நாங்க சொல்லிட்டு இருந்தா... நீங்க வேலை வைச்சுகாதீங்க.. செய்யாதீங்கனூட்டூ... என்னதிது?

Anonymous said...

பொண்ணை சைட் அடிச்ச இன்னொரு பையன் said....
//பாட்டி சாகுற வரைக்கும் உனக்கும் என் பையன் ரவிக்கும் கல்யாணம் //
அப்ப பாட்டி செத்த பின்ன, எனக்கு கட்டி கொடுப்பீங்களா?

Anonymous said...

தாத்தா said...

//பாட்டி அந்தக்காலத்து ஆளு, அப்படித்தான் சொந்தத்துல கல்யாணம் பண்ணனும்னு ஆசை படுவாங்க//
எவடா அது, என் wifeக்கு சொந்தத்தில வேற கல்யாணம் பாக்கிறது!!!!

Anonymous said...

பார்த்திட்டு இருந்த அண்ணன் said..

//பாருங்கண்ண உங்க முன்னாடியே ரவியை எப்படி பேசுறான்னு,//

ஆமா இதென்ன அநியாயம்.. இரும்மா, நான் அந்த பக்கம் திரும்பிக்கிறேன்.. இப்ப சொல்லு...

Anonymous said...

என்ன கொடும இது.. said

//அடிப்பாவி, எங்கண்ணனுக்கு கஞ்சிதான் ஊத்துவேன்னு என் முன்னாலேயே சொல்றே, //

அடப்பாவிகளா... இந்த வீட்டில முகத்தை பார்த்து யாரு கிட்டயும் பேச முடியாதா....

said...
This comment has been removed by the author.
Anonymous said...

அணு ஆயுதம் said..

//'யரையோ' காதலிக்கிறேன்னு குண்டு தூக்கி போடுறியே' //

பேசாம நம்ம மிலிட்டரிக்கு, இந்த குண்டு ஒரு 100 ஆர்டர் பன்னிடலாம்...

Anonymous said...

இந்த பெரியவங்களே இப்படி தான்.. said
//தன் ஒரே தங்கை மரகதத்தின் மூத்த மகள் ராஜியை தன் மகன் ரவிக்கு மணமுடிக்க வேண்டுமென மனம் நிறைய ஆசை கணேசனுக்கு.
//

டேய்... யாருக்கு யாரை கல்யாணம் செய்யனும்னு கல்யாணம் செய்யறவங்க ஆசைபடன்னும்... நீ இல்ல..

said...

yaruppa ithu ippadi gummi adikirathu...

Anonymous said...

chennai said

//"நான்......நான் Banglore ல ஒரு பொண்ணை விரும்புறேன்பா"//

ஏன்டா அப்ப நீ சென்னைல ஒரு பொண்ணை காதலிப்பா... hyderabadல ஒரு பொண்ண காதலிப்ப.. உனக்கு என்ன ஊரு ஊருக்கா கல்யாணம் செய்ய முடியும்?

said...

kathai nalla irukkunga master.

adutha post seekiram podunga :)

Anonymous said...

கேமரா said..
//அடுத்த சனி-ஞாயிறு தான் வருவேன்னு சொன்ன"

"ஆ.......ஆமாம்.....அம்மாவை பார்க்கனும் போல இருந்தது, அதான்........"//


போட்டோ.. போட்டோ.. னு ஒன்னு இருக்கு தெரிய்யுமா???

Anonymous said...

பாசமலர் அண்ணன் said..

//அடிப்பாவி, எங்கண்ணனுக்கு கஞ்சிதான் ஊத்துவேன்னு என் முன்னாலேயே சொல்றே, உனக்கு வர வர வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சுடி//

இப்ப என்ன சொல்ல வர? அது கூட ஊத்த கூடாதுனு சொல்லறியோ..

Anonymous said...

டாஸ்மார்க் said

//அவரு மனசு ஃபுல்லா //
அப்ப எங்க கடைல விக்கிற புல்லெல்லாம் என்ன மாடா திங்கும்?

Anonymous said...

யாரையோ காதலிக்கிறவன் said..

// 'யரையோ' காதலிக்கிறேன்னு குண்டு தூக்கி போடுறியே' //

வர்ட்டா! 25 ஆச்சு!

Anonymous said...

பாவனா said..

என் படம் போட்டதுக்கு ரொம்ப நன்றிங்க.. உங்க கதைல என் பட்டம் போட்டாதுல தான் என் அழகே கூடீடுச்சு..

said...

கதை அரம்பமே சூப்பராயிருக்கு திவ்யா...:))

அடுத்த பகுதி எப்போ???

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
அம்மணி திவ்யா :))
என்ன சொல்ல ...?? அப்படியே 70ம்ம் ல ஒரு படம் ஓடுது ... ஆரம்பமே டாப் கியர்ல போகுது...??

லொடலொட ஹீரோயின் தான் ஹைலைட்டே... :))) அசத்துங்கம்மணி..:))))\\

வாங்க பாண்டியண்ணே,
70ம்ம் ல படம் பார்த்தியளாக்கும்?? ஹாஹா!
லொட லொட ஹீரோயினுக்கு சலிக்காம 'ஜாஸ்தி' பேசுறான் ஹீரோவும், அது உங்களுக்கு தெரியாதே!!

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//குட்டச்சி குட்டச்சின்னு என்னை கிண்டல் அடிப்பான் உங்க பையன், ஸோ அவனுக்கு 'நெட்டச்சி'யா ஒரு பொண்ணை பாருங்க, என்னை ஆள விடுங்க மாமா"//

அட அட அட என்ன அழகா பேரு வச்சு ஆசையா கூப்ட்டு இருக்கான்..;))))இப்படி சொல்லிட்டாளே..:))))\\

ஹலோ பாண்டியண்ணெ, 'குட்டச்சின்னு' கூப்பிடுறது உங்களுக்கு அழகா இருக்காக்கும்??

//ராட்சஸி சூடா காப்பிய ஈளிச்சுக்கிட்டு என் கைல கொடுத்து போட்டு, நல்ல செமத்தியா ஒரு அரை வாங்கி கட்டிகிட்டா. அது இன்னமும் அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். ரோஷக்காரி, //

அட என்னாதிது காபிய சூடா குடிச்சாதானே நல்ல இருக்கும்..????? ;))) ஆறிப்போனா கசக்குமே..;)))) உங்க ராட்சஷ ரோஷகாரி மேல தப்பு இருக்கற மாதிரியே தெரிலீங்களே..;)))))) \\\

சூடாதானுங்க காப்பி குடுக்கனும், நல்ல மனசு காரவுக உங்களுக்கு புரியுது பாண்டிண்ணே, அந்த பயலுக்கு புரியல பாருங்க!!

\\\இப்படியெல்லாம் டயலாக்கை மானாவாரியா அள்ளித்தெளிக்க எங்கேம்மா 'ட்ரெய்ன்னிங்' எடுக்கறீங்க..?? ;)))))\\

என்ன பாண்டியண்ணே இப்படி கேட்டுப்புட்டீக??
'ஜொள்ளு'விட ட்ரெயினிங் கொடுக்கிறவுக இருக்காக, ஆனா 'டயலாக்'எழுத ட்ரெயினிங் கொடுக்க ஒரு பயபுளையும் இல்லீங்க, அப்புறம் எங்கிட்டு போய் ட்ரெயினிங் எடுக்கிறது,
எல்லாம் சொந்த கற்பனை தானுங்கண்ணா!!

said...

\\ நிமல்/NiMaL said...
ஆஹா... அசத்தலான ஆரம்பம்...

//"எல்லாம் கல்யாணம் ஆகி எங்கவீட்டுக்கு வந்துட்டா சரியாகிடும்"//
இதென்ன... இததான் எல்லாரும் சொல்றாங்க... அதெப்பிடி என்றதுதான் விளங்கேல்ல...

//"நான்......நான் Banglore ல ஒரு பொண்ணை விரும்புறேன்பா"//
ஒரு திருப்பத்தோட முடிச்சிருக்கிறீங்க...

அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\\

ஹாய் நிமல்,
வாழ்த்துக்களுக்கும், விரிவான பின்னூட்ட ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நிமல்.

[கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போய்ட்டா.....பொண்ணுக்கு பொறுப்பு வந்திரும்னு ஒரு நம்பிக்கைத்தான்!!]

said...

\\ நிமல்/NiMaL said...
திவ்யா...
மொடரேஷன் இல்லயா... ??
:)\\

ஆமாம் நிமல்:)

said...

\\ CVR said...
பொண்ணு,பையன் ரெண்டு பேருமே பிடிக்கலை பிடிக்கலைன்னு சீன் போடுறாங்களே???
பையன் என்னமோ காதலிக்கறேன்னு டூப் விடறா மாதிரி இருக்கு!!!
பையனோட அப்பா கூட மாரடைப்பு வந்தது போல டூப் விடறாருன்னு நெனைக்கறேன்!! ;)

அடுத்த பகுதியில பாக்கலாம்!
என்ன ஆகுதுன்னு....\\

வாங்க சிவிஆர், வணக்கம்!

ஏங்க பையனோட அப்பாவும் 'டூப்' விடுறாருன்னு சொல்றீங்க, பாவங்க மாமா!!

அடுத்த பகுதியில் பாருங்க என்னாச்சுன்னு.....

வருகைக்கு நன்றி சிவிஆர்!

said...

\\ ரசிகன் said...
கலக்கல்... மறூபடியும்,ஒரு காதல் கதை,திவ்யா மாஸ்டரின் கைவந்த ரசனையான வார்த்தை பிரயோகங்கள்.. சூப்பர்....\\

வாங்க மாஸ்டர்......ஸாரி....வாங்க 'மிஸ்டர் ரசிகன்'
பாராட்டிற்கு நன்றி!!

said...

\\ sathish said...
மோதல் வேறெங்க போய் முடியும் :))

குடும்பத்துல இருந்து ஒரு காதல் கதை ஆரம்பிசிருக்குற மாதிரி தெரியுது!!

வழக்கம்போல வேகமான நாயகிதான்!

வசனங்கள் நல்லா இருக்குன்னு நான் திரும்ப திரும்ப சொல்லமாட்டேன் :))\

வாங்க சதீஷ்,
வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி!

[திரும்ப திரும்ப சொன்னா என்ன? குறைஞ்சா போய்டூவீங்க!!......காசா பணமா , பின்னூட்டம்தான, இவ்வளவு சலிச்சுக்கிறீங்க??]

said...

\\ ஸ்ரீ said...
அட்ராசக்கை திரும்பவும் ஒரு காதல் கதையா? ம்ம்ம்ம். அது சரி எப்பவும் கம்பெனி பேர் போட்டு விளக்குறீங்களே? Nike shoes, Park avenue after shave அப்படின்னு. ஸ்பான்சர் பண்றாங்களோ விளம்பரத்துக்கு? :D\

ஹாய் Sri,
விளம்பரத்துக்கு தனியா யாரும் ஸ்பான்ஸர் பண்ணலீங்க.....எனக்கு பிடிச்ச 'cmpy brand' னா இப்படி அங்கே , இங்கே போட்டிடுவேன்,
இதெல்லாமா நோட் பண்றீங்க??
ஆஹா! ரொம்ப விபரம் தான் நீங்க!!

வருகைக்கு நன்றி!!

said...

\\ Dreamzz said...
kathai nalla irukkunga master.

adutha post seekiram podunga :)\\

பாராட்டிற்கு நன்றிங்க மிஸ்டர்,
அடுத்த பகுதி சீக்கிரம் போட்டிடுறேங்க:)

said...

\\ Praveena Jennifer Jacob said...
கதை அரம்பமே சூப்பராயிருக்கு திவ்யா...:))

அடுத்த பகுதி எப்போ???\\

ஹாய் ப்ரவீனா,

வாங்க, வாங்க!!

கதையின் ஆரம்பமே பிடிச்சிருக்கா உங்களுக்கு......தொடர்ந்து படிங்க,
அடுத்த பகுதி விரைவில் பதிவிடுகிறேன் ப்ரவீனா!!

said...

//என்ன பாண்டியண்ணே இப்படி கேட்டுப்புட்டீக??
'ஜொள்ளு'விட ட்ரெயினிங் கொடுக்கிறவுக இருக்காக, ஆனா 'டயலாக்'எழுத ட்ரெயினிங் கொடுக்க ஒரு பயபுளையும் இல்லீங்க, அப்புறம் எங்கிட்டு போய் ட்ரெயினிங் எடுக்கிறது,
எல்லாம் சொந்த கற்பனை தானுங்கண்ணா!!//

என்ன எங்கள மாதிரியே பேசிக்காட்டுறீயளாக்கும்...?? :)))) டயலாக்கு எல்லாம் சூப்பராத்தான் இருக்கு... ஏன் நீங்கதான் டயலாக்கு குயின் ஆச்சே..? நம்மளுக்கும் கொஞ்சம் டியூசன் எடுக்கறது...?? :))))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//என்ன பாண்டியண்ணே இப்படி கேட்டுப்புட்டீக??
'ஜொள்ளு'விட ட்ரெயினிங் கொடுக்கிறவுக இருக்காக, ஆனா 'டயலாக்'எழுத ட்ரெயினிங் கொடுக்க ஒரு பயபுளையும் இல்லீங்க, அப்புறம் எங்கிட்டு போய் ட்ரெயினிங் எடுக்கிறது,
எல்லாம் சொந்த கற்பனை தானுங்கண்ணா!!//

என்ன எங்கள மாதிரியே பேசிக்காட்டுறீயளாக்கும்...?? :)))) டயலாக்கு எல்லாம் சூப்பராத்தான் இருக்கு... ஏன் நீங்கதான் டயலாக்கு குயின் ஆச்சே..? நம்மளுக்கும் கொஞ்சம் டியூசன் எடுக்கறது...?? :))))\\

ஏணுங்கண்ணா...என்னய போய் உங்களுக்கு டியூசன் எடுக்க சொல்றிய??

'டயலாக் குயின்'ன்னு நீங்க பட்டம் கொடுத்தால உங்களுக்கு மட்டும் வேணா டியூஷன் எடுக்குறேனுங்கண்ணா...ஆனா ரொம்ப செலவாகுமுங்க, ப்ரவாயில்லீங்களா????

said...

நன்றாயிருக்கிறது.

வாழ்த்துக்கள் பேத்தி.

said...

கதை அருமை. அதிலும் நடை இன்னும் அருமை. உங்க டயலாக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நட்போடு
நிவிஷா

said...

"Aiyo kalyaani.. enna aachu??" nu pakkaththu veetu bangajam Odi vara...

"Ennappa Ravi.. appaakku nenju valiyaa" nu Raviyoda chinna vayasu cricket thosthu kirukku kannaayiram sound vida...

ambulance varuthaa???

------------

enna ithu?? ippadi intha nerathula break pottaa epdi???

said...

\\"மாமாவின் மனசுல...[பகுதி -1]"\\


ஆகா...தலைப்பே சூப்பராக இருக்கே..;)))

காதல், கல்யாண கதைகளுக்கு உகந்த இடம் மனசுக்குள் மத்தாப்பூ.

மனதை கவரும் படங்களுடன்..படித்து விட்டிர்களாஆ!ஆஆஆ ;))

said...

கொஞ்சநாளா வேலைப்பளு காரணமா தமிழ்மணம் பக்கம் வரமுடியாம போச்சு... இது போன்ற நிறைய சுவாரஸ்யமான பதிவுகளை பார்க்க முடியாமல் போய்விட்டது!! எனிவே கூகில் ரீடரில் சேத்தாச்சு இனி பிரச்சனையில்லை... ஐய்யய்யோ வந்த விஷயத்தை சொல்லாம சொந்தவிஷயத்தை செல்லிக்கிட்டிருக்கிறேன்...

கதை சூப்பரா போகுது அடுத்த எபிசோடை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

said...

\\ சாம் தாத்தா said...
நன்றாயிருக்கிறது.

வாழ்த்துக்கள் பேத்தி.\

சாம் தாத்தா.....எங்கே போய்ட்டீங்க, ரொம்ப நாளா ஆளைக்காணோம்??
உடம்புக்கு இப்போ ப்ரவாயில்லீங்களா?? Take care Sam thaththaa,
Glad to c ur comments!!

said...

\\ நிவிஷா..... said...
கதை அருமை. அதிலும் நடை இன்னும் அருமை. உங்க டயலாக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நட்போடு
நிவிஷா\\

ஹாய் நிவி,
கதையின் டயலாக்ஸ் உங்களூக்கு ரொம்ப பிடிக்குமா??? நன்றி நிவி!!

said...

\\ ஜி said...
"Aiyo kalyaani.. enna aachu??" nu pakkaththu veetu bangajam Odi vara...

"Ennappa Ravi.. appaakku nenju valiyaa" nu Raviyoda chinna vayasu cricket thosthu kirukku kannaayiram sound vida...

ambulance varuthaa???

------------

enna ithu?? ippadi intha nerathula break pottaa epdi???\

ஆஹா ஜி, என்ன இது கதையில புதுசு புதுசா கரெக்டர் புகுத்துறீங்க??

அடுத்த பகுதியில முதல் கியர் போட்டுடலாம்....ஒகேவா!!

said...

\\ கோபிநாத் said...
\\"மாமாவின் மனசுல...[பகுதி -1]"\\


ஆகா...தலைப்பே சூப்பராக இருக்கே..;)))

காதல், கல்யாண கதைகளுக்கு உகந்த இடம் மனசுக்குள் மத்தாப்பூ.

மனதை கவரும் படங்களுடன்..படித்து விட்டிர்களாஆ!ஆஆஆ ;))\\

ஹாஹாஹா!!
கோபி கொடுத்த காசுக்கு மேலேயே 'விளம்பரம்' கொடுத்துட்டீங்க, நன்றி ......நன்றி!!

said...

\\ கருப்பன்/Karuppan said...
கொஞ்சநாளா வேலைப்பளு காரணமா தமிழ்மணம் பக்கம் வரமுடியாம போச்சு... இது போன்ற நிறைய சுவாரஸ்யமான பதிவுகளை பார்க்க முடியாமல் போய்விட்டது!! எனிவே கூகில் ரீடரில் சேத்தாச்சு இனி பிரச்சனையில்லை... ஐய்யய்யோ வந்த விஷயத்தை சொல்லாம சொந்தவிஷயத்தை செல்லிக்கிட்டிருக்கிறேன்...

கதை சூப்பரா போகுது அடுத்த எபிசோடை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.\\

ஹாய் கருப்பன்,
ரொம்ப நாள் கழிச்சு என் வலைதளம் வந்திருக்கிறீங்க, நன்றி!

வேலைபளு யாருக்குதான் சார் இல்ல??? அதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் .....அப்போ அப்போ இப்படி பதிவுல கதை படிச்சு ரிலாக்ஸ் பண்ணிக்கனும், புரியுதுங்களா??

said...

//
வேலைபளு யாருக்குதான் சார் இல்ல??? அதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் .....அப்போ அப்போ இப்படி பதிவுல கதை படிச்சு ரிலாக்ஸ் பண்ணிக்கனும், புரியுதுங்களா??
//

நல்லாவே புரிஞ்சதுங்க... தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்!

said...

உங்களுக்கே உரிதான அருமையான கதை நடையில்... மேலும் ஒரு நல்ல கதை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

said...

பாவனா ஸ்டில்லெல்லாம் சூப்பர்.

said...

சூப்பர் ஸ்டார்ட்டிங் இதே 'டெம்ப்போ'ல தொடருங்க

said...

//
Blogger CVR said...

பொண்ணு,பையன் ரெண்டு பேருமே பிடிக்கலை பிடிக்கலைன்னு சீன் போடுறாங்களே???
பையன் என்னமோ காதலிக்கறேன்னு டூப் விடறா மாதிரி இருக்கு!!!
பையனோட அப்பா கூட மாரடைப்பு வந்தது போல டூப் விடறாருன்னு நெனைக்கறேன்!! ;)

அடுத்த பகுதியில பாக்கலாம்!
என்ன ஆகுதுன்னு....
:-)
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
Anonymous said...

என்னம்மோ நடக்குது,ஒன்னுமே புரியல்ல.மர்மமாக இருக்கு :P
அடுத்த பகுதி படிச்சாதான் கதை புரியும்

Anonymous said...

மோதலில் பின் காதல் கதையா இது :P
திவ்யா அடுத்த பகுதி நீங்க சீக்கிரம் போடவில்லை என்றால் dreamzz தீக்குளிக்க போறாராம் :P

said...

@துர்கா
//திவ்யா அடுத்த பகுதி நீங்க சீக்கிரம் போடவில்லை என்றால் dreamzz தீக்குளிக்க போறாராம் :P
//

நான் டீ குடிக்க போறேன்னு சொன்னத இப்படி சொல்லிட்டு திரியறயா நீ? :P

said...

வழக்கம் போல எளிமையான நடை, அருமை. ஆனால் முடிவில் எப்போதும் கவிதை வரிகளோடு முடிப்பீர்கள், இதில் MISSING!!!

said...

Super ..

kalakal kathai ..

kalakal photo...

Eagerly waiting for Next release

said...

!! metti oli director script mathiri iruku :) bavna padam poatu puniyatha vaangikiteenga :)

said...

semma prolifica irukeenga..athukula intha varushathuku 20 plus post poatacha :)

said...

நல்ல தொடக்கம்

தொடருங்கள் திவ்யா!!!!

said...

\\ கருப்பன்/Karuppan said...
//
வேலைபளு யாருக்குதான் சார் இல்ல??? அதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் .....அப்போ அப்போ இப்படி பதிவுல கதை படிச்சு ரிலாக்ஸ் பண்ணிக்கனும், புரியுதுங்களா??
//

நல்லாவே புரிஞ்சதுங்க... தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்!\\

நல்லாவே புரிஞ்சுதுங்களா......குட் வெரி குட்!!

said...

\\ தினேஷ் said...
உங்களுக்கே உரிதான அருமையான கதை நடையில்... மேலும் ஒரு நல்ல கதை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\

ஹாய் தினேஷ்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி !

said...

\ மங்களூர் சிவா said...
சூப்பர் ஸ்டார்ட்டிங் இதே 'டெம்ப்போ'ல தொடருங்க\\


ஹாய் சிவா,
இதே 'டெம்போ' மெயிண்டெயின் பண்ண முயல்கிறேன் மற்ற பகுதிகளிலும், நன்றி சிவா.

said...

\\ துர்கா said...
என்னம்மோ நடக்குது,ஒன்னுமே புரியல்ல.மர்மமாக இருக்கு :P
அடுத்த பகுதி படிச்சாதான் கதை புரியும்\\

ஹலோ துர்கா,
இது மர்ம கதை மாதிரியா இருக்கு உங்களுக்கு....???

அடுத்த பகுதி உங்களுக்கு புரியுதா இல்லியான்னு படிச்சுட்டு சொல்லுங்க,

வருகைக்கு நன்றி துர்கா!

said...

\\ இசக்கிமுத்து said...
வழக்கம் போல எளிமையான நடை, அருமை. ஆனால் முடிவில் எப்போதும் கவிதை வரிகளோடு முடிப்பீர்கள், இதில் MISSING!!!\\

வாங்க இசக்கிமுத்து,
செளக்கியமா?
கதையின் முடிவில் தான் 'கவிதை'.......இன்னும் தொடர்கதை முடியலீங்க,
ஸோ, தொடர் முடியும் போது கவிதை போட முயற்ச்சிக்கிறேன், உங்கள் ஆசைபடி!!

வருகைக்கு நன்றி இசக்கிமுத்து!

said...

\\ Prabakar Samiyappan said...
Super ..

kalakal kathai ..

kalakal photo...

Eagerly waiting for Next release\

நன்றி பிரபாகர்,
அடுத்த பகுதி விரைவில் பதிவிடுகிறேன்!

said...

\\ gils said...
!! metti oli director script mathiri iruku :) bavna padam poatu puniyatha vaangikiteenga :)\\

ஹாய் கில்ஸ்,

அட, மெட்டி ஓலி' ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கா??? இது புகழ்ச்சியா.......காப்பி அடிக்கிறன்னு 'இகழ்ச்சியா???

said...

\ gils said...
semma prolifica irukeenga..athukula intha varushathuku 20 plus post poatacha :)\

ஆஹா.......20+ பதிவுகள் போட்டுட்டேனா...நீங்க சொன்ன பிறகுதான் நானும் கவனித்தேன் கில்ஸ்,
நன்றி!!

said...

\ எழில் said...
நல்ல தொடக்கம்

தொடருங்கள் திவ்யா!!!!\

வாங்க எழில்,

ஊக்கமளிப்பிற்கு நன்றி!!

Anonymous said...

I just returned from CBE after 4 months stay over there. I like your dialogues , which made me to read the whole thing. Good keep it up.

said...

\\padippavan said...
I just returned from CBE after 4 months stay over there. I like your dialogues , which made me to read the whole thing. Good keep it up.\\

Hi Padippavan,
Glad to c ur comment after a very long time,
thanks a lot!!