March 03, 2008

எனக்கொரு 'boy friend' வேணுமடா....!!!இப்பெல்லாம் 'Do you have BF(boy friend)?' அப்படின்னு கேட்குறது ரொம்ப சாதாரனமா போச்சுங்க,
'No , I dont' ன்னு பதில் சொன்னா, அவங்க நம்மல இளப்பாம ஒரு லுக் விடுவாங்க பாருங்க,
அது 'student status symbol'யே உன்கிட்ட இல்ல, நீயெல்லாம் என்னத்த படிச்சு......அப்படின்னு சொல்லும் அந்த லுக்கு!!

என்னடா இது வம்பா போச்சுன்னு, அடுத்த தடவை அப்படி கேள்வி கேட்டப்போ, ரொம்ப விபரமா" I have lots of friends and many of them are boys, so I do have lots of boy friendS' அப்படின்னு பெரிய பிஸ்துவாட்டம் பதில் சொல்லி, படு கேவலமா லுக்கு விட்டுட்டு போய்டாங்க,

சரி , அப்படி என்னதான் அவசியம் student life ல் 'Boy Friend' வைச்சுக்கன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணினா......பல தகவல்கள் கிடைச்சது,

காலம் கலி காலங்க, பாருங்க ரெண்டு பொண்ணுங்க எப்படி விளக்கம் கொடுக்கிறாங்கன்னு, அதிலிருந்து தகவல் அறிஞ்சுகோங்க......ப்ரியா:ஹாய் வித்யா, என்ன dull அடிக்கிற? என்ன மேட்டர்?

வித்யா:யா ப்ரியா, இந்த வீக்கெண்ட் நான் ஊருக்கு போகல. ஹாஸ்டல்ல போர் அடிக்குது..

ப்ரியா:எங்க உன் கூடவே சுத்திட்டு இருப்பாளே உன் தோழி ஐஷ்வர்யா?

வித்யா:ஆங்... அவளா, அவ ஆளோட movieக்கு போய் இருக்கா. ஆமாம் ப்ரியா நீ பொதுவா வீக்கெண்ட்ஸ் ரூம்ல இருக்க மாட்டியே, உன் பாய் ப்ரண்ட் கூட ஊர் சுத்த போய்டுவியே, என்ன இந்த வீக்கெண்ட் அம்மணி ரூம்ல இருக்கீங்க?

ப்ரியா:அதுவா, அவனுக்கு உடம்பு சரி இல்லை விது. டைபாய்ட் fever, பாவம் பையன் ரெஸ்ட் எடுக்கிறான்.ஐஷ்வர்யா அவ பாய்ப்ரெண்ட் கூட படத்துக்கு போனும்னு உன்னை கழட்டி விட்டுடாளா, உனக்கும் ஒரு BF இருந்தா இப்படி வீக்கெண்ட் ஹாஸ்டல் ரூம் சுவற்றை வெறிச்சு பார்த்துட்டு இருக்காம ஜாலியா ஊரு சுத்தலாம் இல்ல?

வித்யா:வீக்கெண்ட் போர் அடிக்காம ஊரு சுத்துவதற்கெல்லாம் BF வைத்துக்க முடியுமா?

ப்ரியா:ஹேய் விது, என்ன இப்படி கேட்டுட்ட? BF இருக்கிறது எவ்வளவு useful தெரியுமா?

வித்யா:என்ன பெரிய useful? ஓசில Burger, Pizza கிடைக்கும், அதுக்காக எல்லாம் ஒருத்தனை BF ஆ வைச்சுக்கனுமா?

ப்ரியா:ஹையோ விது, இப்போ பசங்க எல்லாம் ரொம்ப விபரம், பர்கர்க்கும் Pizzaக்கும் பில் அவனுங்க கட்ட மாட்டானுங்க, சரியா பில் கட்டற நேரத்துல ,செல்போன்ல சிக்னல் கிடைக்கலனு பொய் புழுகிட்டு phoneல பேசுராப்ல escape ஆகிடுவானுங்க. அவனுக்கும் சேர்த்து நாம தான் தண்டம் அழனும

வித்யா:அடப்பாவமே, அப்புறம் எதுக்கு ப்ரியா BF வைச்சுகிட்டா usefulனு சொன்ன?


ப்ரியா:'சொத்தையோ, லொட்டையோ', 'கஞ்சனோ, நோஞ்சானோ', ஒருத்தன BFனு சொல்லிகிட்டோம்னு வை, மத்த பசங்க தள்ளி நின்னு சைட் அடிப்பானே தவிற, ஜொள்ளு விட்டுகிட்டு பின்னாடி வர மாட்டான், அதுனாம இந்த இம்சைல இருந்து தப்பிச்சுகலாம். அப்பிறம் ஒரு கார் அல்லது ஒரு பைக் வைச்சிருப்பான், நமக்கு ட்ரைவர் வேலை பார்ப்பான், நம்ம ஆட்டோ சார்ஜ் மிச்சம்... அதுனால அவனுங்க பர்ஜர்க்கும் pizzaக்கும் pay பன்ன வைச்சு அட்ஜஸ்ட் செய்துபாங்க விபரமா! சரி பொழைச்சு போனு கண்டுகாம இருந்துவிடுவது தான்!

வித்யா:எவனோ நாலு பேரு ஜொள்ளு ஊத்தறதுல இருந்து தப்பிச்சுக்க ஒரு சொத்தை பையனை லவ் செய்து கட்டிகனுமா? இதென்ன லாஜிக்?

ப்ரியா:அட அசடே! BF ஐ யாரு கல்யாணம் பன்னிப்பா?

வித்யா:ஐய்யோ, அப்போ இந்த BF வந்து லவ்வர் இல்லையா, இவனை கல்யாணம் கட்டிக்க மாட்டியா?

ப்ரியா:ஹாஹாஹா! என்ன வித்யா இப்படி பழமா இருக்க? BFக்கும், லவ்வர்க்கும் 'definition and difference' தெரியாம, எப்படி B.E Final year வரைக்கும் வந்த நீ? தத்தி பெண்ணே!

வித்யா:ஹேய், அதென்ன definition & difference?

ப்ரியா:BF னா ஜஸ்ட் நண்பனான அவன் பாய்.... முஸ்லீம் பாய் இல்ல.. BOY Boy..ஒகே வா! லவ்வர்னா ஒருத்தனை மனசார விரும்பி, இவன் கூட காலம் முழுசா வாழனும்னு தோணும், அப்படி ஒருத்தனை லவ் பன்னினாதான் அவனுக்கு லவ்வர்னு பேரு. இந்த பாய் ப்ரெண்ட் எல்லாம் சும்மா ஊர் சுத்த, movie கு கூட துணைக்கு வர, Student life ல status ல ஒரு பந்தாவுக்காக மட்டும் தான்!

வித்யா:அப்போ இந்த BF ஐ காலேஜ் லைப் முடிஞ்சதும் கழட்டி விட்டுடுவியா? அவன் சண்டைக்கு வர மாட்டானா?

ப்ரியா:ஹாஹாஹா... அவனுங்களுக்கும் தெரியும், இந்த பொண்ணு GF மட்டும் தான், கொஞ்ச நாள் pizza வாங்கி தந்துட்டு அப்புறம் கழண்டுக்கும் அப்படினு. அவனும் prepared ஆ தான் இருப்பான், "good bye" சொல்லிகிட்டு கழண்டுகிட்டா ரொம்ப எல்லாம் அலட்டிக்க மாட்டான்! அதனால் லவ்வர விட BF தான் ரொம்ப Safe.

வித்யா:அடிபாவிகளா... சரி 5 நிமிஷம் வெயிட் பண்ணு,. ரெடி ஆயிட்டு வந்துடறேன்.. நாம ரெண்டு பேரும் இப்போ spencers போலாம்..

ப்ரியா:என்ன மேடம்.... திடீர்னு spencer.........??

வித்யா:எனக்கொரு boy friend வேணுமடா ப்ரியா... அதுக்குதான் spencer visit. அங்கே போய் BF hunting முடிச்சிட்டு வந்துடலாம் ஒகேவா?

ப்ரியா:அப்படி முன்னேறும் வழிய பாரு! Will wait for you! get ready soon Vidhu!
---------------- *--------------------
Hi Friends,

ஆண்-பெண் நட்பில் தன்னலமே மேலோங்கி இருப்பது பற்றியும், அதனை இத்தலைமுறை இளைஞர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது பற்றி நான் படித்த ஒரு ஆங்கில பதிப்பை அப்படியே தமிழாக்கம் செய்யாமல், இயல்பான உரையாடலோட பதித்திட நினைத்துதான் இப்பதிவு!

மேலைநாட்டு கலாச்சாரத்தின் தாக்குதலில் ஆண்-பெண் நட்பிலும் எவ்வாறு சுயநலம் காணப்படுகிறது என்பதை, 'நண்பர்களுக்கு' விளக்கி உஷார் படுத்தும் எண்ணத்தில் தான் பதிவிட்டேன்.இதில் என் தனிப்பட்ட கருத்துக்களோ, யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணமோ இல்லை!!!

61 comments:

said...

ஓஓஓஓ.... இப்படியெல்லாம் வேற சொல்லிகிட்டு அலையறீகளா அம்மணீஸ்..?? இதென்ன கொடுமையால்ல இருக்கு.. :)))

said...

//சொத்தையோ, லொட்டையோ', 'கஞ்சனோ, நோஞ்சானோ', ஒருத்தன BFனு சொல்லிகிட்டோம்னு வை, மத்த பசங்க தள்ளி நின்னு சைட் அடிப்பானே தவிற, ஜொள்ளு விட்டுகிட்டு பின்னாடி வர மாட்டான்,//

அட அட அட என்னா ஒரு லாஜிக்கு... எவனோ மாட்டினாண்டான்னு அவனை மூச்சு தெணற தெணற இப்படியா நேஞ்சனோ கஞ்சனோனு போட்டு தாக்கி எடுக்கிறது.... ஹலோ ஆராச்சும் ப்ரீ பாடிகார்டா இது வரை இருந்திருக்கீயளாங்கப்பூ....??? :)))))

said...

//இந்த பாய் ப்ரெண்ட் எல்லாம் சும்மா ஊர் சுத்த, movie கு கூட துணைக்கு வர, Student life ல status ல ஒரு பந்தாவுக்காக மட்டும் தான்!//

இதென்னா அட்டீழியமால்ல இருக்கு..?? :((( பாய்ப்ரெண்ட்னு பேர் வச்சுகணுமா..? ப்ரெண்டுன்னே வச்சுகலாமே..?? ;)))) அம்மிகல்லு கணக்கா பசங்க தலை இருந்தா என்ன பண்ண..? மசாலா அரைக்க இவுகளுக்கு சொல்லியா தெரியனும்...?? பந்தாவுக்காம்ல...?? ;))))

said...

//எனக்கொரு boy friend வேணுமடா ப்ரியா... அதுக்குதான் spencer visit. அங்கே போய் BF hunting முடிச்சிட்டு வந்துடலாம் ஒகேவா?//

ஹயோடா.... இதென்னா இது எதோ மிருக வேட்டைக்கு போறாப்பலவுல கெளம்புராக..? இதெல்லாம் நெம்ம ஓவரு..Boys... மானெல்லாம் வேட்டைக்கு கெளம்பிடுச்சு... சிங்கமா இருந்து 'கெத்து' மெயிண்ட்டெய்ன் பண்ணுங்க... அசிங்கப்பட்டுடாதீங்கப்பு... :))))

said...

//ஹயோடா.... இதென்னா இது எதோ மிருக வேட்டைக்கு போறாப்பலவுல கெளம்புராக..? இதெல்லாம் நெம்ம ஓவரு..Boys... மானெல்லாம் வேட்டைக்கு கெளம்பிடுச்சு... சிங்கமா இருந்து 'கெத்து' மெயிண்ட்டெய்ன் பண்ணுங்க... அசிங்கப்பட்டுடாதீங்கப்பு... :))))
//

ஆமாம் ஆமாம்..

said...

என்னங்க அம்மணி... இதெல்லாம் முன்னமே சொல்றதில்ல... நான் என்னமோ GF BF னா லவ்வர்ஸ்னுல்ல நெனச்சிப் போட்டேன்... நானும் இப்பவே போய் South Point Mallலுல ஒரு வெள்ளக்காரியோ கறுப்பியோ ஒரு GFஅ தேத்துறேன் :)))

said...

ஆமாம்... யாருங்க அந்த ப்ரியா??? கொஞ்சம் இண்ட்ரோ... வேணாம்.... மெயில் ஐடி மட்டும் போதும் :)))

said...

ஆமா வித்தியா எத்தனை மணிக்கு Spensor போறாங்க?? டயத்தை சொல்லிட்டீங்கனா Synchronize ஆகுறதுக்கு சரியா இருக்கும்ல!!

//
இப்போ பசங்க எல்லாம் ரொம்ப விபரம், பர்கர்க்கும் Pizzaக்கும் பில் அவனுங்க கட்ட மாட்டானுங்க, சரியா பில் கட்டற நேரத்துல ,செல்போன்ல சிக்னல் கிடைக்கலனு பொய் புழுகிட்டு phoneல பேசுராப்ல escape ஆகிடுவானுங்க. அவனுக்கும் சேர்த்து நாம தான் தண்டம் அழனும
//
சும்மாவா தண்டம் அழறீங்க?? அடுத்த அரை மணி நேரத்துல 500 மடங்கு அதிக பலன் சிக்கும்னா மட்டும் தான பணமெல்லாம் உங்க கைப்பையில் இருந்து வெளியேரும்!!

ஒலகத்திலயே ரெம்ப காஸ்ட்லியான விஷயம் கேள் ஃபிரண்டை மெயின்டெயின் பண்ணுறதுனு இன்னும் பொறக்காத ஆண் குழந்தைக்குக் கூட தெரியும்!!

அதையும் மீறி ஒருத்தன் ஒரு கேள் ஃபிரண்ட் வச்சிருக்கான்னா கண்டிப்பா அவன் அப்பா ஒரு பெரிய வியாபார காந்தமாகதான் இருக்கனும். நம்ம சம்பளத்துக்கெல்லாம் கேள் ஃபிரண்டா வாய்ப்பேயில்லை!!

said...

adi paavigaL ...

pasangala usar iintha ponnuggala iippadi than boss...

Anonymous said...

!!!vevaram with a capital V :)
intha ponnungalay ipdi thaan..kuthunga esamaaan kuthunga..

~gils

Anonymous said...

no comments on name of characters...engayo ulkuthu mathiri iruku...but once again..gummu post madam..unga BFlaam kuduthu vachavanga :) ipdi adikadi pasangalaukaaga useful info tharathukaga..may your phonebook be always full nice BF's and may everyone ofthem treat youwith burgers n pizzas :D :D..P.S:watch out on the waist line

~gils again

said...

ஹா..ஹா..திவ்யா..சரியான லாஜிக்பா..

said...

என்ன கொடுமை திவ்யா இது!! :-(((

said...

வித்யா வித்யானு ஒரே ஒரு நல்ல பொண்ணு இருந்தா.. அதையும் மாத்திட்டீங்களா!!!! இந்த பதிவின் கருத்துக்களுடன் நான் முரண்படுவதால், இதோட நிறுத்துக்கிறேன்... ;)

@JP
//Boys... மானெல்லாம் வேட்டைக்கு கெளம்பிடுச்சு//
கிளம்பலாம்.. ஆனா சிங்கம் தான் மான பிடிக்கும்

Anonymous said...

என்னங்க திவ்யா இப்படி சொல்லி புட்டீங்க.எனக்கு பாய் ஃபிரண்ட் இருந்தாலும் இப்போதான் பையனுக்கு 4 வயசு :P அண்ணா பசங்களைத்தான் பாய் ஃபிரண்ட் என்று சொல்லுற வயசுல இருக்காங்க.மத்தவங்க எல்லாம் guy friend வயசுல இருக்காங்க :P

Anonymous said...

//'சொத்தையோ, லொட்டையோ', 'கஞ்சனோ, நோஞ்சானோ', ஒருத்தன BFனு சொல்லிகிட்டோம்னு வை, மத்த பசங்க தள்ளி நின்னு சைட் அடிப்பானே தவிற, ஜொள்ளு விட்டுகிட்டு பின்னாடி வர மாட்டான், அதுனாம இந்த இம்சைல இருந்து தப்பிச்சுகலாம். அப்பிறம் ஒரு கார் அல்லது ஒரு பைக் வைச்சிருப்பான், நமக்கு ட்ரைவர் வேலை பார்ப்பான், நம்ம ஆட்டோ சார்ஜ் மிச்சம்... அதுனால அவனுங்க பர்ஜர்க்கும் pizzaக்கும் pay பன்ன வைச்சு அட்ஜஸ்ட் செய்துபாங்க விபரமா! சரி பொழைச்சு போனு கண்டுகாம இருந்துவிடுவது தான்!
//


இதுக்கு எதுக்கு பாய் ஃபிரண்ட் என்று ஒருத்தன் வெட்டியா வேண்டும்?இதுக்குதான் கடவுள் அண்ணா என்ற தெய்வத்தைப் படைச்சு இருக்கார்.என் அண்ணா எனக்கு personal bodyguard,driver,bank and also my brother :P
எனக்கு பாய் ஃபிரண்ட் வேண்டாம் அண்ணா மட்டும் போதும்

Anonymous said...

//இப்பெல்லாம் 'Do you have BF(boy friend)?' அப்படின்னு கேட்குறது ரொம்ப சாதாரனமா போச்சுங்க,
'No , I dont' ன்னு பதில் சொன்னா, அவங்க நம்மல இளப்பாம ஒரு லுக் விடுவாங்க ///

அப்படி எல்லாம் எனக்கு விடவில்லை.உனக்கு நிஜமவே பாய் ஃபிரண்ட் இல்லையா என்பது போலதான் லுக்கு விடுவாங்க :P
நான் ஒரு அப்பாவி சிறுமின்னு சொன்னா ஒரு பயலும் நம்ப மாட்டுறாங்கப்பா

Anonymous said...

//மத்தவங்க எல்லாம் guy friend வயசுல இருக்காங்க :P//

அப்ப இன்னொன்னு என்ன lady friend a?

Anonymous said...

//இதுக்கு எதுக்கு பாய் ஃபிரண்ட் என்று ஒருத்தன் வெட்டியா வேண்டும்?இதுக்குதான் கடவுள் அண்ணா என்ற தெய்வத்தைப் படைச்சு இருக்கார்.என் அண்ணா எனக்கு personal bodyguard,driver,bank and also my brother :P
எனக்கு பாய் ஃபிரண்ட் வேண்டாம் அண்ணா மட்டும் போதும்
//

அம்மணி, உன்னை மாதிரி இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணுங்க இருப்பதால் தான் பிழைத்து கொண்டு இருக்கின்றது இந்த உலகம் ;)

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

அனானி அண்ணாச்சி,
//அப்ப இன்னொன்னு என்ன lady friend a?
//

இது ஆண் நண்பர்களைப் பத்திதானே போஸ்ட் :P
நடுவுல லேடி friends பத்தி எல்லாம் கேக்குறீங்களே ;)
உங்க வயசுக்கு gf தேடுறீங்களோ !!

Anonymous said...

//இது ஆண் நண்பர்களைப் பத்திதானே போஸ்ட் :P
நடுவுல லேடி friends பத்தி எல்லாம் கேக்குறீங்களே ;)
உங்க வயசுக்கு gf தேடுறீங்களோ !!//

மான்களே வேட்டைக்கு போகும் போது, சிங்கம் நாங்க கிளம்ப மாட்டோமா?

Anonymous said...

அனானி அண்ணாச்சி number 2,
//அம்மணி, உன்னை மாதிரி இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணுங்க இருப்பதால் தான் பிழைத்து கொண்டு இருக்கின்றது இந்த உலகம் ;)//

பாய் ஃபிரண்ட் வைச்சு இருக்குறது தப்பா அனானி அண்ணாச்சி
??இந்த வயசுல எல்லாம் பாய் ஃபிரண்ட் இல்லைன்னா பின்ன எந்த வயசுல வைச்சுகுறது?இப்போ நான் ரொம்ப நல்ல பொண்ணு இல்ல ;)

Anonymous said...

//பாய் ஃபிரண்ட் வைச்சு இருக்குறது தப்பா அனானி அண்ணாச்சி
??இந்த வயசுல எல்லாம் பாய் ஃபிரண்ட் இல்லைன்னா பின்ன எந்த வயசுல வைச்சுகுறது?இப்போ நான் ரொம்ப நல்ல பொண்ணு இல்ல ;)//

தப்பில்லை. ஆனா, கழட்டி விட்றுவோம்னு தெரிஞ்சும் இன்னொருத்தர் கிட்ட பேசி பழகி ஆசைய வளக்கிறது தப்பு தானம்மா?

said...

ஆஹா.. ஆஹா... அப்படி போடுங்க.. ;-)

said...

:)

said...

//
இதுக்கு எதுக்கு பாய் ஃபிரண்ட் என்று ஒருத்தன் வெட்டியா வேண்டும்?இதுக்குதான் கடவுள் அண்ணா என்ற தெய்வத்தைப் படைச்சு இருக்கார்.என் அண்ணா எனக்கு personal bodyguard,driver,bank and also my brother :P
எனக்கு பாய் ஃபிரண்ட் வேண்டாம் அண்ணா மட்டும் போதும்
//
துர்கா, உங்களை மாதிரி தங்கச்சிங்க கிட்ட இருந்து காப்பாத்தத்தான் கடவுள் புருஷன் என்ற ஒரு ஜீவனை உலகத்தில் உலவ விட்டிருக்கார் :-)))))

புருஷனோட சொத்தெல்லாம் உங்க சொத்து என்பதால் பார்த்து பார்த்து செலவழிப்பீஙக. நாங்கள்ளாம் இளிச்சவாயனுக!! :-(

என்னத்த செய்யுறது தமிழ் சினிமா ஓவரா பாத்து தங்கச்சி சென்டிமன்ட் தலைக்கேரிப்போச்சு!

Anonymous said...

@கருப்பன்

சாமீ உமக்கு ஏன் பொண்ணுங்க மேல இம்புட்டு கொல வெறி? :))
நீங்க பேசுறது பார்த்தா ஆண்கள் எல்லாம் பணம் காய்கின்ற மரத்தைப் போல பெண்கள் பயன்படுத்துகின்றார்கள் என்ற தப்பான கண்ணோட்டம் இருக்கு போல :)

அண்ணா,அப்பா,கணவர்காதலர் என்ற உறவுகளுக்குப் பணம் முக்கியம் இல்லை.அப்படி பணம் இருந்தால் தான் பாசம் என்றால் அந்த உறவுகளில் அர்த்தமில்லை.இதுதான் என் தாழ்மையான கருத்து.

Anonymous said...

//சாமீ உமக்கு ஏன் பொண்ணுங்க மேல இம்புட்டு கொல வெறி? :))
நீங்க பேசுறது பார்த்தா ஆண்கள் எல்லாம் பணம் காய்கின்ற மரத்தைப் போல பெண்கள் பயன்படுத்துகின்றார்கள் என்ற தப்பான கண்ணோட்டம் இருக்கு போல :)//

பொண்ணுங்க மட்டும், கார் ட்ரைவர், பிட்சா டெலிவரி பையன் ரேஞ்சுக்கு பசங்களை கிண்டல் செய்து பதிவு போடுவீங்க.. நாங்க சொன்னா மட்டும் கோபம் வருதோ?

Anonymous said...

//அண்ணா,அப்பா,கணவர்காதலர் என்ற உறவுகளுக்குப் பணம் முக்கியம் இல்லை.அப்படி பணம் இருந்தால் தான் பாசம் என்றால் அந்த உறவுகளில் அர்த்தமில்லை.இதுதான் என் தாழ்மையான கருத்து.//

இதை நான் ஆமோதிக்கின்றேன்...
இந்த சும்மா சுத்தறதுக்கு friend னு ஒருத்தனை வைச்சுகிட்டு, நட்புக்கும் துரோகம், காதலுக்கும் துரோகம் செய்வதை மட்டுமே நான் கண்டிக்கிறேன்..

said...

//
நீங்க பேசுறது பார்த்தா ஆண்கள் எல்லாம் பணம் காய்கின்ற மரத்தைப் போல பெண்கள் பயன்படுத்துகின்றார்கள் என்ற தப்பான கண்ணோட்டம் இருக்கு போல :)
//
என்னங்க துர்கா பொசுக்குனு இப்படி சொல்லிப்புட்டீங்க??

முதல் அனானி, நான் சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லிவி்ட்டார்.

//
இதுக்கு எதுக்கு பாய் ஃபிரண்ட் என்று ஒருத்தன் வெட்டியா வேண்டும்?இதுக்குதான் கடவுள் அண்ணா என்ற தெய்வத்தைப் படைச்சு இருக்கார்.என் அண்ணா எனக்கு personal bodyguard,driver,bank and also my brother :P
//
கொஞ்சம் மேல உள்ள தங்கள் கருத்தை வாசியுங்கள், டிரைவர், பேங்க் அதன் பிறகுதான் பாசமே வந்திருக்கிறது!!

என் தங்கச்சிக்காக செலவு செய்யுறத பாக்கியமாக கருதுபவன் நான். நீங்க சொன்னதை மட்டும் என் தங்கச்சி கேட்டா தொலஞ்சீங்க :-)))))

said...

//அண்ணா,அப்பா,கணவர்காதலர் என்ற உறவுகளுக்குப் பணம் முக்கியம் இல்லை.அப்படி பணம் இருந்தால் தான் பாசம் என்றால் அந்த உறவுகளில் அர்த்தமில்லை.இதுதான் என் தாழ்மையான கருத்து.//

idhai naanum repeat seigiren... :)
thangatchi sonnah right thaan nu naaan solla la, but thangatchi sonnadhu right thaanu solla varen :)

said...

//உங்களை மாதிரி தங்கச்சிங்க கிட்ட இருந்து காப்பாத்தத்தான் கடவுள் புருஷன் என்ற ஒரு ஜீவனை உலகத்தில் உலவ விட்டிருக்கார் :-)))))//


helo karuppan sir, appoh neeenga unga thangatchi unga kitta edhu ketaaalum sei ah maaateeengala?

said...

//என் தங்கச்சிக்காக செலவு செய்யுறத பாக்கியமாக கருதுபவன் நான். நீங்க சொன்னதை மட்டும் என் தங்கச்சி கேட்டா தொலஞ்சீங்க :-)))))
//

ippadi sonnavaru,

//உங்களை மாதிரி தங்கச்சிங்க கிட்ட இருந்து காப்பாத்தத்தான் கடவுள் புருஷன் என்ற ஒரு ஜீவனை உலகத்தில் உலவ விட்டிருக்கார் :-)))))

புருஷனோட சொத்தெல்லாம் உங்க சொத்து என்பதால் பார்த்து பார்த்து செலவழிப்பீஙக. நாங்கள்ளாம் இளிச்சவாயனுக!! :-(

என்னத்த செய்யுறது தமிழ் சினிமா ஓவரா பாத்து தங்கச்சி சென்டிமன்ட் தலைக்கேரிப்போச்சு!//

ippadium solli irukaaaru..

idhu rendulaium irundhu endha karuthai eduthukiradhu?

said...

divya madam.. matha full post kum comment 2rw never dies :)

said...

//////
//உங்களை மாதிரி தங்கச்சிங்க கிட்ட இருந்து காப்பாத்தத்தான் கடவுள் புருஷன் என்ற ஒரு ஜீவனை உலகத்தில் உலவ விட்டிருக்கார் :-)))))

புருஷனோட சொத்தெல்லாம் உங்க சொத்து என்பதால் பார்த்து பார்த்து செலவழிப்பீஙக. நாங்கள்ளாம் இளிச்சவாயனுக!! :-(

என்னத்த செய்யுறது தமிழ் சினிமா ஓவரா பாத்து தங்கச்சி சென்டிமன்ட் தலைக்கேரிப்போச்சு!//

ippadium solli irukaaaru..

idhu rendulaium irundhu endha karuthai eduthukiradhu?
//////
இது கருத்தெல்லாம் இல்லைங்க மை டேஸ், சும்மா நம்ம தங்கச்சிங்களை வம்புக்கிழுத்து அன்பா சண்டை போட்டுக்கிற டெக்னிக். ஒரே அன்பை மட்டும் காட்டினா போரடிக்கும் இல்லையா. இது ரெண்டு பேருக்கும் உள்ள பரஸ்பர புரிதல்.

said...

Hi Friends,

ஆண்-பெண் நட்பில் தன்னலமே மேலோங்கி இருப்பது பற்றியும், அதனை இத்தலைமுறை இளைஞர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது பற்றி நான் படித்த ஒரு ஆங்கில பதிப்பை அப்படியே தமிழாக்கம் செய்யாமல், இயல்பான உரையாடலோட பதித்திட நினைத்துதான் இப்பதிவு!

மேலைநாட்டு கலாச்சாரத்தின் தாக்குதலில் ஆண்-பெண் நட்பிலும் எவ்வாறு சுயநலம் காணப்படுகிறது என்பதை, 'நண்பர்களுக்கு' விளக்கி உஷார் படுத்தும் எண்ணத்தில் தான் பதிவிட்டேன்.
இதில் என் தனிப்பட்ட கருத்துக்களோ, யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணமோ இல்லை!!!

said...

\\இந்த பாய் ப்ரெண்ட் எல்லாம் சும்மா ஊர் சுத்த, movie கு கூட துணைக்கு வர, Student life ல status ல ஒரு பந்தாவுக்காக மட்டும் தான்!\\

ஆகா...தெளிவாக தான் இருக்கிங்க!! நமக்கு தான் ஒரு மண்ணும் விளங்க மாட்டேன்கிது...எல்லாம் காலத்தின் கொடுமை..;)

said...

whether ur friend is boy or girl, ellam orey maari nenachu treat panna, intha kozhapamey illa.

and moreover if both are happy about what they r doing and if it is not affecting anyone apo ethunaalum ok than :)

good post Divya :)

Anonymous said...

40!

Anonymous said...

//மேலைநாட்டு கலாச்சாரத்தின் தாக்குதலில் ஆண்-பெண் நட்பிலும் எவ்வாறு சுயநலம் காணப்படுகிறது என்பதை, 'நண்பர்களுக்கு' விளக்கி உஷார் படுத்தும் எண்ணத்தில் தான் பதிவிட்டேன்.
இதில் என் தனிப்பட்ட கருத்துக்களோ, யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணமோ இல்லை!!!//


ஏனுங்க அம்மணி, உஷார் செய்தமைக்கு நன்றி சொல்லிகிறேனுங்க... :)

நீங்க ஒன்னும் வருத்த படாதீங்க அம்மணி.. வரட்டுங்களா..

said...

//ஜொள்ளுப்பாண்டி said...
ஓஓஓஓ.... இப்படியெல்லாம் வேற சொல்லிகிட்டு அலையறீகளா அம்மணீஸ்..?? இதென்ன கொடுமையால்ல இருக்கு.. :)))
//

ஆஹா ஜொள்ளு இத்தன நாளா இதேல்லாம் தெரியாம இருந்துட்டீங்களா!! சீக்கிறமா திவ்யா டீச்சர்கிட்ட டியுசன் எடுத்துக்கோங்க! நானும் தான் :))

said...

'வித்யா' / 'திவ்யா'....??
அப்ப இது சொந்தக்கதையா... ;)))


//ஹாஹாஹா! என்ன வித்யா இப்படி பழமா இருக்க? BFக்கும், லவ்வர்க்கும் 'definition and difference' தெரியாம, எப்படி B.E Final year வரைக்கும் வந்த நீ? தத்தி பெண்ணே!//
நல்லா இருக்கு..!!!

said...

//இதில் என் தனிப்பட்ட கருத்துக்களோ, யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணமோ இல்லை!!!//

idhenna press release kanakka ipdi oru statement :) kuzhapara kutaiya kuzhapiachu..ipo meen pudikara samyathula i am a veggiengara mathiir iruku :D :D :D

said...

//இதில் என் தனிப்பட்ட கருத்துக்களோ, யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணமோ இல்லை!!!//

நாங்க கூட பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி disclaimer போட்டிருக்கனுமோ?? ரூம்போட்டு யோசிக்கனும் போல :-)))

Anonymous said...

@கருப்பன்
//நாங்க கூட பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி disclaimer போட்டிருக்கனுமோ?? ரூம்போட்டு யோசிக்கனும் போல :-)))//

எனக்கும் ஒரு ரூம்ம சேர்த்து போடுங்கப்பு!

Anonymous said...

இவ்ளோ தூரம் வந்தாச்சு...

Anonymous said...

விட்டுட்டு போகா மனதில்லை

said...
This comment has been removed by the author.
Anonymous said...

50 அடிச்சாச்சு.. வர்ட்டா..

said...

haah.. justla miss ayiduchu..

said...

சும்மா கலக்குறீங்க திவ்யா!!
அன்புடன் அருணா

said...

நான் கேர்ள் ஃப்ரெண்ட் பத்தி போட்டிருந்த ஒரு போஸ்ட்ல எனக்கு கல்வெட்டு (எ) பலூன் மாமா கமெண்ட் போட்டிருந்தார். உங்களுக்காக இங்க...

// கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இம்சை,
1. தமிழ் வார்த்தை "காதல்" என்பது ஆண்-பெண் (உள்ளம் +உடல்) இரண்டும் பிடிக்கும் பட்சத்தில் வரும் நெருக்கத்தை மட்டும் குறிக்கும் வார்த்தை. அப்படித்தான் இன்னும் உள்ளது.

2. தமிழ் வார்த்தை நண்பர்/ தோழர்/நட்பு/தோழி என்பது ஆண்-ஆண், ஆண்-பெண்,பெண்-பெண்...என்று எல்லாரிடமும் (உடல் கவர்ச்சி அடிப்படையில் இல்லாமல்) வரும் நெருக்கத்தை குறிக்கும்.

3.ஆனால் மேற்கு / western வழக்கில் "Love" என்பது வேறு பொருள் கொண்டது. தாய்,தந்தை , வாத்தியார், பக்கத்து வீட்டு ஆண்டி, பாப்பா,அம்மா,பையன்,அக்கா,தோழி,தோழர்... என்று யாரிடமும் சொல்லலாம். வாலண்டைஸ் டேயில் I love you Teacher என்று சொல்லலாம் .

4.அந்த Love என்ற வார்த்தையை ஆங்கிலமாக மட்டும் நினைத்துக் கொண்டு அதன் பின்னனி தெரியாமல், "காதல்" என்று தமிழ்ப்படுத்தி "நான் உங்களை காதலிக்கிறேன் டீச்சர்" என்று சொல்லமுடியாது. "வாழ்த்துகள் டீச்சர்-அன்புடன் ரமேஷ் 3-ஆம் வகுப்பு "ஆ" பிரிவு .. என்று மட்டுமே சொல்ல முடியும்.

4.என்னதான் நாம் மேற்கு வழக்கை காப்பி அடித்து சட்டை/துணி போட்டாலும் அவர்களின் நல்ல பண்பாடுகள் இங்கே பின்பற்றப்படுவது இல்லை.அதனால்தான் நான் அலுவலகத்தில் இருக்கும்போது உடன் வேலை செய்யும் மேலை நாட்டு (மேற்கு / western) பெண்கள் , சர்வ சாதரணமாக "thank you sweety " , "thanks for the help , love you " என்றோ சர்வசாதரணமாச் சொல்வார்கள்.
நான் அதையே நம்மூர்ப் பெண்களிடம் சொல்ல முடியாது.

5.நாம் love என்பதை காதல் என்ற குறுகிய வட்டத்தில் சிறை வைத்துவிட்டோம்.

**

ஆங்கிலத்தில் (மேற்கு வழக்கில்) friend என்பது friend தான் அதைத்தாண்டி ஒன்றும் இல்லை. ஆணுக்கு பெண் நட்பாக இருந்தாலும், அல்லது ஆணுக்கு- ஆண்/ பெண்-பெண் நட்பாக இருந்தாலும் friend தான்.

ஒரு friend ஐ அல்லது புதிதாகச் சந்திக்கும் யாரோ ஒருவரை எப்போது உடல் ரீதியாகவும் பிடித்து அதன் அடிப்படையிலும் பழக ஆரம்பிக்கிறோமோ அப்போது அவர் பாலியல் அடையாளத்துடன் friend ஆக அறியப்படவேண்டும். அதாவது அந்த நட்பில் sex (Boy/Girl) அடையாளப்படுத்தலும் அவசியம். Boy-Friend / Girl-Friend

***
மேற்கு வழக்கில் ..நாங்க 10 வருசமா காதலிக்கிறோம் (love) இப்ப கல்யாணம் செஞ்சிட்டோம் என்று சொல்ல மாட்டார்கள். We dataed for 10 years என்றுதான் சொல்வார்கள்.
அங்கே love எனபது அனைவருக்கும் பொதுவானது. (Date என்பதும் பொதுவானது என்றாலும் Girl-Friend உடன் date எனும்போது உடல் சார்ந்த ஈர்ப்பும் உள்ளது என்பது உண்மை.)

**
மேற்கு வழக்கில் ஒருவனுக்கு ஒரு Girl-Friend மட்டுமே இருக்க முடியும் . மற்ற பெண்கள் நட்பாக இருந்தாலும் ,அவன் அவர்களைப் பெண் என்ற உடல்-உருவ அடிப்படையில் பார்க்கவில்லையாதலால் அவள் Friend மட்டுமே. உடல் சார்ந்த அடையாளப்படுத்தல் தேவை இல்லை.

ஒன்றுக்கு மேல் Girl-Friend இருந்தால் அது cheating.

***

மதுமிதாவின் கட்டிப்புடி வைத்தியம் மற்றும் அதன் பின்னூட்டங்களையும் பார்த்து விடுங்கள்.

நட்புகளும் கட்டிப்புடி வைத்தியமும்*
http://madhumithaa.blogspot.com/2007/12/blog-post_6355.html

With Love
Balloon MaMa
//

said...

// ஒரு friend ஐ அல்லது புதிதாகச் சந்திக்கும் யாரோ ஒருவரை எப்போது உடல் ரீதியாகவும் பிடித்து அதன் அடிப்படையிலும் பழக ஆரம்பிக்கிறோமோ அப்போது அவர் பாலியல் அடையாளத்துடன் friend ஆக அறியப்படவேண்டும். அதாவது அந்த நட்பில் sex (Boy/Girl) அடையாளப்படுத்தலும் அவசியம். Boy-Friend / Girl-Friend
//

இவர் சொல்லி இருக்கறதுப்படி பாத்தா, நீங்க சொல்லி இருக்கற pizza/burgerக்காக ஒரு பையனும் driver வேலைக்காக ஒரு பெண்ணும் இந்த மாதிரி பழகினா அது எவ்வளவு அசிங்கம்னு நீங்களே நினைச்சுப் பாருங்க...

said...

ஒருவேளை அவங்களுக்குள்ள வந்த நட்பே இந்த மாதிரி pizza/burgerக்காகவும், driver வேலைக்காகவும் இருந்தா அதும் நட்பு கிடையாது.

காதலைப் போலவேதான் நட்பும். அது தூய்மையா மனசுல இருந்து வரணும்.

இதுக்கு மேல சொல்றதுக்கு எதும் இல்ல... :)))

said...

என்னடா இது புலி "நிலவே என்னிடம் நெருங்காதே..." ன்னு ஒரு பதிவு போடுதேன்னு பாத்தேன் அது இப்படி பாயத்தானா? நடத்துங்க நடத்துங்க ஒன்னும் சொல்றத்துக்கு இல்லை. நீங்க சொல்றா மாதிரி பசங்களும் இருந்து தொலைக்குறாங்களே :(

said...

//ப்ரியா:ஹையோ விது, இப்போ பசங்க எல்லாம் ரொம்ப விபரம், பர்கர்க்கும் Pizzaக்கும் பில் அவனுங்க கட்ட மாட்டானுங்க, சரியா பில் கட்டற நேரத்துல ,செல்போன்ல சிக்னல் கிடைக்கலனு பொய் புழுகிட்டு phoneல பேசுராப்ல escape ஆகிடுவானுங்க. அவனுக்கும் சேர்த்து நாம தான் தண்டம் அழனும//

ஊர்ஸ்..அப்டியா? இதெல்லாம் அனுபவிக்க எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட் வேணுமடா? :)

said...

Hmmm nice post...a practical one...portrays the real life situation. i have seen such incidents in my frndzzz circle..so sad :-(

said...

திவ்யா,

இது என் தனிப்பட்ட கருத்து: தவறான முன் உதாரணங்களைக் கொண்ட பதிவு... உங்கள் எழுத்தை செம்மைப்படுத்தவே இந்த கருத்து மன்னிக்கவும்

தினேஷ்

Anonymous said...

@கருப்பன் அண்ணாச்சி
//டேஸ், சும்மா நம்ம தங்கச்சிங்களை வம்புக்கிழுத்து அன்பா சண்டை போட்டுக்கிற டெக்னிக். ஒரே அன்பை மட்டும் காட்டினா போரடிக்கும் இல்லையா. இது ரெண்டு பேருக்கும் உள்ள பரஸ்பர புரிதல்.//
அதுக்கு நான்ந்தான் கிடைச்சேனா :(((
அவ்வ்வ்....

said...

//
அதுக்கு நான்ந்தான் கிடைச்சேனா :(((
அவ்வ்வ்....
//
என்னத்தை செய்ய நீங்களா வந்து மாட்டுனதுக்கு நான் பொறுப்பாக முடியுமா துர்கா!

பி.கு: இதுக்கு மேல இந்த பதிவுல கும்மியடிச்சோம், திவ்யாவோட சாபம் நம்மளை சும்மா விடாது. அடுத்த பதிவுக்கு காத்திருப்போம்!!!