December 10, 2006

கல்லூரி கலாட்டா - 5



கலாட்டா -1
கலாட்டா -2
கலாட்டா -3
கலாட்டா -4

தான் மாடிப்படிகளில் மோதியது , தன் ' தாய் மாமா' மீது என்று கண்டதும், ரமேஷின் முகம் வெளிறிபோனது.

"டேய் ரமேசு, இந்நேரத்துக்கு ஆஸ்பத்திரி வந்திருக்க? உடம்பு கிடம்பு சரியில்லையாப்பா? உடம்புக்கு என்ன?? " என்று அக்கறையுடன் விசாரித்தார் மாமா.

என்ன பதில் சொல்வது என ரமேஷ் யோசித்து கொண்டிருக்கும்போது ,

"அங்க என்ன பண்ணிட்டிருக்கிறீங்க, சீக்கிரம் மேல வாங்க, டாக்டர் கிட்ட போகனும் இல்ல" என்று மேல் படிகளிலிருந்து ரம்யா குரல் கொடுத்தாள்.

' ஒரு பொண்ணு கூட டாக்டர் கிட்ட போறானா??????' என்று திகைத்துப் போன மாமாவின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் பல விதத்தில் அலை மோதிட.......வாய் பிளந்து அவர் நின்ற சமயத்தில் " மாமா ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன்" என்று கூறி விட்டு அவசரமாக மாடி படிகளில் ஏறினான் ரமேஷ்.

சிறு காயத்திற்கு மருந்து போட எவ்வளவு நேரம் ஆக போகிறது, சீக்கிரம் டாக்டரிடம் காண்பித்துவிட்டு, மாடி படிகளில் இரண்டு இரண்டு படிகளாக தாவி தாவி இறங்கி , மாமா வை தேடினான் ரமேஷ்.

' எங்க போய்டார் மாமா அதுக்குள்ள' என ரமேஷ் மாமா வை தேடி கொண்டிருக்க,

" மெக்கானிக் ஷாப் வந்து உங்க பைக் சாவி வாங்கிகோங்க" என் கூறினாள் ரம்யா.

அதே சமயம் ரமேஷின் செல் ஃபோன் சிணுங்க, " சரி நீ போ, நான் வந்து வாங்கிக்கிறேன்" என பதலளித்துவிட்டு தன் ஃபோனை ஆன் செய்தான்.

" அடபாவி, இப்படி தலையில கல்ல தூக்கி போட்டுடியே, ஏண்டா படிக்கிற வயசுல உன் புத்தி இப்படி போகுது " என்று ரமேஷின் அம்மா ஃபோனில் அர்ச்சனை செய்தாள் மறுமுனையில்.

" என்னமா சொல்றீங்க , நான் என்ன பண்ணினேன் " என்று ஒன்றும் புரியாமல் ரமேஷ் கேட்க,

"ஒரு பொண்ணை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போற அளவுக்கு தப்பு பண்ணிட்டு என்னன்னா கேட்குற, நீ பொண்ணுங்க கிட்ட சகஜமா பேசுறப்ப எல்லாம் என் பையன் தப்பு பண்ணமாட்டன் , எல்லார்கிட்டவும் ஃபிரண்டிலியா இருக்கிறான்னு நினைச்சேன்டா, இப்படி என் நினைப்புல மண்ண அள்ளி போடுட்டியே" என ரமேஷின் அம்மா கத்தி தீர்தாள் மகனிடம்.

மாமா நல்ல வத்தி வைச்சுட்டார் அதுக்குள்ள என புரிந்தது ரமேஷிற்கு.

" அம்மா, அப்படியெல்லாம் ஒன்னுமேயில்லமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க" என ரமேஷ் தன் தாயிடம் கெஞ்சி கொண்டிருக்க.......

" ஹலோ! என்ன உங்க பைக் சாவி வேண்டாமா?" என மிக சத்தமாக கேட்டுக் கொண்டே தன் ஸ்கூட்டியை அவனருகில் நிறுத்தினாள் ரம்யா.

ஃபோனை தன் கைகளால் மூடாமலே " ஏன் இப்படி கத்துற , கொஞ்சம் வெயிட் பண்ணு" என இவன் ரம்யாவிடம் சொல்ல,
ஃபோனின் மறுமுனையிலிருந்த ரமேஷின் அம்மாவிற்கு ரம்யாவின் குரல் நன்றாக கேட்டது.

ரமேஷ் அம்மாவின் ப்ரஷர் எகிற ஆரம்பித்தது,
" அடபாவி , உங்க மாமா சொன்னது எல்லாம் நிசம்தான் போலிருக்கு, நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும், உடனே சென்னைக்கு புறப்பட்டு வா" என்று கூறிவிட்டு ஃபோனை துன்டித்தாள்.

" அம்மா, அம்மா..........." என அலறினான் ஃபோனில் ரமேஷ்.

இவன் டென்ஷன் தெரியாமல் ரம்யா " சாவி கொடுக்க எவ்வளவு நேரம் வெயிட் பண்றது, தூக்கி போடுறேன் சாவிய பிடிச்சுக்கோங்க " என கூறி சற்று தூரம் தன் ஸ்கூட்டியில் சென்று விட்டு அங்கிருந்து பைக் சாவியை தூக்கி வீசினாள்.

சாவியை பிடிக்க வேகமாக வந்த ரமேஷ் பின்னால் வந்த காரை கவனிக்கவில்லை, கார் அவன் மீது மோத,
" அம்மா" என்ற அலறலுடன் சுயநினைவை இழந்தான் ரமேஷ்.



கண்விழித்த போது ஆஸ்பத்திரி படுக்கையிலிருப்பதை உணர்ந்தான். அருகில் நண்பர்கள் எப்போது இவன் கண் திறப்பான் என ஏக்கத்துடன் இருந்தனர்.

ரமேஷ் கண் முழிச்சுட்டான்டா என்று ஃப்ரன்ட்ஸ் கூட்டம் உற்சாகமானது.
" டேய் இப்போ எப்படிடா இருக்கிற, ரமேஷ் நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம்டா,
நம்ம டிபார்ட்மெண்ட் ஃபர்ஸ்ட் இயர் ரம்யா தான் உன்ன இந்த ஆஸ்பத்திரில வந்து சேர்த்திருக்கா. அவளோட அப்பா சிபாரிசால உனக்கு ஸ்பெஷல் ரூம் கொடுத்திருக்காங்கடா"

" உன் அம்மாவிற்கு தகவல் சொல்லிட்டோம், ராத்திரி ட்ரெயினுக்கு வந்திடுவாங்க, இப்போ நீ ரெஸ்ட் எடு" என ஆளுக்கொரு தகவல் தந்தனர்.

" ராட்சஸி பண்றதும் பண்ணிட்டு , ஆஸ்பத்திரில வேற கொண்டு வந்து சேர்த்திருக்காளா' என நினைத்துக் கொண்டான் ரமேஷ். சற்று நேரத்தில் அயர்ந்து உறங்கி போனான்.

மிக அருகில்.........விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த ரமேஷ்..........தன் கரங்களை முகத்தில் பதித்து கொண்டு அழுவது யார்?????? ,என பார்த்த போது.........

கல்லூரி கலாட்டா - 6

66 comments:

said...

//மிக அருகில்.........விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த ரமேஷ்..........தன் கரங்களை முகத்தில் பதித்து கொண்டு அழுவது யார்?????? ,என பார்த்த போது.........//

வேற யாரு! நம்ம ரம்யாதான்!

ம்.மோதலில் ஆரம்பித்தது.....!

[நான் கார் மோதலைச் சொன்னேன்]

said...

\" நாமக்கல் சிபி said...
//மிக அருகில்.........விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த ரமேஷ்..........தன் கரங்களை முகத்தில் பதித்து கொண்டு அழுவது யார்?????? ,என பார்த்த போது.........//

வேற யாரு! நம்ம ரம்யாதான்!

ம்.மோதலில் ஆரம்பித்தது.....!

[நான் கார் மோதலைச் சொன்னேன்]\"

சிபி முதல் பின்னூட்டம் உங்களோடதுதான்! நன்றி சிபி!

உங்கள் யூகம் சரியா? இல்லியான்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

[ கார் மட்டும் தான் கதையில் ரமேஷ் மீது மோதுகிறது, வேறென்ன மோதல் இருக்கு சிபி??]

said...

திவ்யா சினிமா தோத்துடும் போல இருக்கே உங்க கதைக்கு முன்னாடி ;)))

said...

ரமேசு.. அச்சச்சோ ராசா.. அடிபட்டுடுச்சா..
கவலபடாதே..
இதுவும் நல்லதுக்குதான்..
அனுதாப அலையில அந்த பொண்ணு மனசுல அமோகமா ஜெயிச்சிடலாம்...
பெரிய பெரிய கட்சிங்களே அனுதாப அலையிலதாம்பா ஜெயிக்குது...

ஆனா.. ஒண்ணு கண்ணு.. இன்னொரு தபா சொல்றேன்.. படிப்பும் பெத்தவங்களுந்தான் முக்யம்...
பொண்ணுங்க அயுவுறாங்கோன்னு நம்பி ஏமாந்துடாத...
சரி.. எனக்கு டைமாச்சு..
நாளைக்கா வந்து உனக்கு என்னாச்சுன்னு கண்டுக்கறேன்.

said...

\" ஜொள்ளுப்பாண்டி said...
திவ்யா சினிமா தோத்துடும் போல இருக்கே உங்க கதைக்கு முன்னாடி ;))) \"

வருகைக்கு நன்றி பாண்டி!

சினிமாவுக்கு கதை, திரைகதை எழுத போய்டலாம் போலிருக்குது நீங்க பாராட்டுகிறதை பார்த்தால்!

Anonymous said...

ரொம்ப சரி... சினிமா தோத்திரும் போல!!
waiting for ur next part...

Anonymous said...

திருப்பங்களை நல்லா குடுக்கறப்பா
கதையில ..படுத்தாம சீக்கிரமா சேர்த்து வச்சிடு. அந்த கால சினிமா மாதிரி சுபம் போட்டு. [இந்த காலத்தில தான் திடுக்கிடும் முடிவு குடுக்கறாங்களே.]

said...

\" அரை பிளேடு said...
ரமேசு.. அச்சச்சோ ராசா.. அடிபட்டுடுச்சா..
கவலபடாதே..
இதுவும் நல்லதுக்குதான்..
அனுதாப அலையில அந்த பொண்ணு மனசுல அமோகமா ஜெயிச்சிடலாம்...
பெரிய பெரிய கட்சிங்களே அனுதாப அலையிலதாம்பா ஜெயிக்குது...

ஆனா.. ஒண்ணு கண்ணு.. இன்னொரு தபா சொல்றேன்.. படிப்பும் பெத்தவங்களுந்தான் முக்யம்...
பொண்ணுங்க அயுவுறாங்கோன்னு நம்பி ஏமாந்துடாத...
சரி.. எனக்கு டைமாச்சு..
நாளைக்கா வந்து உனக்கு என்னாச்சுன்னு கண்டுக்கறேன். \"

அரைபிளேடு ரமேஷ் மேல உங்களுக்கு இருக்கிற அக்கரைய நினைச்சா மனசு தாங்கல,

வருகைக்கும், பின்னூட்டதிற்க்கும் நன்றி பிளேடு.

said...

\"aparnaa said...
ரொம்ப சரி... சினிமா தோத்திரும் போல!!
waiting for ur next part...\"

நன்றி அபர்னா,

அடுத்த பகுதி விரைவில்!

said...

\"லட்சுமி said...
திருப்பங்களை நல்லா குடுக்கறப்பா
கதையில ..படுத்தாம சீக்கிரமா சேர்த்து வச்சிடு. அந்த கால சினிமா மாதிரி சுபம் போட்டு. [இந்த காலத்தில தான் திடுக்கிடும் முடிவு குடுக்கறாங்களே.] \"

லட்சுமி உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி, சீக்கிரமா அடுத்த பகுதி போடுகிறேன்

[அந்த கால சினிமா ரசிகரா நீங்கள்?]

Anonymous said...

'குத்து' ரம்யா படத்த போட்டதுக்கு எதுனா காரணம் இருக்குங்களா?

கத ஜுடு பிடிக்குது...

said...

nalla thaan poguthu mm.. eppadi suspense oda end pannuna eppadi mm..

P.S>> athu eppadi inga correct week-start pannurapo illa day start pannurapo oru post pottu supper oru 20mints free pannuringa.. mm

said...

//
[ கார் மட்டும் தான் கதையில் ரமேஷ் மீது மோதுகிறது, வேறென்ன மோதல் இருக்கு சிபி??]
//

ரமேஷின் தாய்மாமாவும் போதியிருக்கிறார் அல்லவா?

said...

\"பெத்த ராயுடு said...
'குத்து' ரம்யா படத்த போட்டதுக்கு எதுனா காரணம் இருக்குங்களா?

கத ஜுடு பிடிக்குது... \"

பெத்த ராயுடு வருகைக்கு மிக்க நன்றி.

'குத்து' ரம்யா படம் போட்டதிற்கு காரணம்
1. படத்தில் ஆங்கிலத்தில இருக்கும் வார்த்தைகள் கதையின் பெயர் பொருத்தம்.
2. நடிகை ரம்யா கதையில் வரும் கதாபாத்திரம் 'ரம்யா' வின் பெயர் பொருத்தம்.

said...

\" Adiya said...
nalla thaan poguthu mm.. eppadi suspense oda end pannuna eppadi mm..

P.S>> athu eppadi inga correct week-start pannurapo illa day start pannurapo oru post pottu supper oru 20mints free pannuringa.. mm \"

Adiya, கதையையும் , சஸ்பன்ஸையும் பாராட்டியதற்கு நன்றி.

[என்னோட day end இந்தியாவில் day begining ஆ இருக்கிறதால , நான் போஸ்ட் போடுகிற நேரம் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது Adiya.]

said...

\" நாமக்கல் சிபி said...
//
[ கார் மட்டும் தான் கதையில் ரமேஷ் மீது மோதுகிறது, வேறென்ன மோதல் இருக்கு சிபி??]
//

ரமேஷின் தாய்மாமாவும் போதியிருக்கிறார் அல்லவா? \"

அஹா, கரக்ட் சிபி, கதைய எவ்வளவு நுனுக்கமா வாசிச்சிருக்கிறீங்க, வாவ்!

said...

கதை விறுவிறுப்பா போகுது...

அடுத்த பகுதிக்காக வெயிட்டீங் :-)

said...

\" வெட்டிப்பயல் said...
கதை விறுவிறுப்பா போகுது...

அடுத்த பகுதிக்காக வெயிட்டீங் :-) \"

பாராட்டுகளுக்கு நன்றி வெட்டி,

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வெட்டி, அடுத்த பகுதி சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.

Anonymous said...

Nalla poyittu irukku kathai , ok next ;)

said...

இன்னைக்குதான் அஞ்சு பதிவையும் ஒண்ணா படிச்சேன்....

திவ்யா கலக்குறீங்க போங்க....

பயங்கர விறுவிறுப்பா கொண்டு போறீங்க....

நடையும் சூப்பராயிருக்கு..... வாழ்த்துக்கள்

said...

ha ha :) danks. i am in US-PA.

Anonymous said...

appadi podu...kadhai pora direction enakku therinjiduchu!

modhal a aaarambichathu!

said...

\"C.M.HANIFF said...
Nalla poyittu irukku kathai , ok next ;) \"

நன்றி ஹனிஃப்!

அடுத்த பகுதி விரைவில்....

said...

\" அமுதன் said...
இன்னைக்குதான் அஞ்சு பதிவையும் ஒண்ணா படிச்சேன்....

திவ்யா கலக்குறீங்க போங்க....

பயங்கர விறுவிறுப்பா கொண்டு போறீங்க....

நடையும் சூப்பராயிருக்கு..... வாழ்த்துக்கள்\"

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அமுதன்!

ஐந்து கலாட்டாவையும் ஒன்னா படிச்சிருக்கிறீங்க , அந்த பொறுமைகாகவே உங்களை தனியா பாராட்டனும்.

உங்கள் சிறுகதை 'கண்டிப்பாடா செல்லம்' இன்னும் மனதில் இருக்கிறது!

வருகைக்கு நன்றி அமுதன்.

said...

\" Adiya said...
ha ha :) danks. i am in US-PA.
\"

Profile location Srirangam, Tamilnadu ன்னு பார்த்து அப்படியே நம்பிட்டேன் Adiya.

said...

\"Dreamzz said...
appadi podu...kadhai pora direction enakku therinjiduchu!

modhal a aaarambichathu! \"

Dreamz கதை போகின்ற திசை தெரியுதா...பார்க்கலாம் உங்கள் யூகம் சரியான்னு.

வருகைக்கு நன்றி Dreamz!

Anonymous said...

சூப்பர்பு...

--அழுவது ரம்யாவாகத்தான் இருக்கும் என்று எட்டி பார்த்தபோதுதான் தெரிந்தது அது ஷீத்தல் என்று.

'ஏன் இவள் அழ வேண்டும்' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே... --

இந்த திருப்பம் எப்படி இருக்குது...

said...

திடீர் திருப்பம் திவ்யா. ஆக்ஸிடெண்ட்லாம் எதிர் பாக்கல. கலக்கலா கொண்டு போறிங்க.
பாவம் ரமேஷ். அவன் பண்ணின தப்புக்கு இந்த தண்டனை ரொம்ப ஜாஸ்தி.

said...

\"ஜி said...
சூப்பர்பு...

--அழுவது ரம்யாவாகத்தான் இருக்கும் என்று எட்டி பார்த்தபோதுதான் தெரிந்தது அது ஷீத்தல் என்று.

'ஏன் இவள் அழ வேண்டும்' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே... --

இந்த திருப்பம் எப்படி இருக்குது... \"

ஜி, திருப்பம் நல்லாதான் இருக்கிறது, ரூட்டை மாத்தி விடுறிங்களா?? சபாஷ் நல்ல யோசனை!

வருகைக்கு நன்றி ஜி!

Anonymous said...

நல்லா போகுது கதை. தாய் மாமா எப்பவுமெ எங்கயுமே இப்படித்தானா

கடமையில் கண்ணா இருக்காரே!!


//கரங்களை முகத்தில் பதித்து கொண்டு அழுவது யார்?????? ,என பார்த்த போது......... //
இங்கயும் சஸ்பென்சா,?

Gud..

said...

\" Priya said...
திடீர் திருப்பம் திவ்யா. ஆக்ஸிடெண்ட்லாம் எதிர் பாக்கல. கலக்கலா கொண்டு போறிங்க.
பாவம் ரமேஷ். அவன் பண்ணின தப்புக்கு இந்த தண்டனை ரொம்ப ஜாஸ்தி. \"

ப்ரியா பாராட்டுகளுக்கு நன்றி!

ப்ரியா, ரமேஷ்க்கு இந்த தண்டனை ஜாஸ்தின்னு தோனுதா?? என்ன பண்றது எதிர்பாராத விதமா ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சே, சரி அடுத்து என்ன ஆகும்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

said...

\" மணி ப்ரகாஷ் said...
நல்லா போகுது கதை. தாய் மாமா எப்பவுமெ எங்கயுமே இப்படித்தானா

கடமையில் கண்ணா இருக்காரே!!


//கரங்களை முகத்தில் பதித்து கொண்டு அழுவது யார்?????? ,என பார்த்த போது......... //
இங்கயும் சஸ்பென்சா,?

Gud.. \"

மணி ப்ரகாஷ் உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

[தாய் மாமாவிற்கு மருமகன் மேல் பாசம் ஜாஸ்தி , அதான் வத்தி வைச்சுட்டார்]

said...

ஆகா மோதல் காதல் தான் முடியும் போல இருக்கே. என்ன இன்னிக்கு கதை ஒரே ரணகள்மாயிருக்கு ஏகப்பட்ட accidents யார் மேல இந்த ரத்தவெறி? :))..

said...

சூப்பரா போகுது கத..ஆனா அனியாயத்துக்கு சஸ்பென்ஸ் வெக்கறீங்களே :-)

said...

அது யாரு அந்த போட்டோவுல...சோக்காகீது போங்க
:-)

said...

\"Syam said...
சூப்பரா போகுது கத..ஆனா அனியாயத்துக்கு சஸ்பென்ஸ் வெக்கறீங்களே :-) \"


வாங்க ஷ்யாம், training முடிஞ்சு வந்தாச்சா??
எல்லா கலாட்டாவும் சேர்த்து வைச்சு படிச்சீங்களா?

சஸ்பன்ஸ் வைக்கிறது சும்மா ஒரு திரில்லுக்காக.........

உங்க பாராட்டுக்கு நன்றி ஷ்யாம்!

said...

\"சந்தோஷ் said...
ஆகா மோதல் காதல் தான் முடியும் போல இருக்கே. என்ன இன்னிக்கு கதை ஒரே ரணகள்மாயிருக்கு ஏகப்பட்ட accidents யார் மேல இந்த ரத்தவெறி? :))..\"

யார் மேலவும் ரத்த வெறி இல்ல சந்தோஷ், கதையில ஒரு சின்ன ஆக்ஸிடண்ட், தட்ஸ் இட்.

வருகைக்கு நன்றி சந்தோஷ்!

said...

\"Syam said...
அது யாரு அந்த போட்டோவுல...சோக்காகீது போங்க
:-)
\"

ஃபோட்டோவுல இருக்கிறது நடிகை ரம்யா!

[தெரியாத மாதிரி கேட்டு பார்க்குறீங்களா ஷ்யாம்?]

said...

//தெரியாத மாதிரி கேட்டு பார்க்குறீங்களா ஷ்யாம்//

சத்தியமா தெரியலீங்கோவ்..எனக்கு தெரிஞ்சதெல்லாம் நயன்,நயன்,நயன் தான் :-)

said...

\"Syam said...
//தெரியாத மாதிரி கேட்டு பார்க்குறீங்களா ஷ்யாம்//

சத்தியமா தெரியலீங்கோவ்..எனக்கு தெரிஞ்சதெல்லாம் நயன்,நயன்,நயன் தான் :-) \"

சத்தியமா தெரியாம தான் கேட்டீங்களா? ஓ.கே நம்புகிறேன்.

ஷ்யாம் நயன் ரசிகரா! சூப்பர்!

Anonymous said...

// கண்விழித்த ரமேஷ்..........தன் கரங்களை முகத்தில் பதித்து கொண்டு அழுவது யார்?????? //
ரமேஷ் அம்மா தானே?? சீக்கிரம் சொல்லுங்க திவ்யா!
ஆனாலும் ஜாலியா போயிட்டு இருந்த கதைல கார விட்டு Serious ஆக்கிட்டீங்களே!! க.க-6 எப்போங்க?
ஹிம்...கார், லாரில எல்லாம் மோதுனா தான் காதல் வரும் போலிருக்கு!! :-? :)

-விநய்

said...

\"Anonymous said...
// கண்விழித்த ரமேஷ்..........தன் கரங்களை முகத்தில் பதித்து கொண்டு அழுவது யார்?????? //
ரமேஷ் அம்மா தானே?? சீக்கிரம் சொல்லுங்க திவ்யா!
ஆனாலும் ஜாலியா போயிட்டு இருந்த கதைல கார விட்டு Serious ஆக்கிட்டீங்களே!! க.க-6 எப்போங்க?
ஹிம்...கார், லாரில எல்லாம் மோதுனா தான் காதல் வரும் போலிருக்கு!! :-? :)

-விநய் \"

விநய்,வருகைக்கு நன்றி. உங்கள் கேள்விக்கான விடை 6வது கலாட்டாவில்.

கார், லாரில மோதினா தான் காதல் வரும்னு நீங்க சொல்கிறதை யாராவது கேட்டு, காதலுக்காக அப்படி விபரீதமா ஏதாச்சும் பண்ணிட போறாங்க!

said...

திவ்யா கலக்கிட்டிங்க...வாழ்த்துக்கள்
முதலில் "அரை",
அப்புறம் "ஃபீலிங்",
இப்போ "ஆக்ஸிடெண்ட்",
கடைசியில.....அத தான்....

said...

\"கோபிநாத் said...
திவ்யா கலக்கிட்டிங்க...வாழ்த்துக்கள்
முதலில் "அரை",
அப்புறம் "ஃபீலிங்",
இப்போ "ஆக்ஸிடெண்ட்",
கடைசியில.....அத தான்.... \'

வாழ்த்துக்களுக்கு நன்றி கோபிநாத்,

கதையின் ஓட்டத்தை அப்படியே வரிசையா சொல்லிட்டீங்க, பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கும்னு!

said...

மாமாவாத்தான் இருக்கும்னு guess பண்ணேன். சரியாப்போச்சு... ஆனா accident எல்லாம் எதிர்பாக்கல...

//
அடபாவி, இப்படி தலையில கல்ல தூக்கி போட்டுடியே, ஏண்டா படிக்கிற வயசுல உன் புத்தி இப்படி போகுது
//
என்னனு விசாரிக்காமயே ரமேஷோட அம்மா சந்தேகப்பட்றாங்களே...

கதை வழக்கம்போல நல்ல கொண்டு போறீங்க.கலக்குங்க திவ்யா

Anonymous said...

அவள் வீசியது
சாவி அல்ல
அவளது மனசு!

மோதியது
கார் அல்ல
காதல்!

காயம் பட்டது
அவன் உடல் அல்ல
அவளது உள்ளம்!

இக்கதையின்
இயக்குனர் நான் அல்ல
திவ்யா!
எனவே மிச்சக்கதையும்
அவர்களே சொல்வார்கள்!
இவருடைய
இயக்கம்
மறுபடியும் என்று
துவக்கம்?
சித்தின்னு சொன்னதுக்காக
சோதிச்சிடாதீங்க
சீக்கிரம்...சீக்கிரம்...
ஆவலுக்கு
அணைபோடமுடியவில்லை!

said...

\"Arunkumar said...
மாமாவாத்தான் இருக்கும்னு guess பண்ணேன். சரியாப்போச்சு... ஆனா accident எல்லாம் எதிர்பாக்கல...

//
அடபாவி, இப்படி தலையில கல்ல தூக்கி போட்டுடியே, ஏண்டா படிக்கிற வயசுல உன் புத்தி இப்படி போகுது
//
என்னனு விசாரிக்காமயே ரமேஷோட அம்மா சந்தேகப்பட்றாங்களே...

கதை வழக்கம்போல நல்ல கொண்டு போறீங்க.கலக்குங்க திவ்யா\"

அருண், ரமேஷ் மேல இடிச்சுகிட்டது அவனோட மாமா வா இருக்கலாம்னு எப்படி சரியா யூகிச்சீங்க, சூப்பர்!

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அருண்.

said...

\" பிரியமுடன் பிரேம் said...
அவள் வீசியது
சாவி அல்ல
அவளது மனசு!

மோதியது
கார் அல்ல
காதல்!

காயம் பட்டது
அவன் உடல் அல்ல
அவளது உள்ளம்!

இக்கதையின்
இயக்குனர் நான் அல்ல
திவ்யா!
எனவே மிச்சக்கதையும்
அவர்களே சொல்வார்கள்!
இவருடைய
இயக்கம்
மறுபடியும் என்று
துவக்கம்?
சித்தின்னு சொன்னதுக்காக
சோதிச்சிடாதீங்க
சீக்கிரம்...சீக்கிரம்...
ஆவலுக்கு
அணைபோடமுடியவில்லை!\'

தொடர்கதையை கவிதையில் அழகாக சொல்லி விட்டீர்கள் பிரேம், நன்றி.

உங்கள் ஆவலுக்கு அகம் மகிழ்கிறேன்!
அடுத்த பகுதி விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்!

said...

பகுதி நான்கு ஐந்தில் நீங்கப் பார்த்து ரசித்த பல தமிழ் படங்களின் சினிமா மசாலா வாடைக் கொஞ்சம் தூக்கலா வீசுற மாதிரி இருக்கே....!!!!

said...

\" தேவ் | Dev said...
பகுதி நான்கு ஐந்தில் நீங்கப் பார்த்து ரசித்த பல தமிழ் படங்களின் சினிமா மசாலா வாடைக் கொஞ்சம் தூக்கலா வீசுற மாதிரி இருக்கே....!!!! \"

தேவ் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

மசாலா வாடையை கம்மி பண்ணிக்க பார்க்கிறேன் தேவ்!

said...

நல்லாயிருக்குங்க படம்.....
:-)))))))))))))))

said...

\" ராம் said...
நல்லாயிருக்குங்க படம்.....
:-))))))))))))))) \"

என்னங்க ராம் நான் தொடர் கதை எழுதினா நீங்க என் பதிவுல படம் நல்லாயிருக்குன்னு பாராட்டுறீங்க????

வருகைக்கு நன்றி ராம்!!

said...

//ஷ்யாம் நயன் ரசிகரா! சூப்பர்! //

ஆமாங்க அதுனால அடுத்த பதிவுல நயன் படம் போட்டீங்கனா ஒரு ரெண்டு கமெண்ட் அதிகமா போடுறேன் :-)

Anonymous said...

chanceae illadha alavukku asaththi irukkeenga divya. great work

said...

\"Kittu said...
chanceae illadha alavukku asaththi irukkeenga divya. great work \"

கிட்டு உங்கள் பாராட்டுக்களுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி!

said...

\"Syam said...
//ஷ்யாம் நயன் ரசிகரா! சூப்பர்! //

ஆமாங்க அதுனால அடுத்த பதிவுல நயன் படம் போட்டீங்கனா ஒரு ரெண்டு கமெண்ட் அதிகமா போடுறேன் :-) \"

ஷ்யாம் நீங்க இரண்டு கமண்ட் கூட போடலீனாலும் பரவாயில்ல, நாட்டாம சொல்லி 'நயன்' படம் போடமாயிருப்பேனா........!

said...

திவ்யா, உங்க profile பொண்ணு செம cute..

Anonymous said...

காரை ஓட்டிக்கொண்டு வந்த பெண் ஒருவர் மட்டும் தான் பாக்கி யூகங்களில், அவர் அதே கல்லூரியில் வேலை பார்க்கும் விரிவுரையாளராகக்கூட இருக்கலாம்

அல்லது கதையிலே இது வரையிலும் சொல்லவில்லை என்றாலும், ரமேஸின் காதலியாகக் கூட இருக்கலாம்

அல்லது அம்மாவுக்கு போன் போட்ட மாமாவோ அல்லது அவரது மகளாகவோ கூட இருக்கலாம்

இல்லை இந்த இருவருக்காக காத்துக்கொண்டு இருந்துவிட்டு என்ன ஆனாது என்று பார்க்க வந்த தோழியாக இருக்கலாம்.

இல்லை ரமேஸின் நெருங்கிய நண்பனாக இருக்கலாம்

அல்லது அங்கே படபிடிப்புக்கு வந்த பிரபல நடிகையாக இருக்கலாம்

அல்லது இவை அனைத்தும் கனவு என்றும் மாற்றலாம்

எப்படி மாற்றினாலும், கதையின் அமைப்பும் நடையும் மிகவும் அருமை, உங்களது படைப்பில் தலையிடுவதற்கு மன்னிக்கவும், திணரடிக்கும் கதையின் அழுத்தம் இப்படி எழுதத்தூண்டியது. பாக்கியராஜின் பாணி இது. வாழ்த்துக்கள்

பிரியமுடன்,
ப்ரியா

said...

\" Priya said...
திவ்யா, உங்க profile பொண்ணு செம cute.. \"

Priya, profile picture அ நோட் பண்ணிடீங்களா.........வாவ்!!
ப்ரியா னா ப்ரியாதான்!!! சூப்பர் ப்ரியா!

[ profile picture எல்லாம் உங்க கிட்ட கத்துகிட்டது தான் !]

said...

\"Anonymous said...
காரை ஓட்டிக்கொண்டு வந்த பெண் ஒருவர் மட்டும் தான் பாக்கி யூகங்களில், அவர் அதே கல்லூரியில் வேலை பார்க்கும் விரிவுரையாளராகக்கூட இருக்கலாம்

அல்லது கதையிலே இது வரையிலும் சொல்லவில்லை என்றாலும், ரமேஸின் காதலியாகக் கூட இருக்கலாம்

அல்லது அம்மாவுக்கு போன் போட்ட மாமாவோ அல்லது அவரது மகளாகவோ கூட இருக்கலாம்

இல்லை இந்த இருவருக்காக காத்துக்கொண்டு இருந்துவிட்டு என்ன ஆனாது என்று பார்க்க வந்த தோழியாக இருக்கலாம்.

இல்லை ரமேஸின் நெருங்கிய நண்பனாக இருக்கலாம்

அல்லது அங்கே படபிடிப்புக்கு வந்த பிரபல நடிகையாக இருக்கலாம்

அல்லது இவை அனைத்தும் கனவு என்றும் மாற்றலாம்

எப்படி மாற்றினாலும், கதையின் அமைப்பும் நடையும் மிகவும் அருமை, உங்களது படைப்பில் தலையிடுவதற்கு மன்னிக்கவும், திணரடிக்கும் கதையின் அழுத்தம் இப்படி எழுதத்தூண்டியது. பாக்கியராஜின் பாணி இது. வாழ்த்துக்கள்

பிரியமுடன்,
ப்ரியா \"

ப்ரியா, அடுத்த பகுதியினை படிக்க ஆவலை தூண்டுவதற்க்காக கதையில் நான் வைத்த சஸ்பன்ஸ்க்கு இவ்வளவு திருப்பங்கள் யோசிச்சிருக்கிறீங்க,
உங்கள் யூகங்ளில் எது சரியானது என அடுத்த பதிவில் தெரிந்துவிடும், அதனையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.

என் படைப்பினை பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி !

[படபிடிப்புக்கு வந்த பிரபல நடிகை எதுகுங்க ரமேஷ் பக்கதுல உட்கார்ந்து அழுகனும்??? -> சினிமாக்காரங்க கூட இப்படி யோசிச்சிருப்பாங்களான்னு தெரில, ஆனாலும் ப்ரியா உங்கள் கற்பனா சக்தி அபாரம்!!]

Anonymous said...

காரில் வந்த பிரபல நடிகை என்று சொல்ல வந்தேன் வாக்கிய பிழையாகிவிட்டது.

said...

\Anonymous said...
காரில் வந்த பிரபல நடிகை என்று சொல்ல வந்தேன் வாக்கிய பிழையாகிவிட்டது.\"

ஓஹோ நீங்க அப்படி கற்பனை பண்ணினீங்களா ப்ரியா, இதுவும் நல்ல கற்பனையா இருக்குதே!!

said...

இந்த படத்துல இன்டர்வெல் எப்போ ??

:)

said...

\" Srikanth said...
இந்த படத்துல இன்டர்வெல் எப்போ ??

:) \"

என்ன ஷ்ரிகாந்த் படம் முடியாபோற நேரத்துல இன்டர்வெல் எப்போன்னு கேட்க்குறீங்க???

said...

mudivu nandraga ullathu....

said...

ramesh paavam avanukku accident ah.... nalla twist... willget back to u in part...