December 07, 2006

கல்லூரி கலாட்டா - 4




கலாட்டா -1
கலாட்டா -2
கலாட்டா -3

ரமேஷ் தன் கன்னத்தில் அரைவான் என்று சற்றும் எதிர்பாராத ரம்யா, ஒரு நிமிடம் நிலைகொலைந்தாள்.

" என்ன அரஞ்சிட்ட இல்ல, என்ன பண்றேன் பாரு, நான் சும்மா விட மாட்டேன், என்னை எங்க வீட்டுல அப்பா அம்மா கூட அடிச்சதில்ல , நீ அடிச்சுட்ட இல்ல, எப்படி பதில் அடி கொடுக்கறேன் பாரு" என மூச்சு விடாமல் தொடர்ந்து கத்தினாள்.

" ஹேய் ரம்யா, நான் உன்னை அரையனும்னு எல்லாம் நினைக்கவேயில்ல, ஜஸ்ட் வார்ன் பண்ணி அனுப்பனும்னு தான் வர சொன்னேன், நீ அதிகமா பேசிட்ட, அதான்............டக்குனு...அடிச்சுட்டேன், ...ஐ அம் ......ஸோ....." என்று அவன் முடிப்பதற்குள்,

" நீ ' டி' போட்டு பேசினப்போவே நான் உன்ன அரைஞ்சிருக்கனும், சீனியர்னு கொஞ்சம் மரியாதை கொடுத்தா, நீ கை நீட்டுறியா? எப்படி உன்ன கவனிக்கனும்னு எனக்கும் தெரியும்" என்று கூறிவிட்டு லேபிலிருந்து வேகமாக வெளியேறினாள் ரம்யா.

' சே, பொண்ணுங்ககிட்ட என்னிக்கும் நான் இப்படி நடந்துக்கிட்டதில்லயே, எவ்வளவு ஃப்ரன்டிலியா இருப்பேன், இன்னிக்கு இப்படி அரஞ்சுட்டேனே' என ஃபீல் பண்ணினான் ரமேஷ்.

' இந்த ராட்சஸி வேற ராகிங், ரிப்போர்ட் னு ஏதேதோ சொன்னாளே, என்ன டிராமா போடபோறாளோ, கடவுளே!' என கொஞ்சம் பயமும் தொத்திக்கொண்டது ரமேஷிற்கு.

முதல் வருடத்திலிருந்தே கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்ந்தால் தான் நாலு வருஷம் கல்லூரி படிப்பு முடிக்கும் போது, ஒரு இரண்டு மூனு கம்பியூட்டர் லாங்குவேஜ் தெரியும் என சக மாணவர்களின் அறியுரையின் படி மூன்று தேவிகளும் ' Aptech' ல் கோர்ஸ் சேர்ந்திருந்தார்கள்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு க்ளாஸ் இருந்தது Aptech ல்,
பவானி மட்டும் தன் வீட்டிலிருந்து நேராக க்ளாஸ்க்கு சென்று விட்டாள்,
ரம்யாவும் ஷீத்தலும் ரம்யாவின் ஸ்கூட்டியில் வீட்டிலிருந்துப் புறப்பட்டனர்.

" ஆல்ரெடி ரொம்ப லேட் ஆச்சு ரம்ஸ், பவானி வெயிட் பண்ணிட்டு இருப்பா, சீக்கிரம் போ" என்று பின்னிருக்கையில் அமர்ந்தபடி ஷீத்தல் அவசரப்படுத்தினாள்.

Aptech சென்டர் இருந்த தெருவின் திருப்பத்தில் வேகமாக ஸ்கூட்டி திரும்ப, எதிரில் வந்த பைக்குடன் மோதி, ஸ்கூட்டி மட்டும் சரிந்து, கீழே விழுந்தனர் இருவரும்.
உடனே பக்கத்திலிருந்த பேக்கரியில் இருந்த அனைவரும் வந்து வண்டியை நேரே நிறுத்த, ரம்யாவும் ஷீத்தலும் எழுந்து பார்த்தால், ' பைக்கில் இருந்தது' ரமேஷ்.

கையில் ஏற்பட்ட சீராய்ப்பில் இருந்து வழிந்த ரத்தத்தின் சிவப்பு நிறத்தை விட ரம்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

" கண்ணு தெரில, இப்படியா ராங் சைட்ல பைக் ஓடிட்டு வர்ரது, உங்களுக்கெல்லாம் யாரு லைசன்ஸ் கொடுத்தா, " என்று கத்த ஆரம்பித்தாள் ரம்யா.

தவறு தன்னுடையது தான் என ரம்யாவிற்கு நன்கு தெரியும், எனினும் அருகில் இருந்த கூட்டத்திடம் " பாருங்க சார், எப்படி வந்து என் வண்டிய இந்த ஆளு இடிச்சுட்டாரு" என சப்போர்டுக்கு ஆள் சேர்த்தாள். ஒரு பொண்ணு கேட்டு சப்போர்டுக்கு வராமல் இருப்பாங்களா?

பொண்ணு சீன் கிரியேட் பண்ணி பழி வாங்குது என சுதாரித்துக் கொண்டான் ரமேஷ்.

" ஹலோ,யாரு ராங் சைட்ல வந்தா? பொண்ணு மாதிரியா வண்டி ஓட்டிடு வந்த நீ, என்னமோ ராக்கெட் ஓட்ர மாதிரி வேகமா வந்து என் பைக்ல இடிச்சுட்டு , இப்போ நீ கத்தினா உன் மேல தப்பிலலைன்னு ஆகிடுமா???" என்று ரமேஷும் பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, " பாருங்க சார், இடிக்கிறதும் இடிச்சுட்டு இப்படி பேசுறாரு இந்த ஆளு" என்று தன் சப்போர்ட் கும்பளை ரம்யா நோக்க,

அவர்களும் " வண்டிக்கு அடிபட்டிருக்கு சார், பாவம் பொண்ணுங்க வேற கீழே விழுந்துட்டாங்க, நீங்க இப்படி பேசுறது நல்லா இல்ல" என்று ஆளுக்கு ஒரு பக்கம் பொண்ணுங்களுக்கு வரிந்துக் கட்டி கொண்டு பரிந்து பேச அரம்பித்தனர்.

" இப்போ என்ன , வண்டி சரி பண்ண பணம் நான் தரனும் அவ்வளவு தான, இந்தா நூறு ரூபாய்" என்று தன் பாக்கெட்டிலிருந்து 100 ரூபாய் எடுத்து ரம்யாவின் முகத்திற்கு நேராக நீட்டினான் பைக்கிலிருந்தபடியே.

" யாருக்கு வேணும் உங்க பிச்ச காசு, நீங்களே என் வண்டிய மெக்கானிக் ஷாப் கொண்டு போய் சரி பண்ணி தரனும், அப்படியே எங்க ரெண்டு பேரையும் பக்கத்து நர்ஸிங் ஹோம் கூட்டிட்டு போய் டிரீட்மன்ட் பண்ணனும்" என்று அடுக்கி கொண்டே போனாள் ரம்யா.

" அதுக்கெல்லாம் வேற ஆள பாரு, 100 ரூபாய் பிடி, இல்லைனா ஆள விடு" என்று கூறி தன் பைக்கில் போக எத்தனித்தான் ரமேஷ்.

டக்கென்று அவன் பைக்கின் முன்னிருந்த சாவியை எடுத்துவிட்டாள் ரம்யா. இதை சற்றும் எதிர்பாராத ரமேஷ் , திகைப்புடன் பார்க்க.....

" ஒழுங்கு மரியாதையா என் வண்டிய சரி பண்ணி கொடுங்க, அப்பதான் உங்க பைக் சாவி தருவேன்" என்ரு ரம்யா மிரட்ட, அவளது சப்போர்ட் கூட்டமும் பலமாக ஆமோதித்தது.

கடுப்பாகி போன ரமேஷ்" சரி, உன் வண்டியை தள்ளிட்டு வா, பக்கத்து மெக்கானிக் ஷாப் போகலாம்" என்று தன் பைக்கை தள்ளி கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

மெக்கானிக் ஷாப் சென்றதும், " உன் வண்டிய சரி பண்ண எவ்வளவு பணம் ஆகும்னு கேட்டு மெக்கானிக்கிட்ட கொடுத்துட்டேன், வண்டி சரியானதும் நீ எடுத்துக்க, இப்ப என் பைக் சாவி கொடு" என்று கேட்டான் ரமேஷ்.

" எங்க கைல பட்ட காயத்துக்கு டிரீட்மண்ட் யாரு கொடுப்பா, பேசாம நர்ஸிங் ஹோம் கூட்டிட்டு போங்க" என்றாள் தோரனையுடன்.

'ராட்சஸி, நேத்து விட்ட அரை இவளுக்கு பத்தாது , என்ன மிரட்டு மிரட்டுறா கொஞ்சம் அசந்தா' என்று மனதில் குமறி கொண்டே அவர்கள் பின் நடந்தான் தன் பைக்கையும் மெக்கானிக் ஷாப்பில் விட்டு விட்டு.

மெக்கானிக் ஷாபிலிருந்து இரண்டு பில்டிங் கடந்து ஒரு மாடியில் கிளினிக் இருந்தது. மாடி படிகளில் ரம்யாவும் ஷீத்தலும் முதலில் ஏற, மெதுவாக குனிந்த படி ரமேஷ் பின் தொடர்ந்து ஏறினான்.

மாடிபடி திருப்பத்தில் எதிரில் இறங்கி வந்தவர் மேல் ரமேஷ் இடித்துவிட, " ஸாரி" என்று கூறி தலை நிமிர்ந்த போது தான் அந்த நபர் யார் என கண்டு அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான் ரமேஷ்..............

[தொடரும்]


கல்லூரி கலாட்டா - 5

கல்லூரி கலாட்டா - 6

54 comments:

Anonymous said...

கதை அருமையாக போய்கொண்டிருக்கிறது...அடுத்த பாகத்தையும் இப்பொழுதே படிக்கவேண்டும் போல உள்ளது..

நாமக்கல் சிபி said...

ஹிம்ம்ம்...
அடுத்து என்ன ஆச்சு???

ரமேஷ இவ்வளவு டார்ச்சர் பண்ணக்க்கூடாது!!!

நாமக்கல் சிபி said...

சஸ்பென்ஸ் வேறயா?
ம்.அடுத்து என்ன ஆச்சு?

Anonymous said...

இது ஆடம் டீசிங். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Divya said...

\" தூயா said...
கதை அருமையாக போய்கொண்டிருக்கிறது...அடுத்த பாகத்தையும் இப்பொழுதே படிக்கவேண்டும் போல உள்ளது..\"

நன்றி தூயா!

அடுத்த பாகத்தை படிக்கவேண்டும் என்ற ஆவலை என் பதிவு உங்களுக்கு ஏற்படுத்தியது அறிந்து மிக்க மகிழ்ச்சி!

Divya said...

\" வெட்டிப்பயல் said...
ஹிம்ம்ம்...
அடுத்து என்ன ஆச்சு???

ரமேஷ இவ்வளவு டார்ச்சர் பண்ணக்க்கூடாது!!! \"

வெட்டி, ரமேஷ் ரம்யாவை அடிச்சபோ அவ மேல பரிதாபம் வரல உங்களுக்கு,
ரமேஷ் க்கு மட்டும் இவ்வளவு சப்போர்ட்டா???

வருகைக்கு நன்றி வெட்டி!

Divya said...

\" நாமக்கல் சிபி said...
சஸ்பென்ஸ் வேறயா?
ம்.அடுத்து என்ன ஆச்சு? \"

சிபி அடுத்து என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
வருகைக்கு நன்றி சிபி.

Divya said...

\"ஜி said...
இது ஆடம் டீசிங். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\"

ஆடம் சைட்ல இருந்து பயங்கரமா குரல் கொடுக்கிறீங்க ஜி!

வருகைக்கு நன்றி ஜி!

Udhayakumar said...

நல்லா இருக்குங்க "உங்க" கலாட்டா...

Anonymous said...

அருமையான கதை!!
அடுத்து என்ன?? சீக்கரம் எழுதுங்க!!

Anonymous said...

mmm appuram ? ;)

Anonymous said...

ஒரு பொண்ணா இருந்துகிட்டு
ஒரு பொண்ணுக்கு அடிவாங்கி குடுத்துட்டீங்களே..என்னமோ போங்க .

Anonymous said...

hai da divya..kadhai nalla viruvirupa pogudhu da..takkunu adhuthadutha episodegalai ezhudhunga, engala kaya vidama next enna aachunu soliduma, en kannula, bujilla...

Adiya said...

kathaiya ippadi Violence கொன்டு போரிங்க.
revolver Rita
Gun fight kanchana rangeikku
namma heroine ramya poikettu erukainga..

intha episodeilla ramesh dhaan pavam..pavam payan..

Priya said...

ஹா ஹா கலக்கல் திவ்யா. அதுவும், பொண்ணுங்க தப்பு பண்ணினா கூட அவங்களுக்கு சப்போர்ட் பண்ற நம்ம ஆளுங்க - 100% true..
நீங்க அதிக இடைவெளி இல்லாம அடிக்கடி எழுதறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

நாமக்கல் சிபி said...

//வெட்டி, ரமேஷ் ரம்யாவை அடிச்சபோ அவ மேல பரிதாபம் வரல உங்களுக்கு, //

சீனியர் ஜாலியா ஓட்றது எல்லா காலேஜ்லயும் நடக்கறதுதாங்க...

ஜாலியா பேசற பையனை அந்த மாதிரி நடந்துக்க வைச்சது உங்க ரம்யாதாங்க...

அப்படி என்னங்க பொறுக்கித்தனம் பண்ணான்? கைய பிடிச்சி இழுத்தான்னு சொன்னப்பக்கூட ஏன் இப்படி சொல்றனு தான் கேட்டான். பொறுக்கித்தனமா கைய பிடிச்சி இழுக்கலையே!

ஆனா அந்த பொண்ணை அரைஞ்சியிருக்க வேண்டாம் :-(

ஜொள்ளுப்பாண்டி said...

ம்ம்ஹூம் ரமேஷ் சரியில்லை. ஆண் இனதிற்கே அவமானம் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரே ஒரு முறை கன்னதிலே செல்லமா தட்டுனதுக்கா இவ்ளோ பெரிய தண்டனை !! கதா கதைய மாத்து :)))))))))))))))

கப்பி | Kappi said...

பாவம்ங்க ரமேஷ்!

அடுத்து? :)

Divya said...

\" Udhayakumar said...
நல்லா இருக்குங்க "உங்க" கலாட்டா...\"

உதய் உங்க பாராட்டுகளை ரம்யா கிட்ட கண்டிப்பா சொல்லிடுறேன்.

என் பதிவிறிக்கு வந்து சவுண்ட் விட்டதிற்கு நன்றி உதை.....oops, sorry உதய்!!

Anonymous said...

kadhai arumaiyaaga pothunga!

neenga solnna madhiri, accident na , ellarum ponnunga support thaan! paavam pasanga...

mmm ini?

Divya said...

\"aparnaa said...
அருமையான கதை!!
அடுத்து என்ன?? சீக்கரம் எழுதுங்க!! \"

நன்றி அபர்னா!

அடுத்த பாகம் விரைவில்.....

Divya said...

\"C.M.HANIFF said...
mmm appuram ? ;)\"'

வருகைக்கு நன்றி ஹனிஃப்!

அடுத்த பகுதி படிக்க நீங்கள் கொள்ளும் ஆவலுக்கு இன்னுமொரு நன்றி!

Divya said...

\"lakshmi said...
ஒரு பொண்ணா இருந்துகிட்டு
ஒரு பொண்ணுக்கு அடிவாங்கி குடுத்துட்டீங்களே..என்னமோ போங்க .\"

லட்சுமி டென்ஷன் ஆகாதீங்க, இது கற்பனை கதைங்க, சீரியஸ் ஆ எடுத்துக்காதீங்க.

உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி லட்சுமி.

Divya said...

\"one among u said...
hai da divya..kadhai nalla viruvirupa pogudhu da..takkunu adhuthadutha episodegalai ezhudhunga, engala kaya vidama next enna aachunu soliduma, en kannula, bujilla...\"

one among u, உங்கள் ஊக்கம் எனக்கு உற்ச்சாகத்தை தருகிறது, நன்றி.

அடுத்த பகுதி விரைவில் எழுதுகிறேன்.

[ கொஞ்சி கொஞ்சி அன்பு மழையில் திக்கு முக்காட வைச்சுடீங்க ]

Divya said...

\" Adiya said...
kathaiya ippadi Violence கொன்டு போரிங்க.
revolver Rita
Gun fight kanchana rangeikku
namma heroine ramya poikettu erukainga..

intha episodeilla ramesh dhaan pavam..pavam payan..\"

என்ன Adiya கதை violent ஆ இருக்குதுன்னு சொல்லிடீங்க??
உங்கள் கருத்துக்களூக்கு நன்றி Adiya.

Divya said...

\" Priya said...
ஹா ஹா கலக்கல் திவ்யா. அதுவும், பொண்ணுங்க தப்பு பண்ணினா கூட அவங்களுக்கு சப்போர்ட் பண்ற நம்ம ஆளுங்க - 100% true..
நீங்க அதிக இடைவெளி இல்லாம அடிக்கடி எழுதறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. \"

Priya, அதிக இடைவெளியில்லாமல் எழுதனும்னு தான் என்னோட ஆசை, பார்க்கலாம் அடுத்த பகுதியும் என்னால சீக்கிரம் பதிவிட முடியுதான்னு.

உங்கள் வருகைக்கும் , பாராட்டுக்களுக்கும் நன்றி ப்ரியா.

Divya said...

\" வெட்டிப்பயல் said...
//வெட்டி, ரமேஷ் ரம்யாவை அடிச்சபோ அவ மேல பரிதாபம் வரல உங்களுக்கு, //

சீனியர் ஜாலியா ஓட்றது எல்லா காலேஜ்லயும் நடக்கறதுதாங்க...

ஜாலியா பேசற பையனை அந்த மாதிரி நடந்துக்க வைச்சது உங்க ரம்யாதாங்க...

அப்படி என்னங்க பொறுக்கித்தனம் பண்ணான்? கைய பிடிச்சி இழுத்தான்னு சொன்னப்பக்கூட ஏன் இப்படி சொல்றனு தான் கேட்டான். பொறுக்கித்தனமா கைய பிடிச்சி இழுக்கலையே! \"

வெட்டி , விட்டா ரம்யா க்கு எதிரா ஒரு போர் கொடியே பிடிச்சிடுவீங்க போலிருக்கு,


\"ஆனா அந்த பொண்ணை அரைஞ்சியிருக்க வேண்டாம் :-(\"

இந்த கருத்து உங்கள் மென்மையான மனசை வெளிப்படுத்துகிறது.

Divya said...

\" ஜொள்ளுப்பாண்டி said...
ம்ம்ஹூம் ரமேஷ் சரியில்லை. ஆண் இனதிற்கே அவமானம் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரே ஒரு முறை கன்னதிலே செல்லமா தட்டுனதுக்கா இவ்ளோ பெரிய தண்டனை !! கதா கதைய மாத்து :))))))))))))))) \"

பளார்ன்னு கன்னதுல அரைகிறது உங்களுக்கு செல்லமா தட்டுறதா???

செல்லமா தட்டுறேன்னு எந்த பொண்ணு கன்னதையும் தட்டிடாதீங்க ஜொள்ளு, அவங்க திருப்பி செல்லமா பளார்னு தட்டிட போறாங்க.

வருகைக்கு நன்றி பாண்டி.

Divya said...

\" கப்பி பய said...
பாவம்ங்க ரமேஷ்!

அடுத்து? :) \"

ரமேஷ் மேல ரொம்ப இரக்கபடுறீங்க போலிருக்குது கப்பி??

அடுத்த பகுதி விரைவில்,
வருகைக்கு நன்றி கப்பி.

Divya said...

\"Dreamzz said...
kadhai arumaiyaaga pothunga!

neenga solnna madhiri, accident na , ellarum ponnunga support thaan! paavam pasanga...

mmm ini? \"

Dreamz, உங்கள் பாராட்டுகளூக்கு நன்றி.

சீக்கிரத்தில் அடுத்த பகுதியை எதிர்பார்க்கலாம்.

Anonymous said...

இப்ப தான் 1-4 எல்லா பகுதியையும் படிச்சேன். ரொம்ப நல்லா போகுதுங்க. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் சஸ்பென்ஸ் வச்சு முடிக்கிறீங்களே... அடுத்தப் பகுதி எப்போங்க??

-விநய்

கோபிநாத் said...

திவ்யா கலக்கலயிருக்கு "கலாட்டா'
\\இன்னிக்கு இப்படி அரஞ்சுட்டேனே' என ஃபீல் பண்ணினான் ரமேஷ்.\\

ஃபீலிங் ஆராம்பிச்சுடுச்சு டேய் இனி....

\\" ஒழுங்கு மரியாதையா என் வண்டிய சரி பண்ணி கொடுங்க, அப்பதான் உங்க பைக் சாவி தருவேன்" என்ரு ரம்யா மிரட்ட, அவளது சப்போர்ட் கூட்டமும் பலமாக ஆமோதித்தது.\\

நீங்கல்லாம் எங்கயிருந்து தட வாரிங்க...

Divya said...

\"Anonymous said...
இப்ப தான் 1-4 எல்லா பகுதியையும் படிச்சேன். ரொம்ப நல்லா போகுதுங்க. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் சஸ்பென்ஸ் வச்சு முடிக்கிறீங்களே... அடுத்தப் பகுதி எப்போங்க??

-விநய் \"

விநய், பொறுமையாக 4 கலாட்டாவையும் ஒன்றாக படித்தமைக்கு நன்றி.

அடுத்த பகுதி விரைவில்......

Divya said...

\கோபிநாத் said...
திவ்யா கலக்கலயிருக்கு "கலாட்டா'
\\இன்னிக்கு இப்படி அரஞ்சுட்டேனே' என ஃபீல் பண்ணினான் ரமேஷ்.\\

ஃபீலிங் ஆராம்பிச்சுடுச்சு டேய் இனி....

\\" ஒழுங்கு மரியாதையா என் வண்டிய சரி பண்ணி கொடுங்க, அப்பதான் உங்க பைக் சாவி தருவேன்" என்ரு ரம்யா மிரட்ட, அவளது சப்போர்ட் கூட்டமும் பலமாக ஆமோதித்தது.\\

நீங்கல்லாம் எங்கயிருந்து தட வாரிங்க...
"\"

கோபிநாத், எங்கிருந்தாலும் கரக்ட்டா 'அவங்க' வந்திடுவாங்க,

ரமேஷ் ரம்யா வை நல்லா அரஞ்சிட்டு இப்போ ஃபீல் மட்டும் பண்ணினா எல்லாம் சரியா போய்டுமா??
பொறுத்திருந்து பாருங்க...ஃபீலிங் எப்படி போகுதுன்னு.

வருகைக்கு நன்றி கோபிநாத்.

Adiya said...

violent inna Violent illa.. ;) athu vanthu readers digest ... author ikku puriyathu. :)

Divya said...

\" Adiya said...
violent inna Violent illa.. ;) athu vanthu readers digest ... author ikku puriyathu. :) \"

Readers க்கு மட்டுமே புரிகிற violence ஆ??? அதென்ன???

Arunkumar said...

கதை செம்ம interesting-ஆ போகுது... இந்த பதிவ சீக்கிரம் போட்ட மாதிரி அடுத்ததையும் சீக்கிரம் போட்ருங்க..சஸ்பென்ஸ் தாங்கல :(

//
கையில் ஏற்பட்ட சீராய்ப்பில் இருந்து வழிந்த ரத்தத்தின் சிவப்பு நிறத்தை விட ரம்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது.
//

எங்கயோ போய்ட்டீங்க திவ்யா :)
எழுத்து நடை சூப்பர்.

Adiya said...

athu Author digest innum oru book eruku :) PJ eppadi

Divya said...

\"Arunkumar said...
கதை செம்ம interesting-ஆ போகுது... இந்த பதிவ சீக்கிரம் போட்ட மாதிரி அடுத்ததையும் சீக்கிரம் போட்ருங்க..சஸ்பென்ஸ் தாங்கல :(

//
கையில் ஏற்பட்ட சீராய்ப்பில் இருந்து வழிந்த ரத்தத்தின் சிவப்பு நிறத்தை விட ரம்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது.
//

எங்கயோ போய்ட்டீங்க திவ்யா :)
எழுத்து நடை சூப்பர். \"

நன்றி அருண்,

அடுத்த பகுதி திங்கள் கிழமை பதிவிடுகிறேன், அதையும் படிச்சுட்டு உங்க கருத்து சொல்லுங்க அருண்!

Divya said...

\" Adiya said...
athu Author digest innum oru book eruku :) PJ eppadi \"

'Reader's digest ' மட்டும் தான் எனக்கு தெரியும் Adiya,
உங்க மூலமா 'Author digest ' யும் தெரிந்துக் கொண்டேன், நன்றி!

Machi said...

//\" ஜொள்ளுப்பாண்டி said...
ம்ம்ஹூம் ரமேஷ் சரியில்லை. ஆண் இனதிற்கே அவமானம் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரே ஒரு முறை கன்னதிலே செல்லமா தட்டுனதுக்கா இவ்ளோ பெரிய தண்டனை !! கதா கதைய மாத்து :))))))))))))))) \"

பளார்ன்னு கன்னதுல அரைகிறது உங்களுக்கு செல்லமா தட்டுறதா???

செல்லமா தட்டுறேன்னு எந்த பொண்ணு கன்னதையும் தட்டிடாதீங்க ஜொள்ளு, அவங்க திருப்பி செல்லமா பளார்னு தட்டிட போறாங்க.

வருகைக்கு நன்றி பாண்டி.//

ஹி ஹி தப்பா எடுத்துக்காதீங்க, ஜொள்ளு திருவில்லிப்புத்தூர் காரரு நம்ம மறைந்த தாமரைக்கனிக்கு உறவுக்காரரு. ரத்தம் வர மாதிரி அடிச்சுப்புட்டு அன்பா தட்டுனேன் என்பார். :-((

கதை நல்லா விறுவிறுப்பா போகுதுங்க

Divya said...

\" குறும்பன் said...
ஹி ஹி தப்பா எடுத்துக்காதீங்க, ஜொள்ளு திருவில்லிப்புத்தூர் காரரு நம்ம மறைந்த தாமரைக்கனிக்கு உறவுக்காரரு. ரத்தம் வர மாதிரி அடிச்சுப்புட்டு அன்பா தட்டுனேன் என்பார். :-((

குறும்பன் , ஜொள்ளு யாருக்கு உறவுகாரர்ன்னு இப்போ புரிஞ்சுப் போச்சுங்க,

\"கதை நல்லா விறுவிறுப்பா போகுதுங்க \"


உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி குறும்பன்.

அரை பிளேடு said...

ரமேஷூ,

அது திமிரு புட்ச பொண்ணுதான், நான் இல்லன்னு சொல்லல, இருந்தாலும் நீ கைநீட்டி அடிச்சி இருக்க கூடாதுபா...

பரவாயில்ல, பண்ணத பண்ணிட்டே...

இதுக்கு மேல அந்த பொண்ணாண்ட வம்புக்கு போவாத..

இந்த காலத்துல பொம்பள புள்ளங்கள்லாம் இப்பிடிதான் அடங்காபிடாரியா திரிவாங்க.. எப்பிடியும் அவங்கள ஒருத்தன் கல்யாணம் பண்ணிப்பான்..

நாமதான் ஆம்பள புள்ளய லட்சணமா, அடக்க ஒடுக்கமா இருக்கணும்.. பிரியுதா... அப்பதான் வாய்க்கையில முன்னேற முடியும்.. உனக்கு எவ்ளோ கடம கீது.. புள்ள நல்லா படிச்சு வேலைக்கு போவான்.. சம்பாதிப்பான்.. காப்பாத்துவான்னு பெத்தவங்க உம்மேல எவ்ளோ நம்பிக்க வெச்சு இருக்காங்க... அத்த போட்டு உடைக்கலாமா ராசா..

வேண்டாம்பா... இந்த பொண்ணுங்களோட வம்பே நமக்கு வேணாம்..
நல்ல புள்ளயா இருந்துக்கப்பா...

Divya said...

\" அரை பிளேடு said...
ரமேஷூ,

அது திமிரு புட்ச பொண்ணுதான், நான் இல்லன்னு சொல்லல, இருந்தாலும் நீ கைநீட்டி அடிச்சி இருக்க கூடாதுபா...

பரவாயில்ல, பண்ணத பண்ணிட்டே...

இதுக்கு மேல அந்த பொண்ணாண்ட வம்புக்கு போவாத..

இந்த காலத்துல பொம்பள புள்ளங்கள்லாம் இப்பிடிதான் அடங்காபிடாரியா திரிவாங்க.. எப்பிடியும் அவங்கள ஒருத்தன் கல்யாணம் பண்ணிப்பான்..

நாமதான் ஆம்பள புள்ளய லட்சணமா, அடக்க ஒடுக்கமா இருக்கணும்.. பிரியுதா... அப்பதான் வாய்க்கையில முன்னேற முடியும்.. உனக்கு எவ்ளோ கடம கீது.. புள்ள நல்லா படிச்சு வேலைக்கு போவான்.. சம்பாதிப்பான்.. காப்பாத்துவான்னு பெத்தவங்க உம்மேல எவ்ளோ நம்பிக்க வெச்சு இருக்காங்க... அத்த போட்டு உடைக்கலாமா ராசா..

வேண்டாம்பா... இந்த பொண்ணுங்களோட வம்பே நமக்கு வேணாம்..
நல்ல புள்ளயா இருந்துக்கப்பா... \"

பிளேடு, பின்னூட்டத்தில் ரமேஷ் க்கு நீங்க கொடுத்த அனுபவபூர்வமான ஆலோசனைகளை ஒரு தனி பதிவாவே போட்றலாம் போலிருக்குது!

Anonymous said...

அடேடே என்னது எல்லோரும் ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு சஸ்பென்ஸ் வைக்கீறீங்க ... நல்லாத்தான் கதை விடறீங்க .. சாரி கதை எழுதறீங்க

Anonymous said...

அட..அட...அப்படித்தான் போய்கிட்டிருக்கு கத்த.......
சும்மா சொல்லக்கூடாது, சூப்பரு!
படு ஸ்பீடா போய்கிட்டிருந்த கதை படியில் போய் முட்டியிருக்கிறது!
இனி படிப்படியா கதையை படிக்கவேண்டியதுதான் மிச்சம்!
எழுதினாத்தானே அது சாத்தியம்!
எழுதுங்கப்பா..எழுதுங்க! சும்மா இந்த கதையையாவது, சித்தி சீரியல் மாதிரி கொண்டுபோங்க வேண்டும் என்றால் சொல்லுங்க விளம்பரங்கள் வாங்கித் தருகிறேன்!
அடுத்த பதிவுவரை ஆவலுடன் காத்திருக்கும் அன்பர்களில் அடியேனும்....

Divya said...

\"சுப்பு said...
அடேடே என்னது எல்லோரும் ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு சஸ்பென்ஸ் வைக்கீறீங்க ... நல்லாத்தான் கதை விடறீங்க .. சாரி கதை எழுதறீங்க \"

சுப்பு வருகைக்கு நன்றி.
தொடர் கதை சஸ்பன்ஸோட எழுதினா தானே சுவாரஸ்யமாயிருக்கும்?

Divya said...

\" பிரியமுடன் பிரேம் said...
அட..அட...அப்படித்தான் போய்கிட்டிருக்கு கத்த.......
சும்மா சொல்லக்கூடாது, சூப்பரு!
படு ஸ்பீடா போய்கிட்டிருந்த கதை படியில் போய் முட்டியிருக்கிறது!
இனி படிப்படியா கதையை படிக்கவேண்டியதுதான் மிச்சம்!
எழுதினாத்தானே அது சாத்தியம்!
எழுதுங்கப்பா..எழுதுங்க! சும்மா இந்த கதையையாவது, சித்தி சீரியல் மாதிரி கொண்டுபோங்க வேண்டும் என்றால் சொல்லுங்க விளம்பரங்கள் வாங்கித் தருகிறேன்!
அடுத்த பதிவுவரை ஆவலுடன் காத்திருக்கும் அன்பர்களில் அடியேனும்.... \"

என்ன பிரேம் சினிமா எடுக்கிற ஆசை போய் இப்போ சிரீயல் எடுக்க ஆசை வந்துடுச்சா???

அடுத்த பகுதியையும் படித்துவிட்டு கருத்துக் கூறுங்கள்.
நன்றி பிரேம்.

Anonymous said...

நல்ல வைக்கிறீங்கப்பா சஸ்பென்ச ...

waiting for next post

இராம்/Raam said...

அப்பாடா இன்னிக்கு ஒரு 50 அடிச்சாச்சு... :)

Divya said...

\" மணி ப்ரகாஷ் said...
நல்ல வைக்கிறீங்கப்பா சஸ்பென்ச ...

waiting for next post
\"

மணி ப்ரகாஷ் வருகைக்கு நன்றி!

Divya said...

\" ராம் said...
அப்பாடா இன்னிக்கு ஒரு 50 அடிச்சாச்சு... :)\"

50 அடிச்சுடீங்க கலாட்டா -4 க்கு, அப்படியே கலாட்டா - 6 க்கு 100 அடிச்சிருங்க ராம்!

சீனு said...

aduttha mooodala...hmm nalla than poguthu kathai...

JSTHEONE said...

good flow... nice narration...:)