December 06, 2006

கல்லூரி கலாட்டா - 3கலாட்டா -1
கலாட்டா -2

மதிய உணவு இடைவேளையின் போது, இரண்டாம் ஆண்டு உமா, மூன்று ரோஜாக்களையும் தேடி வந்தாள்.

"ரம்யா, அடுத்த வாரம் ' தாங்கியூ பார்டி' ய ஃபர்ஸ்ட் இயர்ஸ் ஹோஸ்ட் பண்றது பத்தி உன்கிட்ட பேசனுமாம், அதனால ஃபைனல் இயர் ரமேஷ் உன்ன இன்னிக்கு ஈவினிங் நாலு மணிக்கு கம்பியூட்டர் லேபுக்கு வர சொன்னாங்க" என்று அதிகார தோனியில் சொல்லிவிட்டு சென்றாள்.

"என்னடி இது வம்பாயிருக்கு, இவங்களா ஒரு 'வெல்கம் பார்ட்டி ' கொடுப்பாங்களாம், அப்புறம் நாம இவனுங்களுக்கு ' தாங்கியூ பார்ட்டி' தரணுமாம், யாரு கேட்டா இவனுங்ககிட்ட எங்களையெல்லாம் 'வெல்கம்' பண்ணுங்கன்னு, வேற வேலையே இல்லையா" என்று எரிச்சல் அடைந்தாள் ரம்யா.

" அது வேற ஒன்னுமில்ல ரம்ஸ், நேத்து வெல்கம் பார்ட்டில நீ அப்பிரானியாட்டம் பவ்யிமா ஆ
க்ட்விட்டியா , அது நடிப்புனு தெரியாமல் பாவம் பையன் உன்னை 'தாங்கியூ' பார்ட்டி ஆர்கனைஸ் பண்ண சொல்லப்போறான் போலிருக்கு, என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிடு நீ செய்வ , நல்ல புள்ளைன்னு தப்பு கணக்கு போட்டுடானோ??" என்று கலாய்த்தாள் ஷீத்தல்.

" சரி, ' கோகுலத்து கண்ணனை' சாயந்திரம் மூனு பேருமா சேர்ந்து போய் பார்த்திடுவோம் , நாம எங்க, என்னைக்கு தனியா போயிருக்கிறோம் " என்றாள் பவானி.

சாயந்திரம் 4 மணிக்கு மூவரும் மெதுவாக கம்பியூட்டர் லேபிற்குச் சென்றார்கள். அங்கு நாலு ஐந்து பேர் ஆளுக்கு ஒரு கம்பியூட்டரில் மானிடரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரிசையில் ஒரு ஓரத்து கம்பியூட்டரில் ரமேஷ் இருப்பதை கண்டு மூவரும் அங்கு சென்றனர்.

மூவரும் அருகில் வந்ததும் நிமிர்ந்துப் பார்த்த ரமேஷ்" உங்க மூனு பேரோட பெயரும் ரம்யாவா?? நான் ரம்யாவை மட்டும் தானே வர சொன்னேன், அதென்ன தொடுக்கு புடிச்சுக்கிட்டு கூட நீங்க ரெண்டு பேரும்?" என்று கடு கடுப்புடன் கூற, ஷீத்தலும் , பவானியும் ரம்யாவிற்க்கு கண்ணசைத்து விட்டு ரோஷத்துடன் வெளியேறினார்கள்.

அவர்கள் இருவரும் சென்று வெகு நேரம் ஆகியும் ரமேஷ் கம்பியூட்டரில் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

'வரச்சொல்லிட்டு, இவன் பாட்டுக்கு கம்பியூட்டர்ல ஏதோ டைப் பண்ணிட்டே இருக்கிறான்' என்று எரிச்சலடைந்த ரம்யா, தொண்டையை செறுமினாள் , தான் காத்திருப்பதை அவனுக்கு உணர்த்த.

நிமிர்ந்து என்ன என்பது போல் பார்த்தான் ரமேஷ்,
" நான்...........வந்து..........ரொம்ப.......நேரமா......"என்று அவள் கூறி முடிக்கும் முன்
" கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினா ஒன்னும் தப்பில்ல, வெயிட் பண்ணு' என்று கூறி விட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

ஆத்திரமும் கோபமும் முட்டி கொண்டு வந்தது ரம்யாவிற்கு, அதனை வெளிகாட்டாமல் முகபாவத்தை வழக்கம் போல் மெயின்டேன் பண்ணினாள்.

' கோகுலத்து கண்ணனுக்கு என்னாச்சு இன்னிக்கு , நேத்து கல கலன்னு பேசிட்டு கடலை போட்டுட்டு இருந்தான் செமினார் ஹால்ல, இன்னைக்கு ஏன் இஞ்சி தின்ன குரங்காட்டம் மூஞ்சி வைச்சிருக்கான், ஒரு வேளை ராதைகள் சுற்றி சூள குழுமியிருந்தா தான் நார்மலா இருப்பானோ??' என யோசித்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

கம்பியூட்டர் லேபிலிருந்து அனைவரும் சென்று விட்டனர் என்று உர்ஜிதம் செய்தபின், மெதுவாக தன் இருக்கையிலிருந்து எழுந்தான் ரமேஷ்.

" அடுத்த வாரம் , ஃபர்ஸ்ட் இயர்ஸ் சீனியர்களுக்கு ' தாங்கியூ பார்ட்டி' கொடுக்கனும், இது நம்ம டிபார்ட்மெண்ட் வழக்கம், ஸோ அதை நீ தான் ஆர்கனைஸ் பண்ண போற" என்றான் ரம்யாவிடம்.

" என்..........னது.............நா...............னா..............,அது.......வந்து........" என்று ரம்யா இழுக்க,

" ஏய், நிறுத்து, அதென்ன வடக்கத்து நடிகை தமிழ்ல பேட்டி கொடுக்கிறாப்ல, தமிழ்ல இந்த இழு இழுக்கிற, தமிழும் சரியா தெரியாதா உனக்கு??" என்றான் ரமேஷ்.

" இல்ல, தமிழ் ..எனக்கு......நல்லா .....தெரியும்" என திக்கி தினறி கூறி முடித்தாள் .

" அப்போ , இங்கிலீஷ் கத்துக்க தான் ' ரெபிடெக்ஸ்' வேணுமாக்கும்" என்றான் டக்கென்று.

" என்னது.............." திகைத்துப் போனாள் ரம்யா.
ரமேஷின் முகதிலிருந்த அசட்டு சிரிப்பு அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது , அவள் பேசியது அனைத்தையும் இவன் தெரிந்துக் கொண்டுவிட்டான் என்று.

இனிமேலும் இவன் கிட்ட அப்பிரானி வேஷம் போட்டா வேலைக்கு ஆகாது என்று முடிவு பண்ணி, முகத்தில் உண்மையான கோபத்துடன் ரமேஷை முறைத்தாள்.

" என்ன முறைக்கிற, எவ்வளவு கொழுப்பிருந்தா என்னையே லூசுன்னு சொல்லுவ நீ" என்று கத்தினான் ரமேஷ்.

" சே, இன்டீசன்ட் ஃபெல்லோ, இப்படி ஒட்டுக் கேட்டுட்டு, அதை பற்றி கேட்க தான் தனியா கூப்பிடீங்களா, அசிங்கமாயில்ல" என்று ரம்யா குரலை உயர்த்தினாள்.

" ஏய், என்ன குரல் கொடுக்கிற, அடிச்சேனா பல்லு கில்லு எல்லாம் பேர்ந்திடும், ஜாக்கிரதை" என்று பதிலுக்கு அவனும் கத்தினான்.

"ஹலோ, உங்க ஆஃபிஷியல் ராகிங் கூட நேத்தே முடிஞ்சுப் போச்சு, இப்போ ரொம்ப கத்தினீங்க, ராகிங் பண்ணினீங்கன்னு ரிபோர்ட் பண்ணிடுவேன், என்ன தண்டனை கிடைக்கும் ராகிங் பண்ணினான்னு தெரியும் இல்ல" என்று எரிமலையாக வெடித்தாள் ரம்யா.

" இந்த பூச்சாண்டி வேலைக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்டி" என்று அவனும் பதிலுக்கு கத்தினான்.

" என்னது ' டி' போட்டு பேசுறீங்க, கண்டிப்பா உங்களை நான் ரிப்போர்ட் பண்ணத்தான் போறேன், சும்மா ராகிங்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன், கம்பியூட்டர் லேபிற்க்கு தனியா வர சொல்லி, என் கை பிடிச்சு இழுத்தான், கால் பிடிச்சு இழுத்தான்னு ரிப்போர்ட் பண்ணுவேன் பாரு" என்று தெளிவான முடிவோடு கூறினாள்.

" அடச்சீ, வெட்கமா இல்ல உனக்கு இப்படி சொல்ல, நீ இப்படி ரிப்போர்ட் பண்ணினா உனக்குத் தான்டி அசிங்கம்" என்றான் ரமேஷ்,

" அதைபத்தி எல்லாம் எனக்கு கவலையில்ல , நீ பொறுக்கின்னு ஊருக்கு தெரிஞ்சிடும், அது போதும்" என்றாள் ரம்யா முகத்தை திருப்பி கொண்டு.

' பொறுக்கி' என்ற வார்த்தையை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் ரமேஷ்.
" என்ன என்னன்னு சொன்ன..........." என்று ரமேஷ் ஆக்ரோஷமாக கேட்க

அவனை நேருக்கு நேராக பார்த்து
" பொறுக்கி" என சத்தமாக கூறினாள் ரம்யா.

பளார் என ஒரு அரைவிட்டான் ரமேஷ், " அம்மா" என்று அலறிய ரம்யா................

[தொடரும்]

கல்லூரி கலாட்டா - 4

கல்லூரி கலாட்டா - 5

கல்லூரி கலாட்டா - 6

49 comments:

said...

என்னங்க இது! கலாட்டான்னு சொல்லிட்டு கை கலப்புல போய் முடியுது!

அடப்பாவமே! ரொம்ப வலிச்சுதா(மா)?

Anonymous said...

நல்ல திருப்பம்.

காதல் மோதல்லதான் ஆரம்பிக்கும், நம்ம வெட்டிப்பயல் 'நெல்லிக்காய்' மாதிரி. :)

said...

முதல்ல வருகை பதிவு..அப்புறமா படிச்சுட்டு ஒரு பின்னூட்டம்ங்க திவ்யா

said...

\" நாமக்கல் சிபி said...
என்னங்க இது! கலாட்டான்னு சொல்லிட்டு கை கலப்புல போய் முடியுது!

அடப்பாவமே! ரொம்ப வலிச்சுதா(மா)? \"

வலிச்சுதா இல்லீயான்னு ரம்யா கிட்ட கேட்டு சொல்றேன் சிபி,

வருகைக்கு நன்றி.

said...

\"ஜி said...
நல்ல திருப்பம்.

காதல் மோதல்லதான் ஆரம்பிக்கும், நம்ம வெட்டிப்பயல் 'நெல்லிக்காய்' மாதிரி. :) \"

வருகைக்கு நன்றி ஜி.

said...

\" மு.கார்த்திகேயன் said...
முதல்ல வருகை பதிவு..அப்புறமா படிச்சுட்டு ஒரு பின்னூட்டம்ங்க திவ்யா \"

attendence mark பண்ணிட்டேன் கார்த்திக்,
சீக்கிரம் கதை படிச்சுட்டு attendence தரலீனா, கடைசி பெஞ்சில நிக்கனும், சொல்லிட்டேன்.

said...

சூடா போய்க்கிட்டு இருக்கு !!!!

said...

\" செந்தழல் ரவி said...
சூடா போய்க்கிட்டு இருக்கு !!!!\"

வருகைக்கு நன்றி ரவி

said...

திவ்யாக்கா :)) கலாட்டாவா போய்கிட்டு இருக்கு உங்க கல்லூரி கதை. ஆமா சரக்கு நெறையா இருக்கும் போல ? கலக்குங்க. :)))

said...

hi divya!!
Kadai nalla thaan poguthu... vazhtukal...
Parkalam.. enna mudiva irunthalum engaluku santhoshame...
Vetti sonna mathiri engalukaga ungaloda karpanai ellam matha vendam... Avarku modal kadal mudiyanamnu iruku pola iruku.. andha asaiya kedupane

said...

\"jvenga said...
Hai Divya,

The story is going very intersting. Carry on.

My Best wishes. \"

jvenga உங்கள் வருகைக்கும் , ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

said...

\" ஜொள்ளுப்பாண்டி said...
திவ்யாக்கா :)) கலாட்டாவா போய்கிட்டு இருக்கு உங்க கல்லூரி கதை. ஆமா சரக்கு நெறையா இருக்கும் போல ? கலக்குங்க. :))) \"

பாண்டி தம்பி, கதையை ஒழுங்கா படிக்கனும், அது மூன்று கல்லூரி பெண்களின் கதை - என் கற்பனை கதை.
[ தம்பி , சரக்கு கிரக்குன்னு எல்லாம் திவ்யாக்கா பதிவுல வந்து பேசப்பிடாது, புரியுதோ?]

said...

\"dubukudisciple said...
hi divya!!
Kadai nalla thaan poguthu... vazhtukal...
Parkalam.. enna mudiva irunthalum engaluku santhoshame...
Vetti sonna mathiri engalukaga ungaloda karpanai ellam matha vendam... Avarku modal kadal mudiyanamnu iruku pola iruku.. andha asaiya kedupane\"

டுபுக்கு டிஸைப்பிள், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி,

மோதலா, காதலா என்று பொறுத்திருந்து பாருங்கள்.

Anonymous said...

அப்புறம்...

said...

\"பெத்த ராயுடு said...
அப்புறம்\'

பெத்த ராயுடு, அப்புறம் அடுத்த பாகத்தில்..........
வருகைக்கு நன்றி!

Anonymous said...

இங்கே கதை போகிற வேகத்தைவிட
கதாநாயகிகளின் வயது இவ்வளவு வேகமா போய்கிட்டு இருக்கு!
அடுத்த episode க்கு, கிழவிகள் புகைபடம் ரெடியாகிவிட்டதா இல்லையா? ஆனால் நல்ல முயற்ச்சி திவ்யா.. புகைபடங்கள் மூலம் கதையின் வளர்ச்சி குறிப்பாக உணர்த்தியிருக்கிறீர்கள்!
அதுசரி, என்ன கதை ஒருமாதிரி நல்லாவே போய்கிட்டிருக்கு! என்னதான் நடக்கும்னு பார்ப்போம்!
தமிழ் சினிமா அதிகம் பார்பதுண்டா?
நம்ம ஊர் பெண்களை அடிச்சா மட்டும்தான் காதல் வரும்... வேற ஊர் பெண்களை அடிச்சா 'காவல்' தான் வரும்! அதனால்தான் அடிக்க ஆண்கள் கை நீட்டுகிறார்கள்... அது என்ன பாத்தது அடிப்பது? மாட்டினான் மவன்.....

said...

கதைக் கலக்கலாப் போகுதும்மா.. அடுத்தப் பகுதிக்கான எதிர்பார்ப்பை அருமையா ஏற்படுத்தியிருக்கீங்க:)

said...

திவ்யா, கலக்கல். அப்படியே காலேஜ்ல நடக்கற மாதிரி இருக்கு. தொரருங்கள்.

Anonymous said...

Adutha paagathukku aavalai iruken ;)

said...

//. Avarku modal kadal mudiyanamnu iruku pola iruku.. andha asaiya kedupane\"//

ஐயய்யோ அப்படியெல்லாம் சத்தியமா இல்லைங்க...

அவுங்க எப்படி கதைய கொண்டு போறாங்கனு பார்க்கத்தான் நான் ஆசைப்படறேன்...

பின்னாடி படிச்சிப்பார்க்கும் போது நமக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கும்...

என்னோட ஒரு கதை எல்லாம் சொல்றாங்கனு சீக்கிரம் முடிச்சி பின்னாடி ரொம்ப வருத்தப்பட்டேன்...

அதனாலத்தான் சொல்றேன். நம்ம கதைல அடுத்தவங்க கை வைக்க விடக்கூடாது.

நான் யாருக்காவது இந்த மாதிரி ஐடியா கொடுத்தாக்கூட அப்படியே பின்பற்றாதீங்கனுதான் சொல்லுவேன் :-)

said...

கதை அருமையா பொகுதுங்க...

எல்லார் மாதிரியும் நானும் வெயிட்டிங் :-)

said...

Hello என்ன எப்படி பன்னுரிங
பாவம்பா 'beer ramya'.இப்பொ ஆவுஇஙல Rum(s) Ramya மாதிடிங அப்புரம் என்ன இன்னா ஒரு Kargil War create Pannurigna. காதல் இன்னா மோதல் இருகனும் :) எப்பொ பர்ட் 4 varum :)

Anonymous said...

enga...indha kadhaila ramya thaan adi ellam vaanganumaa..pavunga ramya... avala vittudunga! LOL


kadhai nalla pothu.. but adutha storyla ramya thirumbi adipaala? che..ithula computer lab vera..shoe/seruppu irukaathu.. what a pity ROFL

said...

\" பிரியமுடன் பிரேம் said...
இங்கே கதை போகிற வேகத்தைவிட
கதாநாயகிகளின் வயது இவ்வளவு வேகமா போய்கிட்டு இருக்கு!
அடுத்த episode க்கு, கிழவிகள் புகைபடம் ரெடியாகிவிட்டதா இல்லையா? ஆனால் நல்ல முயற்ச்சி திவ்யா.. புகைபடங்கள் மூலம் கதையின் வளர்ச்சி குறிப்பாக உணர்த்தியிருக்கிறீர்கள்!
அதுசரி, என்ன கதை ஒருமாதிரி நல்லாவே போய்கிட்டிருக்கு! என்னதான் நடக்கும்னு பார்ப்போம்!
தமிழ் சினிமா அதிகம் பார்பதுண்டா?
நம்ம ஊர் பெண்களை அடிச்சா மட்டும்தான் காதல் வரும்... வேற ஊர் பெண்களை அடிச்சா 'காவல்' தான் வரும்! அதனால்தான் அடிக்க ஆண்கள் கை நீட்டுகிறார்கள்... அது என்ன பாத்தது அடிப்பது? மாட்டினான் மவன்..... \"

வருகைக்கு நன்றி பிரேம்,
மாட்டினான் மவன் என்று ரம்யா விற்க்கு சப்போர்ட் பண்ணும் ஒரே ஆள் நீங்க தான் பிரேம்,
[ பதிவில் போடும் படங்கள் கதைக்காக கூக்கூளாண்டவர் தந்தது]

said...

\" தேவ் | Dev said...
கதைக் கலக்கலாப் போகுதும்மா.. அடுத்தப் பகுதிக்கான எதிர்பார்ப்பை அருமையா ஏற்படுத்தியிருக்கீங்க:) \"

வருகைக்கும் , ஊக்கத்திற்க்கும் மிக்க நன்றி தேவ்.

said...

\" Priya said...
திவ்யா, கலக்கல். அப்படியே காலேஜ்ல நடக்கற மாதிரி இருக்கு. தொரருங்கள்\"

நன்றி ப்ரியா, தொடருகிறேன் என் தொடரை.....

said...

\"C.M.HANIFF said...
Adutha paagathukku aavalai iruken ;)\'

அடுத்த பாகம் விரைவில் ஹனிஃப்.

said...

\" வெட்டிப்பயல் said...
கதை அருமையா பொகுதுங்க...

எல்லார் மாதிரியும் நானும் வெயிட்டிங் :-) \"

நன்றி வெட்டி,

said...

\" Adiya said...
Hello என்ன எப்படி பன்னுரிங
பாவம்பா 'beer ramya'.இப்பொ ஆவுஇஙல Rum(s) Ramya மாதிடிங அப்புரம் என்ன இன்னா ஒரு Kargil War create Pannurigna. காதல் இன்னா மோதல் இருகனும் :) எப்பொ பர்ட் 4 varum :) \"

பீர் ரம்யா மேல இரக்கமா, இல்ல நக்கலா??
பார்ட் 4 விரைவில்...
நன்றி Adiya!

said...

\"Dreamzz said...
enga...indha kadhaila ramya thaan adi ellam vaanganumaa..pavunga ramya... avala vittudunga! LOL


kadhai nalla pothu.. but adutha storyla ramya thirumbi adipaala? che..ithula computer lab vera..shoe/seruppu irukaathu.. what a pity ROFL \"

ரம்யா அடி வாங்கினா ஏன் உங்களுக்கு கஷ்டமாயிருக்குதுன்னு புரியுது Dreamz!
விட்டா ரம்யா கைல ஷூ, செறுப்பு எல்லாம் எடுத்து கொடுத்து, ரமேஷ அடின்னு சொல்லிடுவீங்க போலிருக்கு?

said...

கல்லூரி கலாட்டாவின் தொடர்ச்சியை இன்று எதிர்பார்க்கலாமா?

said...

\" நாமக்கல் சிபி said...
கல்லூரி கலாட்டாவின் தொடர்ச்சியை இன்று எதிர்பார்க்கலாமா? \"

உங்கள் எதிர்பார்பிற்கு நன்றி சிபி,
சீக்கிரம் அடுத்த கலாட்டா பதிவிட முயற்ச்சிக்கிறேன்.

said...

எனக்கு என்னவோ, உண்மையான "கலாட்டா" இப்ப தான் ஆரம்பிக்கிற மாதிரி தொரியுது. சிக்கிரம் அடுத்த பதிவை போட்டுங்க இல்லன்னா நண்பர் பிரேம் சொல்வது போல "காதலா" "காவலா"ன்னு பட்டிமன்றம் எல்லாம் நடக்கும்.

said...

\"கோபிநாத் said...
எனக்கு என்னவோ, உண்மையான "கலாட்டா" இப்ப தான் ஆரம்பிக்கிற மாதிரி தொரியுது. சிக்கிரம் அடுத்த பதிவை போட்டுங்க இல்லன்னா நண்பர் பிரேம் சொல்வது போல "காதலா" "காவலா"ன்னு பட்டிமன்றம் எல்லாம் நடக்கும். \"

நன்றி கோபிநாத்.
அடுத்த கலாட்டா விரைவில்....
அதையும் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க கோபிநாத்.

Anonymous said...

//ரம்யா அடி வாங்கினா ஏன் உங்களுக்கு கஷ்டமாயிருக்குதுன்னு புரியுது Dreamz!//


enna puriyuthu enru sonnal konjam nalla irukkum... etho onnu purinja sari...

paavam ramya!

said...

\"Dreamzz said...
//ரம்யா அடி வாங்கினா ஏன் உங்களுக்கு கஷ்டமாயிருக்குதுன்னு புரியுது Dreamz!//


enna puriyuthu enru sonnal konjam nalla irukkum... etho onnu purinja sari...

paavam ramya! \"என்ன புரிஞ்சது, எப்படி எனக்கு புரிஞ்சுதுன்னு இதை படிச்சா உங்களுக்கு புரியும் dreamz
\"one among u said...
ada divya...nalla kadhai pogudhu...

n unga kadhaila vara madiri nan nettachi ellam kidayadhu..kutty than adhan en peru kutty ponnu..n oru similarity unga characterkum enakkum nanum vai pesama some times mathavangala erichal mootuven...but seriya kalaipen..

ipo theriyudha en peyar edhuendru... \"

said...

இது வன்முறை கதையா மென்முறை கதையா ?

:)

said...

கதை சூப்பரா போகுது திவ்யா. காலேஜ் வாழ்க்கை கண்முன்...

என்னடா இது. வெட்டி என்னடான்னா accident ஆக்குறாரு. இங்க என்னடான்னா அடிதடி. நல்லவேலை இந்த ஹீரோ பேரும் அருண் இல்ல !!!

சீக்கிரம் அடுத்தது போட்ருங்க :)

said...

\" Srikanth said...
இது வன்முறை கதையா மென்முறை கதையா ?

:)\"

வன்முறை கதையா, மென்முறை கதையா என்று பொறுத்திருந்து பாருங்கள் ஸ்ரீரிகாந்த்.

வருகைக்கு நன்றி.

said...

\"Arunkumar said...
கதை சூப்பரா போகுது திவ்யா. காலேஜ் வாழ்க்கை கண்முன்...

என்னடா இது. வெட்டி என்னடான்னா accident ஆக்குறாரு. இங்க என்னடான்னா அடிதடி. நல்லவேலை இந்த ஹீரோ பேரும் அருண் இல்ல !!!

சீக்கிரம் அடுத்தது போட்ருங்க :) \"

நன்றி அருண்,
அடுத்த பாகம் ரெடி, விரைவில் எதிர்பார்க்கலாம்!

Anonymous said...

என்ன இருந்தாலும் ஒரு பெண்ணை கை நீட்டி அடிப்பவன் ஆண்பிள்ளை இல்லையே!!!

said...

அடப்பாவமே! ரொம்ப வலிச்சுதா(மா)?

said...

\" தூயா said...
என்ன இருந்தாலும் ஒரு பெண்ணை கை நீட்டி அடிப்பவன் ஆண்பிள்ளை இல்லையே!!! \"

அப்படி சொல்லுங்க தூயா, கரக்ட்டா சொல்லிட்டீங்க.

வருகைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி தூயா!

said...

\" Udhayakumar said...
அடப்பாவமே! ரொம்ப வலிச்சுதா(மா)? \"

ஆஹா உதய், ரம்யா மேல என்னா ஒரு கரிசனை உங்களூக்கு,
ரம்யா க்கு வலிச்சுதா இல்லீயான்னு கேட்டு சொல்றேன் .

Anonymous said...

வணக்கம் திவ்யா,

இப்போதுதான்(நேற்று) உங்களது வலைப் பக்கத்தினை வாசித்திட நேர்ந்தது..

எல்லாமே கலக்கல். நேற்றே எனது முதல் comment a உங்களின் முதல் பதிவுக்கு இட்டேன்,,ஆனால் என்னால் அதை பார்க்க முடியவில்லை.

so again:

கலர்கலராய் வானவேடிக்கைகள்
வலைவானத்தில் (மனசுக்குள்)
மத்தாப்புகளுடன் திவ்யா.


வாழ்த்துகள்.

மற்ற பதிவுகளை படித்துவிட்டு
எனது எண்ணங்களுடன்...


கல்லூரி கலாட்டா
திரி இப்பத்தான் பத்தி இருக்கு...

nice one, your precentation is Gud.

said...

\" மணி ப்ரகாஷ் said...
வணக்கம் திவ்யா,

இப்போதுதான்(நேற்று) உங்களது வலைப் பக்கத்தினை வாசித்திட நேர்ந்தது..

எல்லாமே கலக்கல். நேற்றே எனது முதல் comment a உங்களின் முதல் பதிவுக்கு இட்டேன்,,ஆனால் என்னால் அதை பார்க்க முடியவில்லை.

so again:

கலர்கலராய் வானவேடிக்கைகள்
வலைவானத்தில் (மனசுக்குள்)
மத்தாப்புகளுடன் திவ்யா.


வாழ்த்துகள்.

மற்ற பதிவுகளை படித்துவிட்டு
எனது எண்ணங்களுடன்...


கல்லூரி கலாட்டா
திரி இப்பத்தான் பத்தி இருக்கு...

nice one, your precentation is Gud.\"

மணி ப்ரகாஷ், நேற்று நீங்க அனுப்பின வாழ்த்து பின்னூட்டம் கிடைத்தது, மிக்க நன்றி .

உங்கள் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் எனக்கு தரும் உற்சாகத்தை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை!

தொடர்ந்து என் பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறவும்.

said...

///
கோகுலத்து கண்ணனுக்கு என்னாச்சு இன்னிக்கு , நேத்து கல கலன்னு பேசிட்டு கடலை போட்டுட்டு இருந்தான் செமினார் ஹால்ல, இன்னைக்கு ஏன் இஞ்சி தின்ன குரங்காட்டம் மூஞ்சி வைச்சிருக்கான், ஒரு வேளை ராதைகள் சுற்றி சூள குழுமியிருந்தா தான் நார்மலா இருப்பானோ??' என யோசித்துக் கொண்டிருந்தாள் ரம்யா.
///

ethu ellam koncham over-ra theriyela....romba thimiru pidichaa kaluthaiyeaa iruppa poola...nalla vanginala...hmm ennanga kadaiyesaa kadhal-la mudinchedumaa kathai...parkerean..

said...

Pengalai Adippaadhai Nan vanmaiya kandikiren :-(

said...

palar araiyudan... nalla thirumunai... get back to u at 4th part... nice flow...:) g8