December 04, 2006

கல்லூரி கலாட்டா - 2


கலாட்டா-1

செமினார் ஹாலில் அனைவரும் குழுமியிருக்க, இறைவணக்கம் , பேராசிரியரின் உரை, சீனியர் மாணவர்களின் குறு நாடகம், தனிப் பாடல்கள் என நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. முதல் வருட மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொள்ள ஒவ்வொருவராக அட்டைவணைப்படி மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

ஷீத்தலின் முதற் பெயர் பபிதா என்பதால், அவளது பெயரும் , பவானியின் பெயரும் அட்டவணையில் முதல் வரிசையில் இருந்தது. முதல் 20 மாணவர்களின் அறிமுகம் வரை ஆசிரியர்கள் ஹாலில் இருந்தனர், அதனால் அவ்வளவாக கிண்டலும் கேலியும் செய்யாமல் சீனியர்கள் கேள்விகளைத் தொடுத்தனர்.

ரம்யாவின் முறை வந்த போது, கேள்விகனைகள் உச்ச நிலையில் இருந்தது. கொள்கையை கைவிடாமல் அப்பாவி முகத்துடன் தன் பெயர் அறிமுகம் செய்தாள் ரம்யா. பின் அவளிடம் கேள்விகள் கேட்க்கப்பட்டது.
பதில் கூறாமல் பேந்த பேந்த அவள் முழிப்பதை கண்ட ஒரு சீனியர்,

" டூ யூ நோ இங்கிலீஷ்?" என்று கேட்டான்,

'ஆமாம்' என்று தலையசைக்கிறாளா, ' இல்லை' என்று தலையசைக்கிறாளா என்று அவர்களுக்கு புரியாத வகையில் ரம்யா தலையசைக்க,
ஒரு மாணவன் " டேய், இங்கிலீஷ் தெரியாது போலிருக்குடா, தமிழ்ல கேளூங்க" என்றான்.

" நான் கேட்கிறேன் தமிழ்ல கேள்வி" என்று பின்வரிசையில் கடலை போட்டுக்கொண்டிருந்த ரமேஷ் முன் வரிசையில் வந்து அமர்ந்து , கேள்விகளைக் கேட்க அரம்பித்தான்.

மலங்க மலங்க முழிப்பதில் நான் யாருக்கும் சலித்தவள் அல்ல என நிரூபித்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

கடுப்பாகி போன 'கேள்விகள் குழு' போதும்டா சாமி இவக்கிட்ட கேள்வி கேட்டது என்று முடிவு செய்தது.

" அம்மா தாயே! உனக்கு நடக்கவாவது தெரியுமா?? அப்படியே மெதுவா நடந்து போய் ஒரு ஓரமா உட்காருமா" என்று கேலி செய்தனர்.'என்னையே கிண்டல் பண்றீங்களா, டுபாக்கூர் பசங்களா' என்று மனதில் திட்டிக்கொண்டே தன் இடத்தில் போய் அமர்ந்தாள் ரம்யா.

ஒருவழியாக ' வெல்கம் பார்ட்டி ' முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்றனர்.

சாயங்காலம் வகுப்புகள் முடிந்து அனைவரும் சென்றுவிட , முப்பெருந்தேவிகள் மூவரும் தங்கள் வகுப்பறைக்கு அருகில் இருக்கும் மாடிபடிகளில் வந்து அமர்ந்தனர். மேல்தளத்தில் இருக்கும் சீனியர் வகுப்புகள் அனைத்தும் சீக்கிரமே முடிவடைந்து விட்டதால் கட்டிடத்தில் யாருமே இல்லை. அதனால் தேவிகள் மூவரும் காலையில் நடந்த வெல்கம் பார்ட்டியை பற்றி உரையாட ஆரம்பித்தனர்...............

ஷீத்தல்: நல்ல வேளை பவானி, நம்ம ரெண்டு பேரோட டர்ன் வரப்போ ஹால்ல டிபார்ட்மெண்ட் ஸ்டாஃப்ஸ் இருந்ததால நிறைய கேள்விகள் கேட்கல, தப்பிச்சோம்.

பவானி: கேட்டா மட்டும் என்ன, பதில் சொல்லிடவா போறோம். ஏன் நம்ம ரம்யாகிட்டவும் தான் நிறைய கேள்விகள் கேட்டாங்க, அசரலேயே நம்ம பொண்ணு, சும்மா அசையாம ஆடாம அப்படியே நின்னுட்டு எஸ்கேப் ஆகிட்டால.

ரம்யா: ஹேய் பவானி, சும்ம பதில் சொல்லாம இருந்திருக்க கூடாதுடி, பதில் சொல்லிருக்கனும் நான்.

ஷீத்தல்: என்ன ரம்யா சொல்ற???

ரம்யா: நான் பதில் சொல்லிருந்தா எப்படி சொல்லிருப்பேன்னு இப்போ பார்க்கலாமா, பவானி நீ அந்த கேள்வி எல்லாம் என்கிட்ட கேளு, நான் எப்படி பதில் சொலிருப்பேன்ன்னு சொல்லிக்காட்டுறேன், ஓ.கே வா??

பவானி: தட்ஸ் இண்டெரஸ்டிங், சரி நான் கேட்கிறேன்..........
ஃப்ர்ஸ்ட் கேள்வி
' டெல் அ யுனிக் வே டூ ப்ரோபோஸ்'

ரம்யா: பல வழில ,............. பல தடவை, .........பல பேர்கிட்ட நீ ப்ரோபோஸ் பண்ணியும் உனக்கு எந்த பொண்ணும் 'யெஸ்' சொல்லவேயில்ல, அப்புறம் என்ன யுனிக் வே இப்போ உனக்கு நான் சொல்லனும், தெரிஞ்சுக்கிட்டு இன்னும் பொண்ணுங்க கிட்ட ப்ரோபோஸ் பண்ண போறியாக்கும். பொண்ணுங்க பாவம் பொழச்சு போட்டும்னு விட்ரு உன் யுனிக் ஐடியா தேடுற வேலையெல்லாம்.

ஷீத்தல்: அப்படி போடும்மா கண்ணு!

பவானி:ஷ்ஷு, குறுக்கே பேசாதே ஷீத்து. ஓ.கே இரண்டாவது கேள்வி.

ஷீத்தல்: ஹேய் பவானி ஒரு நிமிஷம், அந்த கடலை மாஸ்டர் ரமேஷ் கேட்ட தமிழ் கேள்வியெல்லாம் கேளு இப்போ.

பவானி:ஓ.கே. டன். கேட்கறேன்....

'உனக்கு தமிழ் மட்டும் தான் தெரியுமா? இங்கிலீஷ் புரியாதா?'

ரம்யா: இப்ப எனக்கு இங்கிலீஷ் தெரியலன்னு சொன்னா, ' முப்பது நாளில் நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்' ன்னு ரெபிடெக்ஸ் புக் வாங்கி எனக்கு சொல்லித் தரப்போறியா??

பவானி:ஓ! நீ பதில் கேள்வி கேட்டு மடக்கிறீயா கடலை பார்ட்டிய. சரி அடுத்த கேள்வி

'புத்திசாலிக்கும் அதிபுத்திசாலிக்கும் என்ன வித்தியாசம், ஒரு எக்ஸாம்பிளோட சொல்லு.'

ரம்யா: ஏனுங்க சாமி, எனக்கு இதுக்கு வித்தியாசம் தெரியலீங்க, ஆனா லூசுக்கும் அரலூசுக்கும் வித்தியாசம் தெரியும்முங்க. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா, அது ரெண்டும் கலந்த கலவைதான்ங்க நீங்க, பேசும்போது நீங்க லூசு, பேசாம இருக்கும் போது அரலூசுங்க, அம்புட்டுத்தான்.

பவானி: ஆஹா இது சூப்பர் ரம்ஸ். சரி அடுத்த கேள்வி.......

'அரேஞ்சுடு மரேஜ் , லவ் மரேஜ் எது சிறந்தது?'

ரம்யா: என்ன பட்டிமன்றம் நடத்துறியா? இல்ல கல்யாண புரோக்கரா நீ? இப்படி கேள்வி கேட்க்குற, வேற உருப்படியா எதுன்னா கேளுபா.

ஷீத்தல்: என்ன ரம்யா, எல்லா கேள்விக்கும் நீ பதில் கேள்வி ' கடலை டிபார்ட்மண்ட் H.O.D ரமேஷ்' கிட்ட கேட்டு மடக்குற ,இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்................

அந்த கட்டிடமே அதிரும் படி சிரித்தனர் மூவரும்.

ரொம்ப கும்மாளம் அடிக்கிறோம் யாராவது பார்த்துட்டா முகத்திரை கிழிஞ்சிடும் என முடிவு பண்ணி மெதுவாக இடத்தை காலி பண்ணினார்கள்.

க்ளாஸ் முடிந்து அனைவரும் சென்றபின் தன் க்ளாஸ் ரூமில் அமர்ந்து ரெகார்ட் நோட் எழுதி முடித்துவிட்டு படிகளில் இறங்கப் போன ரமேஷின் காதில் கீழ் படிகளில் யாரோ சத்தமாகா பேசிக்கொண்டிருப்பது கேட்டு எட்டிப்பார்த்தான், உம்னா மூஞ்சி முதல் ஆண்டு மாணவிகள் மூன்று பேரும் சத்தமாக அரட்டை அடிப்பது கண்டு, என்னதான் பேசுதுங்க இந்த மூனும்னு கேட்கலாம் என்று மாடிபடி திருப்பதிலேயே உட்கார்ந்து மேற் கண்ட உரையாடல் முழுவதும் கேட்டுவிட்டான் ரமேஷ்.

' அடிப்பாவிகளா, காலையில இந்தப் பூனையும் பால் குடிக்கும்மான்னு மூஞ்சி வைச்சிருந்தாளுங்க , இப்போ அடிக்கிற லூட்டியப்பார்த்தா பால் என்ன பீரே குடிபாளுங்க போலிருக்குதே. அதிலேயும் அந்த நெட்டச்சி ரம்யாவுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னையே லூசுன்னு சொல்லுவா? ஏதொ பாக்கறதுக்கு 'மழை' ஷ்ரேயா மாதிரி டக்கரா தூக்கலா இருக்காளேன்னு நாலு கேள்வி கேட்டேன் வெல்கம் பார்டில, ஆனா அவ தில்லாலங்கிடியா இருப்பா போலிருக்குது.இவளை சும்மா விடக்கூடாது, கவனிக்கிற விதத்தில கவனிச்சிட வேண்டியது தான் என்று கங்கனம் கட்ட கொண்டான் ரமேஷ்...............[கலாட்டா தொடரும்...]

கல்லூரி கலாட்டா - 3கல்லூரி கலாட்டா - 4

கல்லூரி கலாட்டா - 5

கல்லூரி கலாட்டா - 6

78 comments:

said...

ராமேஷ இருந்தாலும் இப்படீ ஓட்ட கூடாதுங்க...

பாருங்க... கடைசியா அவருக்கு தான் செட்டாக போகுது :-)

said...

மாட்னீங்களா?

said...

\" வெட்டிப்பயல் said...
ராமேஷ இருந்தாலும் இப்படீ ஓட்ட கூடாதுங்க...

பாருங்க... கடைசியா அவருக்கு தான் செட்டாக போகுது :-) \"

ரமேஷ்க்கு சப்போர்ட்டா வெட்டி?
ஆமாம் என்ன செட்டாக போகுது அவருக்கு......செட் தோசை பார்சலா???

said...

\"
நாமக்கல் சிபி said...
மாட்னீங்களா? \"

சிபி,ரம்யா கிட்ட கேள்வி கேட்க்குறீங்க போலிருக்கு ....

said...

//இந்தப் பூனையும் பால் குடிக்கும்மான்னு மூஞ்சி வைச்சிருந்தாளுங்க , இப்போ அடிக்கிற லூட்டியப்பார்த்தா பால் என்ன பீரே குடிபாளுங்க போலிருக்குதே//

:))))

said...

கதை சூப்பர் கலாட்டாவா போகுதே...

வெட்டி சொன்ன மாதிரி ரமேஷ்க்கு தான் செட்டாகும்னு தோனுது :)

said...

\"Arunkumar said...
கதை சூப்பர் கலாட்டாவா போகுதே...

வெட்டி சொன்ன மாதிரி ரமேஷ்க்கு தான் செட்டாகும்னு தோனுது :) \'

அருண்குமார், பின்னூட்டத்திற்க்கு நன்றி, ரமேஷ்க்கு பலத்த சப்போர்ட் கிடைக்குது போலிருக்கு....பார்க்கலாம் கதை எப்படி போகுதுன்னு.

said...

\" Divya said...
\"
நாமக்கல் சிபி said...
மாட்னீங்களா? \"

சிபி,ரம்யா கிட்ட கேள்வி கேட்க்குறீங்க போலிருக்கு ....

9:55 PM


தேவ் | Dev said...
//இந்தப் பூனையும் பால் குடிக்கும்மான்னு மூஞ்சி வைச்சிருந்தாளுங்க , இப்போ அடிக்கிற லூட்டியப்பார்த்தா பால் என்ன பீரே குடிபாளுங்க போலிருக்குதே//

:)))) \"

இந்த வரியை ரொம்ப ரசிச்சிருக்கிறீங்கன்னு புரியுது தேவ்

said...

காலம் கெட்டுப் போயி கிடக்கு.. கலி காலத்துல்ல காலேஜ் புள்ளக எப்படியெல்லாம் சிந்திக்குதுன்னு உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன் அம்புட்டுத் தேன்....:))))

said...

\" தேவ் | Dev said...
காலம் கெட்டுப் போயி கிடக்கு.. கலி காலத்துல்ல காலேஜ் புள்ளக எப்படியெல்லாம் சிந்திக்குதுன்னு உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன் அம்புட்டுத் தேன்....:)))) \"

கலி முத்தி போச்சுங்கண்ணா, பாருங்க காலேஜ் புள்ளைக பீரு மோரு ன்னு பேசிக்குதுங்க!

said...

//இந்தப் பூனையும் பால் குடிக்கும்மான்னு மூஞ்சி வைச்சிருந்தாளுங்க , இப்போ அடிக்கிற லூட்டியப்பார்த்தா பால் என்ன பீரே குடிபாளுங்க போலிருக்குதே//

அட பாவிகளா.......

:-))))))

Anonymous said...

ada divya...nalla kadhai pogudhu...

n unga kadhaila vara madiri nan nettachi ellam kidayadhu..kutty than adhan en peru kutty ponnu..n oru similarity unga characterkum enakkum nanum vai pesama some times mathavangala erichal mootuven...but seriya kalaipen..

ipo theriyudha en peyar edhuendru...

said...

Hi divya
i am a new visitor to ur blog!!

Enna gents thaan ragging pannanuma nambalum thaan pannuvome.. adu ennaga udane ellarum rameshku set aga poguthunu pesareenga.. che cinemava parthu parthu ellarum ketu poitanga!!!

Anonymous said...

Nalla kalakala galattava irukku kathai, continue ;)

said...

திவ்யா.. இப்போதைக்கு வருகை பதிவு..அப்புறம் வந்து படிக்கிறேன்.. நம்ம பதிவுக்கு வாங்க..உங்களுக்கு ஒரு tag இருக்கு..

said...

சூப்பர் திவ்யா. கதை எப்படி போகும்னு ஓரளவு யூகிக்க முடியுது. ஆனாலும் incidents interesting கா இருக்கு..

ஊமை குசும்பெல்லாம் கலக்கல்.

Anonymous said...

kadhayai nalla dhaan solreenga

said...

\" ராம் said...
//இந்தப் பூனையும் பால் குடிக்கும்மான்னு மூஞ்சி வைச்சிருந்தாளுங்க , இப்போ அடிக்கிற லூட்டியப்பார்த்தா பால் என்ன பீரே குடிபாளுங்க போலிருக்குதே//

அட பாவிகளா.......

:-)))))) \"

ரமேஷோட டயலாக்கே நீங்களும் சொல்றீங்க ராம்.
வருகைக்கு நன்றி ராம்.

said...

\"one among u said...
ada divya...nalla kadhai pogudhu...

n unga kadhaila vara madiri nan nettachi ellam kidayadhu..kutty than adhan en peru kutty ponnu..n oru similarity unga characterkum enakkum nanum vai pesama some times mathavangala erichal mootuven...but seriya kalaipen..

ipo theriyudha en peyar edhuendru... \"

குட்டி பொண்ணு ரம்யா வா நீங்க, நீங்களும் அந்த ரம்யா மாதிரி கலாய்க்கிற பார்டி தானா??

said...

\"dubukudisciple said...
\"Hi divya
i am a new visitor to ur blog!!

Enna gents thaan ragging pannanuma nambalum thaan pannuvome.. adu ennaga udane ellarum rameshku set aga poguthunu pesareenga.. che cinemava parthu parthu ellarum ketu poitanga!!! \"

ஹாய் டுபுக்கு டிஸைப்பிள், முதன் முறை என் ப்ளாக்கிற்க்கு வந்ததிற்க்கு மிக்க நன்றி.
அதானே, சினிமா பார்த்து பார்த்து எல்லாரும் செட் பண்ணிவிடுறதுலேயே குறியா இருக்காங்க, உங்கள் எதிர்பார்ப்பு வேறன்னு புரியுது டுபுக்கு.

said...

\"C.M.HANIFF said...
Nalla kalakala galattava irukku kathai, continue ;) \"

ஹனிஃப் மிக்க நன்றி!

said...

\" மு.கார்த்திகேயன் said...
திவ்யா.. இப்போதைக்கு வருகை பதிவு..அப்புறம் வந்து படிக்கிறேன்.. நம்ம பதிவுக்கு வாங்க..உங்களுக்கு ஒரு tag இருக்கு..\"

உங்கள் attendence நோட் பண்ணிகிட்டேன் கார்த்திக்,

[Attendence மட்டும் கொடுத்துட்டு எஸ்கேப் ஆனா ஃபன் கட்டனும் கார்த்திக், அதனால சீக்கிரம் வந்து கதை படிச்சுட்டு பின்னூட்டம் போடுங்க]

உங்கள் பதிவிற்க்கு வந்து அந்த tag பார்க்கிறேன்.

said...

//ரம்யா கிட்ட கேள்வி கேட்க்குறீங்க போலிருக்கு //

நான் கேட்டது ரம்யாவிடம் அல்ல! திவ்யாவிடம்!

(ஓ! ரம்யாதான் திவ்யாவா?)

said...

\" Priya said...
சூப்பர் திவ்யா. கதை எப்படி போகும்னு ஓரளவு யூகிக்க முடியுது. ஆனாலும் incidents interesting கா இருக்கு..

ஊமை குசும்பெல்லாம் கலக்கல். \"

ப்ரியா, உங்கள் ஊக்கத்திற்க்கு ரொம்ப நன்றி.
கதை நீங்கள் யுகிக்கிற மாதிரி போகுதான்னு பொறுத்திருந்து பாருங்க ப்ரியா.

said...

\" Kittu said...
kadhayai nalla dhaan solreenga \"

கிட்டு உங்க அளவுக்கு திருக்குறள் சொல்லமுடிலைன்னாலும் , ஏதோ எனக்கு தெரிஞ்ச அளவில் கதை சொல்றேன், அவ்வளவுதான்!

Anonymous said...

ரமேஷ், ரம்யா?

ரெண்டுமே 'ர'ல ஆரம்பிக்குதே, ஜோசியம் சரியா வருமா?

said...

\" நாமக்கல் சிபி said...
//ரம்யா கிட்ட கேள்வி கேட்க்குறீங்க போலிருக்கு //

நான் கேட்டது ரம்யாவிடம் அல்ல! திவ்யாவிடம்!

(ஓ! ரம்யாதான் திவ்யாவா?) \"

என்ன சிபி, போட்டு பாக்குறிங்களாக்கும்,
ரம்யா திவ்யா படைத்த ஒரு கற்பனை கதாபாத்திரம்.[ ஹி ஹி எப்படி என்னோட டயலாக்]

said...

\"ஜி said...
ரமேஷ், ரம்யா?

ரெண்டுமே 'ர'ல ஆரம்பிக்குதே, ஜோசியம் சரியா வருமா? \"

ஜி, இப்போ பெயர் பொறுத்தம் எல்லாம் எதுக்கு பாக்குறீங்க??? விட்டா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சு கதைய ஒரே எபிசோட்ல முடிச்சுடுவீங்க போலிருக்கு.........

[ பரவை முனியம்மா, பரத் ......ரெண்டுமே 'ப' ல ஆரம்பிக்குது, அதுக்குன்னு.........]

Anonymous said...

//Divya said...
[ பரவை முனியம்மா, பரத் ......ரெண்டுமே 'ப' ல ஆரம்பிக்குது, அதுக்குன்னு.........]
//

இருந்தாலும், இதெல்லாம் ஓவர் கம்பேரிஸம் :)

said...

//
கலி முத்தி போச்சுங்கண்ணா, பாருங்க காலேஜ் புள்ளைக பீரு மோரு ன்னு பேசிக்குதுங்க!
//
பரவாயில்லைங்க... குற்ற உணர்ச்சியே இல்லாம உங்களையே கலாய்ச்சிக்கறீங்க பாருங்க... இங்க தானுங்க நீங்க எல்லார் மனசுலயும் நிக்கறீங்க ;)

said...

//ரம்யா திவ்யா படைத்த ஒரு கற்பனை கதாபாத்திரம்.[ ஹி ஹி எப்படி என்னோட டயலாக்]//

இதை முன்குறிப்புல போடுங்க... இல்லைனா நாங்க எல்லாம் ரம்யாவும், திவ்யாவும் ஒண்ணுனு நினைச்சுக்குவோம் ;)

//ரமேஷ்க்கு சப்போர்ட்டா வெட்டி?
ஆமாம் என்ன செட்டாக போகுது அவருக்கு......செட் தோசை பார்சலா???//
ரமேஷிக்கு நான் ஏங்க சப்போர்ட் பண்ண போறேன்...
முகத்துக்கு முன்னாடி பேசாம பின்னாடி வந்து பேசற பொண்ணை தல மேல தூக்கு வெச்சி ஆடறீங்கனு சொல்றேன் :-)

said...

\" வெட்டிப்பயல் said...
//
கலி முத்தி போச்சுங்கண்ணா, பாருங்க காலேஜ் புள்ளைக பீரு மோரு ன்னு பேசிக்குதுங்க!
//
பரவாயில்லைங்க... குற்ற உணர்ச்சியே இல்லாம உங்களையே கலாய்ச்சிக்கறீங்க பாருங்க... இங்க தானுங்க நீங்க எல்லார் மனசுலயும் நிக்கறீங்க ;)\"

மனசுல ரொம்ப நேரம் நிக்க வைக்காதீங்க வெட்டி , கால் வலிக்கும் எனக்கு.

said...

//இதை முன்குறிப்புல போடுங்க... இல்லைனா நாங்க எல்லாம் ரம்யாவும், திவ்யாவும் ஒண்ணுனு நினைச்சுக்குவோம் //

முன் குறிப்புல போடுங்க! அப்பதான் ரம்யாவும் திவ்யாவும் ஒண்ணுன்னு கன்ஃபார்ம் பண்ணிக்குவோம்!

(முன் குறிப்பு, பின் குறிப்புகளால் பட்ட அவஸ்தை என்னவென்று சந்தோஷ் சொல்லுவார்)

said...

//[ பரவை முனியம்மா, பரத் ......ரெண்டுமே 'ப' ல ஆரம்பிக்குது, அதுக்குன்னு.........] //

ஆஹா! இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சு!

ரம்யா = திவ்யா, திவ்யா = ரம்யா

said...

ஆகா நக்கல் தாங்கலைடா சாமி இதை எல்லாம் படிக்கும் பொழுது காலேஜ் படிக்கும் பொழுது கூட படிச்ச பொண்ணுங்க அடிச்ச லூட்டி தான் ஞாபகம் வருது. :))

said...

//என்ன சிபி, போட்டு பாக்குறிங்களாக்கும்//

போட்டு வாங்க நான் என்ன பார்த்திபனா? அல்லது நீங்கள் என்ன வடிவேலுவா?

(Give & Take Policy)

said...

//மனசுல ரொம்ப நேரம் நிக்க வைக்காதீங்க வெட்டி , கால் வலிக்கும் எனக்கு//

என் மனதில் ஸ்டூல் போட்டு விட்டேன்!

பாவம் இல்லையா ரம்யா!

said...

அட! கரெக்டா சந்தோஷ் வந்துட்டாரே!
சந்தோஷ்! முன் குறிப்பு, பின் குறிப்பால் தாங்கள் பட்ட அவஸ்தையைக் கொஞ்சம் நினைவு கூறவும்!

ஓவர் டூ சந்தோஷ்!

said...

//நாமக்கல் சிபி said...

//மனசுல ரொம்ப நேரம் நிக்க வைக்காதீங்க வெட்டி , கால் வலிக்கும் எனக்கு//

என் மனதில் ஸ்டூல் போட்டு விட்டேன்!

பாவம் இல்லையா ரம்யா! //

தலைவர் வழியே தொண்டனும்...

said...

//மனசுல ரொம்ப நேரம் நிக்க வைக்காதீங்க வெட்டி , கால் வலிக்கும் எனக்கு.//

அப்படியே உங்க Credit Card details அனுப்பனா உங்களுக்கு ஒரு Couch வாங்கி போட்டுடலாம் :-)

said...

\" நாமக்கல் சிபி said...
//இதை முன்குறிப்புல போடுங்க... இல்லைனா நாங்க எல்லாம் ரம்யாவும், திவ்யாவும் ஒண்ணுனு நினைச்சுக்குவோம் //

முன் குறிப்புல போடுங்க! அப்பதான் ரம்யாவும் திவ்யாவும் ஒண்ணுன்னு கன்ஃபார்ம் பண்ணிக்குவோம்!

(முன் குறிப்பு, பின் குறிப்புகளால் பட்ட அவஸ்தை என்னவென்று சந்தோஷ் சொல்லுவார்)
\"

முன்குறிப்பு, பின்குறிப்பு எல்லாம் வேணாம், பேசாம கதையின் டைட்டில் பக்கதுல,
' இந்த கதை முழுக்க முழுக்க என் கற்பனையே, கற்பனையை தவிர வேரொன்றுமில்லை ' அப்படின்னு போட்டுட வேண்டியது தான் போலிருக்கு!

said...

\" நாமக்கல் சிபி said...
//[ பரவை முனியம்மா, பரத் ......ரெண்டுமே 'ப' ல ஆரம்பிக்குது, அதுக்குன்னு.........] //

ஆஹா! இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சு!

ரம்யா = திவ்யா, திவ்யா = ரம்யா \"

பெயர் பொறுத்தம் எல்லாம் முதல் எழுத்தை வைச்சு தான் பார்க்கனும் சிபி.

said...

\"சந்தோஷ் said...
ஆகா நக்கல் தாங்கலைடா சாமி இதை எல்லாம் படிக்கும் பொழுது காலேஜ் படிக்கும் பொழுது கூட படிச்ச பொண்ணுங்க அடிச்ச லூட்டி தான் ஞாபகம் வருது. :))\"

சந்தோஷ் பொண்ணுங்க அடிச்ச லூட்டி மட்டும் மறக்கல போலிருக்கு?

said...

\" நாமக்கல் சிபி said...
//என்ன சிபி, போட்டு பாக்குறிங்களாக்கும்//

போட்டு வாங்க நான் என்ன பார்த்திபனா? அல்லது நீங்கள் என்ன வடிவேலுவா?

(Give & Take Policy) \"

ஓஹோ, அப்படி அப்படி.......புரியுது, நல்லா புரியுது.

said...

\" நாமக்கல் சிபி said...
//மனசுல ரொம்ப நேரம் நிக்க வைக்காதீங்க வெட்டி , கால் வலிக்கும் எனக்கு//

என் மனதில் ஸ்டூல் போட்டு விட்டேன்!

பாவம் இல்லையா ரம்யா! \"

ரம்யாக்கு ஸ்டூல் எல்லாம் போட்டு உட்கார வைச்சிருக்கிறீங்க சிபி,
எனக்கு தரையிலாவது உட்கார கொஞ்சம் இடம் கிடைக்குமா??

said...

\" வெட்டிப்பயல் said...
//நாமக்கல் சிபி said...

//மனசுல ரொம்ப நேரம் நிக்க வைக்காதீங்க வெட்டி , கால் வலிக்கும் எனக்கு//

என் மனதில் ஸ்டூல் போட்டு விட்டேன்!

பாவம் இல்லையா ரம்யா! //

தலைவர் வழியே தொண்டனும்... \"

சிபி உங்க தலைவரா?? சொல்லவேயில்ல வெட்டி...

said...

\" வெட்டிப்பயல் said...
//மனசுல ரொம்ப நேரம் நிக்க வைக்காதீங்க வெட்டி , கால் வலிக்கும் எனக்கு.//

அப்படியே உங்க Credit Card details அனுப்பனா உங்களுக்கு ஒரு Couch வாங்கி போட்டுடலாம் :-) \"

Couch எல்லாம் வேணாங்க வெட்டி, தரடிக்கட் தாங்க நாம எப்பவும்.

said...

//
சிபி உங்க தலைவரா?? சொல்லவேயில்ல வெட்டி...//
நீங்க கேக்கவே இல்லையே ;)
எனக்கு வலையுலகில் வரவேற்பு கொடுத்ததே அவர்தான் ;)

//Couch எல்லாம் வேணாங்க வெட்டி, தரடிக்கட் தாங்க நாம எப்பவும்.//
தர டிக்கட்னா அதுக்கு ஏத்த மாதிரி சார்ஜ் பண்ணிக்கலாம்... பரவாயில்ல பயப்படாம அனுப்புங்க ;)

said...

mm. super mam.

//இப்போ அடிக்கிற லூட்டியப்பார்த்தா பால் என்ன பீரே குடிபாளுங்க போலிருக்குதே. அதிலேயும் அந்த நெட்டச்சி ரம்யாவுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னையே லூசுன்னு சொல்லுவா?//

in the beer ramya va parkanum pola eruku.. :) ha ha ha

said...

பயங்கர கலாட்டாவா கீதே..

யா.. யா.. யூ சீயா.. இரண்டு பேருமே யா வுல முடியுதுயா...

said...

நாந்தான் 50ஆ?

said...

\" வெட்டிப்பயல் said...
நாந்தான் 50ஆ? \"

வெட்டி நீங்க தான் முதல் கமெண்ட்டும் போட்டீங்க, இப்போ 50 வது பின்னூட்டமும் உங்களோடது தான், அப்படியே 100 வது பின்னூட்டம் வந்து போட்றுங்க

said...

\" Adiya said...
mm. super mam.\"

நன்றி Adiya.

//இப்போ அடிக்கிற லூட்டியப்பார்த்தா பால் என்ன பீரே குடிபாளுங்க போலிருக்குதே. அதிலேயும் அந்த நெட்டச்சி ரம்யாவுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னையே லூசுன்னு சொல்லுவா?//

in the beer ramya va parkanum pola eruku.. :) ha ha ha \"'

பீர் ரம்யாவா!! புது பெயர் எல்லாம் சூட்டிருக்கிறிங்க ரம்யாவுக்கு, ஆமா ஏன் பார்கனும் பீர் ரம்யாவ??

said...

\" அரை பிளேடு said...
பயங்கர கலாட்டாவா கீதே..

யா.. யா.. யூ சீயா.. இரண்டு பேருமே யா வுல முடியுதுயா...\"

அடுத்த கலட்டாவும் பதிவு போட்டதும் படிச்சு பாருங்க பிளேடு.

[இரண்டு பேருமே 'யா' வுல முடிஞ்சா என்னயா இப்போ???]

Anonymous said...

அக்கம் பக்கம் பார்த்திட்டு பேசியிருக்கனும்..இப்படி மாட்டிகிட்டாங்களே?!!!

said...

\" தூயா said...
அக்கம் பக்கம் பார்த்திட்டு பேசியிருக்கனும்..இப்படி மாட்டிகிட்டாங்களே?!!! \"

மறைந்திருந்து ஒட்டு கேட்பாங்கன்னும் தெரியாம போச்சு அந்த அப்பாவி பொண்ணுங்களுக்கு.

வருகைக்கு நன்றி தூயா.

said...

அதான் சொன்னேனே, எப்போ ஓடுற ரயிலில் ஒரு பையனை ( மாதவன் சாயல் ) கையை பிடித்து இழுத்தீங்களோ, அப்பவே எங்களுக்கு ரம்யா எப்படினு தெரிஞ்சு போச்சு....

:)

said...

\" Srikanth said...
அதான் சொன்னேனே, எப்போ ஓடுற ரயிலில் ஒரு பையனை ( மாதவன் சாயல் ) கையை பிடித்து இழுத்தீங்களோ, அப்பவே எங்களுக்கு ரம்யா எப்படினு தெரிஞ்சு போச்சு....\"

பின்னூட்டத்திற்க்கு நன்றி ஷ்ரிகாந்த்.

என்னங்க இது, கையை புடிச்சு இழுத்து ட்ரெயின்ல ஏற ஹெல்ப் பண்றது தப்பா???
[ நீங்க என் கற்பனை கதாபாத்திரங்களின் பெயர்களை குழப்பமடைய செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்]

said...

//அப்பாவி பொண்ணுங்களுக்கு.//

நம்புகிறோம்!

said...

/ஹாய் டுபுக்கு டிஸைப்பிள், முதன் முறை என் ப்ளாக்கிற்க்கு வந்ததிற்க்கு மிக்க நன்றி./- Nandriku mikka nandri

/அதானே, சினிமா பார்த்து பார்த்து எல்லாரும் செட் பண்ணிவிடுறதுலேயே குறியா இருக்காங்க, உங்கள் எதிர்பார்ப்பு வேறன்னு புரியுது டுபுக்கு./ --illenga divya eppo paru mothal kadhal poi mudiyara mathirye kathai cinema matrum pathirigaila.. adan bore adikuthu..adhu thaan neenga konjam vithyasama pannuveenganu ethirpakaren.. Wait panni pakaren.. Adukaga 100 comments vara varaikum wait panna vendam seriya

said...

\" நாமக்கல் சிபி said...
//அப்பாவி பொண்ணுங்களுக்கு.//

நம்புகிறோம்! \"

நம்புங்க சிபி,
'திவ்யாவை நம்பினோர் கைவிடப்படார்'

said...

\"dubukudisciple said...
/ஹாய் டுபுக்கு டிஸைப்பிள், முதன் முறை என் ப்ளாக்கிற்க்கு வந்ததிற்க்கு மிக்க நன்றி./- Nandriku mikka nandri

/அதானே, சினிமா பார்த்து பார்த்து எல்லாரும் செட் பண்ணிவிடுறதுலேயே குறியா இருக்காங்க, உங்கள் எதிர்பார்ப்பு வேறன்னு புரியுது டுபுக்கு./ --illenga divya eppo paru mothal kadhal poi mudiyara mathirye kathai cinema matrum pathirigaila.. adan bore adikuthu..adhu thaan neenga konjam vithyasama pannuveenganu ethirpakaren.. Wait panni pakaren.. Adukaga 100 comments vara varaikum wait panna vendam seriya \"

நூறு பின்னூட்டம் வரை காத்திருந்து தான் , அடுத்த பகுதி போடனும்னு ஏதும் சபதம் எல்லாம் நான் எடுக்கல டுபுக்கு டிஸைப்பிள், சீக்கிரம் அடுத்த பாகம் போட முயற்ச்சிக்கிறேன், அடுத்த பாகமும் படிச்சுட்டு உங்க கருத்து சொல்லுங்க சரியா?

[உங்கள் எதிர்பார்ப்பு பரிசீலிக்கப் படும்]

Anonymous said...

தொடரும்
தொடருக்கு
தொடர்ந்து ஆதரவு
தொடரும்!
தொடர்ந்து செல்லவும்
தொடந்து வருகிறோம்!

said...

ஹாய் திவ்யா,

இந்த கலாட்டா ரசிக்கும் படியா இருக்கு. டுபுக்கு டிசைப்பிள் சொன்ன மாதிரி இந்த காதல் எல்லாம் இல்லாம ஒரு வித்தியாசமா சொல்லுங்களேன், ரசிக்கும்படியா..

அதே மாதிரி காலேஜ் னாலே வெறும் காதல் மட்டும் தான் இருக்கா? ரசிக்க வேற எவ்வளவோ இருக்குமே?
அதையெல்லாம் சொல்லாமே...ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே...

said...

\" பிரியமுடன் பிரேம் said...
தொடரும்
தொடருக்கு
தொடர்ந்து ஆதரவு
தொடரும்!
தொடர்ந்து செல்லவும்
தொடந்து வருகிறோம்!\"

பிரேம்!.....
தொடரும்
தொடருக்கு
தொடர்ந்து
வருக! வருக!
தொடருக்கு ஆதரவு
தருக! தருக!
தொடர்ந்து கவிதையை பின்னூட்டமாக
இடுக! இடுக!

said...

\"sumathi said...
ஹாய் திவ்யா,

இந்த கலாட்டா ரசிக்கும் படியா இருக்கு. டுபுக்கு டிசைப்பிள் சொன்ன மாதிரி இந்த காதல் எல்லாம் இல்லாம ஒரு வித்தியாசமா சொல்லுங்களேன், ரசிக்கும்படியா..

அதே மாதிரி காலேஜ் னாலே வெறும் காதல் மட்டும் தான் இருக்கா? ரசிக்க வேற எவ்வளவோ இருக்குமே?
அதையெல்லாம் சொல்லாமே...ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே...\"

தொடரை ரசித்தமைக்கு நன்றி சுமதி, உங்கள் எதிர்பார்ப்பை கண்டிப்பாக கவனத்தில் கொள்கிறேன், உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

said...

ஒரு சின்ன அறிவுரை! தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.

இந்த கதைக்கு நீங்க என்ன யோசிச்சு வெச்சிருக்கீங்களோ அதையே எழுதுங்க. வாசகர்களுக்காக கதையை மாற்ற வேண்டாம். உங்களுடைய எழுத்தை அவர்கள் ரசிக்கும் வண்ணம் எழுதினால் போதும்.

வாசகர்களின் விருப்பத்திற்காக மாற்ற நினைத்தால் நாம் வேறு ஒருவரின் எண்ணத்திற்கு உயிர் கொடுப்பது போலாகிவிடும்...

இது என் கருத்து மட்டுமே :-)

said...

\" வெட்டிப்பயல் said...
ஒரு சின்ன அறிவுரை! தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.

இந்த கதைக்கு நீங்க என்ன யோசிச்சு வெச்சிருக்கீங்களோ அதையே எழுதுங்க. வாசகர்களுக்காக கதையை மாற்ற வேண்டாம். உங்களுடைய எழுத்தை அவர்கள் ரசிக்கும் வண்ணம் எழுதினால் போதும்.

வாசகர்களின் விருப்பத்திற்காக மாற்ற நினைத்தால் நாம் வேறு ஒருவரின் எண்ணத்திற்கு உயிர் கொடுப்பது போலாகிவிடும்...

இது என் கருத்து மட்டுமே :-) \"

உங்கள் அறியுரைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி வெட்டி,

இந்த தொடர் கதை - அது என் கற்பனையும் யோசனையும் நிறைந்ததாகவே இருக்கும்.

வாசகர்களுக்காக உங்கள் எழுத்தை மாற்றவேண்டாம் என நீங்கள் கூறுவதை ஒப்புக் கொள்கிறேன் வெட்டி,

said...

அய்யோ திவ்யா..
ஃபைன் எல்லாம் வேண்டாம்..

கதை நல்லா ரவுசா போகுதுங்கா.. இதுவரை ஆண்கள் கொட்டமடித்து பார்த்து பார்த்து ..பெண்களோட பார்வையில உங்க படைப்புக்கள் எல்லாமே நல்லா இருக்குங்க திவ்யா

said...

Divya,

i wish your post carried english translation so that ppl like us can also enjoy what you write.

come, lets meet at my place :

chandrasart.blogspot.com

warm wishes

chandra

said...

\" மு.கார்த்திகேயன் said...
அய்யோ திவ்யா..
ஃபைன் எல்லாம் வேண்டாம்..

கதை நல்லா ரவுசா போகுதுங்கா.. இதுவரை ஆண்கள் கொட்டமடித்து பார்த்து பார்த்து ..பெண்களோட பார்வையில உங்க படைப்புக்கள் எல்லாமே நல்லா இருக்குங்க திவ்யா \"

கார்த்திக் முதல் தடவை லேட்டா வந்ததுக்கு எக்ஸ்கூஸ் கொடுக்கிறேன்.

உங்கள் பாராட்டுகளூக்கு நன்றி கார்த்திக்.

said...

\"chandra said...
Divya,

i wish your post carried english translation so that ppl like us can also enjoy what you write.

come, lets meet at my place :

chandrasart.blogspot.com

warm wishes

chandra \"

Hi Chandra,
Thanks for visiting my blog.
I find an outlet to my passion to type in tamil through my tamil blog.
May think of opening a new blog in English in future ,for people who are intrested like you.
Again thanks!

said...

திவ்யா
கதை சூப்பர் கலாட்டாவா போகுது.
பழைய கூட்டலிங்க ஞாபகமொல்லாம் வருது..

said...

\"கோபிநாத் said...
திவ்யா
கதை சூப்பர் கலாட்டாவா போகுது.
பழைய கூட்டலிங்க ஞாபகமொல்லாம் வருது.. \"

நன்றி கோபிநாத்,

பழைய நண்பர்களின் ஞாபகத்துடன் அடுத்த பகுதியையும் நாளைக்கு படித்துவிட்டு கருத்து கூறுங்கள்.

Anonymous said...

ahaaa.. konja naal varalana, blog pottu athukku 73comment vera! appadi podu!
//' டெல் அ யுனிக் வே டூ ப்ரோபோஸ்'

ரம்யா: பல வழில ,............. பல தடவை, .........பல பேர்கிட்ட நீ ப்ரோபோஸ் பண்ணியும் உனக்கு எந்த பொண்ணும் 'யெஸ்' சொல்லவேயில்ல, அப்புறம் என்ன யுனிக் வே இப்போ உனக்கு நான் சொல்லனும், தெரிஞ்சுக்கிட்டு இன்னும் பொண்ணுங்க கிட்ட ப்ரோபோஸ் பண்ண போறியாக்கும். பொண்ணுங்க பாவம் பொழச்சு போட்டும்னு விட்ரு உன் யுனிக் ஐடியா தேடுற வேலையெல்லாம்.
//
paavunga pasanga...

said...

\"Dreamzz said...
ahaaa.. konja naal varalana, blog pottu athukku 73comment vera! appadi podu!
//' டெல் அ யுனிக் வே டூ ப்ரோபோஸ்'

ரம்யா: பல வழில ,............. பல தடவை, .........பல பேர்கிட்ட நீ ப்ரோபோஸ் பண்ணியும் உனக்கு எந்த பொண்ணும் 'யெஸ்' சொல்லவேயில்ல, அப்புறம் என்ன யுனிக் வே இப்போ உனக்கு நான் சொல்லனும், தெரிஞ்சுக்கிட்டு இன்னும் பொண்ணுங்க கிட்ட ப்ரோபோஸ் பண்ண போறியாக்கும். பொண்ணுங்க பாவம் பொழச்சு போட்டும்னு விட்ரு உன் யுனிக் ஐடியா தேடுற வேலையெல்லாம்.
//
paavunga pasanga...\"

அப்படியா dreamz பசங்க ரொம்ப பாவமா?

தாமதமாக பதிவிற்கு வந்தாலும், வருகைக்கு நன்றி dreamz.

said...

ramya-oooda pathil koncham over-ra irukuthunkooo...parkurean part-3-la enna aguthunu...but its interesting...

said...

pasu thol porthiya puli pol irukinranar... seri aduthathu enna nadakudhunu paarppom..get back to u at part-3....

nalla post.. :)