November 08, 2006

விஷ செடி !!!



பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் இடத்தை வென்றதால் கிடைத்த பரிசுக் கோப்பையையும், சான்றிதழையும் என் பெற்றொரிடம் காண்பித்து என் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ள ஆவலுடன் "அம்மா, அப்பா!" என்று அழைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.

என்னை விட இரண்டு வயது பெரியவளான என் அக்கா விற்க்கு வீட்டு பாடம் எழுத உதவி செய்துக்கொண்டிருந்தார் என் அம்மா.
"அம்மா, அம்மா, இங்க பாரும்மா, நான் தான் இந்த முறையும் பேச்சுப் போட்டியில் முதல் இடம்" என்று என் கையிலிருந்த பரிசுக் கோப்பையை காண்பித்தேன். எந்த வித முக மாறுதலும் , உணர்ச்சியும் இன்றி என் அம்மா"ஓ! அப்படியா, சரி பள்ளி உடையை மாற்றிவிட்டு சாப்பிடு" என்று கூறிவிட்டு " உஷா, கணக்கு வீட்டு பாடம் முடித்ததும், அறிவியல் வீட்டு பாடம் எழுத அரம்பிமா" என்று என் அக்காவிற்க்கு அன்பு கட்டளை இட்டு விட்டு சமையல் அறை நோக்கிச் சென்றாள்.

' என்ன அம்மா இவள், எத்தனை ஆசையுடன் என் சந்தோஷத்தையும் வெற்றியையும் பகிர்ந்துக் கொள்ள வந்தேன், இப்படி பாரா முகமாக சென்று விட்டாளே' என்று பொறுமிக்கொண்டே , முன் அறையில் இருந்த என் அப்பா விடம் சென்றேன். வீட்டு பாடம் எழுதிக் கொண்டிருந்த என் அக்கா வும் என்னை பின் தொடர்ந்தாள், காலையில் படிக்க முடியாமல் விட்டு போன தினகரன் நாளிதழின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்த அப்பா விடம், " அப்பா , அப்பா, இந்த முறையும் பேச்சுப் போட்டியில் நான் தான் முதல் இடம் பா" என்று என் பரிசினை அவர் முன் நீட்டினேன். நாளிதழிலிருந்து தன் பார்வையை விலக்காமல்," ஓ!, அப்படியா, வெரி குட், வெரி குட்" என்று மட்டும் கூறிவிட்டு பக்கங்களை புரட்ட அரம்பித்தார்.

எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது, ' என்ன பெரிய புடலங்காய் கல்லூரி பேராசிரியர் இவர், போட்டியில் வெற்றி பெற்ற மகளை மனதார பாரட்ட தெரியாமல் இவரெல்லாம் என்ன பாடம் நடத்துவாரோ கல்லூரியில், எதோ வெரி குட் என்றாவது அப்பா சொனாரே, அது கூட இந்த அம்மா சொல்லவில்லை' என்று என் மனதில் வசைபாடிக் கொண்டே என் அறைக்குச் சென்றேன்.

என் அலமாறியை அலங்அரித்துக் கொண்டிருந்த என் பரிசு கோப்பைகள் எல்லாம் என்னைப் பார்த்து சிநேகத்துடன் புன்னைகித்தன, ' நீ கவலைப் படாதே ரம்யா, எங்களை மாதிரி இன்னும் நிறைய பரிசுக் கோப்பைகளை நீ வெல்ல வேண்டும், எல்லாப் போட்டிகளிலும் பங்கு பெற் உன்னைச் சிறப்பாக தயார் படுத்திக்கொள், உன்னை யாரும் கண்டுகலையே என்று நினைக்காதே, நாங்கள் இருக்கிறோம் உன்னை ஊக்குவிக்க' என்று என்னிடம் சொல்வது போல் உணர்ந்தேன்.

இன்று நடந்த சம்பவம் ஒன்றும் என் வாழ்வில் புதிதல்ல. நான் பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி, படிப்பு , ஓவியம் என்று எல்லா துறையிலும் பரிசுகளை குவிப்பதும் என் வீட்டில் என்னை யாரும் கண்டுக்கொள்ளாததும் வழக்கமானது, அது நாளடைவில் எனக்கு பழக்கமும் ஆனது.

ஆனால், ஏன் இந்த பாராபட்ச்சம், அக்காவிடம் காட்டும் அக்கறையும் கரிசனமும் ஏன் எனக்குக் காட்டவில்லை அம்மா, ஏன் என்னை அலட்சியப்படுத்துகிறாள்........இப்படி பல கேள்விகள் எனக்குள் தினமும் வரத்தான் செய்தன. இரவு படுக்கையில் ஒவ்வொரு நாளும் இந்த கேள்விகள் வருவதும் , என் விழிகளில் என்னை அறியாமல் நீர் வருவதும் பின் அப்படியே நான் உறங்கிப் போவதும் வாடிக்கை ஆகிப் போனது.

நாட்கள் செல்ல செல்ல , எனக்குள் இருந்த இந்த ஆதங்கங்கள் ஒரு விஷ செடியாக வளர்ந்தது, அது என்னை என் அம்மாவிடம் என்னை நானே தனிமை படுத்திக்கொள்ளச் செய்தது.

ஆனால் , இந்த தனிமை என்னை சோர்ந்து போக பண்ணாதபடி என் கவணம் முழுவதும் என் படிப்பிலும், என் தாலந்துகளை வளர்ப்பதிலும், என் திறமைகளை வெளிப்படுத்துவதிலும் செலுத்த அரம்பித்தேன்.

வருடங்கள் ஓடின, என் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தேன். எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே தன் கல்லூரி படிப்பை முடித்திருந்த என் அக்கா உஷா மேற்படிப்பிற்க்குச் செல்லாமல் வீட்டில் அம்மா வுக்கு உதவியாக இருந்தாள். முன்னை விட இப்போதெல்லாம் அம்மாவின் கவனிப்பு அவளுக்கு அதிகம் கிடைத்தது..........

'என்னுள் இருந்த விஷ செடி மரமாக வளர்ந்திருந்தது இப்போது.'

மேற்படிப்பிற்க்காக விண்ணப்பங்கள் வாங்கி வந்தேன். இதே ஊரில் மேற்படிப்பு படித்தால் இந்த கவனிப்பாரற்ற வீட்டிலேயே இருக்க வேண்டும், அதனால் வெளியூருக்குச் சென்று படிக்கலாம், அப்போதாவது எனக்குள் இருக்கும் விஷ மரம் காய் , கணிகளை தராமல் இருக்கும் என்று முடிவு செய்து, வெளியூர் கல்லூரிகளுக்கு மட்டும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தேன். அப்பாவிடம் அனுமதியும் வாங்கி விட்டு, தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப என் ஸ்கூட்டியில் செல்ல எத்தனித்த போது, என் அம்மா " ரம்யா" என்று வாசலில்லிருந்து அழைத்தாள், " என்ன?" என்பது போல் அவளை திரும்பிப் பார்த்தேன்.

" அக்காவை இன்று பெண் பார்க்க வருகிறார்கள், அதனால் வெளியில் சென்றுவிட்டு சீக்கிரம் வந்துவிடு" என்று கூறிவிட்டு என் பதிலுக்கு கூடக் காத்திராமல் உள்ளே சென்றுவிட்டாள்.

' ஓ! உன் தவப் புதல்வியை திருமணம் செய்து அனுப்ப போகிறாயா? அவளை அனுப்பி விட்டு எப்படி தனியாக இருக்கப் போகிறாய், நானும் வெளியூர் சென்றுப் படிக்கப் போகிறேன், நான் இல்லாதது உனக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என்றாலும், நீ தனியாக இருக்கப் போகிறாய்' ஏதோ எனக்கு பெரிய வெற்றியும் , என் அம்மா வுக்கு பெரியா தண்டனை கிடைத்து விட்டது போலவும் ஓர் அல்ப்ப சந்தோஷம் எனக்குள்.


பெண் பார்க்கும் படலமும் நன்றாகவே நடந்த்தது. மாபிள்ளை பக்கத்து ஊரில் சொந்தமாக கம்பெனி ந்டத்துகிறார், நல்ல வசதியான இடம், பார்க்கவும் மாபிள்ளை அழகாகவே இருந்தார். அக்கா வுக்கு ரொம்ப பிடித்து விட்டது, அனைவருக்கும் தான்.
மாப்பிள்ளை வீட்டிலும் தங்கள் விருப்பதையும் சம்மதத்தையும் அப்போதே கூறிவிட்டார்கள். அனைவரும் திருமண காரியங்களை பேச ஆரம்பிக்க, நானும் என் அறைக்குச் சென்று என் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் என் அம்மா வும் ,அப்பாவும் என் அறைக்குள் வந்தனர், இருவரும் என் அறைக்குள் இப்படி ஒன்றாக வருவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்.
" ரம்யா, மாப்பிள்ளையின் தம்பி க்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறதாம், வெளி நாட்டில் வேலை செய்கிறார், விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கிறார், அண்ணனுக்கு பெண் பார்க்க வந்த இடத்தில் உன்னை அவருக்கு பிடித்துப் போனதால், ஒரே முகூர்த்ததில் இரண்டு திருமணத்தையும் நடத்த அவர்கள் பெற்றோர் விரும்புகின்றனர், எங்களுக்கும் சம்மதமே, உன் விருப்பதை சொல்" என்றார் என் அப்பா.
ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியில் ஒரு கணம் உரைந்து போனேன். "எனக்கு முடிவு எடுக்க கொஞ்ச நேரம் வேண்டும் " என்று மட்டும் கூறினேன். அப்பா, அம்மா அறையை விட்டு போனதும் தனிமையில் யோசிக்க அரம்பித்தேன்.

' பையன் பார்த்தா நல்ல பையனாகத்தான் தெரிகிறான், மேற் படிப்பிற்க்கு வெளியூர் சென்று ஹாஸ்டலில் வெந்ததும் வேகாததும் சாப்பிட்டு , பின் படிப்பு முடித்து ஒருவனை திருமணம் முடிப்பதை விட, இவனை கட்டிகிட்டு வெளி நாட்டுக்கு போய் விடலாம், நமக்கு இந்த வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும் அது தானே முக்கியம், என்றோ ஒரு நாள் திருமணம் என்று ஒன்று நடக்கத் தானே போகுது, அது இப்போவே நடந்துட்டு போகட்டும்'.............என் அப்பவிடம் சென்று" அப்பா எனக்கு சம்மதம்" என்றேன், என் அம்மாவின் முகத்தில் ஒரு பிரகாசமான ஒரு புன்னகை.

அப்போது என்னுள் இருந்த விஷ மரம் சொலிற்று ' பாரு, பாரு , உன் அக்காவிற்க்கு பக்கத்து ஊரில் நினைத்தால் பார்க்க கூடிய தொலைவில் மாப்பிள்ளை, உனக்கு மட்டும் கடல் கடந்து வாழ்க்கை, நீ தூரமான இடத்துக்குப் போவது உன் அம்மா வுக்கு எத்தனை சந்தோஷம் பார்த்தியா, என்ன அம்மா இவள்'.

இரண்டு திருமணங்களும் சிறப்பாக நடந்தது. முதலில் என் அக்காவும், அவள் கணவரும் அவள்/ என் மாமியார் வீட்டிற்க்கு காரில் சென்றனர். அம்மா "ஓ" வென்று அழ, என் அக்கா என் அம்மா வை கட்டி பிடித்துக்கொண்டு கதற......ஒருவாறாக இருவரையும் சமாதனப் படுத்தி அக்காவை வழி அனுப்பி வைத்தனர் உறவினர்கள்.

ஒரு மணி நெரம் கழித்து தான் நானும் என் கணவரும் என் புகுந்த வீட்டிற்க்கு புறப்பட வேண்டும் , ஒரே நேரத்தில் இரு தம்பதியரும் புகுந்த வீட்டிற்க்கு புறப்பட கூடாதாம், இது திருமணத்திற்க்கு வந்திருந்த சில பெருசுகளின் அறிவுரை.

அதன் படி ஒரு மணி நேரம் கழித்து நானும் என்னவரும் புறப்படும் நேரமும் வந்தது. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விடை கொடுத்து விட்டு காரினுள் ஏறும் போது தான் கவனித்தேன் என் அம்மா அந்த இடத்திலேயே இல்லை என்பதை. ' எப்படி பட்ட அம்மாவாக இருந்திருந்தாள் தன் மகள் புகுந்த வீட்டிற்க்கு போகும் போது வழியனுப்ப கூட வராமல் இருப்பாள்' என்று என்னுள் இருந்த விஷ மரம் என்னை உலுக்கியது.

" ஒரு நிமிடம் காத்திருங்கள், இதோ வந்து விடுகிறேன்" என்று என் கணவரிடம் கூறிவிட்டு காரிலிருந்து இறங்கி, வீட்டினுள் சென்றேன். என்னுள் இத்தனை நாட்கள் புதைந்திருந்த ஆதங்கம் முழுவதையும் கொட்டி தீர்த்து விட வேண்டும் என் அம்மாவிடம் என்று ஆதிரத்துடனும், ஆவேசுத்துடனும் " அம்மா, அம்மா " என்று உரக்க கத்தினேன். எஙகிருந்தும் பதில் வரவிலலை,. திருமணத்திற்க்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் என்னையும் என் கணவரையும் வழியனுப்ப வீட்டிற்க்கு வெளியில் இருந்த்ததால் வீடே வெறிச்சென்றிருந்ததது.

சமையல் அறையில் அம்மா நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு சென்றேன். அடுப்பில் எதையொ கிண்டிக் கொண்டிருந்தாள் என் அம்மா " அம்மா" என்று அழைத்தேன், அவள் திரும்பவே இல்லை.

எனக்குள் இருந்த விஷ செடி இப்போது காய் கணிகள் அனைத்தையும் ஒரு விநாடியில் தந்தது.

" நீயெல்லாம் ஒரு அம்மாவா, நீதான் என்னை பெத்தியா? இல்லை தெருவில் கிடந்து எடுத்து வளர்த்தியா?[ நான் அழகிலும், ஜாடையிலும் என் அம்மாவை அப்படியே உரித்து வைதிருந்தும், அது எனக்கு தெரிந்திருந்தும் அப்படி ஒரு வார்த்தை என் வாயிலிருந்து வந்தது] உன் பெரிய பொண்ணு கொஞ்ச நேரத்திற்க்கு முன் புறப்பட்டு போனப்போ கதறி கதறி அழுது ஆர்பாட்டம் பண்ணின, என்னை வாசல் வரை வந்து வழியனுப்ப உனக்கு மனசு வரவில்லை இல்ல?? இத்தனை வருஷம் தான் என்னை கண்டுக்காமல் அலட்சியம் பண்ணின, இப்போதான் உன்னை விட்டு கண் காணாத இடத்திற்க்கு போகிறேனே, அப்போ கூட என்னை பார்க்க உனக்கு இஷ்டம் இல்லாமல் போச்சா????, நான் போறேன், இனி உன் முகத்தில் முழிக்க போவதில்லை, இப்போ உனக்கு சந்தோஷமா?" என்று கூறிவிட்டு அறையை விட்டி வெளியேற முற்பட்ட போது,
" ரம்யா குட்டி" என்று உடைந்து போன என் அம்மாவின் குரல், அந்த குரல் என் அடி வயிற்றில் ஏதோ செய்ய, திகைப்புடன் திரும்பினேன்.....

அங்கே அழுது அழுது சிவந்துபோன என் அம்மாவின் முகம், கண்கள் வீங்கி போய் உதடுகள் துடிக்க " ரம்யா குட்டி என்னை மன்னிச்சிரும்மா, நீ என்னை விட்டு போகிறதை பார்க்க என்னால முடிலடா, என்ன செல்லம் ஆச்சரியாமா இருக்குதா அம்மா பேசுறது, "
" ரம்யா குட்டி , உன் அக்கா உஷா பிறவியிலேயே கொஞ்சம் மந்த புத்தி உள்ளவள், அவளுக்கு விபரம் பத்தாது, ஆனால் நீ எதிர்மாறாக மிகுந்த அறிவுடனும், விவேகத்துடனும் வளர்ந்தாய், உன்னை உன் அக்காவின் எதிரில் பாராட்டினால் ஏற்கனவே அறிவுத்திறன் இல்லாதவள் தாழ்மையுணர்ச்சியால் இன்னும் புத்தி மங்கி விடுவாளோ என்ற பயத்தினால் தான், ஒவ்வொருமுறை நீ வெற்றி கண்டபோதும் மனதார வெளியரங்கமாக பாராட்ட முடியவில்லை.
இரவு நீ உறங்கிய பின் உன் அறைக்கு வந்து, உன் வெற்றிக் கோப்பைகளையும் , சான்றிதழ்களையும் பார்த்து பூரித்து , உறங்கும் உன்னை உச்சி முகர்ந்து , ஆனந்த கண்ணீர் வடித்தது உனக்கு தெரியாது செல்லம்.

ரம்யா, நீ ஒரு ' அசோக மரம்' மாதிரிமா, தண்ணீர் ஊற்றாமலேயே தனக்கு தேவையான தண்ணீரை பூமியுனுள் தேடி எடுத்துக் கொண்டு தானாகவே வளரும் அசோக மரம் போல நீ எப்படியும் பிழைத்துக்கொள்வாய், வாழ்வில் உயர்ந்து விடுவாய் என்ற நம்பிகையில் தான் உன் அக்காவை ஊக்குவிப்பதிலும் , கவனிப்பதிலும் அதிக கவனம் செலுத்தினேன். எப்படியோ கல்லூரி படிப்பு வரை அவளை படிக்க வைத்து, இரண்டு வருடம் வீட்டு வேலைகளையும் சொல்லிக் கொடுத்து இன்று புகுந்த வீட்டிற்க்கு அனுப்பி விட்டேன்.
அக்காவுக்கு பக்கத்து ஊரில் மண வாழ்க்கை , நமக்கு மட்டும் வெளி நாட்டில் வாழ்க்கை என நீ யோசிக்கலாம். உன் படிப்பிற்க்கும் , திறமைக்கும் ஏற்ற உயர் கல்வியும், வேலையும், வசதியான வாழ்க்கையும் உனக்கு வெளி நாட்டில் கிடைக்கும், எங்கள் அருகாமையில்லாமலேயே உன்னால் எதையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிககையில் தான் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு உன்னை கட்டிக்கொடுக்க சம்மதித்தேன்.

எல்லாவற்றையும் நம்பிகையுடன் செய்த எனக்கு, இன்று உனக்கு விடை கொடுக்க மனதில் தைரியமும், தெம்பும் இல்லையடி கண்ணம்மா,
எப்போவேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என் மூத்த மகளை என்றபோது " சென்று வா மகளே" என்று கூறிய எனக்கு, எங்கோ கடல் கடந்து பறந்து செல்கிற என் செல்லக் கிளிக்கு விடைக்கொடுக்க என் மனசு வலிக்குதுடா, இதயம் வெடிப்பது போல் இருக்குதுமா"நா தழு தழுக்க என் தாய் பேசிக்கொண்டிருக்க,

எனக்குள் வேரூன்றி இருந்த விஷ மரம் வேறோடு மறைந்து போக, உடைந்த இதயத்துடன் , கண்ணீர் பொங்க என் தெய்வத்தின் காலில் நான் விழுந்தேன்...................





58 comments:

said...

கதை நல்லா இருக்குங்க... சினிமா பார்த்த எஃபக்ட்...

தொடர்ந்து எழுதவும்...

said...

நன்றி வெட்டி, தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன்.

said...

புதுசா வந்ததுமே கலக்கறீங்க .... Keep it up !!!

said...

வருகைக்கும், ஊக்கத்திற்க்கும் நன்றி oosi

Anonymous said...

என்னங்க பெரிய எழுத்தாளரா இருப்பீங்க போல இருக்கே

புது ஆள் மாதிரி தெரியல

வாழ்த்துக்கள்!

said...

நல்ல கருத்துள்ள கதை திவ்யா வாழ்த்துக்கள் !:)

said...

அருமையான கதை.

வாழ்த்துக்கள்.

said...

கதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். நடையில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மேலும் மெருகேற்றலாம்.

said...

திவ்யா!

வீட்டுல இரண்டாவதாக பிறந்தவர்களுக்கே உரிய உணர்வை நல்லா சொல்லியிருக்கீங்க1

உங்க கிட்டயிருந்து மேலும் பதிவுகளை எதிர்பாரிக்கிறேன்!

said...

\"அருமையான கதை.

வாழ்த்துக்கள். "/

நன்றி சந்தியா.

said...

\"நல்ல கருத்துள்ள கதை திவ்யா வாழ்த்துக்கள் !:) "/

எல்லாம் உங்கள் ஊக்கமும் , உற்ச்சாகமும் தானுங்கோ!

said...

\"கதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். நடையில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மேலும் மெருகேற்றலாம்"/

நடையில் கவனம் செலுத்துகிறேன் சூர்யகுமார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

said...

\"திவ்யா!

வீட்டுல இரண்டாவதாக பிறந்தவர்களுக்கே உரிய உணர்வை நல்லா சொல்லியிருக்கீங்க1

உங்க கிட்டயிருந்து மேலும் பதிவுகளை எதிர்பாரிக்கிறேன்! "/

நன்றி ecr, தொடர்ந்து பதிவிட முயற்ச்சிக்கிறேன்.

said...

:))

said...

Thanks for the LONG comment for my post Dev!

Anonymous said...

gud divya...done a gud work...nalla kadhai ezhudhareenga...

Anonymous said...

இதுவும் கொஞ்சம் சீரியல் Effect இருந்தாலும், நல்லாவே இருக்கு :) தொடர்ந்து எழுதுங்க!

-விநய்

said...

திவ்வியா,
நல்ல கதை. வாழ்த்துக்கள்.

said...

பாருங்கள் - பதிவில் உள்ள படத்தில்கூட அம்மாவும் மூத்தபெண்ணும்தான் மேட்சிங்காக உடுத்திக்கொண்டு இளையமகளை டீல்ல விட்டுட்டாங்க... :-(

--பாதிக்கப்படாத ஒரு இரண்டாவது
:-)

said...

\"one among u said...
gud divya...done a gud work...nalla kadhai ezhudhareenga...\"

Thanks a lot 'one among u'

said...

\"வெற்றி said...
திவ்வியா,
நல்ல கதை. வாழ்த்துக்கள். \"

வாழ்த்துக்களுக்கு நன்றி வெற்றி.

said...

\"Anonymous said...
இதுவும் கொஞ்சம் சீரியல் Effect இருந்தாலும், நல்லாவே இருக்கு :) தொடர்ந்து எழுதுங்க!

-விநய் \"

நன்றி விநய், நீங்க நிறைய சீரியல் பார்ப்பீங்களா??

said...

\"
பாலராஜன்கீதா said...
பாருங்கள் - பதிவில் உள்ள படத்தில்கூட அம்மாவும் மூத்தபெண்ணும்தான் மேட்சிங்காக உடுத்திக்கொண்டு இளையமகளை டீல்ல விட்டுட்டாங்க... :-(

--பாதிக்கப்படாத ஒரு இரண்டாவது
:-)
\"

கீதா எவ்வளவு கரெக்ட்டா கண்டுபிடிச்சிருக்கிறீங்க, வருகைக்கு நன்றி கீதா.

Anonymous said...

உங்களோட ரயில் சிநேகம் படிச்சிட்டு நீங்க சாதாரண ஆள்தான்னு நெனச்சேன். இப்பத்தான் புரியுது நீங்க பெரிய ஆளுன்னு.

Anonymous said...

//
\"Anonymous said...
இதுவும் கொஞ்சம் சீரியல் Effect இருந்தாலும், நல்லாவே இருக்கு :) தொடர்ந்து எழுதுங்க!

-விநய் \"

நன்றி விநய், நீங்க நிறைய சீரியல் பார்ப்பீங்களா?? //

அய்யோ..என்னங்க இப்படி கேட்டுடீங்க. சீரியலுகெல்லாம் பயந்து தான் ஊர விட்டு ஓடி வந்துட்டேன் :)

நமக்கெல்லாம் ஒன்லி காமெடி சீரியல் தான்.. :)

-விநய்

said...

\"Anonymous said...
//
\"Anonymous said...
இதுவும் கொஞ்சம் சீரியல் Effect இருந்தாலும், நல்லாவே இருக்கு :) தொடர்ந்து எழுதுங்க!

-விநய் \"

நன்றி விநய், நீங்க நிறைய சீரியல் பார்ப்பீங்களா?? //

அய்யோ..என்னங்க இப்படி கேட்டுடீங்க. சீரியலுகெல்லாம் பயந்து தான் ஊர விட்டு ஓடி வந்துட்டேன் :)

நமக்கெல்லாம் ஒன்லி காமெடி சீரியல் தான்.. :)

-விநய் \"

சீரியலுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடுவாங்களா? ஆச்சரியமாதான் இருக்குது விநய்.

Anonymous said...

Long time back there was a serial broadcasted in DD with exactly the same story like this. i think revathi played the role of second daughter and sri vidhya played the mother role. It might be a mere coincident but this reminded me that serial. but the story telling style is good. keep it up.
Regards,
Lakshmi

Anonymous said...

நல்லாருந்துச்சு திவ்யா.

said...

\"Lakshmi said...
Long time back there was a serial broadcasted in DD with exactly the same story like this. i think revathi played the role of second daughter and sri vidhya played the mother role. It might be a mere coincident but this reminded me that serial. but the story telling style is good. keep it up.
Regards,
Lakshmi \"

Thanks for visiting my blog and making comments Lakshmi.
Is it a serial with same type of story had been broadcasted, thats intresting.
May be I can start writing screen plays to TV serials too, just kidding,
Again thanks for ur visit Lakshmi.

said...

\"அகில் பூங்குன்றன் said...
நல்லாருந்துச்சு திவ்யா.\"

நன்றி அகில்.

Anonymous said...

///
\"Anonymous said...
இதுவும் கொஞ்சம் சீரியல் Effect இருந்தாலும், நல்லாவே இருக்கு :) தொடர்ந்து எழுதுங்க!

-விநய் \"

நன்றி விநய், நீங்க நிறைய சீரியல் பார்ப்பீங்களா?? //

அய்யோ..என்னங்க இப்படி கேட்டுடீங்க. சீரியலுகெல்லாம் பயந்து தான் ஊர விட்டு ஓடி வந்துட்டேன் :)

நமக்கெல்லாம் ஒன்லி காமெடி சீரியல் தான்.. :)

-விநய் \"


சீரியலுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடுவாங்களா? ஆச்சரியமாதான் இருக்குது விநய்.
///

அது சும்மா ஒரு Build Up க்கு சொன்னதுங்க :) இருந்தாலும், அந்த சீரியல் கொடுமையிலிருந்து தப்பச்ச மாதிரி தான் தோனுது. எங்கள மாதிரி பசங்களுக்கு [b] அவ்வுளவு பொருமை [/b] கிடையாதுங்க :)

-விநய்

said...

\"அது சும்மா ஒரு Build Up க்கு சொன்னதுங்க :) இருந்தாலும், அந்த சீரியல் கொடுமையிலிருந்து தப்பச்ச மாதிரி தான் தோனுது. எங்கள மாதிரி பசங்களுக்கு [b] அவ்வுளவு பொருமை [/b] கிடையாதுங்க :)

-விநய் \"

அப்போ சீரியல் பார்கிற ladies எல்லாம் ரொம்ப பொறுமைசாலீங்கன்னு சொல்லிறீங்க, இல்லையா விநய்?

Anonymous said...

இல்லையா பின்ன...இதுல மாற்றுக் கருத்தே இல்ல. அவங்கெல்லாம் தானே பொறுமையின் சிகரம்! (Atleast) சீரியல் முடியிற வரைக்கும் :)
-விநய்

said...

\"Anonymous said...
இல்லையா பின்ன...இதுல மாற்றுக் கருத்தே இல்ல. அவங்கெல்லாம் தானே பொறுமையின் சிகரம்! (Atleast) சீரியல் முடியிற வரைக்கும் :)
-விநய் \"

ஆஹா! சீரியல் முடியற வரைக்கும் தான் பெண்களின் பொறுமைன்னு சும்மா நச்சுன்னு சொல்லிடீங்க விநய்!

Anonymous said...

//
ஆஹா! சீரியல் முடியற வரைக்கும் தான் பெண்களின் பொறுமைன்னு சும்மா நச்சுன்னு சொல்லிடீங்க விநய்!
//

அடடா வம்புல மாட்டி விட்டுடாதிங்க திவ்யா! 'சீரியல் முடியிற வரைக்கும் தான்'னு நான் சொல்ல வரலைங்க.
ஆஹா இப்பவே ஏதோ ஒரு சங்கத்துல இருந்து சத்தம் கேக்குதே :-)

-விநய்

said...

\"Anonymous said...
//
ஆஹா! சீரியல் முடியற வரைக்கும் தான் பெண்களின் பொறுமைன்னு சும்மா நச்சுன்னு சொல்லிடீங்க விநய்!
//

அடடா வம்புல மாட்டி விட்டுடாதிங்க திவ்யா! 'சீரியல் முடியிற வரைக்கும் தான்'னு நான் சொல்ல வரலைங்க.
ஆஹா இப்பவே ஏதோ ஒரு சங்கத்துல இருந்து சத்தம் கேக்குதே :-)

-விநய் \"

சங்கதிலயிருந்து வருகிற சத்திற்கெல்லாம் பயந்தா எப்படி விநய்,
Be bold!

said...

இன்றுதான் படித்தேன்.
நல்ல கதை.
பாராட்டுக்கள் திவ்யா!

said...

\" நாமக்கல் சிபி said...
இன்றுதான் படித்தேன்.
நல்ல கதை.
பாராட்டுக்கள் திவ்யா!\"

சிபி, உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

[காலதமதமாக என் பதிவினை படித்தாலும் மனதார பாராட்டும் உங்கள் பாராட்டுக்கள் எனக்கு ஊக்கத்தை அளிக்கின்றது, நன்றி]

Anonymous said...

கதை நல்லா இருக்கு திவ்யா!!
நான் முன்னமே சொன்னா மாதிரி உங்க narration and language super!! :)

said...

\"CVR said...
கதை நல்லா இருக்கு திவ்யா!!
நான் முன்னமே சொன்னா மாதிரி உங்க narration and language super!! :) \"

CVR, உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி,
பொறுமையாக என்னோட பதிவுகள் நிறைய படிச்சுட்டு கமண்ட்ஸும் போட்டிருக்கிறீங்க, அதுகொரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!

said...

தேர்ந்த எழுத்தாளரை போல இருக்கிறது உங்கள் கதைகள்.. வாழ்த்துக்கள்..

said...

/Long time back there was a serial broadcasted in DD with exactly the same story like this. i think revathi played the role of second daughter and sri vidhya played the mother role. //

"பெண்" என்ற தொலைக்காட்சி தொடரில் வந்த கதை. வாரம் ஒரு கதையாக பிரபல நட்சத்திரங்கள் நடித்த தொடர் அது. I think DD broadcasted it in 89 or 90.

said...

Solvadharku yedhum illai ....En kangalil kanneerai thaivara...

Good entiment ...

Anonymous said...

Its really nice. Congrats!!

said...

\\ மு.கார்த்திகேயன் said...
தேர்ந்த எழுத்தாளரை போல இருக்கிறது உங்கள் கதைகள்.. வாழ்த்துக்கள்..
\

நன்றி கார்த்திக்

said...

\ அருண்மொழி said...
/Long time back there was a serial broadcasted in DD with exactly the same story like this. i think revathi played the role of second daughter and sri vidhya played the mother role. //

"பெண்" என்ற தொலைக்காட்சி தொடரில் வந்த கதை. வாரம் ஒரு கதையாக பிரபல நட்சத்திரங்கள் நடித்த தொடர் அது. I think DD broadcasted it in 89 or 90.\\

தகவல்களுக்கு நன்றி அருண்மொழி!

said...

\ kavidhai Piriyan said...
Solvadharku yedhum illai ....En kangalil kanneerai thaivara...

Good entiment ...\\\

நன்றி கவிதைபிரியன்!!

said...

\\ Bala said...
Its really nice. Congrats!!


தாங்க்ஸ் பாலா!

said...

\\ Bala said...
Its really nice. Congrats!!


தாங்க்ஸ் பாலா!

Anonymous said...

Divya, I can bet that I have read the story already somewhere. As soon as I started reading the story, I remembered the ending including the 'ashoka maram' comparison. Was it already published in any magazine?

said...

நீங்கள் இந்த கதையை வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் 'சங்கம் ன்னா இரண்டு' போட்டிக்கு அனுப்பலாமே!

நிச்சயம் பரிசை வெல்லலாம்! வாழ்த்துகள்! விரைவில் அனுப்புங்கள்!

said...

nichayamaga... intha kathai yin karu appottiku migavum sariyanatha....

oru irandam kuzhanthai yin mana nilai... :-)))

inruthan potiyin kadaisi naal...

by the way, i am not tamil... i am mukil his wife. i read ur blog, was awesome...

keep writing... this id is a common id.... :-))

said...

இனம் புரியா உனர்வு இந்த
கதை முடிவில்.. மனசு பாரமாக !

அன்புடன்
கருணாகார்த்திகேயன்.

said...

அருமையான கதை திவ்யா... முடிவில் மட்டும் எனக்கு ஒரு சிறு குறை. தாயின் பாசத்தை புரிந்த கொண்ட அவளை அதை அருகில் இருந்து உணர முடியாமல் வெளி நாடு அனுப்பி விட்டீர்களே நியாயமா இது?

வெளி நாடு மாப்பிள்ளை வராமல், அக்காவிற்கு திருமணம் ஆனதும் மகளிடம் தாயை உண்மையை கூற வைத்து, அவள் இரண்டு ஆண்டு மேல் படிப்பை வீட்டில் இருந்தே படிக்க வைத்து, அதன் பின் திருமணம் ஆகி வெளி ஊரோ வெளி நாடோ செல்ல வைத்து இருந்தால், மிக மகிழ்ந்து இருப்பேன்...

said...

G8 touching... appadi padikkum podhu real ah odina oru feel...

//எனக்குள் வேரூன்றி இருந்த விஷ மரம் வேறோடு மறைந்து போக, உடைந்த இதயத்துடன் , கண்ணீர் பொங்க என் தெய்வத்தின் காலில் நான் விழுந்தேன்...................//
touching line....

mind voice awesome.....

G8 going...

said...

Enna irunthalum ramyavukku antha uriya vayathil thayidamirunthu kidaikka vendiya paasam,tholamai kidaikkavillaye engira siriya varutham..!!!

Anyway Ramyavukku ippoluthavuthu than thayin paasathai unara vaithamaikku nanri..

vazhthukkal Divya..Keep it up..

said...

\\Blogger Raj said...

Enna irunthalum ramyavukku antha uriya vayathil thayidamirunthu kidaikka vendiya paasam,tholamai kidaikkavillaye engira siriya varutham..!!!

Anyway Ramyavukku ippoluthavuthu than thayin paasathai unara vaithamaikku nanri..

vazhthukkal Divya..Keep it up..\\

Hi Raj,

Thanks for taking time to read my old posts & pass on ur comments:))

said...

அக்கா தாங்க முடியல.....

உயிர்த்துடிப்புடன் கூடிய வரிகள்....