November 23, 2008

உயிரே!....உறவாக வா??? - 3

உயிரே!....உறவாக வா??? - 1


உயிரே!....உறவாக வா??? - 2


கண்ணீர் மல்க ஆம்புலன்ஸில் பானுமதியின் படுக்கைக்கு அருகில் அமர்ந்தபடி சென்ற இளமாறன், பானு கண் விழித்ததும் அருகில் அமர்ந்திருந்த நர்ஸிடம் சொல்வத்ற்குள் பானு மீண்டும் மயக்கமானாள்.

விரைந்து சென்று ஆஸ்பத்திரியை சேர்ந்தபோது அங்கு டாக்டரின் முடிவு அதிர்ச்சியளித்தது.

ஆழமாக வெட்டப்பட்டிருந்த பானுவின் வலது கரம் முழங்கைக்கு கீழாக முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதுடன், உடனடியாக பானு ஆபிரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டாள்.

சொந்த ஊருக்கு சென்றிருந்த தன் பெற்றோருக்கு ஃபோன் மூலம் தகவல் கூறினான் ரமேஷ்.

ஆபிரேஷன் தியேட்டருக்கு வெளியில் கனமான மனதுடன் நண்பர்கள் இருவரும் நிற்கையில் , இளா ரமேஷிடம்....

" ரமேஷ்........நானும்.....பானுவும்....."

எனக்கு எல்லாம் புரிந்தது என்பதுபோல் கண்களால் பதிலளித்து விட்டு, இளாவின் தோளில் தோழமையுடன் தட்டிக் கொடுத்தான் ரமேஷ்.

மயக்கம் தெளிந்து கண் விழித்த பானுவிற்கு , தன் தாயாரின் விசும்பல் மிக அருகில் கேட்டது.

"பொம்பள புள்ள இப்படி கதை எழுதாட்டி என்ன......இப்ப கையை ஒடைச்சுட்டு போய்ட்டானே படுபாவி.......இனிமே இவளை வைச்சுட்டு......."

அம்மாவின் புலம்பல் கேட்டதும் தன் வலது கரத்தை தேடினாள் பானு..........அழுகை பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு.

தன் வலது கரம் துண்டிக்கப்பட்டிருப்பதை காண பொறுக்காமல் தன் கண்களை அழுந்த மூடிக்கொண்டவளின் தலையை ஆதரவாக ஒரு கரம் தடவியது.
கண்திறந்து பார்த்தாள் பானு.......ஊமையாய் தனக்குள்ளே அழுதபடி பாசமுள்ள அப்பா!!!

"அ....ப்......பா" என்ற பானுவின் குரல் உடைந்து போயிருந்தது.

அந்தக் குரலைக் கேட்டதும்...
அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....

சட்டென்று அவள் கைகளைப்பற்றிக் கொண்டு
கண்களில் நீர் நிறைந்து வழிந்தோட..
வார்த்தைகள் தட்டுத்தடுமாறிட...

தாய்மையின் கனிவோடு தழுவி
அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!

பானுவை தான் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்து தன் பெற்றோரை வற்புறுத்தி ஹாஸ்பிட்டல் கேன்டினிற்கு உணவருந்த அனுப்பி வைத்தான் ரமேஷ்.

அவர்கள் அறையிலிருந்து வெளியேறியதும், ரமேஷ் பானுவின் அருகில் குனிந்து.......

"இளா வெளியில வெயிட் பண்றான்........உள்ளே அனுப்புறேன்" என்றான் குறும்பு புன்னகையுடன்

"அண்ணா.........!"

"எனக்கு எல்லாம் தெரியும்மா......." கண் சிமிட்டினான் ரமேஷ்.

அவன் வெளியேற கதவின் அருகில் செல்ல, பானு.....

"அண்ணா......"

"என்னமா?.......?"

"அவரை......நான் பார்க்க விரும்பலண்ணா"

"என்ன.......என்னடா சொல்ற?????"

"ஆமாம்ணா.......அவரை இனிமே என்னை பார்க்க வர வேண்டாம்னு சொல்லிடு"

"உணர்ச்சிவசப்படாதே பானுமா........அவன் உன்மேல...."

"தெரியும்ணா.......அதுனாலத்தான் சொல்றேன்.....ஒரு கை இல்லாத இந்த பானு அவருக்கு வேணாம்ணா.....போகச்சொல்லிடுண்ணா......"
விசும்பலுடன் வார்த்தைகள் வெளிவந்தன பானுவிடமிருந்து.

ரமேஷ் தன் கைகளினால் அறையின் கதவை சிறிது திறந்தபடி பானுவிடம் பேசிக்கொண்டிருந்ததால் , அறையின் வெளியில் இருந்த இளா, பானு தன் அண்ணனிடம் கூறியது அனைத்தையும் கேட்டான்.

விழியோரம் துளிர்த்த கண்ணீரை தன் விரலால் சுண்டி விட்டபடி அவ்விடம் விட்டு அவன் நகர......ரமேஷ் அவனை நிறுத்தினான்.


"மனதளவில் உடைந்து, குழம்பி போயிருக்கிற இந்நேரத்தில் பானுவிடம் எது பேசினாலும் அவள் தன் பிடிவாதத்தை தளர்த்த போறதில்லை, மாறாக அவளது இறுக்கம் தான் அதிகரிக்கும்.........சுயபட்சாதபத்தில் இருந்து அவள் வெளிவற சிலகாலம் ஆகும் இப்போ அவளுக்கு தேவை மன அமைதி , எவ்வளவு நாள் ஆனாலும் அவளுக்காக நான் காத்திட்டிருப்பேன் ரமேஷ்." நா தழுதழுத்தது இளாவிற்கு.





நீ என்னை வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிழைக்கிறேன்!

எனக்கு தெரியும் நீ
ஒரு ரோஷக்காரி என...
உன்பக்கமிருந்து உன்னை
வேதனை படுத்துவதை விட
உன்னை பிரிந்து நான் வேதனையடைந்தாலும்
பரவாயில்லை என்று உன்னை
சிறிது பிரிகிறேன் கண்ணே…

என் செல்லமே..
கொஞ்ச நாள் பொறுத்துக்
கொள்கிறேன்..
உன்னைக்
கொஞ்சும் நாள் தூரத்தில்
இல்லையென்ற
நம்பிக்கையுடன்...

போகுமுன் எந்தன்
காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!



பானுவின் உடல்நிலை தேறியதும் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பாணுமதி ....கெட்டிகாரப் பெண், கோபமும் அன்பும் சற்றென்று வரும்.
'அவளது பெயருக்கு தகுந்தபடி.........
பாணு என்றால் சூரியன், சூரியனைப் போலக் கோபச் சூடு;
மதி என்றால் நிலவு, நிலவைப்போல குளிர்ச்சியான அன்பு;

ஆனால் இன்றோ......யாரிடமும் பேசாமல் மெளனம் காத்தாள்.
கண்களில் எப்போதும் ஒருவித மிரட்சி.

தன் அறையின் பால்கனியில் அமர்ந்து நீல வானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் பானு. நட்சத்திரங்களின் சிமிட்டலையோ, நிலவின் ஒளி வீச்சையோ இப்போது அவளால் ரசிக்க முடியவில்லை. அவளது பீரிட்ட சோகம் அவள் கண்களில் நீரை பொழிந்தது.
இளாவின் நினைவுகள் மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தியது.....

இளாவை சந்தித்த நாட்களும், காதலை வெளிப்படுத்திய வேளையும் பானுவிற்கு கண்முன் காட்சியாய் விரிந்தது.......!!!

பானு தஞ்சாவூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை கிடைத்து அண்ணாவுடனே தனியாக வீடு எடுத்து தங்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அவளது பெற்றோரும் சென்னைக்கே குடிபெயர்ந்தனர்.

தன் அண்ணாவின் நண்பனாக இளா பானுமதிக்கு அறிமுகம் ஆனான். அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம், கவிதை என்று எந்த தலைப்பில் பேசினாலும், ஈடு கொடுத்து சுவாரஸ்யமாக பேசும் பானுவின் பேச்சு, அவள் முகத்துல் இருந்த ஒரு விதமானக் குழந்தைத்தனம்...என அனைத்தும் இளாவை கொள்ளையிட்டது.

ஒரு நாள் மாலையில், இளாவும் பானுவும் பேசிக்கொண்டிருக்கையில், இளா பானுவிடம்......




"உன்னை பர்ஸ்ட்டு எங்கே பார்த்தேன்னு ஞாபகம் இருக்கா?"

"இருக்கு......ஆட்டோல நான் வீட்டுக்கு வந்து இறங்கினப்போ, ஆட்டோக்காரருக்கு கொடுக்க சில்லறை இல்லாம தேடிட்டு இருந்தேன் , அப்போ என் அண்ணாவை பார்க்க வீட்டுக்கு வந்த நீங்க சில்லறை கொடுத்தீங்க............... அதை நான் இன்னும் திருப்பிக் கொடுக்கவே இல்லை.......ஹி ஹி ஹி"

"ஹும். ....!"

"ம்ம்... விளையாட்டா ஆறுமாசம் ஓடிட்டுச்ச இல்ல??"

"உனக்கு விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?"

"ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டிருக்கீங்க?"

"ம்ம்ம்.. கொஞ்சம் கன்ஃப்யூஷன்லே இருக்கேன்!"

"என்ன கன்ஃப்யூஷன்"

"எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"

"யாருகிட்டே எதை எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"

"உன்கிட்டே தான்"

"என்கிட்டவா??........சரி சொல்லுங்க"

"சொன்னா நீ என்னை தப்பா நினைச்சுக்க மாட்டியா?"

"பரவாயில்லை. சொல்லுங்க.........நான், தப்பா நெனைச்சிக்க மாட்டேன்"

"ப்ராமிஸ்........."

"காட் ப்ராமிஸ்"

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"

" ............................."

"உனக்கு இஷ்டம் இல்லியா பானு?"

" கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"



"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??"

தனது பேச்சு.... அவளுக்கு கோபத்தை வரவழைக்கிறது என்பதை அவளது முகசிவப்பும்.. மூக்கு விடைப்பும்.. இதழின் நடுக்கமும், வேக மூச்சில் ஏறி இறங்கிய நெஞ்சும் உணர்த்தியதும்,

"என்னடா செல்லகுட்டி.......கோபமா??"

" ஹலோ உடனே 'செல்ல்குட்டி'ன்னு கொஞ்சினா......கூல் ஆகிடுவேன்னு நினைப்பா??"

"அப்போ என்ன பண்ணினா.......கூல் ஆவா என் பானு??"என்றபடி........


கோபத்தில் இருப்பவளின் பின்னால் சென்று...செவிமடலை இதழால் மென்மையாய் உரசி... அதில் சிலிர்த்து அவள் எழுவதற்குள்...அப்படியே அணைத்து....நெற்றியில் இதழ் பதித்தான்!!

அந்த முதல் முத்தத்தை இப்போது நினைக்கையிலும் உடல் சிலிர்த்தது பானுவிற்கு!


என்னவனே!
உன்னை காதலிக்க ஆரம்பித்த
நிமிடம் முதல் - என்னை சுற்றி
சகலமும் நீயாக இருக்கவேண்டும்
என்று எண்ணினேன்.. எந்தன்
உயிராகவும் கூடத்தான்..!
அந்த உயிர் பிரியும் வலியை விட
நீ என்னை விட்டு பிரியவேண்டும்
என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா!
மரணத்தை கூட தைரியமாக எதிர்கொள்ளும்
எந்தன் இதயம்.. உந்தன் பிரிவை
தாங்கமாட்டாமல் தவிக்கிறது!



துணிச்சலுடன் திகில் தொடர் எழுதிய 'மதிமாறன்' அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக் கொண்டிருந்தார்.

இரண்டு மாதங்களில் பானுவிற்கு செயற்கை கை பொறுத்தப்பட்டது. இளமாறன் தான் இதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டான் என்பதை பின்னொரு நாளில் அவளது அம்மா சொல்ல அறிந்துக்கொண்டாள் பானு.

நாட்களும் உருண்டோடின.......பானுவின் பிறந்தநாள் வந்தது..........அன்று பானு........

[தொடரும்]


உயிரே!......உறவாக வா??? - 4

November 17, 2008

உயிரே!......உறவாக வா??? - 2

உயிரே!......உறவாக வா??? - 1

"யார் ......நீங்க" என்று பானு கேட்கவும்,

அவ்வுருவம் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவளை நெருங்கியது.

"நீ...ங்க.........யாரு?.....உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டபடி அவ்விருட்டில் அவனது முகம் தேடினாள் பானு.

" எழுத்தாளர் மதிமாறன்.....இருக்காரா? .....நான் அவரைப் பார்க்கனும்" என்றான் கணீர் என்ற குரலில்.


அதற்குள் எழுத்தாளர் மதிமாறன் அட்ரஸ் இந்தாளுக்கு எப்படி கிடைச்சது? என்று வியந்தவளாய்....

"என்ன.......விஷயமா அவரைப் பார்க்கனும்?"

" இது அவரு வீடுதானே.......நான் அவரோட ரசிகன், அவரை பார்க்கனும்" மீண்டும் கரகரப்புடன் குரல் தெரித்தது அவனிடமிருந்து.

"அது.....நான் தான்" என்றாள் பானு அடிக்குரலில்.

"நீ..........நீயா???????'

"ஆமாம்"

"எழுத்தாளர் மதிமாறன் ஒரு பொம்பளையா?????" அவனது குரலில் தெரிந்த இளக்காரம் அவளை சுதாரிக்கச் செய்தது.


"எதுவானாலும்.......காலையில் வந்து என்னை பாருங்க சார்" என்றவளாய் வாசல் கதவை மூட எத்தனிக்க, அவனது வலுமையான கரம் கதவை முட்டி திறந்துக் கொண்டு அவன் வீட்டிற்குள் வந்தான்.

"ஹலோ......எதுவானாலும் காலையில் வாங்கன்னு சொன்னேன்ல.........முதல்ல வெளியில போங்க சார்" என்றாள் ஆக்ரோஷமாக.

" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற?.......இன்னும் உன்கிட்ட தீர்த்துக்க வேண்டிய கணக்கு எவ்வளவோ இருக்கு....உன் நாவலை பப்ளீஷ் பண்ணின பப்ளீஷரை மிரட்டி உன் அட்ரஸ் வாங்கினப்போ கூட அவன் நீ ஒரு பொம்பளை ....அதுவும் கொஞ்ச வயசு பொண்ணுன்னு சொல்லாம மறைச்சுட்டானே?"

கோபக்கணைகளுடன் அவனிடமிருந்து ஒருமையில் வார்த்தைகள் வந்து விழுந்தன.

'அடப்பாவமே!!! அண்ணனோட கேஸ் ஹிஸ்ட்ரி ஃபைலில் இருந்து தகவல் எடுத்து, கற்பனை கலந்து நான் எழுதிய தொடர்கதையின் வில்லனா இவன்??????
அப்போ..........அப்போ.......இவன் தான் போலீஸ் தீவிரமா தேடிட்டு இருக்கிற கஜேந்திரனா??
'

'இப்போ இவனிடமிருந்து எப்படி தப்பிக்கிறது?', என்று யோசித்தவளாய், தன் குரலை தாழ்த்தி.........

"நீங்க .......என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல....." என்றாள் பவ்யமாக.

'மனசுக்குள் , "கடவுளே, கடவுளே!! என் அண்ணா இப்போ டியூட்டி முடிஞ்சு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்திடனும்' என்று படபடப்புடன் வேண்டிக்கொண்டாள் பானு.

அவளது பவ்யமான பேச்செல்லாம் அவனிடம் எடுபடுவதாக தெரியவில்லை........மாறாக.....

"உனக்கு புரியாதுடி......புரியாது.......புரியாமத்தான என்னைய பத்தி உன் தொடர் கதைல புட்டு புட்டு வைச்சு என் கூட்டாளிங்க எல்லாரையும் போலீஸ் கண்டுபிடிக்க துப்பு கொடுத்த நீ"

"அச்சோ........அது முழுக்க முழுக்க என் கற்பனை கதை சார்........நம்புங்க"

" கற்பனைன்னு என்கிட்டவே புளுகிறியா??.........சொல்லுடி எப்படி என்னை பத்தின விபரங்கள் எல்லாம் உனக்குத் தெரியும்?..........ம்ம் சொல்லுடி....." என்று அவளை நெருங்கி வந்து அவளது கழுத்தில் கை வைத்து அழுத்தினான்.

"ப்ளீஸ்..........ப்.....ளீஸ்.........என்னை.....ஒன்னும் பண்ணிடாதீங்க......."

"அடச்சீ........நீ நினைக்கிற மாதிரி எதுவும் உன்னை பண்ணமாட்டேன்.....மதிமாறன் ஒரு பொட்டச்சின்னு தெரியாமலே .......அந்தாளுக்கு என்ன தண்டனை கொடுக்கனும்னு வந்தேனோ.......அதேதான் உனக்கும்"

அது என்ன தண்டனை என்று அவள் சிந்தித்த அதே நொடியில்..........அவளது கரத்தை அழுத்தியிருந்த அவனது வலது கரம் பிடி தளர்ந்து, அவனது சட்டையின் பின்னாலிருந்து ஒரு நீண்ட கத்தியை உருவியது.
மெழுகுவர்த்தியின் ஒளியில் கத்தி மின்னியது,
பானுமதியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது,
அடுத்த கணம்.........அவளது வலது கரத்தை அழுத்தி பிடித்த அவன்,

" இந்தக் கை தானே என்னை பற்றி தொடர் கதை எழுதி போலீஸ்க்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிச்சது.........இனிமே.........இந்த கை கதையே எழுத கூடாது......"

மறுவிநாடி, அந்த கத்தி பானுவின் வலது கையினை ரத்தம் தெறிக்க வெட்டியது!!!!!!

பீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,
"அம்ம்ம்மா........." என்ற அலறலுடன் மயங்கி கிழே சரிந்தாள்.

' வந்த காரியம் முடிந்தது, மின் இணைப்பு மீண்டும் வரும்முன், அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் ' என்ற பரபரப்புடன் வெளியேறிய கஜேந்திரன், மாடிபடிகளில் வேகமாக திரும்புகையில் எதிரில் மாடிபடி ஏறிவந்த பானுவின் அண்ணன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மீது எதிர்பாராவிதமாக மோதிவிட,

தங்கையின் "அம்மா' என்ற அலறலை ஜீப்பிலிருந்து வீட்டின் முன் இறங்கும்போது கேட்டதினால், இருட்டில் ஏதாவது பூச்சு பார்த்து பயந்திருப்பாள் பானு என்று கலக்கத்துடன் மாடிபடிகளில் ஏறிய ரமேஷ், தன் மீது மோதிய உருவம் யார் என்று கூர்ந்து கவனிக்க,
அந்நேரம் வீட்டின் முன் வந்து நின்ற இளமாறனின் கார் வெளிச்சத்தில் அவ்வுருவத்தின் முகம் தெளிவாக தெரிந்தது, ரமேஷிற்கு.

நொடியில் போலீஸ் மூளை சுதாரித்தது, தன் மீது மோதியவன் யாரென்று அடையாளம் கண்டுகொண்டவன், கஜேந்திரன் மீது சட்டென்று பாய்ந்து அவனை பிடிக்க ரமேஷ் எத்தனிக்க,
வெளிச்சத்தில், ரமேஷின் காக்கிச்சட்டையை கண்ட கஜேந்திரன், மாடிபடிகளிலிருந்து தாவி கீழே குதிக்க முயற்சித்தான்,
அதே கணம் ரமேஷ் அவன் மீது பாய்ந்து அவனை அமுக்க,
மின் இணைப்பு அந்நேரம் உயிர் பெற்றது.

தன் பிடியிருலிருந்து தப்பி ஓட முயன்ற கஜேந்திரனின் முழங்காலை குறிப்பார்த்து தன் கைத்துப்பாக்கியினால் ரமேஷ் சுட்டுவிட, கஜேந்திரன் சுருண்டு விழுந்தான். கீழே விழுந்தவனை இருகப்பற்றி, தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.

பானுமதி தனக்கு அன்பளிப்பாக கொடுத்த 'மதிமாறனின்' முதல் நாவலை பார்க்கும் ஆவலில், அவளை அவளது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தன் வீட்டிற்கு போகும் வழியில் தன் காரை ஒரமாக நிறுத்தி , அன்பளிப்பை பார்த்த இளமாறனுக்கு, அன்பளிப்பிற்குள் இன்ப அதிர்ச்சியாக........

தன் பெயரான இளமாறனில் உள்ள 'மாறனை'யும் அவளது பெயரில் உள்ள 'மதி'யையும் இணைத்து மதிமாறன் என்ற புனைப்பெயரில் தொடர் கதை எழுதியதும், இப்போது நாவல் எழுதியதும் , தன் அன்பு காதலி பானுமதி தான் என்றும் அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்த இளமாறன்,

உடனே த்ன் காரை திருப்பிக்கொண்டு பானுமதியின் வீட்டிற்கு வந்திருந்தான்.......

வந்த இடத்தில் அவன் கண்முன், ரமேஷ் ஒருவனை துப்பாக்கியால் சுடுவதும்........உடனே தன் டிபார்ட்மெண்டுக்கு ஃபோன் செய்ததையும், அதிர்ச்சியுடன் கண்கொட்டாமல் பார்த்தபடி நின்றான் இளமாறன்.

சில நிமிடங்களுக்கு முன் 'அம்மா' என்று அலறிய தஙகையின் நினைவும், மாடியிலுள்ள தன் வீட்டிலிருந்து கஜேந்திரன் இறங்கி வந்ததும் ரமேஷிற்கு பளிச்சிட........தன் நண்பன் இளமாறன் கையில் ஒரு புத்தகத்துடன் இந்நேரத்தில் வீட்டிற்கு எதற்கு வந்திருக்கிறான் என்றெல்லாம் யோசிக்க அவகாசமில்லாமல்,

"பானு.....பானு" என்று அலறியபடி ரமேஷ் மாடிபடிகளில் வேகமாக ஏறினான்.
இளமாறனும் அவனை பின் தொடர்ந்தான்.

வீட்டினுள் நுழைந்த இருவரும், அதிர்ச்சியில் உறைந்தனர்........

"பானு......பானுமா...........என் செல்லமே" என்ற கதறலுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பானுவை தன் மடிமீது போட்டு இளமாறன் அழுகையுடன் அரற்றினான்.

சீண்டிப்பார்ப்பதில்
குழந்தையாய் விளையாடி
கள்ளமற்ற சிரிப்பில்
உள்ளம் களவாடி
என்னுள் பூத்திருந்த செல்லமே
நான் விரும்பும் கதா
நீதானென அறிந்தகணம்
அள்ளிக்கொஞ்சிட
ஓடிவந்தேன்
உன்னை இப்படிக்காணவா

தேடிவந்தேன்...


திகைப்பிலிருந்தாலும், உடனே ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்த ரமேஷின் கடைக்கண் பார்வையில்......

தன் நண்பன் இளா..........தன் தங்கை பானுமதியின் வெட்டப்பட்ட கைகளை பார்த்து கதறுவதை கவனித்தான்.

அவர்களுக்கு நடுவில் கலந்தோடும் ஆழமான காதல் ரமேஷிற்கு திட்டமாக புரிந்தது!!

இரண்டே நிமிடத்தில் ரமேஷை வீட்டில் இறக்கிவிட்டு சென்றிருந்த போலீஸ் ஜீப் வீட்டின் முன் வந்து நிற்க, கான்ஸ்டபிள் இருவர் கஜேந்திரனை ஜீப்பில் ஏற்றினார்கள்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, பானுமதியை ஆஸ்பத்திரிக்கு அதில் கொண்டு சென்றனர்.

கண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....

[தொடரும்]

உயிரெ!.....உறவாக வா?? - 3

உயிரே!....உறவாக வா?? - 4

November 10, 2008

உயிரே!......உறவாக வா??? - 1

'ஆறு மணிக்கு புக் ஃபேர் போகனும், சீக்கிரம் காஃபி ஷாப் வந்திடு, அங்கிருந்து இரண்டு பேரும் சேர்ந்து புக் ஃபேர் போலாம்' என்று தன் காதல் தேவதை பானுவிற்க்கு ஃபோனில் கட்டளையிட்டுவிட்டு அவளுக்காக காஃபி ஷாப்பில் காத்திருந்தான் இளா.

அவள் வர தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், பொறுமையிழந்தவனாய் தனது பற்களுக்கும் நகத்திற்கும் போர் தொடுத்தான்.

"ஹாய்" என்று கையசைத்துக் கொண்டே அவள் வர...........தூரத்தில் அவள் வருவதைப்
பார்த்த நொடியே அவனது கோபப்புயல் வலுவிழந்து கரையைக் கடந்தது.



அவனது தேவதை அவனை நெருங்கினாள்....!!!

என்ன அபாரமான அழகு! புதிதாய் பூத்த ரோஜாவைப்போல!!
தலையை பின்னுக்கு தள்ளி அவள் சிரித்தபோது..
அவனுக்குள் பூகம்பங்கள் வெடித்தன;
பெரிய கட்டான கண்கள்,
சற்றே அண்ணாந்த அழகமைப்பான நாசி,
கதகதப்பான உதடுகள்........!!

"ஸாரிங்க.......கொஞ்சம் லேட்டாயிடுச்சு........ஒரே டிராஃபிக்.........ரொம்ப ஸாரி"

"........."

"ம்ம்.........கோபமா???" கெஞ்சலுடன் அவள் அவனது முகத்தருகே குனிந்து காதில் சினுங்க,

காஃபி ஷாப் பொது இடம் என்பதையும் மறந்து, அவளது கன்னத்தில் 'இச்' சென்று முத்தம் பதித்தான்.

உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..

முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான்
உன் உதட்டில்
ஒரு மச்சம்!!


எதிர்பாரா முத்தத்தில் அவளது மூக்கு நுனி, காது மடல் எல்லாம் சிவந்தது.

செல்ல சிணுங்களுடன் அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.


ஆறடிக்கு குறையாத உயரமும் அதற்கேற்ற கட்டான உடலும் முகத்தில் படிப்பின் தீட்சண்யமும்.. அலை அலையாய் படர்ந்த கேசமும்.. அளவான மீசையுமாய் … .. கூரிய கண்களுடன் உதட்டில் வளைந்த சிரிப்புடன் தன்னை பார்த்தவனை ஒரு கணம் நன்றாக உற்று பார்த்தாள் பானு.
தன் அண்ணனின் நண்பன், தன் வருங்கால கணவன் இளாவின் குறும்பு பார்வையை அதற்கு மேல் சந்திக்க இயலாதவளாய் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

அவளது வெட்கி சிவந்த முகத்தைப் பார்த்தபோது, அவனது காத்திருப்பின் அவஸ்தை காணாமலேயே போனது!!

நீ தாமதமாய் வந்தால் கூட
என்னால் கோபப்பட முடியவில்லை...
திட்டுவதைபோல நடிக்கத்தான் முடிகிறது...
அப்போது தானே என்னை விதம்
விதமாக கொஞ்சி சமாதனப்படுத்துவாய்...


சிறிது நேர மெளனமான இம்சைக்குப் பின், அவளே பேச்சை ஆரம்பித்தாள். அன்றைய நாள் இருவருக்கும் எப்படி சென்றது என்று பேசி இயல்பு நிலைக்கு வந்து, காஃபி அருந்திய பின்பு , புக்ஃபேர் போகலாம் என அவசரப்படுத்தினான்.

"டைம் ஆச்சு ....ஆல்ரெடி நீ வந்தது லேட்.....வா புக்ஃபேர் போலாம்"

"கண்டிப்பா போய்தான் ஆகனுமா??.............டயர்டா இருக்குது..........இன்னொருநாள் போலாமே......ப்ளீஸ்"

"என்ன விளையாடுறியா????..........புக் ஃபேர் ஒப்பன் பண்ணின இன்னிக்கே ஏன் நான் போக ஆசைப்படுறேன்னு ஃபோன்ல சொன்னதை மறந்துட்டியா??"

"ஆங்........மறக்கல,மறக்கல...........அந்த எழுத்தாளர் மதிமாறனோட முதல் நாவல் இந்த புக்ஃபேர்ல பப்ளிஷ் ஆகுது.........அதுக்காகத்தானே?"

"தெரிதில்ல.......அப்புறம் என்ன........சரி வா போகலாம்"
என்று கூறிக்கொண்டே தன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க முற்பட்டான்.

"நாளைக்கு போனா அந்த நாவல் கிடைக்காதா??.......இன்னும் 3 நாள் புக் ஃபேர் இருக்குதே.......ஸோ நாளைக்கு போகலாம் ..ப்ளீஸ்"

" என்னை டென்ஷன் ஆக்காதே சொல்லிட்டேன்.........எனக்கு மதிமாறனோட எழுத்து எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும், உனக்கு எப்பவுமே அவரோட எழுத்துனா பிடிக்கிறதே இல்ல, அதான் இப்ப......வேணும்னே நாளைக்கு போலாம், அப்புறமா போலாம்னு வம்பு பண்றே"

"ஹே..........கூல் டவுண்பா.......அந்த ஆளு பெரிய எழுத்தாராம் , அவர் எழுத்து மேல இவருக்கு ஒரே கிரேஸாம்.............முதநாவல் பப்ளிஷ் பண்ணினதும் உடனே வாங்கிடனுமாம்........ரொம்பதான் குதிக்கிறாரு"

"மறுபடியும் என் கோபத்தை கிளறாதே.....இன்னொரு தடவை அவரோட எழுத்து பத்தி கிண்டலா பேசாதே, அவர் வாரபத்திரிக்கைல எழுதின தொடர்கதையை நீ படிச்சுப் பார்த்திருக்கனும், .........என்னா ஒரு த்ரில், திருப்பம்.......சான்ஸே இல்ல, பெரிய டிடக்டிவா இருக்க வேண்டியவரு அவரு தெரிஞ்சுக்கோ"

"ஆமா நானும் தான் படிச்சேன் அந்தாள் எழுதின தொடர் கதை,கொள்ளைக்கார கும்பலோட சூழ்ச்சி, தந்திரம், கொலை எல்லாம் வெளிப்படையா எழுதிருந்தார் வன்முறையோட.........அது உங்களுக்கு த்ரில்லா??? அந்த கொலைக்காரனோட சூட்சமம் எல்லாம் எப்படி அப்படியே நேர்ல பார்த்த மாதிரி எழுதுறார்........கற்பனை கதை மாதிரியே தோணல, இந்தாளே ஒரு கொள்ளைக் கூட்ட தலைவனா இருந்திருபபாராயிருக்கும்,அதான் இப்படி பரபரப்பு ஏற்படுத்துற மாதிரி தொடர்கதை எழுதுறார்"

" உனக்கு அவரோட எழுத்து பிடிக்கலைன்ன கம்முனு இரு .....இப்படி விமர்சனம் பண்ணாதே அவரோட எழுத்தை, எவ்வளவு பெரிய புத்திசாலியா இருக்கனும் அவரு இப்படி ஒரு விறுவிறுப்பான தொடரை எழுத..........நீ ஒரு மக்கு, டீவி சீரியல் பார்த்துட்டு , மூக்கு சீந்தி அழுகுற சாதாரன தமிழ் பொண்ணு, ஞானசூன்யம் நீ.........உனக்கெங்கே புரியும் இதெல்லாம்....."

"இப்ப எதுக்கு என்னை ஞானசூன்யம்னு சொல்றீங்க?? என்னை விட உங்களுக்கு அந்த மதிமாறன் பெருசா போய்ட்டாரா??"

கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.

சமாதானமானவளாக....குறும்பு பார்வை பார்த்தாள் பானு!!


விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோபப்பட
விடுவதாயில்லை

உன் விளையாட்டுத்தனம்!



"நானும் சும்மாதான் சீண்டி பார்த்தேன் உங்களை.......எனக்கு மதிமாறனோட எழுத்தில் அதிக ஈடுபாடு இல்லினாலும் உங்களுக்கு பிடிக்கும்னு ...புக் ஃபேர் போய், அவரோட நாவல் வாங்கிட்டுத்தான் இங்கே வந்தேன்........அதான் நான் வர்ரதுக்கு லேட்"

என்று கிஃப்ட் ராப் செய்யப்பட்ட நாவலை அவனிடம் கண்சிமிட்டியபடியே கொடுத்தாள்.

ஆச்சரியத்தில் விழித்தான்...!!!

"தாங்க்ஸ்டா........செல்லம்" என கூவிக்கொண்டே அவளிடமிருந்து கிஃப்ட்டை வாங்கி ஆசையாக பிரிக்கப்போனான்.

" நோ.......நோ......." என்று கீச்சிட்டாள் அவள்.

அவன் பதறிப்போய் அவளை நோக்க...

"பொறுமை சார்.........இந்த கிஃப்ட்டை இப்போ பிரிக்க கூடாது நீங்க. உங்களுக்கு பிடிச்ச நாவல் மட்டும் இந்த கிஃப்ட் பேக்கில் இல்ல.........அதுகூடவே இன்னொரு கிஃப்ட்டும் நான் வைச்சிருக்கிறேன்.........ஸோ இரண்டு கிஃப்ட்டையும் நீங்க வீட்ல போய்தான் பார்க்கனும்"


" ப்ளீஸ்....ப்ளீஸ்டா கண்ணம்மா............இப்பவே..........ஓபன் பண்றேன்டா" என அவன் கெஞ்சி கூத்தாடியும் அவள் சம்மதிக்கவில்லை.

நாவலை பார்க்கும் ஆவலில் அவன் உடனே வீட்டிற்கு போகலாம் என துரிதப்படுத்தினான்.

இருவரும் அவனது காரில் சென்றனர்.

அவளது வீட்டின் முன் காரை நிறுத்தவும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டித்தது.

"என்னடா கரெண்ட் போய்டுச்சு......கீழ் போர்ஷனில் வீட்டு ஓனர்ஸும் இல்ல, உங்க அப்பா அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்கன்னு சொன்ன.......எப்படி நீ தனியா......"

"அதெல்லாம் ஒன்னும் ப்ரச்சனை இல்லை.........நாங்களெல்லாம் இருட்டை பார்த்து பயப்படுற பரம்பரையா??...போலீஸ்காரன் தங்கச்சியாக்கும் நான்"

" இருந்தாலும்..........ராத்திரி...........தனியா............ஒரு வயசுப் பொண்ணு........அதுவும் அழகான பொண்ணு.........தனியா வீட்ல.......நான் வேணா துணைக்கு...."

"அய்யே.......ஆசைய பாரு! ஒன்னும் வேணாம், அதெல்லாம் நாங்க பயப்படாம இருந்துப்போம். என் அண்ணாவும் டியூட்டி முடிஞ்சு வர்ர நேரம் தான்.......ஸோ நோ ப்ராப்ளம், நீங்க புறப்படுங்க"

"ஹும்......சரிடா.......டேக் கேர்...குட் நைட்!!!"

உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....


தனது மொபைல்லிருந்த டார்ச் வெளிச்சத்தில் மாடிப்படி ஏறி தன் வீட்டிற்குள் அவள் செல்வதை பார்த்தபின் , அவனும் காரில் தன் வீடு நோக்கி புறப்பட்டான்.

வீட்டினுள் வந்தவள் எமர்ஜென்ஸி லைட்டை ஆன் செய்தாள்.....அதிலும் சார்ஜ் போதுமான அளவு இல்லாததால் மெழுகுவர்த்தியும் ஏற்றினாள், முகம் கழுவி விட்டு முன் அறைக்கு வந்தாள்.

தங்கள் காதலை தன் அண்ணனிடம் சொல்லிவிட இளா எவ்வளவோ வற்புறுத்தியும், பானு விஷயத்தை அண்ணனிடம் சொல்ல அருமையான சந்தர்ப்பம் தேடி கொண்டிருந்தாள். தன் நண்பனின் தங்கையையே காதலித்துக் கொண்டு, அதனை நண்பனிடம் மறைக்க ஏனோ இளாவிற்கு விருப்பமில்லை.
இன்று இளாவிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த மாதிரி அண்ணாவிற்கும் காதல் விஷயத்தை இன்னிக்கு சொல்லிடனும், அம்மா அப்பா ஊரில் இல்லாத இந்த நேரத்தில் அண்ணனிடம் பக்குவமா விஷ்யத்தை சொல்றது நல்லது , என்று மனதிற்குள் நினைத்தவளாய் சோஃபாவில் தலை சாய்த்தாள் பானு.

சிறிது நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டது.

'பாவி!!! சஸ்பென்ஸ் தாங்காம........பாதி வழியிலேயே காரை ஓரங்கட்டிட்டு நான் கொடுத்த கிஃப்ட் பேக்கை ஓபன் பண்ணியிருப்பாங்க.......அதான் உடனே யூ டர்ன் போட்டு வந்திருப்பாங்க,
அச்சோ, .......என் ஸ்பெஷல் கிஃப்ட் பார்த்து .என்ன கலாட்டா பண்ண போறாங்களோ?
எப்படி சமாளிக்கப் போறேனோ தெரிலீயே!!
வெட்கம் பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு,
ரத்த நாளங்கள் துடித்தன!!

அவள் கதவினருகே செல்வதற்குள் மீண்டும் கதவு படபடப்புடன் தட்டப்பட்டது.

"ஒரு வேளை அண்ணா டியூட்டி முடிஞ்சு வந்துட்டாரோ.......இருட்டிலே தன் கிட்ட இருக்கிற வீட்டு சாவி எடுத்து திறக்க சோம்பல் பட்டு கதவு தட்டுறார் போலிருக்கு, என் நினைத்துக்கொண்டே கதவை திறந்தாள்.

அங்கு இருட்டில்..........அவள் இதுவரை கண்டிராத ஒரு உருவம்!
இருட்டில் அந்த கம்பீரமான கட்டுமஸ்தான உருவத்தோற்றம் திகிலை ஏற்படுத்தியது அவளுக்கு.



"யா......யாரது" என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

பதலளிக்காமல் அவ்வுருவம் இரண்டடி எடுத்து வைத்து ,
அவளை நெருங்கியது!!

"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!

[தொடரும்]

உயிரே!...உறவாக வா?? - 2


உயிரே!....உறவாக வா?? - 3


உயிரெ!....உறவாக வா??? - 4

September 30, 2008

மாமனாருக்கு மரியாதை....!!!



அப்பா-மகன் உறவுக்கு நடுவில் ஒரு விதமான இடைவெளி அந்த மகன் டீன் ஏஜ் பருவம் அடையும் போது ஏற்படுவது சகஜம்.
தன் தேவைகளை அம்மாவின் மூலமாகவே அப்பாவிடம் தெரிவிக்க ஆரம்பிப்பான் பையன் அந்த பருவத்தில், நாளடைவில் இந்த இடைவெளி அதிகமாகி, பேசிக்கொள்ளும் வார்த்தைகளும் அளவுடன் அமைந்துபோகும்.

அப்பாவின் மேல் மரியாதையும் பாசமும் இருந்தாலும் , 'சற்று' தள்ளியிருந்து உறவுகாக்கும் இந்த பையன், தனக்கு திருமணமாகும் போது, தன் மாமனாரோடு எப்படி பழகுவான்???

புது 'மாப்பிள்ளை' அந்தஸ்து , கவுரவம் எல்லாம் வேறு அவனுக்கு ஒரு புது கெத்து கொடுத்திருக்கும்போது, தகப்பன் வயதிலிருக்கும் தன் மாமனார் கொடுக்கும் மரியாதையை எப்படி கையாள வேண்டும்??

இதோ சில டிப்ஸ்.......

* தன் மகன் வயதில் இருக்கும் உங்களுக்கு உங்கள் மாமனார் தரும் மரியாதையை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல், திருப்பி செலுத்த தவற வேண்டாம்.

*உங்கள் மாமனாரோடு தொடர்ச்சியாக 5 நிமிடத்திற்கு மேல் பேச பொதுவானவை ஏதும் இல்லை என யோசிக்கிறீர்களா???......உங்கள் மனைவியிடம், அவளின் அப்பாவின் ரசனை, விருப்பு , வெறுப்புகள் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
அந்த வயதில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு பற்றி பேச விரும்புவர்.

*எப்படி உங்கள் தாயாருடன் உங்கள் மனைவி ஒத்துப் போய் பேசி பழகுவது உங்களுக்கு ஒரு சந்தோஷத்தை, மன்நிறைவை கொடுக்குமோ,அதேபோன்ற எதிர்பார்ப்பு உங்கள் மனைவியின் மனதில்............... உங்களுக்கும் தன் தகப்பனுக்கு நடுவில் நல்லுறவு இருக்க வேண்டுமென இருக்குமில்லையா??......இதை நினைவில் கொண்டு உங்கள் மாமனாரோடு பழகுங்கள்!!

*உங்கள் மனைவியை பற்றி ஏதும் புகார் தெரிவிக்க விரும்பினால், அதனை உங்கள் மனைவியின் தாயாரிடம் கூறுவது மேல்.
தன் மகளை பற்றி தன்னிடமே தன் மருமகன் குறை கூறினால், அதை தாங்கிக்கொள்வதும், கையாளுவதும் எந்த தகப்பனுக்கும் கஷ்டமான காரியம்.
[உங்களால் சரி செய்துக்கொள்ள முடியாத பட்சத்தில் மட்டுமே புகார் துறை வரைக்கும் செல்வது சிறந்தது.......திருமண பந்தத்திற்கு உகந்ததும் கூட]

*நீங்கள் மாமனார் வீட்டிற்கு போகும்போதெல்லாம் கிடைக்கும் மாப்பிள்ளை கவனிப்பை பயன்படுத்தி 'ஒவரு' பந்தா பண்ணாதீங்க.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனமுவந்து உங்கள் மாமனார் கொடுக்கும் வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்,
இளப்பமாக எண்ணி ஏற்க மறுப்பது,
அதிகமாக எதிர்பார்த்து டிமாண்ட்
செய்வதையும் தவிருங்கள்.

*எந்த தகப்பனுக்கும் செல்ல மகளை தன் மருமகன் நன்றாக கவனித்துக்கொள்கிறாரா?? என அறிந்துக்கொள்ள ஒரு ஆர்வமும் ஆசையும் இருக்கும், அதனால்.....
மாமனாருக்கு முன் உங்கள் மனைவியிடம் நெருக்கமாக நடந்துக்கொள்ளாவிட்டாலும்,

"என்னமா சாப்பாடு ரெடியா?"

"மாமாவுக்கு காஃபி கொண்டுவாமா"

"நீ சாப்பிட்டியாமா?"

இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...

பெத்தவரின் மனம் குளிர்ந்து போகும்!!!

பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி அத்தருணத்தை
தருவதில் தவறொன்றுமில்லையே???

September 09, 2008

தேடி வந்த காதல்......!!!

அலுவலக விஷயமாக Noida சென்றுவிட்டு அன்று தன் பெங்களூர் அலுவலகம் திரும்பிய ரமேஷ், வேலைகளை தொடங்கும் முன் வழக்கம்போல் தன் அலுவலக இமெயில்களை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தான்,

இவன் ப்ராஜக்ட் லீடாக பணிபுரியும் குழுவிற்கு புதிதாக 'Verification Engineer' பதவிக்கு ஒர் பெண் பணியில் சேர்ந்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு ப்ராஜக்ட் மனேஜரிடமிருந்த வந்திருந்தது.

அவன் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் கொள்ளாமலே மேலோட்டமாக மெயிலை படித்திருந்தான்.
அவனது 26 வயதிற்கே உரிய ஆர்வ கோளாரில் பெண்ணின் பெயரை பார்ப்பதற்காக ஈ-மெயிலை மறுமுறை படிக்க தொடங்க..........அதே வேளையில் ,


"எஸ்கூஸ் மீ" என்று அவன் பின்னாலிருந்து மெல்லிசை போன்ற குரல் கேட்டு திரும்பியவன், ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான்.

அவளும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது கண்களில் சிறிது கணம் தோன்றிய ஆச்சரிய பார்வை உணர்த்தியது.
அதனை மறைத்தவளாய் தன்னை அறிமுகப்படுத்த துவங்கினாள்,

"ஐ அம் சந்தியா, ஐ ஹேவ் ஜாயிண்ட் அஸ் அ வெரிஃபிக்கேஷன் இஞ்சினியர் இன் யுவர் டீம்"

"யெஸ் ஐ டு நோ..........வெல்கம் டூ அவர் டீம்........சந்........சந்தியா"

"தேங்கியூ"

பின் தனது வேலைக்கான பொறுப்புகள் பற்றின விபரங்களை ரமேஷிடம் மிக மிக இயல்பான தொனியில் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.

கல்லூரி படிப்பை முடித்து இத்தனை வருடங்கள் களித்து தனது டீமில் ஒருத்தியாக சந்தியாவை சந்தித்த அதிர்விலிருந்து மீளமுடியாமல் ரமேஷ் சற்று திணறிப்போனான்.

தனக்கு தேவையான விளக்கங்களை பெற்றுக் கொண்டவள் ரமேஷிற்கு நன்றி கூறிவிட்டு அவனது அறையை விட்டு வெளியேறுகையில்...

"சந்தியா......."

"........"

" உங்க........உன் .......கிட்ட.....கொஞ்சம் பேசனும்"

என்னவென்பது போல் அவனைப் பார்த்தாள் சந்தியா,

"உன்னை..........இங்க......நான் எதிர்பார்க்கவேயில்லை சந்தியா"

"நானும் தான்...."

"ஸோ.....ஸாரி ......சந்தியா.."

"எதுக்கு?.."

"நீ.........அன்னிக்கு.......காலேஜ்ல.......என்கிட்ட...."

இதற்குமேல் பேச வேண்டாம் என்பது போல் தன் கையை உயர்த்தி சைகை காட்டிவிட்டு, பேச ஆரம்பித்தாள் சந்தியா.....


"ரமேஷ், நான் உங்களை விரும்பினதை உங்க கிட்ட வெளிப்படுத்த எனக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமை அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறதுக்கு உங்களுக்கும் இருக்கு. ஒருத்தரை விரும்புறதும் விரும்பாததும் தனிப்பட்ட இஷடம். நான் உங்களை விரும்பினேன்ற ஒரே காரணத்துக்காக நீங்களும் என்னை காதலிக்கனும்னு அவசியம் இல்லையே......."

"இருந்தாலும்...........ஐ.......அம்......ஸோ......"

"ரமேஷ் ப்ளீஸ்.........டோண்ட் ஆஸ்க் எனிமோர் ஸாரி அண்ட் எம்பிராஸ் மீ"

"........."

" நான் பழசெல்லாம் மறந்தாச்சு........நீங்களும் மறந்திடுங்க,,,,ப்ளீஸ்"

தங்குதடையின்றி தெளிவாக பேசிவிட்டு தன் அறையை விட்டு வெளியேறிய சந்தியாவை வியப்புடன் பார்த்தான் ரமேஷ்.

கல்லூரியில் தனக்கு இரண்டு வருடம் ஜூனியராக படித்த சந்தியாவா இவள்?

இரண்டு வார்த்தை சேர்ந்தார்போல் பேசுவதற்கே மிகவும் யோசிக்கும் சந்தியா..........இத்தனை வெளிப்படையாக தன் மனதில் உள்ளதை பேசுகிறாள், வியந்தான் ரமேஷ்!!

கல்லூரியில் ரமேஷின் வகுப்பில் படித்த சரவணனின் தூரத்து உறவுக்கார பெண்தான் சந்தியா.அதே கல்லூரியில் முதல் வருடப் படிப்பில் சந்தியா சேர்ந்த போது அவளது அப்பா சரவணனிடம்,

"தம்பி நம்ம சந்தியாவ இதே காலேஜ்லதான் ஹாஸ்டல சேர்த்திருக்கிறோம்பா.........புள்ளைய பத்திரமா பார்த்துக்க"

என்று ஒரு அப்பாவிற்கே உரித்தான கவலையான அக்கறையுடன் அவனிடம் கூறினார்.
பக்கத்தில் கும்பலாக நின்றுக் கொண்டிருந்த சரவணின் நண்பர்களையும் ஓரக்கண்ணால் மிரண்டு போய் பார்த்தபடியே தான் பேசினார்.

'நம்ம பொண்ணை இந்த பயலுக கிண்டலும் கேலியும் செய்வானுங்களோ' அப்படின்ற பயமும் அவரது பார்வையில்.

"நீங்க பயப்படாம ஊருக்கு போங்க சித்தப்பா, அவளை நான் பாத்துக்கிறேன்........" என்று அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பினான் சரவணன்.

அதன்பின் சரவணனிடம் ஏதாவது உதவி கேட்டு சந்தியா வருவதும், உடனிருக்கும் ரமேஷிடமும் நட்பான அறிமுகத்துடன் பேசவும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. சரவணன் இல்லையென்றால் ரமேஷிடமே தன்க்கு தேவையான உதவிகளை கேட்கும் அளவிற்கு அவர்கள் நட்பு வளர்ந்தது.

தன் நண்பனின் உறவுக்காரபெண், ஹாஸ்டலில் வேற இருக்கிறா என்ற அக்கறையில் ரமேஷும் உதவிகளை செய்தான்.
ரமேஷ் நூறு வார்த்தை பேசினால், பதிலுக்கு ஒரு வார்த்தை பேசவே சந்தியா மிகவும் தடுமாறுவாள்.

இந்நிலையில் ரமேஷ் இறுதியாண்டு இறுதி தேர்விற்கு முந்தின நாள், சந்தியா தன் காதலை கவிதையாக எழுதி ரமேஷிடம் கொடுத்தாள்.


ரமேஷ்...
உன் மேல் காதல் வந்தும்
அதைச் சொல்லாமல் மறைத்திருந்தேன்
உன்னிடம் சொல்வதற்கு ஏனோ முடியவில்லை
பெண்மையின் நாணம் என்னை வென்றது

என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்

என்னைத் தென்றல் தீண்டினாலும்
உன் நினைவால் சிலிர்க்கின்றேன்
என்னை வெப்பம் தீண்டினாலும்
உன் அருகாமையை உணர்கின்றேன்

என் கண்கள் காணும் காட்சி எல்லாம்
நீயே ஆகி விட்டாய்
நான் பேசும் வார்த்தை எல்லாம்
உன் பெயரையே சொன்னது

என்னையறியாமல் என் கண்கள்
நீ வரும் வழி பார்த்துத் தேடியது
என் கால்களோ வெட்கத்தால்
தரையில் கோலம் போட்டது

இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்
ஏனோ சொல்லத் தெரியவில்லை
என்றாவது என்னை நீ அறிவாய்
என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.....

உனக்காகவே நான் வாழ்கின்றேன்!!

அமைதியும் சாந்தமுமாக வலம் வரும் சந்தியாவின் இதயத்தையும் காதல் தட்டியிருந்தது ரமேஷின் உருவில்!

இதனை சற்றும் எதிர்பாராத ரமேஷ் , தன் மனதில் அவள் மேல் அவ்விதமான எந்த எண்ணமும் இல்லை எனவும், இப்படி பட்ட எண்ணங்கள் கல்லூரி கால வயதில் சகஜம், அதையெல்லாம் விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறும் அறிவுரை கூறினான்.



கண்களில் ஏமாற்றமும், கவலையும் கலந்த ஓர் அவமான உணர்விலும் கலங்கிய கண்களுடனும் சந்தியா வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அதுவே அவன் சந்தியாவை கடைசியாக சந்தித்தது.
சரவணன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட, ரமேஷ் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட, இருவருக்குமான தொடர்பும் மெது மெதுவாக குறைந்திருந்தது.
ரமேஷ் சந்தியாவை பற்றிய எதுவுமே சரவணனிடம் விசாரிக்கவில்லை இத்தனை வருடங்களில்.

அவன் சந்தியாவை பற்றி கேட்காததிற்கும், அவளது காதலை மறுத்ததிற்கும் காரணம் இருந்தது.........அப்போது
அவன் மனதில் குடியிருந்த எதிர்வீட்டு தேவதை 'மேனகா' தான் அது!!

மேனகா ரமேஷ் வீட்டின் எதிரில் குடியிருக்கும் அழகு பதுமை.
சிறுவயதிலிருந்தே இரு குடும்பத்திற்கும் நல்ல பழக்கம்,
பதின்ம வயது காதல் ரமேஷை தாக்கியது 'மேனகா'வின் உருவில்.....


மனதில் மேனகா மீது காதல் இருந்தும், ரமேஷ் அதனை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை,
தானும் அவளும் படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்தபின் இருவீட்டாரிடமும் பேசி அவளை திருமணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் ஒருதலையாக அவளை காதலித்துக் கொண்டிருந்தான்.
மேனகாவின் பாசமும் அன்பும் அவனுக்கு சிறுவயதிலிருந்தே நிறைவாக கிடைத்ததால், தன் காதலை தனிப்பட வெளிப்படுத்தி காதலித்து தங்கள் படிப்பு காலத்தை விரயமாக்க வேண்டாம் எனக் கருதி அவன் மனதிலேயே தன் காதலை பத்திரப்படுத்தியிருந்தான்.

விதி வலியது..........இரண்டு வருடங்களுக்கு முன் மேனகா தன் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் , தன்னுடன் படிக்கும் தன் காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க ரமேஷின் உதவியையே அவள் நாடியபோதுதான் ரமேஷ் தன்க்குள் சுக்கு நூறாக உடைந்து போனான்.

மேனகாவின் பாசமும், பரிவான பேச்சும் இவனுக்கு காதலாக தோன்றியிருக்கிறது, ஆனால் அவளுக்கோ அது நட்பாக மட்டுமே இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது.

மனதிற்குள் கோட்டை கட்டி, சிம்மாசனத்தில் அமர்த்தி , பூஜித்த தேவதை தன்னையும், தன் காதலையும் உணராமலே போனதால் அவள் மீது கோபமும் ஆத்திரமும் முட்டிக் கொண்டு வந்தது ரமேஷிற்கு.

மேனகா தன் காதலனுடன் திருமணமாகி வெளிநாடு சென்று இரண்டு வருடங்களாகியும் அந்த கோபமும் ஏமாற்றமும் இன்னும் அழியாத ரணமாக அடி மனதில் இருக்கத்தான் செய்தது ரமேஷிற்கு.

இன்று சந்தியாவின் இந்த பக்குவமான பேச்சு ரமேஷை சிந்திக்க வைத்தது.

சாயந்திரம் அலுவலகம் முடிந்து தன் வீட்டிற்கு தனது காரில் ரமேஷ் திரும்பிய போது, அலுவலகத்திற்கு அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டிருந்த சந்தியாவை பார்த்ததும் தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளிடம் சென்றான்.

" சந்தியா.........எங்கே போகனும்.......வா நான் ட்ராப் பண்றேன் என் கார்ல"

" நோ......நோ தேங்க்ஸ்"

"எங்கே போகனும்னு மட்டும் சொல்லு.........போற வழில நானே ட்ராப் பண்ணிடுறேன்.....ப்ளீஸ்"

"ப்ரவாயில்லை.........நான் பஸ்லயே போய்க்கிறேன்"


"ஓ.......இன்னும் என் மேல கோபம் குறையலையோ"

"ஹலோ.........எனக்கு யாருமேலயும் கோபம் எல்லாம் ஒன்னுமில்ல"

" அப்போ என் .......கார்ல வா.......நான் ஓத்துக்கிறேன் உனக்கு கோபமில்லைன்னு"

"அய்யோ ரமேஷ்........இப்போ எதுக்கு பஸ் ஸ்டாப்ல வந்து வம்பு பண்றீங்க"

" நீ பேசாம அப்போவே கார்ல வந்து உட்கார்ந்திருந்தா யாரு வம்பு பண்ண போறா "

" சரி..........சரி.......வந்து தொலைக்கிறேன்"

என்று வேகமாக அவனது காரை நோக்கி நடந்தாள்.

காரின் பின் இருக்கைக்கான கதவை சந்தியா திறக்கவும்......

"ஹலோ.....மேடம்..........நான் என்ன உங்களுக்கு கார் ட்ரைவரா? முன்னாடி வந்து ஏறுங்க....."

"எனக்கு அப்படி யாரு கூடவும் கார்ல முன்னாடி கூட உட்கார்ந்து போய் பழக்கமில்லை.........மோர் ஓவர் இட்ஸ் ரிசர்வ்ட் ஃபார் சம் ஒன் ஸ்பெஷல் டு யூ"

"சம் ஓன் ஸ்பெஷலா.......ஹும்.......சரி சரி.......முதல்ல கார்ல பின்னாடியே ஏறும்மா தாயே"

சந்தியாவை எங்கே இறக்கிவிடவேண்டுமென அவளிடம் கேட்காமலே காரை மிதமான வேகத்தில் செலுத்தினான்.

மேனகா ரமேஷின் மனதில் ஏற்படுத்தியிருந்த நிராகரிப்பின் வலி, ஏமாற்றம்..............
அதன்பின் சந்தியாவை ஏதேச்சையாக அலுவலகத்தில் இன்று காலையில் சந்தித்தபோது, அவளது அன்பை உதறித்தள்ளி காயப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு எல்லாம்.....மெது மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது ரமேஷிற்கு.


டிராஃபிக் சிக்னலில் கார் நிற்கையில் தன் முன்பிருந்த கண்ணாடியில் பின்னிருக்கையிலிருந்த சந்தியாவை பார்த்தான் ரமேஷ்.


அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில் அவளைப் பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.

இத்தனை வருடங்கள் கழித்து சந்தித்தப்பின்பும், என் மேல் எத்தனை நம்பிக்கை இருந்தால்........எங்கு செல்கிறோம் என்று கூட கேட்காமல் ஜன்னல் வழியாக தன் முகத்தில் மோதும் காற்றை ரசித்தபடி, நெற்றி கூந்தலை நளினமாக காதில் சொருகியப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டுவருவாள்??

காரை காஃபி ஷாப் முன் நிறுத்தினான் ரமேஷ்.

" ஏன்.........ஏ.......ன்...........இங்கே நிறுத்தினீங்க?.........நான் எல்லாம்......."

"நான் எல்லாம் யாரு கூடவும் காஃபிஷாப் க்கு தனியா போகமாட்டேன்...........நான் சுடிதார் போட்ட சங்ககால தமிழ்பெண்.....அப்படின்னு லெக்சர் கொடுக்க போறே......அந்த லெக்சரை காஃபி குடிச்சுட்டே பேசலாமே.......ப்ளீஸ்"

ப்ளீஸ் சொல்லும்போது........... 'ஸ்ஸ்ஸ்' ஸில் ஒரு அழுத்தம் கொடுத்து கெஞ்சும் பார்வை பார்த்தான்....ரமேஷ்!!


"எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல உங்க கூட காஃபி குடிக்க.........நீங்க உங்க வீட்டமனிக்கிட்ட அடி வாங்காம இருந்தா சரி..........."

"ஹா......ஹா.......ஹா"

"என்ன இளிப்பு......??"

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லியான்னு போட்டு பாக்குறியாக்கும்??.........சரி வா........காஃபி குடிச்சுட்டே அது பத்தி பேசலாம்"

கல்லூரியில் சரவணனுடன் கேண்டினுக்கு வந்தால், சந்தியா முட்டை பஃப் ஆர்டர் பண்ணுவாள்.....அது அவளது ஃபேவெரைட் ஐடம்!
ஸோ.....ரமேஷ் காஃபியுடன் முட்டை பஃப்யும் ஆர்டர் செய்தான்.

"ஹும்........என்ன கேட்ட.........வீட்டம்மணியா??'

"ஆமா.........மிஸஸ் மேனகா ரமேஷ்குமார் பத்தி கேட்டேன்......"

இவளுக்கு எப்படி மேனகா மேட்டர் தெரியும் என்று......அதிர்ச்சியுடன்.....புருவம் உயர்த்தி அவளை கூர்ந்து பார்த்தான்.

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு சந்தியாவே பேச தொடங்கினாள்.....

" காலேஜ்ல அன்னிக்கு..........உங்க கிட்ட......பேசிட்டு நான் ஹாஸ்டலுக்கு போற வழியில சரவணன் அண்ணாவை பார்த்தேன்........என் கண்ணு ஏன் சிவந்திருக்கு, ஏன் அழுதேன்னு அண்ணா துளைச்சு துளைச்சு கேட்டான்.......ஸோ அவன்கிட்ட சொன்னேன்....."

"..........."

" அப்போதான்......நீங்க உங்க பக்கத்துவீட்டு பொண்ணு மேனகாவை ரொம்ப டீப்பா லவ் பண்றீங்கன்னு அண்ணா சொன்னான்........"

"..........."

"சரவணன் அண்ணா கிட்ட அப்புறமா உங்களை பத்தி நான் எதுவுமே கேட்டதில்லை.......அண்ணாவும் எதுவும் சொன்னதில்லை........"


"ஹும்.........."


" நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன்.......இதெல்லாம் தெரியாம உங்க மேல...........ஸாரி"


"ஹே சந்தியா........ஒய் டு யு ஆஸ்க் மீ ஸாரி.........டோண்ட் ஃபீல் ஸாரி சந்தியா."

நீண்ட பெருமூச்சிற்கு பின் ரமேஷ் பேச தொடங்கினான்,

"நான் லவ் பண்ணினது காலேஜ்ல என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு தெரியும்............ஆனா...........அந்த லவ் ஒருதலைகாதல் மட்டுமில்ல.......ஏற்றுக்கொள்ளபடாத காதலும்னு யாருக்கும் தெரியாது.........."

"ர....மே......ஷ்......"

"ம்ம்.........ஷி காட் மேரிட் ........."

"ஸோ ஸாரி டு ஹியர் திஸ்......ரமேஷ்"

"லீவ் இட் .......பாஸ்ட் இஸ் பாஸ்ட்......."

சிறிது நேரம் எதுவுமே பேசாமல் இருவரும் காஃபி அருந்தினர்.

"சரி......நான் போட்டு எல்லாம் பார்க்கல...........உன் டீடெய்ல்ஸ் கம்பெனி எம்ப்ளாயி டேடா பேஸில் பார்த்தேன்........ஸ்டில்....மிஸ்.சந்தியா..........ஏன் இன்னும்.........நீ.......கல்யாணம்.........."

"ஹலோ.......நான் உங்களையே நினைச்சுட்டு இன்னும் உருகிட்டு இருக்கிறேன், அதான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்...............வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டுதான் இருக்காங்க.........ஆனா எந்த ஜாதகமும் பொருந்தி வரல, என் ஜாதகத்துல தான் ஏதோ ப்ராப்ளம்னு என் அம்மா ஒரே புலம்பல்.........ஜாதகத்தை மாத்தி எழுதி ரீ-ட்ரை பண்ணுங்கம்மா ன்னு சொல்லியிருக்கிறேன் "
என்று படபடவென்று பேசிவிட்டு சிரித்தாள் குழந்தையாய்...........!!

அவளது சிரிப்பை ரசித்தபடி கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்........

"ஹலோ........சார்..........என்ன அப்படி பார்க்கிறீங்க......??"

பதில் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் ரமேஷ்......

"ஐயா சாமி........நான் பேசுறது காதுல விழுதா........ஹலோ......."
அவன் கண்களுக்கு முன் விரல் சொடுக்கி சிரித்தாள் சந்தியா!!

தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த ரமேஷ்.........அவள் கண்களை ஊடுறுவும் ஒரு பார்வையுடன்...........

"அப்பிளிக்கேஷன்.........உன்கிட்ட கொடுக்கனுமா..........உன் அப்பாகிட்ட கொடுக்கனுமா........"

"எ..........என்ன......??."

"என் ஜாதகத்தை உன் கிட்ட கொடுக்கனுமா........உங்க வீட்ல கொடுக்கனுமான்னு கேட்டேன்.........."

குடித்துக்கொண்டிருந்த காஃபி புரை ஏறியது சந்தியாவிற்கு,

மிரண்ட விழிகளில்......இன்ப அதிர்ச்சி!!

"சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்னு டயலாக் எல்லாம் விட மாட்டேன்.......உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்"

"............"

" நாம நேசிக்கிறவங்களைவிட........நம்மளை நேசிக்கிறவங்க கூடத்தான் வாழ்க்கை இனிக்கும்........."

"......."

" வில் யூ மேரி மீ.......சந்தியா?"

"..........."

"என்ன சந்தியா........பதிலேதும் சொல்லாம அமைதியா இருக்கிற??"

"ம்ம்......"

"ம்ம் னா??........"

கரெக்ட்டாக அப்போ பார்த்து வெயிட்டர் பில் கொண்டுவர, பில் பே பண்ணிவிட்டு ரமேஷ் பார்க்கையில்.........சந்தியா அவனது கார் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
தன் கையிலிருந்த ரிமோட் கீ யினால்.......காரை அன்லாக் செய்துவிட்டு.......வேகமாக சந்தியாவை பின் தொடர்ந்தான்.

காருக்கு அருகில் இருவரும் சென்றதும், தவிப்புடன் ரமேஷ் அவளை நோக்க.........

சந்தியா கண்சிமிட்டிவிட்டு காரின் முன் கதவை திறந்தாள்......!!

"சந்தியா..........."

"இனிமே இந்த இடத்தை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்"

சந்தோஷத்தில் ரமேஷிற்கு வார்த்தைகள் வரவில்லை........அங்கு வார்த்தைகளுக்கு அவசியமுமில்லையே!!

ரமேஷ் காரின் ட்ரைவர் இருக்கையில் ஏறினான், அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
அமர்ந்தபோது அவன் தோளில் அவள் தோள் இடித்தது.........
கியரைப் பொருத்தியபோது அவன் கை அவள் முழங்காலில் தொட்டு மீண்டது.......

திடீர் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்க்க.........இனிதே அவர்கள் 'வாழ்க்கை' பயணம் தொடங்கியது!!!!!!!!

முற்றும்.

September 01, 2008

மனைவி மார்க் போட்டால்.......???




ஆங்கிலத்தில படித்த ஒரு article யை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு........


செப்டம்பர் 11 ஆம் தேதி திருமண பந்ததில் அடி எடுத்து வைக்கும் நண்பர் அருண்குமார் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களுடன்........!!!



ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்னாலே, நல்லா பரீட்சை எழுதி பாஸ் ஆகனுமேன்னு ஒரு பயம் இருக்கும்......:(

அதைவிட கஷ்டமான ஒரு தேர்வு இருக்கு..........அது என்னன்னு தெரியுமா??? டே டு டே லைஃப்ல உங்க ஒவ்வொரு செயலுக்கும், அசைவுக்கும் உங்க மனைவி போடும் மார்க்!!!

மனைவி மார்க் போடுவாங்களா?????

மார்க் போட்டா..........எவ்வளவு போடுவாங்க, எதுக்கெல்லாம் போடுவாங்க, எப்படி போடுவாங்க, தெரிஞ்சுக்கனுமா??

தொடர்ந்து பதிவை படிங்க...!!

நீங்க திருமணமான ஆணாக இருந்தால், உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா நீங்க பாஸா? ஃபெயிலா ன்னு தெரிஞ்சுக்கலாம்!

நீங்க திருமணமாகாத ஆணாக இருந்தால், எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்!!

இதோ சில சாம்பிள்......



1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது "ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க" அப்படின்னு சொல்றார் மனைவி....

அ. உடனே நீங்க தைரியமா கதவை திறந்து வெளியே போய்ப் பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று வந்து படுக்கிறீர்கள் [ மார்க் - 0, 'ஏன் மார்க் பூஜ்ஜியம்னு முழிக்கிறீங்களா??.........காரணம் அப்படி வெளியே போய் பார்த்துட்டு வரவேண்டியது உங்க கடமை, அதுக்கெல்லாம் மார்க் கிடையாது']

. "அங்கே ஏதோ அசையுற மாதிரி இருக்குதே.......ஹே யாரது.....எவன்டா அது......." அப்படின்னு சவுண்டு விட்டுட்டு வந்து படுக்கிறீங்க [ மார்க்: 10]

.சவுண்டு விட்டதோடு நிறுத்தாம, கைல ஒரு தடியெடுத்துட்டுப் போய் தரையில ரெண்டு தட்டு தட்டி சீன் போட நீங்க நினைக்க, நீங்க தடியால் போட்ட போடு உங்கள் மனைவிக்கு பிரியமான பூந்தொட்டி, செல்ல பூனைகுட்டி இப்படி எதின் மீதாவது பட்டால்......[மார்க் : -5 'மைனஸ் 5 நோட் பண்ணிக்கோங்க']



2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....

. இரவு ஒரு நல்ல ஹோட்டலுக்கு.......[அவங்களோட ஃபேவெரேட் ரெஸ்டாரண்டுக்கு] டின்னர் சாப்பிட அழைச்சுட்டுப்போறீங்க [ மார்க்: 0 ' ஹலோ என்ன முழிக்கிறீங்க.....இதுவும் உங்க கடமைங்கோ, ஸோ நோ மார்க்குங்கோ!']

. டின்னர் முடிஞ்சதும், சர்ப்ரைஸா மனைவிக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் வாங்கி கொடுக்கிறீங்க [மார்க்:10]

இ: அவங்க பிறந்தநாளை கொண்டாட டின்னருக்கு கூட்டிட்டு போய்ட்டு.......நீங்க பியர் அருந்திட்டு, ஆட்டம் பாட்டம்னு நடு ராத்திரிவரைக்கும் கொட்டம் அடிக்கிறீங்க......அங்கே வந்திருக்கும் மற்றவர்களுடன் [ மார்க் : -100 'மைனஸ் நூறு']



3.உங்கள் உடலமைப்பு எப்படி????

அ. தொப்பை போட்டிருக்கிறீர்கள் [மார்க்: -50 'மைனஸ் ஐம்பது']

. தொப்பை வயிறாக இருந்தாலும், அதை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி பண்றீங்க [மார்க்: 0 ' அட......தேகப் பயிற்சி பண்றது உங்க கடமைங்க, ஸோ மார்க் ஸீரோ தானுங்க']

இ. தொந்தி பற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா ' என்னைப்பார் ! என் தொப்பையை பார்!! என்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும் போட்டுக்கிறீங்க.[மார்க்: -100 ' மைனஸ் நூறு' ]

ஈ. எனக்கு மட்டுமா தொப்பை இருக்கு? உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி !! என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.[மார்க்: -1000 'மைனஸ் ஆயிரம்']



4. உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....

அ. நல்லபுள்ளையா போய் உடனே வாங்கிட்டு வந்துடுறீங்க [ மார்க்:0 ' இப்படி சமர்த்தா வாங்கிட்டு வரவேண்டியது உங்க கடமை ராசா, ஸோ நோ மார்க் ' ]

. உங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு சொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு வருகிறீர்கள்[ மார்க் : 10 ]

இ. மனைவிக்கு ஸ்வீட் மட்டும் வாங்காமல், கூடவே உங்களுக்கு பிடிச்ச பக்கோடா மிக்சர்ன்னு சில அயிட்டமும் சேர்த்து வாங்கிட்டு வர்ரீங்க [ மார்க்: - 5 ' என்ன முறைக்கிறீங்க?ஐந்து மார்க்தாங்க மைனஸ்.......இப்படி முறைச்சீங்கன்னா இன்னும் ஜாஸ்தி மார்க் மைனஸ் ஆகும், கவனம்']



5. " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....

அ. அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]

ஆ."ஆமாம்...கொஞ்சம்....இல்ல.........இல்லடா........ரொம்ப இல்ல, கொஞ்சமாதான்.......ஆனாலும் அழகாதான்மா இருக்க" ஆமாம் ன்னு ஆரம்பிச்சுட்டு அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்லி சமாளிச்சாலும், எவ்வளவு சப்பைக்கட்டு கட்டினாலும்......[மார்க் : -25 ' மைனஸ் 25']

இ. அப்பாவி முகத்துடன் "தூரத்துல இருந்து பார்த்தாவா??...........இல்ல பக்கத்துலயா??" என நக்கலடிக்கிறீர்கள்.[மார்க்: -100 ' இந்த நக்கலுக்கெல்லாம் மைனஸ் மார்க் தானுங்க!!']



6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்…

அ. அவர் பேசி முடிக்கும்வரை வெகு உன்னிப்பாகக் கேட்பது போன்ற பாவத்தை உங்கள் முகத்தில் மெயிண்டேன் பண்றீங்க[மார்க்: 0 ' இதுதாங்க நீங்க செய்தே ஆகவேண்டிய முக்கிய கடமை , அதுக்கெல்லாம் மார்க் போட முடியாது']


ஆ. உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல், எதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு!!']


இ. உங்க மனைவி பேசி முடிப்பதற்குள் நீங்க அப்படியே தூங்கிட்டீங்கன்னு பேச்சின் முடிவில் தெரிஞ்சுக்கிறாங்க[ மார்க்: -1000 ' மைனஸ் ஆயிரம் ஏன்னு பார்க்கிறீங்களா??.............பின்ன எவ்வளவு 'தில்' இருந்தா, பேசிட்டு இருக்கும்போது பேச்சை கவனிக்காம இப்படி தூங்கி வழிவீங்க??]


மனைவியரின் மார்க் போடும் இரகசியம் புரிஞ்சுடுச்சா? பாஸாக வாழ்த்துக்கள்!!!


[இந்த பதிவை படித்துவிட்டு,
மனைவியை மார்கே போடவிடாமல் எப்படி சதி பண்ணுவது?? என்று தன் அனுபவபூர்வமான ஆலோசனைகளை பதிவாக எழுதியுள்ளார் நண்பர் விஜய் - இங்கே]

August 24, 2008

தம்பி....



படித்ததில் மனதில் பதிந்த கதை, என் கற்பனை கலந்து, சில மாற்றங்களுடன் இங்கு என் எழுத்துருவில் பதிவாக........ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்.......!!!




St.Joseph's International School, ஹாஸ்டலில் தன் படுக்கைக்கு அருகில் இருந்த அலாரம் காலை 6 மணிக்கு அடிக்க விழித்துக்கொண்ட பன்னிரண்டு வயது டெய்ஸி, காலை கடன்களை முடித்துவிட்டு, அவசரம் அவசரமாக ஹார்லிக்ஸ் மட்டும் அருந்திவிட்டு, ஆண்கள் விடுதி நோக்கி நடந்தாள் தன் தம்பி டேனியலை சந்திக்க,

வழியில் ஸ்கூல் சேப்பலில் ஜெபம் செய்ய செல்கையில், ஜூலியா மிஸ்சை சந்தித்தாள்.
இவளது ஹாஸ்டல் வார்டனாக இருந்தவர் மிஸ் ஜூலியா.அவர் மேல் டெய்ஸிக்கு அலாதி ப்ரியமும் , மரியாதையும்.

பெண்கள் விடுதியின் வார்டனாக இருந்த ஜுலியா மிஸ், புனித மேரி இல்லத்திற்கு வார்டனாக போனதும், டெய்ஸி மிகவும் ஏங்கிப் போனாள்.
புனித மேரி இல்லமும் டெய்ஸி படிக்கும் ஸ்தாபனம் நடத்துவதுதான், ஆனால் அது அனாதை குழந்தைகள் படிக்கும் விடுதி.
ஜூலியா மிஸ்சும் ஒரு அனாததான் என்பதும், அதுவே அவர்கள் அவ்வில்லத்திற்கு வார்டனாக சென்றதிற்கான காரணம் என்றும் இவளது தோழிகள் மூலம் அறிந்துக்கொண்டாள் டெய்ஸி.


டெய்ஸிக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் ஜூலியா மிஸ்சாகப் பிறக்க வேண்டும் என்று தோன்றும்.
ஜூலியா மிஸ் அன்போடும் அரவனைப்போடும் டெய்ஸியையும் அவளது தம்பியையும் கவனித்துக்கொள்ளும் போது, இவர்கள் எங்களின் அம்மாவாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொள்வாள் டெய்ஸி,
ஆனால்....ஜூலியா மிஸ் கன்னியாஸ்திரி, கல்யாணமே செய்து கொள்ள போவதில்லை என்பதும் அவளுக்கு புரிந்தது.

ஆண்கள் விடுதியை அடைந்தாள் டெய்ஸி, அங்கு அழுவதற்கு தயாராக இருந்தான் டேனியல், சில்வியா ஆயா அவனை சமாதனப்படுத்தி, "இதோ உங்கக்கா வந்தாச்சு பாரு" என்று டெய்ஸியிடம் அவனை ஒப்படைத்தாள்.
அப்படியே அவனைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் டெய்ஸி.

"டேனி.....இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்ல இருந்து கார் வந்திடும்,நாம வீட்டுக்கு போறோம் டா.....செல்லம், கார் வரைக்கும் நானே உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போறேன், சரியா"

"ஓ......சரிக்கா" என்றான் உற்சாகமாய்.

டெய்ஸி-டேனியலின் அம்மா ஒரு முன்னனி கைனக்காலிஜிஸ்ட், இரவிலும் ஹாஸ்பிடல் கால் வந்து டியூட்டி பார்க்க சென்றுவிடுவார்.
அப்பா கோயம்பத்தூர் விவசாயக்கல்லூரியில் தாவிர இயல் விஞ்ஞானி. எப்போதும் செடி கொடிகளுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்.

அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்கிறார்கள், அதனால்தான் பிள்ளைகள் ரெஸ்டென்ஷியல் ஸ்கூலில்.

சிறிது நேரத்தில் இவர்கள் இருவரையும் அழைத்துச்செல்ல வழக்கமாக வரும் ட்ரைவர் காருடன் வர, வார்டன் இருவரையும் கார் வரை வந்து அமர்த்திவிட்டு, கையசைத்து வழியனுப்பினார்.

கோயம்பத்தூரில் தாங்கள் சந்திக்க இருக்கும் அதிர்ச்சியை அறியாமல் இரு பிஞ்சு உள்ளங்களும் குதூகலத்தோடு பிரயாணப்பட்டன.

வீட்டிற்கு போனபோது அங்கு ஹாலில் அம்மாவோடு டாக்டர் தனபாலன் அங்கிளும் இருந்தார். அம்மாவுடன் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக படித்தவர், இப்போது அம்மாவுடன் ஒன்றாக வேலை செய்பவர் என்ற அளவில் மட்டுமே டெய்ஸிக்கு அவரை தெரியும்.
ஆனால்.....இன்று ஹாலில் தன் அம்மாவின் மிக அருகில் நெருக்கமாக அவர் அமர்ந்திருப்பது 12 வயது டெய்ஸிக்கு ஏனோ, அருவருப்பாக தோன்றியது.

ஏற்கெனவே அப்பாவும் அம்மாவும் கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்வதும், இருவரும் டைவர்ஸ் ஆகி பிரிந்தே வாழ போகவதாகவும், வீட்டில் வேலை செய்யும் ஆயா சொல்லி அறிந்திருந்தாள் டெய்ஸி.

தனபால் அங்கிள் கொடுத்து காட்ப்ரீஸை கண்டதும் டேனியல் அவரின் அருகில் அமர்ந்துக்கொண்டான், டெய்ஸி தர்மச்சங்கடத்தோடு அங்கு நிற்க, அவளது அம்மா அவளை தனியே அழைத்துச்சென்று இன்று குடும்ப நல கோர்ட்டில் அவளது அப்பா-அம்மா வின் விவாகரத்து வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படுவதாகவும், அதற்காகவே ஹாஸ்டலில் இருந்து இவர்கள் இருவரையும் அழைத்ததாகவும் கூறினாள்.

சிறிது நேரத்தில், தனபால் அங்கிள் காரிலேயே கோர்டிற்கு சென்றனர்,
அங்கு வாயிலில் அப்பாவை கண்டதும் , "அப்பா" என்ற அலறலுடன் இரு குழந்தைகளும் அருகில் ஓட,
அப்பாவிற்கு பின்னாலிருந்து , அவரிடம் டாக்ட்ரேடிற்காக பயிற்சி எடுத்துக்கொள்ளும் நித்யா ஆண்டி, "ஹாய் குட்டீஸ்' என்றார்.
அவளது அப்பாவின் கரத்தோடு நித்யா ஆண்டி கை கோர்த்திருந்த விதம்.......டெய்ஸிக்கு அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருந்தது.
தன் தலையை வருடம் அப்பாவின் ஸ்பரிசம் முதல் முறையாக,கம்பிளி பூச்சு ஊறுவது போன்று தோன்றியது.

கோர்ட்டில் தீர்ப்பு வழங்கினார்கள்,
டெய்ஸியின் அப்பா அம்மாவிற்கு விவாகரத்து கொடுத்துவிட்டு, டெய்ஸி அவளது அப்பாவின் பாதுகாப்பிலும்,
தம்பி டேனியல் அம்மாவின் பாதுகாப்பிலும் வளர்வது என்று தீர்ப்பானது.

வீட்டிற்கு வரும் வழியில்தான் , அம்மாவும் தனபால் அங்கிளும் பேசிக்கொண்டதில், அவளது அம்மாவும் தனபால் அங்கிளும் லண்டனுக்கு செல்ல போவதாகவும், தம்பியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வதும் டெய்ஸிக்கு புரிந்தது.
இவள் ஹாஸ்டலிலோ, அப்பாவுடன் 'Tamil Nadu Agricultural University' கேம்பஸில் அப்பாவின் குவார்டஸிலோ இருக்கப்போகிறாள்.

யாரைக் கேட்டு முடிவு செய்தார்கள்?
இது வரையில் என்றாவது ஒரு நாள் இவர்கள் இருவரும் எங்களோடு சிரித்துப் பேசி விளையாடியதுண்டா?
அம்மாவுக்கு அப்பா தேவையில்லாமல் இருக்கலாம்,
அப்பாவுக்கு அம்மா தேவையில்லாமல் இருக்கலாம்,
இருவருக்கும் சேர்ந்து நாங்கள் தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆனால்..........எனக்கு.........என் தம்பி வேண்டும்!!

என்னை விட்டு ஒருகணம் கூட இருக்க மாட்டானே என் தம்பி.......அவனை வெளிநாடு அனுப்பி விட்டு நான் மட்டும் எப்படி இங்கிருக்க முடியும்?

டெய்ஸியின் மனதில் ஆயிரம் கேள்விகள்,
உதடு துடிக்க, கண்ணீர் பொங்கி வர, வீட்டிற்குள் வந்ததும் வேகமாக தன் அறைக்குள் சென்று , கட்டிலில் குப்புறப்ப்டுத்து குலுங்கி அழுதாள்.

இவள் பின்னாலேயே மாடி ஏறி வந்த அவள் அம்மா," டெய்ஸி.......ஒன்னும் அவசரமில்லைமா, உன்னை தயார்படுத்திக்கோ,.......இரண்டு நாள் கழிச்சு கூட நீ உன் அப்பாகிட்ட போகலாம், டேக் யுவர் டைம்" என்று சமாதனப்படுத்தி விட்டுப் போனாள்.

இரவு முழுவதும் அழுது அழுது முகம் வீங்கிக் கிடந்தது டெய்ஸிக்கு. இவள் எதையோ நினைத்து நினைத்து அழுவதைப் பார்த்து டேனியலும் அழுதான்.

இவனை எப்படி பிரிய முடியும்.......தம்பியின் முகத்தை கையில் ஏந்தி தேம்பினாள் டெய்ஸி.

லண்டனுக்கு கூட்டிட்டு போய் கூட அம்மாவா இவனை கவனிக்க போகிறாள், அங்கயும் ஆயாவிடம் தான் விடப்போகிறாள்.
"அக்கா"ன்னு இவன் அழுதா எனக்கு இங்கே கேட்குமா??? முடியாது.......
இவனை இந்த ராட்சஸர்களிடம் விடவே மாட்டேன்.......எனக்கு அம்மாவோ, அப்பாவோ வேண்டாம், என் தம்பிதான் வேண்டும்.

கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள், மணி காலை ஐந்து, வீட்டில் அம்மா அயர்ந்த தூக்கத்தில் அவளது அறையில்,
அவசரமாக எழுந்தாள் டெய்ஸி,
தம்பியை தூக்கி தோளில் போட்டுக்கொண்டாள்,
செலவிற்காக அப்பா கொடுத்திருந்த 300 ரூபாய் பணம் இவளது கைப்பையிலிருந்தது, அதனையும் எடுத்துக்கொண்டாள்,

வீட்டைவிட்டு கவனமாக எவருக்கும் தெரியாமல் வெளியேறினாள், கோவை மத்திய பஸ் நிலையம் இவளது வீட்டிலிருந்து 3 கீலோ மீட்டர் தூரம், பாதி தூரத்திற்கு மேல் நடக்க மாட்டேன் என அடம்பிடித்த தம்பியை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து பஸ் நிலையம் சென்றாள், ஊட்டி பஸ் பார்த்து ஏறிக்கொண்டாள்.

மூன்று மணி நேரத்தில் பஸ் ஊட்டியை சென்று அடைந்தது.

ஒருவாரம் விடுமுறைக்காக போன ஆறாம் வகுப்பு டெய்ஸி, தம்பியோடு தன் அறையில் அடுத்த நாள் காலையிலேயே வந்து நிற்பதைக் கண்டு திகைத்தார் ஃபாதர் ஜோசஃப்.

அந்த சிறு பெண்ணின் உருண்ட விழிகள் அழுது சிவந்து, இரட்டை ஜடையில் ஒன்றில் மட்டும் ரிப்பன், காலில் ஷு இல்லை, ரப்பர் செருப்புடன்.....தம்பி டேனியலின் சட்டையெல்லாம் புழுதி, கலைந்த தலைமுடி......அந்த சிறுவனும் புரியாமல் அழுதுகொண்டே இருந்தான்.

பணக்கார களையோட இத்தனை நாட்கள் பார்த்திருந்த ஃபாதருக்கு, குழந்தைகளின் இந்நிலை மனதை கணமாக்கியது,

"என்னமா டெய்ஸி.......என்னாச்சு??" என்று படபடப்பாகக் கேட்டார்.

"ஃபா .........ஃபாதர்"

"அப்பா.........அம்மா கூட வரலியா.....உங்க கார்ல வரலியா?"

"ஃபாதர்........எங்களுக்கு அப்பா அம்மா இல்லை......நாங்க அனாதை.....ப்ளீஸ் எங்களை புனித மேரி இல்லத்தில சேர்த்துகோங்க ஃபாதர்"

ஃபாதரின் கண்ணில் நீர் பூத்தது.
குழந்தைகளை குளிப்பாட்டி உணவு கொடுக்க சொல்லி சிஸ்டர் ஜூலியாவிடம் ஒப்படைத்துவிட்டு, ஃபாதர் ஜோசஃப் டெய்ஸியின் பெற்றோரை வரவழைத்தார்.

அவர்களிடமும் டெய்ஸி பிடிவாதமாக தாங்கள் இருவரும் இல்லத்திலேயே இருக்க விரும்புவதாக கூற......பெற்றோரும் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், தங்கள் வழி திரும்பிச் சென்றனர்.

தன் தம்பியின் மேல் பாசத்தை கொட்டி பார்த்துக்கொண்டாள் டெய்ஸி, ஆங்கில மொழியில் பி.ஏ பட்டபடிப்பும், ஆசிரியர் பயிற்சியும் புனித மேரி இல்லத்தின் உதவியோடே படித்து முடித்து, அங்கே அவளும் டீச்சராக பதிவியேற்றாள்.......கன்னியாஸ்திரி டீச்சராக.


டேனியல் படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியாக வளர்ந்தான் அக்காவின் அரவணைப்பில், இன்று அமெரிக்காவில் தனது உயர் படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்புகிறான்..........அதுவும் அவனது பிறந்தநாளான இன்று அவன் இந்தியா வருவது இரட்டிப்பு சந்தோஷம் சிஸ்டர் டெய்ஸிக்கு!!

விமான நிலையத்தின் வரவேற்பு வாயிலில் , பழைய நினைவுகளை அசைப்போட்டபடி......தம்பியின் வரவிற்காக காத்திருந்த சிஸ்டர் டெய்ஸியின் சிந்தனையை,

"அக்கா"

என்ற குரல் கலைக்க, திரும்பிய டெய்ஸி சிஸ்டர்.......சேயைக் கண்ட தாயாய் உவகையுடன் தன் தம்பியை நோக்க, கண்ணில் ஆனந்த கண்ணீர்,

"அக்கா" என்று குதூகலத்துடன் டேனியல் அவரை நோக்கி தன் கரங்களை அகல விரிக்க........

"த......ம்.........பி......."

உண்மையான நேசத்தின் தேவையும்
நெஞ்சம் தேடும்
பாசத்தின் தவிப்பும்
உன்னாலும் என்னாலும் மட்டுமே
உண்மையாய் உணர முடியும்!

ம்…!
உன் தலை சாய்த்துக் கொள்ள
தக்க தருணங்களில்
அன்புத் தாயாய் நான்
என் சேயாய் நீ!

என் உயிரின் கடைசித் துளி
என்னை விட்டுப் பிரியும் வரை…
உன் அன்புத் தோழியாய் நான்
என் அன்புத் தோழனாய் நீ!

"போடா" என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் அக்காவாய் நான்
என் தம்பியாய் நீ!

ஒற்றை விரல் கோர்த்து
பற்றிப் படர்ந்து
எனக்காக நீயும்
உனக்காக நானும்
நிறைவான அன்பினில்…


நீளும் உன் கரங்கள்
நிஜமென நம்பி…
தம்பி...

இரு சிறகுகளிலும்
இருந்த பாரங்களை
இறக்கி வைத்த
சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்..






இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி!!

August 21, 2008

A for Apple....[tag post]




பிரியமானவள் ப்ரியா மற்றும் திவ்யப்ரியா அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு

A - http://abclocal.go.com/mediakit/index.html - local news பார்க்க

B - http://www.biblegateway.com/passage/?search=1corinthians:1&version=31 - பைபிள் படிக்க


C - http://www.careerbuilder.com/ - For Job search


D - http://dictionary.reference.com/ - ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துக்கொள்ள........


E - http://www.elise.com/ - சிம்பிள் அமெரிக்க உணவுகளின் ரெஸிபீஸ் பார்க்க


F -http://food.sulekha.com/ - இந்திய சமையல் குறிப்புகளுக்கு

G - http://www.geekinterview.com/ - இன்டெர்வியுவிற்கு தயாராக டிப்ஸ் இங்கே....


http://www.hinduonnet.com/ - Hindu News paper



I - http://www.indiacc.org//AM/Template.cfm?Section=Home&WebsiteKey=ce5eddd2-6742-4f8a-a2e4-73bee14b8bcc - இந்திய கம்யூனிட்டி சென்டர்


J - http://job-abroad.blogspot.com/

K - http://www.kumudam.com/

L - http://www.linkedin.com/


M - http://www.mapquest.com/ - ட்ரைவிங் directions பார்க்க


N - http://www.nilacharal.com/


O - http://www.olivegarden.com/default_f.asp - என் favourite Italian Resnt.....


P -http://picasaweb.google.com/


R - https://www.relianceindiacall.com/Web/GlobalHome.aspx - இந்தியாவிற்கு ஃபோன் கால் பண்ண காலிங் கார்ட் வாங்க


S - http://www.sjlibrary.org/ - என் படிப்பிற்குதவிய நூலகம்


T - http://www.thuthifm.com/ - 24 மணி நேர கிறிஸ்துவ பாடல்கள் ஒளிபரப்பும் தளம்.


U -http://www.usertube.com/ - விஜய் டீவி பார்க்க


V - http://www.videojug.com/tag/indian-recipes


W - http://wwwb.way2sms.com//content/index.html? - இந்தியா மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப

http://www.webindia123.com/home.html


Y -http://www.yahoo.com/



நான் விரும்பி அழைக்க விரும்புவது...






Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.

August 14, 2008

காதல் எனப்படுவது ....யாதெனில்!!




காதல் எனப்படுவது யாதெனில்....என்ற தலைப்பில் தொடர் பதிவோட்டத்தில் என்னை[யும்] இணைத்த பதிவர் 'ஜோசஃப் பால்ராஜ்' க்கு என் நன்றி.

கற்பனை கதைகளில் காதலை மையமாக வைத்து கதாபாத்திரங்களை உருவாக்குவதை விட, 'காதலை' பற்றி தனிப்பதிவு எழுதுவது..........எத்தனை கடினமென்பதை இத்தொடர் ஓட்டத்தில் இணைத்தப்பின் தான் தெரிந்தது:((

காதலை பற்றிய என் கண்ணோட்டத்தை ஒரே வரியில் கூறவேண்டுமானால்,
காதல் எனப்படுவது.........

காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!

காதல் குறித்து யோசித்தால், மனதில் எழும் கேள்விகள்....

உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா?
அல்லது
கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா??

இந்த முதல் கேள்விக்கான பதிலை ஆராய்ந்தால் அது பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' தான் மூலக்காரணமாக இருக்கும்.

சரி.......தீடிரென ஏற்பட்ட இந்த ' வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும்' உணர்வு காதலா?? Infactuation எனப்படும் இனக்கவர்ச்சியா??

வித்தியாசம் தெரிஞ்சுக்கனுமா.........??

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வு இனக்கவர்ச்சியா இருந்தா......

* உங்கள் மனதில் ஒரு தற்காலிக விருப்பத்தை மட்டுமே உருவாக்கும்.
* ஒருவித குற்றயுணர்வும் 'ஈர்ப்புடன்' சேர்ந்தே வரும்.
* அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும்.
* பார்வை பரிமாறுதலில், சந்திப்பில்.........பதற்றமான மனநிலையே அதிகம் இருக்கும்.

ஒ.கே infactuation னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சாச்சா..........அடுத்து கொஞ்ச நாள் நட்புடன் பழகிய ஒருவர் மீது உண்டாகும் நேசம் .........காதலா??.......அது காதல்னா எவ்விதமாக உணர்வீங்க.......??

*குணநலன்களில் வித்தியாசம் இருந்தாலும் ஒருவித புரிதல் இருவருக்குள்ளும் இருக்கும்.
*காதல், காமம், ஆசை விட..........ஆழமான நட்புணர்வே முதன்மையானதாக மேலோங்கி நிற்கும்.
*உங்களவர் உங்களுக்கே உங்களுக்குதான் என்ற வலிமையான உள் உணர்வு எப்போதும் இருக்கும்.
*பொறுமையாய் காத்திருந்து எதிர்காலத்தை திட்டமிட்டு காதலித்தவரை கைப்பிடிக்க வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கும்.
*பண்பட்ட நட்புணர்வும், ஒருவர் மேல் இருவருக்கு மரியாதையும் இருக்கும்.
*அதீத மேக்கப், வெளித்தோற்றத்திற்கான முக்கியத்துவம், நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமூடி என எதுவும் இன்றி.......தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்.
*சந்திக்கும் வேளைகளில் படப்படப்பின்றி......மனதில் ஒருவித இதமான தென்றல் வீசும்.

இப்போ உண்மையான காதல் உணர்வுதான் உங்களது என அறிந்து, இருவரும் காதலை பரிமாறிக்கொண்டு காதலிக்க ஆரம்பித்து விட்டீர்கள் .........இனி........???

காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்ச காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு, அனுசரித்துப் போவது காதல் வெற்றி பெற மிக மிக அசசியம்!

தேடி வந்து
என் இதய
வாசலை தட்டிய
உன்மேலான
என் நேசத்தை
அன்பு, பாசம்.....என்ற
வரையறைக்குள் அடைக்கவா?
நட்பு,காதல்....என்ற
எல்லைக்குள் நிறுத்தவா??
ம்ம்ம்....
இல்லை
இல்லவே இல்லை...
அதற்கும் மேலாய்
பலபடி உயர்வாய்
ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!


இத்தொடர் ஓட்டத்திற்கு நான் விரும்பி அழைப்பது
என் அன்பு தோழி......
'கவி'இளவரசி தமிழ்மாங்கனி காயத்ரி.

August 12, 2008

நீ வேண்டும்.....நீ வேண்டும்.......என்றென்றும் நீ வேண்டும்!! - 6

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4

பகுதி - 5


நந்தினியின் சித்தப்பாவின் பதற்றம் கார்த்திக்கின் மனதை உலுக்கியது.

கண்கள் இருண்டு........பூமி தன்னை சுற்றி வேகமாக சுற்றுவது போன்றிருந்தது.....



திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!

சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!

பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!


நந்தினியின் சித்தப்பா பேசி முடிப்பதற்குள் நந்தினியின் அப்பாவிற்கு கார்த்திக்கின் வருகைக்குறித்து வாசலில் இருந்த உறவுக்காரர் தகவல் தர, அவர் வீட்டினுளிருந்து வேகமாக கார்த்திக்கை நோக்கி கலவரமான முகத்தோடு வந்தார்.....அவரது கண்களில் தழும்பிய சோகமும் திகிலும்.........கார்த்திக்கின் மனதில் "பூகம்பம்' வெடிக்கச் செய்தது.

கார்த்திக்கின் அருகில் வந்த நந்தினியின் அப்பா ,கார்த்திக்கின் தலையில் அடிபட்ட இடத்திலிருந்த கட்டைப் பார்த்ததும்,

"மாப்ள ........தலையில....அடிபட்டிருக்கு...என்னாச்சு மாப்ள?"

"அது....ஒன்னுமில்ல........நந்......தினிக்கு.........என்னாச்சு"

"மாப்ள ......நந்தினிக்கு......பிரசவ வலி வந்துடுச்சு........உள்ளூர் ஆஸ்பத்திரில டாக்டரம்மா இல்ல.....வெளியூருக்கும் அவளை கூட்டிட்டு போக முடியாத படி பிரசவத்துல சிக்கல்.........அதான் பட்டணத்துக்கு.......கார் அனுப்பிருக்கோம் டாக்டர கூட்டிட்டு வர"

"........"

" மாப்ள........என்.......புள்ள...........வலியில துடிக்கிறா..........மாப்ள......என் உசிரே நடுங்குது"

பெத்த பிள்ளை செத்து பிழைக்கும் வேதனையை பொறுக்க முடியாமல் பேச்சிற்கு நடுவே பலமுறை உடைந்துப் போனார் அந்த அப்பா.

பிரசவ தேதிக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கையில்........நந்தினிக்கு பிரசவ வலியா??......அதுவும் சிக்கலுடன்..........

நந்தினி .......என் செல்லமே!
நான் இல்லாம
நீ வாழ
உன்னை
தயார் படுத்தின
எனக்கு
ஒரு நொடிக் கூட
நீ இல்லாம
வாழ முடியாதடி தங்கமே!!

நந்தினி..........நீ வேணும்டா..........எனக்கு.............நீ வேணும்.........கடவுளே என் நந்தினியை என்கிட்ட கொடுத்திடு!!

கார்த்திக்கின் சிந்தனையை வீட்டின் முன் வேகமாக வந்து நின்ற காரின் சத்தம் கலைத்தது.

பட்டணத்திலிருந்து பெண் மருத்துவரும் அவரது உதவியாளர்களாக இரண்டு நர்ஸும் வந்திறங்கினர்.

நந்தினி இருந்த அறைக்கு மருத்துவர் வேகமாக செல்ல, கார்த்திக் டாக்டரிடம்...

"டாக்டர்.....நான் நந்தினியோட.......ஹஸ்பெண்ட்......இந்த சமயத்துல அவ பக்கதுல இருக்கனும்னு விருப்பப்படுறேன்...ப்ளீஸ் டாக்டர்......அலோவ் மீ ப்ளீஸ்"

கண்களில் நீர் தழும்ப கைகூப்பி தன்னிடம் வேண்டும் ஒரு கணவனின் அன்பில் ஒரு நிமிடம் அதிசயத்துப் போனார் மருத்துவர்.

"அது........எப்படி......" என்று அவர் தயங்க.

"ப்ளீஸ் டாக்டர்.............ப்ளீஸ் அலோவ் மீ டாக்டர்"

"சரி.....உள்ள வாங்க"

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின் உறவுப்பிணைப்பிற்கு மேலும் வலுச்சேர்கும் என்று கார்த்திக்கின் தாய் தன் மகனை ஆறுதலாக தோளில் தட்டிக்கொடுத்தார்.

மருத்துவருடன் பிரசவ அறைக்குள் ஓர் ஆணா???
வியப்பில் விளித்தது அங்கு குழுமியிருந்த பெண்கள் கூட்டம்!

"என்னாதிது........பட்டணத்து மாப்ள இப்படி சொல்றாரு"
"இது என்ன பழக்கம்"
"அதெப்படி.......ஆம்பள உள்ளே போகலாம்......."

பெண்களின் மத்தியில் சலசலப்பு......

இதை எல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் டாக்டருடன் கார்த்திக் அறைக்குள் சென்றான்.

வலியில் துடித்துக் கதறும் தன் நந்தினியை கண்டதும் நெஞ்சு விம்மிக் கொண்டு வந்தது கார்த்திக்கிற்கு.

அவனை சற்றும் எதிர்பாராத நந்தினி.......வேதனையின் மத்தியிலும் அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்து புன்முறுவல் பூத்தாள்

அவளருகே சென்று....அவளது கரத்தை அழுத்திப் பிடித்த கார்த்திக்.....

"என்னை மன்னிச்சிருமா.......செல்லம்" என்று குரல் கம்ம கூறினான்.

அவனது அருகாமை........கையில் பதிந்த அழுத்தம், நந்தினிக்கு புத்துயிர் கொடுத்தது.

இவனது தலையிலிருந்த காயத்தை கவனித்தவள்,

சிவந்து கலங்கிய கண்களுடன்....."தலை.....யில் என்......னா....ச்சு" என்று தட்டு தடுமாறிக் கேட்டாள்.

"ஒன்னுமில்லடா............என்......னை......மன்.....னிச்சிடு.......மன்னி.....ச்........சிரு........" என்று மறுபடியும் விசும்பலுடன் அவள் கரத்தில் முகம் புதைத்தான்.

பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்,

"நீங்க....அவங்களுக்கு உறுதுணையா பக்கத்தில் இருப்பீங்கன்னு உள்ளே அலோவ் பண்ணினா..........இப்படி எமோஷனல் ஆகிறீங்க........கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்"

":ஸா.......ரி.......ஸாரி......டாக்டர் ........ஐ வில் கண்ட்ரோல் மைசெல்ஃப்"

'அவர் இருக்கட்டும் டாக்டர்' என்பது போல் சைகையால் டாக்டரிடம் தெரிவித்தாள் நந்தினி.

மருத்துவரின் சிகிச்சை தொடர்ந்தது, அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நர்சும் மும்முரமாக அங்கும் இங்கும் பரபரத்தபடி உதவி செய்தனர்.

நந்தினியின் கண்ணில் இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது.
அவளது வாய் ' வலிக்குதுப்பா' என்று முனுமுனுத்தபடி இருந்தது,
உதடுகள் வறண்டிருந்தன,
கார்த்திக்கிற்கு வேதனையாக இருந்தது.

மனதுக்குள், ' இவளே ஒரு குழந்தை என்று எண்ணுகிறேன்...........இவளோ என் குழந்தைக்காக வலி தாங்கிக் கொண்டிருக்கிறாளே!' என்று வியந்தான்!!!

அவள் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டான்.

அவர்களின் கண்கள் சந்தித்தபோது, உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன.

வலி குறைய தான் ஏதும் செய்ய முடியுமா? என அப்பாவியாக டாக்டரிடம் கேட்டான் கார்த்திக்.

"பொறுங்க சார்...........இரண்டு உயிரையும் காப்பாத்த போராடிட்டு இருக்கிறோம்........நீங்க வலியை பத்தி கவலைப்படுறீங்க"

மருத்துவர் இப்படி கூறியதும்.........இனம் புரியா ஒரு வித பயம் கார்த்திக்கை தாக்கியது.

இறைவனிடம் நேரிடையாக பேசுவதுபோல் மனதுக்குள் வேண்டிக்கொண்டான்
' ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்' என்று இறைஞ்சினான் கார்த்திக்.

அறையின் வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.

பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான் கார்த்திக்.

பிரசவ நேரத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலை திறம்பட கையாண்ட மருத்துவரின் உதவியால் நந்தினி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க மகன்!!

நந்தினி தன் குழந்தையை உச்சி முகர்ந்தாள்.......


அவளது நெற்றியில் பூத்திருந்த முத்து முத்தான வேர்வைத்துளிகளை துடைத்து 'அப்பா'வான பெருமிதத்துடன் பார்த்தான் கார்த்திக்.

தங்கள் குழந்தையின் ஸ்பரிசம் உடலில் சில்லிட......
இருவரின் கண்களிலும்
ஆனந்த கண்ணீர் துளிகள்!
அது வார்த்தைகளால் விவரிக்க
முடியா மணி துளிகள்!!

தன் குடும்பம் தழைத்தோங்க உதித்த 'பேரனை' கண்ணாரக் கண்டு களித்தார் காத்திக்கின் அன்னை......

தன் தாயிடம் குழந்தையை கொடுத்த கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!



இனிதே தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!


முற்றும்.