September 01, 2008

மனைவி மார்க் போட்டால்.......???
ஆங்கிலத்தில படித்த ஒரு article யை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு........

செப்டம்பர் 11 ஆம் தேதி திருமண பந்ததில் அடி எடுத்து வைக்கும் நண்பர் அருண்குமார் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களுடன்........!!!ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்னாலே, நல்லா பரீட்சை எழுதி பாஸ் ஆகனுமேன்னு ஒரு பயம் இருக்கும்......:(

அதைவிட கஷ்டமான ஒரு தேர்வு இருக்கு..........அது என்னன்னு தெரியுமா??? டே டு டே லைஃப்ல உங்க ஒவ்வொரு செயலுக்கும், அசைவுக்கும் உங்க மனைவி போடும் மார்க்!!!

மனைவி மார்க் போடுவாங்களா?????

மார்க் போட்டா..........எவ்வளவு போடுவாங்க, எதுக்கெல்லாம் போடுவாங்க, எப்படி போடுவாங்க, தெரிஞ்சுக்கனுமா??

தொடர்ந்து பதிவை படிங்க...!!

நீங்க திருமணமான ஆணாக இருந்தால், உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா நீங்க பாஸா? ஃபெயிலா ன்னு தெரிஞ்சுக்கலாம்!

நீங்க திருமணமாகாத ஆணாக இருந்தால், எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்!!

இதோ சில சாம்பிள்......1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது "ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க" அப்படின்னு சொல்றார் மனைவி....

அ. உடனே நீங்க தைரியமா கதவை திறந்து வெளியே போய்ப் பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று வந்து படுக்கிறீர்கள் [ மார்க் - 0, 'ஏன் மார்க் பூஜ்ஜியம்னு முழிக்கிறீங்களா??.........காரணம் அப்படி வெளியே போய் பார்த்துட்டு வரவேண்டியது உங்க கடமை, அதுக்கெல்லாம் மார்க் கிடையாது']

. "அங்கே ஏதோ அசையுற மாதிரி இருக்குதே.......ஹே யாரது.....எவன்டா அது......." அப்படின்னு சவுண்டு விட்டுட்டு வந்து படுக்கிறீங்க [ மார்க்: 10]

.சவுண்டு விட்டதோடு நிறுத்தாம, கைல ஒரு தடியெடுத்துட்டுப் போய் தரையில ரெண்டு தட்டு தட்டி சீன் போட நீங்க நினைக்க, நீங்க தடியால் போட்ட போடு உங்கள் மனைவிக்கு பிரியமான பூந்தொட்டி, செல்ல பூனைகுட்டி இப்படி எதின் மீதாவது பட்டால்......[மார்க் : -5 'மைனஸ் 5 நோட் பண்ணிக்கோங்க']2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....

. இரவு ஒரு நல்ல ஹோட்டலுக்கு.......[அவங்களோட ஃபேவெரேட் ரெஸ்டாரண்டுக்கு] டின்னர் சாப்பிட அழைச்சுட்டுப்போறீங்க [ மார்க்: 0 ' ஹலோ என்ன முழிக்கிறீங்க.....இதுவும் உங்க கடமைங்கோ, ஸோ நோ மார்க்குங்கோ!']

. டின்னர் முடிஞ்சதும், சர்ப்ரைஸா மனைவிக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் வாங்கி கொடுக்கிறீங்க [மார்க்:10]

இ: அவங்க பிறந்தநாளை கொண்டாட டின்னருக்கு கூட்டிட்டு போய்ட்டு.......நீங்க பியர் அருந்திட்டு, ஆட்டம் பாட்டம்னு நடு ராத்திரிவரைக்கும் கொட்டம் அடிக்கிறீங்க......அங்கே வந்திருக்கும் மற்றவர்களுடன் [ மார்க் : -100 'மைனஸ் நூறு']3.உங்கள் உடலமைப்பு எப்படி????

அ. தொப்பை போட்டிருக்கிறீர்கள் [மார்க்: -50 'மைனஸ் ஐம்பது']

. தொப்பை வயிறாக இருந்தாலும், அதை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி பண்றீங்க [மார்க்: 0 ' அட......தேகப் பயிற்சி பண்றது உங்க கடமைங்க, ஸோ மார்க் ஸீரோ தானுங்க']

இ. தொந்தி பற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா ' என்னைப்பார் ! என் தொப்பையை பார்!! என்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும் போட்டுக்கிறீங்க.[மார்க்: -100 ' மைனஸ் நூறு' ]

ஈ. எனக்கு மட்டுமா தொப்பை இருக்கு? உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி !! என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.[மார்க்: -1000 'மைனஸ் ஆயிரம்']4. உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....

அ. நல்லபுள்ளையா போய் உடனே வாங்கிட்டு வந்துடுறீங்க [ மார்க்:0 ' இப்படி சமர்த்தா வாங்கிட்டு வரவேண்டியது உங்க கடமை ராசா, ஸோ நோ மார்க் ' ]

. உங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு சொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு வருகிறீர்கள்[ மார்க் : 10 ]

இ. மனைவிக்கு ஸ்வீட் மட்டும் வாங்காமல், கூடவே உங்களுக்கு பிடிச்ச பக்கோடா மிக்சர்ன்னு சில அயிட்டமும் சேர்த்து வாங்கிட்டு வர்ரீங்க [ மார்க்: - 5 ' என்ன முறைக்கிறீங்க?ஐந்து மார்க்தாங்க மைனஸ்.......இப்படி முறைச்சீங்கன்னா இன்னும் ஜாஸ்தி மார்க் மைனஸ் ஆகும், கவனம்']5. " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....

அ. அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]

ஆ."ஆமாம்...கொஞ்சம்....இல்ல.........இல்லடா........ரொம்ப இல்ல, கொஞ்சமாதான்.......ஆனாலும் அழகாதான்மா இருக்க" ஆமாம் ன்னு ஆரம்பிச்சுட்டு அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்லி சமாளிச்சாலும், எவ்வளவு சப்பைக்கட்டு கட்டினாலும்......[மார்க் : -25 ' மைனஸ் 25']

இ. அப்பாவி முகத்துடன் "தூரத்துல இருந்து பார்த்தாவா??...........இல்ல பக்கத்துலயா??" என நக்கலடிக்கிறீர்கள்.[மார்க்: -100 ' இந்த நக்கலுக்கெல்லாம் மைனஸ் மார்க் தானுங்க!!']6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்…

அ. அவர் பேசி முடிக்கும்வரை வெகு உன்னிப்பாகக் கேட்பது போன்ற பாவத்தை உங்கள் முகத்தில் மெயிண்டேன் பண்றீங்க[மார்க்: 0 ' இதுதாங்க நீங்க செய்தே ஆகவேண்டிய முக்கிய கடமை , அதுக்கெல்லாம் மார்க் போட முடியாது']

ஆ. உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல், எதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு!!']

இ. உங்க மனைவி பேசி முடிப்பதற்குள் நீங்க அப்படியே தூங்கிட்டீங்கன்னு பேச்சின் முடிவில் தெரிஞ்சுக்கிறாங்க[ மார்க்: -1000 ' மைனஸ் ஆயிரம் ஏன்னு பார்க்கிறீங்களா??.............பின்ன எவ்வளவு 'தில்' இருந்தா, பேசிட்டு இருக்கும்போது பேச்சை கவனிக்காம இப்படி தூங்கி வழிவீங்க??]

மனைவியரின் மார்க் போடும் இரகசியம் புரிஞ்சுடுச்சா? பாஸாக வாழ்த்துக்கள்!!!

[இந்த பதிவை படித்துவிட்டு,
மனைவியை மார்கே போடவிடாமல் எப்படி சதி பண்ணுவது?? என்று தன் அனுபவபூர்வமான ஆலோசனைகளை பதிவாக எழுதியுள்ளார் நண்பர் விஜய் - இங்கே]

163 comments:

said...

இதப் பார்டா திவ்யாவுக்கு துணிச்சலை.....
அம்மணி நாங்க தாங்கோ பொதுவா மார்க்
போடுவோம் ... நீங்க என்ன ப்ளேட்டை
மாத்தறீய..?? ;))))

said...

//நீங்க திருமணமான ஆணாக இருந்தால்,
உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா
நீங்க பாஸா?ஃபெயிலானு தெரிஞ்சுக்கலாம்! //

அதான் கல்யாணம் ஆனாலே எல்லாமே Off ஆகிப்
போய்டுமே நம்ம ஆளுகளுக்கு..? மொத்தமா
போனதுக்கப்புறம் பாஸ் ஆனா என்ன ஃபெயில்
ஆனா என்னாம்மா....?? ;))))

said...

//நீங்க தடியால் போட்ட போடு உங்கள் மனைவிக்கு
பிரியமான பூந்தொட்டி, செல்ல பூனைகுட்டி இப்படி
எதின் மீதாவது பட்டால்......
[மார்க் : -5 'மைனஸ் 5 நோட் பண்ணிக்கோங்க'] //

இதுகெல்லாம் இப்படி அல்பத்தனமா
மைனஸ்ல மார்க் போட்டா
அப்படியே தடியால் மனைவிக்கும் செல்லமா
ரெண்டு போடு போடவேண்டியதுதான்..... ;)))))

said...

//எனக்கு மட்டுமா தொப்பை இருக்கு?
உனக்கு தான் என்னைவிட
பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி !!
என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.
[மார்க்: -1000 'மைனஸ் ஆயிரம்'] //

என்னா திவ்யா இது சின்னப்புள்ளத்தனமா
இருக்கு..?? !!! கணவனோட இந்த நகைச்சுவை
உணர்வைக்கூட ரசிக்கத்தெரியாத மனைவிக்குதான்
மைனஸ் 2000 மார்க் கொடுக்கணும் ... தெரியும்ல..??
:)))).

said...

//உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....//

இப்படிக் கேட்டா " செல்லம் நீயே ஒரு
ஸ்வீட்டு உனக்கு எதுக்குடி
கண்ணு ஸ்வீட்டு " ன்னு
சொல்லிட்டு ஜாலியா
வீட்டிலேயே இருந்தா எவ்ளோ மார்க்கு
கெடைக்குங்க அம்மணி...?? ;))))

said...

// " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?"
என்று கேட்கிறார் உங்கள் மனைவி.... //

ஓஓஓ.... இந்த கேள்விக்கு எப்படி பதில் சொன்னாலும்
மைனஸ்ல மார்க்கா..?? அடங்கொப்புரானே..
இதென்னா கோக்கு மாக்கா இருக்கு..?
அப்போ வழக்கம் போல பொய்யச்
சொல்ல வேண்டியதுதான் அப்படீன்னு
சொல்லறீயளா திவ்யா..?? ;)))))

said...

// ஒரு பிரச்னை பற்றி சீரியஸா
உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார்.
அதற்கு நீங்கள்…//

மனைவி பேச வந்தாலே பிரச்சனைதான்...
இதுலே சீரியஸ் வேறயா திவ்யா..?
ஹிஹிஹிஹிஹிஹி......

said...

ஆனாலும் வர வர நெம்ப நக்காலாகிப் போச்சு
திவ்யாவுக்கு... மார்க்கு போடுறீயளா மார்க்கு..?
அம்மணி நாங்க எல்லாம் பரீட்சையிலேயே
'பிட்' அடிச்சாச்சும் மார்க் வாங்கற பரம்பரைங்கோ...
ஆஃப்ட்ரால் மனைவிகிட்டே மார்க் வாங்கரது
ஒண்ணும் ஃப்ராப்ளமே இல்லை...
தெர்தா..? ;)))))

said...

அம்மணி, ரொம்ப லேட்டா சொல்லறீயளே. ஆக மொத்தத்துல மனைவிகிட்ட பாஸ் மார்க் வாங்கவே முடியாதுன்னு சொல்லுங்க. மனைவிகளெல்லாம் பா.ம.கா.வில் சேரலாம். அவிங்க தானே கூட்டணியிலேயே இருந்துக்கிட்டு, கொடச்சலும் குடுத்துக்கிட்டு ஃபெயில் மார்க்கும் போடுறவங்க!

மனைவிகளும் புருஷன் கூடவே இருந்துகிட்டு, அவங்களுக்கும் கொடைசசலும் குடுத்து இப்படி கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம ஃபெயில் ஆக்கறது?

ஆனால் மனைவி கிட்ட 100 மார்க் சுலபமா வாங்கிடலாம். அவங்க என்ன சொன்னாலும் சரி என்ற தாரக மந்திரத்தை சொல்லிக்கொண்டிருந்தால் :-)டிஸ்கி:
இதற்கு ஒரு எதிர்ப்பதிவு எழுதலாமான்னு சீரியஸா யோசித்துக்கொண்டிருக்கேன். என்ன என் மனிவியும் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக்கொண்டு நான் என்ன எழுதிகிறேன் என்று நோட்டம் விடுவதால்தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியியிருக்கு.

Anonymous said...

அம்மணிக்கு கண்ணாலமாயிடுச்சா?
...
Mr.திவ்யாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
வேற என்னத்த சொல்ல?..

said...

:-)

Anonymous said...

:-))

said...

-100,000 eduthu irundhaalum namma technology use panni paarunga...udaney athu +100,000 aagidum... :-)

said...

ROTFL..ungakita evan matikitu muzhika poran therila :D pass mark vangalina muttikal poada vachi perambalaye adipeenga polarukay :D :D gunda irukena question reminds me of F.R.I.E.N.D.S episode..oru oru pointa alasi comment poda oru post porathu divya..kalaasal post

Anonymous said...

அம்மணிக்கு கண்ணாலம் ஆகிட்டுதுங்களா?..
ஆம் எனில் Mr.திவ்யாவுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
இல்லையா...
டேய் தம்பி முழிச்சிக்கோ..

said...

பெரியவங்க விஷயம்... நான் ஏதாவது கதை படிக்க போறேன்...
:)

said...

போட்டோ மட்டும் சூப்பர்.. மற்றபடி வேற எல்லாம் சுமார்தான் :-)

நன்றி
உழவன்
http://tamiluzhavan.blogspot.com
http://tamizhodu.blogspot.com

said...

:)))

வெறும் மைனஸ் மட்டும்தான் நெறைய இருந்தது.. கொஞ்சம் ப்ளஸ் எப்படி வாங்குறதுன்னும் எக்ஸ்ட்ரா பிட்ட போட்டிருந்தா எங்களுக்கு உபயோகமா இருந்திருக்கும் :)))

said...

அட காமெடியாகவும் எழுதுறீங்களே! சபாஷ்....கலக்குங்க...

said...

அவசியம் இப்படி ஒரு கல்யாண வாழ்க்கை வேணுமாடா சரவணா????சரி.. விட்ரா.. அதற்கு இன்னும் சில வருடங்கள் இருக்கு.. இப்போ போய் நிம்மதியா வேலையை பாரு..
:)

said...

திவ்யா,, இப்படியே உங்களோட ரிசர்ச்ச கண்டினியு பண்ணுனீங்க.. ஒரு டாக்டர் பட்டம் வாங்கிடலாம்..

All the Best..
:)

said...

// ஜொள்ளுப்பாண்டி said...
//உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....//

இப்படிக் கேட்டா " செல்லம் நீயே ஒரு
ஸ்வீட்டு உனக்கு எதுக்குடி
கண்ணு ஸ்வீட்டு "
ன்னு
சொல்லிட்டு ஜாலியா
வீட்டிலேயே இருந்தா எவ்ளோ மார்க்கு
கெடைக்குங்க அம்மணி...?? ;))))
//

???????
;)
;)

said...

பசங்களுக்காக ஒரு மார்க் பதிவ போடுங்க..
:)

said...

nandri hai for ur wishes...
post padichittu varen....

said...

:)))

said...

//ஆனாலும் வர வர நெம்ப நக்காலாகிப் போச்சு
திவ்யாவுக்கு... மார்க்கு போடுறீயளா மார்க்கு..?
அம்மணி நாங்க எல்லாம் பரீட்சையிலேயே
'பிட்' அடிச்சாச்சும் மார்க் வாங்கற பரம்பரைங்கோ...
ஆஃப்ட்ரால் மனைவிகிட்டே மார்க் வாங்கரது
ஒண்ணும் ஃப்ராப்ளமே இல்லை...
தெர்தா..? ;)))))//

ரீப்பிட்டே..... :)

said...

padichitten....

ore oru kelvi mattum thaan...

indha ponnungalukku en indha kola veri?

said...

//
வெறும் மைனஸ் மட்டும்தான் நெறைய இருந்தது.. கொஞ்சம் ப்ளஸ் எப்படி வாங்குறதுன்னும் எக்ஸ்ட்ரா பிட்ட போட்டிருந்தா எங்களுக்கு உபயோகமா இருந்திருக்கும் :)))
//

thambi, firstu minus vaangama irukka try pannu... adhukkapparam plus pathi yosikkalaam... enna puriyudha?

said...

//
வெறும் மைனஸ் மட்டும்தான் நெறைய இருந்தது.. கொஞ்சம் ப்ளஸ் எப்படி வாங்குறதுன்னும் எக்ஸ்ட்ரா பிட்ட போட்டிருந்தா எங்களுக்கு உபயோகமா இருந்திருக்கும் :)))
//

naats-oda logic use pannu man :-)

said...

எனக்கு ஒரு டவுட்டு பாஸ் ஆனா என்ன ஆகும் இல்ல பெயில் ஆனா என்ன ஆகும்?? நீங்க போட்டுருக்கிறத பாத்தா பெயில் மட்டும் தான் ஆகும் போல இருக்கே!

said...

//உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல், எதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு!!'] //

இது ஆகுறது இல்ல. எனக்கெல்லாம் 100 மார்க் வாங்க வழியே இல்ல. 10 நிமிசம் அவிங்க பேசுறத கேட்குறதே நெம்ப கஷ்டமா இருக்கு, இதுல 1 மணி நேரமா?
திவ்யா, நீங்க எல்லாம் இப்ப ஒரு மார்க்கமாத்தேன் கிளம்புறீங்க. இப்பவே கண்ண கட்டுது.

said...

என்ன கொடுமை மாஸ்டர் இது...:(

said...

ரொம்ப ஓவர்...
(பொம்பளைங்க இவ்வளவு மோசமானவங்களா ;)

said...

\
உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல், எதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு!!']
\

பேசியே கழுத்தறுப்பிங்கறத வேற மாதிரி சொல்றிங்களா...:)

(ஆனா என்னை விட்டா நாள் புராவும் கேட்டுக்கிடடிருப்பேன் அவள் என்ன சொன்னாலும்:)

said...

\
உங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு சொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு வருகிறீர்கள்[ மார்க் : 10 ]
\

நல்லா ஏத்துறாங்கடா போதைய...:)

said...

\
அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]
\
அப்ப நிஜமாவே குண்டா தெரிஞ்சாங்கன்னா என்ன சொல்றது..:))

said...

அருண்குமாருக்கு வாழ்த்துக்கள்...:)

said...

அருண்குமர் நல்லா பாஸாகி ரொம்ப சந்தோசமா இருக்க தம்பதிகளை வாழ்த்திக்றோம்...:)

said...

அக்குவேரா ஆனிவேரா பிரிச்சு ஆராய்ச்சி செய்து ஒரு சமுதாயநோக்கோட நீங்க போட்டிருக்கும் போஸ்ட் இது..இதுக்காக்வே உங்களுக்கு பாஸ் மார்க்+ பெரிய ஓ + மனதார பாராட்டு :))

சரி மேட்டருக்கு வருவோம்..

said...

1.செப்டம்பர் 11 ஆம் தேதி திருமண பந்ததில் அடி எடுத்து வைக்கும் நண்பர் அருண்குமார் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களுடன்........!!!

முதல்ல அவருக்கு வாழ்த்துக்கள் :)

2.இயல்பா எல்லா விஷயத்திலேயும் அவங்க கடமை என்னன்னு விம் பார் போட்டு விளக்கி இருக்கீங்க..சபாஷ் :))

3.அதே மாதிரி என்ன பண்ணா மனைவிக்கு கோவம் வரும்ன்னு தெளிவா கோடிட்டு சொன்னதோட இல்லாம மைனஸ் மார்க் போட்டு கவனத்தை ஈர்த்தமைக்கு அடுத்த சபாஷ் :)

ஸோ டோட்டலி எல்லாத்தையும் கிலியரா சொல்லிருக்கும் திவ்யா மாஸ்டர்..தொடரட்டும் உங்கள் பணி எங்கள் ஃபுல் சப்போர்ட் எப்பவும் உங்களுக்குத்தான் :))

Anonymous said...

மொத்தத்துல 0 மார்க் எடுத்தாலேஅது பெரிய விஷயம் என்று சொல்றீங்க.
ம்ம்
முதல்ல கல்யாணமாகட்டும்.

வெயிட்.
///" ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....
////
இதுக்கு என்ன பதில்தா கடசியா சொல்லலாம்கறீங்க?
கண்டிப்பா பதில் வேணும்.
வாழ்க்கைக்கு உதவிய புண்ணியம் கிடைக்கும்.
:)

Anonymous said...

சுவாரஸ்யமான பதிவு.........

//அப்பாவி முகத்துடன் "தூரத்துல இருந்து பார்த்தாவா??...........இல்ல பக்கத்துலயா??" என நக்கலடிக்கிறீர்கள்//

இது டாப் !! :)

said...

அடிச்சு தூள் கிளப்புறீங்க திவ்யா....சிரிச்சு சிரிச்சு பல் சுளுக்கிடுச்சி....ஏற்கெனவே மனைவிகிட்டே எப்படி பாஸ் மார்க் வாங்குறதுன்னு திரு திருன்னு முழிச்சுட்டு இருக்கிற திருவாளர்கள்....பாஸ் மார்க்கே கிடைக்காதுன்னு தெரிஞ்சால்
எப்படி முழிக்கப் போறாங்களோ????
அன்புடன் அருணா

said...

பதிவு ..ரெம்ப அருமையா இருக்கு ..திவ்யா..

said...

//எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்!!//

இது யாருக்காக ...
மார்க் போடறவங்களுக்கா .. இல்லை மார்க்
வாங்கறவங்களுக்கா ... ?????????

(ஆமா எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க... மார்க்கெல்லாம் போட சொல்லி தர )

said...

நாங்க எப்படி மார்க் போடறதுன்னு ..பதிவு ..
எப்ப போட போறீங்க ?...

said...

\
அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]
\
அப்ப நிஜமாவே குண்டா தெரிஞ்சாங்கன்னா என்ன சொல்றது..:))

என்ன சொன்னாலும் மைனஸ் 1000 மார்க்ஸ் தான் ...????

said...

என்ன சொன்னாலும் சரி பதிவு மிக அருமை ... சிரிப்பதற்கு இதில் நிறையவே இருக்கு திவ்யா

said...

அருணுக்கு வாழ்த்துக்கள் ;)

said...

திவ்யா,மைனஸ் மார்க்ஸ் தாங்க நிறைய இருக்கு,
ஸீரோ மார்க் வாங்கிடுறது பெட்டர் போலிருக்குதே:(

said...

நான் சொல்ல வந்ததை எல்லாம் ஜொள்ளுப்பாண்டி சொல்லிட்டார்....அதனால அவர் சொன்னதுக்கெல்லாம் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
இதப் பார்டா திவ்யாவுக்கு துணிச்சலை.....
அம்மணி நாங்க தாங்கோ பொதுவா மார்க்
போடுவோம் ... நீங்க என்ன ப்ளேட்டை
மாத்தறீய..?? ;))))\\

வாங்க பாண்டி....'ஜொள்ளுப்பாண்டி'!!

யாரும் ப்ளேட்டை மாத்தல பாண்டி,
நீங்க மார்க் போட்டதெல்லாம் அந்தகாலமுங்க, காலம் மாறி போச்சுங்க:))

\\இதப் பார்டா திவ்யாவுக்கு துணிச்சலை.....\\

இந்த துணிச்சல் கூட இல்லீனா எப்படி பாண்டி??

said...

\ ஜொள்ளுப்பாண்டி said...
//நீங்க திருமணமான ஆணாக இருந்தால்,
உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா
நீங்க பாஸா?ஃபெயிலானு தெரிஞ்சுக்கலாம்! //

அதான் கல்யாணம் ஆனாலே எல்லாமே Off ஆகிப்
போய்டுமே நம்ம ஆளுகளுக்கு..? மொத்தமா
போனதுக்கப்புறம் பாஸ் ஆனா என்ன ஃபெயில்
ஆனா என்னாம்மா....?? ;))))
\\

கல்யாணம் ஆனாலே மொத்தமா 'off' ஆகிடுவீங்கன்னு ஒத்துக்கிறீங்களா?? இப்படி பப்ளிக்கா ஒத்துக்கிற நீங்க ரொம்ப நல்லவரு பாண்டி:))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//நீங்க தடியால் போட்ட போடு உங்கள் மனைவிக்கு
பிரியமான பூந்தொட்டி, செல்ல பூனைகுட்டி இப்படி
எதின் மீதாவது பட்டால்......
[மார்க் : -5 'மைனஸ் 5 நோட் பண்ணிக்கோங்க'] //

இதுகெல்லாம் இப்படி அல்பத்தனமா
மைனஸ்ல மார்க் போட்டா
அப்படியே தடியால் மனைவிக்கும் செல்லமா
ரெண்டு போடு போடவேண்டியதுதான்..... ;)))))\\

பாண்டி...மனைவிய செல்லமா தட்டுறேன்னு நீங்க அப்படி தட்ட போய், உங்க வீட்டமனி தடியால 'ஒரே' போடா உங்க உச்சி மண்டைல போட்டுட போறாங்க, ஜாக்கிரதை!!!

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//எனக்கு மட்டுமா தொப்பை இருக்கு?
உனக்கு தான் என்னைவிட
பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி !!
என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.
[மார்க்: -1000 'மைனஸ் ஆயிரம்'] //

என்னா திவ்யா இது சின்னப்புள்ளத்தனமா
இருக்கு..?? !!! கணவனோட இந்த நகைச்சுவை
உணர்வைக்கூட ரசிக்கத்தெரியாத மனைவிக்குதான்
மைனஸ் 2000 மார்க் கொடுக்கணும் ... தெரியும்ல..??
:)))).\\

அலோ இதுக்கு பேரு உங்க ஊருல நகைச்சுவை உணர்வா??

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....//

இப்படிக் கேட்டா " செல்லம் நீயே ஒரு
ஸ்வீட்டு உனக்கு எதுக்குடி
கண்ணு ஸ்வீட்டு " ன்னு
சொல்லிட்டு ஜாலியா
வீட்டிலேயே இருந்தா எவ்ளோ மார்க்கு
கெடைக்குங்க அம்மணி...?? ;))))\\

நீங்க பேசுற இந்த டயலாக்கெல்லாம் மார்க் கிடையாதுங்க.......அப்படி கொஞ்சல் டயலாக்ஸ் பேசுறதும் கடமைகள் லிஸ்ட்ல தானுங்கோ இருக்கு, ஸோ...மார்க் = 0

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
// " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?"
என்று கேட்கிறார் உங்கள் மனைவி.... //

ஓஓஓ.... இந்த கேள்விக்கு எப்படி பதில் சொன்னாலும்
மைனஸ்ல மார்க்கா..?? அடங்கொப்புரானே..
இதென்னா கோக்கு மாக்கா இருக்கு..?
அப்போ வழக்கம் போல பொய்யச்
சொல்ல வேண்டியதுதான் அப்படீன்னு
சொல்லறீயளா திவ்யா..?? ;)))))\\

கப்புனு புரிஞ்சுக்கிட்டீங்களே பாண்டியண்ணே......:))

வழக்கம்போல் " நீ சிம்ரனை விட ஸ்லிமா இருக்கடா செல்லம்" னு ஒரு பொய்ய சொன்னீங்கன்னா.....0 மார்காச்சும் கிடைக்கும்:))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
// ஒரு பிரச்னை பற்றி சீரியஸா
உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார்.
அதற்கு நீங்கள்…//

மனைவி பேச வந்தாலே பிரச்சனைதான்...
இதுலே சீரியஸ் வேறயா திவ்யா..?
ஹிஹிஹிஹிஹிஹி......\\

ஓஹோ! மனைவி பேச வந்தாலே உங்களுக்கு பிரச்சனையா தெரியுதா??

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
ஆனாலும் வர வர நெம்ப நக்காலாகிப் போச்சு
திவ்யாவுக்கு... மார்க்கு போடுறீயளா மார்க்கு..?
அம்மணி நாங்க எல்லாம் பரீட்சையிலேயே
'பிட்' அடிச்சாச்சும் மார்க் வாங்கற பரம்பரைங்கோ...
ஆஃப்ட்ரால் மனைவிகிட்டே மார்க் வாங்கரது
ஒண்ணும் ஃப்ராப்ளமே இல்லை...
தெர்தா..? ;)))))\\

ஹலோ பாண்டி....ஜொள்ளுபாண்டி,

இது நக்கலுமில்ல விக்கலுமில்ல, ஏதோ உங்களை மாதிரி அப்பாவி[?!] ஆண்கள் மனைவிக்கிட்ட மார்க் வாங்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கட்டுமேன்னு நல்ல எண்ணத்துல, எனக்கு வந்த ஆங்கில fwd email ஆ தமிழாக்கம் செய்து பதிவா போட்டேனாக்கும், தெரிஞ்சுக்கோங்க:))

நீங்க பிட் அடிச்சு பாஸ் ஆவீங்களோ......இல்ல உங்க அம்மனியோட கால்ல விழுந்து பாஸ் ஆவிங்களோ தெரியாது, அது உங்க சாமர்த்தியத்தை பொறுத்தது:)))

பாஸா ஆனா சந்தோஷமே!!!

said...

\\ விஜய் said...
அம்மணி, ரொம்ப லேட்டா சொல்லறீயளே. ஆக மொத்தத்துல மனைவிகிட்ட பாஸ் மார்க் வாங்கவே முடியாதுன்னு சொல்லுங்க. மனைவிகளெல்லாம் பா.ம.கா.வில் சேரலாம். அவிங்க தானே கூட்டணியிலேயே இருந்துக்கிட்டு, கொடச்சலும் குடுத்துக்கிட்டு ஃபெயில் மார்க்கும் போடுறவங்க!

மனைவிகளும் புருஷன் கூடவே இருந்துகிட்டு, அவங்களுக்கும் கொடைசசலும் குடுத்து இப்படி கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம ஃபெயில் ஆக்கறது?\\

வாங்க விஜய்!!\\ஆனால் மனைவி கிட்ட 100 மார்க் சுலபமா வாங்கிடலாம். அவங்க என்ன சொன்னாலும் சரி என்ற தாரக மந்திரத்தை சொல்லிக்கொண்டிருந்தால் :-)\\அனுபவம் பேசுகிறது:)))\\டிஸ்கி:
இதற்கு ஒரு எதிர்ப்பதிவு எழுதலாமான்னு சீரியஸா யோசித்துக்கொண்டிருக்கேன். என்ன என் மனிவியும் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக்கொண்டு நான் என்ன எழுதிகிறேன் என்று நோட்டம் விடுவதால்தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியியிருக்கு.\\

சீக்கிரம் அந்த எதிர்பதிவை போடுங்க விஜய்.......ஆவலுடன் வெயிட்டீங்!!!

said...

\ naanal said...
:))

\\

வருகைக்கு நன்றி naanal!!

said...

\\ சங்கணேசன் said...
அம்மணிக்கு கண்ணாலமாயிடுச்சா?\\

கண்ணாலமாகலீங்கண்ணா:))

\\...
Mr.திவ்யாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
வேற என்னத்த சொல்ல?..\\

உங்கள் அனுதாபங்களை கண்ணாலத்துக்கப்புறமா 'அவர்' கிட்ட கண்டிப்பா சொல்லிடுறேனுங்கண்ணா:))

உங்கள் முதல் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி சங்கணேசன்!!

said...

\\ சரவணகுமரன் said...
:-)
\\

வாங்க சரவணகுமரன்,
உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி!!

said...

\\ இனியவள் புனிதா said...
:-))\\

வருகைக்கு நன்றி புனிதா!!

said...

\\ Syam said...
-100,000 eduthu irundhaalum namma technology use panni paarunga...udaney athu +100,000 aagidum... :-)\\

நன்றி நாட்டாமை:))

said...

\\ gils said...
ROTFL..ungakita evan matikitu muzhika poran therila :D pass mark vangalina muttikal poada vachi perambalaye adipeenga polarukay \\

அட.....இந்த பனிஷ்மெண்ட் கூட நல்லாயிருக்கே:)))

\\:D :D gunda irukena question reminds me of F.R.I.E.N.D.S episode..oru oru pointa alasi comment poda oru post porathu divya..kalaasal post\\

நன்றி நன்றி கில்ஸ்!!

said...

\\ சங்கணேசன் said...
அம்மணிக்கு கண்ணாலம் ஆகிட்டுதுங்களா?..
ஆம் எனில் Mr.திவ்யாவுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
இல்லையா...
டேய் தம்பி முழிச்சிக்கோ..\\

ஆஹா......என் எதிர்கால கணவர் மீது தான் தங்களுக்கு எத்துனை அக்கறை:)

உங்கள் அக்கறைக்கு நன்றி, நன்றி!!!

said...

\\ Karthik said...
பெரியவங்க விஷயம்... நான் ஏதாவது கதை படிக்க போறேன்...
:)\\

நல்ல விஷயம் எல்லாம் இப்போவே தெரிஞ்சுக்கிறதுல தப்பில்ல கார்த்திக்:))

வருகைக்கு நன்றி!!

said...

\\ " உழவன் " " Uzhavan " said...
போட்டோ மட்டும் சூப்பர்.. மற்றபடி வேற எல்லாம் சுமார்தான் :-)

நன்றி
உழவன்
http://tamiluzhavan.blogspot.com
http://tamizhodu.blogspot.com\\

உங்கள் மனம்திறந்த கருத்திற்கு நன்றி உழவன்!!

said...

\\ ஜி said...
:)))

வெறும் மைனஸ் மட்டும்தான் நெறைய இருந்தது.. கொஞ்சம் ப்ளஸ் எப்படி வாங்குறதுன்னும் எக்ஸ்ட்ரா பிட்ட போட்டிருந்தா எங்களுக்கு உபயோகமா இருந்திருக்கும் :)))\\

மைனஸ் வாங்காம இருந்தாவே ப்ளஸ் வாங்கினமாதிரிதான் அர்த்தம் ஜி:))

said...

\\ Thamizhmaangani said...
அட காமெடியாகவும் எழுதுறீங்களே! சபாஷ்....கலக்குங்க...\\

ஆஹா....சீரியஸான ஆளுன்னு நீங்களே என்னை முத்திரை குத்திடுவீங்க போலிருக்குதே காயத்ரி:(

வருகைக்கு நன்றி !!

said...

\\ Saravana Kumar MSK said...
அவசியம் இப்படி ஒரு கல்யாண வாழ்க்கை வேணுமாடா சரவணா????சரி.. விட்ரா.. அதற்கு இன்னும் சில வருடங்கள் இருக்கு.. இப்போ போய் நிம்மதியா வேலையை பாரு..
:)\\

"அப்படி நிம்மதியா வேலையை பார்த்துட்டே கொஞ்சம் சோகமில்லா கவிதை மட்டுமே எழுது சரவணா" என்று சரவணகுமாரின் மனசாட்சி கூறியது!!!

said...

\\ Saravana Kumar MSK said...
திவ்யா,, இப்படியே உங்களோட ரிசர்ச்ச கண்டினியு பண்ணுனீங்க.. ஒரு டாக்டர் பட்டம் வாங்கிடலாம்..

All the Best..
:)\\

நன்றி , நன்றி ,நன்றி!!!

said...

\\ Saravana Kumar MSK said...
// ஜொள்ளுப்பாண்டி said...
//உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....//

இப்படிக் கேட்டா " செல்லம் நீயே ஒரு
ஸ்வீட்டு உனக்கு எதுக்குடி
கண்ணு ஸ்வீட்டு " ன்னு
சொல்லிட்டு ஜாலியா
வீட்டிலேயே இருந்தா எவ்ளோ மார்க்கு
கெடைக்குங்க அம்மணி...?? ;))))
//

???????
;)
;)\\

மார்க் = 0 [அ.க.க]

(அ.க.க = அது கணவனின் கடமை)

said...

\\ Saravana Kumar MSK said...
பசங்களுக்காக ஒரு மார்க் பதிவ போடுங்க..
:)\\

அது பசங்க தான் போடனும்:))

said...

\ Arunkumar said...
nandri hai for ur wishes...
post padichittu varen....\\

வாங்க மாப்பிள்ளை சார்:))

said...

\\ கப்பி | Kappi said...
:)))
\\

:)))

நன்றி கப்பி !

said...

\\ இராம்/Raam said...
//ஆனாலும் வர வர நெம்ப நக்காலாகிப் போச்சு
திவ்யாவுக்கு... மார்க்கு போடுறீயளா மார்க்கு..?
அம்மணி நாங்க எல்லாம் பரீட்சையிலேயே
'பிட்' அடிச்சாச்சும் மார்க் வாங்கற பரம்பரைங்கோ...
ஆஃப்ட்ரால் மனைவிகிட்டே மார்க் வாங்கரது
ஒண்ணும் ஃப்ராப்ளமே இல்லை...
தெர்தா..? ;)))))//

ரீப்பிட்டே..... :)
\\

பிட்டு அடிச்சு பாஸாக ரெடியா இருக்கிறிங்க போலிருக்கு இராம்?

சீக்கிரம் உங்களுக்கும் இப்படி ஒரு வாழ்த்து பதிவு போட்டுடலாம்:)))

said...

\\ Arunkumar said...
padichitten....

ore oru kelvi mattum thaan...

indha ponnungalukku en indha kola veri?\\

இதெல்லாம் கொலை வெறின்னு சொல்லிட்டா எப்படி மாப்பிள்ளை சார்??

said...

\\ Arunkumar said...
//
வெறும் மைனஸ் மட்டும்தான் நெறைய இருந்தது.. கொஞ்சம் ப்ளஸ் எப்படி வாங்குறதுன்னும் எக்ஸ்ட்ரா பிட்ட போட்டிருந்தா எங்களுக்கு உபயோகமா இருந்திருக்கும் :)))
//

thambi, firstu minus vaangama irukka try pannu... adhukkapparam plus pathi yosikkalaam... enna puriyudha?\\

ப்ரிபேர்டா தான் இருக்கிறீங்க சீனியர், இப்படி.....இப்படிதான் இருக்கனும்:))

வாழ்த்துக்கள் அருண்!!

said...

\\ Arunkumar said...
//
வெறும் மைனஸ் மட்டும்தான் நெறைய இருந்தது.. கொஞ்சம் ப்ளஸ் எப்படி வாங்குறதுன்னும் எக்ஸ்ட்ரா பிட்ட போட்டிருந்தா எங்களுக்கு உபயோகமா இருந்திருக்கும் :)))
//

naats-oda logic use pannu man :-)\\

:-)

said...

\\ sathish said...
எனக்கு ஒரு டவுட்டு பாஸ் ஆனா என்ன ஆகும் இல்ல பெயில் ஆனா என்ன ஆகும்?? நீங்க போட்டுருக்கிறத பாத்தா பெயில் மட்டும் தான் ஆகும் போல இருக்கே!\\

பாஸானா தினமும் மூணு வேளை சோறு கிடைக்கும்,
இல்லினா பட்டினி கிடக்கனும்:))
டவுட்டு க்ளியர் ஆகிடுச்சா சதீஷ்?

said...

\\ ஜோசப் பால்ராஜ் said...
//உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல், எதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு!!'] //

இது ஆகுறது இல்ல. எனக்கெல்லாம் 100 மார்க் வாங்க வழியே இல்ல. 10 நிமிசம் அவிங்க பேசுறத கேட்குறதே நெம்ப கஷ்டமா இருக்கு, இதுல 1 மணி நேரமா?
திவ்யா, நீங்க எல்லாம் இப்ப ஒரு மார்க்கமாத்தேன் கிளம்புறீங்க. இப்பவே கண்ண கட்டுது.\\

ஹா ஹா, ஜோசஃப் ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகிருக்கிறீங்க போலிருக்கு உங்க புலம்பல்ஸ் பார்த்தா:))

100 மார்க் வாங்கலீனா கூட பரவாயில்லை ஜோசஃப், மைனஸ் மார்க் வாங்காம இருக்கிற வழியப்பாருங்க:))

said...

\\ தமிழன்... said...
என்ன கொடுமை மாஸ்டர் இது...:(\\

இதுக்கு பேரு கொடுமையா??

said...

\\ தமிழன்... said...
ரொம்ப ஓவர்...
(பொம்பளைங்க இவ்வளவு மோசமானவங்களா ;)\\

ஹலோ தமிழன் இப்படி ப்ராக்கெட்ல போட்ட மெசேஜ் எல்லாம் சவுண்டா உங்க வீட்டமனிகிட்ட சொன்னா....மைனஸ் மார்க்தான் கிடைக்கும்:)))

said...

\\ தமிழன்... said...
\
உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல், எதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு!!']
\

பேசியே கழுத்தறுப்பிங்கறத வேற மாதிரி சொல்றிங்களா...:)

(ஆனா என்னை விட்டா நாள் புராவும் கேட்டுக்கிடடிருப்பேன் அவள் என்ன சொன்னாலும்:)\\

இந்த ப்ராக்கெட் மெசேஜ் நீங்க கல்யாணத்துக்கபுறமும் சொன்னா........கண்டிப்பா 100 மார்க் வாங்கிடுவீங்க தமிழன்:)))ஆல் தி பெஸ்ட்!!!

said...

\\ தமிழன்... said...
\
உங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு சொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு வருகிறீர்கள்[ மார்க் : 10 ]
\

நல்லா ஏத்துறாங்கடா போதைய...:)\\

:)))

said...

\\ தமிழன்... said...
\
அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]
\
அப்ப நிஜமாவே குண்டா தெரிஞ்சாங்கன்னா என்ன சொல்றது..:))\\

நிஜமாவே குண்டா தெரிஞ்சாலும்........"சிம்ரனை விட ஸ்லிமா இருக்கிறேடா செல்லம்' னு டயலாக் விட தெரியனும்;)))

said...

\\ தமிழன்... said...
அருண்குமர் நல்லா பாஸாகி ரொம்ப சந்தோசமா இருக்க தம்பதிகளை வாழ்த்திக்றோம்...:)\\

உங்கள் வாழ்த்துக்கள் அருண்குமார் தம்பதியருக்கு போய் சேரும்:))

நன்றி தமிழன்!!

said...

\\ Ramya Ramani said...
அக்குவேரா ஆனிவேரா பிரிச்சு ஆராய்ச்சி செய்து ஒரு சமுதாயநோக்கோட நீங்க போட்டிருக்கும் போஸ்ட் இது..இதுக்காக்வே உங்களுக்கு பாஸ் மார்க்+ பெரிய ஓ + மனதார பாராட்டு :))

சரி மேட்டருக்கு வருவோம்..\\

ஓ போட்ட ரம்யாவிற்கு.....நன்றி, நன்றி , நன்றி!!!

said...

\\ Ramya Ramani said...
1.செப்டம்பர் 11 ஆம் தேதி திருமண பந்ததில் அடி எடுத்து வைக்கும் நண்பர் அருண்குமார் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களுடன்........!!!

முதல்ல அவருக்கு வாழ்த்துக்கள் :)

2.இயல்பா எல்லா விஷயத்திலேயும் அவங்க கடமை என்னன்னு விம் பார் போட்டு விளக்கி இருக்கீங்க..சபாஷ் :))

3.அதே மாதிரி என்ன பண்ணா மனைவிக்கு கோவம் வரும்ன்னு தெளிவா கோடிட்டு சொன்னதோட இல்லாம மைனஸ் மார்க் போட்டு கவனத்தை ஈர்த்தமைக்கு அடுத்த சபாஷ் :)

ஸோ டோட்டலி எல்லாத்தையும் கிலியரா சொல்லிருக்கும் திவ்யா மாஸ்டர்..தொடரட்டும் உங்கள் பணி எங்கள் ஃபுல் சப்போர்ட் எப்பவும் உங்களுக்குத்தான் :))\\எல்லாம் உங்க சப்போர்ட்தான் காரணம் ரம்யா டீச்சர்:))

தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஊக்கமும் தேவை!!

said...

\\ hisubash said...
மொத்தத்துல 0 மார்க் எடுத்தாலேஅது பெரிய விஷயம் என்று சொல்றீங்க.
ம்ம்
முதல்ல கல்யாணமாகட்டும்.

வெயிட்.\\

வாங்க சுபாஷ்,
உங்கள் முதல் வருகைக்கு நன்றி!!

///" ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....
////
இதுக்கு என்ன பதில்தா கடசியா சொல்லலாம்கறீங்க?
கண்டிப்பா பதில் வேணும்.
வாழ்க்கைக்கு உதவிய புண்ணியம் கிடைக்கும்.
:)\\

பதில் இதோ.....

நிஜமாவே குண்டா தெரிஞ்சாலும்........"சிம்ரனை விட ஸ்லிமா இருக்கிறேடா செல்லம்' னு டயலாக் விட தெரியனும்;)))

said...

\ சேவியர் said...
சுவாரஸ்யமான பதிவு.........

//அப்பாவி முகத்துடன் "தூரத்துல இருந்து பார்த்தாவா??...........இல்ல பக்கத்துலயா??" என நக்கலடிக்கிறீர்கள்//

இது டாப் !! :)\

வாங்க சேவியர்,

உங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி!!

said...

\\ Aruna said...
அடிச்சு தூள் கிளப்புறீங்க திவ்யா....சிரிச்சு சிரிச்சு பல் சுளுக்கிடுச்சி....ஏற்கெனவே மனைவிகிட்டே எப்படி பாஸ் மார்க் வாங்குறதுன்னு திரு திருன்னு முழிச்சுட்டு இருக்கிற திருவாளர்கள்....பாஸ் மார்க்கே கிடைக்காதுன்னு தெரிஞ்சால்
எப்படி முழிக்கப் போறாங்களோ????
அன்புடன் அருணா\\

வாங்க அருணா,

ரொம்ப நாளைக்கு அப்புறமா என் பதிவு பக்கம் வந்திருக்கிறீங்க, மிக்க மகிழ்ச்சி!!

உங்கள் ரசிப்பை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அருணா,

மீண்டும் வருக!!

said...

\\ Vishnu... said...
பதிவு ..ரெம்ப அருமையா இருக்கு ..திவ்யா..\\

பாராட்டிற்கு நன்றி விஷ்ணு:-)

said...

\\ Vishnu... said...
//எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்!!//

இது யாருக்காக ...
மார்க் போடறவங்களுக்கா .. இல்லை மார்க்
வாங்கறவங்களுக்கா ... ?????????

(ஆமா எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க... மார்க்கெல்லாம் போட சொல்லி தர )\\

இரண்டு பேருக்கும் தான்:)))

( எத்தனை பேர் கிளம்பியிருக்காங்கன்னு புள்ளி விபரம் எதுவும் எனக்கு தெரியலீங்க....தெரிஞ்சா சொல்றேன், சரியா!)

said...

\\ Vishnu... said...
நாங்க எப்படி மார்க் போடறதுன்னு ..பதிவு ..
எப்ப போட போறீங்க ?...\\

அட.....அது நீங்கதாங்க பதிவு போடனும்,
எப்போ போட போறீங்க???

said...

\\ Vishnu... said...
\
அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]
\
அப்ப நிஜமாவே குண்டா தெரிஞ்சாங்கன்னா என்ன சொல்றது..:))

என்ன சொன்னாலும் மைனஸ் 1000 மார்க்ஸ் தான் ...????\\

இதுக்கு பதில் என்ன சொல்லனும்னு ஆல்ரெடி சாம்பிள் கொடுத்தாச்சு பின்னூட்டத்தில்....பார்த்துக்கோங்க விஷ்ணு:))

said...

\ Vishnu... said...
என்ன சொன்னாலும் சரி பதிவு மிக அருமை ... சிரிப்பதற்கு இதில் நிறையவே இருக்கு திவ்யா
\\

சிரித்து ரசித்ததிற்கு நன்றி விஷ்ணு!!

said...

\\ கோபிநாத் said...
அருணுக்கு வாழ்த்துக்கள் ;)\\

வருகைக்கு நன்றி கோபிநாத்!!

said...

\\ Naveen Kumar said...
திவ்யா,மைனஸ் மார்க்ஸ் தாங்க நிறைய இருக்கு,
ஸீரோ மார்க் வாங்கிடுறது பெட்டர் போலிருக்குதே:(\\

மைனஸ் மார்க்ஸ் விட ஸீரோ பெட்டர் தானே நவீன் குமார்!!

வருகைக்கு நன்றி:)))

said...

\\ நிஜமா நல்லவன் said...
நான் சொல்ல வந்ததை எல்லாம் ஜொள்ளுப்பாண்டி சொல்லிட்டார்....அதனால அவர் சொன்னதுக்கெல்லாம் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)\\

வாங்க நல்லவன்.....நிஜமா நல்லவன்!!

வருகைக்கும் ரீப்பிட்டுக்கும் நன்றி!!

said...

எப்ப‌டி மைன‌ஸ் மார்க் வாங்க‌ம‌ இருக்க‌ன‌னும்னு சொல்ல ம‌ட்டீங்க‌ளா?? நீங்க‌ சொல்ற‌த‌ பார்த்தா யாரும் 0வ‌ தாண்ட‌ மாட்டாங்க‌ போல‌ ;)

said...

//" ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....//

இதுல‌ இருந்து த‌ப்பிக்க‌ற‌துக்கு வ‌ழி ஏதாவ‌து இருக்கா?? ;)

said...

idhai boys mattum padicha
nalladhu
girls galhum padicha
yengala ukkara vachi manikankkula aruppalgale
100 mark vaanga iwalau pirachanaiya
venandam
kalyanam
thappichukoooo

Anonymous said...

வரவேற்பிற்கு நன்றி.
முதல் வருகையில்லை. முத பின்னுட்டம்தா. அதுவும் உங்க பதிவ படிச்சிட்டு சம்மா இருக்க ம்ம்முடியல.

///
பதில் இதோ.....

நிஜமாவே குண்டா தெரிஞ்சாலும்........"சிம்ரனை விட ஸ்லிமா இருக்கிறேடா செல்லம்' னு டயலாக் விட தெரியனும்;)))
////

ஐயையோயாயாயா.
பொய் சொல்லக்கூடாதுனு அம்மா சொல்லிருக்காங்களே!!!!!!!
:(

said...

hello enna kodumaiinga ithu .. kutti kalitthu parttha kadasil zero than varuthu .. ...

enga intha grace mark, intha bit vecchu pass pandrathu ellam illanga ...

said...

ஹை அக்கா சூப்பர் போஸ்ட்..!! :)) எதெதுக்கு எவ்ளோ மார்க்னு குறிச்சுவச்சிருக்கேன் வரட்டும் ஒரு கை பார்த்திறலாம்...!! :D ;)

said...

அம்மிணி இத ஏற்கனவே படிச்சிருக்கேனுங்கோ ஆனாலும் தமிழாக்கம் நல்லா இருக்கு!

said...

Haa haa haa :-D
ROFTL...
ஆக மொத்ததுல, சத்தம் போடாம, சொல்ற பேச்ச அமைதியா கேட்டுக்கிட்டா, 100 மார்க்கா? அத மட்டும் செய்யலன்னா, அதிக பட்சம் 0 மார்க்கு தான் வாங்க முடியும் போல இருக்கே :-)

said...

நான் மார்க் போட்டுப்பாத்தப்போ ரிஸ்ல்ட் மைனஸ் 2340னு வருது, விளங்கிரும்..

ஆமா, அதென்ன ஆரம்ப டிஸ்கி? அவனவன் முழு தமிழ் சினிமாவை லவுட்டி தமிழ்லேயே சினிமா எடுக்குறானுவ.. ஒரு குட்டிப்பதிவுக்கு போய் 'தழுவல்' அப்படி இப்படினு ஒத்துக்கொண்டு.. என்ன கெட்ட பழக்கம் இது?

said...

//Divya said...

பாஸானா தினமும் மூணு வேளை சோறு கிடைக்கும்,
இல்லினா பட்டினி கிடக்கனும்:))
டவுட்டு க்ளியர் ஆகிடுச்சா சதீஷ்?
//

இவ்ளோதானா! சோறு வெரும் கார்பொஹைட்ரேட், நாங்க ஒன்லி ஹெல்தி புட்தான் ஸோ நோ வொரீஸ் :)))

said...

சாரி நேக்கு கல்யாணம் ஆகலை.. :)

said...

enga intha pombalaingale ipdi thana???????????? iyo iyo???????

said...

நம்ம டெக்னாலஜிய நேத்து டெஸ்ட் பண்ணி பாத்தாச்சு...சூப்பர் ஆ வொர்கவுட் ஆகுது :-)

ஆனா முகில் சொல்லிட்டான்...இது அத்தை கிட்ட வேலைக்கு ஆகாது மாமா பாவம்னு...

said...

//தாமிரா said...
நான் மார்க் போட்டுப்பாத்தப்போ ரிஸ்ல்ட் மைனஸ் 2340னு வருது, விளங்கிரும்..
//

வெக்கமா இல்ல..ஒரு மைனஸ் ரெண்டு லட்சம் மைனஸ் மூணு லட்சம்னு எடுத்தா ஒரு வீரனுக்கு அழகு :-)

said...

/Syam said...

//தாமிரா said...
நான் மார்க் போட்டுப்பாத்தப்போ ரிஸ்ல்ட் மைனஸ் 2340னு வருது, விளங்கிரும்..
//

வெக்கமா இல்ல..ஒரு மைனஸ் ரெண்டு லட்சம் மைனஸ் மூணு லட்சம்னு எடுத்தா ஒரு வீரனுக்கு அழகு :-)/

கண்டிப்பா நான் வீரன் தான்...எனக்கு கணக்கு வழக்கில்லாத மைனஸ் வருதே:)

said...

//"அப்படி நிம்மதியா வேலையை பார்த்துட்டே கொஞ்சம் சோகமில்லா கவிதை மட்டுமே எழுது சரவணா" என்று சரவணகுமாரின் மனசாட்சி கூறியது!!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

சரி. காதல் எனப்படுவது யாதெனில் தொடர்பதிவிற்காக, ஏதோ கொஞ்சம் ட்ரை பண்ணியிருக்கிறேன்.. வந்து பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க..

said...

// மனைவிகள் மார்க் போடுவாங்களா????? //

சொல்லவே இல்ல....

said...

// 1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது "ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க" அப்படின்னு சொல்றார் மனைவி... //

இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......

said...

// 2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....//

எங்களோட பிறந்தநாளுக்கும் உங்களுக்குதானே கிபிட் வாங்கி குடுக்குறோம்...

அப்ப கூட மார்க் வரதா...

said...

// 2.உங்கள் உடலமைப்பு எப்படி????

இ. தொந்தி பற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா ' என்னைப்பார் ! என் தொப்பையை பார்!! என்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும் போட்டுக்கிறீங்க.[மார்க்: -100 ' மைனஸ் நூறு' ] //

.....க் ..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!!!

said...

// 3.உங்கள் உடலமைப்பு எப்படி???? //

அதான் கல்யாணத்துக்கு அப்புறம்தான் அமைப்பே இல்லையே....

said...

// 4. உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....

அ. நல்லபுள்ளையா போய் உடனே வாங்கிட்டு வந்துடுறீங்க [ மார்க்:0 ' இப்படி சமர்த்தா வாங்கிட்டு வரவேண்டியது உங்க கடமை ராசா, ஸோ நோ மார்க் ' ]

ஆ. உங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு சொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு வருகிறீர்கள்[ மார்க் : 10 ]

இ. மனைவிக்கு ஸ்வீட் மட்டும் வாங்காமல், கூடவே உங்களுக்கு பிடிச்ச பக்கோடா மிக்சர்ன்னு சில அயிட்டமும் சேர்த்து வாங்கிட்டு வர்ரீங்க [ மார்க்: - 5 ' என்ன முறைக்கிறீங்க?ஐந்து மார்க்தாங்க மைனஸ்.......இப்படி முறைச்சீங்கன்னா இன்னும் ஜாஸ்தி மார்க் மைனஸ் ஆகும், கவனம்'] //

நம்ம கூட வேற இன்ன பிரவற்ற வாங்கிட்டுல வருவோம்..
மார்க் இல்லாம வேற எதாவது வந்துச்சுனா....(பூரி கட்டை, குழம்பு கரண்டி, etc.,)

said...

// 5. " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி.... //

எப்பிடி பதில் சொன்னாலும் மைனஸ் மார்க்...

said...

// 6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்… //

பிரச்சினை நேர்லயே பாத்தாச்சு அப்புறம் இதுக்கெல்லாம் பயபடுவோமா...

நாங்களெல்லாம் ரஸ்க் சாப்ட்டு வளந்தவுக...

said...

அப்புறம் அருண்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...பிளஸ் பாயின்ட் ஒன்று கூட இல்லாததால் பதிவ நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

said...

\ Murugs said...
எப்ப‌டி மைன‌ஸ் மார்க் வாங்க‌ம‌ இருக்க‌ன‌னும்னு சொல்ல ம‌ட்டீங்க‌ளா?? நீங்க‌ சொல்ற‌த‌ பார்த்தா யாரும் 0வ‌ தாண்ட‌ மாட்டாங்க‌ போல‌ ;)\\

வாங்க முருக்ஸ்:)
100 மார்க் வாங்குறது எப்படின்னு இருக்குதே பதிவில, நீங்க பார்க்கலியா?

said...

\\ Murugs said...
//" ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....//

இதுல‌ இருந்து த‌ப்பிக்க‌ற‌துக்கு வ‌ழி ஏதாவ‌து இருக்கா?? ;)\\

தெரிலீங்க....அனுபவசாலிங்க கிட்ட கேட்டு சொல்றேன்:-)

said...

\\ haaja said...
idhai boys mattum padicha
nalladhu
girls galhum padicha
yengala ukkara vachi manikankkula aruppalgale
100 mark vaanga iwalau pirachanaiya
venandam
kalyanam
thappichukoooo\\

வாங்க ஹாஜா:)
இதுக்கெல்லாம் பயந்துட்டு கல்யாணம் வேணாம்னு சொல்லலாமா??

உங்க முதல் வருகைக்கு நன்றி!!

said...

\\ hisubash said...
வரவேற்பிற்கு நன்றி.
முதல் வருகையில்லை. முத பின்னுட்டம்தா. அதுவும் உங்க பதிவ படிச்சிட்டு சம்மா இருக்க ம்ம்முடியல.\\

ஓஹோ.....நீங்க பின்னூட்டம் போட்டதுதான் முதல் முறையா:-)

///
பதில் இதோ.....

நிஜமாவே குண்டா தெரிஞ்சாலும்........"சிம்ரனை விட ஸ்லிமா இருக்கிறேடா செல்லம்' னு டயலாக் விட தெரியனும்;)))
////

ஐயையோயாயாயா.
பொய் சொல்லக்கூடாதுனு அம்மா சொல்லிருக்காங்களே!!!!!!!
:(\\

மைனஸ் மார்க் வாங்கினாலும் ப்ரவாயில்லை, அம்மா பேச்சை தட்டாதீங்க:))))

said...

\\ Prabakar Samiyappan said...
hello enna kodumaiinga ithu .. kutti kalitthu parttha kadasil zero than varuthu .. ...

enga intha grace mark, intha bit vecchu pass pandrathu ellam illanga ...\\

பிட்டு வைச்சு பாஸ் ஆகமுடியாது,
பிட்டு போட்டு பாஸாகலாம்:))

உங்களுக்கு ஸீரோ மார்க் வருதா??
அதுவே பெரிய விஷயம் ப்ரபாஹர், நீங்க தேரிடூவீங்க, ஆல் தி பெஸ்ட்!!!

said...

\\ Sri said...
ஹை அக்கா சூப்பர் போஸ்ட்..!! :)) எதெதுக்கு எவ்ளோ மார்க்னு குறிச்சுவச்சிருக்கேன் வரட்டும் ஒரு கை பார்த்திறலாம்...!! :D ;)\\

வாங்க Sri ,

மார்கெல்லாம் குறிச்சு வேற வைச்சிட்டீங்களா?? கில்லாடி தான் மேடம் நீங்க:-)

said...

\\ மங்களூர் சிவா said...
அம்மிணி இத ஏற்கனவே படிச்சிருக்கேனுங்கோ ஆனாலும் தமிழாக்கம் நல்லா இருக்கு!
\\

வாங்க சிவா,
தமிழாக்கம் நல்லாயிருக்கா??
நன்றி:)))

said...

\\ Divyapriya said...
Haa haa haa :-D
ROFTL...
ஆக மொத்ததுல, சத்தம் போடாம, சொல்ற பேச்ச அமைதியா கேட்டுக்கிட்டா, 100 மார்க்கா? அத மட்டும் செய்யலன்னா, அதிக பட்சம் 0 மார்க்கு தான் வாங்க முடியும் போல இருக்கே :-)\\

அதே அதே.....கரெக்ட்டா புடிச்சிட்டீங்க பாயிண்ட்டை:))

said...

\\ தாமிரா said...
நான் மார்க் போட்டுப்பாத்தப்போ ரிஸ்ல்ட் மைனஸ் 2340னு வருது, விளங்கிரும்..

ஆமா, அதென்ன ஆரம்ப டிஸ்கி? அவனவன் முழு தமிழ் சினிமாவை லவுட்டி தமிழ்லேயே சினிமா எடுக்குறானுவ.. ஒரு குட்டிப்பதிவுக்கு போய் 'தழுவல்' அப்படி இப்படினு ஒத்துக்கொண்டு.. என்ன கெட்ட பழக்கம் இது?\\

வாங்க தாமிரா,

மைனஸ் மார்க்தான் வருதா??
அச்சோ பாவம்:(

சின்ன பதிவினாலும் ,தமிழாக்கம் பண்ணின பதிவுன்னு டிஸ்கி போட்டுக்கிறது ஒரு சேஃப்டிக்குதான்:))

said...

\\ sathish said...
//Divya said...

பாஸானா தினமும் மூணு வேளை சோறு கிடைக்கும்,
இல்லினா பட்டினி கிடக்கனும்:))
டவுட்டு க்ளியர் ஆகிடுச்சா சதீஷ்?
//

இவ்ளோதானா! சோறு வெரும் கார்பொஹைட்ரேட், நாங்க ஒன்லி ஹெல்தி புட்தான் ஸோ நோ வொரீஸ் :)))\\

glad to know that:-)

said...

\\ SanJai said...
சாரி நேக்கு கல்யாணம் ஆகலை.. :)\\

:))

said...

\\ சிவா said...
enga intha pombalaingale ipdi thana???????????? iyo iyo???????\\

வாங்க சிவா,
வருகைக்கு நன்றி,
மீண்டும் வருக!!!

said...

\\ Syam said...
நம்ம டெக்னாலஜிய நேத்து டெஸ்ட் பண்ணி பாத்தாச்சு...சூப்பர் ஆ வொர்கவுட் ஆகுது :-)

ஆனா முகில் சொல்லிட்டான்...இது அத்தை கிட்ட வேலைக்கு ஆகாது மாமா பாவம்னு...\\

என் மருமகன் முகிலுக்குதான் மாமா மேல என்னா ஒரு அக்கறை, மாமா பாவம்னு இப்போவே இரக்கப்படுறான்:)))

said...

\\ Syam said...
//தாமிரா said...
நான் மார்க் போட்டுப்பாத்தப்போ ரிஸ்ல்ட் மைனஸ் 2340னு வருது, விளங்கிரும்..
//

வெக்கமா இல்ல..ஒரு மைனஸ் ரெண்டு லட்சம் மைனஸ் மூணு லட்சம்னு எடுத்தா ஒரு வீரனுக்கு அழகு :-)\\

எல்லாரும் உங்களாட்டும் மாவீரனா இருப்பாங்களா நாட்டாமை??

said...

\\ நிஜமா நல்லவன் said...
/Syam said...

//தாமிரா said...
நான் மார்க் போட்டுப்பாத்தப்போ ரிஸ்ல்ட் மைனஸ் 2340னு வருது, விளங்கிரும்..
//

வெக்கமா இல்ல..ஒரு மைனஸ் ரெண்டு லட்சம் மைனஸ் மூணு லட்சம்னு எடுத்தா ஒரு வீரனுக்கு அழகு :-)/

கண்டிப்பா நான் வீரன் தான்...எனக்கு கணக்கு வழக்கில்லாத மைனஸ் வருதே:)\\

வருகைக்கி நன்றி நிஜமா நல்லவன்:-)

said...

\\ Saravana Kumar MSK said...
//"அப்படி நிம்மதியா வேலையை பார்த்துட்டே கொஞ்சம் சோகமில்லா கவிதை மட்டுமே எழுது சரவணா" என்று சரவணகுமாரின் மனசாட்சி கூறியது!!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

சரி. காதல் எனப்படுவது யாதெனில் தொடர்பதிவிற்காக, ஏதோ கொஞ்சம் ட்ரை பண்ணியிருக்கிறேன்.. வந்து பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க..\\

பார்த்தாச்சு.....கருத்தும் சொல்லியாச்சு:-)))

said...

\\ J J Reegan said...
// மனைவிகள் மார்க் போடுவாங்களா????? //

சொல்லவே இல்ல....\\

நீங்க கேட்கவே இல்லயே....

said...

\\ J J Reegan said...
// 2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....//

எங்களோட பிறந்தநாளுக்கும் உங்களுக்குதானே கிபிட் வாங்கி குடுக்குறோம்...

அப்ப கூட மார்க் வரதா...\\உங்க பிறந்தநாளுக்கு உங்க வொஃப்க்கு கிஃப்ட் கொடுப்பீங்களா??
இது புதுசா இருக்குதே!!

said...

\\ J J Reegan said...
// 3.உங்கள் உடலமைப்பு எப்படி???? //

அதான் கல்யாணத்துக்கு அப்புறம்தான் அமைப்பே இல்லையே....\\

தி எக்ஸ்பீரியன்ஸ் டாக்கிங்???

said...

@ரீகன்

\நம்ம கூட வேற இன்ன பிரவற்ற வாங்கிட்டுல வருவோம்..
மார்க் இல்லாம வேற எதாவது வந்துச்சுனா....(பூரி கட்டை, குழம்பு கரண்டி, etc.,)\\

இந்த பதிவு ஒன்லி மார்க்ஸ் மட்டும்தான்,
நீங்க சொல்ற பூரி கட்டை,தோசை கரண்டி எல்லாம்......வேற சப்ஜக்ட்:))

said...

\\ J J Reegan said...
// 5. " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி.... //

எப்பிடி பதில் சொன்னாலும் மைனஸ் மார்க்...\\

ப்ளஸ் மார்க் வாங்குவது எப்படின்னு பின்னூட்டத்தில் பதில் இருக்கு ரீகன்:-)

said...

\\ J J Reegan said...
// 6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்… //

பிரச்சினை நேர்லயே பாத்தாச்சு அப்புறம் இதுக்கெல்லாம் பயபடுவோமா...

நாங்களெல்லாம் ரஸ்க் சாப்ட்டு வளந்தவுக...\

ரிஸ்கை ரஸ்கா சாப்பிடுற டெக்னிக்கெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது ரீகன்:-)

said...

\\ J J Reegan said...
அப்புறம் அருண்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...பிளஸ் பாயின்ட் ஒன்று கூட இல்லாததால் பதிவ நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
\\

நீண்ட நாட்களுக்க பின் பதிவிற்கு வந்ததிற்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி ரீகன்!!!

said...

superb thivya!! c
**claps**
எப்பிடி இப்பிடியெல்லாம்!

said...

பெண்ணாக இருந்து பொதுவாக பெண்களுடைய மன நிலையை கனித்து இருக்கிறார்கள். நகைசுவை ததும்ப எழுதியுள்ளிர்கள். அருமை, நண்பர்கள் பாசிட்டிவ் மதிபெண் வாங்குவதற்கும் வழி சொல்லியுள்ளார்கள், திருமணத்திற்கு பிறக்கும் முயற்சி செய்து பார்க்கலாம்.

said...

oops.....

இன்னிக்குத்தான் பார்த்தேன்.

இங்கே ஒன்னும் தேறாது. எல்லாம் பூட்ட கேஸ்.(-:

said...

\\ Mathu said...
superb thivya!! c
**claps**
எப்பிடி இப்பிடியெல்லாம்!\\

Thanks a lot for ur applause Mathu!!

said...

\\ முஹம்மது ,ஹாரிஸ் said...
பெண்ணாக இருந்து பொதுவாக பெண்களுடைய மன நிலையை கனித்து இருக்கிறார்கள். நகைசுவை ததும்ப எழுதியுள்ளிர்கள். அருமை, நண்பர்கள் பாசிட்டிவ் மதிபெண் வாங்குவதற்கும் வழி சொல்லியுள்ளார்கள், திருமணத்திற்கு பிறக்கும் முயற்சி செய்து பார்க்கலாம்.\\

All the best Harris!!

said...

\\ துளசி கோபால் said...
oops.....

இன்னிக்குத்தான் பார்த்தேன்.

இங்கே ஒன்னும் தேறாது. எல்லாம் பூட்ட கேஸ்.(-:\\

வாங்க துளிசிம்மா:))

நல்லாயிருக்கிறீங்களா??

பூட்ட கேஸ்னு சலிச்சிக்கிறீங்க.....தேத்துறது சான்ஸே இல்லியா??

said...

//பூட்ட கேஸ்னு சலிச்சிக்கிறீங்க.....தேத்துறது சான்ஸே இல்லியா?? //

முப்பத்திநாலரை வருசத்துக்குப்பிறகு.....
நடக்குங்கறீங்க?

நோ ச்சான்ஸ்.

நல்லா இருக்கேம்ப்பா. நன்றி

said...

\\ துளசி கோபால் said...
//பூட்ட கேஸ்னு சலிச்சிக்கிறீங்க.....தேத்துறது சான்ஸே இல்லியா?? //

முப்பத்திநாலரை வருசத்துக்குப்பிறகு.....
நடக்குங்கறீங்க?

நோ ச்சான்ஸ்.

நல்லா இருக்கேம்ப்பா. நன்றி\\

நல்லாயிருக்கிறீங்களா துளசிம்மா, சந்தோஷம்:))))

என் வலைதளம் பக்கம் வந்ததிற்கு மிக்க நன்றிம்மா:)))

said...

இட்தை வச்சி இப்பவே மார்க் போட ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். :-)

said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...

இட்தை வச்சி இப்பவே மார்க் போட ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். :-)
//

யாருக்கு!?!?!?!?
:)))))))))))))

said...

அய்யயோ! இவ்ளோ நெகடிவ் மார்கா??
நீங்க சொல்றத பார்த்தா 0 வாங்குறதே கஷ்டமோ.
இப்பத்தான் புரியுது ஏன் என் அண்ணனுக்கு போதி மரத்துக்கு கீழ உட்கார்ந்த புத்தர் மாதிரி கல்யாணம் ஆகி ரெண்டே வருஷத்துல ஞான ஒளிவட்டம் எல்லாம் வந்துதுன்னு

said...

அப்பால ஒரு மேட்டர்...
நீங்க 'தாய்மை' பதிவுல திருமணமாகாத பெண்கள் தத்தெடுக்க முடியாதுன்னு சொல்லியிருகீங்க. அது தப்பு.
1956 மேரேஜ் ஆக்ட் படி எந்த ஒரு மேஜர் ஆண்/பெண் தத்தெடுக்கலாம். ஆனால் தத்தெடுக்கும் குழந்தை ஆபோசிட் செக்ஸா இருந்தா அவர்களுக்குள்ளான வயசு வித்தியாசம் 21 இருக்கணும் அவ்ளோதான்.

said...

indha kaala pasangalukku 100mark eppadi vaanguradhunu nalla theiryumungo.... especially in this only...

anyway... nice tips and flow....

Well done :)