November 17, 2008

உயிரே!......உறவாக வா??? - 2

உயிரே!......உறவாக வா??? - 1

"யார் ......நீங்க" என்று பானு கேட்கவும்,

அவ்வுருவம் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவளை நெருங்கியது.

"நீ...ங்க.........யாரு?.....உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டபடி அவ்விருட்டில் அவனது முகம் தேடினாள் பானு.

" எழுத்தாளர் மதிமாறன்.....இருக்காரா? .....நான் அவரைப் பார்க்கனும்" என்றான் கணீர் என்ற குரலில்.


அதற்குள் எழுத்தாளர் மதிமாறன் அட்ரஸ் இந்தாளுக்கு எப்படி கிடைச்சது? என்று வியந்தவளாய்....

"என்ன.......விஷயமா அவரைப் பார்க்கனும்?"

" இது அவரு வீடுதானே.......நான் அவரோட ரசிகன், அவரை பார்க்கனும்" மீண்டும் கரகரப்புடன் குரல் தெரித்தது அவனிடமிருந்து.

"அது.....நான் தான்" என்றாள் பானு அடிக்குரலில்.

"நீ..........நீயா???????'

"ஆமாம்"

"எழுத்தாளர் மதிமாறன் ஒரு பொம்பளையா?????" அவனது குரலில் தெரிந்த இளக்காரம் அவளை சுதாரிக்கச் செய்தது.


"எதுவானாலும்.......காலையில் வந்து என்னை பாருங்க சார்" என்றவளாய் வாசல் கதவை மூட எத்தனிக்க, அவனது வலுமையான கரம் கதவை முட்டி திறந்துக் கொண்டு அவன் வீட்டிற்குள் வந்தான்.

"ஹலோ......எதுவானாலும் காலையில் வாங்கன்னு சொன்னேன்ல.........முதல்ல வெளியில போங்க சார்" என்றாள் ஆக்ரோஷமாக.

" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற?.......இன்னும் உன்கிட்ட தீர்த்துக்க வேண்டிய கணக்கு எவ்வளவோ இருக்கு....உன் நாவலை பப்ளீஷ் பண்ணின பப்ளீஷரை மிரட்டி உன் அட்ரஸ் வாங்கினப்போ கூட அவன் நீ ஒரு பொம்பளை ....அதுவும் கொஞ்ச வயசு பொண்ணுன்னு சொல்லாம மறைச்சுட்டானே?"

கோபக்கணைகளுடன் அவனிடமிருந்து ஒருமையில் வார்த்தைகள் வந்து விழுந்தன.

'அடப்பாவமே!!! அண்ணனோட கேஸ் ஹிஸ்ட்ரி ஃபைலில் இருந்து தகவல் எடுத்து, கற்பனை கலந்து நான் எழுதிய தொடர்கதையின் வில்லனா இவன்??????
அப்போ..........அப்போ.......இவன் தான் போலீஸ் தீவிரமா தேடிட்டு இருக்கிற கஜேந்திரனா??
'

'இப்போ இவனிடமிருந்து எப்படி தப்பிக்கிறது?', என்று யோசித்தவளாய், தன் குரலை தாழ்த்தி.........

"நீங்க .......என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல....." என்றாள் பவ்யமாக.

'மனசுக்குள் , "கடவுளே, கடவுளே!! என் அண்ணா இப்போ டியூட்டி முடிஞ்சு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்திடனும்' என்று படபடப்புடன் வேண்டிக்கொண்டாள் பானு.

அவளது பவ்யமான பேச்செல்லாம் அவனிடம் எடுபடுவதாக தெரியவில்லை........மாறாக.....

"உனக்கு புரியாதுடி......புரியாது.......புரியாமத்தான என்னைய பத்தி உன் தொடர் கதைல புட்டு புட்டு வைச்சு என் கூட்டாளிங்க எல்லாரையும் போலீஸ் கண்டுபிடிக்க துப்பு கொடுத்த நீ"

"அச்சோ........அது முழுக்க முழுக்க என் கற்பனை கதை சார்........நம்புங்க"

" கற்பனைன்னு என்கிட்டவே புளுகிறியா??.........சொல்லுடி எப்படி என்னை பத்தின விபரங்கள் எல்லாம் உனக்குத் தெரியும்?..........ம்ம் சொல்லுடி....." என்று அவளை நெருங்கி வந்து அவளது கழுத்தில் கை வைத்து அழுத்தினான்.

"ப்ளீஸ்..........ப்.....ளீஸ்.........என்னை.....ஒன்னும் பண்ணிடாதீங்க......."

"அடச்சீ........நீ நினைக்கிற மாதிரி எதுவும் உன்னை பண்ணமாட்டேன்.....மதிமாறன் ஒரு பொட்டச்சின்னு தெரியாமலே .......அந்தாளுக்கு என்ன தண்டனை கொடுக்கனும்னு வந்தேனோ.......அதேதான் உனக்கும்"

அது என்ன தண்டனை என்று அவள் சிந்தித்த அதே நொடியில்..........அவளது கரத்தை அழுத்தியிருந்த அவனது வலது கரம் பிடி தளர்ந்து, அவனது சட்டையின் பின்னாலிருந்து ஒரு நீண்ட கத்தியை உருவியது.
மெழுகுவர்த்தியின் ஒளியில் கத்தி மின்னியது,
பானுமதியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது,
அடுத்த கணம்.........அவளது வலது கரத்தை அழுத்தி பிடித்த அவன்,

" இந்தக் கை தானே என்னை பற்றி தொடர் கதை எழுதி போலீஸ்க்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிச்சது.........இனிமே.........இந்த கை கதையே எழுத கூடாது......"

மறுவிநாடி, அந்த கத்தி பானுவின் வலது கையினை ரத்தம் தெறிக்க வெட்டியது!!!!!!

பீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,
"அம்ம்ம்மா........." என்ற அலறலுடன் மயங்கி கிழே சரிந்தாள்.

' வந்த காரியம் முடிந்தது, மின் இணைப்பு மீண்டும் வரும்முன், அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் ' என்ற பரபரப்புடன் வெளியேறிய கஜேந்திரன், மாடிபடிகளில் வேகமாக திரும்புகையில் எதிரில் மாடிபடி ஏறிவந்த பானுவின் அண்ணன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மீது எதிர்பாராவிதமாக மோதிவிட,

தங்கையின் "அம்மா' என்ற அலறலை ஜீப்பிலிருந்து வீட்டின் முன் இறங்கும்போது கேட்டதினால், இருட்டில் ஏதாவது பூச்சு பார்த்து பயந்திருப்பாள் பானு என்று கலக்கத்துடன் மாடிபடிகளில் ஏறிய ரமேஷ், தன் மீது மோதிய உருவம் யார் என்று கூர்ந்து கவனிக்க,
அந்நேரம் வீட்டின் முன் வந்து நின்ற இளமாறனின் கார் வெளிச்சத்தில் அவ்வுருவத்தின் முகம் தெளிவாக தெரிந்தது, ரமேஷிற்கு.

நொடியில் போலீஸ் மூளை சுதாரித்தது, தன் மீது மோதியவன் யாரென்று அடையாளம் கண்டுகொண்டவன், கஜேந்திரன் மீது சட்டென்று பாய்ந்து அவனை பிடிக்க ரமேஷ் எத்தனிக்க,
வெளிச்சத்தில், ரமேஷின் காக்கிச்சட்டையை கண்ட கஜேந்திரன், மாடிபடிகளிலிருந்து தாவி கீழே குதிக்க முயற்சித்தான்,
அதே கணம் ரமேஷ் அவன் மீது பாய்ந்து அவனை அமுக்க,
மின் இணைப்பு அந்நேரம் உயிர் பெற்றது.

தன் பிடியிருலிருந்து தப்பி ஓட முயன்ற கஜேந்திரனின் முழங்காலை குறிப்பார்த்து தன் கைத்துப்பாக்கியினால் ரமேஷ் சுட்டுவிட, கஜேந்திரன் சுருண்டு விழுந்தான். கீழே விழுந்தவனை இருகப்பற்றி, தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.

பானுமதி தனக்கு அன்பளிப்பாக கொடுத்த 'மதிமாறனின்' முதல் நாவலை பார்க்கும் ஆவலில், அவளை அவளது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தன் வீட்டிற்கு போகும் வழியில் தன் காரை ஒரமாக நிறுத்தி , அன்பளிப்பை பார்த்த இளமாறனுக்கு, அன்பளிப்பிற்குள் இன்ப அதிர்ச்சியாக........

தன் பெயரான இளமாறனில் உள்ள 'மாறனை'யும் அவளது பெயரில் உள்ள 'மதி'யையும் இணைத்து மதிமாறன் என்ற புனைப்பெயரில் தொடர் கதை எழுதியதும், இப்போது நாவல் எழுதியதும் , தன் அன்பு காதலி பானுமதி தான் என்றும் அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்த இளமாறன்,

உடனே த்ன் காரை திருப்பிக்கொண்டு பானுமதியின் வீட்டிற்கு வந்திருந்தான்.......

வந்த இடத்தில் அவன் கண்முன், ரமேஷ் ஒருவனை துப்பாக்கியால் சுடுவதும்........உடனே தன் டிபார்ட்மெண்டுக்கு ஃபோன் செய்ததையும், அதிர்ச்சியுடன் கண்கொட்டாமல் பார்த்தபடி நின்றான் இளமாறன்.

சில நிமிடங்களுக்கு முன் 'அம்மா' என்று அலறிய தஙகையின் நினைவும், மாடியிலுள்ள தன் வீட்டிலிருந்து கஜேந்திரன் இறங்கி வந்ததும் ரமேஷிற்கு பளிச்சிட........தன் நண்பன் இளமாறன் கையில் ஒரு புத்தகத்துடன் இந்நேரத்தில் வீட்டிற்கு எதற்கு வந்திருக்கிறான் என்றெல்லாம் யோசிக்க அவகாசமில்லாமல்,

"பானு.....பானு" என்று அலறியபடி ரமேஷ் மாடிபடிகளில் வேகமாக ஏறினான்.
இளமாறனும் அவனை பின் தொடர்ந்தான்.

வீட்டினுள் நுழைந்த இருவரும், அதிர்ச்சியில் உறைந்தனர்........

"பானு......பானுமா...........என் செல்லமே" என்ற கதறலுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பானுவை தன் மடிமீது போட்டு இளமாறன் அழுகையுடன் அரற்றினான்.

சீண்டிப்பார்ப்பதில்
குழந்தையாய் விளையாடி
கள்ளமற்ற சிரிப்பில்
உள்ளம் களவாடி
என்னுள் பூத்திருந்த செல்லமே
நான் விரும்பும் கதா
நீதானென அறிந்தகணம்
அள்ளிக்கொஞ்சிட
ஓடிவந்தேன்
உன்னை இப்படிக்காணவா

தேடிவந்தேன்...


திகைப்பிலிருந்தாலும், உடனே ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்த ரமேஷின் கடைக்கண் பார்வையில்......

தன் நண்பன் இளா..........தன் தங்கை பானுமதியின் வெட்டப்பட்ட கைகளை பார்த்து கதறுவதை கவனித்தான்.

அவர்களுக்கு நடுவில் கலந்தோடும் ஆழமான காதல் ரமேஷிற்கு திட்டமாக புரிந்தது!!

இரண்டே நிமிடத்தில் ரமேஷை வீட்டில் இறக்கிவிட்டு சென்றிருந்த போலீஸ் ஜீப் வீட்டின் முன் வந்து நிற்க, கான்ஸ்டபிள் இருவர் கஜேந்திரனை ஜீப்பில் ஏற்றினார்கள்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, பானுமதியை ஆஸ்பத்திரிக்கு அதில் கொண்டு சென்றனர்.

கண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....

[தொடரும்]

உயிரெ!.....உறவாக வா?? - 3

உயிரே!....உறவாக வா?? - 4

104 comments:

said...

ஹேய்..திவ்யா... என்ன இது... இவ்ளோ சீக்கிரமா
இரண்டாம் பாகம்...?? இன்ப அதிர்ச்சியா இருக்கே... !!
:)))

said...

திவ்யாவிடம் இருந்து காதல்கதைதான்
வரும்னு பார்த்தா க்ரைம் கதையும்
கலக்கலா வந்து இருக்கு..!!!
வாழ்த்துக்கள்..!! :))))

said...

காதல் கதைகளே மிக விறுவிறுப்பாக‌
எழுதும் தியவ்யாவுக்கு இப்படி
சக்கரைக்கட்டி மாதிரி
ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்
கெடைச்சா சும்மாவா...??
Simply Superb....
வார்த்தைகள் எல்லாம் எங்கே புடிக்கிறீங்க...??
;))))

said...

விறுவிறுப்பா போகும் கதையில் இப்படி
திடீர்னு தொடரும் போட்டா எப்படி திவ்யா..?
சீக்கிரம் அடுத்த பாகம் வேணும்...
okva..?? :)))

said...

ஆஹா.. கதை செம ஃபாஸ்ட்டா நகருதே.. ரொமாண்டிக்கான கதைகள் படிச்சுட்டு இப்புடி ஒரு விறுவிறு சுறுசுறு கதை படிக்க நல்லா தான் இருக்கு.. கடகடன்னு படிச்சு முடிச்சுட்டேன்.. :)

said...

ஒரே thrilling இருக்கு.... மதிமாறன் பெயர் காரணம் நல்லா இருக்கு..... :)
அடுத்த பகுதிக்காக waitings.....
அசத்தலா இருக்கு கதை....

said...

!!! divs a..ithu divs thana...rajeshkumaroda pseudonyma? chancela ponga..asathalla poguthu kathai..yosika mudiatha ending..adutha partuku one week wait panna uteenga..gajendranku visa eduka vendi varum..seekrama postunga

said...

அக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((

said...

ஐயையோ வெட்டு குத்துல்லாம் வந்துடிச்சு...!!!//

said...

பெரிய க்ரைம் ஸ்டோரிதான் போல...

said...

எனக்கெல்லாம் இந்த உரையாடல் எழுதறது சுட்டுப்போட்டாலும் வராதது எப்படி இப்படி சரளமா எழுதறிங்க...!?

said...

கலக்குங்க மாஸ்டர் அடுத்த பகுதி எப்போ...?

said...

எழுத்தாளர் மதிமாறன் அவதான்கிறது திடீர்திருப்பம்...!
சடன் பிரேக் விழுந்து சட்டென்று கியர் மாறி இருக்கு...

said...

கலக்ககுங்க...:)

said...

இந்த பகுதி செம விருவிருப்பு…முடிஞ்சதே தெரியல…ப்ரித்திவி ராஜ் ஃபோட்டோஸ் எல்லாம் அருமை ;)

said...

Action kalantha kaathal. ஆனால் ரொம்ப அவசர அவசரமா எழுதினா மாதிரி இருந்தது.


I felt a little more description would have helped to bring in the exact feeling of watching an action. I hope you would have read Robert Ludlum.
கொஞ்சம் எக்ஸ்ட்ராவா காதுல பூ சுத்திருப்பாரு. இருந்தாலும் அவர் சொல்ல வருவதை நம்மால் கற்பனை பண்ணிப் பார்க்கும் அளவிற்கு இருக்கும்.

Anyway, great going. Hats off!1

said...

//" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற?//

எங்களுக்கும் அதிர்ச்சியாத் தான் இருக்குது.

//கண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....//

அதிர்ச்சிகள் தொடரட்டும்.....

வாழ்த்துக்கள் திவ்யா

Anonymous said...

அசத்தல் திவ்யா...:-)

said...

இந்த நடிகர்களை வைத்தே இந்த கதையயை படமாக்கலாம் போலிருக்கே.

நல்லா எழுதுறீங்க - வாழ்த்துக்கள்

said...

கதை சூப்பரா இருக்கு....
விறுவிறுப்பு குறையாம ஒரு அசத்தல் க்ரைம் கதை...!

திவ்யா கதை படிக்கும்போது எனக்கு பிடிக்காத வார்த்தை "அப்போது"... இதில தானே தொடரும் போடறீங்க.. :)

வாழ்த்துக்கள்...!

said...

அட தொடர் ரொம்ப விறுவிறுப்பா போகுதே!!!! அடுத்த பகுதியை சீக்கரம் போடுங்க!!!!

said...

ராஜேஷ்குமார் நாவல் ஞாபகத்துக்கு வருது. க்ரைம் தொடரும் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

கலக்குங்க..

said...

கதைக்கு தகுந்த படங்களாக தேடி எடுத்து போட்டு இருக்கிங்க.. ரியலி நைஸ்.. பிருத்வி படங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளது. :)

said...

கதை விறுவிறுப்பு! சுவாரஸ்யம்.. மொத்தத்தில் ஒரு த்ரில்லர் படிக்கும் நியாபகம். அருமை. அடுத்த பகுதியும் விரைவாய் பதியவும்.

//பீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,
//
//தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.///

நிலைகுலையச் செய்ய, நிலைகுலைந்தான் என்று இருக்க வேண்டும் தோழி.

said...

நல்ல விறுவிறுப்பு ;))

said...

வழக்கம் போல அருமை
நல்ல நடை .. வாழ்த்துக்கள்

said...

intresting :))

said...

சஸ்பென்ஸோட கலந்த காதல் கதை அருமை திவ்யா

said...

அட பாவமே எண்ணாங்க அந்த புள்ளை கையை வெட்டிங்க.. ஐயோ த்ரிஷா த்ரிஷா ..:) : ) .

கலக்கல் போங்க

said...

:))

aduththa part aduththa vaaramthaana?

said...

அட திவ்யா.. என்ன இது.. ஹார்ட் பீட் கன்னா பின்னான்னு எகிருது..

said...

சஸ்பென்ஸ் கதை கூட இவ்ளோ கலக்கலா எழுதுவீங்களா.. நெஜமாவே சூப்பர்..

said...

என்னங்க.. அழகான பானுவோட கைய வேட்டிடீங்களே.. மனசுக்கு கஷ்டமா இருக்கு..

said...

கஜேந்திரன் வார்த்தைகள் ரொம்ப ஆணாதிக்கமா இருக்கே.. வேற யாரவது பசங்க இந்த கதைய எழுதி இருந்தா, அவ்ளோ தான்..

said...

மேலே உள்ள அத்தனை பின்னூட்டங்களுக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய ரிப்பீட்டு..

said...

Athukulla second part mudinthuduththa..:(
Amazing divya! Your imaginative skills are awesome! :)
Waiting for part three......:)

said...

என்னங்க இது திடீர்னு காதல் கதையில் இருந்து க்ரைம் ஸ்டோரிக்கு தாவிட்டீங்க???

நல்லா இருக்கு கன்டினியூ பண்ணுங்க!

said...

ஸ்ரீமதி said...
அக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((

naan enna sollrathu
காதல் திருத்தம் seira en akkave மதி மாறன் காதல rasika vachitenga kathai nalla iruku.next part eppa pa.

said...

ஸ்ரீமதி said...
அக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((

naan enna sollrathu
காதல் திருத்தம் seira en akkave மதி மாறன் காதல rasika vachitenga kathai nalla iruku.next part eppa pa.

said...

மதிமாறன் ஏதோ ஒரு பாகத்துல வர்ற விசயம்தான்னு நினைச்சேன். யாருமே எதிர்பார்காத திடீர் திருப்பமா வைச்சு கதைய எங்கோயோ கொண்டு போயிட்டீங்க. கலக்கல் கதை திவ்யா.
அடுத்த பாகம் எப்ப வரும்? அட ஒரு வாரம் லீவு போட்டுட்டு மத்த பாகத்தயும் எழுதிடுங்களேன்.

said...

வித்தியாசமா 'க்ரைம்' கதை எழுதும் முயற்சியா திவ்யா?

கதை விறுவிறுப்பா நகருது திவ்யா.

கதைக்கு தகுந்த படங்களாக தேடி எடுத்து போடுவது திவ்யாவின் ஸ்பெஷாலிட்டி, அருமை:)

said...

முதல் பாகம் படித்துவிட்டு காதல் கதை என்று நினைத்த எனக்கு இரண்டாவது பாகம் இன்ப அதிர்ச்சி !!

கைத்தேர்ந்த நாவலாசிரியர் போல் suspense and thriller கூட எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறீர்கள் !!

வாழ்த்துக்கள் !!

said...

க்ரைம்+ காதல்+கவிதை கதை சூப்பர்.. செம விறுவிறுப்பு அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்..
//சீண்டிப்பார்ப்பதில்
குழந்தையாய் விளையாடி
கள்ளமற்ற சிரிப்பில்
உள்ளம் களவாடி
என்னுள் பூத்திருந்த செல்லமே
நான் விரும்பும் கதா
நீதானென அறிந்தகணம்
அள்ளிக்கொஞ்சிட
ஓடிவந்தேன்
உன்னை இப்படிக்காணவா
தேடிவந்தேன்...//

கதைக்கேற்ற கவிதை அருமை..

said...

கதை அற்புதமா நகருது!

அடுத்த பார்ட்டுக்காக ஆவலோட வெயிட்டிங்!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

ஹேய்..திவ்யா... என்ன இது... இவ்ளோ சீக்கிரமா
இரண்டாம் பாகம்...?? இன்ப அதிர்ச்சியா இருக்கே... !!
:)))\\


இரண்டாம் பாகம் ரொம்ப டிலே பண்ணாம, சீக்கிரம் எழுதிட்டேன்.....அதுக்காக அதிர்ச்சி எல்லாம் ஆக கூடாது கவிஞர் சார்:))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

திவ்யாவிடம் இருந்து காதல்கதைதான்
வரும்னு பார்த்தா க்ரைம் கதையும்
கலக்கலா வந்து இருக்கு..!!!
வாழ்த்துக்கள்..!! :))))\\


வாழ்த்துக்களுக்கு நன்றி நவீன் ப்ரகாஷ்!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

காதல் கதைகளே மிக விறுவிறுப்பாக‌
எழுதும் தியவ்யாவுக்கு இப்படி
சக்கரைக்கட்டி மாதிரி
ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்
கெடைச்சா சும்மாவா...??
Simply Superb....
வார்த்தைகள் எல்லாம் எங்கே புடிக்கிறீங்க...??
;))))\\


உங்கள் ஊக்கத்திற்கு நன்றி நவீன்;))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

விறுவிறுப்பா போகும் கதையில் இப்படி
திடீர்னு தொடரும் போட்டா எப்படி திவ்யா..?
சீக்கிரம் அடுத்த பாகம் வேணும்...
okva..?? :)))\\


நிச்சயம் அடுத்த பாகமும் விரைவில் எழுதிட முயற்சிக்கிறேன்:)

உங்கள் வருகைக்கும், பின்னூட்டங்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி!!!

said...

\\Blogger Raghav said...

ஆஹா.. கதை செம ஃபாஸ்ட்டா நகருதே.. ரொமாண்டிக்கான கதைகள் படிச்சுட்டு இப்புடி ஒரு விறுவிறு சுறுசுறு கதை படிக்க நல்லா தான் இருக்கு.. கடகடன்னு படிச்சு முடிச்சுட்டேன்.. :)\\


செம பாஸ்ட்டா இருந்துச்சா இந்த பகுதி.......அப்போ ஸ்லோ மோஷன்ல கொண்டு போய்டலாம் அடுத்த பகுதி:))

உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி ராகவன்!!

said...

\\Blogger நாணல் said...

ஒரே thrilling இருக்கு.... மதிமாறன் பெயர் காரணம் நல்லா இருக்கு..... :)
அடுத்த பகுதிக்காக waitings.....
அசத்தலா இருக்கு கதை....\\


உங்கள் மனம்திறந்த பாராட்டு உற்சாகமளிக்கிறது நாணல்...ரொம்ப நன்றி!!!

said...

\\Blogger gils said...

!!! divs a..ithu divs thana...rajeshkumaroda pseudonyma? \\

அட .....நம்புங்க கில்ஸ் இது திவ்யாவே தான்:)))\\chancela ponga..asathalla poguthu kathai..yosika mudiatha ending..adutha partuku one week wait panna uteenga..gajendranku visa eduka vendi varum..seekrama postunga\\


சீக்கிரம் அடுத்த பார்ட் எழுதிடுறேன் கில்ஸ்:))

நன்றி!!!

said...

\\Blogger ஸ்ரீமதி said...

அக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((\\


வாங்க ஸ்ரீமதி,

உங்கள் ரசிப்பினை பின்னூட்டத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி!!

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

ஐயையோ வெட்டு குத்துல்லாம் வந்துடிச்சு...!!!//\\


:))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

பெரிய க்ரைம் ஸ்டோரிதான் போல...\\


பெரிய க்ரைம் ஸ்டோரி இல்லீங்க தமிழன்.......

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

எனக்கெல்லாம் இந்த உரையாடல் எழுதறது சுட்டுப்போட்டாலும் வராதது எப்படி இப்படி சரளமா எழுதறிங்க...!?\\\


உரையாடல் நல்லா இருக்கா....??

ரொம்ப நன்றி தமிழன்!!

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

கலக்குங்க மாஸ்டர் அடுத்த பகுதி எப்போ...?\\


அடுத்த பகுதி......அடுத்த வாரம்:))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

எழுத்தாளர் மதிமாறன் அவதான்கிறது திடீர்திருப்பம்...!
சடன் பிரேக் விழுந்து சட்டென்று கியர் மாறி இருக்கு...\\


விளக்கமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி தமிழன்!!

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

கலக்ககுங்க...:)\\


ஊக்கமளிக்கும் உங்கள் தொடர் வருகைக்கும், பின்னூட்டங்கள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றி தமிழன்!!!

said...

\\Blogger Divyapriya said...

இந்த பகுதி செம விருவிருப்பு…முடிஞ்சதே தெரியல…ப்ரித்திவி ராஜ் ஃபோட்டோஸ் எல்லாம் அருமை ;)\\


வாங்க திவ்யப்ரியா,

அந்த 'போலீஸ்' அண்ணா காரெக்டருக்கு யாரு ஃபோட்டோ போடலாம்னு எனக்கு ஒரே கன்ஃபூஷன்.......அப்போதான் ப்ரித்திவி படம் கண்ல பட்டுச்சா.....பொருத்தமா தோனிச்சு, ஸோ போட்டேன்.....நீங்க குறிப்பிட்டு சொன்னதிற்கு நன்றி :)))

said...

\\Blogger விஜய் said...

Action kalantha kaathal. ஆனால் ரொம்ப அவசர அவசரமா எழுதினா மாதிரி இருந்தது.\\


வாங்க விஜய்,

முதல் தடவையா...இந்த ஆக்க்ஷன் கலந்த கதை எழுதுறேன்.....ஸோ எழுத்து நடை வேகமா நகர மாதிரி ஒரு ஃபீல் எனக்கும் இருந்தது எழுதறப்போ:(


\\ I felt a little more description would have helped to bring in the exact feeling of watching an action. I hope you would have read Robert Ludlum.
கொஞ்சம் எக்ஸ்ட்ராவா காதுல பூ சுத்திருப்பாரு. இருந்தாலும் அவர் சொல்ல வருவதை நம்மால் கற்பனை பண்ணிப் பார்க்கும் அளவிற்கு இருக்கும்.

Anyway, great going. Hats off!1\\


உங்கள் கருத்துக்களை நினைவில் கொள்கிறேன் விஜய்!!

உங்கள் மனம்திறந்த விமர்சனத்திற்கு மிக்க நன்றி!!!

said...

\\Blogger புதியவன் said...

//" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற?//

எங்களுக்கும் அதிர்ச்சியாத் தான் இருக்குது.

//கண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....//

அதிர்ச்சிகள் தொடரட்டும்.....

வாழ்த்துக்கள் திவ்யா\\
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி புதியவன்!!


மீண்டும் வருக!!!

said...

\\Blogger இனியவள் புனிதா said...

அசத்தல் திவ்யா...:-)\\


நன்றி புனிதா...!

said...

\\Blogger அதிரை ஜமால் said...

இந்த நடிகர்களை வைத்தே இந்த கதையயை படமாக்கலாம் போலிருக்கே.

நல்லா எழுதுறீங்க - வாழ்த்துக்கள்\\


உங்கள் பாராட்டிற்கும் , வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஜமால்!!

said...

\\Blogger நிமல்-NiMaL said...

கதை சூப்பரா இருக்கு....
விறுவிறுப்பு குறையாம ஒரு அசத்தல் க்ரைம் கதை...!

திவ்யா கதை படிக்கும்போது எனக்கு பிடிக்காத வார்த்தை "அப்போது"... இதில தானே தொடரும் போடறீங்க.. :)

வாழ்த்துக்கள்...!\\


ஆஹா.....'அப்போது' ன்னு பார்த்தாவே நிமலுக்கு பிடிக்காதா?

என்ன பன்றது நிமல்........தொடர்கதை அப்படிதானே முடிக்க முடியும்:))

உங்கள் தொடர் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நிமல்!!

said...

\\Blogger எழில்பாரதி said...

அட தொடர் ரொம்ப விறுவிறுப்பா போகுதே!!!! அடுத்த பகுதியை சீக்கரம் போடுங்க!!!!\\

வாங்க எழில்பாரதி!!

உங்கள் வருகைகும் பாராட்டிற்கும் நன்றி!!

said...

\\Blogger நாகை சிவா said...

ராஜேஷ்குமார் நாவல் ஞாபகத்துக்கு வருது. க்ரைம் தொடரும் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

கலக்குங்க..\\நன்றிங்க சிவா:)))

said...

\\Blogger நாகை சிவா said...

கதைக்கு தகுந்த படங்களாக தேடி எடுத்து போட்டு இருக்கிங்க.. ரியலி நைஸ்.. பிருத்வி படங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளது. :)\\


படங்களையும் குறிப்பிட்டு பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது சிவா......நன்றி!!

said...

\\Blogger காண்டீபன் said...

கதை விறுவிறுப்பு! சுவாரஸ்யம்.. மொத்தத்தில் ஒரு த்ரில்லர் படிக்கும் நியாபகம். அருமை. அடுத்த பகுதியும் விரைவாய் பதியவும்.

//பீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,
//
//தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.///

நிலைகுலையச் செய்ய, நிலைகுலைந்தான் என்று இருக்க வேண்டும் தோழி.\\எழுத்துப்பிழை சுட்டிக்காட்டியதிற்கு நன்றி தோழரே!

வருகைக்கு நன்றி காண்டீபன்:)))

said...

\\Blogger கோபிநாத் said...

நல்ல விறுவிறுப்பு ;))\\


ரொம்ப நன்றி கோபிநாத்!!

said...

\\Blogger நசரேயன் said...

வழக்கம் போல அருமை
நல்ல நடை .. வாழ்த்துக்கள்\\

வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நசரேயன்:))

மீண்டும் வருக!!

said...

\\Blogger anbudan vaalu said...

intresting :))\\


நன்றி!!!

said...

\\Blogger தாரணி பிரியா said...

சஸ்பென்ஸோட கலந்த காதல் கதை அருமை திவ்யா\\


பாராட்டிற்கு மிக்க நன்றி தாரணி பிரியா:)))

said...

\\Blogger பிரபாகர் சாமியப்பன் said...

அட பாவமே எண்ணாங்க அந்த புள்ளை கையை வெட்டிங்க.. ஐயோ த்ரிஷா த்ரிஷா ..:) : ) .

கலக்கல் போங்க\\

த்ரீஷாவுக்காக ரொம்ப ஃபீல் பண்றீங்களோ???


வருகைக்கு நன்றி ப்ரபாஹர்!!

said...

\\Blogger ஜி said...

:))

aduththa part aduththa vaaramthaana?\\ஆமாம் ஜி.....வீக்கெண்ட் தான் அடுத்த பாகம் ரெடி பண்ணனும்,
ஸோ நெக்ஸ்ட் வீக் தான் அடுத்த பாகம்:))

வருகைக்கு நன்றி!!

said...

:) good Divya!

said...

சஸ்பென்ஸ் + காதல் + திவ்யாவின் கதை சொல்லும் பாங்கு + படங்கள் = படித்து ரசிக்க நல்ல கதை.

said...

என்னங்க சொல்றது, சூப்பர்ங்கிறதை தவிர? சீக்க்கிரம் அடுத்த பாகத்தை கொடுத்தால் சந்தோஷம்.
:)

said...

எதுக்கு இந்த கொலைவெறி...

ரொம்ப நல்லா போகுது கதை ...

said...

\\Blogger Saravana Kumar MSK said...

அட திவ்யா.. என்ன இது.. ஹார்ட் பீட் கன்னா பின்னான்னு எகிருது..\\

வாங்க சரவணகுமார்:)

said...

\\Blogger Saravana Kumar MSK said...

சஸ்பென்ஸ் கதை கூட இவ்ளோ கலக்கலா எழுதுவீங்களா.. நெஜமாவே சூப்பர்..\\


நன்றி சரவணன்:)

said...

\\Blogger Saravana Kumar MSK said...

என்னங்க.. அழகான பானுவோட கைய வேட்டிடீங்களே.. மனசுக்கு கஷ்டமா இருக்கு..\\

அச்சோ......பானுக்காக ரொம்பவே வருத்தப்படுறீங்களே:(

said...

\Blogger Saravana Kumar MSK said...

கஜேந்திரன் வார்த்தைகள் ரொம்ப ஆணாதிக்கமா இருக்கே.. வேற யாரவது பசங்க இந்த கதைய எழுதி இருந்தா, அவ்ளோ தான்..\\


அட....பசங்க எழுதியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க சரவணன்?

said...

\\Blogger Saravana Kumar MSK said...

மேலே உள்ள அத்தனை பின்னூட்டங்களுக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய ரிப்பீட்டு..\\

உங்கள் வருகைக்கும் , ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி!!!

said...

\\Blogger கருப்பன்/Karuppan said...

என்னங்க இது திடீர்னு காதல் கதையில் இருந்து க்ரைம் ஸ்டோரிக்கு தாவிட்டீங்க???

நல்லா இருக்கு கன்டினியூ பண்ணுங்க!\\


ஒரு புது முயற்சி தான் கருப்பன்:))

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!!!

said...

\\Blogger gayathri said...

ஸ்ரீமதி said...
அக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((

naan enna sollrathu
காதல் திருத்தம் seira en akkave மதி மாறன் காதல rasika vachitenga kathai nalla iruku.next part eppa pa.\\


வாங்க காயத்ரி,

முதல் முறையாக என் வலைதளம் வந்திருக்கிறீங்க, நன்றி!!

அடுத்த பகுதி .......அடுத்த வாரம்:))

said...

\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

மதிமாறன் ஏதோ ஒரு பாகத்துல வர்ற விசயம்தான்னு நினைச்சேன். யாருமே எதிர்பார்காத திடீர் திருப்பமா வைச்சு கதைய எங்கோயோ கொண்டு போயிட்டீங்க. கலக்கல் கதை திவ்யா.
அடுத்த பாகம் எப்ப வரும்? அட ஒரு வாரம் லீவு போட்டுட்டு மத்த பாகத்தயும் எழுதிடுங்களேன்.\\


ஆஹா.....லீவு போட்டு அடுத்த பாகம் எழுதனுமா:((
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலியா உங்களுக்கே:))

வீக்கெண்ட் அடுத்த பகுதி கண்டிப்பா எழுதுறேன் ,

உங்கள் வருகக்கு மிக்க நன்றி!!

said...

\\Blogger Mohan said...

வித்தியாசமா 'க்ரைம்' கதை எழுதும் முயற்சியா திவ்யா?

கதை விறுவிறுப்பா நகருது திவ்யா.

கதைக்கு தகுந்த படங்களாக தேடி எடுத்து போடுவது திவ்யாவின் ஸ்பெஷாலிட்டி, அருமை:)\\


உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி!!

said...

\\Blogger ந.மு.விமல்ராஜ் said...

முதல் பாகம் படித்துவிட்டு காதல் கதை என்று நினைத்த எனக்கு இரண்டாவது பாகம் இன்ப அதிர்ச்சி !!

கைத்தேர்ந்த நாவலாசிரியர் போல் suspense and thriller கூட எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறீர்கள் !!

வாழ்த்துக்கள் !!\\


உங்கள் விரிவான விமர்சனத்திற்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி !!!

said...

\\Blogger PoornimaSaran said...

க்ரைம்+ காதல்+கவிதை கதை சூப்பர்.. செம விறுவிறுப்பு அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்..
//சீண்டிப்பார்ப்பதில்
குழந்தையாய் விளையாடி
கள்ளமற்ற சிரிப்பில்
உள்ளம் களவாடி
என்னுள் பூத்திருந்த செல்லமே
நான் விரும்பும் கதா
நீதானென அறிந்தகணம்
அள்ளிக்கொஞ்சிட
ஓடிவந்தேன்
உன்னை இப்படிக்காணவா
தேடிவந்தேன்...//

கதைக்கேற்ற கவிதை அருமை..\\


வாங்க பூர்ணிமா,

கதையுடன், கவிதையையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி!!

said...

\\Blogger நாமக்கல் சிபி said...

கதை அற்புதமா நகருது!

அடுத்த பார்ட்டுக்காக ஆவலோட வெயிட்டிங்!\\


உங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்ட உற்சாகத்திற்கும் மிக்க நன்றி சிபி!!

said...

\\Blogger sathish said...

:) good Divya!\\


நன்றி சதீஷ்!!

said...

\\Blogger பாச மலர் said...

சஸ்பென்ஸ் + காதல் + திவ்யாவின் கதை சொல்லும் பாங்கு + படங்கள் = படித்து ரசிக்க நல்ல கதை.\\


வாங்க பாசமலர்,

உங்கள் வருகைக்கும் , பாராட்டும் உவகையளித்தது,

மிக்க நன்றி!!

said...

\\Blogger Karthik said...

என்னங்க சொல்றது, சூப்பர்ங்கிறதை தவிர? சீக்க்கிரம் அடுத்த பாகத்தை கொடுத்தால் சந்தோஷம்//


வாங்க கார்த்திக்,

செமஸ்டர் ஹாலிடேஸ் முடிஞ்சு வந்ததும், மறக்காம என் வலைதளம் வந்து பதிவு படித்து பாராட்டியதிற்கு என் மனமார்ந்த நன்றி!!

அடுத்த பகுதி.......அடுத்த வாரம்!!

said...

\\Blogger முகுந்தன் said...

எதுக்கு இந்த கொலைவெறி...

ரொம்ப நல்லா போகுது கதை ...\\


நன்றி முகுந்தன்!!

said...

A very nice romantic-thriller..

I enjoyed reading ur story.

said...

kadhai nalla viru viruppa poghudunga Divya!!!

said...

America la irundhudu tamil meala ivalavu aarvama???

said...

Very nice story line..when are you going to post the next part? Post it soon divya!

Anonymous said...

Divya,
கதையும் அட்டகாசம்.. கவிதையும் அட்டகாசம்!
ரொம்ப நாள் காக்க வெக்கறீங்க.. அடுத்த பாகம் சீக்கிரம் ப்ளீஸ்!!

said...

\\Blogger galaata ammani said...

A very nice romantic-thriller..

I enjoyed reading ur story.\\


நன்றி கலாட்டா அம்மனி!!

said...

\\Blogger Karthik said...

kadhai nalla viru viruppa poghudunga Divya!!!\\


நன்றி கார்த்திக்!!!

said...

\\Blogger Karthik said...

America la irundhudu tamil meala ivalavu aarvama???\\


எந்த நாட்டில இருந்தாலும்......தாய்மொழி மேல் ஆர்வம் குறைந்து போகுமா???

உங்கள் வருகைக்கு நன்றி கார்த்திக்!!!

said...

\\Blogger Kumiththa said...

Very nice story line..when are you going to post the next part? Post it soon divya!\\


நன்றி குமித்தா!!

நீண்ட நாட்களுக்கு பின்.....உங்கள் பின்னூட்டம், மகிழ்ச்சி!!

said...

\\OpenID suttapalam said...

Divya,
கதையும் அட்டகாசம்.. கவிதையும் அட்டகாசம்!
ரொம்ப நாள் காக்க வெக்கறீங்க.. அடுத்த பாகம் சீக்கிரம் ப்ளீஸ்!!\\


அடுத்த பாகம் போட்டாச்சு......படிச்சுட்டு சொல்லுங்க;))

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!!