April 03, 2008

இந்த பூவுக்கும் வாசம் உண்டு......

"லூசா டி நீ, கிஷோரோட அம்மா உன்னை இப்படி திட்டிட்டு போறாங்க, ஒரு வார்த்தை கூட பேசாம, அவங்க போனதுக்கு அப்புறம் அழுதுட்டு உக்காந்திருக்க"

"அவங்க பேசினதுல என்ன தப்பு இருக்கு ஜனனி"

"என்னடி இப்டி பேசுற...அவங்க பையனும் தான உன்னை லவ் பண்றான், கண்டிக்கிறதுனா அவுங்க பையனை கண்டிக்க வேண்டியதுதான , உன்னை இப்படி தர குறைவா பேசுறதுக்கு இவங்க யாருடி??"

"அவங்க இடத்துல இருக்கற எந்த அம்மாவுக்கு இதே கோபம் தான் வரும் ஜனனி, அவங்க கிஷோரோட அம்மா......அவங்க கிட்ட எப்படி நான்...."

"அட சே.....கிஷோர தானடி லவ் பண்றே, அதுக்காக அவன் அம்மா இப்படி காட்டு கத்து கத்துவாங்க, நீ கேட்டுட்டு கம்முன்னு இருப்பியா??? என்ன இப்போவே மாமியார்கிட்ட சீன் போடுறியாக்கும்.....இதெல்லாம் என்னடி பொழப்பு, மானம் ரோஷம் எல்லாம் இல்லாம என்ன பொல்லாத காதல் பண்றீங்களோ, கன்றாவி"

"ஜனனி, கிஷோர் அம்மா கிட்ட நல்ல பேரு வாங்கனும்னு நான் அவங்க திட்டும் போது அமைதியா இருக்கல, அவங்க நிலமையையும் யோசிச்சு பாரு, வீட்டுல அவங்களே பார்த்து கட்டி வைக்கிற தன் மருமகள்கிட்ட தன் பையன் அன்பா நடந்துக்கிட்டாவே அம்மாக்களுக்கு பொஸஸிவ்நஸ் வந்து ப்ரச்சனை வரும், இதுல லவ னா கேக்கவே வேணாம்,....நம்ம சொஸைட்டில எஸ்பெஷலி அம்மாக்களுக்கு காதல் னா, அதுல இருக்கிற காமம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும், பையன் லவ் பண்றான்னு தெரிஞ்ச உடனே....அவனா ஒரு பொண்ணு கிட்ட போய்' ஐ லவ் யூ" சொல்லிருப்பான்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க, அந்த பொண்ணு தான் என்ன மாயமோ செய்து மயக்கிட்டான்னு முடிவு பண்ணிடுவாங்க, அது அம்மாக்கள் சைக்காலஜி"

"என்ன கருமாந்திர ஸைக்காலஜியோ இருந்துட்டு போட்டும், அதுக்காக இவ்ளோ கேவலமா திட்டனுமா??"

"ஜனனி, தன் பையன் கிட்ட திட்டி தீர்க முடியாத தன்னோட இயலாமையை இப்படி தீத்துக்கிறாங்க, இது ஒரு outlet அவங்களுக்கு அவ்ளோதான்"

"எனக்கு புரில புவனா, எங்க கிட்ட எல்லாம் ஒரு சின்ன விஷயத்துக்கு கூட சண்டைக்கு வந்து கோப படுவ நீ.....எப்படிடி அந்த அம்மா கத்தினப்போ இப்படி quiet ஆ இருந்தே, how is it possible ??"

"see ஜனனி, ஒருத்தரை லவ் பண்றோம்னா.....அவரை மட்டும் நேசிக்கிறது ஆழமான காதல் இல்லை, அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பம், அதையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்"

"என்னமோடி பெரிய தத்துவம் எல்லாம் பேசுற, எனக்கு எதும் புரியல..."

"ஹே ஜனனி, ஒரு small request ......ப்ளீஸ் கிஷோர் கிட்ட அவங்க அம்மா என்னை திட்டின விஷயத்தை உளறிடாதே"

"ஏன்டி"

"சொல்ல வேணாம்னா .....சொல்ல வேணாம், ப்ளீஸ் ஜனனி"

"சரி சரி, சொன்னா மட்டும் உன் கிஷோர் என்ன பெருசா சொல்லிட போறான்....'புவனா என் அம்மா சார்புல நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன், மனசுல ஏதும் வைச்சுக்காதே' அப்படின்னு டயலாக் பேசுவான்,உன்னை செல்லமா கூப்பிடுவானே 'பொம்மு'ன்னு அப்படி கொஞ்சுவான். இந்த காலத்து பசங்கல பத்தி தெரியாதா, உருகி உருகி காதலிப்பானுங்க.... இப்படி அம்மா issue வந்தா, தன் அம்மா பின்னாடி ஒளிஞ்சுப்பானுங்க"

"அதுல என்னடி தப்பிருக்கு, அது தான் கரெக்ட்....2 வருஷம் பழகின எனக்காக, பத்து மாசம் சுமந்து, தன் உதிரத்தை பாலாக்கின அம்மாவை உதறி தள்ளுறதோ, கோபப்படுறதோ தான் தப்பு"

"இப்போ எது தப்பு கரெக்ட்டுன்னு நான் உன்கிட்ட argue பண்ண வரல, இங்க பாரு புவனா........எனக்கு உன்னை சின்ன வயசுல இருந்தே தெரியும்டி, உன் அப்பா அம்மா உன்னை அதிர்ந்து ஒரு வார்த்தைகூட கோபமா பேசி நான் பாத்ததில்ல, அவ்ளோ செல்லமா வளருரேன்னு எனக்கு தெரியும், உன்ன போய்............அந்த அம்மா எப்படி சொல்லிடாங்க, என்னால தாங்கிக்க முடியல, நீ எப்படி இதெல்லாம் பொறுத்துக்கிற...இதெல்லாம் தாங்கிக்க தான் வேணுமா??....அப்படி ஒரு காதல் தேவையாடி உனக்கு??"

"ஜனனி, காதல்னா நீ என்னான்னு நினைச்ச??.....சும்மா ஜாலியா பைக்ல ஊரு சுத்துறதும், கொஞ்சிக்கிறதும்னா??......அதை ஒரு மிருகமும் பண்ணும், ........அது மட்டும் இல்லடி காதல், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு கொடுக்கிற குணம்....இப்படி கசப்பான வார்த்தைகளையும் நாம நேசிக்கிறவங்களுக்காக உள் வாங்கிக்கிறது எல்லாமே பார்ட் ஆஃப் லவ், நம்மளோட இயல்பு, முன் கோபம், பிடிவாதம் எல்லாம் காதலுக்காக தளர்த்திக்கிறதுல ஒரு சுகம் இருக்குடி"

"அடிப்பாவி நல்லாத்தான இருந்த..........இப்படி கிழவியாட்டும் எப்போதிலிருந்து பேச கத்துக்கிட்ட......ஏய் புவனா......உன் ஆளு பைக்கில செம ஸ்பீடா வரான் பாரு"

கிஷோரிடம் ஒரு படபடப்பு, கண்களில் ஒரு ஆத்திரம் , .............பைக்கிலிருந்து இறங்காமலே புவனாவிடம்,

"வண்டியில ஏறு பொம்மு"

"எங்...எங்கே"

"வண்டில ஏறுன்னு சொன்னேன்...."

"அதான்.........எங்கே போறோம்னு கேட்கிறேன்"

"நேரா திருத்தனிக்கு போறோம், தாலி கட்டி மாலை மாத்திக்கிறோம்"

"எதுக்கு இந்த அவசர திருட்டுக் கல்யாணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா???"

பைக்கிலிருந்து இறங்கி, புவனாவிற்கருகில் வந்தான் கிஷோர்,

"பொம்மு, ......உன்கிட்ட என் அம்மா வந்து கத்தினது எல்லாம் எனக்கு தெரியும், அவங்களுக்கு பதிலடி தான் நம்ம கல்யாணம், இவங்க சம்மததுக்காக எல்லாம் நாம கெஞ்சிட்டு இருந்தா இப்படி தான் மிஞ்சு வாங்க, சரி...பேசிட்டு இருக்க டைம் இல்ல, அங்கே நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கோவிலுக்கு வர சொல்லிட்டேன், நீ வண்டில ஏறு"

"ஒரு நிமிஷம் கிஷ், ....என்னை ஒரு 2 வருஷமா உனக்கு தெரியுமா????........ஆனா உங்க அம்மாவை.......25 வருஷம்.சட்டுன்னு அந்த 25 வருஷ பந்தத்தை பொசுக்கிடாதே உன் கோபத்தால"

"பொம்மு..........நான் சொல்றதை......"

"கொஞ்சம் என்னை பேச விடு கிஷ், இன்னிக்கு உன் அம்மா மேல இருக்கிற கோபத்துக்கு காரணம் நம்ம காதல்.......இந்த முட்டாள்தனமான கோபமும், விவேகம் இல்லாத முடிவும் காதலுக்கு அழகில்ல கிஷ். நீ நம்மளையும், நம் காதலையும் மட்டும் பார்கிறே... parents ஓட angle ல இருந்து அவங்களோட ஆதங்கத்தையும் ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு"

"உன்னை யாரு அப்படி பேசினாலும் என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது பொம்மு........அது என் அம்மாவா இருந்தாலும் ......."

"இப்போ என்ன ஆச்சுன்னு குதிக்கிற கிஷ்.........அவங்க வருங்கால மருமகளை கண்டிச்ச்சுட்டாங்க அவ்ளோதானே, என்னோட அம்மா இடத்துல வைச்சு நான் அதை யோசிச்சு புரிஞ்சுக்கிட்டா..........ஒரு அம்மாவின் கண்டிப்பா எடுத்துக்கலாம் இல்லியா???, அதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு, பிறந்ததுல இருந்து உனக்கு எல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச அம்மா க்கு நீ செலக்ட் பண்ணின பொண்ணு......உன் life full ஆ உன் கூட இருக்க போற பொண்ணு எப்படி பட்டவளா இருப்பாளோன்னு ஒரு அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்யும், அதோட expression தான் இது"

"இப்போ நீ வர முடியுமா , முடியாதா பொம்மு"

"See கிஷ், .....இப்போ நாம பண்ற இந்த திருட்டு கல்யாணம், நம்ம மேல உள்ள மதிப்பையும், நம்பிக்கையும் சுக்கு நூறா உடைச்சிடும். கடைசில கெட்ட பேரு யாருக்கு தெரியுமா..........இவளை திட்டினதும் என் மகனை நல்லா ஏத்தி விட்டு, திருட்டு தாலி கட்டிகிட்டு என் நினைப்புல மண்ணு அள்ளி போடுட்டா , அப்படின்னு என் மேல தான் பழி விழும்......ஆனா அதுக்காக நான் கவலை படல.........but உன் மனைவியா உன் அம்மாவோட முழு சம்மதத்தோட தான் உன்னை கட்டிப்பேன் ,நம்ம parents யோட முழு சம்மததும் கிடைக்க்கும்னு நான் நம்புறேன்.....
உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!
பொறுமையுடன் புரிய வைப்போம், நம் காதல் நமக்கு துணை நிற்கும்,
நாளைக்கு பார்க்கலாம் கிஷ், வரேன் , பை"

அவளது trademark புன்னகையுடன், கிஷோரின் முன் தலைமுடியை கோதிவிட்டு விட்டு, தன் ஸ்கூட்டியில் சென்றாள் புவனா.

ஜனனியும், கிஷோரும் அவள் சென்ற பாதையை வியப்புடன் பார்த்து நின்றனர்....!!!

[காதலுக்கு எதிர்ப்பும் அவமதிப்பும் காதலனுக்குு காதலியின் தந்தை, சகோதரர்களிடமிருந்து வருவது, அதனை காதலன் சமாளித்து காதலில் வெற்றி பெறுவது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டுமில்லாமல் , நடைமுறைவாழ்விலும் காண்கிறோம்,
காதலில் எதிர்ப்பும் அவமதிப்பும் காதலிக்கு காதலனின் உறவுகளிடமிருந்து வரும் போது, அதனை அவள் எப்படி மேற்கொள்வாள் என சிந்தித்த போது , தோன்றிய கருத்துக்கள் இங்கே பதிவாக........]

101 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க திவ்யா :))
வாசமாதான் எழுதி இருக்கீயா...!!! நல்ல கருத்து சொல்லி இருக்கீய.. வாழ்த்துக்கள் !!! :)))

ஜொள்ளுப்பாண்டி said...

//அவனா ஒரு பொண்ணு கிட்ட போய்' ஐ லவ் யூ" சொல்லிருப்பான்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க, அந்த பொண்ணு தான் என்ன மாயமோ செய்து மயக்கிட்டான்னு முடிவு பண்ணிடுவாங்க, அது அம்மாக்கள் சைக்காலஜி" //

ஹையோ ஆராச்சும் கொஞ்சம் சீப்பை எடுத்துக்கொடுங்களேன்... எனக்கு புல்லரிகுதே.... ஏனுங்க திவ்யா... நெசமாலுமே இவ்ளோ அறிவோட, சகிப்போட பொண்ணுங்க இருக்காவளா என்ன ... ?? ;))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பத்தையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்" //

ஹூய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
( விசிலுங்கோ.. ) ஜொள்ளுபாண்டி இதுக்கு சும்மா காது கிழியர மாதிரி விசிலடிகிறான்.... கலக்கல்ஸ்....நல்ல கருத்துதான்... ஒத்துக்கறேன்.... :))))

ஜொள்ளுப்பாண்டி said...

//காதல், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு கொடுக்கிற குணம்....இப்படி கசப்பான வார்த்தைகளையும் நாம நேசிக்கிறவங்களுக்காக உள் வாங்கிக்கிறது எல்லாமே பார்ட் ஆஃப் லவ், நம்மளோட இயல்பு, முன் கோபம், பிடிவாதம் எல்லாம் காதலுக்காக தளர்த்திக்கிறதுல ஒரு சுகம் இருக்குடி"//

அச்சச்சச்சச்சோ....அம்மமமம்மம்மா....ஹய்ய்யய்யயயோ.... ஏணுங்க திவ்யா இப்படி கன்ன பின்னானு கருத்தை அள்ளித்தெளிச்சு என் கண்ணுல இருந்து சிவாஜி கணக்கா ஆனந்தக் கண்ணீரை வரவழைச்சுடுச்சுங்க .... ஹிஹிஹிஹிஹி... எப்படி இப்படியெல்லாம் சொல்லறீய...?? நமக்கும் கொஞ்சம் பாடம் நடத்துங்க.. சரியா...?? ;)))))

ஜொள்ளுப்பாண்டி said...

மொத்ததிலே சொல்லனும்னா பதிவு வழக்கம் போல கலர் கலரா ஜொள்ளுவிடர மாதிரி ஜொனிலியோவோட பளபளா சிரிப்போட நெஞ்சை உருக்கும் திவ்யா 'டச்' சோட... எல்லாத்துக்கும் மேல சமூகக் கருத்தோட... கலக்கலா இருக்கு..

படிக்க ஆரம்பிக்கரதுக்கு முன்ன வாசகர்கள் கையிலே சீப்போட இருக்கறது ஆங்காங்கே கதாநாயகியோட புல்லரிக்கும் டயலாக்குளைப் படிக்கரப்போ
ரொம்ப உதவியா இருக்கும்ங்கறது
ஜொள்ளு டாக்கீஸோட தாழ்மையான கருத்து...

மொத்தத்தில்
இந்தப் பூவுக்கு வாசம்
படிக்கும் போது
நேசம்... :)))

( ஆருக்காச்சும் லாஸ்ட் நான் சொன்னது புரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பூ... ஹிஹிஹிஹி )

Nimal said...

கருத்தாளம் மிக்க கதை...!

ஆனாலும் இவ்வளவு புரிதலுடன் எமது தலைமுறையினர் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்...! (திவ்யாவ தவிர ;))

வாழ்த்துக்கள்...!

கப்பி | Kappi said...

:))

//உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!//

உடைச்சு உடைச்சு எழுதியிருக்கீங்க!! கவுஜ??!! :)))

ஜி said...

:)))

konjam over dialoguesaa pona maathiri oru feeling :)))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

சிந்தனையில் முதிர்ச்சி இருக்கிறது! அழகு :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//காதலில் எதிர்ப்பும் அவமதிப்பும் காதலிக்கு காதலனின் உறவுகளிடமிருந்து வரும் போது, அதனை அவள் எப்படி மேற்கொள்வாள் என சிந்தித்த போது , தோன்றிய கருத்துக்கள் இங்கே பதிவாக........//

காதலுக்கு பல நேரங்களில் காதலர்களே எதிர்ப்பாகவும் அவமதிப்பும் செய்கிறார்களே! அதைப்பற்றியும் கொஞ்சம் யோசிச்சு கருத்து எழுத்துங்க :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
மொத்ததிலே சொல்லனும்னா பதிவு வழக்கம் போல கலர் கலரா ஜொள்ளுவிடர மாதிரி ஜொனிலியோவோட பளபளா சிரிப்போட நெஞ்சை உருக்கும் திவ்யா 'டச்' சோட... எல்லாத்துக்கும் மேல சமூகக் கருத்தோட... கலக்கலா இருக்கு..
//

ஆமாம் ஆமாம்....

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

ஒரே பதிவோடு நிறுத்தி இதற்குமேல் ஜொனிலியாவோட போட்டோ போடாம பன்னதை இங்கே வன்மையாக கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன்!!!

CVR said...

இதே போல் எல்லா பெண்களும் சிந்தித்தால்,காதலர்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை! :-)
அழகான சிந்தனை!
வாழ்த்துக்கள்! :-)

Anonymous said...

/இந்தி படிக்க வந்து வாத்தியோட லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட நானு
இப்ப ஒரு நாப்பது வருசம் கழிச்சும் சந்தோசமாத்தான் கீறோம்.//

அப்படின்னும் உங்க போன பதிவு எழுதினவ தாங்க நானு !
இப்ப இந்த தடவ நீங்க எழுதினத படிச்சபோ அதிசயமா இருக்குங்க...

// இவளை திட்டினதும் என் மகனை நல்லா ஏத்தி விட்டு, திருட்டு தாலி கட்டிகிட்டு என் நினைப்புல மண்ணு அள்ளி போடுட்டா , அப்படின்னு என் மேல தான் பழி விழும்......ஆனா அதுக்காக நான் கவலை படல.........but உன் மனைவியா உன் அம்மாவோட முழு சம்மதத்தோட தான் உன்னை கட்டிப்பேன் ,நம்ம parents யோட முழு சம்மததும் கிடைக்க்கும்னு நான் நம்புறேன்.....//

எப்படி எங்க வாழ்க்கையிலே ஒரு 40 வருசத்துக்கு முன்னாடி நடந்து எல்லாம் அப்படியே புட்டு புட்டு
வைக்கிறீக ! இந்த "உன்" என்னெல்லாம் அந்தக் காலத்திலே பேசமாட்டாக... " உங்க "ன்னு போட்டுகிட்டா
இப்படியே நான் சொன்னது தாங்க.. என்ன ! ஒரு 8 வருசம் காத்துகினு இருந்தோம். ஜாம் ஜாம்னு லே கல்யாணம் நடந்துச்சு !!
//உன் வாழ்க்கையில் இப்போ உதித்த எனக்காக, உலகில் உன்னை உதிக்க வைச்ச தாயை த‌ள்ளிடாதே!!பொறுமையுடன் புரிய வைப்போம் //
புரிய வச்சோங்க.. இதுலே என்னாச்சுன்னா பிற்காலத்துலே தன்னோட மகள்களைவிட எங்கிட்ட தான்
ரொம்ப பாசமா இருந்தாங்க... காலமாவதுக்கு முத நாள் கூட நான் கொடுத்த காபிய தான் விரும்பி சாப்பிட்டாங்க...
சும்மா சொல்லக் கூடாதுங்க.. எங்க அம்மா கூட அத்தனை பாசம் எங்கிட்ட இருந்ததில்லீங்க..

மே...ம்.
.

Prabakar said...

again another good research

எழில்பாரதி said...

திவ்யா அழகான கதை...

நல்ல சிந்தனை.......

வாழ்த்துகள் திவ்யா!!!!

கோபிநாத் said...

அழகான கதை...நல்லாருக்கு திவ்யா ;)

வாழ்த்துக்கள் ;)

Praveena said...

A must read post for Lovers:))

Good one Divya!

FunScribbler said...

திவ்ஸ்,
பதிவ அருமை! short and sweet!

//ஆனாலும் இவ்வளவு புரிதலுடன் எமது தலைமுறையினர் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்...! //

நிமில் சொன்னதை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன். நம்மல மாதிரி எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்களா!!??:))

ஏன் விஜய் படங்களை ரொம்ப கொஞ்சமா போட்டு இருக்கீங்க! இன்னும் cute படங்களை எதிர்ப்பார்த்தேன்!!

ரசிகன் said...

//வனா ஒரு பொண்ணு கிட்ட போய்' ஐ லவ் யூ" சொல்லிருப்பான்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க, அந்த பொண்ணு தான் என்ன மாயமோ செய்து மயக்கிட்டான்னு முடிவு பண்ணிடுவாங்க, அது அம்மாக்கள் சைக்காலஜி"//

அடடா.. மறுபடி மறுபடி நிருப்பிக்கறிங்க திவ்யா மாஸ்டர்.. :)

ரசிகன் said...

//ஒருத்தரை லவ் பண்றோம்னா.....அவரை மட்டும் நேசிக்கிறது ஆழமான காதல் இல்லை, அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பம், அதையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்"//

இதுவும் கலக்கல்... :)

ரசிகன் said...

//அவளது trademark புன்னகையுடன், கிஷோரின் முன் தலைமுடியை கோதிவிட்டு விட்டு, தன் ஸ்கூட்டியில் சென்றாள் புவனா.//

ரொமாட்டிக்கு டச்சு..:)))))))

ரசிகன் said...

மனோதத்துவ முறையில மட்டும்ல்ல.. வாழ்வியலுக்கு அருமையான கருத்துக்களையும் அள்ளி வீசும் திவ்யாவுக்கு எல்லாரும் ஒரு “ஓஹோ” போடுங்க..:))

ரசிகன் said...

//Thamizhmaangani said...
//ஆனாலும் இவ்வளவு புரிதலுடன் எமது தலைமுறையினர் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்...! //

நம்மல மாதிரி எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்களா!!??:))
//
இதப்பார்ராஆஆஆஆஆஆஆஆஅ...
சைக்கிள் கேப்பில ,லாரி ஓட்டுற பழக்கத்தை விடவே மாட்டிங்களா? காயத்ரி :P:P:P :))))

gils said...

avvvvvvvvvv........genelia pics..frm sachin..hmm pathu nimishama naanum "loosadi ni" ku mela padikanumnu paakren..uhum.

gils said...

comment sectionla show originlapoatu padichen..chancela divs...kalaasareenga...romba yathaarthama iruku unga thots and posts..keep rocking..aana ipdilam badila ketukitu antha bf epdi react panraanu solalaieye

gils said...
This comment has been removed by the author.
ரூபஸ் said...

குறிப்பிட்டு எந்த வார்த்தகளையும் சொல்லமுடியாமல், கதை முழுவதையும் அருமையாய் நகர்த்தியிருக்கீறீர்கள்.

ம்ம்ம்.. புவனாக்கள் வாழ்க..

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
வாங்க திவ்யா :))
வாசமாதான் எழுதி இருக்கீயா...!!! நல்ல கருத்து சொல்லி இருக்கீய.. வாழ்த்துக்கள் !!! :)))\\

பாண்டியண்ணே, பின்னூட்டமா அள்ளித் தெளிச்சிருக்கிறீய....ரொம்ப நன்றி அண்ணா!!

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//அவனா ஒரு பொண்ணு கிட்ட போய்' ஐ லவ் யூ" சொல்லிருப்பான்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க, அந்த பொண்ணு தான் என்ன மாயமோ செய்து மயக்கிட்டான்னு முடிவு பண்ணிடுவாங்க, அது அம்மாக்கள் சைக்காலஜி" //

ஹையோ ஆராச்சும் கொஞ்சம் சீப்பை எடுத்துக்கொடுங்களேன்... எனக்கு புல்லரிகுதே.... ஏனுங்க திவ்யா... நெசமாலுமே இவ்ளோ அறிவோட, சகிப்போட பொண்ணுங்க இருக்காவளா என்ன ... ?? ;))))))\\

இதிலென்ன உங்களுக்கு இவ்வளவு டவுட்டு???

Divya said...

\ ஜொள்ளுப்பாண்டி said...
//அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பத்தையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்" //

ஹூய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
( விசிலுங்கோ.. ) ஜொள்ளுபாண்டி இதுக்கு சும்மா காது கிழியர மாதிரி விசிலடிகிறான்.... கலக்கல்ஸ்....நல்ல கருத்துதான்... ஒத்துக்கறேன்.... :))))\\

விசிலடிச்சு உற்சாகப்படுத்தி புட்டீக.....ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா!!!

Divya said...

\\\ ஜொள்ளுப்பாண்டி said...
//காதல், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு கொடுக்கிற குணம்....இப்படி கசப்பான வார்த்தைகளையும் நாம நேசிக்கிறவங்களுக்காக உள் வாங்கிக்கிறது எல்லாமே பார்ட் ஆஃப் லவ், நம்மளோட இயல்பு, முன் கோபம், பிடிவாதம் எல்லாம் காதலுக்காக தளர்த்திக்கிறதுல ஒரு சுகம் இருக்குடி"//

அச்சச்சச்சச்சோ....அம்மமமம்மம்மா....ஹய்ய்யய்யயயோ.... ஏணுங்க திவ்யா இப்படி கன்ன பின்னானு கருத்தை அள்ளித்தெளிச்சு என் கண்ணுல இருந்து சிவாஜி கணக்கா ஆனந்தக் கண்ணீரை வரவழைச்சுடுச்சுங்க .... ஹிஹிஹிஹிஹி... எப்படி இப்படியெல்லாம் சொல்லறீய...?? நமக்கும் கொஞ்சம் பாடம் நடத்துங்க.. சரியா...?? ;)))))\\

ஆனந்த கண்ணீரெல்லாம் வடிச்சு, ரொம்ப ஃபீலிங்க்ஸ் காட்டிட்டீக...பார்த்து பாண்டியண்ணே!!

உங்களுக்கு பாடம் சொல்லி தர்ர லெவலுக்கெல்லாம் நாங்க இன்னும் முன்னேறில்லீங்கண்ணா!!

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
மொத்ததிலே சொல்லனும்னா பதிவு வழக்கம் போல கலர் கலரா ஜொள்ளுவிடர மாதிரி ஜொனிலியோவோட பளபளா சிரிப்போட நெஞ்சை உருக்கும் திவ்யா 'டச்' சோட... எல்லாத்துக்கும் மேல சமூகக் கருத்தோட... கலக்கலா இருக்கு..

படிக்க ஆரம்பிக்கரதுக்கு முன்ன வாசகர்கள் கையிலே சீப்போட இருக்கறது ஆங்காங்கே கதாநாயகியோட புல்லரிக்கும் டயலாக்குளைப் படிக்கரப்போ
ரொம்ப உதவியா இருக்கும்ங்கறது
ஜொள்ளு டாக்கீஸோட தாழ்மையான கருத்து...

மொத்தத்தில்
இந்தப் பூவுக்கு வாசம்
படிக்கும் போது
நேசம்... :)))

( ஆருக்காச்சும் லாஸ்ட் நான் சொன்னது புரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பூ... ஹிஹிஹிஹி )\\\

பாராட்டுக்களுக்கு நன்றி ஜொள்ளுபாண்டி!!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
கருத்தாளம் மிக்க கதை...!

ஆனாலும் இவ்வளவு புரிதலுடன் எமது தலைமுறையினர் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்...! (திவ்யாவ தவிர ;))

வாழ்த்துக்கள்...!\

ஆஹா நிமல்,
ப்ராக்கட் மெசேஜ் எல்லாம் போட்டு அசத்திட்டீங்க!!

நன்றி நிமல்!!!

Divya said...

\\ கப்பி பய said...
:))

//உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!//

உடைச்சு உடைச்சு எழுதியிருக்கீங்க!! கவுஜ??!! :)))\\

கவிதைன்னு ஒத்துக்கிட்டா மதி !!!

வருகைக்கு நன்றி கப்பி!!

Divya said...

\ ஜி said...
:)))

konjam over dialoguesaa pona maathiri oru feeling :)))\\

வாங்க ஜி !

டயலாக்ஸ் டோசேஜ் கொஞ்சம் அதிகமோ??? சரி செய்து கொள்கிறேன்,

உங்கள் அபிப்பராயத்தை தெரிவித்தமைக்கு நன்றி ஜி!!

Divya said...

\\ sathish said...
சிந்தனையில் முதிர்ச்சி இருக்கிறது! அழகு :)\\

நன்றி சதீஷ்!!

Divya said...

\\ sathish said...
//காதலில் எதிர்ப்பும் அவமதிப்பும் காதலிக்கு காதலனின் உறவுகளிடமிருந்து வரும் போது, அதனை அவள் எப்படி மேற்கொள்வாள் என சிந்தித்த போது , தோன்றிய கருத்துக்கள் இங்கே பதிவாக........//

காதலுக்கு பல நேரங்களில் காதலர்களே எதிர்ப்பாகவும் அவமதிப்பும் செய்கிறார்களே! அதைப்பற்றியும் கொஞ்சம் யோசிச்சு கருத்து எழுத்துங்க :))\\

முயற்சிக்கிறேன் சதீஷ்!!

Divya said...

\ sathish said...
//
மொத்ததிலே சொல்லனும்னா பதிவு வழக்கம் போல கலர் கலரா ஜொள்ளுவிடர மாதிரி ஜொனிலியோவோட பளபளா சிரிப்போட நெஞ்சை உருக்கும் திவ்யா 'டச்' சோட... எல்லாத்துக்கும் மேல சமூகக் கருத்தோட... கலக்கலா இருக்கு..
//

ஆமாம் ஆமாம்....\\

சரி...சரி!!!

Divya said...

\\ CVR said...
இதே போல் எல்லா பெண்களும் சிந்தித்தால்,காதலர்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை! :-)
அழகான சிந்தனை!
வாழ்த்துக்கள்! :-)\\

தாயகத்திலிருந்து பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி சிவிஆர்!!!

Divya said...

@ பெயர் வெளியிட விரும்பாத அனானி

உங்கள் வாழ்க்கை அனுபவத்தை விரிவாக பின்னூட்டமிட்டு, கருத்துக்களை பரிமாறிக்கொண்டதிற்கு மிக்க நன்றி!!!

Divya said...

\\ Prabakar Samiyappan said...
again another good research\\

நன்றி ப்ரபாகர்!!

Divya said...

\\\ எழில்பாரதி said...
திவ்யா அழகான கதை...

நல்ல சிந்தனை.......

வாழ்த்துகள் திவ்யா!!!!\\

வாங்க எழில்,

வருகைக்கும் வாழ்த்துக்களும் மிக்க நன்றி!!!

Divya said...

\\\ கோபிநாத் said...
அழகான கதை...நல்லாருக்கு திவ்யா ;)

வாழ்த்துக்கள் ;)\\

வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி!!!

Divya said...

\\ Praveena Jennifer Jacob said...
A must read post for Lovers:))

Good one Divya!\\

வாங்க ப்ரவீனா,

உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி!!

Divya said...

\\ Thamizhmaangani said...
திவ்ஸ்,
பதிவ அருமை! short and sweet!

//ஆனாலும் இவ்வளவு புரிதலுடன் எமது தலைமுறையினர் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்...! //

நிமில் சொன்னதை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன். நம்மல மாதிரி எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்களா!!??:))

ஏன் விஜய் படங்களை ரொம்ப கொஞ்சமா போட்டு இருக்கீங்க! இன்னும் cute படங்களை எதிர்ப்பார்த்தேன்!!\\

ஹாய் தமிழ்,

நீங்க நடிகர் விஜயின் ரசிகையா??

விஜயின் படம் போடுவதற்கு ஏற்ற பதிவு எழுதினால், கண்டிப்பாக விஜய் படங்கள் போடுகிறேன், ஒகே வா??

பாராட்டிற்கு நன்றி தமிழ்!!

Divya said...

\\ ரசிகன் said...
//வனா ஒரு பொண்ணு கிட்ட போய்' ஐ லவ் யூ" சொல்லிருப்பான்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க, அந்த பொண்ணு தான் என்ன மாயமோ செய்து மயக்கிட்டான்னு முடிவு பண்ணிடுவாங்க, அது அம்மாக்கள் சைக்காலஜி"//

அடடா.. மறுபடி மறுபடி நிருப்பிக்கறிங்க திவ்யா மாஸ்டர்.. :)\\

வாங்க ரசிகன்,
பாராட்டிற்கு நன்றி!!!

Divya said...

\\ ரசிகன் said...
//ஒருத்தரை லவ் பண்றோம்னா.....அவரை மட்டும் நேசிக்கிறது ஆழமான காதல் இல்லை, அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பம், அதையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்"//

இதுவும் கலக்கல்... :)\\

உங்கள் ரசிப்பிற்கு நன்றி ரசிகன்!!!

Divya said...

\\ ரசிகன் said...
//அவளது trademark புன்னகையுடன், கிஷோரின் முன் தலைமுடியை கோதிவிட்டு விட்டு, தன் ஸ்கூட்டியில் சென்றாள் புவனா.//

ரொமாட்டிக்கு டச்சு..:)))))))\\

அதே...அதே!!!

Divya said...

\\ Dreamzz said...
nice :)\\

நன்றி!!!

Divya said...

\\ gils said...
avvvvvvvvvv........genelia pics..frm sachin..hmm pathu nimishama naanum "loosadi ni" ku mela padikanumnu paakren..uhum.\\

பதிவுல படத்தையாவது பார்த்தீங்களே, நன்றி.......நன்றி!!!

Divya said...

\\ gils said...
comment sectionla show originlapoatu padichen..chancela divs...kalaasareenga...romba yathaarthama iruku unga thots and posts..keep rocking..aana ipdilam badila ketukitu antha bf epdi react panraanu solalaieye\\

காதலனின் ரியாக்ஷன் எழுதனும்னா......அப்புறம் தொடர்கதை தான் எழுதனும்,

நானே கஷ்டபட்டு, கதை ரம்பமா இழுக்காம சுருக்கமா....முடிக்க ட்ரை பண்ணியிருக்கிறேன்,
நீங்க அதுக்கு அப்புறம் என்னன்னு கேள்வி கேட்டா என்ன பண்றது கில்ஸ்???

அவனது ரியாக்ஷன்.....அவளை புரிஞ்சுகிட்டு, பொறுமையா அவனோட அம்மாவுக்கு புரிய வைச்சான்,
இது கதை படிக்கிறவங்களே யூகிச்சுக்கனும்!!!

Divya said...

\\\ ரூபஸ் said...
குறிப்பிட்டு எந்த வார்த்தகளையும் சொல்லமுடியாமல், கதை முழுவதையும் அருமையாய் நகர்த்தியிருக்கீறீர்கள்.

ம்ம்ம்.. புவனாக்கள் வாழ்க..\\

வாங்க ரூப்ஸ்,
உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி!!!

My days(Gops) said...

ஹரினி போட்டோ டாப்பு...

My days(Gops) said...

//இந்த காலத்து பசங்கல பத்தி தெரியாதா, உருகி உருகி காதலிப்பானுங்க.... இப்படி அம்மா issue வந்தா, தன் அம்மா பின்னாடி ஒளிஞ்சுப்பானுங்க"
//

rotfl.... பொண்ணுங்க மட்டும் தைரியமா வந்து நின்னுட்டு தான் மத்த வேலைய பார்ப்பாங்க... ஹி ஹி ஹி ஹி ஹி...

My days(Gops) said...

நல்ல முடிவு.... இப்ப எல்லாம், எல்லாமே ரெம்ப பிராக்டிகலா தான் முடிவெடுக்குறாங்க.... குட் புவனா :P

நிவிஷா..... said...

திவ்யா அக்கா:))
கருத்து கந்தசாமி ரேஞ்சுக்கு பதிவு முழுவதும் கருத்துக்களா எழுதிட்டீங்க:))

'Dialogues only' style of story approach is nice:))

ரொம்ப நல்லாயிருக்கு பதிவு:))

\\சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு கொடுக்கிற குணம்....இப்படி கசப்பான வார்த்தைகளையும் நாம நேசிக்கிறவங்களுக்காக உள் வாங்கிக்கிறது எல்லாமே பார்ட் ஆஃப் லவ்\\

காதலுக்கு கண்ணில்லைன்னு தான் கேள்விபட்டிருக்கிறேன்.....வெட்கம், மானம், சூடு, சுரனை கூடவா இருக்க கூடாது????

நட்போடு
நிவிஷா.

நிவிஷா..... said...

\\"அட சே.....கிஷோர தானடி லவ் பண்றே, அதுக்காக அவன் அம்மா இப்படி காட்டு கத்து கத்துவாங்க, நீ கேட்டுட்டு கம்முன்னு இருப்பியா??? என்ன இப்போவே மாமியார்கிட்ட சீன் போடுறியாக்கும்.....இதெல்லாம் என்னடி பொழப்பு, மானம் ரோஷம் எல்லாம் இல்லாம என்ன பொல்லாத காதல் பண்றீங்களோ, கன்றாவி"\\

yaarindha Janani...evlo nachunu kelvi yellam kekuranga:))

natpodu
Nivisha.

Raghav said...

Beautiful story with nice pictures. I been reading blogs for six months. This is the first time giving my comments. Narration make a story better. My wishes. Have a beautiful life.

ஸ்ரீ said...
This comment has been removed by the author.
ஸ்ரீ said...

யதார்த்தமான கதை களம் அருமை. நிதர்சனம் தான் பதிவு முழுவதும் தெரிகிறது. ஆங்கிலம் கலந்திருந்தது நமக்கு நேரிலே நடப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கியிருந்தாலும் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ என எண்ண வைக்கிறது. மற்ற படி அருமை :)

KARTHIK said...

ஒரு வேலை புவனவோட எதிர்கால திட்டம் இப்படி இருக்கலாமோ!

Divya said...

\\ My days(Gops) said...
ஹரினி போட்டோ டாப்பு...\\

அப்படியா கோப்ஸ்????

Divya said...

\\ My days(Gops) said...
//இந்த காலத்து பசங்கல பத்தி தெரியாதா, உருகி உருகி காதலிப்பானுங்க.... இப்படி அம்மா issue வந்தா, தன் அம்மா பின்னாடி ஒளிஞ்சுப்பானுங்க"
//

rotfl.... பொண்ணுங்க மட்டும் தைரியமா வந்து நின்னுட்டு தான் மத்த வேலைய பார்ப்பாங்க... ஹி ஹி ஹி ஹி ஹி...\\

பொண்ணுங்க அப்படி தைரியமா இருப்பாங்களா? இல்லியான்றது பத்தி இங்கு சொல்லல,
பசங்களும் அப்படி தைரியமா அம்மா செண்டியிலிருந்து வெளிவருவது கஷ்டம்னு தான் சொல்லியிருக்கு!
இந்த தர்ம சங்கடம் இருபாலருக்கும் பொதுவானது தான் கோப்ஸ்!!

Divya said...

\\ My days(Gops) said...
நல்ல முடிவு.... இப்ப எல்லாம், எல்லாமே ரெம்ப பிராக்டிகலா தான் முடிவெடுக்குறாங்க.... குட் புவனா :P\\

புவனாவிற்கு பாராட்டா?? குட் குட்!!

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி கோப்ஸ்!

Divya said...

\\ நிவிஷா..... said...
திவ்யா அக்கா:))
கருத்து கந்தசாமி ரேஞ்சுக்கு பதிவு முழுவதும் கருத்துக்களா எழுதிட்டீங்க:))

'Dialogues only' style of story approach is nice:))

ரொம்ப நல்லாயிருக்கு பதிவு:))

\\சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு கொடுக்கிற குணம்....இப்படி கசப்பான வார்த்தைகளையும் நாம நேசிக்கிறவங்களுக்காக உள் வாங்கிக்கிறது எல்லாமே பார்ட் ஆஃப் லவ்\\

காதலுக்கு கண்ணில்லைன்னு தான் கேள்விபட்டிருக்கிறேன்.....வெட்கம், மானம், சூடு, சுரனை கூடவா இருக்க கூடாது????

நட்போடு
நிவிஷா.\

வாங்க நிவிஷா,

எந்த உறவிலும் சகிப்புத்தன்மை அவசியம், பொறுமையும் தேவை!

காதலுக்காக.....காதலனின் அம்மாவிடம் தன்மானம் விட்டுக்கொடுப்பதில் தவறொன்றுமில்லையே???

வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி நிவிஷா.

Divya said...

\ Raghavan said...
Beautiful story with nice pictures. I been reading blogs for six months. This is the first time giving my comments. Narration make a story better. My wishes. Have a beautiful life.\\

வாங்க ராகவன்!
பல பதிவுகள் படித்திருந்தும், முதல் முறையாக கமெண்ட் போட்டிருக்கிறீங்க, மிக்க நன்றி!!

உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் என் மனம்திறந்த நன்றிகள் பல!!!

Divya said...

\\ ஸ்ரீ said...
யதார்த்தமான கதை களம் அருமை. நிதர்சனம் தான் பதிவு முழுவதும் தெரிகிறது. ஆங்கிலம் கலந்திருந்தது நமக்கு நேரிலே நடப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கியிருந்தாலும் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ என எண்ண வைக்கிறது. மற்ற படி அருமை :)\\

செந்தமிழ் கவிஞரே!
இனிமேல் ஆங்கில வார்த்தைகள் உரையாடலில் அதிகம் கலவா வண்ணம் இருக்க முயற்சிக்கிறேன்!!

கருத்துக்களை எடுத்துக் கூறியதிற்கு நன்றி ஸ்ரீ!!

Divya said...

\\ கார்த்திக் said...
ஒரு வேலை புவனவோட எதிர்கால திட்டம் இப்படி இருக்கலாமோ!\\

கார்த்திக் நீங்கள் அளித்திருக்கும் சுட்டியை தைரியமாக கிளிக் செய்யலாமா??

bcos nerya virus link ipdi comments yil adikadi varuhirathu!!

தமிழன்-கறுப்பி... said...

கருத்து கருத்து...

தமிழன்-கறுப்பி... said...

//அவனா ஒரு பொண்ணு கிட்ட போய்' ஐ லவ் யூ" சொல்லிருப்பான்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க, அந்த பொண்ணு தான் என்ன மாயமோ செய்து மயக்கிட்டான்னு முடிவு பண்ணிடுவாங்க, அது அம்மாக்கள் சைக்காலஜி" //

மயங்கித்தானேப்பா சொல்லுறாங்க
[அப்படியில்லையோ:))))))]

தமிழன்-கறுப்பி... said...

//அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பத்தையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்" //

மெஸேஜீ...

ஆஹா...ஆஹா...

தமிழன்-கறுப்பி... said...

மனோதத்துவ முறையில மட்டும்ல்ல.. வாழ்வியலுக்கு அருமையான கருத்துக்களையும் அள்ளி வீசும் திவ்யாவுக்கு எல்லாரும் ஒரு “ஓஹோ” போடுங்க..:))

ஓஹோஹோ.......

தமிழன்-கறுப்பி... said...

//ஏன் விஜய் படங்களை ரொம்ப கொஞ்சமா போட்டு இருக்கீங்க! இன்னும் cute படங்களை எதிர்ப்பார்த்தேன்!!\\///

யாருப்பா அது நானே பாவனா படம் இல்லனு பாத்துக்கிட்டிருக்கேன்

(ஜெனிலியாவும் OK :)))))))))

தமிழன்-கறுப்பி... said...

//காதல், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு கொடுக்கிற குணம்....இப்படி கசப்பான வார்த்தைகளையும் நாம நேசிக்கிறவங்களுக்காக உள் வாங்கிக்கிறது எல்லாமே பார்ட் ஆஃப் லவ், நம்மளோட இயல்பு, முன் கோபம், பிடிவாதம் எல்லாம் காதலுக்காக தளர்த்திக்கிறதுல ஒரு சுகம் இருக்குடி"//

ம்ம்ம்ம் கருத்து மழை....

நிஜம்...
காதல் முதலில் நமக்கு கற்றுத்தருகிற விசயம் பொறுமை...

( இவையெல்லாம் காதல் தருகிற வலிமைகளில் சில)

தமிழன்-கறுப்பி... said...

/////காதலில் எதிர்ப்பும் அவமதிப்பும் காதலிக்கு காதலனின் உறவுகளிடமிருந்து வரும் போது, அதனை அவள் எப்படி மேற்கொள்வாள் என சிந்தித்த போது , தோன்றிய கருத்துக்கள் இங்கே பதிவாக......../////

காதல் கவியரசி திவ்யா
எப்ப காதல் கருத்தரசி ஆனாங்க...:))))))))

தமிழன்-கறுப்பி... said...

நல்ல பதிவு..

காதலிக்கிறவங்களுக்கு இருக்க வேண்டிய நிதானம் இது...
யாராவது ஒருத்தருக்காவது இந்த நிதானம் கட்டாயம் இருக்கணும்

(திவ்யாவுக்கு இருக்குதுங்கோ...)

(நான் எதுவும் சொல்லலை)

KARTHIK said...

//அமெரிக்காவில் மாமியாரை பழிவாங்குவது எப்படி?//

இது செல்வம் சில மாதங்களுக்கு முன்பு எழுதியது.
அந்த சுட்டியைதான் இணைத்துள்ளேன்.

Divya said...

\\ தமிழன்... said...
கருத்து கருத்து...\\

அதே, அதே..

Divya said...

\\ தமிழன்... said...
//அவனா ஒரு பொண்ணு கிட்ட போய்' ஐ லவ் யூ" சொல்லிருப்பான்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க, அந்த பொண்ணு தான் என்ன மாயமோ செய்து மயக்கிட்டான்னு முடிவு பண்ணிடுவாங்க, அது அம்மாக்கள் சைக்காலஜி" //

மயங்கித்தானேப்பா சொல்லுறாங்க
[அப்படியில்லையோ:))))))]\\

காதலில், யாரும் யாரையும் மயக்க வேண்டிய அவசியமில்லை தமிழன்!

மயக்கம்/ஈர்ப்பு எல்லாம் தாண்டி உருவாகிறது தான் காதல்!!

Divya said...

\\ தமிழன்... said...
மனோதத்துவ முறையில மட்டும்ல்ல.. வாழ்வியலுக்கு அருமையான கருத்துக்களையும் அள்ளி வீசும் திவ்யாவுக்கு எல்லாரும் ஒரு “ஓஹோ” போடுங்க..:))

ஓஹோஹோ.......
\\

ஆஹாஹா.....நன்றி தமிழன்!!!

Divya said...

\\ தமிழன்... said...
//ஏன் விஜய் படங்களை ரொம்ப கொஞ்சமா போட்டு இருக்கீங்க! இன்னும் cute படங்களை எதிர்ப்பார்த்தேன்!!\\///

யாருப்பா அது நானே பாவனா படம் இல்லனு பாத்துக்கிட்டிருக்கேன்

(ஜெனிலியாவும் OK :)))))))))\\

இன்னும் நீங்க பாவனா ரசிப்பிலிருந்து மீளவில்லையா தமிழன்??

Divya said...

\\ தமிழன்... said...
//காதல், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு கொடுக்கிற குணம்....இப்படி கசப்பான வார்த்தைகளையும் நாம நேசிக்கிறவங்களுக்காக உள் வாங்கிக்கிறது எல்லாமே பார்ட் ஆஃப் லவ், நம்மளோட இயல்பு, முன் கோபம், பிடிவாதம் எல்லாம் காதலுக்காக தளர்த்திக்கிறதுல ஒரு சுகம் இருக்குடி"//

ம்ம்ம்ம் கருத்து மழை....

நிஜம்...
காதல் முதலில் நமக்கு கற்றுத்தருகிற விசயம் பொறுமை...

( இவையெல்லாம் காதல் தருகிற வலிமைகளில் சில)\\

கருத்துக்களுக்கு நன்றி தமிழன்!!!

Divya said...

\\ தமிழன்... said...
/////காதலில் எதிர்ப்பும் அவமதிப்பும் காதலிக்கு காதலனின் உறவுகளிடமிருந்து வரும் போது, அதனை அவள் எப்படி மேற்கொள்வாள் என சிந்தித்த போது , தோன்றிய கருத்துக்கள் இங்கே பதிவாக......../////

காதல் கவியரசி திவ்யா
எப்ப காதல் கருத்தரசி ஆனாங்க...:))))))))\\

சார் இப்படி பட்டமெல்லாம் கொடுத்து காமெடி பண்ணாதீங்க!!

Divya said...

\\ தமிழன்... said...
நல்ல பதிவு..

காதலிக்கிறவங்களுக்கு இருக்க வேண்டிய நிதானம் இது...
யாராவது ஒருத்தருக்காவது இந்த நிதானம் கட்டாயம் இருக்கணும்

(திவ்யாவுக்கு இருக்குதுங்கோ...)

(நான் எதுவும் சொல்லலை)\\

ஆஹா.....தமிழன், கொடுத்த காசுக்கு மேலே கூவுறீங்களே??

கருத்துக்களையும் பாராட்டையும் பின்னூட்டங்களிட்டு உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தமிழன்!!

Divya said...

\\ கார்த்திக் said...
//அமெரிக்காவில் மாமியாரை பழிவாங்குவது எப்படி?//

இது செல்வம் சில மாதங்களுக்கு முன்பு எழுதியது.
அந்த சுட்டியைதான் இணைத்துள்ளேன்.\\

ஓஹோ! அப்படியா, நிச்சயம் அப்பதிவை படிக்கிறேன் கார்த்திக்,
சுட்டி அளித்தமைக்கு நன்றி!!

கருப்பன் (A) Sundar said...

திவ்யா வாழ்த்துக்கள்... விக்ரமன் அஸிஸ்டன்டா வேலை கிடைச்சிருச்சு போல. எங்களுக்கெல்லாம் இந்த நல்ல செய்திய சொல்லுறதுக்கு தான இந்த பதிவு???

//
"see ஜனனி, ஒருத்தரை லவ் பண்றோம்னா.....அவரை மட்டும் நேசிக்கிறது ஆழமான காதல் இல்லை, அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பம், அதையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்"
//
வேணாம்... வேணாம்...

//
"அதுல என்னடி தப்பிருக்கு, அது தான் கரெக்ட்....2 வருஷம் பழகின எனக்காக, பத்து மாசம் சுமந்து, தன் உதிரத்தை பாலாக்கின அம்மாவை உதறி தள்ளுறதோ, கோபப்படுறதோ தான் தப்பு"
//
வலிக்குது...

//

"ஜனனி, காதல்னா நீ என்னான்னு நினைச்ச??.....சும்மா ஜாலியா பைக்ல ஊரு சுத்துறதும், கொஞ்சிக்கிறதும்னா??......அதை ஒரு மிருகமும் பண்ணும், ........அது மட்டும் இல்லடி காதல், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு கொடுக்கிற குணம்....இப்படி கசப்பான வார்த்தைகளையும் நாம நேசிக்கிறவங்களுக்காக உள் வாங்கிக்கிறது எல்லாமே பார்ட் ஆஃப் லவ், நம்மளோட இயல்பு, முன் கோபம், பிடிவாதம் எல்லாம் காதலுக்காக தளர்த்திக்கிறதுல ஒரு சுகம் இருக்குடி"
//
அழுதுருவேன்...

//
உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!
//
அவ்வ்வ்வ்....

கதறி அழும்,
கருப்பன்.

Divya said...

\ கருப்பன்/Karuppan said...

கருப்பன்.\

வாங்க கருப்பன்!

ரொம்ப ஃபீல் பண்ணி....கதறி அழுதுட்டீங்களா?? ஹா ஹா!

வருகைக்கும் தருகைக்கும் நன்றி கருப்பன்!!

Udhayakumar said...

//ஒருத்தரை லவ் பண்றோம்னா.....அவரை மட்டும் நேசிக்கிறது ஆழமான காதல் இல்லை, அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பம், அதையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்"//

திவ்யா, ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்க போல இருக்கு? ஏங்க குடும்பம்ன்னு சொல்லிருக்கீங்க, எங்களுக்கெல்லாம் ஒரு ஊரளவுக்கு ஆள் சேரும்.அப்போ அந்த பொண்ணோட நிலமை அதோகதிதானா?

Syam said...

//ஏனுங்க திவ்யா... நெசமாலுமே இவ்ளோ அறிவோட, சகிப்போட பொண்ணுங்க இருக்காவளா என்ன ... ?? ;))))))//

pathivai padichu mudikkum pothu enakku thonunatha namma jolls sollittaar.... :-)

Syam said...

ethu epdiyo maamiyaar psychology ah nalla purinju vechu irukeenga...unga varungaala maamiyaar ungalukku salaam namaste potutae irupaanga... :-)

Divya said...

\\ Udhayakumar said...
//ஒருத்தரை லவ் பண்றோம்னா.....அவரை மட்டும் நேசிக்கிறது ஆழமான காதல் இல்லை, அவரை நேசிக்கிறவங்க........அவரால் நேசிக்கப்படுகிற அவரோட குடும்பம், அதையும் நேசிக்க ஆரம்பிச்சா, காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா ஆகும்"//

திவ்யா, ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்க போல இருக்கு? ஏங்க குடும்பம்ன்னு சொல்லிருக்கீங்க, எங்களுக்கெல்லாம் ஒரு ஊரளவுக்கு ஆள் சேரும்.அப்போ அந்த பொண்ணோட நிலமை அதோகதிதானா?\\

வாங்க உதய்,

ஊரளவுக்கு ஆள் வந்தாலும் சமாளிக்கும் திறன் உள்ள பெண்களும் இருக்கத்தான் செய்றாங்க , அது அப்பெண்ணின் பொறுமை மற்றும் சமார்த்தியத்தை பொறுத்தது!!

ஒரு சமார்த்தியமான பாக்கியசாலி விரைவில் உங்களைக்கு கிடைப்பா.....உங்களையும் உன் 'ஊர்' ஆளுங்களையும் சமாளிக்க!!!

Divya said...

\\ Syam said...
//ஏனுங்க திவ்யா... நெசமாலுமே இவ்ளோ அறிவோட, சகிப்போட பொண்ணுங்க இருக்காவளா என்ன ... ?? ;))))))//

pathivai padichu mudikkum pothu enakku thonunatha namma jolls sollittaar.... :-)\\

:))))

Divya said...

\\ Syam said...
ethu epdiyo maamiyaar psychology ah nalla purinju vechu irukeenga...unga varungaala maamiyaar ungalukku salaam namaste potutae irupaanga... :-)\\

சண்டை போடாமா, சலாம் போட்டா சரிதான்....!!!

என் பதிவுகளெல்லாம் இப்போதுதான் புரட்டிப்பார்க்க நேரம் கிடைத்ததா நாட்டாமை, மகிழ்ச்சி!

MyFriend said...

ஐயோ.. படிச்சதும் எனக்கு இப்பவே காதலிக்கணும் போல இருக்கே.. ;-)

சூப்பர் கதை திவ்யா. :-)

MyFriend said...

97

MyFriend said...

98

MyFriend said...

99

MyFriend said...

century adichaacchu. :-)

Divya said...

\ .:: மை ஃபிரண்ட் ::. said...
ஐயோ.. படிச்சதும் எனக்கு இப்பவே காதலிக்கணும் போல இருக்கே.. ;-)

சூப்பர் கதை திவ்யா. :-)\\

ஹா ஹா!

இன்னுமா நீங்க காதலிக்க ஆரம்பிக்கல???
நம்பமுடியவில்லையேயேயேயே.....

பாராட்டிற்கு நன்றி மைஃப்ரண்ட்:))

மீண்டும் வருக!!

Divya said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
century adichaacchu. :-)\\

century ku oru spl thanks Anu!!!