April 15, 2008

எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ??? - பகுதி 2



பகுதி-1

நான் சற்றும் எதிர்பார்கவே இல்லை....மீரா என் காலடியில் மயங்கி....சுருண்டு விழுந்து , மூர்ச்சையற்று போனாள்.

"மீ....ரா.........மீரா......."

அவளை எழுப்ப முயன்று தோற்றேன்!!

ரூமிற்கு வெளியில் ஓடி சென்று என் அம்மா , அக்காவை மட்டும் அழைத்து வந்தேன், மூர்ச்சையான மீரா கண்விழிக்காததால், அருகில் இருந்த நர்ஸிங் ஹோமிற்கு என் காரில் அழைத்துச் சென்றோம், நான் டென்ஷனுடன் பட்டு வேஷ்டியில் பரபரத்ததால் என் அக்காவின் கணவர் கார் ஓட்டினார்.

ஆஸ்பத்திரியில் அவளை பரிசோதித்த டாக்டர் என்னை மட்டும் உள்ளே அழைத்தார்.

"மீரா உங்க வொஃப் ஆ"

"யெஸ் டாக்டர்"

"புதுசா கல்யாணம் ஆனவங்களா நீங்க?"

"யெஸ் டாக்டர், வி காட் மேரிட் டூ டேய்ஸ் பேக்"

"உங்க பட்டு வேஷ்டி&மீராவின் மணப்பெண் கெட் அப் பார்த்துதான் , புதுசா கல்யாணம் ஆனவங்களான்னு கேட்டேன்,.....Mr.Vishwanath, is your marriage a love marriage or an arranged one"

"வீட்டுல பார்த்து முடிச்சதுதான் டாக்டர்"

"ஹும்"

"ஏன் டாக்டர்"

"திருமணத்திற்கு முன்னமே உங்களுக்குள்ள நெருக்கமான பழக்கம் உண்டா?"

"நீங்க........என்ன சொல்ல வரீங்கன்னு புரியல டாக்டர்"

"I mean , were you both so intimate before marriage?"

"no Doctor"

"ஹும்"

"என்ன...........என்ன ஆச்சு டாக்டர் மீராவுக்கு"

"Mr Vishwanath, your wife Meera is pregnant!"

"டா.....க்.........ட........ர்"

தலையில் இடி இறங்கினா இப்படிதான் இருக்குமா??

என்னை சுற்றி இருந்த அனைத்தும் வேகமாக சுற்றுவதுபோல் ஓர் உணர்வு!!

என் முக இறுக்கத்தை கவனித்த டாக்டர் மேலும் பேசினார்.

"I can see that you are very much schocked, at present Meera needs complete rest for 2 more days, ரொம்ப வீக்கா இருக்காங்க.... ஸோ.....இந்த விஷயத்தை உங்களுக்குள்ள வைச்சுக்குங்க, அப்புறமா ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட சொல்லி மேற்கொண்டு ப்ரோசீட் பண்ணுங்க.....take this as a friendly advise Mr.Vishwanath"


டாக்டர் சொன்னது பாதி புரிந்தது, மீதி ஒன்றும் புரியாத மாதிரி ஒரு வெறுமை!!

மெதுவாக டாக்டரின் அறையைவிட்டு வெளியில் வந்தேன். என் முகத்தினை ஆவலுடன் பார்க்கும் என் குடும்பம்....முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உள்வாங்கிக் கொள்ள செய்தது!!

"என்னடா சொன்னாங்க டாக்டர், மீராவுக்கு ஒன்னுமில்லையே???" - என் அக்கா.

"என் மருமகளுக்கு ஒன்னும் இருக்காது, எல்லாம் ஊரு கண்ணுதான், பொறாமை புடிச்ச ஜனம்....கல்யாணதுக்கு வந்த ஒவ்வொருத்தியும் என் மருமகளோட அழகை பார்த்து பார்த்து மூக்கு மேல கை வைச்சாளுங்க, முதல்ல மீராவுக்கு சுத்தி போடனும்" - என் அம்மா.

தொடர்ந்து என் அம்மா மீராவுக்கு உடம்பு சரியானதும் நிறைவேற்றும் வேண்டுதல் எல்லாம் சாமிக்கு பொருத்தனை பண்ண ஆரம்பித்தார்.

"சென்னைக்கு ஊருக்கும் அலைச்சல்......பொண்ணு டயர்டா ஆகிட்டா போலிருக்கு, you dont worry மாப்பிள்ளை" என் அக்காவின் கணவர் ஆறுதலாக என் தோள் பிடித்தார்.

களைப்பினால் ஏற்பட்ட மயக்கமெனவே குடும்பம் நம்பியது.

திருமணத்திற்கு பின் 1 வாரம் ஆஃபீசிற்கு லீவ் போட்டிருந்தேன், லீவ் கேன்ஸல் செய்துவிட்டு மறுநாளே ஆஃபீஸிற்கு சென்றேன்.

என் மனநிலை தெரியாமல் , புது மாப்பிள்ளை என்ற எண்ணத்தில் சக நண்பர்கள் செய்யும் கிண்டல், உசுப்பேத்தும் பேச்சுக்கள்.....எல்லாம் இன்னும் என்னை ரணப்படுத்தியது.

உடல் சரியில்லாத மீராவிற்கு வீட்டில் ராஜ உபசரனை நடந்துக்கொண்டிருந்தது.
என் அம்மாவின் ரூமிலேயே கீழே மீரா இருந்தாள்.
என் குடும்பமே அவளை இப்படி ராஜாத்தி மாதிரி கவனித்துகொள்வது என் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி, உணமையை உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது.

இரண்டு நாள் கழித்து என் அறைக்கு மீரா வந்தாள்.
அவள் முகத்தைகூட பார்க்க விருப்பமில்லாமல் வேறு பக்கம் பார்த்தேன்.

விசும்பலுடன் பேச ஆரம்பித்தாள்..

"என்னை மன்னிச்சிடுங்க....நானும் என் கூட MBA படிச்ச ஸ்ரீதரும் நல்ல ஃப்ரண்ட்ஸ், காலேஜ் விட்டு பிரியறப்போதான் எங்க நட்பு காதல்னு உணர்ந்தோம், எங்க காதல் மத்த ஃப்ரண்ட்ஸ்க்கு கூட தெரியாது. எங்க....ஃபேர்வல் டே செலிப்ரேஷன் அப்போ....எமோஷனல் departure, ....எங்க நெருக்கத்தை அதிகப்படுத்தியது........அவரோட வீடல் பேசி கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு கோயம்புத்தூர் போனாரு, போன பிறகு ஃபோன்ல பேசினார்...1 வாரம் கழித்து அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை, நான் கர்ப்பமா இருக்கிற விஷயத்தை அவருகிட்ட சொல்ல ஃபோன் பண்ணினா, not reachable ன்னு வருது,எனக்கும் அவருக்கும் பொதுவான ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி அவரைபத்தி விசாரிச்சப்போ அவரை பத்தி எந்த தகவலும் கிடைக்கல, ஒருத்தர் மட்டும் கோயம்பத்தூருக்கு போயாவது விசாரிச்சுப்பார்த்து சொல்றேன்னு சொன்னார், அந்த நேரத்துல தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எங்க வீட்ல வற்புறித்தினாங்க, அவரை பத்தின தகவல் தெரிஞ்சதும் வீட்ல சொல்லிடலாம்னு இருந்தேன், நீங்க பெண்பார்க்க வந்த அன்னிக்கே கல்யாணம் நிச்சயம் ஆகும்னு நான் எதிர்பார்க்கல, கிராமதுக்கு போய்ட்டதால எனக்கு தகவல் சொல்றேன்னு சொன்ன ஃப்ரண்டையும் சந்திக்க முடியல, உங்ககிட்டவும் நேர்ல விவரம் சொல்ல முடியல, என்னை அளிச்சிக்க இருமுறை முயற்சி பண்ணியும் சாவும் என்னை விரும்பல.....மன்னிச்சிடுங்கன்னு கூட கேட்க திராணி இல்லாம நிற்கிறேன்.."

அழுகையுடன் அவள் வார்த்தைகள் தெரித்து விழுந்தன.

அவள் நிலமை எனக்குப்புரிந்தாலும், அந்த மிரண்ட விழிகளில் என்ன செய்வது என்று அறியா குழப்பத்தை நான் உணர்ந்தாலும், எனக்குள் ஏற்பட்டிருக்கும் ஏமாற்றம், அதிர்ச்சி, அருவருப்பு....

எரிமலையாக எனக்குள் வெடித்து , நெருப்பு கணல்களாக வார்த்தை வெளிவந்தன....

"நீ எல்லாம் படிச்ச பொண்ணுதானே...யாரு, எவன்னு கூட தெரியாம இப்படி லவ்ன்ற பேருல பழகுவியா, என்ன பெருசா MBA படிச்சு கிழிச்ச, .....ஃபோன் நம்பர் தவிர எந்த டிடேய்ல்ஸ் தெரியாம , எந்த நம்பிக்கையில இப்படி அத்து மீறுறீங்க, பண்றதெல்லாம் பண்ண தெரியுது இல்ல.....அப்புறம் இப்படி அழுதா என்ன அர்த்தம். தான் கெட்டுப்போறதுமில்லாம இப்படி தாலி கட்டிகிட்டு எங்களையும் சேர்த்து கழுத்தருங்க......நேர்ல தான் மீட் பண்ண முடியல, என்கிட்ட ஃபோன்ல சொல்லியிருக்கலாம் இல்ல, இப்ப சப்பக்கட்டு கட்டி பேசிட்டா எல்லாம் சரி ஆகிடுமா????.......என் தலையில இடி இரக்கிட்டு இப்போ மடி பிச்சை கேட்குறியா"


என் வார்த்தைகளின் அணலின் அவமானத்துடன் தலை கவிழ்ந்து அழுதாள் மீரா.

அழுது சிவந்த அந்த முகத்தில் ஏதோ ஒரு மினுமினுப்பு இன்னும் ஜொலித்தது...
கல்யாணக் களை கொடுத்த மெருகு என நான் இரண்டு நாட்களுக்கு முன் நம்பியது...
தாய்மை அவளுக்கு கொடுத்த தேஜஸ் என இப்போது புரிந்தது!!

என் கோபமும் குழம்பிய மனமும் அமரட்டும் என அவள் துடித்து அழுதுகொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், வேகமாக அறையின் கதவை ' படார்' என சாத்திவிட்டு வெளியேறினேன்!!

எங்கு செல்கிறேன் என்ற உணர்வே இல்லாமல், பைக்கில் பறந்துக்கொண்டிருந்தேன், ரகுவின் அறைக்கு செல்லலாமா....அவனிடம் உண்மையை கூறி, மனசு விட்டு பேசினால் , கொஞ்சம் தெம்பாக இருக்கும், ஏதும் உருப்படியான ஐடியா கொடுப்பான் என அவனுக்கு ஃபோன் செய்திவிட்டு அவன் அறைக்குச் சென்றேன். நல்ல வேளை அவன் அறையில் அவன் தனியாக இருந்தான். நடந்த எல்லா விஷயங்களையும் விரிவாக கூறினேன்.
சிறிது மெளனத்திற்கு பின் என்னிடம் தன் யோசனைகளை கூறினான் ரகு. எனக்கும் அவன் கூறியது சரியெனப்படவே என் வீட்டிற்கு திரும்பினேன்.

மீரா என் ரூமிலிருந்து கீழே வரவேயில்லை என நான் வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மா சொன்னார்கள்.

இன்னும் அழுதுக்கிட்டு இருக்கிறாப்போலிருக்கு மீரா...என நினைத்துக்கொண்டேன்.

என் அறையின் கதவை திறந்தேன், லைட் போடாமல் இருட்டாக இருந்தது ரூம்....

லைட் switch On பண்ணினேன், .....மீரா எங்கும் தென்படவில்லை...
எங்கே போயிருப்பா மீரா...

பாத்ரூம் கதவு கூட திறந்துதான் இருக்கிறது...அங்கயும் இல்ல......அப்போ மீரா......

மீரா......எங்கே??????


[தொடரும்]

பகுதி -3

பகுதி - 4

146 comments:

நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா...
என்ன இது இப்படி ஒரு திருப்பம்...??? எதிர்பார்க்கவே இல்லை.... எதிர்பார்ப்பை அதிகம் தூண்டுகிறது... :)))

நவீன் ப்ரகாஷ் said...

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு மணமகனின் மணநிலையை அழகான சொல்லி இருக்கிறீர்கள்...திவ்யா...வித்தியாசமாக செல்கிறது..

நவீன் ப்ரகாஷ் said...

காதலர்கள் எல்லாரும் காதல் செய்வார்களா..?? :))
தி.ஜானகிராமன் கதை கருவை ஒத்திருக்கிறது.. நல்ல முயற்சி... மேலும் தொடருங்கள்... சீக்கிரம்...

புகழன் said...

.//மீரா......what is this...I am sorry......"

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.........மீரா இப்படி.....டக்கென்று.....


நான் சற்றும் எதிர்பார்கவே இல்லை....மீரா என் காலடியில் மயங்கி....சுருண்டு விழுந்து , மூர்ச்சையற்று போனாள்.

//

தன் பழைய காதலைத்தான் சொல்ல வருகிறாளோ மீரா என்றுதான் நினைத்தேன்.
ஆனால் கர்ப்பம் வரை மேட்டர் போய் விட்டது என்ற உங்கள் கதை சொல்லும் உத்தி ரெம்பவே சூப்பர்.
வாசகர்கள் எதிர்ப்பார்ப்பதை விட சற்றே வித்தியாசமாகக் கொடுப்பதில்தான் எழுத்தாளர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.
ரெம்பவே சஸ்பென்ஸ் வச்சி எழுதுறீங்க.
வாழ்த்துக்கள்.
விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்த்து

புகழன்

நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா மெருகேறிக்கொண்டே இருக்கிறீர்கள்... :))))
ஒவ்வொரு கதையிலும்...
வாழ்த்துகள்!!!

சத்யா said...

akkov, Suspense thriller rangeku irukku! super! nice! awesome!

சத்யா said...

ponnu pakkama irundhu sollama, paiyan pakkama irundhu neenga eludharadhu innum swarasyama irku

புகழன் said...

//விசும்பலுடன் பேச ஆரம்பித்தாள்..//

விஷ்வாவிடம் மீரா, தன் காதலன் தன்னை ஏமாற்றியதைக் கூறும் பகுதி அந்த அளவு வெயிட்டாக இல்லை. ரெம்பவே கேஷ்வலாகவும் கூலாகவும் பேசுவதுபோல் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் பில்ட்அப் கொடுத்திக்கலாம்.

தமிழன்-கறுப்பி... said...

என்ன இபபடி ஆகிடுச்சு...

புகழன் said...

“எனக்கென ஏற்கெனவே.... பிறந்தவள் இவளோ??? - பகதி 2”
வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் திவ்யா...

(குறைந்தது 175 பின்னூட்டங்களாவது வரவேண்டும்)

தமிழன்-கறுப்பி... said...

இது கொஞ்சம் பெரிய தொடரா இருக்கும்போல...

தமிழன்-கறுப்பி... said...

///லைட் switch On பண்ணினேன், .....மீரா எங்கும் தென்படவில்லை...
எங்கே போயிருப்பா மீரா...

பாத்ரூம் கதவு கூட திறந்துதான் இருக்கிறது...அங்கயும் இல்ல......அப்போ மீரா......

மீரா......எங்கே??????///

ஆஹா.. அடுத்த சஸ்பென்சு...

தமிழன்-கறுப்பி... said...

எழுத்து நடை கொஞ்சம் மாறியிருக்கு...

புகழன் said...

கதையைப் போலவே அழகாக இருக்கின்றது அதற்கென நீங்கள் தேர்ந்தெடுத்திக்கும் திரைப்படப் புகைப்படங்கள்.
அதுபோல் உங்கள் கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்களும் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கு் புகைப்படங்களில் உள்ள பாத்திரங்களின் பெயர்களுக்கு ரெம்பவே பொருந்திப் போகின்றது.

தமிழன்-கறுப்பி... said...

இது எங்க போய் முடியும்...

தமிழன்-கறுப்பி... said...

வர வர நலலா எழுதறிங்க... நிறைய யோசிப்பிங்களோ எனக்கெல்லாம் வரமாட்டேங்குது... எப்பிடிங்க வசனம் எல்லாம் புடிக்கிறிங்க..

தமிழன்-கறுப்பி... said...

//விசும்பலுடன் பேச ஆரம்பித்தாள்..//

விஷ்வாவிடம் மீரா, தன் காதலன் தன்னை ஏமாற்றியதைக் கூறும் பகுதி அந்த அளவு வெயிட்டாக இல்லை. ரெம்பவே கேஷ்வலாகவும் கூலாகவும் பேசுவதுபோல் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் பில்ட்அப் கொடுத்திக்கலாம்///

பில்டப் வச்சாதான் நல்லாருக்குமோ இது மணிரத்னம் ஸ்டைலுங்கோ....கலைஞர் ரிவி சீரியல் கிடையாது:)))

புகழன் said...

"எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ???"
இதுதான் நீங்கள் எழுதிய கதைகளில் நான் முதலில் படித்தது.
இந்தத் தொடரைப் படித்தவுடன் உங்கள் தளத்திலுள்ள எல்லாக் கதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது.
கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
முடித்ததும் மொத்தமாக ஒரு பின்னூட்டம். சரியா?

Praveena said...

Second part rocks with an unexpected twist:)

Nice narration Divya!

Keep going....awaiting for the next part:)))

ஜி said...

:((((

ஏன் இப்படி??? யாரு பாவம்னே சொல்ல முடியலையே :(((

--------------

அடுத்த பகுதி அடுத்த வாரம்தானா???

Ramya Ramani said...

திவ்யா இது முதல் முறை உங்கள் கதைக்கு பின்னூட்டம் போடுவது!Was a silent Reader.உங்களுடைய்ய கதை சொல்லும் பாணி நல்லா இருக்கு! Nalla twist

சத்யா said...

ஆபிஸ்ல தமிழ்ல கமெண்ட்ட முடியல! அதான்ங்க குருவே!

சத்யா said...

"மீ....ரா.........மீரா......."

மீ = Me
ரா = வா!

புரியலயே!!!

சத்யா said...

இவ்ளோ சஸ்பென்ஸ் இருக்கும்னு நீங்க ஆரம்பிக்கும் போது நினைக்கவே இல்லை!

சத்யா said...

அழுது சிவந்த அந்த முகத்தில் ஏதோ ஒரு மினுமினுப்பு இன்னும் ஜொலித்தது...
கல்யாண கலை கொடுத்த மெருகு என நான் இரண்டு நாட்களுக்கு முன் நம்பியது...
தாய்மை அவளுக்கு கொடுத்த தேஜஸ் என இப்போது புரிந்தது!!

-- இதுல கூட அந்த தாய்மை டச் வைச்சீங்க பாருங்க! நல்லா இருக்கு! பாவ படுவதா கோவ படுவதானு யோசிக்க வைக்கும் நல்ல கதாபாத்திரங்கள்... சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க திவ்யா.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

மருத்துவருடனான உரையாடல் அருமை! ம்ம்... அப்புறம் என்ன ஆச்சு! மீரா எங்க??

FunScribbler said...

கதை திருப்பம் அருமை! டாக்டரின் வசனங்கள் ரொம்ப நல்லா இருந்துச்சு...

அடுத்த பகுதியை எதிர்பார்த்து..

தமிழ் said...

அழகான வரிகள்
ஆவலை
அதிகரிக்கிறது.

:)))))))))))

Nimal said...

திவ்யா,

எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் தொடங்கி சிறப்பாக வந்திருக்கிறது இந்த பகுதி.

உரையாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. எழுத்து நடையும் சிறப்பாக இருக்கிறது, எப்போதும் போலவே :)

இரண்டு கதாபாத்திரங்களும் அடுத்து என்ன செய்யப்போகின்றன என யோசிக்கும் போது போட்டிருக்கிறீங்க...
//மீரா......எங்கே??????//

அருமை, வாழ்த்துக்கள்...!!!

CVR said...

ஆகா.....
:-D

Bee'morgan said...

ஆகா. திவ்யா. திருப்பத்துக்கு மேல திருப்பமா..? ரொம்ப அழகா நகருது கதை..
அங்கங்கே சில எழுத்துப்பிழைகளை திருத்திட்டா இன்னும் நல்லா இருக்கும்.. //கல்யாண கலை - கல்யாணக் களை //
அப்புறம், இன்னுமொரு suggestion. இரண்டாம் பகுதியில் பகுதி-1 க்கு link கொடுத்த மாதிரி, பகுதி-1 லும் அடுத்தடுத்த பகுதிகளுக்கு link கொடுக்கலாமே.. எல்லா பகுதிகளையும் ஒரே நேரத்தில் படிக்கறவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.

Sen22 said...

இரண்டாம பாகமும் அருமை....
கதையைப் போலவே அழகாக இருக்கின்றது அதற்கென நீங்கள் தேர்ந்தெடுத்திக்கும் திரைப்படப் புகைப்படங்கள்...

வாழ்த்துகள் திவ்யா....


Senthil Kumar,
Bangalore

எழில்பாரதி said...

கதை ரொம்ப அருமையா இயல்பா இருக்கு திவ்யா அடுத்த பகுதியை சீக்கரம் பதியுங்கள்....

ஸ்ரீ said...

அருமை அழகு வேறு வார்த்தைகள் இப்போது கைவசம் இல்லை. வெகு இயல்பான நடைக்கு வாழ்த்துக்கள். திருப்பம் எதிர்பார்த்தது தான் ஆனால் கர்பம் எதிர்பாராத்து தான். ம்ம்ம் ஒரு வித்தியாசமான கோணத்தில் கதை நகர்வதும் பிடித்திருக்கிறது.

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

கருப்பன் (A) Sundar said...

சூப்பரோ... சூப்பர்...

நல்ல கதையாக்கம்... நல்ல முன்னேற்றம். கலக்குறீங்க திவ்யா.

படித்து முடித்ததும் மனதில் ஒரு மெல்லிய பாரம்.

புகழன் said...

//Sen22 said...
இரண்டாம பாகமும் அருமை....
கதையைப் போலவே அழகாக இருக்கின்றது அதற்கென நீங்கள் தேர்ந்தெடுத்திக்கும் திரைப்படப் புகைப்படங்கள்...

வாழ்த்துகள் திவ்யா....


Senthil Kumar,
Bangalore
//

என்ன செந்தில் Copy & Paste பண்ணும்போது சரியாகப் பார்ப்பதில்லையோ?
நான் செய்திருக்கும் அதே பிழையை நீங்களும்...

//அதற்கென நீங்கள் தேர்ந்தெடுத்திக்கும் திரைப்படப் புகைப்படங்கள்...//

இது தான் ஈ அடிச்சான் காப்பி என்பதா?

Prabakar said...

miga arumai .. ipadi kuda uingalal kadhai eludha mudiuma .. arumai

savalana kadhai .. kadhain nadai matrum pokku arumai

valththukaL

கோபிநாத் said...

ஆகா...போன பகுதியின் வேகம் இந்த பகுதியிலும் அப்பபடியே இருக்கு திவ்யா!!

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))

அப்புறம் படங்கள் எல்லாம் கவனமாக செலக்ட் பண்ணியிருக்கிங்க ;))

சூப்பர் ;)

My days(Gops) said...

ஆஹா ஆஹா இன்னொரு "தொடருமா"....

சின்ன வயசுல ரிலே ரேஸ் ரெம்ப ஓடி இருப்பீங்க போல... ஹி ஹிஹி

My days(Gops) said...

//வீட்டுல பார்த்து முடிச்சதுதான் டாக்டர்//

ஒரேடியா முடிச்சிட்டாங்க டாக்டர் ஒரேடியா முடிச்சிட்டாங்கே.... :P

My days(Gops) said...

// முதல்ல மீராவுக்கு சுத்தி போடனும்" //

பார்த்து மெதுவா போடுங்க.. இல்லாட்டி மண்டை உடைந்துட போகுது :)

My days(Gops) said...

//, காலேஜ் விட்டு பிரியறப்போதான் எங்க நட்பு காதல்னு உணர்ந்தோம், //

செல்லாது செல்லாது...


//ஃபேர்வல் டே செலிப்ரேஷன் அப்போ....எமோஷனல் departure, ....எங்க நெருக்கத்தை அதிகப்படுத்தியது//

ஒரே நாளுல காதல் சொல்லிட்டு அப்புறம் etc etc....

லாஜிக் இடிக்கிதே..

My days(Gops) said...

//ஃபோன் நம்பர் தவிர எந்த டிடேய்ல்ஸ் தெரியாம , எந்த நம்பிக்கையில இப்படி அத்து மீறுறீங்க, பண்றதெல்லாம் பண்ண தெரியுது இல்ல.....அப்புறம் இப்படி அழுதா என்ன அர்த்தம்.//


கேட்டா காதலுக்கு கண்ணு இல்லை, தலைமுடி இல்லை அதுல பூ வைக்கவும் இல்லை'னு டகால்டியா டயலாக் மட்டும் பேச தெரியும்.....

ஹி ஹி

My days(Gops) said...

//நேர்ல தான் மீட் பண்ண முடியல, என்கிட்ட ஃபோன்ல சொல்லியிருக்கலாம் இல்ல,//

ஹி ஹி ஹி ஹலோ சார், அந்த அளவுக்கு யோசிச்சி இருந்தா இந்நேரம் மீரா ஸ்ரீதரை இல்ல கல்யாணம் கட்டி இருப்பாங்க...

// இப்ப சப்பக்கட்டு கட்டி பேசிட்டா எல்லாம் சரி ஆகிடுமா????....//

rotfl... இந்த வார்த்தைல எவ்வளவு கோவம் இருந்து இருக்கும்'னு நீங்க சொன்ன விதத்துல உணர முடிந்தது.. ஹி ஹிஹி

My days(Gops) said...

//மீரா......எங்கே??????//
மீரா எங்கப்பா ...

google search la எங்கப்பா....

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா...
என்ன இது இப்படி ஒரு திருப்பம்...??? எதிர்பார்க்கவே இல்லை.... எதிர்பார்ப்பை அதிகம் தூண்டுகிறது... :)))\\

வாங்க நவீன் ப்ரகாஷ்,

உங்கள் எதிர்பார்ப்பை அதிகபடுத்தியதா இந்த பகுதி,.....கதை எதிர்பாரா வண்ணம் இருப்பதாக கருத்து வெளிப்படுத்தியதற்கு நன்றி!!

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு மணமகனின் மணநிலையை அழகான சொல்லி இருக்கிறீர்கள்...திவ்யா...வித்தியாசமாக செல்கிறது..\\\


மணமகனின் இடத்தில் இருந்து கதையினை நகர்த்துவதால்....அவரது மணநிலையை வெளிப்படுத்துவது எளிதாக சாத்தியமானது!

சத்யா said...

50 varapogutha inga!

சத்யா said...

guruve namaskaram!

சத்யா said...

google search la எங்கப்பா.... --
gops annachi! ingayuma!!!

Divya said...

\\நவீன் ப்ரகாஷ் said...
காதலர்கள் எல்லாரும் காதல் செய்வார்களா..?? :))
தி.ஜானகிராமன் கதை கருவை ஒத்திருக்கிறது.. நல்ல முயற்சி... மேலும் தொடருங்கள்... சீக்கிரம்...\\

காதலர்கள் .....காதல் தானே செய்வார்கள்??
நீங்க என்ன சொல்ல வரீங்க நவீன் ப்ரகாஷ்??

Divya said...

\\ மனதோடு மனதாய் said...
.//மீரா......what is this...I am sorry......"

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.........மீரா இப்படி.....டக்கென்று.....


நான் சற்றும் எதிர்பார்கவே இல்லை....மீரா என் காலடியில் மயங்கி....சுருண்டு விழுந்து , மூர்ச்சையற்று போனாள்.

//

தன் பழைய காதலைத்தான் சொல்ல வருகிறாளோ மீரா என்றுதான் நினைத்தேன்.
ஆனால் கர்ப்பம் வரை மேட்டர் போய் விட்டது என்ற உங்கள் கதை சொல்லும் உத்தி ரெம்பவே சூப்பர்.
வாசகர்கள் எதிர்ப்பார்ப்பதை விட சற்றே வித்தியாசமாகக் கொடுப்பதில்தான் எழுத்தாளர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.
ரெம்பவே சஸ்பென்ஸ் வச்சி எழுதுறீங்க.
வாழ்த்துக்கள்.
விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்த்து

புகழன்\\

வாங்க புகழன்,

உங்கள் விரிவான விமர்சனமும்,வாழ்த்துக்களும் பெரிதும் உற்சாகப்படுத்தியது, மிக்க நன்றி புகழன்!!!

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா மெருகேறிக்கொண்டே இருக்கிறீர்கள்... :))))
ஒவ்வொரு கதையிலும்...
வாழ்த்துகள்!!!\\

எழுத்து மெருகேறுகிறதா???...எல்லாம் உங்களை போன்ற நண்பர்கள் தரும் உற்சாகமும் ஊக்கமும்தான் காரணம்!!

வாழ்த்துக்களுக்கு நன்றி நவீன் ப்ரகாஷ்!!

Divya said...

\\ சத்யா said...
akkov, Suspense thriller rangeku irukku! super! nice! awesome!\\

நன்றி சத்யா!!

Divya said...

\\ சத்யா said...
ponnu pakkama irundhu sollama, paiyan pakkama irundhu neenga eludharadhu innum swarasyama irku\\

கருத்திற்கு நன்றி சத்யா!!

Divya said...

\\ மனதோடு மனதாய் said...
//விசும்பலுடன் பேச ஆரம்பித்தாள்..//

விஷ்வாவிடம் மீரா, தன் காதலன் தன்னை ஏமாற்றியதைக் கூறும் பகுதி அந்த அளவு வெயிட்டாக இல்லை. ரெம்பவே கேஷ்வலாகவும் கூலாகவும் பேசுவதுபோல் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் பில்ட்அப் கொடுத்திக்கலாம்.\\

மீராவின் தன்னிலை விளக்கதை.....மிகைப்படுத்துதலோடு சொல்லவேண்டாம் என கருதினேன் , புகழன்!!

Divya said...

\\ தமிழன்... said...
என்ன இபபடி ஆகிடுச்சு...\\

வாங்க தமிழன்....

என்ன பண்றதுங்க, இப்படி ஆகிடுச்சு மீராவின் நிலமை!!

Divya said...

\\ மனதோடு மனதாய் said...
“எனக்கென ஏற்கெனவே.... பிறந்தவள் இவளோ??? - பகதி 2”
வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் திவ்யா...

(குறைந்தது 175 பின்னூட்டங்களாவது வரவேண்டும்)\\

உங்கள் வாழ்த்துக்களுக்கு , என் மனமார்ந்த நன்றிகள் புகழன்!!!

Divya said...

\\ தமிழன்... said...
இது கொஞ்சம் பெரிய தொடரா இருக்கும்போல...\\

அப்படியா தோன்றுகிறது தமிழன்???

Divya said...

\\ தமிழன்... said...
///லைட் switch On பண்ணினேன், .....மீரா எங்கும் தென்படவில்லை...
எங்கே போயிருப்பா மீரா...

பாத்ரூம் கதவு கூட திறந்துதான் இருக்கிறது...அங்கயும் இல்ல......அப்போ மீரா......

மீரா......எங்கே??????///

ஆஹா.. அடுத்த சஸ்பென்சு...\\

அதே..அதே!!!

Divya said...

\\ தமிழன்... said...
எழுத்து நடை கொஞ்சம் மாறியிருக்கு...\\

அப்படியா தமிழன்....எழுத்து நடை மாறியிருக்கா???

மாற்றம் நல்லாவிதமான மாற்றம்னு சொல்றீங்களா?? இல்லை.....???

Divya said...

\\ மனதோடு மனதாய் said...
கதையைப் போலவே அழகாக இருக்கின்றது அதற்கென நீங்கள் தேர்ந்தெடுத்திக்கும் திரைப்படப் புகைப்படங்கள்.
அதுபோல் உங்கள் கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்களும் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கு் புகைப்படங்களில் உள்ள பாத்திரங்களின் பெயர்களுக்கு ரெம்பவே பொருந்திப் போகின்றது.\\

கதாப்பாத்திரங்களின் பெயர்கள் பொருந்துகிறதா??
நீங்க தான் முதன் முறையாக இப்படி ஒரு விமர்சனம் சொல்லியிருக்கிறீங்க.....மிக்க மகிழ்ச்சி புகழன்!!

Divya said...

\\ தமிழன்... said...
இது எங்க போய் முடியும்...\\

எங்கே போய் முடிவும்னு பொறுத்திருந்து பாருங்க தமிழன்!!

Divya said...

\\ தமிழன்... said...
வர வர நலலா எழுதறிங்க... நிறைய யோசிப்பிங்களோ எனக்கெல்லாம் வரமாட்டேங்குது... எப்பிடிங்க வசனம் எல்லாம் புடிக்கிறிங்க..\\


வசனம் எல்லாம் பிடிக்கிறதில்லீங்க தமிழன்....கதையின் ஓட்டத்தோடு அப்படியே தானா தோன்றதுதான்!!

Divya said...

\\ தமிழன்... said...
//விசும்பலுடன் பேச ஆரம்பித்தாள்..//

விஷ்வாவிடம் மீரா, தன் காதலன் தன்னை ஏமாற்றியதைக் கூறும் பகுதி அந்த அளவு வெயிட்டாக இல்லை. ரெம்பவே கேஷ்வலாகவும் கூலாகவும் பேசுவதுபோல் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் பில்ட்அப் கொடுத்திக்கலாம்///

பில்டப் வச்சாதான் நல்லாருக்குமோ இது மணிரத்னம் ஸ்டைலுங்கோ....கலைஞர் ரிவி சீரியல் கிடையாது:)))\\

ஆஹா....மணிரத்னம் ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்களே......ரொம்ப நன்றி தமிழன்!!

Divya said...

\\ மனதோடு மனதாய் said...
"எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ???"
இதுதான் நீங்கள் எழுதிய கதைகளில் நான் முதலில் படித்தது.
இந்தத் தொடரைப் படித்தவுடன் உங்கள் தளத்திலுள்ள எல்லாக் கதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது.
கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
முடித்ததும் மொத்தமாக ஒரு பின்னூட்டம். சரியா?\\

என் முந்தைய பதிவுகளையும் படிக்க நீங்கள் கொண்டிருக்கும் ஆவலுக்கு மிக்க நன்றி புகழன்!!

பொறுமையாக , நேரம் கிடைக்கையில் பதிவுகளை படித்துவிட்டு , உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்க!!

மதுரைவீரன் said...

அழகான கதை...எப்போது வரும் முன்றாம் பாகம்.........

Divya said...

\\ Praveena Jennifer Jacob said...
Second part rocks with an unexpected twist:)

Nice narration Divya!

Keep going....awaiting for the next part:)))\\

வாங்க ப்ரவீனா,

தொடர்ந்து கதையினை படித்து கருத்துக்களை பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி!!!

Divya said...

\\ ஜி said...
:((((

ஏன் இப்படி??? யாரு பாவம்னே சொல்ல முடியலையே :(((

--------------

அடுத்த பகுதி அடுத்த வாரம்தானா???\\

வாங்க ஜி !

வருகைக்கு நன்றி!

அடுத்த பகுதி விரைவில்....

Divya said...

\\ Ramya Ramani said...
திவ்யா இது முதல் முறை உங்கள் கதைக்கு பின்னூட்டம் போடுவது!Was a silent Reader.உங்களுடைய்ய கதை சொல்லும் பாணி நல்லா இருக்கு! Nalla twist\\

வாங்க ரம்யா,

முதல் முறையாக பின்னூட்டமிட்டிருக்கிறீங்க, மிக்க மகிழ்ச்சி!!

சைலண்ட் ரீடராக இருந்து இவ்வளவு நாள் பதிவெல்லாம் படிச்சிட்டு இருந்தீங்களா??
ரொம்ப தாங்க்ஸ் ரம்யா!

[இனிமே மறக்காம அட்டெண்டன்ஸ் போட்டுறுங்க பின்னூட்டத்தில்.....just kidding Ramya, thanks for your visit & comment!!!]

Divya said...

\\ சத்யா said...
ஆபிஸ்ல தமிழ்ல கமெண்ட்ட முடியல! அதான்ங்க குருவே!\\

தமிழ் பின்னூட்டம் தான் போடனும்னு ஏதும் கட்டாயம் இல்லீங்க சத்யா!!

Divya said...

\\ சத்யா said...
"மீ....ரா.........மீரா......."

மீ = Me
ரா = வா!

புரியலயே!!!
\\

சத்யா...நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலீங்க!!

Divya said...

\\ சத்யா said...
இவ்ளோ சஸ்பென்ஸ் இருக்கும்னு நீங்க ஆரம்பிக்கும் போது நினைக்கவே இல்லை!\\

அப்படிங்களா:))

Divya said...

\\ சத்யா said...
அழுது சிவந்த அந்த முகத்தில் ஏதோ ஒரு மினுமினுப்பு இன்னும் ஜொலித்தது...
கல்யாண கலை கொடுத்த மெருகு என நான் இரண்டு நாட்களுக்கு முன் நம்பியது...
தாய்மை அவளுக்கு கொடுத்த தேஜஸ் என இப்போது புரிந்தது!!

-- இதுல கூட அந்த தாய்மை டச் வைச்சீங்க பாருங்க! நல்லா இருக்கு! பாவ படுவதா கோவ படுவதானு யோசிக்க வைக்கும் நல்ல கதாபாத்திரங்கள்... சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க திவ்யா.\\

பாராட்டிற்கு நன்றி சத்யா,

அடுத்த பகுதி விரைவில்.....

Divya said...

\\ sathish said...
மருத்துவருடனான உரையாடல் அருமை! ம்ம்... அப்புறம் என்ன ஆச்சு! மீரா எங்க??\\

உரையாடல் பாராட்டிற்கு நன்றி சதீஷ்!

மீரா எங்கே என அறிந்துக்கொள்ள, அடுத்த பகுதி வெளிவரும் வரை...காத்திருக்கவும்!!

Divya said...

\\ Thamizhmaangani said...
கதை திருப்பம் அருமை! டாக்டரின் வசனங்கள் ரொம்ப நல்லா இருந்துச்சு...

அடுத்த பகுதியை எதிர்பார்த்து..\\

வாங்க தமிழ்,

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
திவ்யா,

எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் தொடங்கி சிறப்பாக வந்திருக்கிறது இந்த பகுதி.

உரையாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. எழுத்து நடையும் சிறப்பாக இருக்கிறது, எப்போதும் போலவே :)

இரண்டு கதாபாத்திரங்களும் அடுத்து என்ன செய்யப்போகின்றன என யோசிக்கும் போது போட்டிருக்கிறீங்க...
//மீரா......எங்கே??????//

அருமை, வாழ்த்துக்கள்...!!!\\

ஹாய் நிமல்,

உங்கள் வாழ்த்துக்களுக்கும்,
உற்ச்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!!

Divya said...

\\ CVR said...
ஆகா.....
:-D\\

வருகைக்கு நன்றி சிவிஆர்!!

Divya said...

\\ Bee'morgan said...
ஆகா. திவ்யா. திருப்பத்துக்கு மேல திருப்பமா..? ரொம்ப அழகா நகருது கதை..
அங்கங்கே சில எழுத்துப்பிழைகளை திருத்திட்டா இன்னும் நல்லா இருக்கும்.. //கல்யாண கலை - கல்யாணக் களை //
அப்புறம், இன்னுமொரு suggestion. இரண்டாம் பகுதியில் பகுதி-1 க்கு link கொடுத்த மாதிரி, பகுதி-1 லும் அடுத்தடுத்த பகுதிகளுக்கு link கொடுக்கலாமே.. எல்லா பகுதிகளையும் ஒரே நேரத்தில் படிக்கறவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.\

வாங்க bee'morgan,

எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி!

முந்தைய பகுதியில், இப்பகுதிக்கான லிங்க் பகுதியின் முடிவில் அளித்துள்ளேன்.

ஆலோசனைக்கு மற்றுமொரு நன்றி!!

Divya said...

\\ Sen22 said...
இரண்டாம பாகமும் அருமை....
கதையைப் போலவே அழகாக இருக்கின்றது அதற்கென நீங்கள் தேர்ந்தெடுத்திக்கும் திரைப்படப் புகைப்படங்கள்...

வாழ்த்துகள் திவ்யா....


Senthil Kumar,
Bangalore\\

வாங்க செந்தில்,

உங்கள் வாழ்த்திற்கும் , பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

சத்யா said...

சத்யா...நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலீங்க!!

-- அட! சும்மா மொக்கை ட்ரை செய்தன். சரியா வரல போல.

Anonymous said...

திருப்பங்களோடு, நல்ல எழுத்து நடை


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

நிஜமா நல்லவன் said...

ஆஹா அடுத்த சஸ்பன்ஸ் வச்சுட்டீங்களே?

பாச மலர் / Paasa Malar said...

திவ்யாவின் கதையில் சற்றே வித்தியாசமாக உள்ளது போல் உள்ளது..படங்களைச் சரியாக மீண்டும் மீண்டும் போடும் அழகு கதைக்கு மேலும் மெருகு..

ரூபஸ் said...

ம்ம்.. படம் காட்ரீங்க..கலக்குங்கங்க

ரசிகன் said...

அவ்வ்வ்வ். திவ்யா மாஸ்டர்.ஏன் இந்த கொலைவெறி?? என்னோட பேரையே டேமேஜ் பண்ணிப்புட்டிங்களே:P

ரசிகன் said...

கதையில எதிர்பாராத திருப்பம்.ஹீரோவுக்கு மட்டுமில்ல.. எங்களுக்கும் கூடத்தான். சஸ்பென்ஸ்,சர்பிரைஸ்ன்னு எல்லாமே இருக்கு:)

சூப்பருங்க திவ்யா..:)

ரசிகன் said...

அதுவும் தன் மனைவி பற்ரிய இப்டி ஒரு மேட்டர தெரிஞ்சிற கணவனோட மனநிலைய அக்குவேற ஆணி வேறய பிரிஞ்சி மேஞ்சியிருக்கிங்க,..கலக்கல்:)

Divya said...

\\ எழில்பாரதி said...
கதை ரொம்ப அருமையா இயல்பா இருக்கு திவ்யா அடுத்த பகுதியை சீக்கரம் பதியுங்கள்....\

வாங்க எழில்பாரதி,

சீக்கிரம் அடுத்த பகுதியை பதிக்க முயல்கிறேன்....

பாராட்டிற்கு நன்றி எழில்!!

Divya said...

\\ ஸ்ரீ said...
அருமை அழகு வேறு வார்த்தைகள் இப்போது கைவசம் இல்லை.\\

:))
நன்றி ஸ்ரீ !



\\ வெகு இயல்பான நடைக்கு வாழ்த்துக்கள். திருப்பம் எதிர்பார்த்தது தான் ஆனால் கர்பம் எதிர்பாராத்து தான். ம்ம்ம் ஒரு வித்தியாசமான கோணத்தில் கதை நகர்வதும் பிடித்திருக்கிறது.

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.\\

அடுத்த பகுதி விரைவில் ஸ்ரீ!

Divya said...

\\ கருப்பன்/Karuppan said...
சூப்பரோ... சூப்பர்...

நல்ல கதையாக்கம்... நல்ல முன்னேற்றம். கலக்குறீங்க திவ்யா.

படித்து முடித்ததும் மனதில் ஒரு மெல்லிய பாரம்.\\

மனதில் பாரமாக உணர்ந்தீர்களா கருப்பன்????

உணர்வை பகிர்ந்துக்கொண்டமைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி கருப்பன்!!

Divya said...

\\ Prabakar Samiyappan said...
miga arumai .. ipadi kuda uingalal kadhai eludha mudiuma .. arumai

savalana kadhai .. kadhain nadai matrum pokku arumai

valththukaL\\

நீங்கள் அளித்துவரும் பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி ப்ரபாஹர்!!

Divya said...

\\ கோபிநாத் said...
ஆகா...போன பகுதியின் வேகம் இந்த பகுதியிலும் அப்பபடியே இருக்கு திவ்யா!!

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))

அப்புறம் படங்கள் எல்லாம் கவனமாக செலக்ட் பண்ணியிருக்கிங்க ;))

சூப்பர் ;)\\

படங்கள் பொருத்தமாக கிடைத்த ஆச்சரியம் தான் கோபி!!

பாராட்டிற்கு நன்றி !!

Divya said...

\\ My days(Gops) said...
ஆஹா ஆஹா இன்னொரு "தொடருமா"....

சின்ன வயசுல ரிலே ரேஸ் ரெம்ப ஓடி இருப்பீங்க போல... ஹி ஹிஹி\\

கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க கோப்ஸ்!!

Divya said...

\\ My days(Gops) said...
//வீட்டுல பார்த்து முடிச்சதுதான் டாக்டர்//

ஒரேடியா முடிச்சிட்டாங்க டாக்டர் ஒரேடியா முடிச்சிட்டாங்கே.... :P\\

:))

சாலமன் பாப்பையா ஸ்டைலில் இதை சொல்லிப்பார்த்தால் பொருத்தமா இருக்குது கோப்ஸ்!!

Divya said...

\\ My days(Gops) said...
// முதல்ல மீராவுக்கு சுத்தி போடனும்" //

பார்த்து மெதுவா போடுங்க.. இல்லாட்டி மண்டை உடைந்துட போகுது :)\\

மீராவை சுத்தி போடல கோப்ஸ், 'மீராவுக்கு' திருஷ்டி சுத்தி போடுறாங்க!!

Divya said...

\\ My days(Gops) said...
//, காலேஜ் விட்டு பிரியறப்போதான் எங்க நட்பு காதல்னு உணர்ந்தோம், //

செல்லாது செல்லாது...


//ஃபேர்வல் டே செலிப்ரேஷன் அப்போ....எமோஷனல் departure, ....எங்க நெருக்கத்தை அதிகப்படுத்தியது//

ஒரே நாளுல காதல் சொல்லிட்டு அப்புறம் etc etc....

லாஜிக் இடிக்கிதே..\\

காதலை சொன்ன அதே நாளில் எல்லாம் நடந்துவிட்டதென மீரா சொல்லவில்லை.....

கல்லூரி படிப்பு முடிய போகும் 'நாட்களில்' காதலை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

நாட்களில் -> நோட் திஸ் கோப்ஸ்!!

[லாஜிக் எல்லாம் ரொம்ப துருவி துருவி பார்க்க கூடாது கோப்ஸ்!!}

Divya said...

\\ My days(Gops) said...
//ஃபோன் நம்பர் தவிர எந்த டிடேய்ல்ஸ் தெரியாம , எந்த நம்பிக்கையில இப்படி அத்து மீறுறீங்க, பண்றதெல்லாம் பண்ண தெரியுது இல்ல.....அப்புறம் இப்படி அழுதா என்ன அர்த்தம்.//


கேட்டா காதலுக்கு கண்ணு இல்லை, தலைமுடி இல்லை அதுல பூ வைக்கவும் இல்லை'னு டகால்டியா டயலாக் மட்டும் பேச தெரியும்.....

ஹி ஹி\\

அது சரி , டயலாக் எல்லாம் நீங்களே எடுத்துக்கொடுப்பீங்க போலிருக்கு!

Divya said...

\\ My days(Gops) said...
//நேர்ல தான் மீட் பண்ண முடியல, என்கிட்ட ஃபோன்ல சொல்லியிருக்கலாம் இல்ல,//

ஹி ஹி ஹி ஹலோ சார், அந்த அளவுக்கு யோசிச்சி இருந்தா இந்நேரம் மீரா ஸ்ரீதரை இல்ல கல்யாணம் கட்டி இருப்பாங்க...

// இப்ப சப்பக்கட்டு கட்டி பேசிட்டா எல்லாம் சரி ஆகிடுமா????....//

rotfl... இந்த வார்த்தைல எவ்வளவு கோவம் இருந்து இருக்கும்'னு நீங்க சொன்ன விதத்துல உணர முடிந்தது.. ஹி ஹிஹி\\

கருத்திற்கு நன்றி கோப்ஸ்!!

Divya said...

\\ My days(Gops) said...
//மீரா......எங்கே??????//
மீரா எங்கப்பா ...

google search la எங்கப்பா....\\

:)))

Divya said...

\\ சத்யா said...
guruve namaskaram!\\

நமஸ்காரம்!

Divya said...

\ மதுரைவீரன் said...
அழகான கதை...எப்போது வரும் முன்றாம் பாகம்.........\\

வாங்க மதுரைவீரன்,
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

அடுத்த பாகம் விரைவில் பதிவிடுகிறேன்....

Divya said...

\\ Anonymous said...
திருப்பங்களோடு, நல்ல எழுத்து நடை


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/\\

வாங்க கே ஆர் பி,

உங்கள் வருகைக்கும், தருகைக்கும் மிக்க நன்றி!

Divya said...

\\ நிஜமா நல்லவன் said...
ஆஹா அடுத்த சஸ்பன்ஸ் வச்சுட்டீங்களே?\\

ஆமாம் நல்லவன்....நிஜம்மா நல்லவன்!
அடுத்து ஒரு சஸ்பென்ஸ் வைச்சாச்சு!

வருகைக்கு நன்றி!

Divya said...

\\ பாச மலர் said...
திவ்யாவின் கதையில் சற்றே வித்தியாசமாக உள்ளது போல் உள்ளது..படங்களைச் சரியாக மீண்டும் மீண்டும் போடும் அழகு கதைக்கு மேலும் மெருகு..\\

வாங்க பாசமலர்,

கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் எழுத முயற்சித்தேன்.

படங்களை பாராட்டியதற்கு நன்றிங்க பாச மலர்!

Divya said...

\\ ரூபஸ் said...
ம்ம்.. படம் காட்ரீங்க..கலக்குங்கங்க\\

நன்றிங்க ரூப்ஸ்!!

Divya said...

\\ ரசிகன் said...
அவ்வ்வ்வ். திவ்யா மாஸ்டர்.ஏன் இந்த கொலைவெறி?? என்னோட பேரையே டேமேஜ் பண்ணிப்புட்டிங்களே:P\\

அச்சோ....உங்க பேரை அந்த கதாப்பாத்திரத்திற்கு வைச்சுட்டேனோ??

ஸாரி சார்!!

Divya said...

\\ ரசிகன் said...
கதையில எதிர்பாராத திருப்பம்.ஹீரோவுக்கு மட்டுமில்ல.. எங்களுக்கும் கூடத்தான். சஸ்பென்ஸ்,சர்பிரைஸ்ன்னு எல்லாமே இருக்கு:)

சூப்பருங்க திவ்யா..:)\\

நன்றிங்க ரசிகன்!!

Divya said...

\\ ரசிகன் said...
அதுவும் தன் மனைவி பற்ரிய இப்டி ஒரு மேட்டர தெரிஞ்சிற கணவனோட மனநிலைய அக்குவேற ஆணி வேறய பிரிஞ்சி மேஞ்சியிருக்கிங்க,..கலக்கல்:)\\

நன்றி:))

நிஜமா நல்லவன் said...

///ரசிகன் said...
அவ்வ்வ்வ். திவ்யா மாஸ்டர்.ஏன் இந்த கொலைவெறி?? என்னோட பேரையே டேமேஜ் பண்ணிப்புட்டிங்களே:P///


ஸ்ரீ மாம்ஸ் பரவாயில்லை விடுங்க. அடுத்த கதைல உங்கள ஹீரோவா போட்டுடுவாங்க மாஸ்டர்:)

Unknown said...

Hi divya,

ungal blog site ennudaya thozhiyn blog site moolamaga ennaku arimugam aagi irrukindradhu. idhuvarai padithadhu indha kadhai matum dhan padithirukindren adhuven ennai pinottam ezhudhuvadhgarku thoondivitaadhu... anaithu kadahigalayum padithu vidu oru virivana pinootam ezhudha vendum endru thoondrugiradhu...

melum, pinootam ezhudhum anaivarukum nidhanamaga badhil alithirukum ungaladhu panbu paratirukuriyadhu... vaazhthukal...

oru vendugol... tamil font il eppadi pinnotam ezhudhuvadhu endru ennaku merkodugal kaata iyalumaa...

ஜி said...

aduththa part enga ammani???

நிவிஷா..... said...

ada...romba different aa irukuthunga twist,

aduthu enna agumonu ethirparka vaichuteenga divyakka:)))

seekiram next part plzzzzz


natpodu
Nivisha.

Syam said...

Divya...oru attendance appuram office la poi kathai padichitu solren....

தேன்மொழி said...

Divya , unga kathai romba paraparappa poguthu nga...

adutha paguthi eppo ?

Prabakar said...

ஹலோ மேடம் என்ன ஆச்சு .. அடுத்த பதிவு எங்கே ..

Syam said...

romba viruviruppa poguthu...next part eppo next week ah...nalla velai orae time 2 parts padikka chance kidaichuthu... :-)

Divya said...

\\ Priya said...
Hi divya,

ungal blog site ennudaya thozhiyn blog site moolamaga ennaku arimugam aagi irrukindradhu. idhuvarai padithadhu indha kadhai matum dhan padithirukindren adhuven ennai pinottam ezhudhuvadhgarku thoondivitaadhu... anaithu kadahigalayum padithu vidu oru virivana pinootam ezhudha vendum endru thoondrugiradhu...

melum, pinootam ezhudhum anaivarukum nidhanamaga badhil alithirukum ungaladhu panbu paratirukuriyadhu... vaazhthukal...

oru vendugol... tamil font il eppadi pinnotam ezhudhuvadhu endru ennaku merkodugal kaata iyalumaa...\\

ப்ரியா,
உங்கள் மனம்திறந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

தமிழில் தட்டச்சு செய்ய இந்த லிங்க் பாருங்க ப்ரியா,[Unicode ]

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3/

download panikonga ekalappai 2.0, then u can type in tamil.
[use Alt2 to toggle between tamil & English font]

if u need further help, give me ur email ID , so that I can explain it to u in detail.

Thanks for visiting my page Priya.

Keep visiting and share ur valuable comments.

Divya said...

\\ ஜி said...
aduththa part enga ammani???\\

விரைவில் அடுத்த பகுதி பதிவிடுகிறேன் ஜி!!!

Divya said...

\\ நிவிஷா..... said...
ada...romba different aa irukuthunga twist,

aduthu enna agumonu ethirparka vaichuteenga divyakka:)))

seekiram next part plzzzzz


natpodu
Nivisha.\\

வாங்க நிவிஷா,

பாராட்டிற்கு நன்றி.
அடுத்த பகுதி விரைவில் பதிவிடுகிறேன்.

Divya said...

\\ Syam said...
Divya...oru attendance appuram office la poi kathai padichitu solren....\

வாங்க நாட்டாமை,

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை என் பின்னூட்டத்தில் பார்ப்பதில் மகிழ்ச்சி,
பொறுமையா பதிவு படிச்சுட்டு சொல்லுங்க நாட்டாமை!!!

Divya said...

\\ Thenmozhi said...
Divya , unga kathai romba paraparappa poguthu nga...

adutha paguthi eppo ?\\

வாங்க தேன்மொழி,
உங்கள் முதல் வருகைக்கு நன்றி,

அடுத்த பகுதி சீக்கிரம் பதிவிடுகிறேன் தேன்மொழி!!

Divya said...

\\ Prabakar Samiyappan said...
ஹலோ மேடம் என்ன ஆச்சு .. அடுத்த பதிவு எங்கே ..\\

ஹலோ சார்.......கொஞ்சம் டிலே ஆகிடுச்சு நெக்ஸ்ட் பார்ட் பதிவிட, சீக்கிரம் பதிவிடுகிறேன்!!

Divya said...

\ Syam said...
romba viruviruppa poguthu...next part eppo next week ah...nalla velai orae time 2 parts padikka chance kidaichuthu... :-)\\

ஷ்யாம் பொறுமையா ரெண்டு பகுதியும் படிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!

தினேஷ் said...

//என்னடா சொன்னாங்க டாக்டர், மீராவுக்கு ஒன்னுமில்லையே???" - என் அக்கா.//

இந்த வரிகளுக்கு அப்புறம் வரும் அணைத்து வரிகளையும் படிக்கும் போது, அந்த சூழ்நிலையை மிகச்சரியாக உணர கூடிய உணர்வை உங்கள் அருமையான வியக்கவைக்கும் எழத்து ஏற்ப்படுத்துகிறது...

தினேஷ்

காஞ்சனை said...

நல்லாருக்குங்க திவ்யா :)

Syam said...

போதும் சீக்கிரம் நெக்ஷ்ட் பார்ட் பிளீஸ்....ஒரு வாரத்துக்கு மேல ஆகிடுச்சு.... :-)

Divya said...

\\ தினேஷ் said...
//என்னடா சொன்னாங்க டாக்டர், மீராவுக்கு ஒன்னுமில்லையே???" - என் அக்கா.//

இந்த வரிகளுக்கு அப்புறம் வரும் அணைத்து வரிகளையும் படிக்கும் போது, அந்த சூழ்நிலையை மிகச்சரியாக உணர கூடிய உணர்வை உங்கள் அருமையான வியக்கவைக்கும் எழத்து ஏற்ப்படுத்துகிறது...

தினேஷ்\\

தினேஷ் , நீண்ட நாட்களுக்கு பின் நீங்க அளித்த விரிவான பின்னூட்டம், மிகுந்த உற்சாகத்தை அளித்தது, நன்றி தினேஷ்!!

Divya said...

\\ சகாராதென்றல் said...
நல்லாருக்குங்க திவ்யா :)\\

ரொம்ப நன்றிங்க சகாரா!!

Divya said...

\\ Syam said...
போதும் சீக்கிரம் நெக்ஷ்ட் பார்ட் பிளீஸ்....ஒரு வாரத்துக்கு மேல ஆகிடுச்சு.... :-)\\

நாட்டாமை....பொறுமை , பொறுமை!!!

Weekend next part type panida try panrein, seringla:-)

gils said...

idhyathamarai cum mounaragama aarambichu antha 7 naatkal rangeku kalakkala poi amudhay mathiri endinga irukumonu thona vaikuthu unga story....somehow sneha foto manasula ota matenguthu..preity zinta holds copywrite over these unwed mom roles..avanga foto poata apta irukum. kya kehna padam stills kedaicha parunga..

gils said...

title konjam kalaaikara mathiri iruku...erkanavayku aprum oru gap vitu kusumbu panreenga ;) piranthaval ivalonu solratha patha..pullaya pethu poatutu ammani apeeta? seekram adutha part podunga

Divya said...

\\ gils said...
idhyathamarai cum mounaragama aarambichu antha 7 naatkal rangeku kalakkala poi amudhay mathiri endinga irukumonu thona vaikuthu unga story....somehow sneha foto manasula ota matenguthu..preity zinta holds copywrite over these unwed mom roles..avanga foto poata apta irukum. kya kehna padam stills kedaicha parunga..\\

ஆஹா...ஸ்னேகா ஃபோட்டோ மனதில் பதியவில்லையா??
கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் பொறுத்தமான படங்கள் வேறு எதுவும் என் கண்ணில் தென்படவில்லை கில்ஸ்!!

உங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி கில்ஸ்!!

Divya said...

\\ gils said...
title konjam kalaaikara mathiri iruku...erkanavayku aprum oru gap vitu kusumbu panreenga ;) piranthaval ivalonu solratha patha..pullaya pethu poatutu ammani apeeta? seekram adutha part podunga\\

கில்ஸ்,அடுத்த பகுதி விரைவில்.....

தமிழன்-கறுப்பி... said...

என்ன......

மீரா...... எங்கே????/////

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா.... எங்கே??????/////

தமிழன்-கறுப்பி... said...

தொடர் எழுத நேரம் பத்தலைன்னா ஒரு கவிதை போடுங்க திவ்யா...

ரசிகன் said...

//தமிழன்... said...

தொடர் எழுத நேரம் பத்தலைன்னா ஒரு கவிதை போடுங்க திவ்யா..//

அவ்வ்வ்வ்வ்.... இதான் சாக்குன்னு அவங்க கதை எழுதறத குறைச்சுக்கப் போறாங்க!!!

கொஞ்சம் தான் வெயிட் பண்ணுவோமே?

Kumiththa said...

Divya.....when are you going to post the second part..I am waiting for it..please do post it soon!

Divya said...

\\ தமிழன்... said...
என்ன......

மீரா...... எங்கே????/////\\

மீரா எங்கே என அறிய அடுத்த பகுதி வெளிவரும் வரை கொஞ்சம் காத்திருங்கள் தமிழன்!!

Divya said...

\\ தமிழன்... said...
திவ்யா.... எங்கே??????/////\\

அட.....திவ்யா எங்கேயும் போகலீங்க!!

Divya said...

\\ தமிழன்... said...
தொடர் எழுத நேரம் பத்தலைன்னா ஒரு கவிதை போடுங்க திவ்யா...\\

என்னங்க தமிழன் கவிதை எழுதுவதை அவ்வளவு சாதாரனமா சொல்லிட்டீங்க???
அதுக்கு தாங்க நிறைய நேரம் வேண்டும்!!

தொடரின் அடுத்த பகுதி நிச்சயம் விரைவில் பதிவிடுகிறேன் தமிழன்.

Divya said...

\\ ரசிகன் said...
//தமிழன்... said...

தொடர் எழுத நேரம் பத்தலைன்னா ஒரு கவிதை போடுங்க திவ்யா..//

அவ்வ்வ்வ்வ்.... இதான் சாக்குன்னு அவங்க கதை எழுதறத குறைச்சுக்கப் போறாங்க!!!

கொஞ்சம் தான் வெயிட் பண்ணுவோமே?\\

அடடா...ரசிகன், அவ்வளவு ஈஸியா கதை எழுதுவதை குறைச்சுக்குவோம்னு நினைச்சிடாதீங்க!!

கதையை ரசிக்க 'ரசிகன்' நண்பர் நீங்க இருக்கும்வரை கதை எழுதுவதை குறைக்கவோ நிறுத்தவோ போவதில்லை!!
[இதெப்படி இருக்கு??}

Divya said...

\\ Kumiththa said...
Divya.....when are you going to post the second part..I am waiting for it..please do post it soon!\\

Kumiththa,
உங்கள் முதல் வருகைக்கும், தருகைக்கும் மிக்க நன்றி!

அடுத்த பகுதிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வைக்கிறேன்...மன்னிக்கவும்,

நிச்சயம் விரைவில் பதிவிட முயல்கிறேன்!!

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா...said...

///\\தமிழன்... said...
திவ்யா.... எங்கே??????/////\\

அட.....திவ்யா எங்கேயும் போகலீங்க!!////

அப்ப நம்ம கடைப்பக்கம் ஆளை காணலியே...????:)

G.Ragavan said...

இப்பிடியொரு திருப்பமா! மதுரைல இருந்து திருச்சிக்குக் கூட்டீட்டுப் போய் இப்ப திருவண்ணாமலைல வந்து நிக்குதே கதை.