சில வருடங்களுக்கு முன் சித்தப்பா தவறிவிட்டார், சித்திக்கு இரண்டு மகள்கள் மட்டுமே.
அதனால் சுமதியின் கல்யாண வேலைகள் அனைத்தையும் நானும் என் அண்ணனும் கவனித்துக்கொண்டோம்.
வேலைநிமித்தமாக சிங்கப்பூரில் ஒரு வருடம் இருந்துவிட்டு, 2 மாதங்களுக்கு முன்பு பெங்களுர் திரும்பியிருந்ததால் என்னால் முடிந்த உதவிகளை சித்தி குடும்பத்திற்கு கல்யாண நேரத்தில் செய்ய முடிந்ததை நினைத்து எனக்குள் ஒரு சின்ன சந்தோஷம்.
சிறுவயதிலிருந்தே "ராஜேசு அண்ணா" என்று பாசத்துடன் அழைக்கும் தங்கை சுமதி, ஒழுங்கான தன் திருமணத்தைக் கூட நான் இந்தியா திரும்பின பிறகு தான் நடத்த வேண்டும் என பிடிவாதமாக தள்ளிப்போட்டாள், அத்தனை அன்பு என்மீது!!
சிங்கப்பூர் முஸ்தஃபா Jewellers ல் நான் சுமதிக்காக வாங்கி வந்திருந்த செயினை, அனைவரிடமும் 'என் ராஜேசு அண்ணா சிங்கப்பூர்ல இருந்து எனக்கு வாங்கிட்டு வந்தது' என பெருமிதத்துடன் காண்பித்து அழகுபார்ததை ரசித்தேன்!!
இன்னும் சிறிது நேரத்தில் முகூர்த்தம், தலைக்கு மேல் வேலை இருக்கிறது, வெளியூரிலிருந்து வந்த உறவினர்களுக்கு காலை சாப்பாடு சரியாக பரிமாறப்படுகிறதா என் கவனிக்கு வேகமாக திருமண மண்டபத்தின் மேல் தளத்தில் இருந்த 'டைனிங் ஹாலுக்கு' செல்ல மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன், அப்போது......
"எக்ஸ்கூஸ் மீ சார்!"
சத்தம் கேட்டு திரும்பினால், கீழ்படியில் ஓர் அழகான தேவதை......
மிரண்ட மான் விழிகள்,
செதுக்கிய நாசி...
புன்னகை சிந்தும் செவ்விதழ்...
ஹிந்தி பட நாயகிகள் அணியும் ஜமுக்கி தகதகக்கும் புடவையில் ,
அழகின் மொத்த உருவமாய் அவள்...
மலைத்துப்போய் நான் விழிக்க,
"ஹலோ சார், உங்களைத்தான் சார்"
"சார், உங்க பையன் கிழே விழுந்துட்டான் சார்"
அடிப்பாவி நான் இன்னும் முழுசா உன்னை சைட் கூட அடிச்சு முடிக்கல, அதுக்குள்ளே கல்யாணம் ஆகாத எனக்கு ' பையன்'ன்னு இப்படி ஒரு குண்டு தூக்கி போடுறியே! அதிர்ந்தேன்!!
"என்ன....என்ன சொல்றீங்க"
"ஆமா சார், உங்க பையன் முன்னாடி மண்டபத்து கேட் கிட்ட விழுந்துட்டான் சார். ரொம்ப அழுறான், அம்மாகிட்ட போனும்னு அழுதான், ஆனா அவன் அம்மா யாருன்னு எனக்குத் தெரியல, ஆனா அவன் அப்பா உங்களை அப்போ கேட்கிட்ட அவனை கொஞ்சிட்டு நீங்க இருந்தப்போ பார்த்தேன், அதான் உங்க பையனை என் தாத்தாவை பார்த்துக்க சொல்லிட்டு, மாடிப்படில ஏறிட்டு இருந்த உங்களை கூப்பிட வேகமா வந்தேன் சார்"
மூச்சு விடாமல் பேசி முடித்தாள், ஆஹா!இவ்வளவு வேகமாக கூட பேச முடியுமா........படபடக்கும் விழிகளும், பேசும் வார்த்தைகளுக்கு ஏற்ப அவள் முக பாவனைகள் மாறுவதும் வெகு அழகாக இருந்தது!!!
இவ்வளவு அழகா இருக்கான்னு பார்த்தா கொஞ்சம் லூசா இருப்பாபோலிருக்கே, சம்மதமே இல்லாம என் பையன் கீழே விழுந்துட்டான்னு கூப்பிடுறா??
அழகை அள்ளி கொடுத்துட்டு,
அறிவு கொடுக்க மறந்துட்டியே, ஆண்டவா!!!
பதிலேதும் சொல்லாமல் நான் விழிக்க, அவள் தொடர்ந்தாள்.....
"சார், வாங்க சார், ரொம்ப அழுறான் சார் உங்க பையன்"
ஸ்கூல் வாத்தியார் பொண்ணா இருப்பாளோ??? இத்தனை 'சார்' போடுறா, முதல்ல இவ என்னதான் சொல்றான்னு போய் பார்ப்போம்.
கல்யாணம் ஆகாத கட்டழகன் எனக்கு, 5 நிமிஷத்துல கல்யாணமாகி ஒரு பையனுக்கு அப்பாவாக்கி பொறிஞ்சு தள்ளிட்டாளே!!
அவளை பின் தொடர்ந்தேன், அவள் தாத்தாவின் கையில் அழுதுக்கொண்டிருந்தான் என் அண்ணாவின் பையன் நரேன்.
என்னைப்பார்த்ததும், என்னை கைகாட்டி அழ ஆரம்பித்தான்,
"ஹைய்யோ, அழாதே , இதோ உங்க அப்பா வந்துட்டாரு பாரு" அவனை சமாதானப்படுத்தினாள் 'அவள்'.
"சித்தப்பா.........சித்தப்...பா" என்று என்னிடம் தாவி வந்து என் கழுத்தை இறுக்கி கோண்டான் நரேன்.
"சித்தப்பாவா?????.........நீங்க இவன் சித்தப்பாவா???"
"ஆமா, அப்பாவின் தம்பியை எங்க ஊர்ல எல்லாம் சித்தப்பான்னு தான் கூப்பிடுவாங்க" என்றேன்.
"ஐயோ, ஸாரி சார்.........பையனுக்கு உங்க சாயல் இருந்ததா, நீங்க அப்போ கேட் கிட்ட இவனை கொஞ்சிட்டு வேற இருந்தீங்களா........ஸோ........உங்களை அவனோட அப்பான்னு நினைச்சுட்டேன் சார், ஸாரி சார்"
சின்ன குழந்தைகளை கல்யாண வீட்டில், பொது இடங்களில் கொஞ்சினா....நம்ம புள்ளைன்னு நினைச்சுக்குவாங்களா??
இப்படி நினைச்சுட்டா, யார் எனக்கு பொண்ணு கொடுப்பான்!!
"பரவாயில்லீங்க.............எனிவே......தாங்க்ஸ்" என்றேன்.
தோளை குலுக்கி அழகாக உதடு சுளித்து புன்னகைத்து விட்டு தன் தாத்தாவுடன் சென்றுவிட்டாள்.
தொடர்ந்து எனக்கு பந்தி பரிமாறும் இடத்தில் மேற்பார்வை இடவேண்டியிருந்ததால், 'தேவதையை' பார்க்க முடியவில்லை.
ஆனால் மனசுக்குள் ஆயிரம் கேள்விகள்...
"அவள் யாராக இருக்கும்?,
மாப்பிள்ளையின் உறவுகாரப் பெண்ணாக இருப்பாளோ?,
சுமதிக்கு இப்படி ஒரு ஃப்ரண்ட் இருக்கிறாப்ல அவ காலேஜ் ஆல்பத்துல பார்த்த ஞாபகம் இல்லியே?
யாராக இருப்பா இவ?,
மீண்டும் 'அவளை' பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமா?"
யோசனையோடு வாழை இலையில் சிறிது துவண்ட ஒரங்களை அங்கிருந்த ஒரு கத்தியால் நான் வெட்டும் போது, தவறுதலாக என் கைவிரலில் பட்டு இரத்தம் வந்தது,
"ஸ்ஸ்ஸ் ஆஆஆ......" என்று சத்ததுடன் கைவிரலை பிடித்துக்கொண்டு என்ன செய்வது என நான் முழிக்க...
"ஐயோ.....!! இரத்தம் சார்..........பார்த்து வெட்டக்கூடாதா சார், கையை இப்படி கொடுங்க"
தன் கைக்குட்டையால் என் விரலை இறுக்கி கட்டினாள் 'அவள்'.
இவ எதுக்கு சமையற் கட்டு பக்கம் வந்தாள் என நான் வியக்க...
"சார், காப்பிதூள் போட்டா இரத்தம் கசியரது டக்குன்னு நின்னிடும், சமையற்காரர் கிட்ட கேட்கலாம் வாங்க"
படபடத்தாள் என்னை 'கொள்ள கொண்ட கள்ளி'!!
என் கைக்கு இவள் கட்டு போடுவதையும், கரிசனமாக பேசுவதையும் ஒரக்கண்ணால் பார்த்தபடி, சமையல் வேலையில் இருந்தவர்கள் கேலிப்பார்வை பார்க்க ஆரம்பித்தனர்.
" சரி நான் அப்புறம் போட்டுக்கிறேன் காப்பி தூள், நீங்க இங்க என்ன பண்றீங்க???"
"தாத்தாக்கு சுடு தண்ணீ கேட்டு வாங்கிட்டு போக வந்தேன் சார்"
"சுடு தண்ணீ வாங்கித்தரேன், ஆனா முதல்ல இந்த சார் , சார்ன்னு கூப்பிடுறதை நிறுத்துங்க ப்ளீஸ்"
"சரிங்க சார்........ஸாரி.....சரிங்க, நீங்களும் 'வாங்க போங்கன்னு' கூப்பிடாம 'வா, போ'ன்னே கூப்பிடலாமே!!!"
சுடு தண்ணியுடன் வேகமாக சென்றவளை,
"ஒரு நிமிஷம்" என இடமறித்தேன்....
என்ன என்பதுபோல் திரும்பிப் பார்த்தாள்,
"உன் பேரு என்ன.............நீ மாப்பிள்ளை வீட்டு சொந்தமா??"
களுக்கென்று மீண்டும் தோளை குலுக்கி, உதடுகள் சுளிக்க சிரித்து முழுவதுமாய் என்னை கொள்ளை அடித்தாள்!!!
"ஏன் சொல்லமாட்டியா??"
"உங்க பேரு, நீங்க யாருன்னு நான் கண்டுப்பிடிச்சுட்டேன், அதுமாதிரி நீஙளும் கண்டுபிடிங்க" என்றாள் வெடுக்கென்று.
"என்ன..........என்ன பத்தி என்ன தெரியும்" அவள் கண்களை விரித்து, எக்ஸ்பிரஷனோடு பேசும் அழகை காணவே, கேள்வி கேட்டு பேச்சு வளர்த்தேன்.
"உங்க பேரு ராஜேஷ், சுமதி அக்காவின் பெரியம்மா மகன். பெங்களுரில் வேலைப்பார்க்கிறீங்க, சிங்கப்பூரில் 1 வருஷம் இருந்துட்டு 2 மாசத்துக்கு முன்னாடி தான் இந்தியாவிற்கு திரும்பி வந்தீங்க, மீண்டும் எப்போ வெளிநாட்டு ப்ரோஜக்ட் கிடைக்கும்னு காத்துட்டு இருக்கிறீங்க.
'வாழை இலை' கூட வெட்டத்தெரியாத.........eligible bachelor "
ஒரு கேள்வி கேட்டா, பத்து பதில் சொல்லும் அவளது வெகுளித்தனமான பேச்சு இன்னும் அதிகம் என்னை கவர்ந்தது.
சுமதியை அக்கா என்று இவள் அழைப்பதை பார்த்தா, அவளுக்கு தெரிந்த பொண்ணாகத்தான் இருக்கும், எப்படி கண்டுபிடிக்கிறது இவளின் டிடேய்ல்ஸை, யாரிடம் கேட்பது.........???
நல்லபடியாக திருமணம் முடிந்து, கடைசிப் பந்தியில் மணப்பெண்-மாப்பிள்ளை, மற்றும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மட்டும் உணவருந்த நானும் சாப்பிட உட்கார்ந்தேன்.
"சுமதிக்கா, உங்களுக்கும் உங்க கிட்ட மாட்டிக்கிட்டவருக்கும் நானே பரிமாறேன்" என்று பரிமாற ஆரம்பித்தாள் 'அவள்'.
எனக்கு அவளே பரிமாற வேண்டுமென்பதற்காகவே வழிய வந்து பரிமாறுவது போல் தோன்றியது எனக்கு.
பரிமாறும்போது என்னிடம் அடிக்குரலில் கேட்டாள்," கைவிரல் அடிப்பட்டது வலிக்குதா?? ஊட்டி விடனுமா???" கண் சிமிட்டினாள்!!
பதில் சொல்ல முடியாமல் பாழாய்ப்போன வெட்கம் வேற எனக்கு அப்போ வந்து தொலைந்தது!!
அடுத்த முறை எனக்கு பரிமாற என்னருகில் அவள் வந்தபோது,
"நீ சாப்பிட்டியா" என்றேன்.
"ரொம்ப்பத்தான் அக்கறை, இப்பத்தான் கேட்க்கனும்னு தோனிச்சா! சாப்பிட்டாச்சு........சாப்பிட்டாச்சு!" என்று படபடவென்று பொரிந்தாள்.
சிறிது நேரத்தில் அவள் தாத்தா அவளை அழைக்க அவள் சென்று விட்டாள்.
சுமதியின் ஃபிரண்ட் வாணி மட்டும் எனக்கு சிறுவயதிலிருந்தே நல்ல பழக்கம், அவளிடம் 'இவளை' பற்றி விசாரித்த போது , விபரம் அறிந்துக்கொண்டேன்.
பெயர் பூர்ணிமா, சொந்த ஊர் சென்னை, சுமதியின் க்ளாஸ் மேட் கிருத்திகாவின் தங்கை, கிருத்திகா சமீபத்தில் திருமணமாகி US சென்றுவிட்டதால், அக்காவின் சார்பாக இவள் மதுரையிலிருக்கும் தன் உறவுக்கார தாத்தாவுடன் சுமதியின் திருமணத்திற்கு வந்திருக்கிறாள் ;
படிப்பது பி.இ இறுதியாண்டு, கோவில்பட்டி National Engineering Colllege.
சுமதியும் மாப்பிள்ளையும் செல்ல வேண்டிய அலங்கரிக்கப்பட்ட கார் தயாராக இருக்கிறதா எனப்பார்க்க மண்டபத்துக்கு வெளியில் வந்தேன், வாயிலுக்கு அருகே சுமதியுடன் வேலைப்பார்க்கும் மற்றும் அவளுடன் படித்த பையன்கள் சிலர் அங்கு நின்றுக்கொண்டிருக்க, அவர்களிடம் அபிநயத்துடன், கண்களை உருட்டி, சிரித்து சிரித்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் பூர்ணிமா.
எனக்கு உள்ளுக்குள் ஏனோ குறு குறுவென்று இருந்தது!!
அவள் மற்ற பையன்களிடம் பேசினால் எனக்கு ஏன் எரிச்சல் வருது?,
அவ யார்கிட்ட பேசினா எனக்கென்ன என்று ஏன் என்னால் இருக்க முடியவில்லை?....
ஏன் இந்த உணர்வு எனக்குள்??!!!
மணமக்களை அனுப்பிவைத்துவிட்டு, மண்டபத்துக்குள் வந்தேன்.
திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கலைந்து சென்று, மண்டபமே வெறிச்சென்று இருந்தது.
சேர்களை மடக்கி வைத்து மண்டபத்தை துப்பரவு செய்ய ஆரம்பித்திருந்தனர்.
மனதில் எனோ ஒரு கணம்,
மாடிப்படிகளில் ஏறினேன்,
"எக்ஸ்கூஸ் மீ சார்' என்று பூர்ணிமா முதன் முதலில் என்னை அழைத்தது நினைவுக்கு வந்தது.
ஏதோ ஒரு இனம்புரியா இறுக்கம் நெஞ்சில்.
டைனிங்ஹால் சுத்தம் செய்துவிட்டார்களா என அறிய மேலும் படிகளில் நான் ஏற...
"எக்ஸ்கூஸ் மீ"
பூர்ணிமாவின் குரல்...........பிரம்மிப்புடன் திரும்பினேன்,
'அட.......அவளே தான்!!'
எல்லாரும் போய்ட்டாங்க , இவ மட்டும் எப்படி...........இங்கே??
"ஹலோ சார், எக்ஸ்கூஸ் மீன்னு கூப்பிட்டாலே இப்படிதான் பேந்த பேந்த முழிப்பீங்களா, ரியாக்ஷனை கொஞ்சம் மாத்துங்க சார்"
"ஹே......பூர்ணிமா........நீ இங்க என்ன பண்ற"
"ப்ரவாயில்லையே என் பேரு எல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்க போலிருக்கு"
"ஆமாம்...........நீ இன்னும் போகலியா???'
"ஹும், எல்லார் கூடவும் நானும் அப்போவே போய்ட்டேன்.........ஆனா......."
"ஆனா.........என்ன?"
"யாரோ ஒருத்தர், நான் முதல் முதலில் பேசின மாடிப்படியில நின்னுட்டு கணவு காண்றாங்கன்னு பட்சி சொல்லிச்சு, அதான் ' ஹாஸ்டல் ரூம் கீ' இங்கே மண்டபத்துல மிஸ் பண்ணிட்டேன், எடுத்துட்டு வந்துடுறேன்னு கப்சா விட்டுட்டு இங்கே வந்தேன்"
"ரியலி??"
"எக்ஸாக்ட்லி சார்...........நம்புங்க"
"எப்படி என் மனசுல உள்ளது உனக்கு புரிஞ்சுது பூர்ணிமா?"
" நானும் நீங்க சாதாரணமா என்னை சைட் அடிக்கிற லுக்குதான் விடுறீங்கன்னு நினைச்சேன்.........ஆனா......."
"ஆனா......."
" நான் மண்டபத்துக்கு வெளில அக்கா கூட படிச்ச பசங்க கிட்ட பேசிட்டு இருந்தப்போ, அதை பார்த்து உங்க முகம் போன போக்கு சொல்லிச்சு உங்க மன்சுல இருக்கிறதை"
"அடிக்கள்ளி"
சிறிது நேரம் மாடிப்படிகளில் பேசிக்கொண்டிருந்தோம், அங்கு வேலை செய்கிறவர்கள் எங்களை ஒரு மாதிரி பார்க்க,
எனக்குத்தான்' என் ஆளை' யாரும் லுக் விட்டா காதுல புகை வருமே, அதனால்.....
"சரி வா நான் உன்னை உன் தாத்தா வீட்டுல ட்ராப் பண்ணிடுறேன் " என்று என் காரை நோக்கி நடந்தேன்.
"ஹும் சரி, ஆனா அதுக்கு முன்னாடி கல்யாண மண்டபத்தோட மனேஜரை பார்த்துட்டு போகலாம்" என்றாள்.
"எதுக்கு"
"ஆறு மாசம் கழிச்சு, நல்ல முகூர்த்த நாள் எதுன்னு அவர் ரூம் காலெண்டரைப் பார்த்து மண்டபம் புக் பண்ணத்தான்'
"அடிப்பாவி..........செம ஸ்பீடா இருக்க"
"பின்ன எவ்வளவு நாள் தான் காதுல புகை விட்டுட்டு இருப்பீங்க பாவம்! ஃபைனல் செமஸ்டர் முடிய இன்னும் 6 மாதம் இருக்கு எனக்கு,
நீங்களும் வாழை இலை மட்டுமில்ல, காய்கறி நறுக்கவும் கொஞ்சம் கத்துக்க வேண்டாமா சார், ஸோ அதுவரைக்கும்......"
"அதுவரைக்கும்........??'
என் காதில் 'இரகசியம்' சொல்லி முகம் சிவந்தாள் என் பூர்ணிமா!!!
93 comments:
அழகான கதை!!
Sweeeet!! :-)
இந்த கதைக்கு நீங்க போட்டிருக்கற ஹீரோயின் படம்தான் எனக்கு பிடிக்கல!! :-(
\\அழகான கதை!!
Sweeeet!! :-)
இந்த கதைக்கு நீங்க போட்டிருக்கற ஹீரோயின் படம்தான் எனக்கு பிடிக்கல!! :-(\\
thanks Cvr,
ungaluku pedicha heroine yarunu solunga, ......next kadhai la potudalam ok va???
கதைக்கேற்ற தலைப்புங்க... எப்படிங்க உங்களுக்கு டயலாக்ஸ் கிடைக்குது.
எனக்குத் தலைகீழா நின்னு தண்னி குடிச்சாலும் வரல..
நல்லா இருக்கு.
இந்த ஹீரோயின் மல்லிகா கபூர் எனக்குப்பிடிக்குமுங்க.. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்துல இன்னும் அழகா இருப்பாங்க..
Very cute and fresh …
Kalakureenga Poonga.. Photos are very nice..
//ஹிந்தி பட நாயகிகள் அணியும் ஜமுக்கி தகதகக்கும் புடவையில் //
ஏன் தெலுங்கு பட ஹீரோயின் கூட போடுவாங்களே :P
//இவ்வளவு வேகமாக கூட பேச முடியுமா........படபடக்கும் விழிகளும், பேசும் வார்த்தைகளுக்கு ஏற்ப அவள் முக பாவனைகள் மாறுவதும் வெகு அழகாக இருந்தது!!!//
ஒரு வேளை Stroke வந்து இருக்குமோ? அதுக்கு இதெல்லாம் தான் symptoms ஆம்!
//நான் மண்டபத்துக்கு வெளில அக்கா கூட படிச்ச பசங்க கிட்ட பேசிட்டு இருந்தப்போ, அதை பார்த்து உங்க முகம் போன போக்கு சொல்லிச்சு உங்க மன்சுல இருக்கிறதை//
பிகர் கூட இன்னொருத்தன் பேசினா அப்படி தான் எவனும் பார்ப்பான்.. இதெல்லாம் இரு மேட்டரா :P
//அழகை அள்ளி கொடுத்துட்டு,
அறிவு கொடுக்க மறந்துட்டியே, ஆண்டவா!!!//
பொதுவாவே பொண்ணுங்க, அழகோ இல்லையோ அறிவு கம்மி தான் அப்பாடினு யாரோ சொன்னாங்களாம்...
//"ஐயோ.....!! இரத்தம் சார்..........பார்த்து வெட்டக்கூடாதா சார், கையை இப்படி கொடுங்க"//
ஏன் அவளும் வெட்ட போறாளா?
//"உங்க பேரு, நீங்க யாருன்னு நான் கண்டுப்பிடிச்சுட்டேன், அதுமாதிரி நீஙளும் கண்டுபிடிங்க" என்றாள் வெடுக்கென்று.
//
இது என்ன சின்ன பிள்ளை தனமா இருக்கு??
//'வாழை இலை' கூட வெட்டத்தெரியாத.........eligible bachelor " //
உருப்படியா ஒரு வாழை இலை வெட்ட தெரியல.. உடனே eligible bachelor ஆ? நீங்களும் உங்க eligible bachelorsஉம்.. (இதுல எந்த உள்குத்தும் இல்லப்பா)
//'இரகசியம்' சொல்லி முகம் சிவந்தாள் என் பூர்ணிமா!!!//
ஏன் ? கண்டக்டர் அடிச்சா மாயமா?
கதை, ஒரு பையன் point of viewla இருந்து எழுதியது வித்தியாசமா நல்லா இருந்தது.. பொதுவா, பசங்க தான் பொண்ணுங்க point of viewla எழுதி பாஇச்சு இருக்கேன்.. was different :)
//கல்யாணம் ஆகாத கட்டழகன் எனக்கு, 5 நிமிஷத்துல கல்யாணமாகி ஒரு பையனுக்கு அப்பாவாக்கி பொறிஞ்சு தள்ளிட்டாளே!!//
இதுல தான் இடறல்.. எந்த பையனும் தன்னை கட்டழகன்னு வர்ணிச்சு எழுத மாட்டான் :P
சரி.. 15க்கு மேல ஆசு.. மீ த அப்பீட்டு!
வாவ் திவ்யா
அப்படியே உற்சாகம் கரைபுரண்டு ஓடுது கதை முச்சூடும்.... இவ்ளோ ஸ்பீடான பொண்ணா..? கலக்குதுங்கோ உங்க ஹீரோயினும் அவுக பேசுற டயலாக்கும்.... :))))
//"ரொம்ப்பத்தான் அக்கறை, இப்பத்தான் கேட்க்கனும்னு தோனிச்சா! சாப்பிட்டாச்சு........சாப்பிட்டாச்சு!" என்று படபடவென்று பொரிந்தாள்.//
அதென்னாங்க உங்க ஹீரோயின் எல்லாம் ஹீரோவை போட்டு இப்படி எப்பவுமே வறுத்தெடுக்கறாங்க..? ;))))))))))
ஹாய் திவ்யா,
அழகான க(வி)தை...
மிகவும் ரசித்தேன்...
ஏன் நாம போற கல்யாணத்துக்கெல்லாம் இந்தமாதிரி பொண்ணுக வர்ரதே இல்ல.. ;)))
CVR sonnadhu maathiri enakkum andha heroine-a avalo pudikkala !!!
aama, unga heroine-ku eppo love vanduchu? annan payyana konjunadha paathu love vanducha??? ;)
டயலாக்கெல்லாம் கலக்கல்ஸ்!!
The story is so nicely threaded with little suspense. I admire your writing capacity.
Thanks
Deva
//ஹீரோயின் படம்தான் எனக்கு பிடிக்கல!! :-(//
சிவிஆர் அண்ணாத்த..என்னது தலைவியை பிடிக்கலையா??? பஸ்ஸை நிறுத்துங்கடா..கடையை அடைங்கடா :))))
//ஹீரோயின் படம்தான் எனக்கு பிடிக்கல!! :-(//
சிவிஆர் அண்ணாத்த..என்னது தலைவியை பிடிக்கலையா??? பஸ்ஸை நிறுத்துங்கடா..கடையை அடைங்கடா :))))
::::))))))))))
இவ்வளவு வேகமான கதாநாயகி!!
எங்க அண்ணனுக்கு கூட கல்யாணம் ஆச்சுங்க ஆனா இந்த மாதிரியெல்லாம் ஒன்னுமே நடக்கலையே :((
வினையூக்கி சொன்ன மாதிரி அந்த படத்துல நல்லா இருப்பாங்க! இந்த photos சரி இல்லை
எப்பொழுதும் போல் அருமை வசனங்கள் வேகமான நடை :)
நன்று திவ்யா!
கோவில்பட்டி'யில் National Engineering College இருக்குதா :))
திவ்யா!!!!!!!
சூப்பர்......
தலைப்பே ரொம்ப அழகு!!!!
கதை ரொம்ப அருமை!!!!
தொடருங்கள்!!!
திவ்யா மாஸ்டர்,.. வழக்கம் போல.. கதை கலக்கல்.. அதிலும் அந்த கவிதைத் தனமான முடிவு.. இன்னும் சூப்பர்..:)
காய்கறி நறுக்க கத்துக்கறதுக்கு ஆறு மாசம் வேணுமா?:))
அந்த போட்டோக்கள் சூப்பரு..ஹிஹி..:)))))
படு வேகமாக முடிச்சிட்டிங்க ;))
நல்லாயிருக்கு...;)
அப்புறம் ஒரு சின்ன சந்தோகம் முதல்ல கதையை எழுதிட்டு இந்த போட்டோவை எல்லாம் எடுத்திங்களா...இல்லை இந்த போட்டோவை பார்த்தவுடன் தான் கதையை எழுதினிங்களா...அம்புட்டு அம்சமாக இருக்கு கதைக்கு ;))
Divya,
Kathai was Superb.
Unga heroine Poornima padu speed.
Unga kathaiya padichuttu College final year padikkura pasanga,ponnunga ellaam inime entha kalyaanathukkup porathaiyum miss panna maattaanga.
Enga enna jackpot adikkumonnu ella kalyaanathukkum poiyuruvaanga.
C.N.Raj.
அழகான கதை
பட்மும் தான்
அருமை! அருமை!!
ஆனால் அதற்குல் முடிந்துவிட்டதே என்று வருத்தமாக இருந்தது...
நன்றிகள் கோடி...
:) ஜாலியான நடை... :)
Very Good one...Mallarrum ninaivugalll.....
\\ வினையூக்கி said...
கதைக்கேற்ற தலைப்புங்க... எப்படிங்க உங்களுக்கு டயலாக்ஸ் கிடைக்குது.
எனக்குத் தலைகீழா நின்னு தண்னி குடிச்சாலும் வரல..
நல்லா இருக்கு.
இந்த ஹீரோயின் மல்லிகா கபூர் எனக்குப்பிடிக்குமுங்க.. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்துல இன்னும் அழகா இருப்பாங்க..\\
நன்றி வினை,
தலைகீழா நின்னு தண்ணி குடிச்சா டயலாக்ஸ் வரும்னு யாரு உங்களுக்கு சொல்லி கொடுத்தது??
அப்படி எல்லாம் விபரீதமா try பண்ணாதீங்க!
நீங்க குறிப்பிட்டிருக்கிற படத்தின் ஸ்டில்ஸ் தேடி பார்க்கிறேன்!
\\ Prabakar Samiyappan said...
Very cute and fresh …
Kalakureenga Poonga.. Photos are very nice..\
மீண்டும் என் வலைதளம் வந்தமைக்கு நன்றி பிரபாஹர்!
\\ Dreamzz said...
//ஹிந்தி பட நாயகிகள் அணியும் ஜமுக்கி தகதகக்கும் புடவையில் //
ஏன் தெலுங்கு பட ஹீரோயின் கூட போடுவாங்களே :P\
தெலுங்கு படம் எல்லாம் நாங்க பார்க்கிறதில்லீங்க!
\ Dreamzz said...
//அழகை அள்ளி கொடுத்துட்டு,
அறிவு கொடுக்க மறந்துட்டியே, ஆண்டவா!!!//
பொதுவாவே பொண்ணுங்க, அழகோ இல்லையோ அறிவு கம்மி தான் அப்பாடினு யாரோ சொன்னாங்களாம்...\\
அப்படி சொன்ன அந்த 'யாரோ' அடி முட்டாளாக இருந்திருப்பான்!
\\ Dreamzz said...
கதை, ஒரு பையன் point of viewla இருந்து எழுதியது வித்தியாசமா நல்லா இருந்தது.. பொதுவா, பசங்க தான் பொண்ணுங்க point of viewla எழுதி பாஇச்சு இருக்கேன்.. was different :)\
நன்றி Dreamzz!
\\ ஜொள்ளுப்பாண்டி said...
வாவ் திவ்யா
அப்படியே உற்சாகம் கரைபுரண்டு ஓடுது கதை முச்சூடும்.... இவ்ளோ ஸ்பீடான பொண்ணா..? கலக்குதுங்கோ உங்க ஹீரோயினும் அவுக பேசுற டயலாக்கும்.... :))))
\\
வாங்க பாண்டியண்ணே!
இப்பெல்லாம் பொண்ணுங்க படு ஸ்பீடுங்கண்ணா!!
\ ஜொள்ளுப்பாண்டி said...
//"ரொம்ப்பத்தான் அக்கறை, இப்பத்தான் கேட்க்கனும்னு தோனிச்சா! சாப்பிட்டாச்சு........சாப்பிட்டாச்சு!" என்று படபடவென்று பொரிந்தாள்.//
அதென்னாங்க உங்க ஹீரோயின் எல்லாம் ஹீரோவை போட்டு இப்படி எப்பவுமே வறுத்தெடுக்கறாங்க..? ;))))))))))\
என் கதையின் கதாநாயகி எல்லாருமே இப்படின்னு முத்திரை குத்திடுவீங்க போலிருக்குதே????
\ நிமல்/NiMaL said...
ஹாய் திவ்யா,
அழகான க(வி)தை...
மிகவும் ரசித்தேன்...
ஏன் நாம போற கல்யாணத்துக்கெல்லாம் இந்தமாதிரி பொண்ணுக வர்ரதே இல்ல.. ;)))\
ஹாய் நிமல்,
உங்கள் ரசிப்பிற்கு நன்றி!
நீங்க போற கல்யாணத்துக்கும் இப்படி பொண்ணுங்க வந்திருப்பாங்க, நீங்கதான் கவனிக்காம மிஸ் பண்ணியிருப்பீங்க, இனிமே 'கவனமா' கவணிங்க நிமல்.........குட் லக்!!
\\ Arunkumar said...
CVR sonnadhu maathiri enakkum andha heroine-a avalo pudikkala !!!
aama, unga heroine-ku eppo love vanduchu? annan payyana konjunadha paathu love vanducha??? ;)\\
ஹாய அருண்குமார்,
உங்களுக்கு பிடிச்ச ஹிரோயின் யாருங்க???
பூர்ணிமாவுக்கு லவ் எப்போ வந்துச்சுன்னு கதைல சொல்லியிருக்கா.....கண்டுபிடிங்க!
\\ கப்பி பய said...
டயலாக்கெல்லாம் கலக்கல்ஸ்!!\\
நன்றி கப்பி!
\\ Nallathamby said...
The story is so nicely threaded with little suspense. I admire your writing capacity.
Thanks
Deva\
ஹாய் தேவா அங்கிள்!
உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
\\ sathish said...
இவ்வளவு வேகமான கதாநாயகி!!
எங்க அண்ணனுக்கு கூட கல்யாணம் ஆச்சுங்க ஆனா இந்த மாதிரியெல்லாம் ஒன்னுமே நடக்கலையே :((
வினையூக்கி சொன்ன மாதிரி அந்த படத்துல நல்லா இருப்பாங்க! இந்த photos சரி இல்லை\
ஹாய் சதீஷ்,
உங்க அண்ணா கல்யாணத்துல நீங்க ஒரு வேலையும் செய்யாம ஒரு ஓரமா உக்காந்துட்டு இருந்திரூப்பீங்க......பிஸியா எல்லா வேலையும் இழுத்துப் போட்டுட்டு செய்யனும், அப்போதான நீங்க 'eligible bachelor'ன்னு வந்திருகிற பொண்ணுங்களுக்கு தெரியும்!
\\ sathish said...
எப்பொழுதும் போல் அருமை வசனங்கள் வேகமான நடை :)
நன்று திவ்யா!
கோவில்பட்டி'யில் National Engineering College இருக்குதா :))\\
பாராட்டிற்கு மிக்க நன்றி சதீஷ்!
கோவில்பட்டியில் 'National Engineering College ' இரூக்குது சதீஷ்!
[REC லெவல் ஆளூங்கலுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்பில்லை]
\\ எழில் said...
திவ்யா!!!!!!!
சூப்பர்......
தலைப்பே ரொம்ப அழகு!!!!
கதை ரொம்ப அருமை!!!!
தொடருங்கள்!!!\\
வாங்க எழில்,
வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
\\ ரசிகன் said...
திவ்யா மாஸ்டர்,.. வழக்கம் போல.. கதை கலக்கல்.. அதிலும் அந்த கவிதைத் தனமான முடிவு.. இன்னும் சூப்பர்..:)
காய்கறி நறுக்க கத்துக்கறதுக்கு ஆறு மாசம் வேணுமா?:))\\
ஹாய் ரசிகன்!
பாராட்டிற்கு நன்றி!
காய்கறி வெட்ட கத்துக்க ஆறுமாதம் ஜாஸ்தி தான்!!
\ ரசிகன் said...
அந்த போட்டோக்கள் சூப்பரு..ஹிஹி..:)))))\\
ஹா ஹா!
ரசிகனின் ரசிப்பே ரசிப்பு!!
\ கோபிநாத் said...
படு வேகமாக முடிச்சிட்டிங்க ;))
நல்லாயிருக்கு...;)
அப்புறம் ஒரு சின்ன சந்தோகம் முதல்ல கதையை எழுதிட்டு இந்த போட்டோவை எல்லாம் எடுத்திங்களா...இல்லை இந்த போட்டோவை பார்த்தவுடன் தான் கதையை எழுதினிங்களா...அம்புட்டு அம்சமாக இருக்கு கதைக்கு ;))\
கோபிநாத்,
இந்த கதையையே நாலு பகுதியா, வழக்கம்போல தொடர் கதையா போடலியான்னு நீங்க கேட்கிறாப்ல இருக்கு!!
கதைக்கு ஏற்ப தான் படம் தேடினேன்......ஆனால் தாத்தாவுடன் தான் இந்த ஹீரோயின் இருந்தார் ஃபோட்டோவில் , ஸோ...கதையிலும் பாட்டி கரெக்டரை தாத்தாவாக மாற்றிவிட்டேன்! மற்றபடி முதலில் கதை...அப்புறம் தான் படம்!!!
[கரெக்ட்டா கேள்வி கேட்குறீங்க கோபி!]
\\ C.N.Raj said...
Divya,
Kathai was Superb.
Unga heroine Poornima padu speed.
Unga kathaiya padichuttu College final year padikkura pasanga,ponnunga ellaam inime entha kalyaanathukkup porathaiyum miss panna maattaanga.
Enga enna jackpot adikkumonnu ella kalyaanathukkum poiyuruvaanga.
C.N.Raj.\\
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜ்!
\\ திகழ்மிளிர் said...
அழகான கதை
பட்மும் தான்\\
வாங்க திகழ்மிளிர்,
பாராட்டிற்கு மிக்க நன்றி!
\\ சின்ன கவுண்டர் (பெயருக்கு மட்டும்) said...
அருமை! அருமை!!
ஆனால் அதற்குல் முடிந்துவிட்டதே என்று வருத்தமாக இருந்தது...
நன்றிகள் கோடி...\\
வாங்க சின்ன கவுண்டர்,
கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்!
\\ இராம்/Raam said...
:) ஜாலியான நடை... :)\\
நன்றி இராம்!
\\ chinnasr said...
Very Good one...Mallarrum ninaivugalll.....\\
அட உங்களுக்கு இப்படி ஒரு மலரும் நினைவு இருக்கா??
பகிர்வுக்கு நன்றி chinnasr!
Excellent Divya :).
\\ Gayathri said...
Excellent Divya :).
\\
Thanks a lot Gayathri!
haahahaa...chancelenga..enaku romba pudihci poachu intha kathai :) semma litea..n semma flow..kalkiteenga :)
////ஹீரோயின் படம்தான் எனக்கு பிடிக்கல!! :-(//
சிவிஆர் அண்ணாத்த..என்னது தலைவியை பிடிக்கலையா??? பஸ்ஸை நிறுத்துங்கடா..கடையை அடைங்கடா :))))//
Athaane!!! CVR sonnathukaga innaikku oru paththu peraiyaavathu thee kulikka vaikanum :))
Nice Story...
Aana sila perukku pala ponnunga kitta ithu maathiri yaaraavathu pesunaa kaathula pugai varuthe.. appo ellaaraiyum love panraangannu arthamaa?? ;)))
Nice dialogues
\ gils said...
haahahaa...chancelenga..enaku romba pudihci poachu intha kathai :) semma litea..n semma flow..kalkiteenga :)\
கில்ஸுக்கு கதை ரொம்ப பிடிச்சு போச்சா??
இனிமே கல்யாண வீட்டிற்கெல்லாம் தவறாம மொய்யோட ஆஜராகிடுங்க கில்ஸ்!!
\\ ஜி said...
Nice Story...
Aana sila perukku pala ponnunga kitta ithu maathiri yaaraavathu pesunaa kaathula pugai varuthe.. appo ellaaraiyum love panraangannu arthamaa?? ;)))
\
Nice dialogues\
பையன் எந்த பொண்ணுகிட்ட பேசினாலும் காதுல புகை வந்தா.....அது ஒரு ரகம்,
ஆனா , சில் பெண்களிடம் பேசினா மட்டும் காதுல புகை வந்தா, அது கவனிக்க வேண்டிய விஷயம், அதுல காதல் இருக்க வாய்ப்பிருக்கு!
[சாருக்கு ஏதுவும் அனுபவமோ?? யார் காதுல புகை வர வைச்சீங்க சார்!]
முன்பு தாங்கள் எழுதிய ஒரு கதையைப்படித்தேன் (தலைப்பு நியாபகத்தில் இல்லை), சுமாராக இருந்தது, இந்த கதை சூப்பராக இருக்கிறது மிக வேகமான முன்னேற்றம். உங்கள் படைப்புகள் "சிறந்த" என்ற வகையில் இருந்து "மிகச்சிறந்த" என்ற வகைக்கு முன்னேற வாழ்த்துக்கள்!!
\ கருப்பன்/Karuppan said...
முன்பு தாங்கள் எழுதிய ஒரு கதையைப்படித்தேன் (தலைப்பு நியாபகத்தில் இல்லை), சுமாராக இருந்தது, இந்த கதை சூப்பராக இருக்கிறது மிக வேகமான முன்னேற்றம். உங்கள் படைப்புகள் "சிறந்த" என்ற வகையில் இருந்து "மிகச்சிறந்த" என்ற வகைக்கு முன்னேற வாழ்த்துக்கள்!!\
வாங்க மிஸ்டர்.கருப்பன்,
உங்கள் பின்னூட்டம் மிகுந்த உற்சாகத்தை அளித்தது,
எழுதார்வத்தையும் அதிகரித்தது,
என் எழுத்துக்களை இத்தனை கூர்ந்து கவனித்து, விமர்சித்ததிற்கு என் மனமார்ந்த நன்றி!!
பிப்ரவரி மாதத்து இந்த பதிவு இன்னைக்குதான் தமிழ்மணத்துல வருது !?!?!?
பேஷ் பேஷ் கதை ரொம்ப நன்னாயிருக்கு!!
வாவ் வாரே வாஹ்
//அழகை அள்ளி கொடுத்துட்டு,
அறிவு கொடுக்க மறந்துட்டியே, ஆண்டவா!!!//
ஒத்த வரியில் பொண்ணுங்கள பத்தி சொல்லிட்டீங்களே
\\ மங்களூர் சிவா said...
பிப்ரவரி மாதத்து இந்த பதிவு இன்னைக்குதான் தமிழ்மணத்துல வருது !?!?!?
பேஷ் பேஷ் கதை ரொம்ப நன்னாயிருக்கு!!\\
வாங்க சிவா,
இத.....இதத்தான் எதிர்பார்த்தேன்!!
http://sangamam-storage.blogspot.com/2008/03/divyas.html
\\ ILA(a)இளா said...
வாவ் வாரே வாஹ்
//அழகை அள்ளி கொடுத்துட்டு,
அறிவு கொடுக்க மறந்துட்டியே, ஆண்டவா!!!//
ஒத்த வரியில் பொண்ணுங்கள பத்தி சொல்லிட்டீங்களே\\
ஹா ஹா!
என்னங்க இளா.......ஒத்த வரியில பொண்ணுங்களை பத்தி புரிஞ்சுக்கிட்டீங்களோ??
வருகைக்கு மிக்க நன்றி இளா!!
\\ ILA(a)இளா said...
http://sangamam-storage.blogspot.com/2008/03/divyas.html\\
நன்றி....நன்றி இளா!!
ஆஹா... ஒரு முழுநீள படம் பார்த்த எஃபெக்ட்டு..:))))
சூப்பர்.சூப்பர்.சூப்பர்
//மிரண்ட மான் விழிகள்,
செதுக்கிய நாசி...
புன்னகை சிந்தும் செவ்விதழ்...
ஹிந்தி பட நாயகிகள் அணியும் ஜமுக்கி தகதகக்கும் புடவையில் ,
அழகின் மொத்த உருவமாய் அவள்...
மலைத்துப்போய் நான் விழிக்க, //
அடாடா,..,பசங்க கூட இப்டியெல்லாம் வர்ணிக்க முடியாது:P
//அடிப்பாவி நான் இன்னும் முழுசா உன்னை சைட் கூட அடிச்சு முடிக்கல, அதுக்குள்ளே கல்யாணம் ஆகாத எனக்கு ' பையன்'ன்னு இப்படி ஒரு குண்டு தூக்கி போடுறியே!//
அவ்வ்வ்வ்வ்வ்...... திவ்யா பின்னறிங்க போங்க :))
//"உங்க பேரு ராஜேஷ், சுமதி அக்காவின் பெரியம்மா மகன். பெங்களுரில் வேலைப்பார்க்கிறீங்க, சிங்கப்பூரில் 1 வருஷம் இருந்துட்டு 2 மாசத்துக்கு முன்னாடி தான் இந்தியாவிற்கு திரும்பி வந்தீங்க, மீண்டும் எப்போ வெளிநாட்டு ப்ரோஜக்ட் கிடைக்கும்னு காத்துட்டு இருக்கிறீங்க.
'வாழை இலை' கூட வெட்டத்தெரியாத.........eligible bachelor " ஒரு கேள்வி கேட்டா, பத்து பதில் சொல்லும் அவளது வெகுளித்தனமான பேச்சு இன்னும் அதிகம் என்னை கவர்ந்தது.//
உங்க ஊர்ல இதுக்கு பேருதான் வெகுளித்தனமா?..அவ்வ்வ் பலே கில்லாடியாக்கும்:P
//கைவிரல் அடிப்பட்டது வலிக்குதா?? ஊட்டி விடனுமா???" கண் சிமிட்டினாள்!!//
யப்பாஆஆ.. ராஜேசு.. கொடுத்து வைச்சவண்டா நீ :P
//ஹும் சரி, ஆனா அதுக்கு முன்னாடி கல்யாண மண்டபத்தோட மனேஜரை பார்த்துட்டு போகலாம்" என்றாள்.
"எதுக்கு" "ஆறு மாசம் கழிச்சு, நல்ல முகூர்த்த நாள் எதுன்னு அவர் ரூம் காலெண்டரைப் பார்த்து மண்டபம் புக் பண்ணத்தான்'//
ஏனுங்க திவ்யா மாஸ்டர்,இந்த மாதிரி பொண்ணு எந்த ஊர்ல கிடைப்பாங்கன்னு சொன்னா உதவியா இருக்கும்ல்ல :P:))))))
மூழு நீளக் கதை அருமை.:) வாழ்த்துக்கள்.
Really really enjoyed reading the story ....from the first line till the end such a luvly flow, hats off Divya, really adimire ur story telling talent:))
கதை நன்றாக இருக்கிறது திவ்யா :)
எப்படித்தான் பொருத்தமான படங்களாத் தேடிப்பிடிக்கிறீங்களோ?
சூப்பர் :)
\\ரசிகன் said...
ஆஹா... ஒரு முழுநீள படம் பார்த்த எஃபெக்ட்டு..:))))
சூப்பர்.சூப்பர்.சூப்பர்\\
வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி ரசிகன்!!
\ Shwetha Robert said...
Really really enjoyed reading the story ....from the first line till the end such a luvly flow, hats off Divya, really adimire ur story telling talent:))\
வாங்க ஸ்வேதா,
கதையை ரசித்து படித்தமைக்கு நன்றி!!
\\ எம்.ரிஷான் ஷெரீப் said...
கதை நன்றாக இருக்கிறது திவ்யா :)
எப்படித்தான் பொருத்தமான படங்களாத் தேடிப்பிடிக்கிறீங்களோ?
சூப்பர் :)\
வாங்க ரிஷான்,
உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கு நன்றி!!
படங்கள் பொருத்தமாக அமைந்தது எனக்கே வியப்பாக தான் இருந்தது!!
நல்லாதான் இருக்கு...... ஆனா கதைன்னா வழக்கமா இருக்கற முடிச்சு, திருப்பம் எதுவுமே இல்லையே.
சென்னைல இருந்து நெல்லைக்கு நெல்லை விரைவுவண்டி கிளம்புது........ நெல்லைக்கு போய் சேருது..... அம்புட்டுதான்னு சொல்ற மாதிரி கீது. ஒரு ஊர்ல ஒரு நரி கத அதோட சரிங்கற மாதிரியும் இருக்கே.......
Just like a delicious fast food at pizza corner - அழகான, ருசியான, கதை
Just like a delicious fast food at pizza corner - அழகான, ருசியான, கதை
கதை நன்றாக வந்துள்ளது. கதையை விட "screenplay" நன்றாக உள்ளது. பூர்ணிமா பேசும் வசனங்கள், யாவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்திருந்தது அருமை!
\\kadugu said...
நல்லாதான் இருக்கு...... ஆனா கதைன்னா வழக்கமா இருக்கற முடிச்சு, திருப்பம் எதுவுமே இல்லையே.
சென்னைல இருந்து நெல்லைக்கு நெல்லை விரைவுவண்டி கிளம்புது........ நெல்லைக்கு போய் சேருது..... அம்புட்டுதான்னு சொல்ற மாதிரி கீது. ஒரு ஊர்ல ஒரு நரி கத அதோட சரிங்கற மாதிரியும் இருக்கே.......\\
வாங்க கடுகு,
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!
\\Nanathini said...
Just like a delicious fast food at pizza corner - அழகான, ருசியான, கதை\\
உங்கள் ரசிப்பிற்கு நன்றி Nanathini!!
தீரன் said...
கதை நன்றாக வந்துள்ளது. கதையை விட "screenplay" நன்றாக உள்ளது. பூர்ணிமா பேசும் வசனங்கள், யாவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்திருந்தது அருமை!\\
வாங்க தீரன்,
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!
உங்களோட எல்லா சிறுகதைகளையும் இன்னைக்குத்தான் படிச்சுகிட்டு இருக்கேன். மொத்தமா சேர்த்து ஒரு மெயில் அனுப்பலாம்னு பார்த்தேன். ஆனா இந்த கதைய படிச்சதும் என் காதுல புகை வருதுங்க. நானும்தான் எத்தனையோ உறவுக்காரங்க கல்யாணத்துக்கெல்லாம் போயிட்டு வந்துகிட்டு இருந்தேன், என் வாழ்க்கையில இப்டியெல்லாம் நடக்கலையே...
ஒரே ஃபீலிங்ஸ் ஃபீலிங்ஸா ஆயிடுச்சுங்க.
\\ ஜோசப் பால்ராஜ் said...
உங்களோட எல்லா சிறுகதைகளையும் இன்னைக்குத்தான் படிச்சுகிட்டு இருக்கேன். மொத்தமா சேர்த்து ஒரு மெயில் அனுப்பலாம்னு பார்த்தேன். ஆனா இந்த கதைய படிச்சதும் என் காதுல புகை வருதுங்க. நானும்தான் எத்தனையோ உறவுக்காரங்க கல்யாணத்துக்கெல்லாம் போயிட்டு வந்துகிட்டு இருந்தேன், என் வாழ்க்கையில இப்டியெல்லாம் நடக்கலையே...
ஒரே ஃபீலிங்ஸ் ஃபீலிங்ஸா ஆயிடுச்சுங்க.\\
வாங்க ஜோசஃப்,
ரொம்பவே ஃபீலிங்க்ஸ் ஆஃப் சிங்கபூராகிட்டீங்க போலிருக்கு:(
காதுல புகை வர்ர அளவிற்கெல்லாம் ஃபீல் பண்ண கூடாதுங்க......அது அதுக்கு கொடுத்து வைக்கனுமில்லீங்க:))
என் பழைய பதிவுகளை நேரம் எடுத்து படித்ததிற்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!
Nice...!
\ Karthik said...
Nice...!\\
நன்றி கார்த்திக்!!
Post a Comment