January 21, 2008

புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க!!!

நீங்க ...
புதிதாக திருமணமான மணப்பெண்ணா?
விரைவில் மனவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போகும் பெண்ணா?
இதோ உங்களுக்கான சில குறிப்புகள்..

*புது மனைவி சூப்பரா சமைச்சுப்போடுவா அப்படின்னு ஆசையோட இருக்கிற உங்கள் கணவர், சமயலறையில் நீங்க ஒரு பேப்பரில் சமையல் குறிப்பையோ, 'சமைப்பது எப்படி'ன்னு ஒரு புக்கையோ பார்த்து சமைப்பதை பார்த்தால், நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்.

அதனால், என்ன சமையல் செய்தாலும் முதலிலேயே சமையல் குறிப்பை மனப்பாடம் செய்துடுங்க.
உதாரணத்திற்க்கு, சாம்பார் செய்யனும்னா, அதின் சமையல் குறிப்பு ஒரு பத்து வரிகள் தான் இருக்கும், இது மனப்பாடம்செய்ய முடியாதா?
[காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் பாடம் புரிஞ்சாப் பாடிச்சோம், மாங்கு மாங்குன்னு மனனம் செய்திட்டு எக்ஸாம் பேப்பர்ல கொட்டிட்டு, பாஸ் ஆகிடலியா - அது மாதிரிதான்]
சமையல் உங்களுக்கு அத்துப்பிடின்னு ஆக்ட் விடனும்னா இப்படி மனப்பாடம் செய்துட்டு சமையலறையில் கலக்குங்க.
உங்கள் கணவரும்," எவ்வளவு சுறுசுறுப்பா சமையல் புக் எதுவும் பார்க்காம சமைக்கிறா, நல்லா சமைப்பா போலிருக்கு" அப்படின்னு நினைச்சுட்டே சாப்பிட உட்காருவாரு. அப்போ உங்க சமையல் சொதப்பலா இருந்தாலும் ரொம்ப பாதிக்காது.
அப்படியே கொஞ்சம் புளி , உப்பு, காரம் ஏதாவது குறை சொன்னா, " ஸாரிங்க, 'எப்பவுமே' இந்த சாம்பார்ல உப்பு மட்டும் எனக்கு தகராராவே இருக்கு" அப்படின்னு 'எப்பவுமே'ன்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னா, அடிக்கடி சாம்பார் வைச்சவதான் கொஞ்சம் உப்பு ஜாஸ்தியாய் போச்சுன்னு கண்டுக்கமாட்டார்.

*உங்கள் கணவருக்கு ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு இருந்தால், நீங்களும் அவர் விரும்பும் விளையாட்டை பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லீனா அவரோட விருப்பமான ஸ்போர்ட்ஸ் பத்தி அவரு உங்ககிட்ட பேசினா, 'பே'ன்னு நீங்க முழிச்சுக்கிட்டு இருக்கனும். கொஞ்சம் அது பத்தி தெரிஞ்சு வைச்சுக்கிட்டா 'நல்லா' தெரிஞ்ச மாதிரி ஆக்ட் விட்டுக்க வசதியாயிருக்கும்.

*கணவனுக்கு எது பிடிக்கும், அவருடைய ஆழ்ந்த விருப்பம் என்ன? எதை செய்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்றெல்லாம் மட்டும் தெரிந்து வைத்திருப்பது போதாது.
அவருக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷய்ங்களை வெறுக்கிறார், எதை செய்யும் போது அவருடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயம்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*திருமணம் ஆனவுடனே, உங்கள் கணவர் தன் நண்பர்களை விட்டு முழுவதுமாய் பிரிந்துவிட வேண்டும் என் எதிர்பார்க்கக் கூடாது. பேச்சுலர் லைஃபிலிருந்து அவர் மனநிலை புதிய திருமண பந்ததிற்க்கு வர கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.
அவருடைய நண்பர்களை பற்றி அவர் உங்களிடம் பேசினால், அலட்ச்சியப்படுத்தாமல் கேளுங்கள். அவர் நண்பர்களும் அவருடைய வாழ்க்கையின் ஒரு பங்குதான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இதில் நீங்கள் தன்னலத்துடன் நடக்க முயற்ச்சிக்க கூடாது, அதே வேளையில் உங்கள் இடத்தையும் விட்டுதரக் கூடாது.

*உங்களுடன் ஷாப்பிங் செல்வதற்க்கு உங்கள் கணவருக்குச் சலிப்பு ஏற்படுகின்றதென்றால், உங்கள் தோழிகளுடன் ஷாப்பிங் சென்று நீங்களே உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!

*நீங்க ரொம்ப 'சென்டிமென்டல்' டைப்பாக இருந்தால், உங்களை மாற்றிக்கொள்ள முயற்ச்சியுங்கள், முடியவில்லையென்றால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமலாவது இருங்கள்.
ஏனென்றால், 'சென்டி','எமோஷனல்' அழுமூஞ்சி மனைவியினால் கணவனின் மனதை கொள்ளையடிப்பது கடினம்.
உணர்வுகளையும், அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்[தெரியாதவர்கள்] ஆண்கள், அதனால் பெண்களும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் சமநிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* சொன்ன நேரத்திற்க்கு வீட்டிற்க்கு வந்து, அவரால் உங்களை வெளியில் அழைத்துச்செல்ல முடியவில்லையென்றாலோ, உங்கள் பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களை நினைவில் வைத்துக்கொள்ள அவர் தவறினாலோ, கத்தி ஆர்பாட்டம் பண்ணாமல் அமைதியாக பொறுமையுடன் இருங்கள்.
நீங்கள் சண்டைபோட்டு, அமர்க்களம் பண்ணினாலும் அவர்கள் நினைவாற்றலை அதிகரிப்பது சாத்தியமில்லை.
'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'.

வீண் முயற்ச்சியும், ஆர்பாட்டங்களும் எதற்கு கொஞ்சம் விட்டுபிடியுங்கள்!

சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும், சில விஷயங்களை அலட்ச்சியப்படுத்த வேண்டும்!

* அவருடைய அம்மாவை அவர் புகழ்ந்துப் பேசினால், உடனே பொசுக்குன்னு கோபபட்டு மூஞ்சி தூக்கிக்காதீங்க.
உங்கள் கணவரிடம் அவருடைய அம்மா, மற்றும் குடும்பத்தாரை அவ்வப்போது மனதார பாராட்டுங்கள்,
பாராட்டுக்களுக்கு நடுவே உங்கள் புகார்களை தொடுத்தால், தாக்கம் அதிகமில்லாமல் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்புண்டு.

* எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயிரம் கனவுகளையும், கற்பனைகளையும் வளர்த்துக் கொண்டு மனவாழ்க்கையை ஆரம்பிக்காதிருங்கள்,

'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!'

73 comments:

said...

//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!' //

திவ்யா :)))
இவ்ளோ தானா விசயம்?? :)))

சூப்பருங்கம்மணி...

said...

//'எப்பவுமே'ன்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னா, அடிக்கடி சாம்பார் வைச்சவதான் கொஞ்சம் உப்பு ஜாஸ்தியாய் போச்சுன்னு கண்டுக்கமாட்டார்.//

அப்பாவி புருசங்களை இப்படி ஏமாத்த ஐடியா கொடுக்குறீயளே.. பாவம் கணவன்ஸ்...;))))) ஏமாறாதீங்கோ வூட்டுக்காரவுகளே...

said...

//உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!//

ஆஹா என்னா ஒரு பரந்த மனசுன்னு நெனச்சுகிட்டே படிச்சா வச்சீங்கள்ள கணவனோட பர்ஸுக்கு மெகா சைஸல ஒரு ஆப்பு.... !!!

அப்பூ பார்த்து சூதானமா நடந்துக்கோங்க...

said...

//நீங்கள் சண்டைபோட்டு, அமர்க்களம் பண்ணினாலும் அவர்கள் நினைவாற்றலை அதிகரிப்பது சாத்தியமில்லை.
'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'.//

திவ்யா அம்மணி
இதெல்லாம் நெம்ம ஓவருங்கோ.... பசங்களை பத்தி இப்படியெல்லாம் தப்பா சொல்லாதீங்க...

நினைவாற்றல் கல்யாணத்துக்கு முன்ன பசங்களுக்கு ச்சும்மா கன்னா பின்னானு இருக்கும் தெரியும்லா... அப்புறம் தான் நீங்க வகை தொகை இல்லாம சமைச்சு போட்டு மூளைய மழுங்கடிச்சிடீறீங்களே.... ;)))))

நோ நோ நோ பேச்சு பேச்சாதான் இருக்கனும் இப்படியெல்லாம் ஓவரா காலை வாரக்கூடாது ஒகேஸ்..??
:))))))

said...

அப்பாடா, ஒரு நல் இதயம் ஒரு நல் கருத்தை சொல்லிருச்சுங்க. அருமையான பதிவு.. எல்லாப் பொண்ணுங்களும் படிக்கனும், கண்டிப்பா பின்பற்றனும்

said...

//'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'//
சூப்பர்:-))))))))))

said...

Relationship Specialist Divya sonna sariyaa thaan irukkum :)

said...

டிப்ஸ் டிப்ஸா சூப்பரா கொடுத்த திவ்யா இன்றிலிருந்து ""டிப்ஸ்" திவ்யா என்று அழைக்கப்படுவார். :-)

said...

இந்த தடவை எல்லா டிப்ஸும் ரொம்ப பிராக்டிக்கலா இருக்கு. கண்டீப்பா புதுசா கட்டிக்கிட்ட ஜோடிக்கு எல்லாம் யூஸ்புல்லா இருக்கும் திவ்யா. :-)

Anonymous said...

/'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'./

you are right. All the points are really useful. Excellent post.

Rumya

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!' //

திவ்யா :)))
இவ்ளோ தானா விசயம்?? :)))

சூப்பருங்கம்மணி...\\

வாங்க பாண்டியண்ணே!

அவ்வளவேதான் விசயம்!!

பாராட்டிற்கு நன்றி!

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//'எப்பவுமே'ன்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னா, அடிக்கடி சாம்பார் வைச்சவதான் கொஞ்சம் உப்பு ஜாஸ்தியாய் போச்சுன்னு கண்டுக்கமாட்டார்.//

அப்பாவி புருசங்களை இப்படி ஏமாத்த ஐடியா கொடுக்குறீயளே.. பாவம் கணவன்ஸ்...;))))) ஏமாறாதீங்கோ வூட்டுக்காரவுகளே...\\

கணவன்ஸ்க்கெல்லாம் எச்சரிக்கை விடுறீங்களா பாண்டி!!

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!//

ஆஹா என்னா ஒரு பரந்த மனசுன்னு நெனச்சுகிட்டே படிச்சா வச்சீங்கள்ள கணவனோட பர்ஸுக்கு மெகா சைஸல ஒரு ஆப்பு.... !!!

அப்பூ பார்த்து சூதானமா நடந்துக்கோங்க...\

Shopping க்கு கூட வரதான் சலிச்சிக்கிறாங்க.....காசு கொடுக்கவும் சலிச்சுக்கிட்டா என்ன அர்த்தம்??

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//நீங்கள் சண்டைபோட்டு, அமர்க்களம் பண்ணினாலும் அவர்கள் நினைவாற்றலை அதிகரிப்பது சாத்தியமில்லை.
'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'.//

திவ்யா அம்மணி
இதெல்லாம் நெம்ம ஓவருங்கோ.... பசங்களை பத்தி இப்படியெல்லாம் தப்பா சொல்லாதீங்க...

நினைவாற்றல் கல்யாணத்துக்கு முன்ன பசங்களுக்கு ச்சும்மா கன்னா பின்னானு இருக்கும் தெரியும்லா... அப்புறம் தான் நீங்க வகை தொகை இல்லாம சமைச்சு போட்டு மூளைய மழுங்கடிச்சிடீறீங்களே.... ;)))))

நோ நோ நோ பேச்சு பேச்சாதான் இருக்கனும் இப்படியெல்லாம் ஓவரா காலை வாரக்கூடாது ஒகேஸ்..??
:))))))\\

அப்படியே 'வகை தொகை'யா சமைச்சுப்போடலீன்னா மட்டும் ரொம்ப ஞாபக சக்தி உண்டாக்கும்??

உடன் பிறந்த 'மறதி'குணத்தை மாற்றுவது கடினம் தானே???

said...

\\ ILA(a)இளா said...
அப்பாடா, ஒரு நல் இதயம் ஒரு நல் கருத்தை சொல்லிருச்சுங்க. அருமையான பதிவு.. எல்லாப் பொண்ணுங்களும் படிக்கனும், கண்டிப்பா பின்பற்றனும்\

வாங்க ஊர்காரரே!
உங்கள் பாராட்டிற்கு ரொம்ப.....ரொம்ப நன்றி!!

said...

\\ தங்ஸ் said...
//'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'//
சூப்பர்:-))))))))))\

நன்றி தங்ஸ்!

said...

\\ Arunkumar said...
Relationship Specialist Divya sonna sariyaa thaan irukkum :)\\

நன்றி அருண்!

said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
டிப்ஸ் டிப்ஸா சூப்பரா கொடுத்த திவ்யா இன்றிலிருந்து ""டிப்ஸ்" திவ்யா என்று அழைக்கப்படுவார். :-)\

ஆஹா!!!! மை ஃபிரண்ட்,
புது பெயர் எல்லாம் சூட்டி அசத்திபுட்டீங்க என்னை!

நன்றி ! நன்றி !

said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
இந்த தடவை எல்லா டிப்ஸும் ரொம்ப பிராக்டிக்கலா இருக்கு. கண்டீப்பா புதுசா கட்டிக்கிட்ட ஜோடிக்கு எல்லாம் யூஸ்புல்லா இருக்கும் திவ்யா. :-)\

டிப்ஸ் ப்ராக்டிக்கலா இருக்குதா?
நீங்க ஒத்துக்கிட்டா சரிதான் அம்மனி!

said...

\\ Anonymous said...
/'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'./

you are right. All the points are really useful. Excellent post.

Rumya\\

Hi Rumya,
Thanks for your visit & sharing your views in the comment!!

said...

//Relationship Specialist Divya sonna sariyaa thaan irukkum :)///

ரிப்பீட்டேய்

எப்பவும் போல அசத்தலான உறவுக்குறிப்புகளுடனான பதிவு!!!

வாழ்த்துக்கள் மேடம்!! :-)

said...

//காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் பாடம் புரிஞ்சாப் பாடிச்சோம், மாங்கு மாங்குன்னு மனனம் செய்திட்டு எக்ஸாம் பேப்பர்ல கொட்டிட்டு, பாஸ் ஆகிடலியா - அது மாதிரிதான்//
கடைசியா உண்மையா ஒத்துகிட்டாங்களோ ;)

said...

//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!' //
காபியில உப்பு போட கூடாது...
ரசத்தில் சக்கரை கொட்ட கூடாது;)
இப்படீ சொல்லுவீங்கனு பார்த்தா..
புத்தர் மாதிரி.. ஆசசயை தவிர் ரேஞ்சில சொல்லிட்டீங்களே மாஸ்டர்...

said...

//அப்பாவி புருசங்களை இப்படி ஏமாத்த ஐடியா கொடுக்குறீயளே.. பாவம் கணவன்ஸ்...;))))) ஏமாறாதீங்கோ வூட்டுக்காரவுகளே...//
ரிப்பீட்டு!

said...

//ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!////
ஆஹா இது வேறையா.. :( :(
ஆண்களுக்கு ஏதும் டிப்ஸ் சொல்லுங்களேன் ப்ளீஸ்

said...

டிப்ஸ்பதிவு நல்லா இருக்குங்க திவ்யா..

said...

//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!' //

அட, அடிக்கடி நான் தங்கமணியிடம் சொல்லும் வார்த்தைகள் :)

சரிங்க, இது எல்லாமே மனைவிகள் கணவர்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிப் போகனும்ங்குறமாதிரியே இருக்கே? ஆண்கள் அட்ஜஸ்ட் பண்ணிப் போறமாதிரியும் டிப்ஸ் குடுங்களேன் :)

said...

திவ்யா, எழுதுவது பெண் என்பதனால் கொடுக்கும் டிப்ஸ் அனைத்துமே பெண்ணை விட்டுக் கொடுக்கப் பழக்குபவையாகவே இருக்கின்றன. தவறில்லை. இருப்பினும் ஆழ் மனதில் உள்ள வருத்தமும் யதார்த்த நிலையை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும், லேசாக பதிவில் இழையோடுகிறது. காலங்கள் மாறுகின்றன, இப்போது ஆண் பெண் இருவருமே இணைந்து, கலந்து பேசி செயலாற்றுகின்றனர். பெண்களும் அயல் நாடு செல்வதும், வேலைக்குச் செல்வதுமாக இருப்பதனால் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. காலம் இன்னும் மாறும்.

said...

//*புது மனைவி சூப்பரா சமைச்சுப்போடுவா அப்படின்னு ஆசையோட இருக்கிற உங்கள் கணவர், சமயலறையில் நீங்க ஒரு பேப்பரில் சமையல் குறிப்பையோ, 'சமைப்பது எப்படி'ன்னு ஒரு புக்கையோ பார்த்து சமைப்பதை பார்த்தால், நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்.//

சமையல் நன்றாக செய்தால் மனைவியா ?
:))

ஆணிய பார்வையுடன் எழுதப்பட்டு இருக்கிறது. ஆண்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவேண்டும் என்று பெண்ணை தயார்படுத்துவதே ஆண் அடிமைத்தனம் !!!

:))))))))))))))))0

said...

//இது எல்லாமே மனைவிகள் கணவர்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிப் போகனும்ங்குறமாதிரியே இருக்கே? ஆண்கள் அட்ஜஸ்ட் பண்ணிப் போறமாதிரியும் டிப்ஸ் குடுங்களேன் :)//

கல்யாணம் பண்ணிக் கொள்ளனும் என்று முடிவு செய்து கொள்கிறானே, அதுக்கு அப்பறம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ள ஏதாச்சும் இருக்காய்யா ?
:)))

சாலமன் பாப்பையா ஸ்டைலில் படிக்கவும்.

said...

//எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம//

Expect the Un-expected னு சொல்வாய்ங்க.... கரெக்டுதான்... தேவைப்படும்... எப்படி சமாளிக்கிறான்னு கண்டுபுடிக்க ;)))

Anonymous said...

//நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்//

இதுக்குதான் நல்லா சமைக்குற புருசன் வேண்டும்ன்னு சொல்லுறது.அவரே சமைச்சால் இப்படி பயந்து பயந்து சாப்பிட வேண்டாமே ;)

Anonymous said...

//அதின் சமையல் குறிப்பு ஒரு பத்து வரிகள் தான் இருக்கும், இது மனப்பாடம்செய்ய முடியாதா?//

ஹிஹி.எனக்கு STM...புரியவில்லையா?short term memory.இது எல்லாம் எப்படி மனப்பாடம் பண்ணுறதுன்னு ஒரு பதிவு போடுங்க ;D

said...

ரொம்ப சரியாத்தான் சொல்லியிருகிங்க.. ஆனா பெண்களை விட ஆண்கள் தான் ரொம்ப பாவம். இந்த குழப்பவாதி பெண்களை புரிஞ்சுக்கவே முடியறதில்லையே.. :P.. திவ்யா மாஸ்டர்..ஆண்களுக்காகவும் ஒரு போஸ்ட் போட்டுருங்களேன்..ஹிஹி...

said...

//உங்களுடன் ஷாப்பிங் செல்வதற்க்கு உங்கள் கணவருக்குச் சலிப்பு ஏற்படுகின்றதென்றால், உங்கள் தோழிகளுடன் ஷாப்பிங் சென்று நீங்களே உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!//

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.இதை சொன்னதுக்கு எத்தனை பொட்டி வந்துச்சு உங்களுக்கு? :P
அப்பாவி புது மாப்பிள்ளைகளே,உங்களுக்கு சப்போட் பண்ணறாஙகளாக்குன்னு நெனச்சு கிரிடிட் கார்ட மனைவிக்கிட்ட குடுத்துட்டு ஷாப்பிங் அனுப்பிட்டிங்கன்னா.. உங்க் அந்த மாச சம்பளம் வீட்டுக்கு வராதுங்கோ..:)))))))
நேரா கிரிடிட் கார்டு கம்பெனிக்கு போயிரும்ல்ல..ஹிஹி..

said...

//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!'//

இந்தச் சின்ன வயசுலேயே உங்களுக்குள்ள இம்புட்டு ஞானமா? சூப்பரு...சூப்பரு...எங்க வூட்டம்மணியைப் படிக்கச் சொல்றேன். படிச்சிக்கிட்டே அமெரிக்கால பார்ட்-டைம் கவுன்சிலிங் செண்டர் ஆரம்பிக்கலாம் நீங்க.
:)

said...

குறிப்பு எல்லாம் சரிங்க…
இப்படி பொதுவுல சொல்லிட்டீங்களே… கணவர்கள் எல்லாம் உஷாராயிட மாட்டாங்களா? ;-)

said...

//வீண் முயற்ச்சியும், ஆர்பாட்டங்களும் எதற்கு கொஞ்சம் விட்டுபிடியுங்கள்!
சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும், சில விஷயங்களை அலட்ச்சியப்படுத்த வேண்டும்!//

இது! முயற்சி வீண்தான்..ஜீரணித்து ஜீரணித்து ... digestive system பாழாய்ப் போய் விடுகிறது..

நல்ல டிப்ஸ் திவ்யா..

said...

\\* எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயிரம் கனவுகளையும், கற்பனைகளையும் வளர்த்துக் கொண்டு மனவாழ்க்கையை ஆரம்பிக்காதிருங்கள்,

'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!\\

இதுதான் விஷயமே! ;)

\\\Arunkumar said...
Relationship Specialist Divya sonna sariyaa thaan irukkum :)\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய

said...

//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்//

ஆமாம். எப்பவுமே .....

ஆனால்..... மனுச ஜென்மம் கற்பனையும் கனாவும் காணாம இருக்குமா எப்பவுமே?

//'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'.//

அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா? குறைஞ்சபட்சம் அம்பதுலே(ஒடிச்சு) வளைச்சுறலாம்.. :-))))

said...

//
* அவருடைய அம்மாவை அவர் புகழ்ந்துப் பேசினால், உடனே பொசுக்குன்னு கோபபட்டு மூஞ்சி தூக்கிக்காதீங்க.
//

எங்களுக்கும் சூதுவாது தெரியுமப்பு... நாங்கள்ளாம் எங்க அம்மாவையோ இல்லை தங்கச்சிகளையோ புகழ்ந்து பேசமாட்டோம்ல... மாறாக உங்கள் சொந்தக்காரங்களான உங்க மாமியார், நாத்தனார் இவங்களதான் புகழ்ந்து பேசுவேம்... ஹீ... ஹீ

said...

நான் கண்டிப்பா கல்யாணத்து முன்னாடி பொண்ணை திவ்யாகிட்ட கவுன்சலிங் அனுப்புவேன்னு சூடம் அனைச்சு சத்தியம் பன்னியிருக்கேன்.

வாழ்க திவ்யா... வளர்க அவரது சமூகசேவை!!

Anonymous said...

Tipu Tipu Tipu Tipu Tipu Kumari
Tips allikodukkum tips divya kumari......( Baba stylil padavum)-- padippavan

said...

ஏனுங்க திவ்ஸ்... எதாச்சு கல்யாணம்.காம் கம்பெனி நடத்துறீங்களா?? இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க...

said...

ஹாய் திவ்யா,
சூப்பர் டிப்ஸ்...!

//'எப்பவுமே'ன்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னா, அடிக்கடி சாம்பார் வைச்சவதான் கொஞ்சம் உப்பு ஜாஸ்தியாய் போச்சுன்னு கண்டுக்கமாட்டார்.//
அடடா இப்படியெல்லாம் வேற இருக்கா...

//உணர்வுகளையும், அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்[தெரியாதவர்கள்] ஆண்கள், அதனால் பெண்களும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் சமநிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.//
அர்த்தமுள்ள வார்த்தைகள், இந்த புரிலே பல பிரச்சினைகளை தவிர்த்துவிடும்...

நல்ல புரிதலோடுதான் இருக்கிறீங்க, அதுவும் வாழ்க்கையின் இனிமையே புரிதலில் தான் இருக்கிறது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீங்க...

//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!'//
முத்தாய்ப்பாய் ஒரு கடைசி வரி...

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்...!

said...

\\ CVR said...
//Relationship Specialist Divya sonna sariyaa thaan irukkum :)///

ரிப்பீட்டேய்

எப்பவும் போல அசத்தலான உறவுக்குறிப்புகளுடனான பதிவு!!!

வாழ்த்துக்கள் மேடம்!! :-)\\

வாழ்த்துக்களுக்கு நன்றி சிவிஆர் சார்!!

said...

\\ Dreamzz said...
//காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் பாடம் புரிஞ்சாப் பாடிச்சோம், மாங்கு மாங்குன்னு மனனம் செய்திட்டு எக்ஸாம் பேப்பர்ல கொட்டிட்டு, பாஸ் ஆகிடலியா - அது மாதிரிதான்//
கடைசியா உண்மையா ஒத்துகிட்டாங்களோ ;)\\

ஹிஹிஹி!
உண்மையை ஒத்துக்க தயக்கமென்ன??

said...

\\ Dreamzz said...
//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!' //
காபியில உப்பு போட கூடாது...
ரசத்தில் சக்கரை கொட்ட கூடாது;)
இப்படீ சொல்லுவீங்கனு பார்த்தா..
புத்தர் மாதிரி.. ஆசசயை தவிர் ரேஞ்சில சொல்லிட்டீங்களே மாஸ்டர்...\

ஹாய் Dreamzz,
ஆசையை தவிர்க்க சொல்லவில்லை,
எதிர்பார்ப்புகளை மட்டும்தான் குறைக்க சொல்றோம்!

said...

\\ Dreamzz said...
//ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!////
ஆஹா இது வேறையா.. :( :(
ஆண்களுக்கு ஏதும் டிப்ஸ் சொல்லுங்களேன் ப்ளீஸ்

ஆண்களுக்கும், 'மனைவியின் மனதை கவர்வதெப்ப்படி' என்று டிப்ஸ் போஸ்ட் போட்டேனே....நீங்க படிக்கலீங்களா??

said...

\ Dreamzz said...
டிப்ஸ்பதிவு நல்லா இருக்குங்க திவ்யா..\

நன்றி Dreamzz!!

said...

\\ தஞ்சாவூரான் said...
//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!' //

அட, அடிக்கடி நான் தங்கமணியிடம் சொல்லும் வார்த்தைகள் :)

சரிங்க, இது எல்லாமே மனைவிகள் கணவர்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிப் போகனும்ங்குறமாதிரியே இருக்கே? ஆண்கள் அட்ஜஸ்ட் பண்ணிப் போறமாதிரியும் டிப்ஸ் குடுங்களேன் :)\\

நீங்க உங்க மனைவியிடம் சொல்லும் வார்த்தைகளா இவை?? ஆஹா!! அப்போ கரெக்ட்டா தான் சொல்லியிருக்கிறேன்!

ஆண்களுக்கான டிப்ஸ் இங்கே ..
http://manasukulmaththaapu.blogspot.com/2006/12/blog-post_18.html

வருகைக்கும்,கருத்துக்களை பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி!

said...

//அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் [தெரியாதவர்கள்] ஆண்கள்//

திவ்யா....நல்ல காலம்! அடைப்புக்குள் (bracketக்குள்) போட்டீங்க! இல்லீன்னா இந்நேரம் உங்க கிட்ட சண்டை பிடிச்சிருப்பேன்! :-)

//துர்கா said...
இதுக்குதான் நல்லா சமைக்குற புருசன் வேண்டும்ன்னு சொல்லுறது.அவரே சமைச்சால் இப்படி பயந்து பயந்து சாப்பிட வேண்டாமே ;)//

அலோ தங்கச்சி...
இது என்ன சந்துக்குள் சிந்தா, கோடுக்குள் ரோடா, இல்லை டிப்ஸ்-க்குள் சிப்ஸா? :-))

said...

//Dreamzz said...
ரசத்தில் சக்கரை கொட்ட கூடாது;)
இப்படீ சொல்லுவீங்கனு பார்த்தா..
//

தல...தித்திப்பு ரசம், பைனாப்பிள் ரசம் சாப்பிட்டதில்லையா நீங்க? , வெல்லம், நாட்டுச் சர்க்கரை, எக்ஸ்ட்ரா மிளகு போட்டும் ரசம் உறைப்பா வைக்கலாம்! :-)

//Dreamzz said...
//ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!////
ஆஹா இது வேறையா.. :( :(//

தினேசு...திவ்யா சொல்றா மாதிரியே வுட்டுருங்க!
காசு கொடுத்தா சிம்பிளா முடிஞ்சிரும்!
கூடப் போனாக் கூடாரமே காலி ஆயிரும்! :-)
உங்களுக்கு எது வேணும்? நீங்களே முடிவு பண்ணிக்குங்கப்பு! :-))

said...

\\ cheena (சீனா) said...
திவ்யா, எழுதுவது பெண் என்பதனால் கொடுக்கும் டிப்ஸ் அனைத்துமே பெண்ணை விட்டுக் கொடுக்கப் பழக்குபவையாகவே இருக்கின்றன. தவறில்லை. இருப்பினும் ஆழ் மனதில் உள்ள வருத்தமும் யதார்த்த நிலையை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும், லேசாக பதிவில் இழையோடுகிறது. காலங்கள் மாறுகின்றன, இப்போது ஆண் பெண் இருவருமே இணைந்து, கலந்து பேசி செயலாற்றுகின்றனர். பெண்களும் அயல் நாடு செல்வதும், வேலைக்குச் செல்வதுமாக இருப்பதனால் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. காலம் இன்னும் மாறும்.\

வாங்க சீனா சார்!

காலமாறுதல் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரித்திருப்பது உண்மைதான், ஆனால்......அப்பெண்களின் சதவீதம் மிக மிக குறைவு.

ஆழ்மனதின் எண்ணங்கள் பதிவில் இழையோடுவதை கவனித்தமைக்கு பாராட்டுக்கள் சீனா சார்!

said...

\\ கோவி.கண்ணன் said...
//*புது மனைவி சூப்பரா சமைச்சுப்போடுவா அப்படின்னு ஆசையோட இருக்கிற உங்கள் கணவர், சமயலறையில் நீங்க ஒரு பேப்பரில் சமையல் குறிப்பையோ, 'சமைப்பது எப்படி'ன்னு ஒரு புக்கையோ பார்த்து சமைப்பதை பார்த்தால், நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்.//

சமையல் நன்றாக செய்தால் மனைவியா ?
:))

ஆணிய பார்வையுடன் எழுதப்பட்டு இருக்கிறது. ஆண்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவேண்டும் என்று பெண்ணை தயார்படுத்துவதே ஆண் அடிமைத்தனம் !!!

:))))))))))))))))0\\

' the best way to a man's heart;)
is through his stomach'

கருத்துக்களுக்கு நன்றி கோவி.கண்ணன்.

said...

\ கோவி.கண்ணன் said...
//இது எல்லாமே மனைவிகள் கணவர்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிப் போகனும்ங்குறமாதிரியே இருக்கே? ஆண்கள் அட்ஜஸ்ட் பண்ணிப் போறமாதிரியும் டிப்ஸ் குடுங்களேன் :)//

கல்யாணம் பண்ணிக் கொள்ளனும் என்று முடிவு செய்து கொள்கிறானே, அதுக்கு அப்பறம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ள ஏதாச்சும் இருக்காய்யா ?
:)))

சாலமன் பாப்பையா ஸ்டைலில் படிக்கவும்.\\

நன்றி.....நன்றி...கோவி.கண்ணன்!!

said...

\\ ஜி said...
//எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம//

Expect the Un-expected னு சொல்வாய்ங்க.... கரெக்டுதான்... தேவைப்படும்... எப்படி சமாளிக்கிறான்னு கண்டுபுடிக்க ;)))\

ஹாய் ஜி!
சமாளிப்பை கண்டுபிடிக்க ரெடியாகிட்டீங்க போலிருக்கு!!
வருகைக்கு நன்றி ஜி!!

said...

\\ துர்கா said...
//நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்//

இதுக்குதான் நல்லா சமைக்குற புருசன் வேண்டும்ன்னு சொல்லுறது.அவரே சமைச்சால் இப்படி பயந்து பயந்து சாப்பிட வேண்டாமே ;)\\

ஹா! ஹா ! துர்கா!

நீங்க சொல்றதும் சரிதான்.,

'நள பாகம்' தான் சூப்பர் சுவையான சமையல் தெரியுமா???

said...

\\ துர்கா said...
//அதின் சமையல் குறிப்பு ஒரு பத்து வரிகள் தான் இருக்கும், இது மனப்பாடம்செய்ய முடியாதா?//

ஹிஹி.எனக்கு STM...புரியவில்லையா?short term memory.இது எல்லாம் எப்படி மனப்பாடம் பண்ணுறதுன்னு ஒரு பதிவு போடுங்க ;D\

ஹாய் துர்கா,
இப்போவே மனப்பாடம் பண்ண கத்துக்கோங்க, இல்லீனா கஷ்டம் தான்!
உங்க STM க்கு கொஞ்சம் வல்லாரை டானிக் சாப்பிட்டா சரியாகிடும்!

said...

\\ ரசிகன் said...
ரொம்ப சரியாத்தான் சொல்லியிருகிங்க.. ஆனா பெண்களை விட ஆண்கள் தான் ரொம்ப பாவம். இந்த குழப்பவாதி பெண்களை புரிஞ்சுக்கவே முடியறதில்லையே.. :P.. திவ்யா மாஸ்டர்..ஆண்களுக்காகவும் ஒரு போஸ்ட் போட்டுருங்களேன்..ஹிஹி...\\

ஹாய் ரசிகன்,
ஆண்கள் ஈஸியாக குழம்பிக்கிறதுக்கு பெண்களை குழப்பவாதி என்று சொல்ல கூடாது.

ஆண்களுக்கான போஸ்டும் இருக்கு இங்கே..
http://manasukulmaththaapu.blogspot.com/2006/12/blog-post_18.html

said...

\\ கைப்புள்ள said...
//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!'//

இந்தச் சின்ன வயசுலேயே உங்களுக்குள்ள இம்புட்டு ஞானமா? சூப்பரு...சூப்பரு...எங்க வூட்டம்மணியைப் படிக்கச் சொல்றேன். படிச்சிக்கிட்டே அமெரிக்கால பார்ட்-டைம் கவுன்சிலிங் செண்டர் ஆரம்பிக்கலாம் நீங்க.\\

வாங்க கைப்புள்ள,
ரொம்ப நாள் கழிச்சு என் வலைத்தளம் வந்திருக்கிறீங்க, மிக்க நன்றி!

பார்ட்-டைம் கவுன்சிலிங் செண்டரா??
ஆஹா....அப்போ கைவசம் எனக்கு ஒரு வேலை ரெடியாயிருக்குன்னு சொல்றீங்க, ஆலோசனைக்கு நன்றி கைப்புள்ள.

உங்க வூட்டம்மணியை நிச்சயம் படிக்கச்சொல்லுங்க.

said...

\\ அருட்பெருங்கோ said...
குறிப்பு எல்லாம் சரிங்க…
இப்படி பொதுவுல சொல்லிட்டீங்களே… கணவர்கள் எல்லாம் உஷாராயிட மாட்டாங்களா? ;-)\\

வாங்க அருட்பெருங்கோ,

அவ்வளவு விவரமானவங்க இல்ல கணவர்கள் என்பதால்தானே இப்படி பப்ளிக்கா புட்டு புட்டு வைக்கிறோம்!!

வருகைக்கு நன்றி அருட்பெருங்கோ!!

said...

\\ பாச மலர் said...
//வீண் முயற்ச்சியும், ஆர்பாட்டங்களும் எதற்கு கொஞ்சம் விட்டுபிடியுங்கள்!
சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும், சில விஷயங்களை அலட்ச்சியப்படுத்த வேண்டும்!//

இது! முயற்சி வீண்தான்..ஜீரணித்து ஜீரணித்து ... digestive system பாழாய்ப் போய் விடுகிறது..

நல்ல டிப்ஸ் திவ்யா..\

வாங்க பாச மலர்,
உங்க டைஜஸ்டிவ் சிஸ்டம் பாழாய் போச்சா?? அச்சச்சோ!!

இப்போதைய பெண்கள் டைஜஸ்டிவ் ட்ராக்கை திருமணமான புதிதிலேயே ஸ்ட்ராங்காக்கிக்கதான் இப்படி சொல்லிக்கொடுக்கிறதே!

said...

\\ கோபிநாத் said...
\\* எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயிரம் கனவுகளையும், கற்பனைகளையும் வளர்த்துக் கொண்டு மனவாழ்க்கையை ஆரம்பிக்காதிருங்கள்,

'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!\\

இதுதான் விஷயமே! ;)

\\\Arunkumar said...
Relationship Specialist Divya sonna sariyaa thaan irukkum :)\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய\\

விஷயத்தை க்ரெக்ட்டா புரிஞ்சுக்கிட்டீங்க கோபி!

நன்றி!

said...

\ துளசி கோபால் said...
//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்//

ஆமாம். எப்பவுமே .....

ஆனால்..... மனுச ஜென்மம் கற்பனையும் கனாவும் காணாம இருக்குமா எப்பவுமே?

//'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'.//

அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா? குறைஞ்சபட்சம் அம்பதுலே(ஒடிச்சு) வளைச்சுறலாம்.. :-))))\\

வாங்க துளிசிம்மா,

எதுக்கு ஐம்பது வரைக்கும் வெயிட் பண்ணனும்.....இருபதைந்திலேயே [ஒடிச்சு] வளைக்க முடியாதா???

'முயற்சி திருவினையாக்கும்' என்ன துளசிம்மா க்ரெக்ட் தானே??

said...

\\ கருப்பன்/Karuppan said...
//
* அவருடைய அம்மாவை அவர் புகழ்ந்துப் பேசினால், உடனே பொசுக்குன்னு கோபபட்டு மூஞ்சி தூக்கிக்காதீங்க.
//

எங்களுக்கும் சூதுவாது தெரியுமப்பு... நாங்கள்ளாம் எங்க அம்மாவையோ இல்லை தங்கச்சிகளையோ புகழ்ந்து பேசமாட்டோம்ல... மாறாக உங்கள் சொந்தக்காரங்களான உங்க மாமியார், நாத்தனார் இவங்களதான் புகழ்ந்து பேசுவேம்... ஹீ... ஹீ\\

வாங்க கருப்பன்,

உங்களை மாதிரி விவரமான,சூதுவான ஆண்கள் ரொம்ப ரொம்ப குறைவுங்க.

வருகைக்கு நன்றி!!

said...

\\ கருப்பன்/Karuppan said...
நான் கண்டிப்பா கல்யாணத்து முன்னாடி பொண்ணை திவ்யாகிட்ட கவுன்சலிங் அனுப்புவேன்னு சூடம் அனைச்சு சத்தியம் பன்னியிருக்கேன்.

வாழ்க திவ்யா... வளர்க அவரது சமூகசேவை!!\

அஹா.....கருப்பன் இப்படி ஒரு சத்தியமா??

கண்டிப்பா கவுன்சிலிங்குக்கு அனுப்புங்க, உங்களை மாதிரி சூதான ஆண்களை எப்படி சமாளிக்கனும்னு சேர்த்தே சொல்லித்தரேன் பொண்ணுக்கு!!

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கருப்பன்!

said...

\\ Anonymous said...
Tipu Tipu Tipu Tipu Tipu Kumari
Tips allikodukkum tips divya kumari......( Baba stylil padavum)-- padippavan\

வாங்க படிப்பவன்,

'பாபா' ஸ்டைலில் பாட்டெல்லாம் பாடி அசத்திட்டீங்க,
நன்றி படிப்பவன்!

said...

\\ Thamizhmaagani said...
ஏனுங்க திவ்ஸ்... எதாச்சு கல்யாணம்.காம் கம்பெனி நடத்துறீங்களா?? இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க...\\

வாங்க தமிழ்,

அப்படி கம்பெனி ஏதும் இன்னும் ஆரம்பிக்கலீங்க!
ஆரம்பிச்சா கண்டிப்ப சொல்றேன் உங்களுக்கு.

said...

\\ நிமல்/NiMaL said...
ஹாய் திவ்யா,
சூப்பர் டிப்ஸ்...!

//'எப்பவுமே'ன்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னா, அடிக்கடி சாம்பார் வைச்சவதான் கொஞ்சம் உப்பு ஜாஸ்தியாய் போச்சுன்னு கண்டுக்கமாட்டார்.//
அடடா இப்படியெல்லாம் வேற இருக்கா...

//உணர்வுகளையும், அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்[தெரியாதவர்கள்] ஆண்கள், அதனால் பெண்களும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் சமநிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.//
அர்த்தமுள்ள வார்த்தைகள், இந்த புரிலே பல பிரச்சினைகளை தவிர்த்துவிடும்...

நல்ல புரிதலோடுதான் இருக்கிறீங்க, அதுவும் வாழ்க்கையின் இனிமையே புரிதலில் தான் இருக்கிறது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீங்க...

//'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!'//
முத்தாய்ப்பாய் ஒரு கடைசி வரி...

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்...!\\

வாழ்க்கையின் இனிமையே புரிதலில் தான் நிமல்!!!
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நிமல்!!

said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் [தெரியாதவர்கள்] ஆண்கள்//

திவ்யா....நல்ல காலம்! அடைப்புக்குள் (bracketக்குள்) போட்டீங்க! இல்லீன்னா இந்நேரம் உங்க கிட்ட சண்டை பிடிச்சிருப்பேன்! :-)

//துர்கா said...
இதுக்குதான் நல்லா சமைக்குற புருசன் வேண்டும்ன்னு சொல்லுறது.அவரே சமைச்சால் இப்படி பயந்து பயந்து சாப்பிட வேண்டாமே ;)//

அலோ தங்கச்சி...
இது என்ன சந்துக்குள் சிந்தா, கோடுக்குள் ரோடா, இல்லை டிப்ஸ்-க்குள் சிப்ஸா? :-))\

ஆஹா...ரவி!
நீங்க சண்டைக்கெல்லாம் கூட வருவீங்களா??
நல்லவேளை தப்பிச்சேன்!!

said...

பிள்ளை!
மொத்தம் புரிசனை ஏமாற்ற வேண்டுமென்று சொல்லுமாப்போல கிடக்கு....
சரி...என்ன தான் இருந்தாலும் ஊடலில்லா வாழ்க்கையா???
புத்தகம் படித்து வாழமுடியாது...வாழ்வைப் படிக்க வேண்டும். வாழ்ந்து...

said...

Advice dhoool kelapureenga...

advice kodukkuradhula PhD pattame tharalaam pola..

nanru vaazhthukkal.....

innum pala advice panna vaazhthukkal