January 24, 2008

மதுமிதா - 3

மதுமிதா -1
மதுமிதா - 2

எதிர்பாராமல் கால் தடுக்கி விழயிருந்த மது,
சுதாரித்துக்கொண்டு மாடிபடியின் கைப்பிடியினை பிடித்துக்கொண்டு தன்நிலைக்கு வந்தாள்.

கீழே ஹாலிலுள்ள சோஃபா , மாடி படியின் திருப்பத்திலிருந்து இறங்கும் போதே நன்குத் தெரியும்.

சோஃபாவில் சுரேஷ் அண்ணா............பக்கத்தில்........பக்கத்தில்......அருண்!!!!!!!!!!!!!


மதுவின் இதயமே வெடித்துவிடும்போல் வேகமாக படபடத்தது.
காண்பது கணவா? இல்ல நினைவா????

திகைப்புடன் சிலையாக மாடிப் படிகளில் நின்ற தன் மகளிடம் மதுவின் அம்மா,

" மது, சுபாவோட தம்பி அருண் வந்துருக்காப்ல, அமெரிக்காவிலிருந்து வாங்கிட்டு வந்த ஸ்வீட்ஸ் நமக்கு கொடுக்கனும்னு ஆசைப்பட்டதால சுரேஷ் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்"

அம்மா சொன்னது அரைகுறையாக காதில் விழுந்தது மதுவிற்க்கு.

"கைல புக்கோட வந்து, நீ எக்ஸாமுக்கு ரொம்ப படிக்கிறாப்ல ஸீன் போடுறியாக்கும்??" என சுரேஷ் அண்ணா கிண்டல் அடித்தான்.

மதுவுக்கு இன்னும் உடலில் நடுக்கம் குறையவில்லை.

" இங்கே வந்து உட்காருடா" அப்பாவின் வழக்கமான கணிவான குரல்.

நடந்தாளா , மிதந்தாளா என தெரியாமல் நடந்துச் சென்று அப்பாவின் அருகில் சோஃபாவில் அமர்ந்தாள் மது.

"இது மதுமிதா, என்னோட பொண்ணு" என்று அப்பா அறிமுகம் செய்தார் அருணிடம்.

"ஹாய்" என்றான் அருண் பவ்யமாக.

ஃபோனில் செவிவழியாக தனக்குள் சென்று தன் உயிரோடு கலந்துவிட்ட குரல் .......
இன்று நேரிடையாக தனக்குள் தாக்கிய தாக்கம் தகதகப்பை உண்டாக்கியது மதுவிற்க்கு!

வாய் திறந்து பதிலுக்கு 'ஹாய்' சொன்னால், தன் குரலை கண்டுப்பிடித்து விடுவானோ? என்று தடுமாறி,
பரவாயில்லை 'ஹாய்' சொல்லுவோம் என்று நினைத்து வாய் திறந்து 'ஹாய்' சொன்னாள் மது.
வெறும் காத்து தான் வந்தது!!

/ 'அடப்பாவமே, மது என்னாச்சு உனக்கு' என்று மதுவின் மனதிற்க்குள் குரல் கேட்டது/

" பேசிட்டு இருங்க நான் காஃபி எடுத்துட்டு வரேன்" என்று அம்மா சமையலறைக்குச் செல்ல,

" சித்தி, எனக்கு காஃபி கொஞ்சம் ஸ்ட்ராங்கா வேணும்" என்று கூறிக்கொண்டே சுரேஷ் அண்ணா அம்மாவின் பின்னால் சமையலறைக்குச் செல்ல,

அப்பாவின் செல் ஃபோன் அந்நேரம் அழைத்தது," எக்ஸ்கூஸ் மீ" என்று அப்பாவும் ஃபோனுடன் நழுவ,

இப்போது மதுவும், அருணும் மட்டும் ஹாலில்.

அருண் சொன்ன ஹாய்க்கு பதில் ஹாய் இப்போ ஒழுங்கா சொல்லிடலாம் என்று மது அருணைப்பார்த்து, புன்னகையுடன் மறுபடியும் 'ஹாய்' என்று சொல்ல ட்ரை பண்ண, அப்போழுதும் காத்து மட்டுமே வந்தது.

குறும்பு புன்னகையுடன் " என்ன பாட்டி வெறும் காத்துதான் வருதா??? ஃபோன்ல மட்டும் தான் பேச்சு வருமோ???" என்றான் அருண்.

அடப்பாவி..............உனக்கு என் 'பாட்டி' டிராமா எல்லாம் தெரியுமா??? என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே,

"என்ன.............என்ன...........சொல்றீங்க, புரியல எனக்கு" என்று தன் நடிப்பு திறனை ஒன்று திரட்ட முற்பட்டு தோற்றாள் மது.

"ஹலோ பாட்டி, ரொம்ப கஷ்டப்படாதீங்க, கூல்......கூல்" சிரித்துக்கொண்டே அருண் கூறினான்.

"எப்படி............எப்போ..........தெரியும் உங்களுக்கு" அசடு வழிந்தாள் மது

"ஹா ........ஹா........முதல் நாள் பாட்டி டிராமாவை காட்டிக்கொடுக்க கூடாதுன்னு நீ சொன்னதால சுபா என்கிட்ட சொல்லாம மறைசுட்டா, ஆனா எனக்கு டவுட்டா தான் இருந்தது, இ-மெயிலில் கேட்டேன் அவ கிட்ட, பதில் மெயிலில் எல்லாத்தையும் சொல்லிட்டா சுபா.
என் கிட்டவே வாலாட்ட நினைக்கிற லூட்டி 'நாய்குட்டி' யாருன்னு விபரம் சுபா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.
உன் டிராமாவை எனக்கு தெரியாத மாதிரியே நானும் , அக்காவும் தொடர்ந்தோம்."

" ஹைய்யோ ரொம்ப ஸாரி........ஏதும் நான் தப்பா.......ரொம்ப ஒவரா.........குறும்பு பண்ணிட்டேனோ...........ஐ அம் ஸாரி" கெஞ்சலுடன் ஸாரி கேட்கவும் நா வரண்டது மதுவிற்க்கு.

"ஹா.......ஹா..........எல்லா வால் தனமும் பண்ணிட்டு இப்ப ஸாரியா?"

சிறிது மெளனத்திற்க்கு பின் , மீண்டும் தொடர்ந்தான் அருண்,

" உன் குறும்பை ரசிக்க ஆரம்பித்தேன், என் மேல பாட்டி காரெக்டரா நீ காட்டின கரிசனை, பாசம் எல்லாம் எனனை கவர்ந்தது. 'பாட்டி' ஃபோட்டோவை அனுப்பினா சுபா இ-மெயிலில், ................'பார்த்தேன், ரசித்தேன்'னு ஒரே வரியில சொல்லிட முடியாது"

இதுவரை தலைகுனிந்திருந்த மது, பேச்சை நிறுத்திய அருணை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"பார்த்தேன்.........மயங்கினேன்" என்று கண் சிமிட்டினான் அருண்.

சினிமாவில் பெண்கள் வெட்கப்படுபடுவதாக காட்டும் போது, கால் விரல் தரையில் கோலமிடுவதை கிண்டலடிக்கும் மதுவின் கால்விரல்கள் இப்பொழுது
அவள் வீட்டு பளிங்குத் தரையில் கோலமிட்டுக் கொண்டிருந்தது.

" என்ன பாட்டி, பேச்சே வரலியா?............வெட்கமோ???"

"நிஜம்மா.........உங்களுக்கு என்னை.........பிடிச்சிருக்கா?"

"இவ்வளவு நேரம் அதைத்தான மூச்சு விடாம சொல்லிட்டிருந்தேன், அப்புறம் என்ன கேள்வி, இப்படி கேட்கிறதுல
பொண்ணுங்களுக்கே ஒரு அலாதி இன்பம் போலிருக்கு.
உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப........பிடிச்சிருக்கு,
எத்தனை தடவை சொல்லனும்னு சொல்லு , சொல்லிடலாம்!!"

"இல்ல...........அது வந்து.........."

"நீ ஏன் இவ்வளவு டவுட்ஃபுல்லா கேட்கிறேன்னு எனக்கு புரியுது மது.
என் வாழ்க்கையில இன்னொரு பொண்ணுக்கு இனிமே இடமே இல்லைன்னு தான் நானும் வைராக்கியமாயிருந்தேன்,
ஆனா , என்ன மாயமோ தெரில, என் நெஞ்சுக்குள்ள நீ சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்ட ,..... நேர்ல பார்க்காமலே!"

வெட்கப் புன்னகையுடன் அருணைப்பார்த்துவிட்டு ,மீண்டும் தலை குனிந்தாள் மது.


"என் மனசுல உள்ளதை என் வீட்ல சொன்னேன், எங்க வீட்டுல எல்லாருக்கும் முழு விருப்பம். உன் அப்பா அம்மா வும் முழு சம்மதத்தை சொல்லிட்டாங்க. எல்லாத்தையும் 'பாட்டி'க்கு தெரியாம சீக்ரெட்டா வைக்க முடிவு பண்ணினேன்,
நான் உன்னை உன் வீட்டுல வந்து பார்த்து, 'பாட்டி'க்கு ஒரு இன்ப அதிர்ச்சிக் கொடுக்க ஆசைப்பட்டேன்,
இப்போ புரியுதா உன் அம்மா ஏன் 'தடா' போட்டாங்கன்னு"

முழுக்குடும்பமும் இதுக்கு ஒத்தாசையா? சே! இது தெரியாம அப்பா அம்மாகிட்ட ரொம்ப கோபப்பட்டுடேனோ,
"ஸாரிம்மா, ஸாரிப்பா" என்று கொஞ்சலுடன் தனக்குள்ளே மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள் மது.

தனக்கு மிக அருகாமையிலிருந்து வந்த Park Avenue After Shave லோஷனின் கிரங்கடிக்கும் வாசனை, மதுவை சிந்தனையிலிருந்து விடுபட வைத்தது .
அப்போதுதான் உணர்ந்தாள் மது, தனக்கு மிக அருகில், சோஃபாவில் அடுத்த இருக்கையில், தன் அப்பா அமர்ந்திருந்த அந்த இடத்தில் இப்போது அருண்.

இருவரது கண்களும் மொழியின்றி பேசிக்கொண்டன. தன் உருவத்தை அவன் கருவிழியில் கண்ட மதுவின் கண்ணம் சிவந்தது நாணத்தில்.
'ரோஜா வண்ண கன்னங்கள் ' என்று கவிதையில் எழுதும் கற்பனை வரிகள், மெய்யாகுவதை நேரில் கண்டு ரசித்தான் அருண்.

" 'பாட்டியின்' முகத்திரையை நானே திறந்து 'என் மதுவை' பார்க்க ஆசைப்பட்டேன், கோபமா??" என்றான் கெஞ்சலுடன்.


இல்லை என்ற அர்த்தத்தில் தலை அசைத்தாள் மது.

"பாட்டிக்கு.......ஸாரி என் 'மது'வுக்கு ஒரு சின்ன கிஃப்ட்" என்று சிறு மோதிர பெட்டியை திறந்து, அமெரிக்காவிலிருந்து மதுவிற்காக தான் வாங்கி வந்திருந்த ,மிடுக்குடன் மின்னிய மோதிரத்தை காட்டி,

"வில் யூ marry மி டியர்" என்றான் அருண்.

\ 'கிரங்கியது போதும் மது! வேக் அப் மது! முழிச்சுக்கோ' என்றது மதுவுக்குள் ஒரு குரல்/

தொண்டையை செருமி சரி செய்துக் கொண்டு,
"என்னப்பா ராசா, இப்படி கேட்டுட்டே???
இத...........இத ..........தான் எதிர்பார்த்தேன்!
இந்த வார்த்தை கேட்க 'பாட்டி' வேஷம் போட்டு திரிந்தேன்!!
உன் மனதில் இடம் பிடிக்க
தவமாய் தவமிருந்தேன்.............ராசா!!!!"

என்று கண் சிமிட்டி தன் மோதிர விரல் நீட்டிய மதுவின்
குறும்பு கொப்பளிக்கும் கண்களில்
காதலையும் கண்டு களித்தான் அருண்.

மதுவின் மனதில்.....

இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என் கண்ணோடு
உரசும் போது என் இதயத்தில்
ஓளிக்கீற்று....

இதயத் துடிப்பு முன்பைவிட
வேகமாக துடிக்கின்றதே
அவனின் அழகிய குறும்பைக்
கடைகண் கொண்டு நோக்கையில்...


மோதிரத்தை அணிவிக்கையில்........மதுவின் மடியிலிருந்த புஸ்தகத்தின் பக்கங்கள் காற்றில் படபடத்தது, அதில் மது எழுதியிருந்த 'மதுமிதா அருண்குமார்' அவர்கள் இருவரையும் மேலும் பரவசப்படுத்தி வெட்கப்பட வைத்தது.

[முற்றும்.]



93 comments:

said...

முதல்ல ரிஸர்வேஷன்... இப்ப போய் படிக்கிறேன்..

said...

//நடந்தாளா , மிதந்தாளா என தெரியாமல் நடந்துச் சென்று அப்பாவின் அருகில் சோஃபாவில் அமர்ந்தாள் மதுநடந்தாளா , மிதந்தாளா என தெரியாமல் நடந்துச் சென்று அப்பாவின் அருகில் சோஃபாவில் அமர்ந்தாள் மது//
அடடா.. . சூப்பரு.. கதை நடைல கலக்கறீங்க...

said...

திவ்யா :))
கவிதையான முடிவு.....
மிக அருமை... :)))

said...

//'அடப்பாவமே, மது என்னாச்சு உனக்கு' என்று மதுவின் மனதிற்க்குள் குரல் கேட்டது/
//
ஹா ஹா!! இது வேறயா...

said...

//இவ்வளவு நேரம் அதைத்தான மூச்சு விடாம சொல்லிட்டிருந்தேன், அப்புறம் என்ன கேள்வி//
டயலாக் எல்லாம் கூட அருமையா எழுதறீங்க..

said...

//இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என் கண்ணோடு
உரசும் போது என் இதயத்தில்
ஓளிக்கீற்று....//
இது மேகமா இருக்கனுமோ???
சரி மின்னலா மோதினா என்ன.. மேகமா மோதினா என்ன.. ஒளி வந்தா மதி!

said...

மீண்டும் ஒரு அழகான முடிவு.. உங்கள் எழுத்துக்கள் நாளுக்குநாள் மெருகு கூடிக்கொண்டே போகின்றன.. வாழ்த்துக்கள்!

said...

//"நிஜம்மா.........உங்களுக்கு என்னை.........பிடிச்சிருக்கா?"//

எல்லாரும் இப்படித்தான் சொல்வார்களா..? :)))

//இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என் கண்ணோடு
உரசும் போது என் இதயத்தில்
ஓளிக்கீற்று....//

ம்ம்ம்.... :)))) அழகு....

said...

இனிமையான முடிவு - நல்லதொரு காதல் கதை. காணாமலே காதல். வாழ்க மணமக்கள்

said...

திவ்யமா இருக்கு திவ்யா.
ரசித்தேன்.

said...

Mmm... super

said...

எதிர்பார்த்தபடியே கதை சென்றாலும் படிக்க படிக்க ஆனந்தம்!!
யாரும் எதிர்பார்க்காத மாதிரி வித்தியாசமாக முடிக்கிறேன் பேர்வழி என்று ஏதும் செய்யாமல் இருந்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!

Cute and sweet story!!

Rock on!! :-)

said...

//
//இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என் கண்ணோடு
உரசும் போது என் இதயத்தில்
ஓளிக்கீற்று....
//

மின்னலே ஒளிதான்! அவைகள் உரசுகின்றன!! - அழகு திவ்யா :))

said...

போப்பா....

said...

திவ்யா அருமையான் கதை.......

வரிகள் அனைத்தும் கவிதையாய் இருந்தது....

அடுத்த தொடருக்காக‌ காத்திருக்கிறேன் தொடருங்கள்

said...

நல்லபடியா முடிச்சிவச்சீங்க திவ்யா. நல்லா இருந்தது கதை.

said...

திவ்யா ரசிக்கும் படியாக எழுதி எங்கள் அனைவரையும் ரசிக்க வைத்தமைக்கு பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள் :)

\\CVR said...
யாரும் எதிர்பார்க்காத மாதிரி வித்தியாசமாக முடிக்கிறேன் பேர்வழி என்று ஏதும் செய்யாமல் இருந்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!\\

சிவிஆர் சொன்னாது போல வித்தியாசம் எல்லாம் இல்லாமல் இயல்பாக, அழகாக முடிச்சிருக்கிங்க...சூப்பர் ;)

said...

\\ ILA(a)இளா said...
போப்பா....\\

ஆஹா...நம்ம இளா அண்ணனையே வெட்கப்பட வச்சிட்டிங்க..;))

said...

மேலும் பல ரசிக்கும் படியான, இயல்பான கதைகளை எழுதுங்கள். வாழ்த்துக்கள் :)

said...

உங்க கதையில எல்லாமே முடிவு படிச்சப்பறம் ஒரு மனத் திருப்தி வருதுங்க...

வாழ்த்துக்கள் திவ்யா மாஸ்டர்...

said...

போன பதிவில் நல்ல டிர்ஸ் போட சொல்லும் போதே கதைய கண்டு பிடிச்சிட்டேனே :D நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.


பார்க் அவென்யூவா Axe ரொம்ப நல்லா இருக்குமே :)

said...

மகிழ்ச்சியான ஒரு காதல் கதை படித்தில் மிக்க மகிழ்ச்சி… நிங்கள் கதைக்கு தருகிற முக்கியத்தையும் முயற்சியையும் கதையின் படங்களும் தருவது பாரட்டுக்கூறியது. நிங்கள் கதை எழுதுக்கிற விதம் வித்யாசமாகவும், நன்றாக இருக்கிறது.

தினேஷ்

said...

Divya,

Inimaiyaana Kaathal Kathai...
Thendralaai Thavazhnthu,
Pookkalaai varudi,
Kirangkadithathu Ungal Kathai...

Raj.

said...

அருமையான நடை திவ்யா.
அழகாக அற்புதமாக , இனிமையாக
முடித்துவிட்டீர்கள்.
திரைப்படம் போல எழுதிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

said...

சேத்து வச்சதுக்கு ரொம்ப டேன்கீஸ் :-)

said...

story was on the expected lines (including the surprise from arun)
but the style of writing was poetic to say the least.. Hats off..
Keep Rocking Divya !!

said...

hey... enga paati phone-la...
pesittu varen ;-)

said...

ரொம்ப நல்லா இருந்தது கதை! சூப்பர்!
அன்புடன் அருணா

said...

//பரவாயில்லை 'ஹாய்' சொல்லுவோம் என்று நினைத்து வாய் திறந்து 'ஹாய்' சொன்னாள் மது.
வெறும் காத்து தான் வந்தது!!//
இது அழகு...!

//குறும்பு கொப்பளிக்கும் கண்களில்
காதலையும் கண்டு களித்தான் அருண்.//
உங்களின் வர்ணனைகளும் வார்த்தை தெரிவுகளும் நன்றாயிருக்கிறது. முக்கியமாக உரையாடல்கள் அழகு...!

கவிதையுடன் ஒரு அழகான முடிவை கொடுத்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்... !!!

said...

\\ Dreamzz said...
முதல்ல ரிஸர்வேஷன்... இப்ப போய் படிக்கிறேன்..\

வாங்க, வாங்க Dreamzz!!

said...

\\ Dreamzz said...
//நடந்தாளா , மிதந்தாளா என தெரியாமல் நடந்துச் சென்று அப்பாவின் அருகில் சோஃபாவில் அமர்ந்தாள் மதுநடந்தாளா , மிதந்தாளா என தெரியாமல் நடந்துச் சென்று அப்பாவின் அருகில் சோஃபாவில் அமர்ந்தாள் மது//
அடடா.. . சூப்பரு.. கதை நடைல கலக்கறீங்க...\\\

கதையின் நடையுடன் 'மது'வின் நடையையும் ரசித்திருக்கிறீர்கள்!!

நன்றி!

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா :))
கவிதையான முடிவு.....
மிக அருமை... :)))\

கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!

said...

\\ Dreamzz said...
//'அடப்பாவமே, மது என்னாச்சு உனக்கு' என்று மதுவின் மனதிற்க்குள் குரல் கேட்டது/
//
ஹா ஹா!! இது வேறயா...\

ஹி! ஹி!

said...

\\ Dreamzz said...
//இவ்வளவு நேரம் அதைத்தான மூச்சு விடாம சொல்லிட்டிருந்தேன், அப்புறம் என்ன கேள்வி//
டயலாக் எல்லாம் கூட அருமையா எழுதறீங்க..\\

டயலாக்ஸை பாராட்டியதற்கு நன்றி Dreamzz!

said...

\\ Dreamzz said...
//இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என் கண்ணோடு
உரசும் போது என் இதயத்தில்
ஓளிக்கீற்று....//
இது மேகமா இருக்கனுமோ???
சரி மின்னலா மோதினா என்ன.. மேகமா மோதினா என்ன.. ஒளி வந்தா மதி!\

கவிஞரின் கண்களுக்கு அது மேகமாக தெரிகிறதோ??

said...

\ Dreamzz said...
மீண்டும் ஒரு அழகான முடிவு.. உங்கள் எழுத்துக்கள் நாளுக்குநாள் மெருகு கூடிக்கொண்டே போகின்றன.. வாழ்த்துக்கள்!\\

வாழ்த்துக்களுக்கு நன்றி Dreamzz!!

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//"நிஜம்மா.........உங்களுக்கு என்னை.........பிடிச்சிருக்கா?"//

எல்லாரும் இப்படித்தான் சொல்வார்களா..? :)))

//இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என் கண்ணோடு
உரசும் போது என் இதயத்தில்
ஓளிக்கீற்று....//

ம்ம்ம்.... :)))) அழகு....\\

நன்றி நவீன் ப்ரகாஷ்.

said...

\\ cheena (சீனா) said...
இனிமையான முடிவு - நல்லதொரு காதல் கதை. காணாமலே காதல். வாழ்க மணமக்கள்\

பாராட்டிற்கு மிக்க நன்றி சீனா சார்!!

said...

\ துளசி கோபால் said...
திவ்யமா இருக்கு திவ்யா.
ரசித்தேன்.\

வாங்க துளசிம்மா!

உங்கள் ரசிப்பிற்கும், அள்ளித்தந்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

said...

\\ U.P.Tharsan said...
Mmm... super\

நன்றி தர்ஸன்!!

said...

\\ CVR said...
எதிர்பார்த்தபடியே கதை சென்றாலும் படிக்க படிக்க ஆனந்தம்!!
யாரும் எதிர்பார்க்காத மாதிரி வித்தியாசமாக முடிக்கிறேன் பேர்வழி என்று ஏதும் செய்யாமல் இருந்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!

Cute and sweet story!!

Rock on!! :-)\

கதையில் எதிர்பாராத திருப்பம், வித்தியாசமான முடிவு இருக்க வேண்டும் என இக்கதையை நான் எழுதவில்லை சிவிஆர்!
தொடர்ந்து கதையின் ஒவ்வொரு பகுதியையும் படித்து விமர்சித்ததிற்கு நன்றி சிவிஆர்!

said...

\\ sathish said...
//
//இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என் கண்ணோடு
உரசும் போது என் இதயத்தில்
ஓளிக்கீற்று....
//

மின்னலே ஒளிதான்! அவைகள் உரசுகின்றன!! - அழகு திவ்யா :))\

நன்றி .....நன்றி சதீஷ்!!

said...

\\ ILA(a)இளா said...
போப்பா....\\

இளா....பின்னூட்டத்தின் அர்த்தம் புரியவில்லை!

வருகைக்கு நன்றி!

said...

\\ எழில் said...
திவ்யா அருமையான் கதை.......

வரிகள் அனைத்தும் கவிதையாய் இருந்தது....

அடுத்த தொடருக்காக‌ காத்திருக்கிறேன் தொடருங்கள்\

வாங்க எழில்!

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி எழில்.

அடுத்து தொடர் எழுதினால், நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்.

said...

\\ முத்துலெட்சுமி said...
நல்லபடியா முடிச்சிவச்சீங்க திவ்யா. நல்லா இருந்தது கதை.\\


நல்லபடியாக முடிந்தது சந்தோஷமா முத்துலெட்சுமி!!

பாராட்டிற்கு நன்றி!

said...

\\ கோபிநாத் said...
திவ்யா ரசிக்கும் படியாக எழுதி எங்கள் அனைவரையும் ரசிக்க வைத்தமைக்கு பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள் :)

\\CVR said...
யாரும் எதிர்பார்க்காத மாதிரி வித்தியாசமாக முடிக்கிறேன் பேர்வழி என்று ஏதும் செய்யாமல் இருந்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!\\

சிவிஆர் சொன்னாது போல வித்தியாசம் எல்லாம் இல்லாமல் இயல்பாக, அழகாக முடிச்சிருக்கிங்க...சூப்பர் ;)\\

வாங்க கோபி,
உங்கள் ரசனைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!

said...

\ கோபிநாத் said...
\\ ILA(a)இளா said...
போப்பா....\\

ஆஹா...நம்ம இளா அண்ணனையே வெட்கப்பட வச்சிட்டிங்க..;))\\

போப்பா...என்றால் வெட்கப்படுவதாக அர்த்தமா???

said...

\ கோபிநாத் said...
மேலும் பல ரசிக்கும் படியான, இயல்பான கதைகளை எழுதுங்கள். வாழ்த்துக்கள் :)\

உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து எழுத நிச்சயம் முயற்ச்சிக்கிறேன் கோபிநாத்!!

said...

\\ ரசிகன் said...
உங்க கதையில எல்லாமே முடிவு படிச்சப்பறம் ஒரு மனத் திருப்தி வருதுங்க...

வாழ்த்துக்கள் திவ்யா மாஸ்டர்...\\

மனது திருப்பதியாகிடுச்சா மிஸ்டர் ரசிகன்?

வாழ்த்துக்களுக்கு நன்றி!

said...

\ ஸ்ரீ said...
போன பதிவில் நல்ல டிர்ஸ் போட சொல்லும் போதே கதைய கண்டு பிடிச்சிட்டேனே :D நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.


பார்க் அவென்யூவா Axe ரொம்ப நல்லா இருக்குமே :)\

வாங்க Sri,
உங்கள் யூகம் சரியாகிவிட்டதா??

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி Sri!

said...

\\\ தினேஷ் said...
மகிழ்ச்சியான ஒரு காதல் கதை படித்தில் மிக்க மகிழ்ச்சி… நிங்கள் கதைக்கு தருகிற முக்கியத்தையும் முயற்சியையும் கதையின் படங்களும் தருவது பாரட்டுக்கூறியது. நிங்கள் கதை எழுதுக்கிற விதம் வித்யாசமாகவும், நன்றாக இருக்கிறது.

தினேஷ்\

ஹாய் தினேஷ்,

கதையின் ஒவ்வொரு பகுதிக்கு தொடர்ந்து உங்கள் விளக்கமான பின்னூட்டத்தை தந்து என்னை உற்சாகப்படுத்தியதிற்கு மிக்க நன்றி!

படங்களுடன் கதையினைப்படித்தால் மனத்திரையில் கதையினை நன்கு உணர முடியும்,கதாப்பாத்திரங்களுடன் ஒன்றிபோக முடியும் என்பது என் எண்ணம், அதனால் தான் படங்களுக்கும் முக்கியத்துவன் தந்தேன்.

குறிப்பிட்டு பாராட்டியதிற்கு நன்றி தினேஷ்!

said...

\Divya,

Inimaiyaana Kaathal Kathai...
Thendralaai Thavazhnthu,
Pookkalaai varudi,
Kirangkadithathu Ungal Kathai...

Raj.\\

ஹாய் ராஜ்,
கவிநடையில் பின்னூட்டமிட்டு அசத்திட்டீங்க, ரொம்ப நன்றி ராஜ்!

said...

\\ வல்லிசிம்ஹன் said...
அருமையான நடை திவ்யா.
அழகாக அற்புதமாக , இனிமையாக
முடித்துவிட்டீர்கள்.
திரைப்படம் போல எழுதிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.\

வாங்க வல்லிசிம்ஹன்,

திரைப்படம் பார்ப்பது போல் ரசித்து படித்தீர்களா கதையை??
ரொம்ப சந்தோஷம்,

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லிசிம்ஹன்!

said...

\\ Arunkumar said...
சேத்து வச்சதுக்கு ரொம்ப டேன்கீஸ் :-)\

'அருண்குமார்' கூட 'மது பாட்டி'யை சேர்த்து வைச்சுட்டோம்ல!!!சந்தோஷம் தானே அருண்?

உங்கள் 'டேன்கீஸ்' ஏற்றுக்கொள்ளப்பட்டது!

said...

\\ Arunkumar said...
story was on the expected lines (including the surprise from arun)
but the style of writing was poetic to say the least.. Hats off..
Keep Rocking Divya !!\\

வித்தியாசமான திருப்பங்களும், முடிவும் கொடுக்கிற அளவுக்கு கதை எழுத இன்னும் தேரலீங்க அருண்குமார்!
சொல்ல நினைக்கிற கதையை கொஞ்சம் தெளிவா ரசிக்கும் படியா சொல்லனும்னு ஒரு சிறு முயற்சி, அவ்ளவுதானுங்கோ!!

உங்கள் பாராட்டிற்கு நன்றி அருண்!

said...

\\ Arunkumar said...
hey... enga paati phone-la...
pesittu varen ;-)\\

ஹா! ஹா!.....பேசிட்டு வாங்க உங்க 'பாட்டி' கிட்ட!!

said...

\\ aruna said...
ரொம்ப நல்லா இருந்தது கதை! சூப்பர்!
அன்புடன் அருணா\

வாங்க அருணா,

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி அருணா!

said...

\\ நிமல்/NiMaL said...
//பரவாயில்லை 'ஹாய்' சொல்லுவோம் என்று நினைத்து வாய் திறந்து 'ஹாய்' சொன்னாள் மது.
வெறும் காத்து தான் வந்தது!!//
இது அழகு...!

//குறும்பு கொப்பளிக்கும் கண்களில்
காதலையும் கண்டு களித்தான் அருண்.//
உங்களின் வர்ணனைகளும் வார்த்தை தெரிவுகளும் நன்றாயிருக்கிறது. முக்கியமாக உரையாடல்கள் அழகு...!

கவிதையுடன் ஒரு அழகான முடிவை கொடுத்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்... !!!\\

ஹாய் நிமல்,

கதையில் நீங்கள் ரசித்த வரிகளை குறிப்பிட்டு பாராட்டுவது, விமர்சிப்பது எனக்கு பெரிதும் ஊக்கத்தை கொடுக்கிறது.

வாழ்த்துக்களுக்கு நன்றி நிமல்!!

said...

:))) Nice one...

//எதிர்பார்த்தபடியே கதை சென்றாலும் படிக்க படிக்க ஆனந்தம்!!
யாரும் எதிர்பார்க்காத மாதிரி வித்தியாசமாக முடிக்கிறேன் பேர்வழி என்று ஏதும் செய்யாமல் இருந்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!//

CVR... yaara solreenga???? ;)))

said...

// Arunkumar said...
hey... enga paati phone-la...
pesittu varen ;-)//

Entha paatti Arun??? Indiala irunthaa??? ;)))

said...

அப்பாடி...ரெண்டு பேரும் சேந்துட்டாங்க. :) நன்றி நன்றி. நல்லபடி திருப்தியா கதைய முடிச்சிருக்கீங்க. அதுக்கு ரொம்ப நன்றி. :)

said...

\\ ஜி said...
:))) Nice one...

//எதிர்பார்த்தபடியே கதை சென்றாலும் படிக்க படிக்க ஆனந்தம்!!
யாரும் எதிர்பார்க்காத மாதிரி வித்தியாசமாக முடிக்கிறேன் பேர்வழி என்று ஏதும் செய்யாமல் இருந்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!//

CVR... yaara solreenga???? ;)))\\

நன்றி ஜி!

said...

திவ்யா
தாங்க முடியலை!
பின்ன, அவ்ளோ பெரிய வாலு, இந்த மதுப் பொண்ணை, ஒரே பதிவில், இப்படிச் சாதுவாக்கி கவுத்துட்டீங்களே! :-)

//'பாட்டியின்' முகத்திரையை நானே திறந்து 'என் மதுவை' பார்க்க ஆசைப்பட்டேன், கோபமா??" என்றான் கெஞ்சலுடன்//

Again, the story is just as simple as coffee...
It's the dialogue that sweetens it more!

வாழ்த்துக்கள் மதுஅருண்!
(மதுஅருண் - no space - intentional :-)

Anonymous said...

திவ்யா எப்படிம்மா இவ்வளவு romantic ஆக எழுதுறீங்க.சூப்பர் ;)

said...

Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க நட்சத்திர வாரம் nice.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா

said...

Template நன்றாக உள்ளது :)

said...

Super back round :-)..

said...

hey, pudhu template nalla irukku but i guess it would show ur posts a little more lengthier..

said...

கதையின் முடிவு லைட்'யா ஊகிக்க முடிந்தாலும், அருமையா முடிச்சி இருக்கீங்க.... hats off :)

இது வரைக்கும் எத்தனை கதை எழுதி இருப்பீங்க?

said...

உங்க புது டெம்ப்ளேட் சூப்பர்!

said...

என்ன புதுசா எதுவுமே எழுத காணமே என்று பார்க்க வந்தால், புது templete க்கு மாறி இருக்கு... அழகா இருக்கு... :)

ஆனாலும் Mozilla Firefox இல் சரியா வரமாட்டேன் என்கிறது, என்னப்போல லினக்ஸ் பேர்வழிகளுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்... ;)

இதற்கான தீர்வை வசந்தம் ரவி இங்கே எழுதி இருக்கிறார்...

தொடர்ந்து எழுதுங்க...!!!

said...

\\Arunkumar said...
hey, pudhu template nalla irukku but i guess it would show ur posts a little more lengthier..\\

ரீப்பிட்டேய்...பழைசு அருமையாக இருக்கும்..ஆமா நட்சத்திரம் வாரம் சீக்கிரம் முடிச்சிட்டிங்க போல! ;)

said...

\\ G.Ragavan said...
அப்பாடி...ரெண்டு பேரும் சேந்துட்டாங்க. :) நன்றி நன்றி. நல்லபடி திருப்தியா கதைய முடிச்சிருக்கீங்க. அதுக்கு ரொம்ப நன்றி. :)\\

கதையையும் முடிவையும் திருப்பதிகரமாக ரசித்ததிற்கு நன்றி ராகவன்.

[தொடர்ந்து கதையின் எல்லா பகுதியையும் படிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி]

said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
திவ்யா
தாங்க முடியலை!
பின்ன, அவ்ளோ பெரிய வாலு, இந்த மதுப் பொண்ணை, ஒரே பதிவில், இப்படிச் சாதுவாக்கி கவுத்துட்டீங்களே! :-)

//'பாட்டியின்' முகத்திரையை நானே திறந்து 'என் மதுவை' பார்க்க ஆசைப்பட்டேன், கோபமா??" என்றான் கெஞ்சலுடன்//

Again, the story is just as simple as coffee...
It's the dialogue that sweetens it more!

வாழ்த்துக்கள் மதுஅருண்!
(மதுஅருண் - no space - intentional :-)\\

ஹாய் ரவி,
சிம்பிள் காபியையும் ஸ்வீட்டா கொடுத்துட்டேனா??
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ரவி!

[வாலு பொண்ணுங்களும் இந்த காதல்ன்னு வந்துட்ட கவுத்துடுறாங்களே சாதுவாக!! என்ன பண்றது!!]

Ungal intentional comment poi sera vendiyavarai sernthirukkum ena nambukirein!!

said...

\\ துர்கா said...
திவ்யா எப்படிம்மா இவ்வளவு romantic ஆக எழுதுறீங்க.சூப்பர் ;)\\

வாம்மா துர்கா!
ரொம்ப ரோமாண்டிக்கா எழுதியிருக்கிறேனா?? நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் துர்கா!

பாராட்டிற்கு நன்றி !

said...

\ நிவிஷா..... said...
Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க நட்சத்திர வாரம் nice.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா\\

ஹாய் Nivisha,
முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி,
அவசியம் உங்கள் வலைத்தளத்திற்கு வருகிறேன்.

said...

\\ sathish said...
Template நன்றாக உள்ளது :)\

டெம்ப்லேட்டை கவனிச்சுட்டீங்களா சதீஷ்??

said...

\ kavidhai Piriyan said...
Super back round :-)..\\

வாங்க கவிதை பிரியன்,
டெம்ப்ளேட்டை விமர்சித்ததுக்கு நன்றி.

said...

\Arunkumar said...
hey, pudhu template nalla irukku but i guess it would show ur posts a little more lengthier..\\

ஹலோ அருண்,

க்ரெக்ட்தான் அருண், போஸ்டெல்லாம் ரொம்ப நீளமாயிருக்கிறாப்ல இருக்குது இந்த டெம்ப்லேட்டில்.

உன்னோட போஸ்டெல்லாம் ரொம்ப lengthy இருக்கு, ஸோ இனிமே சின்ன சின்ன போஸ்டா போடுன்னு சொல்லாம சொல்லுறீங்களோ ????]

said...

\\ My days(Gops) said...
கதையின் முடிவு லைட்'யா ஊகிக்க முடிந்தாலும், அருமையா முடிச்சி இருக்கீங்க.... hats off :)

இது வரைக்கும் எத்தனை கதை எழுதி இருப்பீங்க?\

ஹாய் கோப்ஸ்,
கதையை தொடர்ந்து படித்ததிற்கு ஒரு தாங்க்ஸ்!
முடிவை பாராட்டியதற்கு இன்னொரு தாங்க்ஸ்!

இது வரைக்கு எத்தனை கதைன்னு இன்னும் கவுண்ட் பண்ணல கோப்ஸ், எண்ணிப்பார்த்து சொல்லுங்களேன்??

said...

\ Dreamzz said...
உங்க புது டெம்ப்ளேட் சூப்பர்!\

அப்படீங்களா, புது டெம்ப்ளேட் சூப்பரா இருக்குதா?
நன்றிங்கோவ்!

said...

\ கோபிநாத் said...
\\Arunkumar said...
hey, pudhu template nalla irukku but i guess it would show ur posts a little more lengthier..\\

ரீப்பிட்டேய்...பழைசு அருமையாக இருக்கும்..ஆமா நட்சத்திரம் வாரம் சீக்கிரம் முடிச்சிட்டிங்க போல! ;)\\

பழைய டெம்ப்ளேட் தான் உங்களுக்கும் பிடிச்சிருந்ததா??

ஸ்டார் வீக்குக்கு அவ்வளவு போஸ்ட் தான் என்னால எழுத முடிந்தது கோபி.

said...

\\ நிமல்/NiMaL said...
என்ன புதுசா எதுவுமே எழுத காணமே என்று பார்க்க வந்தால், புது templete க்கு மாறி இருக்கு... அழகா இருக்கு... :)

ஆனாலும் Mozilla Firefox இல் சரியா வரமாட்டேன் என்கிறது, என்னப்போல லினக்ஸ் பேர்வழிகளுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்... ;)

இதற்கான தீர்வை வசந்தம் ரவி இங்கே எழுதி இருக்கிறார்...

தொடர்ந்து எழுதுங்க...!!!\\

ஹாய் நிமல்,
தகவலுக்கு ரொம்ப தாங்க்ஸ்,
வசந்தம் ரவியின் போஸ்ட் ரொம்ப யுஸ்ஃபுல்லா இருந்தது, இப்போ firfox சிலும் பதிவின் எழுத்துக்கள் சரியாக தெரிகிறது,

புது பதிவு எழுதியிருக்கிறேனா? என்று பார்க்க ஆவலுடன் நீங்க என் வலைத்தளம் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் நிமல்.

கண்டிப்பா தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்!

said...

முத்தாப்பாய் கவிதையோடு முடிக்கும் விதம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது!! வாழ்த்துக்கள்!! தொடரட்டும்!!

said...

aaha oru comment poten.. vandhucha illayanu theriyala.. i got some duplication error :(

//
உன்னோட போஸ்டெல்லாம் ரொம்ப lengthy இருக்கு, ஸோ இனிமே சின்ன சின்ன போஸ்டா போடுன்னு சொல்லாம சொல்லுறீங்களோ ????]
//
ippove minimum 4 parts vaikure ella kadhaikum.. short-a ezhuda sonna naanga wait panniye nondhuruvom...

//
கதையையும் முடிவையும் திருப்பதிகரமாக ரசித்ததிற்கு நன்றி ராகவன்.
//
திருப்பதிகரமா ரசிக்குறதா?
LOL :))))))))))))))))

said...

\\ இசக்கிமுத்து said...
முத்தாப்பாய் கவிதையோடு முடிக்கும் விதம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது!! வாழ்த்துக்கள்!! தொடரட்டும்!!\

வாங்க இசக்கிமுத்து,
உங்கள் வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றி!

said...

\\ Arunkumar said...
aaha oru comment poten.. vandhucha illayanu theriyala.. i got some duplication error :(

//
உன்னோட போஸ்டெல்லாம் ரொம்ப lengthy இருக்கு, ஸோ இனிமே சின்ன சின்ன போஸ்டா போடுன்னு சொல்லாம சொல்லுறீங்களோ ????]
//
ippove minimum 4 parts vaikure ella kadhaikum.. short-a ezhuda sonna naanga wait panniye nondhuruvom...

//
கதையையும் முடிவையும் திருப்பதிகரமாக ரசித்ததிற்கு நன்றி ராகவன்.
//
திருப்பதிகரமா ரசிக்குறதா?
LOL :))))))))))))))))\

ஹலோ அருண், உங்க கமெண்ட் வந்ததெல்லாம் பப்ளீஷ் பண்ணிட்டேனே!! ஏதும் மிஸ் ஆகுதா??

திருப்திகரமாக ரசிக்கிறதுனா.....முழு மன நிறைவோடு ஒரு கதையை ரசித்து முடிப்பது அப்படின்னு அர்த்தம்!

said...

3 பாகத்தையும் சேர்த்து படித்தேன். ரொம்ப அழகான கதை, இயல்பான நடை!

said...

\\ கோகிலவாணி கார்த்திகேயன் said...
3 பாகத்தையும் சேர்த்து படித்தேன். ரொம்ப அழகான கதை, இயல்பான நடை!\\

வாங்க கோகிலவாணி,
மூன்று பகுதிகளையும் சேர்த்துப் படித்த உங்கள் பொறுமைக்கு தலைவணங்குகிறேன்!

உங்கள் முதல் வருகைக்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

said...

Very Nice ..

said...

இனிமையான காதல் கதை...
வாழ்த்துக்கள் !!!
I am fan of "Happy Endings". I am glad u finished it with a Happy Note... :)

said...

மோதிரத்தை அணிவிக்கையில்........மதுவின் மடியிலிருந்த புஸ்தகத்தின் பக்கங்கள் காற்றில் படபடத்தது, அதில் மது எழுதியிருந்த 'மதுமிதா அருண்குமார்' அவர்கள் இருவரையும் மேலும் பரவசப்படுத்தி வெட்கப்பட வைத்தது.

Nicely done!

said...

மோதிரத்தை அணிவிக்கையில்........மதுவின் மடியிலிருந்த புஸ்தகத்தின் பக்கங்கள் காற்றில் படபடத்தது, அதில் மது எழுதியிருந்த 'மதுமிதா அருண்குமார்' அவர்கள் இருவரையும் மேலும் பரவசப்படுத்தி வெட்கப்பட வைத்தது.

Nicely Done!