December 12, 2007

மீனா...



நாங்கள் திருமணமாகி இந்த வீட்டின் மேல்மாடியில் குடிவந்து ஒரு வருடமாகிறது. கீழ் போர்ஷனில் வீட்டின் உரிமையாளர் குடியிருக்கிறார்கள்,

அவர்களுக்கு 17 வயதில் ஒரே ஒரு மகள், பெயர் மீனாட்ச்சி. சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சாலை விபத்தில் அவளது தலையில் அடிபட்டு புத்தி பேதலித்த பெண் அவள்.
அந்த 17 வயதுக்கே உரித்தான வாலிப பொலிவுடன் பார்க்க மிகவும் அழகாயிருப்பாள் மீனா.அவளது குழந்தைத்தனமான நடவடிக்கைகள் அக்கம் பக்கத்தினரின் கேலிக்குக் காரணமாக இருப்பதாலும், மீனா தனியாக வெளியில் சென்று விடக்கூடாது என்பதாலும் மீனாவின் அம்மா அவளை வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பார்.எப்போதாவது டி.வி பார்பதற்க்காக மட்டும் முன் அறைக்கு வர அனுமதிப்பார்.

என் கணவர் அலுவலகம் சென்றபின், அவ்வப்போது நான் அவர்கள் வீட்டிற்க்குச் சென்று மீனாவுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன், நான் பேசுவது புரிந்தது போல் தலையாட்டிக்கொண்டிருப்பாள், அவள் வெகுளித் தனத்தை ரசிப்பேன்.

என் பெயரை 'காஞ்சனா' என்று முழுவதுமாக உச்சரிக்காமல், 'காஞ்சு' என்று அழைப்பாள். என் கணவரை ஒருமையில் "ஹே ரமணா, எப்படி இருக்க" என்று பேசுவாள். மரியாதையுடன் பேசுமாறு மீனாவின் அம்மா அவளை அதட்டுவார்.

சில சமயங்களில் முன் அறையின் கதவு திறந்திருந்தால்,மீனா அவள் அம்மாவிற்கு தெரியாமல் வெளியில் ஓடிவிடுவாள்.பின் நானும் , மீனாவின் அம்மாவும் அவளை தேடிப் போய் அழைத்து வருவோம்.

வீடு சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருப்பதால், ஆள்நடமாட்டம் அதிகமிராது எங்கள் தெருவில், அடுத்த தெருவிலிருக்கும் கோயில் மண்டபத்தில் சிறுவர்கள் விளையாடிகொண்டிருபார்கள் மாலை வேளைகளில். அதனைக் காண தான் மீனா அங்கே ஓடுவாள். இரவிலும் சில நேரம் மீனா அங்கே ஓடிவிடுவாள். நானும் மீனாவின் அம்மாவிற்கு துணையாக செல்வேன்.

" காஞ்சனா,மாசமாயிருக்கிற பொண்ணுமா நீ, என் கூட இப்படி இருட்டிலே வர்ரியேம்மா, உனக்கு ரொம்ப கஷ்டம்மா" என்று புலம்பிக்கொண்டே வருவார்.

என் பிரசவகாலம் நெருங்கியதும், பிரசவத்திற்க்காக நான் என் பிறந்தகம் சென்றுவிட்டேன். 3 மாதம் கழித்து குழந்தையுடன் வீட்டிற்க்குத் திரும்பினேன். என்னை அன்போடு ஆரத்தி எடுத்து வரவேற்றார் மீனாவின் அம்மா. என் பெற்றோருக்கு அவரின் அன்பினைப் பார்த்து ரொம்ப சந்தோஷம்.

என் பெற்றோர் ஊருக்கு திரும்பியதும், நான் என் குழந்தையை மீனா பார்க்கவில்லையே என்று அவளிடம் காட்டுவதற்க்காக, குழந்தையுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.
மீனாவின் அம்மா என்னைப் பார்த்ததும் அழ தொடங்கினார்.

" ஏன்மா அழுறீங்க, மீனா எங்கே? நான் வந்ததிலிருந்து அவளை பார்க்கவேயில்லை, என் குழந்தையைப் பார்த்தா மீனா ரொம்ப சந்தோஷப்படுவா, அவளை கூப்பிடுங்கமா" என்றேன்.

"காஞ்சனா" என்று குரல் உடைந்து வந்தது, பின் மறுபடியும் அழ ஆரம்பித்தார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, மீனாவிற்க்கு என்னவாயிற்று என்று என்னால் யுகிக்க முடியாமல், நெஞ்சு படபடத்தது.

மீனாவின் அம்மா அழுகையை சிறிது நிறுத்திவிட்டு பேச தொடங்கினார்.

" காஞ்சனா, நீ உன் குழந்தையை அவ கிட்ட காட்ட வந்திருக்க, இன்னும் எட்டு மாசத்துல அவ உன்கிட்ட அவ குழந்தையை காட்டப் போறா" மீண்டும் அழுதார் மீனாவின் அம்மா.

"என்ன............என்னமா........இது"

" ஆமா காஞ்சனா, அவ மாசமாயிருக்கா......."

"எப்படிம்மா............அவ எப்படிம்மா........."

" அதுதான் காஞ்சனா எனக்கும் புரியல, யாரு இதுக்கு காரணம், எப்போ எங்கேன்னு எதுவுமே சொல்ல தெரியலியேம்மா இவளுக்கு" என்று தன் சேலை முந்தானையில் முகம் புதைத்து மீண்டும் கதற ஆரம்பித்தார்.

எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் தினறினேன். பின் அவரை ஆசுவாசப்படுத்தி, டாக்டரிடம் ஆலோசனைக் கேட்கலாம் என்று தைரியம் கூறிவிட்டு என் வீட்டிற்கு வந்தேன்.
அன்று முழுவதும் மனசே சரியில்லை எனக்கு. இரவு என் கணவரும் லேட்டாக வீட்டிற்கு வருவதாக ஃபோன் செய்தார். குழந்தையும் நானும் தனியாக இருந்தோம். நினைப்பு முழுவதும் மீனாவின் மேல்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சிந்தனை கலைத்தேன், குழந்தை தூங்கிக் கொண்டிருந்தான். வேகமாக சென்றுக் கதவை திறந்தேன்.கண்களில் கண்ணீரோடும், பதைபதைப்போடும் மீனாவின் அம்மா.

"காஞ்சனா, மீனா வெளியில ஓடிட்டாமா, இரண்டு நாளா நான் சரியா சாப்பிடல, என்னால நடக்க கூட முடியல.........நீ.......கொஞ்சம்........"

"சரிம்மா, நான் போய் கூட்டிட்டு வரேன், அவ கோயிலுக்கு தான் போயிருப்பா, நீங்க குழந்தையைப் பார்த்துக்கோங்க" என்று கூறிவிட்டு தெருவில் வேகமாக நடந்தேன், தெருமுனையில் மீனா திரும்புவது தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்தது. என் நடையை வேகமாக்கினேன். அவள் அந்த கோயில் மண்டபத்துக்குத்தான் சென்றாள்.

மீனாவின் கரம்பிடித்து ," மீனா வாமா வீட்டுக்கு போலாம்" என்றேன்.
வழக்கம்போல் வரமாட்டேன் என்று அடம்பிடித்தாள்

நான் அவள் கரம் பிடித்து இழுக்க முயல, அவள் முரண்பிடிக்க , கல் தடுக்கி கீழே விழுந்தாள் மீனா.அவளை தரையிலிருந்து தூக்கிவிட நான் அவளின் கரம் பற்றுகையில், அவளது துப்பட்டா என் கைகளில் வந்தது,

உடனே அலற ஆரம்பித்தாள் மீனா,
"என்ன விட்ரு ரமணா, என்ன விட்ரு......என் ட்ரஸ் கழட்டாதே ரமணா,..........ரமணா என்னை ஒன்னும் பண்ணிடாதே"

எனக்கு தலை சுற்றியது,

பேதை பெண் மீனா தொடர்ந்து அலறிய வார்த்தைகளும், நான் ஊரில் இல்லாத நாட்களில் மீனா இரவில் ஓடிய போது சில சமயங்களில் என் கணவரின் உதவியை மீனாவின் அம்மா நாடியதாக கூறியதும், என்ன நடந்திருக்கும் என எனக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.....

அப்போ மீனாவின்.......கர்ப்பத்திற்க்கு காரணம்..............ரமணா.............என் கணவரா???????

என் மூளையின் அணுக்கள் சிதறின எனக்குள்.

[நச்சுன்னு ஒரு கதை போட்டிக்காக]

61 comments:

said...

:((((

இப்படி பண்ணிட்டானே ரமணா...

said...

ம்ம்ம் ... :-(

said...

நல்லாயிருந்தது.

நன்றி!

ஆனா, முடிவு யூகிக்க முடிந்தது ;)

Anonymous said...

like other stories of yours, good flow .. but, on the contrary, storyline and ending was very predictable!

Anonymous said...

/*என் மூலையின் அணுக்கள் சிதறின எனக்குள்*/

should be
என் மூளையின் அணுக்கள் சிதறின எனக்குள்

said...

//என் மூளையின் அணுக்கள் சிதறின எனக்குள்.//
உங்களின் எழுத்து நடை சிறப்பு...

ஊருக்கு போனபின் கர்ப்பமானதால் முடிவை யூகிக்க முடிந்தது...

படுபாவி ரமணா... :(

வாழ்த்துக்கள்...!

said...

நல்லா இருக்கு!

said...

ஆனால் மிகவும் வித்தியாசமாக இல்லை!

said...

ம்ம்ம்

போட்டிக்கு வாழ்த்துக்கள் :)

said...

ending known endingalum semma smootha poguthu flow..unga writing style nalla iruku...

//should be
என் மூளையின் அணுக்கள் சிதறின எனக்குள்//

LOL chancela :D

said...

இடைவிடாமல் படிக்க வைக்கும் நடை மற்றும் கதை நன்றாக இருக்கிறது
பரிசு வெல்ல என் வாழ்த்துக்கள்...

தினேஷ்

said...

ம்ம்ம்... இந்த கதையை நல்ல இருக்குன்னு சொல்ல மனசு வரல. But
நல்ல எழுதி இருக்கீங்க!

said...

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

said...

அம்மணி கதை நடை கலக்கலா இருக்குங்கோ....

ஆமா பொண்டாட்டி பிரசவத்துக்கு போனாலே ஆம்பிளைங்க கட்டுப்பாடோட இருக்க மாட்டாகளா என்ன ? என்ன கொடுமை திவ்யா இது ?? :))))))

said...

சே இப்படியுமா :(

said...

\\
ஜி said...
:((((

இப்படி பண்ணிட்டானே ரமணா...\\

வருகைக்கு நன்றி ஜி!

said...

\\சுந்தர் / Sundar said...
ம்ம்ம் ... :-(
\\

வருகைக்கு நன்றி சுந்தர்!

said...

\\SurveySan said...
நல்லாயிருந்தது.

நன்றி!

ஆனா, முடிவு யூகிக்க முடிந்தது ;)\\

கருத்திற்க்கு நன்றி சர்வேசன்!

said...

\\Anonymous said...
like other stories of yours, good flow .. but, on the contrary, storyline and ending was very predictable!\\

Hi Anony,
I shud have given more stress to the ending to bring out an unpredictable twist, thanks for ur comments!

said...

\Anonymous said...
/*என் மூலையின் அணுக்கள் சிதறின எனக்குள்*/

should be
என் மூளையின் அணுக்கள் சிதறின எனக்குள்\\

அனானி!
பிழைத்திருத்ததிற்க்கு மிக்க நன்றி!

said...

\\நிமல் said...
//என் மூளையின் அணுக்கள் சிதறின எனக்குள்.//
உங்களின் எழுத்து நடை சிறப்பு...

ஊருக்கு போனபின் கர்ப்பமானதால் முடிவை யூகிக்க முடிந்தது...

படுபாவி ரமணா... :(

வாழ்த்துக்கள்...!\

நன்றி நிமல்,
யூகிக்க முடியாவண்ணம் கதை எழுத முயற்ச்சிக்கிறேன்.

said...

\குசும்பன் said...
நல்லா இருக்கு!

\குசும்பன் said...
ஆனால் மிகவும் வித்தியாசமாக இல்லை!\\


வித்தியாசமாக எழுத நிச்சயம் முயற்ச்சிக்கிறேன் குசும்பன், வருகைக்கு நன்றி!

said...

\\நாகை சிவா said...
ம்ம்ம்

போட்டிக்கு வாழ்த்துக்கள் :)\\

நன்றி சிவா!

said...

\\gils said...
ending known endingalum semma smootha poguthu flow..unga writing style nalla iruku...

//should be
என் மூளையின் அணுக்கள் சிதறின எனக்குள்//

LOL chancela :D\\

நன்றி Gils!!

said...

\தினேஷ் said...
இடைவிடாமல் படிக்க வைக்கும் நடை மற்றும் கதை நன்றாக இருக்கிறது
பரிசு வெல்ல என் வாழ்த்துக்கள்...

தினேஷ்\\

தொடர்ந்து நீங்க எனக்களிக்கும் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி தினேஷ்!

said...

\\Dreamzz said...
ம்ம்ம்... இந்த கதையை நல்ல இருக்குன்னு சொல்ல மனசு வரல. But
நல்ல எழுதி இருக்கீங்க!\

நன்றி Dreamzz!

said...

\\வினையூக்கி said...
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்\\

நன்றி வினையூக்கி!

said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
அம்மணி கதை நடை கலக்கலா இருக்குங்கோ....

ஆமா பொண்டாட்டி பிரசவத்துக்கு போனாலே ஆம்பிளைங்க கட்டுப்பாடோட இருக்க மாட்டாகளா என்ன ? என்ன கொடுமை திவ்யா இது ?? :))))))\

வாங்க ஜொள்ளண்ணா,

நீங்க கேட்ட கேள்வி, ரமணா மாதிரி ஆளுங்க கிட்ட தானுங்கண்ணா கேட்க்கனும்!

said...

\\My days(Gops) said...
சே இப்படியுமா :(\

வருகைக்கு நன்றி கோப்ஸ்!

said...

//Divya said...
யூகிக்க முடியாவண்ணம் கதை எழுத முயற்ச்சிக்கிறேன்.//

நச் போட்டிக்கு இன்னோர் நச் கதை எழுதவும்... இந்த கதை பொதுவில் நன்றாக இருந்தாலும், இந்த போட்டிக்கு இன்னும் சிறப்பான கதை ஒன்றை எழுதலாமே...!

வெற்றிபெற வாழ்த்துக்கள்..!

said...

நல்லாயிருக்கு...

போட்டிக்கு வாழ்த்துக்கள் :)

said...

//ஆமா பொண்டாட்டி பிரசவத்துக்கு போனாலே ஆம்பிளைங்க கட்டுப்பாடோட இருக்க மாட்டாகளா என்ன ? என்ன கொடுமை திவ்யா இது ??//

ரிப்பீட்டு :))

said...

நல்லா இருக்கு திவ்யா.

ஆனா...முடிவை ஊகிக்க முடிஞ்சது.

said...

நிறைய பேரு சொல்லிட்டாங்கன்னு நெனைக்கறேன்,ஆனா ஆரம்பிக்கும் போதே இது மாதிரி ஆகும்னு எனக்கும் தோண்றியது!! :-)

said...

கதை நல்லா இருக்கு.
நல்லா எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க.

said...

என்ன கொடுமை ரமணா இது?

கதை நல்லாயிருக்கு...

said...

கதை நல்லா இருந்தது...

போட்டிக்கு இன்னொரு கதை முயற்சி செய்யவும்

said...

திவ்யா,


இன்னும் பெட்டரா திங் பண்ணுங்க.... உங்களுக்கு இருக்கிற திறமைக்கு கட்டாயமா வெற்றி பெறலாம்.... :)

said...

நல்லா இருக்குங்க திவ்யா :)))

said...

கதை நல்லாருக்கு திவ்யா.. ஆனா போட்டிக்கு வேற கதை முயற்சி செய்யுங்களேன்..இன்னும் நேரம் இருக்கே...

said...

இப்போதான் இந்த கதை படிச்சேன். நீங்க எழுதீய கதையிலேயே ஆழமான கருத்து இதுதான் திவ்யா..

ரியல்லி இது நச்சுன்னுதான் இருக்கு....

said...

Good narration Divya.. Nice style..
Good Luck !!

said...

\\ நிமல் said...
//Divya said...
யூகிக்க முடியாவண்ணம் கதை எழுத முயற்ச்சிக்கிறேன்.//

நச் போட்டிக்கு இன்னோர் நச் கதை எழுதவும்... இந்த கதை பொதுவில் நன்றாக இருந்தாலும், இந்த போட்டிக்கு இன்னும் சிறப்பான கதை ஒன்றை எழுதலாமே...!

வெற்றிபெற வாழ்த்துக்கள்..!\\

நிமல் , உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி, சமயமிருந்தால் நிச்சயம் மற்றொரு கதை எழுத முயற்ச்சிக்கிறேன்!

said...

\\ கோபிநாத் said...
நல்லாயிருக்கு...

போட்டிக்கு வாழ்த்துக்கள் :)\\

நன்றி கோபிநாத்!

said...

\\ அரை பிளேடு said...
//ஆமா பொண்டாட்டி பிரசவத்துக்கு போனாலே ஆம்பிளைங்க கட்டுப்பாடோட இருக்க மாட்டாகளா என்ன ? என்ன கொடுமை திவ்யா இது ??//

ரிப்பீட்டு :))\\

அப்படிபட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அரைபிளேடு,

வருகைக்கு நன்றி!

said...

\\ துளசி கோபால் said...
நல்லா இருக்கு திவ்யா.

ஆனா...முடிவை ஊகிக்க முடிஞ்சது.
\\

உங்கள் கருத்திற்க்கும், பாராட்டிற்க்கும் மிக்க நன்றி துளசி கோபால்!

said...

\\ CVR said...
நிறைய பேரு சொல்லிட்டாங்கன்னு நெனைக்கறேன்,ஆனா ஆரம்பிக்கும் போதே இது மாதிரி ஆகும்னு எனக்கும் தோண்றியது!! :-)\\

உங்களுக்கும் ஆரம்பித்திலேயே தோனிடுச்சா??
வருகைக்கு நன்றி சிவிஆர்!

said...

\\ நக்கீரன் said...
கதை நல்லா இருக்கு.
நல்லா எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க.\\

ரொம்ப நன்றிங்க நக்கீரன், உங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்க்கும்!

said...

\\ ரசிகன் said...
என்ன கொடுமை ரமணா இது?

கதை நல்லாயிருக்கு...\\

நன்றி ரசிகன்!

said...

\\ வெட்டிப்பயல் said...
கதை நல்லா இருந்தது...

போட்டிக்கு இன்னொரு கதை முயற்சி செய்யவும்\\

சரிங்கண்ணா, முயற்ச்சிக்கிறேன்!

said...

கதை ஓட்டம் அருமை!! வாழ்த்துகள்!!

said...

ஆம்பளைங்க என்ன அவ்வளவு கல்நெஞ்சக்காரங்களா? கொஞ்சம் ஓவர் தான்.கதை நல்லா இருக்கு.ஆனா கரு நல்லா இல்லை.

said...

இங்க நான் லேட் என்ட்ரி :((
சாரிங்க... ஆனாலும் ரமணா இவ்வளவு மோசமா இருந்திருக்க வேணாம் :(

said...

\\ Thamizhmaagani said...
கதை ஓட்டம் அருமை!! வாழ்த்துகள்!!\\


மிக்க நன்றி தமிழ்!!

said...

\\ சரவணா..! said...
ஆம்பளைங்க என்ன அவ்வளவு கல்நெஞ்சக்காரங்களா? கொஞ்சம் ஓவர் தான்.கதை நல்லா இருக்கு.ஆனா கரு நல்லா இல்லை.\\

வருகைக்கு நன்றி சரவணா!

said...

நல்லா இருக்குங்க

said...

அருமையா எழுதிரூக்கீஙக.... வாழ்த்துக்கள்....

said...

\\ Nithya A.C.Palayam said...
நல்லா இருக்குங்க\\

உங்கள் வருகைக்கும், பாராட்டிற்க்கும் மிக்க நன்றி நித்யா.

said...

\\ ராம்குமார் - அமுதன் said...
அருமையா எழுதிரூக்கீஙக.... வாழ்த்துக்கள்....\\

ராம்குமார்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!!!

said...

Hard to digest...hmm a gud one - striking story.

said...

hi...
romba nalla irundhadhu...