எளிதில் நட்புடன் பழகக்கூடிய திறனுடையவள் ஹேமா, அதனால் இருவரும் ஒரு சில மாதங்களிலேயே நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். அவ்வப்போது அவள் என் ஹாஸ்டல் அறைக்கு வந்து லூட்டி அடிப்பதும், வாரயிறுதிகளில் நான் அவள் வீட்டிற்க்கு சென்று அரட்டையடிப்பதும் வாடிக்கையானது.
"நிஷா நீயும் எனக்கொரு மகள்" என்று ஹேமாவின் அம்மா சொல்லுமளவுக்கு அவள் குடும்பத்தோடும் பழகிவிட்டேன்.
இன்று க்ளாஸ் முடிந்து, நான் மட்டும் லைப்ரரிக்குச் சென்றுவிட்டு ஹாஸ்டல் ரூமிற்க்கு வந்தால், அங்கு ஹேமா கலங்கிய கண்களுடன் சோகமாக...
நிஷா: ஹே ஹெமா என்னடி ஆச்சு, இங்க வந்து இப்படி சோகமா சீன் போட்டுட்டிருக்க, எக்ஸாம் ரிசல்ட் கூட வரலியே அப்புறமென்ன கண்ணில் நீர் , முகத்தில் சோகம்???
ஹேமா: ஒன்னுமில்ல நிஷா.
நிஷா: நீ ஒன்னுமில்லன்னு சொல்லிட்டேயிருப்ப, நான் கெஞ்சிக் கூத்தாடி உன்னை பேசவைக்கனும் , அதெல்லாம் வேணாம், நேரா மேட்டருக்கு வா,[இல்லீனா பதிவு நீளமாகிடும்], சரி என்ன ஆச்சுன்னு சொல்லு ஹேமா...
ஹேமா: நிஷா என் ஃப்ரெண்ட் விகாஷ் இருக்கானில்ல.......அவன் என்கிட்ட.......ப்ரோபோஸ் பண்ணிட்டான்..
நிஷா: அட்ரா! அட்ரா சக்கை!! அப்படிபோடு! கங்கிராட்ஸ் ஹேமா!! எப்போடி சொன்னான், எப்படிடி ப்ரோபோஸ் பண்ணினான்.......ஹெ சொல்லு........ப்ளீஸ்....சொல்லு!!
ஹேமா: வெறுப்பேத்தாதே நிஷா, நானே நொந்துப்போய் இருக்கிறேன்.
நிஷா: ஏண்டா......நொந்துப்போகிற அளவுக்கு என்னாச்சு, ஒத்த ரூபா 'ரெட் ரோஸ்' மட்டும் கொடுத்து ரொம்ப சீப்பா ப்ரோபோஸ் பண்ணிடான்னேன்னு ஃபீல் பண்றியா??
ஹேமா: நிறுத்து நிஷா, என்னோட வேதனை உனக்கு புரியல.......
நிஷா: ஓ.கே ஃபைன், உனக்கு இந்த ப்ரோபோஸ்ல என்ன ப்ராப்ளம்ன்னு சொல்லு.
ஹேமா: நிஷா, நான் அவனை என் ஃபரண்டா நினைச்சு தான் பேசினேன், இப்போ வந்து காதலிக்கிறேன் , நீயும் யோசின்றான், இவன் இப்படி வந்து கேட்பான்னு நான் எதிர்பார்க்கவேயில்லை..
நிஷா: இப்போ எதுக்கு அவனைத் திட்டுர, அவனோட பெஸ்ட் ஃப்ரண்ட் நீ, உன் மேல அவனுக்கு காதல் வந்தது தப்பா?
ஹேமா: என்னடி நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ற,
நிஷா: இதுல சப்போர்ட் பண்ண என்னயிருக்கு, ஃப்ரண்டா நினைச்ச ஒருத்தன் ப்ரோபோஸ் பண்ணிட்டான்னே அப்படின்னு சொன்னியே , அதுக்கு தான் , அது என்ன பெரிய தப்பான்னு கேட்டேன்!. சரி என் கேள்விக்கு பதில் சொல்லு.........டு யு லவ் ஹிம்??
ஹேமா: நோ , நோ......அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் அவ்ளோதான். அவன் மேல எனக்கு வேற எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல, நான் அவனை லவ்வெல்லாம் பண்ணல.
நிஷா: ஒ.கே ஃபைன், எவ்வளவு வருஷமா அவனை உனக்குத் தெரியும்.
ஹேமா: பி.பி.ஏ படிக்கும் போதிலிருந்தே தெரியும்......ஒரு நாலு வருஷம்.
நிஷா: சரி, இத்தனை வருஷம் ஃப்ரண்டா இருந்தவனுக்கு, உன்கிட்ட திடீர்ன்னு காதல் வந்திருக்காது. ரொம்ப நாளாகவோ, இல்ல ரொம்ப வருஷமாகவோ அவனுக்கு உன் மேல காதல் இருந்திருக்கும், இப்போதான் வெளிப்படுத்தியிருக்கிறான்.
ஹேமா: எப்படி நிஷா அவன் ரொம்ப நாளா லவ் பண்ணிட்டே தான் என்கிட்ட ஃப்ரண்டா பழகிட்டு இருந்தான்னு சொல்ற, அதெப்படி எனக்கு இவ்வளவு நாள் அவன்கிட்ட பேசியும் புரியாம போச்சு.
நான் அவனை இம்ப்ரஸ் பண்ற மாதிரி எதுவுமே பண்ணினதில்ல, பின்ன எப்படி என்னை அவன் லவ் பண்ணினான், சதா எனக்கும் அவனுக்கும் சண்டையும், வாக்குவாதமும் தான் வரும், என்னால நம்பவே முடியல நிஷா........
நிஷா:என்னடி ஹேமா இப்படி வெகுளியாயிருக்க,
இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது,
உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?
இப்படி கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க,
அழகாயில்லையேன்னு கவலைப்பட்டு இனிமே பொண்ணுங்க எல்லாம் 'ஃபேர் அண்ட் லவ்லி'க்கும், பியூட்டி பார்லருக்கும் காசு தண்டம் அழ வேண்டாம்.
அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!
இப்படியும் கூட கவிதை எழுதுறாங்க,
ஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,
ஹேமா: இப்போ எதுக்கு நீ கவிதை, கதைன்னு வளவளக்குற, என்னோட பிரச்சனைப் பத்தி மட்டும் பேசு, இல்லீனா என்னை தனியா விடு.....
நிஷா: ஒகே கூல் ........உன்னோட மேட்டருக்கு வருவோம், விகாஷ் இவ்வளவு நாள் இருந்த நட்பலையையும் தாண்டி காதலிக்க ஆரம்பிச்சு, அதை கண்டிப்பா உனக்கு கோடிட்டு காட்டியிருப்பான், உனக்குத் தான் புரியாம டூயுப் லைட்டாயிருந்திருப்ப, நீ ஒரு மண்டு....
ஹேமா: சரி நான் மண்டுன்னே வைச்சுக்கோ ! எப்படிடி, நாம ஃப்ரெண்டா நினைக்கிறவன் நம்மல லவ் பண்றான்னு புரிஞ்சுக்கிறது.
நிஷா: சொல்றேன் கேட்டுக்கோ,
நான் சொல்றத வைச்சுட்டு, நண்பனா பழகுகிற எல்லாரும் இப்படி பேசினா , காதலிக்கிறாங்கன்னு அர்த்தம் இல்ல, ஒரு உதாரணத்திற்க்குத் தான் இதெல்லாம் சொல்றேன் ஒகே வா?
ஹேமா: சரி ......சரி..........நீ சொல்லும்மா தாயே!
நிஷா: அதுக்கு முன்னாடி நான் கேட்கிற சில கேள்விகளுக்கு பதில் சொல்லு.
நீ விகாஷ் கிட்ட, எல்லா ஃப்ரெண்ட்ஸும் கூட இருக்கிறப்போ மட்டும் தான் பேசுவியா, இல்ல தனியா அவன் கூட மட்டும் அதிக நேரம் செலவழிப்பியா?
ஹேமா: எல்லாரும் சேர்ந்து தான் காஃபி ஷாப், ஐஸ்கிரீம் பார்லர் போவோம், ஃபோன்ல மட்டும் நானும் அவனும் தனியா பேசிப்போம்.
நிஷா: ஒஹோ, அப்படி... அப்படி....போகுதா கதை.சரி நீங்க அப்படி ரெண்டு பேரும் மட்டும் ஃபோன்ல பேசுறதுக்கும், எல்லார் கூடவும் நீ இருக்கும்போது அவன் உன் கிட்ட பேசுறதுக்கும் ஏதும் வித்தியாசம் இருந்ததா??
ஹேமா: வித்தியாசம்னா............நீ எதை வித்தியாசம்னு சொல்ற??
நிஷா: எல்லாத்தையும் உனக்கு விம் பார் போட்டு விளக்கி சொன்னாத்தான் புரியும், இந்த சாட், ஃபோன் இதுலெல்லாம் பேசுறப்போ சில விஷயம் கவனிக்கனும்,
உதாரணத்துக்கு, நீ வழக்கமா ஃபோன் பண்ற நேரத்துக்கு ஃபோன் பண்ணதப்போ, இல்ல ஃபோண் பண்றதுக்கு லேட்டானா, ரொம்ப டென்ஷனாகி அப்சட் ஆவானா??
ஹேமா: ஆமாம், செம டென்ஷன் ஆவான்,
ஆனா எல்லாரும் தான் சொன்ன நேரத்துக்கு ஃபோன் பண்ணலீன்னா டென்ஷன் ஆவாங்க, இதை வைச்சு எப்படி சொல்ல முடியும்?
நிஷா: எல்லாரும் படுற டென்ஷனுக்கும் , இதுக்கும் நிறைய வித்தியாசமிருக்குங்க அம்மணி!! சரி அதெல்லாம் பேசுற டோன் வைச்சு புரிஞ்சுக்கனும், அந்த அளவுக்கு உனக்கு விபரம் பத்தாது, சரி விடு.
ஃபோன் பேசிட்டு வைக்கும் போது, இல்லை ஒரு ரெண்டு மூணு நாள் நீ ஃபோன் பண்ணமுடியாம போச்சுன்னா, ' ரொம்ப மிஸ் பண்றேன்' அப்படின்னு சொல்வானா??
ஹேமா: ஆமா...........ஆமாம்...........சொல்லுவான்.
நிஷா: அப்படி போடு, இந்த மிஸ் பண்றேன்னு சொல்றப்போவே உஷார் ஆகிடனும். இதை 'மிஸ்' பன்ணிட்டா அப்புறம் இப்படி தான் அழுதுக்கிட்டு,
' நான் ஃப்ரெண்டா தானே பேசினேன், இப்படி லவ் பண்றேன்னு சொல்லிட்டான்னேன்னு ' புலம்ப வேண்டியது தான்.
ஹேமா: நீ சொல்றதெல்லாம் வைச்சுப் பார்த்தா, அவன் ரொம்ப நாளாகவே லவ் பண்ணிட்டு தான் இருந்திருக்கான். எனக்குத் தான் புரியல.
நிஷா: அவன் அப்பப்போ கோடு போட்டு காட்டியிருப்பான், நீ ஒரு பேக்கு, புரியாம இருந்ததும், இது சரிப்பட்டு வராது, இந்த டூயுப் லைட்டுக்கு நேரடி தாக்குதல் தான் சரின்னு முடிவு பண்ணி, ப்ரோபோஸ் பண்ணிட்டான்.
ஹேமா: நான் இப்போ என்னடி பண்றது????
நிஷா: ஹும்.........ஹேமா, உனக்கு அவனை பிடிச்சிருந்தா, அவன் மேல இருக்கிற நட்பு காதல்னு நீயும் உணர்ந்தா , ஒத்துக்கோ இந்த ஃப்ரோபோஸல,
ஒரு பெண்ணின் வாழ்க்கைத்துணை, அவளை ஒரு நண்பனைப் போல் நேசித்தால், மணவாழ்க்கை நல்லாத்தானே இருக்கும்!!
ஹேமா: ஆனா எனக்கு அவன் மேல அந்த மாதிரி எந்த ஈர்ப்பும், ஈடுபாடும், உணர்வுமில்லை. ஒரு நல்ல நண்பனா அவனை மதிக்கிறேன், நேசிக்கிறேன், ஆனா நிச்சயம் அது காதல் இல்ல. ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா நினைச்சு அவன் மேல நான் காட்டின தனிப்பட்ட அக்கறை அவனுக்கு என் மேல இப்படி ஒரு எண்ணம் வர காரணமாயிருந்திருக்குன்னு நினைக்கிறப்போ, கஷ்டமாயிருக்கு.
அவனைப் பார்த்தா பாவமாயிருக்கு நிஷா.
நிஷா: ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.
யோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்"
என்னிடம் பேசி முடித்துவிட்டு, தெளிந்த முகத்தோடு ஹேமா என் ரூமிலிருந்து வெளியேறியப் பின், என் மேஜையில் உள்ள பேப்பரில் அவள் கிறுக்கியிருந்த கவிதை...

நட்போடு......நண்பனாகவேயிரு!!!
நட்பை தந்தாய்
அன்பை தந்தாய்
பாசம் காட்டினாய்
பரிவு காட்டினாய்
அறிவுரை அள்ளித்தந்தாய்
வாழ ஊக்கமளித்தாய்
என்
கவிதை கூட உன்னால்தான்..
எல்லாம் நீ தந்தாய்
இன்று
காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!
அன்பை தந்தாய்
பாசம் காட்டினாய்
பரிவு காட்டினாய்
அறிவுரை அள்ளித்தந்தாய்
வாழ ஊக்கமளித்தாய்
என்
கவிதை கூட உன்னால்தான்..
எல்லாம் நீ தந்தாய்
இன்று
காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!
92 comments:
:-)
Relationship expert Divya வாழ்க!! B-)
//இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது,//
திவி, இந்த வரியை படிச்சுட்டு, பத்து நிமிடம் கைதட்டி கொண்டே இருந்தேன்பா!! சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்!!! எப்படி திவி, எப்படி??
//அப்படி போடு, இந்த மிஸ் பண்றேன்னு சொல்றப்போவே உஷார் ஆகிடனும்.//
ஆஹா... என்னப்பா.. இப்படி போட்டு தாக்குறீங்க! அருமை அருமை!!
கதை ரொம்பவே சூப்பரா இருந்துச்சு!! முடிவு நல்லா இருக்கு.
முடியாது என்று சொல்லவேண்டியது தானே? அதற்காக கண்ணீர் என்ற ஆயுதத்தை எடுக்கனுமா?
என்னவோ போங்க,இதெல்லாம் இயற்கை படுத்தும் பாடு.
நான் "கண்ணீரை" சொன்னேன். :-)
// உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?
இப்படி கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க,
அழகாயில்லையேன்னு கவலைப்பட்டு இனிமே பொண்ணுங்க எல்லாம் 'ஃபேர் அண்ட் லவ்லி'க்கும், பியூட்டி பார்லருக்கும் காசு தண்டம் அழ வேண்டாம்.
அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!
இப்படியும் கூட கவிதை எழுதுறாங்க,
ஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,//
hi hi...
links suuparuu..atha kathikkula include pannathu kalakkala irukkunga maaster.
‘நட்பின் நீட்சி தான் காதல்’ என்ற எதார்த்த உண்மையை உணர்த்துக்கிற கதை. உரையாடல் நடையில் கதையை நன்றாக எழுதியிருக்கிறிர்கள், கவிதைகள் மற்றும் சில இனைப்புகளை மேற்கோள்கள் காட்டி இருப்பது உங்கள் கதை நடை மேம்ப்பட்டு இருப்பதை காட்டுக்கிறது.
வாழ்த்துக்கள்
தினேஷ்
\\ஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,\\
இதுக்காவே உங்களுக்கு ஒரு "ஒ" போடலாம்...தெளிவாக எழுதியிருக்கிங்க ;))
\\ CVR said...
:-)
Relationship expert Divya வாழ்க!! B-)\\
வழிமொழிகிறேன்...;))
//பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா......... திணறிட்டிருக்காங்க,//
அப்படியா சொல்லுறீங்க.... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.
//உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!//
தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டா போல. அதில் ஏதும் தப்பு இல்லை.
நல்லவேளை அவனுக்கு இது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதே தவறு என்று சொல்லாம போனீங்களே... அது வரைக்கும் சந்தோஷம்.
மொத்தத்துல, தெளிவா குழப்பறீங்க.... அட பரவாயில்லை.. விவரமா ஒரு பொண்ணு கதைல இருக்கான்னு பார்த்தா, அப்ப கூட முடிவு இப்படியா?
கதை நல்லா இருக்குதுங்கோவ்!
நம்ம கவிதை எல்லாம் போட்டமைக்கு நன்றி..
//அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் அவ்ளோதான். அவன் மேல எனக்கு வேற எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல, நான் அவனை லவ்வெல்லாம் பண்ணல.
//
இது மட்டும் தெளிவா சொல்லிடறாங்க பொண்ணுங்க.. எங்களுக்கு தான் புரியறதே இல்ல!
//உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா? //
WOW kavidhai :)
//எல்லாத்தையும் உனக்கு விம் பார் போட்டு விளக்கி சொன்னாத்தான் புரியும்//
இது என்னமோ சரி..
//எல்லாம் நீ தந்தாய்
இன்று
காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!
//
காதல் இல்லாததற்கு
காதல் காரணமென்றால் சரி..
காலம் காரணமாய் இருந்தால்?
"தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய் "
வரிகள் தான் நியாபகம் வருது :P
மொத்தத்துல கதை னு சொல்லி, நிறைய மேட்டர் சொல்லிடீங்க! Superu!
//அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.//
கதை அருமை... எப்பவும் போலவே...
முக்கியமாக இந்த வரிகள் மிகவும் சரி...!!
வாழ்த்துக்கள்..!
<< இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது >>
இந்த வரிக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.
:)
:)))
kadaisila enna aachunnu sollave illa??
kavithai theliva aarathukku munnaadi ezuthunathulla :)))
\\ CVR said...
:-)
Relationship expert Divya வாழ்க!! B-)
\\
டைட்டில் எல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க சிவிஆர், நன்றி!!
\\ Thamizhmaagani said...
//இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது,//
திவி, இந்த வரியை படிச்சுட்டு, பத்து நிமிடம் கைதட்டி கொண்டே இருந்தேன்பா!! சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்!!! எப்படி திவி, எப்படி??
//அப்படி போடு, இந்த மிஸ் பண்றேன்னு சொல்றப்போவே உஷார் ஆகிடனும்.//
ஆஹா... என்னப்பா.. இப்படி போட்டு தாக்குறீங்க! அருமை அருமை!!
கதை ரொம்பவே சூப்பரா இருந்துச்சு!! முடிவு நல்லா இருக்கு.
\\
வாங்க தமிழ்,
கைத்தட்டி ரசிச்சீங்களா, கேட்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு தமிழ்!
முடிவு உங்களுக்கு பிடிச்சுதா, நன்றி தமிழ்!
\\ வடுவூர் குமார் said...
முடியாது என்று சொல்லவேண்டியது தானே? அதற்காக கண்ணீர் என்ற ஆயுதத்தை எடுக்கனுமா?
என்னவோ போங்க,இதெல்லாம் இயற்கை படுத்தும் பாடு.
நான் "கண்ணீரை" சொன்னேன். :-)
வடுவூர் குமார், தங்கள் வருகைகும் , கருத்திற்க்கும் நன்றி!
@ரசிகன்
\\hi hi...
links suuparuu..atha kathikkula include pannathu kalakkala irukkunga maaster.\\
நன்றி ரசிகன்!!
\\ தினேஷ் said...
‘நட்பின் நீட்சி தான் காதல்’ என்ற எதார்த்த உண்மையை உணர்த்துக்கிற கதை. உரையாடல் நடையில் கதையை நன்றாக எழுதியிருக்கிறிர்கள், கவிதைகள் மற்றும் சில இனைப்புகளை மேற்கோள்கள் காட்டி இருப்பது உங்கள் கதை நடை மேம்ப்பட்டு இருப்பதை காட்டுக்கிறது.
வாழ்த்துக்கள்
தினேஷ்\\
தினேஷ் உங்கள் விரிவான, விளக்கமான பின்னூட்டம் என்னை பெரிதும் மகிழ செய்தது, மிக்க நன்றி!
\\ கோபிநாத் said...
\\ஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,\\
இதுக்காவே உங்களுக்கு ஒரு "ஒ" போடலாம்...தெளிவாக எழுதியிருக்கிங்க ;))\\
'ஓ' போட்ட கோபிநாத்திற்கு மிக்க நன்றி!!
\\ கோபிநாத் said...
\\ CVR said...
:-)
Relationship expert Divya வாழ்க!! B-)\\
வழிமொழிகிறேன்...;))\\
வழிமொழிந்தமைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!!
\\ நாகை சிவா said...
//பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா......... திணறிட்டிருக்காங்க,//
அப்படியா சொல்லுறீங்க.... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.
//உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!//
தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டா போல. அதில் ஏதும் தப்பு இல்லை.
நல்லவேளை அவனுக்கு இது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதே தவறு என்று சொல்லாம போனீங்களே... அது வரைக்கும் சந்தோஷம்.\\
சிவா, அவனுக்கு 'காதல்' வந்ததே தப்புன்னு சொல்ல முடியாது, ஆனா அதை தன் தோழியிடம் வற்புறுத்துவது தவறு என்பது என் கருத்து.
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிவா!
இன்றைய இளைய சமுதாயத்தை நினைவுருத்தும் விதமாக இருக்கிறது உங்களது எல்லா எழுத்துக்களும். வாழ்த்துக்கள்.
//இப்போ வந்து காதலிக்கிறேன் , நீயும் யோசின்றான், //
யோசி என்று சொல்வதே நிர்பந்தம் பண்ணுவதா... சரி தான்...
// ஆனா அதை தன் தோழியிடம் வற்புறுத்துவது தவறு என்பது என் கருத்து.//
இது வரை நண்பனாக பழகி காதல் என்ற உணர்வு அது எதனால் தோணியது என்ற காரணத்துக்கு எல்லாம் போய் இப்ப பாக்க வேணாம். எப்படியோ வந்துடுச்சு, சொல்லிட்டான், அவன் ஒத்துக்கல. ஒதுங்கி தான் போவான் அவன் நல்ல நண்பனாக இருந்து இருந்தால், வற்புறுத்தி கொண்டு இருக்க மாட்டான் என்பது என் கருத்து.
ஒத்து கருத்து எல்லாருக்கும் இருக்க வேண்டியது இல்லை, விடுங்க :)
//உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிவா!//
நான் தாங்க நன்றி சொல்லனும். இலவச விளம்பரம் கொடுத்து நம்மளையும் பெரிய ஆள் ஆக்குறீங்க பாருங்க... அதுக்கு...
ம்ம்ம்.. கொஞ்சம் சிக்கலான பிரச்சனைதான். காதல்னா ரெண்டு பக்கமும் தெரியும். நட்புக்கும் காதலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அது எங்க எப்படிப் பிரியுதுங்குறதுதான் சிக்கல். அது தீர்ந்திருச்சுன்னா காதல் அழகா வந்துரும்.
\\ G.Ragavan said...
ம்ம்ம்.. கொஞ்சம் சிக்கலான பிரச்சனைதான். காதல்னா ரெண்டு பக்கமும் தெரியும். நட்புக்கும் காதலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அது எங்க எப்படிப் பிரியுதுங்குறதுதான் சிக்கல். அது தீர்ந்திருச்சுன்னா காதல் அழகா வந்துரும்.\\
வாங்க ராகவன்!
நட்பிற்க்கும், காதலுக்கும் இடையில் மிக மெல்லிய கோடுதான்!
நீங்க சொன்ன மாதிரி, அந்த கோடு விலகுவது எப்போ, எப்படின்றது தான் சிக்கல்!
பின்னூட்டத்திற்க்கு நன்றி ராகவன்!
ஹ்ம்ம், அருமை, கடைசி வரிகளின் தெளிவு எல்லாப் பொண்ணுங்களுக்கும் வந்துட்டா பின்னாடி பிரச்சினை வராதுங்க.
முடிக்கும்போது அருமையான கவிதையை தந்து அசத்திட்டீங்க!! அருமை!!
//அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.//
ரொம்ப நல்லா இருக்குங்க!
(இப்படி ஒரு வலைப்பூ இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே)
வாழ்த்துக்கள் சகோதரி!!!!
கலக்கிபுட்டீங்க!
antha kelvi badil section shahjahan vijay pesara mathiri irunthihici :D..kavidhai rendum super...nalla flow :)
Nice blog and nice content!
திவ்யா,
அருமையான கதை...
//காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்//
ஏனுங்க திவ்யா :)))
அட அப்படியா ?? :))) மொத்தத்திலே இந்த காதலை வச்சுகிட்டு நல்லா கபடி ஆடி இருக்கீங்கம்மணி :))) ரசிச்சேன் :))
\\ Dreamzz said...
மொத்தத்துல, தெளிவா குழப்பறீங்க.... அட பரவாயில்லை.. விவரமா ஒரு பொண்ணு கதைல இருக்கான்னு பார்த்தா, அப்ப கூட முடிவு இப்படியா?
கதை நல்லா இருக்குதுங்கோவ்!
நம்ம கவிதை எல்லாம் போட்டமைக்கு நன்றி..\\
நன்றி Dreamzz!
\\ Dreamzz said...
//எல்லாம் நீ தந்தாய்
இன்று
காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!
//
காதல் இல்லாததற்கு
காதல் காரணமென்றால் சரி..
காலம் காரணமாய் இருந்தால்?
"தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய் "
வரிகள் தான் நியாபகம் வருது :P
மொத்தத்துல கதை னு சொல்லி, நிறைய மேட்டர் சொல்லிடீங்க! Superu!\\
கதையிலுள்ள மேட்டரையும் புரிந்துக்கொண்டதிற்க்கு பாராட்டுக்கள் Dreamzz!
\\ நிமல்/NiMaL said...
//அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.//
கதை அருமை... எப்பவும் போலவே...
முக்கியமாக இந்த வரிகள் மிகவும் சரி...!!
வாழ்த்துக்கள்..!\\
நிமல், உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
\\ வினையூக்கி said...
<< இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது >>
இந்த வரிக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.\
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வினையூக்கி!
\\ கப்பி பய said...
:)
\\
வருகைக்கு நன்றி கப்பி!
\\ ஜி said...
:)))
kadaisila enna aachunnu sollave illa??
kavithai theliva aarathukku munnaadi ezuthunathulla :)))\\
ஜி,
தெளிவான பிறகு எழுதினது தான் அந்த கவிதை! அது தான் முடிவும்!
\\ Mangai said...
இன்றைய இளைய சமுதாயத்தை நினைவுருத்தும் விதமாக இருக்கிறது உங்களது எல்லா எழுத்துக்களும். வாழ்த்துக்கள்.\
மங்கை, உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது, உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
@நாகை சிவா
\ஒத்து கருத்து எல்லாருக்கும் இருக்க வேண்டியது இல்லை, விடுங்க :)
//உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிவா!//
நான் தாங்க நன்றி சொல்லனும். இலவச விளம்பரம் கொடுத்து நம்மளையும் பெரிய ஆள் ஆக்குறீங்க பாருங்க... அதுக்கு...\\
ஒத்தக் கருத்து இருக்க வேண்டியதில்லைன்னு ஒத்துக்கிட்டீங்க, சந்தோஷம்!
பிரசித்தமான உங்க பதிவிற்க்கு விளம்பரம் அவசியமே இல்ல சிவா!
\ ILA(a)இளா said...
ஹ்ம்ம், அருமை, கடைசி வரிகளின் தெளிவு எல்லாப் பொண்ணுங்களுக்கும் வந்துட்டா பின்னாடி பிரச்சினை வராதுங்க.\\
வாங்க இளா, என் ப்ளாக் பக்கமெல்லாம் வந்திருக்கிறீங்க, ரொம்ப நன்றி!
எல்லாப் பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல , பையன்களுக்கும் தெளிவு வந்துட்டா பிரச்சனையே இல்லீங்க இளா!!
\\ இசக்கிமுத்து said...
முடிக்கும்போது அருமையான கவிதையை தந்து அசத்திட்டீங்க!! அருமை!!\\
இசக்கிமுத்து, முதன் முறையாக என் வலைப்பதிவிற்க்கு வந்திருக்கிறீர்கள், மிக்க நன்றி!
உங்கள் பாராட்டிற்க்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!
:-) .. சில உரையாடல்கள் நல்லா இயல்பா வந்திருக்கு ..
//
நட்பை தந்தாய்
அன்பை தந்தாய்
பாசம் காட்டினாய்
பரிவு காட்டினாய்
அறிவுரை அள்ளித்தந்தாய்
வாழ ஊக்கமளித்தாய்
என்
கவிதை கூட உன்னால்தான்..
எல்லாம் நீ தந்தாய்
இன்று
காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!
//
இரசிக்கும் படியான க(வி)தை :)
காதலை ஏர்க்கமுடியாது போகும்போது அங்கே நட்புறவும் நின்றுபோய் விடுகிறதே! இனிமேல் நாம் சந்திக்க வேண்டாம் என்று பிரிந்துவிடவே செய்கிறார்கள்!!
நான் ஒருமுறை நட்பையும் காதலையும் வைத்து கிறுக்கியதை நேரம் கிடைக்கும் போது பார்த்து Comment'ங்கள்
அம்மா தாயே திவ்யா ...
பதிவ படிச்சிட்டு ,எதோ நம்ம கூட நல்ல பேசிட்டு இருக்குற ஒன்னு
ரெண்டு பேர் கூட இவனும் கடைசில அப்படி தான் சொல்லிடுவானு விலகி
போக ஆரம்பிச்சிடாங்க .இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோசம் தானா .
கதையை விட கடைசியா எழுதியுள்ள கவிதை அருமையோ அருமை திவ்யா. :-)
//
Relationship expert Divya வாழ்க!! B-)
//
padhivu padichittu naan solla vandhen.. annathe sollitaaru..
so naan REPEATU !!!
ovvoru padhivulayum unga style super aagite podhu.. Keep it up !!
\\ வேதா said...
நல்ல தெளிவான நடை திவ்யா. கிட்டத்தட்ட இதே கருவை வைத்து நான் எழுதிய கதையை தான் எல்லாரும் வந்து பிரிச்சு மேஞ்சுட்டு போயிட்டாங்க :) உங்களுக்கும் தெரியும்னு நினைக்கறேன்.\\
வாங்க வேதா! வருகைக்கு நன்றி,
உங்கள் பதிவில் இதற்கொத்த கருவுடன் நீங்க எழுதிய பதிவும், அதன் விளைவுகளும் நன்கறிவேன்!ரொம்ப நல்லா எழுதியிருந்தீங்க!
\\ நாடோடி இலக்கியன் said...
//அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.//
ரொம்ப நல்லா இருக்குங்க!
(இப்படி ஒரு வலைப்பூ இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே)
வாழ்த்துக்கள் சகோதரி!!!!\\
வாங்க சகோதரரே, உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வருகை தாருங்கள், உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்!
\\ SurveySan said...
கலக்கிபுட்டீங்க!\\
ரொம்ப நன்றிங்க சர்வேசன்!
\\ gils said...
antha kelvi badil section shahjahan vijay pesara mathiri irunthihici :D..kavidhai rendum super...nalla flow :)\\
ஹாய் கில்ஸ், பதிவு உங்களுக்கு விஜயின் படத்தை நினைவுப்படுத்தியதா??
வருகைக்கும் பின்னூட்டமிட்டதிற்க்கும் நன்றி!
\\ Sriram said...
Nice blog and nice content!\\
வாங்க ஷீராம்,
முதல் முறையா என் வலைப்பதிவிற்க்கு வந்திருக்கிறீங்க, ரொம்ப நன்றி!
\\ இராம்/Raam said...
திவ்யா,
அருமையான கதை...\\
ராம்,பாராட்டுக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி!
\\ ஜொள்ளுப்பாண்டி said...
//காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்//
ஏனுங்க திவ்யா :)))
அட அப்படியா ?? :))) மொத்தத்திலே இந்த காதலை வச்சுகிட்டு நல்லா கபடி ஆடி இருக்கீங்கம்மணி :))) ரசிச்சேன் :))\\
வாங்க பாண்டியண்ணே!
கபடி ஆட்டத்தை ரசித்தமைக்கு நன்றியண்ணே!!
\\ யாத்திரீகன் said...
:-) .. சில உரையாடல்கள் நல்லா இயல்பா வந்திருக்கு ..\\
யாத்திரீகன், உங்கள் பாராட்டிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்!
\\இரசிக்கும் படியான க(வி)தை :)
காதலை ஏர்க்கமுடியாது போகும்போது அங்கே நட்புறவும் நின்றுபோய் விடுகிறதே! இனிமேல் நாம் சந்திக்க வேண்டாம் என்று பிரிந்துவிடவே செய்கிறார்கள்!!
நான் ஒருமுறை நட்பையும் காதலையும் வைத்து கிறுக்கியதை நேரம் கிடைக்கும் போது பார்த்து Comment'ங்கள்\\
வாங்க சதீஷ்,
உங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி,
உங்கள் பதிவின் சுட்டியினை கொடுத்தமைக்கு மற்றொமொரு நன்றி,
உங்கள் பதிவில் நீங்கள் கிறுக்கிய கவிதை மிகவும் அருமை! ரசித்தேன் சதீஷ்!
\\ bala said...
அம்மா தாயே திவ்யா ...
பதிவ படிச்சிட்டு ,எதோ நம்ம கூட நல்ல பேசிட்டு இருக்குற ஒன்னு
ரெண்டு பேர் கூட இவனும் கடைசில அப்படி தான் சொல்லிடுவானு விலகி
போக ஆரம்பிச்சிடாங்க .இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோசம் தானா .\
என்னங்க பாலா இப்படி சொல்லிட்டீங்க, உங்க தோழிகள் எல்லாம் இப்படி டக்குன்னு தெளிவாயிடுவாங்கன்னு எனக்கு தெரியாம போச்சுதே!!ரொம்ப ஸாரி பாலா!
\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
கதையை விட கடைசியா எழுதியுள்ள கவிதை அருமையோ அருமை திவ்யா. :-)\\
கவிதையை பாராட்டியமைக்கு ரொம்ப நன்றி மை ஃபிரண்ட்!
\\ Arunkumar said...
//
Relationship expert Divya வாழ்க!! B-)
//
padhivu padichittu naan solla vandhen.. annathe sollitaaru..
so naan REPEATU !!!
ovvoru padhivulayum unga style super aagite podhu.. Keep it up !!\\
அருண், உங்கள் பாராட்டு எனக்களித்த உற்ச்சாகத்தை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை, மிக்க நன்றி அருண்!!
//
வாங்க சதீஷ்,
உங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி,
உங்கள் பதிவின் சுட்டியினை கொடுத்தமைக்கு மற்றொமொரு நன்றி,
உங்கள் பதிவில் நீங்கள் கிறுக்கிய கவிதை மிகவும் அருமை!
//
சுட்டியை கொடுத்ததில் என்னோட சின்ன சுயநலமும் இருக்குங்க! அப்படியாவது
யாராவது comment'அ மாட்டங்களான்னு பாக்குறேன் :)
நீங்கள் இத்தனை நன்றிகள் தெரிவித்தமைக்கு நன்றி :)
ஆஹா நட்பா காதலா டாபிக்..
அசத்தல எழுதி இருக்கீங்க....
//காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!//
முடியல...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Divya,
naanku vaarangkal sontha uur senrirunthen. en blog il comment ezhuthiyatharku nanri.
natpaa kaathalaa kathai ....kavithai....pramaatham..
unka friend unka alavukku sharp-minded aa illanga. athukkaka vikaash oda kaathala lettap purichikittathukku intha alavukku kopapappatakkootathungka ippadi kathai eluthi.
ungkaloda nov23 - dec23 matha articles varra saturday sundaykku othukki vachurukken. seekiramaa ellaththayum padichutta atutha article varaiya wait pannanume...
nanri,
Raj.
//அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!//
அழகான பதிவு.
\\ My days(Gops) said...
ஆஹா நட்பா காதலா டாபிக்..
அசத்தல எழுதி இருக்கீங்க....
//காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!//
முடியல...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\\
ஹாய் கோப்ஸ்,
கவிதைக்கு இப்படி ஒரு reaction கொடுத்தா என்ன அர்த்தம்?
\\ Raj said...
Divya,
naanku vaarangkal sontha uur senrirunthen. en blog il comment ezhuthiyatharku nanri.
natpaa kaathalaa kathai ....kavithai....pramaatham..
unka friend unka alavukku sharp-minded aa illanga. athukkaka vikaash oda kaathala lettap purichikittathukku intha alavukku kopapappatakkootathungka ippadi kathai eluthi.
ungkaloda nov23 - dec23 matha articles varra saturday sundaykku othukki vachurukken. seekiramaa ellaththayum padichutta atutha article varaiya wait pannanume...
nanri,
Raj.\\
ஹாய் ராஜ்,
ஊருக்கு போய்ட்டு வந்து, மறக்காம என்னோட வலைப்பவிற்க்கு வந்து, பதிவுகளை படித்ததிற்க்கு ஒரு ஸ்பெஷல் தாங்கஸ்.
இது கற்பனை சம்பவம் தான் ராஜ், நீங்க அதுக்குள்ள அந்த கதாப்பாத்திரத்தை நான் என்று நினைச்சுட்டீங்களா?? ஹா, ஹா!
மற்ற பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படிச்சுட்டு உங்க கருத்தக்களை சொல்லுங்க ராஜ்!
\\ LakshmanaRaja said...
//அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!//
அழகான பதிவு.\\
முதன் முறையா என் வலைத்தளத்திற்க்கு வந்திருக்கிறீங்க நன்றி LakshamanaRaja!
நட்பில் காதல் இருக்கத் தேவையில்லை;ஆனால் காதலில் நட்பு இருப்பது வரம்....
First time in your blog..Very nicely conceived and written
Kadhalaiyum natpaiyum perumpaalum ellorum confuse pannikeraanga..nandraga edutthu uraitthu irukkireergal
Putthaandu nal vaazhthukkal
TC
CU
\\ அறிவன் /#11802717200764379909/ said...
நட்பில் காதல் இருக்கத் தேவையில்லை;ஆனால் காதலில் நட்பு இருப்பது வரம்....\\
முதல் வருகைக்கு மிக்க நன்றி அறிவன்!
நட்பில் காதல் இருக்கத் தேவையில்லை, ஆனால் காதலில் நட்பு அவசியம் என்பதை சரியாக கூறியிருக்கிறீர்கள், உங்கள் கருத்தினை பரிமாரிக்கொண்டதிற்க்கு நன்றி அறிவன்!!
\\ Compassion Unlimitted said...
First time in your blog..Very nicely conceived and written
Kadhalaiyum natpaiyum perumpaalum ellorum confuse pannikeraanga..nandraga edutthu uraitthu irukkireergal
Putthaandu nal vaazhthukkal
TC
CU\\
வருகைகு மிக்க நன்றி!
தங்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திவ்யா!!
கவிதை நல்லா இருந்தது... (3 கவிதையுமே அருமை)
ரொம்ப அனுபவபட்டு உணர்ந்து சொல்லி இருக்கீங்கே...
அப்படியே தொடரவும்...
--
ராஜா முஹம்மது
Hi Divya,
Have a very Pleasant,Happy,Prosperous and Peaceful New Year 2008.
Raj.
என் கணவர் என்னுடைய மிக நெருங்கின நண்பர், ஒரு காலத்தில் (இப்பவும் ஒரு நண்பராக பல நேரங்களில் அவர் தோள் தேடுவேன்) :-). இப்படி ஒரு நண்பனை கணவராக அடைய நான் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறேன். திவ்யா, நீங்க இன்னும் பல நல்ல பதிவுகள் எழுத என் வாழ்த்துக்கள்.
உங்க 'மதுமிதா' கதைய படிச்ச அப்புறமா தான் இந்த பதிவ படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க. அதுவும் இந்த வரிகள் ரொம்ப அருமை. வாழ்த்துக்கள்.
//ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.
யோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்//
-பிரபு
hmm..u prooved again..i like the ending.. Frnds are always frndz...
\\ இசக்கிமுத்து said...
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!\\
நன்றி இசக்கிமுத்து!
\sathish said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திவ்யா!!\
நன்றி சதீஷ்!!
\ராஜா முஹம்மது said...
கவிதை நல்லா இருந்தது... (3 கவிதையுமே அருமை)
ரொம்ப அனுபவபட்டு உணர்ந்து சொல்லி இருக்கீங்கே...
அப்படியே தொடரவும்...
--
ராஜா முஹம்மது\\
வாங்க ராஜா,
உங்கள் மனம்திறந்த கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி!!
\Raj said...
Hi Divya,
Have a very Pleasant,Happy,Prosperous and Peaceful New Year 2008.
Raj.\
நன்றி ராஜ்!!
\ மதுமதி முருகேஷ் said...
என் கணவர் என்னுடைய மிக நெருங்கின நண்பர், ஒரு காலத்தில் (இப்பவும் ஒரு நண்பராக பல நேரங்களில் அவர் தோள் தேடுவேன்) :-). இப்படி ஒரு நண்பனை கணவராக அடைய நான் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறேன். திவ்யா, நீங்க இன்னும் பல நல்ல பதிவுகள் எழுத என் வாழ்த்துக்கள்.\
வாங்க மதுமதி,
உங்கள் வருகைக்கும் , அனுபவ பகிர்விற்கும் என் மனம் நிறைந்த நன்றி!!
\\Anonymous said...
உங்க 'மதுமிதா' கதைய படிச்ச அப்புறமா தான் இந்த பதிவ படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க. அதுவும் இந்த வரிகள் ரொம்ப அருமை. வாழ்த்துக்கள்.
//ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.
யோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்//
-பிரபு\
வாங்க பிரபு,
என் பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி!!
\\ Prabhu Aryan said...
hmm..u prooved again..i like the ending.. Frnds are always frndz...\
நன்றி ஆர்யா!!
Wonderful one.. many dialogues are beautiful one of the best
//அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!
இப்படியும் கூட கவிதை எழுதுறாங்க,
ஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,//
the one the powerful dialogue
//ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.
யோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்"//
soooper kalakal
Finishing is simply neat and very diplomatic..
Simply superb..Keep up the good work..
Gr8 story divya !
"//காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.
யோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்"//"
உண்மையான பேச்சு!!
..................................
நல்ல கதை! நல்ல முடிவு!
thangal blog first time indruthan padithen. ungal tips, kavithaigal, kathaigal aanaithaum palamurai padithu rasithen Divya.
Post a Comment