December 10, 2007

தாய்மைவழக்கம்போல் அன்றும் எனக்கு என் அண்ணா அண்ணியிடமிருந்து அர்ச்சனை ஆரம்பம் ஆனது. இந்தக் ' காட்சி' கடந்த இரண்டு வருடங்களாக அவ்வப்போது எங்கள் வீட்டில் அரங்கேறும். முதலில் கெஞ்சலுடன் ஆரம்பிக்கும் அண்ணி, என் பிடிவாதம் இறுக இறுக அண்ணனுடன் சேர்ந்து அர்ச்சிக்க ஆரம்பிப்பார். எதற்கு தான் என்னை இப்படி திட்டுகிறார்கள் என்று பாருங்கள்....

" இங்க பாரு யமுனா, இதுவரைக்கும் வந்த எல்லா வரனையும் தட்டி கழிச்சுட்டே, காலேஜ் படிச்சு முடிச்சு இரண்டு வருஷம் ஆச்சு, இனிமேலயேயும் உன் கல்யாணத்தை நாங்க தள்ளி போட முடியாது" இது என் அண்ணி சுமதி.

" அம்மா இல்லாத பொண்ணுன்னு ரொம்ப செல்லம் கொடுத்தது தப்பா போச்சு. MBBS படி, நம்ம க்ளீனிக்கை பார்த்துக்கலாம்னு சொன்னப்போ ' எனக்கு இரத்தம் பார்த்தாலே பயம், குடும்பமே பரம்பரை டாக்டர்களாக இருக்கனுமா? நீயும் அப்பாவும் டாக்டராயிருக்கிறது போதும்'னு சொல்லி இஞ்சினியரிங் சேர்ந்தா, சரி அவ இஷ்டம்னு விட்டோம். இப்ப பாரு எத்தனை வரன் விரும்பி வராங்க, எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு, அதே சொல்லிட்டு இருக்கா" இது என் அண்ணன் பிராபகர்.........ஸாரி டாக்டர் பிராபகர்.

" யாரையும் காதலிக்கிறியா , அதான் கல்யாணம் வேணாம்னு அடம்பிடிக்கிறியான்னு கேட்டா, அதுவும் இல்லன்றா. இவ போடுற அந்த ஒரு கண்டிஷனை கேட்டா மாப்பிளளை வீட்டுக்காரங்க எல்லாம் நம்மல ஒரு மாதிரி பாக்குறாங்க, கல்யாணம் வேணாம்னு வம்புக்குன்னு இவ இந்த கண்டிஷன் போடுறான்னு நினக்க்கிறேன், இதுக்கு மேலயும் என்னால இவகிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க முடியாது, நீங்களாச்சு உங்க தங்கச்சியாச்சு" என்று சலிப்புடன் அண்ணி சமயலைறைக்குள் செல்ல, அப்பா க்ளினிக்கிலிருந்து வீட்டிற்க்கு வந்தார்.

தன் ஒரே செல்லக்குட்டி யமனாவிற்கு நன்றாக அர்ச்சனை நடந்திருக்கிறது என்று என் முகத்தைப் பார்த்து தெரிந்துக் கொண்டார்.

என்னிடம் சீறிக்கொண்டிருந்த அண்ணன் இப்போது என் அப்பாவிடம் திருமணத்திற்கு என்னை சம்மதிக்க சொல்லுமாறு வற்புறுத்த ஆரம்பித்தான்.

அப்பா எதுவும் பேசாமல், கெஞ்சும் பார்வையுடன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்த என்னைக். கணிவுடன் பார்த்தார். பிடிவாததிற்கு மறுபெயரான தன் மகளின் மனம் விரும்பும்படி மணமகன்........மருமகன் கிடைப்பானா என்ற ஏக்கம் அவர் கண்களில்.

அப்படி என்னதான் என்னோட கண்டிஷன், எதிர்பார்ப்பு என்னை கட்டிகிறவனிடம்? சொல்கிறேன் கேளுங்கள்.......


என்னை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்கிறவன்[ர்] நான் ஒரு அநாதைப் பெண் குழந்தையை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும். அம்மாவின் அரவணைப்பு இல்லாமல் வளரும் ஒரு பெண்ணின் மனவேதனையை தினமும் அனுபவித்தவள் நான். தாய் இல்லாத ஒரு பெண் குழந்தைக்கு தாயாக எனக்கு அனுமதி வேண்டும். கல்யாணம் பண்ணினா தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் என குழந்தைகள் காப்பகத்தில் விசாரித்தபோது சொல்லிவிட்டார்கள். அதனால் என்னுடைய இந்த ஆசைக்கு சம்மதம் சொல்கிற ஒரு ஆண் கிடைப்பான்னு பார்த்தா, இந்த கண்டிஷன் கேட்டதும் வந்த வரன் எல்லாம் வந்த ஸ்பீடிலேயே போய் விடுகிறது.

அப்பா மட்டும் என் மனதை புரிந்துக் கொண்டார் [ வேறு வழியில்லை அப்பாவிற்கு!] என் மீது பாசம் அதிகம் அப்பாவிற்கு, அதனால் என் எதிர்பார்ப்பிற்கு மதிப்பு கொடுத்தார்.

-------------------------- *------------------------------------------

சர்வீஸிற்கு விட்டிருந்த என் கார் வருவதற்கு தாமதமானதால் , என் அண்ணியின் கார் எனக்குத் தேவைப்பட்டது. க்ளினிக்கிலிருந்த அண்ணியிடம் ஃபோனில் கேட்க, அவரும் க்ளினிற்க்கிற்கு வந்து கார் சாவி வாங்கிக் கொள்ளும்படி சொன்னார். என் திருமண விஷயத்தில் மட்டும் தான் எனக்கும் என் அண்ணிக்கும் மோதலே தவிர, மற்றபடி அவர் எனக்கு ஒரு நல்ல தோழி!

என் அப்பாவின் க்ளினிக்கில் தான் என் அண்ணா Cardiologist ஆகவும், என் அண்ணி குழந்தை நல மருத்துவராகவும் [pediatrician] பணி புரிகின்றனர். அண்ணி அவரது கன்ஸல்டேஷன் ரூமில் பேஷண்டை பார்த்துக்கொண்டிருந்ததால், நர்ஸிடம் என் வரவை குறித்து சொல்லியனுப்பி விட்டு வெயிட்டிங் ரூமில் அமர்ந்தேன்.


அப்போதுதான் ஏதேச்சையாக கவனித்தேன், அழுகையும் சிணுங்கலுமாக இருந்த சிறு குழந்தையை தோழில் போட்டபடி ஒருவர் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு, குழந்தையின் அழுகையை நிறுத்த[ குறைக்க] முயன்றுக் கொண்டிருந்தார்.


இது............இவர்.................தினேஷ்!! என் கல்லூரி சீனியர் தினேஷ்! ஆம் அவரேதான்..............


கல்லூரியில் நான் முதலாம் ஆண்டில் படித்தப்போது நான்காம் ஆண்டில் படித்தவர் தினேஷ். அப்பொது மீசையில்லை, இப்போது மீசையுடன் சிறிது தாடியும்.


வேகமாக தினேஷின் அருகில் சென்றேன்.


"தினேஷ்"


புருவம் உயர்த்தி ஆச்சரிய பார்வையுடன் என்னை பார்த்த தினேஷ்,


"நீங்க......நீ.......யமுனா தானே?"


" ஆமாம் தினேஷ், நானே தான், பரவாயில்லையே 5 வருஷம் கழிச்சுப் பார்த்தும் ஞாபகமிருக்கிதே!"


" நல்லா ஞாபகமிருக்கு யமுனா"


"குழந்தைக்கு உடம்பு சரியில்லையா? என்ன செய்து உடம்புக்கு உங்க குழந்தைதானே, எப்போ கல்யாணம் ஆச்சு, எனக்கெல்லாம் இன்விடேஷன் இல்லியா உங்க வெட்டிங்கிற்கு? சரி உங்க வொய்ஃப் எங்கே?" என்று படபடவென கேள்விகளை நான் அடுக்கி கொண்டே போக,


தினேஷ் தன் குழந்தையை டாக்டரிடம்[ என் அண்ணி] காட்டும் முறை வந்து, அவரது டோக்கன் எண்ணை நர்ஸ் அழைத்தார்.


"நீங்க குழந்தையை காட்டிட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன் தினேஷ்"


"சரி யமுனா"


தினேஷ் குழந்தையுடன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, 5 வருடத்திற்கு முன் கல்லூரியில் பார்த்த தினேஷ் ஞாபகத்திற்கு வந்தார்.
கல்லூரியில் மிகவும் பிரிசித்தம் ஆன மாணவர்களில் முக்கியமானவன் தினேஷ்.


விளையட்டு, கல்வி, கலை என எல்லாத்துறையிலும் ஜொலிக்கும் நட்ச்சத்திரம் தினேஷ்.


கலகலப்பான பேச்சும், காந்தப்பார்வையும், வசீகரமான புன்னகையும் மாணவிகளை அவன் வசம் திருப்பும் தோற்றமும் கொண்டவன் தினேஷ்.
இத்தனை திறமைகளும், ஆண்/பெண் என பெரிய நண்பர்கள் வட்டம் அவனை சுற்றியிருந்தாலும், எல்லாரிடமும் பண்போடும் நடந்துக் கொள்வான்.
எனக்கு தினேஷின் அறிமுகம் கிடைத்தது, எங்கள் டிபார்ட்மெண்ட் ராக்கிங்கில்.


"யமுனை ஆற்றிலே, ஈரக் காற்றிலே" என்று என்னை பாட சொல்லி கலாட்டா செய்ததில் நான் மிரண்டு போய்[?] அழ ஆரம்பித்துவிட, அதன் பின் என்னை கல்லூரியில் எங்கு பார்த்தாலும் " ஹேய் அழுமூஞ்சி, எப்படி இருக்கிற" என்று விசாரிப்பதுமாக எனக்கு தினேஷ் என்ற சீனியரைத் தெரியும்.


தினேஷ் கல்லூரி படிப்பை முடித்து போனபின் அவரை பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. இன்று அவரை குழந்தையுடன் பார்த்ததும் மனதில் எல்லையில்லா சந்தோஷம். ஆனால் ஏனொ தினேஷின் முகத்தில் முன்பு நான் பார்த்த அந்த கலையும், புன்சிரிப்பும் இல்லை. கண்களில் ஏதோ ஒரு பயம், ஏக்கம், துக்கம் என பலவற்றை என்னால் உணர முடிந்தது.அழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த என்னை,
"யமுனா" என்று தினேஷின் குரல் சிந்தனை கலைத்தது.
ஊசிப் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது குழந்தைக்கு, குழந்தை தேம்பி தேம்பி மூச்சு விடாமல் அழுதுக் கொண்டிருந்தாள்.


குழந்தையை தினேஷிடமிருந்து வாங்கி, என் தோளில் சாய்த்து முதுகில் வருடிக் கொடுத்தேன். அழுகையை நிறுத்தி விட்டு, சிறிது விம்மலுடன் என் முகத்தை பார்த்தாள் குழந்தை, உதட்டோரத்தில் ஒரு செல்ல புன்னகையை சிந்திவிட்டு மீண்டும் என் தோளில் சாய்ந்து, என்னை இறுக பிடித்துக் கொண்டது குழந்தை.என் அடிவயிற்றில் ஏதோ ஒரு புதுமையான உணர்வு. இனம் புரியாத அந்த உணர்வினில் ஒரு கணம் என்னையே மறந்தேன்.தன் குழந்தை என்னிடம் ஒட்டிக்கொண்டதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தினேஷிடம்,"குழந்தையின் பேரு என்ன?" என்றேன்.


"ஸ்வேதா"


"வாவ், அழகான பெயர்"


"யமுனா, நீ எங்கே இங்க.........க்ளினிக்கில்?"


நான் விபரம் கூற, மீண்டும் குழந்தை சிணுங்கியதால், நாங்கள் எங்கள் செல் ஃபோன் நம்பரை பரிமாறிக்கொண்டு விடை பெற்றொம்.


மறுநாள் தினேஷின் செல்ஃபோனுக்கு அழைத்து ஸ்வேதாவின் உடல் நிலையை விசாரித்தேன். அலுவலகத்திலிருந்ததால் இருவராலும் அதற்கு மேல் விரிவாக பேச முடியவில்லை. சாயந்திரம் வீட்டிற்கு வந்து ஸ்வேதாவை பார்க்கலாமா என்று தினேஷிடம் கேட்டு, அவரது முகவரியை பெற்றுக்கொண்டேன்.குழந்தை ஸ்வேதாவிற்காக அழகிய டெடிபியர், 6 மாத குழந்தைக்கான ஒரு பின்க் டிரஸ், தினெஷின் மனைவிக்கு மல்லிகை பூ , ஸ்வீட்ஸ் என்று வாங்கிக்கொண்டு சாயந்திரம் தினேஷின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.


ஒரு வயதான அம்மா கதவை திறந்தார்கள். தினேஷின் சாயல் அந்த அம்மாவிடம் இருந்ததால் அவர் தினேஷின் அம்மா என்று என்னால் எளிதாக யுகிக்க முடிந்தது. என் பெயரை சொன்னதும் அன்பான ஒரு புன்னகையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.


தினேஷ் ஆஃபிசிலிருந்து வந்து 5 நிமிடம் தான் ஆவதாகவும், உடைமாற்றிக் கொண்டு வருவார் எனவும், குழந்தை உள்ளே உறங்குவதாகவும் என்னிடம் தெரிவித்து விட்டு, முன் அறையில் என்னை அமரச் சொல்லி உபசரித்தார் தினேஷின் அம்மா.


சிறிது நேரத்தில் தினேஷ் வந்துவிட, அவரது அம்மா எங்களுக்கு காஃபி எடுத்துவர உள்ளே சென்றார்.பரஸ்பரம் எங்கு வேலைப் பார்க்கிறோம் என்று பேசிக்கொண்ட பின்,
"எங்கே உங்க வொய்ஃப் தினேஷ், கண்ணுல காட்ட மாடென்றீங்க?"


"யமுனா......"


"என்ன தினேஷ், உங்க வொய்ஃப் உள்ளே ஸ்வேதாவ தூங்க வைச்சுட்டு இருக்காங்களா?"


"யமுனா.......அவ கலையாத தூக்கம் தூங்கியே போய்ட்டா" குரல் உடைந்து வார்த்தைகள் வெளி வந்தன தினேஷிடமிருந்து.


"வாட்.........தினேஷ் என்ன சொல்றீங்க" அதிர்ச்சியும் துக்கமும் கலந்து என் குரல் கம்ம,


தினேஷ் தன் கல்லூரி வாழககை முடிந்ததும் புனேயில் வேலைப்பார்ர்கும் போது உடன் பணிபுரிந்த பெங்காளிபெண் டானியாவை காதலித்து, இரு வீட்டின் எதிர்ப்புக்கும் நடுவில் திருமணம் புரிந்ததாகவும,. பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் தன் காதல் மனைவி தன்னைவிட்டு மறைந்துப் போனதையும் தழுத்தழுத்தக் குரலில் சொல்லி முடித்தான்.புனே வாழ்க்கை மனைவியின் நினைவுகளை அதிக படுத்துவதால், குழந்தையின் நலனுக்காகவும் துக்கத்தில் இருந்து வெளிவரவும் சென்னைக்கு மாறுதலாகி வந்து, தினெஷ் தன் குழந்தையுடன் தன்னுடனே வாழ்வதாகவும் அவர் அம்மா கூறினார்.துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் நீர் என் கன்னங்களில் வழிந்தோடியது. ஆசையுடன் நான் வாங்கி வந்த மல்லிகை பூவை தேவதையாக காட்சிதந்த தினெஷின் மனைவி டானியாவின் புகைப்படத்தில் சூடினேன்.


குழந்தை ஸ்வேதா தூக்கத்திலிருந்து விழித்தாள். என்னை பார்த்ததும் அதே மழலை சிரிப்புடன் தினேஷிடிமிருந்து என்னிடம் தாவி வந்தாள்.என் கழுத்தை இறுக கட்டிகொண்ட அந்த பிஞ்சு கரங்களின் ஸ்பரிசம் மீண்டும் எனக்குள் ஒரு இனம் புரியா கிளர்ச்சியையும், சிலிர்ப்பையும் உருவாக்கியது!இது தான் தாய்மையின் உணர்வோ?

என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!

57 comments:

said...

muthalla reservation! apparam padikiren!

said...

//நான் ஒரு அநாதைப் பெண் குழந்தையை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும். அம்மாவின் அரவணைப்பு இல்லாமல் வளரும் ஒரு பெண்ணின் மனவேதனையை தினமும் அனுபவித்தவள் நான். தாய் இல்லாத ஒரு பெண் குழந்தைக்கு தாயாக எனக்கு அனுமதி வேண்டும்.//

நல்ல கண்டிஷன்! எனக்கு ஒரு சந்தேகம்! இப்படி ஒரு பையன் கண்டிஷன் போட்ட, பொண்ணு கிடைக்குமா?

said...

//இது............இவர்.................தினேஷ்!! என் கல்லூரி சீனியர் தினேஷ்! ஆம் அவரேதான்.............. //
ஹி ஹி! நான் எதுவுமே சொல்லல!

said...

//குழந்தைக்கு உடம்பு சரியில்லையா? என்ன செய்து உடம்புக்கு உங்க குழந்தைதானே, //

பின்ன என்ன பக்கத்து வீட்டு குழந்தைய விளையாடு காட்டவா கூட்டிட்டு வருவாங்க? :P

said...

//விளையட்டு, கல்வி, கலை என எல்லாத்துறையிலும் ஜொலிக்கும் நட்ச்சத்திரம் தினேஷ்.
கலகலப்பான பேச்சும், காந்தப்பார்வையும், வசீகரமான புன்னகையும் மாணவிகளை அவன் வசம் திருப்பும் தோற்றமும் கொண்டவன் தினேஷ்//
அட்ரா அட்ரா! கேட்கவே எவ்ளோ நல்லா இருக்கு!

said...

//யமுனா.......அவ கலையாத தூக்கம் தூங்கியே போய்ட்டா" குரல் உடைந்து வார்த்தைகள் வெளி வந்தன தினேஷிடமிருந்து.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இப்படியா ஆப்பு வைப்பீங்க?

said...

பத்து மாதம் சுமக்கவில்லை
பார்த்த நொடியில் தாய் ஆனவள் நீ..
அப்படின்னு கவிதை தான் நியாபகம் வருது!

நல்லா ஆழமான கதை! நல்லா இருக்குங்க!

said...

பெற்றால் தான் பிள்ளை என்பது இல்லை திவ்யா.

'கதை' நல்லா இருக்கு.

said...

//என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!//


உணர்ந்தேன் தாய்மையை!
:)))

said...

//Dreamzz said...
நல்ல கண்டிஷன்! எனக்கு ஒரு சந்தேகம்! இப்படி ஒரு பையன் கண்டிஷன் போட்ட, பொண்ணு கிடைக்குமா?
//
அதே... அதே...

//என் மடியில் மலராத மகள் நீ !!//
நல்ல கவிதை, நல்ல கதை...

said...

//என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!//

பினிஷிங் டச் அசத்தல் :))

said...

நல்ல கதை திவ்யா..

said...

நல்ல கதை கதைக்கு பொருத்தமான இரண்டு நல்ல படங்கள நல்ல முடிவுரை கவிதை... வாழ்த்துக்கள்

தினேஷ்

said...

appadiey post evlo perusunu paarkalam nu scroll pannitey vandhen.. andha kavidhai appadiey padichium mudichiten.....

simply superb..... kadhai ah padichitu meeedhi gummi :)

said...

நல்ல கரு. அதை அழகா எடுத்து போய் ரொம்ப வளத்தாம யூகிக்கும்படியாக முடித்தது நல்லா இருந்துச்சு...

:)

said...

அழகாய் ஒரு சிறுகதை அதற்கு பொருத்தமாய் படங்கள், உச்சகட்டமாய் கவிதை வரிகள்...

தாமதமாய் வந்துவிட்டேன் நான் இரசிக்க இங்கே நிறைய கதைகள் இருக்கின்றன!

said...

//மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
//

ம்ம்... எல்லாமே பொருத்தம்!

said...

ம்ம்ம்....நன்றாக இருக்கு...அழகாக கொண்டு போயிருக்கிங்க கதையை ;))

\\என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!\\

அழகான, அழமான வரிகள்...;)

said...

\\Dreamzz said...
//நான் ஒரு அநாதைப் பெண் குழந்தையை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும். அம்மாவின் அரவணைப்பு இல்லாமல் வளரும் ஒரு பெண்ணின் மனவேதனையை தினமும் அனுபவித்தவள் நான். தாய் இல்லாத ஒரு பெண் குழந்தைக்கு தாயாக எனக்கு அனுமதி வேண்டும்.//

நல்ல கண்டிஷன்! எனக்கு ஒரு சந்தேகம்! இப்படி ஒரு பையன் கண்டிஷன் போட்ட, பொண்ணு கிடைக்குமா?\\

Dreamzz, பையன் இப்படி கண்டிஷன் போட்டா, யமுனா மாதிரி கொள்கையுடைய ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள்??

said...

\\Dreamzz said...
பத்து மாதம் சுமக்கவில்லை
பார்த்த நொடியில் தாய் ஆனவள் நீ..
அப்படின்னு கவிதை தான் நியாபகம் வருது!

நல்லா ஆழமான கதை! நல்லா இருக்குங்க!\\

நன்றி, Dreamzz

said...

\\துளசி கோபால் said...
பெற்றால் தான் பிள்ளை என்பது இல்லை திவ்யா.

'கதை' நல்லா இருக்கு.\\

வருகைக்கும், பாராட்டிற்க்கும் மிக்க நன்றி.
உங்கள் பின்னூட்டத்தைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்.

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!//


உணர்ந்தேன் தாய்மையை!
:)))
\\

உணர்ந்தமைக்கு நன்றி நவீன் ப்ரகாஷ்.

said...

\\நிமல் said...
//Dreamzz said...
நல்ல கண்டிஷன்! எனக்கு ஒரு சந்தேகம்! இப்படி ஒரு பையன் கண்டிஷன் போட்ட, பொண்ணு கிடைக்குமா?
//
அதே... அதே...

//என் மடியில் மலராத மகள் நீ !!//
நல்ல கவிதை, நல்ல கதை...\\

பாராட்டிற்க்கு மிக்க நன்றி நிமல்!

உங்கள் கேள்விக்கு என் பதில், dreamzz க்கு அளித்த அதே...அதே பதிலே!

said...

\\G3 said...
//என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!//

பினிஷிங் டச் அசத்தல் :))\\

பினிஷிங் டச்சை பாராட்டிய G3 க்கு நன்றிகள் பல!

said...

\\பாச மலர் said...
நல்ல கதை திவ்யா..\\

வாங்க பாச மலர்,
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!

said...

\\தினேஷ் said...
நல்ல கதை கதைக்கு பொருத்தமான இரண்டு நல்ல படங்கள நல்ல முடிவுரை கவிதை... வாழ்த்துக்கள்

தினேஷ்\\

'பொருத்தமான படங்கள் என படங்களையும் பாராட்டியதற்க்கு மிக்க நன்றி தினேஷ்!

said...

\\My days(Gops) said...
appadiey post evlo perusunu paarkalam nu scroll pannitey vandhen.. andha kavidhai appadiey padichium mudichiten.....

simply superb..... kadhai ah padichitu meeedhi gummi :)\\

கடைசில சின்னதா ஒரு கவிதை போட்டா, நீங்க அதை மட்டும் படிச்சுட்டு கதையை படிக்கவேயில்லையா?????
இது ரொம்ப அநியாயம் கோப்ஸ்!

said...

\\நாகை சிவா said...
நல்ல கரு. அதை அழகா எடுத்து போய் ரொம்ப வளத்தாம யூகிக்கும்படியாக முடித்தது நல்லா இருந்துச்சு...

:)\\

மிக்க நன்றி சிவா.

said...

a very lofty idea and a noble thought :-)

said...

இதோ வந்துட்டேன்...

//வழக்கம்போல் அன்றும் எனக்கு என் அண்ணா அண்ணியிடமிருந்து அர்ச்சனை ஆரம்பம் ஆனது//

ஓ அவங்க கோயில் பூசாரிங்களா? :P
சரி சரி நோ டென்ஷன்...

said...

கதை அருமை... முடிவுக்கு அப்புறம் யமுணா, தினேஷ் சேர்ந்தாங்களா?

said...

இந்த கதை...ரொம்பவே நல்லாயிருக்குங்க மாஸ்டர்.
ரொம்ப நல்ல முடிவு.சொல்லாமலே சொல்லியிருக்கிங்க...

said...

// இது தான் தாய்மையின் உணர்வோ?//
சூப்பர்....

எழுத்து நடையிலேயும்,மேசேஜிலேயும் முதிர்ச்சி தெரியது..

அருமை...

said...

// Dreamzz said...

//விளையட்டு, கல்வி, கலை என எல்லாத்துறையிலும் ஜொலிக்கும் நட்ச்சத்திரம் தினேஷ்.
கலகலப்பான பேச்சும், காந்தப்பார்வையும், வசீகரமான புன்னகையும் மாணவிகளை அவன் வசம் திருப்பும் தோற்றமும் கொண்டவன் தினேஷ்//
அட்ரா அட்ரா! கேட்கவே எவ்ளோ நல்லா இருக்கு!//

மாம்ஸ்... ரொம்பவே நல்லாயிருக்கில்ல...:)

said...

// My days(Gops) said...
கதை அருமை... முடிவுக்கு அப்புறம் யமுணா, தினேஷ் சேர்ந்தாங்களா?//

அது சரி விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டும்பாங்களே ...
அது நீங்கதானா?

said...

kadaisi kavithaikaaga ezuthuna kathaiyaa?? illa kathaikaga ezuthuna kavithaiyaa???

narration nalla irukkuthu...

said...

//"வாட்.........தினேஷ் என்ன சொல்றீங்க" அதிர்ச்சியும் துக்கமும் கலந்து என் குரல் கம்ம, //

oruththan oru sogamaana mattera sonna udane "Enna solreenga" nu thirumba avana solla solra maathiri kekkura thamiz pada dialogue thaan.... artificialaa irunthathu... :)))

said...

\\sathish said...
அழகாய் ஒரு சிறுகதை அதற்கு பொருத்தமாய் படங்கள், உச்சகட்டமாய் கவிதை வரிகள்...

தாமதமாய் வந்துவிட்டேன் நான் இரசிக்க இங்கே நிறைய கதைகள் இருக்கின்றன!\\

சதீஷ், உங்கள் பாராட்டிற்க்கு மிக்க நன்றி!
தாமதமாக வந்திருந்தாலும் ,
இனிமேல் தவறாமல் வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

பொருத்தமான படங்கள் என படங்களையும் குறிப்பிட்டு பாராட்டியது எனக்கு மிகுந்த உற்ச்சாகத்தை அளித்தது.

said...

\\காட்டாறு said...
//மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
//

ம்ம்... எல்லாமே பொருத்தம்!\

வருகைக்கும், தருகைக்கும் நன்றி காட்டாறு!!

said...

\\கோபிநாத் said...
ம்ம்ம்....நன்றாக இருக்கு...அழகாக கொண்டு போயிருக்கிங்க கதையை ;))

\\என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!\\

அழகான, அழமான வரிகள்...;)\

கதையின் ஓட்டத்தையும், கவிதையையும் பாராட்டியமைக்கு மிக்க நன்றி கோபிநாத்.

said...

\\Itz me!!! said...
a very lofty idea and a noble thought :-)\\

Itz me!!
Thanks a lot for your first visit !!

said...

\\My days(Gops) said...
இதோ வந்துட்டேன்...

//வழக்கம்போல் அன்றும் எனக்கு என் அண்ணா அண்ணியிடமிருந்து அர்ச்சனை ஆரம்பம் ஆனது//

ஓ அவங்க கோயில் பூசாரிங்களா? :P
சரி சரி நோ டென்ஷன்...\\

ROTFL!

வாங்க கோப்ஸ், மீண்டும் வந்து கதையினை படித்ததிற்க்கு ஸ்பெஷல் நன்றி!!

said...

\\My days(Gops) said...
கதை அருமை... முடிவுக்கு அப்புறம் யமுணா, தினேஷ் சேர்ந்தாங்களா?\

என்னங்க கோப்ஸ், அந்த கவிதையை நீங்க புரிஞ்சுக்கிலியா??

said...

\\ரசிகன் said...
இந்த கதை...ரொம்பவே நல்லாயிருக்குங்க மாஸ்டர்.
ரொம்ப நல்ல முடிவு.சொல்லாமலே சொல்லியிருக்கிங்க...\\

வாங்க ரசிகன்!
பாராட்டிற்க்கு நன்றி!

[சொல்லாமல் சொன்ன முடிவை புரிந்துக்கொண்ட உங்கள் திறனை கண்டு வியக்கிறேன்!]

said...

\\ரசிகன் said...
// இது தான் தாய்மையின் உணர்வோ?//
சூப்பர்....

எழுத்து நடையிலேயும்,மேசேஜிலேயும் முதிர்ச்சி தெரியது..

அருமை...\\


ரொம்ப நன்றி ரசிகன்,
உங்களது இந்த பின்னூட்டம் எனக்கு கொடுத்த உற்ச்சாகத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.......ரொம்ப ரொம்ப நன்றி ரசிகன்!

said...

\\ஜி said...
kadaisi kavithaikaaga ezuthuna kathaiyaa?? illa kathaikaga ezuthuna kavithaiyaa???

narration nalla irukkuthu...\\

கதைக்காக எழுதிய கவிதை!
கதையை முடிக்கப்போகும்போது ஒரு flow வில் உதித்தது இந்தக் கவிதை!

நன்றி ஜி!!

said...

\\ஜி said...
//"வாட்.........தினேஷ் என்ன சொல்றீங்க" அதிர்ச்சியும் துக்கமும் கலந்து என் குரல் கம்ம, //

oruththan oru sogamaana mattera sonna udane "Enna solreenga" nu thirumba avana solla solra maathiri kekkura thamiz pada dialogue thaan.... artificialaa irunthathu... :)))\\

ஜி, இயல்பான, இயற்க்கையான உரையாடல்களை எழுதக் கற்றுக்கொள்கிறேன்,
சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் பல!!

said...

adhu eppadi pasam, nesam, anbu, sentiment ellam oru equi-percentage illa mix panni solluringa. nice. :)

said...

அழகான கதை! :-)

said...

நல்ல கதை... ஆனால் யூகிக்கக்கூடிய முடிவு.

Narration styla மாத்தினா நல்லா இருக்கும்னு தோனுது.

said...

வணக்கம் திவ்யா. இப்பதான் உங்க கதையை படிச்சேன்.. ரொம்ப நல்லாயிருந்தது..
நான் எப்போது தாய்மையின் மகிமையை உண்ர்ந்தேனேன்றால், என் சகோதரியின் பிரசவ தினத்தன்று. மருத்துவமனையில் அன்று இரவு முழுதும் அவள் கதறிய கதறலில் நான் கலங்கிப்போனேன். என் தாயின் வலி அன்றுதான் எனக்கு புரிந்தது..

உங்கள் எண்ணம்போல் எல்லாம் அமையட்டும்..

said...

\\ Adiya said...
adhu eppadi pasam, nesam, anbu, sentiment ellam oru equi-percentage illa mix panni solluringa. nice. :)\\

ரொம்ப ரொம்ப நன்றி ஆதியா!

எல்லா உணர்வுகளும் கலந்தது தானே வாழ்க்கை!

said...

\\ CVR said...
அழகான கதை! :-)\\

நன்றி சிவிஆர்!

said...

\\ வினையூக்கி said...
:)
\\

வருகைக்கு நன்றி வினையூக்கி!

said...

\\ வெட்டிப்பயல் said...
நல்ல கதை... ஆனால் யூகிக்கக்கூடிய முடிவு.

Narration styla மாத்தினா நல்லா இருக்கும்னு தோனுது.\\

முடிவை யூகிக்கமுடியாத அளவுக்கு இருக்கவேண்டுமென இந்த கதை எழுதவில்லை வெட்டி!
தாய்மையுணர்வையும், தத்தெடுக்கும் நலன் பற்றியும் மட்டுமே கருத்தில் கொண்டு எழுதியது!

narration style பற்றி நீங்கள் சொல்லும் கருத்தினை நிச்சயம் நினைவினில் கொள்வேன்.

உங்கள் ஊக்கமும், ஆலோசனையும் தான் என் எழுத்துக்களின் காரணம், நன்றி வெட்டி!

said...

\\ ரூபஸ் said...
வணக்கம் திவ்யா. இப்பதான் உங்க கதையை படிச்சேன்.. ரொம்ப நல்லாயிருந்தது..
நான் எப்போது தாய்மையின் மகிமையை உண்ர்ந்தேனேன்றால், என் சகோதரியின் பிரசவ தினத்தன்று. மருத்துவமனையில் அன்று இரவு முழுதும் அவள் கதறிய கதறலில் நான் கலங்கிப்போனேன். என் தாயின் வலி அன்றுதான் எனக்கு புரிந்தது..

உங்கள் எண்ணம்போல் எல்லாம் அமையட்டும்..\

முதன் முறையாக என் வலைதளத்திற்கு வந்திருக்கிறீங்க ரூப்ஸ், நன்றி உங்கள் வருகைக்கு! தொடர்ந்து வருகை தாருங்கள்!

நீங்கள் தாய்மையுணர்வின் மேன்மையை உணர்ந்த விதத்தை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி!

said...

Nallai arthamulla kathai divya ! keep up the good work !