December 03, 2007
தாயா? தாரமா??
பெற்றெடுத்த தாயையும், நம்பி வந்த தாரத்தையும் சமநிலையில் நேசித்து , இருவருக்கும் நடுநிலையில் அன்பை பகிர்ந்தளிக்க தடுமாறும் ஆண்களுக்கு பயன் படக்கூடிய சில டிப்ஸ்.....
அம்மாவிடம்......
-------------------
1.உங்கள் தாயின் சமையல் தான் சிறந்தது என்று உங்கள் மனைவியிடம் உங்கள் தாயின் முன் உயர்த்தி பேசாதிருங்கள். உங்கள் தாயின் மனதை அதை குளிர்விக்கும் அதே நேரத்தில், உங்கள் மனைவியின் மேல் ஒரு இளக்காரமான எண்ணம் உங்கள் தாயின் மனதில் உருவாக்கும்.
2. தனிமையில் உங்கள் அம்மாவிடம் பேசும்போது, " அம்மா எனக்கு நல்ல பெண்ணைப் பார்த்து மணமுடித்திருக்கிறீர்கள்" என்று உங்கள் தாயின் தேடுதலில் கிடைத்த உங்கள் மனைவியின் நல்ல குணங்களையும் , பண்புகளையும் கோடிட்டு காட்டுங்கள். உங்கள் மனைவியை எவ்விதத்தில் உங்கள் அன்னைக்கு நீங்கள் வெளிக்காட்டுகிறீர்களோ அவ்விதத்தில்தான் அவளை அவர் உணர்வார், மதிப்பார்.
[ அதற்கென்று மனைவியை 'ஆஹோ, ஓஹோ' என்று புகழ்ந்து தள்ளி சொதப்பிவிடாதிருங்கள். ஓவரா புகழ்ந்தா உங்கள் அம்மாவிற்கு உங்கள் ம்னைவியின் மீது பொறாமை கலந்த எரிச்சலும் வரலாம்]
3.நீங்கள் காதலித்து திருமணம் முடித்தவராகயிருந்தால், உங்கள் மனைவியை பற்றி இன்னும் அதிகமாக நல்லவிதமாக வெளிப்படுத்தி அவரை உங்கள் அன்னையுடன் இணைக்க முயலுங்கள். அப்போதுதான் தன் மகனுக்கு தானே துணை தேடி தரும் தருணத்தை தடுத்து விட்டாளே இவள் என்ற மனக்கசப்பை உங்கள் மனைவியின் மீதிருந்து அகற்ற அது உதவும்.
4. நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பரிசளிக்கும் பொருளோ, புடவையோ அதை உங்கள் மனைவி ஆசையுடன் தேர்ந்தெடுத்தது என்று கூறி கொடுங்கள். உங்கள் மனைவியின் மீது மதிப்பையும், நேசத்தையும் அது ஏற்படுத்தும்.
மனைவியிடம்....
------------------
உங்கள் தாய் , உடன் பிறந்தோர் இவர்களைப் பற்றி புகார் மனுவை உங்கள் மனைவி தனிமையில் உங்களிடம் தொடுக்கும் நேரத்தில், நிதானத்துடன் அவர் கூறுவதை கேட்டுக்கொள்ளுங்கள். எதிர்த்து தர்க்கிக்கவோ, " நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டுப்போ " என்று அதிகாரம் செலுத்தவோ அதுவல்ல தருணம்.
அப்படி நீங்கள் எதிர்மறைக் கருத்துக்களையும், உங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினால் அது உங்கள் மனைவியின் உள்ளக் குமறலை அதிகரிக்கும். உங்கள் மனைவியின் மீது தவறு இருந்தாலும், பொறுமையுடன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாசூக்காக சுட்டிக்காட்டுங்கள்.
" மற்றவர்கள் உன்னை மதிக்காவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு" என்று நீங்கள் கூறும் வார்த்தை ஒன்றே உங்கள் மனதை ஆற்றும், நிச்சயம் நீங்கள் கூறும் கருத்துக்களை அப்போது கூறினால் புரிந்துக் கொள்வார் உங்கள் மனைவி.
2.மற்றவர்களின் முன், முக்கியமாக உங்கள் தாயின் முன் உங்கள் மனைவியை குறை கூறுவதோ, கோபப்படுவதோ கூடவே கூடாது. இவ்விதமான உங்கள் நடக்கை உங்கள் மனைவியின் உணர்வுகளை நொறுக்குவதோடு, அதன் விளைவாக தன் ஆற்றாமையை உங்கள் தாயிடம் கோபமாக, மரியாதை குறைவாக வெளிப்படுத்த வைக்கும்.
3. மனைவியின் பெற்றோர், உறவினர்களை அவமதிப்புடன் நடத்தாதிருங்கள். இதுவும் உங்கள் மனைவியை பழிவாங்கும் உணர்வுடன் உங்கள் தாய் மற்றும் உங்கள் உடன் பிறந்தோரை அவமதிக்க செய்யும்.
4.உங்கள் மனைவியிடம் உங்கள் தாயின் விருப்பு, வெறுப்புகளையும், உங்கள் திருமணத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட ஆர்வத்தையும், சிரத்தையையும், பொறுப்புகளையும் எடுத்துக் கூறி உணர வையுங்கள்.
5.சிறு வயதில் நீங்கள் செய்த குறும்புகளுக்காகவும், தவறுகளுக்காகவும் உங்களை கண்டிக்கும் வகையில் உங்கள் அம்மா திட்டியது, அடித்தது எல்லாம் உளறிக்கொட்டி உங்கள் மனைவிக்கு உங்கள் தாயின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடாதிருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
65 comments:
நான் தான் முதல்!
illaiya?
sari eppadiyo...
//தனிமையில் உங்கள் அம்மாவிடம் பேசும்போது, " அம்மா எனக்கு நல்ல பெண்ணைப் பார்த்து மணமுடித்திருக்கிறீர்கள்" என்று உங்கள் தாயின் தேடுதலில் கிடைத்த உங்கள் மனைவியின் நல்ல குணங்களையும் , பண்புகளையும் கோடிட்டு காட்டுங்கள்.//
LOL.. appo love panni kalyanam panni irundha enna ammani solradhu?
// உங்கள் மனைவியை பற்றி இன்னும் அதிகமாக நல்லவிதமாக வெளிப்படுத்தி அவரை உங்கள் அன்னையுடன் இணைக்க முயலுங்கள். அ//
en innum kaduppagarathukka? enda, nee paatha ponna overa pugalrayanu :D
matha athanai pointsum othukiren! superu! eppadi ippadi ellam?
//Dreamzz said...
illaiya?
//
இங்கேயுமா?
தாங்கலை சாமீ
திவ்யா எப்படி இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு கிடைக்குது/
அவ்வ்வ்வ்வ்......
பேசாம.. நீங்க கல்யாணமாலை ஜடியா காவியமே எழுதலாமுங்கோ...
இந்த சின்ன வயலுல இம்புட்டு ஞானமா?..ஹிஹி..
ஒருவேளை பக்கத்துல ,புத்திசாலி பாட்டி உக்காந்துகிட்டு சொல்லித்தாராங்களோ?.:))))
அரேஞ்சிடு மேரேஜ்
// உங்கள் மனைவியை எவ்விதத்தில் உங்கள் அன்னைக்கு நீங்கள் வெளிக்காட்டுகிறீர்களோ அவ்விதத்தில்தான் அவளை அவர் உணர்வார், மதிப்பார்.//
கா.க.
// நீங்கள் காதலித்து திருமணம் முடித்தவராகயிருந்தால், உங்கள் மனைவியை பற்றி இன்னும் அதிகமாக நல்லவிதமாக வெளிப்படுத்தி அவரை உங்கள் அன்னையுடன் இணைக்க முயலுங்கள். அப்போதுதான் தன் மகனுக்கு தானே துணை தேடி தரும் தருணத்தை தடுத்து விட்டாளே இவள் என்ற மனக்கசப்பை உங்கள் மனைவியின் மீதிருந்து அகற்ற அது உதவும்.//
சுப்பரு.......நல்ல யோசனைகள் எல்லாருக்கும்.. எல்லாரும் கவனிக்க...
// மற்றவர்கள் உன்னை மதிக்காவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு" என்று நீங்கள் கூறும் வார்த்தை ஒன்றே உங்கள் மனதை ஆற்றும், நிச்சயம் நீங்கள் கூறும் கருத்துக்களை அப்போது கூறினால் புரிந்துக் கொள்வார் உங்கள் மனைவி.//
// 3. மனைவியின் பெற்றோர், உறவினர்களை அவமதிப்புடன் நடத்தாதிருங்கள். இதுவும் உங்கள் மனைவியை பழிவாங்கும் உணர்வுடன் உங்கள் தாய் மற்றும் உங்கள் உடன் பிறந்தோரை அவமதிக்க செய்யும்.//
எப்பிடித்தேன் யோசிக்கிறீங்களோ?..
எங்கள மாதிரி நெறய பேரோட புண்ணியத்த வாங்கி கட்டிக்கிறிங்க..:
ரொம்ம நல்லாயிருக்கு எல்லா டிப்ஸ்சும்.. நன்றிகள் அண்டு வாழ்த்துக்கள் திவ்யா..
// Dreamzz said...
LOL.. appo love panni kalyanam panni irundha enna ammani solradhu?//
மாம்ஸ் என்னது இது.. அத்தான்
// 3.நீங்கள் காதலித்து திருமணம் முடித்தவராகயிருந்தால், உங்கள் மனைவியை பற்றி இன்னும் அதிகமாக நல்லவிதமாக வெளிப்படுத்தி அவரை உங்கள் அன்னையுடன் இணைக்க முயலுங்கள். அப்போதுதான் தன் மகனுக்கு தானே துணை தேடி தரும் தருணத்தை தடுத்து விட்டாளே இவள் என்ற மனக்கசப்பை உங்கள் மனைவியின் மீதிருந்து அகற்ற அது உதவும்.// இன்னு சொல்லியிருக்காய்ங்களே நம்ம மாஸ்டர்.
இதுக்குத்தேன் சொல்லறது மொதல்ல வந்தா மட்டும் பத்தாது.. பாடத்த நல்லா படிக்கனுமின்னு ..ஹிஹி...
// Dreamzz said...
// // உங்கள் மனைவியை பற்றி இன்னும் அதிகமாக நல்லவிதமாக வெளிப்படுத்தி அவரை உங்கள் அன்னையுடன் இணைக்க முயலுங்கள். அ//
en innum kaduppagarathukka? enda, nee paatha ponna overa pugalrayanu :D// //
ஏனுங்க மாம்ஸ் உங்களுக்கு இன்னும் பிரியலையா?.
அவிங்க நமக்கு டிப்ஸ் சொல்லிக்குடுக்குற சாக்குல, எதிர்காலத்துல அவிங்க ஆளுக்கு கட்டளைகள் லிஸ்ட் ரெடி பண்ணராங்க...ஹிஹி...
அவிங்க மேரேஜிக்கு பின்னாடி "இந்தாங்க இது என்னோட ஃபிளாக்.இதுல இருக்குற மாதிரியெல்லாம் நடந்துக்கோங்க" ன்னு ஃபிளாக் அட்ரஸ் குடுத்து.. படிச்சப்பின்னாடி ஒரு ரிட்டன் டெஸ்ட் எல்லாம் உண்டுங்க்கோ...
ஹிஹி... சரிதானுங்களா திவ்யா மாஸ்டர்.
// " மற்றவர்கள் உன்னை மதிக்காவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு" என்று நீங்கள் கூறும் வார்த்தை ஒன்றே உங்கள் மனதை ஆற்றும், நிச்சயம் நீங்கள் கூறும் கருத்துக்களை அப்போது கூறினால் புரிந்துக் கொள்வார் உங்கள் மனைவி.//
இது ரொம்ப அருமையா இருக்கு.. தாங்க்ஸ்..
// துர்கா|thurgah said...
திவ்யா எப்படி இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு கிடைக்குது///
ஹலோ... ம.ம ...நீங்க.. இப்பிடி பாதி கிளாஸுல் தூக்கம் கலைஞ்சி
எழுந்து ,திடீருன்னு கேள்வி கேட்டாக்கா என்ன அர்த்தம்?..
// துர்கா|thurgah said...
இங்கேயுமா?
தாங்கலை சாமீ//
யாதும் ஊரே..யாவரும் ஃபிரண்ஸ்சே..ஹிஹி...
நமக்கு இப்ப தேவைப்படாது...
தேவைப்படும் போது வந்து படிச்சுக்குறேன்.... ;)
ம்ம் நல்லாதான் டிப்ஸ் கொடுக்குறிங்க.. :)
\\Dreamzz said...
நான் தான் முதல்!\
நீங்க தான் முதல் Dreamz, முதல் வருகைக்கு நன்றி!
\\Dreamzz said...
matha athanai pointsum othukiren! superu! eppadi ippadi ellam?\\
நன்றி Dreamz,
எப்படி அப்படினா?......அது அப்படிதான்!!
\\துர்கா|thurgah said...
//Dreamzz said...
illaiya?
//
இங்கேயுமா?
தாங்கலை சாமீ
திவ்யா எப்படி இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு கிடைக்குது/\\
துர்கா, இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் திருமணமான சில சொந்த பந்தங்கள்[என் அண்ணா] பண்ற கோல்மால் மற்றும் அவஸ்தை பார்த்து தெரிந்துக் கொண்டது. வலையுலக நண்பர்களுக்கும் பயன்படட்டுமேன்னு பதிவா போட்டேன்!
\\ரசிகன் said...
அவ்வ்வ்வ்வ்......
பேசாம.. நீங்க கல்யாணமாலை ஜடியா காவியமே எழுதலாமுங்கோ...
இந்த சின்ன வயலுல இம்புட்டு ஞானமா?..ஹிஹி..
ஒருவேளை பக்கத்துல ,புத்திசாலி பாட்டி உக்காந்துகிட்டு சொல்லித்தாராங்களோ?.:))))\\
ரசிகன் வாங்க! வாங்க!
பக்கதுல பாட்டி எல்லாம் உட்கார்ந்து பதிவெழுத உதவி பண்ணல ரசிகன்,
நானாக சொந்தமாக எழுதியது தான்,
உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த உற்ச்சாகத்தை தந்தது, மிக்க நன்றி ரசிகன்.
எப்பிடி கூட்டி கழிச்சி பாத்தாலும் சரியா வரலையே. முன்னால் போனால் கடிக்கும் பின்னால் போனால் உதைக்கும் கதையா இல்ல இருக்கு!!
@ரசிகன்
\\எப்பிடித்தேன் யோசிக்கிறீங்களோ?..
எங்கள மாதிரி நெறய பேரோட புண்ணியத்த வாங்கி கட்டிக்கிறிங்க..:
ரொம்ம நல்லாயிருக்கு எல்லா டிப்ஸ்சும்.. நன்றிகள் அண்டு வாழ்த்துக்கள் திவ்யா..\\
உங்கள் புண்ணியத்தை நான் வாங்கி கட்டிக்கிட்டேனா.........ஆஹா , என்னா ஒரு கொடுப்பினை எனக்கு, நன்றி ரசிகன்!
//
துர்கா|thurgah said...
திவ்யா எப்படி இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு கிடைக்குது
//
மண்டபத்துல யார்கிட்ட எழுதி வாங்குறீங்க?!?!?!
\\ரசிகன் said...
// " மற்றவர்கள் உன்னை மதிக்காவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு" என்று நீங்கள் கூறும் வார்த்தை ஒன்றே உங்கள் மனதை ஆற்றும், நிச்சயம் நீங்கள் கூறும் கருத்துக்களை அப்போது கூறினால் புரிந்துக் கொள்வார் உங்கள் மனைவி.//
இது ரொம்ப அருமையா இருக்கு.. தாங்க்ஸ்..\\
கணவனின் அரவணைப்பும், சப்போர்ட்டும் தனக்கு எப்போதும் உண்டு என்ற எண்ணமே ஒரு மனைவிக்கு மிகுந்த பலம்.
// மற்றவர்கள் உன்னை மதிக்காவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு" என்று நீங்கள் கூறும் வார்த்தை ஒன்றே உங்கள் மனதை ஆற்றும், நிச்சயம் நீங்கள் கூறும் கருத்துக்களை அப்போது கூறினால் புரிந்துக் கொள்வார் உங்கள் மனைவி.//
அப்டிங்கறீங்க???!?!!!!???!
//
இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் திருமணமான சில சொந்த பந்தங்கள், என் அண்ணா பண்ற கோல்மால் மற்றும் அவஸ்தை பார்த்து தெரிந்துக் கொண்டது.
//
ஸோ கல்யாணம் பன்னா நிறைய கோல்மால் பன்னனும் , அவஸ்தை படனும்!!!!
அவ்வ்வ்வ்
\\நாகை சிவா said...
நமக்கு இப்ப தேவைப்படாது...
தேவைப்படும் போது வந்து படிச்சுக்குறேன்.... ;)\\
வருகைக்கு நன்றி சிவா!
உங்களுக்கு எப்போது தேவைபடும் என்று கருதுகிறீர்களோ அப்போது அவசியம் வந்து படியுங்கள்!
\\இராம்/Raam said...
ம்ம் நல்லாதான் டிப்ஸ் கொடுக்குறிங்க.. :)\
நன்றி ராம்!
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா அண்ணாவிடம் கேட்டு தெளிவு படுத்தவும்!!!!!!
:-))))))))
தங்கச்சி அநியாயத்துக்கு டிப்ஸ் கொடுக்கறியேமா...
இந்த சின்ன வயசுல எவ்வளவு மூளை...
\\மங்களூர் சிவா said...
எப்பிடி கூட்டி கழிச்சி பாத்தாலும் சரியா வரலையே. முன்னால் போனால் கடிக்கும் பின்னால் போனால் உதைக்கும் கதையா இல்ல இருக்கு!!\
கூட்டி கழிச்செல்லாம் பார்க்க கூடாது சிவா,
முன்னால் போனால் கடி வாங்காமல், பின்னால் போனால் உதையும் வாங்காமல் தப்பிப்பது தான் சாமர்த்தியம்,
அதுக்குதானே என்னால் முடிந்த டிப்ஸ் தந்திருக்கிறேன்!
\\மங்களூர் சிவா said...
//
துர்கா|thurgah said...
திவ்யா எப்படி இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு கிடைக்குது
//
மண்டபத்துல யார்கிட்ட எழுதி வாங்குறீங்க?!?!?!\\
சிவா, யார்கிட்டவும் மண்டபத்துல எழுதி வாங்கவில்லை.......சொந்தமா யோசிச்சு, யோசிச்சு எழுதியது தான்!
\\மங்களூர் சிவா said...
// மற்றவர்கள் உன்னை மதிக்காவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு" என்று நீங்கள் கூறும் வார்த்தை ஒன்றே உங்கள் மனதை ஆற்றும், நிச்சயம் நீங்கள் கூறும் கருத்துக்களை அப்போது கூறினால் புரிந்துக் கொள்வார் உங்கள் மனைவி.//
அப்டிங்கறீங்க???!?!!!!???!\
ஆமாம் சிவா........அப்படிதான்!
\\வெட்டிப்பயல் said...
தங்கச்சி அநியாயத்துக்கு டிப்ஸ் கொடுக்கறியேமா...
இந்த சின்ன வயசுல எவ்வளவு மூளை...\\
அண்ணா........வாங்க, வாங்க!!!
வாவ், எவ்வளவு நாள் ஆச்சு உங்க பின்னூட்டம் வந்து!
ரொம்ப சந்தோஷம் வெட்டி உங்க பின்னூட்டம் பார்த்து!
டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு பயன் படும்னு நம்புகிறேன்!!
\\மங்களூர் சிவா said...
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா அண்ணாவிடம் கேட்டு தெளிவு படுத்தவும்!!!!!!
:-))))))))\
ஹா ஹா!!
நிச்சயம் சிவா, கேட்டு தெளிவுபடுத்துகிறேன்!
எனக்கு இப்போ பயனில்லை, ஆனாலும் interesting...
என்னாங்க திவ்யா
சும்மா டிப்ஸ் எல்லாம் அள்ளித்தெளிக்கிறீங்க...இத கடைபிடிக்க கல்யாணம் ஆகி இருக்கனுமே?? எப்படி ஒரு பொண்ணை கல்யாணதுக்கு சம்மதிக்க வைக்கிறதுன்ன டிப்ச் கொடுத்தீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகுங்க... :)))))))
//நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பரிசளிக்கும் பொருளோ, புடவையோ அதை உங்கள் மனைவி ஆசையுடன் தேர்ந்தெடுத்தது என்று கூறி கொடுங்கள்.//
எப்படீங்க அம்மாகிட்டே
இவ்ளோ..... பெரிய பொய்ய சொல்றது??? ;))))))))))))
இப்போதைக்கு இல்ல இருந்தாலும் மைண்டுல வச்சிகிறேன்..;)
//....நானாக சொந்தமாக எழுதியது தான்,....//
நடுவிலே ஒரு சொல் விட்டுப்போச்சோ?
நானாக சொந்தமாக யோசிச்சு எழுதியது தான்,
:-))))
புதுவை சொன்ன ஹஸ்பெண்டாலஜி வகுப்பு இதுதானா திவ்யா?
அதைத்தேடிக்கிட்டு கேம்பஸ்லே அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்
//அவிங்க மேரேஜிக்கு பின்னாடி "இந்தாங்க இது என்னோட ஃபிளாக்.இதுல இருக்குற மாதிரியெல்லாம் நடந்துக்கோங்க" ன்னு ஃபிளாக் அட்ரஸ் குடுத்து.. படிச்சப்பின்னாடி ஒரு ரிட்டன் டெஸ்ட் எல்லாம் உண்டுங்க்கோ...
ஹிஹி... சரிதானுங்களா திவ்யா மாஸ்டர். //
Adra Adraa! Rasiganu! eppadi! intha pointa naan yosikavee illayee!
enunga Divya master, appadingala?
@Rasigan
//இதுக்குத்தேன் சொல்லறது மொதல்ல வந்தா மட்டும் பத்தாது.. பாடத்த நல்லா படிக்கனுமின்னு ..ஹிஹி...//
:P athellam nalla thaan padichom! theliva sollalanu thaana vilakkam ketkirom!
(mamsu, ippadi gapla namma unmai ellam ingana solla koodathu. ethu naalum thaniya sollanum!)
:)))
rendu naalaikku munnaadithaan puthu maapillai orutharkitta pesinen... neenga sonnathu ethuvume thevai illai.. onne onnu mattum pannaa pothum...
inga pesuratha anga solla koodaathu...
anga pesuratha inga solla koodaathu... :)))
aste.. elaa problemum solvaayidum :)))
\\NiMaL said...
எனக்கு இப்போ பயனில்லை, ஆனாலும் interesting...\\
நன்றி Nimal!
\\ஜொள்ளுப்பாண்டி said...
என்னாங்க திவ்யா
சும்மா டிப்ஸ் எல்லாம் அள்ளித்தெளிக்கிறீங்க...இத கடைபிடிக்க கல்யாணம் ஆகி இருக்கனுமே?? எப்படி ஒரு பொண்ணை கல்யாணதுக்கு சம்மதிக்க வைக்கிறதுன்ன டிப்ச் கொடுத்தீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகுங்க... :)))))))\\
வாங்க குருவே, வணக்கம்!
ஜொள்ளு கிங் நீங்க, உங்களுக்கு டிப்ஸ் கொடுக்கிற அளவுக்கு என்கிட்ட டிப்ஸ் இல்லீங்கண்ணா!
\\ஜொள்ளுப்பாண்டி said...
//நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பரிசளிக்கும் பொருளோ, புடவையோ அதை உங்கள் மனைவி ஆசையுடன் தேர்ந்தெடுத்தது என்று கூறி கொடுங்கள்.//
எப்படீங்க அம்மாகிட்டே
இவ்ளோ..... பெரிய பொய்ய சொல்றது??? ;))))))))))))\
அப்படிதாங்க சொல்லியாகனும், வேறு வழியில்லை.......அப்படின்னு கல்யாணம் பண்ணின்வங்க சொல்றாங்கோ!!
மனைவிக்கிட்ட பொய் சொல்ல தயக்கமில்லை, ஆனா அம்மா கிட்ட சொல்ல மட்டும் ......இவ்வளவு யோசனையா???
\\கோபிநாத் said...
இப்போதைக்கு இல்ல இருந்தாலும் மைண்டுல வச்சிகிறேன்..;)\\
ஹாய் கோபிநாத்,
மனசுல பதிய வைச்சுக்கோங்க, கண்டிப்பா பயன்படும் ஒரு நாள்!
\\துளசி கோபால் said...
//....நானாக சொந்தமாக எழுதியது தான்,....//
நடுவிலே ஒரு சொல் விட்டுப்போச்சோ?
நானாக சொந்தமாக யோசிச்சு எழுதியது தான்,
:-))))
புதுவை சொன்ன ஹஸ்பெண்டாலஜி வகுப்பு இதுதானா திவ்யா?
அதைத்தேடிக்கிட்டு கேம்பஸ்லே அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்\
வாங்க துளசி கோபால்,
ரொம்ப யோசிச்சு , யோசிச்சு நானாக எழுதியது தான், 'யோசிச்சு'என்ற வார்த்தையை மறந்துவிட்டேன் எழுத, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
'ஹஸ்பெண்டாலஜி வகுப்பு '....இந்த பதிவு அப்படியெல்லாம் ஏதும் இல்லீங்க !!
நீங்க அப்படி ஒரு வகுப்பு நடத்துகிறதா இருந்தா அவசியம் சொல்லுங்க !
\\Dreamzz said...
//அவிங்க மேரேஜிக்கு பின்னாடி "இந்தாங்க இது என்னோட ஃபிளாக்.இதுல இருக்குற மாதிரியெல்லாம் நடந்துக்கோங்க" ன்னு ஃபிளாக் அட்ரஸ் குடுத்து.. படிச்சப்பின்னாடி ஒரு ரிட்டன் டெஸ்ட் எல்லாம் உண்டுங்க்கோ...
ஹிஹி... சரிதானுங்களா திவ்யா மாஸ்டர். //
Adra Adraa! Rasiganu! eppadi! intha pointa naan yosikavee illayee!
enunga Divya master, appadingala?\\
Dreamz , master pattam ellam thanthu ennaivaichu nalla comedy panreenga neengalum, rasiganum!!
ithellam nalla illai sollitein!
\\ஜி said...
:)))
rendu naalaikku munnaadithaan puthu maapillai orutharkitta pesinen... neenga sonnathu ethuvume thevai illai.. onne onnu mattum pannaa pothum...
inga pesuratha anga solla koodaathu...
anga pesuratha inga solla koodaathu... :)))
aste.. elaa problemum solvaayidum :)))\\
ஜி, நீங்க எந்த புது மாப்பிள்ளைக்கிட்ட டுயுஷன் போறீங்கன்னு புரியுது,
புது மாப்பிள்ளை தரும் டிப்ஸ் உங்களூக்கு எதிர்காலத்தில் பயன்படட்டும்!!
Relationship expert Divya வாழ்க!! B-)
உறவுகள் டிப்ஸ் பற்றிய பதிவுகளில் உங்களை யாராலையும் மிஞ்ச முடியாது மேடம்! :-)
Rock on!! B-)
\\CVR said...
Relationship expert Divya வாழ்க!! B-)
உறவுகள் டிப்ஸ் பற்றிய பதிவுகளில் உங்களை யாராலையும் மிஞ்ச முடியாது மேடம்! :-)
Rock on!! B-)\
சிவிஆர், உச்சி குளிர்ந்து போச்சு உங்க பாராட்டைக்கேட்டு! ரொம்ப நன்றி !!
@//Dreamz , master pattam ellam thanthu ennaivaichu nalla comedy panreenga neengalum, rasiganum!!
ithellam nalla illai sollitein!//
Note the point! Ketta kelvikku bathil illai :D
உங்களின் எல்லா படைப்புகளையும் இப்போது தான் படித்தேன். நல்லா இருக்கு...
நிறைய ப்ளாக்-க புக்மார்க் பன்னீ இருக்கதாலே எல்லாதயும் டைலி படிக்க முடியல.
உங்களால முடுஞ்சா எனக்கும் ஒரு காப்பி அனுப்புங்க அல்லது புதுசா பொஸ்டு போட்டா மெயில் பன்னுங்க
ராஜா முஹம்மது
// Dreamzz said...
@//Dreamz , master pattam ellam thanthu ennaivaichu nalla comedy panreenga neengalum, rasiganum!!
ithellam nalla illai sollitein!//
Note the point! Ketta kelvikku bathil illai :D//
ஹிஹி.. அவிங்க ரொம்பவே உஷாருத்தேன் மாமே..:)))
\\ரசிகன் said...
// Dreamzz said...
@//Dreamz , master pattam ellam thanthu ennaivaichu nalla comedy panreenga neengalum, rasiganum!!
ithellam nalla illai sollitein!//
Note the point! Ketta kelvikku bathil illai :D//
ஹிஹி.. அவிங்க ரொம்பவே உஷாருத்தேன் மாமே..:)))\\
ஹி ஹி ஹி......புரிஞ்சா சரி!
திவ்யா,
டிப்ஸ் நல்லாருக்கு...நல்லா எழுதிருக்கீங்க...உங்கள் கதைகளையும் படித்துவிட்டு வருகிறேன்..நேரம் கிடைக்கும்போது..
super ah eludhi irukeeeenga.... eppadinga, enga irundhu ippadi tips ellam?
kandipaah my friends kittah indha points ellam eduthu vuduren... :)
divya,
kalyaanam anaavudane "usa"kku illaatti "uk"kku illatti "singapore"kku poitta maamiyaar pirachnaiye illa.
deepavalikkum pongalukkum india vanthu piriyamaa irunthuttu pokalam.
intha ideava US la irukkura ennoda friend koduththirukkanga.....upayokap paduthaannu innum naalu per kitta kettu therinjukkanum.
sontha ur coimbatorennu padicha gnabakam.invitation anuppunga divya...intha nalla guide booka print and frame panni unka kalyanaththannaikku unka piriyamaanavar kitta koduthuralam.
Raj.
\\ராஜா முஹம்மது said...
உங்களின் எல்லா படைப்புகளையும் இப்போது தான் படித்தேன். நல்லா இருக்கு...
நிறைய ப்ளாக்-க புக்மார்க் பன்னீ இருக்கதாலே எல்லாதயும் டைலி படிக்க முடியல.
உங்களால முடுஞ்சா எனக்கும் ஒரு காப்பி அனுப்புங்க அல்லது புதுசா பொஸ்டு போட்டா மெயில் பன்னுங்க
ராஜா முஹம்மது\\
ராஜா, உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
என் பதிவுகளை ரசித்து தந்த ஊக்கத்திற்க்கு நன்றிகள் பல.
நிச்சயம் என் புது பதிவுகளின் விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
\\ பாச மலர் said...
திவ்யா,
டிப்ஸ் நல்லாருக்கு...நல்லா எழுதிருக்கீங்க...உங்கள் கதைகளையும் படித்துவிட்டு வருகிறேன்..நேரம் கிடைக்கும்போது..\\
வாங்க பாச மலர்,
உங்க பாராட்டிற்க்கு ரொம்ப நன்றி.
கதைகளையும் நேரம் கிடைக்கிறப்போ படிச்சுட்டு சொல்லுங்க.
[உங்க பின்னூட்டத்திற்க்கு லேட்டா பதில் போடுறேன், ஸார் பாச மலர்]
\\ My days(Gops) said...
super ah eludhi irukeeeenga.... eppadinga, enga irundhu ippadi tips ellam?
kandipaah my friends kittah indha points ellam eduthu vuduren... :)\
ஹாய் கோப்ஸ்,
டிப்ஸ் உங்க நண்பர்களுக்கு மட்டும் தானா? உங்களுக்கு வேணாமா??
\\ Raj said...
divya,
kalyaanam anaavudane "usa"kku illaatti "uk"kku illatti "singapore"kku poitta maamiyaar pirachnaiye illa.
deepavalikkum pongalukkum india vanthu piriyamaa irunthuttu pokalam.
intha ideava US la irukkura ennoda friend koduththirukkanga.....upayokap paduthaannu innum naalu per kitta kettu therinjukkanum.
sontha ur coimbatorennu padicha gnabakam.invitation anuppunga divya...intha nalla guide booka print and frame panni unka kalyanaththannaikku unka piriyamaanavar kitta koduthuralam.
Raj.\\
ராஜ் உங்க நீண்ட பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.
என்னா ஒரு நல்ல மனசு ராஜ் உங்களுக்கு, இந்த பதிவை பிரிண்ட் பண்ணி கொடுப்பீங்களா.......ஹா ஹா!
உங்க நண்பர் சொல்ற மாதிரி எல்லாரும் அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் போய்ட முடியாது இல்லியா?
அதுக்குதான் இந்த டிப்ஸ்.
:) nalla tips........ oru akka range ku pasangalukku advice panirukeenga :)
try panraen ithai follow panrathukku... aama in case u r married..ungalavar ithellam correct ah follow panrara?
\\ rsubras said...
:) nalla tips........ oru akka range ku pasangalukku advice panirukeenga :)
try panraen ithai follow panrathukku... aama in case u r married..ungalavar ithellam correct ah follow panrara?\\
thanks !!
kalyanam aanathum .....avaru follow panuvaru:))[vera vazhi]
Divya neenga sonna points nalla eruku.aana mamiyar nalla yosikirapo kolapura nathanara epadi samalikirathu.
neenga maelotama pathu idea solirukeenga.ulla ponathan thaeriyum!
entha tipslam follow paniyum mamiyar nathanara samalika mudiyathu.oruthar mathi oruthara kolupuvanga.
Post a Comment