November 05, 2007

நன்றி சொல்ல உனக்கு ! வார்த்தை இல்லை எனக்கு!!





தமிழில் வலைப்பதிவிட ஆரம்பித்து ஒராண்டு ஆகிவிட்டது, இடையில் சில மாதங்கள் பதிவிட முடியாமல் போனாலும், வலைப்பதிவிட ஆரம்பித்து ஒரு வருஷம் ஆன இந்நாளில் , நான் வலைப்பதிவிட காரணமாயிருந்த , உதவி புரிந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லவே இந்த பதிவு!!



முதலில் வலையுலகின் மூலம் அநேக நண்பர்களின் அறிமுகமும், நட்பும் பெற்றுத்தந்த இறைவனுக்கு நன்றி!!!



தமிழில் எப்படி இணையதளத்தில் வலைப்பதிவிடுறாங்கன்னு நான் ஆச்சரியப்பட்ட நேரத்தில், தமிழில் தட்டச்சு செய்ய கற்றுத்தந்த என் குரு 'ஜொள்ளு பாண்டி' க்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழில் தட்டச்சு சொல்லிக்கொடுத்து , வலைப்பதிவு எழுதும் நிலைக்கு என்னை கொண்டு சென்றது அவரது ஊக்கம்.


வலைப்பதிவில் எப்படி பதிவிட வேண்டும், தமிழ்மணத்தில் எப்படி இணைய வேண்டும், பின்னூட்டங்களுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும், என்று இன்னும் பல நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த அண்ணன் 'வெட்டி' க்கு கோடி நன்றி!!!


கதைகள் எழுதும் எண்ணத்தை என்னுள் உருவாக்கிய 'தேவ்' அண்ணாவுக்கு நன்றி. என் எழுத்துநடையை வெளிப்படையாக விமர்சித்து , ஊக்குவிப்பது என் தேவ் அண்ணா!!

என் எழுத்துகளில் பிழைத்திருத்தம் , இலக்கண திருத்தம் செய்து எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த
நண்பர் ' சந்தோஷ்' க்கு நன்றி!!


என் வலைப்பதிவின் தோற்றம், பதிவுகளின் தொகுப்பு இவற்றை அமைத்திட பெரிதும் உதவிய 'சிபி' க்கு மிக்க நன்றி!


என் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு உற்ச்சாகப்படுத்திய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.


குறிப்பாக ஆர்வமுடன் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் நாட்டாமை 'ஷ்யாம்' க்கு நன்றி.
பின்னூட்டத்தில் பாராட்டு மழை பொழியும்
ப்ரியமான தோழி 'ப்ரியா' வுக்கு நன்றி.


எதிர்பாராத சில நிகழ்வுகளால் தொடர்ந்து வலைப்பதிவிட முடியாமல், எழுதுவதை கைவிட்ட என்னை மீண்டும் தொடர்ந்து எழுத வைத்தது பாலாஜி அண்ணாவின் அன்புக் கட்டளையும், வேண்டுக்கோளும்.


மீண்டும் பதிவிட தடுமாறி தயங்கிய என்னை உற்ச்சாகமூட்டிய என் ரசிகர்கள் 'ராம்' , 'ஜி' என்னால் மறக்க முடியாது!!

எனக்குள்ளும் சில திறமைகள் இருப்பதாகக் கூறி , அதனை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் உக்தி தெரிந்த
கவிஞர் 'நவீன்' க்கு என் மனமார்ந்த நன்றி!!

41 comments:

said...

லிஸ்ட்டை வெளியிட்டுட்டீன்க இனி மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்..

பசங்களா முதல் டார்கெட் ஜொள்ளுபாண்டி ஓக்கே!

said...

வாழ்த்துக்கள்:))

said...

வாழ்த்துக்கள் அக்கா....

Anonymous said...

எக்ஸ் கூயுஸ் மீ லிங் அந்த லிஸ்டில் ஆட்களோட லிங் மட்டும்தான் கொடுத்து இருக்கீங்க அவுங்க அட்ரஸ் எங்க இருக்கு சொல்ல முடியுமா?

Anonymous said...

இப்படியே பீச்சாகை பக்கம் போய் சோத்தாங்கை பக்கம் திரும்பினா அங்க
இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் வாசலில் ஜொள்ளு பாண்டி உட்கார்ந்து இருப்பாரு போய் பாரு.

said...

வாழ்த்துக்கள்.. திவ்யா...

said...

அட திவ்யா நீங்க பதிவு எழுத வந்து ஒரு வருஷம் ஆகிடுசா??
என்னாங்க நான் உங்க குருவா ??இப்படி சொல்லி என்னைய
பண்ணீட்டீங்களே !! எப்படி உங்களை கலாய்க்கரது இனிமே ??
;)))))) நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ....

said...

//குசும்பன் said...
லிஸ்ட்டை வெளியிட்டுட்டீன்க இனி மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்..

பசங்களா முதல் டார்கெட் ஜொள்ளுபாண்டி ஓக்கே!//

ஆகா குசும்பன் நான் டார்கெட்டா??? :)))))
என்ன இது கலாட்டா ??? ஆமா என்னைய என்ன
பண்ண போறீக?? சொல்லிட்டு பண்ணுங்கப்பூ :)))))

said...

"என் இனிய தமிழ்மக்களே..."


படத்தை பார்த்ததும், இப்படித்தன் ஆரம்பிக்கபோறீங்களோன்னு நெனச்சேன். :-P

said...

//வடிவேலு said...
இப்படியே பீச்சாகை பக்கம் போய் சோத்தாங்கை பக்கம் திரும்பினா அங்க
இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் வாசலில் ஜொள்ளு பாண்டி உட்கார்ந்து இருப்பாரு போய் பாரு//

அட என்னாங்க இப்படி ஆபீஸ்
நேரத்திலே எந்த பொண்ணு
லேடீஸ் Hostela இருப்பாங்க??
லேடீஸ் காலேஜுன்னு
லொகேசனை மாத்துங்கப்பூ:)))))

said...

நீங்க திரும்பி வந்ததில் எல்லாருக்குமே மகிழ்சிதான்... அடுத்த ரவுண்டை ஆரம்பிங்க திவ்யா. :-)

said...

//குசும்பன் said...
லிஸ்ட்டை வெளியிட்டுட்டீன்க இனி மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்..

பசங்களா முதல் டார்கெட் ஜொள்ளுபாண்டி ஓக்கே!
//

குசும்பா, நானும் கூட்டணியில சேர்ந்துக்கவா? :-)

said...

வாழ்த்துக்கள் திவ்யா.... :)

said...

குசும்பன் தலைமையில் அணிவகுப்போம் உதவிய கூட்டத்தை உளுக்கியெடுப்போம்

said...

அட ஏமாளிகளா...அவங்க நல்ல திசை திருப்பி விட்டுடாங்கய்யா...

டீரிட் கேக்க மறந்த சிங்களே, தங்கங்களே....உங்கள் அனைவரும் சார்பாகவும்....

டீரிட் எப்போ...? எங்கே.....என்று வெகு விரைவில் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

said...

வாழ்த்துக்கள்...!

said...

// தமிழில் வலைப்பதிவிட ஆரம்பித்து ஒராண்டு ஆகிவிட்டது,//
அப்படியா?...சந்தோஷமான செய்தி.. வாழ்த்துக்கள்.. திவ்யா...இளமையான விஷயங்களுலயும், கருத்து முதிர்ச்சியை புதுமையா கொடுக்கிறீங்க.. ரொம்ப பிடிச்சிருக்கு.. தொடர்க உங்கள்..பதிவு..

said...

மறக்காம ,உதவின எல்லாரையும் மறக்காம நெனச்சுப் பாக்குற மனசு பாராட்டத்தக்கது....

said...

உங்களின் பழைய கதைப்பதிவுகளையும் படித்துப் பார்த்தேன்.
அத்தனையும் அருமை...உங்க மற்ற திறமைகளும் பதிவுகளில் மணம் வீசட்டும்.
இன்னும் பல நிறைவாண்டுகள் காண தோழியை,அன்புடன் வாழ்த்தும் நண்பன்
உங்கள் ரசிகன்.

ஆமா ?...கேக் எங்கங்க திவ்யா?...

said...

திவ்யா...நீங்க அடுத்த வருஷம் மறக்காம டிரீட் வைக்கனும். சரியா?..ஹிஹி..

said...

வாழ்த்துக்கள் திவ்யா!!
நான் வலைப்பதிவிட ஆரம்பித்த போது தாங்கள் அளித்த ஊக்கம் மறக்கமுடியாது!
நீங்கள் மறுபடி வலைப்பதிவிட வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!!! :-)

said...

வாழ்த்துக்கள் திவ்யா !!

ஒரு வருட
குழந்தைக்கு
என்ன வேண்டும் ? :))

said...

வாழ்த்துக்கள் திவ்யா...

Great to see you back...

அடுத்த கதை எப்ப ஆரம்பிக்க போறீங்க?

said...

வாழ்த்துக்கள் திவ்யா!

தொடர்ந்து நிறைய கதைகள் எழுதுங்க!

தலைப்பை மறந்துடாதீங்க!

:)

said...

//டீரிட் கேக்க மறந்த சிங்களே, தங்கங்களே....உங்கள் அனைவரும் சார்பாகவும்....

டீரிட் எப்போ...? எங்கே.....என்று வெகு விரைவில் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
//

ரிப்பீட்டேய்!
:)
(டிபிசிடிக்கே ரிப்பீட்டா?)

said...

அட அம்புட்டு நம்ம ஜனமா இருக்கே :)

நம்ம ஜனங்க இம்புட்டு நல்லவிங்களா... :)

வாழ்த்துக்கள் :)

தொடர்ந்து எழுதுங்கள் :)

said...

அட அதுக்குள்ள ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சா! !

வாழ்த்துக்கள் திவ்யா..;))

சீக்கிரம் கதைகள் எல்லாம் எழுதுங்கள்...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்க திரும்பி வந்ததில் எல்லாருக்குமே மகிழ்சிதான்... அடுத்த ரவுண்டை ஆரம்பிங்க திவ்யா. :-)\\

ஒரு ரீப்பிட்டேய்...;))

said...

:)))

வாழ்த்துக்கள் திவ்யா.... இன்னும் நீங்க அடுத்த ரவுண்ட் ஆஃப் காதல் கதைய ஸ்டார்ட் பண்ணவே இல்ல... சீக்கிரம் போடுங்க.. :)))

said...

வாழ்த்துக்கள் திவ்யா. மேலும் மேலும் பதிவுலகில் நீ சாதிக்க உன் முயற்சிகளைத் தொடரணும்.

said...

வாங்க திவ்யா வாங்க, வந்து கலக்கலா ஆரபிச்சி இருக்கீங்க. ஒரு வருசத்துக்கு வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் திவ்யா !!!!
வாங்க !!! வாங்க !!!
நாங்க குடும்பத்தோட காத்துக்கிட்து இருக்கோம்

said...

உங்கள் முந்தய பதிவுகள் சிலவற்றை இப்போது படித்து முடித்தேன்... நன்றாக எழுதுகிறீர்கள்.. நிறைய எழுத வாழ்த்துக்கள், கூடவே எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

நல்லவர்களுக்கு நன்றி சொல்வதென்பது நல்லதொரு பழக்கம். ஏனோ தற்போது அருகி வருகிறது. திவ்யா நினைத்துப் பார்த்து அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி சொன்ன விதம் பாராட்டத்தக்கது.

இருந்தாலும் ஒரு ட்ரீட் கொடுத்திருக்கலாம். ஜொள்ளுப் பாண்டி - லேடீஸ் ஹாஸ்டல்லே தான் தனியா லீவு போட்டுட்டு உக்காந்து இருப்பாங்க -ஜொள்ளு விட சரியான இடம்

said...

//
முரளி கண்ணன் said...
குசும்பன் தலைமையில் அணிவகுப்போம் உதவிய கூட்டத்தை உளுக்கியெடுப்போம்
//
ரிப்பீட்டேய்

அதுல பாவம் நம்ம பாலாஜி நவம்பர் 15 ரிட்டையர் ஆகறாரு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//குசும்பன் தலைமையில் அணிவகுப்போம் உதவிய கூட்டத்தை உளுக்கியெடுப்போம்//

ஆமாம்! உதவிய கூட்டத்தை சுளுக்கெட்டுப்போம்!

said...

//என் ழுத்துகளில் பிழைத்திருத்தம் //

என்ன கொடுமைங்க இது சந்தோஷ்/
:(

said...

ஹலோ அம்மணி எப்ப திரும்பி வந்தீங்க்க! சொல்லவே இல்லை! வாங்க வாங்க!

Belated Happy Diwali wishes!

said...

\\குசும்பன் said...
வாழ்த்துக்கள்:))\\

நன்றி குசும்பன்!

said...

\\Baby Pavan said...
வாழ்த்துக்கள் அக்கா....\\

நன்றி தம்பி பவன்!!

said...

முதல் வருட நிறைவிற்கு வாழ்த்துக்கள். பதிவுகள் படிச்சிட்டு கருத்து சொல்றேன் :-)

said...

you are great and doing good