November 12, 2007

தொ(ல்)லைபேசிக் கச்சேரி - பகுதி 1
" அம்மா இன்னைக்கு விஜி [ விஜயா] வீட்டுல கம்பைண்ட் ஸடடிமா, நான் போய்ட்டு சாயந்திரம் தான் வருவேன்" என்று தன் அம்மாவிடம் கூறிக் கொண்டே 'Digital Design - by Morris Mano' புக்கை தேடிக்கொண்டிருந்தாள் ரேகா.

" மதியம் சாப்பாடும் அங்கே தானாடி, விஜி அம்மாவை தொந்தரவு பண்ணாம ஒழுங்கா படிங்க, வேற யாரெல்லாம் வராங்க ரேகா?" என்று சமையலறையிலிருந்தபடியே மகளிடம் கேட்டார் ரேகாவின் அம்மா.
"சுகன்யாவும், வந்தனாவும் விஜி வீட்டுக்கு வராங்க, எப்பவும் போல நாங்க நாலு பேரு மட்டும் தான்மா" என்று பதிலளித்துக் கொண்டே தன் ஸ்கூட்டியை நோக்கி சென்றாள் ரேகா.ரேகா, விஜியின் வீட்டை சென்றடையும் முன்னே சுகன்[ சுகன்யா], வந்தனா இருவரும் அங்கு ஆஜராகியிருந்தனர். ஒழுங்கு சிகாமனிகளாக நால்வரும் குரூப் ஸ்டடி செய்தனர். விஜியின் அம்மா , நாலு பேருக்கும் தக்காளி சாதமும், முட்டை குருமாவும் செய்து வைத்துவிட்டு பக்கதிலுள்ள கோயில் விசேஷத்திற்கு சென்றிருந்தார்.மதிய உணவிற்கு பின், நான்கு பேருக்குமே படிக்க மூட் இல்லை, டிவி பார்க்கவும் போர் அடிக்கவே, பால்கணிக்கு வந்தனர். விஜியின் அபார்ட்மெண்ட் மூன்றாவது தளத்திலிருந்தது." விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப்ளாக் ரொம்ப காஞ்சுப்போய் கிடக்குதடி, பார்க்கிற மாதிரி ஒருத்தன் கூட இல்லை" என்று சலித்துக் கொண்டாள் சுகன்.
"ஹே சைட் அடிக்கிறேண்டா பேர்விழியின்னு என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்கபா ப்ளீஸ், எங்க அபார்ட்மெண்ட் காம்பளெஸில் எனக்கு கொஞ்சம் நல்ல பொண்ணுன்னு பேரு இருக்கு, அதை பஞ்சர் பண்ணிடாதீங்க" என்று விஜி எச்சரிக்கை விட்ட அதே நேரத்தில், எதிரிலிருந்த பார்க்கிங்கில் இண்டிகா காரை பார்க் பண்ணிட்டு அதிலிருந்து ஒரு அழகிய இளைஞன் இறங்கி, விஜியின் அபார்ட்மெண்ட் ப்ளாக் நோக்கி நடந்து வந்தான்.
"ஹே விஜி, யாருடி இது, ஸ்மார்ட்டா ஒரு பையன், அதுவும் உங்க ப்ளாக்குள்ள வரான்............ஃபர்ஸ்ட் ஃபோளோர் அபார்ட்மெண்டுக்கு தான் போறான், யாருடி அது......" என்று வந்தனா கூச்சலிட,
நான்கு பேரும் பால்கணியிலிருந்து கீழே பார்த்தனர்."ரேகா, உன்னோட ஃபேவரைட் காம்பினேஷன் - 'டெனிம் ப்ளு ஜீன், ப்ளக் டீசர்ட்' போட்டிருக்கான்" என சுகன் ரேகாவின் கவனத்தை அவன் பக்கம் திருப்பினாள்.
"அதுக்கென்ன இப்போ" என்று அசட்டையுடன் வீட்டிற்குள் சென்றாள் ரேகா.
" அவ கிடக்கிறா விடு, விஜியை கார்னர் பண்ணு சுகன், அவன் யாருன்னு டியிடேல்ஸ் சொல்லாம பதுங்குறா பாரு" என வந்தனா விஜியின் பக்கம் போனாள்." நிஜம்மா அவன் யாருன்னு தெரியலையா உங்களுக்கு, அவன் தாண்டி அந்த SBOA ஸ்கூல் 'படிப்ஸ் நவீன்', கோயம்பத்தூர்ல இன்ஜினியரிங் பண்ணினானே அவன் தான் அது, அடையாளம் தெரிலியா ?" என்று விளக்கம் தந்தாள் விஜி."ஹே அந்த ஒல்லிப்பிச்சான் நவீனா இது...........கண்ணாடி போட்டுட்டு, வலிச்சி தலை வாரிட்டு பேக்காட்டும் இருப்பானே அவனாடி இப்படி படு ஸ்டைலா மாறிட்டான்???" என்று ஆச்சரியத்தில் வாய் பொழந்தாள் சுகன்.
" அவன் UG க்கு அப்புறம் எங்கயோ ஃபாரின் ல ஹையர் ஸ்டடீஸ் பண்றான்னு நீ எப்பவோ சொன்ன ஞாபகமிருக்கு விஜி" என்று வந்தனா தன் ஞாபக சக்த்தியை நிரூபிக்க முற்பட்டாள்.
"யா, யா! US ல MS படிக்க போனான், முடிச்சுட்டு அங்கயே வோர்க் பண்ணிட்டுயிருந்தான், அவன் அம்மா அவனை பார்க்காம இருக்க முடியலடா கண்ணான்னு ரொம்ப ஃபீலீங்க்ஸ் விட்டதும், பையன் ஒரு 6 மாசம் ப்ரோஜக்டுக்காக இங்கே வந்திருக்கான், வந்து 1 வாரம் ஆச்சு" என்று தன் தரப்பு தகவல்களை அள்ளித் தெளித்தாள் விஜி."எப்படிடி இவன் இப்படி மாறினான், 'சீஸ் பர்கரா' சாப்பிட்டு நல்லா வெயிட் போட்டு மஸ்தானாட்டம் ஆகிட்டான்", என்று தன் கண்டுபிடிப்பை பெருமையுடன் சொன்னாள் சுகன்.
" சே, சே! பையன் நல்லா பீர் குடிச்சிறுப்பான், அதான் குப்புனு வெயிட் ஏறிக்கிச்சு" என்று ரேகா தன் திருவாயை அப்போதுதான் திறந்தாள்.
"ஹே ரேகா, அவன் அப்படி பட்ட பையன் இல்லை, ரொம்ப நல்ல பையனாக்கும்" என்று சர்டிஃபிகெட் கொடுத்தாள் விஜி.
"ஐயே நீ அடங்கு , உனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு, ஸோ நீ இப்படி சர்டிஃபிகெட் கொடுத்து ரூட் போடாதே" என்று விஜியை வாரினாள் வந்தனா.
" விஜி, விஜி!!! செம போரா இருக்குது, அந்த நவீன் வீட்டு ஃபோன் நம்பர் கொடு, சும்மா பேசி கலாட்டா பண்ணலாம்" என்று கெஞ்சலும் கொஞசலுமாக கேட்டாள் சுகன்.
" அடப்பாவிங்களா, சைட் அடிச்சோமா, கிண்டல் பண்ணினோமான்னு இருந்துக்க, இந்த ஃபோன் எல்லாம் பண்ணி, என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்கபா" என்று எஸ்கேப் ஆகப் பார்த்தாள் விஜி.
" ஏய் சுகன், சொன்னா கேளு, இந்த வேண்டாத வேலையெல்லாம் உனக்கெதுக்கு, போர் அடிச்சா படுத்து தூங்கு, நைட்டாச்சும் கூட கொஞ்ச நேரம் முழிச்சிருந்து படிக்கலாம்" என்று அறிவுரை நாயகி ரேகா தன் பங்குக்கு சுகனைத் தடுத்தாள்.
ஆனால், அடம்பிடித்து, நச்சரித்து விஜியை தாஜா பண்ணி ஃபோன் நம்பரை வாங்கி நவீன் வீட்டிற்கு டயல் செய்தாள் சுகன்.

நவீன் வீட்டிலும் யாரும் இல்லை போலும், அவனே ஃபோன் எடுத்து...

"ஹலோ" என்றான் மறுமுனையில்.
.
"ஹலோ, கேன் ஐ டாக் டூ நவீன் ப்ளிஸ்..........." என்று பேச்சை ஆரம்பித்தாள் சுகன்.

[ நவீன் என்ன பேசினான்????.............அடுத்த பகுதியில்]

கச்சேரி தொடரும்.....

பகுதி 2

50 comments:

said...

\\தேவ் | Dev

நல்லாத் தான் ஆரம்பம் ஆகியிருக்கு கச்சேரி :) \\

போஸ்ட் ரீ-பப்ளிஷ் செய்ததால் ,தேவ் அண்ணா உங்கள் கமெண்டை மறுபடியும் பின்னூட்டத்தில் இடுகிறேன்!

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!

said...

\\நாகை சிவா

கச்சேரி தொடரும் என்பதுக்கு பதில் அராஜகம் தொடரும் என்று போட்டு இருக்கலாம் :)

Degital Design - Morris Mano எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு... என்ன ஐ தான் ஈ ஆயிடுச்சு...

ஃபியர் அடிச்சா வெயிட் போடுமா... புது தகவலா இருக்கு.. தகவலுக்கு நன்றி \\

எழுத்துப் பிழையினை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி சிவா!

[இதுவே அராஜகமா???? இதெல்லாம் ஜுஜுபி கச்சேரி!]

said...

ரெடி ஸ்டார்ட் மியூஜிக்...கச்சேரி சீக்கிரம் ஆரம்பம் ஆகட்டும்:)

அப்புறம் எனக்கும் "'Digital Design - by Morris Mano' அந்த புக்கில் கொஞ்சம் டவுட் இருக்கு அவுங்க கூட நானும் கம்பைண்ட் ஸ்டெடி செய்யலாமா?
ஹி ஹி:)

said...

அட்டெண்டன்ஸ்.. போஸ்ட் படிச்சுட்டு வாரேன். :-)

said...

நாலாவது தொடர்கதையா?

வாழ்த்துக்கள். :-)

said...

நாலு பொண்ணுங்களும் உங்களைப்போலவே அராஜகம் பண்றாங்களே.. எல்லாம் உங்க ரியல் ஸ்டோரியா? :-P

said...

//
எதிரிலிருந்த பார்க்கிங்கில் இண்டிகா காரை பார்க் பண்ணிட்டு அதிலிருந்து ஒரு அழகிய இளைஞன் இறங்கி, விஜியின் அபார்ட்மெண்ட் ப்ளாக் நோக்கி நடந்து வந்தான்.
//
அதென்ன இண்டிகா ஒரு ஸ்கோடா, அட்லீஸ்ட் அக்சண்ட்னு சொல்லகூடாதா நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்

said...

//
குசும்பன் said...
ரெடி ஸ்டார்ட் மியூஜிக்...கச்சேரி சீக்கிரம் ஆரம்பம் ஆகட்டும்:)

அப்புறம் எனக்கும் "'Digital Design - by Morris Mano' அந்த புக்கில் கொஞ்சம் டவுட் இருக்கு அவுங்க கூட நானும் கம்பைண்ட் ஸ்டெடி செய்யலாமா?
ஹி ஹி:)
//
எனக்கு அந்த புக் பத்தி கொஞ்சம் கூட தெரியாது அதனால நானும் கம்பைன் ஸ்டடிக்கு வரலாமா??

க்ளியர் பன்னுவாங்களா???
:-)))))

said...

//குசும்பன் said...
ரெடி ஸ்டார்ட் மியூஜிக்...கச்சேரி சீக்கிரம் ஆரம்பம் ஆகட்டும்:)
//

ரிப்பீட்டேய். ;-)

said...

\\குசும்பன் said...
ரெடி ஸ்டார்ட் மியூஜிக்...கச்சேரி சீக்கிரம் ஆரம்பம் ஆகட்டும்:)

அப்புறம் எனக்கும் "'Digital Design - by Morris Mano' அந்த புக்கில் கொஞ்சம் டவுட் இருக்கு அவுங்க கூட நானும் கம்பைண்ட் ஸ்டெடி செய்யலாமா?
ஹி ஹி:)\\

குசும்பன், டவுட் எல்லாம் அவுங்க கிளியர் பண்ணுவாங்க, ஆனா ஒவ்வொரு டவுடுக்கும் இரெண்டு 'குட்டு' மண்டையில் கொடுப்பாங்க, பரவாயில்லையா???

said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
அட்டெண்டன்ஸ்.. போஸ்ட் படிச்சுட்டு வாரேன். :-)\\

Attendence noted down My Friend!!

said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நாலாவது தொடர்கதையா?

வாழ்த்துக்கள். :-)\\

வாழ்த்துக்களுக்கு நன்றி மை ஃபிரண்ட்!

கதையினை ஒரே பகுதியில் எழுதி முடிக்கயிலவில்லை......அதனால் தொடர் கதையானது!

said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நாலு பொண்ணுங்களும் உங்களைப்போலவே அராஜகம் பண்றாங்களே.. எல்லாம் உங்க ரியல் ஸ்டோரியா? :-P\\

ஹையோ என்ன இது வம்பாயிருக்கு........கதை முழுக்க முழுக்க கற்பனையன்றி வேறேதுமில்லை.....!!![நம்புங்க ப்ளீஸ்]

said...

\\மங்களூர் சிவா said...
//
எதிரிலிருந்த பார்க்கிங்கில் இண்டிகா காரை பார்க் பண்ணிட்டு அதிலிருந்து ஒரு அழகிய இளைஞன் இறங்கி, விஜியின் அபார்ட்மெண்ட் ப்ளாக் நோக்கி நடந்து வந்தான்.
//
அதென்ன இண்டிகா ஒரு ஸ்கோடா, அட்லீஸ்ட் அக்சண்ட்னு சொல்லகூடாதா நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்\\

ஹா ஹா......இண்டிகா வே ஜாஸ்தி, ஏதோ போனா போகுதுன்னு அந்த கார் கொடுத்திருக்கு 'ஹீரோ'விற்கு.....இல்லைனா 1967ஃபீயட் தான்!

said...

\\மங்களூர் சிவா said...
//
குசும்பன் said...
ரெடி ஸ்டார்ட் மியூஜிக்...கச்சேரி சீக்கிரம் ஆரம்பம் ஆகட்டும்:)

அப்புறம் எனக்கும் "'Digital Design - by Morris Mano' அந்த புக்கில் கொஞ்சம் டவுட் இருக்கு அவுங்க கூட நானும் கம்பைண்ட் ஸ்டெடி செய்யலாமா?
ஹி ஹி:)
//
எனக்கு அந்த புக் பத்தி கொஞ்சம் கூட தெரியாது அதனால நானும் கம்பைன் ஸ்டடிக்கு வரலாமா??

க்ளியர் பன்னுவாங்களா???
:-)))))\\

கம்பைன் ஸ்டடி க்கு தாரலாமா வரலாம் தம்பி! கண்டிப்பா டவுட் க்ளியர் பண்ணுவாங்க!

said...

//குசும்பன் said...
அப்புறம் எனக்கும் "'Digital Design - by Morris Mano' அந்த புக்கில் கொஞ்சம் டவுட் இருக்கு அவுங்க கூட நானும் கம்பைண்ட் ஸ்டெடி செய்யலாமா?//

அண்ணா, எத்தன முறை உங்க கிட்ட கேட்டேன் எனக்கும் சொல்லிகொடுங்கனு. இப்போ நானும் கம்பைன் ஸ்டடிக்கு வரப்போறேன்.

said...

Divya,

kathai ippadi thodarattum....

naveen phone eduthu pesa aarambithaan...."eppadi irukkeenga viji..reka..sukanya..vandana...
mela irundhu neenga naalu perum vitta jollu aaraap perukkeduthu ippa vellama first floora nirappi iruchu...jollu vellam kuraiyira varaikkum naan mela unga veetla vandhu safe aa irukkalama?

speaker phonela pechai kettuvittu athirchiyaanarkal JOLLU queens."eppadidi avanukku nammala theriyuthu....?

.....Raj.

said...

கச்சேரியில் எனக்கும் ஒரு சீட்...

'Digital Design - by Morris Mano' புக்... செம போர்... அதுதானோ...

said...

இது போன்ற பதிவுகள் இருக்கலாம் தவறில்லை. கொஞ்சம் சமூகத்துக்கு தேவையான ஆரோக்கியமான விஷயங்களையும் எழுதினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.

said...

//
Divya said...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நாலு பொண்ணுங்களும் உங்களைப்போலவே அராஜகம் பண்றாங்களே.. எல்லாம் உங்க ரியல் ஸ்டோரியா? :-P\\

ஹையோ என்ன இது வம்பாயிருக்கு........கதை முழுக்க முழுக்க கற்பனையன்றி வேறேதுமில்லை.....!!![நம்புங்க ப்ளீஸ்]

//
ஆமா மை ஃபிரண்ட் திவ்யா பன்றது ஓவர் அராஜகம் அந்தளவு இன்னும் அந்த பொண்ணுங்க பன்னலை.

ஒருவேளை அடுத்த பாகத்துல பன்னுவாங்களோ என்னவோ!!!!

:-))))

said...

கதை நல்லா போது! சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க!!

said...

கலக்கலான ஆரம்பமா இருக்கே திவ்யா!! பாவம் நவின்!!! நாலு அழகான ராச்ஷசிககிட்ட மாட்டிகிட்டு என்ன ஆகப்போறானோ !! :)))

said...

//விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப்ளாக் ரொம்ப காஞ்சுப்போய் கிடக்குதடி, பார்க்கிற மாதிரி ஒருத்தன் கூட இல்லை//

அட்ரா சக்கை !!! திவ்யா என்ன இது எங்க வேலைய பொண்ணுங்க எடுத்துகிட்டா அப்புறம் நாங்க எப்படி கெத்து காட்டுறது ?? :))))

said...

//ஹா ஹா......இண்டிகா வே ஜாஸ்தி, ஏதோ போனா போகுதுன்னு அந்த கார் கொடுத்திருக்கு 'ஹீரோ'விற்கு.....இல்லைனா 1967ஃபீயட் தான்!//

ஏன் திவ்யா இந்த கொலவெறி?? பாவம் காசா பணமா கதைதானே ?? பையனுக்கு என்ன வேணுமோ அதைக்கொடுத்து இருக்கலாம்ல?? ;))) அதென்னாங்க ஃபீயட்னா கேவலமா? அதிலே டூயட்டெல்லாம் பாடலாம் தெரியுமா ?? ;)))))

said...

// " விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப்ளாக் ரொம்ப காஞ்சுப்போய் கிடக்குதடி, பார்க்கிற மாதிரி ஒருத்தன் கூட இல்லை" என்று சலித்துக் கொண்டாள் சுகன்.//

பேசாம நா இருக்குற அப்பார்ட்மென்ட் கிட்ட கம்பெய்ன் ஸ்டெடிஸ் வைச்சியிருந்தாக்கா..இப்பிடியெல்லாம் கஷ்ட்டப்பட வேண்டியிருக்காதில்ல?..ஹிஹி....

said...

// சே, சே! பையன் நல்லா பீர் குடிச்சிறுப்பான், அதான் குப்புனு வெயிட் ஏறிக்கிச்சு" என்று ரேகா தன் திருவாயை அப்போதுதான் திறந்தாள்.
"ஹே ரேகா, அவன் அப்படி பட்ட பையன் இல்லை, ரொம்ப நல்ல பையனாக்கும்" என்று சர்டிஃபிகெட் கொடுத்தாள் விஜி.//.

ஏனுங்க,நா தெரியாமத்தேன் கேக்கறேன்..அப்ப வெறும் பார்லி தண்ணி(பீர்) குடிக்கிரவங்கெல்லாம் கெட்ட பையனா?..இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

said...

// ஃபோன் நம்பரை வாங்கி நவீன் வீட்டிற்கு டயல் செய்தாள் சுகன்.//
ஆரம்பத்துலத்தேன் இந்த பேன்னெல்லாம் பின்ன ஒன்லி மிஸ்டு கால்தான்..பையனுக்குதேன் பில்லு எகிறும். ஹிஹி....
ஆரம்பம் நல்லாயிருக்கு.....

said...

திவ்யா,

நான் தமிழ் எழுத்துக்களை கணிணியில் செதுக்க நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி.
தமிழில் முதல் எழுத்தை இவ்வலையில் செதுக்கியவுடன் ஆஹா...அடைந்தேன் எல்லையில்லா மகிழ்ச்சி.
சரி... வைரமுத்து ஸ்டைல்ல நான் பேசுனது போதும்.
கதை சூப்பரா இருக்குதுங்க...
நவீனை சீக்கிரமா நாலு பேர்ல ஒருத்தர் கிட்ட மாட்டி விட்டுராதீங்க. நாலு பேர் கிட்டயும் நம்ம நவீன் கலாய்க்க வேண்டியது நிறைய இருக்கு.
Comments moderationக்கு கொடுத்த உதவிக்கும் நன்றிங்க திவ்யா.

said...

non stop padichu mudichain. back with a big bang :) grt8 start.

Morris Mano good old memory tonic. :)

said...

கலக்கல் ஆரம்பம்....;))

said...

\\J K said...
//குசும்பன் said...
அப்புறம் எனக்கும் "'Digital Design - by Morris Mano' அந்த புக்கில் கொஞ்சம் டவுட் இருக்கு அவுங்க கூட நானும் கம்பைண்ட் ஸ்டெடி செய்யலாமா?//

அண்ணா, எத்தன முறை உங்க கிட்ட கேட்டேன் எனக்கும் சொல்லிகொடுங்கனு. இப்போ நானும் கம்பைன் ஸ்டடிக்கு வரப்போறேன்.\\

கம்பைன் ஸ்டடிக்கு கடும் போட்டி இருக்கும் போலிருக்கு......

வருகைக்கு நன்றி JK

said...

\\Raj said...
Divya,

kathai ippadi thodarattum....

naveen phone eduthu pesa aarambithaan...."eppadi irukkeenga viji..reka..sukanya..vandana...
mela irundhu neenga naalu perum vitta jollu aaraap perukkeduthu ippa vellama first floora nirappi iruchu...jollu vellam kuraiyira varaikkum naan mela unga veetla vandhu safe aa irukkalama?

speaker phonela pechai kettuvittu athirchiyaanarkal JOLLU queens."eppadidi avanukku nammala theriyuthu....?

.....Raj.\\

ராஜ், கதையின் அடுத்த பகுதியை நீங்களே எழுதிடுவீங்க போலிருக்கு!!

வருகைக்கும், கதையை தொடர கொடுத்த ஐடியாவுக்கும் நன்றி ராஜ்!

said...

\\NiMaL said...
கச்சேரியில் எனக்கும் ஒரு சீட்...

'Digital Design - by Morris Mano' புக்... செம போர்... அதுதானோ...\

Hi NiMaL, ECE branch students நிறைய பேர் ப்ளாக்ல இருப்பாங்க போலிருக்கு,
நிஜம்மா அந்த புக் செம போர்!

வருகைக்கு நன்றி!

said...

\\இரா.ஜெயபிரகாஷ் said...
இது போன்ற பதிவுகள் இருக்கலாம் தவறில்லை. கொஞ்சம் சமூகத்துக்கு தேவையான ஆரோக்கியமான விஷயங்களையும் எழுதினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.\

ஜெயபிரகாஷ், தங்கள் கருத்தினை மனதில் கொள்கிறேன், நன்றி!!

said...

//
Divya said...
ஹா ஹா......இண்டிகா வே ஜாஸ்தி, ஏதோ போனா போகுதுன்னு அந்த கார் கொடுத்திருக்கு 'ஹீரோ'விற்கு.....இல்லைனா 1967ஃபீயட் தான்!
//
என்னாது பியட்டா????
அவ்வ்வ்வ்

இந்த பெண்ணீஈஈஈஈஈஈய தொடரை நான் கன்னா பின்னாவென உருண்டு பெரண்டு கண்டிக்கிறேன்!!!

said...

Aarambam aathasal dhan .. :-)Innum ...innum Yedhir pakkuren ...Digital Design - Morris Mano -Madras university- B.E(CSC) prescribed Book...Group study pannalum onnume puriyadhe.. :-).Ungal Thodar kadahiku en valthukkal Divya

Anonymous said...

super starting...
waiting for the next part.
romba naal wait panna vaichudatinga.

said...

\\மங்களூர் சிவா said...
//
Divya said...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நாலு பொண்ணுங்களும் உங்களைப்போலவே அராஜகம் பண்றாங்களே.. எல்லாம் உங்க ரியல் ஸ்டோரியா? :-P\\

ஹையோ என்ன இது வம்பாயிருக்கு........கதை முழுக்க முழுக்க கற்பனையன்றி வேறேதுமில்லை.....!!![நம்புங்க ப்ளீஸ்]

//
ஆமா மை ஃபிரண்ட் திவ்யா பன்றது ஓவர் அராஜகம் அந்தளவு இன்னும் அந்த பொண்ணுங்க பன்னலை.

ஒருவேளை அடுத்த பாகத்துல பன்னுவாங்களோ என்னவோ!!!!

:-))))\\

சிவா, அடுத்த பகுதியில பாருங்க 'ஒவர்' அராஜகம் பண்ணினாங்களா? இல்லியான்னு!

said...

\\Dreamzz said...
கதை நல்லா போது! சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க!!\\

நன்றி Dreemzz,
இதோ விரைவில் அடுத்த பாகம்.......

said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
கலக்கலான ஆரம்பமா இருக்கே திவ்யா!! பாவம் நவின்!!! நாலு அழகான ராச்ஷசிககிட்ட மாட்டிகிட்டு என்ன ஆகப்போறானோ !! :)))\

ஹாய் ஜொள்ளூபாண்டிண்ணே வாங்க வாங்க! வருகைக்கு நன்றிங்கண்ணா!

நவினுக்காக ரொம்ப பரிதாபபடுறீங்க போலிருக்கு??

said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
//விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப்ளாக் ரொம்ப காஞ்சுப்போய் கிடக்குதடி, பார்க்கிற மாதிரி ஒருத்தன் கூட இல்லை//

அட்ரா சக்கை !!! திவ்யா என்ன இது எங்க வேலைய பொண்ணுங்க எடுத்துகிட்டா அப்புறம் நாங்க எப்படி கெத்து காட்டுறது ?? :))))\\

'அது' உங்க வேலை மட்டும் தான்னு நீங்களே முடிவு பண்ணிடுறதா.......!!

said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
//ஹா ஹா......இண்டிகா வே ஜாஸ்தி, ஏதோ போனா போகுதுன்னு அந்த கார் கொடுத்திருக்கு 'ஹீரோ'விற்கு.....இல்லைனா 1967ஃபீயட் தான்!//

ஏன் திவ்யா இந்த கொலவெறி?? பாவம் காசா பணமா கதைதானே ?? பையனுக்கு என்ன வேணுமோ அதைக்கொடுத்து இருக்கலாம்ல?? ;))) அதென்னாங்க ஃபீயட்னா கேவலமா? அதிலே டூயட்டெல்லாம் பாடலாம் தெரியுமா ?? ;)))))\\

நீங்க டூயட் பாடுறதிலேயே கவனமா இருங்க!

said...

\\ரசிகன் said...
// " விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப்ளாக் ரொம்ப காஞ்சுப்போய் கிடக்குதடி, பார்க்கிற மாதிரி ஒருத்தன் கூட இல்லை" என்று சலித்துக் கொண்டாள் சுகன்.//

பேசாம நா இருக்குற அப்பார்ட்மென்ட் கிட்ட கம்பெய்ன் ஸ்டெடிஸ் வைச்சியிருந்தாக்கா..இப்பிடியெல்லாம் கஷ்ட்டப்பட வேண்டியிருக்காதில்ல?..ஹிஹி....\\

ரசிகன், அடுத்த முறை கம்பைண்ட் ஸ்டடி உங்க அபார்ட்மெண்ட்லயே வைச்சுடலாம்!

said...

\ரசிகன் said...
// ஃபோன் நம்பரை வாங்கி நவீன் வீட்டிற்கு டயல் செய்தாள் சுகன்.//
ஆரம்பத்துலத்தேன் இந்த பேன்னெல்லாம் பின்ன ஒன்லி மிஸ்டு கால்தான்..பையனுக்குதேன் பில்லு எகிறும். ஹிஹி....
ஆரம்பம் நல்லாயிருக்கு.....\\

ரொம்ப அனுபவமோ??

said...

\\Raj said...
திவ்யா,

நான் தமிழ் எழுத்துக்களை கணிணியில் செதுக்க நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி.
தமிழில் முதல் எழுத்தை இவ்வலையில் செதுக்கியவுடன் ஆஹா...அடைந்தேன் எல்லையில்லா மகிழ்ச்சி.
சரி... வைரமுத்து ஸ்டைல்ல நான் பேசுனது போதும்.
கதை சூப்பரா இருக்குதுங்க...
நவீனை சீக்கிரமா நாலு பேர்ல ஒருத்தர் கிட்ட மாட்டி விட்டுராதீங்க. நாலு பேர் கிட்டயும் நம்ம நவீன் கலாய்க்க வேண்டியது நிறைய இருக்கு.
Comments moderationக்கு கொடுத்த உதவிக்கும் நன்றிங்க திவ்யா.\\

மீதி கதையை நீங்களே எழுதிடாதீங்க ராஜ், அடுத்த பாகம் வரும் வரை காத்திருங்கள்.
உங்கள் வலைப்பதிவில் நீங்கள் தொடர்ந்து தமிழில் எழுத என் வாழ்த்துக்கள்!!

said...

\\Adiya said...
non stop padichu mudichain. back with a big bang :) grt8 start.

Morris Mano good old memory tonic. :)\\

Adiya, சம்சாரி ஆன பிறகும் தவறாமல் வலைப்பதிவிற்கு விஜயம் செய்து, பின்னூட்டமும் இடுகின்ற உங்களை பாராட்டுகிறேன்!
நன்றி Adiya!

said...

\\கோபிநாத் said...
கலக்கல் ஆரம்பம்....;))\\

நன்றி கோபிநாத்!

said...

\\kavidhai Piriyan said...
Aarambam aathasal dhan .. :-)Innum ...innum Yedhir pakkuren ...Digital Design - Morris Mano -Madras university- B.E(CSC) prescribed Book...Group study pannalum onnume puriyadhe.. :-).Ungal Thodar kadahiku en valthukkal Divya\\

மிக்க நன்றி கவிதை ப்ரியன்!

said...

\துர்கா|thurgah said...
super starting...
waiting for the next part.
romba naal wait panna vaichudatinga\

வாங்க துர்கா, தீபாவளிக்கு அப்புறம் இப்போதான் பார்க்கிறேன் உங்களை வலைப்பதிவில்,
வருகைக்கு நன்றி!
அடுத்த பாகம் விரைவில்...

said...

divya.....உங்க கட்டுரைகள் ரொம்ப அருமை.....பொண்ணுங்கள கவர்வது பற்றிய கட்டுரையை என்னோட நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பினேன்.........ரொம்ப useful'a இருந்ததா சொன்னாங்க..ஹி ஹி